எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பார்த்தவி -04 கதைத்திரி

NNK 67

Moderator
பார்த்தவி -04


மறுநாள் காலைப்பொழுது அழகாக புலரவே, தனதறையில் உறங்கிக்கொண்டிருந்த மிதிலாவோ உறக்கம் களைந்து கண்விழித்துப்பார்க்க, மணி சரியாக ஏழு என்று காட்டியது..! அப்போதுதான் மணியானதை உணர்ந்த மிதிலாவோ, எழுந்தமர்ந்து நேற்றையதினம் தான் வெளியில் சென்றபோது நிகழ்ந்த அனைத்தையும் யோசித்தபடி அமர்ந்திருக்க, அப்போதுதான் நேற்று நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாய் நினைவுக்குவரவே ராகவின் நினைவும் வந்துபோனது..!


இதனைத்தையும் யோசித்துக் கொண்டிருந்தவளின் நினைவை கலைக்கும் விதமாக வெளியே நின்றிருந்த மிதிலாவின் அன்னை, அவளைக்கூப்பிடும் குரல் கேட்கவே நினைவு கலைந்தவளோ எழுந்து, “அம்மா..? இதோ வரேம்மா..!” என்ற சத்தம் போட்டுக்கொண்டே வெளியேசென்றாள்.. பின், அறைக்கதவை திறந்து வெளியே நின்றிருக்கும் தனது அன்னையைப் பார்த்த மிதிலாவோ, “அம்மா..? சொல்லுங்கம்மா..?” என்றிட, “என்னமா மிதிலா..? இவ்வளவு நேரமாகியும், நீ எழுந்திரிக்கவில்லை..! என்றுதான், உன்னை பார்க்கவந்தேன்..! ஏன் என்ன ஆச்சுடா..? உடம்புக்கேதும் சரியில்லையா..?” என்று விசாரிக்க, “அது ஒன்னுமில்லம்மா..? நேத்து வெளியில் போயிட்டு வந்ததுல, கொஞ்சம் டயர்டா இருந்தது..! அதனால்தான் தூங்கிட்டேன்..!” என்று மிதிலா சொல்ல அதற்கு, “சரிம்மா..! நீ, குளிச்சு ரெடியாகு..! நான் உனக்கு டிபன் எடுத்துவைக்கிறேன்..!” என்று சொல்லிவிட்டு சென்றார் வசந்தி..


தன் அன்னையை சமாளித்துக்கொண்டு மீண்டும் அறைக்குள்ளே வந்தவளோ, நேற்றையதினம், தனக்கு நடந்த எதையும் யாரிடமும் சொல்லக்கூடாது..! என்று தனக்குள்ளே முடிவெடுத்துக்கொண்டு, பின் குளித்துவிட்டு அன்றையதின வேலைகளை ஒவ்வொன்றாக செய்யத்தொடங்கினாள்..


இங்கே அறையில் மிதிலாவின் தங்கை பவித்ராவோ, தேர்வைபற்றிய எந்த கவலையுமின்றி படிக்காமல் ஹெட்போனில் ஆல்பம் சாங்ஸ் கேட்டுக்கொண்டிருக்க, தன் பேத்தியை ரசித்த வேதவள்ளியோ பவித்ராவைக்கண்டு, “பவித்ராக்கண்ணு..? உனக்கு எப்போடா படிப்பு முடியுது..?” என்று பாசமாக கேட்க, “அதுக்கு இன்னும் ஆறுமாசம் இருக்கு பாட்டி..! இப்போ ஏன் அதைக் கேக்குறீங்க..?” என்றதும், “என்னது..? இன்னும் ஆறுமாசம் இருக்குதா..? நான், இப்போ நீ எழுதுற பரிட்சையோடு உன்படிப்பு முடிஞ்சுடும், உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணிவைக்கணுமென்று நினைச்சுட்டிருக்கேன்..? நீ என்னடான்னா, இன்னும் ஆறுமாசம் இருக்குன்னு சொல்றீயேடி..?” என்று அதிர்ச்சியாக கேட்க பவித்ராவோ, “என்னது கல்யாணமா..? பாட்டி, நான் இப்போதான் லைஃபை என்ஜாய் பண்ணிட்டிருக்கிறேன்..! எனக்கு எதுக்கு கல்யாணம்..? அதுதான் மிதிலா அக்கா இருக்காளே..?” என்று சொல்ல, உடனே கோபமான வேதவள்ளியோ, “என்னடி பேசற நீ..? அவளும் நீயும் ஒன்னா..? எனக்கு நீ, நல்லபடியா பெரிய இடத்துல கல்யாணம் பண்ணி போகணும்னு ஆசை..! அதுக்காகத்தான் இப்போதிருந்தே உனக்கு மாப்பிள்ளை பார்க்க நினைக்கிறேன்..!” என்று சொல்ல,


