எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருந்தி விட்டேன்! திமிர் பிடித்தவளாக! - நிறைவு பகுதி

NNK-64

Moderator

நிறைவு பகுதி / எபிலாக்​

மூன்று வருடங்களுக்கு பிறகு!​

mfw (Must for Woman) பெண்களுக்கான சிறப்பு விருதுகள் அளிக்கும் விழா மேடை!​

சென்னையில் நடக்கும் அந்த பெரிய விழா மேடையில், சிறப்பு விருந்தினராக மாநில முதல்வரும், அமைச்சர்களும், மாவட்ட கலெக்டரும் அமர்ந்திருந்தனர்.​

முதல் வரிசையில் நிரஞ்சன், அவன் மனைவி எழிலழகி மற்றும் தன் இரண்டு வயது மகள் தமிழினி ஆகியோருடன் அமர்ந்திருந்தான். பின் வரிசையில் முருகேசன் குடும்பத்தோடு அமர்ந்திருந்தார்.​

சந்திரகா இப்போது தன் அத்தான் நிரஞ்சனின் வழிகாட்டுதலோடு படித்து அரசுதேர்வு எழுதி துணை தாசில்தார் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தாள். அவள் தான் அங்கு வரும் முக்கியஸ்தர்களை வரவேற்றுக் கொண்டிருந்தாள்.​

மேடையில் விழா நடத்துபவர், விருது வாங்குபவர்களின் விவரங்களை அறிவித்துக் கொண்டிருந்தார்​

“எழிலழகி, இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து சராசரி பெண்ணாக இருந்தவர். இன்று அவரின் சாதனைகள் பல. இலவச அரசுதேர்வு பயிற்சி மையம் பல்வேறு இடங்களில் தொடங்கி, மாணவர்களுக்கு இலவச புத்தங்களும் பயிற்சியும் கொடுத்து வருகிறார்.​

பெண்களுக்கு பணியிடத்தில் ஏற்படும் பாலியல் ரீதியான தொல்லைகளைப் பற்றி பல்வேறு தொழிற்சாலைகளுக்கு நேரிடையாக சென்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதற்கான தீர்வையும் போராடி பெற்று வருகிறார். அதுமட்டுமில்லாமல் பெண்கள் சுயதொழில் செய்து சுயசார்புடன் வாழ்வதற்காக தன்னால் ஆன உதவிகளை தொடர்ந்து செய்து வரும் ஒரு சிறந்த சமூக ஆர்வராக செயலாற்றி வருகிறார்​

அந்த வகையில் இந்த வருடத்தின் சிறந்த பெண் சமூக ஆர்வலர் என்ற விருதை பெரும் நம் சிங்க பெண் திருமதி எழிலழகி நிரஞ்சன்! எழிலழகியை மேடைக்கு வரவேற்கிறாம்!” என்று அந்த அரங்கமே அதிரும் வண்ணம் சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார் விழா பேச்சாளர்.​

நிரஞ்சன் பெருமையுடன் தன் மனைவியை பார்த்தான். அவள் நிமிர்ந்த நன்னடையும் நேர்க்கொண்ட பார்வையுடன் மிடுக்காக நடந்து சென்று விழா மேடையை அடைந்தாள்.​

“எல்லாருக்கும் வணக்கம், பேச்சாளர் சொன்னது போல என்னுடைய இந்த சாதனைகளை நான் மட்டும் தனியாக செய்துவிடவில்லை. இதற்கு முக்கிய காரணம் என் கணவர் டாக்டர் நிரஞ்சன் தான். எல்லாரும் பொதுவாக சொல்வது போல், என் வெற்றிக்கு காரணம் என் கணவர் தான் என்று சொல்லும் பொதுவான மேடைப் பேச்சிற்காக இதை நான் சொல்லவில்லை.​

ஆண்களே மோசமானவர்கள் என்ற என் நினைப்பை பொய்யாக்கி என் வாழ்வின் வசந்தத்தை ஏற்படுத்திய ஆண் தேவதை அவர். அவர் இல்லை என்றால் என்னாவாகி இருப்பேன் என்று எனக்கே தெரியாது.​

