எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பார்தவி-07 கதைத்திரி

NNK 67

Moderator
பார்தவி -07


இங்கே மிதிலாவிடம் பேசிய குழப்பத்துடனே மறுநாள் அலுவலகத்திற்குச்சென்ற நந்தனோ, ராகவ் அன்று வழக்கத்திற்குமாறாக தாமதமாக வந்ததைக்கண்டு ராகவ்வை கண்டித்தபடி, “உன் மனசுல என்னடா நெனச்சிட்டு இருக்க..? ஆபீசுக்கு வர டைமாடா இது..? மணியைப்பாரு 11 ஆயிடுச்சு..! எப்போவும் எனக்கு முன்னே கிளம்பி, ஆபீசுக்கு கரெக்டான டைமுக்கு வரும் நீ, இப்போ இப்படி கேர்லெஸ்ஸா வர்ற..? இன்னைக்கு நீ லேட்டாக வந்ததால் முக்கியமா நடக்கவேண்டிய கிளையன்ட் மீட்டிங் உன்னால் தள்ளிப்போயிடுச்சு தெரியுமா..? ஏன்டா இப்படி இருக்க..? எல்லாத்துக்கும் காரணம் அந்த பொண்ணுதானே..? அவங்க ஞாபகத்துலதானே நீ குடிச்சுட்டு, விடிஞ்சதுகூட தெரியாமலிருக்க..? சரி, நீதான் இப்படி இருக்கயென்று, அவங்ககிட்ட பேசப்போனால், வாழ்க்கை ஏதோ ரகசியம் வச்சிருக்கு.. புதையல் வச்சிருக்குன்னு.. பிலாசப்பி பேசுறாங்க..! என்னடா பிரச்சனை உங்க ரெண்டுபேருக்கும்..? உங்களால் இப்போ எனக்குதான் தேவையில்லாத டென்ஷன்..!” என்று கோபித்துக்கொள்ள,


தனக்காக தன் நண்பன் மிதிலாவிடம் சென்று பேசியதைக்கேட்ட ராகவ்வோ, ஒருகணம் நிமிர்ந்து நந்தனைப்பார்த்து, “ஏன்டா மிதிலாகிட்டபோய் பேசுனயா..?” என்று கேட்டதற்கு நந்தனோ சலிப்பாக, “ஆமாம்..! பிரச்சினையை தீர்ப்பதற்காகபோய் பேசினால், அவங்க என்னையே குழப்பிவிட்டு அனுப்பிட்டாங்க..!” என்று சொல்ல, “நீ ஏன்டா தேவையில்லாமல் அங்கெல்லாம் போன..? இதெல்லாம் சரி வராதென்றுதான் நான் ஏற்கனவே சொல்லிட்டேனே..? என் நிலைமையை தெரிந்தால், கண்டிப்பா என்னை அவங்க ஏத்துக்கமாட்டாங்கடா..!” என்று விரக்தியாக சொல்ல, “இப்போ, அது பிரச்சனையில்லைடா..! எப்போவும் கலகலப்பாகயிருக்கும் பொண்ணு, எதையோ இழந்தார்போல இருக்காங்க..! ஒருவேளை அவங்களுக்கு வேற ஏதாவது பிரச்சனை இருக்குமோ..?” என்று கேட்க ராகவ்வோ, “அவங்களுக்கு என்னைத்தவிர வேற எந்த பிரச்சினையும் இருக்காதுடா..! குடும்பத்தின்மீது, அவ்வளவு பாசமாக இருப்பவங்களுக்கு, வேறு என்ன பிரச்சனை இருக்கப்போகுது..?” என்று சொல்லிட,


