எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

🌧️ ஆலியில் நனையும் ஆதவன் !! ☀️ - 9

NNK-34

Moderator
ஆதவன் 9
MergedImages (3).jpg

"ஆரம்பத்துல என்கிட்ட என்ன சொன்னீங்க, இப்ப என்ன பண்ணிட்டு இருக்கீங்க? வந்தவங்க எல்லாம் யாரு? ஏன் அவங்க ஆதித் மஹாதேவ் சாரை அடிச்சாங்க ஏன் அதுபோல விடீயோ எடுத்தீங்க? இப்போ எதுக்கு என்னை போக விட மாட்டிக்கிறீங்க. இங்க என்னதான் நடக்குது. நான் போகணும் என்னை விடுங்க" என்று ரகுவின் சட்டையை பிடிக்காத குறையாக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த நிரோஷா, அடுத்த கணம் தன் வலதுபுற கன்னத்தை பற்றிய படி தரையில் விழுந்து கிடக்க, தன் இடது கரத்தை உதறியபடி கீழே விழுந்து கிடக்கும் நிரோஷாவை வெறியோடு பார்த்தான் விநாயக்.

தரையில் உடலை குறுக்கிக் கொண்டு படுத்திருந்த வர்ஷாவை பார்த்து 'இவ ஏன் இங்க படுத்திருக்கா?' என்று மனதிற்குள் எண்ணியபடி அறைக்குள் வந்த ஆதித் தான் வாங்கி வந்திருந்த பொருட்களை டேபிள் மீது வைத்து விட்டு அவள் அருகே வரும் பொழுது திடிரென்று சத்தம் கேட்கவும் திடுக்கிட்டு விழித்தவள், ஆதித்தை தன் அருகே பார்த்ததும் தண்டனை பெற்ற பள்ளி மாணவி தலைமை ஆசிரியரையை பார்த்ததும் பயப்படுவது போல, வர்ஷா ஆதித்தை அரண்ட பார்வை பார்த்தபடி வேகமாக எழுந்து நிற்க, அவளது பார்வையில் தெரிந்த மிரட்சியை கண்டுகொண்ட ஆதிக்கு கோபமாய் வந்தது.

"தப்பு செய்யும் பொழுது பயப்படல இப்போ மட்டும் நிமிஷத்துக்கு நிமிஷம் கண்ணை உருட்டி பயந்து பயந்து பாரு" அவள் இருக்கும் நிலைமையை கருத்தில் கொண்டு, வாய் வரை வந்ததை சொல்லாமல் மனதிற்குள் எண்ணியத்துடன் நிறுத்திக்கொண்டவன்,

"திங்ஸ் இருக்கு யூஸ் பண்ணிக்கோ" என தன் கண்களால் டேபிளில் இருந்த பொருட்களை சுட்டிக் காட்டியபடி கூறினான். பின்பு அவள் சரி என்பதாய் தலையசைக்கவும்,

"நைட் சாப்பிட டைனிங் டேபிள்ல டின்னர் வாங்கி வச்சிருக்கேன், அப்புறம் டேப்லெட்டும் வாங்கிட்டு வந்திருக்கேன். ரொம்ப பெயின் இருந்தா மட்டும் போட்டுக்கோ" என்ற ஆதித் அவளுக்கு தனிமை கொடுக்கும் பொருட்டு தனது அலைபேசியை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்று விட, செல்லும் அவனையும் அவன் வாங்கி வந்த பொருட்களையும் பெருமூச்சுடன் பார்த்த வர்ஷா அதில் தனக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் புகுந்தாள்.

@@@

"என்னடா அதுக்குள்ள தூங்கிட்டாங்க?" ஆகாஷின் உதவியுடன் தன் தாயை யாருக்கும் தெரியாமல் விடீயோ கால் மூலமாக பார்த்த ஆதித் இவ்வாறு கேட்டான்.