பதில் பேசக்கூட பயந்து முதுகெலும்பில்லாமல் இருந்த என்னை தலைநிமிர்ந்து இந்த சமுதாயத்தை எதிர்கொள்ள ஊக்கமளித்தவர். அவர் எப்போதும் என்னிடம் சொல்லும் வார்த்தை, “எழிலழகி, திமிரழகியாக மாறி விடு” என்று தான்.​

அவர் சொல்லும் திமிர், ஆணவ திமிர் அல்ல. சமுதாயத்தில் நடமாடும் இழிகுணம் கொண்ட ஆண்களை எதிர்கொள்ள தேவையான பாரதியார் சொன்ன திமிர்ந்த செருக்கு. தவறாக அணுகும் ஆண்களிடம் நம்முடைய மறுப்பை மென்மையாக இல்லாமல் சற்று சத்தமாக, தைரியமாக, திமிராக வெளிப்படுத்தினால் அவர்கள் மறுபடியும் நம்மை நெருங்க பயப்படுவார்கள்.​

அப்படிப்பட்டவர்களுக்கு திமிர்பிடித்தவளாக இருந்தால் என்ன தவறு? என்று தான் கோழையாக இருந்த நான் திருந்திவிட்டேன்! திமிர்பிடித்தவளாக!​

நிரஞ்சனின் அழகி, திமிரழகி ஆகி விட்டாள்.​

எனக்கு கிடைத்தது போல ஆண் தேவதை உங்கள் வாழ்வில் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். நம்மை தற்காத்துக் கொள்ள நம்மை தவிர யாரால் முடியும்? எனவே பெண் அழகிகளே, திமிரழகியாக மாறிவிடுங்கள்” என்று தன் பேச்சை முடித்தாள்.​

அந்த அரங்கமே அதிரும் வண்ணம் கைத்தட்டல் ஓசை விண்ணை பிளந்தது. பார்வதி, அன்னம்மா, யமுனா மூவர் கண்களிலும் கண்ணீர் பரவசத்தோடு கைத்தட்டிக் கொண்டிருந்தனர்.​

முருகேசன் குற்ற உணர்வால் தலை குனிந்தார்.​

மீராவோ நிரஞ்சனைப் பார்த்து கட்டைவிரலை வெற்றி குறியாக காட்டி, உன் மனைவி அசத்தி விட்டாள் என்று கண்களால் அவனுக்கு தன் பாராட்டுகளை தெரிவித்தாள்.​

நிரஞ்சன் அளப்பறிய சந்தோஷத்தோடு பெருமையுடன் தன் மனைவியை பார்த்திருந்தான்.​

மேடையின் நாயகரான முதல்வர், அவளிடம் விருதை வழங்க முன்வர, அவரிடம், “நீங்க தப்பா எடுத்துக்கல என்றால், இந்த விருதை என் கணவர் கையால் வாங்கி கொள்ளலாமா?” என்றாள் எழிலழகி.​

“தாராளமாக” என்று சிரித்த முதல்வர், அவரே நிரஞ்சனை மேடைக்கு அழைத்தார்.​

இதை சற்றும் எதிர்பார்க்காத நிரஞ்சன் ஒருவித கூச்சத்துடன் சென்று அந்த விருதை தன் மனைவி எழிலழகிக்கு பரிசளித்தான். அதை அவள் வாங்கிக் கொண்டு, அவன் காலில் விழப்போக, சட்டென்று அவளை தடுத்து நிறுத்தியவன், அவள் நெற்றியில் முத்தமிட்டான்.​

இப்போது அந்த அரங்கமே விசில் சத்தத்தில் அதிர்ந்தது. கூச்சத்துடன் கணவனின் கைப்பற்றிக் கொண்டு கீழே நடந்தாள்.​

