எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அகத்திரை திறவாயோ - பாகம் 9

NNK-41

Moderator

அகம் 9​

கேட்ட கேள்விகள் என்னவோ இரெண்டே வார்த்தைகள்தாம்.​

‘யார் நீங்க?’​

ஆமாம்… நான் யார் அவளுக்கு? சொல்லிவிடவா? சொன்னால் புரிந்துக்கொள்வாளா? புரிந்துக்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறாளா? தொண்டைவரை வந்த உண்மையை விழுங்கிக்கொண்டேன். ஆலகால விஷத்தை தொண்டையில் பொத்தி வைத்த நீலகண்டன் நிலை தற்பொழுதைய என்நிலை.​

அமிர்தம் பெற சிவபெருமான் விஷத்தை விழுங்கினார். நானோ என் மலரினியாழின் வாழ்வு மலர உண்மைகளை விழுங்கிக்கொண்டேன். அந்த உண்மை பெட்டகத்தில் என் சுயநலமும் ஒளிந்து கொண்டிருப்பதை நான் மட்டும் அறிவேன்.​

ஏனென்றால் நான் என்பது என்னுள் இருக்கும் அவளும் அல்லவா… இந்த சித்தாந்த தெளிவுகள் எல்லாம் ஏன் அன்று என்னிடம் இல்லை. குடும்பத்தில் இந்த தலைமுறையின் மூத்தவன் என்ற அகங்காரமா இல்லை எல்லாவற்றையும் முன்நின்று முடிவெடுத்த என் ஆளுமை பலம் கொடுத்த திமிரா?​

ம்ம்… திமிர்தான்!! எல்லாம் எனக்கு தெரியும் என்ற திமிர். உனக்கு ஒன்னும் தெரியாதுடா மடையா என்று தலையில் சம்மட்டியால் அடித்ததுபோல் தெளிவு வந்ததே… அந்த நாளை மறக்க முடியுமா!!​

முதன் முறையாக அவள் என்னை பார்த்ததும் சிலையாக நின்றதும் இன்னும் பசுமையாய் என் நினைவில்.​

பணக்கார வர்கத்தில் எலிஜிபல் பேச்சலாராக இருந்த என் மேல் காதல் கணைகள் வீசின பெண்கள் அதிகம். வியாபாரத்துறை நண்பர்களின் வீட்டு பெண்களிலிருந்து அப்பாவின் நண்பர்களின் பெண்கள் வரைக்கும் அவர்களின் முதல் தேர்வாக நான் இருந்தேன். அவர்களில் இவளும் ஒருத்தி என்றே இருந்தேன். இந்த வகை ஆர்வ பார்வைகள் எதுவும் என்னை கவர்ந்ததில்லை. இனியாழின் பார்வை எனக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அந்த கூட்டத்தில் இவளும் ஒன்று. அவ்வளவுதான்.​

பாரம்பரிய ஒழுக்கங்கள் என் இரத்தத்தில் ஊறி இருந்தன. கல்யாணத்துக்குமுன் எந்த பெண்ணையும் ஒரு எல்லைக்கு மேல் என்னை நெருங்க அனுமதித்ததில்லை. அம்மா அப்பாவின் சாய்ஸ்தான் என் எதிர்காலம் என்ற தீர்மானத்தில் இருந்தேன்.​

இதோ என்முன் நிற்கிறாளே… இலக்கியாவின் தோழியாக வந்து என்னை அசைக்க பார்த்தாள். அசையா என் மனதை தன் அழகால் மயக்க பார்க்கிறாள் என்ற குற்றச்சாட்டுடன் அவளை பார்த்தேன்.​

அவளின் அழகுதான் என் மனதில் முதலில் கால்தடம் பதித்து விட்டது போலும். பூமிக்குள் புதைந்திருக்கும் வைரம்போல் என் அனுமதி இல்லாமல் என் நெஞ்சின் ஆழத்தில் அவள் புதைந்திருக்கிறாள். நானொரு முட்டாள் அது தெரியாமல் அவளை சந்தேக கண்கொண்டு பார்த்திருந்திருக்கிறேன்.​