"டேய் வெளிய கேட்குது டா, விடீயோ கால்ல இருக்கும் பொழுது பேசாதன்னு எவ்வளவு தடவை சொல்றது? உன் அப்பா பாத்ரூம்ல தான் இருக்காரு ஒரு நிமிஷம் நான் வெளிய வரேன் நார்மல் கால் பேசு" என்ற ஆகாஷ் வெளியே வந்து நார்மல் காலில் ஆதிக்கு அழைத்தான்.

"மெடிசின்ஸ் கொடுக்கிறதுனால சீக்கிரமாவே தூங்கிட்டாங்க, நாளைக்கு வந்துருவான்லன்னு தூங்குறதுக்கு முன்னாடி கூட உன்னை தான் கேட்டாங்க" என்றான் ஆகாஷ்.

"நீ என்ன சொன்ன?" ஆதித்தின் குரலில் வேதனை எட்டிப்பார்த்தது.

"என்ன சொல்ல முடியும்? வரமாட்டான்னு உண்மையா சொல்ல முடியும். இப்போ வர வந்துருவன்னு தான் சொல்லி இருக்கேன். நாளைக்கு காலைல, ஏதோ முக்கியமான வேலை வந்திருச்சி அதனால இன்னைக்கு வரலன்னு ஏதாவது சொல்லி சமாளிக்கலாம்."

"எப்படியாவது சமாளிச்சிடு டா" என்ற ஆதித்திடம், "நாளைக்கு சமாளிச்சிடலாம். ஆனா எத்தனை நாளைக்கு நீ இப்படி கல்யாணத்தை மறைச்சிட்டு அவங்கள பார்க்காம இருக்க போறன்னு எனக்கும் புரியல" என்ற ஆகாஷிடம் மௌனத்தையே பதிலாக கொடுத்த ஆதித்தின் மனதிலும் இதே கேள்விதான் ஓடிக்கொண்டிருந்தது.

"டேய் உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன், ஏதாவது பதில் சொல்லு" என்றான் ஆகாஷ்.

அதற்கு, "இப்போதைக்கு என்கிட்ட எந்த கேள்விக்கும் பதில் இல்ல ஆகாஷ், என் மைண்ட் முதல்ல செட்டில் ஆகட்டும் அதுக்கு பிறகு நான் அம்மாவை பார்த்து பேசுறேன்." என்றான் ஆதித்.

"சரி அட்லீஸ்ட் ஃபோன்லையாவது பேசு"

"ஃபோன்ல பேசினா வீட்டுக்கு வான்னு சொல்லுவாங்க டா, அவங்களை மறுத்து பேச என்னால முடியாது. கல்யாணம் பத்தி தெரியவரும், டென்ஷன் ஆகுவாங்க. இப்போ இருக்கிற அவங்க ஹெல்த் கண்டிஷனுக்கு இதெல்லாம் வேண்டாம் டா. அப்புறம் இப்போதைக்கு வீட்டுக்கு வந்து எல்லாரோட கேள்விக்கும் பதில் சொல்ற மனநிலையில நான் இல்ல" என்றான் ஆதித்.

ஆதித் அவ்வாறு கூறவும், "என்னமோ டா நான் என்ன சொன்னாலும் நீ கேக்க மாட்ட. நீ நினைக்கிறதை தான் பண்ணுவ. உன் இஷ்டம் உன் மனசுக்கு என்ன தோணுதோ அதை பண்ணு" என்ற ஆகாஷ், மேலும் மேலும் இது பற்றி பேசி நண்பனை சங்கடப்படுத்த விரும்பாது,

"சரி மகேந்திரன் சார் கிட்ட நீ எப்ப பேசலாம்னு இருக்க" பேச்சை மடை மாற்றினான்.

