எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அகத்திரை திறவாயோ - பாகம் 8

NNK-41

Moderator

அகம் 8​

416143378_1352776628773840_7936936140813094610_n.jpg

டைரி​

சிறகொடிந்த பறவை என்பதின் அர்த்தத்தை முழுமையாக இப்பொழுது உணர்ந்து கொண்டிருக்கிறேன். பாசம் அது எப்பொழுதும் எனக்கு கானல்நீர்தான். இருக்கிறது போல் ஒரு பிம்பம் தோன்றும் ஆனால் கிடைக்காது. சபிக்கப்பட்டவள் நான்.​

ஆனால் எனக்கென்று கிடைத்தது படிப்பு ஒன்றுதான். அதுதான் எனது உற்ற சினேகிதி. மிஸ் மல்லிகா சொல்லியதுபோல் இறுதிவரை என்கூட துணை இருப்பது படிப்பு ஒன்றுதான். அந்த ஆசையிலும் மன்னை அள்ளி போட்டுவிட்டான் சுதீஷ். அடுத்த வாரம் அவனோடு எனக்கு நிச்சயமாம்.​

அதற்குள் எனக்கு சாவு வந்துவிடாதா என்று காத்திருக்கிறேன். சாவதற்கு சொந்த புத்தியும் இல்லை… சொல்லி கொடுப்பதற்கு யாரும் இல்லை. ஓடும் பஸ்ஸிலோ லாரியிலோ விழுந்துவிடலாம் என்றால்… பயமாக இருக்கிறது. புழுதி கிளப்பிக்கொண்டு வருவதை பார்த்தாலே இயற்கையை அழிக்க வந்த யமனாக நினைக்க தோன்றும். அதுவே எனக்கு யமனாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தால் முதலில் பயம்தான் வருகிறது.​

லாரி சக்கரத்தின் கீழ் நான் உடல் இரண்டாகி கிடப்பதை எண்ணி பார்த்தேன். உவ்வேக்!! நினைக்கவே குமட்டிக்கொண்டு வந்தது. இதில் நான் எங்கே போய் விழுவது!! என்ன செய்வது? எப்படி தடுப்பது? இதற்கு என்னதான் வழி? வழி கிடைத்தாலும் என்னால் செயல்படுத்த முடியுமா??​

*************​

இன்று நிட்சயதார்த்தம். யாருக்கு வேணும்!! இன்னும் என்ன பன்றது என்று தெரியல. எத்தனையோ முறை அப்பாக்கிட்ட நடந்த உண்மையை சொல்லிட்டேன். நம்ப மாட்டாங்க என்று தெரியும். இருந்தாலும் ஒரு நப்பாசைல சொல்லிட்டேன். அப்பா என்னை வெறுப்பா பார்த்தார். இருக்குற கொஞ்ச நஞ்ச பாசத்தையும் அழிச்சுடாதனு சொல்லிட்டார். வாட்!! எப்போ பாசம் வச்சிந்திருந்தார். இப்போ அழிக்க?​

அம்மாவை பார்த்தேன். கோர பற்களை காட்டி மிரட்டும் அரக்கியாய் என் கண்களுக்கு தெரிந்தார். பூமிகாவை மட்டும் என்ன… அச்சு அசல் அப்படியே சூன்ய கிழவிபோல்தான் தெரிந்தாள். ப்ச்!! இவர்களிடம் சொல்லி ஒன்னும் ஆகப்போவதில்லை. அறையினுள் அமர்ந்துக்கொண்டேன்.​

என்கூடவே பூமிகாவும் அறைக்குள் தொடுத்துக்கொண்டு வந்தாள்.' நீ என்ன பெரிய அழகியா' என்று என்னை பார்த்து கேட்டாள். நான் பதில் ஏதும் சொல்லாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தேன். மனம் படபடத்தது. உள்ளங்கைகள் வேர்க்க ஆரம்பித்தன.​

