எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கொலுசொலி ஆசைகள் 13

NNK 89

Moderator
கொலுசொலி ஆசைகள் 13

காலை எழுந்தது முதல், செந்தா அவளின் வேலையைப் பார்க்க தொடங்கிருந்தாள்.
பாப்பு, பாட்டியைத் தவிர மற்றவர்களிடம் அவள் பேசவில்லை.

கௌது மட்டுமே அவளின் முகத்தை திரும்பி ஏக்கமாக பார்த்தப்படி சுற்றினான். செவாயி, மருமகள் மேல் கோபமாக வெளிவேலையைப் பார்த்துக் கொண்டு முறைத்தவாறு வலம் வந்தார்.

பாப்பு பள்ளிக்கு சென்றிட, காலை உணவை கௌதுவிற்கு எடுத்து வைத்துவிட்டு, குளித்து வந்த செந்தா
பாட்டிக்கு தட்டில் எடுத்த உணவை நீட்டினாள்.

"என்ன செந்தா, எங்கயும் வெளியில் கெளம்பிட்டியா?" எனக் கேட்டார் பாட்டி.

"ஆமா பாட்டி, ஒரு ஸ்கூலில் வேலைக்கு ஆள்கள் கேட்டு இருக்காங்க, அதான் போய் பாத்துட்டு வரலாமுனு கெளம்புறேன்" என்றாள் சாதரணமாக.

சாப்பிட்டுக் கொண்டு இருந்த கௌதுவிற்கு புரை ஏறியது. அவளை நிமிர்ந்துப் பார்த்தான்.

"அப்படியா? நல்லது தான், நீயும் வீட்டுல என்ன பண்ற, போயிட்டு வா" என்றார் பாட்டி.

செவாயி, செந்தா பேசியதைக் காதில் வாங்கிக் கொண்டு கௌதுவைப் பார்த்து"என்னடா இது எல்லாம்? ஓ! நீ இந்தளவு பொண்டாட்டிக்கு இடம் கொடுத்துட்டீயா?" எனப் பொருமினார்.

"அம்மா!" என ஆரம்பித்தவன், தனக்கே இப்பொழுது தான் தெரியும் எனக் கூறினால் அடுத்தப் பஞ்சாயத்து ஆகிவிடும் என்று, "இப்ப என்ன ஊரில் நடக்காததா? நீ பேசாம இரு" எனத் தாயை அடக்கினான்.

செந்தா அறைக்குள் சென்று தன் கைப்பையை எடுத்துச் சரிப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

கௌது அறைக்குள் நுழைந்ததும் "செந்தா! வேலைக்குப் போக போறீயா?" என மெல்ல கேட்டான்.

அவளோ அவனின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை.

"செந்தா!" எனச் சற்று அழுத்தமாக அழைத்தான்.

நிதானமாக திரும்பியவள், "ஆமா! ஏன் நீங்க பர்மிசன் குடுக்கனுமா?" எனக் கேட்டாள்.

கௌது அவளிடம் அதற்கு மேல் பதிலை எதிர்பார்க்க முடியாது என அவளின் 'ஆமா' என்றதிலே உணர்ந்திட, "எத்தன மணிக்குப் போகனும்?" என மட்டுமே கேட்டான்.

செந்தா பதில் கூறாமல் அவனைக் கடக்க முயன்ற போது, மனைவியின் கையைப் பற்றி நிறுத்தி,

"செந்தா!" என்றான்.

அவன் பிடித்திருந்த தன் கையை நோக்கியவள், நிமிர்ந்து நேருக்கு நேர்'என்ன?' என்பது போல் அவனைப் பார்த்தாள்.

"நீ வேலைக்குப் போறதுல,எனக்கு பிரச்சனையில்ல"

"நான் உங்கக் கிட்ட பர்மிசன் கேக்கல" என்றாள் பட்டென்று.

"செந்தா! ஏன் இப்டி பேசுற? எனக்குப் புரியுது, நான் உன் மனசைப் புரிஞ்சுகாம இருந்திருக்கேனு. நீ உன் வீட்டுல பேசினத கேட்டேன். எனக்கு ஒரு வாய்ப்புக் குடு, உன் மனசுக்கு ஏத்த மாதிரி நடந்துகிறேன்" என அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டுக் கெஞ்சலாக கூறினான்.

