எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீக்கமற நிறைந்தாய் உயிரே 3

NNK 75

Moderator
நீக்கமற நிறைந்தாய் உயிரே 3
நிலவின் அழகை இமை கொட்டாமல் ரசித்து கொண்டிருந்தவளின் காதுகளில் அந்தியில் தாமினி யின் வார்த்தைகள் காதில் ஒலித்து கொண்டிருந்தது..
"ஏன் நன்னும்மா உங்களுக்கு மேரேஜ் ஆனுச்சுன்னா எங்களை பாக்க வரமாட்டீங்களா.. என்னை மறந்துடுவீங்களா.." என்ற மழலையின் குரலில் விரக்தியான புன்னகை தான் வந்தது.
' தனக்கு கல்யாணமா.. அப்படி செய்வதற்கு மனிதர்கள் மேல் நம்பிக்கை வேண்டுமே.. தனக்கு யார்மேலாவது நம்பிக்கை வருமா.. அப்படியே திருமணம் செய்து வைக்க யாராவது உறவுகள் வேண்டுமே.. என் உறவுகள் தான் யார் மேலும் நம்பிக்கையை வைக்காதே என்ற பாடத்தை வைத்து விட்டு சென்றார்களே.. இனிமேலும் அவர்கள் மேல் அப்படி நம்பிக்கை வைக்க முடியுமா என்ன..' என்று மனதில் நினைத்தவளுக்கு கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தாள்.
இதோ இவள் இந்த மொட்டை மாடியில் வந்து அமர்ந்து கிட்டதிட்ட மூன்று மணி நேரம் ஆகப்போகிறது.. கல்லூரியிலிருந்து வந்ததிலிருந்து இங்கே தான் இருக்கிறாள்.. தணிகாசலத்தையும் போய் சந்திக்கவில்லை.. வர முடியாத சூழ்நிலை என தகவலை மட்டும் அனுப்பிவிட்டாள் கூடவே ஒரு மன்னிப்புடன்.
அவள் இப்படித்தான் என அறிந்த தணிகாசலமும் தன் எதிரிலிருந்தவரை பார்த்து மன்னிப்பை யாசித்தார்.. எதிலிருந்தவனோ ஒரு விரக்தி புன்னகையுடன் எழுந்து சென்று விட்டான்.
போகும் அவனை வலியுடன் பார்த்தவருக்கு யார் பக்கம் பேசுவது என்று புரியவில்லை.. அவளின் விலகலும் நியாயம் தான் என தோன்றினாலும் ஆடவனின் நேசம் அதை தாண்டியதாய் இருந்தது.
அந்த காதல் உடலை பார்த்து வரவில்லை.. யாரென்று அறியாமல் தெரியாமல் வந்த நேசம்.. எல்லாம் அறிந்த பின்பும் அது மாறாமல் மறையாமல் தொடர்ந்து வருகிறதை இந்த பேதைப் பெண் அறியாமல் இருக்கிறாளே என்று சிறு கோபமும் வந்தது.
ஆனால் வாழ்வில் அவள் அனுபவித்த வலியும் வேதனையும் தான் யாரையும் நம்ப முடியாமல் தள்ளி நிற்க வைக்கிறது என்பதும் புரிந்தது.. ஆனால் இதற்கெல்லாம் முடிவு தான் என்று..? கேள்விக்குறி தான்.
ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து எழுந்து சென்றார் தணிகாசலம்.
தன் கேபினில் அமர்ந்து கோப்புகளை சரிபார்த்துக் கொண்டிருந்த வசீகரனின் அலைபேசி அடிக்க அதை எடுத்து காதுக்கு கொடுத்தவன் அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ அடுத்த நொடியே தன் கையிலிருந்த பைலை கீழே வைத்து விட்டு வேகமாய் எழுந்து வெளியே சென்றான் வேகமாய்.
இங்கே மொட்டைமாடியில் காய்ச்சலோடு படுத்து கிடந்தாள் பெண்ணவள்.
இந்த கண்ணீர் தான் பெண்களை சில நேரம் பலப்படுத்தவும் பல நேரம் பலவீனப்படுத்திவிட்டும் சென்றுவிடுகிறது.
இத்தனை அழுகையும் இந்த கண்ணீரும் தேவையில்லை என்று உணர்ந்தாலும் பல நினைவுகளை மறக்கவும் தேவைப்படுகிறது.
அதுவும் அந்த அறியா மழலை இன்று கேட்டதும் பழைய நினைவுகள் அலைஅலையாய் பொங்கி எழுந்தது.