என்னைவிட எல்லாவற்றிலும் அவள் கொடுத்து வைத்தவளாம். பண்பில் சிகரமாம். ஒழுக்கத்தை பேணி காப்பதில் கண்ணகியாம். ‘இருந்துட்டு போ!! இப்போ எதுக்கு இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்லிக்கிட்டு இருக்கா?’ என்ற யோசனையுடன் அவளை பார்த்தேன்.​

இத்தனை நற்பன்புகள் இருந்தவளை விட்டுட்டு எப்படி சுதீஷ் என்னிடம் மயங்கினான் என்று கேட்டாள். “அடச்சீ!! இதுக்கு தானா? எனக்கு அவன் தேவையில்லை நீயே கட்டிக்கோ!!” என்று சொன்னேன்.​

ஏற்கனவே சஞ்சலத்துடன் இருந்த மனதுக்கு பூமிகாவின் வார்த்தைகள் நிம்மதிகொடுத்தன. ஆனால் அவளோ லபோ திபோ என்று கத்த ஆரம்பித்து விட்டாள். அந்த சத்தத்தில் அனைவரும் என் அறைக்குள் குழுமி விட்டனர்.​

“அம்மா பாருங்கம்மா ராத்திரி நிச்சயத்துக்காக அவளை தயார் படுத்த வந்தா... என்னை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டா பாருங்க!!” நீலக்கண்ணீர் விட்டாள் பூமிகா​

“என்னடி சொன்ன??” அம்மா கண்களை விரித்துக்கொண்டு என்னை நெருங்க… வெலவெலத்து போனேன்.​

“அக்காகிட்ட சுதீஷை கட்டிக்க சொன்னேன்” இந்த நான்கு வார்தைகளை சொல்லி முடிப்பதற்குள் எனக்கு நாவரண்டு போனது​

“அட நாசமா போனவளே!! நீ கெட்டு சீரழிஞ்சது பத்தாதுனு என் மகளையும் கெடுக்க பார்க்கிறீயா?” அம்மா கையை ஓங்க​

“நான் உங்க மக இல்லையா ம்மா??” அக்கா அவங்க மகள் என்றால் அப்பொழுது நான் யார்? மனமுடைந்து கேட்டேன்.​

“இல்லடி இல்லவே இல்ல. நீ என் மகளா இருக்க வாய்ப்பே இல்ல!! ஆஸ்பித்திரில பிள்ளைய மாத்தி கொடுத்துட்டாங்க போல. பூமிகா புனித நதிடீ… நீ சாக்கடை!! அதனாலத்தான் இப்படி வந்து பிறந்திருக்க!!”​

சுக்கு நூறாக உடைந்து போனேன். என்னடா வாழ்க்கை இது!! இத்தனை கொடிய வார்த்தைகளை கேட்டபிறகும் எனக்கு சாவு வர மாட்டிக்கிதே!! உண்மையிலேயே நான் யாரோ செய்த பாவத்துக்கு பிறந்தவதானா?? கதறி அழுதேன்.​

“ஏன் அப்படி சொன்ன மலர்?” அண்ணன் கேட்டான். ஆமாம் எதுக்கு அப்படி சொன்னேன்? யோசித்தேன். அதற்குள் பூமிகா சில கடிதங்களை அண்ணனிடம் கொடுத்தாள்.​

“இதோ பார் அண்ணா!! எத்தனை காதல் கடிதங்கள். சுதிஷை தவிற இவளுக்கு நிறைய லவ்வர்ஸ் இருக்காங்க போல!!” என்றாள். அவை பூமிகாவுக்காக கொடுக்கப்பட்ட கடிதங்கள் என்பதை சொன்னால் நம்பவா போகிறார்கள். மனம் வெறுத்து போனது.​

பூமிகா புனித நதி… நான் சாக்கடையாகவே இருந்துவிட்டு கொள்கிறேன். துர்நாற்றமடிக்கும் என்னருகில் யாரும் வர வேண்டாம்!! எப்பொழுதும்போல் என்னை ஒதுக்கி வைத்தாலே போதும். எனக்கென்று எதுவும் வேண்டாம். கண்களை மூடிக்கொண்டேன்.​

