எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மரம் தூவும் மழை-4

@38

Moderator
4


ஏய்…லதாக்கா வந்துட்டாங்க என்று ஓரு வாண்டு செய்தியை ஓடிய படியே பரப்ப..


என்ன லதா வந்துட்டாளா என சமையல் அறையில் இருந்த பெண்கள் வீட்டிற்குள் இருந்த உறவினர்கள் அனைவருமே அவளை வரவேற்பதற்காக வாசலுக்கு ஓடினர்.


சொர்ணலதா அந்த வீட்டில் முடி சூடப்படாத இளவரசி என்பது அவர்களின் மகிழ்ச்சியை வைத்து கீத்துவால் புரிந்து கொள்ள முடிந்தது.


நாற்காலியில் அமர்ந்து கட்டிலில் கால்களை நீட்டி மடியில் லேப்டாப்பில் வேலைபார்த்துக் கொண்டிருந்தவனை‌

கலக்கமாக பார்க்கவும் நீயும் போய் அவளை வரவேற்கலாம் என்றான் பார்வையை திருப்பாமலே.


உங்க அம்மா இருக்காங்க.


சாந்தியை நம்ப முடியாது லதாவை திருப்திபடுத்துவதாக எண்ணிக்கொண்டு கீத்துவை காயப்படுத்த வாய்ப்பு அதிகம்.


இனி அவங்க உன்னை எதுவுமே சொல்ல மாட்டாங்க நேத்து நான் தெளிவா பேசிட்டேன்.


அப்போ நான் போகவா.


திரும்பி பார்த்தவன் மீண்டும் வேலையில் கவனம் செலுத்த.


என்னோட பேசுவாங்களா.?


அவங்க பேசலனாலும் வெல்கம் பண்ணிட்டு வந்திடு.நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க என்றபடி திரும்ப அவள் அந்த இடத்தில் இல்லை லதாவை பார்க்க அவ்வளவு ஆர்வம்.


திருமணம் ஆன புதிதில் மாமியார் அவளுடன் தான் ஒருவாரம் வரை இருந்தார் அப்பொழுதெல்லாம் லதாவின் புராணம் தான் கடைசியாக லதா இருக்க வேண்டிய இடம் இது அவளுக்கு கொடுத்து வைக்கல என்று முடிக்கவும் தான் கணவனால் லதாவிற்கும்,அவனது செல்லத்தங்கை இருவருக்கும் இழைக்கப்பட்ட துரோகம் தெரிந்தது.

என்ன ஏது என மாமியாரை தூண்டி துருவி விஷயத்தை தெரிந்து கொண்டாள்.


அதன் பிறகு அவனிடம் செல்லவே பிடிக்கவில்லை ஏற்கனவே அவளது காதல் தோல்வியால் பாதித்து இருந்தவள் இவனையும் அவளது முன்னால் காதலுடன் ஒப்பிட்டு பல கற்பனைகள் செய்து உடல்நிலையை மேலும் மோசமாக்கிக் கொண்டாள்.


அதிலிருந்தே லதாவின் மீது தனிப்பிரியம்.லதா கூட வேறு வீட்டு பெண்,ஆனால் அம்மு அவளுக்கும் அல்லவா கணவன் துரோகம் இழைத்தான்.பாவம் சிறு பெண் எப்படிதான் தாங்கிக்கொண்டாளோ.இதை நினைத்தாளே கீத்து மூர்க்கதனமாகி விடுவாள்.கையில் கிடைப்பதை எல்லாம் தூக்கி கார்த்தியின் மீது வீசுவாள்.


ஒரு வாரம் வரை நட்பாக தன்னிடத்தில் நெருக்கம் காட்டியவள் திடீரென எடுத்த காளி அவதாரத்தில் முதலில் மிகவும் குழம்பிப்போனான் பிறகு தான் தாயின் வேலை எனப் புரிந்தது யோசிக்காமல் தாயை ஊருக்கு அனுப்பி வைத்தான் ஆனால் அவள் மனதில் விதைத்துச் சென்ற கள்ளிச்செடி அப்படியேதான் காயப்படுத்திக் கொண்டிருந்தது.


