எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அகத்திரை திறவாயோ - பாகம் 10

NNK-41

Moderator

அகம் 10​

டைரி​

ஆதித்யா எத்தனை அழகான பெயர். பெயரோட மீனிங் என்னனு இலக்கியாகிட்ட கேட்டேன். வாவ்! சூரியனாமே… மிஸ் மல்லிகா சொல்லி கொடுத்திருக்காங்க… கண்ணுக்கு தெரிந்த முதல் கடவுள் சூரிய பகவான் என்று.​

அதனால என்னவோ ஆதித்யா என்ற பெயர் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. உலகத்துக்கே வெளிச்சம் கொடுப்பவன்… முகம்கூட சூரியன் போலத்தான் ஷைனா இருக்கு. ஏன் இவனை இந்தளவுக்கு ரசிக்கிறேன் என்று தெரியல. அவன் என்னைதான் ஆராய்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்தான்.​

என்ன மாதிரியாக உணர்கிறேன் என்று தெரியவில்லை. மனதில் ஓர் ஊஞ்சலாடுகை. சுகமாக இருந்தது. பார்வையை அவனிலிருந்து பிரித்து தலை தாழ்த்திக்கொண்டேன்.​

ரொம்ப அமைதியான பொண்ணு என்று இலக்கியாவின் அம்மா சொன்னாங்க. புன்னகைத்து கொண்டேன். அமைதியாக்கப்பட்டேன் என்று இவங்களுக்கு தெரிய வாய்ப்பில்லையே. இலக்கியா அங்கிருந்து என்னை இழுத்துக்கொண்டு இன்னொரு இடத்துக்கு சென்றாள். அவளது சின்ன அண்ணனை எனக்கு அறிமுகப்படுத்தினாள். அவன் பெயர் வாசுவாம். ஆதித்யாவைவிட சிறியவன். நட்புடன் புன்னகைத்தான். அவனுடன் சேர்ந்து அவன் கண்களும் சிரித்தன. ஆதித்யா அழுத்தமானவனாக தெரிந்தான் ஆனால் வாசுவோ சட்டென ஒட்டிக்கொள்ளும் சினேகனாக தெரிந்தான்.​

இலக்கியாபோல் வாசுவும் இயல்பாக பேசினான். சிரிக்க சிரிக்க ஜோக் சொன்னான். எல்லோரும் பக்கென சிரிக்க… எனக்கு அந்த ஜோக்கை புரிந்துக்கொள்ள சில வினாடிகள் தேவைப்பட்டன. எல்லோரும் சிரித்து முடித்ததும்தான் என்னால் சிரிக்க முடிந்தது.​

ஐயோ இறைவா ஏன் எனக்கு இந்த நிலை… ஏன் எனக்கு இந்த நோயை கொடுத்தாய்? எல்லோரும்போல் ஏன் என்னால் எதையும் சட்டென புரிந்துக்கொள்ள முடியவில்லை? இதனால்தானே இங்கு வருவதை தவிர்த்தேன்.​

ஆனால் எனக்கு ஆட்டிசம் இருப்பது இவர்களுக்கு தெரியவந்தால் இலக்கியாவின் நட்பு முறிந்துவிட வாய்ப்பிருக்கிறதே… இல்லை!! கூடாது!! அவள் நட்பு எனக்கு வேண்டும்!!​

முடிவெடுத்து விட்டேன். எனக்கிருக்கும் குறையை மறைக்க முகத்தை சிரித்தாற்போல் வைத்துக்கொண்டேன். வாசு என்னை பார்த்து நான் என் பெயர்போல மிகவும் மென்மையானவள் என்றான். அப்படியா என்று நான் யோசித்து கொண்டிருக்கும்போதே​

“உண்மையாகவா?” என்று ஒரு குரல் என் பின்னாலிருந்து வர… திரும்பி பார்த்தேன். ஆதித்யா என்னைதான் பார்த்து கொண்டிருந்தான். இவனா என்னிடம் பேசியது என்று நான் செய்வதறியாது திருதிருக்க​