"தயவுச் செஞ்சி என்னைய பழைய மாதிரி உங்க கண்ட்ரோலில் வைக்க முயற்சிக்காதீங்க, ப்ளீஸ்! உங்க காலுல வேணா விழுறேன். உங்களுக்கு அடுத்தப் பிள்ளை வேணுனு என் கிட்ட வரீங்கனா, நான் மறுக்கல என் வழியில் என்னைய விடுங்க, உங்களுக்குத் தேவைப் புள்ள மட்டும் தான், அதை வேணா பெத்து தந்துடுறேன், ஆனா! என் மனசுக்கு ஏத்த மாதிரி நடந்துகிறேனு சொல்லி கஷ்டப்படுத்தி பாக்காதீங்க, போதும்! எட்டு வருசமா என் வாழ்க்கையைத் தொலைச்சுட்டேன். அது எல்லாம் திரும்பாது. கையை எடுங்க" என்றாள்.

அவனோ செந்தாவின் கையை விலக்க இயலாமல் நிற்க, செந்தா கடினமான அழுத்ததுடன் உதறிவிட்டு வெளியேறினாள்.

கௌது விலகிச் செல்லும் அவளையே பார்த்தப்படி நின்றான்.

மனம்'அவ மனசுல நீ இல்ல போலடா' எனக் கூச்சலிட்டது.

கௌதுவிற்கு எதுவுமே புரியவில்லை, இத்தனை நாள்கள் தொலைவில் இருந்தாலும் தனக்கானவள், மனைவி என்பதால் அவளின் அருமையை உணரவில்லை.

ஆனால் இன்று அருகே இருப்பவளின் அருமைப் புரிந்தாலும், உணர்ந்தாலும் தொலைத்தூரத்தில் தெரிகிறாள்.

எப்படி இதைச் சரிசெய்வது எனப் புரியாமல் தவித்தான்.
……

இரவு...

கௌது வீட்டிற்குப் போக தோன்றாமல் மகேஷ் வீட்டு மொட்டை மாடியில் மதுப் போதையில் அமர்ந்திருந்தான்.

"டேய்! நேரமாகுது, வீட்டுக்குப் போகாம
இங்கயே உட்காந்திருக்க, உன் அம்மாவுக்குத் தெரிஞ்சுது, வெளக்கமாத்த தூக்கிட்டு இங்க வந்துடும். அப்புறம் என் பொழப்புச் சிரிப்பா சிரிச்சுடும்." எனப் பொலம்பினான் மகேஷ்.

"பரவாயில்ல வாங்கிக்கோடா எனக்காக தானே, மனசே சரியில்ல" என நண்பனிடம் உளரிட, "ஏன்டா! வந்ததுல இருந்து இதையே தான் சொல்ற, புருசன், பொண்டாட்டினா இது சகஜம் தான், எல்லாம் சரியாகும் கௌது"
என்றான்.

"இல்லடா! அவ பாவம், நான் தான் மடையனா, முட்டடாளா இருந்துட்டேன். அம்மா பேச்சையே கேட்டுட்டு அவளைப் பத்தி யோசிக்கவே மறந்துட்டேன். இது சொல்லவே வெட்கமா இருக்கு, ஆனாலும் நான் தப்பு பண்ணிட்டேன்டா.............." எனப் பலவாறு புலம்பிய கௌது, அவர்கள் இடையே அன்று மருத்துவமனையில் நடந்ததை முதன் முதலில் கூறினான்.

"என்னடா சொல்ற, நீ குடும்பத்துக்காக தானே போய் அங்கக் கெடக்குற, உன்னைய புரிஞ்சிக்க வேணாமா செந்தா?" என அவனும் ஒரு ஆம்பளைப் புத்தியுடன் பேசினான்.

"டேய்! நீயும் என்ன மாதிரியே தப்பா யோசிக்கிறடா, அப்படியில்ல செந்தா மனசுல இருப்பது நியாயம் தானே"

"என்ன நியாயம்?"

"பாப்புவை வயித்துல குடுத்துட்டுப் போனேன், எட்டு வருசம் ஆச்சு அடுத்து இப்ப தான் வந்திருக்கேன் மறுபடியும் அடுத்தப் புள்ளைனா, அவ பாவம் தானேடா"

"அதுக்காக, இதானே இயற்கையான உங்க வாழ்க்கை முறை, நீ வரும் போது தானே உறவு வச்சுக்க முடியும். செந்தா மனசுல அப்படி என்ன ஆசைகள் தான் இருக்கு?"

"தெரியலையே!"

"அப்புறம் என்னமோ நியாயம் இருக்குனு சொன்ன"

"ஆமாடா! எனக்கு அப்படி தான் தோணுது, ஆனா என்னனு தெரியல"

"டேய்! டேய்! குழப்பிக்காம வீடுப் போய் சேரு..." என அவனும் எழுந்து கௌதுவிற்கு கைக்கொடுத்து எழுப்பி விட்டான்.

