எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பார்த்தவி -05 கதைத்திரி

NNK 67

Moderator
பார்த்தவி-05


இங்கே ஆபீஸிலிருந்த ராகவோ மிதிலாவை சந்தித்து வந்தபிறகு அவளது ஞாபகமாகவே இருக்க, அவனால் அவளின் மன்னிப்பை இறைஞ்சும் கடைவிழிப்பார்வையை மட்டும் மறக்கமுடியவில்லை..! ஆம்..! அந்தப்பார்வையில் என்ன கண்டானோ..? ஒவ்வொரு நொடியும் அவன் மண்டைக்குள் வண்டாய் குடைந்துகொண்டிருக்கிறது அவளது விழிவீச்சின் வீரியம்..!


இப்படியே செய்வதறியாது நிலையில் அமர்ந்துகொண்டிருந்தவனின் மனமோ, வேலையில் செல்லாமல் மிதிலாவின் நினைவின் பின்னே நிழல்பிடித்து ஓட, அவளுடன் கனவுலகத்திலேயே மூழ்கி இருந்தான்..! இதைக்கண்டும் காணாது விட்டிருந்த நந்தனோ, தன் நண்பன் இத்தனை காலங்களுக்குப்பிறகு மகிழ்ச்சியாக தன் கனவுலகில் சஞ்சரிப்பதைக்கண்டு, மனதில் மகிழ்ச்சியுற்றான்..! அலுவலகம் மட்டுமல்லாமல், வீட்டிற்கு சென்றபிறகும் கூட, இரவு நேரங்களில் படுக்கையில் தூக்கம்வராமல் உழன்றுகொண்டிருந்த ராகவின் நினைவில், மிதிலா முழுமையாக ஆக்கிரமித்திருக்க உறக்கத்திற்காகவாது கடினபட்டு அவளின் நினைவுகளை ஒதுக்கித்தள்ள முயன்றவனோ, அவனது ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியே தழுவுகிறான்..!


அன்றும் அப்படித்தான்..! இரவு படுக்கைக்கு சென்ற பின்னும், உறங்காமல் தன்னவளின் நினைவிலையே உழன்றபடி புரண்டுபுரண்டு படுத்துகொண்டிருக்க, அப்போது முக்கியமான பைலின் சந்தேகத்தை கேட்பதற்காக, அவனது அறைக்குள் வந்த நந்தனோ, தன் நண்பனின் திடீர்மாற்றத்தைக்கண்டு நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே, “டேய் ராகவ்..? என்னடா இன்னும் தூங்காமல் என்ன பண்ற..?” என்று கேட்க, “இல்லடா..! தூக்கம் வரல..!” என்று பதில் சொல்லவே நந்தனோ, “வராதுடா..வராது..! வரவர மச்சி நீ சரியில்லை..!” என்று சொல்லவும், “அதெல்லாம் ஒன்னும் இல்லடா..! இப்போ எதுக்கு நீ வந்திருக்க..? அதை முதலில் சொல்லு..?” என்று கேட்டதற்கு நந்தனோ, “இதோ..? இந்த பைலில் கொஞ்சம் டவுட் இருக்குது..! சார் இப்போ ஃப்ரீயா இருந்தால், எனக்குசொல்லி தரீங்களா..?” என்று நக்கலாக வினவ, தன் நண்பனை புரிந்துகொண்டவனோ, அந்த பைலை வாங்கி அதற்கான சந்தேகத்தை தீர்த்துவிட்டு, நந்தன் அங்கிருந்து சென்றபின்னர் அப்படியே உறங்கிப்போனான்..!


மறுநாள் காலையில் எழுந்த ராகவோ குளியலறைக்கு சென்று, குளித்துமுடித்து ரெடியாகிவிட்டு தன் நண்பன் நந்தனையும் அழைத்துக்கொண்டு அன்று, தான் சென்றிருந்த அதே அம்மன்கோவிலுக்கு செல்ல, தன்னை அவசரஅவசரமாக கோவிலுக்கு அழைத்துவந்த நண்பனைக்கண்ட நந்தனோ, “என்னடா..? எதுக்காக இங்கே என்னை கூட்டிட்டு வந்திருக்க..? இன்னைக்கு ஏதும் விசேஷமா..?” என்று கேட்க, “இல்லடா..! எனக்கு இங்கே வரணும்போல தோணுச்சு..! அதனாலதான் வந்தேன்..!” என்று கூறினான்.


ஆம்..! தன்னவள் நினைவுகளின் தாக்கத்தினால், அவளை பார்க்க வேண்டும் என்று அவனது மனம் ஆவல்விடுக்க, அவளை எங்கே சென்று பார்ப்பது..? அவளைப்பற்றி எந்த தகவலும் தெரியாதே..? வேறுவழியின்றி இறுதியில், எந்தக்கோவிலில் அவளை முதன்முதலில் பார்த்தானோ..? அந்த அம்மன்மீதே பாரத்தைப்போட்டு இன்றும் அதே கோவிலுக்கு அவள் வருவாள்..! என்ற நம்பிக்கையுடன் வந்திருந்தான் ராகவ்..! பின்னர் கோவிலுக்குள் சென்றவர்களோ அங்கு சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, பிரகாரத்தை சுற்றிவர, ராகவின் வேண்டுதல் அந்த அம்பாளுக்கு கேட்டுவிட்டதோ..? என்னவோ..? பிரகாரத்தை சுற்றிவரும்வேளையில் கோவிலுக்குள் நுழைந்த மிதிலாவை கண்டு, ஒருகணம் அதிர்ச்சியாகிப்போனான் ராகவ்..! மிதிலாவுக்கும்கூட அதிர்ச்சிதான்..! ஆம்..! ராகவைப்போல மிதிலாவும் அவனைக்காண ஏங்கிகொண்டிருக்கிறாளே..?