"சத்தியமா இப்ப படம் பண்ற மனநிலையில நான் இல்ல ஆகாஷ்"

"மனநிலையில இல்லைன்னா என்ன பண்ணலாம்ன்னு இருக்க? அப்படியே அந்த கெஸ்ட் ஹவுஸ்ல அடைஞ்சி கிடக்கலாம்ன்னு இருக்கியா?" கோபமாக ஆதித்தை கேள்வி கேட்டான் ஆகாஷ்.

"டேய் என்னையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோ" என்று இயலாமையுடன் கூறிய ஆதித்திடம்,

"நீயும் ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோ ஆதி இந்த காரியத்தை பண்ணினவன் நீ உன் வாழ்க்கையில அடுத்த கட்டம் போகக்கூடாது இப்படியே முடங்கி போய் கிடக்கணும் தான், இப்படி ஒரு கேவலமான காரியத்தை பண்ணிருக்கான். இப்போ நீயும் அவன் நினைச்சது போல தான் நடந்துட்டு இருக்க. கையில ஸ்கிரிப்ட் இருக்கு, அவர் கிட்ட பேசி ஓகே வாங்கினா அடுத்த ஷூட்டிங் நம்ம ஸ்டார்ட் பண்ணிடலாம். உனக்கு ஒரு டைவர்ஷன் கிடைக்கும். உன்னை அவமானப்படுத்தி பார்க்கணும்ன்னு நினைச்சவனுக்கு உன் வெற்றியை பரிசா கொடு, அவனுக்கு செருப்பால அடிச்சது போல இருக்கும். சீக்கிரமா மகேந்திரன் சார் கிட்ட பேசு" நண்பனை எப்படியாவது இதில் இருந்து வெளியே கொண்டுவருவதற்காக அவ்வாறு பேசினான் ஆகாஷ்.

"தேங்க்ஸ் மச்சான் நான் நடந்ததை நினைச்சி தான் வருத்தப்பட்டுகிட்டே இருந்தேனே தவிர, இந்த கோணத்துல நான் யோசிக்கவே இல்ல. தப்பு பண்ணாத நான் ஏன் முடங்கி கிடக்கணும்? சீக்கிரமாவே மகேந்திரன் சார் கிட்ட பேசிட்டு ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணிடலாம்? என்றான் ஆதித் புன்னகையுடன்.

@@@

முகத்தை துடைத்தபடி குளியல் அறையில் இருந்து வெளியே வந்த வர்ஷாவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருக்கவும், ஆதியிடம் கேட்கலாம் என்று எண்ணி பால்கனியை எட்டிப் பார்த்தாள். அலைபேசியில் மும்முரமாக யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். 'தண்ணீருக்காக இவனை தொந்தரவு செய்ய வேண்டுமா?' என்று மனதிற்குள் எண்ணியவள், தானே கீழே சென்று டைனிங் டேபிளில் இருந்த தண்ணீர் அருந்தும் பொழுது தான் மேசையில் இருந்த பார்சலை கவனித்தாள்.

அப்பொழுதுதான் அவன் சொன்னது ஞாபகம் வந்தது. சத்தியமாக அவளுக்கு பசிக்கவில்லை. மேலும் வயிறு வலியும், முதுகு வலியும் அவளை ஒரு பாடு படுத்திக் கொண்டிருக்க சாப்பிடும் மனநிலையும் அவளுக்கு சுத்தமாக இருக்கவில்லை. முன்பெல்லாம் இது போன்ற நேரங்களில் தாய் எவ்வளவோ வற்புறுத்தி கூறினாலும் வெறும் தண்ணீரை மட்டும் குடித்து விட்டு படுத்துக் கொள்பவளால் இன்று அப்படி செய்ய முடியவில்லை. சில நொடிகள் அப்படியே அந்த உணவு பொட்டலத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் ஒரு பெருமூச்சுடன் இரண்டு தட்டுகளை எடுத்துக்கொண்டு நாற்காலியில் வந்து அமர்ந்து பார்சலை பிரித்து பாதி உணவை இன்னொரு தட்டிற்கு மாற்றி விட்டு தான் சாப்பிட தொடங்கினாள்.

