எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நெஞ்சோடு நிறைந்த நினைவே - கதை திரி

Status
Not open for further replies.

Asha Evander

Moderator
ஹாய் டியரிஸ் ❤️

ரொம்ப இடைவெளி எடுக்க வேண்டாமென "விழி வழியே சரணடைந்தேன்" பார்ட் - 2 ஓட வந்துட்டேன்..

அந்த கதையில் இருந்த சித்தார்த் - கனிஷ்கா தான் இங்கே பிரதானம் 🤩
அதே சித் அண்ட் கியூட்டி காதலுடன் கொஞ்சம் அடாவடி சேர்த்து ஒரு பயணம் 😌

சித்து ஆராய்ச்சியாளன் என்பதால் அது சம்மந்தமாகவும் அதே நேரம் கொஞ்சம் நிறைய வில்லன்கள் கூடவும் பயணிப்போம்.. 🥳
கொஞ்சம் அழுத்தம் நிறைந்த கதை..

வரும் ஞாயிறு முதல் அத்தியாயம் போடுறேன்.. 🤩

என் உடல்நிலை காரணமாக வாரம் ஒரு அப்டேட் தான் டியரிஸ் ❤️

எல்லா ஞாயிறும் பதிவு பண்ணிடுவேன்..

சரி சரி எவ்ளோ சொன்ன நான் கதை பெயர் சொல்லலையே 😌

#நெஞ்சோடு_நிறைந்த_நினைவே

இப்போ ஒரு டீஸர் 🤩

ரம்மியமான இரவு பொழுதில் பால்கனியில் தன் மகளை மடியில் வைத்து கொஞ்சி கொண்டிருந்தவன் "சித்து.. இங்க வாயேன்" என்ற மனைவியின் அழைப்பில் ஏழு மாத மகள் வைஷ்ணவியை தூக்கி கொண்டு தங்கள் அறைக்கு சென்றான். அறையில் அவளை காணாமல் "கனி.." என்று அழைத்து கொண்டே வெளியே வர "சித்து இங்க மாட்டிக்கிட்டேன்" என்ற குரல் அவனின் கண்ணாடி அறையில் இருந்து வந்தது.

"இன்னுமா டோர் ஓபன் பண்ண தெரியல? சைட்ல இருக்குற செகண்ட் பட்டனை கிளிக் பண்ணு.. ஓபன் ஆகும்" என்று சிரித்து கொண்டே கூற அவசரமாக அவன் சொன்ன பொத்தானை அழுத்தினாள். கதவு திறந்து விட அவனிடம் ஓடி வந்தவள் "இப்போ அந்த கதவு தேவை தானா?" என்று கன்னத்தில் கிள்ளி விட்டு மகளை தூக்கி கொண்டு சென்றாள். அவளின் ஸ்பரிசத்தில் தன்னை தொலைத்தவன் "கனி இன்னைக்கு நைட் ப்ளீஸ்.." என்று கேட்க அந்த பக்கம் சத்தம் வராமல் போகவும் சென்று பார்த்தவன் மௌனமாக சிரித்து கொண்டான்.

-----

"சார் நாங்க முடிந்த அளவுக்கு முயற்சி செஞ்சிட்டோம்.. பட் அவளை காப்பாற்றுவது கஷ்டம்" என்று மருத்துவர் கூற பெண்ணை பெற்றவர்கள் அதிர்ந்து நின்றனர்.

"சார் ப்ரோசீஜர்ல அவங்க கையெழுத்து வேணும்" என்று ஒரு பைலை நீட்ட வாங்கி படித்த வக்கீல் "அவனுக்கு வேணும்னா தண்டனை வாங்கி கொடுக்கலாம்.. பட் டீனா உயிரை இனிமேல் காப்பாற்ற முடியாது.. பின்னங்கழுத்தில் பயங்கரமா தாக்க பட்டிருக்கா.. முகத்தில் பல கீறல்கள்.. மோசமா தாக்க பட்டிருக்குறதா டாக்டர் சொல்றாங்க.. உயிருடன் வாழ முடியாத ஒருத்தியோட உடல் பாகங்கள் பலருக்கும் பயன்படலாம் இல்லையா? ப்ளீஸ் சைன்" என்று கூற மகளின் நிலையை நினைத்து கண்ணீர் விட்ட அவர்கள் கையெழுத்திட்டு கொடுத்தனர்.

-----

"ப்ளீஸ் லீவ் மி.. ப்ளீஸ்.." அவளின் கெஞ்சல் அந்த கொடூரர் யாரையும் அசைக்கவில்லை.

"ஜேக்.. என்ன பண்ணிட்டு இருக்க? நான்கு பேர் இருக்கோம்.. நீ முடிச்சா தான் நாங்க போக முடியும்" என்று அதில் நடுத்தரமான ஒருவன் சொல்ல "வெயிட் மேன்.. அவளை முழுசா செக் பண்ணிட்டு தான் தொடங்க முடியும்.. எங்கேயாச்சும் கேமரா இருந்தா நாம செத்தோம்" என்று பரிசோதிக்க அவனின் கைகள் அவளிடம் தாராளமாக விளையாட "ப்ளீஸ்.." என்று கெஞ்சினாள் அந்த பெண்.

"நோ வே மை டியர்.. எங்களுக்கு நீ கண்டிப்பா வேணும்.." என்று அவளை கொள்ளையிட அவள் தடுக்க நினைத்த முயற்சிகள் அனைத்தும் பாழாகி போனது. சிறுவயது பெண் என்பதால் நான்கு பேரை சமாளிக்க முடியவில்லை.

"வழக்கமா போடுற இடத்தில் போட்டுடுங்க" என்ற ஒருத்தன் வெளியேறி விட அவளின் சடலம் ஒரு நதிக்கரையின் ஓரத்தில் தூக்கி எறியப்பட்டது.

---

"கனி இப்போ நீ எங்கேயும் போக வேண்டாம்.. பேபிக்கு தேவையான எல்லாம் நானே வாங்கிட்டு வரேன்.. உன் ஹெல்த் கண்டிஷன் தெரியும் தானே" என்ற சித்தார்த் ஷாப்பிங் செல்ல வெளியேறும் சமயம் அவனின் செல்போன் சிணுங்கியது.

"சொல்லு வில்லியம்?"

"...."

"வாட்?" என்று அதிர்ந்தவன் பின் "வில்லியம் நான் போலீஸ் கிடையாது.. ஆனா உனக்கு நான் ஹெல்ப் பண்ண முடியும்.. உனக்கு தேவையான தகவல் எல்லாம் நான் சேகரிச்சு தரேன்.. அவங்க கொலைக்கு நியாயம் கிடைச்சே ஆகணும்" என்று கூற "யாருக்கு நியாயம் கிடைக்கணும் சித்து?" என்று வெளியே வந்தாள் கனி.

"ஒன்னும் இல்லடா.. நீ வெளில வராத.. நான் சீக்கிரம் வந்துடுறேன்" என்றவன் தன் நண்பன் ராபார்ட்க்கு குறுஞ்செய்தி தட்டி விட்டே சென்றான்.

டிசம்பர் 25 பார்க்கலாம் டியர்ஸ் ❤️
 

Asha Evander

Moderator
அத்தியாயம் 1

"விரலுக்கும் இதழுக்கும் பிறந்திடும் இசையென
இருவரும் இருப்போம் இடம் பொருள் மறப்போம்
உனக்கென எனக்கென முதலெது முடிவெது
எதுவரை இருப்போம் அதுவரை பிறப்போம்
யார் நீ யார் நான்
வான் நீ மீன் நான்
உலகின் கதவை தாழ்திறப்போம் உயிரே
மழலை மொழியாய் மகிழ்ந்திருப்போம்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்"

இசைதட்டில் பாடல் ஒலித்து கொண்டிருக்க தன் மேடிட்ட வயிற்றை இடது கையால் தாங்கி கொண்டு வலது கையில் தேநீர் தம்ளருடன் அந்த குளிர் கால நிலையை ரசித்து கொண்டிருந்தாள் கனிஷ்கா. இன்று வரை அவள் வாழ்வில் நடந்த அனைத்தையும் கணவன் வாய் வழியாக மட்டுமே கேட்டிருந்தவளுக்கு இந்த நொடி சித்தார்த் தான் அவள் மனமெங்கும் நிறைந்திருந்தான். என்ன தான் பெரிய ஆராய்ச்சியாளனாக இருந்தாலும் அவளின் முன் அவன் சிறு குழந்தையை போலவே இருப்பான். அவளை தாலாட்டுவதில் தாய்மையில் தொடங்கி இரவு அவளின் மடியில் குழந்தையாக மாறி விடுவான். அவனை நினைத்த மாத்திரத்தில் உதட்டில் புன்னகை பூத்து விட அந்த காலநிலையை ரசித்து தேநீரை அருந்தினாள்.

அவளின் நினைவுகள் சித்தார்த்தை நோக்கி இருக்க அவனோ தன் நண்பன் வில்லியமிடம் இன்று காணாமல் போன ஒரு பெண்ணை பற்றி பேசி கொண்டிருந்தான்.

"வில்லியம் உனக்கு நல்லா தெரியுமா அந்த பெண் கடத்த பட்டிருக்கிறாளா? இல்ல வெளில அவளே போயிருக்காளா?"

"நிச்சயமாக அந்த பெண் கடத்த பட்டிருப்பது தான் உண்மை சித்.. அவளோட ப்ரெண்டை பார்க்க போவதாக போனவள் கடைசி வரைக்கும் அவ வீட்டுக்கு போகல.. அவளோட கார் தனியா நிற்குது" என்று வில்லியம் சொல்ல சித்தார்த் யோசித்தான்.

"இதுல நான் என்ன ஹெல்ப் பண்ணுறது வில்லியம்? நான் காவல் துறையை சேர்ந்தவன் இல்ல.."

"நீ நேரடியா ஹெல்ப் பண்ண வேண்டாம் சித்.. உன் ரோபோ வச்சு உதவி பண்ணலாமே.."

"யோசிச்சு சொல்லுறேன் மேன்.. அந்த பெண்ணை கண்டு பிடிக்க உங்களால் ஆன முயற்சியை செய்யுங்க" என்றவன் வில்லியத்தின் அலுவலகத்தை விட்டு வெளியே வரவும் கனிஷ்கா அவனுக்கு அழைத்தாள்.

"சொல்லுடா கியூட்டி?"

"இதுக்கு மட்டும் குறைச்சல் இல்ல.. காலையில் நான் எழும்ப முன்னாடியே எங்கடா போயிட்ட?" என்று அந்த பக்கம் கோப பட சித்தார்த் சிரித்தான்.

"வர வர மரியாதை தேயுதுமா.. இன்னும் இருபது நிமிஷத்தில் வீட்டில் இருப்பேன்.." என்றவன் தன் காரை கிளப்ப அந்நேரம் ஒரு உருவம் தன் ஆளுக்கு கை காட்ட சித்தார்த்தை பின் தொடர்ந்தான் அவன்.

சித்தார்த் வீடு வரவும் அவனுக்காக கதவின் அருகில் நின்று வரவேற்றாள் கனிஷ்கா. அவளின் செயலில் அவனுக்கு கண்கள் கசிந்தது என்னவோ உண்மை. என்றோ ஒருநாள் பேசி கொண்டிருக்கும் போது தன் தாய்பாச ஏக்கத்தை பற்றி கூற இன்றும் அவனை வாசலுக்கு வந்து வரவேற்பது அவள் தான்.

"இன்னும் இந்த பழக்கத்தை நீ விடலயா? என் அம்மா வாசலில் எனக்காக காத்திருந்து சமைச்சு ஊட்டி விடணும்னு ஏதோ சோகத்துல சொல்லிட்டேன்.. அதுக்காக இந்த நிலைமையிலும் உன்னை கஷ்டப்படுத்திட்டு வேணுமாடா? நீ ரெஸ்ட் எடு.. நான் பிரஷ் ஆகிட்டு வரேன்" என்று கூற "எங்க போயிட்டு வர சித்து?" என்ற அவளின் கேள்வியில் ஜெர்க்கானான்.

"வில்லியத்தை பார்க்க போனேன் டா.. அவனுக்கு சின்ன ஹெல்ப்.." என்று தடுமாற அவனை சந்தேகமாக பார்த்தவள் என்ன நினைத்தாளோ "சரி குளிச்சிட்டு சாப்பிட வா.." என்று நகர்ந்தாள்.

அவள் சென்றதும் பெருமூச்சை வெளியேற்றியவனுக்கு தான் செய்து கொடுத்த சத்தியம் நினைவுக்கு வந்தது. அவர்கள் இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்த இரண்டாம் நாள் ராபர்ட் அவனை ஒரு வேலையாக அழைத்திருந்தான். கனிஷ்கா தூங்கி கொண்டிருக்கவும் வெளியே சென்றவன் வீட்டிற்குள் நுழையும் போது அவனை உக்கிர பார்வை பார்த்து கொண்டு நின்றாள் கனிஷ்கா.

"என்னடா ஆச்சு?" என்று சித்து அருகில் வர "எங்க போன நீ? மறுபடியும் எதுவும் சாகசம் பண்ண போறேன்னு என்னை தொலைச்சிடுவியா?" என்று அவனின் சட்டையை பிடிக்க "இல்லமா.." என்று அவன் சொல்ல வந்த எதையும் அவள் புரிந்து கொள்ளவில்லை.

அவளின் நினைவில் மொத்தமும் அன்றைய வில்சனுடனான விபத்தே இருக்க அது சித்து அவளை விட்டு சென்றதால் மட்டுமே என்று நம்பினாள். இன்றளவும் அந்த பயம் அவளை விட்டு போகவில்லை. அவனை நேரடியாக பார்த்தவள் தன் வலது கரத்தால் அவனின் கரத்தை எடுத்து தன் தலை மேல் வைக்க அவனுக்கு தான் அதிர்ச்சியாகி போனது.

"கனி என்ன இது?" அவன் பதற "என் மேல் சத்தியமா இனிமேல் ஆபத்தான எந்த வேலைக்கும் நீ போக கூடாது.. இல்லன்னா நான் இந்தியாவுக்கே போறேன்" என்றவள் பேச்சை அவன் மீறினால் நல்ல கணவனாக முடியாதே. மனைவியின் பயத்தை போக்கி அவளுடன் வாழவே அவனும் விரும்பினான். ஆனால் இன்று அதற்கும் ஆப்பு வைக்க வில்லியம் வருவான் என்று கனவிலும் அவன் நினைக்கவில்லை.

பழைய நினைவில் இருந்து மீண்டு குளித்து விட்டு வெளியே வரவும் அவனுக்கு பிடித்த உணவுகளை சமைத்து வைத்திருந்தாள் கனி.

"கியூட்டி நீ ரொம்ப கஷ்ட படுறடா" என்று அவளை அருகில் இருக்கையில் அமர்த்தி சாப்பாட்டை ஊட்டி விட "உன் பாப்பா ஒன்னும் சாப்பிட விடல" என்று குறை கூறி கொண்டே சாப்பிட்டாள்.

"பாப்பா வந்ததும் நான் கவனிச்சுக்குறேன்.. அதுவரை பொறுத்துக்கோமா.. இன்னும் ரெண்டே வாரம்" தான் எனவும் இருவருக்கும் குழந்தையை வரவேற்க மிகுந்த ஆவல் இருந்தது. முதல் குழந்தையை கருவிலேயே பறிகொடுத்ததால் இந்த குழந்தையை தங்கதட்டில் வைத்து வளர்க்க ஆசை பட்டான் அவன்.

அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள் "சித்து நீ என்னை நிஜமா லவ் பண்ற தானே?" என்று கேட்க "இதுல உனக்கு சந்தேகம் வேற இருக்கா? உன் மேல வச்சிருக்க காதலுக்கு சாட்சி நம்ம குழந்தை" என்றான்.

"நீ என்கிட்ட பொய் சொல்ல மாட்ட தானே?" அடுத்த கேள்வியை கேட்க அவள் எங்கு சுற்றி எங்கு வருகிறாள் என்பது அவனுக்கு புரிந்து போனது.

"உன் நல்லதுக்காக ஒன்னு இல்ல ஆயிரம் பொய் கூட சொல்லுவேன்.. உனக்கு இப்போ வேற வேலை இல்லன்னா என்னை வேலை செய்ய விடு" என்று எழும்ப சுருங்கிய முகத்துடன் தன் அறைக்கு சென்றாள்.

அவளின் வருத்தம் அவனுக்கும் புரிந்தது தான். ஆனால் அவன் ஒரு பெண்ணின் வாழ்க்கையை தான் செய்து கொடுத்த சத்தியத்தால் பணயம் வைக்க விரும்பவில்லை. வில்லியம் சொன்ன பெண் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவள் ஒன்றும் அல்ல. சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். இன்று தோழியின் வீட்டிற்கு செல்வதாக கிளம்பி சென்றவள் காணவில்லை என்றால் அவள் எங்கு சென்றாள்? அவனின் கேள்விக்கு விடை சொல்ல அந்த பெண்ணால் மட்டுமே முடியும்.

பொதுவாக பெண்களை கடத்துபவர்கள் ஏதாவது நிபந்தனை வைக்க கண்டிப்பாக சம்மந்த பட்டவர்களை தொடர்பு கொள்வார்கள். ஆனால் இந்த பெண் காணாமல் போய் மூன்று நாட்கள் ஆகியும் எந்த தொடர்பும் இல்லை. எதற்காக அவள் கடத்தப்பட்டாள்? இப்போது எங்கே இருக்கிறாள் என்பது எதுவும் தெரியாமல் திணறினர் காவல்துறையினர். அவர்களின் ஒருங்கிணைந்த முடிவு தான் சித்துவிடம் உதவி கேட்பது என்பது. ஆனால் சித்து தன் மனைவியை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். என்னதான் கனிஷ்காவை தேடின அனைவரையும் கொன்று விட்டாலும் அவளின் பாதுகாப்பு கேள்வி குறியே.

மனதில் பல எண்ணங்களுடன் அவன் பால்கனியில் அமர தூரத்தில் இருந்த வாகனத்தினுள் ஒருவன் அவனையே பார்த்து கொண்டிருந்தான்.

"சார் அவன் வீட்ல தான் இருக்கான்.. வெளில எங்கேயும் போகலையே.." ஒருவன் சொல்ல மற்றவனோ "அவன் கண்டிப்பா வெளில வந்து தான் ஆகணும்.. நீ அந்த பொண்ணை என்ன பண்ணனும்னு யோசி.." என்றான்.

"அந்த பொண்ணு இப்போ நம்ம பாதுகாப்பில் தானே இருக்கா.. அவளை வச்சு ரெண்டு நாள் விளையாட தான் முடியும்.. அப்புறம் வழக்கம் போல் கொன்னுடலாம்" என்று கூற மற்றவன் அதை ஆமோதித்தான்.

அவர்கள் பேச்சை அலைபேசியில் கேட்டு கொண்டிருந்த அவர்களின் தலைவனோ தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவளை திரும்பி பார்த்தான். மூன்று நாட்கள் பசியில் வாடியதால் கண்கள் குழி விழுந்து அவளின் வெள்ளை மேனி அந்த கயவர்களின் வேலையில் சிவந்திருக்க பயத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"இப்போதைக்கு அவன் வெளில வர மாட்டான்டா.. நீங்க நம்ம இடத்துக்கு கிளம்பி வாங்க.. அவனை இன்னொரு நாள் பார்த்துக்கலாம்" என கூற அவர்கள் அவ்விடத்தை விட்டு கிளம்பினர்.

அவர்கள் கிளம்பவும் தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து தங்கள் அறைக்கு சென்றான் அவன். அவனின் நினைவு முழுவதும் தன்னவள் இருந்ததால் மற்றவர்களை அவன் கவனிக்கவில்லை. வழக்கம் போல் அவனின் கியூட்டி கோபமுகத்துடன் அவனின் போட்டோவை வைத்து திட்டி கொண்டிருக்க அவனோ புன்னகையுடன் கதவில் சாய்ந்து நின்றான்.

"உனக்கு அறிவே இல்ல சித்து.. நாம என்ன பெரிய குடும்பத்தோடவா வாழ்ந்துட்டு இருக்கோம்? நீயும் நானும் நம்ம சின்ன பாப்பாவும்னு தனியா இருக்கோம்.. இந்த நேரத்துல அடிக்கடி என்னை விட்டுட்டு போனா எனக்கு பயமா இருக்காதா?" என்று அவனின் போட்டோவை குத்த "நான் உன் கூட தானே இருக்கேன்.. இதுக்கு மேல என்ன பயம்?" என்று கேட்டு கொண்டே உள்ளே வந்தான் சித்து.

அவனை பார்த்ததும் பழைய கோபம் திரும்ப "என்னை திட்டுன யாரும் என்கிட்ட பேச வேண்டாம்" என்று முகத்தை திருப்பி கொண்டாள்.

"என் செல்ல கியூட்டிக்கு பயங்கரமா கோபம் வருதே.." என்று அவளின் அருகில் அமர்ந்தவன் அவளின் முகத்தை தன் பக்கம் திருப்பி "என்னை மீறி உன்னை யாரும் தொட முடியாது கனி.. அப்படி தொடுறவங்களுக்கு அது தான் வாழ்வின் கடைசி நாள்.. இப்போ கூட ஒரு பெண்ணோட வாழ்க்கை ஆபத்தில் இருக்குடா.. நான் ஹெல்ப் பண்ணியே ஆகணும்" என்று கூற கனிக்கு இன்னும் பயம் போகவில்லை.

அவனின் மார்பில் சாய்ந்தவள் "அன்னைக்கு அவன் என்னை தொங்க விட்டிருந்தது எவ்ளோ அடி ஆழம் தெரியுமா? நீ என் பக்கத்தில் இருந்திருந்தால் அவன் என்னை தொட்டிருப்பானா? எனக்கு பயமா இருக்கு சித்து" என சொல்ல எப்படி அவளின் பயத்தை போக்குவது என்றே அவனுக்கு தெரியவில்லை. இந்த பயம் அவளுக்கு உடல்நிலையிலும் பின்னடைவு ஏற்படுத்தும் என்று அவன் அறிவான். கடந்த முறை மருத்துவர் அவளின் இரத்த அழுத்தம் பற்றி சொன்ன போதே அவனுக்கு மனம் பதறியது. இப்போதும் அவள் அதே நிலையில் இருப்பதை பார்க்கும் போது அவளை கஷ்டத்தில் ஆழ்த்த அவன் விரும்பவில்லை.

"நான் எந்த வேலைக்கும் போகல.. உன் கூட தான் இருப்பேன்.." என்று அவளுக்கு தைரியம் சொன்னவன் பென்னை அழைத்து கென்யாவை காவல் துறையிடம் ஒப்படைக்க சொன்னான்.

கென்யா அவனின் படைப்புகளில் புதியவளாக இருந்தாலும் கூட அவள் ஒரு பெண் என்பதால் அந்த கடத்தல் கூட்டம் வெளியே வர வாய்ப்பிருக்கிறது. அதுவும் இல்லாமல் கென்யா எதையும் தெளிவாக ஆராய்ந்து செய்பவள். எனவே அவளை அனுப்ப சொல்லியவன் வில்லியமை அழைத்தான்.

"வில்லியம் இப்போ என்னோட சூழ்நிலை என்னன்னு உனக்கு நல்லாவே தெரியும்.. கனியை விட்டு என்னால் எங்கேயும் நகர முடியாது.. கென்யா கண்டிப்பாக உனக்கு உதவியாக இருப்பாள்.. கொஞ்சம் நாளைக்கு பிறகு நானே நேரடியாக உனக்கு உதவுறேன்" என்று சொல்ல குடும்பஸ்தனான அவனுக்கு சித்துவின் நிலை புரிந்தது.

"நோ ப்ராப்ளம் சித்.. கென்யா பத்தி நானும் கேள்வி பட்டிருக்கிறேன்.. தேங்க்ஸ் பார் யூர் ஹெல்ப்" என்று கூற நிலமையை புரிந்து கொள்ளும் நண்பன் கிடைப்பது வரம் என்றே சித்துவுக்கு தோன்றியது.