கௌது மெல்ல நடந்துப் போக, "கௌது!" என அழைத்தான் மகேஷ்.

"என்னடா?" எனத் திரும்பிக் கேட்டான்.

"செந்தா மனசுல என்ன ஆசை இருந்தா என்னா? நீ பேசாம அது காலுல விழுந்துடு மேட்டர் முடிஞ்சுடும். நான் எல்லாம் அப்படி தான் பண்ணுவேன்" எனப் பெருமையாக கூறினான்.

கௌது வெளிப்படையாவே காரித் துப்பிவிட்டுத் திரும்பி நடந்தான்.

"இப்ப நம்ம என்ன சொல்லிட்டோமுனு துப்பிட்டுப் போறான், போடா டேய்! இங்க வெளியில வீராப்பா சுத்துறவன் எல்லாம் பொண்டாட்டி காலில் விழுந்து தான் எழுந்திரிச்சு இருப்பானுங்க, யாருக்கு தெரியும்?" எனப் புலம்பினான் மகேஷ்.

வீட்டின் வாசலிற்கு மெல்ல நடந்துச் சென்ற கௌது, வீடுத் திறந்திருக்க,
அனைவருமே தூக்கத்தில் இருந்தனர், தூங்கும் அப்புச்சியைக் கடந்து தான் சென்றான்.

செவாயி தூக்கத்தில் இருந்தமையால் எந்தவித அசைவும் இல்லை, அவன் அறைக்குள் புகுந்துக் கதவைத் தாழிட்டான்.

கட்டிலில் பாப்புவுடன் செந்தாவும் படுத்திருக்க, அருகில் சென்றுப் பார்த்தான்.

இருவருமே நல்ல உறக்கத்தில் இருந்தனர். நள்ளிரவைத் தாண்டியதால் செந்தாவும் பாப்புவைத் தூங்க வைத்துவிட்டு அப்படியே கண் அயர்ந்திருந்தாள்.

தூங்கும் மனைவியை மெல்ல ரசித்தவன் இதழில் சிரிப்பு எட்டிப் பார்த்தது.

அவளைத் தொந்தரவு செய்யாமல் செந்தா படுக்கும் பாயை எடுத்துத் தரையில் போட்டு கீழே சாய்ந்தான்.

தரையில் தலைச் சாய்த்தவனுக்கு எதுவுமே நிதானத்தில் இல்லை, பிறகு கண் முழித்தது மறுநாள் காலை ஒன்பது மணியிருக்கும்.

சுவர் கடிகாரத்தில் மணி ஒன்பது எனக் காட்ட அதைக் கண்டவன் பட்டென்று எழுந்தமர்ந்தான்.

"அச்சச்சோ! இப்டி தூங்கிட்டோமா" என எழுந்து வெளியில் சென்றான்.

செவாயி காலையிலே சின்ன மகள் வீட்டுப்பக்கம் யாரோ பால் காய்ச்சிக் குடிப்புகுகிறார் என விசேஷத்திற்கு சென்றுவிட்டார்.

பாப்பு பள்ளிக்குச் சென்றுவிட, பாட்டி மட்டுமே படுத்திருந்தார்.

"அப்புச்சி! எங்க யாரையும் வீட்டுல காணும்?"

"உன் ஆத்தா யாரோ விசேஷத்துக்குப் போயிட்டா, பாப்பு பள்ளிக் கூடம் போச்சு"

"செந்தா!"

"செந்தா வேலைக்குப் போய் இருக்குப்பா, உன் கிட்ட சொல்ல தானே ராத்திரிக் காத்து இருந்தா, ஆனா நீ தான் வரல, காலையிலும் எழுந்திரிக்கவே இல்லை. நானும் வந்து எழுப்பலாமுனு பாத்தேன். செந்தா வேணானு சொன்னுச்சு, எத்தன மணிக்கு வந்த?"

"அது... ஆமா! செந்தா எங்க வேலைக்குப் போறதா சொன்னாளா?"

"ஏதோ பள்ளிக்கூடத்துப் பேரு சொன்னுச்சு, எனக்கு வாயில நுழையல"

"எங்க இருக்குனு தெரியுமா அப்புச்சி?"

"அடேய்! நானே வீட்டுல கெடக்குறவ இப்ப ஆரம்பிச்சு இருக்க பள்ளிக் கூடம் எல்லாம் எனக்குத் தெரியுமா?"

"சரி! சரி!" என வேகமாக சென்றுக் குளித்தவன், அடுப்படிற்குள் சென்று அங்கு இருந்த உணவை சாப்பிட்டு விட்டு வெளியில் கிளம்பினான்.

