எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீயென் காதலாயிரு

அதிரடியான, கலகலப்பான காதல் கதை!!... ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ஒரே வேகத்தில், எந்த தொய்வும் இன்றி காட்சிகளை நகர்த்தி சென்ற விதம் அருமை!!..

இந்தர் சரியான சேட்டை, ஆனாலும் பொறுப்பானவன், பிடிவாதக்காரனா தான் எனக்கு தெரிஞ்சான்!!... ஆரம்பத்திலிருந்து அனைத்திலும் அவள் கூடவே நின்றது அருமை!!..

சந்தோஷ் மேல ஆரம்பத்தில் கோவம் இருந்தாலும், போக போக அவனையும் அவன் நட்பால், காதலால், குணத்தால் ரொம்ப பிடித்தது!!...

சூழ்நிலையால் தவறு நடந்தாலும், உடைந்தது உடைந்தது தானே என அனைத்து காட்சிகளும் இயல்பாய் இருந்தது!!.. மனிதர்களும் கூட!!... விலாசினியையும் பிடித்தது அவள் இயல்பான அன்பினால்!!...

தேடி, கண்டுபிடித்து, காதலை உணர்த்தி, என காதலுக்காக அவன் செய்த அத்தனையும் அருமை!!... அவள் அம்மாவிடம் காதலை தெரிவித்து சம்மதம் கேட்கும் காட்சிகள் சுவாரசியமானவை!!...

பழி சுமந்தாலும், உறவுகளை யோசித்து, பொறுப்பை உணர்ந்து, காதலையும் கைப்பற்றி, கற்று கொண்ட பாடங்களுடன் உறவுகளை அரவணைத்து சென்றது அவளின் தெளிவையும், முதிர்ச்சியையும் சொன்னது!!...

இந்தரை போலவே இந்தரின் பெற்றோர்களும் ரசிக்க வைத்தார்கள்!!... இயல்பான வாழ்வியலோடு இயல்பான காதலை சொல்லும் அருமையான கதை!!... வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..

 
Top