எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வர்ணங்கள் 2.1

NNK-54

Moderator
வர்ணங்கள் 2.1

சூடான காபியுடன் கணவனது நினைவுகளும் ஆழமாக சுபாவின் உள்ளே இறங்கியது. எவ்வளவு வருஷங்கள் ஆனாலும் அவனது ஸ்பரிசம் உணர்ந்த மனம் அவனை மறக்காது தான்.

மகளின் முகத்தில் கணவனது சாயலையும் நெற்றியில் இருக்கும் அழுத்தமான மச்சமும் அவளது அந்தரங்க தருணங்களை மறக்க விட்டால் தானே...

இதோ சமீப காலமாக மலேசியாசியாவிலிருந்து இங்கே வந்து உடன் வேலை பார்க்கும் பிரணவ் இவளை திருமணம் முடிக்க ஆசை படுவதாக சொல்லிக்கொண்டு சுற்றி வருகிறான்.
அவனை மறுக்க காரணம் நிச்சயம் இல்லை. தியாவையும் தனது மகளாக ஏற்க அவன் தயார் தான். சுபாவின் அம்மாவுக்கும் அவன் தன் மகளை விரும்புவது தெரியும். அவருக்கு சம்மதம் என்றாலும் மகளின் மனம் புரிந்ததால் அமைதியாகி விட்டார்.

வேறு என்ன செய்ய இயலும்? நிறைய பெண்கள் சுபாவின் வயதில் திருமணம் செய்துகொள்ள கூட விருப்பம் கொள்வது இல்லை. தங்கள் மகளோ, ஆறு வயது மகளுக்கு தாய்.

தங்களது கையாலாகதனத்தில் மகளை பலிகடா ஆக்கிவிட்ட குற்ற உணர்ச்சியில், மகள் திருமணமாகி சென்ற ஒரே வருஷத்தில் கண் மூடி விட்டார் சுபாவின் அப்பா.

அம்மாவாயிட்டே.. மகளை தனியே தவிக்க விட்டு செல்ல முடியுமா.. தன் கணவர் அனுபவித்த குற்ற உணர்வுக்கு சற்றும் குறைவின்றி தானும் துக்கபட்டுக்கொண்டே மகளுடன் இருக்கிறார் சுபாவின் அம்மா.

தன் மடியில் சாய்ந்து உறக்கம் கொண்டிருக்கும் மகளின் முன் உச்சியில் முத்தமிட்டு, அவளை சோபாவில் படுக்க வைத்த சுபா காலை உணவை தயாரிக்கவென அடுக்களைக்குள் புகுந்தாள்.

மகளுக்கு ஸாண்ட்விச் செய்து டைனிங் டேபிளில் வைத்தவள், தங்கள் படுக்கை அறைக்குள் சென்று டவல் மற்றும் மாற்றுடயுடன் குளியல் அறைக்குள் புகுந்தாள்.

ஜெயந்தனுடன் இருக்கும் பொழுது, காலையில் அவனுக்கு காபி எடுத்து கொண்டு போவது என்றாலும் குளித்து, அலங்காரம் செய்து கொண்டுதான் அவன் முன்னால் செல்ல வேண்டும்.இல்லாவிட்டால் முகம் திருப்பிக் கொள்வான். காபியை கையால் கூட தொட மாட்டான்.

ஷவரின் முன் நின்றவளுக்கு தன் மீது விழும் நீர் துளிகளுடன் கண்ணீரும் சேர்த்து கன்னம் இறங்கியது. தனிமையில் உணர்வுகள் பேயாட்டம் போட்டாலும் இங்கே குளியல் அறையில் குளிக்கும் பொழுது மட்டும் தான் அழுவாள்.

வெளி உலகை பொறுத்தவரை, அவள் சிங்கிள் மதர். தைரியம், தன்னம்பிக்கை எல்லாம் அதிகம். அழகை ஆராதிக்கும் ஆண்களை துச்சமென பார்க்கும் சுபாவுக்கு ஆட்டிட்யூட் அதிகம்.

அவளது அந்த போக்கில் மயங்கியவன் தான் பிரணவ். அவன் நடத்தை சரியாக இருப்பதால் அவனை நண்பனாக மட்டும் ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.

இவ்வளவு சுபா புராணம் பாடுகிறேன். இன்னும் அவள் எப்படி இருப்பாள் என்று சொல்லவே இல்லையே!