தன்னையே நொந்துக்கொண்ட மாறன். எதிரில் நிற்பவளை பார்த்தான். பதிலுக்காக காத்திருக்கிறாள். பதிலை சொல்லாமல் தன்னை உணர செய்யும் வேலையில் இறங்கினான் மாறன்.​

“இனியாழ்….” மென்மையாக அழைத்தான். ஒரே ஒரு அழைப்பில் உயிர் உருகுமா? அவள் உருகினாள். மெழுகாய் உருகினாள்.​

“யா… யார் ஸார் நீங்க? ஏன் ஸார் நி... நீங்க என்னை அப்படி கூப்பிடுறீங்க? ம்ம்.. எ… எல்லோரும் என்னை மலர் என்றுதான் கூப்பிடுவாங்க..” திணறலுடன் அவள் சொல்ல​

“நானும் அவங்களும் ஒன்னா இனியாழ்?” அவன் குரலில்தான் அத்தனை தவிப்பு. கேட்டவளின் மனம் கலங்கியது. ஏன் என்று தெரியவில்லை. எதிரில் இருப்பவன் அவளை என்னவோ செய்கிறான். சிப்பிகள் இரண்டு பிளந்து விரிவது போல் அவள் கண்கள் உயர்ந்தன​

“அ… அது இல்லை” மென்று விழுங்கினாள். அவளுக்கோ தவிப்பு ஆனால் அவனுக்கோ உற்சாக குமிழ் உருவாகின. அவளின் தவிப்பு அவனுக்காக அல்லவா…​

“ஆஹாங் எது இல்ல?” குறும்பு கொப்பளித்தது குரலில்​

“வந்து..” தடுமாறினாள்​

“எங்கு வந்து?”​

“ஆங்… எங்கேயும் இல்ல”​

“எங்கேயும் இல்லனா பிறகு ஏன் வந்த?” குறும்புடன் குறுக்கு விசாரனையை ஆரம்பிக்க​

“நான் எங்கே வந்தேன்?” குரலில் சிறு எரிச்சல் இருந்ததை கண்டுக்கொண்டான்​

“இப்போதானே அது வந்து என்று சொன்ன. அப்போ அந்த அது என்று சொன்னது என்னையா?” புருவம் உயர்த்தினான்​

“ஐயோ இல்ல!!” உடனடியாக அவள் மறுக்க​

“சரி நான் இல்ல… அப்போ யாரு?”​

“யாரு?” புரியாமல் விழித்தாள்​

“அந்த அது.. யாரு?” மறுபடியும் அவன் ஆரம்பத்துக்கே வர மொத்தமாக சரணடைந்தாள்​

“ஐயோ விட்டிருங்களேன்!!” கையெடுத்து கும்பிட… அவளை ஒரு மார்கமாக பார்த்தவன்​

“உன்னை கட்டி பிடிச்சிட்டா நிற்கிறேன் விடுறதுக்கு? எப்படி நீ இப்படி ஒரு அபாண்டமான பழியை என் மேல் சுமத்தலாம்?” சிரிப்பை மறைத்து அவன் சீரியசாக கேட்க… கும்பிட்டிருந்த கைகள் வாயை பொத்திக்கொண்டன​

“அவ்வா!! ஏதே பழியா!!” கண்கள் மேலும் விரிந்தன​

“ஆமாம். அதுவும் கட்டிபிடிச்சிருக்கேன்னு”​

“இல்ல!! இல்ல!! நீங்க என்ன ரொம்ப குழப்புறீங்க!!” விரிந்த கண்கள் இப்பொழுது அவனை சந்தேகமாய் பார்த்தன​

“நீ என்ன மண்சட்டியா நான் குழம்பு வைக்கிறதுக்கு..” விடாமல் மாறன் வம்பிழுக்கவும் அவளுக்கு ரோசம் வந்துவிட்டது​

“என்னது நான் மண்சட்டியா?? யோவ் நெடுமரம் உன் மனசுல என்ன நினைச்சிக்கிட்டு இருக்க??” புடவை முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டே அவள் அவனை நெருங்க​

