எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாயனே 11 - கதை திரி

NNK-82

Moderator

மாயனே 11​

நேரம் மதியம் 2 மணி ஆனது. முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்து இருந்தாள். நிலா கடிகாரத்தை பார்ப்பதும் படுக்கையறையை பார்ப்பதுமாக இருந்தாள். நேற்று குடித்து விட்டு வந்த இன்பா இன்னும் எழுந்து வரவில்லை. அவன் எப்பொழுதுதான் வருவான்?? வரட்டும் என்று அவளும் எழுப்பாமல் அமர்ந்து இருந்தாள்.​

மூன்று மணியை தொட போகும் நேரம் மெல்ல கண்சுருக்கி முனகினான். முனகளோடு உடலை முறுக்கி கவுந்து படுத்து தட்டு தடுமாறி எழுந்து அமர்ந்தான். போதை முற்றிலும் குறைந்து போய் இருந்தது. ஆனால் தலைக்கு மேல் சம்பட்டியால் அடித்தது போல் வலித்தது இரு கரங்களாலும் நெற்றி பொட்டை அழுத்திப் பிடித்துக் கொண்டு வழியில் துடித்தான். நிமிடங்கள் கரைய மெல்ல கண் திறந்து நேரத்தை பார்த்தவன் அதிர்ந்து போனான். நேரம் மதியம் மூன்றாகி விட்டதே என்பதை உணர்ந்து "இதுக்கு தான் குடிக்கிறதே இல்லை" என்று தலையில் அடித்துக் கொண்டு குளிக்க சென்றான்.​

குளித்து முடித்து வந்த பிறகும் தலைவலி குறையாமல் இருக்க அப்பொழுது தான் நிலாவை தேடினான். "இவன் எங்க போனா?" என்று நினைத்தவன் பதறி துடித்தது வெளியே ஓடி வர முறைத்துக் கொண்டு ஹாலில் அமர்ந்து இருந்தாள் நிலா.​

அவளைப் பார்த்த பின்னால் உயிரே வந்தது அவனுக்கு. அவள் அருகில் வந்த அமர்ந்தவன் அவள் முகம் பார்த்தான். அவள் அவனை பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டிருக்க அவள் முறைப்பான முகமே கூறியது அவள் கோபத்தை. இப்போதைக்கு ஏதாவது பேசினால் கடித்து குதறி விடுவாள் என்று நினைத்தவன், அவள் தோள் சாய்ந்து கழுத்தில் முகம் புதைத்து "பசிக்குதடி.." என்றான் கெஞ்சலாக.​

அவளுக்கு உள்ளுக்குள் கோபம் எரிமலையாய் தகித்துக் கொண்டிருந்தாலும் மன்னவனின் வயிற்றுப் பசியை அறிந்து அவனுக்கு உணவு பரிமாறினாள். சோற்றில் ஊற்றிய குழம்பை பிசைந்து வாயில் வைக்க போகும் நேரம் "நீ சாப்டியா?" என்று கேட்க, புருவம் தூக்கி அவனை கொலை முறை முறைத்தவள் அங்கிருந்து சென்றாள்.​

நிச்சயமா அவள் சாப்பிட்டு இருக்க மாட்டாள் என்பது அவனுக்கு தெரியும் உணவை அப்படியே வைத்துவிட்டு கை கழுவி எழுந்து வந்தவன், நிலா என்று அவள் பின்னாலே வந்தான். அவள் எதுவும் பேசுவதாக இல்லை அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள். நிலா என்று வெளியில் நின்று கதவை தட்ட அவள் கதவை திறக்கவே இல்லை. இதற்கு இடையில் நிலாவின் தோழி ஒருத்தி இரவு இன்பா ஆடியதை வீடியோ எடுத்து குரூப்பில் போட்டு விட இன்னும் கொலை வெறி ஆனாள் நிலா.​