இறைவா என் மேல் கொஞ்சம் கருணை காட்டு. ஏதாவது மேஜிக் செய்து என்னை காப்பாற்று என்று வேண்டினேன்.​

“யார் இந்த வாசு மலர்? இவனைதான் நீ காதலிக்கிறாயா?? அதனால்தான் சுதீஷோட நடக்கப்போன நிச்சயத்தை வேணாம்னு சொன்னீயா?” நிலவன் கேட்க… சட்டென கண்களை திறந்தேன். அண்ணன் சொன்னதை உள்வாங்கிக்கொள்ள சில வினாடிகள் பிடித்தன.​

இல்லை என்று சொன்னால் இவர்கள் நம்பவும் போவதில்லை. அதுவே ஆமாம் என்று சொல்லிவிட்டால் இந்த நிச்சயதார்த்தம் கேன்சல் ஆக வாய்ப்பிருக்கிறதா? யாரென்று தெரியாத வாசுவைவிட இப்பொழுது என் விழுங்க காத்திருக்கும் சுதீஷ் முதலையிடமிருந்து தப்பித்தாக வேண்டும். ஆமாம் என்று சொல்லி விடலாமா? தீவிரமாக யோசித்தேன்.​

“என்ன மலர்?” என்ற அண்ணனை பார்த்து ஆமென தலையசைத்தேன். “பார்ரா இந்த கழுதையை..” என்று சொல்லிக்கொண்டே அம்மா அடிக்க வர​

“சும்மா இரு சாவித்திரி!! இன்னும் கொஞ்ச நேரத்துல உன் அண்ணன் குடும்பம் வந்திடும். இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும்” என்று அப்பா சொன்னதும் மறுபடியுமா என்று கலங்கிபோனேன்.​

“இந்த கழிசடைக்கு என் அண்ணன் புள்ள கேக்குதா?” அப்பாவிடம் எகிரினார் அம்மா.​

“சரி உன் அண்ணன் குடும்பத்திடம் என்ன சொல்லப்போற… பூமிகாவை கட்டிகொடுத்திடலாமா?”​

“அது எப்படி முடியும்? அவ படிக்கிறால்ல” என்று அம்மா சொன்னதும் நானும்தானே என்று மனம் கூவியது. ஆனாலும் நிச்சயதார்த்தம் கேன்சலாக போகிற சந்தோஷத்தில் அமைதியானேன்.​

அடுத்தப்படியாக அம்மா மாமாவுக்கு அழைத்து அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஏதேதோ சொல்லி சுதீஷை என் வாழ்க்கையிலிருந்து நீக்கினார். முதன் முறையாக கடவுள் எனக்கு கருணை காட்டியிருந்தார்.​

“யாருடி அந்த வாசு? உன்னோட படிக்கிறவனா? சொல்லித்தொலடி!!” திடுமென அம்மா கேட்க… என்ன சொல்வதென்று தெரியாமல் எப்பொழுதும் போல தலையாட்டிக்கொண்டேன்.​

யாருக்கு தெரியும் அவன் யார் என்று? ஆனால் இப்பொழுது அவன்தான் எனக்கு கடவுள். என் வாழ்க்கையை திசைமாற செய்தவன். நன்றிடா வாசு. நீ நல்லா இருப்ப. வாழ்த்தினேன்.​

முகமில்லாதவனுக்கு முகவரி கொடுத்த பூமிகாவுக்கு நன்றி. முதன் முறையாக அவள் செய்த கலகம் நன்மையில் முடிந்திருந்தது.​

அடுத்து என் படிப்பை பற்றி விவாதம் நடந்துக்கொண்டிருந்தது. அம்மாக்கு என்னை படிக்க வைப்பதில் இஷ்டமில்லை. அப்பாக்கு ஒரு டிகிரி அளவாவது என்னை படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.​