மாறன் மனதில் மழைச்சாரல். அவளின் உரிமையான அதட்டலில் மயங்கி போனான். நெருங்கி நின்றவளின் வதனம் வாவென அழைக்க சொக்கி போனான். அகத்தின் மயக்கம் அப்பட்டமாய் அவன் முகத்தில். பூவை தண்ணீரில் பொத்தி வைக்க பார்த்தாலும் மேலெழும்பி வந்து விடும் அல்லவா. அப்படிதான் இருந்தான் மாறன். பொத்தி வைத்த காதல் கட்டுக்களை மீறி திமிறி நின்றது.​

மாறன் இப்படியென்றால் அவனின் இனியாழின் நிலையை சொல்லவும் வேண்டுமோ. என்ன சொன்னாள் என்ன பேசினாள் என்பதை மறந்தே போனாள். அருகில் இருக்கும் மாறன் மட்டும் அவள் கண்களுக்கு தெளிவாய் தெரிந்தான். மந்தகாச புன்னகையுடன் கண்கள் ஆசையில் மின்ன நின்றவனின் உருவம் அவளின் கருவிழியில் பிம்பமாய் பதிய… அனைத்தையும் மறந்தாள்.​

அவள் நினைவில் தப்பிய தன் நினைவுகளை மீட்ட வந்தவன்… அதை மீறி காதல் புரிய முனைய… கரடி பிறவி எடுத்த வசந்தன் இருவரின் மோன நிலையை கலைக்கவென வந்தான்​

“ஸார் இங்கேயே நின்னுட்டு இருந்தா டைம் ஆகிடும் ஸார்.. பிறகு மத்த மீட்டிங் எல்லாம் ரீ ஷெடுல் பண்ண வேண்டியதா ஆகிடும்..” காரியமே கண்ணாக அந்த காரியதரிசி சொல்ல​

“ஏன் ஐயா அதை கூட செய்ய மாட்டீங்களோ? என்ன செய்… நீ வந்து என் சேர்ல உட்கார்ந்துக்கோ… நானே அத்தனை பேருக்கும் கால் பண்ணி ரி ஷெடுல் செய்திடுறேன். ஒகேவா?”​

“ஸார்???” அதிர்ந்து போனான் வசந்தன்​

“என்னடா ஸாரு தாரு ரோட்டுல ஓட்டுன காருனுட்டு!!” இன்ப உலகில் சஞ்சரித்து கொண்டிருந்தவனை கலைத்து தொழில் உலகுக்கு இழுத்து வந்தவன்மேல் கோபம் பொங்க… வார்த்தைகளால் பிராண்டினான் மாறன்.​

அவனின் அடுக்குமொழியை கேட்டு கிளுக்கென அவள் சிரிக்க… பிராண்டியவனின் கண்கள் மறுபடியும் ரசனையாக மாற அவளை மொய்க்க ஆரம்பித்தது.​

“ஸார் பாவம் வசந்தன் அண்ணா… விட்டிருங்களேன்…” என்று மலர் சொன்னதும்… அப்பொழுதுதான் தேவையில்லாமல் வசந்தனை கடிந்தது ஞாபத்துக்கு வர… ஒற்றைக்கையால் தன் கழுத்தை அழுந்த தடவிக்கொண்டான்.​

“அய்யோ நான் அண்ணா இல்ல மேடம்!!” மாறனை பார்த்துக்கொண்டே கதறினான் வசந்தன்.​

“சும்மா இருங்கண்ணா” உரிமையுடன் அவள் கடிய… விடைப்பெற்று சென்றுவிட்டிருந்த கோபம் மறுபடியும் யு டர்ன் அடித்து வந்து உட்கார்ந்துக்கொண்டது மாறன் முகத்தில். பொறாமை வந்து அமர்ந்துக்கொண்டது.​

“ஸார்… இப்போ நான் என்ன பண்ணட்டும்?” அழுதுவிடுபவன் போல் நின்றிருந்தவனை பார்த்தவன்​

“இனியாழை பொறுப்பான இடத்துல விட்டுட்டு கிளம்பிடலாம்” என்றவன் வேக நடையுடன் முன்னே செல்ல… பின்னே அவனை துரத்திக்கொண்டு ஓடிச்சென்ற வச்சந்தனை தொடுத்து வந்த மலர்​