"தேங்க்ஸ் டா.." என்றவன் மனைவியுடன் நேரம் செலவழிக்க அதுவே அவளின் உடல்நிலையை நன்றாக வைக்க உதவியது. இன்னும் இரண்டு வாரங்களில் பிரசவம் எனும் நிலையில் அவளை ஆபத்தில் விட அவனுக்கு தைரியம் இருக்கவில்லை. அன்று முழுவதும் அவளுடன் கழித்தவன் இரவு அவள் தூங்கியதும் தன் மடிகணினியை எடுத்து வேலை பார்க்க ஆரம்பித்தான்.

----
பதினைந்து மாடிகள் கொண்ட குடியிருப்பு அது. ஐந்தாவது மாடியில் தன் அறையில் கையில் ஒரு புத்தகத்தை வைத்து புரட்டி கொண்டிருந்தான் ஜாண். அந்த குடியிருப்பு முழுவதும் அவனுக்கு தான் சொந்தம். ஆனால் ஐந்தாவது மாடி அவனின் புத்தகங்களுக்கான நூலகம். மற்ற இடங்களில் அனைவரையும் அனுமதிப்பவன் நூலகத்திற்குள் மட்டும் எவரையும் நுழைய விட மாட்டான். இன்றும் படித்து கொண்டிருந்தவன் கைபேசி சிணுங்க அதை எடுத்து காதில் வைத்தவன் "ஹெலோ.." என்க அந்த பக்கம் "சார் ப்ளீஸ்ஸ்.." என்ற குரல் கேட்டது.

அதை கேட்ட மாத்திரத்தில் நல்லவன் என்றால் பெண்ணை கொடுமை படுத்துவதாக கோபம் வர வேண்டும். ஆனால் அவனோ அந்த குரலை மீண்டும் கேட்க விரும்பினான்.

"ஏய்.. சத்தம் பத்தல.. இன்னும்.." என்று ஒருவித வெறியோடு சொல்ல அந்த பக்கம் என்ன நடந்ததோ "சார் ப்ளீஸ்ஸ் விட்டுடுங்க.." என்று கதறல் சத்தம் கேட்டது.

ஜாண் அதை ரசிக்க மட்டுமே செய்தான். ஒரு பெண்ணின் கதறல் அவனுக்கு ரசிக்கும் படியாக இருக்கிறது என்றால் அவன் சைக்கோவாக தான் இருக்க வேண்டும். அவன் சொல்ல சொல்ல அவளின் வலியும் கூடி போனது.

"ஏழாவது மாடியில் ரெடி பண்ணி வை.." என்று கட்டளையிட்டவன் மீண்டும் புத்தகத்தில் ஆழ்ந்து விட அவன் சொன்ன வேலையை செய்ய சென்றனர் அவனின் ஆட்கள்.

அந்த பெண்ணின் பெயர் டீனா. பேஷன் டிசைனிங் படித்து கொண்டிருந்தாள். பெற்றோர் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள். அவளின் ஆசைப்படி இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் கார் வாங்கி கொடுத்திருந்தனர். அதில் தன் கல்லூரிக்கு செல்லும் வழியில் தான் நேற்று சிலரால் கடத்த பட்டாள். கண்களை கட்டி அவர்கள் கொண்டு வந்த இடம் இந்த பதினைந்து மாடி குடியிருப்பு தான். வந்தவளை அவர்கள் எதுவும் செய்யவில்லை. மயக்க மருந்து கொடுக்கவில்லை. கயிற்றால் கட்டி போடவில்லை. அவளுக்கு காவலுக்கு எவரும் இருக்கவில்லை. ஆனால் அவளால் தான் நிற்கும் இடத்தை விட்டு நகர முடியாது. லேசரால் கட்டுப்படுத்த பட்டிருந்தாள் அவள். அதன் கதிர்வீச்சு சிறிது உடலில் பட்டாலும் வெந்து விடும். அவளை சிறிது நேரம் முன்பு லேசரால் தாக்கி தான் விளையாடினர் அந்த கொடூரர்கள்.

ஏழாம் மாடிக்கு அவளை அழைத்து செல்லவும் பயத்தில் நடுங்கி போனாள் டீனா. அங்கு அறைக்குள் நடுநாயகமாக அமர்ந்திருந்தவனை பார்க்கவும் உடல் அந்த குளிரிலும் வேர்த்தது.

"இட்ஸ் டூ ஹாட்?" என்ற கேள்வியுடன் அவள் அருகில் வந்தவன் மற்றவர்களை அனுப்பி விட்டு கதவை காலால் உதைத்து பூட்ட ஆட்டோமேட்டிக் லாக் விழுந்து விட்டது. இனி அவள் நினைத்தாலும் வெளியேற முடியாது.

"ப்ளீஸ் சார்.. நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல.. எனக்கு கடமைகள் இருக்கு.." என்று பின் வாங்கியவளை தன் புறம் இழுத்தவன் "என் முதல் கடமை என்ன தெரியுமா? உன்னை மாதிரி அழகியை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரது தான்" என்று கீழே தள்ள அவள் அவனிடம் இருந்து தப்பிக்க நினைத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி போனது.

அவளை மொத்தமாக எடுத்து கொண்டவன் தன் தேவை முடிந்து நிமிர்ந்து பார்க்க அவளோ குற்றுயிராக இருந்தாள். தன் ஆட்களை அழைத்தவன் "கிளீன் பண்ணி மூன்றாம் மாடியில் இருந்தே தள்ளி விடு" என்று சொல்ல அவன் சொன்னதை செய்யும் போது பெண்ணவள் துடித்து போனாள். ஆனால் அதையே ஒரு குரூர சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தான் ஜாண்.

---

"சித்.. அடுத்த பெண்ணை கடத்தியிருக்காங்க.." என்று வில்லியம் சொல்ல "வாட்?" என்று அதிர்ந்தவன் அவனிடம் விபரங்கள் கேட்க வில்லியம் சொன்னதை அவனால் நம்பவே முடியவில்லை. அடுத்த பெண்ணும் முந்தையவள் கடத்த பட்டிருந்த அதே இடத்தில் இருந்து கடத்தப்பட்டிருந்தாள்.

"இது எப்படி சாத்தியம் வில்லியம்? இரண்டு பேரோட இடமும் ரொம்ப டிஸ்டன்ஸ்ல இருக்கு.. தென் எப்படி ஒரே இடத்தில் கடத்த முடிந்தது?" என்று கேட்க அவனிடமும் பதில் இல்லை.

ஏற்கனவே ஒரு பெண்ணை பற்றி தெரியாத நிலையில் இன்னொருவர் எனும் போது காவல்துறையே திணறி நின்றது.


"டீனாவோட பெற்றோரை பார்க்க ஏற்பாடு பண்ணு.." என்ற சித்தார்த் தன் வீட்டிற்கு செல்ல அவனின் மனம் முழுவதும் இந்த கடத்தலை நினைத்தே யோசித்து கொண்டிருந்தது.
 
Last edited:

Asha Evander

Moderator
அத்தியாயம் 2

கலிபோர்னியா நகரம். நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு அந்த ஹோட்டலே பரபரப்பாக இருந்தது. அந்த இடத்தின் முக்கியமான உணவகம் அது. அனைவரும் ஒரு பதட்டத்துடன் இருக்க அங்கிருந்த கீழறைக்குள் சென்ற குழுவினர் "சார் அந்த பொண்ணு இங்க தான் இருக்கா.." என்று குரல் கொடுத்தனர். அவசரமாக உள்ளே சென்ற அனைவரும் அதிர்ந்து அவளின் கோலம் கண்டு அதிர்ந்து நின்றனர்.

"டாக்டர் சீக்கிரம் வாங்க.." வில்லியமின் குரலில் வந்து பார்த்தவர் அவளின் நாடியை பிடித்து பார்த்து வருத்தமாக தலையசைத்தார்.

"இந்த பெண் இறந்து கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு மேலாகிடுச்சு வில்லியம்"

அவரின் கூற்றை அவனால் நம்பவே முடியவில்லை. மிகவும் சிறு பெண் அவள். மிஞ்சி போனால் பதினெட்டு வயது இருக்கலாம். அவளையும் இந்நிலைக்கு ஆளாக்கினவர் மேல் கொலை வெறி தான் வந்தது.

"உடனே உடலை போஸ்ட் மார்டம் பண்ண ரெடி பண்ணுங்க" என்றவன் கவலை தோய்ந்த முகத்துடன் வெளியே வர பத்திரிகையாளர்கள் சிலர் அவனை சூழ்ந்தனர்.

இத்தனை சீக்கிரம் ஒரு செய்தி பரவியதை நினைத்து வியந்தவாறே அவர்களுக்கு பதில் சொன்னான்.

"சார்.. இதுவரை இரண்டு பெண்கள் காணாமல் போயிருக்காங்க.. ஒரு பெண் கொலை செய்ய பட்டிருக்கிறாள்.. இதற்கு பின்னால் யார் இருக்கான்னு கண்டு பிடிக்க முடியலயா?"

"எல்லாரையும் ஒரே இடத்தில் வைத்து கடத்திருக்காங்க.. குற்றவாளிகளை தேடிட்டு இருக்கோம்.. சீக்கிரம் கண்டு பிடிச்சிடுவோம்.. நோ மோர் கொஸ்டின்ஸ்" என்று அவர்களை தாண்டி செல்ல அதை யூ-டூபில் பார்த்து கொண்டிருந்த ஒருவன் சிரித்து கொண்டான்.

நான்கு மணி நேரத்திற்கு முன்பு தன் வீட்டிற்கே தெரியாத ஒரு பங்களாவின் முகப்பில் காத்து கொண்டிருந்தான் கெல்லி. அவன் பெரிய பணக்காரரின் மகன். ஆனால் பணம் இருந்தும் பலம் இருந்தும் அவனுக்கு தேவை பெண்ணாக இருந்தது. பொதுவாகவே அவன் யாரையும் தேடி செல்வதில்லை. பணத்தை மூன்றாம் நபர் மூலம் அனுப்பினால் பெண் வரும். இன்றும் தன் நண்பர்களுடன் காத்து கொண்டிருந்தான்.

"கெல்லி இவ்ளோ நேரம் ஆகியும் யாருமே வரல? அந்த ஜாண் ஏமாத்திட்டானா?" என்று அவனின் நண்பன் கேட்க புன்னகைத்தான் கெல்லி.

"ஜாண் நூறு சதவிகிதம் நம்ப கூடிய ஆள்.." அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே ஒரு காரில் அவன் தேடிய விஷயம் வந்து நின்றது.

"ஹே...." அவன் நண்பர்கள் சந்தோஷத்தில் குதிக்க அறைக்குள் கொண்டு செல்லுமாறு கண் அசைத்தான் கெல்லி. அவன் சொல்லியதை ட்ரைவர் செய்யவும் "பிரெண்ட்ஸ்.. இன்னைக்கு நம்மளோட நாள்.. ஆனா எவ்ளோ சந்தோசம் கிடைச்சாலும் கடைசியில் கரெக்ட்டா வேலைய முடிச்சிடணும்" என்று எச்சரிக்கை விடுத்தான்.

"கண்டிப்பா மேன்.." என்றவர்கள் அறைக்குள் செல்லவும் அவர்களை கண்ட அந்த பெண் அதிர்ச்சியில் பின்னடைந்தாள். அவர்கள் எப்போதும் மயக்கத்தில் வைத்து காரியத்தை சாதிப்பவர்கள் அல்ல.

"ப்ளீஸ் லீவ் மி.. ப்ளீஸ்.." அவளின் கெஞ்சல் அந்த கொடூரர் யாரையும் அசைக்கவில்லை. ஒருவன் அவளை நெருங்க மற்றவர்கள் வெளியே சென்றனர். சிறிது நேரம் கழித்தும் அவன் வெளியே வராமல் இருக்கவும் கெல்லி உள்ளே வந்தான்.

"ஜேக்.. என்ன பண்ணிட்டு இருக்க? நான்கு பேர் இருக்கோம்.. நீ முடிச்சா தான் நாங்க போக முடியும்" என்று சொல்ல "வெயிட் மேன்.. அவளை முழுசா செக் பண்ணிட்டு தான் தொடங்க முடியும்.. எங்கேயாச்சும் கேமரா இருந்தா நாம செத்தோம்" என்று பரிசோதிக்க அவனின் கைகள் அவளிடம் தாராளமாக விளையாட "ப்ளீஸ்.." என்று கெஞ்சினாள் அந்த பெண்.

"நோ வே மை டியர்.. எங்களுக்கு நீ கண்டிப்பா வேணும்.." என்று அவளை கொள்ளையிட அவள் தடுக்க நினைத்த முயற்சிகள் அனைத்தும் பாழாகி போனது. சிறுவயது பெண் என்பதால் நான்கு பேரை சமாளிக்க முடியாமல் சிறிது நேரத்தில் மரித்து போனாள் அவள்.

"வழக்கமா போடுற இடத்தில் போட்டுடுங்க" என்ற ஒருத்தன் வெளியேறி விட அவளின் சடலம் ஒரு நதிக்கரையின் ஓரத்தில் தூக்கி எறியப்பட்டது.

நான்கு மணி நேரம் கழித்து "ஹோட்டல் அறையில் பெண் ஒருவர் மரித்த நிலையில் கண்டெடுக்க பட்டார்" செய்தியில் சொல்ல ஜேக் தன் அருகில் படுத்திருந்த கெல்லியை அவசரமாக எழுப்பினான்.

"கெல்லி இது அந்த பொண்ணு தானே.. இவ எப்படி ஹோட்டலுக்கு போனா?" என்று கேட்க கண்களை கசக்கி பார்த்த கெல்லி "யாராச்சும் தூக்கிட்டு போய் போட்டிருப்பாங்க.. செத்து போனவளை எங்க கண்டுபிடிச்சா என்ன? வந்து சாட்சியா சொல்ல போறா.. நீ தூங்கு" என்றவன் தூங்கி விட மற்றவனும் அவன் சொல்லுக்கு பணிந்து படுத்தான்.

"டாக்டர் ப்ரோசீஜர் எல்லாம் முடிஞ்சுதா?" வில்லியம் கேட்க "கொடூரமான முறையில் சாகடிக்க பட்டிருக்கா.." என்று அவர் சொன்னதின் அர்த்தம் அவனுக்கும் புரிந்தது.

"டாக்டர்.. எனக்கு ஒரு சந்தேகம்.. இதுக்கு முன்னாடி ஏதாச்சும் இந்த மாதிரி கேஸ் நீங்க கேண்டில் பண்ணிருக்கீங்களா?"

"இல்ல வில்லியம்.. இது தான் முதல் முறை.. குறைந்தது நான்கு பேராவது அவளை தாக்கியிருக்கணும்.. சின்ன பெண் ஆனதால் அவர்களை சமாளிக்க முடியாமல் இறந்து போயிட்டா"

"ஓகே டாக்டர் தேங்க்ஸ்.." என்று வெளியே வந்த வில்லியம் பெண்ணின் பெற்றோரை அழைத்து விவரம் சொல்ல அவர்கள் கதறி விட்டனர். அவர்களை சமாதான படுத்தி அனுப்பியவன் தன் அலைபேசியில் அடுத்து வந்த செய்தியை கேட்டு அதிர்ந்து அவர்கள் சொன்ன மருத்துவமனைக்கு விரைந்தான்.

"சார் நாங்க முடிந்த அளவுக்கு முயற்சி செஞ்சிட்டோம்.. பட் அவளை காப்பாற்றுவது கஷ்டம்" என்று மருத்துவர் கூற பெண்ணை பெற்றவர்கள் அதிர்ந்து நின்றனர்.

"டீனா.." அவர்கள் கண்ணீர் விட மற்றவர்களுக்கும் பரிதாபமாக தான் இருந்தது.

"சார் ப்ரோசீஜர்ல அவங்க கையெழுத்து வேணும்" என்று ஒரு பைலை நீட்ட வாங்கி படித்த வக்கீல் "அவனுக்கு வேணும்னா தண்டனை வாங்கி கொடுக்கலாம்.. பட் டீனா உயிரை இனிமேல் காப்பாற்ற முடியாது.. பின்னங்கழுத்தில் பயங்கரமா தாக்க பட்டிருக்கா.. முகத்தில் பல கீறல்கள்.. மோசமா தாக்க பட்டிருக்குறதா டாக்டர் சொல்றாங்க.. உயிருடன் வாழ முடியாத ஒருத்தியோட உடல் பாகங்கள் பலருக்கும் பயன்படலாம் இல்லையா? ப்ளீஸ் சைன்" என்று கூற மகளின் நிலையை நினைத்து கண்ணீர் விட்ட அவர்கள் கையெழுத்திட்டு கொடுத்தனர்.

அவர்கள் தளர்ந்து போய் அமரவும் வில்லியம் அங்கு வந்தான். "டீனாவுக்கு எப்படி ஆச்சு? எங்க கண்டுபிடிச்சீங்க?" என்று கேட்க வக்கீலோ "ஒரு பாலத்துக்கு அடியில் கண்டு பிடித்தோம் வில்லியம்.. நிறைய ப்ளட் லாஸ்.. தலையில் பயங்கர அடி.. மூளைச்சாவு ஏற்பட்டு கோமாவுக்கு போயிட்டா" என்று கூற வில்லியமுக்கு இரத்தம் கொதித்தது.

"இதை இப்படியே விட போறீங்களா சார்?" என்று கேட்க டீனாவின் தந்தை நிமிர்ந்து பார்த்தார்.

"இதுக்கு மேல பண்றதுக்கு எதுவுமே இல்லை சார்.. ஒரே பொண்ணு அவ.. கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து சந்தோசமா பார்த்துகிட்டது இந்த நிலைமையில் அவளை பார்க்கவா?" என்று கதற அவரை தேற்றுவது தவிர வேறு வழி இருக்கவில்லை.

"சார்.. இங்க ப்ரோசீஜர் முடிஞ்சதும் எனக்கு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா?" என்று வில்லியம் கேட்க வக்கீல் யோசனையாக பார்த்தார்.

"இது உங்களுக்கு ரொம்ப கஷ்டம்னு எனக்கு தெரியும்.. பட் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் இதே மாதிரி ஒரு பெண் கொலை செய்ய பட்டிருக்கிறாள். அவளோட கொலைக்கும் இதுக்கும் ஒரே ஆள் காரணமான்னு செக் பண்ணனும்.. அந்த பெண்ணுக்கு போஸ்ட் மார்டம் பண்ணின டாக்டர் உங்க பெண்ணை செக் செய்ய அனுமதி கிடைக்குமா?"

அங்கிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். ஒரு பெண்ணோடு என்றால் விட்டிருப்பார்கள். இதையே தொடர் கொலையாக பண்ணுபவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்றே விரும்பினர்.

"சுயர் வில்லியம்.. அந்த டாக்டரை வர சொல்லுங்க"

வில்லியம் அந்த மருத்துவரிடம் பேசவும் அவருக்கே அதிர்ச்சியாக இருந்தது. "ஒரு மணி நேரத்தில் அங்கே இருப்பேன் வில்லியம்" என்றவர் வந்து பார்க்கும் முன் டீனா மரித்திருந்தாள்.

"சாரி வில்லியம்.." என்றவர் தானே அந்த பெண்ணை பரிசோதித்தார்.

இரண்டு மணிநேர பரிசோதனைக்கு பிறகு வெளியே வந்தவர் "ரெண்டு பேரும் ஒரே ஆளால் கொல்ல படல வில்லியம்.. அந்த பெண் நான்கு பேரால் பாதிக்க பட்டிருந்தாள். ஆனால் டீனா ஒருத்தரால் தான் பாதிக்க பட்டிருக்கிறாள். வேறு யாரோட விரல் தடமோ துன்புறுத்தலோ இருந்த மாதிரி இல்ல.. ஆனா இரண்டுக்கும் ஒரே ஆள் தொடர்பு உள்ளவரான்னு நீங்க தான் கண்டுபிடிக்கணும்" என்று கூற வில்லியம் குழம்பி தான் போனான்.

"டாக்டர் ஒருத்தர் ஏதோ மனநிலை பாதிக்க பட்டு இப்படி பண்றாங்கன்னா ஏற்று கொள்ளலாம்.. ஆனால் பலர் இப்படி பண்ணினால் எந்த பக்கம் போனாலும் பிளாக் ஆகுது"

"ஒருத்தர் தான் பெண்ணாசை பிடித்தவரா இருக்கணும்னு அவசியம் இல்ல வில்லியம்.. ஆனாலும் இது ரொம்ப கொடூரம்.. ஒரு பெண்ணை இந்தளவுக்கு கொடுமை படுத்தி சாகடிப்பது சைக்கோவின் உச்சம்"

"ஆமா டாக்டர்.. இன்னும் எத்தனை பெண்கள் அவனிடம் மாட்டி கொண்டு இருக்கிறார்களோ? ஒருத்தரையும் அவன் உயிரோட விட மாட்டேங்குறான்" என்று வருந்த அவனின் பேச்சில் மற்றவர்களுக்கும் கஷ்டமாக தான் இருந்தது.

காலையில் எழுந்த சித்தார்த் தன் அருகில் மனைவியை தேட அவளோ பால்கனியில் அமர்ந்திருந்தாள்.

"என்னாச்சு கியூட்டி? வயிறு வலிக்குதாடா?" அவன் கரிசனமாக கேட்க "நான் உன்னை ரொம்ப கஷ்ட படுத்துறேனா சித்து?" என்று அவனின் முகநாடியை பிடித்து கேட்டாள்.

"உன்னால் எனக்கு என்ன கஷ்டம்டா? நீ என் பக்கத்துல இருக்கிற ஒவ்வொரு நொடியும் நான் சந்தோஷத்தின் உச்சியில் இருப்பேன்.. இப்போ எதுக்கு இந்த சந்தேகம்?"

"இன்னைக்கு விடியற்காலையில் உனக்கு வில்லியம் அண்ணா போன் பண்ணிருந்தாங்க.." என்று கூற அவனின் உடல் விறைத்தது.

"என்ன சொன்னான்?"

"உன்கிட்ட அவசரமா பேசணுமாம்.. அவங்க குரல்ல ஏதோ வருத்தம் இருந்துச்சு.. நான் உன்னை அவங்ககிட்ட நெருங்க விடாம தடுக்கிறேனோன்னு குற்ற உணர்ச்சியா இருக்கு" என்றவளை பார்க்க அவனுக்கு கஷ்டமாக இருந்தது.

"கனி இந்த நொடி நான் உலகத்தில் இருக்குற எல்லாரையும் விட ஹேப்பியா இருக்கேன்.. அதுக்கு காரணம் நீ மட்டும் தான்.. உன்னை தவிர வேற எதுவும் முக்கியம் இல்ல.. எதையும் யோசிக்காம இரு" என்றவன் கைபேசியை எடுத்து கொண்டு வெளியே சென்றான்.

வில்லியமுக்கு அழைத்தவன் "என்ன ஆச்சுடா?" என்று கேட்க "நீ உடனே என் ஆபீசுக்கு வர முடியுமா சித்?" என்றான் வில்லியம்.

அவனின் குரலில் இருந்த பதற்றம் தெரிந்தாலும் "இப்போ ஆபீசுக்கு வர முடியாதுடா.. உன்னால் கென்யாவை கூப்பிட்டுட்டு என் லேப் க்கு வர முடியுமா ப்ளீஸ்? இப்போ என் நிலைமை உனக்கு தெரியும் தானே" என்று கேட்க வில்லியம் வருவதாக ஒப்பு கொண்டான்.

உடனே பென்னுக்கு சித்தார்த் அழைக்க அவனோ "பாஸ்.. இது உங்களுக்கே நியாயமா?" என்று அலறினான்.

"சாரி பென்.. இந்த ஒரு டைம் ப்ளீஸ்டா.."

"உங்க வைப் மாதிரி இல்ல என் டார்லிங்.. அவ சொல்பேச்சு கேக்கலைன்னா அடுத்த நாளே விவாகரத்து தான்.. கல்யாணம் ஆன ரெண்டு நாளில் இது நடக்கணுமா?"