ஒருவழியாக உணவு அருந்திவிட்டு விட்டு அவள் எழுந்து கொள்ளும் நேரம் பார்த்து இன்னொரு தட்டில் இருந்த உணவை அவள் தட்டிற்கு இடம் மாற்றிய ஆதித், அவள் கேள்வியாக அவனை பார்க்கவும்,

"நான் சாப்பிட்டேன் உனக்காக தான் வாங்கிட்டு வந்தேன் சாப்பிடு" என்று அவளது விழிகளை பார்த்து கூறினான் பின்பு தனக்கு தேவையான தண்ணீரை அருந்திவிட்டு வெளியே சென்று கதவை பூட்டி விட்டு அவளிடம் வந்து,

"சாப்பிட்டு முடிச்சுட்டு வரும்போது கிச்சன் லைட்டை மட்டும் ஆஃப் பண்ணிடு டைனிங் ஹால் லைட் அப்படியே இருக்கட்டும்." உணவை உண்ணாமல் அதையே வர்ஷா பார்த்து கொண்டிருப்பதை பார்த்தபடி கூறியவன், அவள் சரி என்பதாய் தலையசைக்கவும் அங்கிருந்து தன் அறைக்கு செல்ல மாடி ஏறிய ஆதித், பின் ஒரு கணம் நின்று திரும்பி அவளைப் பார்த்து,

"பனிஷ்மெண்ட்க்கு சாப்பிடுறது போல சாப்பிடாத முடிஞ்ச மட்டும் சாப்பிடு" என்று விட்டு அங்கிருந்து சென்றுவிட, இப்பொழுது வர்ஷாவின் இதழ் மென்மையாக புன்னகைத்து கொண்டது.

மருந்தின் வீரியத்தால் நன்றாக உறங்கிய மகாலட்சுமிக்கு பாத்ரூம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டதால் முழிப்பு வர எட்டி தன் கணவரை பார்த்தார்.

தேவராஜ் நல்ல உறக்கத்தில் இருக்கவும், எழுப்ப மனம் வராது சிரமப்பட்டு எழுந்து தானே சென்று விட்டு வந்து அமர்ந்தவர்க்கு மகனின் ஞாபகமாகவே இருந்தது.

நடந்த அத்தனை பிரச்சனைகளையும் எண்ணிப் பார்த்த மஹாலக்ஷ்மி தன் மகன் எவ்வளவு துன்பத்தை அனுபவித்து இருப்பான் என்பதை நினைத்து தானும் துன்பப்பட்டார். போதா குறைக்கு தான் மருத்துவமனையில் இருக்கும் பொழுது பார்த்து அவன் ஊருக்கு சென்றிருப்பது, இன்னும் ஒரு முறை கூட தனக்கு அழைத்து பேசாதது எல்லாம் அவர் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்த தீவிர சிந்தனையில் அமர்ந்திருந்த அவருக்கு தூக்கம் எங்கோ சென்றிருந்தது.

@@@@

"நான் பேசிக்கிறேன்னு சொன்னேன் ஆனா என் பேச்சை எதையும் கேட்காம உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இப்ப என்னாச்சுன்னு பாரு" ஆற்றாமையில் மகளைத் திட்டிக் கொண்டிருந்த வருணிகாவின் தாய் ஊர்மிளாவாள் ஆதித்தின் திருமண செய்தியை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதுவும் தான் இருக்கும் இந்த நிலைக்கு காரணமான பெண்ணையே அவன் திருமணம் செய்து கொண்டான் என்னும் செய்து இன்னும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்க, தன் இளைய அண்ணன் மற்றும் தன் தாயின் மூலமாக விஷயத்தை அறிந்ததிலிருந்து ஆற்றாமையில் மகளை திட்டிக் கொண்டே இருக்கிறார். ஆனால் வருணிகாவோ இதற்கெல்லாம் அலட்டி கொள்ளவே இல்லை.