ஏற்கனவே அவளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் திருமணத்திற்கு முன்பே தெளிவாக பேசி விட்டார்.தாம்பத்தியம் என்பது இப்போதைக்கு அவளுக்கு ஒவ்வாமை அவளாக நிதர்சனத்தை புரிந்து கொண்டு என்று வருவாளோ அதுவரைக்கும் காத்திருக்கும் மனப்பக்குவம் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ளுங்கள் இல்லையென்றால் வேண்டாம் ஏற்கனவே ஒருவனால் மனதளவில் மிகவும் நொந்து போயிருக்கிறாள் இந்த சமயத்தில் நீங்களும் அதே போன்றதொரு இன்னலை கொடுத்து விடாதீர்கள் என்று.


எல்லாம் சரி என கேட்டுக் கொண்டுதான் அவளின் கழுத்தில் தாலி கட்டியது இன்று வரை அவளின் விருப்பம் உணர்ந்து தான் நடந்து கொண்டிருக்கிறான்.


அவளுக்கு தான் அவனைப் புரிந்து கொள்ளும் நேரம் இன்னும் வரவே இல்லை.


வா லதா முதல்ல குழந்தையை குடு என ஒரு வயது கூட நிரம்பாத பெண் குழந்தையை கையில் வாங்கிய சாந்தி மகன் வரலையா எனக்கேட்கவும் லதாவின் முகம் சுறுங்கியது.


இன்னும் அப்படியே தான் இருக்காரா. ஒரு பெண் குழந்தையையே பெத்து எடுத்தாச்சு என ஆதங்கபட்டார்.


விடுங்க அத்தை நாளைக்கு வர்றேன்னு சொல்லிருக்காரு.. சொன்னா கண்டிப்பா வந்திடுவாரு என்றவள் யோசனையாக வாசலருகே தயங்கிப்படி நின்ற கீத்துவை கண்களால் காட்டி யார் என கேட்டாள்.


கார்த்தி பொண்டாட்டி என லதாவின் காதுக்குள் சாந்தி கிசுகிசுத்தார்.


அழகா இருக்கா..என அவளையே ஆர்வமாக பார்த்தபடி வந்தாள்.


உன் அளவுக்கெல்லாம் இல்ல அழகுன்னா உன்னை மாதிரி இருக்கனும்..சரி குளிச்சிட்டு புடவை மாத்து பக்கத்துல இருக்கறவங்களை‌ போய் அழைச்சிட்டு வந்திடலாம் என்றபடி லதாவை அழைத்துச்சென்றார்.


பெயருக்கு கூட கீர்த்தனாவிடம் அறிமுகப்படுத்தி வைக்கவில்லை. அவ்வளவு ஏன் அப்படி ஒரு ஜீவன் அந்த இடத்தில் நிற்பதே தெரியாதது போல சென்று விட்டார்கள்.


மிக ஆசையாக ஓடி வந்தவளுக்கு பெருத்த ஏமாற்றம்..தொட்டால்சிணுங்கி வேற..நினைக்கும் முன்னே அழுதுவிடுபவள் இவ்வளவு பெரிய அவமானத்துக்குப் பிறகு அழவில்லை என்றால் அது கீர்த்தனாவே கிடையாதே.சிறுபிள்ளை போல உதடு பிதுக்கி அழுதபடி கார்த்தி இருக்கும் அறைக்குள் வந்தாள்.


வெளியே என்ன நடந்திருக்கும் என்பது கார்த்திக்கு தெளிவாகவே தெரிந்தது கீர்த்தனாவிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளவெல்லாம் விளையவில்லை.


ம்மா..என பற்களை கடித்தவன் கட்டில் குப்புற படுத்து குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருக்கும் மனைவியை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தான்.


நாளை மறுநாள் விஷேசம் என்பதால் ஓரளவிற்கு உறவினர்கள் வந்து விட்டனர். வீடே விழாக்கோலம் பூண்டது. கீர்த்தனா எதிலுமே கலந்து கொள்ள வில்லை..லதாவை பார்த்தவுடன் குற்ற உணர்ச்சி தான் தோன்றியது.. கணவனின் சார்பாக மன்னிப்பு கேட்க கூட தயார் தான் ஆனால் அவளின் உதாசீனம் இவளை நெருங்க விட வில்லை.