அன்று அந்த வேலைக்காரப்பெண் ராகவைப்பற்றி சொல்லியதும் வருந்தியவளோ என்னதான், தான் அவனை திட்டியிருந்தாலும், தனக்காக மீண்டும்வந்து உதவியதைக் கண்டவளுக்கு அன்றிலிருந்து ராகவின்மீது இருந்த மதிப்போ ஒருபடி உயர்ந்து, அவளை அறியாது விருப்பமாக மாறிப்போனது..! அதேபோல் இன்று, அவள் கோவிலுக்கு வந்ததும் ராகவை கண்டவுடன் ஒருகணம் அதிர்ச்சியுற்றவளோ, பின்பு சுயம்புரிந்து புன்னகைத்த முகத்துடன் அவனருகே சென்று, மரியாதை நிமித்தமாக வணக்கம்கூறி சிறிதுநேரம் பேசிவிட்டு செல்ல, தன்னவள் செல்வதையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தவனை கண்ட நந்தனோ தன் நண்பனிடம், “என்னடா மச்சி..? இன்னைக்கு அதிசயமெல்லாம் நடக்குது..? நீ கோவிலுக்கு வந்த நாளாகபார்த்து, இந்த பொண்ணும் கோவிலுக்கு வந்திருக்கு..? உங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகுதுடா..!” என்று தன்னை விமர்சிப்பதை கேட்டு தலையசைத்து மறுத்த ராகவோ, “அதெல்லாம் ஒன்னும் இல்லடா..! இன்னைக்கு செவ்வாய்க்கிழமை..! அதனாலதான் நம்மைப்போல் அவங்களும் கோவிலுக்கு வந்திருப்பாங்க..! நீ எதுவும்புரியாமல் முதலில் உளறாதே..!” என்று நந்தனை அடக்கிவைக்க, நந்தனோ மனதிற்குள், “பார்க்கலாம்டா..! எவ்வளவுநாள் நீ இப்படியே இருக்கே என்று பார்க்கலாம்..!” என்று நினைத்துக்கொண்டான்..


இப்படியே ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமையும் அதே நேரத்திற்கு ராகவ்வும் கோவிலுக்கு வர, மிதிலாவும் ராகவை இந்த வாரமும் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் கோவிலுக்கு வந்துசென்றாள்.. இப்படியே இருவரும் கோவிலுக்கு வந்தநேரங்களில் நட்பாக சிலவார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு, பார்வையால் இதயங்களை களவாடிச்செல்ல, ஒருவர்மீது ஒருவருக்கு இனம்புரியாத அன்பு துளிர்க்க தொடங்கியது..! அதனாலோ என்னவோ..? செவ்வாய்க்கிழமை காலை மிதிலாவை பார்க்கவேண்டிய ஆசையில் திங்கட்கிழமை இரவு எந்த வேலையானாலும் சீக்கிரமே முடித்துவிட்டு உறங்கசென்றுவிடுவான் ராகவ்..


மிதிலாவும் அதேபோல் ராகவை, தான் சந்திப்பதை வீட்டினரிடம் சொல்லாமலே வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைநாள் அன்று கோவிலுக்குசென்று அம்பாள் தரிசனத்தோடு சேர்த்து, தன்னவனின் தரிசனத்தையும் கண்டுகொண்டு வர வெளியேசொல்லாமல் தங்களது விருப்பத்தையும் ஆசையையும் மனதிலேயே வளர்த்திட அப்படியே நாட்களும் அதன்போக்கில்போனது..!ராகவ்விற்கும், மிதிலாவிடம் பேசும் சிலசில வார்த்தைகளும் அவளுடன் சேர்ந்துகழிக்கும் நிமிடங்களும்தான் ராகவை மகிழ்ச்சியாக வைத்திருக்க, அவனை அறியாமலேயே அவள்மீது மனதில் ஆசைவளர்க்கத் தொடங்கினான்.. அன்று செவ்வாய்க்கிழமை என்பதால், வழக்கம்போல் மிதிலா கோவிலுக்கு செல்கிறேன் என்று வீட்டினரிடம் சொல்லிக்கொண்டு கோவிலுக்கு செல்ல, அங்கு அவளுக்காகவே காத்திருந்த ராகவோ கோவிலுக்கு வந்த மிதிலாவைக்கண்டு வழக்கம்போல் புன்னகைத்திட, முன்புபோல் இல்லாமல் எந்த தயக்கமுமின்றி நட்பாக ராகவின் அருகே வந்தவளோ, ராகவிடம் பொதுவாக பேசிவிட்டு அவனருகே அமர்ந்து சிலகணங்கள் அமைதியாக இருக்க, மௌனத்திலேயே இருவரும் தங்களது காதலை கடத்திக்கொண்டிருந்தனர்..!