“உன்னைதான் கேட்கிறேன்” என்றான் ஆதித்யா. ஏன் இப்படி கேட்கிறான்? இவனுக்கு என்னைப்பற்றி ஏதாவது தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறதா என்ற சந்தேகத்தோடு அவன் முகம் பார்த்தேன். அவன் கண்கள் இப்பொழுது அவனின் உதடுகள்போல் சிவக்க ஆரம்பித்தன. ஐய்யய்யோ கோபப்படுகிறான் போலவே என்ற தவிப்புடன் சமாளிக்க ஆரம்பித்தேன்.​

“தெரியலையே… சொன்னது உங்க தம்பி. நீங்க அவரிடம்தான் கேட்கனும்” என்றேன்.​

“சரி என் தம்பியை விடு!! இப்பொழுது நான் கேட்கிறேன். என்னிடம் பதில் சொல்!! நீ அமைதியானவளா? இலக்கியா படபட பட்டாசு. அவளின் தோழி நீ அமைதியானவள் என்றால்… என்னால் நம்ப முடியவில்லை. எப்படி இருவருக்கும் ஒத்து வந்தது?”​

அப்பப்பா எத்தனை கேள்விகள்? ஒவ்வொன்றாக நான் புரிந்துக்கொள்வதற்கே நேரம் எடுக்குமே. தாமதமானால் இவனுக்கு என்மேல் சந்தேகம் வந்திடும். அதற்கு இடம் கொடுக்க கூடாது என்ற முடிவுடன்​

“எதிர் துருவங்கள் ஈர்க்கப்பட்டு ஒட்டிக்கொள்ளும் என்பது உங்களுக்கு தெரியாதா?” என்றுவிட்டேன். என் பதில் கேட்டு புருவம் உயர்த்தியவன்​

“ஏன் தெரியாது? அது தெரியாமலா பிஸ்னஸ் நடத்துகிறேன்! ஆனால் நீ சொன்னது துருவங்களைப்பற்றி. நான் கேட்பது மனித குணத்தை பற்றி” என்று அவன் கொக்கி போட​

அட போடா என்று சொல்லத்தான் தோன்றியது ஆனாலும் அவனுக்கு விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும்… அவன் என்னை புரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் என்னை உந்தியது​

“என்ன ஸார் நீங்க… இயல்பா ஒரே துருவம் விலகிக்கொள்ளும், எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்பதை எங்கள் நட்புக்கு உதாரணமா சொன்னேன். ஏன் ஒருத்தன் கோபமா பார்த்தா அவன் தீப்பார்வை பார்க்கிறான்னு சொல்லுறதில்லையா? அப்போ அவன் கண்ணுல இருந்து நெருப்பு கங்க்குகள் வந்து விழுகிறதா என்ன? நாம அன்றாடம் பேசும் பேச்சில் ஒரு தடவையாவது உவமைச்சொல்லை பயன்படுத்துவது வழக்கம்தானே ஸார். ஏன் நீங்ககூட இலக்கியாவை படபட பட்டாசு என்று சொல்லலையா?” என்றுவிட்டேன்.​

முதலில் அவனிடம் எனக்கு தோன்றிய தயக்கம் எல்லாம் எங்கு போனது என்றே தெரியவில்லை. இயல்பாக அவனிடம் பேசினேன். இலக்கியா என் அருகில் இருப்பதாலோ என்னவோ என் கருத்துகளை சுதந்திரமாக அவனிடம் சொல்ல முடிந்தது.​

“ஓஹோ..” என்றவனின் பார்வை என்னை துளைத்தது. அவனிடம் திருப்தியின்மை இருப்பதை கண்டுக்கொண்டேன். அதை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று என் மனம் சொன்னது. எனக்கு தெரிந்ததை அவனிடம் பகிர முற்பட்டேன்​

