எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தேன் சிந்தும் காதல் பூஞ்சோலை (கதை திரி)

Status
Not open for further replies.

NNK-15

Moderator

தேன் சிந்தும் காதல் பூஞ்சோலை.


1


தலைக்கு அருகே வைத்திருந்த செல்பேசி நான்காவது முறையாக அழைத்து ஓய்ந்தது.


ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். ஜான். எப்போதாவது தன்னை மறந்து தூங்குவது வழக்கம் தான்.


இன்றைக்கு அந்த நாளாக இருந்தது .மறுபடியும் முதலில் இருந்து செல்பேசி சத்தம் கேட்க.. சற்று அசைந்து கொடுத்தவன் சட்டென வேகமாக எழுந்து அமர்ந்தான்.


நேரம் பார்க்க.. 5 மணி தாண்டிக் கொண்டிருந்தது.


அவசரமாக ஃபோனை எடுத்து எதிர்முனைக்கு அழைப்பு விடுக்க.. எரிச்சலான குரல் அவனிடம் பேசியது.


“ என்ன சார் தினமும் உங்களுக்கு இதே வாடிக்கையா போயிடுச்சு .இங்க ஸ்கூல்ல எல்லாருமே கிளம்பி போயாச்சு. உங்க ரெண்டு பசங்க மட்டும் தான் இருக்கிறாங்க .


நீங்க வந்து அழைச்சிட்டு போனீங்கன்னா தான் நானும் கிளம்ப முடியும்.”

வேகமாக நேரத்தை பார்த்தவனுக்கு இப்போதுதான் தன்னுடைய தவறு புரிந்தது.


4 மணிக்கு பள்ளி விட்டிருக்க.. அதிகபட்சமாக நான்கே முக்கால் வரையிலுமே அந்த பள்ளியில் மாணவர்கள் இருப்பார்கள். அதற்கு மேல் அங்கே யாருமே இருப்பது இல்லை .


அனைவருமே புறப்பட்டு இருப்பர்.. எந்த மாணவி செல்லவில்லையோ அந்த மாணவிக்கு துணையாக அந்த வகுப்பு ஆசிரியர் நின்று பார்த்து அனுப்பி வைக்க வேண்டும். அதைத் தாண்டி ஒரு வாட்ச்மேன் வாசலில் நின்றிருப்பார் .பதட்டமாக குரல் கொடுத்தான்.


“ சாரி.. சாரி மேடம். என்னை அறியாமல் கொஞ்சம் தூங்கிட்டேன்.”


“ சார் டெய்லி இத தான் சொல்றீங்க .நைட் ஷிப்ட் வேலை செய்றீங்க தான் இல்லன்னு சொல்லல.. அதுக்காக உங்க பசங்கள நாங்களே பாத்துகிட்டு இருக்க முடியுமா. சீக்கிரமா வந்து அழைச்சிட்டு போங்க “என்று ஃபோனை வைக்க.. அவசரமாக எழுந்தவன் சட்டையை அணிந்து கொண்டு வேகமாக தன்னுடைய வண்டியில் புறப்பட்டான்.


வாரத்திற்கு ஒரு முறையோ 10 நாட்களுக்கு ஒரு முறையோ அவ்வப்போது நடப்பதுதான்.


ஏதோ ஒரு கோபத்தில் தன்னுடைய குழந்தைகளை தாய் ,தந்தையரிடம் இருந்து நேராக இங்கே அழைத்துக் கொண்டு வந்து விட்டான் .


வந்த நாளிலிருந்து இவனுக்கு போராட்டம் தான். சமைப்பதிலோ உணவு கொடுப்பதிலோ பிரச்சனை இல்லை.


அதை தாண்டி பள்ளிக்கு அனுப்பி வைத்தவன் திரும்ப அழைக்கும் போது நேரம் ஆகிவிடுகிறது.


இரவு நேர வேலையில் இருப்பதினால் அவனையும் அறியாமல் தூங்கி விடுவது வாடிக்கையாக இருந்தது.


ஒவ்வொரு முறையுமே தனக்கு தானே சமாதானம் செய்து கொள்வான்.


இன்னொரு முறை இதுபோல தவறு நேரக்கூடாது என்று.. ஆனால் திரும்பத் திரும்ப ஒரு விஷயம் தான் நடந்து கொண்டிருந்தது .


அதையும் தாண்டி தன்னுடைய மனைவியின் முகம் அடிக்கடி கண் முன்னால் நிழல் ஆடியது.


எஸ்தர்… அழகு பூஞ்சோலை.. தாய் தந்தை பார்த்து திருமணம் முடித்தது .ஆனால் இப்படி ஒரு நிலை வரும் என்று யாருமே எதிர்பார்த்து இருக்கவில்லை.


பழைய நினைவுகளுக்குள் செல்லக்கூடாது என தன்னுடைய தலையை உழுக்கியவனின் வாகனம் சரியாக பள்ளிகருகே வந்திருந்தது .


இதுவும் அடிக்கடி நடக்கின்ற வாடிக்கையான விஷயம் தான். கவனம் எல்லாம் எப்போதும் எங்கேயோ இருக்க.. கைகளோ தன்னை அறியாமல் சரியாக குழந்தைகள் படிக்கின்ற பள்ளிக்கு அருகே வந்து நின்றது .


வேகமாக வண்டியை நிறுத்தியவன் உள்ளே செல்ல அங்கே ஓரமாக ஒரு திண்டில் இவனுடைய மகள்கள் இருவருமே அருகருகே அமர்ந்து இருந்தனர்.


ஒன்றாவது, மூன்றாவது படிக்கின்ற குழந்தைகள்.


இருவருக்குமே நிதர்சனம் புரிந்திருந்தது .அதைவிடவும் தந்தையின் மேல் அன்பு அதிகம்.


பெரியவள் எலீசா மூன்றாவது படிக்க ‌‌..இளையவள் மேரி ஒன்றாம் வகுப்பில் இருந்தாள்.


மேரி தாயை தேடி அழும் நேரத்தில் எல்லாம் எலீசா தான் சமாதானம் செய்வாள்.


“நீ அம்மாவை கேட்டா அப்பா கஷ்டப்படுவாங்க உனக்கு தெரியும் தானே இப்படி அழக்கூடாது .அக்கா இருக்கிறேன்ல ..அப்பா இருக்காங்க.. பாட்டி, தாத்தா இருக்கிறார்கள். பத்தாததுக்கு அம்மாவோட பாட்டி ,தாத்தாவும் இருக்கிறாங்க .இத்தனை பேர் இருக்காங்கல்ல.. ஏன் அழற” பெரிய மனுஷி போல சமாதானம் செய்பவள்.


இதோ இப்போதும் கூட மேரி தாயை நினைத்து அழுது கொண்டிருக்க.. தோளில் சாய்ந்து சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.


தந்தையை பார்க்கவும் “இதோ அப்பா வந்துட்டாங்க .இனி அழக்கூடாது நம்ம நேரா வீட்டுக்கு போயிடலாம்” என்று வேகமாக தன்னுடைய பேகையும் தங்கையின் பேகையும் சிரமப்பட்டு தூக்க..அதற்கு முன்பாகவே இவர்களுக்கு அருகே வந்திருந்தான் ஜான்.


“ கொடுங்க “என்று கையை நீட்ட இரண்டு பேகையுமே கொடுத்தவள்..கூடவே இரண்டு லன்ச் பேகை கையில் பிடித்தபடி தந்தையோடு புறப்பட்டாள்.


இவர்களுக்கு துணையாக நின்றிருந்த ஆசிரியர் வேகமாக அருகே வந்தார் .


“இதுதான் லாஸ்ட் சார்.. இன்னொரு தடவை இது போல தப்பு செய்யாதீங்க. அடுத்த முறை இதே மாதிரி செஞ்சீங்கன்னா நான் உங்களுக்கு ஃபோன் பண்ணி அழைச்சிட்டு இருக்க மாட்டேன். கிளம்பி போயிடுவேன் .வாட்ச்மேன் கிட்ட உங்க குழந்தைகளை ஒப்படைச்சிட்டு”.. கொஞ்சம் கராராக சொல்ல ..


“சாரி டீச்சர் இது போல இனி ஆகாது” என சமாதானம் பேசினான்.


“ ஒவ்வொரு முறையும் இப்படித்தான் சொல்றீங்க ஆனா திரும்ப திரும்ப ஒரே தப்புதான் நடக்குது .இனி இதுபோல நடக்காம பாத்துக்கோங்க” என்று அங்கிருந்து நகர.. மகள்களை பார்த்தவன்..” சாரி டா தூங்கிட்டேன்” என்று சொல்ல,


“ பரவால்லை பா.. எப்பவாவது ஒரு தடவை தானே .நான் தான் இருக்கிறேனே தங்கச்சி பக்கத்துல ..அவ அழாம பாத்துக்குவேன்” என்று சொன்னவள் தந்தையின் கரம் பற்றி நடக்க ..இவனுக்குள்ளோ அப்படி ஒரு புன்னகை..


“ அப்படியே உன்னோட அம்மா மாதிரி தான் நீ ..ஆனா இந்த சின்ன குட்டி அப்படி இல்லையே என்னை மாதிரி இருக்கறா.. “மேரி குட்டி இப்ப எதுக்காக அழுதுகிட்டு இருக்கிற” என்று சின்ன மகளை தோளில் தூக்கியவன் பேச..* எனக்கு அம்மா வேணும் .அம்மாவை நான் ரொம்ப மிஸ் பண்றேன்”என்றவள் மறுபடியும் அழ போக..


“ அழக்கூடாதுடா.. அம்மா சீக்கிரமா திரும்பி வந்துடுவா.” பொய்யாய் ஒரு சமாதானம் சொன்னபடியே, வண்டிக்கு அருகே வந்தவன்.” மகளை தனக்கு முன்னால் அமர வைத்து.” நான் இப்ப நேரா ஐஸ்கிரீம் பார்லர் கூட்டிட்டு போக போறேன்.உங்களுக்கு பிடிச்ச ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கி சாப்பிடுவீங்களாம். என்ன எலிசா ஓகே தானே.. மேரி நீ சொல்லு உனக்கு என்ன ஐஸ்கிரீம் வேணும் .”


ஐஸ்கிரீம் என்ற உடனேயே முகம் சிரிப்பில் நிறைந்தது.


“ சாக்லேட் பிளேவர் ..எனக்கு மட்டும் ரெண்டு என்று பத்து விரல்களையும் காட்ட ..சட்டென்று சிரித்து விட்டான்.


“ சரி சரி கட்டாயமா நீ கேக்குறத வாங்கி தருவேன்” என்று வண்டியில் செலுத்தினான்.


வீடு வந்து சேர்ந்த போது இரண்டு மகளுமே சிரித்துக் கொண்டு வந்தனர்.


“ நாளைக்கு வரும் போது எனக்கு ஐஸ்கிரீம் வேணும்” என்று மேரி வேகமாக சொல்ல..


“ சும்மா இரு அம்மா சொல்லுவாங்கல்ல.. ஐஸ்கிரீம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று.. டெய்லி கேட்க கூடாதுன்னு சொல்லுவாங்க தெரியாதா” என்று பெரிய மகள் சின்னவளிடம் சொல்ல.. இவனுக்கோ அத்தனை சிரிப்பு.


“ அதெல்லாம் இல்ல பிராண்டட் கம்பெனி ஐஸ்கிரீம் சாப்பிட்டால் எதுவும் ஆகாது. நாளைக்கும் உனக்கு வாங்கி தருவேன்.”


“ அப்பா ஸ்கூலுக்கு சீக்கிரம் வந்துருங்கப்பா .எல்லாரும் சீக்கிரமா கூப்பிட்டுட்டு போயிடுறாங்க .”


“சாரி டா நாளைக்கு கரெக்டா வந்துடுவேன். எப்படி தூங்கினேன்னு தெரியல .சரியா அலாரம் வச்சி இருந்தேன் .. சரி போங்க சீக்கிரமா போய் துணியை மாத்திட்டு வாங்க .உங்க ரெண்டு பேருக்கும் பால் கலக்கி வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் நுழைய.. சரியாக ஃபோனில் இருந்து அழைப்பு வந்தது .


வேகமாக போனை எடுத்தவன் “சொல்லுங்கம்மா என்ன விஷயம்” என்று கேட்க ,”நீ செய்யறது உனக்கு சரியா இருக்குதா? பிடிவாதமா குழந்தைகளை இங்கிருந்து இழுத்துட்டு போயிட்ட.. சரியா ஸ்கூலுக்கு நேரத்துக்கு கூட போய் அழைச்சிட்டு வர முடியறது இல்ல. ஏன் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்குற..”


“ அம்மா இத பத்தி நீங்க பேச வேண்டாம் . அவங்க என்னோட குழந்தைங்க. எனக்கு பாத்துக்க தெரியும்.”


‘ என்ன சரியா பார்த்த.. சும்மா ஏதாவது ஒரு பொய் காரணத்தை சொல்லக்கூடாது. ஏன்டா இப்படி இருக்கிற உனக்கு என்ன வயசு ஆகிடுச்சு ஜான். உன்னை நினைச்சு தினம் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கிறேன்”.


“ அம்மா ப்ளீஸ் மா மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காதீங்க.நான் தெளிவா இருக்கிறேன் இன்னொரு முறை என்னை பேசி கஷ்டப்படுத்தாதீங்க. அப்பா எங்க”.


“ அப்பா எங்கயா.. நீ பேச்சை மாத்தாதடா .அப்பா இந்நேரத்துக்கு எங்க இருப்பாங்கன்னு உனக்கு தெரியாதா.. அவர் வருவார். நான் உன்கிட்ட பேசுறதுக்காக கூப்பிட்டேன் . வருத்தப்படறது நான் மட்டும் இல்ல .எஸ்தரோட அம்மாவும் ரொம்ப வருத்தப்படறாங்க .உன்னை நினைத்து குழந்தைகளை நினைத்து..”


“அதெல்லாம் நான் ரொம்ப நல்லாவே குழந்தைகளை பாத்துக்குவேன். தேவையில்லாம வருத்தப்பட வேண்டாம் .இப்ப ஃபோனை வைங்க .நான் பால் காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுக்கணும்.”


“அதுதான் ஏன்னு கேக்கறேன் .ஏன் உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கற ..உன்னை நீயே வருத்திக்கற.. நாங்க சொல்றத கொஞ்சம் பொறுமையா கேட்கலாம்ல. காலம் மாறிக்கிட்டு இருக்குது”.


“ அம்மா ப்ளீஸ்மா நீங்க எதையும் பேச வேண்டாம். நீங்க எதுவும் சொல்லவும் வேண்டாம். நான் கேட்க தயாராக இல்லை இப்ப ஃபோன்னை வைங்க.”


“சரி இந்த வாரமாவது குழந்தைகள் இங்கே அழைச்சிட்டு வருவியா .”


“அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லம்மா. நான் இனி அங்க அழைச்சிட்டு வரமாட்டேன். வேணும்னா நீங்க இங்க வந்து பாருங்க.”


“ இத்தனை பிடிவாதம் ஆகாது ஜான் .கொஞ்சம் புரிஞ்சுக்கோ. நீ ஏன் இப்படி இருக்கிற ..சரி நீயும் இங்க வர வேண்டாம் நானும் அங்க வரல.


இந்த வாரம் சர்ச்சுக்கு வருவதான.. அங்க குழந்தைகளை அழைச்சிட்டு வா அங்க வச்சு நான் பார்த்துக்கறேன்.”


“ சாரிமா நான் சர்ச்சுக்கு போறத விட்டுட்டேன் உங்களுக்கு தெரியும் தானே. திரும்ப ஏன் மறுபடியும் கூப்பிடறீங்க.”


“ அங்க பாதர் உன்னை பாக்கணும்னு சொன்னாங்க”.


“ எனக்கு யாரையும் பார்க்க விருப்பம் இல்லமா .ப்ளீஸ் இப்ப ஃபோனை வைங்க .எனக்கு வேலை இருக்குது.”


“ நான் இப்போ கிளம்பி அங்க வர போறேன் .”


“தாராளமா வாங்க. நான் உங்களை வேண்டாம்னு சொல்ல மாட்டேன் ஆனால் தேவையில்லாத எதையும் என்கிட்ட பேசக்கூடாது. வாங்க உங்க பேத்திகளை பாருங்க கூட வேணும்னாலும் தங்கி இருங்க. தப்பெல்லாம் இல்ல ஆனா என்கிட்ட எதுவும் பேசக்கூடாது. அதுக்கு சம்மதம்னா கிளம்பி வாங்க. இல்லாட்டி தயவுசெய்து வராதீங்க” சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் சென்றான்.


பத்து நிமிடத்தில் பாலோடு வெளியே வர ,இரண்டு குழந்தைகளுமே உடையை மாற்றிக் கொண்டு வந்து ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தனர்.


ஆளுக்கு ஒரு டம்ளர் கையில் கொடுத்தவன்” சொல்லுங்க இன்னைக்கு ஸ்கூல் எப்படி போச்சு.. ஹோம் ஒர்க் எழுதலாமா” என்று கேட்க.. “எழுதலாம் பா” என்று கோரசாக குரல் கொடுத்தனர்.


ஜான் வேலை செய்வது ஒரு ஐடி நிறுவனத்தில்.. இரவு வேலையில் இருந்தான்.


10 மணிக்கு தொடங்கினான் என்றால் காலை 7 மணி வரையிலுமே வேலை சரியாக இருக்கும்.


அதன் பிறகு குழந்தைகளுக்கு உணவு தயாரித்து அவர்களை பள்ளியில் கொண்டு சென்று விட்டு திரும்ப வருபவன் இதர வேலைகளை முடித்துவிட்டு படுக்கையில் விழ 11 மணி தாண்டி விடும்.


சில சமயம் தூக்கமே வராமல் எதையோ யோசித்தபடி அமர்ந்திருப்பான்.


அவனையும் அறியாமல் இது போல வாரத்தில் ஒரு முறையோ 10 நாட்களுக்கு ஒரு முறையோ தூங்குவது வழக்கம். இன்றைக்கு அப்படித்தான் ஆகி இருந்தது.


இவனுடைய தாய், தந்தை இருவருமே குழந்தைகளை பார்த்துக் கொள்கிறோம் என்று கேட்க ..இவன் தான் பிடிவாதமாக தர மாட்டேன் என சொல்லி இங்கே அழைத்து வந்திருந்தான்.


அழைத்து வர காரணமும் இருந்தது. அதற்கு ஒரே காரணம் எஸ்தர்..


உன்மையில் அவனால் எப்போதும் அவளை மறக்க முடியாது. அவளைத் தாண்டி இன்னொரு பெண்ணை யோசிக்கவும் முடியாது.
 

NNK-15

Moderator
2

“ஆத்விக் உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கிறேன் பார்..” வேகமாக மகனை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள் நந்தினி.

பாட்டியோடு விளையாடிக் கொண்டிருந்த ஆத்விக் தாயாரைப் பார்க்கவும் வேகமாக ஓடி வந்தவன் ..கடைசி நிமிடத்தில் முகத்தை திருப்பிக் கொண்டு நின்றான்.

பார்க்கவே கவிதையாக இருந்தது இவளுக்கு..சிரிப்பு வந்தது.

“ஆத்விக் என்ன இது.. எதுக்காக இப்போ முகத்தை திருப்பிக்கிட்டு இருக்கற..”

“ நான் உன்கிட்ட பேசமாட்டேன் டூ..”கையை வளைத்து சொல்ல இவளுக்கோ சிரிப்பு பீரிட்டது.

“ எதுக்காகவாம் .. ஏன் டூ சொல்ற.. நான் தான் எந்த தப்பும் செய்யலையே..

அம்மாவுக்கு வேலை முடிய இவ்வளவு நேரம் ஆயிடுச்சு. நேரா உன்னை பார்க்க ஓடி வந்துட்டேன் .அம்மாம்மா ஏதாவது சொன்னாங்களா”. என்றவள் வேகமாக “அம்மா” என்று குரல் கொடுத்தாள்.

“இன்றைக்கு ப்ளே ஸ்கூல் போனவன் அங்கே பசங்களுக்குள்ள ஏதோ பேசி இருப்பாங்க போல இருக்கு .

உன் பையன் ரொம்ப தெளிவு.. ஆனாலும் இந்த வயசுல இத்தனை அறிவு ஆகாது” என்று சொல்லி சலித்தபடி வந்தார்.

“ என்னவாச்சு “.

“அங்கே இவனோட அப்பாவை பத்தி ஏதோ பேசி இருக்கறாங்க. உன் பையன் ரொம்ப ஷார்ப்.. கேட்டுட்டு வந்த நேரத்தில் இருந்து முகத்தை தூக்கி வச்சிகிட்டு இருக்கிறான் .”

“என்னவாம்..என் செல்லத்துக்கு.. என்ன பிரச்சனையாம்.. சொன்னாதானே தெரியும். நீ என்ன சொன்னாலும் அம்மா அத அப்படியே செஞ்சு வச்சுடுவேன்”.

“ சும்மா பொய் சொல்லாதம்மா அப்பா எங்க ?நான் அப்பாவ பார்க்கணும்” .

“என்ன இது பிடிவாதம். இங்க பாரு. நான் சொன்னத நீ கவனிக்கவே இல்ல .

இங்க பாரு உனக்காக விளையாட என்ன வாங்கிட்டு வந்திருக்கிறேன்னு.. நீ கேட்டியே ..குட்டி பால்.. அப்புறமா விளையாடறதுக்கு பேட்.. நீயும் நானும் இன்னைக்கு வீட்டுக்கு போய் ரொம்ப நேரம் விளையாடலாம்.. என்ன சொல்ற “.

“இல்ல எனக்கு விளையாட்டு எல்லாம் வேண்டாம் .எனக்கு அப்பா தான் வேணும் .என்னோட அப்பா தான் வேணும்.”அழ ஆரம்பிக்க‌.

“என்னடா இது..புதுசா ஆரம்பிக்கற.. “என இழுத்து தோளில் தாங்கிக் கொண்டாள்.

“ நான் தான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லி இருக்கிறேன்.. உனக்காகத்தான் அப்பா ஊருக்கு போய் இருக்கிறார் .

உனக்கு நிறைய விளையாட்டு பொருள் வாங்கணும்ல.. அதுக்காக பணம் சம்பாதிக்க போயிருக்காங்க .சீக்கிரமா திரும்பி வருவாங்க .”

“நீ பொய் சொல்ற ..ரொம்ப நாளா இதைத்தான் சொல்ற.. நான் அப்பாவை பார்த்ததே இல்ல தெரியுமா.. “அவன் சொல்ல சொல்லவே இவளுக்கும் கண்கள் கலங்கியது .

அவன் சிறு குழந்தை மனதில் உள்ளதை சொல்லி அழுது விடுகிறான் ஆனால் இவள் அது போல அழ முடியாதே...

கலங்கிய கண்களை மறைத்தபடி ..”நான் சொல்றேன்ல.. சீக்கிரமா அப்பா வந்திடுவார்..”

“ ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கறேன்ல…இந்த முறை ஃபோன் பேசும் போது சொல்லிடலாம்.

சீக்கிரமா வரணும் ஆத்விக் உங்களுக்காக காத்துகிட்டு இருக்கறான்னு..
சரியா”..
இவனை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும்போதே… தாயார் இவளுக்கு ஃகாபியோடு வந்தார்.

“இந்தா நந்தினி ..இந்த ஃகாபியை குடி. நான் இவனை சமாதானம் பண்ணிக்கறேன். டிவியில நீ பார்க்கணும்னு சொன்னியே சிங்கம் ,புலி அதெல்லாம் காட்றாங்க.
நம்ம அதை பார்க்கலாமா “.

“இல்ல வேணாம் போ பாட்டி.. எனக்கு அப்பா தான் வேணும் .எனக்கு ஜான் அப்பா தான் வேணும் “என்று அழ ..அப்படியே இருந்த இடத்திலேயே அமர்ந்து விட்டால் நந்தினி.

எப்போது பேரை கேட்டாலும் அந்த நிமிடம் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து விடும் .இப்போதும் அதுதான் நடந்தது .

அழும் மகளை தேற்றுவதா.. இல்லை குழந்தையை தேற்றுவதா என புரியாமல் திகைத்து நின்றார்.

“இந்த மனுஷன் வேற…இந்த நேரத்துக்கு எங்க தான் போவார்னு தெரியல..

குழந்தையை கொஞ்ச நேரம் வெளியே அழைச்சிட்டு போகலாம்ல.. அவன் தான் புரியாம அழறான்னா கூட சேர்ந்து இவளையும் அழ வைக்குறான் ..”சொன்னபடியே பேரனை வலுக்கட்டாயமாக இழுத்து இடுப்பில் வைத்தபடி வாசலுக்கு அருகே செல்ல.. அப்போதுதான் நந்தினியின் தந்தை வந்து கொண்டிருந்தார்.

“ என்னங்க இவனை நேரா கடைக்கு அழைச்சிட்டு போய் ஏதாவது வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்து கூட்டிட்டு வாங்க.”
கொடுத்துவிட்டு வந்தவர் புலம்பிய படியே உள்ளே வந்தார்.

“ இப்படி எல்லாம் ஆகும்னு யாராவது நினைச்சாங்களா.. என்ன எல்லாமே கை மீறி போயிடுச்சு .

ஊர்ல உலகத்துல சம்பாதிக்கிறதுக்கு இடமா இல்ல .எதுக்காக வெளிநாட்டில் போய் சம்பாதிப்பேன்னு கிளம்பி போனாரு.

என்னவோ எல்லாமே தப்பு தப்பா ஆகி போயிடுச்சு .இன்றைக்கு பாரு பையன் இங்கே கடந்து அப்பா.. அப்பான்னு அழறான்” என்று புழம்பியப்படியே மகளுக்கு அருகே வந்தவர்.

“ நீ என்ன உக்காந்து என்ன செய்ற ..அழுகறதால எல்லாம் சரியா போயிடுமா.இல்லை.. நடந்தது இல்லன்னு ஆயிடுமா.

முதல்ல இந்த காஃபியை குடி.. அவன் தான் சின்ன குழந்தை அழறான்னா நீயும் அவனுக்கு சரிக்கு சரியா உக்காந்து அழுவியா..

என்ன சொன்னாலும் கேட்கறது இல்லை .பிடிவாதமா அந்த வீட்லதான் உட்கார்ந்து இருப்பேன்னு இருக்கற.. அங்கே யார் இருக்கிறா..

நீயும் பையனும் தனியா எதுக்காக அங்க இருக்கணும்”.

“ அம்மா அது அவர் எனக்காக வாங்கின வீடுமா.. இது வரைக்கும் அதுக்கு டியூ கட்டிக்கிட்டு இருக்கிறேன் .நான் அங்கதான் இருப்பேன் .இங்க எல்லாம் வர மாட்டேன்.

அந்த வீடு முழுக்க ஜானோட நினைவுகள் இருக்கு .அவன் வேணும்னா இன்னைக்கு இல்லாம போயிருக்கலாம்.

அதுக்காக மொத்தத்தையும் விட்டுட்டு வருவேன்னு எப்படி யோசிக்கறீங்க.

ஆத்விக் எங்க போயிருக்கிறான்? “

“அப்பாகிட்ட அனுப்பி வைத்திருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான் .சமாதானம் பண்ணி கூப்பிட்டு வருவாரு .நீ அதையெல்லாம் பற்றி யோசிக்காத ..

இன்னைக்கு என்ன வேலை அதிகமா.. ஏன் லேட் ஆயிடுச்சு.” பேச்சை மாற்றுவதற்காக கேட்க..

“ இந்த பேட் வாங்க போனேன் .கொஞ்சம் டைம் ஆயிடுச்சு .”

“சரி முதல்ல உள்ளே வா. சாப்பிட எடுத்து வைக்கிறேன்.”.

“வேணாம் மா..வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்குவேன்.”

“ எங்க நீ செஞ்சு சாப்பிடற நான். உன் பையன் கிட்ட கேட்டுட்டேன் நைட்டு எல்லாம் நீ சாப்பிடுறதே இல்லையாமாம்.

விடிய விடிய அழுதுகிட்டே தான் இருக்கிற போல.. ஏன் இப்படி இருக்கறேன்னு எனக்கு தெரியவே இல்லை .

அவன்தான் குழந்தை.. அந்த மனுசனோட முகத்தை பார்க்கவே இல்லை.. ஆனாலும் கேட்டு அழறான் .

ஆனா நீ எல்லாத்தையும் பார்த்திட்டு இருந்தவ.. நீ இன்னமும் அழுதா என்ன அர்த்தம் .அவர் இறந்து ரெண்டு வருஷம் முடிஞ்சு போச்சு. ஞாபகம் இருக்குதா.

என்ன நோயோ என்ன கருமமோ எனக்கு ஒன்னும் புரியல..
எல்லாமே முடிஞ்சு போச்சு கடைசியா ஒரு தடவை முகத்தை கூட பார்க்க கொடுத்து வைக்கலை.

எல்லாமே மாறிடுச்சு ஆனா அன்னைக்கு அழுத அழுகை மட்டும் தான் மிச்சமா இருக்குது இன்ன வரைக்கும்..”

அரை மணி நேரம் கழித்து ஆத்விக்கும் இவளது தந்தையும் உள்ளே நுழைய.. வந்த உடனேயே மகனை வாரி அணைத்தவள்..” நாளைக்கு வழக்கம் போல காலையில பிளே ஸ்கூலுக்கு அனுப்பிடறேன். சரியான நேரத்துக்கு அவனை கூப்பிட்டு வச்சுக்கோங்க.”

“ அதெல்லாம் கரெக்டா செஞ்சுடுவேன் .நீ கொஞ்சம் யோசி நந்தினி .

இங்கு வந்து இரு.. எத்தனை நாள் தனியா அங்கேயே இருப்ப”.

“ அதெல்லாம் சரிப்பட்டு வராது மா.. என்ன தயவு செய்து கூப்பிடாதீங்க..” என்றவள் மகனை தன்னுடைய ஸ்கூட்டியில் அமர்த்தி நேராக வீட்டிற்கு புறப்பட்டாள்.

வீட்டின் கதவை திறந்த உடனேயே அவளுக்கு ஜானின் நினைவு தான் வந்தது.

இருவருமே ஒன்றாக கல்லூரியில் படிக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் .

நந்தினியை அவளது வீட்டில் சேர்த்துக் கொண்டனர். இன்று வரையிலுமே ஜான் வீட்டில் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

அதற்கு ஏற்றார் போல தான் எல்லாமே நடந்து முடிந்திருந்தது.

இங்கே வந்த பிறகு ..இரண்டு வருடம் அருகில் இருந்து வேலைக்குச் சென்றவன் குழந்தை உண்டாகி இருக்கிறாள் என்று தெரிய.. அந்த நேரத்தில் தான் வெளிநாட்டு வேலைக்காக இவன் முயற்சி செய்தது .

இருந்த சம்பளத்தில் ஓரளவிற்கு மிச்சம் செய்து இந்த வீட்டை மாதம் இன்ஸ்டால்மென்ட் கட்டுவது போல வாங்கி இருந்தான்.

சீக்கிரமாக பணத்தை கட்டி முடிக்க வேண்டும் என்கின்ற ஒரே காரணத்திற்காக வெளிநாட்டில் வேலை தேடியது.

இவனின் நேரமோ என்னவோ வேலை கிடைத்தது..

இங்கே நந்தினி குழந்தை உண்டாகி இருக்க அந்த நேரத்தில் தான் புறப்பட்டு சென்றது .

சென்றவனால் திரும்பி வரவே முடியவில்லை .

அதுவே இறுதிப் பயணமாக முடியும் என்று இவளும் நினைத்திருக்கவில்லை.

அங்கே சென்ற கொஞ்ச காலத்தில் தான் கொரோனா எனும் கொடிய நோய் பரவியது.

நோய் அவனையும் விட்டு வைக்கவில்லை…அதிலிருந்து மீண்டு வர முடியாமல் மொத்தமாக அங்கேயே உயிரை விட்டிருந்தான் .

இங்கு கொண்டு வந்த பிறகும் கூட முகத்தைக் கூட பார்க்கும் வாய்ப்பு யாருக்குமே கிடைக்கவில்லை .

அன்றைக்கு அழுத அழுகைதான் இன்று வரையலமே அழுது கொண்டிருக்கிறாள்.

ஜானுக்கும் இவளுக்கும் உண்டான நினைவுகள் நிறையவே இருக்கிறது.

எப்போது ஜானை திருமணம் செய்தாலோ அப்போதே அன்றிலிருந்து அவன் பழக்க வழக்கங்களை தனக்குரிய தாக்கி கொண்டாள்.

கோவிலுக்கு செல்வது இவளது வழக்கம் என்றாலும் அதையும் தாண்டி அவனின் நினைவுகளோடு சர்ச்சுக்கு செல்வது அவளுக்கு பிடித்தமான ஒன்று.

மகனிடம் ஜான் தந்தை என்பதை மட்டுமே சொல்லி இருந்தாள்.

வெளிநாட்டில் வேலை செய்கிறான் என்று மட்டும் இன்று வரையிலுமே சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

அவன் இறந்ததோ .. அவனைப் பற்றி எதையுமே மகனிடம் பகிர்ந்தது கிடையாது.

அவன் சிறுவன் ..என்று வளர்கிறானோ அன்றைக்கு புரிந்து கொள்ளட்டும் என விட்டு விட்டாள்.

இன்று வரையிலுமே கேட்கும் போது உனக்காக வேலை செய்கிறான். உனக்காக வந்து விடுவான் என்று கதை சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவனுக்கு மட்டுமல்ல பொய்யான ஒரு கதையை தனக்குள்ளும் சொல்லிக் கொண்டாள். என்றாவது ஒருநாள் கண் முன்னால் வந்து நிற்பான் என்கின்ற எண்ணத்தோடு..

நடக்காது என தெரிந்தும் பொய்யாய் ஒரு வாழ்க்கை..

கனவோடு ஒரு வாழ்க்கை அவனோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள் நந்தினி.

சமீபத்தில் இருந்து ஒரு கேள்வியை நந்தினியின் தாய் தந்தை இருவருமே கேட்டுக் கொண்டிருந்தனர்.

குழந்தைக்காக உன்னுடைய எதிர்காலத்திற்காக ஏன் இன்னொரு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று..

இன்று வரையிலுமே அதை பற்றி யோசித்தது கிடையாது. இனியும் யோசிக்க தயார் இல்லை என சொல்லிவிட்டு பிடிவாதமாக தற்போது இருக்கும் வீட்டிலேயே வாசம் செய்து கொண்டிருக்கிறாள்.

நிச்சயமாக இங்கே இந்த தனிமை அவளுக்கு கொடுமையான ஒன்று தான் .

இந்த வீட்டிற்கு உள்ளே நுழைந்தாலே ஜானின் நினைவுகள் தான் அவளை துரத்திக் கொண்டிருக்கும்.. அதிலும் தன்னுடைய அறையில்.. அவனின் வாசம் இன்னமும் இருப்பதாகத்தான் இவளுக்கு தோன்றியது.

அவனின் உடைகள் பயன் படுத்திய பொருட்கள் என எல்லாவற்றையுமே ஒரு பீரோவில் வைத்து பூட்டி வைத்திருந்தாள்.

அவனின் ஞாபகம் வரும் போதெல்லாம் எடுத்து வைத்து பார்த்து அழுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறாள்.

என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு அந்த காரியத்தை மகன் செய்திருந்தான்.

வீட்டிற்கு நேராக வந்தவள் மகனுக்கு பாலைக்காய்சி கொடுக்கவும்.. சற்று நேரத்திற்கெல்லாம் தூங்க ஆரம்பித்து இருந்தான்..

அவனை தூக்கி சென்று அவனுடைய இடத்தில் படுக்க வைத்தாள்.

அடுத்ததாக சென்றது நேராக பூட்டி வைத்திருந்த அந்த பீரோவிற்கு அருகே தான்..
தன்னை அறியாமல்..”ஏன்னா இப்படி செஞ்ச..எத்தனை தடவை செஞ்ச எத்தனை தடவை உன்கிட்ட கெஞ்சினேன். நீ என்னை விட்டுட்டு போகாதேன்னு.. என் கூடவே இரு.. கம்மி சம்பளமா இருந்தாலும் பரவாயில்லைன்னு..

நீ எதுக்குமே கேக்கலையே டா நிறைய சம்பளம் கிடைக்கும் சீக்கிரமா கடன் அடைக்கலாம். உன்னை ராணி மாதிரி வச்சுக்குவேண்ண… கடைசில என்ன ஆச்சு.

என்னை தனியா விட்டுட்டு போயிட்டல்ல .இன்னைக்கு பாரு உன் பையன் உன்னை கேட்டு அழறான்.

ஏன் உன் பையன் இவ்ளோ புத்திசாலித்தனமாக இருக்கறான்னு எனக்கு தெரியல .ரெண்டரை வயசு குழந்தை ஸ்கூல்ல யாரோ அப்பா உனக்கு இல்லன்னு சொன்னாங்கன்னு அதையே வந்து கேட்டுட்டு இருக்கிறான்.

இந்த நிமிஷமே உன்னை அழைச்சிட்டு வந்து முன்னாடி நிறுத்துன்னு கேட்கறான்.. என்னால முடியலைடா.. இன்னும் எத்தனை நாள் இப்படியே என்னை அழ வைக்க போற.. “

அவளையும் அறியாமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. துடைக்க தான் கரங்கள் இல்லை .உள்ளே அடுக்கி வைத்திருந்த துணிகளை வேகமாக ஒதுக்கிவிட்டு பார்க்க ..அங்கே இவளும் அவனும் இணைந்து சிரித்துக் கொண்டிருந்த புகைப்படம் அந்த பீரோவில் ஒட்டப்பட்டு இருந்தது.

திருமணத்தின் போது எடுத்த புகைப்படம் கிடையாது.

காலேஜில் படித்த போது இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் அது..

இருவருமே எந்த கவலையும் இல்லாமல் புன்னகை முகமாக ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டபடி இருக்க ..அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம்..

நீண்ட நேரம் வரையிலுமே புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தவள்.. மெல்ல நகர்ந்து தன்னுடைய மகனுக்கு அருகே படுத்துக்கொண்டாள்.
கைகளை அவன் மீது போட்டபடியே ..”அப்பா இனி எப்பவுமே வரமாட்டாங்கன்னு உன்கிட்ட எப்படி சொல்லி புரிய வைக்க போறேன்னு தெரியல. சீக்கிரமா நீ புரிஞ்சுக்குவ.. எனக்கு நம்
பிக்கை இருக்குது .

என்னோட உலகமே நீ தான் ஆத்விக் .உனக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்..

நீதான் எனக்கு எல்லாம்..” என்று சொன்னபடியே தட்டிக் கொடுத்தபடி அவளையும் அறியாமல் தூங்க ஆரம்பித்தாள் நந்தினி.

 

NNK-15

Moderator
3


எஸ்தர்.. இவனது மொத்த நினைவுகளிலும் ஆட்சி செய்பவள். அவளிடத்தை யாராலும் பிடித்து விட முடியாது.


பத்து வருட வாழ்க்கை எந்த இடத்தில் முடிந்தது என்று கேட்டால் இவனால் சொல்லி விட முடியாது.


அன்பு ,காதல், பாசம் என மொத்தமாக போட்டி போட்டு இவனுக்கு கொடுத்தவள்.


இவனின் கவனக்குறைவு தான் அவளை தவற விட்டானா !!


எந்த இடத்தில் இவன் தவறு செய்தான் எப்போதும் யோசிப்பது அதை மட்டும் தான்.


எஸ்தர் என்று சொன்னாலே இவனின் கண் முன்னால் தோன்றும் அந்த குறும்பு நிறைந்த புன்னகை முகம்..


எப்போதுமே இவனிடம் வம்பு இழுப்பது…


அதிலும் காலையில் இவன் புறப்பட போகிறான் என்றால் அந்த நேரத்தில் அவள் செய்யும் அமலிகளை தாங்க முடியாது.


திருமணம் பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்தது தான்.


ஏனோ பார்த்த முதல் பார்வையிலேயே இவனின் மனதிற்குள் வந்து சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டவள்.


எப்போதுமே அவளுடைய வலியை ,தவிப்பை இவன் முன்னால் காட்டியது கிடையாது.


எப்போதும் அவளது புன்னகையை மட்டுமே காட்டி இருந்தாள். அதனால் தானோ என்னவோ அவளுடைய வலி இவனுக்கு தெரியாமலேயே போய் விட்டது.


அப்போது வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருக்கவில்லை.


காலையில் புறப்பட்டான் என்றால் இரவு வருவதற்கு பத்து மணி ஆகிவிடும்.


இடையே இரண்டு முறை மூன்று முறை மனைவிக்கு அழைத்து பேசி விடுவான்.


எஸ்தரும் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பாள்.


