எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாயனே 13- கதை திரி

NNK-82

Moderator
மாயனே 13


ஒரு வாரம் கடந்திருந்தது.

அழைப்பு மணி ஓசை கேட்க செல்வி எழுந்து சென்று கதவை திறந்தாள். அங்கு புன்னகை முகமாக நின்றிருந்தாள் நிலா. அவளை கண்ட செல்வி "அண்ணி.. உள்ள வாங்க" என்று புன்னகை முகமாக அழைக்க, அவளும் வீட்டிற்குள் வந்தாள்.

"டீ சாப்பிடுங்க, காபி சாப்பிடுங்க" என்று அழைக்க "அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் சாப்பிட்டு தான் வந்தேன். பசங்க எங்க? காணோம்.." என்று கேட்க "பசங்க ஸ்கூல் போய்ட்டாங்க அண்ணி. அவர் டேப்லட் சாப்பிட்டிருக்காரு. அதனால தூங்குறாரு… லேட்டா தான் எழுந்திருப்பார்" என்று கிச்சனுக்கு சென்றாள் செல்வி.

பார்வையை சுழல விட்டு வீடு முழுவதும் பார்த்தாள் நிலா.சிறிய வீடு. ஒரு படுக்கையறை, குட்டி கிச்சன், சிறிய வராண்டா என்று ஒரு குடும்பத்திற்கு போதுமான அளவு இருந்தது அந்த வீடு. ஒரு தையல் மெஷின், எல்இடி டிவி ஒன்று, பிரிட்ஜ் என்று சொற்ப பொருட்களே வீட்டை அலங்கரித்தது சுற்றி பார்த்துக் கொண்டிருக்க தண்ணீருடன் வந்தாள் செல்வி. அவளிடம் இருந்து தண்ணீர் பெற்றுக் குடித்துவிட்டு "நீங்க ஸ்டிச்சிங் பண்ணுவீங்களா?" என்று கேட்க எனக்கு ஸ்டிச்சிங் தெரியாது அண்ணி.

"அண்ணன் தான் எனக்கு மெஷின் வாங்கி கொடுத்து, கிளாசுக்கு அனுப்புச்சு. இப்பதான் கொஞ்சம் கொஞ்சம் கத்துகிறேன். இப்போ பரவாயில்ல" என்றால் செல்வி.

ஏதோ கேட்க வந்து தயங்கியவள் "கடன் கொடுக்காததுனால உங்க வீட்டை அவர் எடுத்துக்கிட்டார்ல்ல" தயங்கி தயங்கி கேட்டுவிட சிரித்தாள் செல்வி. அவள் சிரிப்புக்கான அர்த்தம் நிலாவுக்கு புரியவில்லை.

தன் கதையை சொல்லத் தொடங்கினாள். அன்று குடும்பத்தோடு வெளியில் துரத்தி வீட்டை பூட்டி சாவி எடுத்துக் கொண்ட இன்பா செல்வியையும் அவள் குழந்தைகளை மட்டும் அழைத்து சென்று ஹோமில் சேர்த்து விட்டான். அவள் கணவனை அம்போ என்று தெருவிலே விட்டு சென்று விட்டான்.

அவனுடைய குடி பழக்கம்தான் அவர்களின் இந்த நிலைமைக்கு காரணம். தினமும் குடி. எப்பொழுதும் குடி. இன்பாவிடம் கடன் வாங்கியது கூட குடியினால் ஏற்பட்டதனால் தான். இவனுடன் இருந்தால் இந்த பிள்ளைகளையும் கெடுத்து விடுவான் என்று நினைத்தவன் பிள்ளைகளையும் அழித்துக் கொண்டு செல்வியையும் ஹோமில் சேர்த்து விட்டான்.

" இங்கு உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது நீங்க எங்க நிம்மதியா இருக்கலாம். உன் புருஷன் கொஞ்ச நாள் தனியா கிடந்து கஷ்டப்படட்டும் அப்பதான் அவனுக்கெல்லாம் அறிவு வரும்" என்று கூறியவன் கொஞ்சம் பணத்தை அவள் கையில் திணித்து பசங்களை பார்த்துக்கோ என்று விட்டு சென்றான்.

