எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பார்தவி -09 கதைத்திரி

NNK 67

Moderator
பார்தவி-09


திருமணநாளும் வந்தது.. பெங்களூரிலேயே மிகப்பிரபலமான திருமணமண்டபத்தை புக் செய்திருந்தான் பரத்.. ஆம்..! இன்றுதான் பரத்திற்கும் பவித்ராவிற்கும் நடக்கும் அதே மணமேடையில் மிதிலாவிற்கும் தஷானுக்கும் திருமணம் செய்ய பெரியோர்கள் முடிவுசெய்திருந்தனர்..


காலையிலிருந்தே மிதிலாவின் வீட்டிலிருந்த அனைவரும், திருமணவேலையாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர்.. ஒருபுறம் திருமணத்திற்கு வருகைதரும் உறவினர்களையும், தொழில்வட்டார நண்பர்களையும் பரத்தின் சார்பாக அவனது மாமா தயானந்தமும், சங்கரனும் வரவேற்றுக்கொண்டிருக்க, மற்றொருபுறம் வேதவள்ளி பாட்டியோ தங்களது உறவுக்காரப்பெண்களை வைத்து, ஐயர் சொல்லும் வேலைகளைசெய்ய சொல்லிக்கொண்டிருந்தார்.. சமையல்கட்டிலும், பந்தியிலும் வசந்தி அவ்வப்போது மேற்பார்வையிட்டுக் கொண்டிருக்க, அந்த அரங்கமே திருமணவிழாக்கோலம் பூண்டது..


உறவுக்காரர்களோ முதல்நாள் இரவிலிருந்தே வந்த வண்ணமே இருந்தனர்.. அப்போது மணமகன் அறையில் தயாராகிக்கொண்டிருந்த தஷானை காணவந்த தயானந்தமோ பரப்பரப்பாக, “டேய்..? இன்னும் நீ ரெடியாகலையா..?” என்று கேட்க, அவரது பதட்டத்தை கண்டவனோ, “என்னப்பா..? இதோ ரெடியாகிட்டேன்..! நீங்க ஏன் இப்படி பதட்டமாகஇருக்கீங்க..?” என்று கேட்டுக்கொண்டிருக்கும்போதே, தயானந்தத்தின் மொபைல் மணியடிக்க, அதனை அட்டென்ட் செய்து பேசியவரோ, எதிர்முனையிலிருந்த தனது அடியாட்களிடம், “டேய்..? மண்டபத்தை சுத்தி நம்ம ஆளுங்களை நிறுத்திவைங்க..! சந்தேகப்படும்படி யாராவது வந்தால், உள்ளேவிடாதீங்க..! இந்த கல்யாணம் நடக்கிறவரைக்கும், எல்லாத்தையும் கண்காணிச்சுட்டே இருங்க..! யார் மூலமாகவும், இந்த கல்யாணத்திற்கு எந்த தடங்கலும் வந்திடக்கூடாது..! நான் நினைச்சபடியே, இந்தக்கல்யாணம் நல்லபடியா நடந்துமுடியனும்..! புரியுதா..?” என்று கட்டளையிட, எதிர்முனையில் இருந்தவர்கள் அனைவரும் அவரது கட்டளைக்கு பணிந்திடவே பின், “சரி..!” என்றுக்கூறி காலைகட் செய்தவரை கண்ட தஷானோ, “என்னப்பா..? என்னாச்சு..? ஏன் இப்படி பதட்டமா இருக்கீங்க..? இது நாம பார்த்து பிக்ஸ் பண்ண மேரேஜ்தானேப்பா..? இதை யாரு தடுக்கப்போறாங்க..? அது மட்டுமில்லாமல் உங்களைமீறி யாரால் இங்கே வரமுடியும்..? தேவையில்லாமல் ஏதோ விஐபி கல்யாணத்துக்கு கொடுக்கிறமாதிரி பந்தோபஸ்தெல்லாம் கொடுக்காதீங்கப்பா..!” என்று கேலியாக சொல்லிட,


தயானந்தமோ, “டேய் முட்டாள்..! நீ என்ன நெனச்சிட்டிருக்க..? நீ, மிதிலாவை விரும்பினதினால்தான் நான் உனக்கு மிதிலாவை கல்யாணம் பண்ணிவைக்கிறேன்னு நினைச்சுட்டிருக்கியா..?” என்று சொன்னதற்கு, “ஆமாம்..! அதுதானே உண்மை..?” என்று கூறிட, இருமாப்புடன் சிரித்தவாறு தஷானை பார்த்த தயானந்தமோ, “ டேய் மகனே..? நான் உனக்கு மிதிலாவை கல்யாணம் பண்ணிவைப்பதற்கான காரணம், உன்னுடைய காதல் கிடையாது..! அதுமட்டுமில்லாமல், நீ காதலிச்சதில் மிதிலா முதல்பெண்ணும் கிடையாது..! எனக்கு தெரிஞ்சு நூற்றில் ஒன்னோ..? ஆயிரத்தில் ஒன்னோ..? ஆனால், அதையும்மீறி அவளை உனக்கு கல்யாணம் பண்ணிவைக்கிறேன் என்றால், அதற்கொரு காரணமில்லாமல் இருக்குமாடா..? இந்த தயானந்தம், எது பண்ணாலும் ஒரு லாபத்தோடதான் செய்வான்..!” என்று சொல்ல,


