எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தேன் சிந்தும் காதல் பூஞ்சோலை

தன் துணையை இழந்து, அந்த இழப்பிலிருந்து மீண்டு வர முடியாமல், தன் குழந்தைகளோடு வாழ்பவரின் வாழ்வில் அடுத்து வரும் சோதனைகளோடு தொடங்கும் கதை!!..

காரணத்தை மறைத்து திடீரெண மரணத்தை பரிசாய் பெற்று, அந்த மரணத்தை கடந்து வர முடியாமல் இருக்கும் இவனை தேடி வரும் எதிர்பாரா உறவு!!!... இழப்பை கடந்து வரா நிலையில் மகனின் தவிப்பை, ஏக்கத்தை களைவதற்காக எதிர்பாரா உறவை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம்!!... இந்நிலையில் வாழ்வை தொடங்கும் தம்பதிகளின் வாழ்வை நிதர்சனத்தோடு சொன்ன விதம் அருமை!!..

இருவருக்கும் எப்போதும் துணையிருந்த பெற்றோர்களையும், மாமியார், மாமனாரையும் அதுபோல் எந்த எதிர்பார்ப்பின்றி உதவிய பாதிரியாரையும், அத்தையையும் ரொம்ப பிடித்தது!!!..

தெரியாமல் நடந்த தப்பை எக்காரணம் கொண்டும் திரும்ப நடக்கவிடக்கூடாது என்ற அவனின் தவிப்பை புரிந்து கொள்ள முடிந்தது!!!..

அவளின் தடுமாற்றங்களையும், மாற்றங்களையும் சொன்ன விதம் இயல்பாய் இருந்தது!!... மறக்காது, கடந்து வந்து நிதர்சனத்தை ஏற்று கொண்டது அவர்களின் வாழ்க்கையை அழகாக்கியது!!..

வலியை கடந்து வாழும் காதலை சொல்லும் அருமையான கதை!!.. வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..

 
Top