கண்களை இறுக மூடினால் இருள் பயத்தை கொடுத்தது.. திறந்தால் வாழ்க்கை பயமுறுத்தியது.. பெண்ணவளால் எதை எதையோ யோசித்து உடலுக்கு வலியை தேடிக் கொண்டாள்.
வெறும் கட்டாந்தரையில் படுத்திருந்தவளின் அருகே அழுத்தமான இரு காலடி தடங்கள் பதிந்தது.
அந்த இரு கால்களுக்கும் சொந்தமான உருவம் மெல்ல அவளின் பக்கமாய் வந்தமர்ந்து அவளின் தலையை மென்மையாய் தடவி கொடுத்தது.
அந்த இதமான வருடலை பெண்ணவளின் உள்ளம் உணர்ந்தாலோ இல்லை உடல் உணரந்தாலோ மெல்ல சிலிர்த்து அடங்கியது.
அதை உணர்ந்த கரங்களும் தன் வருடலை நிறுத்தாமல் தொடர்ந்தது.
அந்த கரங்களுக்கு சொந்தமான அந்த ஆண் உருவம் மெல்ல அவளின் அருகே படுத்து அவளின் இடையில் கைகொடுத்து தன் அருகே அவளை இழுத்தனைத்துக் கொண்டது.
இதோ தன்னை மறந்த நிலையில் உடலில் வலியோடு படுத்திருந்தவளை எடுத்து தன் மார்பின் மீது போட்டு கொண்டன அந்த உருவம்.
தாயை தேடும் பிள்ளையாய் இதுவரை காய்ச்சலில் உழன்று கொண்டிருந்தவளின் உடல் சமன்பட்டதை போல் அந்த உருவத்தின் மார்பில் தன்னை புதைத்துக் கொண்டாள் பெண்ணவள்.
அவளின் முதுகை தடவி அவளை சமாதானம் செய்த அந்த ஆடவனின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
"விழி மா எப்போ டி இதுல இருந்து வெளியே வருவே.. எனக்கு பயமா இருக்கு டி.. என் விழி எனக்கு கிடைக்காம போயிடுவாளோன்னு பயம் அதிகமா வருதுடா கண்ணம்மா..
ஒரு ஆணா யாருக்கும் அடிபணியாதவன்.. ஆனா நான் யாருன்னு நீ தெரிஞ்சிக்காமையே என்கிட்ட நீ தேடுற பாதுகாப்பு உனக்கு அதையாவது கொடுக்கறேன்னு நினைச்சி சந்தோஷபடறதா இல்லை.. என் அமமுவை இப்படி தவிக்க விட்டவங்களை சும்மா விடறதா..
எனக்கு புரியலை டா.. இதோ இப்படி காய்ச்சலோட சுயநினைவே இல்லாம இருக்க என் விழியை நான் எப்படி டி மீட்டெடுக்க போறேன்.. எனக்கு தெரியலையே டி.. " அவளின் மனதோடு பேசியவன் அவளின் நெற்றியில் தன் முழுகாதலையும் இதழில் தேக்கி அழுத்தமாய் முத்தமிட்டான் ஆடவன்.
தன் கண்களை துடைத்தவன் அவளை தன் இரு கைகளாலும் அள்ளி கொண்டு அவளின் அறைக்குள் ஏதோ பழகிய இடம் போல் அவளின் கட்டிலில் கிடத்தியவன் கீழே சமையலறைக்கு சென்று சுடு தண்ணீர் வைத்து எடுத்து வந்து அவளுக்கு நெற்றியில் பத்து போட்டு விட்டு தூக்கத்திலே அவளுக்கு பாலை காய்ச்சி கொடுத்து ஒரு மாத்திரையையும் அவளுக்கு போட்டு விட்டான்.
தன்னருகில் யார் இதை எல்லாம் செய்கிறார்கள் என்று உணராமலே பெண்ணவளும் உடலும் அவன் செய்ததை ஏற்றுக் கொண்டாள்.
அவளுக்கு எல்லாம் செய்து விட்டு அவளின் உடலில் போர்வையை எடுத்து போத்தியவன் மென்மையாய் அவளின் தலையை வருடிவிட்டு அதற்கு மேலும் அங்கிருக்க முடியாமல் கடமை அவனை அழைக்க மனமில்லாமல் அங்கிருந்து சென்று விட்டான் அவன்.
இரவின் ஆதிக்கம் குளுமையில் பரவியிருக்க அந்த இருட்டறையில் இருந்து சத்தம் வந்து கொண்டே இருந்தது.. ஆனால் அங்கிருந்த காவலர்கள் யாரும் அந்த சத்தத்தை பெரிதுபடுத்தவில்லை.
