எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மரம் தூவும் மழை 1

@38

Moderator
IMtm-1

இன்னும் எவ்ளோ தூரம் கார்த்தி எனக்கேட்டபடி கண் திறந்தாள் கீர்த்தனா.

வாகனத்தை அதிக வேகம் இல்லாமல் ஓட்டிக்கொண்டிருந்தவன் நேரத்தை பார்த்தபடி இன்னும் ரெண்டு மணிநேரத்துக்கு மேல ஆகும் கீத்து தூக்கம் வந்தா தூங்கு எனச் சொல்லவும் சலிப்பாக நேரத்தை பார்த்தவள் நாலு தான் ஆச்சா என்றபடி கார்க்கண்ணாடி வழியே ரோட்டை வேடிக்கை பார்த்தாள்.

காரை கவனமாக ஓட்டியபடியே அருகில் இருந்தவளை கடைக்கண்ணால் பார்த்து என்ன ஆச்சி இவ்ளோ சலிப்பு.

நீ எவ்ளோ நேரம் வண்டி ஓட்டுவ எங்காவது நிறுத்திட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு நல்லா விடிஞ்ச பிறகு போகலாம்.

ம்ம் என சந்தேகமாக அவளைப்பார்த்தவன் என்ன விஷயம் நீ இவ்ளோ நல்லவ இல்லையே என்றவன் சட்டென்று நினைவு வந்தவனாக ம்ம்.. என்பதோடு நிறுத்திக் கொண்டான்.

கோபமாக அவனை முறைத்தவள் உன்ன நம்பி கூட வந்தேன் பாரு எனக்கு இது தேவை தான் என்ற படி முகத்தை திருப்பிக் கொண்டாள்.

சற்று நேரத்தில் ரோட்டோரமாக இருந்த பெரியதொரு பேக்கரியை மிக மெதுவாக கடக்கவும் ஆர்வத்துடன் அவனைப்பார்த்தாள்.

வெளிவந்த புன்னகையை இதழ்களுக்குள் அடக்கியபடி பேக்கரியை கடக்கவும் அவளின் முகம் இறுக ஆரம்பித்தது.

இது ஆவறது இல்ல என முணுமுணுத்தபடி கண்களை இறுக்க மூடி சீட்டில் நன்றாக சாய்ந்து அமர்ந்தாள்.

அவளின் கோபத்தை ரசித்தவன் காரை மிக மெதுவாக இயக்கி பேக்கரியின் அருகில் நிறுத்தியபடி இறங்கினான்.

என்னவோ பண்ணிக்கோ என்ற தோரணையில் கண்களை திறக்காமல் அமர்ந்திருந்தவளை கண்டு சிரித்தபடியே கடைக்குள் சென்றான்.

சிறிது நேரத்தில் வெளியே வந்தவன் அவளின் பக்கம் குனிந்து காதருகே உஃப்..என மெல்லிய குரலில் கத்தினான்.

திடுக்கிட்டு விழித்தவள் உனக்கு இப்போ என்ன பிரச்சனை என எரிச்சலுடன் கேட்டாள்.

டீ சாப்பிடனும் போல இருக்கு வா

எனக்கெதும் வேணாம்.

ஆனா எனக்கு வேணுமே.

அப்போ போ..குடி ஏன் என்னை இம்சைப்படுத்தற

பிகாஸ் யூ ஆர் மை பெட்டர் ஹாஃப்.

இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்ற படி காருக்குள்ளேயே அமர்ந்திருந்தவளை கதவை திறந்து கைப்பிடித்து வெளியே நிறுத்தினவன்.


இவ்ளோ லாங் டிராவல் சின்ன சின்ன சண்டை கேலி இல்லாம எப்படி சொல்லு ..வா..என குரலில் இருந்த கெஞ்சல் அவளை நகர வைத்தது.

கண்களால் எதையோ தேட..வாஷ் ரூம் உள்ள இருக்கு..

நிமிடத்தில் பல்வேறு உணவுகளை ஒருசேர முகத்தில் கொண்டு வந்தவள் எதுவும் பேசாமல் நேராக உள்ளே சென்றாள்.

அவள் பின்னே சென்றுவள் அதோ அந்த பக்கம் என காமிக்கவும் அங்கே சில ஆண்களை பார்த்து தயங்கி நிற்க நீ முன்னாடி போ நான் பின்னாடி வரேன் என்றபடி அவளை பின் தொடர்ந்தான்.

அவள் வெளிவரும் வரை காத்திருந்தவன் காலியாக இருந்த டேபிளில் அமர வைத்துவிட்டு சாப்பிட இலகுவான பதார்த்தங்களை வாங்கிவந்து கொடுத்தான்.