இவலாம் என்ன கலாய்க்கிறா.. அந்த அளவுக்கு ஆக்கிட்டாரே.. என்ற கோபம் அவளுக்கு. தன் மீது உள்ள வெறுப்பை தான் இப்படி எல்லாம் காட்டுகிறான் என்று எண்ணியவள் விழிகளில் நீர் கரித்துக் கொண்டு வந்தது. கதவை தட்டி தட்டி பார்த்த இன்பா எந்த சத்தமும் வராமல் போக பயந்து போய் கதவை உடைக்க போக கதவை திறந்து விட்டாள் நிலா. அவனை முறைத்து விட்டு எதுவும் செல்லாமல் படுக்கையில் அமர்ந்து கொண்டாள்.​

அவள் கோபம் நியாயமானது தானே என்று நினைத்த இன்பா தன் மீது தான் தவறு என்று எண்ணி அவளிடம் சென்றான். அவள் காலுக்கு கீழ் மண்டியிட்டு அமர்ந்தான். அவள் கரம் இரண்டையும் பற்றி தன் உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டு முத்தமிட்டான். அவனைப் பார்த்து அவள் முறைக்க "சாரி நிலா நேத்து கொஞ்சம் ஓவர் ஆயிடுச்சு" என்றான் கொஞ்சலாய்.​

கடுப்பான நிலா அவன் தள்ளிவிட்டு இது கரங்களாலும் மாறி மாறி அடித்தாள் அவனை. அவள் அடித்ததை எல்லாம் மொத்தமாக வாங்கிக் கொண்டான் எதிர்க்கவே இல்லை அழுது கொண்டே அடித்தவள் இறுதியாக அவனை கட்டிக் கொண்டு கதறி அழுதாள். அவனும் அணைத்துக்கொள்ள அவனிடமிருந்து வேகமாக விலகினாள்.​

" என்ன தொடாத… உனக்கு என்ன புடிக்கல இல்லல.. என் மேல உள்ள வெறுப்பால தானே இப்படி எல்லாம் பண்ற? " என்று கேட்க திட்டுகிட்ட இன்பா என்ன சொல்றா இவ?? என்று குழம்பினான் இன்பா.​

" ஏய் நிலா.." என்று அவன் ஏதோ சொல்ல வரும்முன் "என்கிட்ட பேசாதீங்க.. ஆரம்பத்துல இருந்தே உங்களுக்கு என்ன புடிக்கல. என் அப்பா கொடுக்க வேண்டிய காசுக்காக என்ன கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டு வந்துட்டீங்க. ஆனாலும் உங்களுக்கு என்ன புடிக்கல. அதனால தானே ஹர்ட் பண்றீங்க. இதுக்கு நான் கேட்டப்பவே நான் வரமாட்டேன்னு நீங்க சொல்லிட்டு இருக்கலாம்ல. என் பிரெண்ட்ஸ் எல்லாருமே வந்து இருக்கும்போது குடிச்சுட்டு ஏன் இப்படி பண்ணீங்க? எப்பயாவது நான் உங்களை குடிக்க வேண்டாம்னு சொல்லி இருக்கேனா? பப்ளிக் பிளேஸ்ல எல்லாரும் இருக்கும்போது எல்லாரும் முன்னாடியும் நிதானம் இல்லாத போதையில குடிச்சிட்டு ஆடி என்ன அசிங்க படுத்தி உங்க பழிய தீத்துக்கிட்டிங்கள்ல​

இதுக்காகத்தானே காத்திருந்தீங்க" என்று மூச்சு விடாமல் பேசி குமுறி அழுதாள்.​

" என்னடி பேசுற? நான் ஏன்டி உன்ன வெறுக்க போறேன்?? " என்று அவளை நெருங்கியவனை மார்பில் கை வைத்து தள்ளியவள் "ஆரம்பத்தில் இருந்தே உங்களுக்கு என்ன புடிக்கல இல்லல??" என்றாள் குரல் உடைந்து தழுதழுக்க.​

தலையிலே அடித்து கொண்டான் இன்பா.. "நான் எப்போ இவள பிடிக்கலன்னு சொன்னேன்?? இவ தான் உன்ன வெறுக்குறேனு சொல்லுவா.. நான் இவள என்ன சொன்னேன்?? கோபத்துல என்னென்னவோ பேசுறாளே.." என்று நினைத்தவன்​