“இப்போ எதுக்கு உங்க பாஸுக்கு இப்படி கோபம் பொத்துக்கிட்டு வருது. கோபம் அறிவுக்கு சத்துரு தெரியுமா?” என்றவளை பார்த்து வசந்தன் ஆச்சிரியப்பட… முன்னே நடந்துக்கொண்டிருந்தவன் முகத்தில் விரிந்த புன்னகை… மறைத்திருந்த தாடியையும் மீறி கன்னத்துக்குழி காட்சி தந்தது.​

*********​

“ஏன்டா நிலவா மலரோட ஹேன் ஃபோன் பழுதாகிடுச்சா என்ன?” அப்பொழுதுதான் வேலை முடிந்து வீட்டுக்குள் நுழைந்த நிலவனை உள்ளே செல்ல விடாமல் தடுத்து கேள்வி கேட்டு கொண்டிருந்தார் சாவித்திரி.​

மஞ்சரிக்கோ கோபம் வந்து விட்டது. வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவனுக்கு ஒரு கப் டீ கூட கொடுக்க இடம் கொடுக்காமல் நிற்க வைத்து கேள்வி கேட்கும் மாமியார் மேல் கடும் கோபம்.​

காலையிலிருந்து அம்மாவும் பொண்ணும் அறைக்குள் நுழைந்து கதவடைத்துக்கொண்டு ஏதோ ரகசியம் பேசும்பொழுதே சுதாகரித்துவிட்டாள் மஞ்சரி. மலரைப்பற்றி தன்னிடம் விசாரிக்கப்படும் என்று அவள் எண்ணி முடிக்கும்முன்னமே அவளருகே வந்து விட்டனர் இருவரும்.​

“மலர்க்கிட்ட இருந்து ஃபோன் கால் வந்துச்சா மஞ்சரி. ஏன்னு தெரியல அவ நினைப்பாவே கிடக்கு..” சாவித்திரி சொல்ல… மதிய சமையலுக்கு காய்கறிகளை வெட்டிக்கொண்டிருந்தவள் அப்படியே திரும்பி மாமியாரை பார்த்தாள்.​

“மூன்று வருஷமா அவகிட்ட பேசாத எனக்கே அவ நினைப்பு வரும் போது… அவளை பெத்தவங்க அதுவும் அவளை அருமை பெருமையா வளர்த்தவங்க. உங்களுக்கு அவ நினைப்பு வராம இருக்குமா அத்தை.” சாவித்தியை ஒட்டியே வாழைப்பழத்தில் ஊசி குத்தினாள்.​

“ஆமாம் மஞ்சரி… அதான் அவகிட்ட பேசனும் போலிருக்கு. காலையில நீங்க பேசுனது போல இருந்துச்சு… வருண் பய கூட அத்தை.. அத்தைனு கத்திக்கிட்டு இருந்தான்..” என்றதும் மஞ்சரிக்கு புரிந்து போனது. ஒட்டு கேட்டிருக்கிறார்கள். ச்சே!! எத்தனை கேவலமானவர்கள். மனதில் உள்ளதை முகத்தில் காட்டாமல் பதில் சொன்னாள்​

“ஆமாம் பேசினோம் அத்தை. உரிமையா என்னை மறந்துட்டீங்களா என்றுகூட கேட்டா..” சிலாகித்து சொல்ல… எரிந்தது தாய்க்கும் மகளுக்கும்.​

“அப்போ நாங்க ஃபோன் போட்டா மட்டும் ஏன் கிடைக்க மாட்டிக்கிது. எங்க நம்பரை பிளாக் பண்ணிட்டாளா என்ன? பைத்தியக்காரி செஞ்சாலும் செஞ்சிருப்பா?” பூமிகா வன்மத்தை கொட்டினாள்.​

“அப்படியா பூமி எனக்கு தெரியாதே!! உன் அண்ணாகிட்ட கேட்டுக்கோயேன். பாசமா இருந்த உங்க நம்பரையா அவ பிளாக் பண்ணி வச்சிருக்கா? நம்ப முடியல போ!” பிடிகொடுக்காமல் பேசிய மஞ்சரிமேல் மறுபடியும் எரிச்சல் வந்தது இருவருக்கும்.​

