எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாயனே! 10 - கதை திரி

NNK-82

Moderator

மாயனே 10​

இன்பாவை முறைத்து கொண்டிருந்தாள் நிலா.. "இப்போ எதுக்கு முறைக்கிற??" என்று அவள் முன் அமர்ந்தான் இன்பா.​

" எதையோ என்கிட்ட மறைக்கிறீங்க. எங்க அப்பாவும் முழுசா உண்மைய சொல்ல மாட்டேங்குறாரு. நீங்களும் மென்னு முழுங்குறிங்க. என்னதான் நடக்குது இங்க? நிலா கேட்க உனக்கு இப்ப என்ன தெரியணும்? " என்று கேட்டான் இன்பா..​

" என்பது லட்சம் கடனுக்காக தானே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க.. " என்றவளிடம் "ஆமா இப்ப அதுக்கு என்ன?" கேசுவாளாக கேட்க​

"ஆனா எங்க அப்பா தானே உங்களுக்கு கார்டியன்? அப்படி இருந்தும் ஏன் இப்படி பண்றீங்க?" மூளையை குடைந்து கொண்டிருந்த கேள்வியை கேட்டாள்.​

"அடியே பொண்டாட்டி.. என்னதான் கார்டியன் இருந்தாலும் என் பிசினஸ் தான் எனக்கு முக்கியம். உங்க அப்பா என்ன வளத்தாரு என்பதற்காக 80 லட்சத்தை என்னால விட்டுக் கொடுக்க முடியாது இல்ல.." திமிராக கூறிய இன்பாவை முறைத்தவல் "நன்றி, விசுவாசம், அன்பு இதெல்லாம் என்னன்னே தெரியாது இல்ல உனக்கு" என்று கேட்க​

"ஆமா தெரியாது.." என்றான் திமிராகவே.​

"நீயேல்லாம் மனுசனே இல்ல.." என்று திட்டிவிட்டு முதுகை காட்டி படுத்துக்கொண்டாள். அவள் முதுகை பார்த்து அவளை நெருங்கி படுத்தான். இருந்த கோபத்தில் அவனை அருகாமையை உணராமல் அவள் உறங்கி போய்விட்டாள். அவனுக்குத்தான் உறக்கம் தொலைந்து போனது.​

நாட்கள் அதன் போக்கில் செல்ல நிலா வேறு கல்லூரியில் வேலை தேடிக் கொண்டிருந்தாள். அதை கவனித்த இன்பா "இப்ப ஒர்க் பண்ற காலேஜுக்கு நீ வேலைக்கு போகலையா?" என்று கேட்க "இல்லை. நான் இனிமே அங்க போறதா இல்லை" என்றாள் உறுதியாக.​

" ஏன்??" சட்டையை கழட்டி படி அவன் கேட்க "இவ்வளவு நடந்தும் நான் அந்த காலேஜுக்கு போனா என்ன பத்தி என்ன பேசுவாங்க? ஏற்கனவே அடுத்தவங்கள பத்தி பேசுறவங்க ரொம்ப அதிகம். நான் மறுபடியும் அங்க போனா வெறும் வாய்க்கு வெத்தலை கிடைச்ச மாதிரி என்னை மென்னு தின்னுருவாங்க" என்றாள் வருத்தமாக.​

அவள் முன் அமர்ந்தவன் என பாரு என்றான். நிமிர்ந்தவள் அவனை பார்க்க "உனக்கு பிடிச்சா வேலைக்கு போ. புடிக்கலைன்னா வேலைக்கு போகாத. அந்த காலேஜ் எனக்கு பிடிக்கல. அதனால வேலைக்கு போகலைன்னு சொல்லு. ஒகே.. வேற காலேஜுக்கு வேலைக்கு போறேன்னு அப்லே பண்ணு. ஆனா மத்தவங்க தப்பா பேசுவாங்க அதனால நான் அங்க திரும்ப போக மாட்டேன்னு சொல்லாத.. நீ எதுக்காக வேலை விட்டு போகணும்?​

உன்னை எதுக்கு அடுத்தவங்களுக்காக நீ மாத்திக்கிற? நீ எப்பவும் எப்படி இருப்பியோ அதே மாதிரி இரு.." என்று அவன் கூற "எனக்கும் அப்படி இருக்க ஆசைதான். ஆனா ஒருத்தர் ஒன்னு ஒன்னு பேசும் போது ரொம்ப கஷ்டமா இருக்கும்" என்றாள் வருத்தமாக.​