நடப்பதை நம்ப முடியாமல் விழித்தாள் செல்வி. ஒரு மாதம் இப்படியே செல்ல திடீரென்று ஒரு நாள் வந்த இன்பா என் கூட வாங்க என்று அழைக்க வேக வேகமாக புறப்பட்டு வந்தனர். என்னவோ ஏதோ என்ற பதட்டத்துடன் மருத்துவமனைக்கு ஓடி வர, விபத்து ஏற்பட்டு ஒரு கால் இழந்த நிலையில் கிடந்தான் அவள் கணவன். அதை கண்டவள் துடி துடித்து போனாள். என்ன ஆச்சு? என்று கேட்க கதறி அழுதான் அவள் கணவன்.

குடிச்சிட்டு ரோட்ல விழுந்து கிடந்தப்ப லாரி கால்ல ஏறிடுச்சு என்று கதறி அழுக அவளாலும் அழ தான் முடிந்தது. இதுவரையும் பார்த்த இன்பா எதுவும் சொல்லாமல் குழந்தைகளை மட்டும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.

15 நாள் சிகிச்சைக்குப் பிறகு செல்வியின் கணவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட அவனையும் குழந்தைகளையும் செல்வி நால்வரையும் சேர்த்து அழைத்து வந்து இது சிறிய வாடகை வீடு தங்க வைத்தான். அவர்கள் வீட்டின் சாவியையும் அவனிடமே கொடுத்து வீட்ட வாடகைக்கு கொடுத்துட்டு நீங்க இந்த வீட்ல தங்கிக்கோங்க. அது பெரிய வீடு மினிமம் 8000 பத்தாயிரம் வாடகை கிடைக்கும். அது உங்களுக்கு உதவியா இருக்கும் என்று சொல்லி சென்றான்.

நம்ப முடியாமல் பார்த்தனர்
இருவரும். நாட்கள் இப்படியே செல்ல வாடகை வருமானத்தில் ஓரளவு நிம்மதியான வாழ்க்கை இருந்தது. குழந்தைகள் வளர வளர இந்த வருமானம் பத்தாது என்பதால் அவளுக்கு ஒரு தையல் மிசின் வாங்கி கொடுத்து தையல் பயிற்சி பள்ளிக்கும் அனுப்பினான். தையல் முதல் ஆறி வரை அனைத்தும் கற்றுக் கொடுத்தனர். கற்றுக் கொண்டிருக்கிறாள். கற்றபின் அதில் வரும் வருமானமும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று மிஷினும் வாங்கி கொடுத்தான்.

இன்று வரை வீட்டு செலவுக்கு குழந்தைகள் படிப்பு செலவுக்கும். அவன் தான் பணம் கொடுக்கிறான் என்று கூறி முடிக்க அதிர்ந்து போய் உறைந்து அமர்ந்து இருந்தாள் நிலா. கண்ணால் காணும் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது அவளுக்கு இப்போதுதான் புரிந்தது.

குடியினால் அவன் குடும்பத்தை கொடுமைப்படுத்துகிறான் என்று தெரிந்துதான் தன்னிடம் வாங்கிய கடனை காரணம் காட்டி அவனை குடும்பத்திடமிருந்து பிரித்தான் அப்பொழுதாவது அவனுக்கு அறிவு வரும் என்று நினைக்க அப்பொழுதும் குடித்துவிட்டு சாலையில் விழுந்து கிடந்தவன் ஒரு காலை இழந்த பிறகு தான் குடியின் கொடுமையும் குடும்பத்தின் அருமையும் புரிந்தது. இனி என்ன செய்ய அவனை வீட்டிலேயே இருக்க வைத்து குடும்பத்தைச் செலவுக்கு வருமானத்திற்கு வாடகை பணமும், அவள் தையல் செய்வதில் வரும் பணமும் கொண்டு குடும்பத்தை ஓட்டி வருகின்றனர்.