அப்போது அங்கேவந்த ஒரு பெண்ணோ, மிதிலாவைக்கண்டு கூப்பிட, அந்தப் பெண்ணைக்கண்டு அதறிபதறி அவளருகே சென்ற மிதிலாவோ, “அக்கா..? எப்படி இருக்கீங்க..? நல்லா இருக்கீங்களா..?” என்று பொதுவாக விசாரிக்க, அந்தப்பெண்ணும் பதிலுக்கு மிதிலாவை விசாரித்தாள்.. அதன்பின், அந்தப்பெண் மிதிலாவிடம், “என்ன மிதிலா கோவிலுக்கு வந்திருக்க..? வீட்டில ஏதும் விசேஷமா..?” என்று கேட்க, அதற்கு மறுப்பாக தலையசைத்தவளோ, “இல்லக்கா..! அப்பாவுக்கு கிரகம் சரியில்லாததால், கோவிலுக்கு 15வாரங்கள் விளக்குபோட சொன்னாங்க..! அதனால்தான் வந்தேன்..!” என்று சொல்லவும், தன் தந்தையின்மீது பாசம் வைத்திருந்த மிதிலாவைக்கண்ட அப்பெண்ணோ, “பரவாயில்லைம்மா..! உன்னைப்போல ஒரு பொண்ணு கிடைக்கிறது, இந்த காலத்துல குதிரை கொம்புதான்..! பின்ன, இப்போயிருக்கிற பொண்ணுங்களெல்லாம் கோவிலுக்கு வர சொன்னாலே, பணம் கேட்கிற இந்தக்காலத்துல, அப்பாவுக்கு கிரகம் சரியில்லாததால விளக்குப்போடவந்தேன்னு சொல்ற பார்த்தியா..? உன்னை பார்க்கும்போது நிஜமாவே பெருமையா இருக்கும்மா..!” என்றிட,


மிதிலாவோ, “இதுல என்னக்கா இருக்கு..? அப்பாவுக்கு முடியலைன்னா பொண்ணுதானே செய்யணும்..? நம்ம குடும்பத்திற்காக நாமசெய்யாமல் பின்ன யாரு செய்வா..?” என்று சொல்லிட, “அதுவும் சரிதான்ம்மா..! குடும்பத்தோட அருமை இன்னைக்கு நிறையபேருக்கு தெரியலையேம்மா..?” என்றதும் மிதிலாவோ, “அப்படியெல்லாம் இல்லக்கா..! குடும்பம் இல்லையென்றால் நாம் எங்கே..? எந்தவொரு மனுஷனும் தனியாக வாழ்ந்திடமுடியாது..! அவன் வாழ்வதற்கு நிச்சயம் குடும்பம்வேண்டும்..! அப்படி குடும்பம் இல்லாமல் வாழுறவாழ்க்கை வாழ்க்கையே இல்லை..! ஆயிரம் சண்டை சச்சரவுகள் இருந்தாலும், குடும்பத்துடன் ஒன்றி செல்வதுதான் வாழ்க்கை..! அப்படி குடும்பத்தைவிட்டு பிரிந்துவாழும் மனுஷனின் வாழ்க்கை நரகத்திற்கு சமம்..!” என்று சொல்ல, அந்தப்பெண்ணோ மிதிலாவைக்கண்டு நெட்டிமுறித்து, “நிஜம்தான்மா..! உன்னைமாதிரியே எல்லாருக்கும் குடும்பத்தோட அருமை தெரிஞ்சதுன்னா இன்னைக்கு கோர்ட் போலீஸ் ஸ்டேஷன் போகவேண்டிய அவசியமே இல்லைம்மா..! நீ வாக்கப்படபோகிற இடம் ரொம்ப கொடுத்துவெச்ச இடம்மா..!” என்று சொல்ல, அதற்கு புன்னகைத்த மிதிலாவோ, “சரிக்கா.. நீங்கபோய் சாமிகும்பிடுங்க..! நான் கொஞ்சநேரம் பிரகாரத்துல உட்கார்ந்துட்டு வரேன்..!” என்று சொல்லிவிட்டுவந்தாள்..


ஆனால், இதையெல்லாம் கவனித்துகொண்டிருந்த ராகவோ மிதிலாவைக்கண்டு மனதில் குழம்பியநிலையில் அமர்ந்திருக்க, அந்த அக்கா சென்றபிறகு ராகவின் அருகே வந்த மிதிலாவோ, “சாரிங்க..! தெரிந்த அக்கா..! அதனாலதான் போயிட்டேன்..!” என்று சொன்னதற்கு, “பரவாயில்லைங்க..!” என்று கூறியவனோ மிதிலாவின் முகம்கண்டு, “ஏங்க..? உங்களுக்கு குடும்பமென்றால் ரொம்பபிடிக்குமோ..?” என்று கேட்டிட, “ஆமாங்க..! எனக்கு குடும்பமாக வாழத்தான் ரொம்பபிடிக்கும்..! அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சி, மாமா, அத்தை என்று எல்லோரும் ஒன்றாகவாழும் சந்தோஷம், வேறுஎதிலும் கிடைக்காது..! அதுமட்டுமல்லாமல், உலகில் மனுஷங்களுக்கும் மிருகங்களுக்கும் இருக்கிற ஒரேவித்தியாசம் உறவுகள்தான்..! என்னைப்பொறுத்தவரையில் குடும்பமாக வாழற வாழ்க்கை வரம்..! குடும்பத்திலிருந்து ஒதுக்கப்பட்டு தனிமரமாக நிற்கும் வாழ்க்கை, நரகத்திற்குசமம்..!” என்றிட, ராகவிற்குதான் என்னவோபோல் இருந்தது..!