நான் நன்றியுடன் அப்பாவை பார்த்தேன். அப்பொழுது அப்பா ஒன்று சொன்னார். ஒரு டிகிரியாவது இருந்தால்தான் திருமண மார்க்கெட்டில் நான் விலைபோவேனாம். விற்கப்படும் பொருளா நான்? பரவாயில்ல… எதுவோ சொல்லிவிட்டு போகட்டும். நான் படிக்க வேண்டும். அது நடந்தால் போதும். அதுவும் நடந்த்தேரியது. இன்னும் கொஞ்ச நாட்களில் நான் காலேஜ் போக போகிறேன்.​

பூமிகாவுக்கும் அம்மாக்கும் நான் படிக்க போவது பிடிக்கவில்லை. ஏதேதோ செய்து அதை தடுக்க பார்த்தார்கள். பூமிகா என்னிடம் வம்பிழுத்தாள். நான் வாயை இறுக்கமாக மூடிக்கொண்டேன். சில சமயங்களில் நடந்தவற்றை நினைத்து பார்த்தால் சிரிப்புதான் வரும். அதை பார்த்து என்னை பைத்தியம் என்றார் அம்மா. இலக்கின்றி எதையாவது வெறித்தால்கூட எவனை நினைச்சுக்கிட்டு யோசிட்டிட்டு இருக்க? என குத்தி கிழிக்கும் வார்த்தைகள் வரும்.​

என் அமைதி அவர்களை அவமதிப்பதுபோல தோன்றியதுபோல… கொழுப்பெடுத்து திமிறுல ஆடுகிறேன் என்று குற்றம்சாட்டினர். பொறுக்கமுடியாமல் பதில் சொன்னால் கொலை குற்றம் செய்ததுபோல் விமர்சித்தனர்.​

முடிவாக மூன்று குரங்குகளை என் ரோல் மாடலாக்கி கொண்டேன். வாவ்… என்ன அதிசயம்! மனம் நிம்மதியானது. இறகாய் மாறினேன். தென்றலில் மிதந்தேன். சில நேரங்கள் புயலிலும் சிக்கிக்கொண்டேன். காயப்பட்டேன்… பரவாயில்லை நான் நானாக இருந்தேன்.​

என்னிடமும் சில மாற்றங்கள் தென்பட்டன. முன்பெல்லாம் இங்கே பேச்சு தமிழில் எழுதிக்கொண்டிருந்தேன். மாற்றம் தெரிகிறது. என்னில் வந்த மாற்றம் என் வாழ்விலும் வருமா?​

******************​

அண்ணன் என்னை ஹாஸ்டல் இருக்கும் கல்லூரியில் சேர்த்து விட்டு ஆயிரம் பத்திரங்கள் சொல்லி சென்று விட்டான். காலேஜ் முதல் நாள் ரொம்பவே பயமா இருந்துச்சு. படிக்க ஆசை ஆனா புது மனிதர்கள் புது சூழல் ரொம்பவே என்னை பயமுடுத்தியது. யாரையும் என்னால் சந்தேகப்படாமல் இருக்க முடியவில்லை. அன்னியர்களின் பார்வைகளின் பொருள் புரியவில்லை.​

படிக்கவிரும்பினேனே தவிற பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க விரும்பவில்லை. வெளி உலகம் ஆபத்தானது என்பதை சுதீஷ் போன்றவர்கள் மூலம் உணர்ந்தவள் நான். இன்னும் பல ஆயிர சுதீஷ்கள் உலாவுகிறார்கள். அவர்களில் எத்தனை பேரை நான் சந்திக்க நேரும் என்று தெரியவில்லை அதனால் எல்லோரையும் சந்தேகப்படவே தோனுது.​

கஷ்டப்பட்டு போராடி படிக்க வந்தாச்சு. வந்தப்பின் திரும்பி போக எண்ணமில்லை அதனால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க விரும்புகிறேன்.​

கல்லூரி படிப்பு எனக்கு ஒன்றும் அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. என்ன ஒன்றுக்கு இரண்டுமுறை படிக்க வேண்டியிருந்தது அவ்வளவுதான். எனக்கு புதிய தோழிகூட கிடைத்தாள். அவள் இலக்கியா. என்னை போலவே படிப்பின்மீது தீராகாதல் கொண்டவள். பாடங்கள் அனைத்தையும் இருவரும் விரும்பி படித்தோம்.​