பவித்ராவோ, “தன் பாட்டி, தனக்கு நல்லவாழ்க்கை அமைத்துக்கொடுக்க விரும்புகிறாள்..!” என்ற எண்ணத்தை புரிந்துகொண்டு, “பாட்டி.. ப்ளீஸ்..? கொஞ்சநாள் போகட்டுமே..?” என்றிட, “நானும் அதைத்தான்டி சொல்றேன்..! எப்படியும் இப்போயிருந்து உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தால்தான், நீ படிப்ப முடிக்கிறதுக்கும் கல்யாணத்திற்கும் சரியாக இருக்கும்..! உன்னை, நல்ல பெரிய வசதியான இடமாக பார்த்துதான் கொடுக்கணும்..! அங்கே நீ ராஜாத்தியா வாழனும்..!” என்று அவளது மனதில் கல்யாண கனவுகோட்டைகளை கட்டுவதற்கு அஸ்திவாரம் போட்டிட, அதில் மகிழ்ந்துபோன பவித்ராவோ, பாட்டி சொல்வதற்கெல்லாம் சரி..! என்று தலையசைத்துவிட்டு, அமைதியாக இருந்துகொண்டாள்..


இப்படியே இரண்டுநாட்கள் சென்றநிலையில் அன்று மிதிலாவோ, செவ்வாய்க்கிழமை என்பதால் துர்க்கை அம்மனுக்கு விளக்கு போடுவதற்காக கோவிலுக்கு சென்றிருந்தாள்.. அப்போது கோவிலுக்குள் நுழைந்தவுடன் கர்ப்பகிரகத்தில் இருக்கும் அம்பாளை வணங்கிவிட்டு, துர்க்கை அம்மன் சன்னதியில் எலுமிச்சையில் விளக்கேற்றி, “தானும், தன் குடும்பமும், தன்னைச்சுற்றி இருப்பவரும் என்றும் சந்தோசமாக இருக்கவேண்டும்..! என்று வேண்டிக்கொண்டு, விரைவில் தனக்கும் மற்ற பெண்களைப்போல் நல்லபடியாக திருமணவாழ்க்கை அமையவேண்டும்..!” என்று, மனமார வேண்டிக்கொண்டவளோ பிரகாரத்தை சுற்றிவர,


அப்போது, திடீரென்று ஒரு பெண் மிதிலாவை இடைமறித்தாள்..! அதனைக்கண்டு புரியாத மிதிலாவோ எதிரில் இருந்தவளிடம், “யார் நீங்க..? எதுக்காக என்னை தடுக்குறீங்க..?” என்று கேட்க, அந்த பெண்ணோ மிதிலாவிடம், “அம்மா..? என்பெயர் கமலா..! உங்க பேர் என்னன்னு எனக்கு தெரியாது..? ஆனால் ரெண்டுநாளைக்கு முன்னாடி, உங்களை நான் வேலைசெய்யும் ஹோட்டலில் பார்த்தேன்..! அப்போ நீங்க, உங்க தாவணியை பிடிச்சு இழுத்ததாக சொல்லி, ஒருத்தரோட சண்டைபோட்டுட்டு இருந்தீங்க..!” என்று சொல்லிட, “அந்தப்பெண் தன்னை பார்த்து இருக்கிறாள்..!” என்பதை புரிந்துகொண்ட மிதிலாவோ கோபமாக, “ஆமாங்க..! அன்னைக்கு ஒரு ஆள், என்கிட்ட தப்பா நடந்துகிட்டான்..! அதனால்தான் அவனிடம் சண்டைபோட்டேன்..!” என்றிட அந்தபெண்ணோ, “இல்லம்மா..! நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க..! உண்மையிலேயே, அன்னைக்கு நடந்தது என்ன தெரியுமா..?” என்று கூற ஆரம்பித்து, அன்று நடந்ததனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறியவளோ, ராகவின்மீது எந்த தவறும் இல்லை..! என்று ஆணித்தரமாக மிதிலாவிற்கு புரியும்படி எடுத்துச்சொல்ல அப்போதுதான், “ராகவின்மீது எந்த தவறும் இல்லை..!” என்று புரிந்துகொண்ட மிதிலாவோ சந்தேகமாக அந்தபெண்ணை பார்த்து, “ஆமாம்..! இந்த உண்மையை, என்கிட்ட சொல்லனும்னு உங்களுக்கு ஏன் தோணுச்சு..?” என்று கேட்க,