"தாலி தானே கட்டி இருக்கான். அவன் கூட என்ன வாழவா செஞ்சிட்டான்? என் மேல உள்ள கோபத்துல இதெல்லாம் பண்ணிட்டு இருக்கான். நாளைக்கு போய் மன்னிப்பு கேட்டா அவளை தூக்கி போட்டுட்டு என்னை கல்யாணம் பண்ணிக்க போறான். நீ புலம்பாம வேலைய பாரு" என வருணிக்கா அலட்டிக் கொள்ளாமல் கூறிவிட்டு அங்கிருந்து செல்ல, இதைக் கேட்ட அவளது தாயும் தந்தையும் அதிர்ச்சி அடைந்தனர்.

"என்னங்க பேசிட்டு போற?" அதே அதிர்ச்சியில் தன் கணவரை பார்த்து கேட்டார் ஊர்மிளா.

"சரி விடு இப்போதைக்கு அவளை ஏதும் கேட்காத, கொஞ்சம் பொறுமையா பேசிய புரிய வைக்கலாம்" என்ற வருணிகாவின் தந்தைக்கும் மகளின் பேச்சு சற்று நெருடலாய் தான் இருந்தது.

@@@@@

வர்ஷா உணவை முடித்து விட்டு அறைக்குள் வந்த பொழுது ஆதித் கட்டிலில் படுத்தபடி தொலைக்காட்சியில் படம் பார்த்துக் கொண்டிருந்தான்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்தவன், மீண்டும் படத்தில் மூழ்கி விட அவளும் எதுவும் பேசாமல் ஒரு தலையணையை மட்டும் தன் கையில் எடுத்துக் கொண்டு தரையில் சென்று படுக்க ஆயத்தமானாள். அவளது செய்கை அனைத்தையும் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த ஆதித்,

"உடம்பு சரியில்லாத நேரத்துல ஏன் கீழ போய் படுக்கிற" குனிந்திருந்த அவள் முகத்தை பார்த்தபடி வினவினான்.

அவனது கணீர் குரலில் சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் ஒருவித சங்கடத்துடன்,

"அது இந்த மாதிரி நேரத்துல, அதுவும் அது மறுபடியும்.. பெட்ஷீட்ல" என முழுவதும் சொல்ல முடியாமல் வர்ஷா தடுமாற,

"சோ வாட் ஆனா பரவால்ல துவைச்சுக்கலாம் இல்லைன்னா வேற வாங்கிக்கலாம், வந்து மேல படு" அவள் சொல்லாத வார்த்தைகளை தானே சரியாக புரிந்து கொண்டு, இவ்வாறு அதட்டலாக கூறினான்.

ஆதித்திடம் என்ன சொல்வதென்று புரியாமல் வருஷா தயங்கியபடி நிற்க,

"உன்னை படுன்னு சொன்னேன்" என ஆதித் அழுத்தமாக கூறவும், மறுபேச்சு பேசாமல் வந்து கட்டிலில் அமர்ந்தவளுக்கு மனதிற்குள் சற்று நெருடலாக இருக்க ஆதித்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது பார்த்து சட்டென்று நிமிர்ந்த ஆதி,

"என்ன ஏதாவது பேசணுமா?" வர்ஷாவின் முக மாற்றத்தை உள்வாங்கிக்கொண்டு வினவினான்.

திடீரென்று அவன் இவ்வாறு கேட்கவும் முதலில் பதற்றம் அடைந்தவள் பின்பு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, "நீங்களும் இங்கதான் படுப்பீங்களா?" பயம் தான் ஆனாலும் கேட்டுவிட, வர்ஷாவின் கேள்வியில் உள்ள அர்த்தத்தை உணர்ந்தவனோ அவளை ஒரு பார்வை பார்த்தவன்,

"நான் வேணும்ன்னா ஹால்ல போய் படுத்துக்கவா?" நக்கலாக கேட்க, அதைப் புரிந்து கொள்ளாத வர்ஷாவோ,

