எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பச்சையன் ----18

நிலாச் செய்தி…..

யுரேனஸ் கிரக நிலாக்களில் சிலவற்றிற்கு ஆங்கில நாடக எழுத்தாளர் சேக்ஸ்பியரின் நாடக கதாபாத்திரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இதுவரை பச்சையன்….

தான் காதலிக்கும் நிலாவிடம் பச்சையன் தான் இந்த பூமியை சேர்ந்தவன் இல்லை என சொல்ல, நிலாவிற்கு திகைப்பு ஏற்படுகிறது. வசந்தியிடம் ஆலோசிக்கின்றாள். மறுநாள் விமலாவின் வீட்டிற்கு பச்சையனை கூட்டி வரச் சொல்கிறாள். இதற்கு இடையே பச்சையனுக்கு ஏதோ தகவல் ஒன்று வர அவன் முகம் மாறுகிறது. இனி….

பச்சையன் …18

நிலா காலையில் பரபரப்பாக எழுந்தாள். இன்று நடக்கப் போகும் அனைத்தையும் நினைத்து பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தாள். கூடுதலாக ஒரு சுறுசுறுப்பு உடலில் ஒட்டிக்கொண்டது.

ஒன்பது மணிக்கெல்லாம் ஆபிஸில் போய் உட்கார்ந்து கொண்டாள். மாலாவை நேராக விமலாவின் வீட்டிற்கு வரச்சொல்லியிருந்தாள். பச்சையனுக்காக காத்திருந்தாள்.

காத்திருப்பு என்பது காதலில் ஒரு சுகம். காதலனுக்காக காதலியும், காதலிக்காக காதலனும் காத்திருப்பதில் ஒரு தனி சுகம். பச்சையன் சிறிது சிறிதுதாக குற்றவாளி நிலையிலிருந்து விலகுவது இவளுக்கு மிக சந்தோசமாக இருந்தது. தன்னுடைய காதலுக்கு இனி தடை இருக்காது என நினைக்கையிலே சுகம் மனதுக்குள் பரவ அவள் மனது அலைபாய்ந்தது.

நொடிக்கு ஒரு தடவை கையில் கட்டிய வாட்ச்சை திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டு இருந்தாள்.

‘ இந்த ஆம்பளைகளுக்கு வேற வேலையே இல்லை. எவ்வளவு நேரம்தான் தவிக்க விடுவாகளோ ? வாச பக்கம் எட்டி பார்த்து பார்த்து கழுத்து நரம்பு வலிக்குது. கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா ? பூமியில இருக்கற மனுசனே நேரத்துல ஒழுங்கா வரமாட்டான், இதுல இவன் எங்கிருந்து வந்தானோ ? கடிகாரத்தை பார்த்து பார்த்து கண் இரண்டும் பூத்துபோச்சு. இன்னும் என்ன ரகசியம் வச்சிருக்கானோ ? “

தனக்குள் நினைத்துக் கொண்டே அவள் இருக்கும் பகுதியில் எதிரே ஒட்டப்பட்டிருந்த படத்தைப் பார்த்தாள். ஒரு தாய் சிறு குழந்தையுடன் இருக்கும் படம் அது. கன்னத்தோடு ஒட்டி உள்ள ஒரு குழந்தை தாயை தன் பிஞ்சு உதடுகளால் கடிக்க முயல, தாய் அதை ரசித்து வலிப்பது போல நடித்து சிரிக்கும் படம் அது. அந்த தாய்க்கு இது இனிமையான வலி. அதுபோல இவள் மனது பச்சையனின் காதலில் மாட்டி இன்ப வேதனையில் தவித்தாள்.