அதன்பின், மேலும் மிதிலாவிடம் பேசவிரும்பாதவனோ, “சரிங்க..! எனக்கு டைம் ஆச்சு..!” என்று சமாளித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்ப, அவன்முகம் திடீரென்று என்னவோபோல் இருப்பதைக்கண்ட மிதிலாவோ, “ஏங்க..? என்னாச்சு..? வந்த உடனே கிளம்புறீங்க..?” என்று கேட்டதற்கு, “இல்லைங்க.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..! அப்புறம் பார்க்கலாம்..!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் ராகவ்..!


இப்படியே நாட்கள் செல்லசெல்ல ராகவ் மிதிலாவின் மனதில் கொஞ்சம்கொஞ்சமாக நுழைந்து இறுதியில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டான்..! இங்கே வேதவள்ளியோ, தனது பேத்திக்கு நல்லவரன் வேண்டுமென்று..! தனக்குத்தெரிந்த திருமணபுரோக்கரிடம் சொல்லியனுப்பி, தீவிரமாக மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்க, அடுத்தவாரம் செவ்வாய்க்கிழமையும் வந்தது..! அன்று மிதிலாவின் பிறந்தநாள்..! என்பதால், வழக்கம்போல் காலையில் எழுந்து குளித்துமுடித்து, தனது தாய்தந்தையரிடம் ஆசிர்வாதம் வாங்கியவளோ மனதில் சூழ்ந்திருந்த மகிழ்ச்சியுடன், “இன்று, தன்மனதில் ராகவின்மீது இருக்கும் விருப்பத்தை அவனிடம் சொல்லி விடவேண்டும்..!” என்று எண்ணிக்கொண்டு, வீட்டில் சொல்லிவிட்டு கோவிலுக்குசென்றாள்..


ஆனால், அங்குசென்று பார்க்கையில் அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது..! ஆம்..! அன்று ராகவ் கோவிலுக்கு வரவில்லை..! ஒவ்வொரு வாரமும் தவறாமல் கோவிலுக்கு வருபவன், இன்று திடீரென்று வராமல் இருப்பதைக்கண்டு விழித்தவளோ மனதிற்குள், “என்னவாக இருக்கும்..? ஏன் இன்று அவர் கோவிலுக்குவரவில்லை..?” என்று நினைத்துக்கொண்டே ஒருவழியாக சாமிகும்பிட்டுவிட்டு வீடுவந்து சேர்ந்தாள்.. ஆனால், காலையில் அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சி இப்போது இல்லை..! ஆம்..! இன்று தன்னுடைய பிறந்தநாளென்று, அவனிடம்கூறி வாழ்த்து பெற்றபின், தனது மனதிலிருக்கும் ஆசையை அவனிடம் உடைத்துக்கூறிவிட்டு, பின்பு தங்கள் வீட்டாரிடமும் கூற நினைத்திருந்தவளின் எண்ணம், எதுவும் நடக்காததை நினைத்து மனம்வருந்தினாள்..


பின்பு அன்று ராகவ், எதற்கோ அவளிடம் கொடுக்கப்பட்ட விசிட்டிங் கார்டை கண்டவளோ, அதிலிருக்கும் எண்ணிற்கு தனது மொபைலிலிருந்து கால்செய்ய, அப்போது அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்த ராகவின் மொபைல்மணி அடிக்கவே, மொபைலை பார்த்த ராகவோ, அழைப்பது மிதிலா என்பதை புரிந்துகொண்டு, அவளது காலை அட்டென்ட் செய்யாமலேயே வைத்திருக்க, ஒரு கட்டத்தில் போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டான்..! அடுத்தடுத்து அவனுக்கு முயற்சித்த மிதிலாவோ தொடர்ந்து தோல்வியவே தழுவ, ஒரு கட்டத்தில் சோர்ந்துபோய் உறங்கிவிட்டாள்..! மறுநாள் காலை எழுந்த மிதிலாவின் மனதில் தாங்கமுடியாதபாரம் சுமப்பதுபோல் அழுத்தமாய் இருக்க, எதற்காக ராகவ் தன்னை தவிக்கிறார்..? என்று நினைத்துநினைத்து மனம் வருந்தியவளோ, அதை அவரிடமே கேட்டுவிடலாம்..! என்று எண்ணிக்கொண்டு, வீட்டில் இருப்பவர்களிடம் தனக்கு வெளியே வேலை இருப்பதாக கூறிவிட்டுவந்தவளோ, நேரே சென்றது ராகவின் அலுவலகத்திற்குதான்..!