புரியாத தஷானோ, “என்னப்பா லாபம் இருக்குது..? அவளே ஒரு அனாதை..! இந்த வீட்டிலிருப்பவங்களே அவளை ஒழிச்சுக்கட்டணும்னு பார்க்கிறாங்க..! இப்போ, வரதட்சணையே இல்லாமல் நம்ம கல்யாணம்பண்ண ஒத்துக்கொண்டதால், நம்மதலையில் கட்ட நினைக்கிறாங்க..! அவ்வளவுதானே..?” என்றிட, “இல்லடா..!” என்ற சொன்ன தயானந்தமோ மேலும், “நீ, நினைக்கிறமாதிரி மிதிலா ஒன்னும் அனாதை கிடையாது..! அவள் பலகோடி மதிப்புள்ள சொத்துக்கு அதிபதி தெரியுமா..?” என்றிட, அதிர்ச்சியான தஷானோ, “என்னப்பா சொல்றீங்க..? பலகோடி ரூபாய்க்கு அதிபதியா..?” என்று அதிர்ச்சியாக கேட்டிட, “ஆமாம்டா..! நீ குழந்தையாக இருக்கும்போது, நான் மதுரையில் ஒரு ஜமீன்வீட்டில் வேலைசெஞ்சுட்டு இருந்தேன்..! அந்த ஜமீன்குடும்பத்தோட போராதகாலம், குடும்பமா ஏதோ கோவிலுக்கு போகும்போது, கார் ஆக்சிடெண்ட்டில் மொத்தபேரும் இறந்துபோயிட்டாங்க..! பிறகு, அந்த ஜமீன்தாரோட ஒரே பொண்ணுக்கும், மருமகனுக்கும் மொத்தசொத்தும் போய் சேர்ந்தது..! ஆரம்பத்துல தன் சொத்துக்களை நல்லா நிர்வாகம் பண்ணிக்கிட்டிருந்த ஜமீன்தாரோட மருமகன் நாளடைவில் நோய்வாய்ப்படவே, சொந்தக்காரங்களெல்லாம் சேர்ந்து, சொத்தை அடைவதற்காக சூழ்ச்சிபண்ணி ஜமீன்தாரோட மருமகனுக்கு மதுவில் விஷம்கலந்து கொடுத்து கொன்னுட்டாங்க..! அதனால எந்த சொந்தக்காரங்களையும் நம்பாத ஜமீன்தார் அம்மா தாரணியோ, தன்னோட ஆறுமாத பெண்குழந்தையோட தன் சொத்துக்களை நிர்வாகம்பண்ணி வந்தாங்க..! தன்னோட நிழலைக்கூட நம்பாதவங்க, யாரையும் அவங்க பக்கத்திலேயே நெருங்கவிடலை..! அப்போதான் நான், அந்த ஜமீனில் வேலைக்குசேர்ந்தேன்..! தாரணி அம்மாவையும் கொலைசெய்ய நினைச்ச அவங்க சொந்தக்காரங்க, அவங்களும் அவங்க குழந்தையும் வெளியபோகிற சமயமாகபார்த்து, அவங்க காரையும் ஆக்சிடென்ட்பண்ணி கொலைபண்ண முயன்றபோது, நான்தான் அந்த காரை ஓட்டுனேன்..! அப்போ, என் உயிரைக்கொடுத்து அவங்களையும் குழந்தையையும் காப்பற்றினேன்..! அதன்பிறகு, யாரையுமே நம்பாத தாரணிஅம்மா, என்னைமட்டும் முழுசா நம்ப ஆரம்பிச்சாங்க..! இன்னும் சொல்லப்போனால், சில பணம் கொடுக்கல்வாங்கல் விஷயத்தைக்கூட, என்கிட்ட மட்டும் சொல்லி வச்சாங்க..! இப்படியே போயிட்டு இருந்தப்போது அவங்களோட சொத்தை பார்த்து, அதை அடையணுமென்று நான் ஆசைப்பட்டேன்..! அதுக்காக திட்டம்தீட்டி, நேரம்பார்த்து காத்திருந்தேன்..! நான் காத்திருந்த நாளும் வந்தது..! அன்றுதான், தாரணி அம்மா சாப்பிட்ட உணவுல உயிர்கொல்லி மருந்தை கலந்தேன்..! அது உடனே அவங்களை கொல்லாமல், கொஞ்சம்கொஞ்சமா அவங்க ரத்தத்துல கலந்து, ஒரு ஏழுமணிநேரம் உயிரோடு வைத்திருந்து, அதுக்கப்புறம்தான் அவங்களை உயிரைப்பறிக்கும்..! இன்னும் சொல்லப்போனால், அவர்கள் இயற்கையாகவே இறந்தமாதிரிதான் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டே வரும்..! அவங்க இறந்தபின்னாடி கொஞ்சநாளில் அந்த குழந்தையையும் கொன்னுட்டு, இந்தசொத்து மொத்தத்தையும் எடுத்துக்கலாமென்று திட்டம்போட்டு வச்சிருந்தேன்..! அதுவரை எல்லாம் நல்லாதான் போச்சு..! அன்று தாரணி, உயிர்கொல்லி மருந்து சாப்பிட்ட மகிழ்ச்சியில், நான் என் திட்டத்தை என் கூட்டாளியிடம் ரகசியமாக சொன்னதைக்கேட்ட தாரணி, என்னை கண்டுகொண்டு,”எப்படியும், தான் இறந்துவிடுவோம்..! எப்படியாவது, தன் குழந்தையையாவது காப்பாற்றவேண்டும்..!” என்று நினைத்து, குழந்தையை எங்கேயோ மறைத்துவச்சுட்டா..! நான் எங்கெங்கோ தேடியும் எனக்கு குழந்தை கிடைக்கலை..! அதன்பிறகு, தாரணியும் அந்த குறிப்பிட்டநேரத்துல செத்துப்போயிட்டாள்..! பின்னர், ஊர்காரங்களெல்லாம் முதலில் சந்தேகப்பட்டாலும், பின்பு தாரணியோடது இயற்கையானமரணம்..! என்று பொய்யாகநிரூபிச்சு, குழந்தையை யாரோ கடத்திட்டுபோன அதிர்ச்சியில்தான், தாரணி மாரடைப்புவந்து செத்துப்போயிட்டாங்க..! என்று, ஊர் மொத்தத்தையும் நம்பவச்சேன்..!”