குடி கொடுமை எதுவும் இல்லாததால் எளிமையாக இருந்தாலும் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற செல்வி கூறி முடித்து அவள் முகம் பார்த்து உண்மையிலே "நீங்கள் ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சவங்க அண்ணி. அண்ணன் மாதிரி ஒருத்தர் புருஷனா கிடைக்க நீங்க ரொம்ப குடுத்து வச்சிருக்கணும். நான் தினமும் சாமி கும்பிடும் போது
கடவுள்கிட்ட வேண்டுறது எல்லாம் அண்ணனுக்கும் நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கணும்னு தான்.

நீங்களும் அண்ணனும் நல்லபடியா வாழ்ந்து குழந்தை குட்டி கூட சந்தோஷமா இருந்தா அதுவே எங்களுக்கு போதும் அண்ணி" என்று கூற சிலையாய் சமைந்து போயிருந்தாள் நிலா.

"அண்ணி என்ன ஆச்சு?" என்று செல்வி குலுக்க

"அது அது ஒன்னும் இல்ல.." என்று சமாளித்தவள் இன்னும் சிறிது நேரம் செல்வியுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு மாலை குழந்தைகள் வந்தவுடன் அவர்களிடமும் சிறிது நேரம் விளையாடிவிட்டு வீடு திரும்பினாள்.

வீட்டிற்கு வந்தவளுக்கு மனமே பாரமாகி போனது நொடி பொழுதில் என்னவனே என்ன நினைத்து விட்டேன் கண்ணால் கண்ட காட்சியை நம்பி கடல் அளவுக்கு இருந்த என்னவன் பாசத்தை அன்பை தொலைத்து விட்டேனே என்று நினைத்த அவளுக்கு வேதனையாக இருந்தது. இன்பாவை வெறுக்க அவளுக்கு காரணம் எதுவும் இல்லை. அன்று அவள் கண்ட காட்சி தவிர. அதுவே இப்பொழுது காணல் நீர் என்று தெரியவர துடித்தாள் பெண்ணவள்.

இது போதாது என்று இன்பாவின் புறக்கணிப்பு அவளை இன்னும் அதிகமாகவே வாட்டி எடுக்கிறது. உரிமை இருக்கிறது நான் உன் கணவன் என்றெல்லாம் என்றெல்லாம் அவன் தன்னிடம் அத்துமிரும் போதும் சில்மிஷங்கள் செய்யும் போதும் துடிக்காத மனம் அவன் புறக்கணிப்பில் அதிகமாக துடிக்கிறது அழுதாள். அழுது கரைந்தாள். இதற்கிடையில் வந்த பானுமதி நிளா முகத்தை வைத்தே இன்னும் அவர்களுக்குள் சண்டை சரியாகவில்லை என்று வருந்தினார்.

நிலாவின் தாய் வந்து என்ன எது என்று கேட்க அதற்கும் அவர் பதில் சொல்லவில்லை துருவித் துருவி அவர் பாட்டி கேட்டுக் கொண்டிருக்க கடுப்பான நிலா "புருஷன் பொண்டாட்டிக்கு ஆயிரம் இருக்கும். இன்னைக்கு அடிச்சு போம் நாளைக்கு சேர்ந்துப்போம். எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கணும் ஒன்னும் இல்ல. உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க. நாங்க ஒன்னும் சின்ன குழந்தைங்க இல்ல. எங்க பிரச்சனையே நாங்க பாத்துக்குறோம்" என்று முடித்துக் கொண்டாள்.

தங்கள் பிரச்சனை அவர்களுக்கு தெரிய வேண்டாம் என்ற எண்ணத்தில் அன்றும் வழக்கம் போல இன்பாக இரவு தாமதமாக வந்தான். சமையல்காரம்மா விடுமுறை என்பதால் நிலாவே சமைத்து வைத்திருந்தாள். இட்டலியை சாம்பாரில் தொட்டு வாயில் வைத்தவன் உணர்ந்து கொண்டான் அவள் சமைத்திருக்கிறாள் என்று.

ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை. நீ சாப்பிட்டாயா? என்று கேட்கவும் இல்லை. அவன் உண்டு முடித்துவிட்டு எழுந்து தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டான். ஹாலிலேயே அமர்ந்திருந்தவள் எதுவாக இருந்தாலும் இன்று ஒரு முடிவு வரட்டும் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று அறைக்கு செல்ல உறங்கிப் போயிருந்தான் இன்பா. அவனைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தவள் படுத்துக் கொண்டாள்.

இடுப்பு வலிக்க புரண்டு புரண்டு உருண்டாளே தவிர உறக்கம் வந்த பாடில்லை. நீ என்ன வேணா நினைச்சுட்டு போ எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை. " நீ என்ன புடிக்கல வெறுக்கிறேன்னு சொல்லும் போதும் என்னால உன்னை வெறுக்க முடியல. இந்த காதல் வெச்ச மனசுக்கு பாசம் முளைச்ச இதயத்துக்கு தெரிய மாட்டேங்குது, உனக்கு என்ன என்னை பிடிக்கவில்லன்னு.. என்ன பண்ணி தொலைக்கிறது? எல்லாம் என் நேரம்" என்று வருத்தமாக அன்று கூறி சென்றான் இன்பா.

அந்த நினைவு அவள் மன கண்ணில் வந்து ஓட கடைக்கண்ணில் நீர்த்துளிகள் அவளுக்கு. ஒரு கரத்தை தலை கீழும் ஒரு கரத்தை மார்புக்கு நடுவிலும் வைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தவன் புஜத்தை மெல்ல சுரண்டினாள். அவள் தன்னிடம் பேச விளைகிறாள் என்று தெரிந்தும் அமைதியாக கண்கள் மூடி படுத்திருந்தான் இன்பா. அவள் மனம் வேதனையில் துடிக்க அவன் மட்டும் எங்கனம் நிம்மதியாய் உறங்குவான். தினமும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தான் நடந்து கொண்டிருக்கிறது.

அமைதியாக இருந்தவன் "என்ன பிரச்சனை இப்போ உனக்கு?" என்றான் கண்களை திறக்காமல். அவளை பார்க்காமல். பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருக்க தலையை மட்டும் திருப்பி அவளைப் பார்த்தான் என்ன? என்று கேட்க சாரி என்றாள் பாவமாக. ஜீரோ வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தில் தெரிந்த அவள் முகம் கண்டவன் உதட்டுக்குள் பொங்கிய சிரிப்பை அடக்கிக்கொண்டு "உன் சாரி எனக்கு தேவையில்லை. உன் சாரிய நீயே வச்சுக்கோ. எனக்கு தூக்கம் வருது. என்ன டிஸ்டர்ப் பண்ணாத என்று அவளுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்து கொண்டான்.

அழுகை பொத்துக் கொண்டு வந்தது அவளுக்கு. கண்ணீர் ஊற்று எடுக்க ஆரம்பித்தது. "நான் வேணும்னு பண்ணல" என்றாள் விசும்பளுடன்.

" ஆமா நீ வேணும்னு பண்ணல. நான் வேண்டாம்ன்னு தானே பண்ணுன?? நான் வேண்டாம் தானே உனக்கு?? " என்றான் அவள் புறம் திரும்பாமலே. அழுதவள் தேம்ப ஆரம்பித்து விட அவள் புறம் திரும்பினான் "உனக்கு என்ன பிரச்சனை? நான் தான் உன்கிட்ட எதுவும் பேசறது இல்ல.." என்று கேட்க "என் புருஷன் வேற ஒரு பொண்ணு கூட இருந்தா என்னால எப்படி தாங்கிக்க முடியும்.." என்று கேட்க அவள் முகம் பார்த்தான்.

"உனக்கு தான் என்ன புடிக்கலைய நிலா.. அப்புறம் நான் யார் கூட இருந்தா உனக்கு என்ன?" என்றான் அவள் பதிலை எதிர்பார்த்து.