அதற்கு அப்பெண்ணோ, “அம்மா..? அன்னைக்கு உங்களோட மானம் போகக்கூடாதுன்னு, காப்பாத்தியது யார் தெரியுமா..?” என்று சொல்ல அதற்கு, “தெரியாது..!” என்று தலையசைத்தாள் மிதிலா.. அதற்கு புன்னகைத்த கமலாவோ, “அவர் வேறு யாருமில்லைம்மா..! அந்த தம்பிதான் எங்க ஹோட்டலோட முதலாளி ராகவ ரிஷி..!” என்று அவனது பெயரைச்சொல்ல, அதிர்ந்துபோன மிதிலாவோ மனதில், “அவ்வளவு பெரிய பிரம்மாண்டமான ஹோட்டலில் ஓனரா அவர்..? அவரையா, ஒரு பொறுக்கிபோல் நினைத்து பேசிவிட்டேன்..?” என்று வருந்தியவளோ, “சாரிங்க..! அவர்தான் உங்க ஓனர் என்று, எனக்கு தெரியாது..! அன்னைக்கு ஏதோ மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்கில் அப்படி நடந்துச்சு..!” என்று சொல்லியதற்கு,


கமலாவோ, “உங்களோட சூழ்நிலை புரியுதும்மா..! இனிமேல் எந்த இடத்திலும், உண்மை என்னவென்று தீர விசாரிச்சுட்டு, அதுக்கப்புறம் முடிவெடுங்க..! தயவுசெய்து அவசரப்படாதீங்க..! இதை உங்ககிட்ட எப்படியாவது சொல்லணுமென்று நான் நினைச்சிருந்தேன்..? ஆனால், இன்றைக்கு எதர்ச்சியாக உங்களை இந்த கோயிலில் பார்த்ததும், அதற்கான சந்தர்ப்பம் அமைந்துவிட்டது..!” என்று கூறிய கமலாவிற்கு நன்றி சொன்னவளோ, “உங்க முதலாளிமேல எந்த தப்பும் இல்லைன்னு, இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் உங்களை பாக்கும்போது பெருமையாக இருக்குது அக்கா..!” என்று சொல்ல,


அதற்கு கமலாவோ புன்னகை சிந்தியபடி, “அவர், என்னோட முதலாளி என்பதற்காக நான் சொல்லலம்மா..? ஒரு காலத்துல பிச்சைக்காரியா, கைக்குழந்தையோட ரோடுல திரிந்த என்னை நம்பி, அவரோட ஹோட்டலில் வேலை கொடுத்து, மூன்றுவேளை சாப்பாடு போட்ட கடவுள்மா அவரு..! என்னைப் பொருத்தவரைக்கும் இந்தக்கோவிலில் இருப்பதெல்லாம் சாமி இல்ல..! என்னைப்போல ஆதரவில்லாத எத்தனையோபேருக்கு அவர் சாமி..! பார்க்க கொஞ்சம் கரடுமுரடா இருந்தாலும், குழந்தை மனசு அவருக்கு..! இன்னைக்கு, இந்த ஊரிலிருக்கிற அனாதை ஆசிரமங்களிளும், முதியோர் இல்லங்களிலும் மூணுவேளை சாப்பாடு இருக்குதுன்னா, அதுக்கு காரணமே அவர்தான்ம்மா..! நாம செய்யற சின்ன உதவியைக்கூட பெருசுபண்ணி விளம்பரம் தேடுகிற இந்த காலத்துல, தான்தான் இந்த உதவி செய்வது..! என்பதை வெளியில்கூட சொல்லாமல், உதவுற மனசும்மா அவருக்கு..!” என்று ராகவின் உயர்ந்த குணங்களை எடுத்துச்சொல்ல, மிதிலாவின் மனம் அவளை அறியாமையே அவன்பால் சாய்ந்தது..