தற்போது இருக்கின்ற இந்த வீட்டில் தான் திருமணம் முடிந்த உடனே அழைத்துக் கொண்டு வந்து விட்டது.


தாய், தந்தை இருவருமே கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தொலைவில் தான் இருந்தனர்.


எஸ்தரின் குடும்பம் கூட அது போன்ற ஒரு தொலைவில் தான் இருந்தது.


ஜானின் தாய், தந்தை இருவருக்குமே ஒரே மகன் இவன்.


பிடிவாதமாக தனி குடித்தனம் செல்ல மாட்டேன் என்று சொன்னவனை பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் .


கொஞ்ச நாள்தானடா.. குழந்தைன்னு வரும் போது அப்போ நீ இங்க வந்துடு இப்போ நீங்க வாழ்றவங்க..


இங்க பெருசா நம்ம வீட்டுல இடம் வசதி எல்லாம் இல்ல.. உனக்காக மாடியில் ரூம் எடுத்து தரணும்னு ஆசை இருக்குது. ஆனா அது இப்போதைக்கு முடியாது .கொஞ்ச நாள் போகட்டுமே . எப்ப நாங்க உன் கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோணுதோ அப்போ அங்க வந்துடுவோம்.” சொல்லி அனுப்பி வைத்தனர். அதுதான் தவறோ என்று இன்றைக்கும் யோசித்துக் கொண்டிருக்கிறான்.


ஆளில்லாத நேரத்தில் தனிமையில் பல நாள் கத்தி இருக்கிறான் .


“நான் இன்னமும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கணும். உன்ன மட்டும் கவனிச்சி இருக்கணும் .நான் தான் உன்னை தவற விட்டுட்டேன். இதுக்கு மொத்த பொறுப்பாளியும் நான் தான்” என்று கத்தி இருக்கிறான் .


இப்போது மகள்களே உலகம் என மாறி வாழ ஆரம்பித்து இருந்தான்.


வெளியே காலிங் பெல் சத்தம் கேட்க ..வேகமாக சமையலறையில் இருந்து குரல் கொடுத்தான்.


‘ பாட்டி வந்து இருப்பாங்க எலீசா.. போய் கதவை திற.. “என்று சத்தம் தர வேகமாக ஓடி சென்று கதவை திறந்தாள்.

வெளியே எஸ்தரின் தாய், தந்தை இருவருமே வந்திருந்தனர் .


“அப்பா.. அம்மம்மா ..பாட்டிப்பா “என்று குரல் தர வேகமாக வேலை செய்து கொண்டிருந்தவன் கையை துடைத்தபடி ஹாலுக்கு வந்தான் .


எஸ்தரின் தாய் , தந்தை இருவருமே வந்திருக்க ..”வாங்க மாமா வாங்க வந்து உட்காருங்கள்.. “என்று கேட்க..


“ரெண்டு பேரோட ஞாபகமாக இருந்தது .அதனால தான் பார்த்துட்டு போலாம்னு வந்தோம். இத்தாம்மா” என்று கையில் வாங்கி கொண்டு வந்திருந்த ஸ்நாக்ஸ், பழங்களை எலீசாவிடம் தர.. மேரியோ..”பாட்டி “என்று வந்து அருகே அமர்ந்து கொண்டாள்.


“ என்ன ஸ்கூலுக்கு எல்லாம் போயிட்டு வந்தாச்சா ..ஹோம் ஒர்க் முடிச்சாச்சா “என்று விசாரிக்க ஆரம்பிக்க .. பதில் சொல்ல ஆரம்பித்திருந்தாள் பேரி.


ஜான் நேரத்தை பார்த்தவன்.. 7 மணியை நெருங்கிக் கொண்டிருக்க ..”இருங்க அத்தை, மாமா நைட்டுக்கு ரவை செய்யறேன் .சாப்பிட்டு போகலாம் “என்று சொல்லிவிட்டு நகர ..


“இல்ல மாப்பிளை.. நீங்க இங்க உட்காருங்க .நான் செஞ்சு எடுத்துட்டு வரேன்” என்று வேகமாக எழுந்து சமையலறையை நோக்கிச் சென்றார்.


அமைதியாக வந்து மாமனாருக்கு அருகே அமர்ந்தான்.


இனி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னாலும் கேட்கப் போவதில்லை ஏனென்றால் ஜானிற்கு தாய் ,தந்தை மட்டும் கிடையாது .அதே ஸ்தானத்தில் எஸ்தரின் தாய் ,தந்தையும் இருந்தனர் .


அந்த அளவிற்கு இவனின் மேல் அன்பு அதிகம் இருவருக்குமே …எஸ்தர் இறந்தது எல்லோருக்குமே பெரிய இழப்புதான்.


இந்த நிமிடம் வரையிலுமே யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று .எப்படி விட்டார்கள் என்று எல்லோருக்குமே ஒரு பெரிய கேள்வி இருந்தது.


முழுக்க முழுக்க காரணம் யார் என்று கேட்டால் இன்று வரையிலுமே யாருக்குமே பதில் தெரியவில்லை .


24 மணி நேரம் அருகிலே இருந்தது போல தான் இருந்தார்கள் .எப்போதுமே யாராவது ஒருவர் வீட்டில் சற்று நேரம் சென்று பார்த்து பேசி விட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தாள் எஸ்தர்.


இவளின் தாய் ,தந்தையை மட்டுமல்ல… ஜானின் தாய், தந்தையிடமும் அளவுக்கு அதிகமான அன்பை வைத்திருந்தாள்.

இருவரையும் எந்த இடத்திலுமே விட்டுக் கொடுத்தது இல்லை.

ஆனால் அவளுக்குள் இருந்த அந்த வியாதி இவர்கள் இருவருக்குமே தெரியாமல் இருந்தது தான் ஆச்சரியம் .ஏன் ஜானிற்கு கூட அவள் எப்போதுமே சொன்னது இல்லை .


தனக்காக யாரும் சிரமப்படக்கூடாது .தன்னை நினைத்து யாரும் கவலைப்படக்கூடாது. இதுதான் எஸ்தரின் கோட்பாடு ..அந்த கோட்பாடு தான் அவளை மொத்தமாக இவர்களிடத்தில் இருந்து பிரித்து இருந்தது.


இரண்டு வருடம் இதோ முடிந்துவிட்டது. இன்று வரையிலுமே அந்த இழப்பின் வலி, வேதனை அத்தனை பேரிடமும் இருந்தது .


அதை தாண்டி மீண்டு வர முடியவில்லை .


இப்போதும் கண்களுக்கு முன்னால் எஸ்தர் எதிரில் நின்று பேசுவது ,சிரிப்பது போல தான் தோன்றிக் கொண்டிருந்தது.


சமீபத்தில் புதியதாக ஆரம்பித்திருந்தனர் ஜானிடம்..


“ஏன் நீ இன்னொரு கல்யாணம் செஞ்சுக்க கூடாது” என்று…


ஆரம்பத்தில் தொடங்கி வைத்தது.. என்னவோ எஸ்தரின் தாய், தந்தை தான் .


முதலில் ஆச்சரியமாக, அதிர்ச்சியாக தான் அவர்களை பார்த்தது.


“ என்ன சொல்றீங்க மாமா.. என்ன பேசுறீங்கன்னு தெரியுதா நான் எஸ்தரை இன்னமும் மறக்கலை..

எப்பவும் நான் மறக்க மாட்டேன்.அவளோட நினைவுகள் அது என் கூட தான் இருக்குது .அதுக்கு என்னைக்குமே இறப்பு கிடையாது . நான் உயிரோட இருக்கிற வரைக்கும் என் கூட தான் அவளோட நினைவுகள் பயணிக்கும் .


எட்டு வருஷ வாழ்க்கை ஒன்றும் சின்னது கிடையாது மாமா .அவ கூட நிறைய நிறைய மெமரிஸ் இருக்குது.


அத எல்லாத்தையுமே தூக்கி போட்டுட்டு நான் புது மாப்பிள்ளைன்னு வந்து நிற்க மாட்டேன் .அவளோட நினைவுகளுக்கு பரிசாக எனக்கு இரண்டு குழந்தைங்க இருக்குது .அந்த குழந்தைகளோட எதிர்காலம் அவங்க வாழ்க்கை அதை பார்த்துகிட்டு இருந்தாலே போதும் .எதுக்காக உங்களுக்கு இது போல எல்லாம் தோணுது.


என்னால என் குழந்தைகளை பார்த்துக்க முடியாதுன்னு ஒரு நினைப்பு இருந்ததுனா ப்ளீஸ் மறந்துடுங்க”.


“ அப்படி இல்ல மாப்பிளை ..எனக்கு தெரியும் ரெண்டு குழந்தைகளுக்கு அப்பாவா அம்மாவா உங்களால் இருக்க முடியும் .ஆனா உங்கள போல ஒரு பையன் தனியா வாழ கூடாது .குழந்தைங்க வளர்ந்துக்கிட்டு இருக்காங்க. அவங்களோட எதிர்காலத்துக்கு ஒரு பொண்ணு கட்டாயமா வேணும் .உங்களுக்கு இருக்கிறது இரண்டுமே பெண் குழந்தைங்க.. வளருவாங்க.. வயசுக்கு வருவாங்க.. நாளைக்கு கல்யாணம் காட்சின்னு செய்யும் போது உங்களால எந்த அளவுக்கு கூட இருக்க முடியும் .ஒரு பெண் இருந்தால் குழந்தைகளோட உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும் .புரியுதா மாப்பிளை ..”


“ஏன் மாமா நீங்க இருக்கிறீங்க அத்தை இருக்கிறாங்க.. என்னோட அம்மா ,அப்பா இருக்காங்க .இதைத் தாண்டி வேற என்ன வேணும்னு நினைக்கிறீங்க .


அவங்களுக்கு பாட்டியா இருந்து அவங்களுக்கு வேணுங்கறத சொல்லிக் கொடுத்தா போதும் “.


“மாப்பிள்ளை எத்தனை காலத்துக்கு நாங்க எல்லாம் உயிரோட கூட வருவோம் என்று நினைக்கிறீர்கள் .


எப்போ எஸ்தர் போனாலோ அதற்கு பிறகு வாழற ஆசை கூட எங்களுக்கு குறைஞ்சிருச்சு. இந்த பேர பசங்களை பார்த்து தான் எங்களை நாங்களே திருப்திப்படுத்திக்கறோம்.. அவர் கேட்கிறதுல தப்பெல்லாம் இல்லை .. இன்றைக்கு இரண்டாவது கல்யாணம் ரொம்ப ரொம்ப சாதாரணமானது தான்.


நீங்க பெருசா கவலைப்பட வேண்டாம் .உங்களுக்கு பொருத்தமான பொண்ண பார்க்கற பொறுப்பை நாங்க எடுத்துக்கிறோம். “


“நான் உங்க ரெண்டு பேரும் மேலயுமே நிறைய மரியாதை வைத்திருக்கிறேன் .ப்ளீஸ் இது மாதிரி ஒரு கோரிக்கையோட என்னை தேடி வராதிங்க.


எப்ப வேணும்னாலும் நீங்க வாங்க.. என் பொண்ணுங்கள நீங்க பாருங்க. வேண்டாம்னு சொல்ல மாட்டேன் .ஆனால் இப்படி ஒரு எண்ணத்தோட தயவு செய்து இங்க வர வேண்டாம். நீங்க இத்தனை நாளா குழந்தைகள் மேல பாசமா இருக்கீங்க. அதனால தான் கூப்பிட்டுட்டு போய் வீட்ல வச்சு இருக்கீங்கன்னு நெனச்சேன் .இப்ப தான் தெரியுது என் குழந்தைகளை நீங்க பாரமா நினைக்க ஆரம்பிச்சிட்டீங்க .


அதனால தானே இன்னொரு பொண்ணு இங்க வந்துட்டா அவ கூட இருந்துக்குவாங்கன்னு யோசிக்கறீங்க. இனி எக்காரணத்தைக் கொண்டும் உங்க வீட்ல எல்லாம் கொண்டு வந்து குழந்தைகளை விட மாட்டேன் .”


அன்றைக்கு கோபமாக திட்டியவன்.. அதையே இரண்டு பெற்றோர்களிடமும் காட்டினான்.


அன்றைக்கு இவனது தாயார் கொஞ்ச நேரத்தில் போன் செய்து இவனை திட்டினார்.


“ ஏன்டா இப்படி நடந்துக்கற.. நான் தான் சம்பந்தி அம்மா கிட்ட பேசினேன் .அவனுக்கு ஒன்னும் வயசு ஆகிடலையே.. மனைவி இறந்துட்டா அதுக்காக அவளுடைய ஞாபகத்திலேயே கடைசி வரைக்கும் வாழனும்னு யார் சொன்னாங்க .


இன்றைக்கு இரண்டாவது கல்யாணம் ரொம்ப ரொம்ப சாதாரணமாகிடுச்சு .பெண்கள் தைரியமாகவே இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறாங்க. இவனுக்கு என்ன ..அப்படின்னு நான் தான் சொன்னேன் .


அதை தான் அங்க நேரா வந்து சொன்னாங்க. நீ அவங்ககிட்ட குழந்தைகளை எல்லாம் இனி உங்க வீட்டுக்கு விட மாட்டேன்னு சத்தம் போட்டியாம்”.


“ ஓ.. நீங்கதான் காரணமா.. சாரிமா .நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேன் போல இருக்குது .சந்தோஷம் அவங்களுக்கு சொன்ன அதே பதில் தான் உங்களுக்கும்..


இனி குழந்தைகளை அங்க நான் விடமாட்டேன் .”


“டேய் உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. இரு நான் வரேன்” என்றவர் அந்த வாரம் இவனை வந்து பார்த்து பேச ..இருவருக்குமே வாக்குவாதங்கள் பெரியதாகத்தான் ஆனதே தவிர எந்த முடிவு எடுக்கப்படவில்லை.


அன்றைக்கு ஆரம்பித்தவன் தான் இதோ இன்றைக்கு வரையிலுமே தன்னுடைய தாய் தந்தையிடம் குழந்தையை ஒப்படைக்கவில்லை .வந்தால் கூட அவர்கள் தான் இங்கே வந்து பார்த்துவிட்டு சென்று கொண்டு இருந்தனர்.


“அம்மா கிட்ட சண்டை போட்டிங்களா ஏன் மாப்பிள்ளை..” மெதுவாக கேட்க..


“ம்..அப்படின்னா அவங்க சொல்லித்தான் நீங்க ரெண்டு பேரும் கிளம்பி வந்தீங்க அப்படித்தானே .”


“அப்பா வெளியே பிசினஸ் வேளையா போனவர் இன்னும் வீட்டுக்கு வரலையாம்.. பசங்களை இன்னைக்கு ரொம்ப லேட்டா போய் அழைச்சிட்டு வந்தீங்களாம்..


ரெண்டு குழந்தைகளும் ரொம்ப பயந்துகிட்டு இருந்திருப்பாங்க நீ கொஞ்சம் போய் பார்த்துட்டு வாங்கன்னு சொன்னாங்க.”


“ அவங்க பயப்பட எதுவும் இல்லை. நாலு மணிக்கு விடறாங்க .நான் போனது அஞ்சு மணிக்கு ..கொஞ்சம் லேட் தான் இல்லன்னு சொல்ல மாட்டேன். ஆனா குழந்தைகளை மேனேஜ் பண்ணிக்குவேன் .இனி தவறு நடக்காது .இன்னைக்கு கொஞ்சம் அசந்துட்டேன் “.


“அதுதான் ஏன்னு கேக்குறேன். மாப்பிள்ளை ஏன் இப்படி இருக்கறீங்க .இன்னொரு கல்யாணம் பண்றதுல உங்களுக்கு என்ன தான் பிரச்சனை..


இன்னொரு பொண்ணு இந்த வீட்டுக்கு வந்தா வீட்டை மட்டுமல்ல குழந்தைகளையும் கவனிச்சுக்கவா.. நீங்க உங்க வேலைய பார்க்கலாம் .எதுக்காக இப்படி மொத்த நிம்மதியையும் கெடுத்துக்கிட்டு இருக்கணும். உங்களுக்கு எல்லாத்தையும் இழுத்து போட்டுட்டு ஓடிக்கிட்டு இருக்குற வயசா ..வாழ்ற வயசு தானே இருந்தா.. 33 வயசு இருக்குமா.. இந்த வயசுல சன்னியாசி மாதிரி ஒரு வாழ்க்கை யார் வாழ சொன்னாங்க .”


“எனக்கு எந்த தேவையும் இல்ல மாமா புரியுதா .நான் ரொம்ப ஹேப்பியா தான் இருக்கிறேன். என்னோட மனைவியோட நினைவுகளோட ..”


“அவளோட நினைவோடவே வாழ முடியும்னு முடிவு பண்ணிட்டீங்களா ..”


“என்னோட முடிவுல எந்த தப்பும் இருக்கிறதா தெரியல .திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை நீங்க ஏன் கம்ப்ளீகேட் பண்றீங்கன்னு தான் எனக்கு புரியல.”


அதற்குள்ளாகவே ரவையை செய்து விட்டு வந்தவர் இரண்டு குழந்தைகளுக்கும் ஊட்ட ஆரம்பிக்க . அமைதியாக அமர்ந்திருந்தான்.


“ இருங்க உங்களுக்கும் எடுத்துட்டு வரேன் .”என்று உள்ளே சென்றவன்.. தனக்கும் மாமனாருக்கும் தனித்தனி தட்டில் எடுத்து வந்து கொடுக்க அமைதியாக சாப்பிட ஆரம்பித்தனர் .


இரண்டு பேருமே அவ்வப்போது நிமிர்ந்து பார்க்க.. எதிரில் இருந்த எஸ்தரின் புகைப்படம் புன்னகையோடு இவனை பார்த்துக் கொண்டிருந்தது.


சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதி காத்தவர் .”கொஞ்சம் யோசிக்கலாம் மாப்பிளை ..பொதுவா உங்க அம்மா, அப்பா தான் இத பத்தி பேசணும் . ஆனா எங்களால பார்த்துகிட்டு இருக்க முடியல .நிச்சயமா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும் .


உங்களுக்கு ஏத்த பொண்ணா நாங்களே பார்த்து தரோம். எஸ்தருடைய குணம் எப்படியோ அதே மாதிரி ஒரு குணம் உள்ள பொண்ணா உங்களுக்கு பார்த்து கட்டி வைக்கிறோம்..


கொஞ்சம் யோசிங்க இப்போ புறப்படுகிறோம்” என்று இருவருமே புறப்பட்டு செல்ல.. அடுத்த நொடியே தாயாருக்கு ஃபோனில் அழைத்தான்.


“ உங்ககிட்ட நான் சொன்னதால நீங்க எஸ்தரோட அம்மா ,அப்பா கிட்ட சொல்லி அனுப்பி வச்சிருக்கிறீங்க அப்படித்தானே..”


“ சும்மா எல்லாத்துக்கும் காரணம் சொல்லாதே எனக்கு மனசு சரியில்ல.


உனக்கு ஐம்பது வயசா ஆச்சு இன்னைக்கு 33 வயசு தான் ஆகுது ..23 ல கல்யாணம் பண்ணி வச்சேன் .31 வயசுல எல்லாமே முடிஞ்சிடுச்சுன்னு உக்காந்திருக்கற.. தப்புதான் இத்தனை நாங்க சரியா கவனிக்காம விட்டுட்டோம்.. தப்பு எங்க பேர்லயும் இருக்குது. தினமுமே இங்க இல்லாட்டி அவளோட வீட்டுக்கு போக தான் செஞ்சா ..ஆனா அவளோட பிரச்சனை என்னன்னு

யார்கிட்டயும் சொல்லல.. தன்னந்தனியா வலியை அனுபவிச்சிருக்கறா..


அவளுக்கு வந்த மாதிரி ஒரு நோய் யாருக்கும் வந்திருக்கக் கூடாது‌.எல்லாத்தையுமே தெரிஞ்சுக்கிட்டு எதையுமே யார்கிட்டயுமே சொல்லாம இருக்கிற வரைக்கும் சந்தோஷமா வாழலாம் என்கிற ஒரு மைண்ட் செட்டோட வாழ்ந்துட்டு போயிட்டா..


கொஞ்சம் முன்னாடியே தெரிஞ்சி இருந்தா காப்பாற்றி இருக்கலாம் .கடைசியில எல்லாமே முடிஞ்சு போச்சு.. ரத்தமா வாந்தி எடுக்கறா.. வயிறு வலியில் துடிக்கிறான்னு சொல்லித்தான் அன்னைக்கு அழைத்துக்கொண்டு போனோம் .


என்ன ஆச்சு..அங்க போன பிறகு தான் தெரிந்தது. குடல் வாழ்வில் அவளுக்கு கேன்சர் அதுவும் முத்தின ஸ்டேஜ்ல.. கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேல சிரமப்பட்டு இருக்கிறாள்.


ஒரு நாள் கூட உன்கிட்டயோ என்கிட்டயோ சொன்னதே இல்ல .யாருக்குமே தெரியாம வலி மாத்திரையை போட்டுக்கிட்டு.. ஏன் குழந்தைங்க கிட்ட கூட பெருசா காட்டிக்கலை.. என்னைக்குமே அம்மா முடியாம படுத்திருக்கிறாங்கன்னு ஒருநாளும் சொன்னது கிடையாது.


ஏன் இப்படி செஞ்சா… ஏன் சொல்லாமல் மறைச்சா.. இந்த நிமிஷம் வரைக்கும் எங்களுக்கு புரியல .


மொத்தத்துல அவ யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினைத்திருக்கறா

சில நாளிலேயே வந்து மறையிற நட்சத்திரம் மாதிரி இல்லாம போயிட்டா..


நினைவுகளை வச்சுகிட்டு எத்தனை நாளைக்கு நாம அழுதுகிட்டு இருக்க முடியும் .அத தாண்டி வரணும்ல ..


அதை தாண்டி வரணும்னா நிச்சயமா உன் லைஃப்ல இன்னொரு பொண்ணு வந்தா மட்டும் தான் முடியும் .ஜான் யோசி ஜான் ப்ளீஸ். பெரியவளுக்கு இப்போ எட்டு வயசு ஆக போது .


இன்னமும் ரெண்டு மூணு வருசத்துல பெரிய பொண்ணாவா.. அப்போ அவளுக்கு துணைக்கு ஒரு பொண்ணு வேணும்.. கூட இருந்து அவளை பாத்துக்க..”


“ எப்படிம்மா இப்படி எல்லாம் யோசிக்க முடியுது . வர்றவ கொடுமை படுத்தினா “.


“அப்படி எல்லாம் எதுவும் நடக்காது ஜான். நாங்க இருக்கிறோம்ல ஒருவேளை அந்த குழந்தை தொந்தரவா இருந்ததுன்னா எங்க கூட கொண்டு வந்து வச்சுக்குவோம்”.


“ போதும் மா இந்த பேச்சே தேவை இல்லைன்னு சொல்லிட்டு இருக்கிறேன் .அது எப்படி ?என் குழந்தைகளை உங்ககிட்ட ஒப்படைப்பேன்னு முடிவு பண்றீங்க .


இந்த பேச்சே தேவையில்லை. என் குழந்தைகளை எனக்கு பார்த்துக்க முடியும் .நீங்க தயவு செய்து ஃபோனை வையுங்க. தயவு செய்து அங்க உக்காந்துகிட்டு பிரச்சனையை இழுத்து விட்டு கிட்டு இருக்காதீங்க..நான் கொஞ்ச நேரத்துல வேலை செய்ய உட்காரணும் .ரெண்டு பேரையும் அதுக்கு முன்னாடி தூங்க வைக்கணும் .இனி நிறைய வேலை இருக்குது” . சொல்லிவிட்டு போனை வைத்தான்.


ஏனோ இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் இவனது கரம் பற்றி பேசியது ஞாபகத்தில் வந்தது .


“ஜான் நான் இல்லாட்டி கூட நீ இப்படியே இருந்திடக்கூடாது. உனக்குன்னு ஒரு பொண்ணு வருவா ..என்னை மாதிரியே என்னோட குணத்தோட.. உன்னை மட்டுமே முழுக்க முழுக்க காதலிக்கற ஒரு பொண்ணு கிடைக்கும்.அப்போ அவளை கல்யாணம் பண்ணிக்கணும்.

இதுதான் என்னோட கடைசி ஆசை “என்றபடி கண்களை மூடி இருக்க..


“உன்னோடவே என்னோட சந்தோசம் ,என்னோட நிம்மதி எல்லாமே முடிஞ்சு போச்சு. எஸ்தர் ..


இனி என்னைக்குமே என்னோட லைஃப்ல உன்னோட இடத்துக்கு யாராலையுமே வர முடியாது “தீர்மானமாக மனதிற்குள் சொல்லிக் கொண்டான்‌. 

NNK-15

Moderator
4

“ஆத்விக் வேகமா கிளம்பு.. நேரமாயிடுச்சு. உன்னை ப்ளே ஸ்கூல்ல விட்டுட்டு நான் ஆபீஸ்க்கு போகணும் .”

“நா எங்கேயும் வரல போ “கோபமாக கையில் கிடைத்த ஏதோ ஒன்றை தூக்கி வீசினான்.

“ஆத்விக் காலையில வம்பு பண்ணக்கூடாது. சீக்கிரமா கிளம்பு.. உனக்கு பிடிச்ச பிரட் ஆம்லெட் செஞ்சி வச்சிருக்கறேன் .வந்து சாப்பிடு”.

“ எனக்கு எதுவும் வேணாம் போ. எனக்கு அப்பா தான் வேணும் .ஜான் அப்பா எனக்கு இப்பவே வேணும் “என்று கத்தி அழ ஆரம்பிக்க.. காலையிலேயே கோபம் சுறுசுறு என்று வந்தது இவளுக்கு..

‘ அடம் பண்ணினால் என்ன செய்வேன்னு தெரியாது. முதுகுல நாலு போட்டுடுவேன் புரிஞ்சுதா .காலையில என்ன அடம் வேண்டி கிடக்குது.

நேத்துதான் பிடிவாதமா அழுதேன்னா காலையில மறந்து இருக்க வேண்டாமா..

மறுபடியும் அதையே ஆரமிச்சா என்ன அர்த்தம் !!உனக்காக நான் பேட் ..பால் எல்லாமே வாங்கிட்டு வரேன். வேற ஏதாவது வேணும்னாலும் சொல்லு வாங்கிட்டு வரேன். இப்படி அடம் பிடித்து அழக்கூடாது .இப்ப ஸ்கூலுக்கு போய் ஆகணும் .. கொண்டு போய் விட்டுட்டு ஆபீஸ்க்கு போகணும் .எனக்கு நேரம் ஆகிட்டு இருக்கு நான் புறப்படணும்.”

“எனக்கு எதுவும் வேண்டாம் நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன் .எனக்கு யாரையும் பிடிக்கல.

அங்க எல்லாரும் என்னை பேசுவாங்க.. அப்பா இல்ல சொல்லுவாங்க .நான் போக மாட்டேன்.” ஒன்றையே திரும்பத் திரும்ப மழலையும் பேசி அழ ஆரம்பிக்க ..இவளுக்கோ காலையில் என்ன செய்வது, எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தலையில் கை வைத்தபடி அமர்ந்து விட்டாள்.

ஆத்விக்கை பொருத்தவரைக்கும் முதுகில் அடித்தால் கூட அவன் பயந்து பேசுவதை நிறுத்தும் குழந்தை கிடையாது .

அப்போது தான் அடம் பிடித்து அதிகமாக அழுவான்.

இதை நிறைய முறை கண் கூடாகவே பார்த்திருக்கிறாள்.

“ இத பாரு ஆத்விக் சொன்ன பேச்சு கேளு .போகும் போது உனக்கு நிறைய சாக்லேட் வாங்கி தரேன் .

இன்னைக்கு உன்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லாருக்குமே கொடு.”

“ எனக்கு எதுவும் வேணாம் போ” என்று காலால் தரையை உதைத்தபடி அடம் பிடிக்க.. கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் வேகமாக படார் படார் என முதுகில் இரண்டு அடியை வைத்தாள்.

அடியே வாங்கியவன் அத்தோடு நின்றிருக்கவில்லை .

இன்னும் உச்ச ஸ்தானியில் கத்தி தரையில் படுத்து காலை உதைத்து கையை ஆட்டி கதறி அழ ஆரம்பித்தான்.

அத்தோடு நிறுத்தி இருக்கவில்லை.. அவனையும் அறியாமல் சிறுநீர் கழித்தவன் அதிலேயே உருண்டு வட்டம் அடிக்க ஆரம்பித்திருந்தான்.

இப்போது இவளுக்கு உச்சபட்ச கோபம் வந்திருந்தது .

மறுபடியும் வந்து இரண்டு அடி அடிக்க.. அதே நேரத்தில் வாசலில் சத்தம் கேட்டது.

“ தெரியும் நீ இத தான் செய்வேன்னு.. அதனாலதான் காலையில அப்பாவை அவசர அவசரமா இழுத்துகிட்டு ஓடி வந்தேன்.

அவன் அடம் பிடிப்பான்னு தெரியும் .காலையில தூங்கி எந்திரிச்சா மறுபடியும் அதையேதான் கேட்டு அடம் பண்ணுவான்னு ..

என்ன மறுபடியும் அப்பாவை கேட்டு அழறானா..” என்று சொன்னபடி வேகமாக ஓடி வந்து பேரனை தன்னுடைய மார்போடு அணைத்துக்கொண்டார்.

“என்னடா இது.. என்ன ஆத்விக்.. இப்படித்தான் பண்ணுவியா ..

காலையில இப்படி கத்தி அழற..”

“அம்மா அடிச்சிட்டா பாட்டி “என்று உதட்டை பிதுக்கி விம்மியப்படியே இன்னமும் அழ..

“ என்னது உடம்பெல்லாம் தண்ணீர்.. இப்படித்தான் பண்ணிக்கிட்டு இருப்பியா .வா முதல்ல “என்று வேகமாக பேரனை அழைத்துக்கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தார்.

இவளோ அமைதியாக மேட்டை எடுத்து வந்து அந்த இடத்தை சுத்தம் செய்ய ஆரம்பிக்க.. தந்தையும் அமைதியாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து மகளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்னப்பா சொல்லுங்க.. நீங்க ஏன் பேசாம இருக்கீங்க.. உங்களுக்கு என்ன சொல்லணுமோ அதை நீங்களும் சொல்லிடுங்க. கேட்டுக்குறேன். கேட்கிறதுக்கு தானே நான் இருக்கிறேன் .நான் எதுக்காக இருக்கிறேனே எனக்கு தெரியல. பையன் சொன்ன பேச்சு கேட்கறது இல்ல .என்னை சுத்தி நடக்கிற எதுவுமே எனக்கு பிடிக்கல .ஏன் வாழ்கிறேன் எனக்கே தெரியலை “.

“நான் சொன்னா மட்டும் நீ கேட்டுற போறியா..”

“ என்ன அப்பா.. ப்ளீஸ் பா நீங்களும் ஆரம்பிக்காதீங்க ஏற்கனவே காலையில் பயங்கரமா தலை வலிக்குது. இதுல எந்திரிச்ச நேரத்துல இருந்து இவன் இப்படித்தான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டு இருக்கிறான் .

இவனை எப்படி சமாதானம் செய்யறதுன்னு தெரியல.”

“ சரி சரி எதுவும் சொல்லலை.. ஆபீஸ்க்கு நேரம் ஆகுதுல்ல ..சாப்பிட்டயா.. இல்லையா போய் சாப்பிடு” என்று சொல்லும் போதே பேரனின் தலையை துவட்டியபடி உடையை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்திருந்தார்.

“ சமத்துப்பையனாம்.. இதை போடுவியாம். ஆச்சியும் ,தாத்தாவும் இன்றைக்கு சர்ச்சுக்கு போக போறோம். நீ எங்க கூட வருவியாம்..”

“ அங்க வந்து என்ன பாட்டி செய்யணும்.”

“ உனக்கு தெரியாதா.. நாம வேண்டிக்கலாம்..வேண்டினா கேட்டது கிடைக்கும் தெரியுமா”.

“ அப்படி வேண்டிக்கிட்டா.. அப்பா வந்துருவாங்களா பாட்டி”.

“கர்த்தர் கேட்கிறது எல்லாத்தையுமே கொடுப்பாரு சரியா.”

“ நான் அம்மா கூட கா பாட்டி..அம்மாகிட்ட பேசமாட்டேன்.”

“ பேசாதடா அப்படியே போயிடு வர்ற ஆத்திரத்துக்கு..”

“ நந்தினி என்ன இது.. நீயும் இப்படி பிடிவாதமா பேசினா என்ன அர்த்தம்.”

“உங்களுக்கு தெரியாது மா காலையில் இருந்து அவன் எத்தனை ஆர்ப்பாட்டம் பண்றான் தெரியுமா ..”

“குழந்தைன்னா அப்படித்தான் இருப்பான் .அவனுக்கு என்ன தெரியும்.. கேட்டது கையில் கிடைக்கணும்னு தான் பார்ப்பான்.

நீயும் அதுக்கு ஏத்த மாதிரி அவன் என்ன கேட்டாலும் அப்படியே வாங்கித்தர்ற.. அப்ப அவனோட எண்ணமெல்லாம் எப்படி போகும் .நம்ம என்ன கேட்டாலும் வாங்கி தருவாங்க.. அடம் பிடித்து அழுதா என்ன கேட்டாலுமே கொண்டு வந்து தந்திடுவாங்கன்னு தானே யோசிப்பான் .நேத்துல இருந்து அவனுக்கு அப்பா ஞாபகம் அதிகமாயிடுச்சு. அதனால அதையே சொல்லி சொல்லி அழறான் .நம்ம வேற ஏதாவது வேலையில அவனை கவனம் செலுத்த வச்சுட்டா போதும்.”

“ எதுக்காக திடீர்னு சர்ச்சுக்கு போறேன்னு சொல்லிட்டு இருக்கீங்க வழக்கமா கோயிலுக்கு தானே போவீங்க”.

“ நீ வாரா வாரம் சர்ச்சுக்கு போவ.. உன் கூட ஒன்னு ரெண்டு தடவ வந்து இருக்கேன்ல. இன்னைக்கு அவனுக்கு ஒரு மாறுதலா இருக்கட்டுமே.. அப்படியே போய் கும்பிட்டுட்டு வரலாம்னு முடிவு பண்ணி இருக்கிறேன்.எந்த சாமியா இருந்தா என்ன “.

“அப்படின்னா இன்னைக்கு பிளே ஸ்கூல்ல அவனை விடலையா ..”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். அவன் என்ன பெரிய கிளாசுக்கா போயிருக்கறான். சின்ன குழந்தை தானே..

போகலைனா அங்கே யாரும் கேட்க எல்லாம் மாட்டாங்க. நான் அழைச்சிட்டு போறேன் சாயங்காலம் வழக்கம் போல வீட்டுல வந்து அவனை அழைச்சிக்கோ ..இன்னொரு தடவை பையனை அடிக்கிற வேலை வெச்சிக்காத ..உன்னால பார்க்க முடியலன்னா சொல்லு நான் கூப்பிட்டுட்டு போய் வச்சுக்கிறேன் .”

“அம்மா காலையில் நீங்களும் ஆரம்பிக்காதீங்க. எனக்கு நேரம் ஆச்சு .நான் கிளம்பிட்டேன் “என்று பேக்கில் உணவை எடுத்தவள்.. சாவியை கொண்டு வந்து தாயின் முன்னால் நீட்டினாள்.

“ இரண்டு சாவி இருக்குது. ஒன்றை நீங்க எடுத்துட்டு போங்க .சாயங்காலம் அங்க வரும் போது வாங்கிக்கறேன். இப்ப நான் ஆபீஸ்க்கு கிளம்பறேன் .ஆத்விக் கண்ணா அம்மாகிட்ட வாங்க” என்று கையை நீட்ட ..இவளை பார்க்க மாட்டேன் என்பது போல பாட்டியின் தோளில் கவிழ்ந்து படுத்துக்கொண்டான்.

சுற்றி வந்தவள் முகத்தை லேசாக பற்றி .‌”செல்ல குட்டி இல்ல ..அம்மா சாரி கேட்டுக்குறேன் இன்னொரு தடவை உன்னை அடிக்க மாட்டேன் “என்று சொன்னபடியே நெற்றியில் முத்தம் வைக்க.. லேசாக சிரித்தான்.

“ஆதிவிக்கிற்கு கோபம் எல்லாம் போயிடுச்சு.. என்ன பார்த்து சிரிச்சிட்டான்.. நான் பாத்துட்டேன் “என்று சொல்ல இப்போது நன்றாகவே உதடு விரித்து பற்கள் தெரிய சிரிக்கவும் ..ஆசையாக தாயின் கையில் இருந்து வாங்கியவள் தன்னோடு இருக்க அணைத்து பிடித்தபடி …ஆத்விக்கை இப்போ என்ன செய்ய போறேன் தெரியுமா..கன்னத்துல முத்தம் கொடுக்க போறேன்”என்று சொன்னபடியே கையால் அவனை கிச்சுகிச்சு மூட்ட.. இப்போது சிணுங்கிய படியே சிரிக்க ஆரம்பித்தான்.

இதழ் பிரித்து சிரித்தவனின் இரண்டு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டவள் ..”ஆத்விக் கண்ணா அம்மா ஆபீஸ்க்கு போறேன். ரொம்ப குறும்பு பண்ணக்கூடாது‌ சமத்தா இருக்கணும் .சாயங்காலம் வரும் போது உனக்கு பிடிச்ச சாக்லேட் வாங்கிட்டு வரேன் .வேற ஏதாவது வேணும்னாலும் சொல்லு வாங்கிட்டு வரேன் “என்று சொல்ல எதுவும் வேண்டாம் என்பது போல தலையை ஆட்டினான்.

“சமத்து பையன் …நான் வரேன் டா “என்று நகர்ந்தாள்.

சற்று நேரம் வரைக்கும் வீட்டில் இருந்தவர்கள் பேரனை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த சர்ச்சுக்கு புறப்பட்டனர் .

எப்போதுமே கோவில் கோவிலாக சுற்றுப்பவர்கள்.. இன்றைக்கு ஏனோ மனமே சுத்தமாக சரியில்லை.

நேற்றிலிருந்து மனம் எதையோ எதிர்பார்த்தது போல படபடப்பாக இருந்தது .

ஒரு மாறுதலுக்காக இங்கே வரலாம் என்று பேரனை அழைத்துக் கொண்டு சென்றனர்.

ஆத்விக்கிற்கு அந்த சர்ச்சில் இருந்த பாதருக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் தெரிந்திருந்தது.

சுறுசுறுப்பான ,துறுதுறுப்பான பையன் இவன். உள்ளே சென்ற உடனேயே நேராக வேகமாக பாதரின் அருகே போய் நின்று கொண்டான்.

“அட ஆத்விக் கண்ணா.. என்ன இன்னைக்கு இந்நேரத்துக்கு சர்ச்சுக்கு வந்து இருக்கீங்க .அம்மா வரலையா” என்று சொன்னபடியே.. இவர்களை பார்க்க.. இவர்களுமே அவருக்கு அருகே வந்திருந்தனர்.

“வாங்க “என்று பாதர் இவர்களை பார்த்து புன்னகைக்க…”வணக்கம் பாதர்” என்றவர் வரிசையாக இருந்த ஒரு இடத்தில் சென்று முட்டி போட்டு வணங்க ஆரம்பித்தனர்.

ஏனோ இன்றைக்கு நந்தினியின் தாயாருக்கு அங்கே இருந்த இயேசுவின் சிலையை பார்க்கவும் கண்களில் இருந்து அவரையும் அறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது. நீண்ட நேரம் வரையிலுமே கண்களை மூடியப்படியே அமர்ந்திருக்க.. சற்று தொலைவில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த பாதர் பிறகு மெதுவாக இவருக்கு அருகில் வந்தார்.

“ என்ன ஆச்சு.. எதுக்காக இந்த அழுகை ..எப்ப கர்த்தர் கிட்ட உங்களோட கஷ்டத்தை சொல்லி அழறீங்களோ அந்த நிமிஷமே எல்லாத்தையுமே அவர் தன்னுடைய தோள்ல வாங்கிக்குவார் .எல்லாம் சரியாகிவிடும் “என்று ஆறுதல் மொழி கூறவும் ..

இன்னமும் கண்ணீர் வழிய தொடங்கியது. வேகமாக கண்களை துடைத்தபடியே ..”என்ன சொல்றது பாதர் .ஜான் அப்பா வேணும்.. ஜான் அப்பா வேணும்னு கேட்டு அழ ஆரம்பிச்சுட்டான் பையன் .

இந்த சின்ன வயசுல கணவனை இழந்துட்டு தனியா வாழனும்னு அவளுக்கு என்ன தலையெழுத்து ..