பதினெட்டு வயதில் திருமணம் ஆகும் பொழுது கொஞ்சம் பூசினாற்போல் இருந்தாள். கோதுமை நிறம். அழகு என்று அப்போது சொல்ல முடியாது. கொஞ்சம் சப்பை மூக்கு. குழந்தை முகம். கண்கள் நூறு கதைகள் பேசும். அதிக உயரம் என்று சொல்லிவிட முடியாது.

முகத்தில் எப்போதும் துறுதுறுப்பு. வாய் கொள்ளா பேச்சு. ஒரு இடத்தில பத்து நிமிடங்கள் அவளால் தொடர்ந்து நிற்க முடியாது. மான் குட்டி போல் துள்ளிய ஓட்டம். உதட்டில் உறைந்த சிரிப்பு. சுருட்டையில் இடுப்பு வரை அடர்த்தி முடி.

திருமணம் முடிந்து இரண்டு வருஷங்களில் சுபா கொஞ்சம் இளைத்து உயரமும் வந்து விட்டது. ஆரம்பத்தில் ஜெயனிடம் பயம். பிறகு, அவன் எங்கோ பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தாலும் இவள் மட்டும் வாய் ஓயாது அவனிடம் பேசிக் கொண்டிருப்பாள்.

இவளது அருகாமை மட்டுமே அவனை அவனை வேகமாக குணப் படுத்தியது. அவனுக்குள்ளே ஆழ்ந்து அமிழ்ந்து இருந்த செஸ், காரோம் விளையாடுவது, நீச்சல் எல்லாம் இவளுடன் இருக்கும் பொழுது தான் வெளிப்பட்டது.

சுபா வருவதற்கு மூன்று ஆண்டுகள் முன்னரே ஒரு மாதிரி சித்த பிரமை பிடித்தவன் போல் ஆனவன் ஜெயந்தன்.

ஆனால், சுபா இப்போது நிறைய மாறிவிட்டாள். வயதுக்கு ஏற்ற படிக்கு உடலில் நிறைய மாற்றங்கள். குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் உடல் மாற்றங்கள். முடியை பாதியாக வெட்டி விட்டாள். ஜெயந்தன் அவளது முடியை பிடித்து இழுத்து விளையாடிய ஞாபக அழுத்தம்தான் காரணம்.

குறும்பாய் சுழன்ற விழிகள் இப்போது அவளது புத்தி கூர்மையை சொல்கிறது. நிறைய பேசிக் கொண்டு இருந்தவள் இப்போது அமைதியாகி விட்டாள். நான்கு வார்த்தைகள் பேச வேண்டிய இடங்களில் ஒரே வார்த்தையில் முடித்து விடுவாள். மகள் மட்டும் விதிவிலக்கு. சுபாவின் உண்மை முகம் அவள் மகளுக்கு மட்டும் தான்.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, யாருக்கும் அஞ்சாத துணிவு. சிங்கப்பூரின் பெண்களுக்கான அங்கீகாரமும், சுதந்திரமும் அவளை வேகமாக மெருகேற்றிக் கொள்ள இன்னொரு காரணம்.

இந்தோனேஷியாவை தலைமை இடமாக கொண்ட கட்டிட நிறுவனத்தில் சிவில் இஞ்சினியராக வேலை செய்கிறாள். தலைமை பண்புடன் வேலை செய்யும் திறமை, நேர்த்தி இரண்டும் நன்றாக இருப்பதால் சம்பளமும் அதிகம், வேலையும் அதிகம். ஸ்மார்ட் ஒர்க்கர்.

அதனால் கொடுக்கப்படும் வேலைகளை அனாயாசமாக செய்து முடித்து விடுவாள். அலுவலகத்தில் இவளுக்கென ரசிகர்கள் உண்டு.


குளித்து முடித்து வந்தவள்
ஹேர் ட்ரியர் வைத்து முடியை காய வைத்து, நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டும், வகுட்டில் குங்குமமும் வைத்துக் கொண்டாள். அவள் மனம் கணவனது நல்வாழ்க்கைக்காக வேண்டியது.