தன்னை தொட்டு தூக்கி தன் கையில் இருந்த தழும்பை மறையச் செய்தவன், இதயத்தில் காதல் தழும்பை ஏற்ப்படுத்தி விட்டதை அறிந்து செல்லமாக கோபப்பட்டாள். தலையின் மேல் உட்காரும் பறவையை விரட்டலாம், ஆனால் தலைக்கு மேல் பறக்கும் பறவைகளை…? நிலாமகளின் மனதில் விமலாவினூடைய தூய நட்பு இருந்தாலும் , சலவையிலும் போகாத கறை போல காதல் நன்றாக மனதின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டு இவளை இம்சை செய்தது. விரட்டப் பார்த்தாலும் காலைச் சுற்றி சுற்றி வரும் வீட்டு செல்ல விலங்கு போல பச்சையன் மனதில் சுற்றி சுற்றி வந்து கொண்டு இருந்தான். அவள் மேல் அவன் நினைவு மழை மேகம் போல, காதல் மேகம் அவள் மேல் கவிழ்ந்து அவளை மூட அவள் மகிழ்ந்தாள். பொதுவாக காதலனை பிரிந்தவருக்கு பசலை நோய் வரும் என்று சொல்லுவார்கள், ஆனால் இங்கு பச்சை நிற மனிதன் ஒருவனால் இவள் பசலை நோயால் பாதிக்கப்பட்டு தவித்துக் கிடந்தாள்.

”ஹலோ நான் வந்து நேரமாச்சு எதிர்த்தாப்ல உட்கார்ந்தவனை கவனிக்காம மேல பார்த்துகிட்டு கனவு கண்டுகிட்டு இருக்க”

எதிரே பச்சையன் உட்கார்ந்து கைகளை ஆட்ட நிலாமகள் தன்நிலை உணர்ந்தாள், வெட்கப்பட்டாள். மீண்டும் பச்சையன் கேட்டான்.

“ கனவு கலைந்து விட்டதா, அல்லது பலித்து விட்டதா ?”

” கனவு கலைந்தால்தானே நிஜத்தில் நல்லது நடக்கும்”.

“ நன்றாக பேச கற்றுக்கொண்டாய். உன்னைப் பார்த்தாலே உன் கண்களின் அழகில் மயங்கி ஏக்கம் வந்து தூங்குகிறேன்”

“ உங்களின் குரல் இனிமையால், தூக்கம் வராதா என நான் ஏங்குகிறேன்”

“ ஆப்பிள் மேலிருந்து விழுந்ததால் புவிஈர்ப்பு விசையை கண்டறிந்தார் ஒருவர். ஆனால் நானோ நீ மேலிருந்து என் மேல் விழுந்ததால் எனக்குள் காதல் ஈர்ப்பு வந்து என்னை இழுத்து விட்டது”.

நிலாவுக்குள் வெட்கம் பிடுங்கி தின்றது. மணியைப் பார்த்தாள். மணி ஒன்பதரைதான் ஆகியிருந்தது. அதற்குள் அவள் நொடிக்கு ஒரு தடவை வாட்ச்சை பார்த்ததும், அவன் வந்தது கூட தெரியாமல் கனவு கண்டு முழித்துக்கொண்டிருந்ததும் அவள் நினைவுக்கு வர வெட்கமே வெட்கப்படும் அளவிற்கு அதிகமாக வெட்கப்பட்டாள்.

“ வெட்கத்தில் உன் அழகு கூடுகிறது. உன் பெயருக்கு ஏற்றார் போல நிலா போல அவ்வளவு அழகுடீ நீ “

“ நீ….நீங்கள் மற்றும் என்னவாம் ? மன்மதனை விட்டு விட்டு ரதியே உன்னை கண்டு மயங்கி விழும் அளவிற்கு மன்மதனுக்கு எல்லாம் மன்மதன் நீதானடா ?”

“ உன்னை காதலில் நான் வாடி போடி என கூப்பிட்டால், நீ என்னை உரிமையில் வாடா போடா என கூப்பிடு, அதனால் தப்பில்லை. காதலுக்கு மரியாதை உண்டு. ஆனால் காதலிக்கும் காதலர்களுக்கு இடையில் மரியாதை தேவையில்லாதது ஒன்றுதான்”.

