மிக்க மகிழ்ச்சி சகிஅதிரடியான, கலகலப்பான காதல் கதை!!... ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ஒரே வேகத்தில், எந்த தொய்வும் இன்றி காட்சிகளை நகர்த்தி சென்ற விதம் அருமை!!..
இந்தர் சரியான சேட்டை, ஆனாலும் பொறுப்பானவன், பிடிவாதக்காரனா தான் எனக்கு தெரிஞ்சான்!!... ஆரம்பத்திலிருந்து அனைத்திலும் அவள் கூடவே நின்றது அருமை!!..
சந்தோஷ் மேல ஆரம்பத்தில் கோவம் இருந்தாலும், போக போக அவனையும் அவன் நட்பால், காதலால், குணத்தால் ரொம்ப பிடித்தது!!...
சூழ்நிலையால் தவறு நடந்தாலும், உடைந்தது உடைந்தது தானே என அனைத்து காட்சிகளும் இயல்பாய் இருந்தது!!.. மனிதர்களும் கூட!!... விலாசினியையும் பிடித்தது அவள் இயல்பான அன்பினால்!!...
தேடி, கண்டுபிடித்து, காதலை உணர்த்தி, என காதலுக்காக அவன் செய்த அத்தனையும் அருமை!!... அவள் அம்மாவிடம் காதலை தெரிவித்து சம்மதம் கேட்கும் காட்சிகள் சுவாரசியமானவை!!...
பழி சுமந்தாலும், உறவுகளை யோசித்து, பொறுப்பை உணர்ந்து, காதலையும் கைப்பற்றி, கற்று கொண்ட பாடங்களுடன் உறவுகளை அரவணைத்து சென்றது அவளின் தெளிவையும், முதிர்ச்சியையும் சொன்னது!!...
இந்தரை போலவே இந்தரின் பெற்றோர்களும் ரசிக்க வைத்தார்கள்!!... இயல்பான வாழ்வியலோடு இயல்பான காதலை சொல்லும் அருமையான கதை!!... வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே!!..
மிக்க மகிழ்ச்சி சகிகதை அருமை. காதல் பாசம் நம்பிக்கை நட்பு கலந்து அழகாக கொண்டு போயிருக்கேங்க. ஆரம்பத்தில் கல்யாணத்தில் ஆரம்பித்து அழகாக போய்கிட்டு இருக்கும் போது வில்லி ஹீரோயின் மேல் திருட்டு பழியிட்டு விரட்டுவது பழகிய பழக்கம் நம்பிக்கை இல்லாமல் அத்தை மாமா நடப்பது நண்பன் டூ மச் தான். இந்தர் செம இவன் அப்போதே அவள் நம்பிக்கை கொண்டு இருப்பது சூப்பர். ப்ரியா இதனால் பழியை கிடப்பில் போட்டு சென்னை செல்கிறாள். இந்தர் தன் காதலியை காணாமல் தேடி கண்டறிந்து அவளிடம் வம்பு வளர்ப்பது காதலை சொல்வது செம. அன்வர் சூப்பர். இந்தர் அம்மா அப்பா செம. சந்தோஷ் விலாசினியிடம் காதலை சொல்ல அவளும் ஏற்றக் கொள்ள. சந்தோஷ் டூ மச் இவன் அப்பா அம்மா சொல் கேட்டு நடக்கிறான் சரி ஆனால் நட்புக்காக ஓன்றும் செய்ய வில்லை இவன். இந்தர் அவளுக்கு பிடித்த பூரி கொடுக்க அவளும் வாங்கி கொள்ள. இந்தர் இடைவிடாமல் தொடர்வது செம. மோகன் ப்ரியா ஆபிஸ் ஒன்றாக இருப்பது சூப்பர். மோகன் தன் பையன் காதலை கன்பார்ம் பண்ண பேச்சு கொடுக்க எல்லாம் சொல்ல செம. குட்டு வெளிப்பட மோகன் வீட்டுக்கு கூட்டி வர லவ் பண்ணுகிறேன் கோபத்தில் லிப்லாக் பண்ணுவது அவளுக்கு எடுத்து உரைத்ததம் சரி என்பதும் திரும்ப கிஸ் பண்ணுவது செம. ப்ரியா அம்மாவின் எண்ணத்தை சொல்ல அவனும் புரிந்து அப்பா அம்மா கூட்டிட்டு போக பேசி சம்மதம் வாங்கி ஒரு வருடம் கழித்து என்க வில்லி தெரிந்ததால் மன்னிப்பு கேட்க அத்தை மாமா வர இவளும் மன்னிக்க சந்தோஷ்வுடன் சண்டை. அக்காவுக்கு கடமை முடிந்து சந்தோஷ் கல்யாணத்துக்கு வரும் போது இவர்கள் திருமணம் நாள் குறிக்க கல்யாணம் முடிய சுபம். கதை அருமை. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்