இன்னொரு கல்யாணம் பண்ணிக்க.. ஏதாவது பையனை பார்க்கலாமான்னு யோசிக்கக்கூட விட மாட்டேங்கறா..

எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு விரக்தியில சுத்திக்கிட்டு இருக்கறா..

எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல .அவ மனசு மாறினாலாவது அவளுக்கு ஏத்த பையனா பார்க்கலாம் .

எத்தனை நாள் தனியா இருக்க முடியும் இல்ல..
எத்தனை நாள் நாங்க தான் அவளுக்கு துணையாக இருக்க முடியும் .ஒண்ணுமே புரியல பாதர்..”

“இங்க வந்து முறையிட்டீங்க இல்லையா ..இனி எல்லாமே சரியாகிவிடும். எதை பத்தியும் கவலைப்படாதீங்க. நல்லதே நடக்கும் .உங்களுக்கு அந்த கர்த்தர் எப்பவுமே துணை இருப்பார்” என்று ஆசீர்வாதம் செய்ய ..ஆத்விக்கோ அங்கிருந்த ஒவ்வொரு இருக்கையாக ஏறி குதித்து விளையாட ஆரம்பித்து இருந்தான்.

சற்று நேரம் வரைக்கும் அமர்ந்து அவனை வேடிக்கை பார்த்தவர்கள் பிறகு பேரனை அழைத்துக் கொண்டு புறப்பட்டனர்.

 

NNK-15

Moderator
5

“ஜான் உள்ளே வா..”

“இல்ல நான் வரல.. நீங்க உள்ள போயிட்டு வாங்க” தந்தையிடம் கூறிக் கொண்டிருக்க..

“ ஜான் சொன்ன பேச்சைக் கேளு. உள்ள வா. உன்னை கஷ்டப்பட்டு இன்னைக்கு சர்ச்க்கு அழைச்சிட்டு வந்து இருக்கிறேன் .”

“அப்பா பிடிவாதமா என்னை இழுத்துட்டு வந்து இருக்கீங்க.. என்ன செய்ய பசங்களும் போகலாம்னு கேட்டதால வேற வழி இல்லாம ரெண்டு பேரையும் அழைச்சிட்டு வந்தேன் .

நீங்களும் அம்மாவும் பசங்களை கூப்பிட்டுட்டு போயிட்டு வாங்க நான் இங்கேயே வெயிட் பண்றேன் .”

“ஜான் என்ன ஜான் இதெல்லாம் ஏன் இப்படி அடம் பிடிக்கிற..”

“ போதும்பா என்ன பெரிய சாமி.. யார் கும்பிட்டு என்ன ஆயிடுச்சு. எதுவும் ஆகிடல ..எதுக்காக பிரே பண்ணனும்னு இருக்குது.”

“ இப்படி எல்லாம் மனசு உடைஞ்சு பேச கூடாது டா.. “

“ப்பா கிளம்புங்க இதையே சொல்லிட்டு இருக்காதீங்க” சொல்லிக் கொண்டிருக்கும் போதே தொலைவில் பாதிரியார் வருவது தெரிந்தது. இவனை பார்க்கவும் “ஜான் தான நீ.. எப்படி இருக்கிற ..”என கேட்டபடியே அருகில் வர, “வணக்கம் பாதர் நல்லா இருக்கிறேன் .”

“ரொம்ப நாளாச்சுல்ல .. உன்னை பார்த்து.. யாரெல்லாம் வந்திருக்கீங்க ..பசங்க எல்லாம் எங்க? வளர்ந்துட்டாங்களா.. உன்னோட ஓய்ப் இறந்ததற்கு பிறகு இந்த பக்கமே வந்த மாதிரி தெரியல.. உண்மைதானே”.

“ ஆமாம் பாதர் ..அவ இருக்கும் போது பிடிவாதமா வாரத்துல ரெண்டு நாள் இழுத்துட்டு வருவா ..இப்போ அதையெல்லாம் யோசிக்கும் போது என்ன சாமியை கும்பிட்டு என்ன ஆயிடுச்சுன்னு தோணுது. இங்க சர்ச் பக்கம் வரவே பிடிக்கல .”

“அப்படி எல்லாம் சொல்லக்கூடாது.. எல்லாத்துக்குமே ஏதாவது காரணம் இருக்கும் .அந்த கர்த்தர் கிட்ட ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் இருக்கும்”.

“ வேண்டாம் பாதர் எதையும் சொல்லாதீங்க. நீங்க கிளம்புங்க “.

“என்னது கிளம்புங்க.. நீ ப்ரே பண்ண வரலையா ..இன்றைக்கு வழக்கத்தை விடவுமே அதிகமா இருக்குது “என்று சொன்னவர் ..
சச்சின் வாசலுக்கு நடக்க சென்றவர்.. சட்டென யோசித்தபடி ..”ஜான் யாரோ ரெண்டு நாளைக்கு முன்னாடி உன் பேர சொல்லி கேட்டாங்க”.

“என் பேரை ஆயிரம் பேர் வச்சிருப்பாங்க பாதர் எல்லாத்தையும் யோசிச்சிட்டு இருப்பீங்களா ..போங்க போய் ஜெபம் பண்ணுங்க. இன்னைக்கு உங்களுக்காக நிறைய பேர் அங்க காத்திருக்கிறார்கள். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு நம்பிக்கை ..எனக்கு நம்பிக்கை விட்டுடுச்சுங்கறதுக்காக எல்லாரோட நம்பிக்கையையும் நான் கிண்டல் பண்ண மாட்டேன் .”

“சரி ஜான் அப்புறம் பார்க்கலாம்”. சொன்னபடி நகர்ந்தார்.

வழக்கத்தை விடவும் பிரேயர் நேரத்தில் அதிக கூட்டம் இருந்தது .ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல்.. நிறைய பேர் மெழுகுவர்த்தியை ஏற்றி வணங்கி விட்டு நகர அமைதியாக நேரம் நகர்ந்தது.

ஒரு மணி நேரம் தாண்டி இருக்க உள்ளே சென்றவர்கள் வருவது போல தெரியவில்லை. காத்திருந்து பார்த்தவன் பிறகு உள்ளே நுழைந்தான். மகள்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடியப்படியே உள்ளே வர ..அதே நேரத்தில் அங்கே ஜானின் தாய் தந்தை இருவருமே ஃபாதரிடம் பேசிக் கொண்டிருந்தனர் .

“எஸ்தர் இறந்த பிறகு எல்லாமே கைவிட்டுப் போன மாதிரி ஆயிடுச்சு .எது மேலையும் பிடிப்பு இல்லை .ஒரு பற்றுதல் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்திட்டு இருக்கிறான்.. எதுக்காக கர்த்தர் எங்களை தொடர்ந்து இப்படி கஷ்டத்தை கொடுக்கிறார்ன்னு தெரியவில்லை..

என்றைக்கு எங்க மன பாரத்தை இறக்கி வைக்கணும்னு பிடிவாதமா அழைச்சிட்டு வந்தேன் .இப்ப கூட உள்ளே வரமாட்டேன்னு சொல்லிட்டான்..”

“வாசல் வரைக்கும் வர வச்ச அந்த கர்த்தருக்கு உள்ளே வரவழைக்கத் தெரியாதா.. எல்லாமே மாறிடும் .சொல்லுங்க . மகன் விரக்தியில சுத்தறான்னு அப்படியே விட்டுடுவீங்களா.. சின்ன வயசு பையன் தானே.. அவனுக்கு சம்மதம்னா வேற நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்ல. கடைசி வரைக்கும் யாரும் தனியா இருக்கணும்னு கர்த்தர் சொல்லிடலையே..”

“ நீங்க சொல்றீங்க பாதர் .அத அவன் கேட்கணும்ல.. அவன்கிட்ட அதை தான் சொல்லிக்கிட்டு இருக்கிறோம்.

சம்மதம்னு சொன்னா போதும் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிடலாம் .ஆனா எதுக்குமே பிடி கொடுக்கலை.. இந்த பேச்சை எடுத்துட்டு நீங்க என்கிட்ட வராதீங்கன்னு கத்துகிட்டு இருக்கிறான். அதனால வேற வழி இல்ல. இப்போதைக்கு அவன் சொன்ன பேச்சை தான் நாங்கள் கேட்க வேண்டியதா இருக்கு.. “

“எல்லாமே நல்லதுக்குன்னு நினைச்சுக்கோங்க.. எல்லாமே சரியாகிவிடும் .அடிக்கடி பசங்கள அழைச்சிட்டு சர்ச்சுக்கு வாங்க .கர்த்தர் எல்லாரையும் எப்பவுமே அழ வைக்கிறது கிடையாது. எல்லாத்துக்கும் மகிழ்ச்சியை மட்டும் தான் கொடுக்கக் கூடியவர் .அவர் மத்தவங்க கஷ்டங்களை தன்னோட தோள்ல வாங்கிக்கொண்டு உங்களுக்கு நிம்மதியையும் சந்தோஷத்தை மட்டும் தான் தருவாரு.”

“ நல்லது பாதர் நாங்க புறப்படறோம் .ரொம்ப நேரம் ஆயிடுச்சு “சொல்லிக் கொண்டிருக்கும் போது
சரியாக இவர்களுக்கு அருகே வந்திருந்தான்.

“ அம்மா முடிஞ்சதா கிளம்பலாமா. நேரம் ஆயிடுச்சு”..


“போயிட்டு வாங்க.. கர்த்தர் ஆசீர்வதிக்கட்டும்” என்று சொன்னவர் செல்லும் ஜானின் குடும்பத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.

ஜான் என்ற பெயர் அடிக்கடி மனதில் தோன்ற சட்டென கண்ணை இறுக மூடி நின்று இருந்தார் பாதர் .அப்போது இரண்டு நாட்களுக்கு முன்னால் ஆத்விக் அங்கே வந்தவன் “ஜான் அப்பா வேணும் .எப்போ வருவாங்க. எனக்கு அப்பா வேணும் “என்று இவரிடம் தனியாக பேசியது காதில் கேட்டது .அவருடைய முகத்தில் புன்னகை ஒன்று மலர்ந்தது.

அடுத்த முறை பார்க்கும் போது இதைப்பற்றி பேசினால் என்ன என்று தோன்ற யோசனையோடு நகர்ந்தார்.

இங்கே சர்ச்சுக்கு வெளியே வந்த மகள்கள் இருவருமே அருகிருந்த பார்க்கை நோக்கி ஓடி இருந்தனர் ..

“மேரி. எலிசா ரெண்டு பேரும் வாங்க.. வீட்டுக்கு போகணும். நேரம் ஆச்சு .”

“அப்பா அம்மா இருக்கும் போது எப்பவுமே.. இங்க வரும் போது எல்லாம் பார்க்குல விளையாட வைப்பாங்க பா .ப்ளீஸ் பா” என்று கண்களை சுருக்கி பெரியவள் கேட்க.. அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டான்.

இரண்டு வருடமாக எதுவுமே மாறி இருக்கவில்லை .அந்த புள்ளியிலேயே மொத்த குடும்பமும் நின்றது போல இருந்தது ஜானிற்கு ..

கண்கள் லேசாக கலங்க ஆரம்பிக்க.. அமைதியாக..” சரி சீக்கிரமா விளையாடிட்டு வரணும்” என்று அவர்கள் பின்னோடு செல்ல ..ஜானின் தாய், தந்தை கூட அமைதியாக அவனோடு பின் தொடர்ந்தனர் .

அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தவன் மகள்களை பார்த்த படி சாய்ந்து அமர்ந்திருக்க.. சற்று தொலைவில் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

சற்று நேரம் வரைக்கும் அமைதியாக இருந்தவன் தாய் தந்தையை பார்த்து..” அவங்க ரெண்டு பேரையும் பார்த்துக்கோங்க .சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன் “என்று எழுந்து நகர்ந்தான் .

திரும்ப வரும்போது கையில் ஐஸ் கிரீம் இரண்டு .. தாயாருக்கும் தந்தைக்கும் பானிபூரி என வாங்கிக் கொண்டு வர.. அமைதியாக வாங்கிக் கொண்டனர்.

“ சீக்கிரம் வாங்க ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்திருக்கிறேன் .”என்று குரல் தர ..மேரி முதலில் வேகமாக ஓடி வந்தாள் .
ஐஸ்கிரீம் என்று பின்னாடியே எலீசாவும் வர அமைதியாக அவர்களின் கையில் கொடுத்தவன் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருந்தான்.

எலீசா தன்னை அறியாமல் “அம்மா கூட இருந்தால் நல்லா இருந்திருக்கும்ல..” என்று சொல்ல சின்னவளோ முகம் சுருங்கி அழ தயாரானாள்.

“சும்மா இருக்க மாட்டியா எலீசா எப்பவுமே இப்படித்தான் பேசுவாயா..” பாட்டி வேகமாக திட்டியவர் .”ஒன்னும் இல்லடா நீ சாப்பிடு. நம்ம இப்போ வீட்டுக்கு போகலாம்..”

“ஏன் பாட்டி அம்மா மறுபடியும் வரவே மாட்டாங்களா ..எதுக்காக பாட்டி பொட்டியில அவங்கள அடைச்சீங்க “புரியாமல் கேட்க வேகமாக தன்னோடு அணைத்துக் கொண்டவன்.” இல்லடா அம்மா சாமிகிட்ட போய் இருக்காங்க.”

“எதுக்காக போனாங்க ..நாம எல்லாம் இங்க தான இருக்கிறோம். நம்ம கூட தானே இருக்கணும் எதுக்காக விட்டுட்டு போனாங்க .”

“இப்படி எல்லாம் கேட்க கூடாதும்மா .அவங்க சாமியா இருந்து நம்மள பாத்துக்கிட்டு இருப்பாங்க..” ஜானின் தாயார் பேத்தியை அருகே அமர வைத்து சொல்ல..

“ வேண்டாம் பாட்டி .எங்க கூடவே வந்து இருக்க சொல்லுங்க.. அவங்களை திரும்பி வர சொல்லுங்க .சாமி கிட்ட சொல்லுங்க. அம்மாவை திருப்பி தர சொல்லுங்க “என்று சொன்னபடியே பாட்டியின் மடியில் படுத்து கொண்டாள். சற்று நேரம் முதுகில் தட்டிக் கொண்டிருக்க.. அமைதியாக பார்த்துக் கொண்டவன். “இதுக்காக தான் இங்க வர மாட்டேன்னு சொன்னேன் .குழந்தைகளை தேவை இல்லாம பழைய ஞாபகங்களை தூண்டி விடற மாதிரி இருக்கும். அதுக்காக தான் சர்ச்சுக்கு வராம இருந்தேன் .நீங்க கேக்குறீங்களா பிடிவாதமா இழுத்துட்டு வந்தாச்சு .இப்ப ரெண்டு பேரும் அழ தயாராகிட்டாங்க .இப்ப உங்களுக்கு சந்தோஷமா” கோவமாக சொன்னவன்..” நம்ம கிளம்பலாம். போகும் போது உனக்கு ஹோட்டல்ல சாப்பிட் பிடிக்கும் இல்ல. ரோஸ்ட் சாப்பிட கடைக்கு அழைச்சிட்டு போறேன். சாப்பிட்டுட்டு நேரா வீட்டுக்கு போகலாம் சரியா.. வாங்கப்பா போகலாம் “என்று நடக்க ஆரம்பிக்க.. பேத்தியை தோளில் போட்டபடி எலீசாவை கையில் பிடித்துக் கொண்டு ஜானை பின் தொடர்ந்தார்.

இழப்பு எப்போதுமே வலி நிறைந்தது. எளிதாக எதையும் கடந்து விட முடியாது .அதிலும் உயிராக ஒரு குடும்பத்தை வழி நடத்தி சென்றவள் அந்த இடத்தில் இல்லை என்றால் அந்த குடும்பம் படும் அவதி சொல்லி மாழாது

அப்படி ஒரு நிலையில் தான் இருந்தான் ஜான்.
வேலையை மாற்றினான். குழந்தைகளே உலகம் என மாறிப் போனான் ஆனாலும் எஸ்தரின் ஞாபகம் திரும்ப திரும்ப இவனை தட்டி எழுப்பிக் கொண்டுதான் இருந்தது.

ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு சொல்லிலும் அவளை ஞாபகப்படுத்தும் ஏதோ ஒன்று அவனை பின் தொடர்ந்தது.

தாய் தந்தையரைக் கொண்டு அவர்களது வீட்டில் விட்டவன் அடுத்ததாக நேரடியாக குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான் .

இருவருமே விளையாடி இருந்ததினால் ஓய்ந்து இருந்தனர் .

“ஒடுங்க.. ஒரு குளியல் போட்டுட்டு இரண்டு பேரும் வாங்க. நைட்டுக்கு பால் மட்டும் போதும்ல .இப்பதான சாப்பிட்டோம்” என கேட்டப்படியே சமையல் அறைக்குள் நுழைய “ஓகே பா” என்று குரல் கொடுத்தபடி எலீசா தன்னுடைய தங்கையை அழைத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் சென்றாள்.

அடுப்பை வைத்தவனுக்கு பால் பொங்குவது போல பழைய நினைவும் மனதில் எழுந்தது.

“அச்சோ என்ன பண்றீங்க ஜான் கொஞ்சம் நகருங்க..பால் பொங்கிட போகுது”.

“ அது பொங்கட்டுமே.. நீ என்னை கவனி”என்று சொன்னவன் யோசிக்காமல் அவளை எளிதாக தூக்கி அங்கிருந்த மேடையில் அமர வைத்தான்.

“ என்ன பண்றீங்க.. நீங்க முதல்ல விடுங்க.. கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைங்க பிறந்தாச்சு . இன்னமும் அன்னைக்கு மாதிரியே இருந்தா எப்படியாம்”.

“ ரெண்டு குழந்தையானா எல்லாத்தையுமே மாத்திக்கணுமா என்ன ?இப்ப இருக்குற மாதிரி தான் கடைசி வரைக்கும் உன் கூட இருப்பேன். 70 வயசு ஆனா கூட அப்பவும் உன்னை இப்படித்தான் தூக்கி உட்கார வைப்பேன்.”

“ விளையாடாதீங்க ரெண்டு பேரும் முழிச்சுக்க போறாங்க. லீவு நாள் கொஞ்ச நேரம் தூங்கட்டுமேனு தூங்க வச்சேன். இப்ப எழுந்ததும் பால் வேணும் ஹார்லிக்ஸ் வேணும்னு குரல் கொடுப்பாங்க. அதுக்கு ஏத்த மாதிரி நீங்களும் விளையாண்டா என்ன அர்த்தம்..”

“விளையாண்டேனா என்ன ?இன்ஙதொடவே ஆரம்பிக்கலை” என்று அருகே வர…” அடி வாங்க போறிங்க ஜான்.. கிட்ட வந்தா நான் எதையாவது எடுத்து மண்டையிலே அடிச்சிடுவேன் .ஹய்யோ என்னோட பால் அங்க பொங்கிடிச்சு போங்க” என்று சொல்ல.. பட்டென நடப்புக்கு வந்திருந்தான். உண்மையிலேயே பால் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.

வேகமாக ஸ்டவ்வை அனைத்தவன்..’ எல்லாம் உன்னால தாண்டி ..என்ன உனக்கு அவ்வளவு அவசரம்.. அப்படி ஒட்டு மொத்தமா விட்டுட்டு யார் போக சொன்னார்கள் .இன்னைக்கு பாரு ஒவ்வொரு நிமிஷமும் கண்ணுக்கு முன்னாடி நீதான் வந்து இருக்கிற.. எதுவுமே மாறப்போவதில்லை .அவசரமா போயிட்ட.. ஆனா இருக்கிற நாங்க எல்லாம் உன்னை நெனச்சு தினம் வருந்தனும். அதுதான் உன்னோட ஆசையா.. ஏதாவது ஒரு நேரத்துல சின்னதா இப்படி இருக்குதுன்னு சொல்லி இருந்தா கூட காப்பாத்தறதுக்கு ஏதாவது வழி இருக்கான்னு பார்த்து இருக்கலாமே.. மொத்தமா இப்படி நாளே நாள்ல
முடிஞ்சு இருக்காதே..’ தனக்குள் அரற்றியவன் இரண்டு டம்ளரில் பாலை ஊற்றியபடி மகள்களை தேடி நகர்ந்தான்.

 

NNK-15

Moderator
6

“நாலு நாள் பேசாம இருந்தான். இன்னைக்கு மறுபடியும் ஆரம்பிச்சாச்சு .என்னால இவன் கூட இருக்க முடியலை மா”என்று கோபமாக வந்து தாயாரிடம் முறையிட்டுக் கொண்டிருந்தாள் நந்தினி.

“என்னாச்சு.. ஏன் இப்படி சத்தம் போட்டுக்கிட்டு வர்ற.. பையன் எங்க? “

“பிளே ஸ்கூல்ல விட்டுருக்கறேன். மனசு சரியில்ல.. ஆஃபீஸ்ல லீவ் சொல்லிட்டேன் .நேரா இங்க வந்துட்டேன் .”

“சரி என்ன தான் ஆச்சு..”

“ மறுபடியும் காலையில எந்திரிச்ச உடனேயே ஆரம்பிச்சுட்டான் .ஜான் அப்பா ஜான் அப்பான்னு.. என்னால முடியலம்மா .ஏன் இவன் இப்படி இருக்கிறான். யார் தான் இவனுக்கு இப்படி எல்லாம் சொல்லி தராங்கன்னு தெரியல”.

“ பையன் வளர்றான் .. அவனுக்கு தெரியாது ..அப்பா இல்லைன்னு..அவனால ஏத்துக்க முடியல. உனக்கும் எனக்கும் எல்லாம் தெரியும் ஜானுக்கு என்ன ஆச்சுன்னு..

அவனுக்கு எதுவும் தெரியாது. அவனை பொறுத்த வரைக்கும் அப்பா வெளிநாட்டில் இருக்கிறார்..ஏன் இன்னும் வரலைன்னு கேட்டு பிடிவாதம் பண்ணிக்கிட்டு இருக்கிறான்..

சரி ஏன் உன்னோட முகம் இப்படி சோர்வா இருக்குது.”.

“ பின்ன என்னமா செய்யறது.. கோபத்துல இன்றைக்கு நல்லா அடிச்சுட்டேன் .அழ அழ கொண்டு போய் ஸ்கூல்ல இறக்கி விட்டுட்டு வந்தேன். அதுவே எனக்கு மனசு சரியில்ல அதனாலதான் நேரா இங்க வந்துட்டேன் .”

“ஏன் நந்தினி இப்படி இருக்கிற.. அவன் குழந்தை நீ தான் சமாதானமா பேசணும் .”

“அப்படி இல்லம்மா.. எப்படி என்னால சமாதானம் சொல்ல முடியும். நான் என்ன சொன்னாலும் அவனுக்கு புரிய மாட்டேங்குது. என்னால தாங்க முடியல ம்மா. நான் எத்தனையை தான் பார்க்க முடியும் .”

“சரி இப்படியே பேசிக்கிட்டு இருந்தா ஆகிடுமா.. இன்றைக்கு ஆத்விக்கை அழைச்சிட்டு வந்தேன்னா இங்கேயே தங்கிக்கோ.. உன் வீட்டுக்கு போக வேண்டாம்.”

“ இல்லமா நான் இங்கே இருக்க மாட்டேன் .அங்க கிளம்பிடுவேன் “.

“அடி வாங்க போற.. ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிற .மனசு சரியில்லன்னு சொல்ற .பாரு நைட் எல்லாம் சரியா தூங்கல போல இருக்குது. கண்ணெல்லாம் சிவந்து போய் இருக்குது. மூஞ்சி வீங்கின மாதிரி இருக்குது .என்ன அங்க தனியா படுத்திருந்து அழுதுகிட்டே இருக்கிறயா? “

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லம்மா ..”

‘இன்னும் என்ன ..நான் சொல்றத கேளு. இன்னைக்கு இங்க நைட் தங்கிக்கோ. மதியம் நான் பையனை அழைச்சிட்டு வரேன் “.

“இல்லம்மா வேண்டாம் .எனக்கு மனசு சரியில்ல. மதியம் நானே போய் அவனை அழைச்சிட்டு வரேன். “

“என்னவோ செய். அடிக்க வேண்டியது. பின்னாடி அவனை போய் சமாதானம் செய்ய வேண்டியது .என்ன பொண்ணோ எனக்கே தெரியல. அவன் குழந்தை .

அதை முதல்ல உன் மனசுல ஏத்திக்கோ .அவன் பெரியவன் கிடையாது. நீ சொல்ற எல்லாத்தையும் அவன் புரிஞ்சுக்கற வயசு அவனுக்கு இல்லை .

அவனுக்கு என்ன வேணுமோ அதை தான் கேட்பான் .நாம தான் தன்மையா பார்த்துக்கணும்”.

“ என்னவோ சொல்லுங்க என்னால முடியல .சோபாவில் கவிழ்ந்து படுத்து அழ ஆரம்பிக்க ..”என்ன நந்தினி ஏன் அழுற .அழக்கூடாது .நீ ஸ்ட்ராங்கான பொண்ணு. எவ்வளவு தைரியமான பொண்ணு ..நீயே அழுதா எல்லாம் சரியாகிவிடுமா..”

“ எல்லாத்தையும் என்னால ஏத்துக்க முடிஞ்சதுமா இப்ப இவன என்னால ஹேண்டில் பண்ண முடியல. சின்ன பையன் தான் .ஆனா எத்தனை நேரம் நானும் என்னை நான் அடக்கி வைக்க முடியும் .அதுவே எனக்கு மனசு கஷ்டமா இருக்குது “என்று அழ அருகே வந்தவர் தன்னுடைய மடியில் அவளது தலையை சாய்க்க வைத்து மெல்ல தட்டி கொடுத்தார் .

“அழக்கூடாது எல்லாமே சரியாயிடும் .ப்ளீஸ் நந்தினி அழறதுக்காகவா நீ ஆசைப்பட்டது எல்லாம் செஞ்சு கொடுக்கணும்னு நினைச்சோம் இப்படியாகும்ணு யார் நினைச்சாங்க.”

“உண்மை தான்மா.. இப்படி ஆகும்னு யாருமே நினைக்கலையே.. ஒருவேளை நான் கல்யாணம் பண்ணிக்காம இருந்திருந்தா இன்றைக்கு எங்கேயோ ஒரு இடத்துல உயிரோடு இருந்திருப்பான்ல..

என்னை கல்யாணம் பண்ணினதால தானே அவங்க அப்பா, அம்மா அவனை சேர்த்துக்கல .அவ்வளவு வசதியா இருந்தவன் ஒரு நல்ல வாழ்க்கை எனக்கு தரணும்னு சொல்லி தானே பிடிவாதமா வெளிநாட்டுக்கு வேலைக்கு போனான்.”

“ அப்படி கிடையாது நந்தினி.. ஒருவேளை இங்க வேலை கிடைச்சிருந்து அவனுக்கு வாழறதுக்கு கொடுத்து வைக்கலைன்னா..”

“அப்படி இல்லம்மா நான் தான் அவனை சாகடிச்சுட்டேன் பிடிவாதமா அனுப்பி இருக்க கூடாது. சண்டை போட்டு அவனை பிடித்து வைத்திருக்கணும்.

இன்றைக்கு மொத்தமா நான் தான் உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்குறேன் .அவனுக்கு என்ன அவன் நிம்மதியா போய் சேர்ந்துட்டான்..”

“எதையும் யோசிக்க கூடாது சாப்பிட்டயா இல்லையா.. கொஞ்சமா சாப்டுட்டுட்டு தூங்கி எந்திரி .

ப்ளே ஸ்கூல் விடற நேரம் உன்னை எழுப்பி விடறேன். “

சரி மா என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள். சரியாக மதியம் ஆத்விக்கை அழைக்க செல்ல..

அவனும் கண்கள் சிவக்க ..மூக்கு நுனி சிவந்து வந்தான். என்ன என்று புரியாமல் அருகே சென்றவள் ஆத்விக்கை தொட்டு பார்க்க..

அவனின் ஆசிரியர் வேகமாக அருகே வந்து..” வந்துட்டீங்களா நல்லவேளை நானே உங்களை கூப்பிடனும்னு நெனச்சேன். இப்ப தான் அரை மணி நேரமா அவனுக்கு ஃபீவர் அடிக்கிற மாதிரி இருக்குது .

கொஞ்சம் உடம்பு சரியில்லை என்னவென்று பாருங்கள் .தண்ணியில ஆடினானா என்ன “?..என்று கேட்க.. இவள் பதறியபடி மகனை தூக்கியவள்
கையால் தொட்டு பார்க்க உடல் அனலாக கொதித்தது.

“என்னடா என்ன ஆச்சு காலையில் நல்லா தானே இருந்த..” என கேட்டப்படியே மகனை தோளில் போட்டவள் வேகமாக வீட்டிற்கு வந்தாள்.

“ அம்மா இவனுக்கு காய்ச்சல் அடிக்குது ம்மா .”என சொன்னபடியே உள்ளே வர..

“ என்ன ஆச்சு காலையில நல்லா தானே போனான்..நேத்து எல்லாம் கூட நல்லா தானே இருந்தான்” என கேட்டபடியே பேரனை கையில் வாங்கியவர் .”ஆமா அனலா கொதிக்குது. இவன் வேற சோர்ந்து விழுந்துகிட்டு இருக்கிறான் .முதல்ல வண்டிய திருப்பு.. நீயும் நானும் நேரா ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடலாம் ..” என்று அழைத்தார்.

அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்று குழந்தையை காட்டி மருந்து மாத்திரைகளை வாங்கிவிட்டு வீட்டிற்கு வர.. இன்னமுமே சோர்ந்து காணப்பட்டான்.

இவளை பார்த்து மென் சிரிப்பு சிரித்தானே தவிர அதை தாண்டி அவனால் அதிகம் பேசவோ விளையாடவோ முடியவில்லை.

சோர்ந்து தாயின் மடியிலேயே படுத்துக்கொண்டான் .மெல்ல மெல்ல தடவி கொடுக்க காய்ச்சல் அதே போல தான் இருந்ததே தவிர குறைவது போல தெரியவில்லை .

“என்னம்மா இவனுக்கு காய்ச்சல் குறையவே இல்லையே.. மாத்திரை வேற கொடுத்துட்டோம் .ஒரு மணி நேரம் ஆகப்போகுது.”

“ நீ ஏன் பதட்டப்படற ..கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு பார்க்கலாம் .சரியாகிவிடும் குழந்தை தானே “என சொன்னபடியே பாலைக்காட்சி கொண்டு வந்தவர் .”இத மெதுவா அவனுக்கு குடிக்க கொடு” என்று சொல்ல..

சில நிமிடங்களிலேயே மொத்தமாக வாந்தி எடுத்தான். இப்போது இன்னமும் பதறிவிட்டாள்.” அம்மா என்னம்மா ஆச்சு ஆத்விக்கிற்கு என்ன ஆச்சு.. இது மாதிரி ஒரு நாளும் ஆனது இல்லை.”

உண்மைதான் இதுவரைக்கும் காய்ச்சலோ இது போன்ற வாந்தியோ ஒரு நாளும் எடுத்தது கிடையாது.

காய்ச்சல் இன்னும் அதிகமானது போல தோன்றியது..

மகனை கவனிக்க இப்போது காய்ச்சல் அதிகமாகி பிட்ஸ் வந்திருந்தது .

ஒரு பக்கமாக வாயில் நுரை தள்ளி அப்படியே கண்கள் சொருக மயங்கி விழ.. பதறிவிட்டாள் இவள் ..அலறி அடித்தபடி குழந்தையை மறுபடியும் அணைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு ஓடினர்.

அருகில் இருந்த ஹாஸ்பிடலில் குழந்தைகள் பிரிவிற்கு இவனை அழைத்துச் செல்ல.. வேகமாக இவனுக்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்தனர்.


“டாக்டர் காலையில நல்லா தான் இருந்தான்.
மதியம் ஸ்கூல் விட்டு வரும் போது தான் ஃபீவர் வந்திருந்தது . எப்பவுமே இது மாதிரி ஆனது இல்லை “என்று அழ..

“ பதட்டபட வேண்டாம்.. காய்ச்சல் அதிகமானா இது போல பிட்ஸ் யாருக்கு வேணும்னாலும் வரும் அது இயற்கை தான். சின்ன குழந்தை தானே.. பயப்பட எதுவும் இல்ல. பயப்படாதீங்க “என சொன்னபடி நகர்ந்தார்.

சற்று காய்ச்சல் குறைய ஆரம்பிக்கவும் ..இவனை அங்கிருந்து வார்டிற்கு மாற்றி இருக்க.. குளுக்கோஸ் ஒரு புறம் இறங்கிக்கொண்டிருந்தது.

சற்று அரை மயக்க நிலையில் “ஜானப்பா வாங்க.. என்ன பாக்க வாங்க. எனக்கு ஜானப்பா வேணும்” என அவனையும் அறியாமல் உளர ஆரம்பித்து இருந்தான்.

நந்தினியின் தந்தை கூட விவரம் தெரியவும் வேலைக்கு சென்றவர் வேகமாக ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தார். வெளியே வரவேற்பு பகுதியில் மனைவியோடு அமர்ந்திருக்க.. குழந்தைக்கு அருகே இங்கு நந்தினி அமர்ந்திருந்தாள்.

நந்தினியின் தாயோ “இவ அடித்திருக்கிறா.. பையன் பயந்துட்டான் போல இருக்குது. அதனால தான் இப்போ இவ்ளோ பெரிய பிரச்சனை.. சொன்னா இவ கேக்கவா போறா..

நம்ம பேச்சையும் கேட்க மாட்டா.. அவளும் எந்த முடிவும் எடுக்க மாட்டா.. ஒருவேளை குழந்தையை அழைச்சிவிட்டு நம்மோடவே வந்து இருக்கலாம்ல ..

அப்படி இருந்தா கூட குழந்தைக்கு ஒரு மாறுதலா இருக்கும் .அப்பா ஞாபகம் வராம கூட இருக்கலாம். இப்போ தனியா அங்க வச்சுக்கிட்டு குழந்தை கேக்குதுன்னு ..

இப்ப புதுசா அடிக்க வேற பழகி இருக்கிறா.. “சொல்லி புலம்பிக் கொண்டிருக்க ..அப்போதுதான் ஃபாதரை அங்கே பார்த்தது.

எதற்காகவோ மருத்துவமனைக்கு வந்தவர் இவர்களை பார்க்கவும்.. “ஆத்விக்கோட பாட்டி ,தாத்தா தானே நீங்க.” என கேட்டுக்கொண்டு இவர்களுக்கு அருகில் வர..” வாங்க ஃபாதர் ..ஆமா நாங்க தான்” என்று வேகமாக இருவரும் எழுந்தனர்.

“என்ன இந்த பக்கம் தெரிஞ்சவங்க யாருக்காவது உடம்பு முடியலையா .”

“ஆத்விக்கிற்கு தான் உடம்பு சரியில்லை .காய்ச்சல் அதிகமாகி பிட்ஸ் மாதிரி வந்துருச்சு .இங்க அட்மிட் பண்ணி இருக்கிறோம்” என்று சொல்ல ..

“என்ன ஆச்சு.. நல்லா தானே இருந்தான் .உடம்புக்கு முடியாமல் அடிக்கடி படுப்பவன் இல்லையே ..”

“அது கரெக்ட் தான் ஃபாதர் . அவன் இப்ப கொஞ்ச நாளா ஜானப்பா வேணும்னு சொல்லி கேட்டுகிட்டு இருக்கறான் அதனால கோவத்துல இவ அடிச்சுட்டா போல இருக்கு”.

“ஜான் அப்பாவா “என்று சொன்னவருக்கு இரு தினங்களுக்கு முன்னால் பார்த்த ஜானின் முகம் தான் ஞாபகம் வந்தது.

“ரொம்ப முடியலையா என்ன?” என்று கேட்க..” ஆமா ஃபாதர் அரை மயக்கத்துல கூட அப்பா வேணும். ஜானப்பா வேணும்னு அழுதுகிட்டு இருக்கிறான் .

என்ன சொல்றதுன்னு ஒன்னும் புரியல .இதுவரைக்கும் அவங்க அப்பாவை ஒரு நாள் கூட பார்த்தது கிடையாது. போட்டோவுல கூட காட்டினது இல்ல.

அப்படி இருந்தும் இல்லாத ஆளை வேணும்னு கேட்டு அழறான். என்ன சொல்றதுன்னு தெரியல .

இதையெல்லாம் பாக்கணும்னு தலையில் எழுதி இருக்கும் போல இருக்கு “..

கண்கள் கலங்கியபடி நந்தினியின் தாயார் சொல்ல.. சற்று நேரம் யோசித்தவர்.” சரி நான் இப்ப குழந்தையை பார்க்கலாமா” என்று கேட்க ..

“பார்க்கலாம் வாங்க “என்று அழைத்துக் கொண்டு சென்றார்.

அங்கே ஆத்விக் படுத்து இருக்க இப்போதும்.. ஜான் அப்பா ஜானப்பா “என்று சொன்னபடியே கண்கள் மூடி இருக்க..

சற்று நகர்ந்து நந்தினி குழந்தையை பார்த்துக்கொண்டு இருந்தாள். அங்கே வந்த ஃபாதரை பார்க்கவும் ..”வாங்க ஃபாதர் எனக்காக ஜெபம் பண்ணுங்க ஃபாதர் “என்று சொல்ல ..

இதோ என்று அருகே சென்றவர் தலையில் கை வைத்து கர்த்தரை நோக்கி ஜெபிக்க ஆரம்பித்தார் .கடைசியாக நெற்றியில் சிலுவை இட்டவர் “ஆமென்” என்றபடி ..நந்தினி பார்த்தார்.

ஆத்விக் இப்போது இவரைப் பார்த்து புன்னகை சிந்தியவன் “பாதர்” என்று சிரிக்க..

“ஆத்விக் குட்டிக்கு என்ன பிரச்சனையாம் . என்கிட்ட சொல்லு. உனக்கு எல்லாத்தையுமே நான் சரி செஞ்சு தருவேன்.. “

“ஃபாதர் எனக்கு அப்பா வேணும் அப்பாவை கூப்பிட்டு வருவீங்களா “என்று கேட்க மெல்லத் தலையை தடவி கொடுத்தவர்..” ஜான் அப்பாவை நீ கட்டாயமா பார்க்கணுமா” என்று கேட்க..ஆம் என்று பதில் அவனிடமிருந்து வந்தது.

“ சரி நான் ஜானை அழைச்சிட்டு வரேன். நீ சீக்கிரமா ரெடியாகிடனும். இப்படியே ஹாஸ்பிடல்ல படுத்து இருப்பாங்க.. “என்று சொன்னபடி..” குழந்தையை பார்த்துக்கோம்மா “.என்று சொல்லிவிட்டு நகர... அதே நேரத்தில் குழந்தைக்கு மறுபடியும் பிட்ஸ் வந்திருந்தது .

நந்தினி பதறியபடி டாக்டர் என கத்திக்கொண்டு செல்ல.. நர்ஸ் முதலுதவி சிகிச்சையை வேகமாக தொடங்கி இருந்தார் .

சற்று நேரத்தில் டாக்டர் வருவுமே நந்தினியை வெளியே அனுப்ப.. வாசலுக்கு அருகே அமர்ந்து கதறி அழுதாள்.

ஃபாதருக்கோ என்ன சொல்வது என்று புரியாத நிலை.. மெல்ல தலையை தடவி கொடுத்தவர் “சரி ஆகிடும் மா..”என்று சொல்ல..
இப்போதுமே ஃபாதரின் கண்களுக்குள் நிழலா
டியது.. குழந்தை அவரிடம் பேசியது தான்..இவர் குனிந்த போது “எனக்கு ஜான் அப்பா வேணும் “என்று சொன்ன அந்த குரல்.. யோசனையோடு சட்டென நகர்ந்தார்.


 

NNK-15

Moderator
7


வீட்டுக்கு வந்த பிறகு கூட ஃபாதருக்கு ஆத்விக்கின் ஞாபகமாகவே இருந்தது .


அந்த குழந்தையின் முகம்.. கடைசியாக கேட்டது என.. திரும்பத் திரும்ப ஒரே விஷயம் மனதில் தோன்றிக் கொண்டு இருக்க.. யோசிக்காமல் சட்டென டைரியை எடுத்து நம்பரை தேட ஆரம்பித்தார் .


ஐந்து நிமிட தேடலுக்குப் பிறகு சரியாக ஜானின் நம்பரை எடுத்தவர்.. ஜானின் ஃபோனிற்கு அழைப்பு விடுத்தார் .


முதலில் ரிங்ஸ் சென்று கொண்டு இருந்ததே தவிர எடுப்பதற்கு ஆள் இல்லை.


நேரம் பார்க்க மாலை ஆகி இருந்தது .யோசனையோடு அமர்ந்திருந்தார் .