" அப்படி எல்லாம் பார்த்தா இங்க வாழவே முடியாது நிலா. நீ ஏன் அதை பத்தி யோசிக்கிற? உனக்கு வேற காலேஜ் போகணும்னு தோணுனா போ. ஆனா அவங்க அது பேசுவாங்க இது பேசுவாங்கன்னு வேற காலேஜ் போறேன்னு சொல்லாத.. " என்றான்​

அவளிடம் அமைதி. "உனக்கு அந்த காலேஜ் புடிக்கலையா?" என்று கேட்க "எனக்கு இந்த காலேஜ் ரொம்ப பிடிக்கும்" என்றாள் நிலா.​

" அப்புறம் என்ன? நீ மறுபடியும் அதே காலேஜ்ல அதே வேலையை கண்டினியூ பண்ணு. பேசுறவங்க பேசட்டும். இன்னைக்கு உன்ன பேசுறவங்க, நாளைக்கு வேற ஒருத்தவங்கள பேசுவாங்க. அதுக்காக அவங்களுக்காக நீ வேலை மாறி போகணும்னு அவசியம் இல்ல" என்றான்.​

அவள் இப்போதும் அமைதியாக இருக்க "அப்புறம் உன் விருப்பம் நான் உன்னை போர்ஸ் பண்ண மாட்டேன்" என்று எழுந்து சென்று விட்டான்.​

பலவாறு யோசித்து அவளுக்கு அதுவே சரி என்று பட்டது. மறுநாள் முதல் கொண்டு வழக்கம் போல வேலைக்கு செல்ல தொடங்கினாள். இன்பாவே அவளை கல்லூரிக்கு அழைத்துச் சென்று மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தான். அவனுடனே அவளும் பயணித்தாள்.​

இருவருக்கும் சண்டைக்களுக்கும் சச்சரவுகளுக்கும் குறைவில்லாமல் சென்றது. அதே நேரம் அன்பும் அங்கு ஆட்சி செய்தது எவ்வளவுதான் சண்டை வந்தாலும் அவன் இல்லாமல் அவள் ஒருநாளும் உறங்கியதில்லை. தாமதம் ஆனாலும் போன் செய்து அவளுக்கு கூறுவான். "எனக்காக வெயிட் பண்ணத.. நீ சாப்டு தூங்கு.. நான் வர டைம் ஆகும்.." என்று கூறுவான்.​

அவளும் இப்போதெல்லாம் சமைக்க துவங்கிவிட்டாள். நாட்கள் போக்கில் செல்கின்றது. அனுராக் தான் அடுத்த திட்டத்தை செயல்படுத்த காலம் நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மகன் துர்கேஷ் திதிக்கு அவன் பெயில் கேட்டு மனு போட்டு இருக்க, நான்கு மணி நேரம் அவனுக்கு பெயில் கிடைத்தது. அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு தப்பிக்க முயன்றான். ஆனால் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்ததால் அவன் திட்டங்கள் அனைத்தும் தோல்வியுற்று மீண்டும் போலீசில் மாட்டிக் கொண்டு சிறையில் அடைக்கப்பட்டான்.​

கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு பேய் போல ஆனான் தன் மகன் ஆசைப்பட்ட அனைத்தையும் வாங்கி கொடுத்து அவனை மகிழ்வித்த தந்தையால், அவன ஆசைப்பட்ட பெண்ணை அவனுக்கு கட்டி வைக்க முடியாமல் அவன் இறந்து போனதையும் எண்ணி எண்ணி உக்கிரமானான். தன்மகன் சாவுக்கு காரணமான நிலாவை கழுத்தறுத்து எறியும் நாளுக்காக காத்திருந்தான்.​

அது தெரியாமல் நிலா இங்கு கணவனுடன் ஜாலியாக பைக்கில் சென்று கொண்டிருந்தாள். "இன்னிக்கு நைட்டு ஒரு ஃபங்ஷன் இருக்கு என் கூட வரீங்களா?" என்று கேட்க "என்ன பங்க்ஷன்?" என்றான் சாலையில் கவனம் வைத்தபடி.​

" கூட ஒர்க் பண்றவங்க ரிசப்ஷன். அவங்க என்னோட ஃபிரண்ட். பெஸ்ட் ஃபிரண்ட்ன்னு சொல்லலாம்.. போலாமா?? " என்று கேட்க போலாமே எத்தனை மணிக்கு கிளம்பனும்.​

"ஏழு மணிக்கு ரிசப்ஷன். அதுக்கு எப்படி கிளம்பனும் கிளம்பிக்கோங்க" என்று கல்லூரி வாசலில் இறங்கிக் கொண்டாள்.​