ஸ்ட்ராங்கா காஃபி

சொல்லிருக்கேன்..என்றதுமே மௌனமானாள்.

நமக்கு கல்யாணம் ஆகி எவ்வளவு நாளாச்சு.?

ஏன் நீ மறந்துட்டியா .?

ம்ப்ச் சொல்லு.

ஒரு வருஷம் நாலு மாசம்.


அதாவது ஓன்னரை வருஷம் ஆகப்போகுது இல்லையா.

ம்ம்..

ஆனா இந்த நிமிஷம் வரைக்கும் நீயும் நானும் எலியும் பூனையும் மாதிரி தான் சண்டை போட்டுக்கிட்டு இருக்கோம் அவ்வளவு ஏன் உனக்கு ரெஸ்ட் ரூம் போகனும்னு ஃபீல் ஆகுது அதை கூட என்கிட்ட சொல்ல மாட்டேங்கற.. ரெஸ்ட் எடு,டீ சாப்பிடனும்னு ஏதேதோ காரணம் சொல்லற.ம்ப்சி என்ன ரொம்ப ஹாட் பண்ற கீத்து.


நான் வாய் திறந்து சொல்லாமலே எல்லாத்தையும் புரிஞ்சுக்கற அப்பறம் எதுக்காக நான் சொல்லணும் நீதான் என்கிட்ட தேவையே இல்லாம கோபப்பட்டு ரொம்ப டென்ஷன் கொடுக்கிற.

கீத்து நாம கணவன் மனைவி நியாபகம் இருக்குல்ல.

இப்போ என்ன பிரச்சனை கார்த்தி? நான் இந்த காஃபி குடிக்கட்டுமா இல்ல எந்திரிச்சு போகட்டுமா.

சரி கத்தாதே காபியை குடி.

ம்கூம் என்றபடி டிஸ்யூவை எடுத்து மூக்கை துடைக்க

இப்போ எதுக்கு அழற.

உன் கூட அழ மட்டும் தான் முடியும்.

அதற்கு மேல் அவன் வாய் திறக்கவில்லை பண்த்தை கவுண்டரில் செலுத்தி விட்டு காருக்குள் சென்றான்.

சற்று நேரத்திற்கெல்லாம் கோபமாக வந்தவள். இப்போ எதுக்கு என்னை தனியா விட்டுட்டு வந்து..?
நீ வாங்கி கொடுக்கிற காஃபியை அமிர்தம்னு நினைச்சி குடிக்கனுமா..பிச்சை போடறியா நீ என கத்தி தீர்த்தாள்.


கையெடுத்து கும்பிட்டவன் ப்ளீஸ் ஊருக்கு போற வரைக்கும் தயவு செஞ்சு பேசாம வா நீ குடுக்குற டென்ஷன்ல காரை கொண்டு போய் எங்கேயாவது இடிச்சிட போறேன் என்று சொல்லவும் வாய் மூடி கொண்டாள்.


இவருக்குமே இரு வேறு மன நிலைகள் காலம் அவர்களை ஒன்று சேர்த்து இப்பொழுது சொந்த ஊருக்கு பயணப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ம்ப்ச் என்று சலித்தவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

அவளைப்பார்த்து பெருமூச்சு விட்டவன் ரோட்டை பார்த்து வாகனத்தை ஒட்டத்தொடங்கினான்.

இப்பொழுது அவளிடம் என்ன பேசினாலும் வாக்குவாதத்தில் ஈடுபடுவாள்.. அழுது தீர்ப்பாள் அவளை குறை சொல்லி ஒன்றும் ஆகாது தவறெல்லாம் அவனிடத்தில் தான் அவள் எதிர்பார்த்து வந்த வாழ்க்கை வேறு இவன் கொடுத்த வாழ்க்கை வேறு எதிர்பார்ப்புகள் பொய்யாகும் பொழுது சண்டையும் அழகையும் சகஜம் தானே அதைத்தான் அவள் செய்து கொண்டிருக்கிறாள் காலத்தின் கட்டாயம் இவனை விட்டுச் செல்லவும் முடியவில்லை நெருங்கவும் முடியவில்லை.


கீத்து இந்தா வாட்டர் பாட்டில் பேஸ் வாஷ் பண்ணிக்கோ என காரை நிறுத்தி விட்டு அவள் பக்க கதவை திறந்து விட்டான்.

கார் சீட்டில் தலை சாய்ந்திருந்தவள் அவனைப் பார்த்துவிட்டு மீண்டும் கண்மூடிக் கொண்டாள்.