சற்று நேரம் காத்திருக்க ஜான் இவருக்கு அழைத்திருந்தான்.


“ சொல்லுங்க ஃபாதர் போன் பண்ணி இருக்கீங்க” என்று கேட்க ..


“வந்து ஜான் உன் கிட்ட ஒரு உதவி கேட்கணும் ..கேட்க டைம் இருக்குதா”.


“ நீங்க சொல்றது புரியல. என்ன விஷயம் நேரடியாக கேளுங்க” என்று ஜான் சொல்லவும்.. சற்று தயங்கியவர் .”எனக்கு தெரிஞ்ச ஒரு குழந்தை ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்கிறான்.”


“ சொல்லுங்க ஃபாதர் ரத்தம் ஏதாவது டொனேட் பண்ணனுமா . உடனே வரணுமா” என்று கேட்க.. சட்டென்று” அதெல்லாம் இல்ல இது வேற விஷயம் .நீ ஃப்ரீயா இருந்தா என்னை பார்க்க வர முடியுமா” என்று கேட்க..” நான் இப்போ வீட்ல இருக்கிறேன். குழந்தைகளை தனியா விட்டுட்டு வர முடியாது .ரொம்ப அவசரம்னா சொல்லுங்க ரெண்டு பேரையும் அழைச்சிட்டு அங்க வர்றேன் .”


“வாங்க ஜான் நான் வெயிட் பண்ணிட்டு இருக்கறேன் “என்று சொல்ல வேகமாக குழந்தைகளை அழைத்தவன் பிறகு யோசனையோடு நேராக எஸ்தரின் தாயாரிடம் சென்று இருவரையும் விட்டுவிட்டு மறுபடியும் ஃபாதரை பார்க்க சென்றான்.


எஸ்தரின் தாயார் வீட்டிற்கு சற்று தொலைவில் தான் ஃபாதரின் வீடு இருந்தது. நேராக சென்று ஹாலிங்பெல்லை அடிக்க வேகமாக வந்து கதவை திறந்தார். யோசனையோடு அவரை பார்த்த படியே ..”என்ன பாதர்..ரொம்ப நாளாச்சு நீங்க என்கிட்ட பேசியே.. போன் அடிக்கடி பண்றது இல்ல இன்னைக்கு திடீர்னு அழைத்திருக்கிறீங்க .என்ன உதவி வேணும் சொல்லுங்க. என்னால முடிஞ்சா கட்டாயமாக செய்வேன்.”


“ உன்னால தாராளமா முடியும். உன்னால முடியும் தோன்றியதால் தான் உன்னை இங்க அழைத்தேன் “என்றவர். தயங்கியப்படி நிற்க ..”என்ன.. என்ன பாதர் சொல்லுங்க..”


“என் கூட ஹாஸ்பிடல் வர முடியுமா “.


“இப்பவா “என்று நேரத்தை பார்க்க ..’ரொம்ப நேரம் ஆகாது. கொஞ்ச நேரத்துல திரும்பி வந்துடலாம் . என் மனசு சரியில்ல.. திரும்ப திரும்ப ஒரே விஷயத்தில் தான் சுத்திக்கிட்டு இருக்குது. உன்னால நிச்சயமா முடியும்னு தோனினதால தான் உன்னை அழைத்தேன் .”


“இப்பவும் நீங்க சொல்றது எதுவுமே எனக்கு புரியல பாதர்.” “நீ வா” என்று அழைத்தவர் இவனை அழைத்துக் கொண்டு மறுபடியும் ஹாஸ்பிடலுக்கு சென்றார் .


இன்னமும் கூட சற்று பதட்டமாகத்தான் நந்தினியின் தாய், தந்தையர் அங்கே அமர்ந்திருந்தனர் .


நந்தினி அறைக்கு வெளியே நின்று இருக்க ..இன்னமும் கூட ட்ரீட்மெண்ட் சென்று கொண்டிருந்தது .யாரையுமே பார்க்க அனுமதிக்கவில்லை. “என்ன ஆச்சு” என்று கேட்க ..”இரு வரேன் “என்று சொன்னவர்.. வேகமாக நந்தினியிடம் சென்று விசாரித்தார் .


“ இப்போ அவன் தூங்கிக்கொண்டு இருக்கிறான் கொஞ்ச நேரம் வெளியிலேயே வெயிட் பண்ணுங்கன்னு சொன்னாங்க .அதனாலதான் இங்க காத்துக்கிட்டு இருக்கிறேன் .”


அதே நேரம் நர்ஸ் வெளியே வர..”குழந்தையை பார்க்கலாமா” என வேகமாக கேட்டார்.


“பாருங்க “என்று சொல்லிவிட்டு நகர வேகமாக ஜானின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார் .


“என்ன டாக்டர் அந்த குழந்தைக்கு என்ன செய்வது.. என்ன பிரச்சனை ஏதாவது பணம் தேவை இருக்கிறதா? என்னால முடிஞ்சத கொடுக்கிறேன் “என்று சொல்ல..” அதெல்லாம் தேவையில்லை வா” என்று அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார் .


அங்கே வாடிய மலர் போல சோகையாக ஆத்விக் பெட்டில் படுத்து இருக்க.. இன்னமும் கையில் குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டிருந்தனர்.


உதடு காய்ந்து, முகம் சிவந்து சோர்ந்த தோற்றம் இவனை என்னவோ செய்தது .அருகே சென்று பார்க்க.. அவனுக்கு அருகே வந்தவர் “ஆத்விக் கண்ணா.. நீ கேட்ட இல்லையா ஜான் அப்பா இதோ வந்திருக்கிறார் பாரு” என்று சொல்ல ..இவனுக்கு மட்டும் அல்ல அங்கே பார்த்துக் கொண்டிருந்த நந்தினிக்குமே அதிர்ச்சி தான்.


“என்ன ஃபாதர் “என்று வேகமாக இவன் கேட்க.. நந்தினியோ என்ன என்று புரியாமல் திருதிரு என விழித்தாள்.


“ஜான் கொஞ்ச நேரம் எதுவும் பேசாத” என்றவர்.. மறுபடியும் ஆத்விக்கிற்கு அருகே சென்று “இத பாரு ஜானப்பா வந்தாச்சு. ஊரிலிருந்து வந்துட்டாங்க. உனக்காக அவசரமா புறப்பட்டு வந்தாங்க” என்று சொல்ல.. ஃபாதர் சொன்ன உடனேயே அவனுடைய முகத்தில் புன்னகை விரிந்தது..


“ஜானப்பா வந்துட்டீங்களா” என்று கேட்டவன் அருகே வா என்பது போல கையசைக்க.. குழந்தைக்கு அருகே முகத்தை கொண்டு சென்றான்.


ஒரு கையால் மெல்ல முகத்தை தொட்டு பார்த்தவன் “அப்பா வந்துட்டீங்களா ..வந்துட்டீங்களா நான் கூப்பிட்டதால வந்துட்டீங்களா” சொன்னபடியே தாயாரிடம் திரும்பி பார்க்க ..இப்போதும் கூட புரியாமல் திகைத்து விழித்துக் கொண்டிருந்தாள் நந்தினி.


“நீ அப்பா கூட பேசிக்கிட்டு இரு. அம்மாவை நான் வெளிய அழைச்சிட்டு போறேன் “என்று ஃபாதர் நந்தினியை அழைத்துக் கொண்டு வெளியேற ..”என்ன ஃபாதர் ..என்ன இது விளையாட்டு என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க” என்று கோபமாக கேட்டாள்.


“எனக்கு வேற வழி தெரியல அது குழந்தை.. அப்பாவுக்காக தான் ஏங்கி இருக்குது. இவ்வளவு தூரம் முடியாமல் வந்து படுத்து இருக்கிறது தெரிஞ்சு இருந்தும்..


ஒரு உயிர் வதை படறது எப்படி பார்த்துகிட்டு இருக்க முடியும். அதனாலதான் ஜான் கிட்ட உதவி கேட்டேன் .”


“யார் இவர் ..எங்கே இருக்கிறார் இவரை உங்களுக்கு எப்படி தெரியும்‌”


“ நீ பயப்படுற அளவுக்கு மோசமானவர் இல்லமா .ரொம்ப நல்ல பையன் .அவனுக்கு ஒரு குழந்தையோட ஏக்கம் ,வலி நல்லா தெரியும். அதனாலதான் அவன்கிட்ட இந்த உதவிய கேட்டேன் .”


“என்ன சொல்றீங்க “.


“இங்க வர்ற வரைக்குமே நான் என்ன கேட்க போறேங்கறது அவனுக்கு தெரியாது. பையன் நார்மல் ஆகுற வரைக்கும் தானே..


அப்பா என்கிற பேர்ல ரெண்டு நாளைக்கு பேசட்டுமே.. ஒன்னும் பிரச்சனை இல்ல. அப்புறமா ஜான் ஊருக்கு போயிட்டான்னு சொல்லி முடிச்சிடலாம் .பிறகு பிரச்சனை இல்ல தானே”.


“ இல்ல பாதர் இது தேவையில்லாத பிரச்சினைகளை கொண்டு வந்து விடும் .நீங்க பண்ணினது ரொம்ப தப்பு .உங்களுக்கு சொல்லித் தரலையா பொய் சொல்ல கூடாதுன்னு ..


அவன் குழந்தை அவனுக்கு என்ன தெரியும் எதுக்காக நீங்க இப்படி செய்றீங்க .இரண்டு நாள் பொறுமையை எடுத்து சொன்னால் அவன் புரிஞ்சுக்கிற குழந்தைதான்..


அறிவாளியும் கூட ..ஏன் இப்படி எல்லாம் செய்றீங்க” என்று பதட்டமாக பேசினாள்.


அதே நேரத்தில் ஆத்விக் ஜானின் கன்னம் தொட்டு பார்த்தவன் ..கைகளைத் தொட்டு சட்டையை பிடித்து பார்த்து என ஆர்வமாக கவனிக்க ஆரம்பிக்க.. இவனுக்கும் உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைவது போல இருந்தது.


“ஸ்கூல்ல எல்லாம் சொன்னாங்க .உனக்கு அப்பா இல்ல .வீட்ல பொய் சொல்றாங்கன்னு சொன்னாங்க. இந்த அம்மா கிட்ட கேட்டா அப்பா ஊருக்கு போய் இருக்காங்க வருவாங்கன்னு தான் சொன்னாங்க .”


“அதுக்காக.. இப்படித்தான் உடம்பு சரியில்லாமல் வந்து படுத்துக்குவியா .எதுக்காக இப்படி எல்லாம் செய்ற..”


“ நான் என்னப்பா செய்யறது இப்படி உடம்பு சரியில்லாமல் போனால் தான் நீங்க என்னை பார்க்க வருவீங்களா “.


“அப்படி இல்லடா அம்மா பேச்சை கேட்டுட்டு சமத்தா இருக்கணும்ல .இதெல்லாம் தப்பு தானே அம்மாவ கஷ்டப்படுத்தி எல்லாத்தையும் கஷ்டப்படுத்தற புரியுதா ..”


“சாரிப்பா” கண்கள் சுருங்க சொன்னவனின் கண்களை கண்ணீர் வழியே.. வேகமாக அருகே அமர்ந்து துடைத்து விட்டான்” அழக்கூடாது.. “


“இல்ல பா அழலை.. அது தான் ப்பா வருது” என்று சொல்ல லேசான புன்னகையோடு..” சரி கண்ணை மூடி தூங்கு .நான் இங்கதான் இருப்பேன். உன்னை விட்டுட்டு போக மாட்டேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறினான்”.


இன்னமும் கூட பாதரிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் நந்தினி .


“ நீங்க பண்ணினது ரொம்ப தப்பு ஃபாதர் .நான் உங்ககிட்ட இத எதிர்பார்க்கல “என்று சொல்லும் போது இவன் வெளியே வர ..


வேகமாக இவனுக்கு அருகே வந்து..” சாரி சார் ஃபாதர் இப்படி செய்வார்னு நான் நினைக்கவே இல்ல ஐ அம் சோ சாரி.. தேவையில்லாம உங்களை தொந்தரவு பண்ணிட்டாங்க.


நீங்க யாருன்னு கூட தெரியாது எனிவே ரொம்ப தேங்க்ஸ் .இனி இது போல தொந்தரவு உங்களுக்கு வராது. நீங்க போயிட்டு வாங்க “என்று சொல்ல ..


“பரவாயில்ல அவர்.. அவர் மனசுக்கு சரின்னு பட்டதை செஞ்சிட்டாரு ..ஃபாதர் போகலாமா .. அவன் இனி தூங்கிடுவான் என்று நினைக்கிறேன் . நாம கிளம்பலாம் .உங்களை விட்டுட்டு பசங்கள வீட்டுக்கு அழைச்சிட்டு போகணும். நாளைக்கு காலைல ஸ்கூல் இருக்கு” என்று சொல்லி நகர்ந்தான்.


அன்றைக்கு இவன் வந்து சமாதானம் செய்த பிறகு நிம்மதியாக உறங்கி இருந்தான்.


காய்ச்சலின் அளவு கூட வேகமாக குறைந்து நார்மல் நிலைக்கு வந்திருந்தான் ஆனால் அடுத்த நாள் காலையில் “ஏன் அப்பா இன்னும் வரல. காலைல வருவேன்னு சொல்லிட்டு போனாங்க “என ஆரம்பித்திருந்தான்.


இவளுக்கு என்ன சொல்வது என்று புரியாது நிலை.. இப்போது மொத்த கோபமும் ஃபாதரின் மேல் திரும்பி இருந்தது.’ எதுக்கு இவருக்கு வேண்டாத வேலை..


தேவையில்லாம பிரச்சனையை இழுத்து விட்டுட்டு.. இப்ப பாரு மறுபடியும் ஆரம்பிச்சுட்டான்’ என நினைத்தவள்..


“ அப்பாவுக்கு நிறைய வேலை இருக்குது. திடீர்னு ஊர்ல இருந்து வந்ததார்ல நிறைய பேர் கிட்ட பேசணும் .அதனால போய் இருக்காங்க .வந்துருவாங்க. “என சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.


நந்தினி தாயாரிடம் வர..” நேத்து வந்து பார்த்த அந்த தம்பி யாரு.. வந்து பேசின பிறகு காய்ச்சல் குறைஞ்சிடுச்சு. இன்னொரு தடவை அந்த தம்பியை குழந்தையை பார்த்துட்டு போக சொல்லலாமா “.


“அம்மா உங்களுக்கு என்ன பைத்தியமா.. யாரு என்னன்னு கூட தெரியாது. எப்படி சம்பந்தமே இல்லாம ஒருத்தரை வந்து பார்க்க சொல்லுவீங்க. ரொம்ப தப்புமா.


நேற்று ஃபாதர் ஏதோ தெரியாம பண்ணிட்டார்னா நீங்களும் அதே தப்பை செய்யாதீங்க. அவனுக்கு நிதர்சனத்தை புரிய வைக்கணும் .


அதை செஞ்சா போதும் . அவன் நார்மல் ஆகிடுவான். தேவையில்லாம புதுசு புதுசா பிரச்சினையை தொடங்கி வைக்காதீங்க “என்று நகர்ந்தாள்.


அடுத்த இரண்டு நாட்கள் அங்கே தங்கி உடல் நிலை சரியான பிறகு வீட்டிற்கு வந்திருந்தனர் .


வீட்டிற்கு வந்த நேரத்தில் இருந்து அவன் சற்று யோசனையோடு தான் சுற்றியது.


சரியாக மாத்திரையை உண்டு கொண்டான் .இவனிடம் பேசிய போது ஜான் சொன்னது நன்றாக ஞாபகம் இருந்தது.


“ அம்மா சொன்ன மாதிரி சமத்தா எல்லாமே செய்யணும். அப்பாவுக்கு வெளியூர்ல வேலை ..இன்னைக்கு உனக்கு ரொம்ப முடியல அதனால அடிச்சு பிடிச்சு உன்னை பார்க்க வந்தேன் .


இங்கேயே இருக்க முடியாது. நான் உடனே ஊருக்கு கிளம்பி ஆகணும். இந்த விஷயத்தை அம்மாகிட்ட கூட சொல்லல. உன் கிட்ட தான் சொல்றேன் .நீ சீக்ரெட்டா வச்சுக்கணும் .


நீ எப்ப எல்லாம் அப்பாவை பாக்கணும்னு தோணுதோ அப்ப உன்னை பார்க்க நான் வந்துடுவேன்” என்று சொல்லிவிட்டு செல்ல ..அதே யோசனையோடு இருந்தவன்..


“அப்பாவை பாக்கணும்னு ஆசைப்பட்டா..அப்பா வந்துடுவேன்னு சொன்னாங்க. எப்படி வருவாங்க .அவங்க தான் ஊருக்கு போயிருப்பாங்களே” தனக்குள் பேசிக் கொண்டான்.


அந்த வாரம் முழுக்க ப்ளே ஸ்கூலுக்கு விடுமுறை போட்டு இருந்தாள் நந்தினி.


ஆனால் இரண்டு நாட்கள் தாண்டவும் தாயாரிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.” அம்மா ப்ளீஸ் ஸ்கூலுக்கு போகணும் என்னை அழைச்சிட்டு போய் விடுங்க “என்று கேட்க இவளுக்கோ ஆச்சரியம்..


“ என்னடா சொல்ற.. உடம்பு சரியில்ல .இந்த வாரம் எல்லாம் லீவுல வச்சுக்கலாம் என்று நினைத்தேன் .ஸ்கூலுக்கு போகணும்னு சொல்ற..”


“ ஆமாம் ஜானப்பா சொன்னாங்களே சரியா ஸ்கூலுக்கு போகணும். அடம் பிடிக்க கூடாதுன்னு.. அதனாலதான் “என்று சொல்ல.. ஜான் எந்த அளவிற்கு அவனுடைய அடிமனதில் இருக்கிறான் என்பது புரிய ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றாள்.

 

NNK-15

Moderator
8

ஃபாதர் அந்த வாரத்தில் ஜானின் தாய் தந்தையை பார்த்த பிறகு சட்டென ஒன்று தோன்ற யோசிக்காமல் ஜானின் தாயாரிடம் பேச்சு கொடுத்தார் .

“ஜானுக்கு இன்னொரு கல்யாணத்தை பத்தி ஏதாவது யோசிச்சு இருக்கீங்களா .”

“என்ன ஃபாதர் திடீர்னு இப்படி கேக்குறீங்க. நாங்க ஏற்கனவே பல முறை அவன் கிட்ட சொல்லியாச்சு .

அவனுக்கு சம்மதம்னா நிச்சயமா நாங்க பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைப்போம் .குழந்தைகள் வளர்ந்துக்கிட்டு இருக்காங்க.

அவங்களோட எதிர்காலம் ..அதுக்காகயாவது யோசிக்கணும் .தாயோட இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. எனக்கு நல்லா தெரியும் . எஸ்தர் இப்படி சட்டென்று விட்டுட்டு போவான்னு யாரும் எதிர்பார்க்கல…”

“ஜானிற்கு எந்த மாதிரி பொண்ணு பார்ப்பீங்க.. கல்யாணம் ஆகி ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கிற பொண்ணா இருந்தா உங்களுக்கு சம்மதமா..” சட்டென கேட்க..

ஜானின் தாயாரோ” என்ன இப்படி கேக்குறீங்க . பொண்ண எப்படி நாங்க வேணான்னு சொல்லுவோம். ஜானிற்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க ‌அப்படி இருக்கும்போது வரப்போற பொண்ணு கல்யாணம் ஆகாத பொண்ணாவோ இல்ல குழந்தை இல்லாத பொண்ணா தான் இருக்கணும்னு கேக்குற அளவுக்கு நாங்க அந்த கால மனுஷங்களோட மனநிலையோட இல்ல. எனக்கு நிதர்சனம் புரியும் .

எனக்கு எப்படி பையனுக்கு ஒரு துணை வேணும்னு தோணுதோ அதுபோல தானே நீங்க சொல்ற பொண்ணோட அம்மா அப்பாவும் யோசிப்பாங்க .அதெல்லாம் பிரச்சனை இல்லை .”

“அப்படி இல்லை ஏற்கனவே ரெண்டு குழந்தை இருக்காங்க இன்னமும் ஒரு குழந்தையோட ஒரு பெண் வந்தா எக்ஸ்ட்ரா செலவு அதை எல்லாம் மேனேஜ் பண்ண முடியுமா. ஏன்னா கல்யாணம்னா நிறைய யோசிக்கணும்ல. “

“என்ன ஃபாதர் இப்படி கேக்குறீங்க .எங்க கிட்ட நிறையவே சொத்து இருக்கு பணத்துக்கு பிரச்சனை இருக்காது. அவனும் நல்ல வேலையில் இருக்கிறான்.”

“அப்படின்னா ஒன்னும் செய்யுங்க.. இன்னும் கொஞ்ச நேரம் இங்க காத்திருங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் சொன்ன பொண்ணோட அம்மா ,அப்பா வருவாங்க பேசி பாருங்க .உங்களுக்கு ஓகேன்னா அதுக்கு பிறகு பொண்ணு கிட்ட பேசலாம்” என்று சொன்னார்.

சற்று நேரத்தில் நந்தினியின் தாய் ,தந்தை இருவரும் வர.. அவர்களை அழைத்து அறிமுகப்படுத்தி வைத்தார் .

“இவங்க இந்த சர்ச் கம்யூனிட்டி சேர்ந்தவர்கள் தான். இந்த சர்ச்சுக்கு வழக்கமா வர்றவங்க.. அன்றைக்கு குழந்தையை பார்க்க என் கூட ஒருத்தர் வந்தார் இல்லையா .

அவரோட அம்மா ,அப்பா .இவங்க கொஞ்சம் உங்ககிட்ட பேசணும்னு சொன்னாங்க .ரெண்டு பேரும் பேசி பாருங்க” என்று சொல்லிவிட்டு நகர இருவருமே பேச ஆரம்பித்தனர்.

பேசிய கொஞ்ச நேரத்திலேயே ஒவ்வொருவரின் பிரச்சனையும் தெளிவாக தெரிய ..சற்று நேரம் கழித்து நேராக ,ஃபாதரிடம் வந்தனர் .

“இது நல்லா யோசனை தான் இல்லன்னு சொல்ல மாட்டேன் ஆனா இதுக்கு ஜானும் சரி நந்தினியும் சரி சம்மதிக்கணும். நிச்சயமா அவங்க சம்மதிக்க மாட்டாங்க.

ரெண்டு பேருமே அவங்களுக்குன்னு ஒரு கற்பனை உலகத்தை உருவாக்கிக்கிட்டு அதுல வாழ்ந்துகிட்டு இருக்காங்க…

நிச்சயமாக அதை தாண்டி வெளியே வர வாய்ப்பே இல்லை .”ஜானின் தாயார் சொல்ல..”

“ உண்மைதான் ஃபாதர் நந்தினியை பொறுத்த வரைக்கும் ஜான் இன்னமும் சாகலைன்னு தான் நினைக்கறா.. இன்னமும் அவனுடைய நினைவுகளோட தான் வாழ்ந்து கொண்டிருக்கிறா.”

“. அதேத்தான் இங்க ஜானோட நிலையும் கூட.. அவனோட மனைவியை மறக்கல .அப்படி இருக்கும் போது இந்த கல்யாணம் எப்படி சாத்தியம் “.

“நிச்சயமா சாத்தியமாகும்னு தோணுச்சு. என் மனசுக்குள்ள தோணுச்சுன்னா நிச்சயமா அது நடக்கும்.” ஃபாதர் வேகமாக பதில் சொன்னவர் .

”இது சம்பந்தமா நான் நந்தினிகிட்டையும் ஜான்கிட்டையும் பேசறேன்.ஒரு குழந்தை அப்பா வேணும்னு சொல்லி கதறி அழுதுகிட்டு இருக்கு . இன்னமும் மறக்கலை.. உண்மைதானே” என்று நந்தினியின் தாயாரிடம் கேட்க..

“ ஃபாதர் அவனுக்கு அப்பானா உயிர்.. இன்னும் கேட்டு சில நேரம் அழறான் ஆனால் இப்போ கொஞ்சம் புரிஞ்சிருக்கறான்.

அப்பா மறுபடியும் வெளிநாட்டுக்கு வேலைக்கு போயிட்டாரு என்ற மனநிலைக்கு வந்திருக்கிறான் அதனால பெருசா எதுவும் சொல்லல .

என்னோட அப்பா என்னை பார்க்க வந்தாரு.. என்கிட்ட பேசினாரு அப்படின்னு ஸ்கூல்ல இருக்குற எல்லாருக்கும் சொல்லி இருக்கிறான் .

அதுக்காகவே பிடிவாதமா முடியாம இருந்தவன் அன்றைக்கு போய் எல்லார்கிட்டயும் சொல்லி இருக்கிறான் .என்னோட அப்பா உயிரோட இருக்கிறாங்க.

என்னை பார்க்க வந்தாங்க இனி யாருமே அப்பா இல்லைன்னு சொல்லக்கூடாதுன்னு சண்டை போட்டு இருக்கிறான்.”

“ம்.. இந்த முடிவு எடுக்க முக்கிய காரணமே அந்த குழந்தை தான் ஆத்விக்கிற்கு அப்பா வேணும். அது ஜானா இருந்தா ரொம்ப நல்லா இருக்கும் .

ஏன் இந்த முடிவெடுத்தேன்னு நீங்க யோசிக்கலாம். ஏன்னா ஜானை பத்தி எனக்கு நல்லா தெரியும். சின்ன வயதில் இருந்து சர்ச்சுக்கு வர்ற பையன்.

அவனை நிறைய முறை பார்த்திருக்கிறேன் .அவனால மத்தவங்க மனசு சங்கடப்படற மாதிரி என்னைக்குமே எதுவும் செஞ்சுட முடியாது .

நந்தினி பத்தி எனக்கு நல்லா தெரியும் .எப்ப ஜானை கல்யாணம் பண்ணி மொத மொதல்ல சர்ச்சுக்கு வர ஆரம்பித்தாலோ அன்னையிலிருந்து இன்ன வரைக்கும் பார்த்துகிட்டு இருக்குறேன் .

நிஜமா ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணினா ரொம்ப நல்லா இருக்கும் .இது என்னோட முடிவு தான் .ஆனால் தீர்மானிக்க வேண்டியது என்னவோ அவங்க ரெண்டு பேரும் தான்.

இவ்வளவு தூரம் யோசிச்ச நானே இதுக்கான முடிவையும் சொல்லிடறேன் .இது சம்பந்தமா நானே பேசுறேன். நல்லது நடக்கும் என்று நம்பலாம்.

வர்ற ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்கு வரும் போது நீங்க ஜானையும் குழந்தைகளையும் அழைச்சிட்டு வாங்க .

அதே மாதிரி நீங்களும் நந்தினியை அழைச்சிட்டு வாங்க “என்று சொல்ல நந்தினியின் தாயார் சரி என தலையாட்டினார் .ஆனால் ஜானின் தாயாரோ “கஷ்டம் ஃபாதர் ..அவன் தான் சர்ச்சுக்கு வர மாட்டேன்னு வம்பு பண்ணிக்கிட்டு இருக்கிறானே.. அன்னைக்கு பிடிவாதமா இழுத்துட்டு வந்தோம் .”

“ஏதாவது ஒரு நல்லது நடக்கணும்னா நம்ம சில விஷயங்கள் செஞ்சுதான் ஆகணும் .ஏதாவது சொல்லி.. நான் சொன்ன நேரத்துக்கு கரெக்டா அழைச்சிட்டு வாங்க.

அதுக்கு பிறகு நடக்கிறது கர்த்தர் கிட்ட விட்டுடலாம்..அவர் அதை தான் முடிவு பண்ணி இருந்தா நிச்சயமா அது நடந்தே தீரும். அதை மாற்றும் சக்தி நமக்கு கிடையாது போங்க” என்று அனுப்பி வைத்தார் .

அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிடிவாதமாக ஜானையும் குழந்தையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார் ..ஜானின் பெற்றோர்கள் இருவருமே..

அதே போல அதே நேரத்தில் சரியாக நந்தினியும் மகனோடு வர.. உள்ளே வந்த ஆத்விக்கின் துரு துரு கண்கள் சுற்றிலும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது.

சிறிது நேரத்தில் எல்லாம் எளிதாக ஜானை அடையாளம் கண்டு கொண்டான்.” ஜான் அப்பா” என்று சத்தமாக கத்தியப்படி ஜானை நோக்கி ஓடி வர ..முதலில் திகைத்து நின்றது நந்தினி தான்.

“டேய் இல்லடா அது வேற யாரோ” என்று சொல்ல.. எதற்கும் கேட்டுக் கொண்டு நின்றிருக்கவில்லை .

நேராக ஓடியவன் ஜானின் கைகளை பற்றியபடி ஜான் அப்பா இங்க இங்க தான் இருக்கீங்களா” என்று சொல்ல ஒரு நிமிடம் திகைத்தாலும்.. அருகே குனிந்து அமர்ந்தபடி “இப்போ உடம்பு சரி ஆயிடுச்சா. இப்ப அம்மா பேச்சு கேட்டு நடக்கிற தானே.. “

“அதெல்லாம் நான் அம்மாகிட்ட சமந்தா இருக்கிறேன் .நான் ஸ்கூலுக்கு போய் அங்க எல்லார்கிட்டயுமே சொன்னேன். எனக்கு அப்பா இருக்காங்க என்ன பார்க்க வந்தாங்கன்னு சொன்னேன் .”

‘அப்படியா சமத்துப் பையன்” பேசிக் கொண்டிருக்கும் போதே மேரியும், எலீசாவும் இவனுக்கு அருகே வந்தனர் .”அப்பா” என்று வர ..நெற்றியை சுருக்கிய படி யோசனையோடு ஜானை பார்த்தான்.

“ஆத்விக் இவங்க ரெண்டு பேரும் உனக்கு அக்கா” என்று சொல்ல ..”எனக்கு அக்கா இருக்காங்களா .அம்மா சொல்லவே இல்லை “என்று தாயாரை திரும்பி பார்த்தான் .அதற்குள்ளாகவே நந்தினியும் அருகே வந்திருந்தாள்.

“ஹலோ “என்றவன்” உங்க பேரு என்ன “தயங்கி இழுத்தான். இப்போதுதான் இவளுக்கு புரிந்தது . இவளுடைய பெயர் கூட அவனுக்கு தெரிந்திருக்கவில்லை என்று ..

அன்றைக்கு எதேட்சையாக வந்தவன் உதவி செய்திருக்கிறான் என்பது புரிய வேகமாக ..”என் பேர் நந்தினி.. அன்னைக்கு நீங்க உதவியதற்கு தேங்க்ஸ்… நீங்க வந்துட்டு போன பிறகு தான் ஃபாதர் சொன்னாங்க” என்று சொல்ல .

“இட்ஸ் ஓகே பரவால்ல” என்றவன்.” எலீசா குட்டி பையன் கூட போய் விளையாடு “ என்று அனுப்பி வைக்க இரண்டு குழந்தைகளும் இவனின் கைப்பற்றி அழைத்து நகர்ந்தனர்.

“உங்களுக்கும் இந்த சர்ச் தானா” என்று கேட்க..” ஆமா இங்க தான் ஆரம்பத்தில் இருந்து வரேன் ..” என்று சொன்னபடியே நடக்க ஆரம்பித்தாள்.

சற்று நேரத்தில் இவனுடைய தாய் ,தந்தை.. நந்தினியின் தாய் ,தந்தை என அங்கே வந்திருக்க ..இயல்பாக பேச ஆரம்பித்திருந்தனர் .
பெரும்பாலும் நந்தினி அமைதியாக கேட்டுக் கொண்டு மட்டுமே இருந்தாள். பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

அவசர நேரத்தில் உதவி செய்தவர் என்கின்ற எண்ணம் மட்டும் அவளிடத்தில் இருக்க.. இவர்களின் திட்டம் எதுவுமே அவர்கள் இருவருக்கும் தெரிந்திருக்கவில்லை..

இவர்கள் இயல்பாகப் பேசிக் கொண்டிருக்க ..குழந்தைகள் வரவுமே அழைத்துக்கொண்டு நகர்ந்து இருந்தான்.

“ சாப்பிட ஏதாவது வாங்கி கொடுத்திட்டு வரேன் ..நீங்க பேசிக்கிட்டு இருங்க “என்று நகர ..”இல்ல வேண்டாம்” என்று நந்தினி வேகமாக குரல் கொடுத்தாள்.

“ உங்களுக்காக இல்ல ஆத்விக்கிற்கு.. சாப்பிடறது ஏதாவது அலர்ஜி இருக்குதா? இருந்ததுன்னா சொல்லிடுங்க அதுக்கு ஏத்த மாதிரி வாங்கிடலாம் “என்று குரல் தர ..”இல்ல அப்படியெல்லாம் இல்லை. எல்லாத்தையும் சாப்பிடுவான்”என்று அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் தாண்டிய போது குழந்தைகளோடு திரும்ப வந்தான்.

“ சரிமா நம்ம புறப்படலாமா” என்று கேட்க ..”அப்பா அதுக்குள்ள போறீங்களாஐ ஜானின் கைபிடித்து ஆத்விக் கேட்க..

“ஆத்விக் அவருக்கு வேலை இருக்கும். விடு “என்று இவள் குரல் கொடுத்தாள்.

“அப்பா ஊருக்கு போனதா தானே சொன்னிங்க. நீங்க போன ஊரு பக்கத்துல தான் இருக்குதா..”

“ஆத்விக் வந்து” என்று தயங்கி நிறுத்த.. “ஆத்விக் இப்படி எல்லாம் கேட்கக்கூடாது. அப்பா நம்ம கூட இருக்க முடியாது புரிஞ்சுதா “.

“ஏன் இருக்க முடியாது .”திரும்ப நந்தனியை பார்த்து கேட்க.. ஜான் தலையில் சொரிந்தபடி நின்று இருந்தான் .குழந்தையிடம் என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை .

நான் உன்னுடைய அப்பா இல்லை என்று சொல்ல முடியும் ஏற்கனவே கையில் குளுக்கோஸ் ஏற்றி படுத்திருந்த கோலமே இன்னமும் கண்களில் முன்னால் நிழலாட ..

“அப்படி இல்ல எனக்கு நிறைய வேலை வரும். திடீர் திடீர்னு அவசரமா கூப்பிடுவாங்க .அதனாலதான் அந்த வீட்ல என்னால இருக்க முடியல புரியுதா .”

“எனக்கு புரியலையே” என்று எலீசா, மேரி பார்த்தவன் .”அக்கா உங்களுக்கு ஏதாவது புரியுதா” என கேட்க அவர்களோ..” எனக்கும் தெரியல .எங்கப்பா எங்க கூட இருக்கிறாங்க “என்று மேரி ஜானிற்கு அருகில் வந்து நின்று கொண்டாள்.

ஏதேதோ பொய் சொல்லி அன்றைக்கு பிடிவாதமாக வீட்டிற்கு இழுத்து வந்திருந்தாள். வீட்டுக்கு வந்த உடனேயே தாயாரிடம் சண்டை இட்டு கொண்டிருந்தாள் நந்தினி .

“இந்த ஃபாதருக்கு இது வேண்டாத வேலை தானே.. இவனுக்கு என்ன தெரியும் இவன் குழந்தை..”

“அதுக்கு என்ன பண்ண முடியும் நந்தினி .. அன்றைக்கு நல்லது நினைச்சு செஞ்சாரு ‌”

“இப்ப பாருங்க மறுபடியும் அப்பா பாட்டு பாட ஆரம்பிச்சுட்டான். வந்த நேரத்தில் இருந்து இன்னைக்கு அப்பா ஏன் இங்க இல்ல. அப்பாவை கூப்பிடு
ங்கன்னு ஒரே புராணம் .பிடிவாதமாக மிரட்டி தூங்க வச்சிருக்கறேன் .இன்னும் என்ன ஆகுமோ தெரியல “என புலம்பியபடியே நகர்ந்தாள்.
 

NNK-15

Moderator
9


நந்தினிக்கு இப்படி ஒரு நிலை வரும் என எப்போதும் யோசித்தது இல்லை அதிலும் இந்த நிலைக்கு பிடிவாதமாக தள்ளப்பட்டிருந்தாள்.


வேறு வழியே இல்லாமல் இதற்கு சம்மதிக்க வேண்டியதாக இருந்தது.


நடந்தது இதுதான் ..அன்றைக்கு ஜானின் குடும்பத்தை சர்ச்சில் பார்த்து விட்டு வந்த பிறகு வீட்டிற்கு வந்த ஆத்விக் மறுபடியும் ஜானை கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து இருந்தான்.


நிறைய கோபம் வந்திருந்தது இவளுக்கு ..மறுபடியும் ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்குகிறோமோ என்கின்ற நிலை நந்தனிக்கு..


யோசிக்காமல் மறுபடியும் பழையபடி அடித்திருக்க, இம்முறை காய்ச்சல் எதுவும் இல்லாமல் சட்டென தரையில் விழுந்தவன் மயங்கி இருந்தான்.


மறுபடியும் குழந்தையை எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய நந்தினியின் தாய், தந்தை இருவருமே பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர் .


டாக்டரோ “அந்த குழந்தையோட ஏக்கம் என்னவென்று பார்த்து அதை சரி செய்ய பாருங்க


குழந்தை அப்பான்னு சொல்லி அழறான்னா.. தயவு செய்து அப்பாவை கூப்பிட்டுட்டு வந்து முன்னாடி நிறுத்துங்க .


திரும்பத் திரும்ப ஒரே தப்பை செய்ய வேண்டாம் .போன முறையும் அந்த குழந்தையோட அப்பா வந்த பிறகு தானே அந்த குழந்தைக்கு சரியாயிடுச்சு.


அதையே இப்பவும் செய்யுங்க “என்று சொல்ல ..உண்மை நிலவரம் இப்போதுதான் புரிந்தது .


“டாக்டர் அவனுக்கு அப்பா கிடையாது இறந்துட்டாங்க அன்றைக்கு வந்தவர் தெரிந்தவர்” சற்று தயங்கியபடி கூற..” சரி ஓகே இருக்கட்டும் குழந்தைக்கு ரொம்ப முடியாமல் போயிடுச்சு .


மறுபடியும் ஒருமுறை அழைச்சு பேச சொல்லலாம்ல ..அதுல ஏதாவது பிரச்சனையா “என்று கேட்டவர்.” உங்களுக்கு தயக்கமாக இருந்தால் ஃபோன் நம்பரை கொடுங்க .நானே அழைத்து பேசறேன்.


குழந்தைக்குன்னு சொல்லும் போது வர மாட்டேன்னா சொல்ல போறாங்க .”டாக்டர் சொல்லவும் நந்தினியின் தாயார்..


” டாக்டர் நாங்க பாத்துக்கிறோம் “என்று வெளியே வந்தவர்.. ஜானின் தாயாரின் நம்பருக்கு அழைத்து விவரத்தை கூற.. .


கொஞ்ச நேரத்தில் எல்லாம் மொத்த குடும்பமுமே இங்கே வந்திருந்தனர்.


ஜான் மட்டுமல்ல இரு பெண் குழந்தைகளும் கூடவே ஜானின் தாய் ,தந்தை என மொத்தமாக இங்கே வர சற்று தயங்கி நின்றது என்னவோ நந்தினி தான்.


ஜானின் தாயார் நந்தினியிடம் இயல்பாக பேச்சு கொடுக்க.. பேசிய கொஞ்சம் நேரத்திலேயே அவருக்கு புரிந்து விட்டது


நந்தினியின் குணம் என்ன என்று.. கொஞ்சம் பார்ப்பதற்கு கரடு முரடாக கோபமாக இருப்பது போல இருந்தாலுமே அவளுடைய மென்மையான குணம் எளிதாகப் புரிந்தது.


குழந்தைகள் என்று வரும் போது எளிதாக ஜானின் குழந்தையோடு அமர்ந்து பேச ஆரம்பித்து இருந்தாள் .


சற்று நேரம் அமர்ந்து பேசிவிட்டு அவர்கள் குடும்பம் புறப்பட இப்போது சற்று தெளிவாகவே ஆத்விக் அமர்ந்திருந்தான்.


டாக்டர் வந்த வரும் “பயப்படற அளவுக்கு எதுவுமே இல்ல.உங்க குழந்தை நார்மல் தான் .நீங்க அழைச்சிட்டு போகலாம் .


தயவு செய்து குழந்தையை பாருங்க.. இந்த சின்ன வயசுல பிட்ஸ் வர்றதோ இப்படி மயக்கம் போட்டு விழறதோ கொஞ்சம் பயம் தான். போன முறையே முழுக்க எல்லா டெஸ்ட்டும் பண்ணி பார்த்திட்டோம்.