அந்த பக்கம் பென் அலறினாலும் அதை சித்தார்த் பொருட்படுத்தவில்லை. அவனுக்கு திருமணம் ஆகியே இரண்டு நாள் தான் ஆகிறது. மூன்று வருடங்களாக காதலித்து கொண்டு கடமையே வாழ்க்கை என இருந்தவன் இப்போது தான் திருமணத்தில் முடித்திருந்தான். அதையும் சித்தார்த்தின் அழைப்பு கெடுத்து விட்டது.

"உனக்கு வேலை வேணும்னா கிளம்பி வா.. இல்லன்னா என் அசிஸ்டன்ட்க்கு வேற ஆள் தேடிக்குறேன்" என்று சித்தார்த் அழைப்பை துண்டித்து விட பென்னின் மனைவி முறைத்து பார்த்தாள்.

"சாரி டார்லிங்.. இன்னைக்கு மட்டும் போயிட்டு வந்துடுறேன்.. அடுத்து பத்து நாள் யார் கூப்பிட்டாலும் நோ தான்" என்று கெஞ்ச "வேலை தான் முதலில் டியர்.. நீ கிளம்பு" என்று அவள் சொல்லிவிட "யார் பண்ணின பாவமோ?" என்று புலம்பியவன் சித்தார்த்தை பார்க்க கிளம்பினான்.

சித்தார்த் குளித்து விட்டு வெளியே வரவும் அவனை எதிர்கொண்டாள் கனிஷ்கா. 'அடுத்து என்ன பூதம் கிளம்ப போகுதோ..' என்ற பீதியுடன் "என்னமா ஆச்சு?" என்று கேட்க அவளோ வஞ்சனை இல்லாமல் முறைத்தாள்.

'பார்வையே சரியில்லையே..' என்று எண்ணியவன் "எனக்கு வேலை இருக்குது கியூட்டி.. லேப் போக போறேன்" என்று சட்டையை மாட்ட "நானும் வரேன்" என்று அவனுக்கு முன் கிளம்பினாள்.

'முடிஞ்சுது ஜோலி..' தனக்குள் சொல்லி கொண்டவன் "நீ வீட்டை விட்டு வெளியே போக கூடாதுன்னு சொல்றத கேட்டுட்டு இங்க தானே இருக்கேன்.. இன்னைக்கு வில்லியம் ஒரு கேஸ் விஷயமா ஹெல்ப் கேட்க வரான்.. இந்த நிலமைல நீ அங்க தேவை இல்லை" என்று கூறி விட்டு நகர தன் கைபேசியை கையில் எடுத்து கொண்டவள் யாருக்கோ அழைத்தாள்.

'இவ யாருக்கு போன் பண்றா?' என சித்தார்த் யோசிக்கும் போதே அந்த பக்கம் அழைப்பு எடுக்க பட்டு விட "மாமா உங்க பையன் காதல் ரொம்ப ஸ்ட்ராங்.. அவன் என்னை ரொம்ப லவ் பண்றான்னு சொன்னீங்க.. இப்போ எதுக்கு எடுத்தாலும் சிடுமூஞ்சியா இருக்கான்.. எனக்கு இவன் வேண்டாம்.. நான் இந்தியா வரேன்" என்று மூச்சு விடாமல் புகார் சொல்ல சித்தார்த்தே அரண்டு விட்டான்.

"ஏய் மூச்சு விட்டு பேசுமா.."

அவனை முறைத்தவள் "நீங்க வந்து கூட்டிட்டு போங்க மாமா.." என்று கேட்க அந்த பக்கம் கிரண் சிரித்தார்.

"அவன் திட்டுற அளவுக்கு நீ என்ன பண்ணுன கனி?" அவரின் கேள்வியில் "என்னை லேப்க்கு கூட்டிட்டு போக சொன்னேன்.." என்றாள்.

"இது உனக்கே தப்பா தெரியலையா?"

"அது வந்து.. மாமா.." அவள் திணற "அங்க அவன் மெடிஸின்ஸ் வச்சிருப்பான்.. சிலநேரம் அவங்க பேசுறது உன் மனசை கஷ்டப்படுத்தலாம்.. அதனால் தான் வேண்டாம்னு சொல்லிருப்பான்.. இப்போ கூட உன்னை விட்டுட சொன்னா அவன் என்ன முடிவு எடுப்பான்?" என்று நிதானமாக கேட்டார்.

"நான் செத்துடுவேன் கனி..." அவன் அடிக்கடி சொல்லுவது நினைவுக்கு வர "நான் இல்லனா சித்து உயிரோட இருக்க மாட்டான்.." என்றாள். சொல்லும் போதே அவளின் கண்கள் கலங்கி விட்டது. அதை கவனித்த சித்து பதறி விட்டான்.

"கனி எதுக்கு அழுற?"

"ஒன்னும் இல்ல.." என்று சித்துவிடம் சொன்னவள் "சாரி மாமா.. இனி இந்தியா வரல.. சித்து கூட தான் இருப்பேன்" என்று கிரணிடம் சொன்னாள்.

"குட் கேர்ள்.." என்றவர் சித்துவிடம் கைபேசியை கொடுக்க சொல்லி அவனிடம் பேசினார்.

"சித்து நான் உனக்கு சொல்ல வேண்டியது இல்லை.. இன்னும் கொஞ்ச நாள் அவளுக்காக உன் வேலைகளை தள்ளி வை.. குழந்தை பிறந்த அப்புறம் மெதுவா புரிய வைக்கலாம்"

"கண்டிப்பா டேட்.. இப்பவும் என் லேப்க்கு தான் வர சொல்லிருக்கேன்.. இந்த கேஸ் ரொம்ப முக்கியமானது.." என்று கூற அவனின் நிலையை புரிந்து கொண்டவரும் பார்த்து கொள்ளுமாறு கூறி விட்டு அழைப்பை துண்டித்தார்.

"இந்த பழக்கம் எப்போதுல இருந்து வந்துச்சு?" என்று கனியின் காதை பிடித்து சித்து திருக "எனக்கும் துணைக்கு ஆள் இருக்காங்கன்னு காட்ட தான் மாமாவுக்கு கால் பண்ணேன்.. நீ வேலையை பாரு.." என்று திரும்பி நடக்க அவளை பிடித்து சுவற்றோடு சாய்த்தவன் "கோபமா இருந்தா ரொம்ப அழகா இருக்க கியூட்டி.." என்று நெற்றியில் முத்தமிட "நீ ரொம்ப மாறிட்ட சித்து.. முன்னாடி எல்லாம் எப்பவும் கெத்தா இருப்பா.. இப்போ ரொம்ப சாப்ட் ஆகிட்ட" என்றாள் கனி.


"கெத்தா இருந்தப்போ என்ன சாதிச்சேன் கனி? உன்னையே பறி கொடுத்துட்டு நின்னேன்.. இப்போ நீ என்கூட இருக்குறது என் கெத்தை விட்டதால் மட்டும் தான்.. இனி சாப்டா தான் உன் புருஷன் இருப்பான்" என்றவன் நேரமாவதை உணர்ந்து கிளம்ப கனி அவனை வாசல் வரை வந்து அனுப்பி வைத்தாள்.
 
Last edited:

Asha Evander

Moderator
அத்தியாயம் 3

தனது லேபில் தன் முன் அமர்ந்திருந்த வில்லியமை கூர்மையுடன் பார்த்து கொண்டிருந்தான் சித்து. பென் தன் அலைபேசியில் மனைவிக்கு குறுஞ்செய்தி அனுப்பி கொண்டிருக்க அந்நேரம் அவனின் அருகில் வந்து அமர்ந்தாள் கென்யா. பென் அவசரமாக எழவும் "மிஸ்டர் பென் நான் உங்களை எதுவும் பண்ணிட மாட்டேன்.. இங்கேயே இருங்க.." என்று அவனின் கை பிடித்து அமர்த்தியவள் சித்துவை பார்த்தாள்.

அவன் வில்லியமை பார்க்கவும் "இதுவரை மூணு பொண்ணுங்க காணாம போயிருந்தாங்க சித்து.. அதில் இரண்டு பேர் இறந்து போயிட்டாங்க.. ஒரு பொண்ணோட நிலைமை என்னனே தெரியல.. மொத்த காவல்துறையும் திணறிட்டு இருக்கோம்" என்றான் வில்லியம்.

"கென்யா உன்னால் எதுவும் கெஸ் பண்ண முடிஞ்சுதா?" சித்து கென்யாவின் பக்கம் திரும்ப "எஸ் சார்.. மூணு பேரோட காரும் ஒரே இடத்தில் தான் கண்டு பிடிச்சிருக்காங்க.. ஆனா அவங்க ஒரே ஊரை சேர்ந்தவர்கள் இல்ல.. அங்கிருந்த கேமராவை ஹேக் பண்ணும் போது வெளில யாரும் வந்த மாதிரியும் இல்ல.. சம்திங் இஸ் ராங்.." என்றாள் அவள்.

அவளின் கையில் இருந்த ஐ பேடை வாங்கி பார்த்தவன் அதில் பதிவாகியிருந்த வீடியோக்களை பார்த்து விட்டு "வில்லியம்.. இந்த கடையில் மூணு பொண்ணுங்களும் உள்ளே போன வரைக்கும் பதிவாகியிருக்கு.. ஆனால் அவங்க வெளில வர மாதிரி எந்த காட்சியும் இல்லையே.. ஒருவேளை வேற ஏதாவது வாசல் வழியா கடத்த வாய்ப்புகள் இருக்கா?" என்று கேட்டான் சித்து.

"எனக்கு தெரிந்து வேற எந்த வழியும் இல்ல சித்.. நான் நேரடியா போய் செக் பண்ணிட்டேன்.."

"அப்போ வெளில வராத பெண்கள் எப்படி செத்து போனாங்க?" என்றவன் ஒரு பதிவை கூர்ந்து பார்த்து விட்டு "வில்லியம் இந்த ட்ரக் வெளில போயிருக்கே.. இதை செக் பண்ணலையா?" என்று விசாரிக்க அதை வாங்கி பார்த்த வில்லியம் "இந்த ட்ரக் செக் பண்ணிட்டேன் சித்.. நம்ம பார்டர் தாண்டி வெளில போகல.. பொண்ணுங்க எதுவும் இருந்த மாதிரி தெரியல" என்றான்.

"வாய்ப்பே இல்லை வில்லியம்.. கண்டிப்பா இந்த ட்ரக்ல தான் அந்த பெண்களை கடத்திருக்க முடியும்.. அவங்க யாரும் வெளில வரல.. அதே நேரம் இந்த ட்ரக் கடைய விட்டு வெளில போயிருக்கு.. கண்டிப்பா அங்க தான் தப்பு நடக்குது" என்றவன் பெண்கள் கடத்தப்பட்ட அனைத்து நாட்களின் வீடியோ பதிவுகளை பார்த்தான். எந்த நடமாட்டமும் இல்லாத அந்த கடைகளில் இருந்து ஒரு ட்ரக் மட்டும் வெளியே சென்றிருந்தது.

சித்தார்த்தின் கூற்றில் உண்மை புரிய தனது காவல்துறைக்கு உடனே அழைத்தவன் அந்த வண்டியை கண்காணிக்க உத்தரவிட்டான்.

"அந்த வண்டியை டிராக் பண்ண சொல்லிருக்கேன் சித்.. எப்படியாவது அந்த பெண்ணை உயிரோட கண்டு பிடிக்கணும்" என்று சொல்ல அனைவர் பிரார்த்தனையும் அதுவாக தான் இருந்தது.

"ஒரு பொண்ணு மட்டும் இல்ல வில்லியம்.. அவன் ஒருத்தனும் இல்ல.. பெரிய சங்கிலி தொடர் கடத்தல் இது.. அவர்களின் தேவை பணம் இல்ல.. பெண்கள் மட்டுமே.. இறந்து போன பெண்களிடம் இருந்து எந்த உடல் உறுப்பும் காணாம போகல.. அதனால் இது கண்டிப்பா வெறும் பெண் மோகமா தான் இருக்கணும்.. இல்லன்னா அவன் சைக்கோவா இருக்கணும்" என்று சித்து சொல்ல பென் "அப்போ இன்னும் பெண்களை கடத்துவான்னு சொல்ல வரீங்களா பாஸ்?" என்று அதிர்ச்சியாக கேட்டான்.

"கண்டிப்பா பென்.. நாம இனி தான் ரொம்ப கவனமா இருக்கணும்" என்றவன் வில்லியமிடம் திரும்பி "இன்னும் இதை மறைத்து பயன் இல்லை வில்லியம்.. இப்படி தொடர் கடத்தல், கொலை நடக்கிறது பற்றி மக்களுக்கு தெரிஞ்சே ஆகணும்.. அப்போ தான் அவர்களும் கவனமாக இருப்பாங்க" என்று கூற அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறி விடை பெற்றான் வில்லியம்.

"பாஸ் அப்போ நான் வீட்டுக்கு போகவா?" என்று கேட்ட பென்னை பார்த்து கென்யா சிரித்தாள்.

"உனக்கும் லவ் எல்லாம் வந்திருந்தா அதோட உணர்வுகள் புரியும்" என்றவனை சித்து முறைத்து பார்க்க "இட்ஸ் ஓகே சார்.." என்ற கென்யா வெளியே சென்றாள்.

"லூசாடா நீ?"

"சாரி பாஸ்.. தெரியாம பேசிட்டேன்..."

"அவளுக்கு உணர்வுகள் இருக்கு.. ஆனா அவளுடைய மூளையில் உயிர் நான் கொடுத்தது அவ்ளோ தான் வித்தியாசம்.. இன்னொரு முறை இப்படி காயப்படுத்தி பேசாத"

"சாரி பாஸ்.. சும்மா தான் தெரியாம வார்த்தையை விட்டுட்டேன்.. அவகிட்ட மன்னிப்பு கேட்டுடுறேன்" என்று கென்யாவை தேடி செல்ல சித்துவின் அலைபேசி ஒலித்தது.

அதை உயிர்பித்தவன் "சொல்லு கியூட்டி" என்க "வலிக்குது சித்து... சித்து..." என்று அந்த பக்கம் வலியில் கதறினாள் கனிஷ்கா.

"என்ன ஆச்சு மா? ஐந்து நிமிஷத்தில் வரேன்டா.." என்றவன் "கென்யா..." என்று அழைத்து கொண்டே வெளியில் வந்தவன் அவளையும் பென்னையும் கூட்டி கொண்டு வீட்டிற்கு விரைந்தான்.

அங்கு அவனின் மனைவி பிரசவ வலியில் துடிக்க "கியூட்டி.." என்று நெருங்கியவன் அவளை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.

"சித்து வலிக்குதுடா.. அம்மா... சித்து வலிக்குது சித்து..." அவளின் ஒவ்வொரு கதறலுக்கும் அவளின் கைகளை அழுத்தி சமாதானம் சொல்லி கொண்டிருந்தான் சித்து. பிரசவம் ஒரு பெண்ணுக்கு மறுபிறவி என்று சொல்வதை இப்போது தான் அவன் நேரில் பார்க்கிறான்.

பெண் மருத்துவர் "புஷ்.. புஷ்..." என்று வயிற்றை அழுத்த சொல்ல கனிஷ்காவோ திராணியில்லாமல் மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்தாள்.

"ஒஹ் காட்.. சித்து நீ புஷ் பண்ணு.." என்றவர் அவளின் கன்னம் தட்டி விழிப்பு கொண்டு வர முயல சித்து அழுத்தியதில் குழந்தை வெளி வர அதில் "ம்மா.." என்ற கதறலுடன் தன் மகவை இந்த உலகிற்கு அறிமுக படுத்தினாள் கனிஷ்கா.

கடந்து நான்கு மணி நேர போராட்டத்திற்கு முடிவாக சித்து தான் தன் பெண் குழந்தையை முதன் முதலில் கையில் ஏந்தினான். அந்த பூஞ்சிட்டை தொடும் போதே எதையோ வென்ற உணர்வு அவனுக்கு. கனிஷ்காவை பார்க்க அவளும் அவனை தான் பார்த்தாள்.

"நம்ம பொண்ணு கியூட்டி.. நம்ம இளவரசி.." இதை சொல்லும் போதே அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

"சித்து.." கனி அவனை அதட்ட "நான் இப்போ எவ்ளோ சந்தோஷமா இருக்கேன்னு சொல்ல தெரியல கியூட்டி.. இப்போ என்னை கொன்னாலும் சந்தோஷமா சாவேன்" என்றவனை முறைத்தாள்.

"சரி சரி கியூட்டி.. நான் எதுவும் சொல்லல.. நீ ரெஸ்ட் எடு..." என்றவன் குழந்தையை பென் மற்றும் கென்யாவிடம் காட்டினான்.

"ஹவ் ஸ்வீட் பேபி.." கென்யா தொட்டு பார்த்து பூரித்தாள்.

"பாஸ் மேடம் எப்படி இருக்காங்க?"

"நல்லா இருக்காடா.."

"அவங்க அப்பாவுக்கு இந்த நியூஸ் சொல்ல வேண்டாமா? கிரண் சாருக்கு சொல்ல வேண்டாமா?" என்று கேட்க "எல்லார்கிட்டேயும் நீயே சொல்லிடு.. நான் என் பிரின்சஸ் கூட இருக்க போறேன்" என்றவன் குழந்தையை சுத்தப்படுத்தி விட்டு வந்தவன் தூங்கி கொண்டிருந்த மனைவியின் அருகில் வந்தான்.

அவளின் தலை கோதியவன் "நிறைய முறை உன்னை நான் கட்டாயப்படுத்தி இந்த வாழ்க்கையில் வச்சிருக்கேனான்னு சந்தேகம் வந்திருக்குடா பேபி.. ஆனா இப்போ இந்த நொடி நீ கொடுத்த இந்த பரிசு எனக்கு அந்த சந்தேகமே இல்லாம பண்ணிடுச்சு.. என் வாழ்க்கையில் கிடைச்ச மிகப்பெரிய பொக்கிஷம் நீ தானடா" என்று அவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.

அவனின் ஸ்பரிசத்தை உணர்ந்தவள் "சித்து.." என கூற "இது தான் பேபி.. இந்த வார்த்தை தான் உன் மேல் இன்னும் இன்னும் காதலை கூட்டுது" என்றவன் அலைபேசி சிணுங்கவும் "ப்பா.." என்று அழைப்பை எடுத்தான்.

"காங்கிராட்ஸ் மை சன்.. என்னை தாத்தா ஆக்கியத்துக்கு ரொம்ப நன்றி.." என்று கிரண் சந்தோஷத்தில் திக்குமுக்காட "ப்பா.. போதும் போதும்.. மாமா கிட்ட சொல்லிடீங்களா?" என்று கேட்டான்.

"என்னை விட முத்தையா தான் வானத்துல பறக்குறான்"

"இருக்க தானே செய்யும்.. அவர் பொண்ணு அம்மா ஆகிட்டால்ல"

"அவர் பொண்ணுக்கு குழந்தை பிறந்தது விட ஒரு நல்லவன் மூலமா வந்தது தான் அவன் சந்தோஷத்துக்கு காரணம்.. அதாவது உன் காதல் மீது நம்பிக்கை"

"ப்பா.. இப்படியே சொல்லிட்டு இருந்தா நான் வெட்கத்தில் சிவந்து காணாம போயிடுவேன்.. கனி என் வாழ்க்கைக்குள் வந்தது என் அதிர்ஷ்டம் அவ்ளோ தான்.. நீங்க இங்க வரீங்களா? இல்ல கனியை இந்தியா கூட்டிட்டு வரவா?"

"என்ன அவசரம் இப்போ? ஒரு வருஷம் போகட்டும்.. நானும் அங்கேயே வந்துடுறேன்.. இங்கே எல்லா பொறுப்பையும் நம்பிக்கையான ஆட்கள் கிட்ட கொடுத்துட்டேன்"

"சரிப்பா.. நான் அப்புறம் பேசுறேன்.." என்றவன் அடுத்து வில்லியம் அழைக்கவும் அழைப்பை எடுத்தான்.

"கங்கிராட்ஸ் சித்.. சிஸ்டர் எப்படி இருக்காங்க?"

"ரெண்டு பேருமே நலம்.. கொஞ்சம் நாளைக்கு நீ தான் அந்த கேஸ் பத்தி ஹேண்டில் பண்ணனும் வில்லியம்.. புரிஞ்சிப்பன்னு நினைக்குறேன்" என்று சித்து கூற தான் பார்த்து கொள்வதாக அழைப்பை துண்டித்தான் வில்லியம். அடுத்து வரிசையாக சித்துவின் நலம் விரும்பிகளிடம் இருந்து வாழ்த்து வர "இந்த பென் கிட்ட நீயே பார்த்துக்கோன்னு சொன்னதுக்கு எல்லாரையும் பார்த்துருக்கான்.." என்று சிரித்தவாறே பதில் சொன்னான்.

அழைப்புகள் முடிந்ததும் பென் கொண்டு வந்த உணவை உண்டு முடித்தவன் நார்மல் அறைக்கு மாற்ற பட்டிருந்த தன் மனைவியை காண சென்றான். அவனை தான் அவளும் எதிர்பார்த்திருப்பாள் போலும். அவனை கண்டதும் முகம் மலர "சித்து.." என்று அழைத்தாள்.

"என்னமா கியூட்டி.. இனி உன் பொண்ணை தான் பார்த்துப்ப.. என்னை எல்லாம் உன் கண்ணுக்கே தெரியாது" என்று கூறி கொண்டே அவள் அருகில் அமர்ந்தான்.

"சித்து.." அவள் சிணுங்க தன் மகளை கைகளில் அள்ளி கொண்டவன் அவள் உச்சந்தலையில் முத்தமிட்டு "வெல்கம் டு அவர் வேர்ல்ட் பேபி.. நீ தான் உன் குழந்தை மம்மியை நல்லா பார்த்துக்கணும் போல.. அநியாயத்துக்கு பச்ச குழந்தையா இருக்கா" என்று சிரிக்க அவனின் மகளும் சிரித்து வைத்தாள்.

"ஹே பாரு கியூட்டி.. இன்னும் ஒழுங்கா பார்க்க கூட தெரியல.. ஆனா நான் சிரிச்சதும் உதட்டை பிதுக்கி சிரிக்குறா"

"இப்போ குழந்தை அவளா இல்ல நீயா சித்து? எனக்கே சந்தேகமா இருக்கு"

கனிஷ்கா சிரிக்க அவளின் அருகில் நெருங்கி குழந்தையை அவளிடம் கொடுத்தவன் அவள் பாதுகாப்பாக பிடித்ததும் அவளை தன் மார்பில் சாய்த்தவன் "அவளுக்கு நான் அப்பா.. ஆனா உனக்கு நான் எப்பவுமே குழந்தை தான்.. இப்போ உன் குழந்தைக்கு ஒரு முத்தம் கொடு பார்க்கலாம்" எனவும் வெட்கத்தில் கனியின் முகம் சிவந்தது.

"போ சித்து..."

"நான் வீட்டுக்கு போக தான் போறேன்.."

உடனே அவள் முகம் சுருங்கி விட்டது. "இன்னைக்கு நைட் இங்க இருக்க மாட்டியா சித்து?"

"கொஞ்சம் வேலை இருக்குமா.. கென்யா உன் துணைக்கு இருப்பா.."

"நான் கல்யாணம் பண்ணுனது உன்னையா இல்ல கென்யாவையா? போடா லூசு சித்து.. பொண்டாட்டி மனசு புரியாத உனக்கு எதுக்கு கல்யாணம்? பேசாம அந்த வேலையை கல்யாணம் பண்ணிருக்கலாம்ல.. நான் என் மாமனார் கிட்ட இந்தியாவுக்கே போறேன்.." அவள் முகத்தை திருப்ப சித்துவுக்கு சிரிப்பு தான் வந்தது.

"வர வர வாய் அதிகமா போச்சு.. உன் மாமனாரே ஒரு வருசத்துக்கு உன்னை வேண்டாம் சொல்லிட்டார்.. ஒழுங்கா தூங்கு" என்று வெளியேறி விட கனி தான் அதிர்ந்து போய் பார்த்தாள்.

"இப்படியா பல்ப் வாங்க வைப்பீங்க மாமா? உங்களை இந்தியா வந்து கவனிச்சிக்குறேன்" என்று நினைத்தவள் வேறு வழி இல்லாமல் கென்யாவை துணைக்கு வைத்து கொண்டாள்.

