எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாயனே 12-கதை திரி

NNK-82

Moderator

மாயனே 12​

குழப்பத்தோடு நடமாடிக் கொண்டிருந்தாள் நிலா. குறுக்கும் நெடுக்கம் நடந்தவளுக்கு இன்று பார்த்த அந்த பெண்ணை எங்கோ பார்த்தது போன்ற உணர்வு. நிச்சயம் இது பிரம்மை இல்லை நான் அவளை எங்கோ கண்டிருக்கிறேன் என்ற உணர்வோடு யோசிக்க துவங்கினாள். எங்கு பார்த்தேன்? அவளை எங்கு பார்த்தேன்? என்று யோசித்துக்கொண்டு நிமிடங்கள் கடக்க, குறுக்கும் நெடுக்கும் நடந்தவளின் கால்கள் அப்படியே நின்றது ஒரு இடத்தில். கண்டுபிடித்து விட்டாள்.​

முதல்முறையாக இன்பாவை பார்த்த பொழுது ஒரு குடும்பத்தை கடனுக்காக அவர்கள் வீட்டில் இருந்து விரட்டி அந்த வீட்டை பூட்டி எடுத்துக் கொண்டான். அந்த குடும்பத்தில் இருந்த பெண் தான் அவள். இரண்டு குழந்தைகளின் தாய்.​

இன்று அந்த வீட்டில் அவள் குழந்தைகள் இல்லை. கணவன் இல்லை. அவள் மட்டும் தான் இருந்தாள். அப்படியானால் வாங்கிய கடனுக்காக வீட்டை எடுத்துக் கொண்டவன், அவள் அழகில் மயங்கி அவள் குழந்தைகளையும் கணவனையும் விரட்டிவிட்டு அவளை தனக்கு இரண்டாம் மனைவியாகவோ அல்லது ரகசிய அந்தரங்க காதலியாக வைத்திருக்கிறான் என்று நினைத்து நொடிந்து போனாள் நிலா.​

உயிர் உலர்ந்து வற்றி சருகாய் மடிந்தது. கதறி துடித்தது அவள் காதல் குழந்தை. என்னதான் இன்று வரை அவனை மனதால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஏற்றுக்கொள்ள முடியவில்லை​

உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்றெல்லாம் கூறினாலும் அவள் மனதில் அவன் மீது உண்டான ஈர்ப்பு காதலாக உருமாறி இருப்பதை அவள் அறியாமல் தானே போய்விட்டாள்.​

அவளை அறியாமலேயே பிறந்த அவள் காதல் குழந்தை கதறி அழுதது. என்னவன் எனக்கு மாலையிட்ட மன்னவன் வேறொருத்தியுடன். அவளையும் அணைப்பானா?? முத்தமிடுவானா?? என்னுடன் அன்று சங்கமித்தது போல் தானே அவளுடனும் சங்கமிப்பான் என்று நினைக்க நினைக்க நிலாவின் நெஞ்சம் நொறுங்கியது சில்லு சில்லாக. மடிந்து அமர்ந்தாள் கதறி அழுதாள்.​

ஒரு மனமோ "அவனத்தான் உனக்கு புடிக்கலையே அப்புறம் ஏன் நீ அழுவுற? அவன் எவள வச்சிருந்தா உனக்கு என்ன?" என்று கேட்க காதல் கொண்ட மனம் அவன் என்னவன்! என் கணவன்! என் மன்னவன்! என் மாயன்! என்று எண்ணி அழுதது. அழுது அழுது கரைந்தவள் அப்படியே அமர்ந்து விட்டாள். இரவு 10 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்தான் இன்பா. வந்தவன் சிறு புன்னகையுடன் அறைக்குள் சென்றான்.​

அங்கு ஒருத்தி அமர்ந்திருப்பதை அவன் கண்டு கொள்ளவில்லை. அறைக்குள் சென்றவன் வெளியே வரவில்லை நீண்ட நேரத்திற்கு பிறகு கண்களை துடைத்து கொண்டு அவள் அறைக்குள் செல்ல கவிழ்ந்து படுத்து உறங்கி இருந்தான் இன்பா. கூடலில் ஏற்பட்ட கலைப்போ?? வந்ததும் படுத்துவிட்டானே!! என்று நினைத்து குமுறி கொண்டு வந்தத அழுகையை இரு கரங்களாலும் வாயை அழுத்தி பிடித்து அடக்கினாள்.​

அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள். அவனும் அவள் இன்னும் கோபத்தில் இருக்கிறாள் சண்டையில் இருக்கிறாள் என்ற எண்ணத்தில் உறங்கிப் போயிருந்தான்.​

மறுநாள் முதல் அவன் வழக்கம் போல இருந்தாலும் அவள் வழக்கம் போல இல்லை. என்னவன் என்னிடத்தில் வேறொருத்தியை அனுமதித்தானே என்று கோபமும் ஆத்திரமும் பொங்கி எழுந்தது. தந்தை தாயிடமும் சொல்ல விருப்பமில்லை. தன்னவனே அவர்கள் இழுத்துறைப்பதையும் விரும்பவில்லை அவள். என்ன செய்வது என்று தெரியாமல் மனதிற்குள்ளேயே போட்டு அழுத்தி அழுத்தி விஷயம் விஷமாக மாற எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்தாள்.​

சின்ன ஸ்பூன் விழும் சத்தம் கேட்டாலும் கூட அவனை தான் திட்டி தீர்த்தாள். சிரிப்பு என்பதே அவள் முகத்தில் இல்லாமல் போனது. முன்பு முறைத்த படி இருந்தாலும், இப்போது ஏதோ சூனியக்காரி போலவே கடுகடுவென்று இருந்தாள்.​

சிடு சிடுவென விழுந்தவளை பார்த்து கவனித்துக் கொண்டுதான் இருந்தான் இன்பா. ஆனாலும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை அன்று வழக்கம் போல மாலை கல்லூரியில் இருந்து வந்தவள் வீட்டில் ஏதோ செய்து கொண்டிருந்தாள்.​

நிலா.. நிலா.. என்று கத்திக்கொண்டே இருந்தான் அவன். கடுப்பானவள் "என்ன கேடு உனக்கு?" என்று கத்திக் கொண்டே வர இடுப்பில் கை வைத்து அவளைப் பார்த்தான்.​

முறைப்பாக கேட்டவளிடம் "உனக்கு இப்ப என்னதான் பிரச்சனை?" என்று கேட்டால் " எனக்கு எந்த பிரச்சனை வெங்காயமும் இல்ல.. எதுக்காக இப்ப என்ன கூப்பிட்டீங்க? " எண்ணையில் போட்ட கடுகாக அவள் வெடிக்க, அவளை நெருங்கி வந்தவன்.​

அவள் நாடி இருக பற்றி தன்னை பார்க்க வைத்தான். கோபத்தில் முறுக்கி கொண்டவள் எங்கோ பார்க்க "என்னடி பிரச்சனை உனக்கு? ஏன்டி உன் மூஞ்சிய தூக்கி வச்சுட்டு சிடு சிடுன்னு எரிஞ்சு விழற?? என்னதான் உனக்கு கேடு?" என்று அவன் கேட்க "ஆமா.. எனக்கு கேடு வரணும்.. அதானே உங்க விருப்பம். எனக்கு கேடு வந்து ஏதாவது ஒன்னு ஆயிடுச்சுனா நான் செத்து போயிடுவேன்.. நீங்க உங்க காதலி கூட ஜாலியா இருக்கலாம் தானே இப்படி எல்லாம் பேசுறீங்க?" என்று அழுது கொண்டே அவள் கேட்க திடுக்கிட்டான் இன்பா..​

" என்னது என் காதலியா? " அதிர்ச்சியாக கேட்க "ஆமா.. அதான் பார்த்தேனே!! காதலி பொறந்த நாளைக்கு கேக்லாம் வாங்கிட்டு போனீங்களே!!" என்று கண்ணீருடன் கூறினாள்.​

" காதலி பொறந்த நாளா?? ஏய் லூசு!! என்னடி சொல்ற??" அவன் அவள் புஜம் பற்ற " என்ன தொடாதீங்க.. அவளை தொட்டு கொஞ்சின இந்த கையால என்ன தொடாதீங்க.. என்கிட்ட நெருங்காதீங்க.. " என்றாள் அழுகையுடனே.​

"எது தொட்டனா??!! ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு பேசுற நிலா" என்று அவன் கூற, "ஆமா ஆமா..நான் தப்பா தான் புரிஞ்சுகிட்டேன். நீங்கதான் எல்லாத்தையும் ரொம்ப நல்லா சரியா புரிஞ்சு இருக்கீங்களே" என்றாள் அழுகையுடன். எங்காவது சுவரில் போய் மோதிக்கொள்ளலாமா என்று தான் அவனுக்கு.​