இலக்கியா மிக இனிமையாக இருந்தாள். கோடீஸ்வர குடும்ப வாரிசாம். அப்படி என்றால் என்ன என்று அவளிடம் கேட்டதுக்கு அட்டகாசமாக சிரித்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை… கொஞ்சம் அவமானமாகவும் இருந்தது. என் முகம் போன போக்கை பார்த்து சிரிப்பை நிறுத்திக்கொண்டவள் என்னை அணைத்துக்கொண்டாள்.​

பணத்தை வைத்து மனிதனை எடைபோடுபவர்கள் பயன்படுத்தும் வார்த்தை அது. நம் நட்புக்கு முன் அதெல்லாம் செல்லா காசு என்றாள். மல்லிகா டீச்சரை அவள் எனக்கு ஞாபகப்படுத்தினாள்.​

அவளின் தோழமை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் சந்தேகங்களின் நிவர்த்தி நான் என்று புகழ்வாள். தெரிந்ததை சொல்லி கொடுக்கிறேன். தெரிந்தவற்றை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது? புரியவில்லை. பகிர்ந்தால் படித்தவை இன்னும் மனதில் ஆழமாக பதியும் என்றேன். என் கன்னத்தை ஈரமாக்கினாள். என் கன்னம் சிவந்தது. நான் மிகவும் அழகாக வெட்கப்படுகிறேனாம்… இலக்கியா சொன்னாள். கன்னம் சிவந்தால் வெட்கம் என்று அர்த்தமா? ம்ம்.. புதிதாக இருந்தது.​

கொஞ்சம் கொஞ்சமாக வெளி உலகம் பற்றி தெரிந்துக்கொண்டேன் இலக்கியா மூலமாக. மனிதர்களின் பார்வைகளின் பேதங்களை படிக்க கற்று கொடுத்தாள். அப்பப்பா எத்தனை விதமான பார்வைகள். உடலை விரைக்க வைக்கும் கண்டிப்பான் பார்வை, கூச செய்யும் வக்கிர பார்வை, மனதை வருந்தச்செய்யும் குரூர பார்வைகள். மனிதர்களில் தான் எத்தனை நிறங்கள்…​

மூன்று மாதங்கள் கழித்து வீட்டிலிருந்து ஹாஸ்டலுக்கு அழைப்பு வந்தது. அலைப்பேசி இல்லா என்னை வார்டன் மேடம் ஒரு மாதிரியாக பார்த்தார். ஏன் அப்படி பார்த்தாங்க?​

அப்பா அழைத்திருந்தார். படிப்பில் கவனம் செலுத்த சொன்னார். ஏற்கனவே எனக்கு குணம் சரியில்லையாம். அதனால்தான் பெண்கள் படிக்கும் கல்லூரிக்கு அனுப்பி வைத்தாராம். இந்த வயதில் மனம் அலைபாயுமாம். நான் மனதின் ஆசைகளை அடக்க தெரியாதவளாம். என் நல்லதுக்காகத்தான் அலைபேசி வாங்கி கொடுக்கவில்லையாம். அக்கறை என்று சொல்லிக்கொண்டு அவர் மேல் வைத்த பாசத்துக்கு கொள்ளி வைத்தார்.​

நான் ஒன்றும் ஃபினிக்ஸ் பறவை இல்லையே. மரணித்த பாசத்தை உயிர்ப்பெற செய்ய. மரத்து சோர்ந்து போனது மனது. பிரிக்க முடியாத இரட்டைக்கிழவியாக உடலும் சோர்ந்து போனது.​

இலக்கியா வந்தாள். இன்று அவள் பிறந்தநாள். வீட்டுக்கு அழைத்தாள். யார் வீட்டுக்கும் செல்ல பிடிக்கவில்லை என்று திக்கி திணரி சொல்லிவிட்டேன். அவள் முகம் வாடி போனது.​