“ஏற்கனவே தாரணிக்கு என்மேலிருந்த நம்பிக்கையில், சொத்தை நிர்வாகிக்கும் ஒருசில உரிமையை எனக்காக கொடுத்திருந்தாங்க..! அதை வைத்துதான் இப்போவரையும் அந்தசொத்தை அனுபவிச்சிட்டுவரேன்..! ஆனால், காணாமல்போன தாரணியோட குழந்தை எப்போவந்தாலும், சொத்து அந்த குழந்தையோடபேரில் போயிடும்..! என்றும், அப்படி குழந்தை கிடைக்கவேயில்லையென்றால், ஒரு குறிப்பிட்ட வருஷத்துக்குபிறகு சொத்துமொத்தமும், ஊர் கோவிலுக்கு போய்விடும்..! என்றும், ஜமீனின் குடும்ப உரிமைசட்டம் பத்திரம் சொல்லவே, கடந்த பத்துவருஷமாக நான் தாரணியோட குழந்தையை எங்கெங்கயோ தேடிட்டுவந்தேன்..! ஆனால், என்னால கண்டுபிடிக்கவே முடியலை..! இப்போ, நம்ம பரத்திற்கு பெண் பார்ப்பதற்காக மிதிலாவோட வீட்டுக்கு வந்தபோதுதான், அச்சுஅசலாக தாரணிபோலவே இருக்கும் மிதிலாவைப்பார்த்து, எங்கே தாரணியே உயிரோடு வந்துவிட்டாளோ..? என்று, ஒருகணம் ஆடியேபோயிட்டேன்..! அப்புறம்தான், அவள் தாரணியோட பொண்ணுன்னு எனக்கு புரிய ஆரம்பிச்சுது..! இதை, சங்கரனின் வாயாலேயே தெரிஞ்சுக்கணும் என்பதற்காகதான் தாரணியைப்பற்றி அவங்ககிட்ட அன்னைக்கு தோண்டிதுருவி விசாரிச்சேன்..! கரெக்டா சங்கரனும் தாரணியோட சொந்தஊரான மதுரையில்தான் டிரெயினில் மிதிலாவை குழந்தையா கண்டெடுத்ததாக சொன்னாங்க..! சோ, என்கிட்டயிருந்து தாரணி காப்பாற்றிய அவளோடகுழந்தை இந்த மிதிலாதான்..! நான் அனுபவிக்கவேண்டிய மொத்தசொத்துக்கும் உரிமைக்காரியும் அந்த மிதிலாதான்..! அதனால், எப்படி மிதிலாவை இங்கிருந்து கூட்டிட்டுபோறதுன்னு நான் தவிச்சிட்டிருந்தபோதுதான், உனக்கு மிதிலாவை பிடிச்சிருக்குதுன்னு நீ என்கிட்ட சொன்ன..! அதைக்காரணம் காட்டிதான் உனக்கு மிதிலாவைக் கட்டிவைக்கிறேன்..! அவளை வைத்துதான் அவளோட மொத்தசொத்தையும் நாம அடையணும்..! அதுக்குபின்னாடி உனக்கு பிடிச்சிருந்தால் அவளோட வாழு..! இல்லைன்னா கொன்னுபோட்டுட்டுப் போ..!” என்று சொல்ல, கொடூரமாக புன்னகைத்த தஷானோ தனது தந்தைக்கு சரி..! என்று தலையாட்டிவிட்டு மணப்பந்தலுக்கு சென்றமர்ந்தான்..!


அங்கே ஒவ்வொருவரும் மனதில், திருமணம் நடக்கபோகும் மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் வலம் வந்துகொண்டிருக்க, மிதிலா மட்டும் முகத்தில் கலையின்றி இருளடைந்தபடி அமர்ந்திருந்தாள்..! அழகுநிலைய பெண்கள்வந்து மணமகள்களை அவரவர் முகபாவனைக்கு தகுந்தாற்போல் அழகுபடுத்திட, மணமகன்களோ தங்களுக்காக அமைக்கப்பட்டிருந்த மணப்பந்தலில் அவரவரது இடத்தில் அமர்ந்து, ஐயர் கூறிய மந்திரங்களை கூறிக்கொண்டிருந்தனர்..!