“மனிதனும் ஒரு காந்தப்பொருள்தான் ஸார். மனித உடலில் ஓடும் ரத்தம் வெள்ளை அணு சிவப்பு அணு மற்றும் பல ரசயான பொருட்களை கொண்டது. இதில் சிவப்பு அணுவில் இரும்புச்சத்து உள்ளது. இந்த சிவப்பு அணுவின் காரணமாகத்தான் மனிதன் பூமியின் ஈர்ப்பு தன்மைக்கு உள்ளாகிறானாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன ஸார்” என்றேன்.​

கைத்தட்டும் சத்தம் கேட்டதும்தான் கொஞ்சம் அதிகப்படியாக பேசிவிட்டோமோ என்ற குற்ற உணர்வு வர இலக்கியாவின் பின் நிற்கப்போன என்னை இலக்கியாவின் தாயார் வந்து கட்டி அணைத்தார்.​

“பரவாயில்லையே மென்மையான குணம் கொண்ட அழகி என்று நினைச்சேன். அறிவாளியாகவும் இருக்கியே!! எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு மா” என்றார். எனக்கோ கூச்சம் வந்துவிட்டது.​

“ஸாரி ஆன்டி ஃபங்க்ஷன் நடக்கும் இடத்துல கொஞ்சம் அதிகமா பேசிட்டேன் போல” என்றேன்.​

நான் தைரியமாக பேசினாலும் அதில் மென்மை இருந்ததை கவணித்ததாக சொன்னார். அதற்கு இலக்கியாவின் தந்தையும் தலையாட்ட அமைதியாக நின்றுக்கொண்டேன். அப்படியா இருக்கேன்?​

“வாவ் சூப்பர் மலர். என் அண்ணனையே பேசவிடாம செய்துட்டீயே!” என்று வாசு சொன்னதும்தான் ஆதித்யாவின் நினைவு வந்தது. பார்வையால் தேடினேன். அவன் யாரிடமோ உறையாடிக்கொண்டிருந்தான். முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு நின்றிருந்தான். என்னால் அவன் முகத்தை பார்க்கமுடியவில்லை. கோபமாக இருக்கிறானா அல்லது சகஜமாக இருக்கிறானா என்று தெரியவில்லை.​

என் பேச்சால் சாமர்த்தியமாக என் குறையை மறைத்துவிட்டேன் ஆனால் அவன் வீட்டில் அதுவும் சுற்றியிருப்பவர்கள்முன் அவனை அவமதித்து நோகடித்துவிட்டேனோ… மனம் தவியாய் தவித்தது.​

எப்பொழுதும் இப்படி நடந்துக்கொள்ள மட்டேனே! ஏன் இன்று அதிகபிரசிங்கித்தனமாக நடந்துக்கொண்டேன்? அவன் என்னை என்ன நினைத்திருப்பான்? வாயாடி என்றா? திமிர் பிடித்தவள் என்றா? நான் அப்படிப்பட்டவள் இல்லையே!! யார் எது சொன்னாலும் தெரியாத மாதிரி இருந்து விடுவேனே! என் சுபாவம் இதுவல்லவே! இல்லை இதுதான் என் சுபாவமா?​

பிறந்தநாள் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. எல்லோரிடமும் விடைப்பெற்றுவிட்டு சாலையை நோக்கி நடந்தேன். அந்த பங்களாவிலிருநது சாலைக்கு செல்லவே ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டி இருந்தது. அந்த பணக்கார ஏரியாக்குள் ஆட்டோ வருமா என்றுக்கூட தெரியவில்லை. பத்து நிமிடங்கள் காத்திருந்தேன். பல விலை உயர்ந்த கார்கள் என்னை தாண்டி சென்றன. அதெல்லாம் என் மனதில் பதியவில்லை. பயம் என்னை ஆட்கொண்டிருந்தது.​