கீத்து வெளிய போகலாமா அவளை இயல்பாக்கும் பொருட்டு கேட்டான்.


இல்ல வரல கேவியபடியே பதில் வந்தது.


மாத்திரை தரேன் போட்டுட்டு தூங்கறியா.


வேணாம்.


என்ன சொன்னா உன் லதா அக்கா.பதில் இல்லை என்றதும் பேசலையா அவ பேசமாட்டான்னு எனக்கு தெரியும் விடு ரெண்டு நாள்ல ஊருக்கு கிளம்பிடுவா நாமளும் போயிடுவோம் கண்டுக்காத என அவளின் முதுகை தட்டிக்கொடுத்தபடி கூறினான்.எல்லாம் உன்னால தான் நீ மட்டும் அந்த அக்காவுக்கு துரோகம் பண்ணாம இருந்திருந்தா அவங்க இப்போ என்னோட பேசி இருப்பாங்க என்று சொல்லவும்.


பக்கென சிரித்தவன் மொதல்ல இந்த துரோகம் என்கிற வார்த்தையை விடு..நீ சொல்லறது போல பார்த்தா நான் அவளை கல்யாணம் பண்ணி இருக்கணும் அப்படி கல்யாணம் பண்ணி இருந்தா நீ எப்படி இந்த கேள்வியை என்கிட்ட கேட்க முடியும்.என்றவன் கீத்து ஒரு விஷயத்தை நல்லா கேட்டுக்கோ கார்த்தியோட மனைவி கீர்த்தனானு கடவுள் எழுதி வெச்சிட்டாரு அப்படி இருக்கும் போது சொர்ணாவை நான் எப்படி கல்யாணம் செஞ்சிக்க முடியும்.


நீ அவங்களை மறுக்கறதுக்கு ஆயிரம் காரணம் சொல்லி இருக்கலாம் ஆனா நீ பணத்தை தான முன்னாடி வச்ச நான் பணக்காரின்னு கல்யாணம் பண்ணிக்கிட்ட ஒருவேளை என்கிட்ட பணம் இல்லன்னா என்று கேட்கவும்.


அதற்கு பதில் சொல்ல தெரியவில்லை என்ன நடந்தது என்பது அவனுக்கும் சொர்ணாக்கும் நடுவில் நடந்த விஷயம் அவளும் வாய் திறக்கப் போவதில்லை இவனும் வாய் திறக்கப் போவதில்லை அதுவரை இதுபோன்ற பழிச்சொல்லை கேட்டுக் கொண்டுதான் ஆக வேண்டும் இன்னும் இரண்டு நாட்களுக்கு கீர்த்தனாவை என்ன சொல்லி சமாளிப்பது என தெரியாமல் தவித்தான்.


அது மட்டுமா உன்னோட சுயநலத்தால உன் தங்கச்சி அம்முவோட வாழ்க்கையும் சட்டென கோபம் வர எழுத்தவன் அம்மு இப்போ இன்னொருத்தனோட மனைவி.. ரொம்ப நல்லா வாழ்ந்துட்டு இருக்கா ..அதோட சாட்சிதான் நாளைக்கு நடக்க போற விழா.. சோ மேற்கொண்டு எதும் பேசாத.என்றவனுக்கு சொர்ணாவின் மீது அவ்வளவு கோபம் வந்தது.


ஏன் என் மனசுக்குள்ள வந்த ஏன் இப்போவும் என் வாழ்க்கைக்குள்ள இருக்கற.. கோபம் கழன்றடித்தது.வெளியில் காட்டிக்கொள்ள வில்லை.