"நிலா என்ன பேசுற நீ? லூசு மாதிரி உலர்ர.. நான் எப்ப டி உன்னை புடிக்கலைன்னு சொல்லி இருக்கேன்" என்று அவன் கேட்க அதையெல்லாம் எங்கு அவள் காதில் வாங்கினாள்.​

" உங்களுக்கு என்ன புடிக்கல என்ன பழி வாங்கணும் அதுக்காக தானே இதெல்லாம் பண்றீங்க என்கிட்ட பேசாதீங்க. நானும் உங்ககிட்ட இனிமே பேசல" என்ற அழுது கொண்டே அங்கிருந்து ஓடினாள்.​

தலையிலேயே அடித்துக் கொண்டான் இன்பா. இந்த பைத்தியக்காரிய என்னதான் பண்றதுனே தெரியல என்று அவனும் பின்னாடியே ஓடி வர, அவள் கால்களை கட்டிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.​

அவளைக் கண்டவன் "நிலா நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல டி" என்று கூற "எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை என்கிட்ட யாரும் பேச வேண்டாம். இப்படியே தொண தொணன்னு என்கிட்ட பேசிட்டு இருந்தா நான் இங்க இருந்து எங்கயாவது ஓடிப் போயிடுவேன்" என்று கோபமாக கூறினால் திடுக்கிட்டான் அவன்.​

சொன்னதை செய்பவள் தானே அவள் என்று நினைத்தவன் ரெண்டு நாள் ஆகட்டும் சரியா போயிடும். கோபம் குறையட்டும் அவளுக்கு என்று நினைத்து அமைதியாக உண்டான். காலையிலிருந்து அவள் உண்ணவில்லை. உண்ணும் முன் அவளுக்கும் சாப்பாடு எடுத்து கொண்டு வைக்க அமைதியாக உண்டாள்.​

இதற்கு இடையில் பானுமதி வீட்டிற்கு வந்திருந்தார். இருவரும் முகத்தை திருப்பிக் கொண்டு திரிவது பார்த்து "என்ன ஆச்சு மா?" என்று மருமகளிடம் கேட்டார். அவ்வளவு தங்களுக்குள் இருக்கும் பிரச்சினை தங்களோடவே போகட்டும் பெரியவர்களுக்கு தெரிய வேண்டாம் என்று நினைத்து "ஒன்னும் இல்லம்மா நாங்க நல்லா தான் இருக்கோம்" என்றாள் மழுப்பலாக​

"இல்லடா கண்ணு ஏதோ ஒரு மாதிரி இருக்கீங்க.. ரெண்டு பேரும் சண்டையா??" தயங்கியவாரு கேட்க "அதெல்லாம் இல்லம்மா. நாங்க நல்லா இருக்கோம். ஒன்னும் பிரச்சனை இல்ல" என்றாள் வரவழைக்கபட்ட புன்னகையுடன்.​

அதற்கு மேல் கேட்க எதுவும் இல்லை. ஏதோ இருவருக்கும் பிரச்சனை என்பது அவருக்கு புரிந்தது. ஆனாலும் புருஷன் பொண்டாட்டி பிரச்சினை குள்ள நாம போக வேண்டாம் என்று அமைதி காத்தார். ஆனாலும் இன்பாவிடம் "நிலாவ கஷ்டப்படுத்தாதே.. அவன் மனசு நோகுற மாதிரி நடந்துக்காத.." என்று அறிவுரைகள் மழை பொழிந்து சென்றார்.​

அதன் பின்னும் இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. ஆளுக்கு ஒரு பக்கமா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு திரிந்தனர். நாட்கள் இப்படியே சென்றது ஒரு வாரம் கடந்திருந்த நிலையில், கல்லூரி சென்று வந்த நிலா வீட்டிற்கு வந்தபின் இன்பாவுக்காக காத்திருந்தாள். அவன் இன்னும் வராமல் போக என்னவானதோ என்று தவித்துக் கொண்டிருக்க அந்நேரம் "நான் இன்னைக்கு வீட்டுக்கு வர லேட் ஆகும் எனக்கு வெயிட் பண்ணாம நீ சாப்பிட்டு தூங்கு" என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.​