எனக்கு வேறு வழியும் இல்லை. என ஆட்டிசம் நிலையை சொல்லி அவளிடம் தரம் இறங்கி போக விரும்பவில்லை. எனக்கு கிடைத்த ஒரே தோழி அவள் அல்லவா... அவளின் குடும்பத்தார்க்கு என் நிலை தெரியவந்தால் என்னிடம் பழக தடை விதித்துவிட்டால்… ஐயோ நினைக்கவே பயம் என்னை ஆட்கொண்டது.​

ஆனால் இலக்கியா நினைத்ததை முடிப்பவள் அல்லவா… மௌனம் என்ற ஆயுதம் கொண்டு என்னை வளைத்து விட்டாள். இவளை என்ன பன்றது? ஹ்ம்ம்… ஒன்றும் செய்ய முடியாது என்று புரிந்து விட்டது. கடவுள்தான் எங்கள் நட்பின் ஆயுளை நீட்ட வேண்டும் என்ற வேண்டுதலுடன் அவளுடன் கிளம்பினேன்.​

******************​

நடப்பது கனவா நனவா? இது நான்தானா? கண்ணாடியில் மறுபடியும் என்னை பார்த்தேன். அருகே இலக்கியா நின்றிருந்தாள். என்னை பார்த்து புன்னகைத்தாள். நீ நம்பலனாலும் கண்ணாடியில் தெரிவது உன் முகம்தான் என்று சொன்னாள்.​

ஆம்… நானேதான். நான் இவ்வளவு அழகா? இல்ல.. இல்லை அழகு படுத்தப்பட்டேன். இலக்கியாவை அலங்கரிக்க வந்த பியூட்டிஷன் என்னையும் அழகு படுத்தி விட்டே சென்றுவிட்டார். என் பாடி ஸ்ட்ரக்சர் அழகா இருக்காம். இந்த சொல் வேறா என்று நினைத்துக்கொண்டேன்.​

அவள் அறையிலிருந்து இருவரும் கீழே இறங்க்கினோம். அம்மாடி இது என்ன வீடா இல்லை அரண்மனையா என்று வாயில் விரல் வைக்காத குறைதான். இலக்கியாவின் வீடு அத்தனை பெரிதா இருந்தது. எங்கள் வீடும் பெரிதுதான் ஆளுக்கொரு அறை என நான்கு அறைகள் கொண்ட இரண்டு மாடி வீடு. ஆனால் இதுவோ அறைகளின் எண்ணிக்கை எடுக்கவே எனக்கு ஒரு மணி நேரம் ஆகும் போலிருந்தது. மிகமிகப்பெரிய ஹால். கல்யாண விருந்தே வைத்து விடலாம் போலிருந்தது. பக்கவாட்டில் உணவு உண்ணும் இடம் அதையொட்டி பெரியதாக ஒரு நவீன சமயலறை. வேலையாட்கள் இங்கும் அங்கும் நடமாடுவதை பார்த்தால் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள் போலும்.​

ரொம்பவே பயமாக இருந்தது.. எதிரே நடுத்தர வயதினர் என்னை ஆராய்ச்சியாக பார்த்தனர். அவர்கள்தான் இலக்கியாவின் பெற்றோராம். நடிகர்கள் போல இருந்தனர். பயப்பந்து தொண்டையை அடைக்க மிரட்சியுடன் அவர்களை பார்த்தேன். இலக்கியாவின் அம்மா என் கையை பிடித்து என்னை மிகவும் பிடித்திருப்பதாக சொன்னாங்க. ஐயோ என்னை விட்டால் போதும் என்று அங்கு நின்றிருந்தேன்.​

“அண்ணா இவதான் மை டியரெஸ்ட் ஃபிரண்ட் மலரினியாழ்” என்று இலக்கியா அறிமுகப்படுத்தினாள். இன்னுமே அதிர்ந்து போனேன். ஐயோ அடுத்தது யாரோ என்றிருந்தது. அவன் என் பின்னால் நின்றிருந்ததால் ஒரு ஆழ்ந்த பெருமூச்சு விட்டு என்னை திடப்படுத்திக்கொண்டு திரும்பினேன்.​