மிதிலாவோ நேற்று மாலைவரை, “எப்படியும் இந்த கல்யாணத்தை, ராகவ் தடுத்துவிடுவார்..!” என்ற நம்பிக்கையில் இருந்தாள்..! ஆனால், முதல்நாள் இரவுநடந்த வரவேற்புவிழாவில் ராகவ் பங்கேற்காததைக்கண்ட மிதிலாவின் மனதிலிருந்த நம்பிக்கை அடிவாங்கவே எஞ்சியிருந்த, “காலையில் ராகவ், நிச்சயம் வந்துவிடுவார்..!” என்றநம்பிக்கையும் நேரம் நெருங்கநெருங்க கரையத்தொடங்கியது..! ஆம்..! திருமணத்திற்கு இன்னும் 20 நிமிடங்கள் மட்டுமே இருக்க, மண்டபம்முழுக்க கண்களால் வலைவீசினாலும், ராகவ் அங்கிருப்பதற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை..! அதில் ஒருகணம் மனம்சோர்ந்துபோனவளோ, தன் மனதிலிருக்கும் காதலை அழிக்கமுடியாமலும், பிடிக்காத வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளமுடியாமலும் தவித்துகொண்டிருக்க,


ஐயரோ, “முகூர்த்தத்திற்கு நேரமாகிவிட்டது..! மணப்பெண்களை அழைத்துவாருங்கள்..!” என்று சொல்ல, பவித்ராவும் மிதிலாவும் ஒருவர்பின் ஒருவராக அங்கிருந்தபெண்களால் மனப்பந்தலுக்கு அழைத்துவரப்பட்டனர்.. அழகுநிலையபெண்களால் பூலோக தேவதைகள்போல் அலங்கரிக்கப்பட்ட மணப்பெண்களோ, மணப்பந்தலுக்கு வந்தமர்ந்திட, ஐயர் கூறிய மந்திரங்களை சொல்லிக்கொண்டிருந்த தஷானோ, பால்வண்ணமேனியை தழுவியபடி உடுத்தியிருந்த இளம்குங்குமநிற பட்டில், கழுத்து,காது,கைகளில் பொன்னகைகள் பூட்டப்பட்டு, நிலவுபோலிருந்த முகத்திலிருக்கும் கண்களுக்கு அஞ்சனம்தீட்டி ஒப்பனைசெய்திருக்க, வில்போன்ற இரு புருவங்களுக்கிடையே சிகப்புநிற கல்பொட்டுவைத்து, அதன்மீது சந்தனகீற்றிட்டு பூலோக ரதியாக வலம்வந்தவளைக்கண்டு, அவளது அழகில்சொக்கி ஒருகணம் மெய்சிலிர்த்துப் போயிருந்தான்..! அப்போது அவனருகே அமர்ந்திருந்த மிதிலாவை கண்டவனுக்கு, வாழ்வில் எதையோ ஜெயித்துவிட்டதை போன்ற மமதை தோன்றவே, அதை முகத்தில் காட்டியவாறு இறுமாப்புடன் அமர்ந்துகொண்டு, “எப்படியெல்லாம் அவளை அனுபவிக்கவேண்டும்..?” என்ற ஆசையுடன், மற்ற சம்பிரதாயங்களை செய்துகொண்டிருக்க,


தலைகுனிந்தபடி அமர்ந்திருந்த மிதிலாவோ சற்று நிமிர்ந்து, எதிரே முதல்வரிசையில் எந்த பதட்டமுமில்லாமல் அமர்ந்திருக்கும் ராகவைக்கண்டு அதிர்ந்தபடி நோக்க, அவனும் கல்யாணத்தில்நடக்கும் சடங்குகளை, மகிழ்ச்சியாக பார்த்தபடி அமர்ந்திருந்தான்.. மிதிலாவிற்கோ மனதில், “அன்றுபோல், ராகவ் இன்றும் தன்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டாரே..? என்று நினைத்தபடி கண்ணீர்சிந்தியவளோ, “தனது விதி என்னவோ..? அதுவே நடக்கட்டும்..!” என்று நினைத்து, அக்னிகுண்டத்தை வெரித்துக்கொண்டிருக்க,


ஐயரோ பெரியவர்களால் ஆசிர்வாதம்செய்யப்பட்டு கொடுக்கப்பட்ட திருமாங்கல்யத்தை எடுத்து, பரத்திடமும் தஷானிடமும் கொடுத்து, “கெட்டிமேளம்.. கெட்டிமேளம்..” என்று சொல்ல, இருவரும் தாலிகட்டபோகும் தருணத்தில் தனது சிம்மகுரலால், “ஒருநிமிஷம் நிறுத்துறீங்களா..?” என்று கர்ஜித்த ராகவை கண்டவர்களோ புரியாதவாறு நின்றிருக்க சங்கரனோ ராகவைப்பார்த்து, “என்னப்பா தம்பி..? ஏன் தாலிகட்டபோற நேரத்துல, நிறுத்தசொல்றீங்க..? இதென்ன விளையாட்டா..?” என்று கேட்க ராகவோ, “இப்போ நீங்க நிறுத்தலைன்னா, உங்க பொண்ணோட வாழ்க்கைதான் விளையாட்டாபோயிடும்..! பரவாயில்லையா..?” என்று கோபமாக சங்கரனைப்பார்த்து கேட்டதும்