இப்படியெல்லாம் நான் தனியாக எங்கும் சென்றதில்லை. இலக்கியாவின் அன்புக்கு இணங்கி வந்த எனக்கு மறுபடியும் ஹாஸ்டலுக்கு தனியே செல்ல வேண்டும் என்பது நினைவில் இல்லை. இந்த ஆட்டிசத்தால் இரு ஒரு பாதிப்பு.​

பயத்துடன் நான் கைகடிகாரத்தை பார்க்கும்பொழுது என்னை தாண்டி சென்ற ஒரு பெரிய கார் ‘கிரீச்’ என்ற சத்தத்துடன் நின்றது. பயம் தொண்டை வர அழுத்த… வெலவெலத்து போனேன். நின்ற கார் இப்பொழுது ரிவர்ஸில் வந்தது. பயம் நெஞ்சை அடைக்க என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.​

“ஏன் இங்க நிற்கிற?” என்ற குரல் கேட்டதும் காரை உத்து பார்த்தேன். கண்ணீர் வந்து பார்வையை மறைக்க… விரலால் கண்களை அழுந்த துடைத்து கூர்ந்து பார்தேன். ஆதித்யா… மனம் நிம்மதியடைந்தது. நிம்மதியில் மறுபடியும் கண்ணீர் வந்த்து.​

எனக்கு ஏன் கண்ணீர் வரமறுக்கிறது என்று நினைத்த காலம் போய்… இப்பொழுதெல்லாம் சும்மா சும்மா கண்ணீர் வருகிறது.​

“ப்ச்!! கேட்டால் பதில் சொல்லத்தெரியாதா?” என்று அவன் குரல் உயர்த்தியதும்​

“ஆட்டோக்கு காத்திருக்கேன்… ஒரு ஆட்டோகூட வர மாட்டிக்கிது” குரல் தழுதழுக்க சொன்னேன்.​

“இங்கே ஆட்டோ வருவது அபூர்வம்தான். நான் ஃபேக்டரிக்கு போகிறேன். அப்படியே உன்னை ஹாஸ்டலில் விட்டுறேன். காரில் ஏறு!” என்று அவன் அதிகாரமாக கூப்பிட… சற்று தயங்கினாலும் எனக்கு வேறு வழி இல்லாததால் உடனே காரில் ஏறிக்கொண்டேன்.​

கார் மெதுவாக போவது போல தோன்ற மீட்டரை எட்டி பார்த்தேன். அது என்னவோ 120 என்று காட்டிக்கொண்டிருந்தது. கார் வேகமாக போவது போல இல்லையே என்று நினைத்து கொண்டிருக்கையில் அவன் டிஸுவை நீட்டினான்​

“முகமெல்லாம் மையாகிடுச்சி… இந்த கோலத்தை என் அம்மா பார்த்திருக்கனும். அவங்களை மயக்குன அழகெல்லாம் எங்கே போச்சினு தேடிக்கிட்டு இருப்பாங்க. அவங்களுக்கு அலங்கார பூச்சிக்கும் வண்ணத்துபூச்சிக்கும் வித்தியாசம் தெரியல”​

“பாவம்ல உங்க அம்மா… நான் வேண்டாம்னு சொல்லியும் இலக்கியாதான் ஃபோர்ஸ் பண்ணி மேக்கப் போட்டு விட்டுட்டா. அடுத்த தடவை என்னை பார்க்கும் போது அம்மாக்கு அடையாளம் தெரியுமோ என்னவோ” முகத்தை துடைத்துக்கொண்டே சொன்னேன்.​

ஆதித்யா ஒரு மாதிரியாக என்னை பார்த்தான். “அலங்கார பூச்சிகளை பற்றி நீ ஒன்னும் சொல்ல்லையே..” என்று அவன் கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்து விட்டது. சத்தம் போட்டு சிரித்தேன். அவன் என்னை முறைத்தான்.​