செவாயி வந்துவிடுவார் என்பதை தங்கயிடம் பேசி உறுதிச் செய்த பிறகே சென்றான், இல்லை என்றால் அப்புச்சியை விட்டு இருவரும் போய்விட்டார்கள் எனக் குறை வரும், ஆனால் செந்தா மதியத்திற்கும் சமைத்து வைத்துவிட்டே சென்றிருந்தாள்.

ஊரின் பஸ் ஸ்டாப்பில் பைக்கில் சாய்ந்தவாறு நின்றான். எந்தப் பள்ளி? என யோசித்தப்படியே.

செந்தாவிற்கு ஃபோன் செய்யலாம் என எண்ணியவன் பிறகு பயந்து அந்த எண்ணத்தை கைவிட்டான்.

'ம்ம்ம்! பேசாம ஃபோன் பண்ணி எந்தப் பள்ளினு கேட்டால் அங்கப் போயிடலாமே' என ஒருவாறு தைரியம் வர, செந்தா எண்ணிற்கு அழைத்தான்.

ஆனால் நம்பர் பிஸியாக இருந்தது. "ச்சே!" என ஃபோனை அணைத்தவன், சாலையை வெறித்துப் பார்த்தப்படி நின்றான்.

அங்கு வேகமாக ஓடிவந்த சந்திரா பேருந்து வருகிறதா என உற்றுப் பார்த்தப்படி, கண்ணீருடன் நின்றாள்.

முதலில் அவளைக் கவனிக்காத கௌது,
சந்திராவின் கண்ணீரைக் கண்டு, "அண்ணி! என்ன ஆச்சு?" எனக் கேட்டான்.

அவன் கேட்ட நொடியில், "கௌது! மனிஷ் பள்ளிக் கூடத்துல அடிப்பட்டுட்டானு ஃபோன் வந்துச்சு, என்ன ஆச்சுனு தெரியல. உங்க அண்ணனை காணும் எங்கப் போனாருனு தெரியல. பஸ்ஸை வேற காணும். என்ன பண்றதுனு தெரியல" என அழுது ஒப்பாரி வைத்தாள்.

"கவலைப்படாதீங்க அண்ணி! வாங்க நான் கூட்டிட்டுப் போறேன். எந்த ஸ்கூல்?" என பைக்கை ஸ்டார்ட் பண்ணினான்.

"நந்தவனம் ஸ்கூல் தான், ஆனா இப்ப ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போரதா செந்தா சொன்னா" எனக் கூறியப்படி பைக்கில் ஏறி அமர்ந்தார்.

"செந்தாவா?"

"ஆமா கௌது! செந்தா தான் ஃபோன் பண்ணினா, அவ ஏன் அங்கப் போனானு தெரியல"

'ஓ! அந்த ஸ்கூலுக்கு தான் போய் இருக்காளோ' என மனதில் எண்ணியவன், "செந்தா வேலைக்குப் போய் இருக்கா அண்ணி" என்றான் பொதுவாக.

அதை எல்லாம் காதில் வாங்கும் நிலையில் இல்லை சந்திரா, மருத்துவமனையை சென்றடைந்தனர்.

அறைக்குள் மகனுக்குச் சிகிச்சை நடந்துக் கொண்டு இருக்க, வெளியில் செந்தா, மற்றொரு ஆசிரியரும் அமர்ந்திருந்தார்கள்.

சந்திரா போன வேகத்தில்"செந்தா! என் புள்ளைக்கு என்ன ஆச்சு?" எனக் கதறினாள்.

"அக்கா! ஒன்னுமில்ல, அமைதியா இருங்க, டாக்டர் பாத்துட்டு இருக்கார்" எனச் சமாதானம் செய்தும், சந்திரா அழுகை நிற்கவில்லை.

"எப்படி செந்தா மனிஷ்க்கு அடிப்பட்டுச்சு" என கௌதுவின் குரலைக் கேட்டு தான் செந்தா அவனைத் திரும்பி பார்த்தாள்.

'இவர் எப்படி?' என யோசிக்கப் போனவள் அதை நிறுத்தி, "ப்ரண்ட்ஸோடு விளையாடி இருப்பான் போல, மாடிப்படியில் உருண்டு விழுந்துட்டான். ஆனாலும் பக்கத்தில் இருந்த பசங்க புடிச்சுட்டாங்க" என்றாள்.

"அய்யயோ! என்னடி சொல்ற? இப்ப எப்டி இருக்கான்? நல்லா இருக்கான்ல" எனத் தாயின் மனம் பதறியது.

