எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தேன்சிந்தும் காதல் பூஞ்சோலை

santhinagaraj

Well-known member
தேன்சிந்தும் காதல் பூஞ்சோலை

விமர்சனம்

ரொம்ப அருமையான எதார்த்தமான மறுமணம் கதை.

நந்தினி,ஜான் இருவரும் தங்கள் வாழ்க்கைத் துணைகளை இழந்து குழந்தைகளுடன் தங்களைப் பிரிந்து சென்றவர்களின் நினைவுகளோடு வாழ்க்கையை கடத்திக் கொண்டு இருக்கின்றனர்.

இருவரின் பெற்றோர்களும் குழந்தைகளின் எதிர்கால வாழ்வை கருத்தில் கொண்டு ஜான்,நந்தினி இருவருக்கும் மறுமணம் செய்து வாழ்க்கை பயணத்தில் இணைய வைக்கின்றனர்.

குழந்தைகளின் வாழ்வை முன்னிறுத்தி இவர்கள் வாழ்க்கையில் இணைந்தாலும் இவர்களின் வாழ்க்கை எவ்வாறு செல்கிறது. இருவருக்குள்ளும் புரிதல் இருந்தாலும் அவர்களுக்குள் காதல் எப்படி மலர்கிறது என்பதை ரொம்ப எதார்த்தமாக சொல்லி இருக்கிற விதம் சூப்பர் 👌👌👌

தாங்கள் இறந்த துணைகளின் நினைவோடு இருக்கும் இருவர் மறுமணத்து இணைகையில் அவர்களுக்குள் ஏற்படும் சின்ன சின்ன உணர்வுகளையும் ரொம்ப அருமையா வெளிப்படுத்தி இருக்காங்க ரைட்டர் 👏👏👏

கதையில் வரும் குட்டிஸ் முதல் பெரியவர்கள் வரை எல்லா கேரக்டரையும் கதைக்கு ஏற்ப ரொம்ப அருமையா கொடுத்து இருக்காங்க 👌👌

ரொம்பவும் எதார்த்தமான குடும்ப கதை. எழுத்து நடையை ரொம்பவும் தெளிவா இருந்தது. நிறைவான முடிவு 👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐

( கடைசில ஒரு ரெண்டு மூணு எபி ல மட்டும் கொஞ்சம் எழுத்து பிழைகள் இருக்கு அதை சரி பண்ணுங்க )
 
Top