“ எனக்குள் புகுந்து என்னை இம்சை செய்யும் உன்னை என்னால் கோபிக்கவும் முடியவில்லை, கோபிக்காமல் இருக்காமலும் முடியவில்லை, காதலிக்காமல் இருக்காமல் இருக்க முடியவில்லை. என்னை வதைக்கின்றாய். என்னை காதல் சிற்பம் போல செதுக்கி சிறிது சிறிதாய் சிதைக்கின்றாய். உன்னைக் கண்டால் உள்ளுக்குள் உதறுகிறேன், பேச முடியாமல் பதறுகிறேனடா நான். என்னை காதல் இம்சை செய்யும் இம்சை பேரரசா, உனக்கே இது நியாயமாக படுகிறதா ?”

“ பலரைப் பார்த்து வதம் செய்யும் என் கண்களுக்குள் இதமாய் நுழைந்து என்னை தடுமாற வைத்து என்னை செயல்பட விடாமல் வைத்த அழகு காதல் இராட்சசி நீதானடி . உன்னை நான் தவிக்கவிடுகிறேனா ? அல்லது என்னை நீ தவிக்க விடுகிறாயா ? எனத் தெரியாமல் குழம்பி நிற்கிறேன். எதற்கோ வந்தேன் , வழிதடுமாறி இங்கே நிற்கிறேன்”.

“ தடுமாறி நிற்பதுதானே காதல். வழிமாறி உருமாறி நிற்பதுதானே காதல்”,

” உண்மைதானடி, காதல், இதய இரத்த ஓட்டத்தை அதிகமாக்குகிறது. மனதை மட்டுமல்ல உடலை பாடாய்படுத்துகின்றது. பசிக்க விடாமல் , தூங்க விடாமல் , யோசிக்க விடாமல் ….சே ! காதல் வந்து விட்டால் யானை பலம், பூனைக்கு கூட வந்து விடுகிறதே “

“ காதலின் அருமை , காதல் வந்தவனுக்கும் , அதில் தோல்வி கண்டு நொந்தவனுக்குத்தான் தெரியும், மற்றவர்களுக்குத் தெரியாது. எனக்கே வந்த பிறகுதான் அதன் அருமை தெரியுது. போடா, உன்னால் எனக்கு ரொம்ப தொந்தரவுடா “.

“ உண்மைதான்டி, காதல் , நாம் கண்ணை மூடிக்கொண்டு ரசிச்சு சாப்பிடும் குளிர்பானம் போன்றது. பருக பருக பானம் சுவை, காதல் அனுபவிக்க அனுபவிக்க சுகமான சுமைதான்”

“ உண்மையில் உலகத்தில் மூன்று வகை காதல்தான் இருக்கிறது”.

நிலா ஆச்சரியப்பட்டாள். பச்சையனை ஆர்வமாய் உற்று நோக்கினாள். பச்சையன் தொடர்ந்தான்.

“ பருவக் காதல், உருவக் காதல் மற்றும் அருவக் காதல். இந்த மூன்றைத் தவிர வேறு எதுவும் இல்லை”

“ கேட்கவே வித்தியாசமா இருக்கிறதே. சொல் கேட்கிறேன்”.

“ பள்ளி படிக்கும் போது அறியா வயதில் பருவ வயதில் உணர்ச்சி வயப்படும் காதல் பருவக் காதல், ஆனால் தேவையில்லாதது, நிலைக்காது.

இரண்டாவது உருவக் காதல் . வெளிப்புற தோற்றத்தை வைத்து, அதாவது உடல் அழகை மட்டும் பார்த்து வரும் காதல். இது வெற்றி பெறலாம் அல்லது தோற்றும் போகலாம்”.