சொர்ணலதா,கதிரவன் சாந்தியின் அண்ணனின் மக்கள். சாந்திக்கு கார்த்தி அமுதா என இரு மக்கள் இவர்கள் பிறக்கும் பொழுதே அண்ணன் மக்களுக்கு தான் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் திருமணம் செய்து வைப்பேன் என பிடிவாதத்துடனே சாந்தி இருந்தார் .ஆனால் விதி வேறு மாதிரி நினைத்தது சொர்ணாவின் தாயாருக்கு ஒரு அண்ணன் உண்டு இவர்கள் குழந்தைகளாக இருக்கும்பொழுது தாய் மாமன் வீட்டில் சொத்து பிரச்சனை வர சொர்ணாவின் தந்தை சம பங்கு வேண்டும் என பிரச்சனை செய்தார் முடிவாக சொர்ணாவின் தாயை பிறந்த வீட்டுக்கு அழைத்து பேசினர் .


என்ன பேசினார்கள், என்ன நடந்தது யாருக்கும் தெரியாது..சொத்து வாங்க சென்றவர் பிணமாக திரும்பி வந்தார்.


பண்ணையை சுற்றிப் பார்க்கும் பொழுது விஷப்பாம்பு கடித்து விட்டதாக கதை கூறினர் மனசு வெறுத்தவர் பிள்ளைகள் இருவரையும் தங்கையின் பொறுப்பில் விட்டுவிட்டு எங்கோ சென்று விட்டார்.


பாட்டன் சொத்தில் பிள்ளைகளுக்கு பங்கு இருப்பதால் தாயைப் போலவே இந்த குழந்தைகளையும் ஏதாவது செய்து விடுவார்களோ என பயந்த சாந்தி சொர்ணாவையும் கதிரவனையும் சிறுவயதிலிருந்தே பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தார்.எங்குமே தனியாக அனுப்ப மாட்டார் பள்ளி ஆகட்டும் மற்ற இடங்கள் ஆகட்டும் அண்ணன் மக்கள் இருவர் தன்மக்கள் இருவர் என நான்கு பேரையும் ஒன்றாகத்தான் அனுப்பி வைப்பது..பள்ளி முடிக்கவும்


முதலில் கதிரவன் தான் வெளியூர் சென்று கல்லூரி படிப்பை முடித்தான் பிறகு தந்தையின் சொத்துக்களை பராமரித்துக் கொண்டு உள்ளூரிலேயே தங்கி விட்டான். சாந்திக்கு இது மிகப்பெரிய வருத்தம் தான் பெருமாளிடம் கூட சொல்லி புலம்பி தீர்த்தாள்.காரியம் முடிந்ததும் கையை கழுவிட்டான் பார்த்தீங்களா என்று.


அவர்தான் அறிவு கெட்ட தனமா பேசிட்டு இருக்காத நம்ம வீட்ல ஒரு வயசு புள்ளை இருக்கா அவன் வந்து நம்ம வீட்ல தங்கினா பார்க்கிறவர்கள் என்ன நினைப்பாங்க நான் தான் அவனை தனியா போக சொன்னேன்.


நீங்களா ஏன் அப்படி சொன்னீங்க சொல்றதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டீங்களா எனக்கு ஏகத்துக்கும் எகிறினார்.எதுக்கு இப்படி கத்துற என்று பெருமாள் திருப்பி கேட்கவும் தான் மனதில் இருந்த ஆசையை வெளிப்படையாக கூறினார்.


நம் அமுதாவை கதிரவனுக்கும் லதாவை கார்த்திகும் கட்டி வைக்கணும்ங்கிறது ஆசை என்று.


பைத்தியமாடி உனக்கு யோசிச்சு பாரு லதா கார்த்தி ரெண்டு பேரும்னா கூட பரவாயில்லை ஒரு நாலஞ்சு வயசு தான் வித்தியாசம் அமுதாவுக்கும் கதிரவனுக்கும்னா சரிவராது இதை இத்தோட முடிச்சிக்க நான் ஓத்துக்க மாட்டேன் என உறுதியாக கூறிவிட்டார்.