"அக்கா! பயப்புடாதீங்க, நல்லா ஆகிடுவான்" என ஆறுதல் கூறினாள்.

சிறிது நேரத்தில் சந்திரா புருசன் வந்திட, டாக்டரும் ட்ரீட்மென்ட் கொடுத்து விட்டு வெளியில் வந்தார்.

"டாக்டர்! எம் புள்ள எப்டி இருக்கான்?" எனக் கதறிய சந்திராவை அடக்கினாள் செந்தா.

"சரியான நேரத்தில் வந்ததால் காப்பாத்தியாச்சுமா, தலையில் அடிப்பட்டதால் ரத்தம் நிறையப் போயிருக்கு. மத்தப்படி பையன் நல்லா இருக்கான், ஸ்கேன் பண்ணி பாத்தாச்சு பயப்புடாதீங்க" என நிம்மதியான பதிலைக் கூறினார்.

மாலை வேளை நெருங்கிட, மனிஷ் கண் முழித்துப் பேசினான்.

செந்தாவுடன் வந்த ஆசிரியர்"மிஸ் நீங்க பாத்துட்டு கிளம்பிடுங்க, நானும் கிளம்புறேன் டைம் ஆச்சு, என் பசங்களும் ஸ்கூலில் இருந்து வர நேரம்" என்றாள்.

"ம்ம்ம்! நீங்க போங்க மிஸ்" என அவரை வழியனுப்பிட, "நல்ல வேளை மிஸ், உங்களுக்கு தெரிஞ்ச பையன் நானல பிரச்சனையில்ல, இல்லனா இன்னேரம் ரகளையாகி இருக்கும், எனக்கு உள்ளுக்குள் பயம் எங்கடா பிரச்சனையாகிடுமோனு, தேங்க்ஸ் மிஸ்" எனக் கூறிச் சென்றாள் அப்பெண்.

சந்திராவும், அவளின் கணவரும் செந்தா, கௌதுவை கிளம்ப சொன்னார்கள்.

சந்திரா"நன்றி செந்தா, நீ தெரிஞ்சதால சட்டுனு ஹாஸ்பிடல் தூக்கிட்டு வந்துட்ட, உன் கூட வந்த மிஸ் சொன்னாங்க, நானே மனிஷ்க்கு பொறுப்புனு கூட்டிட்டு வந்து சரியான நேரத்தில் சேர்த்தட்டுனு, மறக்கவே மாட்டேன்" என்றாள்.

"விடுங்க அக்கா, மனிஷ்யும் எனக்குப் புள்ள மாதிரி தானே"

"கௌதுவும் நான் அழுதுட்டு ஸ்டாப்ல நின்னதும், எனக்கென்னனு போகாம கூட்டியாந்துச்சு, நன்றி தம்பி" என்றார் சந்திரா. செந்தாவிற்குப் புரிந்தது எப்படி கௌது வந்தான் என்று.

சிதம்பரமும் இருவருக்கும் நன்றிச் சொல்ல, செந்தா"அக்கா! பாப்பு வந்துடுவா, நான் கிளம்புறேன்." என்றாள்.

"சரி! நீங்கப் போங்க, நாங்க பாத்துட்டு அழைச்சுட்டு வரோம்" எனச் சந்திராவும் தலை அசைத்தாள்.

செந்தா வெளியே செல்ல, கௌதுவும் பின்னாடியே நடந்தான்.

செந்தா கௌதுவைக் கண்டுக்கொள்ளாமல் பஸ் நிறுத்தம் நோக்கி நடக்கப் போக, கௌது"செந்தா! வா பைக்கில் போகலாம்" என்றழைத்தான்.

"நான் பஸ்ஸில் போறேன், நீங்க கிளம்புங்க"

"நானும் வீட்டுக்கு தான் போறேன். இப்ப நீ பஸ்ஸில் போனா வீடு வர நேரமாகும். பாப்பு வந்து உன்னைய தேடுவா"

செந்தாவிற்கும் அது புரிய, பைக் அருகே சென்றாள்.

கௌது பைக்கை கிளப்பிட, செந்தா ஏறி அமர்ந்தாள்.

இருவருமே பேசிக்கொள்ளவில்லை.

பைபாஸ் அருகே சாலையைக் கடப்பதற்காக பைக்கை நிறுத்த, அங்கிருந்த பூ விற்கும் பெண்"தம்பி! பூ வாங்கிக்கோபா, மொட்டா இருக்கு நாளைக்கு வரை இருக்கும்" என்றார்.

கௌதுவிற்கு மனதில் வாங்குவோம் எனத் தோன்றிட"குடுங்கம்மா!" என்றான்.