பின்பு, அந்தபெண் சென்றபிறகு, “ராகவை எப்படியாவது சந்தித்து, அவனிடம் நடந்த தவறுக்கு மன்னிப்புகூற வேண்டும்..!” என்று நினைத்த மிதிலாவோ கடவுளிடம், “சீக்கிரமாக தான், ராகவை சந்தித்து மன்னிப்பு கேட்கவேண்டும்..!” என்று வேண்டுதல் வைத்துக்கொண்டாள்.. அதன்பின்பு வந்த நாட்களில் மிதிலா ராகவே சந்திக்கவே இல்லை..! அதற்கான வாய்ப்பும் அமையவில்லை..! அவரவர் தங்களது வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, காலச்சக்கரம் அதன் போக்கில் சுழன்றுக்கொண்டிருந்தது.. இப்படியே இரண்டுமாதங்கள் நிறைவுற்றிருக்க, அன்று விடுமுறைதினம் என்பதால் பவித்ராவுடன் மார்க்கெட்டிற்கு வந்த மிதிலாவோ, தனது ஆசை தங்கைக்கு என்ன வேண்டும்..? என்று கேட்டு, ஒவ்வொன்றாக வாங்கிக்கொண்டிருந்தாள்.. பின்பு ஒருவழியாக அனைத்து பொருட்களையும் வாங்கியபிறகு, வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் ஒரு கொய்யா மரத்தை பார்த்த பவித்ராவோ குறும்புத்தனமாக மிதிலாவிடம், “அக்கா.. எனக்கு அந்த பழம் வேண்டும்..!” என்று கேட்க, அதனைக்கண்ட மிதிலாவோ, “பவிம்மா..? இது அடுத்தவங்களோட மரம் பவிம்மா..! இதிலெல்லாம் நாம் பழம் பறிக்கக்கூடாது..!” என்று சொல்ல, அடம்பிடித்த பவித்ராவோ, “அக்கா.. எனக்கு அந்தப்பழம் ஒன்னு மட்டும் வேணும்..! ப்ளீஸ்க்கா.. எனக்காக ஒன்னு மட்டும் பறித்துக்கொடுக்கா..!” என்று குழந்தைபோல் சிணுங்க,


தன் தங்கைக்காக எதையும் செய்பவள், இதை செய்யமாட்டாளா என்ன..? அந்த வீதி ஒதுக்குப்புறமான இடம் என்பதால், மதியநேரத்தில் அங்கு அவ்வளவாக ஆள்நடமாட்டம் இல்லாமல் இருக்கவே, சுற்றுமுற்றி பார்த்த மிதிலாவோ, பக்கத்துவீட்டின் சுவரில் வர்ணம் பூசுவதற்காக சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஏணியை எடுத்துக்கொண்டு மரத்தின் பக்கம் சாய்த்தவளோ, கீழே பவித்ராவை ஏணியை பிடிக்குமாறு சொல்லிவிட்டு மேலே ஏறி பழம் பறிக்க முயல, அப்போது வேலைவிஷயமாக ஏற்கனவே அந்த வழியேவந்து, ஒரு வீட்டின் வாசலில் காரை நிறுத்திக்கொண்டு வீட்டிற்குள் சென்ற நந்தனுக்காக காரிலேயே அமர்ந்திருந்த ராகவோ, வீட்டுக்குள் சென்ற தனது நண்பன் நந்தன் வரும்வரை அங்கு நடப்பதை அவர்களுக்கே தெரியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்..


பவித்ராவோ ஏணியை சரியாக பிடிக்காமல் அலட்சியமாக நின்றிருக்க, மேலே பழம் பறித்த மிதிலாவோ, கீழே இறங்க எத்தனிக்கும்போது பிடிமானம் இல்லாத ஏணி நடுங்கியதில் நிலைதடுமாறிய மிதிலா கீழே விழப்போக, கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே விழப்போனவளை இருகரம்நீட்டி இடையோடு தாங்கிபிடித்து நிறுத்தினான் ராகவ்.. ஆம்..! திடீரென்று மிதிலா நிலை தடுமாறும்போதே அவள் நிச்சயம் கீழேக்விழக்கூடும்..! என்று கணித்தவனோ, சட்டென காரிலிருந்து இறங்கிவந்து அவள் விழும்வேளையில் அவளை காப்பாற்றி தாங்கிப்பிடித்தான்..!