தியாவும், சுபாவின் அம்மாவும் இன்னும் எழுந்திருக்கவில்லை. கடிகாரம் காலை மணி ஆறு என்றது. தியாவை எழுப்பி, பல் துலக்க அனுப்பியவள், அன்றைய சமையலுக்காக, குளிர் சாதன பெட்டியில் இருந்து காய்கறிகளை எடுத்து நறுக்கத் தொடங்கினாள்.
குளித்துவிட்டு டவலுடன் வெளியே வந்து அம்மாவை அழைத்துக் கொண்டு நின்ற மகள் மீண்டும்


.கணவனை ஞாபகப் படுத்த தலையை வேகமாக அசைத்து தனது நினைவுகள் அழுத்துவதிலிருந்து வெளியே வந்தாள் . தியாவுக்கு பள்ளிச் சீருடை அணிவித்து ,இரட்டை பின்னலிட்டு தயார் செய்தவள் , மீண்டும் வேகமாக சமயலறைக்குள் புகுந்து கொண்டாள் . தியாவுக்கு மதியம் உணவு பள்ளியிலேயே கொடுத்து விடுவார்கள். ஆனால் ,தன்னால் அலுவலக கேன்டீனில் சாப்பிட முடியாது.

வேலைக்கு சேர்ந்த புதியதில் அலுவலகத்தில் சாப்பிட்ட உணவு அவளுக்கு படுத்தி எடுத்துவிட்டது. வாந்தி,காய்ச்சல் ..அப்பப்பா ..பட்ட துன்பம் போதும் என்ற எண்ணம். அதனாலேயே சமைத்து எடுத்துக்கொண்டு விடுவாள்.அத்துடன் இந்திய சமையல்.. அதன் ருசி தனிதானே . அலுவலகத்தில் சைனீஸ் தான் சுலபமாக கிடைக்கும்.


அம்மாவால் இவ்வளவு வேகமாக செய்ய முடியாது என்று அவர்களை "நீங்க லேட்டா எந்திருச்சு வந்தா போதும்ம்மா " என்றுவிட்டாள் .இரவு உணவை கண்டிப்பாய் அவளது அம்மா தான் தயாரிப்பார்.வேலை விட்டு வந்து குழந்தையுடன் அமர்ந்து அவளது பாடங்களை சொல்லிக்கொடுப்பதும்,அலுவலகத்தில் அடுத்தநாள் செய்யவேண்டியவற்றை குறிப்பெடுத்து வைத்துக்கொள்வதற்கும்தான் சுபாவுக்கு நேரம் இருக்கும்.

இன்று பிரணவ், பிசிபேலேபாத் கேட்டிருந்தான் என்று அவசரமாக ஞாபகம் செய்து கொண்டவள் அதற்கான தயாரிப்பில் இறங்கினாள் . மணி எட்டு அடிக்கவும்,அவளது அம்மா குளித்துவிட்டு ஹாலுக்கு வந்தார். அவருக்கு காபி வாரத்துக்கு கொடுத்தவள் தியாவுக்கு புத்தகங்கள் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்தவள், தானும் ரசம் விட்டு சாதம் சாப்பிட்டு தியாவுடன் கிளம்பினாள்.

வெறும் பாலை குடித்திருந்த தியா அம்மா வைத்திருந்த சான்விச்சை பிரேக் பாஸ்ட் கார்ல சாப்பிட்டுக்கறேன் மா,,என்று கெஞ்சியது. லேசாக கோவம் எட்டிபார்த்தது சுபாவுக்கு.ஆனாலும்,மகளின் பாவனையில் மயங்கியவள், குழந்தையுடன் லிப்ட்டில் ஏறினாள். இருபதாவது தளத்தில் அவளது பிளாட்.

லிப்ட்டில் இன்னும் மூன்று பேர் நின்று கொண்டிருக்க,அவர்களை பார்த்து அறிமுகப் புன்னகை வீசியவாறே கார் பார்க்கிங் வந்து சேர்ந்தாள் சுபா. இன்று அலுவலகத்தில் அவளுக்காக என்ன காத்திருக்கிறதோ!


சின்ன எபிசொட் தான். அடுத்த எபி ஜெயந்தனோட பிரயாணம் செய்யவும் ஆரம்பிக்கணும்,சோ இன்னிக்கு 2.1
 

Advi

Well-known member
சுபா செம்ம🤩🤩🤩🤩

இன்னும் ஜெய் வரலையே????
 
Top