"பாப்புவுக்கு ஸ்கூலில் வைக்கக் கூடாது, வேணாம்" என்றாள் செந்தா.

"பரவாயில்ல! வாங்கிக்கோ செந்தா நீ வச்சுட்டுப் போகலாமுல"

"எவ்வளவு தம்பி வேணும்?" என அப்பெண் கேட்க,

"ரெண்டு முழம் குடுங்க"

செந்தா அமைதியாக இருந்தாள்.

சில நாள்கள் முன், ஒரு நாள் பூ வாங்கி வாங்க பாப்பு கேட்டாள் எனக் கூறியப் போது, ஒரு முழம் பாப்புவுக்கு மட்டும் வாங்கி வந்திருந்தான். செந்தாவை கணக்கில் எடுக்கவில்லை. அன்று அவளின் கோபம் கண்ணீராக வந்தது.

இன்று தனக்காக வாங்கியதை எண்ணி மகிழ்ச்சிக்குப் பதில் கோபமே வந்தது, எதுக்கு இன்னைக்கு இந்த நாடகம்? என வெறுப்பாக இருந்தது.

இரவு உணவு தயாரிக்க சென்ற செந்தா சாமி அறையில் வாங்கி வந்த பூவை சாமிப் படத்திற்குப் போட்டுவிட்டு, சிறியத் துண்டினை பாப்பு தலையில் வைத்துவிட்டாள்.

பாட்டி அதைக் கவனித்தவாறு"நீயும் கொஞ்சம் வச்சுக்கோ செந்தா, கட்டுக் கழுத்தி வச்சுக்கனும்" என்றார்.

"ம்ம்ம்! மறந்துட்டு சாமிக்குப் போட்டேன் பாட்டி, இருக்கட்டும்" என மட்டுமே கூறினாள்.

"புருசன் ஞாபகம் இருந்தா தானே பூ வைக்க தோணும், அதான் வேலைக்கு போறா இனி என்னத்துக்கு அவன்" என இடையில் வார்த்தைகளைச் சொருகினார் செவாயி.

கௌது அதைக் கவனிக்க தவறவில்லை.
மனதில் கோபம் எட்டிப் பார்த்தது, பூவை வேண்டுமென்றே மறந்திருக்கிறாள் என்ற கோபம் அது.

இரவு அறைக்குள் சென்றவன், பாப்பு தூங்குவதற்காக காத்திருந்தான்.

செந்தாவும் வேலை முடித்து நுழைய, அந்த நேரத்தில் செந்தா ஃபோன் அடிக்க, எடுத்துப் பேசினாள்.

இரண்டாவது அக்கா தான் அழைத்தது.

"சொல்லுக்கா!"

இன்று வேலைக்குச் சென்றதைப் பற்றி விசாரித்தாள், அவளின் தெரிந்தவர் மூலம் தான் செந்தா சென்றது.

"ம்ம்ம்! சர்ட்பிகேட், அனுபவம் ஓகேனு சொன்னாங்க, ஒரு வாரம் கிளாஸ் எடுக்க சொல்லி இருக்காங்க, அப்புறம் பர்மென்ட் பண்ணுவாங்க போல"

"சரி! வைக்கிறேன்" என ஃபோனை வைத்தாள்.

கௌது காதிலும் விழுந்தது. செந்தா பாயை எடுத்து விரித்தாள்.

"செந்தா! வேலை இன்னும் முடிவு ஆகலையா?"

"இல்ல!"

"ஏன்?"

"ம்ம்ம்! இத்தனை வருசம் வீட்டுல சும்மா இருந்தேன்ல, அதான் என்னைய பரிசோதிச்சு தான் உறுதிப் பண்ணுவாங்க" என்றாள் கடுப்புடன்.

"ஓ! நீ தான் படிச்சு இருக்க, ஏற்கனவே வேலைப் பாத்து இருக்க, அப்புறம் என்ன? பணம் எதும் கொடுத்தா உறுதிப் படுத்துவாங்கனா சொல்லு, குடுத்துடுவோம்" எனக் கேட்டான், சில வேலைகளில் நடக்கும் கமிஷன் தொழில் போல.

"அவசியமில்ல, என் திறமைக்கு குடுத்தா போதும்" எனப் படுத்து, அவனின் மறுப்பக்கம் திரும்பினாள்.

அவளின் தலையைப் பார்த்தவனிற்கு நினைவு வரவும்"செந்தா! உனக்கு தானே பூ வாங்கி கொடுத்தேன், எதுக்கு நீ வச்சுகாம சாமிக்கே எல்லாத்தையும் போட்டுட்ட" எனச் சற்று கோபம் வரக் கேட்டான்.