" எனக்கு உங்களை பிடிக்காதது தான் ஆனா உங்களுக்கு என்ன பிடிக்கும் இல்ல. அப்புறம் எதுக்கு" என்றாள் அதற்கு மேல் பேச்சு வராமல் இருக்க இன்பாவிற்கும் சிரிப்பு தாங்கவில்லை. உள் உதட்டை கடித்து சிரிப்பை அடக்கியவன் "நானும் வயசு பையன் தானே எனக்கும் வயசுக்கேத்த உணர்ச்சிகள் இருக்காதா? நீ தான் உன் பக்கத்துலயே நெருங்க விட மாட்டேங்குற.. அதான் சரி அசத்திக்கு.." வேண்டுமென்றே வெறுப்பேற்ற கேட்டான்.

"அப்படி மட்டும் ஏதாவது தெரிஞ்சிது??" விரல் நீட்டி எச்சரிக்க "தெரிஞ்சான் என்ன பண்ணுவீங்க மேடம்?" என்று கேட்டான். அழுகையுடன் திடுக்கிட்டவள் அவன் ஏதோ சொல்ல வர "எனக்கு துரோகம் பண்ணனும் நினைச்சீங்க நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.." என்று கதறி அழுதாள்.

திட்டுகிட்ட இன்பா "ஐயோ நிலா.. ப்ளீஸ் அழாதே.. நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்.." அவளை சமாதானம் படுத்தும் நோக்கில். ஆனால் அவ்வளவு சமாதானம் அடைவது போல் தோன்றவில்லை. அழுது கொண்டே இருக்க அவள் நாடி பற்றி தன் அருகில் இழுத்தவன் "எதுக்குடி அழுகிற?" என்று கேட்டான் பற்களை கடித்துக் கொண்டு.

சாரி என்றால் அப்பாவி போல். சரி "உன் சாரி நான் எடுத்துக்கிறேன் இப்ப தூங்கு" என்று கூற "நா அவசரப்பட்டு பேசிட்டேன்.." என்றாள் வருத்தமாக.

" அதான் எனக்கே தெரியுமே.. பொண்டாட்டி பொசசிவ்வால இல்லனா லைஃப் போரடித்துவிடும் அல்லவா? " என்றான் அவள் மூக்கின் நுனியை கிள்ளி.

அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க "என்னதான் நீ உன்னை எனக்கு பிடிக்கல பிடிக்கலன்னு சொன்னாலும்.. எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும். அதனால என்னால
வேற ஒருத்தி கூட நினைச்சு பார்க்க முடியாது. சும்மா விளையாடினேன்.. ஆனா உனக்கு இவ்ளோ கோபம் வருது.." என்றான் அதிர்ச்சியாய் பார்த்தால் அவள்.

பிடிக்கவில்லை.. பிடிக்கவில்லை.. வெறுக்கிறேன் என்ற வார்த்தையால் சொன்னாலும் மனதால் ஒருநாளும் அவனை வெறுத்தது கிடையாது. அதை நினைத்து பார்த்த அவள் விழிகள் கலங்க, தன் கரம் எடுத்து அவள் இடது மார்பில் வைத்து "நீ என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன். நீங்க என்ன நினைக்கிறேனு என்னால புரிஞ்சுக்க முடியும்" என்றான் அழுத்தமாய். அவள் கேள்வியாய் பார்க்க குனிந்து அவள் இதயத்தில் முத்தமிட்டவன் முதுகோடு வளைத்து அவளை அணைத்துக்கொள்ள "ஐ லவ் யூ நிலா" என்றவன் "நீயும் லவ் பண்ணு.. சேர்ந்து லவ் பண்ணி விளையாடலாம்.." என்று கேட்க சிரித்தவள் அவனை அனைத்து கொண்டு இருவரும் கட்டிலில் உருண்டனர்…

தொடரும்…
 

Advi

Well-known member
இது என்ன டா, புதுசா இருக்கு😆😆😆😆😆

லவ் பண்ணி விளையாடலமாம் 😂😂😂😂😂😂
 
Top