காவல் காப்பது மட்டும் தங்களின் கடமையென சிலையாய் கண்களை கூட சிமிட்டாமல் இருந்தார்கள்.
அப்பொழுது தான் அவன் அங்கே வந்தவன் தன் உதவியாளரை பார்த்து,
"என்னாச்சி அவ எதுவும் சொன்னானா.. எனக்கு அந்த பைல் எங்கிருக்குன்னு இந்த வாரத்துக்குள்ள கிடைக்கனும்.. அது கிடைச்சா தான் நான் அவனை அடியோட அழிக்க முடியும்.. ராபின் இந்த ராகவ் எதுக்கு இப்படி சத்தம் போடுறான்.. முதல்ல அவனோட சத்தத்தை மொத்தமா நிறுத்து..அதை கேட்க கேட்க நாராசமா இருக்கு.." என்றவனின் முகத்தில் சிறிதும் தன்மை என்பதே இல்லை.. முகமெங்கும் சிவந்து கோபத்தின் அதீத அளவை காட்டியது அவனின் முகம்.
செந்தனலில் ஊறிய சிவப்பின் வர்ணத்தை கொண்டிருந்தது அவனின் முகம்.. இதோ இந்த முகம் தான் சற்று நேரம் முன்பு நன்விழியின் முன்பு அடிமையாகி தவமிருந்தது.. அதில் இருந்த சந்தோஷமும் வேதனை வலியும் இந்த முகத்தில் கொஞ்சமும் இல்லை.. இந்த முகத்தில் இருந்த ரௌத்திரம் அவனின் பின்னே வந்த ராபினையும் பயமுறுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.
"பாஸ் ராகவ் உங்ககிட்ட பேசனும்னு சொல்றான்.." என்றான் கைகட்டியபடி ராபின்.
அதில் தன் நடையை நிறுத்தியவன் ராபினை திரும்பி பார்த்தவனின் கால்கள் அந்த இருட்டு அறையை நோக்கி சென்றது.
அந்த அறையின் உள்ளே நுழைந்ததுமே வாடை குபீரென்று நாசியை நுழைக்க தன் மூக்கை பொத்திக் கொண்டவன் இருட்டை துழாவி அங்கிருந்து இரவு விளக்கை போட்டான்.
அந்த அறையின் மூலையில் ஒரு உருவம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்தபடியே கதறி கொண்டிருந்தது.
அந்த ஆடவனோ தன் பின்னே வந்தவனை திரும்பி பார்க்க ராபினோ தன் மூக்கை பொத்திக் கொண்டு அந்த உருவத்தின் அருகே சென்று, "ராகவ்.. ராகவ் பாஸ் வந்துருக்காரு.." என்றான் முகத்தை சுழித்தபடி.
சுவற்றை பார்த்தபடி படுத்திருந்த அந்த உருவம் தன் முகத்தை அந்த இரவு வெளிச்சத்தில் காட்ட அந்த முகமோ சரிவர மருத்துவம் பார்க்கப்படாமல் ஆசிட்டால் பாதிக்கப்பட்டு அழுகிய நிலையில் இருந்தது.
தன் எதிரில் கம்பீரமாய் நின்றிருந்தவனை பார்த்தவன் தன் கைச்சிறையுடன் அவனருகே வந்து,
"பாஸ் பாஸ் விட்ருங்க.. நான் போயிடுறேன்.. நான் செஞ்சது பெரிய தப்பு தான்.. நான் மேடம்கிட்ட எல்லா உண்மையும் சொல்லி மன்னிப்பு கேட்குறேன் பாஸ்..என்னை விட்ருங்க பாஸ்.." என்றான் உடலில் வாடையுடன்.
ஆனால் அவனின் வார்த்தையும் உடலில் இருந்த காயங்களும் எதிரில் இருந்தவனை சுத்தமாய் பாதிக்கவில்லை போலும் அமைதியாய் தன் முன்னே கைகூப்பி நின்றிருந்தவனை பார்த்தவன்,
"ராபின் டாக்டரை வந்து பார்க்க சொல்லு.." என்ற வார்த்தையுடன் அங்கிருந்து கிளம்பிவிட்டான் முகத்தில் மர்ம புன்னகையுடன்.
யார் இவனோ..? இல்லை அவனோ..? என்பதை பொறுத்திருந்து தான் பார்ப்போமே.

அடுத்த பாகத்துல பாக்கலாம் மக்களே.. இந்த கதை பிடித்திருந்தால் உங்க பொன்னான கருத்துக்களை சொல்லிட்டு போங்க பட்டூஸ்
 
Top