“அது இல்லடா..! இது வேற ஏதோ..?” என்று எதையோ நந்தன் சொல்லவரும்போது, அவர்களை இடைநிறுத்திய ராகவின் மேனேஜரோ இருவரிடமும், “சார்..? உங்களை பாக்குறதுக்காக, நம்மளோட சப்ளை பார்ட்னர் புட்ப்ராடக்ட் கம்பெனி ஓனர் மிஸ்டர் பரத் வந்திருக்கார் சார்..!” என்று சொல்ல நந்தனோ, “ஓ..! அவரா..? டேய் மச்சி..? அவர்தான் நம்ம ஹோட்டல்ஸுக்கெல்லாம் ஃபுட் ப்ராடக்ட் பொருள்களை மொத்தமாக சப்ளைசெய்வது..! அவரோட பொருட்கள் எல்லாமே ரொம்ப குவாலிட்டியா இருக்கறதுனால, நாம ரெகுலரா அவர்கிட்டதான் பர்சேஸ் பண்றோம் தெரியுமா..? நானே அவரை ரெண்டு மூணுதடவை பார்த்து அப்பிரிஷியேட் பண்ணிருக்கேன்..!” என்று சொல்லிவிட்டு யோசனையாக, “ஆனால், இப்போ எதுக்கு இங்கே வந்திருக்காருன்னு தெரியலையே..? எதுவாயிருந்தாலும், ரொம்ப முக்கியமான விஷயத்துக்காகத்தான் வந்திருப்பாரு..! வா..! அங்கேபோய் அவரைப்பார்க்கலாம்..!” என்று சொல்ல,


அங்கே பரத்தை மரியாதையாக உபசரித்து, மிக முக்கியமானவர்களை சந்திக்கும் விஐபி அறையில் அமர்த்திவைக்கப்பட்டிருக்க, அப்போது அறைக்குள் நுழைந்த நந்தனோ அமர்ந்திருந்த பரத்தைக்கண்டு புன்னகைத்திட, ராகவ்விற்கோ பரத்தைக்கண்ட நொடியில் ஏதோ இனம்புரியாத உணர்வு ஒன்று தோன்றிமறைந்தது..! பின்பு அதனை பெரிதுபடுத்தாத ராகவ்வோ வந்திருந்த தனது சப்ளைபார்ட்னரை வரவேற்று உபசரித்தபின், அவன் வந்ததற்கான நோக்கத்தை கேட்டனர்.. அப்போது பரத்தோ, அவர்களிடம் தனது நிச்சயதார்த்த பத்திரிகை நீட்டி, இந்தவார இறுதியில் தனக்கு திருமண நிச்சயம் இந்த ஊரிலேயே நடக்கவிருப்பதாகவும், அதற்கு தொழிற்துறை பார்ட்னர் என்ற நிலையையும்தாண்டி, ஒரு நண்பனாக நீங்கள் இருவரும்வந்து விழாவை சிறப்பிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு அவர்களது முகம் பார்க்க,