கீத்து வம்பு பண்ணாத ஊர் வரப்போகுது இனி ரோட்ல போறவன் வர்றவன் எல்லாம் தெரிஞ்சவனாக இருப்பான் உன்னோட அழுகை மூஞ்சிய பாத்தா என்னை தான் தப்பா நினைப்பான்.

அப்புறம் இன்னொரு விஷயத்தை நல்லா கேட்டுக்கோ ஊர்ல கொஞ்சம் நல்லவிதமா நடந்துக்க பாரு முக்கியமா என் அப்பா முன்னாடி மரியாதையா நடந்துக்கோ என்று சொல்லி முடிக்கும் முன்னே அவனது கையில் இருந்த வாட்டர் பாட்டிலை பிடுங்கி ரோட்டில் வீசியவள்.

உனக்கே நான் மரியாதை தரமாட்டேன் இதுல உன் அப்பாக்கு வேற தனியா மரியாதை குடுக்கணுமா.போ அந்த பக்கம்.

வாய்ஸ் ரைஸ் பண்ணாத இது ரோடு.தெரிஞ்சவன் பாத்தா தப்பா போயிடும்.

இங்க பாரு தேவையில்லாம காரை நிறுத்தி என்கிட்ட வம்ப் பண்ணிட்டு இருக்கிறது நீதான் ஒழுங்கா இப்போ கார் எடுக்க போறியா இல்ல நடந்து போகட்டுமா என்றவள் கார் கதவை பிடித்துக் கொண்டு நின்றவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டபடி ரோட்டில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.


சற்றென கோபம் வரப்பெற்றவன் அவளின் பின்னாலே சென்று உன்கிட்ட நல்லவிதமா பேசினா ஏறவே ஏறாது என அவளின் கையை பிடித்து இழுத்து காருக்குள் தள்ளிவிட்டவன் வேகமாக காரை எடுத்தான்.

உனக்கு இதுதான் ஃபர்ஸ்ட் அன் லாஸ்ட் இனி என் கையை பிடிக்கிற வேலையை வச்சுக்காத என்று அதற்கும் கத்தினாள்.

தலையில் அடித்துக்கொண்டவன் ஏய் லூசாடி நீ மனுஷனை ஒரு நிமிஷம் கூட நிம்மதியா இருக்க விடவே மாட்டியா.. உங்கப்பன் சனியன் உன்னை என் தலைல கட்டி விட்டுட்டு அவன் நிம்மதியா இருக்கான். நான் தான் தினம் தினம் உன்கிட்ட சிக்கிக்கிட்டு சீரழிஞ்சிட்டு இருக்கேன் மனுஷனை சாகவும் விடாம வாழவும் விடாம ஏண்டி இப்படி டார்ச்சர் பண்ணற..


இங்க பாரு ஊர்ல ஒரு வாரம் தங்கி இருக்க போறோம் அதுக்கப்புறமா உன்னை சென்னை கொண்டு போய் விடுற வரைக்கும் வாயை திறந்தன்னு வச்சுக்கோ உன் அப்பனுக்கு போன் பண்ணி உன் பொண்ண வந்து கூட்டிட்டு போய்யான்னு சொல்லிடுவேன்.


அப்புறம் அந்தாளு நெஞ்ச புடிச்சுட்டு செத்துப் போயிட்டான்னு அதுக்கும் என்ன நீ ப்ளேம் பண்ணக்கூடாது ஞாபகத்துல வச்சுக்கோ.


உன் அப்பனோட உயிர் வேண்டுமா வேண்டாமா என்கிறது உன் கையில தான் இருக்கு அந்த கிழவனுக்காக தான் பாவம் பார்த்து உன்ன விட்டு வச்சிருக்கேன் இல்லனா எண்ணிக்கோ உன்னை அடிச்சு விரட்டி விட்டிருப்பேன் புரியுதா என்று கண்களை உருட்டி மிரட்டவும் சற்று பயந்தவள் சரி என தலையாட்டினாள்.

ஆம் கீர்த்தனாவின் ஒரே பலவீனம் அவளது தந்தை தான் அவளது பலமும் அவர் தான் பலகீனமும் தந்தை தான் அவருக்காக தான் இந்த திருமணம்.


ஒன்றரை ஆண்டுகால போராட்டமும். சேர்ந்து வாழ்கிறார்களா வாழவில்லையா என்பது இங்கு பிரச்சனை இல்லை சேர்ந்து இருக்கிறார்கள் சேர்ந்து பயணிக்கிறார்கள் அதுதான் அவர்களின் சாதனை.