“ஏன் ஸார் அலங்காரபூச்சி என்று எதை சொல்லுறீங்க? பூச்சியை பிடிச்சி அலங்காரம் செய்ய முடியுமா? என்னை சொல்லிட்டு நீங்க மட்டும் பேச்சுக்கு பேச்சு உவமை பயன் படுத்தலாமா?” என்றேன்.​

“நல்லா பேசுற நீ” இருபுறமும் தலையாட்டிவிட்டு புன்னகையுடன் சொல்ல… அவனின் விரிந்த உதடுவழி வெண்பற்கள் எட்டிபார்த்தன. கூடவே அழகான கன்னத்து குழியும் காட்சி தந்தது. அவனை ரசித்தேன். அந்த கார் பயணத்தை மிகவும் ரசித்தேன். அதனை அவனிடம் சொல்லவும் செய்தேன்.​

“டோண்ட் யூ ஹெவ் சென்ஸ்? நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். உன் பார்வை எல்லாம் ஒரு மாதிரியா இருக்கு!! ஏற்கனவே இலக்கியாவை மயக்கி வச்சிருக்க!! இப்போ என் அம்மாகிட்ட அழக காட்டி மயக்குற!! வாசு ஒரு பக்கம் புகழ்றான்!! உன் மனசுல என்ன நினைச்சிக்கிட்டு இருக்கிற? அவங்க மாதிரி முட்டாள் இல்ல நான்!! உன்னை மாதிரி எத்தனை பொண்ணுகளை பார்த்திருப்பேன்!! என்னை மயக்குற வேலை எல்லாம் வேணாம்!!”​

திடீரென அவன் கர்ஜித்த்தும் அதிர்ந்து போனேன். அவன் படபடவென பேசியதால் அவனின் ஒவ்வொரு வார்த்தைகளையும் புரிந்துக்கொள்ள எனக்கு அவகாசம் தேவைப்பட்டது. ஒவ்வொன்றாய் புரிந்த நேரம் அவற்றை கிரகிக்கமுடியாமல் தடுமாறினேன்.​

இந்த தடவை நான் அழவில்லை. என் மேல் அவன் சொன்ன குற்றசாட்டுக்களை ஆராய்ந்தேன். எந்த இடத்தில் தவறு செய்தேன் என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு வேளை அவன் சொன்னதற்கு விளக்கம் கொடுக்கிறேன் என்று அவனை அவமான படுத்திவிட்டேனா?​

ஆனால் நான் ஏன் மற்றவரை மயக்க வேண்டும்? நான் இயல்பாகத்தானே இருந்தேன்? மனம் வலித்தது. அவன் காரில் ஆவனுடன் அமர்ந்திருப்பதை நினைத்து கூசியது என் உடல். கூனிக்குறுகி அமர்ந்துக்கொண்டேன். கைகள் நடுங்கின. எத்தனையோ முறை என் நிலை எண்ணி வருந்தியிருக்கிறேன். இந்த முறை… இறைவா!! பூமி பிளந்து என்னை விழுங்க்கிக்கொள்ள கூடாதா என்று நினத்துக்கொண்டேன்.​

என்னை இறக்கிவிடு என்று சொல்லவும் முடியவில்லை. ஊரும் தெரியாது ஹாஸ்டலுக்கு போகும் வழியும் தெரியாது. மானங்கெட்டு காரில் அமர்ந்திருந்தேன். அவன் என்னை பார்க்கிறானா என்றுகூட எனக்கு தெரியாது.​

வேண்டாம்!! வேண்டாம்!! இல்ல இல்ல வேண்டும் வேண்டும். அவன்மேல் ஈர்ப்புக்கொண்ட மனதுக்கு இந்த அவமானம் வேண்டும்.​

