எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மரம் தூவும் மழை 2

@38

Moderator
2.

கொஞ்சம் சிரிச்ச மாதிரி நில்லு என அவளுக்கு மட்டும் கேட்பது போல சொன்னவன் ஆரத்தி எடுத்து தாய் வழி விடும் வரை அவளின் கையை விடவே இல்லை.

இதான் என் ரூம் இப்போதைக்கு ரெஸ்ட் எடு அப்புறமா வீட்டை சுத்தி காட்டறேன்.

பெரிய மைசூர் பேலஸ் இத நீ ஒன்னும் சுத்தி காட்ட வேண்டாம் பழைய காலத்து தொட்டி கட்டி வீடு ரெண்டு பக்கம் ரூம் ரெண்டு பக்கம் வாசல் மாடியில் அட்டாளி இதுக்கு இவ்வளவு பில்டப்பா.

வாவ் கீத்து வீட்டுக்குள்ள வந்த உடனே அப்படியே கண்ணுல பார்த்த மாதிரி சொல்ற ஏய் உண்மையை சொல்லு இதுக்கு முன்னாடி தெரியாம என் ஊருக்கு வந்தியா என்ன..


ச்சீ போ நான் தூங்கணும் இந்த பெட் ஏன் இவ்வளவு ஹார்டா இருக்கு.

நீ ரொம்ப சாஃப்ட்டா இருக்கல்ல அதான் பறந்து வந்த தலையணையை கையில் பிடித்து மீண்டும் அவளை நோக்கி வீசினான்.


அப்பா கூப்பிட்டீங்களாம் என பெருமாள் முன்பு பவ்யமாக நின்றிருந்தான் கார்த்தி


ஆமா கார்த்தி இப்படி உட்காரு..ஆமா சாப்டியா.

ஆச்சிப்பா.

மருமகப்பிள்ளை.

ரொம்ப தூரம் கார்லேயே வந்தா இல்லையா டயர்ட் ல தூங்குறப்பா.

நீயும் அதுல தான் பா வந்த என்று கேலி போல பேசினாலும் மறைமுக ஆதங்கம் அதிலிருந்து.

அப்பா நான் இங்கே பிறந்து வளர்ந்தவன் கல்யாணத்துக்கு முன்னாடி மாதத்திற்கு ஒரு நாள் அங்கிருந்து இவ்வளவு தூரம் வந்துட்டு போயிட்டு தான் இருந்தேன் ஆனா அவ அப்படி இல்லப்பா அங்கே செல்லமா வளந்துட்டா அவளுக்கு இந்த டிராவல் எல்லாம் ரொம்ப ஜாஸ்தி.

எப்படியோ நல்லா இருந்தா சரி..என்றவர் அப்புறம் நம்ம அமுதாவோட வளைகாப்பு பத்தி பேசுறதுக்கு தான் கூப்பிட்டேன்.

இன்னும் நாலு நாள் தான் இருக்கு ஆனா வேலை தலைக்கு மேல இருக்கு நீ ஒரு பத்து நாள் முன்னாடியே வருவேன்னு எதிர்பார்த்தேன் சரி உன் சூழ்நிலை வர முடியல இப்போ தான் வந்திருக்க இனி தான் முக்கியமான வேலைகளை செய்யனும்.

சொல்லுங்கப்பா என்ன செய்யணும்னு..

சம்மந்தி சொந்தகாரங்க கறி விருந்து போடணும்னு கேக்குறாங்களாம் நீ இடையன்குடிக்கு போய் இள ஆடா பார்த்து பத்து வாங்கிட்டு வந்து நம்ம பட்டில கட்டிடு..விலை எவ்ளோ ஆனாலும் பரவால்ல என்றபடி பணக் கத்தை கொடுத்தார்.

இல்லப்பா என்கிட்ட இருக்கு.


அது இருக்கட்டும் இதையும் அதுகூட சேர்த்து வச்சிக்கோ.. ரொம்ப நேரம் எடுத்துக்காத , தனியாவும் போகாத கூட நம்ம பயலுக யாரையாவது சேர்த்துக்க..சீக்கிரமா வந்திடு வேலை நிறையா கிடக்கு.

ஓகே பா.

ஓய் கீத்து.என காதருகே கிசுகிசுக்கவும் கண்திறந்து திரும்பி பார்த்தவள்.தள்ளிப்போ எதுக்கு இப்படி மேல விழற என தள்ளி விட்டாள்.

இது அநியாயம். என் கைவிரல் கூட உன் மேல படல ஆனா நீ உன் ரெண்டு கையால என்ன தொட்டு தள்ளிவிடற .

ம்ப்ச் எதுக்கு இப்போ வந்து வம்பு பண்ணிட்டு இருக்க எனக்கு டயர்டா இருக்கு நான் தூங்கணும் .