-----

அந்த இருட்டறையில் தன் முகத்தை கூட வெளிச்சத்திற்கு காட்ட பிடிக்காமல் புகை பிடித்து கொண்டிருந்தான் ஜான். அவனின் நினைவு முழுவதும் ஹோட்டல் அறையில் மரித்து கிடந்த பெண்ணின் மீதே இருந்தது. டீனாவை அவன் பாலத்திற்கு அடியில் தான் போட சொன்னான். அங்கு தான் மற்றொரு பெண்ணின் உடல் கிடைத்தது. அந்த பெண் அவனுக்கு நன்கு பரிச்சயம். அவன் தானே கெல்லியிடம் அனுப்பி வைத்தான். இருவரும் ஒரே இடத்தில் கிடந்தால் பிரச்சனை வரும் என்று தான் ஒருத்தியை ஹோட்டல் அறையில் போட சொன்னான். ஆனால் இப்போது அடுத்த பெண்ணை இ
எப்படி பிடிப்பது என்று யோசித்து கொண்டிருந்தான்.

"சார் இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த பெண்ணை இப்படியே வச்சிருக்க போறீங்க? சட்டுபுட்டுன்னு வேலைய முடிச்சிட்டு தூக்கி எறிய வேண்டியது தானே?" என்று தன் ஆள் கேட்க அருகில் கட்டி வைக்க பட்டிருந்தவளை திரும்பி பார்த்தான் ஜான்.

"நம்ம பண்ற வேலை வெளில தெரிஞ்சா எத்தனை வருஷம் தண்டனை தெரியுமா? இருபது வருஷம் உள்ள வச்சு செஞ்சிடுவாங்க.. இவளுக்கு என்ன பெரிய வயசு ஆகிட போகுது? முதல்ல நல்லா அனுபவிக்கலாம்" என்று அவனிடம் கூறி விட்டு அந்த இருட்டறையை விட்டு வெளியே செல்ல அங்கிருந்தவளோ பயத்தில் முகம் வெளிற அவனை பார்த்து கொண்டிருந்தாள்.

தன் அறைக்கு வந்த ஜான் குளித்து விட்டு சட்டையை எடுத்து மாட்டியவன் அலைபேசியை எடுத்து பார்க்க கெல்லி அவனை நான்கு முறை அழைத்திருந்தான். அவனுக்கு திரும்ப அழைப்பு விடுத்தவன் அவன் எடுக்கவும் "என்ன கெல்லி கொஞ்ச நாள் அமைதியா இருக்க முடியலையா?" என்று கிண்டலடிக்க "ஜான் என்னால் முடியல.." என்று கத்தினான் அவன்.

"இன்னும் கொஞ்ச நாளைக்கு நீ பொறுத்து தான் ஆகணும் கெல்லி.. நீ கேக்குற விஷயம் பொறுமையா தான் கிடைக்கும்.. இப்போ பொண்ணுங்க மேல கைய வச்சா எல்லாரும் சேர்ந்து மாட்ட சான்ஸ் இருக்கு.. சித்தார்த் பத்தி உனக்கு தெரியும் தானே.. அவன் வெறும் ஆராய்ச்சி செய்யுறவன் இல்ல இப்போ.. அரசு பதவியில் கூட இருக்கான்.. அதனால் பொறுமையா தான் ஹேண்டில் பண்ணனும்" என்று விளக்க அந்த பக்கம் "சித்தார்த்..." என்று பல்லை கடித்தான் கெல்லி.

"கூல்.. கூல் கெல்லி.. இப்போ வேற வேலைகள் இருந்தா பாரு.. நாம அடுத்த பிசினஸ் மெதுவா ஸ்டார்ட் பண்ணலாம்.. பை" என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு கபோர்டில் இருந்த மதுவை எடுத்து கிளாசில் ஊற்றி சோபாவில் தளர்ந்து அமர்ந்து பருகினான். மது உள்ளே செல்ல செல்ல அவனுக்கு வேறு தேவைகளும் நினைவில் வர அந்த பெண் இருந்த அறைக்குள் சென்று கதவை அடைத்தான்.

இதுவரை அவன் கடத்தியது முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள். ஆனால் எவரும் இந்த நாட்டில் இல்லை. பல நாடுகளுக்கு நாடுகடத்த பட்டிருக்கின்றனர். இவளும் அப்படி போக போகிறவள் தான். ஆனால் அதற்கு முன் தன் அரக்க தனத்தை காட்ட நினைத்தவன் அவளை ஒரு நொடி கூட விட்டு வைக்கவில்லை.

தன் அலைபேசி ஒலிக்க அவளை தள்ளியவன் அதை எடுத்து அழைப்பை இணைக்க "ஜான்.. அடுத்த வாரம் நம்ம பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து கெட்-டுகதர் பார்ட்டி முடிவு பண்ணிருக்கோம்.. ஹோட்டல் அட்ரஸ் மெசேஜ் பண்ணுறேன்.. மறக்காம வந்துடு.." என்று அவன் நண்பன் ரூபன் சொல்ல "கண்டிப்பா மேன்.. எதுவும் ரெடி பண்ணனுமா?" என்று ஜான் கேட்க உள்ளார்த்தம் புரியாதவனா அவன் நண்பன்..

"அது தான் ஸ்பெசல் ஆக இருக்கணும்.." என்று கூறி விட்டு அழைப்பை துண்டித்தான். அருகில் இருந்தவளை திரும்பி பார்க்க அவளோ எதுவோ பேச முயன்று கொண்டிருந்தாள்.

"என்ன சொல்ல வர நீ?"


"என்னை.. என்.. என்னை விட்டுடு.." அவள் கெஞ்ச "ஹாஹா.. ஹாஹா.. ஹாஹா.." அந்த அரக்கனின் சிரிப்பு அந்த இடம் முழுவதும் பேரொலியாய் பிரதிபலித்தது.
 
Last edited:

Asha Evander

Moderator
அத்தியாயம் 4

மருத்துவமனை அறையில் கனிஷ்கா தூங்குவதற்காக படுக்கையை சுத்தம் செய்து கொண்டிருந்த கென்யாவை அமைதியாக பார்த்தாள் கனி. கென்யா தாய்லாந்து பெண் என்பதால் அழகுக்கு ஒன்றும் குறைவில்லை. ஆனால் அவளின் மூளை இன்னொருவரால் செயல் பட்டு கொண்டிருக்கிறது. எப்படி இந்த சூழ்நிலையை இவள் சமாளிக்கிறாள் என்றே கனிக்கு யோசனையாக இருந்தது. அவளிடமே கேட்டு விடலாம் என்றெண்ணியவள் "கென்யா.." என்று அழைத்தாள்.

"எஸ் மேம்.."

"இங்க பக்கத்துல வந்து உட்காரு.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என கனி கூற அவள் தயங்கினாள்.

"மேம்.. இப்போ உங்களுக்கு ரெஸ்ட் வேணும்.. சித்தார்த் சார் உங்களை கவனிக்க சொல்லிட்டு போயிருக்காங்க.. இப்போ பேச வேண்டாம்" என மறுத்தாள்.

"அவன் எல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டான்.. நீ சொல்லு" என கனி கேட்க "எவன் ஒன்னும் சொல்ல மாட்டான்?" என்று கேட்டு கொண்டே உள்ளே வந்தான் சித்தார்த்.

"சித்து.." ஆச்சர்யத்தில் கனி எழும்ப முயல "ஹே.. மெதுவா.." என்று அவளை தாங்கி பிடித்தான்.

"அவசர குடுக்கை.. ஒன்னும் சொல்லுற பேச்சு கேக்குறது கிடையாது.."

கனி மௌனமாக இருக்க கென்யா சிரித்தாள். "அது தான் அவங்களுக்கு அழகு சார்.."

"நீயே கெடுத்து விட்டுடுவ கென்யா.. நீ வீட்டுக்கு போ.. நான் நைட் இங்க இருக்கேன்" எனவும் அவள் வெளியேறினாள்.

"சித்து நான் அவகிட்ட பேசணும்.." கனி பதற "அதை என்கிட்ட கேளு.. இப்போ அவளுக்கும் ரெஸ்ட் வேணும்.. அவளோட சார்ஜ் குறைஞ்சிட்டே இருக்கும்" என்று கூற மறுப்பேதும் சொல்லாமல் அவனின் மார்பில் சாய்ந்தாள்.

"சித்து அவளால் நார்மலா வாழவே முடியாதா?"

"அவ ஏற்கனவே மூளைச்சாவு அடைந்த பெண்.. எப்படி நார்மல் வாழ்க்கை வாழ முடியும்? அவளோட எண்ணங்கள் எல்லாம் ஒருத்தரால் கட்டுப்படுத்த பட்ட விஷயம்.. காதல் எல்லாம் வரலாம் தப்பில்லை.. ஆனால் ஒவ்வொரு முறையும் அவளை அவளே சோதித்து பார்த்துக்கணும்.. இப்போ உன்கூட கொஞ்சம் நேரம் இருந்திருந்தாலும் அவளோட எனர்ஜி குறைஞ்சிருக்கும்.. அதுக்கு அப்புறம் அவள் மொத்தமா மயங்கிடுவா.. அதை கண்ட்ரோல் பண்ணி வச்சிருந்தா அவளும் சில விஷயங்களை நார்மலா பண்ணலாம்"

"அப்போ அவளோட பெற்றோரை பார்க்க முடியாதா?"

"அவ அவங்ககிட்ட பேசலன்னு யார் சொன்னது? தினமும் பேசுறா.. அவங்களுக்கும் சந்தோசம் தான்" என்று கூற கனியின் முகம் வாடியது.

"என்னாச்சு கியூட்டி?"

"என் அப்பா அம்மாகிட்ட மட்டும் என்னால ஒட்டவே முடியல சித்து.. ஒருபக்கம் உன் கூட வாழ்க்கை சந்தோஷமா இருந்தாலும் இன்னொரு பக்கம் கஷ்டமா இருக்கு.."

அவள் சொல்லவும் அந்த வேதனை சித்துவை இதயத்தில் சுட்டது. அவளின் இந்த நிலைமைக்கு காரணம் அவன் அல்லவா? அவர்களை மறந்து போகவும் காரணம் அவன் தானே. அவளை விட்டு விலகியவனை புரியாமல் பார்த்தவள் பின் தன் பேச்சினால் தான் குற்ற உணர்வில் தவிக்கிறான் என்பது புரியவும் அவனை தன்னோடு இழுத்து கொண்டாள்.

"நீ என்னை இங்க கூட்டிட்டு வரலன்னா இப்படி ஒரு சந்தோஷமான வாழ்க்கை கிடைச்சிருக்குமா சித்து? பழைய வாழ்க்கை நரகம்னு நீயே சொல்லிருக்க.. இந்த வாழ்க்கை தான் நான் காதலோடு வாழுறேன்.. என் அப்பா அம்மாவை நான் மறந்தாலும் நீ அவங்கள கை விட மாட்ட.." என்று அவன் மார்பில் முத்தமிட அவன் நெஞ்சம் பூரித்தது. இந்த காதலுக்காக தானே அனைத்தையும் செய்தான். இன்று அதை அடைந்தும் விட்டான்.

இவர்களின் காதலை கண்டு பொறாமை கொண்ட அவர்கள் மகளோ உதட்டை பிதுக்கி சிணுங்கினாள்.

"ஓ.. மை செல்லக்குட்டி.. உன்னை அப்பா மறக்கலடா.. இந்த கியூட்டி கூட கொஞ்சோண்டு ரொமான்ஸ் பண்ணிட்டேன் அவ்ளோ தான்.. நீ தான் என் செல்ல குட்டி.." என்று அவளை தூக்க இப்போது கனி பொறாமையில் வெந்து போனாள்.

"சித்து உனக்கு நான் முக்கியமா? உன் பொண்ணு முக்கியமா?"

அவளின் கேள்வியில் சிரித்தவன் "என் பொண்ணு தான்" என்று கூற சட்டென கனிக்கு கண்கள் கலங்கி விட்டது.

அதை பார்த்தவன் "லூசு கியூட்டி நீ.. எனக்கு என் பொண்ணு முக்கியம் தான்.. ஆனா அவளோட அம்மா என் உயிர்.." என்று சொல்ல "லவ் யூ சித்து.." என்று அவனின் கரம் பிடித்தாள்.

அவனுக்கும் அந்த நெருக்கம் தேவைப்பட்டது தான். மனதளவில் நெருங்கி கொண்டிருந்தாலும் இன்னும் பழைய வாழ்க்கையின் சுவடுகள் கனியின் மனதில் இருக்குமோ என்ற சந்தேகம் இப்போது வரைக்கும் சித்துவுக்கு உண்டு. அவன் ஒன்றும் அவளால் உருக உருக காதலிக்க பட்டு திருமணம் செய்யவில்லையே. கடத்தி கொண்டு வந்தவன் ஒருகட்டத்தில் திருமணமும் செய்து கொண்டான். அவளை குனிந்து பார்க்க அவனின் மார்பில் தூங்கி கொண்டிருந்தாள். அவளின் தூக்கம் கலையாமல் படுக்க வைத்தவன் மகளை தொட்டிலில் கிடத்தினான். வெளியே வரும் போது அவனின் அலைபேசி ஒலித்தது.

அழைப்பை எடுத்தவன் "சொல்லு வில்லியம்.." என்க "சித் நீ எங்கே இருக்க?" என்று கேட்டான் அவன்.

"கனி கூட ஹாஸ்பிட்டலில் இருக்கேன்.." என்று சித்து சொல்ல அவனோ "கென்யாவை யாரோ கடத்திட்டாங்க.. நான் உன் வீட்டிற்கு வரும் போது லேப் வாசலில் அவளை தூக்கிட்டு போறதை பார்த்தேன்" என்று சொல்ல சித்துவுக்கு திக்கென்றது.

"வாட்? நீ சொல்றது உண்மையா வில்லியம்?"

"ஆமா சித்து.. நான் நேரிலேயே பார்த்தேன்.. அவர்களை பின் தொடர்ந்து போகலாம்னு பார்த்தால் அதற்குள் சீப் அழைக்கவும் டிபார்ட்மெண்ட் வந்துட்டேன்.. இங்க அடுத்த அதிர்ச்சியாய் இருப்பத்தைந்து பெண்களை காணலன்னு புகார் வந்திருக்கு"

அனைத்தையும் கேட்கும் போது சித்துவுக்கே அதிர்ச்சியாக இருந்தது. கென்யாவை காப்பாற்ற முடியும் என்று அவனுக்கு தோன்றவில்லை. அவளுக்கு இப்போது எந்த எனெர்ஜியும் இருக்காது. லேப் வெளியில் வைத்து தூக்கியிருக்கிறார்கள் என்றால் இன்னேரத்திற்கு அவள் சார்ஜ் பண்ணிருக்க மாட்டாள். அவனின் படைப்பு அழிய போவதை பொறுத்து கொள்ள முடியவில்லை தான். அதே நேரம் மற்ற பெண்களுக்காகவும் மனம் வருந்தியது. உயிருள்ள எவருக்கும் வலிக்கும் தானே.

"வில்லியம் இப்போ என்ன ஆக்சன் எடுக்க போறீங்க? ஒருத்தன் நம்ம எல்லாருக்கும் தண்ணி காட்டிட்டு இருக்கான்.. இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தால் நமக்கு தான் அவமானம்.." சித்து சொல்ல மறுபக்கம் அமைதியாக இருந்தது.

"வில்லியம்..." சித்து அழைக்க பதில் இல்லை.

"ஹே வில்லியம்.. என்ன ஆச்சு?" சித்து பதற "அவன் செத்து போய் ரெண்டு நிமிஷம் ஆச்சு மிஸ்டர். சித்தார்த்" என்ற குரலில் "நோ..." என்று கத்தியே விட்டான் சித்து.

"நீ கத்தி எந்த பலனும் இல்லை... நீங்க எல்லாம் யாருடா? நான் என்ன பண்ணுனா உங்களுக்கு என்ன? நல்லா கேட்டுக்கோ.. இதோட எல்லாத்தையும் நிறுத்து.. இல்லன்னா போலீஸ் டிபார்மெண்ட் அறைக்குள் வர தெரிந்த எனக்கு ஹாஸ்பிட்டல் ரூம் வரது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல" என்று கூற "யாருடா நீ?" என்று சீறினான் சித்து.

"மிஸ்டர் சித்தார்த் நீங்க இருக்கிற இடத்தில் இருந்து இப்படி கத்தலாமா? நான் யார்னு முடிஞ்சா கண்டுபிடி.." என்று அழைப்பு துண்டிக்க பட்டது.

சித்தார்த் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான். யாரோ அவனை பின்தொடர்வது இப்போது நன்றாக புரிந்தது. தன் நண்பன் வில்லியமை இழந்தது பெரும் வலியாக இருக்க தலைமை மருத்துவரை பார்க்க சென்றான். அவரிடம் பேசி அன்று இரவே மனைவியையும் மகளையும் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான். கனிஷ்கா துருவி துருவி கேள்வி கேட்கும் போது வந்த அழுகையை கட்டு படுத்தியவன் "சித்து.." என அவள் அழைக்க "உன்னால கொஞ்ச நேரம் அமைதியாக வர முடியுமா முடியாதா?" என்று கத்தியே விட்டான்..

கனிஷ்கா அவன் கத்தியதில் அதிர்ந்து பின் வாயே திறக்கவில்லை. அதை கவனிக்கும் நிலையில் சித்து இல்லை. தன் வீட்டிற்கு வந்தவன் பென்னை அவன் மனைவியுடன் வர சொல்லி அவர்களை கனியுடன் தங்க வைத்து விட்டு வில்லியமை பார்க்க சென்றான்.

இரவு நேரத்தில் காவல்துறை மிக வேகமாக செயல்பட்டு கொண்டிருந்தார்கள். அவர்களில் திறமைமிக்க ஒருவன் கொலைசெய்ய பட்டிருப்பது அவர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. சித்தார்த் அங்கு செல்லவும் பத்திரிகையாளர்கள் அவனை சூழ்ந்து கொண்டனர்.

"மிஸ்டர் சித்தார்த் இந்த கொலையை யார் செஞ்சிருப்பாங்கன்னு நினைக்குறீங்க? உங்க நண்பர் அவர்.. இப்போ இந்த சூழ்நிலையில் அரசாங்கம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க?" என்று கேட்கவும் அவர்களை முறைத்தான்.

"என் நண்பன் இறந்து போனதை கேள்விப்பட்டு பதறி வந்தது உங்க கேள்விகளுக்கு பதில் சொல்ல இல்ல.. எனக்கும் இது தொடர்பான நடவடிக்கைக்கும் சம்மந்தம் இல்ல.. அது பெரிய அதிகாரிகள் எடுக்க வேண்டிய விஷயம்.. நான் இயற்கை வள பாதுகாப்பு துறையில் தான் வேலை பார்க்கிறேன்.. காவல் துறையில் இல்ல" என்றவன் யார் கேள்வியையும் பொருட்படுத்தாமல் உள்ளே சென்றான். வில்லியம் உடலை சுற்றி காவல்துறையினர் நிற்க அவனின் மனைவி தன் மகனுடன் கண்ணீர் விட்டு கொண்டிருந்தாள்.

உயர் அதிகாரி சித்துவை கூப்பிடவும் அருகில் சென்றவன் காதில் "இது இங்கேயே யாரோ பண்ணிய கொலை சித்.. இத்தனை பாஸ்வேர்ட் எல்லாம் தாண்டி அலுவலகத்தில் உள்ளே வருவது கஷ்டம்.. நல்லா தெரிஞ்ச ஒருத்தர் தான் கொலையாளி" என்று கூற சித்துவுக்கும் அதே தான் தோன்றியது.

வில்லியமின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தவர்கள் வழக்கம் போல் வேலையை தொடர சித்துவுக்கு என்னவோ உறுத்தி கொண்டே இருந்தது.

அங்கிருந்த காவலாளரிடம் "சீஃப் எங்க இருக்கார்?" என்று கேட்க "அவர் இரண்டு வாரம் லீவ்ல போயிருக்கார்" என்ற பதில் வந்தது.

அப்போதே இந்த கொலை திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்று என உறுதியானது. உயர் அதிகாரி அழைக்கிறார் என்று அலுவலகம் வந்தவனை கொலை செய்யும் அளவிற்கு துணிச்சல் யாருக்கு வந்தது? அதேநேரம் ஊரில் இல்லாத உயர் அதிகாரி அவனை ஏன் அழைக்க வேண்டும்? யாரோ அவரின் பெயரை பயன்படுத்தி பேசவிட்டு கொன்றிருக்கிறார்கள். யாராக இருக்கும்? என்று யோசித்தவனுக்கு தலைவலியே மிஞ்சியது.

வீட்டிற்க்கு செல்லலாம் என்று கிளம்பும் போது ராபர்ட் எதிரில் வந்தான். "சித்து.." என அழைக்க வர "யார் நீ? உனக்கும் எனக்கும் இனி பேச்சே இல்லை" என்றவன் அலைபேசியில் பேசுவதாக குறுஞ்செய்தி அனுப்பி விட்டு வீட்டிற்கு சென்றான். ஏதோ பிரச்சனை என புரிந்த ராபர்ட் அமைதியாக கடந்து சென்றான்.

வீட்டிற்கு வந்த சித்து குளித்து விட்டு பென்னிடம் மட்டும் விஷயத்தை சொன்னான். கேட்டவனுக்கும் அதிர்ச்சி தான்.

"பாஸ் கனி மேம் இங்க இருக்குறது கூட ஆபத்து போலவே" என்று கூற "ஆமா பென்.. அதுக்காக அவளை எங்கேயும் அனுப்பவும் முடியாது.. நீங்களும் கொஞ்ச நாளைக்கு இங்கேயே தங்குங்க" என்று சொல்லி விட்டு அவனின் மனைவியை தேடி சென்றான்.

கனிஷ்கா அவன் வரும் வரை தூங்கவில்லை. அவன் திட்டியதை நினைத்து அழுது கொண்டே இருந்தாள். ஒருநாளும் அவன் இப்படி அவளை திட்டியது இல்லை. "கியூட்டி.." என்று சித்து வர கண்களை துடைத்தவள் கட்டிலின் மறுபக்கம் போய் படுத்து கொண்டாள்.

"சாரி கியூட்டி.." அவள் அவளின் அருகில் சென்று அமர சட்டென எழுந்தவள் "ப்ளீஸ் என்னை தனியா விடுங்க.." என்றாள்.

"அது இல்லமா.. ஒரு எமெர்ஜன்சி.." என்று அவன் பேச வர "நான் உங்ககிட்ட எதுவும் கேக்கல.. இப்போ நீங்க என்னை தனியா விட்டா போதும்" என்று பேசியவளுக்கு அழுகையில் உதடு துடித்தது.

"என்ன கியூட்டி இது?" என்றவன் அவளை நெருங்கி வர பின்னாக சென்றவள் கடைசியில் சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

"பேசுற விஷயத்தை ஒழுங்கா கேட்கணும்.. எப்போவும் இப்படி அடம் பிடிச்சா என்ன பண்றது?" என்றவன் அவள் தோளில் கை போட்டு "ஒரு கேஸ் விஷயமா வெளில போயிட்டேன்.. ரொம்ப முக்கியமான விஷயம்.. அதனால் தான் கத்தி விட்டுட்டேன்.. சாரி.. சாரி.. தோப்பு கரணம் ஏதாச்சும் போடணுமா?" என்று கேட்க "ஒன்னும் வேண்டாம்.." என்று முகத்தை திருப்பி கொண்டாள்.

"கியூட்டி.. ரொம்ப பண்ணுற.. அப்புறம் நீ தான் கஷ்டப்படணும்"

"இப்போ மட்டும் நான் கஷ்டப்படலையா? நீ தான் என்னை கஷ்டப்படுத்துறியே" என்று கலங்க அவனுக்கும் வேறு வழி தெரியவில்லை.

"வில்லியம் இறந்துட்டான்.." அவன் சொல்லவும் "என்ன?" என்று அதிர்ந்தே விட்டாள் கனிஷ்கா.

சித்துவுக்கு தன்னை அடக்குவதே பெரும் பாடாக இருந்தது. இதில் தன்னருகே நடுங்கி கொண்டிருக்கும் மனைவியை எப்படி தேற்றுவது என்றே தெரியவில்லை.