“உலகம் அறியா புள்ளையா இருக்க நீ மஞ்சரி… புருஷனை முந்தானையில் முடிஞ்சு வச்சிக்க வேணாமா? பரவாயில்ல விடு. நீ என்ன பன்ற உன் புருஷன் ஃபோன்ல இருந்து அவளுக்கு கால் பண்ணிக்கொடு. அவகிட்ட நாங்க பேசிக்கிறோம்” மாமியாரின் தேன் தடவிய வார்த்தைகளில் இருந்த வஞ்சகம் அறியாதவளா அவள்…​

“அச்சோ அத்தை… அவர் என்னை கட்டிக்கும்போதே எனக்கு போட்ட முதல் கண்டிசனே என் அப்பா ஒரு தலையாட்டி பொம்மை. அம்மா கிழிச்ச கோட்ட தாண்டுறது என்ன எட்டிகூட பார்க்க மாட்டார். அவர் பையன் நானும் அப்படி இருப்பேன்னு கனவுலகூட நினைச்சிடாதே. அப்படினு ஸ்டிரிக்ட்டா சொல்லிட்டார் அத்தை. நான் என்ன பண்ண?” கண்களை விரித்து அப்பாவியாய் சொன்ன மருமகளை ஒரு அப்பு அப்பினா என்ன என்று தோன்றியது சாவித்திரிக்கு.​

“இவன் எல்லாம் என் மகனா?” ஆத்திரத்தில் வார்த்தைகளை கொட்டிவிட்ட சாவித்திரி பிறகு மஞ்சரி முகம் பார்த்துவிட்டு சமாளிப்பாய் புன்னகைக்க​

“அதனால் என்ன அத்தை… மகன் இப்படி இருந்தாலும் உங்களுக்கு ஏத்தது போல மருமகன் வரப்போறாரே. பூமி சொல்லுக்கு அங்கே மறுபேச்சு இல்லனு கேள்விபட்டேன்” சிரித்துக்கொண்டே சொல்ல​

“சும்மா வயித்தெரிச்சல கிளப்பாதீங்கண்ணி!! இப்பவே ஆயிரம் கண்டிஷன் போடுறார். இதுக்கே நான் நூறு தகிடுத்தனம் பண்ண வேண்டியிருக்கு..” ஆதங்கத்தை கொட்டிவிட்டாள் பூமிகா. சட்டென சாவித்திரி அவள் கையை பிடித்து அழுத்தியதும் சுதாகரித்தவள் வாயை மூடிக்கொண்டாள்.​

பாவம் அவளும் என்ன செய்வாள்? காரியம் கூடி வரும் நேரம் மலரை எங்கேயோ அனுப்பிவிட்ட அண்ணனை பகைத்துக்கொள்ள முடியவில்லை. கரம் பிடிக்கப்போறவனோ மலர் வந்தால்தான் நம் கல்யாணம் என்று கறாராய் சொல்லிவிட அவனையும் கடிய முடியவில்லை. தன் திருமணம் நடக்குமா நடக்காதா என்ற தவிப்பில் வார்த்தைகளை விட்டுவிட்டாள்.​

இதோ இப்பொழுது நிலவன் வீட்டுக்கு வந்ததும் பிடித்துக்கொண்டனர் இருவரும். நிலவனுக்கு இது எதுவும் அதிர்ச்சியளிக்கவில்லை. அவன் எதிர்பார்த்ததுதான்.​

“ஏன் ஃபோன் பழுதாகிட்டா ரிப்பேர் பண்ண போறீங்களா என்ன?” வரவேற்பறையில் வந்து அமர்ந்தவன் மஞ்சரியை பார்க்க… அவன் பார்வை உணர்ந்து டீயுடன் அவனருகில் வந்தாள். மனைவி முகத்தை பார்த்ததும் களைப்பெல்லாம் பஞ்சாய் பறந்திட முகம் மென்மையானது. கூடவே வருண் ஓடிவந்து “ப்பா… மிச் யூ” என்று கட்டிப்பிடித்து முத்தமிட… மகனோடு ஐக்கியமாகிவிட்டான்.​