அதற்கு நந்தனோ புன்சிரிப்புடன், “என்ன பரத் இது..? இதையெல்லாம் நீங்க எங்களிடம் கேட்கணுமா என்ன..? கண்டிப்பா நாங்க ரெண்டுபேரும் உங்களோட நிச்சயதார்த்தத்தில், முதலாளாக வந்திருப்போம்..!” என்று உறுதியாகச்சொல்ல, அருகிலிருக்கும் ராகவ்வை பார்த்த பரத்தோ, “கண்டிப்பா நீங்களும் வந்துடனும்..!” என்றுக்கூற, “கண்டிப்பா வருவேன்..! கவலைப்படவேண்டாம்..!” என்று சொன்னான் ராகவ்.. அதன்பிறகு வந்திருந்த பரத் சென்றதும் நந்தனோ பரத்தைப்பற்றி நல்லவிதமாக, “ரொம்ப நல்ல பையன்டா..! அப்பா அம்மா கிடையாதுபோல..? தனியொரு ஆளாக நம்மைப்போலவே சொந்தக்காலில் நின்று, இப்போ இவ்வளவு பெரியஇடத்தில் இருக்கிறான்..!” என்று சொல்ல, அதனைக்கேட்ட ராகவிற்க்கு மனதில் என்ன தோன்றியதோ..? அது அவனுக்குதான் தெரியும்..! பின் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாதபடி நின்றிருந்த ராகவின்புறம் திரும்பிய நந்தனோ சலிப்பாக, “பாரு..? அவனும் நம்ம போலதான்..! அம்மா அப்பா இல்லையென்றாலும் தனக்கென்று ஒரு குடும்பம் அமையவேண்டுமென்று, ஒரு பொண்ணைப்பார்த்து கல்யாணத்துக்கு ஏற்பாடும் செஞ்சாச்சு..! ஆனால் உன்னை பாரு..? உனக்கு என்னடா குறை..? ஏதாவது ஒன்றை தேவையில்லாதது மனசுலபோட்டு குழம்பிக்கொண்டே, உனக்கு கிடைக்கயிருந்த நல்ல வாழ்க்கையும், நீயே கெடுத்துட்டிருக்க..? எங்கபோய் இதையெல்லாம் நான் சொல்ல..? என்று புலம்பிக்கொண்டிருக்க,


அவனை தடுத்த ராகவோ, “நிச்சயம் எப்போது..?” என்று கேட்க, “இந்தவாரம் வெள்ளிக்கிழமை..!”என்று சொன்னான் நந்தன்.. இப்படியே நாட்கள் அதன்போக்கில் சென்றிருக்க வெள்ளிக்கிழமையும் வந்தது..! அன்று பரத்தின் நிச்சயதார்த்தம் என்பதால், காலை எப்பொழுதும்போல் அலுவலகத்திற்குசென்ற ராகவும் நந்தனும், அன்று முடிக்கவேண்டிய மிகமுக்கியமான வேலைகளை மட்டும் செய்துவிட்டு, மற்றவேலைகளை ஒதுக்கிவிட்டு மாலை நேரமாக அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு கிளம்பி, குறித்தநேரத்தில் பரத்தின் நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு செல்ல அங்கே பரத்தோ, தன்னை மதித்து தனது நிச்சயதார்த்தத்திற்கு வருகை புரிந்திருந்த ராகவையும் நந்தனையும் வரவேற்று உபசரித்தான்.. அதுமட்டுமில்லாமல் அன்றைய நிச்சயதார்த்தத்தில் பரத்தின் தொழில்வட்டார நண்பர்களும், அவனது மாமாவிற்கு தெரிந்த மற்ற உறவினர்களும் கூடியிருக்கவே, சங்கரன் தரப்பிலும் அவர்களைச்சார்ந்த உறவினர்களும் வருகைதந்திருந்தனர்..


அப்போது ராகவ்வும் நந்தனும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து நடக்கும் விசேஷத்தை கவனித்துக்கொண்டிருக்க, அங்குவந்த சங்கரனைக்கண்டவர்களோ, அவர்தான் பெண்ணுடைய அப்பா என்று தெரிந்ததும் அதிர்ச்சியாகிட நந்தனோ, “என்னது இவரோட பொண்ணுக்குதான் இந்த நிச்சயதார்த்தமா..? அப்படியென்றால், பரத்திற்கு பார்த்திருக்கும் பெண்..?” என்று கேள்வியாக ராகவ்வைப் பார்க்க, ராகவின் முகத்திலோ ஒரேநொடியில் ஒளி இழந்துபோனது..! இருப்பினும் பொதுஇடத்தில் அனைவரும் கூடியிருக்கும் நேரத்தில், எந்தவித எதிர்வினையும் ஆற்றமுடியாது தவித்த நந்தனோ சற்று அமைதியாயிருக்க, நல்லநேரமும் வரவே அங்கிருக்கும் மேடையில் பரத்தின் அருகே அமர்வதற்காக அழைத்துவரப்பட்ட பவித்ராவைக்கண்டு ராகவ்வும் நந்தனும் மீண்டும் ஒருகணம் அதிர்ச்சியாகிட, பின் மனதிற்குள் ஒருபுறம் சந்தோசமாக இருந்தாலும், மற்றொருபுறம் புரியாமல் தவிக்க, நந்தனுக்கோ நடப்பதைக்கண்டு புத்தியில் எதுவும் ஓடவில்லை..!