அன்று ராகவும் நேரமே அலுவலகத்திற்கு வந்து முக்கியமான சிலபணிகள் இருந்ததால் அவனது கேபினில் அமர்ந்து வேலை செய்துகொண்டிருக்க, அங்கு வந்த மிதிலாவோ ரிசப்ஷனிஸ்டிடம் சொல்லி, தான் ராகவை பார்க்கவேண்டும்..! என்றுகூற, அவளோ இன்டர்காமின் மூலம் ராகவிற்கு தகவல் அளிக்கவும், தன்னை மிதிலாதான் பார்க்க வந்திருக்கிறாள்..! என்பதை சிசிடிவி கேமராமூலம் கண்ட ராகவோ, வேண்டுமென்றே அவளை தவிர்ப்பதற்காக, தன்னைப் பார்ப்பதற்கு வெகுநேரமாகும்..! என்றும், இப்போது அவரை பார்க்கமுடியாது..! என்றும் சொல்லி, வெளியே அனுப்பும்படி ரிசப்ஷனிஸ்டிடம் சொல்ல, அவளும் அதேபோல் மிதிலாவிடம் கூறினாள்.. அதற்கு மிதிலாவோ, “பரவாயில்லை மேடம்..! எவ்வளவு நேரமானாலும் நான் இருந்து அவரை பாத்துட்டுபோகிறேன்..!”என்று கூறிவிட்டு காத்திருப்பறையில் அமர்ந்திருக்க, அப்போது அந்தவழியில் வந்த நந்தனோ, காத்திருப்பறையில் அமர்ந்திருந்த மிதிலாவைக்கண்டு, “ஐ..! நம்ம ஸ்லிப்பிங் பொண்ணு..? இவங்க ஏன் இங்க வந்திருக்காங்க..? ஓ..! நம்ம பையன் தினமும் கோவிலுக்குபோய், இன்னைக்கு இவங்களை ஆபீஸ்வரையும் கூட்டிட்டுவந்துட்டானா..?” என்று நக்கலாக மனதுக்குள் நினைத்துக்கொண்டே அவளருகே வந்தவனோ, “ஹாய்ம்மா தங்கச்சி..! எப்படி இருக்கீங்க..? நல்லா இருக்கீங்களா..? என்ன இவ்வளவுதூரம்..?” என்று கேட்க,


நந்தனை பார்த்து முதலில் புன்னகைத்தவளோ, பின் தயக்கமாக நந்தனிடம், “இல்ல..? நான் அவரைப்பார்க்கணும்..? அதற்காகத்தான் வந்தேன்..!” என்று சொல்ல, “தன் நண்பனை காணத்தான் வந்திருக்கிறாள்..!” என்பதை புரிந்துகொண்டு மகிழ்ச்சியானவனோ, “எப்படியோ..? தன் நண்பனும் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கவேண்டும்..!” என்று நினைத்துக்கொண்டு, “நீ..? யாருன்னு சொல்லி அனுப்பியிருந்தால், வந்தவுடனே அவனை பார்த்திருக்கலாமே..? ஏன் இங்கே வெயிட் பண்ற..? ரிசப்ஷனிஸ்டிடம் சொல்லிட்டியா..?” என்று விசாரிக்க, ரிசப்ஷனிஸ்ட் தன்னிடம் கூறியதுபோல ராகவ் பிஸியாக இருப்பதாகவும், அவனை சந்திக்க வெகுநேரமாகும் என்று சொன்னதாகவும் கூறியவளோ, “எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லைங்க..! நான் வெயிட்பண்ணி பார்த்திட்டே போறேன்..!” என்று சொல்ல அப்போதுதான், “ராகவ் வேண்டுமென்றே இவளை ஒதுக்குகிறான்..!” என்பதை புரிந்துகொண்ட நந்தனோ சமாளிப்பாக, “சரிம்மா..! நீ இங்கேயே காத்திரு..! நான்போய் அவன்கிட்ட, என்ன எதுன்னு கேட்டுட்டுவரேன்..!” என்று சொல்லிவிட்டு ராகவின் கேபினுக்குள் சென்றவனோ,


அங்கு மும்மரமாக மடிக்கணினியில் வேலை செய்துகொண்டிருந்த ராகவைகண்டு தன் குரலை செறுமியவாரு, “டேய் ராகவ்..? அந்த பொண்ணு மிதிலா, இங்கே வந்திருக்குடா..? உன்னை பார்க்கத்தான் வந்திருக்கு..?” என்று சொல்லவும், அதற்கு பெரிதாக அலட்டிக்கொள்ளாதவாறு, “தெரியும்..!” என்று ஒரே வார்த்தையில் பதிலளித்து மீண்டும் மடிக்கணினியில் பார்வையைத் திருப்பினான்.. அதனைக்கண்டு அதிர்ச்சியான நந்தனோ, “என்னடா இது..? அந்த பொண்ணு உன்னைத்தான் பார்க்கத்தான் வந்திருக்குன்னு சொல்ற..? தெரியும்..! என்ற ஒரேவார்த்தையில் பதில் சொல்ற..? அப்படி தெரிந்தபின்னும் ஏன்டா அந்தப்பொண்ணை உன்னைப் பார்க்கவிடாமல் வெயிட்டிங் ரூமில் உக்காரவச்சிருக்க..?” என்று கேட்டதற்கு,


“நான் அவங்களை எனக்காக காத்திருக்கசொல்லவே இல்லையே..? அவங்களா வெயிட்பண்ணா, அதுக்கு நான் என்ன செய்யமுடியும்..?” என்று சொல்ல, அதற்குமேலும் கோபமான நந்தனோ, “என்னடா பேசுற நீ..? அவசியமில்லாமல் இங்கேவந்து காத்திருப்பதற்கு அந்தப்பொண்ணு யாருடா..? அவங்க உன்னைப் பார்க்கத்தான் வந்திருக்காங்கன்னு உனக்கே தெரியும்..! பிறகு, ஏன் நீ இப்படி பேசுற..?” என்று சொல்ல,


