எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாயனே 15 - கதை திரி

NNK-82

Moderator

மாயனே 15​

எந்த உணர்வும் காட்டாமல் இன்பா அமர்ந்து இருப்பதை கண்டு குழம்பிய நிலா "உங்களுக்கு முன்னாடியே இந்த விஷயம் தெரியுமா?" என்று கேட்க "தெரியும்" என்றான் அவன்.​

"எப்படி?" அவள் குழப்பமாக கேட்க "அனுராக் பையன் துர்கேஷ் உன்னை ஒன் சைடா லவ் பண்ணி உன் பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தான். அப்படித்தானே??" என்று கேட்க "ஆமாம்" என்பது போல மேலும் கீழும் தலையாட்டினாள்.​

" உன் நிழல் மாதிரி உன் கூடவே நான் இருந்தேன்" என்று கூற அதிர்ந்தாள் நிலா.​

"நம்ப முடியலல? ஆனா அது தான் உண்மை" என்றவன் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தான்.​

இன்பாவின் தாய் நிலாவின் தந்தை பிரகாஷ் மீது கோபித்துக் கொண்டு சென்று விட அவருக்கு தனியாக மளிகை கடை வைத்துக் கொடுத்து மூன்று பிள்ளைகளின் படிப்பு செலவு முதல் அனைத்தையும் ஏற்றார் பிரகாஷ். அது தெரியாமல் பிரகாஷை வெறுத்து வந்தார் பானுமதி. நாட்கள் இப்படியே செல்ல தன் தந்தையை தன் கண்முன்னே கொன்றவனை கொன்று தீர்க்கும் ஆத்திரமும் கோபமும் எழுந்தது இன்பாவிற்குள். அதை பிரகாஷிடம் தெரிவிக்க அவசரமாக தடுத்தார் அவனை.​

" இல்லை இன்பா நீ பண்றது தப்பு. இப்ப நீ படிக்கணும். நீ சின்ன பையன். படிப்பை தவிர உனக்கு வேற எதுவுமே பெருசா தெரியக்கூடாது. கொலையும் பழியும் என்னைக்கும் எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது. அனுராக் கண்டிப்பா போலீஸ்ல மாட்டுவான். அன்னைக்கு அவனுக்கு தண்டனை கிடைக்கும். அவனுக்கான தண்டனை கிடைக்கிறதுக்குள்ள நீ குற்றவாளியா ஆகிராத. உன்ன குற்றவாளியா பார்க்கிற ஒரு சூழ்நிலை வந்துச்சுன்னா என்னையவே என்னால மன்னிக்க முடியாது இன்பா. ப்ளீஸ் உன்கிட்ட கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் தயவு செஞ்சு இந்த கொலைவெறி உனக்கு வேண்டாம்" தந்தைக்கு தந்தையாக ஆசானுக்கு ஆசானாக இருந்து வளர்த்தவர் இறைஞ்சி கேட்க தன் பழி உணர்ச்சி தனித்தான் இன்பா.​

ஆனாலும் உள்ளுக்குள் கங்காய் கணன்று கொண்டிருந்தது அவன் கோப தீ. அத்தனை கோபத்தையும் ஒரு நாள் காட்ட மனதிற்குள் அழுத்தி வைத்துக் கொண்டிருந்தான் இன்பா.. பள்ளி படிப்பு முடித்து கல்லூரி படிப்பு வரும் பொழுது அவன் தாயுடன் நடந்த வாக்குவாதத்தில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான். அன்று வந்த சண்டைக்கு காரணம் என் அப்பாவை கொன்னவனை கொல்லுவேன் என்று கொலை வெறியோடு கூறியவனை பானுமதி அதட்டியதால்.​

என்னைக்கு என் அப்பாவை கொன்னவன் சாவுறானோ அன்னைக்கு தான் அந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைப்பேன் என்று சபதம் இட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான் பிரகாஷ். தன் அன்பு கட்டளை மூலம் அவனை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்தார். சின்ன சின்ன வேலைகள் செய்து சிறுக சிறுக சேர்த்த பணத்தை வட்டிக்கு கொடுக்க ஆரம்பித்தான். அப்படித்தான் வட்டி தொழில் அவனுக்கு பழக்கமானது. வட்டித் தொழிலில் வந்த வருமானத்தை வைத்து தனக்கென்று சொந்த வீடு வாங்கிக் கொண்டான். தன் தம்பி தங்கைகளுக்கான பள்ளி படிப்பு செலவை ஏற்றான். அதை பானுமதி எப்பொழுதும் வேண்டாம் என்றதில்லை.​