அப்பவே எந்த பிரச்சனையும் இல்ல .மறுபடியும் அதே மாதிரி மயக்கம் போட்டு விழறான்னா பிரச்சனை உடல்ல இல்ல அவனோட மனசுல ..அந்த குழந்தைக்கு என்ன பிடிக்குதோ அதை செய்யுங்க” என்று சொல்லிவிட்டு டாக்டர் நகர..


அடுத்த நாள் வரையிலுமே அங்கேயே ஹாஸ்பிடலில் இருந்து விட்டு வீட்டிற்கு வந்தனர் .


வீட்டிற்கு வந்த கொஞ்சம் நேரத்தில் எல்லாமே நந்தனியின் தாயார் பேச ஆரம்பித்திருந்தார்.


“நந்தினி ஜானோட அம்மா, அப்பா கிட்ட அன்னைக்கு சர்ச்சில் வைத்து பேசினோம். ஏற்கனவே ஜானுக்கு பெண்ணு பார்க்கிறதா அவங்க சொன்னாங்க .


ஏன் உனக்கு அப்பாகிட்ட கேட்க சொன்னேன்..”என்று சொல்ல.. ருத்ர தாண்டவம் ஆடிவிட்டால் தயாரிடம்..


“ இந்த மாதிரி ஒரு எண்ணம் உங்க மனசுல என்னைக்கும் வரக்கூடாது மா .நீங்க முதல்ல இப்போ கிளம்புங்க .இன்னொரு முறை இதுபோல ஒரு கேள்வியோட வராதீங்க “என்று கூற ..


“ என்ன சும்மா மிரட்டி பார்க்கறியா.. குழந்தைக்கு எப்படி உடம்பு முடியல.. பார்த்துட்டு தானே இருந்த.. அந்த குழந்தையை சாகடிக்க போறியா.


ஜானை மறக்கலைன்னு சொல்ற ..சரி ஆனா அதுக்காக அவனை நினைச்சிட்டு இந்த குழந்தையை சாகடிக்க போறியா..


தெரிஞ்சோ தெரியாமலோ.. யார் பண்ணின தப்போ தெரியாது. அந்த குழந்தை அவரை அப்பாவா நினைக்குது .அவங்க வீட்லயும் பார்க்கறாங்கன்னு சொல்லும்போது ஏன் ஒரு தடவை பேசி பார்த்தா என்ன தப்பு .


உடனே கல்யாணம் பண்ணி ஒன்னும் கொடுத்திட போறது இல்லையே.. அங்கேயும் பிடிச்சு மத்த விஷயங்களும் பேசி சரியா இருந்தா தானே மேற்கொண்டு பேச போறோம்..


. குழந்தைக்காக ஏன் இந்த முடிவுக்கு சம்மதிக்கக்கூடாது. கோபமாக இவரும் கத்த.. “முதல்ல நீங்க போங்கம்மா” என சத்தமாக கத்தினாள்.


அத்தோடு ஆத்விக் நின்று இருக்க வில்லை .தந்தை வேண்டுமென்று நன்றாகவே அழ ஆரம்பித்தான்.


மருந்து மாத்திரைகளை மட்டுமல்ல உணவையுமே வேண்டாம் என ஒதுக்கி வைக்க.. இவளுக்குகே பயம் பற்றிக் கொண்டது.


தாயார் சொன்னது போல ஜானின் நினைவில் வாழ்கிறேன் என்று அவனின் ரத்த பந்தத்தில் இருக்கும் குழந்தையை விட்டு விடுவாளோ என்கின்ற பயம் வர ..சற்று யோசிக்க ஆரம்பித்து இருந்தாள்.


அதே நிலை தான் அங்கே ஜானிற்கும்.. ஜானின் தாய், தந்தை மட்டுமல்ல எஸ்தரின் தாய், தந்தை கூட அன்றைக்கு வீட்டிற்கு வந்து பேச ஆரம்பித்திருந்தனர்.

.

“இதுதான் முடிவு என்று சொல்ல மாட்டோம் ஜான் .ஆனா இத பத்தி யோசிக்கலாம் இல்லையா. அந்த குழந்தை அப்பாவுக்காக ஏங்கி அழுதுகிட்டு இருக்கிறான் .


அந்த பொண்ணுக்கும் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். நீ ஏன் அந்த பொண்ணுக்கு ஒரு வாழ்க்கையை கொடுக்கக்கூடாது .”


“இங்க நாலு பேரும் வந்ததால நான் நீங்க கேட்கிற எல்லாத்துக்கும் சம்பாதிப்பேன்னு எப்படி நினைக்கிறீங்க .


என்னோய எஸ்தரோட இடத்துல யாரையும் நான் வச்சு பார்க்க விரும்பல .கடைசி வரைக்கும் நான் இப்படித்தான் இருப்பேன் .”


“போதும்.. இதையே சொல்ல வேண்டாம். இரண்டு குழந்தைகளுமே அந்த குட்டி பையனை தன்னோட தம்பியா ஏத்துக்கிட்டாங்க .அவங்க நல்லா இருந்தா உங்களுக்கு வேற என்ன வேணுமாம்..”


“ ப்ளீஸ் பா இதெல்லாம் சரி வராது .நீங்க தயவு செய்து இது போல ஒரு பிளானோட என்னை பார்க்க வராதீங்க.


என்னை இப்படியே விட்டுடுங்க அன்றைக்கு ஃபாதர் சொன்னாங்களேன்னு சொல்லித்தான் ஹாஸ்பிடல் போறேன். அது என்னோட தப்பு தான் .அதுக்கு நீங்களா புதுசா வர்ணம் தீட்டி உறவை புதுப்பிக்க நினைக்க வேண்டாம். என்னை இப்படியே விட்டுடுங்கள்.”


இவனுடைய பேச்சு எதுவும் அங்கே எடுபடவில்லை .


அதே நேரத்தில் நந்தினியில் தாயார் ஜானின் தாயாருக்கு அழைப்பு விடுத்தார் .


“நந்தினியோட அம்மா தான் பேசுறாங்க நீயே கேளு “என்று ஸ்பீக்கரில் போட்டவர்.. “சொல்லுங்க என்ன விஷயம்..”


“ இங்க மறுபடியும் ஆத்விக் அப்பாவை கேட்டு அடம் பண்ண ஆரம்பிச்சிட்டான்..


எனக்கு ரொம்ப பயமா இருக்குது . இவளோட பிடிவாதத்தால குழந்தைக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்குது..


நான் சொல்ற எதையுமே நந்தினி கேக்குற மாதிரி தெரியல .அந்த குழந்தையோட உயிர் தான் நடுவுல ஊஞ்சலாடும் போல இருக்குது. என்ன உடம்புக்கு செய்யுதுன்னே தெரியல.


டாக்டர்கிட்ட முழு செக்கப்பும் பண்ணியாச்சு .எதுவுமே இல்லைன்னு சொல்றாங்க. ஆனா இவன் சரியா சாப்பிடறது இல்ல .


திடீர் திடீர்னு மயக்கம் போட்டு விழறான்.. என்ன செய்றதுன்னு தெரியல. இவளும் பிடிவாதமா பேசிக்கிட்டு இருக்கறா..”


“எல்லாம் சரியாகிவிடும்.. பதட்ட படாதீங்க .குழந்தையை நல்ல படியா பார்த்துக்கோங்க .


அவன் என்ன கேக்குறானோ அதை செஞ்சு கொடுங்க. நான் ஜான் கிட்ட பேசுறேன் .


குழந்தையை அடிக்கடி வந்து பார்க்க சொல்றேன் .நிச்சயமா எல்லாம் சரியாகிவிடும் .”


“ரொம்ப நன்றி” என்று போனை வைக்க.. “கேட்டியா டா இது தான் அந்த குழந்தையோட இன்றைய நிலைமை .


அந்த குழந்தை வாழறதும், சாகறதும் உன்னோட கைல தான் இருக்குது .உங்களோட வரட்டு பிடிவாதத்தால..ஒரு உயிரை கொள்ளுவேன்னா தாராளமா கொன்னுக்கோ..


எனக்கு அத பத்தி பிரச்சனை இல்லை. நானே சொல்லிட்டேன் .இதுக்கு மேல எதுவும் சொல்றதுக்கு இல்ல. நீ உன்னோட பிடிவாதத்திலேயே இரு.


ஒன்னும் தப்பில்லை .. உன் குழந்தை தானே.. அவங்க பாட்டுக்கு வளர்ந்துக்குவாங்க.. அவங்களை பத்தி நீ கவலைப்பட வேண்டாம்.


எப்படியும் இன்னமும் ஒரு பத்து வருஷம் நான் உயிரோட இருக்க மாட்டானா ..அதுக்கு முன்னாடி உன் புள்ளைங்க நல்லாவே வளர்ந்திருவாங்க.


அவங்களுக்கு அம்மாவோட தேவையே இருக்காது. ஏன்னா புரிந்து நடந்துக்குவாங்க .ஆனா பாவம் அந்த மூணு வயசு குழந்தை அப்பாவை கேட்டு அழுதுகிட்டு இருக்குது .


அந்த குழந்தை நிச்சயமா புரிஞ்சுக்காது. நிச்சயமா ஒரு நாள் இந்த பூமியை விட்டு இல்லாமல் தான் போகப் போகுது .


அந்த கர்த்தரோட காலடிக்கு போயிடும். .அது மட்டும் நல்லா தெரியுது .”என சொன்னவர் .”சம்பந்தியம்மா இனி நீங்க இங்கே இருக்க வேண்டாம் .


வாங்க நம்ம போகலாம் .என்ன சொன்னாலும் இவனுக்கு புரியுதா.. இல்லல்ல...

யாரோ ஒரு குழந்தை.. யாருக்கு என்ன ஆனா நமக்கு என்ன? என்ன துறு துறுன்னு அங்கேயும் இங்கேயும் ஓடிக்கிட்டு இருந்தான்..


அவ்வளவு அழகா இருந்த குழந்தை ஹாஸ்பிடல்ல போய் பார்தப்போ தானே தெரிந்தது.. வாடி போயி இருந்தான். இதெல்லாம் உனக்கு புரியாது விட்டுடு..


யாரோ ஒரு குழந்தை தானே ..என்ன பார்த்த நேரத்துல எல்லாம் ஜான் அப்பா.. ஜான் அப்பான்னு உயிரை விட்டுச்சு .

அதை சொல்லி சொல்லியே உயிரை ஒரேடியா விட்டுடும் போல இருக்கு .நமக்கு என்ன விடுங்க..”


இந்த வார்த்தை ஜான் இடத்தில் சரியாக வேலை செய்தது.


“ இப்ப எதுக்காக மாறி மாறி பேசிட்டு இருக்கீங்க. இப்ப நான் என்ன செய்யணும்.”


“ நீ எதுவும் செய்ய வேண்டாம் டா . ஒரு தடவை நந்தினி பொண்ணு கிட்ட உட்கார்ந்து பிரச்சனையை பத்தி பேசி ஒரு முடிவு எடு..


அந்த பொண்ணு நிச்சயமா சம்மதிப்பா.. அவளுக்கும் குழந்தைனா உயிர் தானே ..நீ என்ன பேசுவீங்களோ ஏது பேசுவீங்களோ தெரியாது.


இந்த மூணு குழந்தைகளும் ஒன்னு சேர்ந்துருவாங்க .ஏன்னா இந்த இரண்டு குழந்தைகளுக்குமே நல்லது மட்டும் தான் சொல்லித் தந்திருக்கறேன்.


அவங்க சந்தோஷமா இன்னொரு தம்பி நமக்கு அப்படின்னு ஈசியா மனசு மாத்திக்குவாங்க.


ஆனா பேசி முடிச்சு முடிவெடுக்க வேண்டியது நீங்க ரெண்டு பேரும் தான். அந்த குழந்தைகளுக்காக கொஞ்சம் வாழ்க்கையை விட்டுக் கொடுங்களேன்.


வாங்க . நம்ம கிளம்பலாம்.. நீங்களும் புறப்படுங்க .பொறுமையா இருந்து யோசிக்கட்டும். யோசிச்சு முடிவு எடுக்கட்டும் ஒன்னும் தப்பு இல்ல “என்று நகர்ந்தார்.


பரஸ்பரம் நண்பர்கள் பார்த்துக் கொள்வது போல மறுபடியும் ஒரு நாள் அதே சர்ச்சின் அருகில் இருந்த பார்க்கில் இருவரும் சந்தித்தனர் .


நீண்ட நேரம் வரைக்குமே இருவருக்கும் நடுவில் அமைதி மட்டுமே ஆட்சி செய்தது.


குழந்தைகள் மூவரும் சற்று தொலைவில் விளையாடிக் கொண்டிருக்க.. அமைதியாக பார்த்தவர்களுக்கு என்ன சொல்வது என்று தான் தெரியவில்லை.


நீண்ட நேரம் கழித்து முதலில் வாய் திறந்தது நந்தினி தான்.


“என்னால ஜானை மறக்க முடியாது. என்னால கல்யாணத்தை பத்தி எப்பவும் யோசிச்சது கிடையாது.”


“ நானும் தான் “.


“ இவனுக்காக.. இப்படி ஒரு சூழ்நிலையில் வந்து நிற்கிறேன்” என்று நந்தினி சொல்ல..


“உங்க நிலைமை என்னன்னு எனக்கும் புரியுது “என்று இவனும் பதில் கூறினான்.


“இதுக்கு என்ன தான் முடிவு” சற்று யோசித்து நந்தினி கேட்க..


“ஆத்விக்கோட நிலைமையை யோசிக்கும் போது சரின்னு சொல்லிட்டம்மான்னு தோணுது. ஆனா சரின்னு சொல்லவும் மனசு ஏத்துக்கல ‌நிறைய குழப்பம் ஆனால் உன் கிட்ட ஏதாவது சொல்யூஷன் இருக்கும்ணு தான் இந்த மீட்டிங்கிற்கு சம்மதித்தேன்”.


“மொத்த பொறுப்பையும் என் தலையில் போடுற மாதிரி இருக்குது .எனக்கும் பதில் தெரியாம தான் இங்க வந்து உட்கார்ந்து இருக்கிறேன்”.


“ புரியுது நந்தினி ஆனா என்ன சொல்றதுன்னு தெரியல.. நிறைய குழப்பமா இருக்குது”.


“ எனக்கும் அதேதான் .அப்படியே பெரியவங்க சொல்றத கேட்டு தான் ஆகணும்னு ஒரு சூழ்நிலை வந்ததுனா ..


பேசணும் …நிறைய..நிச்சயமா இது நார்மல் கல்யாணம் மாதிரி இருக்காது. கல்யாணம் பண்ணினா கூட சிலதெல்லாம் என்னால மாத்திக்க முடியாது.


நிச்சயமா என்னோட ஜானை என்னால மறக்க முடியாது. எதுக்காக எங்க வாழ்க்கைக்குள் வந்தீங்கன்னு எனக்கு தெரியல.


அன்னைக்கு ஹாஸ்பிடலுக்கு வந்து இருக்க வேண்டாம். தேவையில்லாம உங்களையும் பிரச்சனைக்குள்ள இழுத்து விட்டு மாதிரி ஆயிடுச்சு.”


“புரியுது நந்தினி இப்போதைக்கு யோசிக்க கொஞ்சம் டைம் கேட்கலாம். ஒரு தடவை பேசறதால கூட இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துடாது.


நிறைய யோசிக்க வேண்டியதா இருக்குது .நாம இப்போ கிளம்பலாம்.”


“ ஓகே தேங்க் யூ.. எனக்கு உங்ககிட்ட பேச நிறைய தயக்கம் எல்லாம் இல்லை. கொஞ்சம் கம்ப்யூடபிலா தான் இருக்குது..


நேச்சராவே ஃப்ரெண்ட்லியான குணம் உங்களது.. அதனால பேச ரொம்ப எளிதாக இருக்குது. ஒருவேளை அதனாலதான் ஆத்விக்கிற்கு உங்களை பிடிச்சது போல இருக்கு .”


“நானும் கூட இதைத்தான் சொல்லுவேன் நந்தினி என்னோட பொண்ணுங்களுக்கும் கூட உன்னை ரொம்ப பிடித்திருக்கிறது .


இரண்டு பேருமே சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அன்றைக்கு வீட்டுக்கு வந்தாங்க இல்லையா .

ரொம்ப நல்லா பேசுறீங்கன்னு.. வீட்டுக்கு வந்தவங்க நைட்டு தூங்குற வரைக்கும் உன்னை பத்தி தான் பேசினாங்க .


அப்போ என் மனசுக்கும் அதுதான் தோணுச்சு பிரண்ட்லியான பொண்ணு அதனாலதான் நம்ம பசங்களுக்கு பிடிக்குது அப்படின்னு ..”


“எது எப்படியோ ஆக மொத்தம் என்னை பத்தி நிறையவே பேசி உங்க தூக்கத்தை கெடுத்து இருக்காங்க .அப்படித்தானே”.


“ அப்படின்னு சொல்ல மாட்டேன் ஆனா குழந்தைகளுக்கு பிடிச்சதால தானே அத பத்தி பேசுவாங்க .இல்லாட்டி வாயே திறக்க மாட்டாங்க .நான் நிறையவே பார்த்திருக்கிறேன்.

என் பொண்ணுங்க கிட்ட..”


“ம்.. உங்க ரெண்டு பொண்ணுங்க எப்படின்னு சொல்லுங்களேன் .கேட்கலாம். ஆத்விக் பத்தி கிட்டத்தட்ட முக்கால்வாசி உங்களுக்கு தெரியும் .ஆனா உங்க குழந்தைகளை பத்தி எனக்கு எதுவும் தெரியாது .”


“இப்போ இத பத்தி என்ன ஆராய்ச்சி வேண்டி இருக்குது”.


“ ஜஸ்ட் சும்மாதான் என்னை பத்தி அவ்வளவு தூரம் பேசினாங்கன்னு சொல்றீங்க இல்லையா. அவங்கள பத்தியும் ஏதாவது ஒரு சில விஷயம் தெரிஞ்சுகிட்டா நல்லதில்ல..


என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுன்னு தெரிஞ்சுக்கிட்டா.. பிகாஸ் மறுபடியும் குழந்தைங்களை பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்தா..


பிரண்ட்லியா அவங்களுக்கு பிடிச்சத அவங்களுக்கு ஏத்த மாதிரி நடந்துக்க தான் .அதற்காக கேட்கறேன் .”


“பெரியவ கொஞ்சம் ஷார்ப் ..ஈஸியா புரிஞ்சிக்கவா . உண்மைய சொல்லணும்னா இற்றைக்கு வீடு ஒரு அளவுக்கு நிம்மதியா இருக்குதுன்னா அதுக்கு காரணம் பெரியவதான்..


ஏன்னா அம்மா இல்லங்குறத அவ ஏத்துக்கிட்டா ..சின்னவளால இந்த நிமிஷம் வரைக்கும் ஏத்துக்க முடியல. அப்பப்ப கேட்டு அழுவா.. அவள சமாதானம் பண்றது ரொம்ப பெரிய விஷயமா இருக்கும்.


அந்த நேரம் எல்லாம் பெரியவ தான் அவளை அடாப்ட் பண்ணிக்குவா..ஈசியா எதையாவது சொல்லி அவளோட மைண்ட் செட்டை மாதிரி சிரிக்க வச்சிடவா..


அந்த வகையில பெரிய பொண்ணு எப்போவுமே எனக்கு கிட்டத்தட்ட அம்மா மாதிரி.. அவளை மட்டும் இல்ல சமயத்துல .. என்னோட மூடு டவுன் ஆகி இருக்கும் போது எனர்ஜியா மாற்றி விடுவது அவதான்..”


“இப்ப வீட்ல இந்த பேச்சு வார்த்தை ஆரம்பிச்சு இருக்குது குழந்தைகளோட மனநிலை எப்படி இருக்குது ..


சாரி இத நார்மலா கேக்கல .ஏன்னா எனக்கு தெரியும் இரண்டாவது கல்யாணம் என்று பேசும்போது அங்க வர்ற பிரச்சனையை நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன் .


அதுவும் குழந்தைங்க இருக்கிற வீடுன்னா நிறையவே ப்ராப்ளம் வரும் .இத பத்தி என்ன குழந்தைங்க யோசிக்கிறாங்க.”


“ அவங்க குழந்தைங்க நந்தினி .. நான் தான் முடிவு எடுக்கணும் . அப்புறமா என்னோட அம்மா,அப்பாவும் சரி, எஸ்தரோட அம்மா ,அப்பாவும் சரி குழந்தைகளுக்கு நிறைய நல்லது தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.


ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடி டீச்சர்ஸ் பத்தி அங்க இருக்குற மாணவர்களை பத்தி நம்ம ஒரு அப்பியரன்ஸ் கொண்டு வருவோமே..


அங்க போனா நிறைய விளையாடலாம் .ஜாலியா இருக்கும் ..பசங்க கூட ஜாலியா நேரம் போகும் ..


இது மாதிரி நிறைய சொல்லித் தந்து அவங்கள அவங்களோட மைண்ட் செட் ஸ்கூலுக்கு போற மாதிரி சரி பண்ணி வைப்போம் இல்ல .கிட்டத்தட்ட அந்த மாதிரி ரெண்டு பேர்த்தையும் ரொம்ப தெளிவா பிரைன் வாஷ் பண்ணி வச்சிருக்காங்க.


சோ குழந்தைங்க நான் வேண்டான்னு சொல்லும் போது.. ஈஸியா இரண்டு பேருமே இல்லப்பா எங்களுக்கு அம்மா வேணும் பாட்டி சொல்ற மாதிரி கேளுங்கன்னு சொல்ற நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள் .


அது மட்டும் இல்ல என்னோட அம்மாவை பொறுத்த வரைக்கும் குழந்தைங்க வர்ற பொண்ணுக்கு டிஸ்டர்ப்டா இருந்தா நாங்க அழைத்துக் கொள்வோங்கிற மாதிரி பேசி இருக்காங்க .


இந்த கான்செப்ட் எனக்கு பிடிக்கல .சோ குழந்தைங்களோட மன நிலைமை இப்போதைக்கு இப்படித்தான் இருக்குது.


என்ன பொறுத்த வரைக்கும் கேட்டா இதெல்லாம் தேவையே இல்லாத ஒன்று.


நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன் .அதை சொன்னால் அவங்க நம்ப தயாரா இல்லை.”


“இங்கேயும் அதேதான் இப்போதைக்கு ஆத்விக்கிற்காக மட்டும் தான் நான் யோசிக்கணும்.


எனிவே ரொம்ப தேங்க்ஸ் உண்மையிலேயே ஒரு காபி ஷாப்ல உட்கார்ந்து ஃப்ரெண்ட் கூட அரட்டை அடிச்சா எந்த மாதிரியான ஒரு மனநிலை கிடைக்குமோ அது போல தான் இப்போ எனக்கு கிடைச்சிருக்கு.


பெரியவங்க சொல்றாங்களேன்னு அடுத்த கட்டத்தை பற்றி யோசிக்காட்டி கூட பிரண்ட்லியா யூ ஆர் எ குட் மேன்..அதை நான் ஒத்துக்கிட்டே ஆகணும் .ஓகே நான் இப்ப கிளம்பறேன்” என்று வெளியேறி இருந்தாள். 

NNK-15

Moderator
10

சம்பந்தப்பட்ட இருவருமே தெளிவான முடிவு எடுக்காத நிலையில் ..குடும்பத்தில் உள்ள அனைவருமே அடுத்த கட்ட ஏற்பாட்டிற்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.

முதலில் ஒன்றுமே புரியவில்லை..

இம்முறை ஃபாதர் வந்து ஜானிடம் பேசினார்.” தெரிஞ்சோ தெரியாமலோ நான் தான் ஆரம்பித்துவிட்டேன் .

என் மனசுக்குள்ள ஏன் இப்படி தோணுச்சுன்னு இந்த நிமிஷம் வரைக்கும் தெரியல ஜான்.

உன்னோட பெத்தவங்களும் சரி நந்தனியோட பெத்தவங்களும் சரி ..கர்த்தர் முன்னாடி ஒவ்வொரு தடவை வரும் போதும் அழுதுட்டு போறது என் மனசுக்குள்ள ரொம்ப உருத்திகிட்டே இருந்துச்சு .

அது கூட ஒரு காரணமா இருக்கலாம் .என்னை அறியாமல் இந்த பேச்சு வார்த்தையை தொடங்கி வச்சுட்டேன் .

இன்னைக்கு ஓரளவுக்கு நல்ல நிலைமைக்கு வந்து இருக்குது. இப்போ சம்மதம் சொல்ல வேண்டியது நீயும் அந்த பொண்ணும் தான் .

நீ ஏன் சம்மதிக்க கூடாது .அந்த குழந்தையோட எதிர்காலத்தை கொஞ்சம் யோசிச்சு பாரு .உன்ன தான் அப்பானு நினைச்சுகிட்டு இருக்குது.

புரியுது… இன்னும் கொஞ்ச நாள் ஆச்சுன்னா அந்த குழந்தை ஓரளவுக்கு வளர்ந்துடுச்சுன்னா ..அப்போ தெரியும் .இது நம்மளோட அப்பா இல்லை .அப்பா இறந்துட்டாங்கன்னு தெரியும்.

ஆனா எதுக்காக அந்த குழந்தைக்கு தெரிய வைக்கணும். ஒரு குடும்பமா வாழ்றதுல உனக்கு என்ன பிரச்சனை.

நீ நல்ல பையன்.. மத்தவங்கள உன்னால எந்த நிமிஷமுமே மனசு கஷ்டப்படுற மாதிரி பேச முடியாது .என்ன யோசிச்சி முடிவு எடுத்திருக்கிற ஜான்.” என்று கேட்க..

தாய் ,தந்தை வந்து பேசினால் கூட எதையாவது சொல்லி அனுப்பி இருக்கலாம் .இப்போது இவரிடம் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தவன்.

“கொஞ்சம் டைம் வேணும்னு கேட்டிருக்கிறேன் ஃபாதர் கொஞ்சம் டைம் கொடுங்களேன் “என்று சொல்ல..

‘ இன்னும் எத்தனை நாளைக்கு… அந்த குழந்தை என்ன எதுன்னு தெரியாம அப்பப்போ மயக்கம் போட்டு விழறான் .

பத்தாததுக்கு பிட்ஸ் வேற.. உடம்புல எந்த வியாதியும் இல்ல .ஆனா மனதில் தான் அத்தனை கவலை போல இருக்கு .அந்த சின்ன குழந்தையோட கஷ்டம் கூட உனக்கு புரியலையா .சீக்கிரம் பதில் சொல்லு “என்று வெளியேறினார் .

அடுத்ததாக சென்றது நேரடியாக நந்தினியிடம்.. ஃபாதரை பார்க்கவும் மரியாதையாக இரண்டு வார்த்தை பேசியவள் அதற்கு மேல் பேச எதுவுமே தோன்றவில்லை.

அமைதியாக தான் அமர்ந்திருந்தது..” இப்படியே அமர்ந்திருந்தா எல்லாமே சரி ஆகிடுமா .ஏற்கனவே வீட்ல கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலையா?

அவங்க என்கிட்ட கேட்டு சொல்ல சொல்லி இருக்காங்க “.

“நடுவுல நீங்க எதுக்காக இந்த வேலையை செய்றீங்க. நீங்க உங்களோட வேலைய பார்க்கலாமே”.

“ அப்படி இல்லம்மா.. உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல . ஆத்விக் சுறுசுறுப்பான ஒரு குழந்தை..

அப்படிப்பட்ட ஒரு குழந்தைக்கு எதுவும் ஆகிட கூடாது இல்லையா .அதனால தான் இப்படி ஒரு முடிவை யோசிக்க வச்சது .”

“இப்ப நான் என்னதான் முடிவு எடுக்கணும்னு சொல்றீங்க ஃபாதர் .”

“ஒருவேளை ஜானுக்கு சம்மதம்னா நீயும் சம்மதம் சொல்லணும் இததான் கேட்கிறேன் ‌அந்த குழந்தைக்காக அவன் அவனுடைய கொள்கையில் இருந்து விட்டுக்கொடுத்து வருவான் .
அதே போல நீயும் விட்டுக்கொடுத்து வரணும்.”

“ஃபாதர் “.

‘ஜானை எனக்கு நல்லா தெரியும். நீயும் அவனும் வாழ்ந்த வாழ்க்கையை நேரில் நான் பார்த்திருக்கிறேன் .அந்த குழந்தை அவனோட அடையாளம் ..

இப்போ அந்த குழந்தைக்காக தான் இப்படி ஒரு பேச்சு வார்த்தையே ஆரம்பிச்சிருக்கு. இரண்டு பேரும் பேசிட்டு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.”

“நான் இன்னமும் யோசிக்கணும் ஃபாதர் .”

‘எனக்கு என்னமோ இதுல யோசிக்க எதுவும் இல்லை என்று தான் சொல்லுவேன் .நீங்க மறுபடியும் கூட ஒரு தடவை பார்த்து பேசுங்க .நல்ல முடிவா சொல்லுங்க.

பெரியவங்க எல்லாரும் ரொம்ப ஆர்வமா இருக்காங்க .உங்களோட கல்யாணத்தை பத்தி பேசி முடிவெடுக்க சொல்லி” என்று வெளியேறி இருந்தார் .

மறுபடியும் கூட ஒரு முறை பார்த்து பேசினர் .சற்று தயக்கத்தோடு தான் இவள் ஆரம்பித்தது .

“எல்லாரும் ஒரே விஷயத்தை பத்தி கம்பல் பண்ணும் போது சரி வருமா இல்லையான்னு யோசிக்கிற நிலையில கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள் .

இப்ப நாங்க இருக்கிற அந்த வீடு நாங்க வாழ்வதற்காக சொந்தமா வாங்கின வீடு .

அந்த வீட்டை நிச்சயமா என்னால விற்க முடியாது .அது அவனோட நியாபகார்த்தம்.. தற்சமயம் டியூவை கட்டி முடிக்கணும் என்கிற ஒரே காரணத்துக்காக தான் வேலைக்கு போயிட்டு இருக்கிறேன் .அம்மா ,அப்பா சொன்ன பேச்சைக் கேட்காமல் போறேன்னா அதுக்கு அது தான் காரணம் .அது அவனோட அடையாளம்.”.

“எனக்கு புரியல.. “

“நிஜமா அந்த வீடு ஆத்விக்கிற்காக வச்சிருக்கிறது அந்த வீட்டை என்னால இழக்க முடியாது .”

“புரியவே இல்ல நந்தினி நீ சொல்ல வர்றது.. என்ன சொல்ல வர்ற .நான் கேட்கவே இல்லையே .அந்த வீட்டை விற்கணும் அப்படின்னு எப்பவுமே சொல்லலையே “.

“அது இல்ல என்னோட முடிவை நான் சொல்லிடறேன் ..”.

“சரி சொல்லு “.

“ ஜான் இறந்த கொஞ்ச நாளிலேயே இந்த இரண்டாவது கல்யாண விஷயம் பேச ஆரம்பிச்சாங்க .அப்ப நான் பிடிவாதமா வேண்டான்னு சொன்னேன் .அதுக்கு முக்கியமான காரணம் இந்த வீடுதான் .

நான் ஒருத்தரை கல்யாணம் பண்ணி அவரை நான் கடன் காரனாக்க விரும்பல. மாசா மாசம் டியூ கட்ட சொல்றதும் நியாயம் கிடையாது”.

“ ஓ ..இப்போ புரியுது. நீ சொல்ல வர்றது .சரி நீ என்ன முடிவு பண்ணி இருக்குற ..நீ சொல்லு பிறகு நான் பேசுறேன்.”

‘ இப்போ அதே மனநிலையில் தான் இருக்கிறேன் .ஒரு வேலை நம்மளோட மேரேஜ் பத்தி முடிவு பண்ணினால் கூட அப்பவும் நான் வேலைக்கு போயிட்டு தான் இருப்பேன்.

அந்த வீட்டோட டியூ முடியுற வரைக்கும் நிச்சயமா வேலைய நிறுத்த மாட்டேன் .இது மட்டும் தான் இப்போதைக்கு என் மனசுல இருக்கிறது .

உங்க சைட்ல ஏதாவது இருந்தா நீங்களும் சொல்லலாம். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்..

கல்யாணம் பண்ணினா கூட இயல்பா மற்ற தம்பதிகள் மாதிரி சட்டுனு வாழ முடியுமான்னு எனக்கு சொல்ல தெரியல .

நான் முழுக்க முழுக்க வெளிய வரணும் ..வருவேனா இல்லையாங்கிறதுக்கும் என்னால உத்தரவாதம் கொடுக்க முடியாது.

இதையெல்லாம் யோசிச்சு நீங்க முடிவு எடுங்கள் .இப்ப சாய்ஸ் உங்ககிட்ட தரேன். நீங்க தான் முடிவெடுத்து சொல்லணும். நீங்க எடுக்கிற முடிவு எதுவாக இருந்தாலும் நான் சந்தோஷமா கேட்டுக்குவேன்.”

“ ஆக மொத்தமா என் தலையில போட்டுட்டீங்கல்ல .நந்தினி நீ சொன்ன மாதிரி தான் நானும்..

இயல்பான ஒரு வாழ்க்கைக்கு இன்னமுமே தயாராகவில்லை. எஸ்தரை மறந்துட்டு வெளியே வருவானா அப்படிங்கறது தெரியாது .

இத்தனை நாளா நிறைய முறை கேட்டிருக்காங்க ..நிறைய தடவை இன்னொரு கல்யாணத்தை பத்தி பேசி நிறைய சண்டை இதெல்லாம் தாண்டி தான் வந்தேன் .

உங்கள பார்க்கறதுக்கு முன்னாடி இந்த ஒரு வருஷமா நிறைய முறை இது சம்பந்தமா பேச்சு வார்த்தை போய் இருக்குது .

ஒவ்வொரு முறையுமே விலகி வருவதற்கான முக்கிய காரணம் இதுதான் .என்னால மறுபடியும் வாழ முடியுமான்னா எனக்கு சொல்ல தெரியல .

சோ ..கல்யாணம் பண்ணினா நம்ம வாழ்க்கை எப்படி இருக்கும்னா ..ரயில் சிநேகிதம் மாதிரி …

ஒரு பஸ் பிடிச்சு குறிப்பிட்ட சுற்றுலாவுக்கு போவமே.. தெரியாத முகங்கள் எத்தனையோ பேர் இருப்பாங்க.

அந்த நிமிடம் தேவைக்காக பேசிக்கிட்டு நட்பு பாராட்டிகிட்டு கலகலப்பா அந்த நேரத்தை நகர்த்திட்டு ,பிறகு பை பை சொல்லிட்டு போவோமே ..அது மாதிரியான ஒரு நிலையில தான் நானும் இருக்கிறேன் .

ஒரு வேலை அவங்க ஆசைப்படற மாதிரி நம்ம கல்யாணம் முடிஞ்சுதுன்னா நீயும் நானும் கூட அது போல தான்.
அதனால எனக்கு பெருசா எதுவும் தெரியல .”

“தேங்க்ஸ் .. அப்படின்னா ஓகே. நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிடுறேன். அதே மாதிரி நீங்களும் சொல்லிடுங்க.

நல்ல பிரண்ட்லியா நண்பர்கள் போல ஒரு வீட்ல இருக்கலாம். ஓடிப் பிடிச்சு விளையாடற மூணு குழந்தைங்க இருக்காங்க.

வாழ்க்கை கொஞ்சம் சுவாரசியமா தான் போகும்ணு நினைக்கிறேன் .”

“ஆக முடிவே பண்ணிட்டீங்களா ரொம்ப நல்லது ..அப்படின்னா இன்னொரு விஷயத்தை நானும் சொல்லிடறேன் .

அந்த வீட்டுக்காக தானே வேலைக்கு போகணும்னு சொல்லிக்கிட்டு இருந்த.. அந்த வீடு நார்மலா மாச டியூ எவ்வளவு கட்டணும்.. தெரிஞ்சுக்கலாமா .‌”

“கிட்டத்தட்ட 10,000 ரூபாய் “

“வீட்டை நான் பார்த்தேனே.. ரொம்ப சின்ன வீடு ..மாடியில் கூட ரூம் இருக்கு இல்லையா..”

“ஆமாம் .அது அப்போ ஏதோ ஒரு ஆர்வத்தில் கட்டினோம். இப்ப அத பத்தி எல்லாம் யோசிச்சு என்ன ?”.

“அப்படி இல்ல ..எனக்கு என்ன தோணுதுனா.. நீ அந்த வீட்டை வாடகைக்கு கொடுத்துடலாம் .இது என்னோட ஒப்பீனியன் தான் .கட்டாயம் கிடையாது .

வீடு கொஞ்சம் சின்னது கல்யாணத்துக்கு பிறகு எப்படியும் நீ இங்க தானே வரப்போற ..’

“நல்லா இருக்கே ஏன் நீங்க உங்க குடும்பத்தோட அங்க வர மாட்டிங்களா ..”

“நல்ல கேள்விதான் வரலாம் ஆனால் அந்த வீடு ரொம்ப சின்னதா இருக்குது .

.நிச்சயமா அஞ்சு பேர் தங்கற அளவுக்கு கிடையாது . என் வீடு கொஞ்சம் பெரியது .உன்னோட வீட்டை கம்பேர் பண்ணி பார்க்கும் போது.. சோ இங்க தாராளமா தங்கிக்கலாம்.. .

பெஸ்ட் ஐடியா என்னன்னா ..அந்த வீட்டை நீ வாடகைக்கு கொடுத்துட்டு அந்த பணத்தை டியூ கட்றதுக்கு மாத்தி விட சொல்லிடலாம்.

பிரச்சனை கிடையாது .வீட்டில் இருந்து உன் பையனை ரொம்ப நல்லா பாத்துக்கலாம் .கூட இருந்து பார்க்கும் போது முன்னாடி மாதிரி அப்பா இல்லை என்கிற அந்த வார்த்தை வராது.

ஓரளவுக்கு மேனேஜ் ஆகிடும்னு தோணுது .என்ன சொல்ற .இந்த ஐடியா கொஞ்சம் மொக்கையா தோன்றினாலுமே இது நல்ல ஐடியா தான்.

இது சம்பந்தமா நிறைய பேசிட்டோம் அப்பா அம்மா கிட்ட சொல்லிடறேன் .கல்யாணத்துக்கு சம்மதம்ணு..
இதுக்கு மேல இதை பத்தி பேச வேண்டாம்..

நம்மள விடவும் நம்மள சுத்தி இருக்குற எல்லாருமே நிறைய பேசியாச்சு ..ஃப்ரீயா இருக்கும் போது ஒரு முறை நீ என்னோட வீட்டுக்கு வந்து பார்க்கலாம்”.

நான் பொண்ணுங்க கிட்ட சொல்லிடுறேன் .. ஒரு நாள் நீ என் வீட்டுக்கு பையனோட வந்து பாரு..”ஒரு நண்பர்கள் மீட்டிங் போல பேசி ஒரு முடிவுக்கு வந்திருந்தனர் .கிட்டத்தட்ட அக்ரிமெண்ட் கல்யாணம் போல தான்..

நீ உன்னோட வேலையை பார்த்துக்கோ ..நான் என்னோட வேலையை பார்த்துக் கொள்வேன். நமக்கு நடுவுல எதுவுமே இல்லை பார்க்கும் போது ஹாய் ..பாய் சொல்லிக்கலாம்.

நட்பு ரீதியா பேசிக்கலாம். எழுதப்படாத ஒரு உடன்படிக்கையை இரண்டு பேருக்கும் நடுவே உருவாக்கி அதற்கு மனரீதியாக கையெழுத்திட்டு அன்றைக்கு பிரிந்திருந்தனர்.

இதோ இன்றைக்கு எல்லாமே முடிவாகி சிறிய அளவில் நண்பர்கள் முன்னிலையில் சர்ச்சில் இருவருக்கும் ஃபாதர் முன்னிலையில் திருமணம் முடித்து அருகில் இருந்த சிறு ஹோட்டலில் உணவருந்தி.. நேராக ரெஜிஸ்டர் மேரேஜ் செய்வதற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.

இதோ இன்று நடந்தது போல இருந்தது. 15 நாட்கள் தாண்டி விட்டது .நந்தினியின் வீட்டிலிருந்த மொத்த பொருட்களையுமே நந்தினியின் பெற்றோரிடம் ஒப்படைத்து இருந்தான்.

ஒரு சிறு பொருள் கூட இங்கே கொண்டு வரவில்லை . நந்தினியின் உடைகள் ஆத்விக்கின் உடைகள் மட்டுமே இங்கு இவனது வீட்டிற்கு ஷிப்ட் ஆகி இருந்தது .

நந்தினியின் வீட்டை கீழே ஒருவருக்கும் மாடியில் ஒருவருக்குமாக வாடகைக்கு விட்டிருக்க ..நேரடியாக பேங்க் அக்கவுண்டில் பணம் செலுத்துவது போல ஏற்பாடு செய்துவிட்டு வந்திருந்தான்.