என் நிலை தெரியவந்து இலக்கியாவின் நட்பை இழந்துவிடுவோமோ என்று அஞ்சினேன். இப்பொழுது என் நிலை தெரியவராமலே அவள் நட்பை இழக்க போகிறேன். வலிதான்… பரவாயில்லை போகட்டும். மல்லிகா டீச்சர்போல் என் இலக்கியாவின் நட்பும் பாதியில் என்னைவிட்டு போகப்போகிறது. மனம் ரணமாகி போனது. என்றோ கேட்ட பாடல் ஞாபகத்துக்கு வந்தது… நானொரு சோக சுமைதாங்கி துன்பம் தாங்கும் இடிதாங்கி. என்னைப்போல் ஒரு ஜீவனை நினைத்து எழுதிய பாடலோ..​

கார் ஹாஸ்டல் வாசலில் நின்றதுகூட எனக்கு தெரியவில்லை. என் சிந்தனை இங்கில்லை என்பதை உணர்ந்தான் போலும். அவன் குரலை கனைத்ததும்தான் நான் சுய உணர்வுக்கு வந்தேன்.​

மனம் கனத்ததால் என்னவோ கால்களும் கனத்தன. கால்கள் உடைந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடன் சட்டென காரில் இருந்து இறங்கினேன். தள்ளாடிய கால்களை இழுத்துக்கொண்டு விருவிருவென அறையை நோக்கி சென்று விட்டேன். அவனை திரும்பி பார்க்கவில்லை. நன்றியும் கூறவில்லை.​

மறுநாள் இலக்கியா வந்தாள். என் வசம் இருந்த அவள் கொடுத்த நகைகளும் புடவையையும் திருப்பி கொடுத்தேன். என் சுடிதாரை அவளும் கொண்டு வந்து கொடுத்தாள். என்னென்னவோ பேசினாள். தலையாட்டிக்கொண்டேன். எதுவும் என் மனதில் பதியவில்லை.​

என்னை தொட்டு பார்த்தாள். அனலாக கொதிக்கிறது என்று கலங்கியவள் கிளினிக்கு வற்புருத்தி கூப்பிட்டாள். நான் மறுத்தேன். ஏன் என்று அவள் கேள்வி கேட்க… நான் அமைதியாக இருந்தேன். தீச்சொல் பொறுக்கமுடியாமல் ஷவரின் அடியில் வெகு நேரம் நின்றதை சொல்ல விருப்பமில்லை. யாருடைய பரிதாபமும் எனக்கு வேண்டாம். பிடிவாதமாக அமர்ந்திருந்தேன்.​

இலக்கியா என்னை முறைத்தாள். பின்பு எழுந்து சென்று விட்டாள். மறுபடியும் வந்தாள். என் அருகேயே அமர்ந்துக்கொண்டாள். இருவரும் பேசிக்கொள்ளவில்லை. சிறிது நேரத்தில் ஹாஸ்டல் வார்டன் வந்து அவரின் அறைக்கு கூப்பிட்டார். மயக்கம் வரும் போல இருந்தது… காட்டிக்கொள்ளவில்லை. வார்டன் அறையில் இலக்கியாவின் தாயார் அமர்ந்திருந்தார்.​

“வா என்னுடன்” என்றார். முடியாது என்று தலையாட்டினேன்.​

“பாருங்கம்மா முதல்ல இருந்து இப்படிதான் ரியாக்ட் பண்ணிக்கிட்டு இருக்கா” குற்றம் சாட்டினாள் இலக்கியா. சட்டென யாரோ என் கையை பிடித்து இழுத்து செல்ல… தள்ளாடி நடந்தேன். என் உடம்பு அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் புவியீர்ப்பு சக்தியால் சரிந்து விழுந்தேன்.​

************​

இரண்டு நாள் ஹாஸ்பிட்டல் வாசம் முடித்து ஹாஸ்டலுக்கு செல்ல ஆயத்தமானேன். இலக்கியா வந்தாள். இந்த தடவை என்னால் அவளை தவிர்க்க முடியவில்லை. ஆனால் முன்புபோல் ஒட்டிக்கொள்ளவும் விரும்பவில்லை.​