சங்கரனோ, “என்னதம்பி சொல்றீங்க..?” என்று கேட்க, எகிரிக்கொண்டுவந்த தஷானோ, “யாருடா நீ..? உனக்கு என்னடா பிரச்சனை..?” என்று கேட்க தயானந்தமோ, “ இதோபாரு தம்பி..? இங்கேவந்து பிரச்சனை பண்ணாதே..! அப்புறம் விளைவுகள் வேறமாதிரி போயிடும்..!” என்று சொல்ல, நக்கலாக அவர்களைப்பார்த்து சிரித்தவனோ பின்புறம் திரும்பிபார்க்க, அப்போது சரியானநேரத்தில் போலீஸ் உடன்வந்த நந்தனோ ராகவைப்பார்த்து, “மச்சான் சாரிடா..! கொஞ்சம் லேட்டாயிடுச்சு..!” என்று சொல்ல ராகவ்வோ சிரித்தவண்ணம், “பரவாயில்லடா மச்சான்..! நான் ஃபங்ஷனை கொஞ்சம் போஸ்ட்பாண்ட் பண்ணிவச்சிருக்கேன்..!” என்று சொல்ல தஷானோ கடுப்பாகி, “டேய் யார்ரா நீ..? என் கையிலசிக்குன அவ்ளோதான்..!” என்று மிரட்ட, அதற்கு காதுகளை குடைந்தவண்ணம் நக்கலாக தஷானைக்கண்ட ராகவ்வோ, “மாப்பிள்ளைசார்..? கொஞ்சம் பொறுங்க..! அதுக்குள்ள என்ன தாலிகட்ட அவசரம்..? முடிக்கவேண்டிய விஷயம் இன்னும்நிறைய இருக்கே..!” என்று சொல்ல, அவனை புரியாதுபார்த்தான் தஷான்..


மேலும்தொடர்ந்த ராகவ்வோ, “டேய் மாப்ள..? உன்னையும் உங்கப்பனைப்பற்றியும் ஒருநாள்தான்டா விசாரிச்சேன்..! அடேங்கப்பா..! ஒரு பைல் ஃபுல்லா கிரைம் பண்ணிவச்சிருக்கீங்களேடா..? என்ன ஆளுங்கடா நீங்க..? அதென்ன பைனான்ஸ் என்ற பெயரில், கட்டாயப்படுத்தி கந்துவட்டிகொடுத்து, அதைக்கட்ட முடியாதவங்களை தற்கொலைக்கு தூண்டி, கிட்டத்தட்ட கொலையே செஞ்சிருக்கீங்க..? அதுக்கு கல்யாணத்தை நிறுத்தாமல், உங்களுக்கு அவார்டா கொடுப்பாங்க..? மாப்ள நீங்க போகவேண்டிய மாமியார்வீடு அதில்லை..? இதுதான்..!” என்று காவலர்களை காட்டிட, அதனைக்கண்ட பவித்ராவோ பரத்திடம், “என்னங்க..? உங்க மாமாவையும், மாமா பையனையும் போலீஸ்ல பிடிச்சுகொடுக்குறளவுக்கு பேசுறாங்க..? நீங்க எதுவும் பேசாமல் அமைதியா உட்கார்ந்திருக்கீங்க..?” என்று முணுமுணுத்திட பரத்தோ, “ நான் அவங்ககிட்ட எவ்வளவோதடவை சொல்லிட்டேன்..! இந்தமாதிரி தப்பான பிசினஸ் பண்ணாதீங்க..! நேர்மையா வாழுங்கன்னு..! கேட்டாதானே..? வேணும்..! நல்லாவேணும்..! அவங்க சொல்றது சரிதான்..! விடு..! நீயும் எதுவும் கண்டுக்காதே..!” என்று சொல்லிட, தன்னவனை வித்யாசமாக பார்த்தாள் பவித்ரா..


மேலும் ராகவ்வோ தயானந்தத்தைக்கண்டு, “ஆனால் பாருங்க..? நான் நேத்து நைட்டுதான் உங்களைப்பற்றி விசாரிக்க தொடங்கினேன்..! அதுக்கே நீங்க இவ்வளவு கிரைம் பண்ணிவச்சிருக்கீங்க..! சுடசுட ஒரு ஐட்டம் சொல்லட்டா..? இப்போ..! காலையில நீயும், உன்பையனும் பேசிட்டிருந்ததை ஜஸ்ட் ஒரு வீடியோ எடுத்தேன்..! இப்போ அதை இங்கேயிருக்கும் எல்லாரும் முன்னாடியும் ரிலீஸ்பண்றேன்..!” என்று சொல்லி, காலையில் அறையில் தயானந்தமும் தஷானும் பேசிய வீடியோவை, அங்கிருக்கும் திரையில் ஒளிபரப்பவே, மிதிலாவின் பிறப்பு ரகசியம் அங்கிருக்கும் அனைவருக்கும் தெரிந்து அதிர்ச்சியில் ஆழ்த்தியது..! அதனைக்கண்ட தயானந்தமும், தர்ஷனும் ராகவ்விடம் எகிரிக்கொண்டுவரவே, நந்தனோ அவர்களைக்கண்டு நக்கலாக, “ஐயோ..! அக்யூஸ்ட் சார்..? அவன், அமைதியாக நின்று பேசிட்டிருப்பதனால் அவனைப்பற்றி தப்பாக எடை போட்டுறாதீங்க..! ஏதோ இன்னைக்கு நல்லமூடில் இருக்கிறதுனால, அமைதியா பேசிட்டிருக்கான்..! இல்லையென்றால் போலீஸ் உங்களை, இங்கிருந்து நடக்கவச்சு கூட்டிட்டுபோகாது..! ஸ்ட்ரெச்சர்ல தூக்கிட்டுதான் கூட்டிட்டு போகணும்..! அந்தளவுக்கு உங்க உடம்புல இருக்கும் பார்ட்ஸை டேமேஜ்பண்ணிடுவான்..! சோ, ப்ளீஸ்..! கோஆபரேட் பண்ணிருங்க..!” என்றிட, அந்த அவமானத்தில் ராகவன்மீது அவர்களது வன்மம் துளிர்விடதொடங்கியது..!