பின்னர் சுயம்புரிந்த நந்தனோ ராகவைக்கண்டு, “டேய் மச்சான்..? என்னடா இது..? இது நம்ம மிதிலாவோட தங்கச்சி பவித்ராதானே..? அக்கா இருக்கும்போது தங்கைக்கு எப்படிடா கல்யாணம் பண்ணுவாங்க..?” ஒருவேளை காதல் கல்யாணமாக இருக்குமோ..? அப்படியிருந்தால் பரத் கண்டிப்பாக நம்மிடம் சொல்லியிருப்பாரே..? அவர் பெரியவர்களால் நிச்சயக்கப்பட்ட கல்யாணம் என்றுதானே சொன்னார்..! இல்லடா..? இதில் என்னமோ நடந்து இருக்கு..?” என்று சந்தேகமாக தன் நண்பனைக்கண்டு கூறிட, அதனை ஆமோதித்த ராகவ்வோ, “ஆமாம்டா..! எனக்கும் அதுதான் புரியல..? மிதிலாவுடைய காதல்விஷயம் தெரிந்து அவங்களுக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணியிருந்தால் கூட ஏத்துக்கலாம்..! இது என்னடா தலைகீழாக அவங்க தங்கச்சிக்கு கல்யாணம் பண்றாங்க..!” என்று ஒருவருக்கொருவர் தங்களது சந்தேகத்தை கேட்டுக்கொண்டு விடையறியாது விழித்திருந்தனர்..


பின்பு குறித்தநேரத்தில் வெகுவிமர்சையாக நிச்சயதார்த்த நிகழ்வு நடந்து முடிந்தது..! ராகவ்வோ தன் விழியைசுழற்றி மண்டபமெங்கும் வலைவீசி தன்னவளை தேடிக்கொண்டிருக்க, மிதிலாவோ அவனது கண்களுக்கு சிக்காமல் விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தாள்..! தன்னவளை தேடித்தேடி ஒருகட்டத்தில் ஓய்ந்து போனவனோ, விருந்து உண்ணப்போகும் வேளையில் திடீரென்று முக்கியமான போல்கால் வரவே, அதனை அட்டென்ட்செய்து பேசினான்..