கோபமான ராகவோ, “நான், யாரையும் என்னை பார்க்கசொல்லி இங்கு வர சொல்லலை..! புரியுதா..?” என்றதற்கு, “புரியுதுடா..! நல்லா புரியுது..! சும்மா இருந்த அந்தப்பொண்ணை பாக்குறதுக்காக, தினமும் கோயிலுக்கு போயி அவளை டிஸ்டர்ப்பண்ணி, அவள் மனசைக்கெடுத்து, இப்போ உனக்காக இங்கேவந்து காத்திருக்கும் அளவிற்கு கொண்டுவந்துட்டு, இப்போ பெரிய இவனாட்டம் அவங்கள அலையவிடுற..? அதுதானே..?” என்று கோபத்தில் வார்த்தையைவிட, அதற்குமேல் எதுவும் பேசாது நந்தனை கைநீட்டி தடுத்த ராகவோ, “இப்போ என்ன உனக்கு..? நான் அவங்களைப்பார்த்து பேசணும்..? அதுதானே வேணும்..? மேலே மீட்டிங் ஹாலுக்கு வரச்சொல்லு..!” என்று சொல்லிவிட்டு சென்றான்..


தன் நண்பனின் வித்தியாசமான செய்கையைப் பார்த்த நந்தனோ மனதில், “இவன் ஏன் இப்படி இருக்கான்..? இவனுக்கு என்னதான் பிரச்சனை..?” என்று நினைத்துக்கொண்டு, மிதிலாவிடம் மேல்மாடியிலிருக்கும் அவனது மீட்டிங் ஹாலுக்கு செல்ல சொல்ல, மிதிலாவோ மனதில் மகிழ்ச்சியைக்கடந்த தயங்கத்துடன், “இன்று ராகவைக்கண்டு, தன் மனதிலிருப்பதை பேசிவிடவேண்டும்..!” என்று எண்ணிக்கொண்டு மீட்டிங் ஹாலுக்கு சென்று உள்ளே நுழைய, அங்கு ராகவோ தன்முகத்தை திருப்பியபடி அவளுக்காக காத்திருக்க, அவனைக்கண்டவுடன் புன்னகை முகமாக அவனருகே சென்றவளோ, “ஹாய் ராகவ்.. எப்படி இருக்கீங்க..?” என்று கேட்டதற்கு, “ம்ம்..” என்று மட்டும் பதில் சொன்னவனோ, எதுவும்பேசாமல் அமர்ந்திருக்க மேலும் தொடர்ந்தவளோ, “ஏன் ராகவ்..? உடம்புக்கு ஏதும் சரியில்லையா..? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..?” என்று கேட்க, ராகவோ மிதிலாவிடம் திரும்பி, “இப்போ நீங்க இங்கே எதற்காக வந்திருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..?” என்று வெடுக்கென்று கேட்க, முதலில் அதிர்ந்து பின் நிதானித்துக்கொண்ட மிதிலாவோ, “இல்லங்க..! உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசலாமென்று நேத்து கோவிலுக்கு வந்திருந்தேன்..!

ஆனால், நீங்கதான் கோவிலுக்கு வரவே இல்ல..! அதன்பிறகு உங்களுக்கு ரெண்டு மூணு தடவை கால்செய்தேன்..! அதுக்கும் சரியான ரெஸ்பான்ஸ் இல்ல..! என் மனசுக்கு ஒரு மாதிரி இருந்தது..! அதனாலதான் உங்களை நேரில் பார்க்கலாமென்று இங்கேவந்தேன்..!” என்று சொல்ல,


அதற்கு ராகவோ, “இல்ல..? எனக்கு நேத்து முக்கியமான வேலை இருந்துச்சு..! அதனாலதான் வரலை..! சொல்லுங்க..? அப்படி என்ன முக்கியமான விஷயம் பேசணும்..?” என்று மீண்டும் வெடுக்கென்று கேட்க, “இதற்குமேலும் தன் மனதிலிருக்கும் எண்ணத்தை மறைத்துவைத்தால் நல்லதல்ல..! எதுவாயிருந்தாலும் அவனிடம் கூறிவிடலாம்..!” என்று நினைத்து அவன்முகம் பார்த்தவளோ, “ராகவ்..? இதை நான் இங்கே சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க..? எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை..! என்னை பொறுத்தவரைக்கும் என் மனசுல, என்னபட்டாலும் அதனை உடனே சொல்லிடுவேன்..!” என்றுகூறி முதலில் தயங்கியவளோ, பின் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்கு..! நம்மளோட முதல் சந்திப்பு மோதலாகஇருந்தாலும், அடுத்தடுத்து உங்களோட நல்ல குணத்தை நான் புரிஞ்சுகிட்டேன்..! அது என்னையே அறியாமல், என் மனசுக்குள்ள என்னை உங்கள் வசப்படுத்திவிட்டது..! இப்போ நான் உங்களை மனமார நேசிக்கிறேன்..! உங்களுக்கும் என்ன பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்..!” என தலைதாழ்த்திக்கொண்டு சொன்னவளோ மீண்டும், “உங்களுக்கும் இதில் சம்மதமென்றால் வீட்டில் வந்து அப்பாகிட்ட பேசுங்க..!” என்று சொல்ல, அதனைக்கேட்டு சத்தமாக கைத்தட்டி சிரித்தவனோ நக்கலாக மிதிலாவைக்கண்டு, “என்னது..? என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா..? யூ மீன் நீங்க என்னை காதலிக்கிறீங்க..? அப்படித்தானே சொல்றீங்க..? அது எப்படிங்க..? ஒரு ஆம்பளையை ரெண்டு மூணு மாசம் பார்த்தவுடனே உங்களுக்கெல்லாம் பிடிச்சுருது..? ஓ..! இப்போதான் புரியுது..! நான் பணக்காரன் இல்லையா..? அதனால்தான் உங்களுக்கு இவ்வளவு வேகமாக என்னை புடிச்சிருச்சு..!” என்று நக்கலாக பேச,