ஏமாற்றமாக இருந்தாலும் கணவரின் பார்வையில் சரி என்பதை ஓத்துக்கொண்டார்.
அடுத்ததாக கார்த்தி படிப்பிற்காக சென்னை சென்றான். அது வரைக்குமே சொர்ணா மீது அவனுக்கு எந்த ஓரு ஈடுபாடும் கிடையாது.
அவன் சென்னை செல்லும் பொழுது அமுதா எட்டாம் வகுப்பு சொர்ணலதா ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தனர் அவன் நான்கு ஆண்டுகள் பொறியியல் படிப்பை முடித்து வரும்பொழுது சொர்ணா பனிரெண்டாம் வகுப்பை முடித்து விட்டு கல்லூரியில் சேர தயாராக இருந்தாள்..

சிறுவயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்து இருந்தாலும் கல்லூரி காலத்தில் கார்த்தி சொர்ணாவை பிரிந்து இருந்ததாலும் படிப்பு முடிந்து மீண்டும் பார்த்த பொழுது காதல் தீ பற்றிக்கொண்டது.அந்த வயதிற்கு உண்டான பொலிவு, தோற்றம் அழகு எல்லாமே கார்த்தியை கிறங்கடித்தது. அவனுக்கு எப்பொழுதுமே சொர்ணாவை மிகவும் பிடிக்கும் அனைவரும் அவளை லதா என்று அழைக்கும் பொழுது தான் மட்டும் பிரத்தியேகமாக அழைக்க வேண்டும் என்பதற்காகவே சொர்ணா என்று அழைப்பான் .அவளுக்கும் அது பிடிக்கும் சிறு வயதிலிருந்தே இவள் தான் உன் மனைவி என்று தாய் கூறி வளர்த்ததாலோ என்னவோ தெரியவில்லை அவளைப் பார்க்கும்போது எல்லாம் தனக்கானவள் என்ற எண்ணம் மனதில் எப்பொழுதுமே தோன்றி கொண்டிருக்கும்.கார்த்திக்கு பெரியதாக படிப்பின் மீதெல்லாம் அக்கறை இருக்காது ஆனாலும் தாய் தந்தையின் ஆசைக்காக தான் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்தது.பெங்களூருவில் வேலையும் கிடைத்திருக்கிறது தான்.

சொர்ணாவை பார்க்க முடியாது என்ற காரணத்தினால் வேலையை பற்றி முக்கிய முடிவை எடுக்க முடியவில்லை.


சொர்ணா அவளின் பட்டப் படிப்பிற்காக கல்லூரியை தேடிக் கொண்டிருக்க எப்படியும் அவள் சென்னை தான் தேர்ந்தெடுப்பாள் என உறுதியாக நம்பியதால் கார்த்தியும் இரண்டு வருடம் கழித்து வேலையை பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து அவனுடைய மேல்படிப்பிற்காக அப்ளை செய்தான்.


சொர்ணாவோ சென்னைக்கு போகாமல் பாளையங்கோட்டையில் அவளது மேல்படிப்பை தொடருவேன் என முடிவெடுத்தாள்.


இது அவனுக்கு சற்று ஏமாற்றம் தான்.. தங்கையின் மூலமாக கதிரவனின் மூலமாக எல்லாம் அவளை சென்னையில் சேரும்படி வற்புறுத்திப் பார்த்தான்


அவள் பிடிவாதம் பிடிக்கவே வேறு வழியில்லாமல் விடுதியோடு கூடிய கல்லூரியில் சேர்த்தனர்.


கார்த்திக்கு மிகுந்த ஏமாற்றம்தான் ஆனாலும் அதை சரி செய்யும் வகையில் விடுமுறை நாட்களில் அவளுடன் கழிப்பது போல பார்த்துக் கொண்டான் அவளும் சிறுவயதில் இருந்து ஒன்றாக வளர்ந்ததால் அவன் எங்கு அழைத்தாலும் சென்று விடுவாள் அவளுக்கு விடுமுறை என்றால் கதிரவனை அழைக்க மாட்டாள் கார்த்தியை தான் அழைத்து கூட்டிபோகச் சொல்வாள்.திரும்பிப் பார்க்கும் முன் கார்த்தியின் மேல் படிப்பு முடிந்தது கடைசி ஆறு மாதம் படிப்பின் காரணமாக அவன் வெளியூர் சென்றுவிட சொர்ணாவைப் பார்க்க முடியாமல் தவித்துப் போனான்.