தாராளமா தூங்கலாம் முதல்ல போய் ஒரு குளியல போட்டுட்டு சாப்பிட்டு அதுக்கப்புறம் வந்து தூங்கு நான் வெளியே போகணும் எப்படியும் வர சாயங்காலம் ஆகிடும் சொல்லிட்டு போக தான் வந்தேன்.

என்னது என அதிர்ச்சியாக கத்தியவள் என்னை விட்டுட்டு போக போறியா எனக்கு இங்க யாரை தெரியும்.? இதுக்கு தான்.. இதுக்கு தான்.. நான் அப்பவே சொன்னேன் உன் பின்னாடி வர முடியாதுன்னு எங்க அப்பாவை சொல்லணும் .. எல்லாம் அவரால தான்..

உன் ஊரு,உன் வீட்டு பங்க்ஷன் அது இதுன்னு சொல்லி என்ன கன்வீன்ஸ் பண்ணினாங்க ஆனா நீ என்னை விட்டுட்டு போறேங்குற என ஹைய் ஸ்பீச்சில் கத்தினாள்.

ஓடி வந்து அவளது வாயைப் பொத்தியவன் எதுக்குடி இப்படி கத்தற அம்மா அப்பா யாராவது கேட்டாங்கன்னா பிரச்சனை ஆயிடும் எங்க வீட்டில் இப்படி யாரும் கத்தி பேசினது இல்ல தெரியுமா.


அவனது கையை விலக்கியவள் என்னது டி..யா..?உன் ஊருக்கு வந்துட்டா என்ன டி போட்டு பேசுவியா என அதற்கும் கத்தினாள்.

தாயே தெரியாம வந்து உன்கிட்ட வாய் கொடுத்துட்டேன் என்னை மன்னிச்சிடுமா.இந்த பக்தனுக்காக கொஞ்சம் மலை இறங்கும்மா.. கையெடுத்து கும்பிட்டான்.

சரி.. நான் குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு வர வரைக்கும் இங்கே தான் இருக்கனும் நீ எங்க போனாலும் என்னையும் கூட்டிட்டு போற..விட்டுட்டு மட்டும் போன ரூம்குள்ள கத்த மாட்டேன் நடு ஹால்ல நின்னு கத்துவேன்..அப்புறம் யாரும் என்னை மலை இறக்க முடியாது ஞாபகத்துல வச்சுக்கோ.என்றபடி அறையை சுற்றி பார்த்தவள் எங்கடா பாத்ரூம்..

மெதுவா பேசு கீத்து இது கிராமத்து வீடு இங்கே பாத்ரூம் எல்லாம் உள்ள வச்சு கட்ட மாட்டோம் பின்னாடி பக்கம் இருக்கு.

கூட்டிட்டு போ என அதற்கும் கத்தினாள்.

வந்து தொலை..

குளிச்சிட்டு வர்ற வரைக்கும் எங்கேயும் போக கூடாது.

வாசலேயே தவம் கிடக்கிறேன் போதுமா. என்றவன் அப்பொழுதுதான் கவனித்தான்.

குளிப்பதற்காக துண்டு கூட எடுத்துகொண்டு வரவில்லை.. வேகமாக அறைக்கும் சென்று அவள் உடுத்துவதற்கு தேவையான ஆடை ,துண்டு ,பேஸ்ட் பிரஷ்,பேஸ்வாஷ்,சோப்பு ,எல்லாம் எடுத்து வந்து அவள் கத்தும் முன் கையில் திணித்தான். இதை செய்து முடிப்பதற்குள் அவனுக்கு மூச்சே முட்டிவிட்டது அப்பாடா என ஓய்ந்தபடி வெளியில் இருந்து திண்ணையில் அமர்ந்தான்.

ஒரு மணி நேரம் வரை குளியல் அறையில் செலவு செய்தவள் பிறகு பொறுமையாக வெளியே வந்து வயிற்றில் கை வைத்து பசிக்குது என மூக்கை சுளித்தபடி சொல்லவும்.

டைனிங் டேபிள்ல ரெடியா இருக்குது நேரா போய் சாப்பிட்டுக்கோ யாரும் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க வீட்டுக்குள்ள போக வழி தெரியும் இல்ல எனக்கு கேலி பேசியவன் பாத்ரூமுக்கு சென்று அவள் கழட்டி போட்ட ஆடைகள் அத்தனையும் சேகரித்து அதை அழுக்கு கூடையில் போட்டுவிட்டு அவள் சாப்பிடும் இடத்திற்கு வந்தான்.