"நிஜமாவா சித்து? அதனால் தான் நீ அழுகையை கட்டுப்படுத்திட்டு இருந்தியா? சாரி சித்து.. ஆனா யாரா இருந்தாலும் சும்மா விடாத.. வில்லியம் அண்ணா கொலைக்கு நியாயம் கிடைச்சே ஆகணும்" என்று கனி சொல்ல "அவன் யாரா இருந்தாலும் தண்டனை தராம விட மாட்டேன்" என்றவன் அவளை தூங்க சொன்னான்.

"தூக்கம் வர மாட்டேங்குது சித்து.."

"எல்லாம் வரும்.. வந்து படு.." என்றவன் கட்டிலில் படுத்து அவளை மார்போடு சாய்த்து தட்டி கொடுக்க அவள் துயில் கொண்டாள்.

சித்துவின் மனம் முழுவதும் அந்த கொலை பற்றியே ஆராய்ந்து கொண்டிருந்தது. உயர் அதிகாரி அழைப்பதாக வந்தவனை கொன்றது யார்? முப்பதுக்கும் மேற்பட்ட பெண்களின் நிலை என்ன? இதில் எத்தனை பேர் சம்மந்த பட்டிருக்கிறார்கள்? மனம் அலைப்பாய்ந்து கொண்டிருக்க தன்னவளை அணைத்து கொண்டான்.

மனைவியின் அருகாமை எப்போதும் அவனுக்கு மனதிற்கு அமைதியை தரும். தன் மார்பில் படுத்து துயில் கொண்டிருந்த மனைவியை தலை கோதி கொண்டிருந்தவன் தொட்டிலில் கிடந்த மகள் சிணுங்கவும் எம்பி தொட்டிலை பார்த்தான். அங்கு அவன் மகள் தூக்கம் கலைந்து கால்களை உதைத்து விளையாடி கொண்டிருந்தாள். மெதுவாக தன் மனைவியை விலக்கியவன் அவள் நெற்றியில் இதமாக ஒரு முத்தத்தை பதித்து விட்டு எழுந்து மகளின் அருகில் சென்றான்.

"என் செல்ல பேபி எழும்பிடீங்களா? அம்மாவை தொந்தரவு பண்ணாம வெளில போகலாமா?" என்றவன் மகளை கைகளில் அள்ளி கொண்டு ஹாலுக்கு வந்தான்.

தன் மகளை தூக்கும் போது எல்லாம் அவன் ஒரு தந்தையாய் எப்போதும் பூரித்து சிலிர்ப்பதுண்டு. இப்போதும் அந்த சிட்டுவின் ஸ்பரிசம் அவனை ஏதோ செய்ய அவளின் மென் பாதத்தில் முத்தமிட்டு நிமிர்ந்து பார்த்தான். அந்நேரம் அந்த சின்ன சிட்டுவின் செப்பு வாய் மலர அதை காண அவனுக்கு கோடி கண்கள் வேண்டும் போலிருந்தது.

"கியூட் பேபி நீ.." என்றவன் தன் கைகளில் வைத்தே அவளை தாலாட்ட அவளோ தூங்காமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

"என்னமா பேபி.. என் செல்லத்துக்கு ஏன் தூக்கம் வரல?" என்று கொஞ்ச "அவ அம்மாவை கொஞ்சாம அவளை கொஞ்சுரல்ல.. அதான் தூக்கம் வரல" என்று முறைத்து கொண்டு நின்றாள் கனிஷ்கா.

"கியூட்டி.. நீ தூங்கலயா?"

"பொண்டாட்டிய ஒழுங்கா தூங்க வைக்க தெரியல.. இதுல பொண்ணுகிட்ட கொஞ்சல் வேற" கனி சிலிர்த்து கொள்ள "பொண்டாட்டியை தூங்க வைக்க கோச்சிங் க்ளாஸ் போக முடியுமா என்ன? பக்கத்துல வந்து தூங்கு" என்றவன் அவள் வாகாக சாயவும் அவளையும் தட்டி கொடுத்தான்.


அவனுக்கே இந்த வாழ்வு நிறைவாக இருந்தது. மனம் நிறைந்த காதலுடன் மனைவி, இப்போது அவர்களின் காதலுக்கு சாட்சியாக ஒரு தேவதை.. வேறென்ன வேண்டும் அவனுக்கு.. ஆனால் அதை எல்லாம் தவிடு பொடியாக்க ஒருவன் திட்டம் தீட்டி கொண்டிருந்தான். அவன் முன் கென்யா முற்றிலும் செயலிழந்து படுத்திருந்தாள்.
 
Last edited:

Asha Evander

Moderator
அத்தியாயம் 5

"நாள்தோறும் ஏதோ மாறுதல்
வானும் மண்ணும் வாழும் ஆறுதல்
பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்

மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன
அதில் ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன

சுடரி சுடரி உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தொடராதே

இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்"

பாடல் வரிகள் இசைதட்டில் ஒலித்து கொண்டிருக்க அமைதியாக அதை உள்வாங்கி கொண்டிருந்தான் சித்தார்த்.

இன்றோடு வில்லியம் இறந்து ஒரு வாரம் ஆகி விட்டது. இருபத்தைந்து பெண்களை கடத்திய செய்தி இன்னும் பரபரப்பாக பேசி கொண்டிருக்கும் நிலையில் அவர்களை பற்றிய எந்த தகவலும் காவல்துறைக்கு வந்து சேரவில்லை.

கடத்தல் துறை தடுப்பு பிரிவு சட்டம் இந்த கடத்தலை செய்தது யார் என்று வலை வீசி தேடி கொண்டிருந்தனர். அவர்களுக்கு இப்போது வில்லியமின் கொலை ஒரு செய்தி போல் ஆகி விட்டது. பெண்கள் கடத்தல் பின்னால் ஓடியவர்களுக்கு அவனின் கொலை விசயம் பின்னுக்கு போய் விட்டது. கென்யாவின் துணையும் இல்லாமல் சித்து நிலை கொள்ளாமல் தவித்தான்.

"சித்து.." என்ற அழைப்பில் தன் யோசனையில் இருந்து மீண்டு திரும்பி பார்த்தான் சித்தார்த். அவனின் மனைவி தான் அவனுக்கான பால் டம்ளருடன் வந்தாள்.

"கியூட்டி.. நீ எதுக்கு எடுத்துட்டு வர? உனக்கு தான் இன்னும் சரி ஆகலையேடா.. போய் ரெஸ்ட் எடு.."

"நான் குழந்தை பெத்துகிட்டா உனக்கு இதெல்லாம் செய்ய கூடாதா?" என்றவள் அவனின் முகத்தை கரங்களில் ஏந்தி "எதுக்கு சித்து இவ்ளோ டென்ஷன் ஆகுற? நீ கென்யாவை தேடு.. வில்லியம் அண்ணாவை யார் கொலை பண்ணினாங்கன்னு தெரியும்.. நீ காவல் துறை இல்ல.. ஜஸ்ட் ஒரு ஆராய்ச்சியாளர் அண்ட் இப்போ இயற்கை வள பாதுகாப்பில் வேலையில் இருக்க.. நீ இப்போ வில்லியம் அண்ணா பத்தி பேசினா உனக்கே ஆபத்தா கூட முடியலாம்.. சோ உன்னோட ஆராய்ச்சி சம்மந்தப்பட்ட கென்யாவை தேடு.. யாருக்கும் சந்தேகம் வராது.. கூல் சித்து.. இந்த பாலை குடி" என கொடுக்க அவளை ஆச்சரியமாக பார்த்த படி பாலை வாங்கினான்.

அவள் சொல்வதும் உண்மை தானே.. இப்போது தேவை கென்யா என்று நினைத்தவன் மறுபடியும் பென்னை அழைக்க அவன் அழுதான்.

"பாஸ் புதுசா கல்யாணம் ஆன ஜோடி நான்.."

"இதையே எத்தனை மாசம் சொல்லுவ.. கிளம்பி வாடா" என சித்து சொல்ல மனைவியிடம் இருந்து வாங்கிய செல்ல முறைப்புடன் சித்துவின் லேப் சென்றான்.

"பென் அன்னைக்கு கென்யாவை கடத்தும் போது நம்ம சிசிடிவி கேமரா எல்லாம் ஆன்ல தானே இருந்துச்சு?"

"எஸ் சார்.."

"அதை இந்த பென்டிரைவ் ல காப்பி பண்ணி புரஜக்டர் ல காட்டு" என்ற சித்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

பென் பிளே பண்ணவும் ஒவ்வொரு ஒளிபதிவையும் கவனமாக பார்த்தான் சித்து.

"இந்த கார் நீ எங்கேயாச்சும் பார்த்திருக்கியா பென்?"

"நோ பாஸ்.."

"கொஞ்சம் பார்வேர்ட் பண்ணு.." என்றவன் பின் "பென் ஸ்டாப்.. இந்த டேட்டூ நான் எங்கேயோ பார்த்திருக்கேன்.. பட் சரியா நியாபகம் வரல.. நீ யார் கழுத்துலயாச்சும் பார்த்திருக்கியா?"

"நோ பாஸ்.."

"சரி நெக்ஸ்ட் பிளே பண்ணு.."

பென் முழுவதுமாக முடிக்கவும் அவர்களுக்கு அந்த கார் மற்றும் டேட்டூ தவிர்த்து எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

"கார் நம்பர் பிளேட் மறைச்சு வச்சிருக்காங்க.. பட் இந்த டேட்டூ வச்சு கண்டு பிடிக்கலாம்"

"எஸ் பாஸ்.."

"நீ என்னடா எஸ் நோ ன்னு சொல்லிட்டு இருக்க.. இந்த பிட்சரை எல்லா டேட்டூ போடுற ஆளுங்களுக்கும் அனுப்பி யார் இதை மாதிரி போட்டதுன்னு விசாரி.. இது மூலமா தான் வில்லியம் மரணத்துக்கும் நியாயம் கிடைக்கும்" என்றவன் கண்கள் கோபத்தில் சிவந்து இருந்தது.

-------------------------------

"சார் இன்னைக்கு நைட் பார்ட்டிக்கு எல்லாமே ரெடி பண்ணிட்டேன் சார்.. எல்லாருக்கும் ரூம் கூட ரெடி" என்று சொல்ல அவனை கூர்ந்து பார்த்தான் ஜான்.

"அந்த இருபத்தைந்து பெண்களும் ரெடியா?"

"அவங்க இன்னும் மயக்கத்துல தான் சார் இருக்காங்க.. லேசர் வளையத்துக்குள் அனுப்பிட்டு இருக்காங்க"

"ஓகே வா பார்க்கலாம்" என்ற ஜான் கழுத்தில் கட்டியிருந்த டையை இறுக்கியவாறே வேக நடை போட்டான்.

அவனின் நடைக்கு ஈடுகொடுத்து பின்னால் வந்தவனும் ஓடி வர அப்போது தான் அந்த பெண்களை வரிசையாக நிறுத்தி கொண்டிருந்தனர்.

"என்ன எல்லாம் ரெடியா? மயக்கம் தெளிஞ்சு போச்சு போலவே.." ஜான் கேட்க அங்கிருந்த பணியாள் திரும்பி பார்த்தான்.

"கொஞ்சம் ஓகே சார்.."

"ஒரு நிமிசம் மட்டும் லேசர் வளையம் அனுப்பிட்டு எல்லாரையும் ஒவ்வொரு ரூமுக்குள் வாயை கட்டி வைங்க.. இன்னும் அரை மணி நேரத்தில் அவங்க ரூமுக்கு போயிடுவாங்க.." என்றவன் அதே வேக நடையுடன் பார்ட்டி ஹால் சென்றான்.

"நோ... நோ பிளீஸ்.." பெண்களின் அலறல் சத்தம் அவனுக்கும் கேட்க புன்னகைத்து கொண்டான்.

"வெல்கம் ரூபன்.. பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு.. வெல்கம் காய்ஸ்" அனைவரையும் வரவேற்று உபசரித்த ஜான் பின் தன் போனில் மூழ்கி விட்டான்.

அரை மணி நேரம் சென்றிருக்கும்.. "சார் ரூபன் ரூம் எங்கேன்னு கேட்கிறார்?" என்று ஒருவன் வர புன்னகைத்து கொண்ட ஜான் அழைத்து செல்லும் படி கண் அசைத்தான்.

அனைவரும் போதையின் வசம் இருக்க அவர்களுக்கு இரையாக்க பட்டனர் அந்த பெண்கள்.

காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம்:

"சார் இந்த பெண்களை கடத்தின கேஸ் எந்த பக்கம் போனாலும் ஒரு க்ளூ கிடைக்க மாட்டேங்குது.. வில்லியம் சார் கேண்டில் பண்ணின கேஸ் அவருக்கு தான் டிடெயில் தெரிஞ்சிருக்கும்.. அவரும் உயிரோட இல்ல.. ஆரம்பத்துக்கே வந்த பீல்" என்று புலம்ப அந்த மீட்டிங்கில் இருந்த அனைவரும் குழம்பினர்.

"முதல்ல மூணு பெண்கள் ஒரே இடத்தில் கடத்த பட்டிருக்காங்க.. அடுத்த இருபத்தைந்து பெண்களும் வேற வேற இடத்தில் இருந்து கடத்த பட்டிருக்காங்க.. கடத்தினது ஒரே கேங்கா? இல்ல நிறைய பேரா? ஒண்ணுமே புரியல.. அந்த பெண்கள் உயிரோட இருக்காங்களா இல்ல ஏதாச்சும் ஆகிடுச்சா? நிறைய கேள்விக்கு பதில் தெரியாமல் திணற வேண்டி இருக்கு.." ஒருவர் சொல்ல

"எக்சாட்லி.. யாராச்சும் ஒருத்தர் உயிரோட மாட்டினா தான் இதுக்கு ஒரு பதில் கிடைக்கும்.. ஏற்கனவே பிரஸர் நிறைய வருது.. இப்போ ஒண்ணுமே பண்ணாம இருக்குற மாதிரி இருக்கு" என்றார் இன்னொரு அதிகாரி.

"இப்போ இதுக்கு என்ன பண்ண சொல்றீங்க? நாம சித்தார்த் கிட்ட இருந்து உதவி எதிர்பார்த்தோம்.. இப்போ அவரோட ரோபோவை கடத்திட்டாங்க.. இதை இப்போ முடிக்கலன்னா போலீஸ் மேல இருக்குற நம்பிக்கை போயிடும்.. தேடுறதை இன்னும் தீவிரப்படுத்த சொல்லுங்க.. குற்றவாளி யாரா இருந்தாலும் தப்பிக்க கூடாது.." என்ற ஆய்வாளர் இன்னொரு தனிப்படை அமைப்பதாக சொல்லி விட்டு கிளம்பினார்.

அனைவரும் குழப்பத்திலேயே இருக்க ஒருவன் மட்டும் அங்கு நடந்ததை யாருக்கோ குறுஞ்செய்தி மூலம் அனுப்பினான்.

--------------------

காலையில் எழுந்த கனி தன் அருகில் சித்து இல்லாமல் இருக்கவும் பால்கனி நோக்கி சென்றாள். அவள் யூகித்த படியே அவன் அங்கு தான் இருந்தான்.

"என்னாச்சு சித்து தூங்கலையா?"

"தூக்கம் வரல கியூட்டி.. எதிலேயோ தோற்ற உணர்வு.. வில்லியம் சாவுக்கு நியாயம் செய்யலன்னு மனசு தவிக்குது.. யார் பண்ணினாங்கன்னு தெரியாம தலையே வெடிச்சிடும் போல இருக்கு" என்றவன் இதழ்களை சிறை பிடித்து கொண்டாள் கனி.

சில நிமிடங்கள் அதில் லயித்தவன் நிமிர்ந்து பார்க்க "இது என் சித்து இல்லயே.. யார் என்ன பண்ணினாலும் எவன் குறுக்கே வந்தாலும் அசால்ட்டா தூக்கி போட்டு போறது தான் என் சித்து.. இப்போ நீ எனக்கு வேற மாதிரி தெரியுற.. வில்சனை தொங்க விட்ட சித்து எங்க? அமைதியாக யோசி சித்து.. உன் நண்பனோட கொலைக்கு நியாயம் கிடைக்கும்.. சரி வா.. கொஞ்ச நேரம் தூங்கு" என்றவள் அவனை வலுக்கட்டாயமாக படுக்க வைத்து அவனை அணைத்து கொண்டு அவளும் படுத்தாள். அவளின் ஸ்பரிசத்தில் அவனும் தூக்கத்தை தழுவினான்.

வில்லியம் - சித்தார்த் வெறும் நண்பர்கள் மட்டுமல்ல.. சித்துவின் வலது கை போன்றவன் அவன். எதற்கு எடுத்தாலும் உதவி என்று வந்தால் முதலில் தேடுவது வில்லியமை தான்.. இன்று அவனை இழந்த துக்கம் சித்துவை பாடாய் படுத்தியது.

இரண்டு மணி நேரம் தூங்கியிருப்பான்.. குழந்தையின் சிணுங்கல் சத்தம் கேட்டு விழித்தான் சித்து. கனி குழந்தைக்கு பாலூட்டி கொண்டிருந்தாள்.

"சாரி சித்து.. எழுப்பிட்டாளா?"

"நீ எப்போ இவளோ மெச்சூர்ட் ஆக பேச பழகின கியூட்டி? உன் குழந்தை தனத்தை ரொம்ப மிஸ் பண்றேன்" என்றவன் அவள் மடியில் படுத்து கொள்ள ஒரு கையில் குழந்தையை பிடித்து கொண்டு மறுகையால் அவனின் தலை கோதினாள்.

"இன்னைக்கு வேலை இல்லையா சித்து?"

"ஒரு முக்கியமான மீட்டிங் இருக்குடா.. முன்னாடி ஒரு பழங்குடி மக்களுக்கு வீடு வசதி எல்லாம் பண்ணி கொடுத்தோம்ல.. இப்ப அங்க கனிமத்தை தோண்டுறோம்னு மரங்களை எல்லாம் வெட்டுறதா புகார் வந்திருக்கு.. அது சம்மந்தமா மீட்டிங்.. வீட்ல பத்திரமா இருடா.. இன்னும் கொஞ்ச நேரத்தில் பென் மனைவி வந்துடுவாங்க.. கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுவாங்க.. சமாளிச்சிக்கோ.." என்றவன் குளித்து கிளம்பி சென்றான்.

பென் அவன் மனைவியை விட்டு விட்டு லேப் சென்று விடவும் கனி அவளுடன் நேரத்தை செலவழித்தாள்.

மீட்டிங் வந்த சித்துவிற்கு அங்கு பெரும் பிரச்சினை காத்து கொண்டிருந்தது. பொதுவாக இப்படி ஏதாவது புகார் வந்தால் அந்த இடத்திற்கு சென்று கள ஆய்வு மேற்கொள்வார்கள். சித்து ஏற்கனவே அங்கு சென்றிருப்பதாக சிலர் சொல்லவும் அவனையே அனுப்ப முடிவு செய்தனர்.

"சித்தார்த் உங்களுக்கு ஏதாவது இதுல பிரச்சனை இருக்கா?"

"பெர்சனல் பிராப்ளம் இருக்கு.. நான் இங்க இருந்தே ஆகனும்.. வேற யாரயாச்சும் அனுப்ப முடியுமா?"

"ரெண்டு வாரம் தானே சித்.. உங்களை தவிர யாரும் தைரியமா அங்கே போயிட முடியாது.."

சில நொடிகள் யோசித்த சித்து "ஓகே ஜென்டில்மென்.. ஐ வில் கோ" என்றவன் பின் அதற்கான ஆவணங்களையும் ஆதாரங்களையும் பெற்று கொண்டு வீடு திரும்பினான்.

அந்த பெரிய பங்களாவில் தன் நண்பர்களுடன் சேர்ந்து குடித்து கொண்டிருந்தான் கெல்லி. அவனின் முன் பல பாட்டில்கள் காலியாக கிடக்க அவனின் நண்பர்களோ அடுத்த பாட்டிலை திறந்தனர்.

"கெல்லி.. இன்னும் எவ்ளோ நாள் காத்து இருக்கணும்? போதை ஏறினாலே பெண்ணும் கேட்குது.. என்ன தான் நிறைய பேரை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இந்த நாட்டில் இருந்தாலும் இந்த விஷயத்துல யாரும் வரது இல்ல.. ஜான் கூட இப்போ நம்மள ஏமாத்திட்டான்" ஜேக் புலம்ப கெல்லி சிரித்தான்.

"அவன் ஒன்னும் நம்மள ஏமாத்தல ஜேக்.. இன்னும் கொஞ்சம் நேரத்துல பாரு உனக்கே ஆச்சர்யமா இருக்கும்" என்றவன் அடுத்த கிளாஸை எடுத்து குடித்தான்.

அப்போது அங்கே ஒரு கார் வந்து நிற்க அதில் இருந்து இரண்டு பேர் இறங்கி வந்தனர்.

"கெல்லி யாரு இங்க?"

"ஹூ ஆஸ்கிங் மை நேம்?" என்று போதையில் தட்டு தடுமாறி எழும்பிய கெல்லி "எஸ் டெல் மி.. ஐ ஆம் கெல்லி" என்று கூறிய அடுத்த நொடி அவனின் மேல் ஒரு பூங்கரம் வந்து விழுந்தது.

"ஹூ இஸ் திஸ்?" என்றவன் அந்த கரத்தை விலக்கி விட்டு நிமிர்ந்து பார்க்க வெள்ளை வெளேரென ஒரு பெண் நின்றிருந்தாள்.

"வாவ் ஜான்.. செம மேன்.." என்றவன் வந்தவர்களை நிமிர்ந்து பார்க்க அடுத்து இரண்டு பெண்களை மீண்டும் தள்ளி விட்டனர்.

"ஹே வாட் இஸ் திஸ்?" மற்றவர்களுக்கும் சந்தோசம் வந்து விட்டது.

"இந்த மூணு பேரும் இனி உங்களுக்கு.. அவர்களை என்ன வேனா பண்ணுங்க.. ஆனா வெளில எங்கேயும் கூட்டி போக கூடாது.. ஜான் சார் ஆர்டர்" என்றவர்கள் வந்த வழியே கிளம்பி விட கெல்லிக்கும் அவன் நண்பர்களுக்கும் சொல்லவா வேண்டும்? அந்த மூன்று பெண்களும் மரண வேதனையை அனுபவித்தனர்.

"சார் சித்து ரெண்டு வாரம் ஆபீஸ் விசயமா கள ஆய்வுக்காக காட்டுக்கு போறான்"

அலைபேசியில் வந்த குறுஞ்செய்தியை படித்த கிறிஸ்டோபர் வன்மமாக சிரித்து கொண்டான்.

கிறிஸ்டோபர் - செல்வமிக்க ஒரு மனிதன். தான் ஒன்று வேண்டும் என்று நினைத்தால் அதை அடையாமல் விட மாட்டான். மது, மாது என பல பழக்கங்கள் இருந்தாலும் தேடி வருபவர்களை மட்டுமே அணைத்து கொள்வான்.. ஜான் மற்றும் கெல்லி மாதிரி தேடி போய் அனுபவிக்க மாட்டான்..

"சித்தார்த்..." என்று வாய்விட்டு சிரித்தவன் "இனி உன் ஆட்டம் என் கையில்.." என்று மேசையில் இருந்த பாட்டிலை எதிர் புற சுவரில் தூக்கி அடித்தான்..

பாட்டில் சில் சில்லாக உடைய அதை பார்த்தவனின் மனம் கொழுந்து விட்டு எரிந்தது.. "உன்னால் தான் இப்போ என் சாம்ராஜ்யம் அழியும் நிலையில் இருக்கு.. உன்னை அழிக்காம விட மாட்டேன்" என்று சூளுரைத்தவன் அறிவானா பழைய சித்தார்த் அவதாரத்தை?

சித்தார்த் காட்டிற்கு செல்ல தன் உடைகளை எடுத்து வைத்து கொண்டிருந்தான். கட்டிலில் கோபமாக அமர்ந்திருந்தாள் கனிஷ்கா.