சரியாக குறிப்பிட்ட நாளில் பணத்தை அக்கவுண்டிற்கு மாற்றுகிறார்களா என்று செக் செய்வது மட்டும் நந்தனியின் வேலை எனும் அளவிற்கு மாற்றி இருந்தான்.

இந்த 15 நாட்களுமே நன்றாகவே சென்று கொண்டிருந்தது நந்தினிக்கு..

மூன்று குழந்தைகளோடு விளையாடுவது ..ஆத்விக்கைப் பள்ளியில் அழைத்துச் சென்று விடுவது என நேரம் நன்றாகவே சென்று கொண்டிருந்தது.

இரண்டு பெண் குழந்தைகளோடு இவள் ஐக்கியமாகி இருக்க ,அங்கே ஆத்விக் ஜானோடு ஐக்கியமாகி இருந்தான்.

எலிசாவிற்கு நந்தினியை எப்படி அழைப்பது என்று நிறைய குழப்பம் இருந்தது. மெல்ல நந்தினியிடமே வந்து கேட்டிருந்தாள்.

ஒரு விரலால் அவளை சுரண்டி அழைத்தவள். என்ன? என்று கேட்க ..”வந்து நான் உங்களை எப்படி கூப்பிடட்டும்.. அம்மான்னு என்னால கூப்பிட முடியாது .”என்று நேரடியாகவே சொல்ல ..ஒரு நிமிடம் முகம் சுருங்கினாலுமே அடுத்த நொடி அழைத்து அருகே அமர வைத்தவள்.

“ஆத்விக் அப்பாவை எப்படி அழைக்கிறான்..ஜான் அப்பான்னு தானே.

நீயும் என்னை நந்தினி அம்மான்னு கூப்பிடு ..வேலை முடிஞ்சது உனக்கு ஓகே தானே” என்று கேட்க நந்தினி அம்மா என சொல்ல ஆரம்பித்து ,இரண்டு குழந்தைகளுமே அதை பெயரில் அழைக்க, இங்கே ஆத்விக்கோ ஜான் அப்பா.. ஜான் அப்பா என்று ஜான் எங்கெல்லாம் செல்கிறானோ அங்கே எல்லாம் வீட்டை சுற்றி வருவான்.

சமையலைப் பொருத்தவரைக்கும் இரண்டு பேருமே இணைந்து சமைத்துக் கொண்டனர் .

காய்கறிகளை இவள் வெட்டினால் என்றால் அடுப்பு அருகே நின்று வேலை செய்வது பெரும்பாலும் ஜான் தான்.

இத்தனை நாளாக வீட்டில் இருந்து வேலை செய்தவன்.. இவள் இங்கே வரவுமே வேலையை ஆபீஸில் சென்று செய்வது போல மாற்றி இருந்தான்.

அது மட்டும் அல்ல ஆபீஸில் இவனுக்கு பிரமோஷன் கூட கொடுத்து இருக்க ..இப்போது சம்பளம் நன்றாகவே வந்தது.

முன்பு போல இரவு 10 மணி ஆவது கிடையாது. காலையில் 10:00 மணிக்கு ஆபீஸ் என்றால் ஆறு மணி அதிகபட்சமாக 7 மணி வரையிலுமே ஆஃபீஸில் அமர்ந்திருப்பது ..

அதை தாண்டி அரை நிமிடம் கூட அங்கே உட்காருவது கிடையாது .

நேராக வீட்டிற்கு வந்தவன் குழந்தைகளோடு விளையாட ஆரம்பித்து இருந்தான்.

நந்தினி கூட பழைய மன நிலையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.

முன்பு போல விரக்தியில ஏன் வாழ்கிறோம் என்கின்ற அந்த மனநிலை இப்போது இருவருக்குமே கிடையாது.

ஏதோ ஒரு
வகையில் வீடு கலகலப்பாக இருந்தது. நந்தினி வந்த பிறகு..

அது ஆத்விகினாலா அல்லது இரு பெண்களினாலா.. நான்காவதாக வந்த நந்தினியாலா... தெரியாது ஆனால் வாழ்க்கை சற்று சுவாரசியமாக நகர ஆரம்பித்தது.
 

NNK-15

Moderator
11


“ஜான் ஜான்” என்று பதட்டமாக கத்திக் கொண்டிருந்தாள் நந்தினி.


வேகமாக பதறி அடித்து ஆத்விக்கை கையில் எடுத்துக்கொண்டு ஓடி வந்தான்.


“ எலீசா வாந்தி எடுக்கறா ஜான்” என்று பாத்ரூமை கை காட்டினாள்.


“என்னன்னு தெரியல.. நான் ஒன்னும் செய்யலை. நார்மலா இப்ப தான் எழுந்தா ..ஸ்கூலுக்கு புறப்பட்டுட்டு சாப்பிட மட்டும் தான் செஞ்சா.. ஜான் இங்கே வந்து வாந்தி எடுத்துக்கிட்டு இருக்கிறாள்” என்று கைகாட்ட வேகமாக மகளை கவனிக்க அருகே சென்றான்.


“என்ன ஆச்சு ..இரு வரேன். சுடுதண்ணி தரேன்..முதல்ல முகம் கழுவு “என மகளுக்கு வேக வேகமாக ஒவ்வொன்றையும் எடுத்துக் கொடுத்தவன் கையில் தூக்கிக்கொண்டு ஹாலில் வந்து அமர வைக்க ..இப்போதும் கூட மூக்கு சிவந்து இருந்தது .


“என்ன ஆச்சு.. காய்ச்சல் ஏதாவது அடிக்குதா “என பதறியபடி நெற்றியில் தொட்டுப் பார்க்க அமைதியாக அமர்ந்திருந்தாள் எலீசா.


“ எலீசா என்ன ஆச்சு. என்ன செய்யுது சொல்லு.” என்று ஜான் கேட்க ..மெல்ல நந்தினியை கை காட்டினாள்.


“ இவங்க சமைச்ச சாப்பாட்டை தான் நான் இப்ப சாப்பிட்டேன். அதை சாப்பிட்ட உடனே எனக்கு வாந்தி வந்துருச்சு “என்று சொல்ல ..திகைத்தபடி நந்தினி “என்ன ஆச்சுன்னு தெரியலையே.. இருங்க எடுத்துட்டு வரேன் .”என்று உள்ளே சென்றவள்.. ஒரு சிறு தட்டில் உணவை கொண்டு வந்து நீட்ட ..எடுத்து வாயில் வைத்தவனின் முகம் அஷ்ட கோணலாக மாறியது .


திரும்ப இவள் கையிலே கொடுத்தவன் “ இப்ப தெரியுது எதுக்காக ஆத்விக் அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்தான்னு.. இவ்வளவு மோசமான சமையற்காரியாகவா இருப்ப.. உண்மைய சொல்லு நந்தினி. உனக்கு சமைக்கவே தெரியாதா.. “


‘விளையாடாதீங்க ஜான் அவ தான் கிண்டல் பண்றான்னா நீங்களும் என்னை கிண்டல் பண்றீங்களா .ஏன் இந்த சாப்பாட்டுக்கு என்ன “என்று வேகமாக வாங்கி வாயில் வைத்தவனின் முகமும் அஷ்ட கோணலாக மாறியது .தலையை சொரிந்தபடி..” இல்ல நான் பிரட் ஆம்லெட் நல்லா போடுவேன் .எப்பவுமே ஆத்விக்கிற்கு அது தான் கொடுப்பேன் .அப்புறமா அவசரத்துக்கு ஏதாவது ஒன்னு சமைத்து எடுத்துட்டு போவேன்..


நிறைய நாள் அம்மா வீட்டில் இருந்து தான் எடுத்துட்டு போவேன் .பெருசா சமைச்சதெல்லாம் இல்ல.” என தலையை சொரிய ..


”சரியா போச்சு இப்ப தெரியுது.. ஆக அம்மாவை வேலை வாங்கிட்டு அப்படியே சுத்திக்கிட்டு வந்து இருக்கற..


இதுவரைக்கும் ஒழுங்கா சமையல் கூட கத்துக்கலை.. இதுல பிரட் ஆம்லெட் தான் போடுவேன்னு திரும்ப வேற சொல்லற…


இப்போ எனக்கு நல்லா தெரியுது .ஆத்விக் ஏன் அவ்வளவு வீக்கா இருந்தாண்ணு.. ஒழுங்கா சமைச்சு போடாமலேயே பட்டினி போட்டு அந்த பையனை கொடுமைப்படுத்தி இருக்கிற..”


“ ஜான் அவ கூட சேர்ந்து நீங்களும் வம்பு பண்ணாதீங்க..”


“ நல்லா யோசிச்சு பார்த்தேன் நந்தினி .இங்க வந்த இத்தனை நாள்ல உன்னை நான் அடுப்புக்கிட்டேயே விட்டதில்ல.. மேக்சிமம் காய் வெட்டிட்டு எக்ஸ்ட்ரா வேலை மட்டும் தான் செஞ்ச..


நானும் அத பத்தி பெருசா கண்டுக்கலை.. சரி யார் செஞ்சா என்னன்னு நினைச்சேன் .இன்னைக்கு தான் தெரியுது .தனியா சமையல் கட்டுகிட்ட விட்டா உன் இஷ்டம் போல எதையாவது செஞ்சு வச்சு குழந்தையை பயம் காட்டுவியா?


எலீசா அந்த சாப்பாட்டை நீ சாப்பிட வேண்டாம் .அப்பா உனக்கு நல்ல கடையில வாங்கி தரேன் “என்று அருகே சமாதானம் சொல்ல அமைதியாக ஓரமாக சென்று அமர்ந்து கொண்டாள்.


சோகமாக இருக்கிறாள் என்று புரியவும் எலிசா மெல்ல அவளுக்கு அருகே வந்து..” சாரி நந்தினிமா கோச்சுக்காதீங்க நெஜமாவே அது சாப்பிட்ட பிறகு தான் வாந்தி வந்துச்சு .அதுதான் அப்பாகிட்ட சொன்னேன்” என்று சொல்ல சட்டென்று சிரித்து விட்டாள்.


“ என்னுடைய சமையல் எப்படி இருக்குன்னு எனக்கே தெரியும் எனக்கு காலையில யோசிச்சு யோசிச்சு தான் உனக்கு தட்டுல போட்டு கொடுத்தேன் .


நீ என் மானத்தை வாங்கிட்ட.. பாத்துக்கலாம் .இதெல்லாம் சகஜம்தான் .சீக்கிரமா நல்லா சமைக்க ட்ரை பண்றேன்”.


.”ரிஸ்க் எல்லாம் எடுக்காதீங்க.. அப்பா ரொம்ப நல்ல சமைப்பாங்க. அப்பாவையே சமைக்க சொல்லிடுங்க .


அம்மா இருக்கும் போது கூட நிறைய நாள் அப்பா தான் சமைச்சு கொடுப்பாங்க.. மேரி ஸ்கூலுக்கு நேரமாச்சுது” என்று கிளம்ப அமைதியாக சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்..


ஒரு வாரம் தன்னுடைய தாய் தந்தையை வீட்டிற்கு என்றால் அடுத்த வாரம் எஸ்தரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.


ஒரு வாரம் இவளது வீட்டிற்கு என வாரா வாரம் அழைத்து செல்ல..நாட்கள் நன்றாகவே நகர்ந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதம் தாண்டி விட்டது .


இப்போது இவளுக்கு சற்று வீட்டில் போரடிப்பது போல தோன்றியது .


வேலை இல்லாமல் வீட்டிலேயே இருப்பது நேரத்தை நெட்டி தள்ளுவது போல தோன்ற.. மெல்ல ஜானிடம் பேசினாள்.


“ எனக்கேத்த மாதிரி ஏதாவது வீட்ல இருந்தே செய்ற மாதிரி வேலை கிடைக்குமா. கம்ப்யூட்டர் ஒர்க்கெல்லாம் எனக்கு நல்லா தெரியும். அல்ரெடி நான் வேலைக்கு போனது கூட ஒரு ஐடி சென்டருக்கு தான் “என்று கேட்க..


“ நானும் இதைப்பற்றி யோசிச்சேன் நந்தினி. ஏதாவது பார்ட் டைம் ஜாப் மாதிரி கிடைக்குதான்னு தேடறேன்” என்று சொல்லிவிட்டு சென்றான் .


அந்த வாரத்திலேயே அவளுக்கு ஏற்றால் போல ஒரு வேலையை ரெடி செய்தும் வந்திருந்தான்.


“வீட்டில் இருந்து செய்கிற வேலைதான்.. காலையில பத்து மணிக்கு ஸ்டார்ட் பண்ணினா மொத்தமா அஞ்சு மணி நேரம் வேலை .மதியம் ஒரு மணி வரைக்கும் எடுத்துக்கோ .


பிறகு மதியத்துக்கு மேல ரெண்டு மணி நேரம் .அப்புறமா பசங்க வந்துருவாங்க .உனக்கு டைம் சரியா போகணும்னு நினைக்கிறேன் .ஏதாவது டவுட் இருந்தா தாராளமா கேட்கலாம்.


இது கம்ப்யூட்டர் லைன்ல தான் வேலை..எனக்கு தெரிஞ்ச வேலை தான் .உனக்கு ஏதாவது இந்த வேலையில் டவுட் இருந்தா கேளு நான் சொல்லித் தரேன்” என்று சொல்லி இருக்க ஆர்வமாக அதை செய்ய ஆரம்பித்தாள்.


இரவு ஒன்பது முப்பது எனும் போது குழந்தைகள் எல்லோருமே அவரவர் இடத்தில் சென்று படுக்க சென்று விடுவார்கள் .


ஆத்விக் சென்று ஜானோடு தூங்கிக் கொள்ள.. இங்கே நந்தனியோடு எலீசாவும் மேரியும் வந்து படுத்துக் கொள்வர் .


இரண்டு பெட்ரூம் இருந்ததினால் பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை.


வழக்கம் போல தான் இவர்களது நாட்கள் நகர்ந்தது.


ஜானிற்கும் நந்தினிக்கும் நடுவே இயல்பான பேச்சு வார்த்தையில் இயல்பாக நாட்கள் நகர்ந்தது.


சில நேரங்களில் எதையாவது நந்தினியிடம் சொல்லி வம்புக்கு இழுப்பது.. கிண்டல் செய்வது என ஜானிற்கும் பொழுது நன்றாகவே நகர்ந்தது.

நந்தினியும் பேச ஆரம்பித்தால் என்றால் சரிக்கு சரியாக பேசுபவள்.


ஜான் எதாவது வார்த்தையாட ஆரம்பித்தால்.. சரி சரியாக இவளுமே மல்லு கட்டுவாள். நேரம் இயல்பாக கழியும்.


அன்றைக்கு இரவு ஒன்பது மணியை தாண்டி இருக்க.. எலீசா, மேரி இரண்டு பேருமே அவர்களது அறைக்குள் படுக்க சென்று இருந்தனர் .ஆத்விக் கூட தூங்கி இருந்தான் .


இவளது லேப்டாப்பை எடுத்துக்கொண்டு ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருந்தாள்.


நீண்ட நேரம் வரையிலுமே செய்து கொண்டிருக்க.. ஜானிற்கு கூட வேலை இருந்தது .


அவன் ஒரு ஓரமாக அமர்ந்து லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான்.


10:30 தாண்டவும் தூங்கலாம் என எழுந்தவன் இவளை கவனிக்க.. அப்போதுதான் கவனித்தான்.. தலையை அருகில் இருந்த சோபாவில் சாய்த்து இருந்தவள் அவளை அறியாமல் தூங்கி இருந்தது.


அவளுக்கு அருகில் வந்து அவளின் முன்னால் கை அசைத்து பார்க்க எந்த அசைவும் அவளிடத்தில் இல்லை.


‘சரியா போச்சு இதுதான் வேலை செய்ற அழகா.. இப்படித்தான் டெய்லியும் நீ வேலை செய்றியா .என்ன பகல்லேயும் இப்படித்தான் தூங்கிடுவியா ‘தனக்குள் சொல்லிக் கொண்டவன் மெல்ல கம்ப்யூட்டர் லேப்டாப்பை நகர்த்தி என்ன செய்திருக்கிறாள் என்று பார்க்க..


ஏதோ ஒரு ப்ரோக்ராம் அதிலேயும் கால்வாசியில் நிறுத்தி இருந்தாள். அதற்கு மேல் அவளுக்கு தெரியவில்லையா அல்லது அதற்கு முன்பாகவே தூங்கி விட்டாளா என்று தெரியாத நிலை ..


இவனை பொறுத்த வரைக்கும் ஐடி ஃபீல்டில் இருந்ததினால் எளிதாக வேகமாகவே வேலையை செய்ய முடியும் .இவனுக்கு தெரிந்த புரோகிராம் தான் மெல்ல நகர்த்தி வேகமாக புரோகிராமை தட்ட ஆரம்பித்தான்.


கிட்டத்தட்ட அரை மணி நேரம் எல்லாவற்றையுமே சால்வ் செய்து, சேவ் செய்து, சட்டவுன் செய்து மூடி வைத்துவிட்டு பார்க்க.. இப்போதும் கூட அதே தூக்கத்தில் தான் இருந்தாள்.


“சரியா போச்சு இப்ப என்ன பண்றது . இப்படியே உட்கார்ந்து இருந்தா.. காலையில கழுத்து வலியோடு தான் இவ எந்திரிப்பா .”என யோசித்தவன் மெல்ல கையை அசைக்க.. எந்த அசைவும் அவளிடத்தில் இல்லை.


மெல்ல அருகே சென்றவன் “நந்தினி எந்திரிச்சு உள்ளே போய் தூங்கு” என்று தோளை தட்ட ..அந்த தூக்கத்திலும்” ஜான் என்னை ரூமுக்கு தூக்கிட்டு போ “என்று சிறு குழந்தை போல கையை தூக்க இவனுக்கு நன்றாக தெரிந்தது ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறாள்.. ஏதோ ஒரு கனவில் இருக்கிறாள் என்று..


இரண்டு நிமிடம் யோசித்தவனுக்கு புன்னகை ஒன்று உற்பத்தியானது. யோசிக்காமல் மெல்ல அவளை கையில் ஏந்த ஆரம்பித்து இருந்தான்.


கையில் தூக்கிய அந்த நொடியை கண்விழித்து இருந்தாள்.


முதலில் அவளுக்கு எதுவுமே புரியவில்லை .ஏதோ கனவில் இருப்பது போல அவனின் முகத்தையே பார்த்தவள் பிறகு சுற்றிலும் பார்த்து கடைசியாக அப்போது தான் அவள் உணர்ந்தது.. தான் அந்தரத்தில் இருக்கிறோம் என்பது புரிய.. சட்டென்று தோள்களில் கை கொடுத்தவள்.” ஜான் என்ன செய்றீங்க “என வேகமாக அதிர்ச்சியாக கேட்க ..


”நீதான சொன்ன ஜான் என்னை தூக்கிட்டு போங்கன்னு.. அதுதான் தூக்கிட்டேன் .இனி போக போறேன் “என்று சொல்ல.. சட்டென்று இறங்கி இருந்தாள்.


“ விளையாடாதீங்க நான் எப்ப சொன்னேன் .”


“இப்பதான் கொஞ்சம் முன்னாடி அதுவும் அந்த சோபால சாஞ்சி படுத்துக்கிட்டு இருந்தியே” .


“நான் தூங்கிட்டேனா வேலை தானே செஞ்சுகிட்டு இருந்தேன்.”


“ வேலை செஞ்சியா எவ்வளவு நேரமா.. எனக்கு தெரியவே இல்லையே .லேப்டாப் ஓப்பன்ல இருந்தது .நீ நல்லா தூங்கி இருந்த.. பத்தாததுக்கு தூக்கிட்டு போக வேற சொல்ற..


நானும் கூட முதல்ல விளையாடறதா தான் நினைச்சேன் பிறகு பார்த்தால் ஆழ்ந்த தூக்கத்துல இருந்த மாதிரி இருந்தது .


அப்படியே விட்டுட்டு போக முடியாதுல்ல.. இந்த பக்கம் சரிந்து விழுந்து ஏதாவது அடிபட்டா நாளைக்கு யார் பதில் சொல்றதாம். அதனாலதான் சேப்டியா “.


“போதும் போதும் ..இதுக்கு மேல எதுவும் சொல்ல வேண்டாம். குட் நைட் “என்று வேகமாக சொன்னவள் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள் ..


அமைதியாக தன் அறைக்கு வந்தவன் அடுத்த வேலையாக நந்தினிக்கு போனில் அழைத்து இருந்தான்.


“ ஹலோ பிரண்ட்லியா தான் தூக்கினேன் .தேவையில்லாம எதையும் கற்பனை பண்ணிக்க வேண்டாம். அப்புறமா கலாய்க்கலாம்னு நினைச்சு தான் தூக்கினேன்.


நீ கண் விழித்துட்ட.. அதனால் தான் ஐ அம் சாரி. தூக்கினது பிடிக்கலைன்னா இனி இதுபோல எப்பவும் நடக்காது… நான் எழுப்பி விட்டுருக்கனும்ல” என்று அவளிடமே கேள்வி கேட்க..


“இதுக்கு என்கிட்ட பதில் இல்ல..”


“ ஓகே குட் நைட்.. பரவால்ல ரொம்ப வெயிட் இல்ல. கரெக்டா தான் மெயின்டன் பண்ற போல” என சிரித்தபடி போனை வைத்தான்.


இவளுக்கோ தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.


“ என்ன நந்தினி என்ன தூக்கம் இது.. தூக்கின மாதிரியே தெரியலையே .ஏதோ ஒரு மயக்கம் மாதிரி.. எப்படி கண் அசந்த” தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள்..


அடுத்த நாள் காலையில் வழக்கம் போல அனைவரும் அமர்ந்து உணவை அருந்தி கொண்டிருக்க.. அப்போதுதான் அவளுக்குள் ஒரு மாற்றம் தெரிந்தது.


உணவு சாப்பிட்ட பிறகு லேசாக வாந்தி வருவது போல, அருந்திய உணவு தொண்டையில் நிற்பது போல தோன்ற சிறிது சாப்பிட்டவள் போதும் என எழுந்துவிட்டாள்.


“ என்ன ஆச்சு நந்தினி . சாப்பாடு நல்லா தானே இருக்குது. ஏன் கொஞ்சமா சாப்பிட்டுட்டு எந்திரிக்கற..”


“ போதும் ஜான் நைட் நிறைய சாப்பிட்டுட்டேன் போல இருக்குது .அது என்னமோ போல இருக்குது .


இப்ப சாப்பிடறது தொண்டைக்குள்ள நிக்கிற ஒரு ஃபீல் . இது மாதிரி எப்பவும் ஆனது இல்லை சரியா டயசிஸ் ஆகல போல இருக்குது அதனால எனக்கு இது போதும்”.


“ அப்படின்னா ஒன்னு செய் சூடா தண்ணி வெதுவெதுப்பா வச்சு குடி . நல்லா இருக்கும் “என்று சொல்ல சரியென சொன்னபடி நகர்ந்தாள்..


நாட்கள் வேகமாக நகர்ந்தது இப்போதெல்லாம் சனி ஞாயிறு கிழமைகளில் அருகில் இருந்த ஏதாவது ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தான்.


பெரிதாக வாகனம் எதுவும் கிடையாது .இவனுடைய வண்டியில் இருவரை ஏற்றினால்.. நந்தினி ஒருவரை ஏற்றிக்கொண்டு அருகில் இருக்கின்ற பார்க் ,தியேட்டர் என வலம் வந்தனர்..


கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தாண்டி விட்டது .வாழ்க்கையில் நிறைவாக சென்று கொண்டிருந்தது .மகிழ்ச்சி நிறையவே இவர்களிடத்தில் இருந்தது.


அன்றைக்கு நந்தினியை எஸ்தரின் தாயார் அழைத்திருந்தார் .


எஸ்தரின் தாயார் மட்டுமல்ல ஜானின் தாயாரும் கூட..


எஸ்தரின் வீட்டிற்கு வருவதாக சொல்லியிருந்தார்.” என்னமா என்ன விஷயம் .ஏன் திடீர்னு கூப்பிடறீங்க “சற்று தயங்கியபடி தான் இவள் பேசியது.


“ஜானின் தாயார் எஸ்தரின் அருகே தான் அமர்ந்திருப்பார் போல இருந்தது .

அவர் போனை வாங்கி..


“வீட்ல குழந்தைங்க இல்ல தானே நந்தினி ஸ்கூலுக்கு போயாச்சு தானே..”


“ஆமாம் அத்தை.. திடீர்னு தனியா வான்னு சொல்லவும் ஒரு மாதிரியா இருந்தது.”


‘ ரொம்ப நாள் ஆச்சு இல்லையா எப்பவுமே குழந்தைகளோட சேர்ந்து தான் வர்ற.. இன்னைக்கி எல்லாரும் ஸ்கூலுக்கு போய் இருப்பாங்க


உனக்கு கூட இன்னைக்கு வேலை இல்ல.. லீவு என்று சொன்ன மாதிரி இருந்தது .அதனாலதான் உனக்கு போர் அடிக்கும்னு இங்க வர சொன்னேன் .


கொஞ்ச நேரம் வந்தேன்னா பேசிட்டு இருக்கலாம் .இங்க சாப்டுட்டுட்டு பிறகு நீ வீட்டுக்கு போய்க்கலாம் . அதுக்காக தான் சொன்னேன் .”


“அவ்வளவுதானா.. நான் என்னமோன்னு பயந்துட்டேன் “.


“இதுல பயப்பட என்னமா இருக்குது . நீ அங்க வந்த பிறகு ரெண்டு குழந்தைகளும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க.. அதுக்கு ஸ்பெஷலா நாங்க நன்றி சொல்லணும்னு ஆசைப்பட்டேன் .


உனக்கு பிடிச்ச ஐட்டம்ஸ் என்னென்ன இருக்குதோ எல்லாத்தையும் சொல்லு. நாங்க சமைச்சு வச்சு வெயிட் பண்ணறோம் .மதியம் டின்னர் சாப்பிடலாம் .நிறைய நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம்.”


“ சரி மா இது என்ன பொண்ணுங்க மட்டும் கலந்துக்குற பார்ட்டியா..”


“ஆமாம்மா அப்படித்தானே நினைச்சுக்கோ ..உன்னோட அம்மாவுக்கும் கூட நான் போன் பண்ணி சொல்லிட்டேன். அவங்களும் வரேன்னு சொல்லி இருக்காங்க .


நம்ம நாலு பேரு மட்டும் பொதுவா எல்லா விஷயத்தை பத்தியுமே பேசலாம் .நேரத்தை நல்லபடியா என்ஜாய் பண்ணலாம்..


10 மணிக்கு இங்க நேரா வந்திடு சரியா “என்று நந்தினிவிடம் சொல்ல.. சரி என புறப்பட்டாள்.


கடைசி நேரத்தில் நந்தினியின் தாயார் வர முடியவில்லை என நின்று இருக்க ..அங்கே இவள் சென்றபோது எஸ்தரின் தாயாரும் ஜானின் தாயாரும் இருந்தனர் .


“என்ன நந்தினி சரியா சாப்பிடறதே இல்லையா .போன முறை பார்த்ததுக்கும் இப்ப பார்க்கறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குது.


ரொம்ப ஒல்லியான மாதிரி தெரியலற”என்று ஜானின் தாயார் கூற ..அப்போதுதான் திரும்பி கண்ணாடியில் பார்த்தாள்..


”உண்மையா ஒல்லி ஆன மாதிரியா தெரியறேன்” என்று கேட்க ..எஸ்தரின் தாயாரோ “ஆமாம் நந்தினி நான் பார்த்து கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு.


நல்லாவே தெரியுது‌. போன முறை இதே டிரஸ்ஸ போட்டுட்டு வந்து இருந்த.. அப்போ ரொம்ப டைட்டா இருந்தது. இப்ப ரொம்ப ஃப்ரீயா இருக்குது .உனக்கு தெரியலையா .”


“அப்படியா அம்மா எனக்கு தெரியலையே ..சரி என்னன்னு பார்க்கறேன் .”


“ஏன் இந்த ஜான் என்ன பண்றான். உன்னை கவனிக்கிறதே இல்லையா..” ஜானின் தாயார் கேட்க..


“ அம்மா அவரெல்லாம் ரொம்ப நல்லாவே கவனிச்சுக்கிறார். நல்லாவே சமைச்சு கொடுக்கிறார் .நான் தான் பார்க்க போனா எந்த வேலையும் வீட்ல செய்யறது இல்ல .”


“புருஷன் ,பொண்டாட்டினா அப்படி தான் இருக்கணும். ஜான் ரொம்ப நல்லாவே வேலை செஞ்சு தருவான். அவனுக்கு அது மாதிரி தானே பழக்கி வைத்திருக்கிறேன்.


எஸ்தர் இருக்கும் போது கூட அப்படித்தான் .பாதி நாள் ஜான் தான் வேலை செய்வான்.. எஸ்தரை வேலையே செய்ய விடமாட்டான் “என்று சொல்ல மகளின் ஞாபகம் வர எஸ்தரின் தாயார் முகம் சுருங்கிவிட்டது.. அமைதியாகிவிட்டார்.


அமைதியாக ஒரு ஓரமாகச் செல்ல..” இப்ப நீ எதுக்காக தனியா போய் உட்கார்ந்திருக்கிற.. நடக்கணும்னு விதி இருந்தா அது தானே நடக்கும். ஃப்ரீயா விடு .இப்பதான் பாரு நந்தனியும் உனக்கு ஒரு பொண்ணு மாதிரி தான் .நீ அவகிட்ட இயல்பா இருக்கலாம்.”


“ஆமாமா நானும் உங்களுக்கு ஒரு பொண்ணு மாதிரி தான் எஸ்தர்கிட்ட எப்படி இருப்பீங்களோ ..


அதே மாதிரி நீங்க என்கிட்ட இருக்கலாம் .”என்று அருகே சென்று அமர..

பொதுவாக பேசியபடி நேரம் மெல்ல நகர்ந்தது.


மதிய உணவு நேரம் வர விதவிதமான சமையல் அதிலும் இவளுக்கு என்னென்ன பிடிக்குமோ ..இவள் சொன்னது மட்டுமல்லாமல் சொல்லாத சில உணவுகளையும் சேர்த்து சமைத்து வைத்திருக்க..


மொத்தமாக எடுத்து இவளது தட்டில் வைத்து உண்ண சொல்ல..


வழக்கத்திற்கு மாறாக சிறிது அளவு சாப்பிட்டவளுக்கு மறுபடியும் வாந்தி வருவது போல தோன்ற.. சட்டென அங்கிருந்து எழுந்து வேகமாக விலகி ஓடினாள்.


 

NNK-15

Moderator
12

“என்ன இது.. இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு”எஸ்தரின் தாயார் கேட்க..

“ அதுதான் எனக்கும் தெரியல. எதுக்காக திடீர்னு வாந்தி வர்ற மாதிரி பண்ணிட்டு போறா.. “ஜானின் தாயார் யோசனையோடு பார்க்க ..சில நிமிட நேரத்திலேயே திரும்பி வந்திருந்தாள் .

“என்னன்னு தெரியல .சாப்பாட்டை பார்த்தா இப்ப எல்லாம் வாந்தி வர்ற மாதிரி ஆகுது .அதனாலே என்னால நிறைய சாப்பிட முடியல .எனக்கு இது போதும் மா “எஸ்தரின் தாயாரைப்பார்த்து சொல்ல ..

”அப்படியா சரி எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன் .ஆனாலும் மனசுக்கு ஒரு குறையா தான் இருக்குது .நான் பார்த்து பார்த்து சமைச்சு வச்சேன்.

நல்லா சாப்பிடுவேன்னு நினைத்தேன். நீ அப்படியே மிச்சம் வச்சுட்ட “சற்று கவலையாக ஒவ்வொன்றையும் எடுத்து ஒதுக்கி வைக்க..

ஜானின் தாயார் யோசனையோடு இவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் .

“நந்தினி ஏதாவது விசேஷமாக இருக்கறயா என்ன” என்று வேகமாக கேட்க.. சட்டென திகைத்தவள் புரிந்து கொண்டு..

“அய்யோ அதெல்லாம் ஒன்னும் இல்ல .நீங்க ..நீங்க கற்பனையை வளர்த்துக்காதீங்க .நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை “என்று வேகமாக சொல்ல..

அவர் சிரித்தபடி “அப்படியே இருந்தாலும் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். எனக்கு சந்தோஷம் தான் .ஜான் சந்தோஷமா இருந்தா எனக்கு அது போதுமே..”

“இல்ல.. அது மாதிரி ஏதாவது இருந்தால் முதலில் உங்க கிட்ட தான் சொல்லுவேன்.

இப்போதைக்கு அது மாதிரி எல்லாம் இல்ல ஏன்னா. ..

ஏன்னா..

“ஒன்னும் இல்ல அத்தை நேரம் ஆகிட்டு இருக்கு . நான் கிளம்பட்டுமா “என்று நகர.. யோசனையோடு செல்றவளை பார்த்துக் கொண்டிருந்தார்.

எஸ்தரின் தாயார் சற்று சோர்வாக அமர்ந்தார்..

“ஆமா நீ ஏன் இப்போ டல் அடிக்கிற.. நல்லா தானே இருந்த.. “இயல்பாக கேட்க..

“ஒன்னும் இல்லையே.. நான் நார்மலா தான் இருக்கிறேன்.”

“ என்ன !!அந்த பொண்ணு வாந்தி எடுத்தத பார்த்து உனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்குதா..”

“ ஐயோ நான் எதுக்கு பொறாமைப்பட போறேன். அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல .”

“பின்ன ஏன் முகம் இப்படி இருக்குதாம்.. முதல்ல ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ .ஜானை பத்தி எனக்கு நல்லா தெரியும்.

இந்த கொஞ்ச நாள்ல எல்லாத்தையும் மறந்துட்டு சேர்ந்து வாழ்ந்து இருப்பாங்கன்னு நீ நினைக்கிறாயா?

புரியுதுல்ல அவங்க பரஸ்பரம் ஒருத்தருக்கு ஒருத்தர் பிரண்ட்லியா பேசுறாங்க. அதை தாண்டி அங்க எதுவும் இருக்கிற மாதிரி தெரியல .

ரெண்டு முகத்தையும் பார்த்தா தெரியாதா? என்ன நடந்திருக்கும் என்று ..”

“அப்புறம் இது எப்படி?”

“ இது எப்படின்னா உனக்கு தெரியலையா.. அந்த பொண்ணு உடம்புக்கு ஏதோ பிரச்சனை இருக்குன்னு நினைக்கிறேன். “

“அச்சச்சோ என்ன சொல்றீங்க எஸ்தருக்கும் கூட அப்படித்தானே இருந்தது .அவ சொல்லாம இப்படி இழுத்து வச்சுக்கிட்டா ..அவ கூட சாப்பிடும் போது இப்படித்தான் வாந்தி எடுத்தா ..”

“ஹப்பா ஒரு வழியா இப்பவாவது புரிஞ்சுதே.. மூணு மாசம் பக்கம் ஆகப்போகுது. .
முதல்ல ஜான் கிட்ட இத பத்தி பேசணும்.”

“ஆமாம் முதல்ல ஜானுக்கு போனை போடுங்க .விஷயத்தை சொல்லுங்க .நம்ம ரெண்டு பேரும் வீட்டுக்கு போறதுனாலும் போலாம் “.

“இப்போ போய் என்ன செய்ய போற.. அவன் ஆறு மணி இல்லாமல் வேலையை விட்டு வரப் போறது இல்ல .”

“ இப்போ என்ன செய்யறது “.

“ஒன்னும் செய்ய வேண்டாம் நாளைக்கு எப்படியும் வீட்டுக்கு வருவான் .நான் அவன்கிட்ட பேசறேன் “என்றவர் அப்போதே ஜானின் நம்பருக்கு அழைப்பு விடுத்தார் .

எடுத்தவனிடம் “எப்ப வீட்டுக்கு வர போற.. நான் உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்குது. முக்கியமான விஷயம் .”

“உடனே பேசணுமா”.

“ கட்டாயமா பேசணும் .எப்ப வருவ ..வரேன் மா இன்னைக்கு எல்லாம் கொஞ்சம் பிசி .இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அங்க தான் வருவோம் ‌அப்ப பேசிக்கலாம் சரிடா .”

‘மறந்துடாத குழந்தைகளை அழைச்சிட்டு வந்துடு “என்று போனை வைத்தவர்.

“ ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வரானாம். அங்க வச்சு நான் பார்த்து பேசிக்கிறேன். பயப்படாத”.

“ நிஜமாகவே எனக்கு ரொம்ப பயமா இருக்குது .என்னோட பொண்ணை தான் நான் விட்டுட்டேன் .இந்த பொண்ணுக்கு ஏதாவதுனா என்னால சுத்தமா தாங்க முடியாது “.

“பயப்படாதே அது மாதிரி எதுவும் இருக்காது பார்த்துக்கலாம். பொண்ணு பார்க்க ஹெல்தியா தான் இருக்கறா..

எதுவும் இருக்காது ஆனாலும்.. எதுக்காக இப்படி வாந்தி வர்ற பீல் ஆகுதுன்னு தெரியணும் இல்லையா .

அது என்னன்னு பார்க்கணும் தானே‌ ஜான் கிட்ட சொல்லி ஹாஸ்பிடல் அழைத்துக்கொண்டு போக சொல்கிறேன் “என்று நகர்ந்தார்.

“இன்றைக்கு என்ன சமையல்” கேட்டபடி சற்று தொலைவில் வந்து நந்தினி நிற்க..

“வாங்க மேடம் நீங்கதான் சமையல் கத்துக்குற ஆளா.. அவ்வளவு தூரத்தில் இருந்தால் நான் என்ன சமைக்கிறேன்னு எப்படி தெரியும் .இப்படி வந்து இந்த திண்டுல உக்காரு..” என்று கை காட்ட இவளோ சிரித்தபடி..

“சரிதான் அவ்வளவு உயரத்துல என்னால ஏற முடியுமா .”

“ஏத்தி விட்டுட்டா போச்சுது “என சற்றும் யோசிக்காமல் எளிதாக அவளை தூக்கி திண்டில் அமர வைக்க.. திகைத்தது என்னவோ நந்தினி தான்.

விளையாட்டு போல பேசியபடி தூக்கி அமர வைத்திருந்தாலும் சட்டென ஒரு நொடி தோன்றியது என்னவோ எஸ்தரின் ஞாபகம் தான்.

ஒவ்வொரு முறை சமையல் அறைக்கு வரும் போதுமே இவன் சமையல் செய்கிறேன் என்று நின்றால் அவளை எப்போதுமே தூக்கி அங்கு அமர வைத்த வைத்தபடி பேசிக் கொண்டிருப்பது இவனது வாடிக்கை ..

இன்றைக்கும் இயல்பாக அதே செயல் சட்டென தோன்றியிருக்க.. இப்போது இவளுக்கு என்ன காரணம் சொல்வது என தெரியாமல் விழித்தான்.

இருவருக்கும் நடுவே மெல்லிய அமைதி நிலவியது. யார் முதலில் பேசுவது.. யார் ஆரம்பிப்பது என்பது போல அமைதியாக கழிய ..

அந்த நேரத்தில் இவன் வெங்காயம் வெட்டும் சத்தம் மட்டும் இவனது இதயத்தை போலவே தாள லயத்தோடு டக் டக் டக் டக் டக் டக் டக் என்ற சத்தத்தோடு நறுக்கி தள்ள ..

அந்த அமைதியை கலைப்பது போல எலீசா அந்த இடத்திற்கு ஓடி வந்தாள்.

“அப்பா எனக்கு ஒரு மேக்ஸ் வர மாட்டேங்குது .ஹோம் ஒர்க் பண்ண வரல “என்று சொல்ல சட்டென்று அமர்ந்திருந்த இடத்திலிருந்து இறங்கியவள்.

“ நான் போய் பார்க்கிறேன்” என்று சொன்னபடி எலீசாவை நகர்த்திக் கொண்டு நகர்ந்தாள்.

அவள் நகர்ந்த பிறகு தான் இதயம் சம சீராக துடிப்பது போல தோன்றியது இவனுக்கு..

தனக்குள் உருவாகும் உணர்வு என்னவென்று புரியாமல் தலையை கோதி கொடுத்தவன் சமையலை கவனிக்க ஆரம்பித்தான் .

அதே நேரத்தில் நந்தனி கூட அங்கிருந்து நகர்ந்து சென்றவள் எலீசாவுக்கு அருகே அமர்ந்திருந்தாலும் நினைவு என்னவோ சமையலறையில் நடந்தது தான் திரும்பத் திரும்ப கண் முன் தோன்றியது.