நான் பரிபூர்ணமாக குணமாகும் வரைக்கும் அவள் வீட்டுக்கு அழைத்து செல்ல வந்திருந்தாள். முடியாது என்று மறுத்து கொண்டிருக்கும் வேளையில் வாசு வந்து விட்டான்.​

“என்ன இலக்கியா… மேடம் அடம்பிடிக்கிறாங்களா? பேசாம மேடத்தை தூக்கிட்டு போயிடலாமா?” என்று அவன் கையை நீட்டிக்கொண்டு கேட்க​

“நான் ஒன்னும் குழந்தை இல்ல” மௌனவிரதத்தை உடைத்தேன்​

“குழந்தைதான் அடம்பிடிக்கும். வளர்ந்தவங்க சொன்ன பேச்சை கேட்பாங்க. நீ சொன்ன பேச்ச கேட்கமாட்டிக்கிற அடம் வேற பிடிக்கிற… அப்போ நீ குழந்தைதானே?” பேச்சால் அவன் மடக்க… எதை எதையோ சொல்லி நான் மறுக்க பார்க்க…​

“இலக்கியாவின் பிறந்தநாள் அன்று என்ன நடந்தது மலர்? அன்றிலிருந்துதான் உன்னிடம் மாற்றம். ஆறு மாதமாக இலக்கியாவுடன் பழகி இருக்க. இந்த ஒதுக்கத்தை உணர முடியாமல் போக இலக்கியா ஒன்னும் குழந்தை இல்ல” சீரியசாக வாசு சொல்ல… நான் பதில் சொல்லவில்லை. அதற்கு மேல் மறுக்க இயலாமல் கிளம்பிவிட்டேன்.​

ஆதித்யா என்ற ஒருத்தனுக்காக இத்தனை நல்ல உள்ளங்களை காயப்படுத்த விரும்பவில்லை. இவர்களுக்காக கொஞ்ச நாட்களுக்கு அவனை பொறுத்துக்கொள்ள முடிவெடுத்துவிட்டேன்.​

 

NNK-41

Moderator
Adei aathi yeenda ippadi????

Anga veetil enna aagumo😣😣😣😣😣
இன்னும் செய்வான். சட்டுனு ஒரு பெண்ணை தன் குடும்பம் புகழ்ந்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.:confused:
 

Advi

Well-known member
இன்னும் செய்வான். சட்டுனு ஒரு பெண்ணை தன் குடும்பம் புகழ்ந்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.:confused:
😏😏😏😏ரொம்ப தான் பண்றான்
 

kalai karthi

Well-known member
ஆதித்யா அவளை பார்த்தவுடன் பிடித்து விட்டதோ? விலக்க இப்படி பேசுகிறானோ
 

NNK-41

Moderator
ஆதித்யா அவளை பார்த்தவுடன் பிடித்து விட்டதோ? விலக்க இப்படி பேசுகிறானோ
அவன் ஒரு ஈகோ பிடிச்சவன் டியர்... அதுக்குதான் இப்போ லோ லோனு அவ பின்னால அலையுறான். ;)
 

NNK-41

Moderator
எவ்வளவு பேசியிருக்கான்... இவனை நல்லா வச்சு செய்யனும் போலயே!!!..
அவன் வாய் வாஸ்துதான் சரியில்லனு நினைச்சா மூளையும் கோணலாதான் யோசிக்கிது... செஞ்சிடலாம் டியர்;)
 

Saranyakumar

Active member
ஆதி மேல கோபம் வருது வீட்டுல என்ன என்ன பண்ண போறனோ🤔🤔
 

NNK-41

Moderator
ஆதி மேல கோபம் வருது வீட்டுல என்ன என்ன பண்ண போறனோ🤔🤔
அப்போ உள்ள ஆதி ரொம்ப சுயநலம் பிடிச்சவன். இன்னும் பண்ணுவான்:cool:
 
Top