" இப்பல்லாம் புருஷன் இல்லாம எந்த பங்க்சனுக்கும் நீ போக விரும்புறதில்லையோ? " கேலியாக கேட்க மூக்கு சுருக்கி முறைத்தவள் "வந்தா வாங்க வராட்டி போங்க.. நான் வரல" என்று கோபமாக கிளம்பிய அவள் கரம் பற்றி இழுத்து நிறுத்தியவன் "சரி.. வரேன் நான் குடிச்சு ரொம்ப நாள் ஆச்சு. அதனால இன்கேஸ் நான் குடிச்சா நீ ஏதும் சொல்லக்கூடாது.." என்றான்​

"எவ்வளவு குடிச்சாலும் மறுபடியும் வீட்டுக்கு வரும்போது நீங்க தான் டிரைவ் பண்ண போறீங்க.. அதனால கொஞ்சமாவே குடிங்க" என்று விட்டு சென்றாள்.​

அவளைப் பார்த்து சிரித்தவன் தன் அலுவலகம் சென்றான். சீனிவாசன் தரவேண்டிய பணத்திற்கு அவனுடைய கடை வீடு இரண்டையும் அதன் பெயருக்கு மாற்றிக் கொண்டான் இன்பா.​

"இப்படி எல்லாம் அடுத்தவங்க வயித்துல அடிச்சு சம்பாதிக்கிறியே இந்த காசு உனக்கு நினைக்குமா? உன் புள்ள குட்டிகளா நல்லா இருக்குமா? அடுத்தவங்க பாவத்துல உருவான காசுல சாப்பிடுறியே அந்த சோறு உனக்கு சேமிக்குமா??' என்று சீனிவாசன் கண்ணீருடன் இறைஞ்ச,​

"என்கிட்ட வட்டி எவ்வளவுன்னு தெரிஞ்சு தானே நீ உன் கடையும் வீட்டையும் கொண்டு வந்து என்கிட்ட அடமானம் வச்ச காசு வாங்கின. வட்டி கட்டினா கூட பரவாயில்ல. ஆனா நீ வட்டியும் கட்டல, அசலும் கட்டல. ஆளும் தலைமறைவாயிட்ட. கொடுத்த பணத்துக்கு நான் என்ன பண்றது? பணம் கொடுக்கும் போது உனக்கு நல்லவனா தெரியுது நான் கொடுத்த பணத்தை கேட்கும் போது கெட்டவனா தெரிஞ்சா அது ஏன் தப்பு இல்ல.​

காசு வாங்கின படி கொடுக்கணும். என்கிட்ட பணம் வாங்கி தலைமறைவாகி ஓடி போன நீ நல்லவன்.. என் பணத்தை கேட்டு நிக்குற நான் கெட்டவனா?? பணம் கொடுக்காதது உன்னோட தப்பு" என்றவன் "அடிச்சு வெளிய தள்ளுங்கடா" என்று கூற அவனை அடித்து வெளியே தள்ளினார்கள்.​

அழுது கொண்டே சென்றான் ஸ்ரீநிவாசன். ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்காத இவனை பழிவாங்க என்று சமயம் பார்த்து காத்திருந்தான்.​

மற்ற வேலைகளை அனைத்தும் முடிந்த முடிய மாலையை விரைவாகவே வீடு வந்தான் இன்பா.. செழித்து கரு கருவென வளர்ந்திருந்த சுருள் தேசத்திற்கு ஜெல் வைத்து வாரி அடக்கியவன், பிளாக் பேண்ட் ஹாஃப் ஒயிட் ஷர்ட் மாத்தி கொண்டு ரிசப்ஷன் செல்ல தயார். நிலாவும் ஹால்ப் ஒயிட் சாரி உடுத்தி வந்தாள்.​

இருவரும் தங்களுடைய உடை ஒற்றுமையைப் பார்த்து சிரித்தனர். போலாம் டைம் ஆச்சு என்று கூற இருவரும் கைகோர்த்து ரிசப்ஷன் சென்றனர். நிலாவுடன் படித்த தோழிகள் அங்கு வந்திருக்க அனைவருக்கும் தன் கணவனை அறிமுகம் செய்து வைத்தாள். திருமணத்திற்கு தோழிகள் எவரையும் அலைக்காததால் அணைவருக்கும் தன் கணவனை அறிமுகம் செய்து வைத்தாள்.​

"ஹேய் நிலா.. உன் புருஷன் ரகட் பாய் போல இருக்கே.." என்று ஒருத்தி கேட்க, இன்னொருத்தி "ஆமா.. நிலா நீ ரகட் கேர்ள். உன் ஹஸ்பண்ட் ரகர்ட் பாய் ரெண்டு பேருக்கும் சூப்பர் காம்பினேஷன் தான்" என்று கிண்டலாக கூற முறைத்தாள் நிலா.​