கணவனான ஜானின் நினைவு மெல்ல மெல்ல மறகிறதோ.. என்று தோன்ற ஆரம்பிக்க தன்னை அறியாமல் தலையை இடது வலமாக இல்லை என்பது போல ஆட்டிக் கொண்டாள்.

“நந்தினிமா நான் தப்பா போடறேனா.. ஏன் தலையை ஆட்டறீங்க “என்று எலீசா கேட்க..

“ ஒன்னும் இல்லடா கொடு” என கையில் வாங்கியவள் நோட்டையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

எதுவுமே செய்யத் தோன்றவில்லை .சற்று முன்பு தோன்றிய அந்த உணர்வு அதை என்ன என்று வரையறுக்க தெரியாமல் அமர்ந்திருந்தாள்.

ஆத்விக் அவளுக்கு அருகே வந்தவன் அவளது மடியில் அமர.. அப்போது தான் சுய உணர்வு பெற்றால் . சட்டென கையில் வைத்திருந்த நோட்டு புத்தகத்தை பார்த்தவள் வேகமாக..

“இந்த இடத்தில் தப்பு பண்ணி இருக்கற தெரியுதா.. பிளஸ் தானே பண்ண சொல்லி இருக்காங்க .நீ கழிச்சு வச்சிருக்கிற” என்று சொல்ல..

“ஆமாம் நந்தினி மா.. நான்தான் தப்பு பண்ணி இருக்கிறேன்.” என்று சரியாக எழுத..

அங்கே ஜான் சமையலை முடித்து இருந்தவன் இவர்களை சாப்பிட அழைத்து இருந்தான்.

“ சமையல் முடிஞ்சது சாப்பிட வரலாம்” என்று சொல்ல மூவரையும் அழைத்துக் கொண்டு நகர்ந்தாள் .

ஒவ்வொன்றாக கொண்டு வந்து டைனிங் டேபிளில் அடுக்க... அவன் எதிரில் அமர முடியாது என்பது போல மகனுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டவள் மெல்ல அங்கிருந்து நகர்ந்து இருந்தாள்.

“நீங்க சாப்பிடுங்க இவனுக்கு ஊட்டிட்டு பொறுமையா சாப்பிடுகிறேன் “என்று நகர.. இவன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

அமைதியாக எலீசாவிற்கு தட்டில் வைத்தவன் மேரியை அருகே அமர வைத்து உணவூட்ட ஆரம்பித்து இருந்தான்.

ஊட்டி முடித்து இவனும் உணவு அருந்திய பிறகும் கூட நந்தினி அந்த இடத்திற்கு வந்திருக்கவில்லை .

மகனுக்கு உணவு ஊட்ட சென்றவள் திரும்பி இந்த இடத்திற்கு வரவில்லை.

நீண்ட நேரம் வரைக்கும் காத்திருந்தவன் பிறகு நந்தினி இருக்கின்ற இடத்தை நோக்கி சென்றான் .

அங்கே மகன் மகனுக்கு உணவு ஊட்டி முடித்திருக்க ..அவன் தோளில் தூங்கி இருந்தான் .

தோளில் மெல்ல தட்டியப்படியே வானதைப் பார்த்து நின்றிருந்தால் நந்தினி.

“ எவ்வளவு நேரத்துக்கு இப்படியே நிக்கிறதா ஐடியா .அவன் தான் தூங்கிட்டான்ல கொண்டு வந்து படுக்க வைக்கலாம்ல.. “

“ம்..போகணும் “என்று சொல்ல..

“ அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்துக்கறதா உனக்கு தோணுதா .அதனாலதான் யோசிச்சுக்கிட்டு இருக்கறயா நந்தினி “.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல”.

“ பின்ன என்ன.. சாரி.. என்னையும் அறியாமல் கொஞ்சம் உரிமை எடுத்துட்டேன் போல இருக்கு .

இனி கவனமா இருக்கிறேன் .எதையும் யோசிக்க வேண்டாம் வந்து சாப்பிடு “என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

சிறிது நேரம் வரைக்கும் நின்றவள் நேராக ஆத்விக்கை ஜான் படுக்கும் அறையில் கொண்டு வந்து படுக்க வைக்க அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. நேராக உணவு அருந்தும் இடத்திற்கு சென்றவள் தட்டில் சாதம் வைத்து அமர ..

சிறிது உண்ட போது மறுபடியும் வாந்தி வருவது போல தோன்ற.. சிரமப்பட்டு நான்கு வாய் சாப்பிட்டால் .அதற்கு மேல் முடியாமல் எடுத்து வைத்து விட்டு படுக்க சென்று இருந்தாள்.

எப்போதும் போல அந்த வாரம் செல்ல வேண்டியது ஜானின் வீட்டிற்கு ..

குழந்தைகள் மூவரையும் இவர்கள் அழைத்துச் செல்ல.. நேரம் நன்றாகவே நகர்ந்தது..

உரிமையாக மூன்று குழந்தைகளும் விளையாட ஆரம்பித்திருக்க ..இவர்களுமே ஒரு இடத்தில் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர் .

அவ்வப்போது ஜானின் தாயார் இருவரையுமே பார்த்தாரே தவிர ஒரு வார்த்தை கூட பேசவில்லை .

மதிய நேரம் உணவு அருந்தும் போது கவனம் எல்லாம் நந்தனியின் மேல் இருந்தது.

ஜான் மூன்று குழந்தைகளுக்கு உணவை கொடுத்தவன் தானும் சாப்பிட்டு விட்டு எழுந்து நகர.. ஜானின் தாயாருக்கோ நந்தினியின் முகத்தில் தான் பார்வை இருந்தது.

சிறிதளவு சாப்பிட்டவள் போதும் என்று எழுந்து கொண்டாள்.

மாலை வரையிலுமே அங்கு இருந்தவர்கள் புறப்பட.. மேரியும் எலீசாவும் நந்தனியின் பின்னால் செல்கிறேன் என வண்டியில் சென்று அமரவும்..

“சரி நான் முன்னாடி போறேன் பின்னாடியே வந்துருங்க “என்று சொல்லிவிட்டு இவள் புறப்பட.. ஆத்விக்கை தூக்கியபடி ஜானும் புறப்பட்டான்.

“ஜான் உள்ள வா உன் கிட்ட பேசணும்.. “அழைக்க யோசனையோடு..” என்னம்மா சொல்லுங்க “என்று கேட்டபடி உள்ளே வந்தான்.

“நீ நல்லா இருக்குறல்ல” என்று கேட்க ..”என்ன கேள்வி இது பார்த்தா தெரியலையா .ஏன் இத்தனை நாள் கழிச்சு இப்படி ஒரு கேள்வியை கேக்கறீங்க. நான் ரொம்ப நல்லா இருக்கிறேன் .”

“நீ நல்லா இருந்தா போதுமா அந்த பொண்ணும் நல்லா இருக்க வேண்டாமா..”

“ புரியலைமா அவ நல்லா தானே இருக்கறா.. அவளுக்கு என்ன ?

ஹேப்பி இத அவளே பல தடவை சொல்லி இருக்கிறாளே..”

“ போதும் நான் நேரடியா விஷயத்துக்கு வரேன். நீ குழந்தைங்களை கவனிச்ச .. சாப்பிட்ட அவளை கவனிச்சியா.. அவ சரியா சாப்பிடறது இல்ல. உனக்கு தெரியுதா.

சாப்பாட்டை எடுத்து வாயில வச்சா.. வாந்தி வர்ற ஃபீல் ஆகுது போல இருக்கு. நான் ரெண்டு மூணு தடவை கவனிச்சிட்டேன் .நீ என்ன பாத்துகிட்டு இருக்கற..

எஸ்தரை விட்ட மாதிரி இந்த பொண்ணையும் விடலாம்ணு நினைக்கக்கறியா?

அப்ப தான் வேலைன்னு வெளிலேயே சுத்தின.. அவளும் உன்னிடம் சொல்ல கூடாதுன்னு எல்லாத்தையும் மறைச்சு வச்சு என்னென்னவோ ஆயிடுச்சு.

அதே மாதிரி தான் இந்த பொண்ணையும் விட போறியா”.

“ என்னம்மா என்ன சொல்றீங்க எனக்கு நிஜமா தெரியாது. அவ என்னிடம் எதையும் சொல்லல.”

“ அது எப்படி சொல்லுவா.. நீயும் அவளும் அப்படி ஒன்னும் சேர்ந்து வாழ்ற மாதிரி தெரியலையே.. என்னமோ ரூம் மேட்ஸ் மாதிரி..

மாறி மாறி பேசிக்கறீங்க. சிரிக்கிறீங்க அதை தாண்டி வேற எதுவும் இருக்கிறது போல எனக்கு தெரியல .

அப்படி இருக்கும் போது அந்த பொண்ணு வந்து சொல்லுவான்னு எதிர் பார்க்கறயா?

என்ன செய்வியோ தெரியாது .முதல்ல அவளை நாளைக்கு காலையில ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போ..

ஃபுல்லா உடம்பு செக் பண்ணு புரிஞ்சுதா .எதுவும் இல்லன்னு சொன்னா ரொம்ப சந்தோஷம்.

வேற ஏதாவது பிரச்சனைனா முதல்ல என்னன்னு பாக்கணும்.
குழந்தைகள் மட்டும் உலகம் கிடையாது.

ஜான் உன்னை சுத்தி இருக்கிறவங்களையும் கவனிக்கணும் சொல்லி தானே பிடிவாதமா கல்யாணம் பண்ணி வச்சோம் .

இந்த கல்யாணம் பண்றதுக்கு எந்த அளவுக்கு உன் கிட்ட போராடினேன்னு எனக்கு தெரியும். மறுபடியும் உன்னுடைய வாழ்க்கை தோல்வியில முடிய கூடாது புரி
ஞ்சுதா .”

“அம்மா புரியுதும்மா நான் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.

மனம் முழுக்க குழப்பம் நிறைந்திருந்தது. கவனம் எல்லாம் மொத்த குவியலாக நந்தினியின் மேல் திரும்பி இருந்தது ஜானிற்கு.. 

NNK-15

Moderator
13

“ஆபீஸ் போகவில்லையா ..நேரம் ஆயிடுச்சுல்ல.. இவனுடைய லஞ்ச் பேக்கை எடுத்தபடி வர…அமைதியாக வாங்கி அதை டேபிலில் மறுபடியும் வைத்தான்.

அன்றைக்கு சமையல் மேடையில் ஏறி அமர வைத்த பிறகு கிட்டத்தட்ட நான்கைந்து நாட்கள் வீடு மிகவும் அமைதியாகவே இருந்தது.

இருவருக்கும் நடுவில் பெரியதாக பேச்சுவார்த்தைகள் இல்லை .

நேற்றைக்கு வெளியே சென்று வந்த பிறகு சகஜ நிலைக்கு மாறி இருந்தாள் நந்தினி.

“பசங்க ஸ்கூலுக்கு போயாச்சு தானே” என்று கேட்க..” ஆமா இப்பதானே ரெண்டு பேரும் விட்டுட்டு வந்தோம் .என்ன திடீர்னு கேக்கறீங்க. “

“சரி சீக்கிரமா டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து வண்டியில் உட்காரு.. வெளியில போறோம்” என்று சொல்லிவிட்டு நகர.. இவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“ யார் வீட்டுக்கு போறோம். எங்க வீட்டுக்கா.. இல்லனா உங்களோட வீட்டுக்கா..” எதற்குமே அவனிடத்தில் பதில் இல்லை .
யோசித்துப்படியே “சுடிதார் போதும் தானே” என மறுபடியும் குரல் தர..

“ ஏதாவது ஒன்றை எடுத்து மாத்திட்டு வா .”என இவன் பதிலுக்கு சொல்ல..” எஸ்தர்ம்மா வீட்டுக்கா.. “திரும்பவும் அறையில் இருந்து கத்தினாள்.

“கிளம்பி வர்றியா” சற்று சலிப்பாக சொன்னவனின் முகத்தை பார்த்தபடியே வேகமாக வந்தாள்.

“ ஓகே நான் ரெடி ஆயிட்டேன் போலாமா” என்று கேட்டப்படியே வெளியேறினர்.

வண்டியில் ஏறி அமரும் வரையிலுமே அவனிடம் ஒரு வார்த்தை கூட பதில் இல்லை. மறுபடியும் கேட்க ..”எதுவும் பேச வேண்டாம் வா” என்று சொன்னபடியே வண்டியை நகர்த்தினான்.

மறுபடியும் கேட்க “ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது நந்தினி. கோபத்தில் இருக்கறேன்..நான் சரியில்லையா.. நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா.”

“ ஏன் இப்போ சம்பந்தம் இல்லாம கேட்டுகிட்டு இருக்கீங்க .உங்களுக்கு என்ன நீங்க கரெக்டா தான் இருக்கிறீங்க .உங்களை நான் எந்த தப்பும் சொல்லலையே..”

“ ‌ அப்புறம் ஏன் இப்படி பண்ணிட்டு இருக்க .”

“என்ன பண்ணினேன்?”

“ நீ எதுவும் சொல்ல வேண்டாம். பேசாம வா” என்று அழைத்துச் சென்று வண்டியை நிறுத்தியது என்னவோ அந்த பெரிய மருத்துவமனையின் வாசலில் தான் .

இவளோ எதுவும் புரியாமல் மருத்துவமனையை பார்க்க.. “சாப்பிட்டா வாமிட்டேஷன் இருக்கா உனக்கு ..”

“ஆமா இருக்கு “

“எவ்வளவு நாளா இருக்குது சொல்லு” என கேட்டு ப்படியே உள்ளே நடக்க ..”ஐயோ அது ஒரு பெரிய பிரச்சனை இல்லையே சாப்பிட்டது ஏதோ சேர மாட்டேங்குது .

அடிக்கடி தொண்டைக்குள்ளே இருக்கிற மாதிரி ஃபீல் ஆகுது .அதனால அந்த வாமிட் சென்சேஷன்.. அதுக்கு எதுக்காக ஹாஸ்பிடல் எல்லாம் “என திரும்ப கேட்க..

“ போதும் நந்தினி என்னால இன்னொரு இழப்பை எல்லாம் தாங்க முடியாது .எதா இருந்தாலும் சரி செக் பண்ணிக்கலாம்..

ஒண்ணுமே இல்லாம இருக்கட்டும் .எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. ஆனால் அதை டாக்டர் சொல்லணும் நீ சொல்லக்கூடாது..

அமைதியா ஒரு வார்த்தை கூட பேசாம என் பின்னாடி வா. ஏன்னா நான் உன் மேல அந்த அளவுக்கு கோவத்துல இருக்கிறேன்.”

“நான் எதுவும் செய்யலையே..”

“ ப்ளீஸ் பேசாத..”சற்று கோபமாக சொன்னவன் முன்னால் செல்ல.. அமைதியாக பின் தொடர்ந்தாள்.

அங்கிருந்த மருத்துவர்களிடம் சொல்லி காத்திருக்க ஆரம்பித்தனர்.

ஏற்கனவே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்க ஒவ்வொரு இடமாக கேட்டு அவளை அழைத்துச் சென்றான். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காத்திருப்புக்கு பிறகு டாக்டர் இவர்களை அழைத்தனர் .

“எல்லா ரீப்போட்டும் வந்துருச்சு. ஒரு சிலது சாயங்காலம் தான் வரும் .சாயங்காலம் ரெண்டு பேரும் வாங்க” என்று சொல்ல.. சரி என இவளை அழைத்துச் சொன்னான் .

“தேவையில்லாமல் பயப்படறீங்கன்னு நினைக்கிறேன் ஜான்” என்று சொல்ல..” நீ ஒரு வார்த்தை கூட பேச கூடாது நந்தினி. இந்த மாதிரி இருக்குன்னு ஒரு வார்த்தை என்கிட்ட சொல்றதுக்கு என்னவாம்.”

“ யாரு இப்ப உங்களுக்கு சொன்னது “.

“என்னோட அம்மா தான் வேற யார் சொல்லுவாங்க .அந்த பொண்ண நீ கவனிக்கிறது இல்லையா ..என்ன வேலை செஞ்சுகிட்டு இருக்கேன்னு பயங்கர திட்டு .அடிக்க மட்டும் தான் செய்யல.

எனக்கும் இன்னொரு இழப்பை தாங்கிக்கிற சக்தி என் மனசுல துளி கூட இல்லை “சொன்னபடி வீட்டிற்கு வர அதன் பிறகு மாலை வரையிலுமே அமைதியாக நேரம் கழிந்தது.

கோபமாக இருக்கிறான் என தெரிந்தது .ஒரு வார்த்தை கூட பிறகு பேசவில்லை .இவளாக அருகே சென்று நின்றாலுமே முகத்தை பார்த்தானை தவிர எதுவும் பேசவில்லை .

முகத்தில் சிரிப்போ, கோபமோ என்ன உணர்வு என தெரியாத வகையில் பாறை போல இறுக்கமாகவே இருந்தான்.

இரண்டு முறை சமாதானம் செய்யலாம் எனக் கிட்டே வந்தவளுக்கு கூட அவனிடம் என்ன பேசுவது என தெரியாமல் விலகி இருந்தாள்.

மாலையில் மறுபடியும் ஹாஸ்பிடலுக்கு செல்ல வேண்டும்.

குழந்தைகள் மூவரையுமே தாயார் வீட்டில் சென்று விட்டு விட்டு வந்திருந்தான்.

இவளை அழைத்துச் செல்ல அப்போது ஜானுக்கு அருகில் வந்தவள் மெல்ல அவனின் கையை பற்றி..” நான் சாரி கேட்டுக்குறேன் .வேணும்னு எதுவும் செய்யல .

நான் பெருசா யோசிக்கல .பயப்படற மாதிரி எல்லாம் எதுவும் இருக்காது. கொஞ்சம் ஹெவியா சாப்பிட்டால் இது போல இருக்கும்ணு நினைச்சேன் “

“நந்தினி ப்ளீஸ் திரும்பத் திரும்ப நீ சொல்றதுதான் நியாயம்கிற மாதிரி பேசாத.. அம்மா தெளிவா சொன்னாங்க.

அம்மா ரெண்டு மூணு தடவ உன்னை கவனிச்சிருக்கறாங்க. நீ சுத்தமாவே சாப்பிடலையாம்.

ஒரே வீட்டுக்குள்ள இருக்கிறோம் .நானே உன்னை கவனிக்கல‌ என் மேலயும் தப்பு இருக்குது. எனக்கு அதுவே என் மேல அத்தனை கோபத்தை தருது.”

“நான் தான் சாரி சொல்லிட்டேனே ..இன்னும் என்ன “என்று சொல்ல.. வேகமாக அவள் அருகே வந்து தன் அருகில் இழுத்தவள்.. தன்னோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

“ நான் ஏற்கனவே நிறைய இழந்துட்டேன். இதுக்கு அப்புறமா எதையும் இழக்க கூடாதுன்னு நினைக்கிறேன். ஆத்விக் ஆகட்டும் நீ ஆகட்டும் என்கூட இருக்கிற எல்லாருமே என் கூட இருந்தாகணும்..

இதுதான் என்னோட பதில்.. தயவு செய்து என்னை வேற ஒருத்தனா பார்க்காத.. சட்டப்படி உனக்கும் எனக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சு .

அத கொஞ்சம் மனசுல வச்சுக்கோ.. உனக்கு என்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு .உன் மனசுல உள்ளதை இயல்பா பேசலாம் .

உனக்குள்ளே சுருண்டுக்க வேண்டாம் . அன்றைக்கு சமையல் அறையில்
நடந்தது சின்ன விஷயம் தான்.

அதுக்கே கிட்டத்தட்ட ஒருவாரம் நீ என்கிட்ட சரியா பேசல..”

“ இன்னமும் அத யோசிக்கிறீங்களா..”

“ நான் இப்படித்தான் யோசிப்பேன் . நான் இது தான்..என்னோட உலகம் ரொம்ப சின்னது .அந்த உலகத்துக்குள்ள இருக்குறவங்கள பத்தி மட்டும் தான் யோசிப்பேன் .அது சரியா தப்பா தெரியாது .விரும்பியோ விரும்பாமலோ அந்த கூட்டுக்குள் நீயும் வந்துட்ட.. உன்னை பத்தியும் யோசிப்பேன் புரியுதா “என்று சொல்ல முதல் முதலாக ஏதோ ஒன்று மனதிற்குள் உடைவதாக தோன்றியது.

இறுக்கி அணைத்து இருக்க அமைதியாக கை அணைப்பிற்குள் நின்றிருந்தாள்.

“ ஐ அம் சாரி.. இயல்பா இருக்கு முயற்சி பண்றேன் .”

“நம்ம சேர்ந்து இருக்கறோம் நந்தினி .அதுக்காக எப்போதுமே இப்படியே இருப்போம் என்பது கட்டாயம் கிடையாது .

நிச்சயமா நல்ல நண்பர்களா நம்ம லைஃப் அழகா கொண்டு போலாம் .அதையும் தாண்டி ஒருநாள் சேர்ந்து வாழலாம் என்கிற எண்ணம் வந்துச்சுன்னா அப்ப அத பத்தி யோசிக்கலாம்.

ஆனால் இப்பவே எதையும் யோசிச்சு டென்ஷனாக வேண்டாம் .என்கிட்ட பேசலாமா கையை தொடலாமா..

இந்த மாதிரி எல்லாம் எந்த தயக்கமும் உனக்கு தேவையில்லை..
நல்ல பிரண்டுங்க அடிச்சு விளையாடுறது இல்லையா..

அதுபோல நீயும் உரிமையாவே என் கூட இருக்கலாம். இப்ப போகலாம் வா “என அழைத்துச் சென்றான் .

அங்கே சென்றவர்களுக்கு வேறு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது .

அனைத்து ரீப்போட்டையும் படித்து பார்த்துவிட்டு டாக்டர் இவர்களை அழைத்து பேசினார்.

“ பயப்படற மாதிரி இல்ல எல்லாமே நார்மல் தான். எல்லாமே பர்பெக்ட்.. எதுலேயும் குறை சொல்ல முடியாது. ஆனா ஜீரண குடல்ல சின்னதா.. ரொம்ப சின்னதா சதை வளர்ச்சி இருக்கு. அதோட எஃபெக்ட் தான் இந்த வாமிட் சென்சேஷன்.. சாப்பிட முடியாமல் போறது “.

“டாக்டர் இதனால ஏதாவது பிரச்சனையாகுமா..” பதட்டத்தோடு ஜான் கேட்க..

“ இப்படியே விட்டா பிரச்சினை தான்.. ஒரு கட்டத்தில் சாப்பிட முடியாமல் போகும் அப்போ மறுபடியும் ட்ரீட்மென்ட்காக வரணும் .

ஆனா இப்பவே பார்த்ததினால் பயப்பட தேவையில்லை . சின்னதா ஒரு சர்ஜரி மாதிரி பண்ணனும். ரெண்டு நாள் ஹாஸ்பிடல்ல தங்க வேண்டியதா இருக்கும். பயப்பட எதுவுமே இல்லை.

ரொம்ப ரொம்ப காமன் சர்ஜரி தான் .சோ எவ்வளவு சீக்கிரம் முடியுமோ கொண்டு வந்து அட்மிட் பண்ணுங்க .”என்று சொல்ல தயங்க எல்லாம் இல்லை..

“அப்படின்னா இன்னைக்கே அட்மிட் பண்ணிடுங்க..”என்று சொல்ல சற்று கலவரம் நந்தினி முகத்தில்..

“ இல்லை எனக்கு பயமா இருக்கு வேணாம்” என்று ஜானின் கையை பற்றினால் முதல் முறையாக..

நந்தினியின் தாயாருக்கு அழைத்து கூறியவன் அதேபோல தன்னுடைய தாய் தந்தைக்கும் அழைத்து செல்ல.. மூவருமே ஒன்று போல பதில் சொன்னது” அட்மிட் பண்ணிடு என்னன்னு பாத்துக்கலாம்” என்று சொல்ல அன்றைக்கே அட்மிட் செய்திருந்தான்.

அடுத்த இரு நாட்களில் சர்ஜரி கூட நல்ல விதமாக முடிந்திருக்க மருத்துவமனையில் ஒரு நாள் தங்கி விட்டு பிறகு வீட்டிற்கு அழைத்து வந்தான்.

இந்த சில நாட்களில் இருவருக்கும் நடுவே அழகான நட்பு உதயமாகி இருந்தது. அது காதலாகவும் அடுத்த கட்டத்திற்கு நகர ஆரம்பித்திருந்தது .

அமைதியாக ஜானின் முகத்திலேயே அவ்வப்போது பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருந்தாள் நந்தினி.

சரியான நேரத்திற்கு உணவு கொடுப்பது பிறகு மருந்து மாத்திரைகளை கொடுப்பது என ஒரு ராணி போல அவளை தாங்கினான்.

சிறு சர்ஜரி தான் செஞ்சது செய்தது அதனால் வலி கூட பெரியதாக இல்லை .மாத்திரையை போட்டு தூக்கி எழுவதையே வாடிக்கையாக வைத்திருந்தாள்.

குழந்தைகளும் கூட இப்போது இவளை தொந்தரவு செய்வது இல்லை.

இவளை பார்த்துக் கொள்வதற்காக நந்தனியின் தாய், தந்தை இருவரும் இங்கே வந்து தங்கி இருக்க.. இப்போது ஜானின் இருப்பிடம் நந்தினி இருந்த அறைக்கு ஷிப்ட் ஆகி இருந்தது.

சிறு பெட் எமர்ஜென்சிக்கு வாங்கி இருந்தான் ஜான். அதில் இவனும் ஆத்விக்கும் விரித்து படுத்து இருக்க கட்டிலில் மூவரும் தூங்கினர்.

நந்தினி தூங்கும்போது ஜான் அவளை பார்ப்பதும்.. ஜான் தூக்கத்தில் இருக்கும் போது நந்தினி அவனை கவனிப்பதுமே வாடிக்கையாக மாறி இருந்தது.

நந்தினிவிடம் சின்ன அசைவு தெரிந்தாலும் சட்டென எழுந்து விடுவான் .”எதாவது வேணுமா தண்ணி வேணுமா “என வேகமாக கேட்க ..ஒவ்வொரு, சொல்லிலும் ,செயலிலும் அவளுடைய ஆழ்மனக் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்.

“அம்மா உடம்பு சரியில்ல தொந்தரவு பண்ணக்கூடாது” என்று கூறியவன் ஆத்விக்கை மொத்தமாக அவனுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வைத்திருந்தான்.

இதோ சில நாட்களாக வீட்டில் அமர்ந்து தான் வேலை செய்வது..

ஓர்க் ஃப்ரம் ஹோம் மறுபடியும் கேட்டு வாங்கியவன் ..வேலை இங்கிருந்து தொடர்ந்து கொண்டிருந்தான் .

வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் ஆபீசுக்கு சென்று வர வேண்டும்.மற்ற நாட்கள் வீட்டில் இருந்து வேலை.. இரண்டு நாள் விடுமுறை..

நாட்கள் மெல்ல நகர்ந்தது கூடவே அழகான நினைவுகளோடு..

இந்த நாட்கள் இருவருக்குமே தங்களின் நிலையை மறுபடியும் ஒரு முறை யோசிக்க வைத்தது..

இந்த நிமிடம் ஜானுக்கும் சரி நந்தினிக்கும் சரி ஒருவரை ஒருவர் அவ்வளவு பிடித்தது..

பழைய வாழ்க்கையை மறக்கவே முடியாது .அந்த நினைவுகளே போதும் என்று இருந்தவர்கள் தான் இருவருமே ஆனால் தொடர்ந்து அருகருகே இருக்கையில் ..ஒருவரின் குணம் மற்றவரை பிரமிக்க வைத்தது .

அவர்களையும் அறியாமல் காதலெனும் அலை.. மெல்ல அன்பு எனும்.. கடலுக்குள் இழுத்துச் சென்றது.

சிறு சிறு பேச்சுகளால் அலையில் நனைந்தார்களே தவிர இன்னும் மூழ்கி முத்தெடுக்கவில்லை.

ஏதோ ஒன்று இருவரையுமே தடுத்துக் கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட ஒரு மாதம் வரையிலுமே தாய் ,தந்தை எங்கே இருந்தவர்கள் இப்போது புறப்பட்டு சென்றிருந்தனர் .

அவர்கள் சென்ற பிறகும் கூட இவன் தூங்கும் இடத்தை மாற்றி இருக்கவில்லை.

அதே ரூமிலேயே இன்னமும் இருந்தான். இவளுமே ஏன் அங்கே சென்று தூங்கவில்லை என்று கேட்கவில்லை. ஏன் அதைப் பற்றி பெரியதாக கண்டு கொள்ளக்கூட இல்லை.

இரவில் தூங்குகையில் மாறி மாறி ரசித்தர்களே தவிர மனம் விட்டு இன்னமு
ம் பேசிக்கொள்ளவில்லை.

பேசுவதற்கான நாள் வரவில்லையோ.. பூட்டி இருந்த அன்பு ஒரு நாள் பிரவாகமாக பொங்கி வெளியே வரத்தானே செய்யும் .வரும் நாளும் அருகே நெருங்கிக் கொண்டிருந்தது.


 

NNK-15

Moderator
14


“ஜான் ஃபோன் அடிக்குது” பாத்ரூமுக்குள் குளித்துக் கொண்டிருந்தவனிடம் சத்தமாக வெளியே இருந்து குரல் கொடுத்தாள்.


“ யார்னு தான் பாரேன் நந்தினி. வர அஞ்சு நிமிஷம் ஆகும் “.


“அத்தைன்னு போட்டு இருக்குது. .”


“அட்டென்ட் பண்ணி பேசேன்..”என்று குரல் தர வேகமாக போனை கையில் எடுத்தபடி நகர்ந்தாள் .


“ஹலோ சொல்லுங்க “என்று குரல் தர ..”அட நந்தினி நல்லா இருக்கியா மா “என்று திரும்ப கேட்க ..இதுவரை இவரிடம் பேசியது இல்லை .


சற்று ஆச்சரியமாக” சொல்லுங்க “என்று கூற..


“என் பேரு ஜென்சி.. நாங்க மும்பையில இருக்கிறோம் .நல்லா இருக்கிறயா மா .”


“சொல்லுங்க மா .”கொஞ்சம் தயங்க..” பெரியம்மான்னு கூப்பிடு மா “என்று எடுத்துக் கொடுத்தார் .


“சொல்லுங்க பெரியம்மா. என்ன விஷயம் “.


‘சின்ன வயசுல இந்த ஜான் பையன் கொஞ்ச நாள் எங்க கூட தான் இருந்தான் பிறகு அவங்க அம்மா அப்பா அழைச்சுக்கிட்டாங்க. அவனை பத்தின எல்லா விஷயமுமே தெரியும் .


இவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாதான்னு வேண்டாத நாளே கிடையாது .”


“சொல்லுங்க பெரியம்மா” என்று திரும்ப கேட்க ..


“அவனுக்கு இன்னொரு வாழ்க்கை அமைந்ததுனா வேளாங்கண்ணி கோவிலுக்கு அவனையும் அழைச்சிட்டு போறதா வேண்டி இருக்கிறேன்.


மும்பையில் இருந்து இந்த வாரம் கிளம்பி வரேன் .நீங்க குடும்பத்தோட எங்க கூட வரணும் .கோவிலில் போயி ரோஜா பூ மாலை ஒன்னு வாங்கி கொடுத்து, மெழுகுவர்த்தி ஏத்திட்டு வரணும் .


நீங்க எல்லோரும் வரணும் .ஜான் கிட்ட ரொம்ப நாளா கேட்டுக்கிட்டே இருக்கேன். அவன் ஒழுங்காவே பதில் சொல்லல. இன்னைக்கு..

நாளைக்குன்னு ஏதாவது ஒன்ன சொல்லி தட்டி கலிச்சிக்கிட்டு இருக்கறான்.


இதுக்கு மேல எனக்கு பொறுமை கிடையாது. இந்த வாரம் நான் வரேன். அவன் கிட்ட சொல்லிடுமா.. அப்புறமா அவன் கிட்ட பேசறேன் “.


“சரி பெரியம்மா “என்று வைத்தவள் திரும்ப போனை எடுத்து க்கொண்டு ரூமிற்குள் செல்ல ..அப்போதுதான் குளித்து வந்தவன் உடைமாற்றி சட்டையின் பட்டனை போட்டுக்கொண்டு இருந்தான்.


“மும்பையில் இருந்து உங்க அத்தை வேளாங்கன்னி கோவிலுக்கு போறதா வேண்டி இருக்கிறார்களாம்.

இந்த வாரம் வராங்களாம்..”


“ நீ என்ன சொன்ன ..”


“நான் என்ன சொல்றது .சரி வாங்கன்னு சொன்னேன் .ஏன் என்ன ஆச்சு”.


‘ சரியா போச்சு அவங்க கிட்ட சிக்கிணோம்னு வையேன் நம்மள ஒரு வழி பண்ணிடுவாங்க .உனக்கு சொன்னா புரியாது .நானே தப்பிக்கிறதுக்கு என்ன வழின்னு யோசிச்சு ஏதாவது ஒன்ன சொல்லிக்கிட்டு இருந்தேன் .”


“சும்மா இப்படி எல்லாம் சொல்லாதீங்க .வயசானவங்கல்ல. உங்கள தான் மகன் மாதிரி சின்ன வயசுல வளர்த்தாங்கலாம்.. “


“அது உண்மைதான்.. சின்ன வயசுல அங்க தான் இருந்தேன் .எனக்கு அந்த அத்தையை ரொம்ப ரொம்ப பிடிக்கும் .அதெல்லாம் பிரச்சினை இல்ல…அவங்க வாய் ஓயாம பேசிகிட்டு வருவாங்க. நிச்சயமா அவங்களுக்கு பதில் சொல்லவே முடியாது .”


“அவங்களுக்கு குழந்தை இல்லைன்னு சொல்றீங்க.. அப்போ பேச்சு துணைக்கு யார் கிடைப்பான்னு தானே யோசிப்பாங்க .இதுக்கெல்லாமா தயங்குவீங்க. உங்களுக்கே இப்ப மூணு குழந்தை இருக்கு. “


“சரி சரி விட்டா கொடி பிடிப்பியே.. அவங்களும் ரொம்ப நல்ல அத்தை தான். ரொம்ப பாசமா இருப்பாங்க. நிறைய அவங்க கிட்ட பிளஸ் உண்டு .அதே நேரத்துல கொஞ்சம் மைனஸ்சும் உண்டு.”


“ என்ன மைனஸ் “.


“அதுதான் இந்த வாரம் வரேன்னு சொல்லி இருக்காங்கல்ல ..வரும்போது பார்த்து பேசிக்கோ..”


அடுத்ததாக ஜானின் தாயாரிடம் இருந்து அழைப்பு வந்தது.


“உங்க அத்தை இந்த வாரம் வராங்களாம். வேளாங்கண்ணி கோவிலுக்கு போகணும்னு சொல்லி இருக்காங்க.

குடும்பத்தோட கிளம்பிடுங்க “.


“என்னமா அப்போ நீங்க ரெண்டு பேரும் வரலையா.. “


“இன்னோவா காரோட தான் வராங்களாம். .அது உங்க குடும்பத்துக்கு சரியா இருக்கும் எக்ஸ்ட்ராவா என்னை எதுக்கு இழுக்கற ..நிஜமாக இடம் பத்தாது”.


“ இல்லை நான் ஒத்துக்க மாட்டேன் நீங்க கட்டாயம் வரணும் .தனியா பசங்கள பார்த்துக்க முடியாது .மூணு பேர்.. நீங்க இருந்தா ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்.


“.சரி.. சரிடா வரேன். நான் வரேன் ஆனா அப்பா வர முடியாது. அப்பாவுக்கு கல்யாண வீடு ஒன்னு இருக்கு.ஊட்டியில அவங்க

அங்கே கிளம்புறாங்க .நான் மட்டும்தான் வருவேன் .”


“சரிமா சரி “என்று போனை வைத்தான்


வேளாங்கண்ணி கோயிலுக்கு போகிறோம் என்று குழந்தைகளிடம் சொல்லி இருக்க ..அவர்கள் ஆவலாக அந்த நாளை எதிர்பார்த்தனர்.


ஆளுக்கு நான்கு செட் உடைகள் கூடவே அங்கே என்னென்ன வேண்டும் என லிஸ்ட் போட்டு வேண்டியது எல்லாம் வாங்க ஆரம்பித்து இருந்தாள் நந்தினி.


இடையில் குழந்தைகள் ஸ்நாக்ஸ் கேட்டால் எது எது வேண்டும் .தண்ணீர் பாட்டில் எத்தனை வேண்டும்.


ஒருவேளை தலைவலி வந்தால் அதற்குடைய மாத்திரை வேண்டும் என லிஸ்ட் போட்டு வாங்க ..ஒவ்வொன்றையுமே பார்த்து பார்த்து வாங்கி கொடுத்தான்.


இவளுக்குள் குழப்பம் இவனிடமே கேட்டாள்.


‘ இப்ப நான் எந்த மாதிரி டிரஸ் எடுத்து வைக்கிறது. சாரி கட்டிட்டு வந்தா போதுமா .இல்ல சுடிதார் எடுத்து வைக்கிறதா..” என கேட்க ..


அவளை மேலே இருந்து கீழே பார்த்தவன். “பெரும்பாலும் சுடிதாரிலேயே பார்க்கிறேன் சாரி கட்டிட்டு வந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் .


இது என்னோட விருப்பம் தான் .கட்டாயம் கிடையாது .உனக்கு எது கம்படபிளா இருக்கும் .அதை எடுத்துக்கலாம்” என்று நகர.. இவளுக்கோ குழப்பம் .


“இவர் என்ன சொல்றாரு.. சாரியை கட்டிட்டு வர சொல்றாறா இல்ல சுடிதார் போட்டுட்டு போகணுமா. ஏன் இப்படி தெளிவாக ஒரு பதில் சொல்லாமல் குழப்பறாரோ தெரியல “என நினைத்தவள் செல்லும் போது அணிந்து கொள்ள சுடிதார் பிறகு அங்கே வேளாங்கண்ணியில் தங்கி கோவிலுக்கு செல்லும்போது அணிய புடவை..என உடைகளை தனியாகப் பிரித்து எடுத்து வைத்தாள்.


இரண்டு பேருக்கு சிறு பேக் என மூன்று பேக்களை தனியாக எடுத்து வைத்திருந்தாள்.

சொன்ன நேரத்திற்கு சரியாக ஜென்சி அத்தை அவரது கணவர் என வந்திருந்தனர்.

வரும்போது இவள் சரியாக சுடிதாரில் இருக்க.. வந்தவரோ..


“ வந்து சொன்னா கோச்சுக்க மாட்டியே நந்தினி .”


‘சொல்லுங்க பெரியம்மா .”


“ மும்பையில் எல்லார்த்தையுமே சுடிதார்ல அதை விட குட்டி குட்டியா ட்ரெஸ்ல பார்த்து ஒரு மாதிரியா இருக்குது .இங்கே வந்த பிறகும் அதே சுடிதார் பார்க்கணுமான்னு இருக்கு. நம்ம தமிழ்நாட்டு வழக்கப்படி இந்த நாலு நாளும் அழகழகா சாரி கட்டுகிறாயா?


உனக்காக நான் கூட வாங்கிட்டு வந்திருக்கிறேன் பாரு” என்று சில புடவைகளை எடுத்து நீட்ட.. இவ்ளோ திகைத்து விழித்தாள்.


“ என்ன அத்தை பயங்கர பிளான்ல வந்திருக்கிற மாதிரி இருக்குது “ஜான் சொன்னபடியே வர..” நீ சும்மா இருடா .நீ எல்லாம் சரிப்பட்டு வர மாட்ட .


பாரு எவ்வளவு அழகா இருக்கறா.. இந்த பொண்ணு சாரி கட்டுனா இன்னும் தேவதை மாதிரி இருப்பா.. அதுக்காக தான் இதெல்லாம்..


நீ என்ன சைஸ்..எப்படி இருப்பேன்னு நான் ஜான் அம்மா கிட்ட கேட்டு உனக்கு ஏத்த மாதிரியே பிளவுஸ் ரெடிமேட்ல வாங்கிட்டு வந்துட்டேன் .


கொஞ்சம் அளவு லூசா இருந்தா பிடிச்சு தைச்சா போதும்” என்று நீட்டினார்.

தயங்கிப்படியே ஜானை பார்க்க “வாங்கிக்கோ அவர்கள் அப்படித்தான் .ஓவர் பாசம்..


நான் எதுக்காக அவங்கள பாத்துட்டு ஓடி ஒளியறேன்னு தெரிஞ்சுக்கோ” என்று சொல்லி நகர ..”அவன் கிடக்கறான் மா வா” என்று இவளை அழைத்து அருகே அமர வைத்துக் கொண்டார்.


புறப்படும் போது கொண்டாட்டமாக தான் இருந்தது .அதன் பிறகு தான் பிரச்சனை ஆரம்பமானது.