முருகேசன் எழுந்து சென்று எழிலழகி அருகில் சென்றார். ஓருகாலத்தில் அவள் பேசுவதற்கே வாய்ப்பளிக்காமல் இருந்தவர், இன்று அவள் பேசுவாளா? என்று தவம் கிடந்தார். அன்று சந்திரிகாவை அவள் வீட்டில் விட்டு சென்றதும் ஸ்ட்ரோக் வந்து படுக்கையில் படுத்துவிட்டார். இப்போதே சிகிச்சையின் பலனாக எழுந்து நடமாட தொடங்கியிருந்தார்.​

அவரின் மருத்துவ செலவு, சந்திரிகா சுரேஷின் படிப்பு செலவு, குடும்பச் செலவு என அனைத்தையும் அவள் தான் வீட்டின் தலைமகளாக பார்த்துக் கொண்டாள். ஏச்சு பேச்சுக்களுடன் தன்னை வளர்த்திருந்தாலும் அவர் தன்னை படிக்க வைத்த காரணத்தினால் தான் தன்னால் இன்று சுயமாக சம்பாதிக்க முடிகிறது. எனவே அவரின் குடும்ப பாரத்தை சுமப்பது தன் கடமையாக நினைத்து அனைத்தையும் செய்து வந்தாள். ஆனால் முருகேசனிடம் பேசுவதை தவிர்த்தாள்.​

தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் முருகேசனை ஒருமுறை ஆழ்ந்து பார்த்துவிட்டு, தன் கணவனுடன் சென்றவளை அங்கிருந்த அனைவரும் வாழ்த்த தொடங்கினர்.​

இருவரும் தங்கள் மகள் தமிழினியுடன் காரில் பயணம் செய்துக் கொண்டிருக்கும் போது, “அழகி ஒன்றை நன்றாக புரிந்துக் கொள், உன்னோட வெற்றிக்கு நீதான் முழுக்காரணம், நான் வெறும் தூண்டுகோல் தான். என்னை எல்லா இடத்திலும் பெருமை பேசி சங்கடப்படுத்தாதடி, எல்லா பெண்களும் என்னை சைட் அடிக்கிறாங்க தெரியுமா?” என்றான் ஒற்றை புருவம் உயர்த்தி.​

“யாருனு மட்டும் சொல்லுங்க, அவள் கண்ணை நோண்டிடுறேன், என் புருஷன் எனக்கு மட்டும் தான்” என்றவள் கலகலவென்று சிரித்தாள்.​

“நீங்க என்னை மாற்றுவதற்காக மூன்று மாதம் மருத்துவமனையில் ஒரு நோயாளி போல படுத்து இருந்தீங்க. ஒரு மருத்துவர் தன் மனைவி சுயசார்புடன் வாழ்வதற்கு இந்த அளவு தியாகம் செய்வாரா? மனைவி தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் நீங்கள் எனக்காக மூன்று மாதக் காலத்தை தியாகம் செய்து இருக்கீங்க.​

முதலில் நீங்க நடத்தியது நாடகம் என்று தெரிந்ததும் எனக்கு கோபமாக இருந்தது, குறுக்கு வழியை தேர்ந்தெடுத்தது போல தோன்றினாலும் உங்கள் அதிரடி நடவடிக்கையால் குறைந்த காலக்கட்டத்தில் எனக்குள் மிகப்பெரிய மாற்றம் நடந்திருக்கிறது.​

இயல்பாகவே இந்த மாற்றம் நாளடைவில் எனக்கு கிடைக்கும் அனுபவங்களால் நடந்திருக்கலாம். ஆனால் அதற்கான கால பயணமும் வலிகளும் நீண்டதாக இருந்திருக்கும். இப்போது சமுதாயத்தை எதிர்கொள்ள தகுதியானவளாக குறுகிய காலக்கட்டத்தில் என்னை மாற்றி விட்டிங்க.​

மீராவோட வழிகாட்டுதலும், ஆட்டோ டிரைவருடன் பாதுகாப்பான பயணமும் உங்கள் திட்டம் தான் என்று எனக்கு தெரியும்.​