ஏன் இவ்ளோ நேரம் என இடியாப்பத்தை வாயில் வைத்தபடியே கேட்டவள் பதிலை எதிர்பாக்கவில்லை உணவின் ரூசி வேறு எதிலும் கவனிக்க விட வில்லை.

மகாராணி நீராடி விட்டு அப்படியே வந்து விட்டீர்கள் உங்களுடைய ஆடைகளை எல்லாம் ஒன்று திரட்டி சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விட்டு வருவதற்கு அடியேனுக்கு இவ்வளவு நேரம் ஆகிவிட்டது என மூச்சு விடாமல் கூறவும்.

பக்கென சிரித்தவள் நீ சாப்டியா.

அதெல்லாம் காலையிலேயே.

விட்டுட்டு சாப்டியா என முகத்தை ஒரு மாதிரி வைக்கவும்.

ப்ளீஸ் இங்க வேணாமே என்பது போல பார்த்து வைத்தான்.

இதையெல்லாம் வந்திருந்த உறவினர்கள் கண்டும் காணாமல் கவனித்துக் கொண்டிருந்தனர் ஆனால் கார்த்தியின் அம்மா சாந்தியோ மிகவும் மன வேதனைக்கு ஆளானார்.

பாத்ரூமில் கழட்டி போடும் துணியை கூட எடுத்து வைக்க முடியாத அளவிற்கு சோம்பேறிப் பெண்ணை என் பையனின் தலையில் கட்டி அவன் வாழ்க்கையை கெடுத்துவிட்டாரே. வளைகாப்பு விழா நடந்து முடியட்டும் அதன் பிறகு இதற்கு ஒரு முடிவை கட்டுகிறேன் என நினைத்துக் கொண்டார்.

ஓகேவா என அணிந்திருந்த ஆடையை மீண்டும் ஒருமுறை கார்த்தியிடம் கேட்டபடி கீர்த்தனா வந்தாள் ‌

எல்லாம் ஓகே தான் ஏற்கனவே லேட் சீக்கிரம் வா என வேகமாக நடக்க வழிமறித்தார் போல சாந்தி வந்து நின்றார்.

எங்கடா கிளம்பிட்டீங்க.

அது அப்பா ஆடு புடிக்க சொன்னாங்க அதுக்கு தான் சந்தைக்கு போறோம்.

அதுக்கு எதுக்காக இவ.. இங்க விட்டிட்டு போ நிறைய வேலை இருக்கு .

தயங்கியபடியே அம்மா அவளுக்கு இந்த வேலை எல்லாம் செய்து பழக்கம் இல்லை வேலை செய்ய தான் ஆளுக இருக்காங்க இல்ல.

அதை தான் நானும் சொல்றேன் பழக்கம் இல்லைன்னு எத்தனை நாளைக்கு அப்படியே விட முடியும் ஆளுக இருக்காங்க ஆனா அவங்களை மேற்பார்வை பார்க்க ஒரு ஆள் வேணும்ல விட்டுட்டு போ எல்லாம் நான் சொல்லிக் கொடுக்கிறேன் கத்துப்பா .

ம்மா.. என்ன ஆச்சு ஏன் இவ்வளவு கோபம் .

எல்லாத்தையும் நான் பாத்துட்டு தான் இருக்கேன் கார்த்தி என்ன பேச வைக்காத சொந்த பந்தம் எல்லாம் சுத்தி இருக்கறதால பொறுமையா போறேன் அதுக்காக இப்படியே இருப்பேன்னு மட்டும் நினைக்காத என்று குரல் உயர்த்தி பேசவும்.

என்ன சாந்தி அங்க சத்தம் என பெருமாளின் குரல் கேட்கவும்.

ஒன்னும் இல்லைங்க கார்த்தி எங்கேயோ கிளம்பிட்டு இருக்கான் அதான் என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு இருக்கேன்.

கிளம்பும்போதே அப்படி கேட்கலாமா தாயி அவனுக்கு ஒரு சொம்பு தண்ணியை கொடுத்து அனுப்பி வை என்று சொல்லவும்.

அதற்கு மேல் எதுவும் பேச முடியாது கீர்த்தனாவையை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றார்.

சாந்தி முறைத்ததையும் கடுகடுவென பேசியதையும் கீத்துவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கார்த்தியிடம் எனக்கு இந்த பொம்பளையை சுத்தமா பிடிக்கல என்று விட்டாள்.

அடிங்..என பற்களை கடித்தவன் அவனையும் அறியாமல் கை ஓங்கி விட்டான். பிறகு தலையில் அடித்துக் கொண்டவன் எல்லாம் என் தலையெழுத்து ..இங்க பாரு கீர்த்தனா இந்த முறைக்கிற வேலையை எல்லாம் சென்னையில நம்ம வீட்டோட நிறுத்திக்கோ
அவங்க என்னோட அம்மா உனக்கு மாமியார் ஒழுங்கா அத்தைனு கூப்பிடு இல்லையா வாயே திறக்காத.. இனியொரு முறை பொம்பளை அது இதுன்னு பேசின வாய் இருக்கும் பல்லு இருக்காது வா.