“அவளுக்கு நான் ஃபோன் போட்டா கிடைக்க மாட்டிக்கிது. அதனாலத்தான் கேட்டேன்” சாவித்திரி சொல்ல​

“நீங்க எதுக்கு அவளுக்கு கால் பண்ணீங்க?”​

“ஏன்டா அவளுக்கு நான் கால் பண்ணக்கூடாதா? நம்மகூட இங்கிருக்கும் போதே குடும்ப மானத்தை கப்பல்ல ஏத்தி விட்டுட்டா!! சரி அதுக்கப்புறமும் சும்மா இருந்தாளா. என் பேச்சு கேட்காம படிக்க அனுப்பி வச்சீங்க? அங்க்கேயும் போய்…” அடுத்து சாவித்திரி பேசும்முன் நிலவன் குடித்துக்கொண்டிருந்த டீ கப் தறையில் விழுந்து நொறுங்கியது.​

அதிர்வுடன் சாவித்திரி மகனை நோக்க… நிலவனின் முகம் நிர்மலமாக இருந்தது.​

“உடைஞ்ச இந்த கப்ப உங்களால ஒட்டி வைக்க முடியுமா?” என்று நிலவன் சாவித்திரியை பார்த்து கேட்க… முடியாது என்று சாவித்திரி பயத்துடன் தலையாட்ட​

“அப்படித்தான் மலருக்கும் உங்களுக்கும் உள்ள சம்பந்தம். ஒன்னா இருக்கும்போதே அவளோட நீங்க ஒட்டல… இப்போ அவளை கண்காணாத இடத்துக்கு அனுப்பிட்டேன். அவ திரும்பி வர மாட்டா. அவ வாழ்க்கை இனி அங்கேதான். இனி அவளுக்கும் நமக்கும் ஒட்டும் இல்ல உறவுமில்ல!! புரிஞ்சதா!!” என்றவன் பூமிகாவை பார்த்தான்​

“உன் கல்யாணத்தை நீதான் காப்பாத்திக்கனும். உன் வருங்கால புருஷனுக்கு காரும் பணமும் அதோட இலவசமா நகையோட பொண்ணும் வேணுமினா கல்யாணத்துக்கு வந்து நிக்க சொல்லு. இல்ல ரொம்ப துள்ளுனான்னா இந்த சீர்வரிசை எல்லாம் வேணுமினு காத்திக்கிட்டு இருக்கிற ஆம்பிளங்க நிறைய பேர் இருக்காங்க. அவன்ல ஒருத்தனுக்கு உன்னை கட்டிவச்சிடுறேன். இல்ல அதுவும் வேணாமா இங்க்கேயே இருந்துக்கோ!! எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல”​

“டேய்!!” என்று சாவித்திரி அலற… “அண்ணா!!” என்று கதறிவிட்டாள் பூமிகா.​

“இனி உன் வாழ்க்கை உன் கையில. புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். உங்களுக்கும் சேர்த்துதான் சொல்லுறேன் மா. மலர் உங்களுக்கு பிறக்கவே இல்லனு சொல்லிக்கிட்டு இருந்தீங்கத்தானே!! உங்க்களுக்கு பிறக்காதவ செத்துட்டானு நினைச்சிக்கோங்க!!”​

“ஐயோ!! என்னங்க!!” என்று மஞ்சரி அலற​

“உள்ளே போ மஞ்சரி… செத்தவளுக்கு புதுசா ஜாதகம் பார்த்துக்கிட்டு!!” அருகில் நின்றிருந்தவர்களை முறைத்துக்கொண்டே அறைக்குள் நுழைந்துக்கொண்டான் நிலவன்.​

 

Advi

Well-known member
Super epi😍😍😍😍😍

மாறனை உணர ஆரம்பிச்சுட்டா.....

வசந்தனை போய் கரடினு சொல்லலாமா....

என்ன நடந்தது காலேஜ் படிக்கும் போது????

இலா எங்க?