"அதான் சொன்னேன்ல மறந்துட்டேனு"

"என்னையும் மறந்துட்டீயா செந்தா?" என்ற கோபம் ஆதங்கமாக மாறியதால் குரல் இறங்கிட கேட்டான்.

அவன் பக்கம் திரும்பியவள்"என்னைய பத்தி நினைக்கவே இல்லாத ஒருத்தரை நான் மட்டும் ஞாபகம் வச்சுட்டே இருக்கனுமுனு விதியா என்ன?" என்றாள் பட்டென்று.

கௌதுவிற்கு அதற்கு மேல் மனம் தாங்கவில்லை.

வேகமாக எழுந்துச் சென்று செந்தாவின் முன் அமர்ந்து, அவளின் கைளைப் பிடித்து"செந்தா! என்னைய மன்னிச்சுடு நான் ஏதோ புரியாம இருந்துட்டேன், இப்ப தான் உன்னோட அருமைப் புரியுது. என்னைய இப்டி வெறுத்து ஒதுக்காதடி, இனி உனக்குப் புடிச்ச மாதிரி இருக்கேன் என்னைய நம்பு" எனக் கெஞ்சினான்.

"கையை எடுங்க, எதுக்கு இப்டி நடிக்கிறீங்க?" என எழுந்து அமர்ந்தவள்,
"இப்ப என்ன ஊருக்குப் போறதுக்குள்ள உங்கப் பக்கத்துல படுக்கனும் அதானே, வாங்க" என எழப்போனவளின் கரத்தைப் பிடித்த வேகத்தில் அவன் மேல் சாய்ந்தாள்.

அவளை தன் மடியில் தாங்கிட, அருகருகே முகங்கள் நேருக்கு நேர் சந்தித்தது. அவனையே விழித்துப் பார்த்தாள்.

கௌது கண்களில் கோபம் பீறிட, "ஏய்! நான் என்ன பேசுறேன். நீ எப்டி புரிஞ்சிகிற, ஆமான்டி! தப்பு பண்ணிட்டேன். உன் மனசுப்படி புரிஞ்சு நடந்துகலனு மன்னிப்புக் கேட்டா அது நடிப்பா?

எட்டு வருசமா எவளையும் தொடலடி நீ சொல்ற மாதிரி எனக்கு படுக்குற உறவு மட்டும் தான் முக்கியமுனு நெனச்சு இருந்தா காசுக் குடுத்தா போதும். எப்ப பாரு அதுக்கு தான் கூப்புடுறேனு பேசுற" எனக் கோபத்தில் தொடங்கினாலும் விரக்தியில் முடித்தான்.

"நீங்க வந்தனைக்கே உறவு வச்சுக்கிட்டது எதுக்காக, ஆம்பள புள்ள வேணுமுனு தானே, அன்னைக்கு எனக்கு உடம்பு, மனசு ஒத்து இருக்கானு கேட்டீங்களா? உங்க அம்மா ஆசைப்படுறாங்க அவ்ளோ தானே யோசிச்சீங்க.

எட்டு வருசம் கழிச்சு உறவு வைக்கும் போது அதோட வலி எப்படி இருக்குனு நீங்க ஏன் யோசிக்கப் போறீங்க? அடுத்த நாளே பீரியட்ஸ் ஏன் வந்துச்சுனு தெரியுமா? மொத நாளோட மன அழுத்தம், உடல்நிலை மாற்றம்.

ஆனா உங்களுக்கு உங்கப் பிரச்சனை, நான் தனியா படுத்துட்டேனு. அதுக்குப் பேரு என்ன..?

சரி! எல்லாத்தையும் பொறுத்துகிட்டு உங்கக் கூட மெசின் மாதிரி படுத்தேன். அதுவும் உங்க ஆசைப்படியே கரு உருவானுச்சு. அதுல எனக்கு சந்தோஷம் வரல. ஆனா சத்தியமா கரு களைய எந்த முயற்சியும் நான் எடுக்கல.

என் கருப்பையில் உருவான என் புள்ள அது. அது சாகனுமுனு நினைச்சுக் கூட பாக்க மாட்டேன். ஆனா விதி அப்படி இருந்திருக்கு. அப்ப கூட என்னைய என்ன சொன்னீங்க? கரு களைஞ்சுட்டுனு சந்தோஷபடுறீயே நீ எல்லாம் பொம்பளையானு. அந்த நேரத்தில் நான் எவ்வளோ மனகஷ்டமும், உடல் கஷ்டமும் அடைஞ்சேனு தெரியுமா?