கடுப்பானவன் 'என்ன பிரச்சனைண்ணு சொல்லு டி.. எதுவா இருந்தாலும் ஓப்பனா சொல்லு.. மனசுல எதையோ வச்சிக்கிட்டு சில்லு சில்லுன்னு விழுகாத" என்று அவன் கேட்க "நான் பார்த்தேன்.. ரெண்டு நாளைக்கு முன்னாடி பர்த்டே கேக் வாங்கிட்டு போனீங்க. அங்க ஒரு பொண்ண பார்த்தேன். அந்த பொண்ணு தானே கொடுத்த கடனை கொடுக்கலைன்னு சொல்லிட்டு அவங்க வீட்ட நீங்க பறிச்சுக்கிட்டிங்க.. வீட்ட மட்டும் இல்லாம, அவ புருஷனையும் பிள்ளைய ஆட்சி தொறத்தி விட்டுட்டு நீங்க அவள வச்சிருக்கீங்கல்ல.." என்று கேட்க உச்சகட்டமாக அதிர்ந்தான் இன்பா.​

" என்ன சொன்ன? " தன் செவியில் விழுந்த வார்த்தைகள் உண்மையா என்ற சந்தேகத்தில் அவன் மீண்டும் கேட்க நான் சொல்றது.​

உன் காலுல விழுந்தவன் பொண்டாட்டி தானே அவ. அவ புருஷனையும் பிள்ளைகளையும் விரட்டி விட்டுட்டு அவளை வச்சிருக்கீங்க இல்ல.. " என்று மறுபடியும் கூற விட்டான் ஒரு அறை.​

கன்னம் பழுத்து பிய்ந்து தொங்கும் அளவிற்கு. ஒரே அறையில் நிலை தடுமாறி தரையில் விழுந்தாள் நிலா. இந்த அறையை அவனிடம் இருந்து அவள் எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து அவள் நிமிர்ந்து பார்க்க "என்னடி சொன்ன?? வாய ஒடச்சிடுவேன் ராஸ்கல்?? என்ன பேச்சு இது? காலேஜ்ல பசங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க போற நீ இப்படி தான் பேசுவியா?? இப்படித்தான் உனக்கு சொல்லிக் கொடுத்தாங்களா??" தலைக்கேறிய கோபத்துடன் அவன் கேட்க அவனை தள்ளி விட்டாள் தூரமாக.​

"உண்மையைத் தானே நான் சொன்னேன்?? அன்னிக்கு நான் ஒன்றரை மணி நேரம் அந்த வீட்டுக்கு வெளிய தான் நின்னுட்டு இருந்தேன். நீங்களும் வருவீங்க வருவீங்கன்னு பார்த்தேன். நீங்க வரவே இல்ல. அதுக்கு அப்புறம் தான் நானே வந்துட்டேன். கல்யாணம் ஆன நாளிலிருந்து நான் உங்கள புடிக்கல புடிக்கலைன்னு சொன்னதுனால எனக்கு பதில் வேற ஒட்டிய செட் பண்ணிட்டீங்கல்ல" என்று கேட்க அய்யோ என்று தலையிலேயே அடித்துக் கொண்டான் இன்பா.​

ஏதோ அவன் சொல்ல வர அதற்குள் இடை புகுந்தவள் "என்னதான் இருந்தாலும் நீங்களும் எல்லா ஆம்பள மாதிரி சராசரியான ஒரு ஆம்பளைன்னு புரூவ் பண்ணிட்டீங்க இல்ல?? என்ன விட்டுட்டு இன்னொருத்திக்கிட்டே போக உங்களுக்கு எப்படி மனசு வந்திச்சு?? நீ அநியாயம் பண்ற கொடுமை பண்ற.. அதனால தானே நான் உன்னை பிடிக்கலைன்னு சொன்னேன். அதுக்காக நீ வேற ஒருத்திகிட்ட போவியா? வேற ஒட்டிட்டு நீ போறதுக்கு என்ன எதுக்கு கல்யாணம் பண்ண? என்ன எதுக்கு கூடவே வச்சிருக்க? அன்னைக்கு அந்த நாலு பசங்க கிட்ட இருந்து எதுக்கு என்னை காப்பாத்துன? அப்படியே விட்ட நான் செத்து போயிருப்பேனே.." என்றெல்லாம் அழுது கொண்டே கூற தலையிலேயே அடித்துக் கொண்டான் இன்பா.​