ஜானின் அத்தை இவளை போல நான்கு பேரை சேர்த்து வைத்தால் போன்ற நல்ல குண்டான உருவம் அவருக்கு..


இரண்டு இருக்கைகள் அவருக்கு சரியாக இருக்க.. அவருக்கு அடுத்ததாக ஜானை அமர வைக்க.. ஜன்னலோர இருக்கையில் இவள் சென்று அமர்ந்தது.


பின்னிருக்கையில் ஜானின் தாயார் மூன்று குழந்தைகளையும் வைத்து பார்த்துக் கொள்கிறேன் என்று அமர்ந்து கொள்ள.. முன்னிருக்கையில் ஜென்சியின் கணவர் அமர்ந்திருந்தார். டிரைவர் வண்டியை ஓட்ட ஆரம்பிக்க..


பெரிய உருவம் என்பதினால் இவர்களுக்கு அமர இடமே இல்லை .கிட்டத்தட்ட நெருக்கி அடித்து அமர்வது போன்ற ஒரு நிலை .


ஜான் கையை சீட்டின் மேல் வைத்து இருக்க .. அவனின் மேல் கிட்டத்தட்ட அவனை அணைத்தார் போல உட்கார வேண்டிய நிலை நந்தினிக்கு..


வண்டி ஒவ்வொரு முறையும் ஏறி இறங்கும் போதெல்லாம் மொத்தமாக அவனின் மேல் மோதி ..என் சற்று சிரமப்பட்டு அமர்ந்திருந்தாள்..


இது எதுவுமே ஜானின் அத்தைக்கு தெரியவில்லை போலும்.. அவரோ சாதாரணமாக பேசிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.


ஜான் அவளை தன்னோடு மொத்தமாகவே அணைத்தது போல சாய்த்து கொண்டான்..

தன்னோடு லேசாக அணைத்தபடி “நான் சொன்னேன்ல.. அவங்க கிட்ட நிறைய மைனஸ் உண்டுன்னு ..அதுல இதுவும் ஒன்னு…அவங்களோட உருவம் பெருசு .அதனால நிச்சயமா இந்த வண்டியில இடம் பத்தாது அதனாலதான் தப்பிக்க நினைச்சேன் “என்று சொல்ல.. அவனது அணைப்பில் இருந்தவளின் முகமோ சிவக்க ஆரம்பித்தது.


கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பிரயாணத்திற்கு பிறகு ஒரு ஹோட்டலில் வந்து நிறுத்த.. குழந்தைகள் ஆர்வமாக இறங்கி ஓடினர் .


மெல்ல ஜென்சி இறங்கி நடக்க.. “நம்மளும் இறங்கலாமா “என்று நந்தினி கேட்க ..அவளையே குறும்பாக பார்த்தவன் .”நமக்கு பிடிச்ச பொண்ணு நம்ம மேல சாய்ந்து கொண்டு வருவதும் ஒரு.. ஒரு மாதிரியா கிக்கா தான் இருக்கு “என்று கண்ணடித்தவன் மெல்ல இறங்கி நடக்க ..இன்னும் முகம் சிவந்தாள்.


பிடிவாதமாக சேலையை கட்டி அழைத்து வந்திருக்க.. ஒவ்வொரு முறையும் வெற்றிடையில் அவனுடைய கரம் படும்போது எல்லாம் தீ பற்றியது போல உணர்வில் தவித்துக் கொண்டிருந்தால் நந்தினி.


அதையே அவனும் வேறு விதமாக சொல்லிக் கொண்டு செல்ல.. சிவந்த முகத்தை மெல்ல தேய்த்து விட்டபடி இறங்கி நடந்தாள்.


மறுபடியும் பிரயாணம்.. அவளின் நிலை உணர்ந்து கொண்டவன் அவனது அத்தையிடம் ..அத்தை நான் கொஞ்ச நேரம் வேணும்னா பின்னாடி சீட்டில் போய் உட்காரறேன். குழந்தைங்க யாரையாவது இங்க மாத்தி விடறேன் .”என்று சொல்ல அதற்கு அவர் சம்மதிக்கவில்லை .


“என்ன நானே ரொம்ப வருஷம் கழிச்சு இப்பதான் வரேன் .உன் கூட பேசிகிட்டு இருக்கணும்ங்கறதுக்காகவே இங்கே உட்கார்ந்து இருக்கிறேன் .


உன்னை பக்கத்துல உட்கார சொல்லி இருக்கிறேன் .ஏன் நீ பின்னாடி போற ..அதெல்லாம் போகக்கூடாது.. என் பக்கத்துல தான் உட்காரனும்.”


“ அப்படின்னா நந்தினி வேணும்னா பின்னாடி போகட்டும் .நான் குழந்தைங்க யாரையாவது எடுத்து மடியில உட்கார வச்சிக்கிறேன் .”


“இந்த சீட்டு இடைஞ்சலா இருக்குதா நந்தினி..”


“இல்ல பெரியம்மா “.


“ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி தானே.. அப்புறம் என்ன இடிச்சுக்கிட்டு உட்கார்ந்தா என்னவாம்.. ரெண்டு பேரும் இங்கதான் இருக்கணும் “என பிடிவாதமாக ஆர்டர் போட ..வேறு வழி இல்லாமல் மறுபடியும் அமர்ந்த இடத்திலேயே இருவரும் அமர்ந்தனர்.


இம்முறை தயக்கம் எல்லாம் இல்லை ஜானிடம் ..அவளை தன்னோடு சாய்த்து கொண்டான். அவளுக்குமே தனக்குரியவன் என்கின்ற எண்ணம் வந்திருந்ததோ..


சற்று நேரத்தில் எல்லாம் நந்தினி தூங்க ஆரம்பித்து இருந்தாள்.வாகாக தோளோடு சாய்த்து கொள்ள.. ஜான் வேறு உலகத்தில் இருந்தான்.


நந்தனியின் வாசனை ,கூடவே கூந்தலில் வாசனை, அவளுடைய பெண்மையின் வாசனை என மொத்தமாக இவனை கிரங்கடிக்க ..


இப்போது இந்த நிமிடம் தனக்கு உரியவள் என்கின்ற எண்ணம் மட்டுமே மேலோங்க.. அவனுமே அதே எண்ணத்தில் மெல்ல கண்ணயர்ந்து இருந்தான்.

 

NNK-15

Moderator
15

பூத்துக்குலுங்கும் பூஞ்சோலை ஒரு பக்கம்..

எங்கேயோ அருவி விழும் சத்தம்.. அந்த அருவியின் சாரல் கூட இவளை மெல்லத் தீண்டியது .

சற்று தொலைவில் ஜான் நடந்து சென்று கொண்டிருந்தான்.

பின்புற உருவம் மட்டுமே தெரிந்தது.. அவனைப் பார்க்கவும் இவள் பின்னால் ஓடி வந்து கொண்டிருந்தாள்.

“என்னை விட்டு போகாத ..என் கூடவே இரு .என்னை எப்படி நீ விட்டுட்டு போலாம் .. இதுக்காக தான் என்னை காதலிச்சியா.. என்னை உயிரா பார்த்துக்கிட்டியா. ஒரு நிமிஷம் கூட உன்னை கண் கலங்க விட மாட்டேன்னு சொன்னியே..” ஏதேதோ கேட்டு கத்தினாள் நந்தினி.

நடந்து சென்று கொண்டு இருந்தவனிடம் எந்த ஒரு பதிலும் இல்லை.

அவனுடைய ஒரே குறிக்கோள் அங்கிருந்து நகர்வதாக தோன்றியது .

மெல்ல மெல்ல வேகமாக நடக்க அதே நேரத்தில் பனி போன்று ஏதோ ஒரு புகை மெல்ல மெல்ல அவனை மறைக்க ஆரம்பித்தது..

இப்போதும் அவனை விடாமல் துரத்திக் கொண்டிருந்தாள்.

பனி மூட்டம் நிறைய நிறைய இருக்க ..அந்த குளுமை இவளை மெல்ல தாக்கியது.

எங்கே ஓடுகிறாள் என்கின்ற ஒரு முடிவே இல்லாத ஓட்டம்..

நெடுந்தூரம் ஓடி தேடிக்கொண்டே வர.. எங்குமே அவன் இருப்பதற்கான அடையாளம் இல்லை .

பாதை இப்போதும் நீண்டு கொண்டிருந்தது .நந்தவன பூக்களின் வாசம் ..

லேசான மலைச்சாரல்.. அதையும் தாண்டி வானத்திலிருந்து தனக்கு அருகிலேயே மேகமூட்டம் நகர்ந்து கடந்து போவதான தோற்றம் ..

எங்கோ தொலைவில் தெரிகின்ற முழு நிலவு.. இப்போதும் விடாமல் அதன் பின்னாலேயே ஓடிக் கொண்டிருந்தாள்.

“ ஜான்.. ஜான்” என்ற கதறலோடு.. நீண்ட தூரம் ஓடியும் அவன் இல்லை என்பது புரிய ஆரம்பிக்கவும் அவளால் இதற்கு மேல் ஓட முடியாது என்கின்ற நிலையில் அந்த இடத்திலேயே அமர்ந்து அழ ஆரம்பித்தாள்..

“எப்படி என்னை நீ விட்டுட்டு போலாம் .எங்க போறதுன்னாலும் என்னை அழைச்சிட்டு தானே போயிருக்கணும். ஏன் என்னை விட்டுட்டு போன.. திரும்ப என்கிட்ட வந்திடு.. போகாத என்னை விட்டுட்டு போகாத..” என.. நிற்காமல் அழ ஆரம்பிக்க இப்போது அந்த மாயாஜாலம் நடந்தது .

புகை மெல்ல மெல்ல குறைவதாக தோன்றியது. பாதை கூட தெளிவாக இருக்க.. இரண்டு பக்கத்திலும் இருந்து பூக்கள் எல்லாம் சட்டென இவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மலர்ந்து விரிந்து வாசனையை தர ஆரம்பிக்க அந்த அதிசயத்தை கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..

சற்றுத்தொலைவில் நடந்து கொண்டிருந்த ஜானின் உருவம் இப்போது நன்றாக தெரிந்தது.

சற்றே கண்கள் பளபளக்க அவனை கண்டு கொண்டோம் என்கின்ற ஆர்வம் கண்களில் வழிய வேகமாக ஓடினாள்.

வேகமாக அருகே ஓடினாள்” ஜான் திரும்ப வந்துட்டியா.. என் கூட இருக்க திரும்ப வந்துட்டியா” என்று சொன்னபடி
அவனை பின்னோடு இருக அணைத்துக் கொண்டாள்.

அணைத்தவளை உன்னை எப்போதும் விடமாட்டேன் என்பது போல இரண்டு கைகளையும் தன்னோடு இறுக்கமாக பற்றி கொண்டான்.

சில நிமிட நேரம் தான் ..மனம் மெல்ல மெல்ல பதட்டமெல்லாம் தணிந்து அமைதியாக ஆரம்பித்தது .

இப்போது இவளுடைய இதயத்துடிப்பு அவனுக்கு கேட்பது போன்ற ஒரு தோற்றம்.. அவனின் இதயம் துடிப்பது கூட இவளுக்கு மெலிதாக கேட்டது.

தோளில் நன்றாக வாகாக சாய்ந்து கொண்டவளின் கண்களில் இருந்து இரு துளி கண்ணீர் அவனின் தோளை நனைத்தது .

“நான் தான் திரும்பி வந்துட்டேன்ல. இனி எப்பவுமே உன்னை விட்டுட்டு போக மாட்டேன் .உன் கூட தான் இருப்பேன். நான் உனக்காக பிறந்தவன்” என்று சொல்ல அப்போதுதான் அந்த குரல் பேதத்தை உணர்ந்தாள் .

சட்டென நிமிர்ந்து பார்த்தவள்.. வேகமாக தன்னை பார்த்து அவனை திருப்ப இப்போது இருக்கும் ஜானின் உருவம் முழுவதுமாக கண்களுக்கு தெரிந்தது .கூடவே “அம்மா “என்ற குரலோடு ஆத்விக் அதைத் தொடர்ந்து எலீசா ,மேரி இருவரும் ஓடி வர மொத்தமாக குடும்பமாக தனது கையணைப்பிற்குள் வைத்து ஜான் நின்றிருந்தான்.

தன்னையும் அறியாமல் தலையை அசைத்தவள் விழித்திருந்தாள்.

அப்போது தான் கவனித்தால் அவர்கள் வண்டியில் சென்று கொண்டிருப்பதை.. அருகே ஜானை பார்க்க ஆழ்ந்த தூக்கத்திலிருந்தான்.

அவனது மீசை முடி இவளது நெற்றியில் லேசாக உரச அந்த குறுகுறுப்பில் தான் இப்போது எழுந்ததும் கூட..

சூழ்நிலை மெல்ல புரிய சற்று நிமிர்ந்து அமர்ந்தவள்.. அவனை தோளில் சாய்ந்த படி உறங்குவதற்கு வாகாக அமர்ந்து கொண்டாள்.

முதல் முதலாக தன்னுடைய மனம் போகும் போக்கு இவளுக்கு தெரிந்து தான் இருந்தது.

அவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

எட்டு மணி நேர பிரயாணத்திற்கு பிறகு வேளாங்கண்ணியை அடைத்திருந்தனர் .

ஏற்கனவே ஹோட்டல் புக் செய்திருந்ததினால் நேராக அங்கே சென்று தஞ்சம் அடைத்தனர்.

அடுத்த நாள் காலையில் வேளாங்கண்ணி கோவிலுக்கு செல்வதாக ஏற்பாடு ..

இரண்டு அறைகள் அடுத்தடுத்து எடுத்து இருக்க.. அத்தை ,மாமா கூடவே ஜானி தாயார் அவர்களோடு இணைந்து கொண்டார் .

குழந்தைகள் மூவர் ..இவர்கள் இருவர் மொத்தம் ஐவராக இவர்களது அறையில் தங்ககுவதாக ஏற்பாடு..

ரூம்பிற்கு சென்ற உடனேயே மூன்று குழந்தைகளையும் பார்த்து..”சரி சின்ன குளியல் போட்டுட்டு வாங்க” என சொல்ல மேரி ,எலீசா இருவரும் குளித்துவிட்டு வர அவர்களுக்கு உடை மாற்றிக் கொண்டிருந்தால் நந்தினி.

உடைமாற்றிய உடனேயே அடுத்த அறையில் தங்கி இருந்த பாட்டியை பார்க்க என இருவரும் ஓடிவிட.. இப்போது ஜான் ஆத்விக்கை குளிக்க வைத்துக் கொண்டிருந்தான்.

அப்போது ஆத்விக் பேசியது இவள் காதில் விழுந்தது “.என் ஸ்கூல்ல எல்லார்கிட்டயும் நான் சொன்னேன் தெரியுமா”.

“ என்ன சொன்ன..”

“ வந்து எங்க அப்பாவுக்கு சிக்ஸ் பேக் இருக்குது தெரியுமா அப்படின்னு சொன்னேன்”.

“ இதெல்லாம் யாருடா சொல்லித்தராங்க உனக்கு.. இதையெல்லாமா ப்ரீ கேஜி படிக்கிற பசங்க பேசுவீங்க..” ஆச்சரியமாக கேட்க..

“ நிறைய பேசுவோம் . நான் சொன்னேன் அப்பாவுக்கு எல்லாம் தெரியும்..ஜான் அப்பா தான் பெஸ்ட் அப்பா .அவர் சிக்ஸ் பேக் எல்லாம் வச்சிருக்காரு..” என்று கதை பேச ஆரம்பிக்க.. அங்கிருந்தவளுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை .

நகர்ந்து குளியல் அறை வாசலில் நின்று இருவரையும் கவனிக்க ஆரம்பித்தாள்.

“ இல்லடா அப்பா உடம்பை ஃபீட்டா வச்சுக்கணும்னு ஆசைப்படுவேன் அவ்வளவுதான் மத்தபடி நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல .

அப்படி எல்லாம் யார்கிட்டயும் சொல்லிக்கிட்டு இருக்காத ..நாள பின்ன உங்க ஸ்கூலுக்கு வரும் போது சட்டை கழட்டுங்க அங்கிள்..

சிக்ஸ் பேக் பார்க்கணும்னு யாரும் கேட்டுட போறாங்க ..இந்த கால பசங்களை நம்பவே முடியாது.” என்று கூற வாசலில் நின்றவளுக்கு சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமாகவே சிரித்திருந்தாள்.

திரும்பி இவளை பார்த்தவன் “இப்ப எதற்காக மேடம் இங்க நின்று சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க” என்று கேட்க ..

“பின்ன அவன் குழந்தை.. அவன் அறிவுக்கு இத சொல்றான்.. சார் உண்மையில சிக்ஸ் பேக் எல்லாம் வச்சிருக்கீங்களா என்ன?

எனக்கென்னமோ தொப்பையும் தொந்தியும் தான் அங்கே ஒளிச்சு வச்சிருக்கற மாதிரி இருக்குது. நான் பார்த்ததே இல்லை” என்று விளையாட்டு போல சொல்ல ..

அதே நேரத்தில் குளித்து முடித்தவன் “நான் பாட்டி கிட்ட போய் துணி மாற்ற போறேன் “என உடையை எடுத்துக்கொண்டு வெளியேறி இருந்தான் .

சட்டென இவளை பிடித்து உள்ளே நிறுத்தி இருந்தான்.

“ என்ன செய்றீங்க.. எதுக்காக இப்போ இங்க இழுக்கறீங்க “என்று வேகமாக கேட்க.. வேகமாக சட்டையின் பட்டன் ஒவ்வொன்றாக கலட்ட ஆரம்பித்தான்.

“ஐயோ ஜான் என்ன செய்றீங்க”.

“ . என்னமோ தொந்தியும் தொப்பையும் இருக்கிறதா சொன்னல்ல ..அத நீ இப்போ பார்க்க போற” என்று சொன்னபடியே சட்டையை கழட்டி இருக்க ..சட்டென இவளுக்குள் கூச்சம் கொன்று தின்றது .

“அய்யோ நான் விளையாட்டுக்காக சொன்னேன் .அதுவும் ஆத்விக்கிற்காக சொன்னேன் ‌மத்தபடி நான் உங்களை சொல்லல .”

“எது எப்படி இருந்தாலும் சரி .நீ இப்போ பார்த்து சொல்லிட்டு போகணும் .நான் எப்படி இருக்கிறேன்னு” என்று சொல்ல ..வேகமாக” ஜான் விளையாடாதீங்க .நான் நெஜமா சீரியஸா சொல்லல.

விளையாட்டு போல அப்படி ஒரு ஃப்ளோல வந்துருச்சு..” “ஃப்ளோல தான் வந்துச்சு.. அதுக்காக தானே இதெல்லாம்” என்று சொன்னபடி அவளை நெருங்கி இருக்க ..சுவற்றில் சாய்ந்து இருந்தவளோ இருக்கமாக கண்களை மூடி நின்று இருந்தாள்.

முகத்தை பார்த்தவனுக்கு அத்தனை மகிழ்ச்சி.. பூக்கள் விரிந்து தேனருந்த வண்டுகளுக்கு அழைப்பு விடுமே.. அது போல அவளுடைய இதழ் பிரிந்திருக்க கண்கள் இருக மூடி இருந்தாலும் ,கண்ணின் மணிகள் இங்கும் அங்கும் அலை மோத..ஏதோ ஒரு பதட்டம் அவளை பந்தாட…எதற்கோ காத்திருப்பவள் போல நின்றிருந்தாள்.

மொத்தமாக ஒரு நிமிடம் அவளை ரசித்தவன் மெல்ல அருகே நெருங்கி.. நெற்றியில் லேசாக இதழ் பதித்து விலகினான். உடனே சட்டென கண்களை திறக்க..

” பயப்படாத இங்கே எல்லாம் நான் உன்கிட்ட எதுவும் கேட்க மாட்டேன். எதா இருந்தாலும் நம்ம வீட்டுக்கு போன பிறகுதான் .உன் கிட்ட நிறைய பேசணும்..

இப்போ என்ன செய்றீங்களாம் மேடம் அப்படியே கொஞ்சம் வெளியே வந்தீங்கன்னா நானும் குளிச்சிட்டு வந்துருவேன்” என்று சொல்லி லேசாக இதழ் பிரித்து சிரிக்க ..அவன் முகத்தையே பார்த்தபடி பிரம்மை பிடித்தவள் போல வெளியேறினாள் நந்தினி.

சற்று நேரத்தில் எல்லாம் இரவு உணவிற்காக மொத்த பேரும் வர ,இவர்களுமே புறப்பட்டு இருந்தனர் .

அந்த ஹோட்டலில் இருந்த உணவுகளை சாப்பிட்டவர்கள் சற்று நேரம் அங்கே அருகே இருந்த தோட்டத்தில் சிறு நடை பயின்று விட்டு தூங்குவதற்காக அறைக்கு வந்தனர்.

அடுத்த நாள் காலையிலேயே இவனுடைய அத்தை, மாமா இருவருமே தாங்கள் இருந்த அறைக்கு அழைக்க ..யோசனையோடு இருவரும் அங்கே சென்றனர் .

அங்கே ஒரு குழந்தை இயேசு புகைப்படம் .. மேரி மாதா புகைப்படம் . கூடவே பைபிள் ஒன்று…

இந்த கல்யாணத்துக்கு என்னால அவசரமா வர முடியல. அதுக்காக அப்படியே விட்டுவிட முடியாது இல்லையா.

என்னோட திருப்திக்காக சந்தோஷத்திற்காக இந்த டிரஸ்ஸ போட்டுட்டு வாங்க.

என் முன்னாடி ரெண்டு பேரும் மாலை மாத்திக்கிட்டு இந்த மோதிரத்தை ஒருத்தர் கையில ஒருத்தர் போட்டுக்கணும் .இது என்னோட ஆசை” என்று சொல்லி நீட்ட..

“என்ன அத்தை இது ஹோட்டல்ல வெச்சு இப்படி எல்லாம் பண்றீங்க “என்று கேட்டிருந்தான்.

“எந்த இடமாக இருந்தால் என்னடா ..எனக்கு என்னமோ சட்டுனு தோணிச்சு. கோயிலுக்கு போக இவ்வளவு தூரம் வந்துட்டோம் . இதையும் கண் குளிர பார்த்துட்டு நேரா கோயிலில் போய் அங்கே பிரேயர் பண்ணிட்டு வந்தா திருப்தியா இருக்குன்னு தோணுச்சு. எனக்காக இது செய்ய மாட்டியா ..

நீயாவது சொல்லு நந்தினி.. வயசானவ ஆசைப்படறா.. இத ஊர்ல..வீட்ல வச்சு தோனி இருக்கணும் .அந்த நேரம் பெருசா எதுவும் தோணல .

இது ரெண்டையும் தனியா கொடுக்கணும்னு எடுத்து வச்சேன். கோயில் வாசலில் கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனா அதுக்கு முன்னாடியே கொடுத்துட்டு இந்த உடையோட அழைச்சிட்டு போன நல்லா இருக்கும்னு இப்பதான் தோணுச்சு .

பாரு.. மாமா கிட்ட சொல்லி ரெண்டு மாலை கூட வாங்கிட்டு வந்துட்டேன் “என்று சொல்ல கூடவே சிறு கேக் கூட வாங்கி கொண்டு வந்து அருகே இருந்த டேபிளில் வைத்திருந்தனர்.

“ ரொம்ப தெளிவாக இருக்கீங்க. எனக்கு தெரியும் இதுபோல ஏதாவது சேட்டை பண்ணுவீங்கன்னு “.

“என்னடா செய்யறது எனக்குன்னு யாரு இருக்கறா.. எதா இருந்தாலும் உங்களுக்கு தானே செஞ்சு என்னோட ஆசையை போக்கிக்கணும் .சீக்கிரமா ரெண்டு பேரும் போய் டிரஸ் மாத்திட்டு வாங்க” என்று சொல்ல ..அடுத்த பத்தாவது நிமிடம் இருவருமே உடை மாற்றி வந்தவன்.. அவர்களது சின்ன ஆசையை நிறைவேற்றி இருந்தான்.

. நிறைவேற்றியது என்னவோ அவர்களின் ஆசையைத்தான்.. ஆனால் அந்த சிறு நிகழ்வு நந்தினியின் மனதில் இன்னமும் அவனில் முகம் ஆழமாக பதிந்தது.


இவன் எனக்கு உரியவன் என்னவன் என்கின்ற எண்ணம் மேலோக ..எந்த சின்ன தயக்கமும் இல்லாமல் அவனோடு நெருங்கி நின்று அவனின் கையை கோர்த்துக் கொண்டாள் நந்தினி..


 

NNK-15

Moderator
16


வேளாங்கண்ணி கோவிலில் சிறப்பான தரிசனம் பூக்களை கொண்டு சென்றவர்கள் கொடுத்து மெழுகுவர்த்தி ஏத்தி மாதாவின் காலடியில் சில நிமிடங்கள் என்று தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்திருந்தனர் .


அத்துடன் நின்று இருக்கவில்லை. கடற்கரை வரையிலுமே நீண்டு இருந்த சிறு சிறு கடைகளில் வேண்டிய மட்டும் வாங்கி சேகரித்தான்.


குழந்தைகளுக்கு இவளுக்கு என்று கணக்கு பாராமல் மொத்தமாகவே வாங்கி குவித்தான் ஜான்.


இதோ அன்றைக்கு மாலையிலேயே புறப்பட்டு இருந்தனர். மறுபடியும் அதே போன்றதொரு நீண்ட பயணம்..


இப்போது ஜானின் அருகே அவனின் தோளில் வாகாகவே சாய்ந்து கொண்டு வந்திருந்தாள்.


முழுக்க முழுக்க அவளுடைய மனம் அவனைச் சார்ந்திருந்தது.


அவன் தனக்குரியவன் என்கின்ற எண்ணம் மேலோங்க அமைதியாக வீடு வந்து சேர்ந்தனர்.


தாயின் வீட்டிற்கு சென்று வண்டியை நிறுத்த ..தாயாரோடு இவனது அத்தை மாமா இருவருமே இறங்கிக் கொண்டனர்.


“ஜான் வந்ததும் உன்னோட வீட்ல தங்கியாச்சு .இனி இங்க ரெண்டு நாள் தங்கிட்டு நாங்க மும்பை கிளம்பறோம். போறதுக்கு முன்னாடி மறுபடியும் வந்து பார்க்கிறேன்” என்று சொல்ல கூடவே ஜானின் தாயார்..” ரெண்டு பேருமே இங்க இருக்கட்டுமே ..இன்றைக்கு ஒரு நாள் தங்கிக்கட்டுமே.. நாளைக்கு வந்து கூப்பிட்டுக்கோ” என்று கூறினார் .


இங்கே வந்து சேரும் போது விடியற்காலை 4 மணி நெருங்கி இருந்தது .


தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை பார்த்து கேட்கும் போது என்ன சொல்வது சரி என தலையாட்டியவன். ஆத்விக்கோடு இவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்திருந்தான்.


வீட்டிற்கு வந்த உடன் காலை எட்டு மணி வரைக்கும் நன்றாக தூங்கி எழ.. ஒன்பது மணி எனும் போது நந்தினியின் தாயார் வந்திருந்தார்.


“ ஊரிலிருந்து வந்ததா சம்பந்தியம்மா போன் பண்ணி சொன்னாங்க .நான் நேரா உன்னை பார்க்க வந்துட்டேன்.


ஆத்விக் என் கண்ணுக்குள்ளே இருக்கிறான் . அவனை பார்க்கணும் போல இருந்தது. அதனால உடனே கிளம்பி வந்துட்டேன் .இன்னைக்கு ஒரு நாள் என் கூட இருக்கட்டுமே நான் அழைச்சிட்டு போறேன்.” என்று சொல்ல.. ஆத்விக் ஆசையாக பாட்டியிடம் தாவி இருந்தான்.


அவனுக்கும் கதை பேச நிறைய இருந்தது. பாட்டிக்குதிரையில போனேன் பாட்டி .


அப்பா என்னை அழைச்சிட்டு போனாங்க ..அக்கா கூட வந்தாங்க ..”அத்தோடு நிறுத்தி இருக்கவில்லை .தனக்கு வாங்கி கொடுத்த விளையாட்டு பொருட்களை காட்டி நிறைய பேசிக் கொண்டிருந்தான்..


ஆத்விக் பாட்டியிடம் கதை பேச ஆரம்பிக்க ..வேறு வழியே இல்லாமல் மகனை அனுப்பி வைத்திருந்தாள்.


இத்தனை நேரம் கவனித்த ஜானிற்கு உண்மை அப்போது தான் புரிந்தது .


நதினியை பார்த்து புன்னகைத்தப்படியே ஒரே ஒரு போன் பண்ணிட்டு இப்போ உள்ளே வரேன் என்று சொல்லிவிட்டு நகர ..இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை சமையல் அறைக்குள் சென்று சமைக்க ஆரம்பித்து இருந்தாள்.


இப்போது நன்றாகவே சமையல் பழகி இருந்தாள் நந்தினி.


தோட்டத்திற்கு வந்த ஜான் தன்னுடைய அத்தையை ஃபோன் அழைத்தவன் “என்ன அத்தை…பிளான் எல்லாம் செமையா போடுறீங்க போல இருக்கு. உங்களால முடிஞ்சத சிறப்பா செஞ்சாச்சு போல ..” என்று கிண்டலாகக் கேட்க.. “கண்டு பிடிச்சிட்டியா.. எனக்கு தெரியுமே ஜான் புத்திசாலின்னு” .


“இது யாரோட வேலை அம்மாவோடதா…”


“அவன சொன்னா வந்து சண்டை போடுவியா என்ன.. அந்த பொண்ணு அவ்வளவு அழகா இருக்கறா‌. உன்னை அவளுக்கும் பிடிச்சிருக்கு. உனக்கும் அவள பிடிச்சிருக்கு அப்புறம் என்ன விலகி விலகி இருக்கிறது .


உன் அம்மா போன் பண்ணி என்கிட்ட சொன்னா ..எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல ஏதாவது ஐடியா கொடுங்களேன்னு ..


அதுக்காக தான் மெனக்கெட்டு வேளாங்கண்ணி வரைக்கும் போகலாம்னு சொல்லி கிளம்பி வந்தேன் .


இப்ப எல்லாம் ஓகே தானே.. ரெண்டு நாள் என்ஜாய் பண்ணுங்க ..வீட்ல தொந்தரவுக்கு யாருமே இருக்க மாட்டாங்க” என்று சொல்லி சிரிக்க ..”அத்தை “என்று சிறு கூச்சத்தோடு தலையை கொதியவன் வீட்டிற்குள் வந்தான் .


இங்கே வேலையை முடித்து இருக்க ..உதட்டில் இருந்து புன்னகையை மறைக்காமல் நந்தினியிடம் வர ..அவளும் “பாருங்க வீட்ல மூணு பேருமே இல்ல .வீடு நல்லாவே இல்ல. விரிச்சோன்னு இருக்கு “என்று சொன்னவளுக்கு இவனின் புன்னகை புரியவே இல்லை.


“ என்ன நான் சொல்லிக்கிட்டு இருக்கறேன் .சிரிச்சா என்ன அர்த்தம் “என்று கேட்டவளை அருகே இழுத்து தன் கை வளையத்திற்கு கொண்டு வந்திருந்தான்.


“நான் என்ன கேட்டுக்கிட்டு இருக்கேன் .நீங்க என்ன செய்றீங்க..” என்று உரிமையோடு அவளை தள்ள போக ..இன்னமும் நகரவிடாது தனக்கு அருகே இழுத்து அணைத்துக் கொண்டான்.


“ உனக்கு புரியலையா உனக்கும் எனக்கும் ஸ்பேஸ் கொடுத்துட்டு போயிருக்காங்க. மொத்த குடும்பமும் சேர்ந்து.. எவ்வளவு அழகா பிளான் பண்றாங்க பார்த்தியா” என்று கேட்க இப்போது தான் இவளுக்குமே புரிந்தது .


‘அட ஆமால்ல.. இத எப்படி நான் கவனிக்காமல் போனேன். இருங்க இந்த அம்மாவை..” என்று சொல்ல ..”உன் அம்மா மட்டுமல்ல என் அம்மாவுமே தெளிவா இருக்காங்க .இன்னும் ரெண்டு நாளைக்கு யாரும் இந்த பக்கம் வர மாட்டாங்களாம்‌.


அது வரைக்கும் நம்ம என்ன செய்யலாம்” என்று குறும்பாக கேட்டு கண்ணடிக்க.. பட்டென அவனது கையில் லேசாக அடித்தாள்..


“சரி சரி அடிக்காத அதுக்கு முன்னாடி கொஞ்சம் பேசலாமா” என அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து இருக்கையில் அமர்ந்தவன் .அவளுக்கு அருகிலேயே அமர்ந்து அவளது முகத்தைப் பார்த்தபடி “எஸ்தர் போன பிறகு வாழ்க்கையில வசந்தம் வருமா அப்படிங்கறது கேள்வி குறியாக தான் இருந்தது.. நீ வந்த பிறகு எல்லாமே மாறிடுச்சு நந்தினி .


ஆத்விக்கிற்காகன்னு ஆரம்பிச்சாலுமே வாழ்க்கை இனி உன் கூட தான் .


நம்ம யாரையும் மறக்க தேவையில்லை.. ஆனா அதே நேரத்துல நம்ம சேர்ந்து வாழலாம்ல.. உன் மனசுல நீ என்ன நினைக்கிற .”என்று கேட்டப்படி அவளது முகத்தை பார்க்க..


ஏற்கனவே அவளுக்கும் தான் பிடிக்குமே.. மறுக்க எல்லாம் தோன்றவில்லை பற்றியவள்..


“சில நேரங்களில் கடவுள் போடுற கணக்கு வித்தியாசமானது தான் .எனக்கு புரியவே இல்லை.


என்னோட ஜான் ரொம்ப திடகாத்தமானவன் என்னைக்குமே என்னை விட்டு போக மாட்டான் ..என் மேல அந்த அளவுக்கு காதலை கொடுத்தான் ஆனால் என்ன நடந்துச்சுன்னு புரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி அவன் இல்லாம போயிட்டான்.


அவனோடவே என்னோட லைஃப் முடிஞ்சதுன்னு தான் நினைச்சேன் .அவனை நினைத்து வாழ்ந்துக்கலாம் அவனோட ஞாபகமா ஆத்விக்கோட முகத்தை பார்த்துட்டேன்னு நெனச்சேன் ஆனா எல்லாமே மாறிடுச்சு.


இன்றைக்கு நம்ம ரெண்டு பேரால மூணு குழந்தைங்க சந்தோஷமா இருக்காங்க.


நம்மள சுத்தி இருக்குற எல்லாருமே.. சந்தோஷமா இருக்காங்க .நீங்க சொன்னது தான் கரெக்ட் .


நம்ம எதையுமே மறக்க வேண்டாம். பழைய வாழ்க்கை பாஸ்ட் ..அது ஞாபகங்கள்ல ஒரு ஓரமா இருந்துகிட்டு தான் இருக்கும் .சாகுற வரைக்கும் ..”


“அதே தான் நந்தினி..ஆனா இனி வாழ போற வாழ்க்கையை நந்தவனம் ஆக்கிக்கலாம்.. உனக்கு சம்மதம் தானே..


என்னோட சின்ன சின்ன தொடுகை கூட உனக்கு அருவருப்பையோ ,எரிச்சலையோ தரலை தானே “என்று கேட்க.. வேகமாக கையால் அனுடைய வாயை மறைத்தவள்..” இல்ல ஜான் நீங்க பிரண்ட்லி.. எல்லா விதத்திலேயும் ..உங்க கூட இருந்தாலே பாதுகாப்பு உணர்வு, தைரியம், தன்னம்பிக்கை நிறையவே வரும்.


நான் தனியா இருந்தப்போ நிறைய முறை உடைஞ்சு அழுது இருக்கிறேன் .ஆனால் இங்க வந்த பிறகு நான் இதுவரைக்கும் அழுதது இல்ல..


அப்புறமா நீ என்னோட வைஃப்.. நீ எனக்கு உரிமையானவ.. உன் கிட்ட எப்படி வேணாலும் நடந்துக்க முடியும் எனக்கு உரிமை இருக்குன்னு சொல்லி என்கிட்ட உங்க உரிமையை காட்டலை..


எனக்கு அனுப்பு நேரத்தை கொடுத்தீங்க பொறுமையா இருந்து.. வாழலாமான்னு .. கேட்டுக்கிட்டு நிக்கிற உங்களை பிடிக்காமல் போயிடுமா..”

கேட்ட அடுத்த நொடியே அவளை தன்னுடைய இருக்கமாக அணைத்துக் கொண்டான் .


அதைத் தொடர்ந்து முகமெங்கும் முத்தங்களை வாரி வழங்க ஆரம்பிக்க.. செவ்வான சிவப்பை இவளுடைய முகம் தத்தெடுக்க..


அவளுக்குள் மூழ்கி தன்னைத் தொலைக்க ஆரம்பித்தான்.இங்கே வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம்…வெட்கச் சிவப்பில் நாண சினுங்களில் காதலெனும் தூரிகை கொண்டு பது அத்தியாயத்தை வரைந்து இருந்தான்.


முத்தங்கள் எல்லாம் முத்துக்களாக சேகரிக்க.. பெட்டகம் நிறைந்து காதலால் வழிந்தது.


இரண்டு நாட்கள் வரையிலுமே குழந்தைகள் யாருமே இந்த பக்கம் வந்திருக்கவில்லை.


பிடிவாதமாக அங்கேயே வைத்திருக்க .. இரண்டு நாட்கள் முடியும் வரையில் இருவருக்குமே பெரியதாக தெரியவில்லை.


தங்களுடைய உலகத்திற்குள் சுழன்று கொண்டு இருந்தனர். ஆனால் அடுத்த நாள் காலையிலேயே இருவரும் குழந்தைகளை தேட ஆரம்பிக்க.. எழுந்த உடனேயே அழைக்க ஆரம்பித்து இருந்தான் .


தாயரிடம் பிடிவாதமாக” இந்த விளையாட்டெல்லாம் ஆகாதுமா நீங்க ஆசைப்பட்ட மாதிரியே நாங்க சேர்ந்து வாழ ஆரம்பிச்சுட்டோம். இப்ப உங்களுக்கு சந்தோசம் தானே. ஒழுங்கா குழந்தைகளை கொண்டு வந்து இங்கே விடுங்க. அத்தை, மாமா என்ன பண்றாங்க..”


“ டேய் நீ சொல்லாட்டியும் உன்னை எனக்கு தெரியாதா.. இன்னைக்கு குழந்தைகளோட இன்னும் கொஞ்ச நேரத்துல நாங்க கிளம்பி வரோம்..”என்று சொல்ல அதே போல தான் இங்கே நந்தினியின் தாயாரும் கூறினார்.


அன்றைக்கு மொத்த குடும்பமும் அங்கே குழுமி இருக்க ..மதிய உணவிற்காக ஹோட்டலில் ஆர்டர் செய்திருந்தான் ஜான்.


வீடு கோலாகலமாக இருந்தது. சிரிப்பு சத்தத்தோடு கூடவே இவர்களில் பேச்சு சத்தத்தோடும்..


மதிய உணவிற்கு எஸ்தரின் தாய் ,தந்தையரையும் அழைத்து இருக்க மொத்த குடும்பமுமே அங்கே குழுமியிருந்தனர்.


மாலை வரையிலுமே கொண்டாட்டமாக நேரம் நகர, மாலையில் அத்தை,மாமா இருவருமே புறப்பட்டு சென்றனர் .


அத்தை புறப்படுவதற்கு முன்பாக ஜானிடம் வந்தவர் “இரண்டு பேரும் பார்க்க அவ்வளவு அழகா இருக்கீங்க.. ஜோடி பொருத்தம் ரொம்ப அம்சமா இருக்குது .அதுவும் இன்னைக்கு ரெண்டு பேரோட முகத்தை பார்க்கும் போது அவ்வளவு அழகா இருக்குது. பரிபூரணமா சந்தோஷமா நிம்மதியா இருக்குது. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லா வாழ்வீங்க .அதுக்கு அந்த கர்த்தர் ஆசீர்வாதம் என்னைக்கும் உங்களுக்கு உண்டு “என்று ஆசீர்வாதம் செய்து விட்டு புறப்பட்டார்.


உறவுகளே அழகுதான் அதிலும் அன்பான உறவுகள் கிடைத்து விட்டால் அகிலத்தையே கைக்குள் அடக்கி விடலாம்.


அன்பான குடும்பம் இருவருக்குமே கிடைத்திருக்க.. அவர்களின் நந்தவனம் பூத்து குலுங்க ஆரம்பித்தது .


இனி எல்லாம் சுகமே!!


நிறைவுற்றது. 
Status
Not open for further replies.
Top