அதே தவிப்பு அவளிடத்தில் இருக்குமா? என தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான். அவனது முதல் இன்டென்ஷிப் வருமானத்தில் அவரளுக்காக ஒரு மொபைல் போனை வாங்கி பரிசளிப்பதற்காக பாளையங்கோட்டை வந்தான்.அவளோ அதைவிட அட்வான்ஸ் மாடலான மொபைலை கையில் வைத்திருந்தாள்.


அவனுக்குத் தெரிந்தவரை கண்டிப்பாக தாய் வாங்கி கொடுத்திருக்க மாட்டார் பிறகு எப்படி இவ்வளவு அதிக விலையில் என யோசித்தாலும் அவளிடம் கேட்கத் தோன்றவில்லை.


அண்ணன் வாங்கி கொடுத்திருப்பான் என்று நினைத்துக்கொண்டான். இவனுடைய மொபைல் போனை அவள் தொட்டு கூட பார்க்கவில்லை தன்னிடம் இருப்பதால் வேண்டாம் என ஒரேடியாக மறுத்து விட்டாள்.


ஏமாற்றமாகவே திரும்பி ஊருக்கு போய் சேர்ந்தான் அதன் பிறகு அதன் பிறகு படிப்பில் கவனம் செலுத்தி வேலையில் சேர்ந்து கொண்டான்.


அமுதாவை லதா படித்த கல்லூரியிலேயே சேர்த்து விட்டனர்.


பெண்கள் ஒருவருக்கு மற்றொருவர் பாதுகாப்பாகவும் உதவியாகவும் இருப்பார்கள் என நினைத்து சேர்த்தது தான் அங்கு வினையாகி போனது. நம் வீட்டுப் பெண்கள் தவறு செய்ய மாட்டார்கள் என பெற்றோர்கள் கண்டுகொண்டாமல் விட இருவருக்கும் கிடைத்த அளவுக்கு அதிகமான சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த ஆரம்பித்தனர் கல்லூரிக்கு செல்வார்களோ இல்லையோ தினமும் ஊர் சுற்று கிளம்பி விடுவார்கள்.அதிலும் அமுதாவிற்கு படிப்பு வந்ததோ இல்லையோ காதல் நன்றாகவே வந்தது ஒருவர் செய்யும் தப்பை மற்றொருவர் மறைக்க அவர்களின் கள்ளத்தனம் அவர்களுக்குள்ளே புதைக்கப்பட்டது.


காதலை வெகு நாட்கள் மறைத்து வைக்க முடியாது என்பது போல அமுதா திருநெல்வேலிக்கு அவளது காதலனுடன் படம் பார்க்க வரும் பொழுது கையும் களவுமாக தந்தையின் பார்வையில் மாட்டிக் கொண்டாள்.


மகளை வேறொருவனுடன் சினிமா தியேட்டரில் நெருக்கமாக பார்க்கவும் அவருக்கு வந்த கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை அங்கிருந்து அமுதாவை அழைத்து வந்துவிட்டார்.வீட்டுக்கு வந்த பிறகு கண்டிக்க அவளோ சினிமாவில் வருவதை போல காதல் வசனங்கள் பேசினாள்.நீங்களாகவே திருமணம் செய்து வைக்க விட்டால் போலீஸ் ஸ்டேஷன் சென்று திருமணம் செய்து கொள்வோம் இல்லை என்றால் ஆவண கொலை செய்யப் போகிறீர்கள் என உங்கள் மீது கம்ப்ளைன்ட் செய்வேன் என வாய்க்கு வந்ததெல்லாம் உளறி கொட்ட வந்த கோபத்தில் ஓங்கி அறை விட்டுவிட்டார் அதன் பிறகு யோசிக்க ஆரம்பித்தார்.சாந்தியும் பெற்ற மகள் நான்கு நாட்களாக சாப்பிடாமல் தூங்காமல் அழுது கரைவதைக் கண்டு எப்படி இருந்தாலும் அவளுக்கு திருமணம் தானே செய்து வைக்கப் போகிறோம் அதை இந்த பையனுக்கே செய்து வைத்து விட்டால் என்ன என்று யோசனை கூற மனதை சமாதானப்படுத்திக் கொண்டவர்பையனை பற்றி விசாரிக்க அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது சொர்ணாவின் தாயார் வழி சொந்தம் அவன் சொத்துக்காக மட்டுமே அவளை வளைத்து பிடித்து இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டார் ஏற்கனவே ஒரு இறப்பிற்கான காரணம் இன்று வரை தெரியாமல் இருக்கும் பொழுது எப்படி மறுபடியும் ஒரு உயிரை அந்த வீட்டை நம்பி அனுப்ப முடியும் என பல்வேறாய் யோசித்து அமுதாவிற்கு புத்திமதி சொல்ல ஆரம்பித்தார்.