ம்கூம் முகத்தை தூக்கியபடி காரில் ஏறினாள். சந்தைக்கு சென்ற பிறகும் இறங்கவில்லை ஆடு பிடிக்கும் இடத்திற்கு சென்ற பொழுதும் கண்டு கொள்ளவில்லை எல்லா வேலையும் முடித்துவிட்டு வர இரண்டு மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது காரிலேயே அமர்ந்திருந்தாள்.


கண்கள் சிவந்து மூக்கு வீங்கி போய் அவள் அமர்ந்திருந்த தோற்றமே சொல்லாமல் சொல்லியது தொட்டால் வெடித்து விடுவாள் பொது இடத்தில் ரசாபாசம் ஆகிவிடக்கூடாதென பொறுமை காத்தான்.

ஏதாவது பேசுவான் என அவ்வப்போது முகத்தையே பார்த்துக் கொண்டு வந்தவள் அவன் எதுவுமே பேசவில்லை என்றதும் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி குலுங்கி அழத்தொடங்கினாள்.

ம்ப்ச் என காரை ஓரம் கட்டியவன் கீழே இறங்கி தலையை கோதிக் கொண்டான்.
அவள் பக்கமாக வந்து அழாத கீத்து நீ அழுத வரை போதும்.

என்னை யாருக்கும் பிடிக்கல..உன் அம்மாவுக்கு,உனக்கு,அவனுக்கு என வேதனையோடு கதறியவளை கை பிடித்து வெளியே இழுத்தவன்.

உன்கிட்ட பலமுறை சொல்லி இருக்கேன் அவனைப் பத்தி பேசாதன்னு.. இன்னும் உன்னால அவனை மறக்க முடியலன்னா நான் எதுக்கு உன்னை சகிச்சிக்கனும் என்னை.மனுஷனா இருக்க விடு மிருகமா மாத்திடாத

முடியலடா..என்னால மறக்க முடியல..ஏன் என்னை விட்டுட்டு போனான்..ஏன்..என அவனின் டிசர்ட் பிடித்து உலுக்கியவனின் கைகளை கோபமாக பிடித்தவனின் பார்வை வலது மணிக்கட்டில் மூன்று கோடுகளை பார்க்கவும் கண்களில் வேதனை வந்தது. மென்மையாக அந்த தழும்பின் மீது முத்தமிட்டவன்.. இதுக்கெல்லாம் தகுதியில்லாதவன்டி அவன் ஏன் புரிய மாட்டேங்கிது.
மறந்து தொலைடி..நம்ம வாழ்கை நல்லாயிருக்கும்.
என்ற படி நெஞ்சோடு அணைத்தான்.

சற்று முன்பு நடுரோட்டில் அழுது கரைந்தவளா இவள் என்றால் யாராலும் நம்ப முடியாது அந்த அளவிற்கு குதூகலமாக காரின் ஜன்னல் வழியே தலையை வெளியே நீட்டி பிரயாணத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.

தலையை வெளியே நீட்டாத குழந்தையா நீ என எவ்வளவு திட்டியும் காது கொடுத்து கேட்டவில்லை.

அவளின் கோபம் அழுகை எல்லாம் ரோட்டோரமாய் தெரிந்த அருவியை பார்க்கும் வரை மட்டுமே இருந்தது.

வண்டியை நிறுத்தச்சொல்லி அதில் பாடு ஆட்டம் போட்டவள் ஈர உடையுடனே காரில் ஏறி அவனுக்கு இரத்த அழுத்தத்தை கூட்டிக் கொண்டிருக்கிறாள்.

கீர்த்தனா அப்படித்தான் கடந்த நிமிடம் போல அடுத்த நிமிடம் இருக்க மாட்டாள் அதுதான் இந்த ஒன்றை ஆண்டு காலமாக அவனை அவளுள் கட்டிப் போட்டுக்கொண்டிருக்
கிறது.

இந்த குணம் மட்டும் அவளிடத்தில் இல்லை என்றால் கண்டிப்பாக யாராலுமே அவளுடன் பயணிக்ககே முடியாது.
 
Last edited:

@38

Moderator
பாவம் அவன்!!... என்னலாம் செஞ்சு சமாளிக்க வேண்டியதா இருக்கு!!.. அந்த அவன் யாரு??
அவ புருஷன்ங்க கார்த்தினு இனி போடறேங்க

நன்றிங்க
 
Top