"என் செல்ல கனிக்கு என்ன ஆச்சு? நான் கிளம்பும் போது இப்படி சோகமா இருந்தால் எனக்கு எப்படி அங்க வேலையை பார்க்க முடியும் டா?"

"அப்போ போகாத.."

"கனி இது என் வேலை சம்மந்த பட்டது.." அவன் குரலில் கோபத்தை உணர்ந்ததும் கனியின் கண்களில் கண்ணீர் வந்தது.

"சித்து நீ மாறிட்ட.." அவள் புறங்கையால் கண்ணீரை துடைக்க அவனுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.

"கனி பிளீஸ் புரிஞ்சிக்க.. எனக்கும் இப்போ ஒரு மாறுதல் வேண்டும்மா.. இங்க இருந்தா கென்யா விசயமா அல்லது வில்லியம் சம்பந்தமா எதுவுமே யோசிக்க முடியல.. ரெண்டு வாரம் தானே.. பிளீஸ் டா.."

அவனை பிரிவது என்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனாலும் அவனுக்காக தன் வருத்தத்தை மறைத்து கொண்டு "போயிட்டு வா சித்து.. ஆனா ஒன்னு புரிஞ்சிக்க.. நீ இல்லாமல் எனக்கு எதுவுமே இல்ல.. பட் நீ இப்போ என்னோட பழைய சித்துவா இல்ல.. காதலை விட கடமை ரொம்ப முக்கியம்னு நினைக்குற சித்து எனக்கு வேண்டாம்.. என்னை கடத்தி வச்சு காதலிச்ச சித்துவை பிளீஸ் எனக்கு குடுத்துடு.." என்றவள் தன் பழைய அறைக்கு சென்று விட சித்தார்த் அதிர்ச்சியாகி நின்றான்.

வில்லியம் கொலை அவனை கனியை விட்டு விலகும் அளவிற்கு பாதிக்கிறதா? இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று நினைத்தவன் அனைத்தையும் பேக் பண்ணி வைத்து விட்டு அவளுடைய அறைக்கு சென்றான்.

கட்டிலில் அமர்ந்து சித்துவின் போட்டோவை பார்த்து கொண்டிருந்தாள். அவனின் மகள் வைஷ்ணவி தொட்டிலில் தூங்கி கொண்டிருக்க அவளை தூக்கியவன் கனியின் அருகில் அமர்ந்தான்.

"பேபி உங்க அம்மா எதுக்காக ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி மாதிரி முகத்தை இப்போ வச்சிட்டு இருக்கான்னு கேட்டு சொல்லுமா.. அப்பா தெரியாம ஒரு தப்பு பண்ணிட்டேன்.. என்னைக்காவது அவளை விட வேலை முக்கியம்னு நினச்சு போயிருக்கேனா? அவளுக்கு முன்னாடியே காதலிச்சு கடத்திட்டு வந்தவன் நான்.. எனக்கும் அவ தான் உயிர்.. இப்போ வில்லியம் கொலை என்னை கொஞ்சம் பைத்தியம் ஆக்கிடுச்சு.. இனி இப்படி ஒரு தப்பு நடக்காது.. பேச சொல்லி கொடு பேபி" என்று குழந்தையிடம் கூறியவன் கனியின் தோளில் சாய அவனை அணைத்து கொண்டாள் கனி.

சித்தார்த் கிளம்பும் போதே பென் வந்திருந்ததால் அவனை இங்கேயே தங்குமாறு சொன்னவன் கென்யாவின் சிப்பை ட்ராக் செய்ய சொன்னான்.

"ஓகே பாஸ்.."


"பார்த்துக்கோடா.." என்ற சித்து மனமே இல்லாமல் கிளம்பி சென்றான்.
 
Last edited:

Asha Evander

Moderator
அத்தியாயம் 6

சித்தார்த் காட்டிற்குள் செல்லவும் ஜான் தனது தொழில் துறை நண்பர்களுக்கு தகவல் கொடுத்து வீட்டிற்கு வர சொன்னான். பின் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பியவன் அவரையும் தங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சொன்னான். சொல்லி முடித்து விட்டு நிமிரவும் அவனையே பார்த்து கொண்டு நின்றிருந்தான் ரூபன்.

"என்ன ஜான் மீட்டிங் எல்லாம் பலமா இருக்கே.. அடுத்து என்ன டார்க்கெட்?"

"ஏற்கனவே கடத்தின முப்பது பேரை தேடி ஒரு படையே அலையுது.. புதுசா எதுக்கு இப்போ ரிஸ்க்? இருக்குற ஆளுங்களை வச்சு வேலையை முடிப்போம் ரூபன்"

"போர் அடிக்கும் டா.." ரூபன் சலித்து கொள்ள ஜான் பலமாக சிரித்தான்.

"போர் அடிக்குதுன்னா சித்து கூட விளையாடிட்டு வரியா? அவன் நண்பனை கொன்னவனை வலை வீசி தேடிட்டு இருக்கான்.. மாட்டினா களி கன்பார்ம்.. சரி அந்த ரோபோ என்ன ஆச்சு?" ஜான் கேட்க ரூபன் "அது என்ன ரியாக்சனும் கொடுக்கல.. ஒருவேளை சார்ஜ் இல்லாமல் இருக்கலாம்" என்றான்.

"அதை சாதாரணமா நினைக்காத ரூபன்.. அது ஒரு உணர்வுள்ள பெண்.. இப்போ மூளை சித்துவின் கட்டுபாட்டில் செயல்படுது அவ்ளோ தான்.. உனக்கே தெரியும் தானே இதற்காக சித்து எவ்ளோ அவார்ட் எல்லாம் வாங்கிருக்கான்னு.. அவ்ளோ சீக்கிரம் விட்டுட முடியாது.. செக் பண்ணிட்டே இரு.. இந்த பெண்களை வெளிநாடு அனுப்ப ஏற்பாடு பண்ணு.. பல கோடி வியாபாரம்" என்றவன் மீட்டிங் வேலைகளை கவனிக்க செல்ல ரூபன் அவன் சொன்னதை செய்ய சென்றான்.

கலிபோர்னியாவில் அடுக்கு மாடி குடியிருப்பில் பதினைந்தாவது மாடியில் தன் முன் வட்ட இருக்கையில் அமர்ந்திருந்தவர்களை கூர்மையாக பார்த்தவாறே ஸ்கீரினில் எதையோ விளக்கி கொண்டிருந்தான் ஜான்.

"காய்ஸ் இது தான் இனிமேல் நாம ஏற்றுமதி செய்ய போகும் லிப்ஸ்டிக் மாடல்ஸ்.. எல்லாமே ஒரிஜினல் பூவின் மணம் அண்ட் கலர் இருக்கும்.. கூடவே இதை அப்ளை பண்ணினால் இருபத்து நான்கு மணி நேரத்திற்கு அழியாது.. லைக் வாட்டர் புரூப்" என்று அதன் மதிப்பு மற்றும் இனி எந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதை பற்றி விளக்கி கொண்டிருக்க கவனமாக கேட்டு கொண்டிருந்தனர் அந்த வெள்ளையர்கள்.

"மிஸ்டர் ஜான் வி லைக் திஸ் பிராடக்ட் அண்ட் இட்ஸ் ஒரிஜினாலிட்டி.. பட் மார்க்கெட் ரேட் விட உங்களோட மதிப்பீடு அதிகமா இருக்கு.. அது தான் யோசிக்க வேண்டிய விசயம்" என்று ஒருவர் சொல்ல

"மிஸ்டர் ரிச்சர்ட்.. இதை பற்றி நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. இது ஒரிஜினல் அண்ட் எந்த கலப்படமும் இல்லாத பிராடக்ட்.. அப்போ அதோட விலைய எங்கள் கம்பெனி எதிர்பார்ப்பது தவறு இல்லையே" என்றான் ஜான்.

அவர்களுக்குள் யோசித்தவர்கள் பின் இந்த பிராடக்ட் அவர்கள் ஏற்று கொள்வதாக சொல்ல அதற்கான ஒப்பந்த ஆவணங்களில் கையெழுத்து இடப்பட்டு நல்ல படியாக முடிந்தது.

"லெட்ஸ் கோ ஃபார் லஞ்ச்" என்று ஜான் அழைக்கவும் அனைவரும் சென்றனர்.

எல்லாரும் அந்த இடத்தை விட்டு அகன்றதும் உள்ளே வந்தார் ஐம்பது வயது மதிக்க தக்க ஒருவர். ஜான்னை பார்த்து அவர் வணக்கம் சொல்லவும் பதில் மரியாதை செலுத்தியவன் "என்ன சார் இன்னும் அந்த வில்லியம் கொலை கேஸ் முடியலையா? ரொம்ப டார்ச்சர் பண்ணுறீங்க.. நீங்க எல்லாம் என்ன தான் பண்ணுறீங்க?" என்று சீறினான்.

"கொஞ்சம் வெயிட் பண்ணு ஜான்.. அவன் காவல்துறையில் பொறுப்பான அதிகாரி.. அவங்க இடத்துக்கே போய் கொலை பண்ணினதை அவ்ளோ சீக்கிரம் மறக்க மாட்டாங்க.. இப்போ இந்த பெண்கள் கடத்தல் விசயத்தில் திசைதிருப்பி விடவும் கொஞ்சம் கவனம் சிதறியிருக்கு.. அதுவும் உன் பக்கம் சாயாம இருக்க நான் நிறைய பண்ண வேண்டி இருக்கு" என்றார்.

அவரை அதிருப்தியாக பார்த்தவன் "சித்துவை நீங்க எதுக்கும் தேடாம இருந்தால் போதும்" என்று கூறி விட்டு பின் அவரையும் அழைத்து கொண்டு தன் அறைக்கு சென்றான்.

"இன்னைக்கு நைட் எல்லாரையும் வெளிநாடு அனுப்ப பிளான் போட்டிருக்கோம்.. உங்க சைட்ல இருந்து எந்த பிரச்சனையும் வர கூடாது" என்றவன் அவருக்கு பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்து விட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

அவனுக்கு மிக அருகில் ஒரு பெண் காயபட்டு இருப்பதை பார்த்து அவருக்கு பரிதாபம் வரவில்லை. மாறாக கண்கள் ஆசையில் மின்னியது. அதை கண்டு கொண்ட ஜானும் அவளை அவர் பக்கம் தள்ளி விட்டு சிரித்து கொண்டே வெளியேறினான்.

சித்தார்த் அமேசான் காடுகளில் பழங்குடியினர் இருந்த இடத்திற்கு வந்திருந்தான். கடந்த முறை வந்திருந்ததை விட இப்போது முன்னேற்றம் தெரிந்தது. மெச்சி கொண்டவன் ரிக்கோவை தேடி சென்றான். இன்றும் அவர்களுக்கு பாதுகாப்பாக அவர் அங்கே தான் தங்கியிருந்தார்.

"ஹே சித் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு மேன்.. ஹவ் ஆர் யூ? கனி அண்ட் பேபி எல்லாம் எப்படி இருக்காங்க?" என்று ரிக்கோ அவனை அணைத்து கொள்ள சித்துவும் அவரை அணைத்து கொண்டான்.

"ஆல் குட் ரிக்.."

"என்னாச்சு சித்? வில்லியம் கேஸ் ல எதுவும் முன்னேற்றம் இருக்கா?" அவனின் முகவாட்டதை கவனித்தே கேட்டார்.

"இல்ல ரிக்.. எங்க ஆரம்பிச்சு எங்கே முடிக்கன்னு தெரியல.. இப்போ கென்யாவையும் தூக்கிட்டாங்க.. அடுத்த கையை இழந்த உணர்வு.." சித்துவின் வருத்தம் அவரையும் பாதித்தது.

"எல்லாம் சரி ஆகிடும் சித்.. உன்னை சுத்தி இப்போ ஒன்னு இல்ல பல எதிரிகள் இருக்காங்க.. அமைதியாக யோசிச்சு பாரு.. எல்லாம் புரியும்.. நீ ரெஸ்ட் எடுத்துட்டு வா.. வேலையை தொடங்கலாம்" என்ற ரிக்கோ மேற்கொண்டு பணியை பற்றி பேச ஆரம்பிக்க சித்துவும் அதில் கவனம் செலுத்தினான்.

அரசாங்கம் ஏற்கனவே முடிவெடுத்து இருந்த படி அங்கே பழங்குடியினருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருந்தனர். மேலும் அவர்கள் அந்த இடத்தை விட்டு செல்ல மாட்டார்கள் என்று அறிந்தே அவர்களை நிரந்தரமாக அங்கு குடியிருக்க செய்தனர். ஆனால் சில மாதங்களாக அந்த காட்டின் மரங்களை வெட்டி திருடுவது நடந்து கொண்டு இருக்க ரிக்கோ தான் கவனித்து அரசுக்கு தெரியபடுத்தியிருந்தார்.

"உங்களுக்கு அவர்களை யார்னு தெரியுமா ரிக்?"

"தெரியல சித்து.. ஆனால் அவர்கள் மூலிகை மருந்து நிறைந்த மரங்களையும் செடிகளையும் வெட்டி கொண்டு செல்வதால் இங்கு அடிப்படை மருந்துக்கு கூட இந்த மக்கள் கஷ்டபடுறாங்க.. எனக்கு தெரிந்து இது வெல் பிளான்ட் மூவ்.. இங்கு இப்படியான மருந்துகள் கிடைக்கும் என்று திட்டமிட்டு எடுத்துட்டு போறாங்க.."

"ஓ.. நான் இன்னும் இரண்டு வாரம் இங்க தான் இருப்பேன் ரிக்.. இன்னைக்கு நைட் யாராச்சும் வராங்களான்னு பார்க்கலாம்.. அதன்பிறகு நடவடிக்கை பற்றி யோசிக்கலாம்" என்றவன் உணவை உண்டு விட்டு படுக்கையில் சரிந்தான். ஆனால் அவன் நினைவு முழுவதும் வில்லியம் தான்.

"யார் கொலை பண்ணியிருப்பாங்க?" என்று யோசித்தவனுக்கு இப்போது இருக்கும் ஒரே விடை கென்யா தான். அவளை கடத்தி சென்றவர்கள் தான் வில்லியமின் கொலைக்கும் காரணம். ஆனால் இப்போது எப்படி கென்யாவின் இருப்பிடத்தை கண்டு பிடிப்பது என்று யோசித்தவன் பின் அன்றைக்கு தனக்கு வந்த மெயில்களை பார்த்து கொண்டிருந்தான்.

சில மெயில் அவனின் அலுவலகத்தில் இருந்து வந்திருந்தது. அதற்கு பதில் அளித்தவன் பின் பென் அனுப்பியவற்றை சரி பார்த்து பதில் அனுப்பியவன் மூன்று வாரங்களுக்கு முன்பு வில்லியமிடம் இருந்து வந்த மெயிலை அவசரமாக திறந்தான்.

ஆனால் அதில் பெரிதாக ஒன்றும் இல்லை. பெண்கள் கடத்த பட்டதை குறித்த அறிக்கை மட்டும் இருந்தது. அது ஏற்கனவே சித்துவிற்க்கு தெரியும் என்பதால் சோர்வாக எழுந்து அமர்ந்தான்.

மீண்டும் மீண்டும் ஆரம்பத்திற்கே வந்த உணர்வு. இப்படியே இருந்தால் பைத்தியம் பிடித்து விடும் என்பதால் கனிக்கு அழைத்தான். ஒரே அழைப்பில் அவள் எடுத்தாள்.

"ஹலோ சொல்லு சித்து.. இன்னும் தூங்கலையா?"

"இல்ல கியூட்டி.. இப்ப தான் சாப்பிட்டோம்.. நீ சாப்பிட்டியா? வைஷு என்ன பண்ணுறா?"

"இப்போ தான் பால் குடிச்சிட்டு தூங்குறா.. சித்து நீ ஓகே தானே? எதும் பிராப்ளம் இல்லயே?"

குரலில் வித்தியாசம் உணர்ந்தே கேட்டவளை நினைத்து பெருமையாக இருந்தது.

"ஒன்னும் இல்லைடா.. ரொம்ப நேரம் டிராவல் பண்ணினது கொஞ்சம் டையர்ட்.." என்றவனுக்கு அவளின் கரிசனையில் கண் கலங்கியது என்னவோ உண்மை.

"ரொம்ப மாறிட்ட சித்து.." என்று தனக்கு தானே சொல்லி கொண்டவன் அவளிடம் சாதாரணமாக பேசி விட்டு அழைப்பை துண்டித்தான்.

அடுத்த நாள் காலையில் அவன் வெளியே வரும் போது இடத்தில் பெரிதாக மாற்றம் இல்லை. ஆனால் ரிக் பதற்றத்துடன் இருந்தார்.

"என்னாச்சு ரிக்? எவ்ரிதிங் ஓகே?" என்று கேள்வியாக கேட்டவனை ஏறிட்டு பார்த்த ரிக் "நேத்தும் மருந்து செடிகளை எடுத்துட்டு போயிருக்காங்க சித்து.. ரொம்ப அரியவகை மூலிகை.. இங்கேயே ரெண்டு இடத்தில் தான் இருந்தது.. ரெண்டுமே எடுத்துட்டு போயிட்டாங்க.. காலையில் ஒருத்தனுக்கு வயிற்றில் ஆழமாக அடி பட்டதால் மருந்துக்கு தேடும் போது கிடைக்கல.. அவன் உயிரும் போயிடுச்சி" என்று கூற அதிர்ச்சியுடன் நிமிர்ந்தான் சித்து.

"நேத்து நைட் எதுவும் சத்தம் வரலையே ரிக்?"

"சத்தம் வரல சித்து.. அவங்க நடந்தே கூட வந்திருக்கலாம்.. மூலிகை செடி தானே.. கைக்குள் அடங்கும்"

"ரிக் உங்களுக்கு யார் மேலேயாவது சந்தேகம் இருக்கா?"

"புதுசா ஆராய்ச்சி தொடங்கியிருப்பது பிரபல டாக்டர் கிறிஸ்டோபர் தான்.. ஆனால் அவர் இந்த அளவுக்கு இறங்குவார் என்பது சந்தேகம் தான்" என்ற ரிக்கோவை "புகழுக்காக என்ன வேணாலும் பண்ணுவாங்க ரிக்" என பதில் அளித்து விட்டு தன் அறைக்கு சென்றான்.

அவன் மனமும் கிறிஸ்டோபர் மேல் சந்தேகம் கொள்ளவில்லை. அவரும் அரசு சார்ந்த மருத்துவ பணியில் இருப்பவர். ஆனாலும் மனம் அரித்து கொண்டே தான் இருந்தது. தன் மடிக்கணினியை எடுத்தவன் அன்றைய செயல்களை குறித்து வைத்து விட்டு வெளியே வந்தான்.

"ரிக் ஒரு வாக் போலாமா?"

"சித்து இந்த இடம் கொஞ்சம் ஆபத்துன்னு உனக்கே தெரியும்" அவர் தயங்கினார்.

"இங்க இருக்குற குகை எல்லாம் தெரியும் ரிக்.. தப்பிச்சிடலாம்" என்றவனுக்கு கனியுடன் குகைக்குள் சென்ற நினைவுகள் வந்து போனது.

அவனை பார்த்து சிரித்த ரிக் அவனுடன் சென்றார். சிறிது தூரம் நடந்தவர்கள் ஒரு குன்றின் மீது அமர அங்கிருந்து பார்த்தால் காடு அழகாக தெரிந்தது.

"அழகான இடம் ஆனால் ஆபத்தும் கூட.." சித்து சொல்ல ரிக் புன்னகைத்து கொண்டார்.

"போகலாமா சித்?"

"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ரிக்.. அதோ அந்த இடத்தில் என்னவோ புகை வருதுல.." என்று தூரத்தில் கை காட்ட ரிக் பார்த்து அதிர்ந்தார்.

"சித்து இது பழங்குடியினர் வசிக்கும் இடம் இல்ல.. ஏதோ நம்ம ஆளுங்க உள்ளே இருக்குற மாதிரி இருக்கு"

"ஆமா ரிக்.. அங்க என்னவோ நடக்குது" என்றவன் வந்த வழியே திரும்பி நடந்தான்.

"என்ன பண்ண போற சித்து?"

"நைட் அங்கே போகலாம் ரிக்.." என்றவன் தன்னிடத்திற்கு விரைந்தான்.

வழக்கம் போல அனைத்தும் மடிக்கணினியில் குறித்து வைத்து விட்டு பென் நம்பருக்கு அழைத்தான்.

"எஸ் பாஸ்..." பென் குரல் கொடுக்க

"பென் வில்லியம் கொல்ல பட்ட அன்னைக்கு ஏதோ கடத்தல் விசயம் பத்தி பேசிட்டு இருந்தான்.. இப்போ முப்பது பெண்கள் காணாமல் போனது பற்றி அவனுக்கு எதுவும் தெரிய வந்துச்சான்னு தெரியல.. அவனோட வீட்டுக்கு போய் ஆதாரம் ஏதாச்சும் கிடைக்குதான்னு தேடி பாரு.. சின்ன க்ளூ கிடைச்சாலும் எனக்கு மெயில் பண்ணி விடு" என்றான் சித்து.

"சுயர் சார்.. இன்னைக்கு நைட் கிளம்புறேன்.."

"கென்யா பற்றி ஏதாவது தெரிஞ்சுதா?"

"அவளோட ஆக்டிவிட்டீஸ் எல்லாம் ஃப்ரீஸ் ஆகிடுச்சு சார்.. மூளை கண்ட்ரோல் பண்ண சிப் கூட ஆக்டிவேட் ஆகல.. அவளோட எனர்ஜி மொத்தமும் டவுன் ஆகிடுச்சு போல.. கொஞ்சம் ஆக்டிவ் ஆனாலும் நாம ட்ராக் பண்ணிடலாம்"

"ஓ.. கண்டிப்பா அவ சீக்கிரம் தகவல் தருவா.. நீ சீக்கிரம் வில்லியம் வீட்டுக்கு போ" என்று அழைப்பை துண்டித்த சித்து ரிக்கோவை தேடி சென்றான்.

"ரிக்.." என அழைத்தவனை நிமிர்ந்து பார்த்தார் ரிக்கோ.

"வாட் சித்து?"

"அந்த புகை வந்த இடம் காட்டு தீயா இருக்க வாய்ப்பு இருக்கா?"

"கண்டிப்பா இல்ல சித்து.. இப்போ காட்டு தீ மேற்கு பக்கமா தான் பரவிட்டு இருக்கு.. இவங்க பக்கம் சான்ஸ் இல்லவே இல்லை.. ஏதோ இல்லீகல் பிசினஸ் பண்ணுற மாதிரி தான் இருக்கு.."

ரிக்கோவின் கூற்றில் குழப்பமே மேலோங்க இன்னும் சிறிது நேரத்தில் பார்த்து விடலாம் என்று நினைத்தான் சித்து. அதையே ரிக்கிடம் சொல்லி விட்டு சென்றான்.

_______

"சார் நீங்க சொன்ன மாதிரியே முப்பது பெண்களோட டெட் பாடி கொண்டு வந்திருக்கோம்.. முகம், கை கால் எதுவும் அடையாளம் தெரியாத மாதிரி பண்ணிட்டோம்.. வாட் நெக்ஸ்ட்?" ஜானின் பி. ஏ கேட்க தன் மொபைலில் மூழ்கியிருந்தவன் நிமிர்ந்து பார்த்தான்.

"எல்லாம் ரெடி தானே?"

"எஸ் சார்.."

"வழக்கம் போல பாலத்தின் அடியில் எல்லார் உடலையும் போட்டுடு.. இங்க இருக்குற பெண்களை உடனடியாக வெளிநாடு அனுப்ப புரோசீஜர் பாலோ பண்ணு.. இன்னைக்கு இந்த நாடே கொந்தளிக்க போகுது.. அந்த கேப்பில் நம்ம வேலையை முடிச்சிடலாம்" என்றவன் அனைவரையும் தனி விமானத்தில் ஏற்ற சொன்னான்.

பி. ஏ அவனுக்கு கொடுக்க பட்ட வேலைகளை முடிக்க செல்ல ஜானின் கண்கள் பண வெறியில் மின்னியது.