முதலில் அவள் ஒத்துக் கொள்ளவில்லை ஆனால் பெருமாள் பிடிவாதமாக கூறிவிட்டார் நீ அவனை திருமணம் செய்வது மாதிரி இருந்தால் இங்கிருக்கும் சொத்துக்கள் எதுவுமே உனக்கு வேண்டாம் என கையெழுத்து போட்டுவிட்டு அவனை திருமணம் செய்து கொள் என்று .ஆரம்பத்தில் அழுது கரைந்தவள் கடைசியில் ஒரு வழியாக தந்தை சொல்பவனை கட்டிக்கொள்ள சம்மதித்து விட்டாள.


அதற்குக் காரணமும் இருந்தது

தந்தை சொத்துக்கள் இல்லை என்று கூறவும் அவளும் அதற்கு ஒத்துக் கொண்டு ஏற்பாடுகளை செய்யுங்கள் என கூறிவிட்டாள் அதன் பிறகு தான் காதலனை சந்தித்தாள்.


தந்தையின் சந்தேகத்தை நேரிடையாக கூறாமல் வீட்டின் நிலவரத்தை மட்டும் கூற.முதலில் காதலன் கையெடுத்து தானே போட்டு கொடுத்துடு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் கேஸ் போட்டு வாதாடி வாங்கிக் கொள்ளலாம் என்றான் .


எனக்கு பதினெட்டு வயசு முடிஞ்சதால வக்கீல் வைத்து தான் அப்பா எழுதி தர சொல்லறாங்க. என் உடல் தகுதி மனத்தகுதி எல்லாமே செக் பண்ணதுக்கு அப்புறம் தான் பத்திரம் ரெஜிஸ்டர் ஆகும்னு சொல்லி இருக்காங்க. மறுபடியும் கேஸ் போட்டோ கிடைக்காது அதுவும் இல்லாம என் அப்பா மேல நான் என்னைக்கும் கேஸ் போடவும் மாட்டேன்..என் அண்ணன் தானே அனுபவிக்க போறான் சந்தோஷமாகவே அவன் வச்சிட்டு போகட்டும் என உறுதிப்பட கூறிவிட்டாள். அதன் பிறகு தான் அவனின் சுயரூபம் தெரிந்தது

சொத்து இல்லாமல் நீ எதற்கு எனக்கு என்பது போல் பேசி வைத்தான்.

உஷாரான அமுதா தந்தையின் பேச்சை கேட்பது என முடிவெடுத்தாள்.


ஆனால் காதலனின் தொல்லை அவளுக்கு இருந்து கொண்டே தான் இருந்தது அவளால் படிப்பை தொடர முடியவில்லை அவர்கள் சேர்ந்து இருந்த புகைப்படங்களை அவளது வாட்ஸ் அப்புக்கு அனுப்பி வைத்து பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்தான்.


மாப்பிள்ளை என யார் வந்தாலும் அவர்களுக்கு புகைப்படங்களை அனுப்பி வைத்து விடுவான்.


இதை இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என புரிந்து கொண்ட பெருமாள் அவளைப் பற்றிய முழு விவரங்களையும் கூறி கதிரவனிடம் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார்.