"சரி" என்பதாய் தலையை ஆட்ட கோபமடைந்தவன்,

"ஹலோ இது என் வீடு, அதை மறந்திடாத. உன்கிட்ட நான் இவ்வளவு தன்மையா நடந்துகிறதே பெரிய விஷயம். சோ ஓவரா பேசாம வாய மூடிட்டு படு" என அதட்டலாக கூறியவன் டிவியை அணைத்துவிட்டு மறுபக்கம் படுக்க ஆயத்தமாகவும், ஒரு இரண்டு தலையணைகளை எடுத்து இருவருக்கும் நடுவே வர்ஷா வைக்க, ஏற்கனவே அவளது கேள்வியில் கோபமாக இருந்த ஆதித் இப்பொழுது அவளது செயலில் இன்னும் கோபம் கொண்டான்.

வர்ஷாவை முறைத்து பார்த்த ஆதித்,

"ஹலோ எதுக்கு கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்த என்கிறத மறந்துடாத. இன்னைக்கு விட்டுட்டேன் என்கிறதுக்காக எப்பொழுதும் இப்படியே இருப்பேன்னு நினைச்சுக்காத. உனக்கு பாவம் பார்த்தேன் பார்த்தியா என்னை சொல்லணும், சரி உனக்கு இதெல்லாம் எப்போ முடியும்" என்று அதட்டலாக ஆதித் கேட்க, அவன் எதை கேட்கிறான் என்பதை புரிந்து கொண்ட பெண்ணவளோ அவனை மிரட்சியுடன் பார்த்தவள்,

"அஞ்சு நாள்" என்று மெல்லிய குரலில் கூற,

"இந்த சீன் எல்லாம்" என்று தங்களுக்கு நடுவே இருக்கும் தலையணையை சுட்டி காட்டியபடி தொடர்ந்தவன்,

"இன்னும் அஞ்சு நாளைக்கு தான், ஆறாவது நாள் ரெடியாக இரு" என்று அழுத்தமாக கூறி அவளது பயத்தை உள்ளுக்குள் ரசித்தபடி கட்டிலில் படுத்துக்கொள்ள, அவனது அருகாமையிலும் அவன் பேசிய தோரணையிலும் அச்சம் கொண்ட வர்ஷாவின் இதயம் பந்தயக் குதிரையின் வேகத்தில் துடித்தது.
 
Last edited:

Mathykarthy

Well-known member
வருணிகா எத்தனை பேசிட்டு அவனை அசிங்கப்படுத்திட்டு இப்போ மன்னிப்பு கேட்டு சேர்ந்துடுவாளாம்...😡😡😡😡😡 அவனும் ஏத்துப்பானாம்... நினைப்பு தான்...😏

ஆகாஷ் நல்ல friend..
ஆதியோட ஒவ்வொரு செயல்லயும் வர்ஷா impress ஆகுறா.. 🤩
 

NNK-34

Moderator
வருணிகா எத்தனை பேசிட்டு அவனை அசிங்கப்படுத்திட்டு இப்போ மன்னிப்பு கேட்டு சேர்ந்துடுவாளாம்...😡😡😡😡😡 அவனும் ஏத்துப்பானாம்... நினைப்பு தான்...😏

ஆகாஷ் நல்ல friend..
ஆதியோட ஒவ்வொரு செயல்லயும் வர்ஷா impress ஆகுறா.. 🤩
Ava aathiya purinjikave illa da . Athanala thaan ava avanai ilanthuta.
Yes dr .
Athiyoda character impress panuthu da
Thank you so much dr
 
ஆகாஷை ரொம்ப பிடிச்சிருக்கு!!!... அவனோட நட்பு சூப்பர்!!... ஆகமொத்தத்தில் விநாயக் தான் ஏதோ எல்லாரையும் ஏமாத்திருக்கான்!!!...
 