அதுமட்டுமில்லாமல் செல்வநாயகம் அங்கிள் உங்கள்மேல் இருக்கும் மதிப்பால் தான் எனக்கு அவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்து காரையும் கொடுத்து ஓட்டி பழகச் சொன்னார். பதவியுடன் கூடிய அதிகாரமும் இருந்ததால் தான் என்னால் சிறப்பாக பணியாற்ற முடிந்தது.​

அதனால் நான் எங்கே பேசினாலும், நீங்கள் தான் என் வெற்றிக்கு காரணம் என்று சொல்லத்தான் செய்வேன்” என்றாள் கணவனை காதலுடன் பார்த்து.​

“என்ன தான் நான் சூழ்நிலையையும் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்தாலும் அந்த குறுகிய காலத்தில் உன்னுடைய மாற்றம் மிகவும் வியக்கத்தக்கது. நானே உன்னுடைய அதிரடியான நடவடிக்கைகளை கேள்விப்பட்டு அசந்து போனேன்” என்றான் நிரஞ்சன் பெருமையாக.​

“நிரு, எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் எப்போதும் எனக்குள் கோபமும் ஆற்றாமையும் இருந்துக் கொண்டுதான் இருந்தது. அதை எல்லாம் பேச தெரியாமல் கோழையாக இருந்தேன். எனக்கான சரியான வாய்ப்பும் சூழ்நிலையும் அமைந்தபோது என்னையறியாமலே எனக்குள் இருந்த திமிரழகி வெளிப்பட்டுவிட்டாள்” என்றாள் புன்னகையுடன்​

“உன்னுடைய இத்தனை பரிமாணங்களில் என்னால் உன்னருகே உறுதுணையாக இருக்க முடியாமல் நானும் என் மருத்துவ ஆய்விற்காக நேரம் செலவிட வேண்டியதாக போயிற்று, இனி நானும் உன்னுடன் சமூக சேவையில் ஈடுபட போகிறேன்” என்று பேசிக் கொண்டிருந்தவனின் சட்டையை பிடித்து இழுத்தாள் அவன் செல்ல மகள் தமிழினி.​

தாயும் தந்தையும் வெகுநேரமாக தன்னை கவனிக்காமல் பேசிக் கொண்டிருப்பது பொறுக்காமல், அன்னையிடமிருந்து எட்டி தந்தையிடம் தாவினாள்.​

காரை ஓரமாக நிறுத்திவிட்டு தன் மகளை எடுத்து கொஞ்சினான். “அம்மாவும் நானும் பேசிட்டு வந்தால் உங்களுக்கு போரடிக்குதா செல்லம், உங்க கூட விளையாட இன்னொரு பாப்பா வேணுமா?” என்றான்​

அதற்கு என்ன புரிந்ததோ ஆமாம் என்று தலையாட்டியது.​

இப்போது மனைவியை பார்த்து ஒற்றை புருவம் உயர்த்தி என்ன என்பது போல கேட்டான். அவள் அவனைப் பார்த்து பொய்யாக முறைத்தாள்.​

“அம்மா திமிரழகி, கொஞ்சம் எழிலழகியாகவும் கருணை காட்டு. கண்ணை உருட்டி பார்த்து என்னிடம் பயந்து என்னை விட்டு விடுங்கனு கத்தினாயே அந்த அழகி வேணும் எனக்கு இப்போது” என்றான் அன்றைய நாளின் நினைவில்​

அவன் தோளில் சாய்ந்துக் கொண்டு “நான் எப்போதும் உங்களுக்கு மட்டும் அதே எழிலழகி தான் நிரு, உங்களுக்கு எத்தனை பிள்ளை வேண்டுமோ சொல்லுங்க, நான் தயார்” என்றாள் அவன் காதில் ரகசியமாக.​

மனைவியின் பதிலில் உற்சாகமானான் நிரஞ்சன். அதற்கு பின்னால் அவனுக்கு பேச நேரமில்லை. அந்த கார் அவர்கள் வீட்டை நோக்கி சீறி பாய்ந்தது!!!​