அவள் தோழிகளில் ஒருத்தி "அழகா இருக்காருடி உங்க வீட்டுக்காரரு. என்ன தான் வந்து கலர் கலரா பசங்க இருந்தாலும் தயிர் சாதம் டி அவங்க எல்லாரும்.. என்ன இருந்தாலும் இந்த கருத்த பசங்களுக்குன்னே இருக்குற ஒரு மவுசு தனி டி. உண்மையிலே நீ லக்கி. கொடுத்து வச்சவ இப்படி கறுத்த ஹண்ட்ஸம் புருஷன் கிடைக்க.." என்று கூற அவளை முறைத்து விட்டு அங்கிருந்து சென்றாள் நிலா.​

என் புருஷனை இவ எப்படி கண்ணு வைக்கலாம்? இவ கொள்ளி கண்ணுல முல்ல வெட்டி அடைக்க. வீட்டுக்கு போய் முதல்ல என் புருஷன் சுத்தி போடணும் என்று அவனை தேட அவன் அங்கு காணவில்லை.​

இங்கு தானே இருந்தாரு?? எங்க போனாரு என்று சுற்றி சுற்றி தேட மது புட்டிகள் அடக்கப்பட்ட இடத்தில் குடித்துக் கொண்டிருந்தான் இன்பா. அவனை கண்டு கொஞ்சமா குடிப்பேன்னு சொன்னாரு.. இருந்தாலும் என்று அவள் தயங்க, மூக்கு முட்ட குடித்து முடித்து இருந்தான் இன்பா. நீண்ட நாளுக்கு பிறகு மதுவை குடித்து தலைக்கு எரிய போதையில் தள்ளாடினான்.​

அந்நேரம் அனிமல் படத்தில் வரும் ஜமல் ஜமால்.. பாடல் ஒலிக்க மது அடங்கிய கண்ணாடி குவலையை தலைமேல் வைத்துக் கொண்டு இரு கைகளையும் விரித்து ஆட்டம் போட்டான். குடித்திருந்த மற்றவர்களும் அவனுடன் சேர்ந்து ஆட நிலாவிற்கு அவமானமாய் போனது.​

அவனை பார்த்து சிரித்த அவள் தோழிகள் "ஹேய் நிலா.. உன் புருஷன் நல்லா ஆடுறாரு டி.. சூப்பர்… வீட்லயும் இப்படித்தானோ.. ரெண்டு பேரும் சேர்ந்து ஆடுவீங்களா??" என்று அவள் தோழிகள் கேலி பேச கூனிக்குறுகி போனாள் நிலா. எதுவும் சொல்லாமல் ஒரு இடத்தில் ஒதுங்கி அமர்ந்து கொண்டாள். குடித்து முடித்து ஆடி முடித்து களைத்து வந்தவன்,​

"நிலா குட்டி.. ஏன் டா டல்லா இருக்க??" என்று அவன் கன்னத்தில் முத்தம் வைக்க அவளை கண்டு முறைத்தவள் எதுவும் பேசாமல் அவனை எழுந்து சென்றாள்.​

தள்ளாடும் போதையில் அவனால் வண்டி ஓட்ட முடியாது என்று டூ வீலரை அங்கேயே வைத்து பார்க் செய்து பூட்டிவிட்டு ஓலாவில் கார் புக் பண்ணி இருவரும் வீடு வந்த சேர்ந்தனர். தள்ளாடி தள்ளாடி வந்தவன் தடுமாறி விழ போக அவனை தோளில் தாங்கி அறைக்கு அழைத்து சென்று படுக்கையில் கிடத்தினாள்.​

போதையில் இங்கும் அங்கும் உருண்டான். கோபத்துடன் அவன் ஷூ பெல்ட் வாட்ச் அனைத்தையும் கழட்டி வைத்தவள், அவனை பெட்டில் போட்டு விட்டு சோஃபாவில் வந்து படுத்துக் கொண்டாள்.​

கோபம்.. கோபம்.. கோபம் தலைக்கேறிய கோபம் அவளுக்கு. அவன் மீதிருந்த வெறுப்பு அதிகமானது. கண்களை மூடி கொண்டு படுத்து கொண்டாள். ஆனாலும் மூடிய இமைக்குள் இருந்து கண்ணீர் கசிய போதையில் சுருண்டு கிடந்தவனை பார்த்து வேதனை அடைந்தாள்…​

தொடரும்…​

 
Top