அதிர்ச்சியான மிதிலாவோ, “ஐயோ..! நீங்க என்னை தப்பா எடுத்துக்கிட்டிங்க..? இதையெல்லாம் பார்த்து, எனக்கு உங்களை பிடிக்கவில்லை..! நான் பார்த்தது உங்க குணத்தைத்தான்..!” என்று சொல்ல, “எப்படி..? எப்படி..? என் குணத்தை பார்த்து உங்களுக்கு பிடிச்சிருக்கா..? என்ன தெரியும் என்னைபற்றி உங்களுக்கு..? இல்லை..? என்ன தெரியும் என்னைப்பற்றி உங்களுக்கு..? இதோ பாருங்க..? நீங்க பார்க்கிறது எதுவும் உண்மைகிடையாது..! இந்த கோர்ட்சூட் போட்டுட்டு இவ்வளவு பெரிய ஹோட்டலை நிர்வாகம் பண்ற என்னோட மறுபக்கம் உங்களுக்கு தெரியுமா..?” என்று கோபத்தோடு சொன்னவனோ மீண்டும் நக்கலாக, “அதைவிடுங்க..! உங்களைமாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பணக்கார பசங்களை பார்த்தால், உடனே புடிச்சுப்போயிடுமே..? எப்படி..? உங்க அப்பாகிட்ட வந்து நான் உங்களை பொண்ணுகேட்கணுமா..? இல்லை..! நான் தெரியாமல்தான் கேட்கிறேன்..! உங்களுக்கு நான் பொருத்தமானவன் என்று யோசிச்ச நீங்க..? எனக்கு நீங்க பொருத்தமானவங்களான்னு யோசிச்சு இருக்கீங்களா..? பணக்கார பசங்களை பார்த்தவுடனே காதல் என்று சொல்லிடவேண்டியது..! பிறகு, எங்களோட பணத்துல நல்லா சுற்றிவிட்டு, போரடிச்சதும் வேற பசங்களை பார்க்கவேண்டியது..! இதுதானே உங்களைப்போல பொண்ணுங்களோட பழக்கம்..!” என்று மிதிலாவைக்கண்டு மட்டமாக பேச,


அதில் மனம் துவண்டவளோ கண்களில் பெருகிய கண்ணீருடன் மறுப்பாக தலையசைத்து, “இல்லங்க..! நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க..! நான் அந்தமாதிரி பொண்ணு கிடையாது..!” என்று சொல்ல, அதனை தடுத்தவனோ, “வேறு எந்தமாதிரி பொண்ணு..? ஒரு பையனைப்பார்த்து முழுசா மூணுமாசம்கூட ஆகலை..! அதற்குள் காதலென்று சொல்லிட்டு ஆபீஸ்வரை வந்திருக்கீங்க..? இன்னும் உங்ககூட ரெண்டுமாசம் சேர்த்து பழகி இருந்தால், நான் உங்களை கெடுத்துட்டேன்னு சொல்லி, போலீஸ் ஸ்டேஷன்கூட போயிருப்பீங்க இல்லையா..?” என்று சொல்ல, தன் கைகளால் காதை பொத்திக்கொண்டு அழுத மிதிலாவோ, “ப்ளீஸ்..! இப்படியெல்லாம் பேசாதீங்க..! நான் அந்தமாதிரி பொண்ணு இல்ல..!” என்று சொல்ல, அவளை மேலும்கீழுமாக நக்கல்பார்வை பார்த்தவனோ, “அதை நீங்க சொல்ல கூடாதுங்க..! இப்படி பணக்கார பையனை வளைத்துப்போட்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகிடலாமென்று நெனச்சிட்டு, மூணு மாசத்திலே ஆபீஸ்வரை வந்து லவ் சொல்கிற அளவுக்கு வந்திருக்கீங்க..? இப்படிப்பட்ட உங்களை, நான் எப்படி நினைப்பது..?” என்று சொல்ல அவன்பேச்சில் உடல்கூசி, கூனிக்குறுகி கண்ணீர் சிந்தியவளோ ராகவை அடிபட்ட பார்வை பார்க்க,