எங்காவது கருங்கல் சுவர் இருந்தால் பார்த்து தலையை முட்டிக் கொள்ளலாம் என்று இருந்தது அவனுக்கு.​

"நிலா நான் சொல்றத முதல்ல கொஞ்சம் கேளு" அவன் சமாதானமாக பேச வர "நீ ஒன்னும் சொல்ல வேணாம். என்கிட்ட வராத அவளை தொட்ட கையாலே என்ன தொடாத. ஒருத்தி தானா.. இன்னும் வேற யாரையாவது வச்சிருக்கியா?" என்று கேட்க பொருத்தது போதும் என பொங்கி எழுந்து விட்டான் இன்பா.​

அவள் குரல்வலையை இறுக பிடித்து நிறுத்தினான். மூச்சு விட முடியாமல் அவள் தத்தளிக்க அவளை கொண்டு போய் படுக்கையில் தள்ளி அவள் மீது ஏறி அமர்ந்தான். அவள் இடைக்கு இருபுறமும் முட்டி கால்களை ஊன்றி அவள் அடிவயிற்றில் அமர்ந்தவன் "என்னை பாரு நான் சொல்றது முதல்ல கேளு" என்றான்.​

அவள் மிரண்டு போய் பார்க்க "நீ நினைக்கிறது தப்பு. கொடுக்காத கடனுக்காக அவங்க வீட்ட நான் பறிச்சிக்கிட்டது உண்மைதான். ஆனால் நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல நிலா.." பொறுமையாக விளக்க முயற்சி செய்தான்.​

ஆனால் அவள் கேட்கும் மனநிலையில் இல்லை. "அப்படியா?? அப்புறம் அந்த நைட்ல எதுக்காக அவங்க ஒரு பொண்ணு இருக்க வீட்டுக்கு நீங்க போனீங்க?" என்று கேட்க, என்ன ஏது என்று அவன் சொல்ல வரும்னு அவனை தள்ளிவிட்டு எழுந்து நின்றவள்​

"எனக்கு எல்லாம் தெரியும். நானும் படிச்சவ தான். எனக்கும் உலகம் தெரியும். என்னை ஏமாத்திட்டு நல்லாவே இருக்க மாட்ட" என்று அவள் அழுது கொண்டே பேச​

" நிலா எனக்கும் ஒரு பொறுமை இருக்கு. பொறுமையை மீறி பேசிட்டு இருக்க" அவன் எச்சரிக்க என்ன பண்ணுவீங்க.​

" தப்பு பண்ண உங்களுக்கே இவ்ளோ கோபம் வருதுன்னா?? தப்பு பண்ணாத எனக்கு எவ்வளவு கோபம் வரும்?? இனிமேல் என்கிட்ட வராதீங்க" என்று சொல்லி விலகி சென்ற அவள் கரம் பற்றி நிறுத்தியவன்.​

உனக்கு என்ன பிரச்சனை என்று அவளை தர தரவென இழுத்து வந்தான் வாசலுக்கு. ஒரே உதையில் பைக்கை ஸ்டார்ட் செய்தவன் "ஏறு" என்றிட முறைத்துக் கொண்டிருந்தாள்.​

" இப்ப மட்டும் நீ பைக்ல ஏறல உன்ன தூக்கி பெட்ரோல் டேங்க் மேலே உக்கார வச்சிக்கிட்டு போவேன்.. நான் சொன்னதை செய்வேன்னு உனக்கே தெரியும் ஒழுங்கா வண்டியில் ஏறு.. " பற்களை கடித்துக் கொண்டு வார்த்தைகளை கடித்து துப்ப அமைதியாக ஏறிக்கொண்டாள் நிலா.​

இருபது நிமிட பயணத்திற்குப் பிறகு அன்று வந்த அந்த வீட்டின் முன் நின்றனர். " நான் வரமாட்டேன். உன் காதலி கூட வாழ்றத என்ன வந்து பார்க்க சொல்றியா? " என்று அவள் குதிக்க "என்கிட்ட மறுபடி அடி வாங்கி சாகாத நிலா.." சன்னமான குரலில் அழுத்தமாக கூறினான்.​