இங்கே மிதிலாவோ அமைதியாக நின்றிருக்க, எதிரே நின்றிருந்த வேதவள்ளியோ மிதிலாவை கண்டபடி வசைவு பாடிக்கொண்டிருந்தாள்.. ஆம்..! வழக்கமாக விசேஷ நேரத்திற்குமுன்பே ரெடியான மிதிலாவோ, தன் குடும்பத்தினருடன் விசேஷம் நடக்கும் மேடைக்குச்செல்ல எத்தனிக்க அவளை அவசரஅவசரமாக தடுத்த வேதவள்ளியோ, “ஏய் மிதிலா..? எங்கடி போற..?” என்று கேட்டிட, அதற்கு மிதிலாவோ, “பாட்டி..? நிச்சயத்திற்கு நேரமாயிடுச்சு பாட்டி..! அதனாலதான் மேடைக்கு போறேன்..!” என்று சொன்னதற்கு வேதவள்ளியோ, “நீயே ஒரு விளங்காமூஞ்சி..! நீ எதுக்குடி இப்போ மேடைக்கெல்லாம் போகணும்னு ஆசைப்படற..? இப்போதான் கடவுள் புண்ணியத்துல, என் பேத்திக்கு ஒரு நல்லவாழ்க்கை அமையப்போகுது..! அதைப்போய் உன் ராசியால கெடுக்கபார்க்குறியா..? நீ என்னைக்கு இந்த வீட்டுக்குள்ள வந்தியோ..? அன்னைக்கே சனியன் குத்தவச்சு உட்கார்ந்திருச்சு..! நீ கால்வைத்த இடமே விளங்காது..! உன்னோட இந்த ராசியாலதான், உன்னை பெத்தவங்க உன்னை தூக்கிப்போட்டுட்டு போயிட்டாங்க..! உன்னாலதான் என் பேத்திக்கு எதுவுமே கிடைக்கமாட்டேங்குது..! ஆனால் இதெல்லாம் புரியாத அந்த சங்கரன், உன்னை தலைமேலவைத்து தூக்கி ஆடிட்டிருக்கான்..! எப்படியும் உனக்கு கல்யாணமாகலையே என்ற ஏக்கம், உன் மனசுக்குள்ள இருக்கத்தானே செய்யும்..? நீ மேடையில் நின்றால், என் பேத்தியோட வாழ்க்கை எப்படி நல்லாயிருக்கும்..? ராசிகெட்டவளே..? இதோ பாருடி..? என் பையன் வேணுமென்றால் உன்னை, அவன் பொண்ணு சொல்லலாம்..! ஆனால் என்னால ஒருபோதும் உன்னை, என் பேத்தியா ஏத்துக்கவேமுடியாது..! யாருக்கோ எவனுக்கோ பிறந்த நீ..? என்வீட்டு வாரிசா..? என்ன ஜாதியோ..? என்ன குலமோ..? சச்ச..! உன்னைமாதிரி அனாதைக்கெல்லாம், கல்யாணம் பண்ணிக்கிற கொடுப்பனையெல்லாம் கிடைக்காதுடி..! உன்னை கல்யாணம் பண்ண எவன் வருவான் சொல்லு..? உன்னை ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்து, என் பையன் இன்னும் கடன்படனுமா..? இதோ பாருடி..? ஒருவேளை நீ, நல்ல அப்பன் ஆத்தாளுக்கு பிறந்திருந்தால், சொல்லிக்காமல் இந்த வீட்டைவிட்டு போயிடு..! அதுதான் நீ, இந்த வீட்டிற்காக செய்யும் மிகப்பெரிய உதவி..!” என்று சொல்லி தங்களது வீட்டில் வளர்ந்தபெண் என்றும்பாராது, மிதிலாவின் மனதை சுடுசொற்களால் காயப்படுத்திட அதில் துவண்டுபோனவளோ, வாய்விட்டு அழமுடியாமல் தன் நிலையை நினைத்து மனம்நொந்து கண்ணீர் அருவியாக வழிந்தோடியபடி அங்கிருந்து செல்வதற்காக திரும்பிட, அங்கே கைகளை கட்டிக்கொண்டு நடந்தவற்றையெல்லாம் கேட்டபடி நின்றிருந்த ராகவ்வைக்கண்டு ஒருகணம் அதிர்ந்துதான் போனாள்..!


ஆம்..! போன்பேசுகையில் சரியாக சிக்னல்கிடைக்காததால் சற்றுதூரம் தள்ளிவந்தவனோ, அங்கேயிருந்த ஒருஅறைக்குள் யாரோ ஒருவரை திட்டுவதுபோல் சத்தம் கேட்பதைக்கண்டு அங்கேசென்று பார்க்கையில்தான் வேதவள்ளி மிதிலாவை மனசாட்சியின்றி திட்டிக்கொண்டு இருந்தார்.. அதன்பிறகு நடந்ததுதான் நமக்கு தெரியுமே..?