மிதிலாவும் இத்தனைநாட்களாக தன்னை பெற்றவர்கள் யார்..? என்று, தன்மனதில் போட்டு குழம்பிக்கொண்டு, தான் ஒரு அனாதை..! என்று நினைத்திருந்தவளுக்கு, இன்று தன்னுடைய தந்தை தாய்பற்றிய விவரங்களை தெரிந்ததில் அகம்மகிழ்ந்தவளோ, அதன் வெளிப்பாடாக கண்ணில் கண்ணீர்வடிய நின்றிருந்தாள்..! மேலும் குற்றம், குற்றவாளிகளின் வாய்மொழியாகவே நிரூபிக்கப்பட்டதால், தஷானும் தயானந்தமும், காவல் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டனர்..! அதன்பிறகு சங்கரனைபார்த்த ராகவோ, “ஏன் சார்..? வளர்ப்புபெண்ணாக இருந்தால், அவளது கல்யாணத்திற்கு அவளுடைய சம்மதம் தேவையில்லையா..? அவள்மனதில் என்ன நினைக்கிறாள்..? என்பதைக்கூட கேட்ககூடாதா..?” என்று முகத்தில் அறைந்தார்ப்போல பேச, அதில் மனம்துவண்டவரோ, “ஐயோ..! இல்ல தம்பி..! மிதிலாவை, நான் எப்பவும் என் பொண்ணாகத்தான் பாக்குறேன்..! இந்த கல்யாணம்கூட, அவளுக்கு ஒரு நல்லவாழ்க்கை அமைத்துக்கொடுக்கணும் என்ற எண்ணத்தில்தான்..!” என்று சொல்லி மன்னிப்பு கேட்டிட, ராகவ்வோ இதற்குமேல் பொறுமைகாத்திடாமல் சங்கரனிடம், “சார்..? நான் உங்க பொண்ணை காதலிக்கிறேன்..! அவளும்தான்..! அவளை நான் இப்போ கல்யாணம்பண்ணிக்க ஆசைப்படுறேன்..?” என்று கூற,


வேதவள்ளியோ, “எங்கே மிதிலாவிற்கு, தன் பேத்தியைகாட்டிலும் நல்லவாழ்க்கை அமைந்துவிடுமோ..?” என்ற வயித்தெரிச்சலில், “டேய் சங்கரா..? யார் எவன்னு தெரியாமல், ரோட்ல போறவனுக்கெல்லாம் பொண்ணைக் கட்டிக்கொடுக்க முடியாதுடா..! அவன்கிட்ட முடியாதுன்னு சொல்லி வெளியே அனுப்பிடு..!” என்றிட ராகவ்வோ வேதவள்ளியை முறைத்தவாறு சங்கரனிடம், “சார்..? உங்ககிட்ட நான் அனுமதி கேட்கல..! விஷயத்தைதான் சொன்னேன்..! நான் இப்போ இதே இடத்துல மிதிலாவை கல்யாணம் பண்ணபோறேன்..! முடிந்தால் ஆசீர்வாதம் பண்ணுங்க..! இல்லையென்றால் கிளம்பிட்டே இருங்க..!” என்றிட சங்கரனோ, “தன்மகள் மனதில் இவன்தான் இருக்கிறான்..!” என்பதை அவனது பேச்சிலேயே புரிந்துகொண்டு, “தம்பி..? நீங்க யாரு எவருன்னு தெரியலனாலும், என் பொண்ணோட வாழ்க்கையை காப்பாற்றியிருக்கீங்க..! கண்டிப்பா அவளை, நீங்க நல்லாப்பார்த்துபீங்க என்ற நம்பிக்கை எனக்கிருக்கு..!” என்று சொல்லி, ராகவின் கரம்பற்றி மணமேடைக்கு அழைத்துவரவே மிதிலாவின் அருகே சென்றவனோ, அவளது சோர்ந்துபோன கண்களைப்பார்த்து, “என்னடி மித்துக்குட்டி..? கடைசிவரை நீ என்னை நம்பலைதானே..?” என்று நக்கலாக கேட்கவே மிதிலாவோ, “அப்படி இல்லைங்க..! இருந்தாலும், மனசுல ஒரு ஓரமா பயம் இருந்துட்டே இருந்துச்சு..!” என்றிட ராகவ்வோ, “நான்தான் அன்னைக்கே சொன்னேனே..? இந்த ஜென்மத்துல நீதான் என் பொண்டாட்டி..! இதை எவன் நினைச்சாலும், மாற்றமுடியாது..!” என்று சொல்லி, ஏற்கனவே அய்யர்கொடுத்த தாலியை எடுக்காது, நந்தனின் பாக்கெட்டிலிருந்து எடுத்த, மிதிலாவிற்காக செய்துவைத்திருந்த தாலிசெயினை வாங்கியவனோ, அதை மிதிலாவிடம்காட்டி, “உனக்கு ஓகேவா..?” என்று கேட்க, அவளும் சம்மதமாக தலையசைத்தாள்..