மூன்றாவது அருவக் காதல். அதாவது உடல் அழகு, உடை அழகு எதுவும் மனதில் கொள்ளாமல் இரு மனது இணையும் காதல் . அழகு இங்கு முக்கியமல்ல, மணம் புரியபோகும் இருவரின் மனம் ஒன்றிக்கும் போது வரும் காதல். இதைத் தவிர வேறு எதுவும் இல்லை”.

நிலா மகள் விக்கித்துப் போனாள். எவ்வளவு அருமையான பேச்சு, மறுக்க முடியாத உண்மை. அருவமாய் ( கண்ணுக்குத் தெரியாமல்) உடலில் உள்ளுற பரவும் காதல் எவ்வளவு வித்தைகளை செய்கிறது என்பதை அருமையாய் எடுத்துரைக்கின்றான் இவன் என நினைத்து மகிழ்ந்தாள். நமக்கேத்தவன் இவன்தான் என்பதை என அறிந்து பெருமிதம் கொண்டாள்.

“ சரி இப்படியே பேசிக்கொண்டு இருந்தால், மணி பத்தாக போகிறது. விமலா வீட்டிக்கு கிளம்புவோமா ?”.

நிலா நிதானித்தாள். இந்தக் காதல் நொடியில் ஆரம்பித்து, நிமிடத்தில் பயணித்து, நேரம் தாண்டி, நாள் பல கழித்து, மாதம் ஊறி, வருடம் தாண்டி நிற்கும் உன்னதமான ஒன்றுதான் என அன்றுதான் உணர்ந்தாள்.

மணியை பார்த்தாள்.ஒன்பது அம்பது ஆகி இருந்தது. எல்லாரும் விமலா வீட்டில் காத்துக் கொண்டிருப்பார்கள், நேரம் தாண்டினால் வசந்திக்கு கோபம் வந்து விடும். எனவே கிளம்புவது நல்லுது என நினைத்தாள். ஆபிஸை பூட்டி விட்டு இருவரும் கிளம்பினர்.

வண்டி நகர்ந்து கொண்டு இருந்தது. குறுக்கே ஒரு சைக்கிள்காரன் திடீரென வர பிறேக் போட, பின்னால் சற்று தள்ளி உட்கார்ந்து இருந்த பச்சையன் தடுமாறி அவள் தோள்கள் இரண்டையும் பிடித்தான். நிலா மகளுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு சிலிர்ப்பு உருவானதை உணர்ந்தாள். சாமி எறும்பு என்று அழைக்கப்படும் கறுப்பு எறும்புகள் கடிக்காமல் உடலில் ஊர்வது போல ஒரு குறுகுறுப்பு அவள் உடலில் ஏற்ப்பட்டது. பச்சையன் கைகளை சுதாரித்து பின்னால் இழுத்துக் கொண்டான். இன்னும் கொஞ்ச நேரம் அவன் கை வைத்திருக்க கூடாதா என நினைத்தாள்.

பின்னால் இருந்த பச்சையனின் சட்டைப் பையில் ஒரு சிறு அதிர்வு ஏற்பட, எடுத்துப் பார்த்தான். முந்தைய இரவு அவனுக்கு வந்த அதே இடத்திலிருந்து மறுபடி ஒரு அழைப்பு வர, திரையில் சிவப்பு எழுத்துக்கள் வர ஆரம்பிக்க இவன் முகம் மாறியது. சுதாரித்துக் கொண்டு ஏதோ டைப் செய்ய திரை சிறிது சிறிதாக மாறி பச்சை நிறத்துக்கு மாறியது. சிறிது நேரம் கழித்து அவன் அதை உள்ளே வைத்தான்.

வசந்தியின் வீடு நெருங்கியது.

பச்சையனிடம் முக மாறுதலக்கு காரணம் என்ன ?

வசந்தியின் வீட்டில் என்ன நடக்கும் ?

காத்திருங்கள்……..
 
Top