"பிரேக்கிங் நியூஸ்... சில நாட்களுக்கு முன்பாக கடத்தப்பட்ட பெண்கள் முப்பது பேரும் கொலை செய்ய பட்ட நிலையில் கண்டெடுக்க பட்டனர். அவர்களின் முகங்கள் சிதைக்க பட்டிருந்தாலும் உடை மற்றும் ஆபரணங்கள் மூலம் உறுதி செய்ய பட்டது" எல்லா நாடுகளின் ஊடகத்தில் வெவ்வேறு மொழிகளில் ஒரே செய்தி பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.

அனைத்து ஊடக சேனல் மற்றும் பத்திரிக்கையாளர்கள் உடல் கண்டெடுக்க பட்ட பாலத்தின் அடியில் முற்றுகை இட சத்தமின்றி அனைத்து பெண்களையும் வெளிநாட்டிற்கு கடத்தியிருந்தான் ஜான்.

"சில்லி பீப்பிள்.." முணுமுணுத்தவன் பழங்களை போர்க் கரண்டி கொண்டு குத்தி வாய்க்குள் நுழைத்து கொண்டிருந்தான்.

______

"சித்து இப்போ அந்த இடத்துக்கு போறது ரிஸ்க்.. யாராவது உதவிக்கு கூட்டி கொண்டு போகலாம்" என்ற ரிக்கை பார்த்து சிரித்தவாறே முன் சென்றான் சித்து.

"நோ நீட்.. அங்க ஏதோ தவறு நடக்குது.. அதை அழிக்கணும்னு இல்ல.. ஆதாரம் கிடைத்தால் போதும்" என்றவன் மொபைலுடன் அந்த இடத்தை நோக்கி முன்னேறினான்.

மெதுவாக அந்த கூடாரத்தை அடைந்தவன் உள்ளே எட்டி பார்க்க அனைவரும் நல்ல தூக்கத்தில் இருந்தனர். வெளியே இன்னும் நெருப்பு புகைந்து கொண்டிருந்தது.

"இவ்ளோ ரிலாக்ஸா தூங்குறாங்க.. பெருசா தப்பு எதுவும் பண்ணலையோ? யார் இவங்க?" என்று யோசித்து கொண்டிருக்கும் போதே பக்கத்தில் சலசலப்பு கேட்க மறைந்து நின்றான் சித்து.

தன் கைபேசியை சைலன்டில் போட்டு கொண்டவன் நிமிர்ந்து பார்க்கும் போது இருட்டில் அவனை தாண்டி ஒரு உருவம் சென்றது.

"யாரா இருக்கும்?"

"டாக்டர் சீக்கிரம் வாங்க.. நீங்க கேட்ட மூலிகை இங்க தான் இருக்கு.." ஒருவனின் பேச்சில் என்னவென்று புரிந்து கொண்ட சித்து அதை தன் கைபேசியில் பதிவாக்கினான்.

"டாக்டர்.."

"யார் இந்த டாக்டர்? ஒருவேளை நேத்து ரிக் சொன்ன மாதிரி கிறிஸ்டோபர் ஆக இருக்குமோ?" அவனின் கணிப்பை சிறிதும் பொய்யாக்காமல் வெளியே வந்தார் டாக்டர் கிறிஸ்டோபர்.

"இவரா?" தன் அதிர்ச்சியை மறைத்து வீடியோவை பென்க்கு அனுப்பி விட்டு கைபேசியை பாக்கெட்டில் வைக்கும் முன் பின்னந்தலை தாக்கப்பட்டு மயங்கி சரிந்தான் சித்து.

அவனின் முன் அகோர சிரிப்புடன் நின்று கொண்டிருந்தார் கிறிஸ்டோபர்.
 

Asha Evander

Moderator
அத்தியாயம் 7

நான்கு மாதங்களுக்கு பின்பு:

காலை நேர பரபரப்பில் அந்த அலுவலகம் செயல்பட்டு கொண்டிருந்தது. பழைய ஆதிக்கம் இல்லாமல் தங்கள் விருப்பப்படி வரவும் போவதுமாக இருந்தனர் அங்கு பணியாற்றி கொண்டிருந்தவர்கள். சித்தார்த் காணாமல் போய் இன்றோடு நான்கு மாதங்கள் முடிந்திருந்தது. ரிக்கோ கொடுத்த தகவலின் படி காட்டுக்குள் சென்று விசாரித்தவர்களுக்கு சந்தேகம் வரும் படி எந்த தவறான தொழிலும் அங்கு நடந்திருக்கவில்லை. அங்கு கூடாரங்கள் கூட இல்லை. ரிக்கோ தான் நடந்த எதையும் நம்ப முடியாத அதிர்ச்சியில் இருந்தார். அவர் கண் முன் சென்றவன் பின் திரும்பி வரவே இல்லை.

சித்தார்த் இல்லாதது அங்கிருந்த பலருக்கும் சாதகமாக போய் விட்டது. அவன் இருந்த போது பயந்தவர்கள் எல்லாம் தைரியமாக தவறுக்கு துணை போக ஆரம்பித்து விட்டனர். இன்றும் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் முக்கியமான மீட்டிங்கில் இருந்தனர்.

"சார் வில்லியம் கொலை கேஸ் அண்ட் சித்தார்த் கடத்தல் இரண்டிற்கும் தொடர்பு இருக்குமான்னு விசாரிக்க சொல்லியிருந்தோம்.. ஆனால் கிடைத்த தகவல் படி அதற்கு எந்த சம்பந்தமும் இல்லைன்னு ரிப்போர்ட் வந்திருக்கு"

"அது எப்படி இல்லாம இருக்கும்? எதற்காக கடத்த பட்டார் அப்படின்னு ஒரு சின்ன க்ளூ கூட இல்லாம நாம கேஸ் களோஸ் பண்ண முடியாது மிஸ்டர். சார்லி.. நான்கு மாதங்கள் ஆகிடுச்சு.. இன்னும் ஒரு சின்ன தகவல் கூட இல்ல.. சித்தார்த் உயிரோட இருக்காரா இல்ல இறந்துட்டாரான்னு தெரியாம இதை முடிக்க முடியாது.. ரிக்கோ சொன்ன மாதிரி டாக்டர் கிறிஸ்டோபர் விசாரிக்க சொன்னேனே என்ன ஆச்சு?"

"டாக்டர் கிறிஸ்டோபர் தன்னோட ஆராய்ச்சி காரணமாக நெதர்லாந்து போயிருக்கிறார்.. ஐந்து மாதங்களுக்கு முன்னால் சென்றவர் இன்னும் வரல"

"வாட்? பட் சித்தார்த் பி. ஏ கொடுத்த வீடியோவில் டாக்டர் கிறிஸ்டோபர் முகம் தெரியுற மாதிரி இருக்கே"

"அதை ஆதாரமாக வைத்து தான் விசாரிக்க போனோம் சார்.. ஆனால் கிறிஸ்டோபர் நெதர்லாந்து ஐந்து மாதங்களுக்கு முன்பே போனதற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கு.. ஒருவேளை டாக்டரை மாட்டி விட அவரை போல் நடித்து சித்தார்த்தை கடத்தியிருக்கலாம்"

ஊகங்கள் அடிப்படையில் அனைவரும் விவாதித்து கொண்டிருக்க அவர்களால் முடிவுக்கு தான் வர முடியவில்லை. ஒன்றுக்கு பின் ஒன்றாக தவறுகள் நடந்து கொண்டே இருக்க தலையை பிடித்து கொண்டனர் அனைவரும்.

ஆனால் இதற்கும் இடையில் சந்தோசமாக இருந்தது இரண்டு பேர் தான். ஜான் மற்றும் டாக்டர் கிறிஸ்டோபர். செய்த தவறுகளை ஆதாரம் இல்லாமல் முடித்து விட்டவர்கள் தங்கள் உலகில் சந்தோஷமாக சஞ்சரித்து கொண்டிருந்தனர்.

"டாக்டர் இன்னும் எத்தனை நாள் ஆகும்? இவனை வைத்து தான் கென்யாவின் சுய உணர்வை கொண்டு வர முடியும்.." ஜான் கையில் ஓட்காவை வைத்து கொண்டு பார்வையால் பக்கத்தில் இருந்தவனை பார்த்து கேட்டான்.

"இன்னும் ஒரு வாரத்தில் நம்ம வேலை முடிந்து விடும் ஜான்.. கென்யாவை இப்போ ஆக்டிவேட் பண்ண முடியாது.. சிப் வச்சு ட்ராக் பண்ணிடுவாங்க.. ஆனால் இவனை வைத்து நம்ம பிசினஸ் ஹை லெவலுக்கு கொண்டு போயிடலாம்" என்று சிரித்தார் கிறிஸ்டோபர்.

இருவரும் இப்போது நெதர்லாந்து நாட்டில் அருபா தீவில் தங்கள் முன் அமர்ந்திருந்தவனை கேலியாக பார்த்தனர். அவனால் அவர்கள் பேசுவதை கேட்டாலும் எதிர்த்து நிற்க முடியாத அளவிற்கு மருந்துகளால் கட்டு படுத்தி வைத்திருந்தனர். அவனின் மனமோ இந்த தீவை விட்டு ஓட சொன்னது. அவனின் கண்முன் மனைவியும் குழந்தையும் தெரிந்தனர். ஆனால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. முற்றிலும் செயல் இழந்து போய் அமர்ந்திருந்தான் அவன். சித்தார்த்.

பல ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக செய்து முடித்தவன். அரசு வேலையில் இருந்தவன். காதலித்து மணந்த மனைவியையும் மகளையும் பிரிந்து கடந்த நான்கு மாதங்களாக மனதளவில் தவித்து கொண்டிருந்தான்.

நான்கு மாதங்களுக்கு முன் நடந்தவை அவன் கண் முன்னால் தோன்றியது. அன்று டாக்டர் கிறிஸ்டோபர் தான் மூலிகைகளை திருடுவது, அந்த கனிமத்தை தோண்டுவது என தெரிய வரவும் அதை விடியோ எடுத்து பென்னுக்கு அனுப்பியவன் திரும்பும் முன் அவன் தலையை ஏதோ தாக்கியது. மயங்கி சரிந்தவன் முன் சிரிப்புடன் நின்றிருந்தார் கிறிஸ்டோபர். அவன் அருகில் ஜான் கண்களில் வெறியுடன் நின்றான்.

"பெரிய வேலை எல்லாம் பாக்குறான் போல.. இன்னையோட இவனுக்கு முடிவு கட்டுறேன்" என்று முன்னேறிய ஜானை தடுத்த டாக்டர் சிரிப்புடன் "ஒரேயடியா சாகுறதை பார்க்கவா கஸ்டபடுறோம்? கொஞ்சம் கொஞ்சமா அவன் உயிர் போகனும்.. நீ உடனே அருபா தீவுக்கு இவனை கொண்டு போக ரெடி பண்ணு" என்றார்.

"கிறிஸ்டி புரியல.. எதுக்காக இவனை உயிரோட விடுற?"

"உயிரோட விடுறேன்னு யார் சொன்னது?" என்று சிரித்த கிறிஸ்டோபர் சில மூலிகைகளை கசக்கி பிழிந்து சித்தார்த்தின் வாயில் புகட்டவும் அவன் உடல் தூக்கி தூக்கி போட்டது. சிறிது நேரத்தில் அவனின் உடல் அடங்கவும் ஜான் ஆச்சர்யமாக பார்த்தான்.

"சாகல.. ஆனா அவனால் ஓர் அடி கூட நகர முடியாது.. நீ சொன்ன வேலையை பாரு.." என்று ஜானிடம் கூறிவிட்டு அவனின் அருகில் சென்றான்.

"வெல்கம் டூ மை வேர்ல்ட் சித்து.. உனக்கு நியாபகம் இருக்கா? என்னோட தம்பி வில்சனை நீ தான் கொன்ன.. அப்போவே முடிவு பண்ணிட்டேன் உன் அழிவு என் கையில் தான்னு.. இத்தனை மாதங்கள் கட்டம் கட்டி தூக்கியிருக்கேன்.. நீ சாக மாட்ட.. ஆனால் மரண வலியை அனுபவிக்க போற.." என்றவன் அடுத்த இரண்டு நாளில் நெதர்லாந்து பறந்திருந்தார். ஒரு ஆதாரமும் விட்டு வைக்கவில்லை. செய்த அனைத்தையும் நேர்த்தியாக முடித்திருந்தார்.

சித்தார்த்க்கு அனைத்தும் நினைவில் இருந்தது. ஆனால் அவன் தினமும் கொடுக்கும் மூலிகை மருந்தின் சக்தியால் ஒரு இன்ஞ் கூட நகர முடியவில்லை.

தன் கையில் இருந்த ஓட்காவை பருகிய ஜான் "இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி உயிருள்ள ஜடமா வச்சிருக்க போற கிறிஸ்டி.. இந்த நான்கு மாதத்தில் இவனால் ஒரு உபயோகமும் இல்லை" என்று சலித்து கொண்டான்.

"இவனால் நமக்கு என்ன லாபம் வேண்டும் ஜான்? வில்லியம் கொலை கேஸ் இப்போ விசாரிக்க படல.. முப்பது பெண்களின் கொலை கேஸ் முடிஞ்சு போச்சு.. என் ஆராய்ச்சி தடை இல்லாமல் நடக்குது.. உன் பிசினஸ் பிரச்சனை இல்லாமல் போகுது.. வேற என்ன வேண்டும்? இதுவரை சித்தார்த் கடத்தல் கேஸ் கொலை கேஸ் ஆகணும்னு ஆசை படுறியா? ஆனா எனக்கு இதுவே போதும்.. என் தம்பியை கொன்ற இவனுக்கு நரகத்தை காட்டினால் போதும்.. இவன் உயிர் எனக்கு வேண்டாம்.. அவனோட வலி அவனின் மனைவியும் குழந்தையும் தான்.. அவர்களை விட்டு பிரிச்சாச்சு.. நிரந்தரமாக இப்படி தான் இருக்க போறான்.. உனக்கு விளாடனும்னா நல்லா இவன் கூட பிளே பண்ணு.. உணர்வு இல்லாத ஒரு ஸ்டம்ப்" என்ற கிறிஸ்டோபர் சித்தார்த்தை அறைந்து விட்டு நகர்ந்தான்.

கண்களில் கோபம் கனன்ற போதும் ஒரு உணர்வும் காட்டாத சித்தார்த்தை பார்த்து வாய் விட்டு சிரித்தான் ஜான்.

"உண்மை தான்.. உன்னை சாகடிப்பதை விட இந்த கேம் நல்லா இருக்கு" என்றவன் அவன் வாயில் ஓட்காவை திணித்து ஊற்ற சித்துவுக்கு உடல் தூக்கி போட்டது.

"ஆயுர்வேத மருந்து எடுத்துட்டு இருக்கும் போது ஆல்கஹால் எடுத்தால் இது தான் நிலமை" என்று சிரித்தான் ஜான். சித்தார்த் கண்களில் கொலைவெறி தாண்டவமாடியது.

பென் தன் மனைவியை கனிஷ்காவுக்கு துணையாக வீட்டில் இருத்தி விட்டு லேப் சென்றான். ஒரே ஆளாக அனைத்து வேலைகளையும் செய்வது மிக கடினமாக இருந்தது. ஆனாலும் அவனின் பாஸ் சித்துவிற்காக செய்தான்.

இரண்டு வாரத்தில் திரும்ப வருவேன் என்று சொல்லி சென்ற சித்து அனுப்பிய விடியோ மூன்றாம் நாள் கிடைத்த போதே அவனை தொடர்பு கொள்ள முயன்ற போது அலைபேசி அணைத்து வைக்க பட்டிருந்தது. சந்தேகம் வர காவல் துறையை அணுகிய போது தான் ரிக்கோவும் புகார் அளித்திருந்தார். ஆனால் அவர் சொன்ன இடத்தில் போய் விசாரித்த போது அப்படி கூடாரங்கள் இருந்த தடயமே இல்லை.

சந்தேகம் வந்த அனைவர் மீதும் புகார் அளித்தான் பென். வீடியோவில் கிறிஸ்டோபர் இருந்தார் என்று கூறிய போது அவர் நெதர்லாந்து சென்று ஒரு மாதம் ஆகி விட்டதாக தகவல் வந்தது. வில்லியம் கொலை தொடர்பாக கடத்த பட்டிருக்கலாம் என்று வில்லியமின் வீட்டை நோக்கி சென்றால் அங்கு அவனின் குடும்பம் வேறு நாட்டிற்கு சென்று விட்டிருந்தது.

அனைத்தையும் விட அவனுக்கு கனியை சமாளிப்பது தான் பெரிய விசயமாக இருந்தது. இரண்டு வாரங்களின் முடிவில் சித்து எங்கே என்று கேட்க ஆரம்பித்து விட்டாள். அவளால் அவனில்லாமல் ஒரு அணுவும் அசையாது. அதை பென் அறிந்தவன் என்பதாலும் இப்போது தான் குழந்தை பிறந்த உடம்பு என்பதாலும் ஒரு மாதம் வரை சித்துவிற்க்கு வேலை இருப்பதாக கூறி சமாளித்தான். சிக்னல் இல்லாமல் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றான். ஆனால் ஒரு மாதம் கழித்து அவளுக்கு பயம் வர ஆரம்பித்து விட்டது.

பொறுத்து பார்த்தவன் ஒரு நாள் அமைதியாக அவன் காணாமல் போய் விட்டதை எடுத்து கூறினான். அதிர்ச்சி தாங்காமல் மயங்கி விழுந்தவளை மருத்துவமனைக்கு தூக்கி சென்று திரும்பி கொண்டு வருவதற்குள் பென் பாதி உயிர் ஆகியிருந்தான்.

இதோ நான்கு மாதங்கள் முடிந்து விட்டது. இன்னும் சித்தார்த்தை கண்டு பிடிக்க முடியவில்லை. கனிஷ்கா எப்போதும் சித்துவின் புகைப்படத்தை வெறித்து பார்த்து கொண்டிருப்பவள் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டால் மட்டும் பால் கொடுப்பாள். மற்றபடி குழந்தையையும் அவளையும் கவனித்து கொள்வது பென்னின் மனைவி தான்.

தனக்கான வேலைகளை கொஞ்சம் முடித்தவனுக்கு சித்தார்த்தின் நினைவில் கண்கள் கலங்கியது. அவனும் நிறைய முயற்சி செய்து விட்டான். ஆனால் ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இவனின் அழுத்தத்தில் மட்டும் தான் இன்னும் காவல் துறை சித்துவின் கேஸை க்ளோஸ் பண்ணவில்லை. இல்லையென்றால் அவன் மரித்து விட்டான் என்று எப்போதோ மூடியிருக்கும்.

"கென்யா நீயாவது சிக்னல் தரலாமே" என்று மனதிற்குள் எண்ணியவன் மிச்சமிருந்த வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பினான். அங்கு சித்துவின் தந்தை வந்திருக்க "அங்கிள்..." என்று அவரை அணைத்து கொண்டான். சிறிது பலம் வந்த மாதிரி இருந்தது.

"எப்போ வந்தீங்க அங்கிள்?"

"இரண்டு மணிநேரம் முன்னாடி தான் பென்.. இந்தியாவில் இருந்து என்னால் கஷ்டப்பட முடியல.. அதான் இங்க வந்துட்டேன்"

"பாஸ் பத்தி ஒரு தகவலும் இல்ல அங்கிள்.."

"அவன் ரொம்ப ஸ்ட்ராங் பென்.. சீக்கிரம் கண்டு பிடிச்சிடலாம்" என்ற கிரண் மருமகளின் அறைக்கு சென்றார்.

அங்கு அவளின் துடிப்பு அடங்கி, குறும்பு தனம் மறைந்து, தேகம் ஒடுங்கி பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தாள். கிரணை பார்த்ததும் "மாமா.." என்று கதறினாள்.

அவளை அணைத்து கொண்டவர் "ஒன்னும் இல்லைடா.. சித்து ஆல்வேஸ் ஸ்ட்ராங்.. அவனோட மனைவி நீயும் அப்படி இருக்க வேண்டாமா? சித்து திரும்பி வரும் போது இப்படி ஒல்லியா இருந்தால் அவனின் கியூட்டி எங்க போயிட்டான்னு எங்களை தான் திட்டுவான்.." என்று கூற "கியூட்டின்னு சித்து சொல்ல கேட்டு நாலு மாசம் ஆச்சு மாமா.." என அழுதாள்.

அவர்களின் காதலின் ஆழம் அறிந்தவர் என்பதால் அவருக்கும் கண்கள் கலங்கியது. ஆனால் இப்போது அவரும் உடைந்தால் அவளை தேற்றுவது கஷ்டம் என உணர்ந்து "மாமா சொன்னா கேட்ப தானே கனி? சித்து உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டான்.. நீங்க தான் அவனோட உயிர்.. கண்டிப்பா திரும்ப வருவான்.. அதுக்கு நீ தைரியமா இருக்கணும்.. நீ இறந்ததா சொன்ன போது அவன் எத்தனை வருசம் காத்துட்டு இருந்தான்னு தெரியும் தானே.. உங்க காதலை அவ்ளோ சீக்கிரம் யாரும் அழிக்க முடியாதுமா.. வா சாப்பிடலாம்.. வைஷு பாவம்ல" ஒருவழியாக அவளை சமாதான படுத்தி சாப்பிட வைத்தார்.

சாப்பிட்டு முடிந்ததும் பென் அறைக்கு வந்தவர் "டாக்டர் கிறிஸ்டோபர் இப்போ எங்க இருக்காருன்னு தெரியுமா பென்? ட்ராக் பண்ணுனியா?" என்று கேட்டார்.

"அவர் நெதர்லந்துல இருக்கார் அங்கிள்.. இதோ அவரோட லொகேஷன்.." என்று அவன் காட்டியதை பார்த்தவர் "இது அருபா தீவு தானே" என்று கேட்டார்.

"எஸ் அங்கிள்.."

"என்ன மாதிரியான ஆராய்ச்சி?"

"அது தொடர்பான எந்த தகவலும் இன்னும் வெளி ஆகல அங்கிள்"

"ஓ.. ஓகே.. கென்யா பத்தி ஏதாவது தெரிந்ததா?"

"நோ.. அவளை இன்னும் யாரும் ஆக்டிவேட் பண்ணல"

"டாக்டர் கூட வேற யாராவது இருக்காங்களான்னு ட்ராக் பண்ணி சொல்லு பென்.. எனக்கு அந்த டாக்டர் மேல தான் சந்தேகமா இருக்கு.."

"நானும் சந்தேகத்தில் விசாரிச்சேன் அங்கிள்.. ஆனால் பாஸ் கடத்த பட முன்னாடியே டாக்டர் நெதர்லாந்து போனதற்கான எல்லா ஆதாரங்களும் இருக்கு.."

"ஆதாரங்களை எப்படி வேணும்னாலும் மாத்தலாம் பென்.. நீ எதுக்கும் இன்னொரு முறை விசாரி.. நாளைக்குள் எனக்கு டீடெயில் வேணும்"

"ஓகே அங்கிள்" என்ற பென் அதற்கான வேலையில் இறங்கினான்.

அவன் விசாரித்த வரையில் கிறிஸ்டோபர் அனைத்து ஆதாரங்களையும் பக்காவாக தயார் நிலையில் வைத்திருந்தார். சித்துவின் கடத்தலுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இருந்த மாதிரி தெரியவில்லை. வேற என்ன செய்வது என்று யோசித்தவன் மூளையில் திடீரென்று பளிச்சிட்டது அந்த விஷயம்.

சித்தார்த் கடத்த படுவதற்கு முன் வில்லியம், பென், சித்தார்த் அவர்களின் லேபில் இருந்த போது ஜான் என்பவன் பெண்கள் விசயத்தில் கொஞ்சம் பலகீனமானவன் என்று பேசியது நினைவில் வந்தது.

அவனாக ஏன் இருக்க கூடாது?

உடனே கிரணை அழைத்தான். அவர் வந்தவுடன் தனது சந்தேகத்தை முன் வைத்தான்.

