எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருந்தி விட்டேன் திமிர் பிடித்தவளாக விமர்சனம்.

நறுமுகை தளத்தின் போட்டிக் கதை NNK64 திருந்தி விட்டேன் திமிர் பிடித்தவளாக எனது பார்வையில். பெற்றோர் இல்லாமல் வளர்ந்த மருத்துவர் நிரஞ்சன் கடற்கரையில் சிலரிடம் இருந்து எழிலழகியை காப்பாற்றுகிறாரன். அம்மா இல்லாமல் இருக்கும் அவளை வயதானவருக்குத் திருமணம் செய்து வைக்க அவள் அப்பா செய்யும் முயற்சியில் வீட்டை விட்டு வெளியேறிய அவளுக்கு வேலை தர நினைக்கும் அவனது உதவியை மறுக்கிறாள்.

நிறைய இடங்களில் அவளை காப்பாற்றி உதவி செய்யும் நிரஞ்சன் ஒரு கட்டத்தில் அவளைத் திருமணம் செய்து கொள்கிறான். திருமணம் முடிந்த பிறகு அவளது பயத்தை நீக்கவும் வேலைக்கு சென்று வர சொல்லும் நிரஞ்சனின் முயற்சி தோல்வி அடைகிறது.
ஒரு விபத்தில் நிரஞ்சன் நினைவில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர காலத்தின் கட்டாயத்தில் எழிலழகி வேலைக்கு செல்கிறாள். அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்த முறையில் மாற்றம் அடைந்து தைரியமாக பிரச்சினைகளை எதிர் கொண்டாளா , நிரஞ்சனை மீட்டாளா என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார். என்னப் பெண் இப்படி பயப்படுகிறாள். நாயகியாக தகுதி இருக்கிறதா என்ற எண்ணம் வருகிறது. ஆனால் கடைசி சில அத்தியாயங்களில் அவளது மாறுதல்கள் ஆறுதலைத் தருகிறது. வேலைக்கு செல்லும் பெண்கள் எப்படி தைரியமாக தங்கள் பணிகளை செய்ய வேண்டும் என்பதையும் தைரியம் மட்டுமே பெண்களின் நிரந்தரத் துணை என்பதை உணர்த்துகிறது. நிரஞ்சன் கதாபாத்திரம் நன்று. வாழ்த்துக்கள்.
 
Top