தூங்கும் தமிழினியை எழிலழகி தூக்கி கொண்டு வீட்டின் உள்ளே நடக்க, நிரஞ்சன் மகளை அவளிடமிருந்து வாங்கி படுக்க வைத்துவிட்டு, தன் எழிலழகியை தூக்கிக் கொண்டு பள்ளியறை நோக்கி சென்றான்.​

எத்தனையோ பெண்கள் சமுதாயத்தில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். சிலர் வெளியே சொல்லி போராடிக் கொண்டும், சிலர் சொல்லாமலே கடந்தும், மேலும் சிலர் கடந்த காலத்தில் பலியாகி, காலம் கடந்து தன் இயலாமையை பற்றி நிகழ்காலத்தில் பேசுகின்றனர்.​

இதற்கு பதிலாக தங்களது மறுப்பை சற்று அழுத்தமாக சொல்லி, அதனால் தனக்கு கிடைக்க கூடிய வாய்ப்பே வேண்டாம் என்று தூக்கி வீசி, நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், திமிர்ந்த செறுக்கோடும் திமிரழகிகளாக வலம் வந்தால் பல காமுகன்களின் ஆட்டங்கள் முடிவுக்கு வரலாம்!​

எழிலழகி தன் கணவனுக்கு அழகியாகவும், நண்பர் வட்டாரங்களுக்கு எழிலாகவும், காமுகன்களுக்கு திமிரழகியாகவும் மாறிவிட்டாள்!​

சுபம்! நன்றி!​

 

Lavanya

Member
கதை அருமை மா...கதையின் கரு அருமை... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤️❤️❤️🥰🥰🥰
 

Mathykarthy

Well-known member
சூப்பர் ஸ்டோரி 🥰🥰🥰
நைஸ் கான்செப்ட்... 👍❤️
பொண்ணுங்க சமூகத்தை தைரியமா நிமிர்வா எதற்கும் வளைந்து கொடுக்காம எதிர்கொள்ளணும்ன்னு சொன்ன விதமும் கருத்தும் அருமை... யாரையும் எதிர்பார்க்காம தற்காத்து கொள்ள திமிரும் தேவை தான்...
நிரஞ்சன் 🥰🥰🥰 நிரு ஆண் தேவதை தான்... 🤗
சூப்பர் என்டிங்....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் sis 💐💐💐💐💐💐💐
 

NNK-64

Moderator
சூப்பர் ஸ்டோரி 🥰🥰🥰
நைஸ் கான்செப்ட்... 👍❤️
பொண்ணுங்க சமூகத்தை தைரியமா நிமிர்வா எதற்கும் வளைந்து கொடுக்காம எதிர்கொள்ளணும்ன்னு சொன்ன விதமும் கருத்தும் அருமை... யாரையும் எதிர்பார்க்காம தற்காத்து கொள்ள திமிரும் தேவை தான்...
நிரஞ்சன் 🥰🥰🥰 நிரு ஆண் தேவதை தான்... 🤗
சூப்பர் என்டிங்....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் sis 💐💐💐💐💐💐💐
உங்க கருத்து மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது. என்னுடைய intension சரியாக உங்களுக்கும் தோணியிருக்கு என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி சிஸ். உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி :love::love:❤️💚💜💙
 

santhinagaraj

Active member
இப்ப இருக்கிற சூழ்நிலைக்கு தேவையான ரொம்ப அருமையான கருத்து.