அதன்பிறகு நந்தனோ ஐயரிடம், “என்ன ஐயரே..? அப்படியே ஷாக்காகி உட்கார்ந்து இருக்கீங்க..? கெட்டிமேளம் சொல்லமாட்டீங்களா..?” என்று கேட்டதும், “கெட்டிமேளம்..! கெட்டிமேளம்..!” என்றிட, முகூர்த்தநேரம் முடிவதற்குள், தான் கொண்டுவந்த பொன்தாலிசரடை மிதிலாவின் கழுத்தில் அணிவித்து, அவளை தன்னில் பாதியாக ஏற்றுக்கொண்டான்.. அதன்பிறகு பரத்தைக் கண்ட நந்தனோ, “டேய் பரத்..? இப்போ நீ கட்டலாம்..!” என்றதும், பரத்தும் தனது கையிலிருந்த தாலியை பவித்ராவின் கழுத்தில்கட்டி மூன்றுமுடிச்சுட்டான்.. ஒருவழியாக திருமணம் நல்லபடியாக நடந்தேற, அங்கிருந்த அனைவரின் கண்களும் மணமக்களின்மீது ஆசையாக பதிந்திட, வேதவள்ளியை தவிர்த்து மற்ற பெரியவர்களின் காலில்விழுந்து ஆசிர்வாதம் வாங்கியபடி நின்றிருக்க ராகவோ, தனது மனையாளை கூட்டிக்கொண்டு, அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு நந்தனோடு வெளியே செல்ல எத்தனிதான்..


அப்போது அவனைதடுத்த சங்கரனோ, “தம்பி..? இன்று நீங்க இங்கேயே தங்கிவிடுங்கள்..!” என்று சொல்ல, அதனை மறுத்த ராகவ்வோ, “இல்ல சார்..! எப்போ நான் தாலிகட்டினேனோ..? அப்பவே அவள் என்பொண்டாட்டி..! இனி என்பொண்டாட்டி, என் வீட்லதான் இருக்கணும்..!” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து காருக்குசெல்ல, அப்போது வேகமாக ஓடிவந்து அவர்களை குறுக்கிட்ட மிதிலாவின்தோழி லீலாவோ, மிதலாவை கட்டியணைத்து வாழ்த்திவிட்டு படபடத்தபடி, “ மிதிலா..? எனக்கு தெரியும்டி..! எப்படியும் அந்தமாப்பிள்ளையை நீ, கல்யாணம் பண்ணமாட்டேன்னு நான் நினைச்சேன்..! அதேபோலநடந்திருச்சு..!” என்று சொல்ல நந்தனோ, “யாரிது..?” என்று மிதிலாவிடம்கேட்க, மிதிலாவோ, “அன்று முதல்நாள் ராகவ்வை, தான் சந்திப்பதற்கு காரணமாக இருந்தது இவள்தான்..!” என்று சொல்ல நந்தனோ லீலாவிடம், “இவங்கதான் அந்த சண்டகோழியா..? உங்ககிட்ட, என் நன்பனைப்பற்றி தப்புதப்பாக சொல்லிக்கொடுத்தது இவங்கதானா..? ஏம்மா பொண்ணு..? பசங்கன்னா உடனே, பொண்ணுங்கபின்னாடி சுத்துறது மட்டும்தான் வேலையா வைத்திருப்போமா..?” என்று நக்கலாக கேட்க, நந்தனிடம் சண்டகோழியாக முட்டிக்கொண்டவளோ, “ நான் பார்த்த எல்லா ஆம்பளைங்களும், அப்படித்தான் இருந்தாங்க..!” என்றிட நந்தனோ, “ஆனால், நாங்க அப்படியில்லம்மா..!” என்று மீண்டும்நக்கலாக பதில்சொன்னான்.. பின்னர் மிதிலாவிடம் ஒருநாள் வீட்டுக்கு வருவதாகசொல்லிவிட்டு அங்கிருந்து லீலா சென்றதும், கார் புறப்பட்டது..!