அவனும் இத்தனை ஆண்டு காலம் வளர்ந்த மாமனின் பேச்சை மீறவெல்லாம் இல்லை அமுதாவை பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும் ஏதோ வயது கோளாறில் அவனுடன் சுற்றி இருப்பார்களே தவிர வேறு எந்த தவறையும் செய்திருக்க மாட்டாள் அப்படியே செய்திருந்தாலும் கூட மாமனுக்காக அதை பெரிது படுத்தாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தான் .ஆனால் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைத்தான் தனது தங்கைக்கு கார்த்தியை மணம்முடித்து கொடுக்கும் படி கேட்டான் அதற்கு ஒத்துக்கொண்டால் இருவருக்கும் ஒரே மேடையில் வைத்து திருமணம் செய்யலாம் அப்படி இல்லை என்றால் அமுதாவிற்கு வேறு மாப்பிள்ளை பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டான்.


பெருமாளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அமுதாவின் பிரச்சினை வேறு வீட்டில் போய்க் கொண்டிருக்க மனைவியிடம் என்ன செய்யலாம் என கேட்டார்.


அவரும் சரி என்று கூறிவிட்டு பத்திரிக்கை அடியுங்கள் கார்த்திக்கு சொர்ணாவை மிகவும் பிடிக்கும் மறுப்பு சொல்ல எந்த காரணமும் கிடையாது. நமக்கு இப்போ வீட்டு கௌரவம் தான் முக்கியம் அமுதாவை கதிரவன் கிட்ட ஒப்படைச்சுட்டா அவன் அந்தப் பையன் கிட்ட இருந்து அவளை காப்பாத்திடுவான் நான் கார்த்தி கிட்ட பேசறேன் என்று கூறியவர் திருமணத்திற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்து விட்டார் .திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக வந்த கார்த்தி எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் சொர்ணாவை திருமணம் செய்ய மாட்டேன் எனக் கூறிவிட்டான் .தனது தங்கையை திருமணம் செய்யாதவனின் தங்கையை நானும் திருமணம் செய்ய முடியாது என கதிரவனும் அமுதாவை புறக்கணித்து விட இரு பெண்களின் திருமணமும் ஒரே நேரத்தில் தடைபட்டது.


விடிந்தால் திருமணம் ஊருக்கெல்லாம் பத்திரிக்கை கொடுத்து உறவு ஜனங்களை எல்லாம் வீட்டிற்கு அழைத்து தெருவை அடைப்பது போல பந்தலிட்டு வாழை மர தோரணங்கள் கட்டி அனைத்தும் காய்ந்து போவதற்கு முன்பாகவே இரு பெண்களின் எதிர்காலமும் கேள்விக்குறியானது ஊரே கார்த்தியை சபித்தது தாயாரும் சபித்தார் இரு பெண்களின் வாழ்க்கையை கெடுத்து விட்டாயே என்று.ஏற்கனவே அமுதாவின் பிரச்சனை அவனுக்கு நன்றாகவே தெரியும் கதிரவன் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டதற்கு வைத்த நிபந்தனையும் அவனுக்கு தெரியும் எல்லாம் தெரிந்து கொண்டு அமுக்கினிதனமாக இருந்துவிட்டு கடைசி நேரத்தில் மகன் இப்படி காலை வாரவும் சாந்தி மகனை முற்றிலும் வெறுத்தார்.


தனது மகளைப் பற்றி கூட கவலைப்படவில்லை அண்ணனின் மகளுக்காக மிகவும் மனம் வருந்தினார் சாந்தி..ஏற்கனவே தாய் இல்லாத பிள்ளை இப்பொழுது மணமேடை வரை வந்து திருமணம் நின்றால் பெண்ணிற்கு எதிர்காலம் என்ன ஆவது என கலங்கி தவித்தார் .


ஏற்கனவே அவருக்கு லதாவை மிகவும் பிடிக்கும் தன் மக்களை விட அண்ணன் மக்களின் மீது பாசம் அதிகமாக வைத்திருந்தவர் இந்த நிகழ்வுக்குப் பிறகு லதாவின் மீது மேலும் மேலும் பாசத்தை பொழிய ஆரம்பித்து விட்டார்.
 

@38

Moderator
நல்லா கெஸ் பண்ணறீங்க கௌசல்யா நன்றி மா
 
Top