சாவி & பூமி🤬🤬🤬🤬🤬🤬🤬
 

NNK-41

Moderator
Super epi😍😍😍😍😍

மாறனை உணர ஆரம்பிச்சுட்டா.....

வசந்தனை போய் கரடினு சொல்லலாமா....

என்ன நடந்தது காலேஜ் படிக்கும் போது????

இலா எங்க?

சாவி & பூமி🤬🤬🤬🤬🤬🤬🤬
ஹப்பாடா எபி பிடிச்சிருக்கா:LOL: சந்தோஷம்:love:
பல விஷயங்களில் பிரசன்னா கரடியாய் வந்தான்/வருவான்:love:
ஓரு முக்கியமான விஷயம் நடந்திடும்... கூடிய சீக்கிரம் வெளி வரும்
சாவி பூமி திருந்தாத ஜென்மங்கள்☹️
 

kalai karthi

Well-known member
அம்மா பொண்ணு நல்ல வாங்கி கட்டிகிட்டாங்க. நிலவன் மஞ்சரி செம
 

Advi

Well-known member
ஹப்பாடா எபி பிடிச்சிருக்கா:LOL: சந்தோஷம்:love:
பல விஷயங்களில் பிரசன்னா கரடியாய் வந்தான்/வருவான்:love:
ஓரு முக்கியமான விஷயம் நடந்திடும்... கூடிய சீக்கிரம் வெளி வரும்
சாவி பூமி திருந்தாத ஜென்மங்கள்☹️
பிரசன்னா இல்ல sis, வசந்தன்😁😁😁😁
 

NNK-41

Moderator
அம்மா பொண்ணு நல்ல வாங்கி கட்டிகிட்டாங்க. நிலவன் மஞ்சரி செம
அதுங்க திருந்திர ஜென்மம் இல்ல... சுயநலவாதிங்க டியர். நிலவன் செஞ்ச தப்பை சரி பண்ண பார்க்கிறான். அவனுக்கு துணையா மஞ்சரி:)
 

NNK-41

Moderator
பிரசன்னா இல்ல sis, வசந்தன்😁😁😁😁
ஆத்தி இன்னொரு கதைல வரவனை இங்க்கன கொண்டு வந்துட்டேன். சூப்பர் டியர். நீங்க சூப்பர் தெளிவு:cool:
 

Advi

Well-known member
ஆத்தி இன்னொரு கதைல வரவனை இங்க்கன கொண்டு வந்துட்டேன். சூப்பர் டியர். நீங்க சூப்பர் தெளிவு:cool:
அப்ப இன்னொரு கதையில், வசந்தன் போல பிரசன்னாவை கரடியாக்கி வெச்சி இருக்கீங்க😂😂😂😂😂
 

NNK-41

Moderator
அப்ப இன்னொரு கதையில், வசந்தன் போல பிரசன்னாவை கரடியாக்கி வெச்சி இருக்கீங்க😂😂😂😂😂
நீங்க ரொம்ப ஷார்ப்னு சரியாதான் சொல்லி வச்சிருக்கேன். 🏃‍♀️உஷாரு உஷாரு
🏃‍♀️🏃‍♀️
 

NNK-41

Moderator
சூப்பர்!! மாறன், இனியாழ்😍😍😍!.. இந்த அம்மாவும் அக்காவும்!!!
ஹப்பாடா உங்களுக்கு பிடிச்சிருக்கா:D இது போதும் எனக்கு. பூமியும் சாவியும் வேஸ்ட் ஃபெல்லோஸ்:mad:
 

Saranyakumar

Active member
அருமை இனீயாழ் நெடுமரம் ❤️❤️❤️❤️❤️சாவி,பூமிகா இரண்டு பேரையும் தூக்கி எண்ணெய் கொப்பரைலை போடனும்😡😡
 

NNK-41

Moderator
அருமை இனீயாழ் நெடுமரம் ❤️❤️❤️❤️❤️சாவி,பூமிகா இரண்டு பேரையும் தூக்கி எண்ணெய் கொப்பரைலை போடனும்😡😡
நன்றி டியர் :love:அதுங்க அடங்காதுங்க:cautious:
 
Top