அப்போதுதான், “தான் கீழே விழவில்லை..!” என்று புரிந்த மிதிலாவோ கண் திறந்து பார்க்கையில், தன்னை இடைப்பற்றி தாங்கிப்பிடித்த ராகவைக்கண்டு அதிர்ச்சியானவளுக்கு, பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கையும் காலும் உதறலெடுக்க, அதனைக் கண்டவனோ மனதில், “இன்றும், தனக்கு இவளிடம் அச்சனை உண்டுபோல..?” என்று நினைத்துக்கொண்டு, எதுவும்பேசாமல் திரும்பிசெல்ல எத்தனிக்கும்போது அவனை தடுத்த நந்தனோ நக்கலாக, “என்னடா மச்சி..? இன்னைக்கும் வழக்கம்போல மேடம் ஸ்லிப்பிங்கா..?” என்றிட, தன் நண்பனின் நக்கல்பேச்சை புரிந்துகொண்டவனோ, “இல்லடா..? கீழே விழப்போனாங்க..! அதுதான் ஹெல்ப் பண்ணேன்..!” என்று ஒரேவரியில் முடித்துவிட்டான்.. அதனைப் புரிந்துகொண்ட நந்தனோ, “ஆமாம்டா..! ஒவ்வொரு முறையும் நீ, இவங்களுக்கு ஹெல்ப் பண்றேன்னு போற..? ஆனால், அதுக்குபதிலாக மேடம் உன்னை திட்டுவதைத்தானே பரிசாக கொடுக்கிறாங்க..!” என்று கூறி அவளுடைய தவறை உணர்த்திட, அதனை அவசரமாக மறுத்த மிதிலாவோ, “ஐயோ..! சாரிங்க.. அன்னைக்கு ஏதோ தெரியாமல் நடந்துடுச்சு..! உண்மை என்னன்னு தெரிஞ்சுக்காமல் உங்களை திட்டிட்டேன்..! என்னை மன்னிச்சிடுங்க..!” என்று மன்னிப்பு கேட்க,


அதனை ஏற்றுக்கொண்ட ராகவோ, “பரவயில்லைங்க.. அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல..!” என்று பேச்சைமுடிக்க எண்ணிட, அதனை வளர்க்க நினைத்த நந்தனோ, “அது எப்படிங்க..? நாங்க இருக்கிற இடமாக பார்த்து ஸ்லிப்பாகுறீங்க..?” என்றதற்கு, “அதில்லைங்க.. மார்க்கெட் போயிட்டுவர வழியில, தங்கச்சிதான் இந்த மரத்தில் பழம்வேணும்னு கேட்டாள்..! அதுக்காகத்தான்..” என்று தயக்கமாக இழுக்க, “ஓ..! இவங்கதான் உங்க தங்கச்சியா..? ரொம்ப நல்ல தங்கச்சி..! இப்படித்தான் ஆசைப்பட்டதை கொண்டுவர அக்காவை அனுப்பிவிட்டு, அவர் கீழே விழும்வரை வேடிக்கை பாத்துட்டு இருக்கணும்..!” என்று பவித்ராவைக்கண்டு நக்கலாக பேச, அதில் மூக்கு விடைத்த பவித்ராவோ, “இதோபாருங்க..? ஏதோ தெரியாமல், கொஞ்சம் கேர்லஸா பண்ண தப்பை, பெருசா பேசாதீங்க..! என் அக்காவை பார்த்துக்க எங்களுக்கு தெரியும்..!” என்று சொல்லிக்கொண்டு, கையில் பழங்களோடு நின்றிருந்த மிதிலாவிடம், “வாக்கா.. போகலாம்..!” என்றுகூறி, அவள் கையைப்பிடித்து இழுத்துச்சென்றாள் பவித்ரா..


அதனால் ராகவிடம் முழுதாக மன்னிப்பு கேட்க முடியாது தவித்த மிதிலாவோ, அவனைப்பார்த்து கண்களாலேயே மன்னிப்பை இறைஞ்ச, அவளது காந்தபார்வையில் என்ன கண்டானோ..? சட்டென அதில் ஒருகணம் மயங்கிதான் போனான்..! இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நந்தனோ மனதில், “பயன் சிக்கிட்டான்..!” என்று நினைத்துக்கொண்டு, “ஏன்டா மச்சி..? எனக்கு ஒரு டவுட்டு..? நீங்க ரெண்டுபேரும் இடிச்சிகுறதுக்காகவே சந்திக்கிறீங்களா..? இல்லை, உங்க சந்திப்பே இடிச்சுக்குறதுதானா..?” என நக்கலாக கேட்க, தன் நண்பனின்புறம் திரும்பி முறைத்தவனோ, “வாடா..! டைம் ஆயிடுச்சு..!” என்று சொல்லிக்கொண்டு, நந்தனை இழுத்துக்கொண்டு சென்றான்..


மருண்டவிழியாள் கேட்ட மன்னிப்பில், மன்னன் மனம் மயங்கியதென்னவோ...? பார்க்கலாம்…


தொடரும்…
 

Advi

Well-known member
அப்பாடா புரிஞ்சிகிட்டா ராகவை 😍😍😍😍😍😍

ரைட்டர் ஜி font size increase பண்ணுங்க பா & ஒரே para வா இல்லாம split பண்ணி போடுங்க .....

படிக்க கஷ்டமா இருக்கு
 

kalai karthi

Well-known member
சூப்பர் கமலா. மிதிலா ராகவ் புரிந்து கொண்டாள்.பாட்டி வில்லி இருக்கு கல்யாணம் செய்ய விடுமா
 
Top