எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருந்தி விட்டேன் திமிர் பிடித்தவளாக!

வீட்டிலும், வெளியுலகத்திலும் தன் அழகியால் வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள பயந்து நடுங்கும் பெண்ணவளின் கதை!!..

எதிர்பாரா நேரத்தில் எதிர்பாரா உதவிகளை செய்யும் நபர்களில் அவள் எவ்வாறு மாறிப்போகிறாள் என பயணிக்டிறது காட்சிகள்!!..

பெண்ணவள் தன்னுடைய எதிர்ப்பை எந்த நேரத்திலும் அழுத்தமாக சொல்ல வேண்டும், அப்படி சொல்லும் பட்சத்தில் அது மற்றவர் கண்களுக்கு எப்படி தோன்றினாலும் தன்னிலையில் இருந்து மாறக்கூடாது என அருமையான கருத்தை சொன்னது அபாரம்!!...

நிதானமாக சென்ற கதை திடீரென அதிவேகத்தில் சென்று, காட்சிகள் கன நேரத்தில் மாறியது போல் இருந்தது!!!..

மீராவை ரொம்ப ரொம்ப பிடித்தது!!... சில விஷயங்களை நிதானமா, ரொம்ப அருமையா விளங்க வச்சாங்க!!..

படிப்பிலும், வேலையிலும், அனைத்திற்க்கும் அனைத்துமாய் இருந்த அவனை ரொம்ப ரொம்ள பிடித்தது!!...

தங்கைக்கு அவள் உறுதுணையாய் நின்றதும், சரியான கேள்வி கேட்டு பெற்றவருக்கு எடுத்து சொன்னதும், இளையவர்களுக்கு வழிகாட்டியாய் இருந்ததும் அசத்தல்!!..

பெண்களுக்கு இன்றியமையாத கருத்துக்களை அழகான காதலுடன் சொல்லும் கதை!!.. வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..

 
Top