மிதிலாவோ நடந்தவற்றையெல்லாம் கேட்டபடி நின்றிருந்த ராகவ்வைக்கண்டு அதிர்ச்சியாக ஒருகணம் அசைவின்றி நிற்க ராகவிற்கோ, அதற்குமேல் இன்னும் அதிர்ச்சியாக இருந்தது..! “ஆம்..! எதற்காக மிதிலாவின் நிம்மதியை கெடுக்கக்கூடாது என்று, தன் மனதிலிருக்கும் காதலைக்கூட அழிக்க நினைத்தானோ..? இன்று அந்தநிம்மதியே அவளுக்கு இல்லாமல் போய்விட்டதே..?” என்று நினைத்து, கண்களாலேயே அவளிடம், “ஏன் இப்படி..? இதெல்லாம் உண்மையா..?” என்று வினவியதற்கு பதில்சொல்லமுடியாதவளோ, வழிந்த கண்ணீரை துடைக்கக்கூட மனமின்றி அழுதுகொண்டே அவனைத்தாண்டி சென்றிட, இப்படி வளர்ப்புமகள் என்ற பெயரில், ஒரு அகதியாக வாழ்பவளை நினைத்து வருந்தியவனோ, “இதனைப்பற்றி கண்டிப்பாக, தான் மிதிலாவிடம் பேசவேண்டும்..!” என்று நினைத்துக்கொண்டு, அந்த இடத்திலிருந்து அகன்றான்..


அதன்பிறகு, விசேஷம் முடிந்து வீட்டிற்குவந்த ராகவோ நந்தனிடம் தான் அங்கே கண்ட, கேட்டதனைத்தையும் சொல்லிவிட குழம்பிப்போன நந்தனோ, “என்னடா சொல்ற..? இதெல்லாம் நடந்திருக்குதா..? அப்போ அந்தப்பொண்ணு மிதிலா அனாதையா..? ஒருவேளை அதனால்தான், அன்னைக்கு என்கிட்ட அப்படி விரக்தியாக பேசினாளோ..?” என்றிட, “ஆமாம்டா..! அதுவாகத்தான் இருக்கணும்..! இதுதெரியாமல் நானும், அவங்களை காயப்படுத்திட்டேன்டா..!” என்று சொன்னதற்கு நந்தனோ சலிப்பாக, “ நீ, என்னைக்குடா மத்தவங்க மனசை புரிஞ்சு நடந்திருக்க..? புதுசா காயப்படுத்துவதற்கு..?” என்று நக்கலாககேட்டுவிட்டு, “எனக்கு என்னமோ..? அந்த பொண்ணுக்கே இந்த உண்மை இப்போ கொஞ்சநாள் முன்னாடிதான் தெரியுமென்று நினைக்கிறேன்..! இல்லையென்றால், அவங்க நம்மகிட்ட இப்படி நடந்துக்கமாட்டாங்க..! எனக்கு அவங்களைபற்றி நல்லாவேதெரியும்..! எப்படி சந்தோசமாக சுற்றிவந்தவங்க..? இன்னைக்கு முகத்தில் கலையே இல்லாமல் இருந்தாங்கடா தெரியுமா..?” என்று சொல்ல,