அதை பார்த்தவள் ஒரு பெரிய மூஞ்சோடு எழுந்து உண்டாள். நாளை கல்லூரியில் ப்ராஜெக்ட் வொர்க் இருப்பதால் அதற்கு தேவையான ஸ்டேஷ்னரி பொருட்கள் வாங்க சென்றாள்.​

அவளுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் போது அருகில் இருந்த பேக்கரியில் பர்த்டே கேக்குடன் வெளியே வந்தான் இன்பா. என் கிட்ட நேரம் ஆகும் சொல்லிட்டு இவரு இங்க என்ன பண்றாரு? என்று அவள் பார்க்க பர்த்டே கேக்கை பேக் செய்து எடுத்துக் கொடுத்தனர்.​

அதை பெற்றுக் கொண்டவன் வண்டியில் எங்கோ புறப்பட அவன் பின்னாலே சென்றாள் நிலா. டைம் ஆகும்னு சொல்லிட்டு இவர் பர்த்டே கேக் வாங்கிட்டு எங்க? போறாரு யார பாக்க போறாரு? என்ற குழப்பத்துடனே அவனை பின் தொடர்ந்து சென்றாள்.​

பெரிய அப்பார்ட்மெண்டுகளுக்கு அருகில் இருந்த ஒரு சின்ன வீட்டின் முன் இறங்கினான் இன்பா. இங்க யாரும் தெரிஞ்சவங்க இல்லையே என்ற யோசனையோடு அவனைப் பார்த்துக் கொண்டிருக்க காம்பவுண்ட் சுவர் ஓரத்தில் இருந்த ஒரு வீட்டின் கதவை தட்டினான். ஒரு 30, 32 வயது மதிக்கத்தக்க அழகு பெண்ணொருத்தி வந்து கதவை திறக்க முத்துப்பல் தெரிய சிரித்தான் இன்பா. அவளும் புன்னகையோடு அழைத்து சென்றார். இருவரும் பேசிக்கொண்டது எதுவும் அவள் காதில் விழவில்லை. ஆனால் இருவரும் சிரித்து பேசுவதை கண்டு அவளுக்கு உள்ளம் கலங்கியது அவளுக்கு.​

அவன் வீட்டிற்குள் சென்ற பின் கதவு மூடபட்டது. ஏதோ நினைத்தவள் இன்பாவிற்கு அழைக்க, அவன் அவள் அழைப்பை துண்டித்தான். தூக்கி வாரி போட்டது நிலாவிற்கு. எந்த சூழ்நிலையிலும் தன் அழைப்பை அவன் ஏற்க மறுக்காமல் இருந்ததில்லை. அப்படி இருக்க இப்பொழுது துண்டித்து விடுகிறானே என்ற கலக்கத்தோடு அவள் அவனுக்காக காத்திருந்தாள்.​

நொடிகள் நிமிடங்களாக கடந்தது நிமிடங்கள் மணி நேரங்களாக கடந்தது ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகும் இன்பா வராமல் போக இனியும் நாம் காத்திருக்கக் கூடாது என்று அவள் நேராக வீட்டுக்கு வந்தாள். அவள் உள்ளம் ஒரு நிலையில் இல்லை ஏதேதோ நினைத்துக் கொண்டிருந்தது.​

மனதிற்குள் பல வகையில் கணக்கு போட்டுக் கொண்டிருந்தாள். தப்பு தப்பாக கணக்கு போட்டு இறுதியாக அந்தப் பெண்ணிற்கும் தன் கணவனிற்கும் தவறான உறவு உள்ளது என தவறாக முடிவு செய்தாள் நிலா. கண்கள் இரண்டும் கரித்துக் கொண்டு வந்தது. என்னவன் என்னை விடுத்து வேறொருத்தியுடன் செல்வதா?? என்று நினைத்தவள் நின்ற நிலையிலே மடிந்து அமர்ந்து அழுது கரைந்தாள்…​

தொடரும்…​

 
Top