இந்தா முகத்தை கழுவிக்கோ என்றபடி மீண்டும் ஒரு வாட்டர் பாட்டிலை எடுத்து அவளது கையில் திணிக்க கையில் வாங்கியவள் அவனையே பார்த்தாள்.

என்ன என்று வல்லென்று விழுகவும்.


காரை ஓரமா நிறுத்தினா தான முகம் கழுக முடியும் குரல் கமர கேட்கவும் .


அவளின் திடீர் பணிவில் வாய்விட்டு சிரித்தவன் ஓரமாக காரை நிறுத்திவிட்டு சட்டு தள்ளி சென்றான்.


முகத்தை கழுவி டிஸ்யூவால் துடைத்துவிட்டு நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டை ஒட்ட வைத்தவள் அழுத்த மாதிரி இருக்கேனா.


அவள் கேட்ட தோரணையில் மீண்டும் வாய்விட்டு சிரித்தவன் இல்ல என்னை அழவைத்த மாதிரி இருக்கு என்று புன்னகையுடன் கூறவும் யூ . இடியட் என் காலி வாட்டர் பாட்டிலை தூக்கி அவன் மீது வீசினாள்.

என் பொண்டாட்டி கோபத்துல கூட அழகு தான் எனக் கூறியபடியே காரை ஸ்டார்ட் செய்தான்.

ஏன் எப்போ பார்த்தாலும் என்னை திட்டுற அழ வச்சிகிட்டே இருக்க என்று மீண்டும் ஆரம்பிக்க .

ஊஃப்ப்ப் என காற்றை வாய்வழியாக வெளியேற்றியவன் இன்னைக்கு இது போதுமே ப்ளீஸ் ம்ம்.என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கெஞ்சவும் உன்கிட்ட வந்து கேட்டேன் பாரு என்னை சொல்லணும் என மீண்டும் முகத்தை திருப்பிக்கொண்டாள் அவனது சண்டைக்கார மனைவி.


வீடு வந்திடுச்சி கீத்து நான் சொன்னது நியாபகம் இருக்கட்டும் என்ற படி காரை ஓரம் கட்டினான்.

விசேஷ வீடு என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது.. கார்த்தியின் தங்கை வளைகாப்பு அதற்காக தான் சென்னையில் இருந்து வந்தது.


திருமணம் செய்து கொடுத்தது பக்கத்து ஊரில் ஆனால் அவள் வாழ்விடம் சென்னை.

சொந்த ஊரில் மருமகளுக்கு வளைகாப்பு வைத்தால் சொந்த பந்தம் அத்தனை பேரும் வருவார்கள் என சம்பந்தி கேட்டுக்கொண்டதால் போன வாரமே தங்கை அவளின் புகுந்த வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

கார்த்தியின் குடும்பம் ஊரில் செல்வாக்கானது.பெயர் பெற்ற குடும்பம் ஊரில் நல்லது கெட்டது எது நடந்தாலும் அவர் தான் முன் நிற்பது.

பிரச்சனை என சென்றால் அதை தீர்த்து வைப்பதும் அவரே.

பண உதவி பொருள் உதவி எதுவாக இருந்தாலும் தயங்காமல் எந்த நேரத்திலும் அவர்கள் வீட்டு கதவை தட்டலாம் இன்முகத்தோடு அள்ளிக் கொடுப்பார்.

அப்படிப்பட்ட மனிதரைத்தான் வாட்டி வதைக்க சென்னையில் இருந்து கீர்த்தனா வந்திருக்கிறாள்

முகத்தை தூக்கி வைத்தபடி கீழ் இறங்கியவள் வேகமாக வீட்டிற்குள் செல்ல போனாள்.

அழுத்தமாக அவளின் கை பிடித்து தடுத்தவன் பற்களை கடித்தவாறு இந்த அதிகப்பிரசங்கித்தனம் தான் வேண்டான்னு உன்கிட்ட வரும்போது சொன்னது.

கோபமாக கையை விடு. வீட்டுக்குள்ளே போகாம ரோட்டிலேயே நிக்கறதா.

கொஞ்சம் அங்க பாரு என்று ஜாடை செய்யவும்.

அவளும் திரும்பினாள்.

கார்த்தியின் தாயின் முகம் நிறைய புன்னகையோடு ஆரத்தி தட்டை தூக்கி வர பின்னாலே பளீச் சென்று வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீ
ரமாக அவனது தந்தை நடந்து வந்து கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்ததும் அவளின் கோபம் விலகிச் செல்ல மரியாதை தானாகவே மனதில் வந்து ஒட்டிக்கொண்டது.
 
Top