நிறைவான முடிவு சூப்பர் 👌👌👌
 

zeenath

Member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK64
#திருந்திவிட்டேன்திமிர்பிடித்தவளாக
நறுமுகைத் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
எழிலழகி.. தந்தையின் அடக்கு முறையில் வாழும் இவள்.. தைரியம் இல்லாமல் தன்னை துன்புறுத்துபவர்களிடமும் இழிவாக பேசுபவர்களிடமும் கூட கோபம் கொள்ள முடியாமல் பயந்து வாழும் ஒரு பெண்.. பயமும் கண்ணீரும் மட்டுமே முதன்மையாக இருக்கும் இவளுக்கு தைரியத்தை கொடுத்து அவள் வாழ்வில் எதையும் எதிர்கொண்டு வாழ வழி வகுக்குறான் நிரஞ்சன்..
அவள் இக்கட்டில் இருக்கும் போதெல்லாம் ஆபத்பாந்தவனாக வந்து காப்பாற்றும் இவன்.. அவளுக்கான தைரியத்தை வரவழைத்துக் கொள்ள எல்லா வகையிலும் முயற்சி செய்கிறான்.. இறுதியில் இவன் எடுக்கும் ஒரு முயற்சியே கை கொடுக்கிறது எழிலழகியாக இருக்கும் அவள் திமிர் பிடித்தவளாக மாறுவதற்கு..
மனம் கவர்ந்தவனுக்கு அழகி மற்றவர்களுக்கு எழில்
காமுகன்களுக்கு திமிரழகியாக மாறியது சிறப்பு 🥰
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰🌹
Good luck 🥰🌹
 

NNK-64

Moderator
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK64
#திருந்திவிட்டேன்திமிர்பிடித்தவளாக
நறுமுகைத் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
எழிலழகி.. தந்தையின் அடக்கு முறையில் வாழும் இவள்.. தைரியம் இல்லாமல் தன்னை துன்புறுத்துபவர்களிடமும் இழிவாக பேசுபவர்களிடமும் கூட கோபம் கொள்ள முடியாமல் பயந்து வாழும் ஒரு பெண்.. பயமும் கண்ணீரும் மட்டுமே முதன்மையாக இருக்கும் இவளுக்கு தைரியத்தை கொடுத்து அவள் வாழ்வில் எதையும் எதிர்கொண்டு வாழ வழி வகுக்குறான் நிரஞ்சன்..
அவள் இக்கட்டில் இருக்கும் போதெல்லாம் ஆபத்பாந்தவனாக வந்து காப்பாற்றும் இவன்.. அவளுக்கான தைரியத்தை வரவழைத்துக் கொள்ள எல்லா வகையிலும் முயற்சி செய்கிறான்.. இறுதியில் இவன் எடுக்கும் ஒரு முயற்சியே கை கொடுக்கிறது எழிலழகியாக இருக்கும் அவள் திமிர் பிடித்தவளாக மாறுவதற்கு..
மனம் கவர்ந்தவனுக்கு அழகி மற்றவர்களுக்கு எழில்
காமுகன்களுக்கு திமிரழகியாக மாறியது சிறப்பு 🥰
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰🌹
Good luck 🥰🌹
மிக்க நன்றி சகோ 🥰🙏🏻. உங்கள் கருத்து மிகவும் கவர்ந்தது, நன்றி
 

priya pandees

Moderator
Nnk64

பயந்த சுபாவம் அதீத அழகு இதான் அழகி, நிரஞ்சன் அவள் கணவன். அவன் அவளின் பயந்த சுபாவத்த மாற்றி எப்படி வெறும் அழகிய திமிரழகியா மாத்றான்றது தான் கதை கரு.

Usual தான் வெளில வேலைக்குன்னு போற பெண்கள் படுற தொல்லைகள் அத எப்படிலா face பண்றாங்க, எப்படிலா cross பண்ணி வாழலாம்னு சிம்பிளா சொல்லிருக்காங்க. வாழ்த்துக்கள்.

All the best ரைட்டரே...
 

NNK-64

Moderator
Nnk64

பயந்த சுபாவம் அதீத அழகு இதான் அழகி, நிரஞ்சன் அவள் கணவன். அவன் அவளின் பயந்த சுபாவத்த மாற்றி எப்படி வெறும் அழகிய திமிரழகியா மாத்றான்றது தான் கதை கரு.

Usual தான் வெளில வேலைக்குன்னு போற பெண்கள் படுற தொல்லைகள் அத எப்படிலா face பண்றாங்க, எப்படிலா cross பண்ணி வாழலாம்னு சிம்பிளா சொல்லிருக்காங்க. வாழ்த்துக்கள்.

All the best ரைட்டரே...
Thank you so much sis, ennoda intention excact ha sollitinga 💕🙏🏻🫰 மிக்க நன்றி
 
Top