அவள் பயந்து போய் பார்க்க "முதல்ல முகத்தை தொடச்சிக்கோ" என்று அவள் துப்பட்டாவை எடுத்து அவள் முகத்தை அழுத்தி கண்ணம் வழிந்த கண்ணீர் கோடுகளை எல்லாம் அழித்து துடைத்தான்.​

" வா" என்று அவள் கரம் பற்றி இழுக்க, வேண்டா வெறுப்பாக வந்தாள். அழைப்பு மணியை அழைக்க அதே பெண்தான் இப்பொழுதும் வந்து கதவை திறந்தாள். அவளை பார்த்ததும் நிலாவிற்கு அழுகை பொங்கி கொண்டு வந்தது. அவனோட ஆசை நாயகி வீட்டுக்கே கூட்டிட்டு வந்திருக்கானே என்று நினைத்தவள் பற்களை கடித்து கொண்டு நிற்க "அண்ணா… வாங்க அண்ணி.." என்று புன்னகை முகமாக அழைத்தாள் அந்த பெண் செல்வி.​

தூக்கிவாரி போட்டது நிலாவிற்கு. அண்ணனா?? என்று குழப்பமாக இன்பாவை பார்த்தாள். இன்பாவோ அவளை முறைத்துக் கொண்டு வீட்டுக்குள் செல்ல, அவன் பின்னாலே சென்றாள் நிலா. இன்பா வீட்டிற்குள் சென்றதும் செல்வி குழந்தைகள் இரண்டும் மாமா என்று ஓடி வந்து கட்டிக் கொண்டனர்.​

மாமாவா?? குழந்தைகள் அவளோட தான் இருக்காங்க என்று நிலா பார்க்க ஒரு கால் துண்டான நிலையில் கட்டைக்கால் வைத்து சாய்த்து சாய்த்து நடந்து வந்த ஆடவன் "வாங்க சார்" என்று அழைத்தான்.​

இவன் தானே அன்று இன்பாவின் கால்களை பிடித்துக் கொண்டு "என் பொண்டாட்டி புள்ள எல்லாம் தெருவுல நிக்குது சார்.. ப்ளீஸ் எனக்கு இன்னும் ஒரு மூணு மாசம் டைம் கொடுங்க" என்று கெஞ்சியவன் என்று நினைத்து பார்த்தாள் நிலா..​

இவர்களைப் பார்த்தவளுக்கு தலை சுற்றி மயக்கம் வராத குறைதான். என்னானது என்பது அவளுக்கு புரியவில்லை. குழப்பமாக அவள் அமர்ந்திருக்க "மாமா நீங்க கொடுத்த கிப்ட்" எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று என்று அவன் உயர பாண்டா பொம்மையை தூக்கி வந்து காட்டினான் குட்டி பையன் சிவா.​

அவனைக் கண்டு இதழ் விதித்த இன்பா "உனக்கு புடிக்கும்னு நெனச்சு தான் வாங்கிட்டு வந்தேன். முன்னாடியே வாங்கி கொடுக்கணும்னு நினைச்சேன். உன் பர்த்டேக்கு கிப்ட் பண்ணலாம்ண்ணு தான் பண்ணேன்" என்று கூற அதிர்ந்தாள் நிலா.​

அப்போ அந்த பர்த்டே கேக் இவனுக்கா என்று நினைத்தவனுக்கு ஒவ்வொன்றாக இப்போதுதான் புரிந்தது. தீர விசாரிக்காமல் அவசரப்பட்டு தன்னவனை தவறாக நினைத்து விட்டோமே என்று மருகினாள். அவள் மன ஓட்டம் புரியாமல் செல்வியும் அவளுடன் இயல்பாக பேச அவளுடன் இயல்பாக கலந்து பேச முடியாமல் தவித்தாள் நிலா. அவள் மனதை உணர்ந்து கொண்ட இன்பா "இந்த பக்கமா போனோம். அப்படியே சரி உங்கள பாத்துட்டு போலாம்னு வந்தோம். ஓகே நாங்க கிளம்புறோம்" என்று நிலாவை அழைத்துக் கொண்டு வந்து விட்டான்.​

இருவரிடமும் கடுமையான அமைதி வீட்டிற்குள் வந்த இன்பா அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டான். நொடி பொழுதில் என்னவளே நானே அவதூறு நினைத்து விட்டேனே என்று நினைத்தவளால் தன்னையே திட்டி கொள்ள தான் முடிந்தது…​

தொடரும்…​

 
Top