அதனை கண்டுகொள்ளாத ராகவோ, “இதோபாருங்க..? எனக்கு உங்களை பிடிக்கலை..! நான் எப்பவாவது உங்களிடம், உங்களை விரும்புகிறேன் என்று சொல்லியிருக்கேனா..? பின்ன ஏன் என்னை இப்படிவந்து தொல்லைபண்றீங்க..? உங்களோட நடத்தை பிடிக்காமல்தானே உங்களைப் பார்க்க விரும்பாமல், கோவிலுக்கும் வராமலும், உங்களோட காலையும் அட்டென்ட்செய்யாமலும் இருந்தேன்..? அதையும்மீறி என்னைவிடாமல் ஆபீஸ்வரையும் வந்து துரத்தி டார்ச்சர் பண்றீங்க..? உங்களோட நோக்கம்தான் என்ன..? என்னோட பணமா சொல்லுங்க..? இனிமேல் என்னை தொல்லைசெய்யாமலிருக்க எவ்வளவு பணம் வேணும்..? உங்ககூட கொஞ்சநாள் பழகின பாவத்துக்கு கொடுத்து தொலைக்கிறேன்..! எடுத்துட்டு போங்க..!” என்று சொல்ல கோபம்கொண்ட மிதிலாவோ, வலியும் கண்ணீரை துடைக்கக்கூட மனம் இல்லாது கைநீட்டி ராகவை தடுத்து, “போதும் நிறுத்துங்கள் ராகவ்..! இதுக்குமேல என்னையும், என் நடத்தையையும்பற்றி தவறாக பேசுனீங்கன்னா கண்டிப்பா நான் உயிரோடு இருக்கமாட்டேன்..!” என்று சொல்லவும் ஒருகணம் அதிர்ந்தவனோ, பின்பு தன் நிலையை வெளிக்காட்டாதவாறு நிற்க மேலும் தொடர்ந்தவளோ, “என்னை மன்னிச்சிடுங்க..! நீங்க, என்னை இவ்வளவு கேவலமாக நினைச்சிருப்பீங்கன்னு தெரிந்திருதால், கண்டிப்பா உங்களை பார்க்க வந்திருக்கமாட்டேன்..! எல்லாம் என் தப்புதான்..! வெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்து, நம்பி இவ்வளவு தூரம் வந்தது என் தப்புதான்..! என்னைப்பற்றிய உங்களின் அழகான புரிதலுக்கு ரொம்ப நன்றி..!” என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு, அங்கிருந்து கண்ணீருடன் சென்றுவிட்டாள் மிதிலா..


இதையெல்லாம் வெளியேநின்று கேட்டுக்கொண்டிருந்த நந்தனோ, மிதிலா சென்றபின்பு உள்ளே நுழைந்து ராகவைக்கண்டு கோபமாக, “டேய் மச்சான்..? என்னடா நீ..? இப்படி பேசிட்ட..? இதுக்கு நீ, அந்த பொண்ணுகூட பழகாமலே இருந்திருக்கலாம்டா..? என்ன பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறியா..? பாவம்டா அந்த பொண்ணு..! உன் வார்த்தையில் விஷம்கலந்து பேசி, அந்த பொண்ணு மனசை காயப்படுத்திட்டியேடா..? பாவி..! என்னடா நீ..?” என்று கூற,


இறுக்கமான முகத்துடன் நின்றிருந்த ராகவோ, “இதோபாருடா..? என் மனசுல அவங்கமேல எந்த ஆசையும் கிடையாது..! ஏதோ கோவிலுக்கு போனபோது, கொஞ்சநாள் பிரண்ட்லியாபேசினாங்க..! அதுக்காக இவ்வளவு தூரம் வந்து, என்னை காதலிக்கிறேன் என்று சொன்னால், நான் ஏத்துக்கணுமா என்ன..? இதெல்லாம், இப்போ பணம் பறிக்கிற ஒரு ட்ரெண்ட்டா..!” என்று சொல்ல, அவனை முறைத்த நந்தனோ, “போதும்டா..! இனி, ஒருதடவை அந்த பொண்ணு, உன் பணத்துக்காகத்தான் உன்னை காதலிக்கிறாள் என்று சொன்ன..? நானே உன்னை அடிச்சு கொன்னுடுவேன்..! என்ன ஜென்மம்டா நீ..? ச்ச..! நான் உன்னிடம் இதை எதிர்பார்க்கவே இல்லை..?” என்று சொல்லிக்கொண்டு கோபமாக சென்ற நந்தனையேக்கண்ட ராகவிற்கோ, இவ்வளவுநேரம் இறுக்கமாக வைத்திருந்த முகம்மாறி கண்ணில் கண்ணீர் துளிர்க்கவே, அந்த அறையின் சன்னல் கண்ணாடிவழியே கீழே அழுதுகொண்டே செல்லும் மிதிலாவைக்கண்டு மனதில், “என்னை மன்னிச்சிடுங்க மித்து..! எனக்கு வேறவழி தெரியலம்மா..!” என்று சொல்லி, மன்னிப்பை இறைஞ்சினான்..


இங்கே மிதிலாவின் வீட்டில், ஏற்கனவே தன்னவன் தந்த காயம் ஆறுவதற்குமுன்பே, அதில் ஈட்டியை இறக்க அதில் ஒருகணம் துடிதுடித்துப் போனால் பெண்ணவள்..


காதலை எதிர்பார்த்து போன இடத்தில், காயங்கள் மட்டுமே பரிசாக கிடைக்க, கலங்கிப்போவாளா பெண்ணவள்…? பார்க்கலாம்…


தொடரும்…
 
Last edited:

kalai karthi

Well-known member
ராகவ் சொன்னாலே புரிந்து கொள்வாள் ஏன் இப்படி பேசிட்டான்
 
Top