NNK-34

Moderator
ஆகாஷை ரொம்ப பிடிச்சிருக்கு!!!... அவனோட நட்பு சூப்பர்!!... ஆகமொத்தத்தில் விநாயக் தான் ஏதோ எல்லாரையும் ஏமாத்திருக்கான்!!!...
Varsha vishayathula one yr munnadi adi vinayakai adichathula ulla kobathula palivaanga thaan kiruken ivavalavum panraan . Adi thnnudaiya padathula irunthu vinayakai thookiduvan athukapurame vinayaku niraiya adiya vilum career la aana aadhi munneri poite irukaan antha kobam thaan da .
Thank u so much dr
 

Advi

Well-known member
ஆகாஷ் உண்மையா ரொம்ப நல்ல பிரென்ட்....

இவ இன்னும் திருந்தல ரைட்டர் ஜி, இன்னும் சாரி கேட்பேன் அதுக்கு மட்சிங்க ப்ளவுஸ் கேட்பேன்னு உளரிட்டு திரியுது🤦🤦🤦🤦🤦

நிரோ உனக்கு நல்லா வேணும்.....

ஆதி😍😍😆😆😆
 

NNK-34

Moderator
ஆகாஷ் உண்மையா ரொம்ப நல்ல பிரென்ட்....

இவ இன்னும் திருந்தல ரைட்டர் ஜி, இன்னும் சாரி கேட்பேன் அதுக்கு மட்சிங்க ப்ளவுஸ் கேட்பேன்னு உளரிட்டு திரியுது🤦🤦🤦🤦🤦

நிரோ உனக்கு நல்லா வேணும்.....

ஆதி😍😍😆😆😆
Aama da
Dei varukku unga counter ultimate da 😂
Ava senjathuku anubavikiraa
Thank you so much dr
 

Shamugasree

Well-known member
Niro kita enna Panna poran nu sollamale senjurukan. Therinjuruntha kandipa udanpoiruka mata. So ivala vitta sikkuvom nu Tha adaichu vechurukan.
Dei Raghu Vinayak koodave irukiye avanuku nalla buthi solla Mata. Akash pola natpu Athi ku varum. Maha ma mind la niraiya kelvi magana theduranga. Varsha pathi therinja enna solluvanga.
Varu la enna make. Avan Tha annaike ketane last ah oru time. Oru vela iva avana nambiruntha kalyanam panni Varsha va Pali mattum vangirupano. Iva sorry sonna avan accept pannuvan nu epdi nambura. Sorry va kalyanam pannikalam nu ketu nalu Arai vangitu vara pora. Athi 5days time koduthurukan. Palivanguren nu enna comedy Panna porano😂😂😂
 

NNK-34

Moderator
Niro kita enna Panna poran nu sollamale senjurukan. Therinjuruntha kandipa udanpoiruka mata. So ivala vitta sikkuvom nu Tha adaichu vechurukan.
Dei Raghu Vinayak koodave irukiye avanuku nalla buthi solla Mata. Akash pola natpu Athi ku varum. Maha ma mind la niraiya kelvi magana theduranga. Varsha pathi therinja enna solluvanga.
Varu la enna make. Avan Tha annaike ketane last ah oru time. Oru vela iva avana nambiruntha kalyanam panni Varsha va Pali mattum vangirupano. Iva sorry sonna avan accept pannuvan nu epdi nambura. Sorry va kalyanam pannikalam nu ketu nalu Arai vangitu vara pora. Athi 5days time koduthurukan. Palivanguren nu enna comedy Panna porano😂😂😂
Aama da senjiruka mattaa , niro vitta ivan mela case aagum la da .
Kandipa da dr nalla frds namaku varam thaan.
Maha ma enna pannuvaanganu seekiram therinjikalaam dr.
Avaluku over confidence and thimir iruku adi paNanu theriyathu aana payangarama mokkai vaanga pora .
Fun time dr athi varsha 🥰😜
Thank you so much pa
 
Top