சுமார் அரைமணிநேரம் பயணத்திற்குபிறகு பெங்களூரின் மிகமுக்கியமான மையப்பகுதியும், நடுத்தர ஏழைமக்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் நின்றது அந்தகார்..! பின்பு மணமக்கள் காரிலிருந்து கீழே இறங்கிட, மிதிலா அந்தஇடத்தையே வெரித்தவாறு பார்த்து ராகவிடம், “ இது எந்தஇடம்..?” என்று கேட்டதும் ராகவ்வோ, “இதுதான், நான் முதன்முதலில் பெங்களூர் வந்தபோது எனக்கு அடைக்கலம் கொடுத்தஇடம்..!” என்று சொல்லி, அவளை அழைத்துக்கொண்டு உள்ளேசெல்ல, அங்கேயிருந்த ஒருவீட்டில் நுழைந்தவர்களோ, உள்ளேசென்று பார்க்கையில், அங்கே வயதாகிப்போயிருந்தாலும், கம்பீரம்மாறாது தனது இருக்கையில் அமர்ந்திருந்த ராவுத்தர்பாயைக்கண்டு, மரியாதை நிமித்தமாக வணங்கிட, மணமக்களை ஆசீர்வதித்தவரோ ராகவைப்பார்த்து, “என்னடா..? உனக்கு கல்யாணம்பண்ண இவ்வளவுநாள் தேவைப்பட்டுச்சா..?” என்றதும் ராகவோ புன்னகையுடன், “அதெல்லாம் ஒன்னுமில்ல வாப்பா..! எல்லாத்துக்கும் ஒருநேரம் வரணுமில்ல..?” என்றிட நந்தனோ, “ஆமாம வாப்பா..! இவனுக்கு கல்யாணம் பண்ணிவைக்கிறதுக்குள்ள எனக்கு பாதி ஆயுசே போயிடும்போல இருந்தது..!” என்று சொல்ல, “விடுடா நந்தா..! நீ, அவன்கூட இருக்கிற என்ற தைரியத்துலதான் நான் அவனை கண்டுக்காமல் விட்டுட்டேன்..! எப்படியோ நல்லபடியாக ஒருபொண்ணை பார்த்து கல்யாணம்பண்ணி, அவனும் குடும்பமாகிட்டான்..!” என்று சொல்லிட, இவர்கள் பேசுவதைபார்த்து, “அன்று, நந்தன் தன்னிடம் கூறியதுபோல் ராகவிற்கு அடைக்கலம் கொடுத்த ராவுத்தர் இவர்தான்..!” என்பதை புரிந்துகொண்டு நிற்க, அங்குவந்த சில ரவுடிகளோ ராகவிற்கு வாழ்த்துதெரிவித்து பின்பு அவர்களை அழைத்துக்கொண்டு பேச செல்ல, தனியாக நின்றிருந்த மிதிலாவைப்பார்த்த ராவுத்தரோ, “அம்மாடி..? இவங்களையெல்லாம் பார்த்து பயப்படாதே..! அவங்களெல்லாம் பார்க்க கரடுமுரடாகத்தான் இருப்பாங்க..! ஆனால், மனசளவுல ரொம்பநல்லவங்க..! தப்பானவங்களைதான் அடிப்பாங்களேதவிர, எந்தவொரு நல்லவங்களுக்கும் அவங்களால, எந்தபிரச்சனையும் வராது..!” என்றதும், அவர்களதுகொள்கையை புரிந்துகொண்டவளோ, அதற்கு ஆமோதிப்பாக தலையசைக்க, அதனை பார்த்தவுடனே மிதிலாவின் குணத்தை பிடித்துப்போன ராவுத்தரோ மிதிலாவை ஆசீர்வதித்து, “அம்மாடி..? ராகவ் ரொம்ப நல்லவன்ம்மா..! கொஞ்சம் முரடன்தான்..! எதுக்கெடுத்தாலும் கோபப்படுபவன்தான்..! ஆனால அவன் மனசு பூ போன்றது..! இதுவரை எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காத அவன்மனதில், நீ நுழைந்துருக்கிறாய் என்றால், எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது..! நீ எப்போதும் அவனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்..! இப்போவரை நந்தன்தான் அவனை பாத்திட்டிருக்கான்..! இனிமேல் அந்தபொறுப்பு உன்னோடது..! ராகவ் என்னோட புள்ளைமாதிரி..! ஏழுவயசுல இந்த ஊருக்கு அனாதையா வந்தான்ம்மா..! சின்னவயசுல நிறையவே மனசளவுல காயம்பட்டிருக்கான்..! அதனாலதான் அவனோட நடவடிக்கை எப்பவுமே ரொம்ப அமைதியாகவே இருக்கும்..! கலகலப்பா பேசநினைப்பான்..? ஆனால் பேசமாட்டான்..! நீதான் அவனை இன்னும் கலகலப்பாக மாத்தணும்..! புரியுதா..?” என்று அறிவுரைகூறிட,


அதற்கு, “சரி..!” என்று தலையசைத்தவளோ, பின்னர் தன் கணவன்வரவும் அவனுடன்சேர்ந்து நிற்க, அங்கிருந்தவர்களோ மணமக்களுக்கு வாழ்த்துக்கூறி அவர்களது சந்தோஷத்தை ஆடிப்பாடி வெளிப்படுத்தினர்.. பின்னர் வீடுதிரும்பியவர்களோ, அடுத்த 15நிமிடத்தில் ராகவ்வின் வீடு வந்துவிடவே, காரிலிருந்து இறங்கி மணமக்கள் சகீதமாக வாசலில் நிற்க, ராகவ் வீட்டில் வேலைசெய்யும் வேலைக்காரப்பெண் வந்து ஆரத்தியெடுத்து வரவேற்க, வலதுகாலெடுத்து வைத்த மிதிலாவோ, உள்ளே சென்றதும் பூஜை அறைக்குச் சென்று விளக்கேற்றி வழிபட,


அதனைக்கண்ட நந்தனோ மனதில், “எப்படியோ தன்நண்பனுக்கு நல்லபடியே குடும்பம் அமைந்துவிட்டது..! இனி அவன்வாழ்வு நல்லமுறையில் சிறக்கவேண்டும்..!” என்று மனதார கடவுளை பிரார்த்தித்தான்.. பின்னர் சம்பிரதாயப்படி அங்கிருந்த வேலைக்காரர்களால் பால்பழம் கொடுக்கப்படவே, இருவரும் வாங்கி பகிர்ந்துகொண்டனர்.. அதன்பிறகோ ராகவ் மறுக்கமறுக்க முதலிரவிற்கான ஏற்பாடு நடந்துகொண்டிருந்தது..உடலோடு உயிர்உரசும் நிலைதான் உண்மைக்காதலோ..? பார்க்கலாம்… தொடரும்…
 
Last edited:

Advi

Well-known member
வாவ் கல்யாணம் ஆகிட்டு😍😍😍😍

சூப்பர் டா ராகவ்👏👏👏👏
 
Top