அப்பப்பா என்ன உயரம்டா இவன் என்றுதான் எனக்கு முதலில் தோன்றியது. அவனை நிமிர்ந்து பார்க்காமலேயே நீண்டிருந்த அவன் விரல்களை பார்த்தேன். வழுவழு வெண்ணிர விரல்கள் என்னை கவர்ந்தன. அழகாய் சீராக வெட்டப்பட்ட நகங்கள் என்னை கவர்ந்தது.​

நான் கரத்தை ஆராய்ச்சி செய்ய எடுத்துக்கொண்ட நேரம் கொஞ்சம் அதிகம் போல. சட்டென அந்த விரல்கள் பின்னிழுக்கப்பட்டு பேண்ட் பாக்கெட்டில் நுழைந்துக்கொண்டன. என் மனதில் மென் அதிர்வு. தவறு செய்து விட்டதுபோல் தவித்து போனேன். “ஸாரி…” என்றேன் அவன் முகம் பாராமல்.​

“கம் அகெய்ன்? ஸாரியா? எதுக்கு ஸாரி? வாட் இஸ் யோர் நேம் ஏதோ இனியாழ்தானே?” அடுக்கடுக்காய் அவன் கேள்விகள் கேட்க… முதலில் அவனின் கம்பீர குரலில் ஈர்க்கப்பட்டேன். அடுத்த கணமே எதற்கு பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தேன். இறுதியான கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல முடிவெடுத்துவிட்டு அன்னார்ந்து அவன் முகம் பார்த்தேன்.​

தீ இல்லை புகை இல்லை

ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே

நூல் இல்லை தறி இல்லை

ஒரு காதல் செய்கிறாய் மனதிலே

ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசையமைக்க நான் கண்ணிமைக்காமல் அவனில் தொலைந்தேன். என் நிலை அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது போலும். புன்னகைத்தான். இரண்டு சூறாவளி கன்னத்தில் துளை போட்டதுபோல் இருந்தது அவன் கன்னத்துகுழியின் ஆழம். வீழ்ந்தே போனேன்.​

“ஹாய் இனியாழ் நான் ஆதித்யா” என்றவன் என் அனுமதியுடன் என மனதினுள் சலனம் ஏற்படுத்தி நுழைந்துக்கொண்டான்.​

 
Last edited:

NNK-41

Moderator
இலக்கியா அண்ணாதானா???... ஆனால் அவளுக்கு ஏன் அவனை நியாபகம் இல்லை???
ஆமாம் டியர். ஆனால் சில பிரச்சினையினால் அவள் நினைவுகள் டைரியுடன் நின்றுவிட்டது
 

Advi

Well-known member
வாவ், மாறன் தான் இலா ஓட அண்ணனா......

இப்படி தான் ரெண்டு பேரும் மீட் பண்ணினாங்களா.....
 

NNK-41

Moderator
ஆமாம் டியர். இதுதான் அவங்களோட முதல் சந்திப்பு. இனி டைரியும் இன்று நடப்பவைக்கும் கனெக்க்ஷன் வரும்.:love:
 
Last edited:

NNK-41

Moderator
இலக்கியா நல்ல தோழி. அப்பா அம்மா அக்கா பேய்
மலருக்கு கிடைச்ச பொக்கிஷம் இலக்கியா... அம்மா அப்பா வேஸ்ட்:(
 

Saranyakumar

Active member
இலக்கியாவோட அண்ணன்தான் நெடூமரமா மலருக்கு என்ன ஆயிருக்கும் எப்படி மறந்தாள்
 

NNK-41

Moderator
இலக்கியாவோட அண்ணன்தான் நெடூமரமா மலருக்கு என்ன ஆயிருக்கும் எப்படி மறந்தாள்
அவளோட நினைவுகள் டைரியோட நின்றுவிட்டன டியர்😞
 
Top