"அங்கிள் அந்த ஜான் சித்தார்த் பாஸ் கூட வேலை செய்யுறவர் தான்.. ஆனால் பெண்கள் விசயத்தில் அப்படி இப்படி என்று வில்லியம் சொல்லிருக்கார்.. இந்த கடத்தலில் ஜான் சம்பந்தப்பட்டு இருக்க வாய்ப்பு நிறைய இருக்கு.. சித்து பாஸ் கூட பெண்கள் கடத்தல் பற்றி தான் விசாரித்து கொண்டிருந்தார்" என்று கூறவும் கிரண் யோசித்தார்.

"இப்போ அந்த ஜானை ட்ராக் பண்ண முடியுமா பென்?"

"சுயர் அங்கிள்.. அவரோட போன் நம்பர் என்கிட்ட இருக்கு" என்றவன் அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஜானும் அரூபா தீவில் இருப்பதாக கூறினான்.

"கண்டிப்பா சித்துவும் அங்க இருக்க சான்ஸ் இருக்கு பென்.. இது அந்த டாக்டர் அண்ட் ஜான் பண்ணின கேம் தான்" என்றவர் தனக்கு தெரிந்த டிடெக்டிவ் ஏஜென்சி உரிமையாளருக்கு அழைத்தார். அவருக்கு தேவையான தகவலை கொடுத்ததும் பென் மற்றும் கிரண் நெதர்லாந்து கிளம்பினர்.

கனியை பென்னின் மனைவியுடன் பாதுகாப்பாக இருக்க சொன்னவர்கள் அவளிடம் விசயத்தை பகிர்ந்து விட்டு தான் சென்றனர். அவளின் நிலமை இந்த நான்கு மாதத்தில் கண்கூடாக கண்டதால் சித்து வருவான் என்ற நம்பிக்கையை அளித்து விட்டே விமானம் ஏறினர்.

அடுத்த பதிமூன்று மணி நேரத்தில் அவர்கள் ஜானின் அலைபேசி எண்ணை வைத்து அவன் இருந்த இடத்திற்கு வந்தனர். ஆனால் அதற்கு முன்பே ஜானும் கிறிஸ்டோபரும் சித்தார்த்தை அவ்விடத்தில் விட்டு விட்டு வேறு இடத்திற்கு சென்றிருந்தனர்.
 

Asha Evander

Moderator
அத்தியாயம் 8

ரம்மியமான இரவு பொழுதில் பால்கனியில் தன் மகளை மடியில் வைத்து கொஞ்சி கொண்டிருந்தவன் "சித்து.. இங்க வாயேன்" என்ற மனைவியின் அழைப்பில் ஏழு மாத மகள் வைஷ்ணவியை தூக்கி கொண்டு தங்கள் அறைக்கு சென்றான். அறையில் அவளை காணாமல் "கனி.." என்று அழைத்து கொண்டே வெளியே வர "சித்து இங்க மாட்டிக்கிட்டேன்" என்ற குரல் அவனின் கண்ணாடி அறையில் இருந்து வந்தது.

அவனின் மனைவிக்கு எப்போதும் அந்த கண்ணாடி அறை எதிரி தான். வந்த நாள் முதல் எந்த பக்கம் கதவு இருக்கிறது என்பது இன்னும் புரியாத புதிர் அவளுக்கு.

"இன்னுமா டோர் ஓபன் பண்ண தெரியல? சைட்ல இருக்குற செகண்ட் பட்டனை கிளிக் பண்ணு.. ஓபன் ஆகும்" என்று சிரித்து கொண்டே கூற அவசரமாக அவன் சொன்ன பொத்தானை அழுத்தினாள். கதவு திறந்து விட அவனிடம் ஓடி வந்தவள் "இப்போ அந்த கதவு தேவை தானா?" என்று அவனின் கன்னத்தில் கிள்ளி விட்டு மகளை தூக்கி கொண்டு சென்றாள். அவளின் ஸ்பரிசத்தில் தன்னை தொலைத்தவன் "கனி இன்னைக்கு நைட் ப்ளீஸ்.." என்று கேட்க அந்த பக்கம் சத்தம் வராமல் போகவும் சென்று பார்த்தவன் மௌனமாக சிரித்து கொண்டான்.

அவனின் மனைவி கட்டிலில் அமர்ந்து மகளை மடியில் வைத்து விளையாட்டு காட்டி கொண்டிருக்க மகளோ அவளுக்கு போக்கு காட்டி அங்கும் இங்கும் ஓடி கொண்டிருந்தாள்.

"வைஷு அப்படியே உன் அப்பா மாதிரி தான் இருக்க.. ஒரு இடத்தில இருக்கிறியா பாரு.." என்று மகளை அள்ளி கொண்டாள். அவளின் செயலில் கதவோரம் நின்று கொண்டிருந்தவனுக்கு உதடுகள் விரிந்தன.

இதை தான் அவன் கிறிஸ்டோபரின் கட்டுப்பாட்டில் இருந்த போது அதிகம் மிஸ் செய்தான். இன்று அவனின் பொக்கிஷங்கள் அவன் கையில். இதை விட வேறென்ன வேண்டும் அவனுக்கு?

மனதின் ஓரம் அந்த நாட்கள் உறுத்த அதை போக்க தன்னவளின் ஸ்பரிசத்தை தேடி சென்றான். எத்தனை காலங்கள் ஆனாலும் அவனை அமைதி படுத்துவது அவளின் ஸ்பரிசம் மட்டுமே..

"ஹே குட்டி பேபி.. அம்மாவை என்ன டார்ச்சர் பண்ணுறீங்க?" என்றவாறே மகளை கைகளில் அள்ளி கொண்டான்.

அவனின் குட்டி தேவதையும் பொக்கை வாய் திறந்து சிரிக்க அவளின் சிரிப்பில் மதிமயங்கியவன் மனைவியை பார்த்தான். அவளோ சித்தார்த்தை தான் வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.

"என்ன கியூட்டி.. சைட் எல்லாம் ஓவரா இருக்கே.. இன்னைக்கு நைட் பேபிய டேட் கிட்ட கொடுத்துட்டு வரவா?"

"அடங்கவே மாட்டியா சித்து நீ?" என்று அவனின் தோளில் அடித்தவள் "ரொம்ப பயந்துட்டேன் சித்து.. ஒருவேளை நீ வராமலே போயிருந்தால் எங்க நிலமை என்ன ஆகிருக்கும்? உன்னை அன்னைக்கு உணர்வே இல்லாத நிலையில் பார்த்தப்போ எனக்கு உயிர் போய்ட்டு வந்துச்சு தெரியுமா? நாலு மாசமா நீ பட்ட கஷ்டம் எனக்கு இன்னும் மனசு துடிக்குதுடா" என்று அவனை அணைத்து கொண்டாள்.

அவனுக்கும் அந்த நினைவுகள் தான். அதை மறக்கவே அவளை தேடி வந்தான். ஒருவேளை அன்று பென் மற்றும் கிரண் வராமல் போயிருந்தால் அவனின் நிலை?

மூன்று மாதங்களுக்கு முன்:

ஜான் மற்றும் கிறிஸ்டோபர் இருவரும் தங்கள் ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்த நாள் அன்று. அத்தனை சீக்கிரம் கிடைக்காத மூலிகை செடிகளை எடுத்து வந்து அதனுடன் சில திரவங்கள் சேர்ந்து ஒரு மனிதனை கட்டுப்படுத்த முடியும் என்று சித்தார்த்தை வைத்து சோதித்து வெற்றியும் பெற்றிருந்தனர். அனைத்தையும் முடித்தவர்கள் சித்தார்த்க்கு பதில் வேறு ஒருவரின் உடலை விடியோ எடுத்து அதை தங்களின் குறிப்புகளுக்காக பதிவு பண்ணி கொண்டனர்.

சித்தார்த் இவர்களின் பிடியில் இருந்தான் என்பதை அறிய நேர்ந்தால் ஆபத்து அவர்களுக்கு தான் என்பதை உணர்ந்ததால் கனகச்சிதமாக அனைத்தையும் முடிக்கும் போது சித்தார்த் மொத்தமாக சுயநினைவை இழந்திருந்தான்.

இதுவரை உணர்ச்சியுடன் இருந்தவன் முன்தினம் ஜான் சில மருந்துகளை அவனுள் செலுத்தியதன் விளைவு மயங்கியிருந்தான். அந்த நேரம் தான் பென் மற்றும் கிரண் அரூபா தீவிற்கு வந்து சேர்ந்திருந்தனர்.

தன் கையில் வோட்கா கலந்த குவளையை வைத்திருந்த ஜான் முன்னால் அமர்ந்திருந்த கிறிஸ்டோபரை யோசனையுடன் பார்த்தான்.

"என்னாச்சு கிறிஸ்டி? நாம நினைச்ச படியே இந்த மூலிகையோட தன்மையை தெரிஞ்சு இப்போ அதா வச்சு ஒரு பிராடக்ட் ரெடி பண்ணிட்டோம்.. இனி நம்மளோட மார்கெட்ல சேல் பண்ணினா நம்ம ரேஞ்சே வேற.. இதற்காக எத்தனை ஃபீல்டு தயாரா இருக்காங்க தெரியும் தானே?"

"எல்லாம் தெரியும் ஜான்.. ஆனா இவனை இப்படியே விட்டுட்டு போக தான் மனசு இல்ல.. வேற ஏதாவது செய்யணும்" என்று வன்மமாக சிரித்தபடி கிறிஸ்டி கூட ஜான் புரிந்து கொண்டான்.

"இவனை இப்படியே விட்டுட்டு போகலாம் கிறிஸ்டி.. இந்த இடத்திற்கு நம்மை தவிர வேற யாரும் வர மாட்டாங்க.. நாம இப்போ கிளம்பி போயிட்டா இனி வர போறதே இல்ல.. உணர்வே இல்லாமல் இப்படியே கிடந்தா ரெண்டு நாள் கூட தாக்கு பிடிக்க மாட்டான் இவன்.. நாம கடத்தின இருபத்தைந்து பெண்கள் கிட்ட இருந்து நமக்கு தேவையான எல்லாமே சேகரிக்க ஆரம்பிச்சாச்சு.. இனி நம்ம லெவல் வேற.. இவன் இங்க கிடந்து சாகட்டும்" என்று கூற கிறிஸ்டி அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

ஆனாலும் விட்டு செல்ல மனமில்லாமல் அவனை அந்த தீவின் கொடூர மிருகங்கள் வாழும் இடத்திற்கு சென்று விட்டு வந்தவன் அடுத்த நொடியே கலிபோர்னியா கிளம்பி விட்டான்.

கிரண் அந்த இடத்தை நெருங்கிய நேரம் ஜானின் சிக்னல் அந்த இடத்தில் இருந்து வெகுதூரம் சென்றிருந்தது. பென் மற்றும் கிரண் ஒன்றும் புரியாமல் தவித்து நின்றனர்.

"அங்கிள் கண்டிப்பா பாஸ் கிடைச்சிடுவாங்க" என்று நம்பிக்கை கூறிய பென் இன்னும் நம்பிக்கை தளர்ந்து போனான்.

அதே நேரம் இரண்டு ஓநாய்களுக்கு நடுவில் சுயநினைவின்றி படுத்திருந்தான் சித்தார்த். அவனின் மனைவி மற்றும் உறவுகளின் பிரார்த்தனையோ என்னவோ அவை அவனை உற்று நோக்கி நின்றனவே தவிர தீண்டவில்லை.

அவனின் நல்ல நேரம் தான் அன்று. தேடி வந்த கிரணின் கண்ணில் பட்டு விட்டான். அவனை இரண்டு ஓநாய்கள் நடுவில் பார்த்ததும் அதிர்ந்து விட்டார்.

"சித்து.." அவரின் கதறலில் ஓடி வந்த பென் அடுத்த அடி எடுத்த வைக்க முடியாமல் திணறினான். இதுவரை சித்தார்த்தை குறிவைத்த ஓநாய்கள் இப்போது பென் மற்றும் கிரணை நோக்கி வந்தன.

"அங்கிள்.." என்று அவரை தள்ளி விட்ட பென் கையில் இருந்த துணியில் நெருப்பை பற்ற வைக்க ஓநாய்கள் இப்போது பதுங்கின. அதை பயன்படுத்தி கொண்டவன்
"அங்கிள் சேவ் சித்து பாஸ்.." என்று நெருப்போடு முன்னேற ஓநாய்கள் பின்னோக்கி நகர்ந்து அவன் நெருப்பை தூக்கி போட்டதும் ஓடின.

அவசரமாக சித்துவின் அருகில் சென்ற பென் மற்றும் கிரண் நம்ப முடியாமல் கதறினர். அவ்வளவு மெலிந்து சிதைந்து போயிருந்தான் சித்தார்த்.

"அங்கிள்.." பென் கிரணின் தோளை தொட "என்னால் இவனை இப்படி பார்க்க முடியல பென்.. சீக்கிரம் அவர்களோட முதல் சிக்னல் காட்டின இடத்துக்கு போகனும்.. என்ன மருந்து கொடுத்திருக்காங்க என்று தெரிந்தால் தான் மாற்று மருந்து கொடுக்க முடியும்" என கிரண் கூற இருவரும் அவனை தூக்கி கொண்டு கிறிஸ்டோபர் இடத்திற்கு விரைந்தனர்.

அந்த இடம் முழுவதும் அலசி ஆராய்ந்து பார்த்தும் ஒன்றும் கிடைக்காமல் போக வேறு வழி இன்றி கலிபோர்னியா கிளம்பினார்கள். ஆனால் அடுத்த நாள் அவனின் உடலை சோதித்த போது கிரணுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

ஆங்கில மருத்துவத்தில் உடலை விறைக்க செய்ய மருந்துகள் கேள்வி பட்டிருக்கிறார். ஆனால் இப்போது மூலிகையுடன் ஆங்கில மருத்துவத்தை கலந்து மொத்த சுயநினைவை இழக்க செய்தது அதிர்ச்சி. மாற்று மருந்து கொடுத்தும் ஒரு மாதம் கழித்து தான் சுயநினைவுக்கு வந்தான் சித்தார்த். அதுவரை கனிஷ்கா உயிரோடு மரித்து கொண்டிருந்தாள்.

அவளுக்கு இருந்த ஒரே உறவு அவன் தான். என்ன தான் தந்தை, தங்கைகள் இருந்தாலும் முற்றும் அவளின் நினைவில் கலந்திருந்தவன் சித்தார்த் மட்டுமே. அதுவும் மெலிந்து 'இது சித்தார்த் தானா?' என்று மற்றவர் கேள்வி எழுப்பும் அளவிற்கு இருந்தவனை காணும் போதெல்லாம் அவளின் உயிரை யாரோ உருவுவது போல இருந்தது.

சதா நேரமும் அவனின் அருகிலேயே அவனின் கைபிடித்து அமர்ந்து இருந்தவளுக்காகவே ஒரு மாதம் கழித்து மீண்டும் பிறப்பெடுத்து வந்தான் சித்தார்த். அந்த ஒரு மாதமும் அவன் கிடைத்ததோ அல்லது உயிரோடிருப்பதோ எவருக்கும் தெரியாது.

அடுத்த இரண்டு மாதங்கள் முற்றிலும் ஓய்வில் இருந்தவன் முழுதாக உடல்நிலை தேறியாதே இரு வாரத்திற்கு முன்பு தான். அதன் பின் தான் வெளி உலகத்திற்கு மீண்டும் தன்னை அடையாளம் காட்டினான் சித்தார்த்.

நான்கு மாதங்களாக தான் பட்ட கஸ்டத்திற்க்கும் தன் நண்பனின் இழப்பிற்கும் ஈடு கொடுக்க மற்றவர்கள் இனி ஒரு பிறப்பெடுக்க வேண்டும். நாட்கள் குறித்து விட்ட சித்தார்த் பென் மூலம் அனைத்தையும் சேகரித்து கொண்டிருந்தான்.

இந்நாளுக்கு நினைவுகள் மீள தன்னை வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்த கனியை பார்த்து புன்னகைத்தான்.

"எல்லாம் சரி ஆகிடும் கியூட்டி.. இப்போதைக்கு கென்யா இருக்கும் இடத்தை நாம கண்டு பிடிக்கணும்.. அவ இல்லாம இந்த இன்வெஸ்டிகேஷன் ஒரு பிடிப்பு இல்லாம போகுது.. அவளை வச்சு தான் அடுத்து வில்லியம் கொலைக்கும் யார் காரணம்னு கண்டு பிடித்து தண்டனை வாங்கி கொடுக்கணும்" என்றவனுக்கு மனதில் பாரங்கள் ஏறி கொண்டே போனது.

"சரி நீ தூங்கு சித்து.. சீக்கிரம் ஒரு முடிவு கட்டலாம்" என்ற கனி மகளை தொட்டிலில் படுக்க வைத்து விட்டு கணவனை மடி தாங்கினாள். அவளின் ஸ்பரிசத்தில் அவனும் கண்ணயர்ந்தான்.

அடுத்த நாள் காலையில் சித்தார்த் மற்றும் பென் காவல் தலைமையகம் சென்றனர். சித்தார்த் ஏற்கனவே காவல் உயர் அதிகாரி மேல் சந்தேகம் கொண்டிருந்தான். அவர் தானே கடைசியாக வில்லியமை வர சொல்லி அழைத்தது. எனவே கண்டிப்பாக ஜான் மற்றும் அவருக்கு இடையில் எதுவோ ஒன்று இருப்பதாக அவனுக்கு தோன்றியது.

அவர்கள் சென்ற போது உயர் அதிகாரி டேவிட்சன் இன்னும் வந்திருக்கவில்லை. எனவே சித்தார்த் வெளியில் காத்திருந்தான். அந்த வழியாக சென்ற அனைவரும் அவனை ஆச்சரியமாக பார்த்து விட்டு சென்றனர்.

அதை கவனிக்காத சித்தார்த் பென் கொடுத்த புகார் பற்றி பேசி கொண்டிருந்தான்.

"கென்யா காணாம போனதை பற்றி நாம கொடுத்த கம்ப்ளைன்ட்க்கு ஏதாச்சும் ரெஸ்பான்ஸ் வந்துச்சா பென்?"

"இல்ல பாஸ்.. நீங்க காணாம போனப்போ கூட நான் இதை பற்றி டேவிட்சன் சார் கிட்ட கேட்டேன்.. அதுக்கு அவரோட பதிலே வித்தியாசமா இருந்தது.. அதனால் தான் எனக்கும் அவர் மேல் டவுட் வந்துச்சு.."

"என்ன வித்தியாசம்?"

"நான் கென்யா பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததான்னு கேட்டப்போ இனி சித்தார்த் வருவார்னு கூட தான் நம்பிக்கை இல்ல இதுல கென்யா கிடைச்சு நீ ஆராய்ச்சி பண்ண போறியான்னு கேட்டார் பாஸ்.. ஆறு மாசம் முன்னாடியே இப்படி அவர் சொல்றாருன்னா கண்டிப்பா உங்களை கடத்தினவங்க பற்றி அவருக்கு எதோ தெரிஞ்சிருக்குன்னு தானே அர்த்தம்.. அதற்கு பிறகு உங்களை ட்ராக் பண்ணினதில் இவரை நான் கவனத்தில் எடுக்கல" என்ற பென் திரும்பி டேவிட்சன் வருவதாக கூறினான்.

அவர்கள் பக்கத்தில் வந்த டேவிட்சன் கூட சித்தார்த்தை அந்த இடத்தில் எதிர்பார்க்கவில்லை.

"சித்தார்த்.. நீங்க எப்படி?" என்று திணறியவர் கைபற்றி குலுக்கியவன் "ஹலோ சார்.. நான் திரும்பி வந்து மூன்று மாசம் ஆகுது" என்றான்.

"வாட் த்ரீ மந்த்ஸ் ஆச்சா? நீங்க வந்ததை சொல்லியிருந்தா உங்க கடத்தல் கேஸ் அப்போவே முடிஞ்சிருக்குமே.. நாங்க வொர்க் எதுவும் இல்லாம சுத்துறோமா?"

டேவிட்சன் கோபத்தில் சித்துவுக்கு சிரிப்பு தான் வந்தது.

மென்னகையுடன் அவரை நெருங்கியவன் "உள்ளே போய் பேசலாமா சீஃப் ஆபீசர்? ஐ நீட் டு டாக் மோர்" என்று அவரை அறைக்குள் அழைத்து சென்றான்.

"நவ் யூ கேன் ஆஸ்க்" என்ற சித்தார்த் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். அவனின் வருகையே டேவிட்சன் முகத்தில் பதட்டத்தை உருவாக்கியது.

"நத்திங் சித்தார்த்.. இப்போ என்ன விசயமா வந்திருக்கீங்க?"

"கென்யா பத்தி கேஸ் குடுத்து கிட்டத்தட்ட ஏழு மாசம் ஆயிடுச்சு.. இன்னும் எதுவும் அப்டேட் இல்ல.. அதை கேட்டுட்டு போக தான் வந்தேன்" என்ற சித்துவின் பார்வை அவரை கூர்மையாக அளவிட்டது.

அதில் ஒரு நொடி தடுமாறிய டேவிட்சன் தன் பதட்டத்தை மறைத்தவாறே "கென்யாவை ட்ராக் பண்ண முடியல.. நீங்க தான் சிப் இன்சர்ட் பண்ணின பெர்சன்.. உங்களாலே இன்னும் முடியல அப்புறம் எங்களுக்கு நேரம் எடுக்குமே" என்றார்.

"கென்யா கடத்த பட்ட நாள் நீங்க எங்க இருந்தீங்க சார்?" சித்துவின் கேள்வியில் டேவிட்சன் வழிந்த வியர்வையை துடைத்து கொண்டார்.

"அது.. அன்னைக்கு.. நான் லீவ்"

"லீவ் ல இருந்த நீங்க எதுக்காக வில்லியமை ஹெட் ஆபீஸ் ல உங்களை பார்க்க வர சொன்னீங்க சார்?"

"வில்லியமா? நோ.. நோ.. நான் வர சொல்லல"

"டேவிட்சன் நீங்க வர சொன்னதை வில்லியம் என்கிட்ட சொல்லிட்டு தான் போனான்.. என்கிட்ட கால் ரெகார்ட் இருக்கு" என சித்து கூற டேவிட்சன் "நோ..." என கத்தியே விட்டார்.

"கூல் டேவிட்சன்.. திஸ் இஸ் நாட் யூர் ஹோம்.. திஸ் இஸ் போலீஸ் ஹெட் ஆபீஸ்.. உங்க பதட்டம் உங்களை மாட்ட வச்சிடும்.. ஐ நோ உங்களை இந்த விசயங்களை பண்ண சொன்னது ஜான்.. ஆனா எனக்கு இப்போ கென்யா ரொம்ப முக்கியம் அண்ட் அவ இருக்கிற இடம் உங்களுக்கு தெரியும் என எனக்கும் தெரியும்.. ஐ வான்ட் டூ நோ வெயர் இஸ் கென்யா?"

"சித்தார்த்.." எழும்பியவர் "ஷி .. ஷி இஸ் இன் மை கெஸ்ட் ஹவுஸ்.. வேற எதுவும் எதை பற்றியும் எனக்கு தெரியாது" என தடுமாற

"வேற எதுவும் உங்களுக்கு தெரியுமான்னு நான் கேட்கல டேவிட்சன்.. பட் கௌன்ட் யுவர் டேஸ்.. எல்லாத்துக்கும் பதில் சொல்லியே ஆகணும்" என்ற சித்தார்த் பென்னை அழைத்து கொண்டு வெளியேறினான். டேவிட்சன் முகத்தில் மரண பயம் தெரிந்தது.

அவருக்கு தெரியும் சித்தார்த்தின் உயரம். ஒன்றை குறித்து விட்டால் அவனிடம் ஆப்சன் கிடையாது. முடித்து விட்டே ஓய்வான். இனி அவரின் நாட்கள் எண்ணப்பட வேண்டியவை தான். ஓய்ந்து போய் இருக்கையில் அமர்ந்தவருக்கு இதை ஜானிடம் சொல்ல மனம் துடித்தது. ஆனாலும் சித்தார்த் ட்ராக் பண்ண வாய்ப்பு இருப்பதால் அமைதியாக நடப்பதை எதிர்கொள்ள தயாராகினார்.
 
Status
Not open for further replies.
Top