அதற்கு “ஆம்..!” என்று ஆமோதித்தவாறு தலையாட்டிய ராகவ்வோ, “பாவம்டா..! என்னதான் வளர்ப்புபெண்ணாக இருந்தாலும், அவங்க இருக்கும்போது அவங்களோட தங்கச்சிக்கு கல்யாணம் நடத்துவது, ரொம்ப தப்புடா..!” என்று சொல்லியதற்கு நண்பனின்புறம் திரும்பிமுறைத்த நந்தனோ, “டேய்..? அதை நீ சொல்லாதே..! நீ மட்டும் அன்றைக்கு உன் வாயைமூடிட்டு இருந்திருந்தால், எல்லாம் நல்லபடியா நடந்திருக்கும்..! இப்போ எல்லாத்தையும் கெடுத்துட்டு, நல்லவன்போல பேசுறியா..?” என்று சொன்னதற்கு, தன் நண்பனை சமாதானப்படுத்திய ராகவோ, “டேய் மச்சி..? அப்போ என் நிலைமை அப்படிடா..! புரிந்துக்கோடா..! அதுக்காக இப்படி அவங்க தனியா தவிச்சிட்டிருக்கிற நிலைமையில், நான்மட்டும் எப்படிடா நிம்மதியாக இருப்பேன்..?” என்றதற்கு நந்தனோ, “ஓ..! சார் அப்படி வரீங்களா..? சரி..! இப்போ அவங்களை சமாதானப்படுத்தி மட்டும், என்ன பண்ணப்போறீங்க..?” என்று கேட்டிட, முதலில் தயங்கிய ராகவோ, பின்னர் தெளிவான முடிவெடுத்தவாறு, “மச்சி..? இதுக்குமேல மறைக்கிறதுக்கு என்ன இருக்கு..? என்னைப்பொறுத்தவரைக்கும் அவங்களுக்கு குடும்பம்தான் உலகம்..! குடும்பம்தான் உயிர்..! என்று சொன்னதுனாலதான் ஒரு அனாதையான என்னை கல்யாணம்பண்ணி, காலம்முழுக்க அவமானத்தோடு கஷ்டப்படவேண்டாம்னு நினைச்சேன்..! ஆனால், இப்போ அவங்கநிலைமை அப்படியில்லை..! அவங்களும் கிட்டத்தட்ட என்னை மாதிரிதான்..! என்னையாவது, என் சின்னவயசுலையே உனக்கு யாருமில்லைன்னு சொல்லி, அனாதையாக்கி வெளியே துரத்திட்டாங்க..! ஆனால் அவங்க பாவம்டா..! குடும்பம்தான் உலகம்னு வாழ்ந்துட்டு இருந்தாங்க..! இப்போ அவங்களுக்கு அதெல்லாம் பொய்..! அவங்க ஒரு அனாதைன்னு..! தெரியும்போது, எவ்வளவு துடிச்சிருப்பாங்க..? அப்படிப்பட்டவங்களை எப்படிடா என்னால கைவிடமுடியும்..? அவங்க மனசுக்கு ஏற்பட்ட காயத்துக்கு மருந்தாக நான் இருக்கணும்னு ஆசைப்படறேன்டா..!” என்று சொல்ல,


மீண்டும் நண்பன்புறம் திரும்பிய நந்தனோ, “டேய்..? உண்மையைத்தான் சொல்றியா..? இல்ல..? மறுபடியும் மாத்தி பேசமாட்டியே..?” என்று வினவ, தன் நண்பனின் தோள்மீது கைபோட்ட ராகவோ, “டேய் மச்சி..? நான் ஒரு விஷயத்தை முடிவு பண்ணிட்டேனா, பண்ணதுதான்..! மிதிலா விஷயத்துலயும் அதேதான்..! நீதானே மிதிலாவை, நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்ட..? இப்போ சொல்றேன்டா..? மிதிலாதான் என் பொண்டாட்டி..! இதில் எந்த மாற்றமும் இல்லை..!” என்று சொல்லிட, தன் நண்பனின் உறுதியைக்கண்டு மகிழ்ச்சியடைந்த நந்தனோ, தன் நண்பனை கட்டியணைத்து, “ஐயோ..! இப்பதான்டா நீ என் நண்பன்..!” என்று சொல்லி மீண்டும் அணைத்துக்கொண்டான்..


மடந்தையாள் கொண்ட மனதின் ரணத்திற்கு மருந்தாவானா மன்னவன்…? பார்க்கலாம்…


தொடரும்…
 
Last edited:

Advi

Well-known member
Intha paattikku oru paayasam parcel😤😤😤😤😤

Ippa than theliva mudivu eduththu irukkaan raghav😍😍😍😍😍😍
 
Top