இப்ப நான் எதிர்த்துப் பேச ஆரம்பிச்சதும் உங்களுக்கு என் மேல பாசம் வந்துட்டு, அதை நான் நம்பனும். அப்படி தானே?" எனக் கேட்டுப் பத்ரகாளியாக பார்த்தாள்.

"செந்தா!"

"ஆமா! செந்தா தான். ஆனா பழைய செந்தா இல்ல, நீங்க என்ன சொன்னாலும் கேப்பேன். ஆனா காதல், கத்திரிக்காய், புருசனு எந்த இழவும் மனசுல இல்லை. நான் வெறும் மெசின். என்ன வேணாலும் பண்ணிகோங்க" என்றவள், அவனின் மடியில் இருந்து விலகாமல் தன் புடவை மறைத்திருந்த மார்பின் முந்தியை விலக்கிவிட்டு, அவன் கையை எடுத்து இடையைச் சுற்றிக் கொண்டு கணவன் மார்போடு சாய்ந்தவள்,

"நான் இவ்வளவு தானே உங்களுக்கு. இது தானே வேணும்" என நிமிர்ந்து அவளின் செய்கைளை அதிர்ச்சியாய் பார்த்தவனின் இதழில் இதழ் பதித்தாள்.

அவளின் திடீர் தாக்குதலில் சுருண்டவன், அவள் கண்களில் தெரிந்த சிவப்பு நிறத்தைக் கண்டு மிரண்டான்.

அத்தனைக் கோபம், வெறுப்பு, வலி என அனைத்தும் தெரிந்தது.

கௌது அவளை விலக்க முயற்சிக்க முடியவில்லை, தன் வலுவைக் கொடுத்து அவளை விலக்கியவன், விலக்கிய நொடியில் தன் மார்போடு அணைத்துக் கொணடான்.

"ஏன்டி! இப்டி எல்லாம் செய்ற செந்தா, என்னைய மன்னிச்சுடு. உண்மையா தான் கேக்குறேன்." என்றவன், அவளின் உடல் சீற்றம் குறைய இறுக்கி அணைத்துக் கொண்டே இருந்தான்.

ஏன் இந்தக் கோபம்? என்ற கேள்வியே தேவையில்லை இருவருக்கும், அவளின் அத்தனை ஆதங்கமும், வலிகளும் அவளை இயல்பு நிலையில் இருந்து மாற்றியிருந்தது.

அது புரிந்தமையால் கௌது அவளை மேலும் அணைத்தவாறு மனதில் விம்பினான்.

செந்தா மனம் அமைதிநிலையை நோக்கிச் சென்றதை கௌதுவால் உணர முடிந்தது.

அவளை மெல்ல விலக்கி எழுந்தவன்,
"செந்தா! எழுந்திரி" என்றான்.

அவள் இருந்த கோலத்தில் இருந்து மாறாமல் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

அவளின் கையைப் பிடித்து இழுத்து எழுப்பியவன், புடவையைச் சரிசெய்துவிட்டு கட்டிலுக்கு அழைத்துச் சென்றான்.

"படு!" என்க, அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு முகத்தைச் சுளித்தவாறு சென்றுப் படுத்தாள்.

"நகரு! பாப்பு பக்கத்தில படு"

பொம்மை போல நகர்ந்தவள் அருகே படுத்தவன், "தூங்கு செந்தா! நான் நடிக்கலைனு உனக்குப் புரியும் போது நம்ம வாழ்க்கைத் தொடங்கட்டும்" என அவள் இடையை அணைத்தவாறு கண்களை மூடினான்.

செந்தா அசையாமல் படுத்திருந்தாள். மனம் ஏனோ அமைதியை எட்ட ஆசைக் கொண்டது, ஆனால் அவளின் மூளை அதை எதிர்க்க, அப்படியே கண்களை மூடிக் கொண்டாள்.

இருவரின் மனங்களும் வெவ்வேறு எண்ணங்களில் சென்றாலும், அடையும் இடம் ஒன்று தான். கணவன், மனைவி பந்தமான உறவில் மட்டுமே அதன் முடிவு.

கொலுசொலி ஆசைகள்....

admin

Administrator
Staff member

ஹீரோக்கு பொங்கல் வச்சேன் தான் பட் ஹீரோ பிழிய பிழிய சோகமா இருக்கப்போ மனசு வலிக்குது ரைட்டரே
 
NNK 89

Moderator
ஹீரோக்கு பொங்கல் வச்சேன் தான் பட் ஹீரோ பிழிய பிழிய சோகமா இருக்கப்போ மனசு வலிக்குது ரைட்டரே
Parava ila vainga.... ipo elam pongal than famous 😃😃😃😃
 
Top