ஆனாலும் மகன் மீது கொண்ட கோபத்தினால் அவனிடம் பேசாமல் இருந்து வந்தார். இது இப்படி இருக்க அனுராத் மகன் துர்கேஷ் நிலாவை ஒருதலையாக காதலிக்கிறேன் என்று கூறி டெல்லியில் அவள் பின்னாடி சுற்றி வந்தான். அதை தெரிந்த பிரகாஷ் இன்பாவிடம் சொல்ல நிலாவுக்கு கவசமாக நான் இருப்பேன் என்று அன்றே டெல்லி புறப்பட்டு சென்றான்.​

அங்கு நிலாவின் நிழல் போல அவளுடனே இருந்thubஅவளை பார்த்துக் கொண்டான். அனுராக்கு தன் மகனின் காதலிதான் தன் எதிரி பிரகாஷின் மகள் என்று தெரியாது. தலைமறைவாய் இருந்தவன் தன் மகன் ஆசைப்பட்ட பெண்ணை அவனுக்கு மனம் முடித்து வைக்க நினைத்தான். ஆனால் ஒரு தலை காதல் என்று தெரிந்து என்னை ஏற்று கொள்ளாத அவளை நாசம் செய்ய நினைத்து நெருங்க இன்பாவினால் கொலை செய்யப்பட்டான் துர்கெஷ்.​

இறந்து போன துர்கேஷ் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அவன் இறந்துவிட்டான் என்று கூறி அந்த வழக்கையும் மூடினார் அவன் இறந்த வழக்கையும் மூடினார் டெல்லி போலீஸ். தன் மகன் ஒரு பெண்ணிற்காக இறந்து போனான் என்று அறிந்த அனுராக் மிருகமாய் உருமினான். தன் மகன் சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்க எண்ணி நிலா பற்றி விசாரிக்கும் பொழுது தான் அவள் பிரகாஷ் மகள் என்று அறிந்து பெரும் கோபம் கொண்டான்.​

அவன் குடும்பத்தையே அழிப்பேன் என்று உறுதி கொண்டு தலைமறைவாய் இருந்தவன் வெளியே வர அவனை ஸ்கெட்ச் போட்டு தூக்கியது டெல்லி போலீஸ். இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அனுராக். ஒரே மகனின் சாவுக்கு கூட வராதவன். அவன் சாவிற்கு பழி வாங்க வந்த போது போலீசிடம் மாட்டிக் கொண்டான் இது எல்லாம் இன்பாவின் திட்டம்.​

அனுராக் மகன் இறந்து போனான். அனுராக் போலீஸில் பிடிபட்டான் இனி நிலாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைத்து நிம்மதியுடன் அவள் நிழல் போல அவளை பின்தொடர்ந்தான். அவளும் படிப்பு முடித்துவிட்டு சென்னை வந்தாள். அனுராக்கின் பழி உணர்ச்சி கண்டு அஞ்சிய பிரகாஷ் தந்தையாக மகளின் நலனில் கவலை கொண்டார். அதன் விளைவாகவே இன்பாவிற்கு நிலாவை கட்டி வைக்க முடிவு செய்தார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத இன்பா மறுக்க "வேற யாராலையும் என் பொண்ண அவன்கிட்ட இருந்து காப்பாற்ற முடியாது இன்பா.​

ஏற்கனவே என் மேல இருக்க பகையை என் பொண்ணு மேல காட்டிடுவாணு தான் அவனை டெல்லிக்கு அனுப்பி படிக்க வச்சேன். ஆனால் அங்கேயும் இப்படி ஒரு பிரச்சனை அவளுக்கு வரும்னு நான் நினைக்கல. விளையாட்டு போதும். இனியும் நான் விளையாட விரும்பல. என்னதான் நான் போலீஸ்காரனா இருந்தாலும் ஒரு அப்பாவா என் பொண்ணோட விஷயத்துல நான் விளையாட முடியாது. ரிஸ்க் எடுக்க முடியாது. அதனால தான் சொல்றேன் என் மகளை நீ கல்யாணம் பண்ணிக்கோ" என்று கேட்க அமைதியின் உருவமாய் இருந்தான் இன்பா.​

அவன் அமைதியில் கலங்கிய பிரகாஷ் "என் பொண்ண உனக்கு புடிக்கலையா இன்பா?" என்று கேட்க திடுக்கிட்டு நிமிர்ந்து அவரைப் பார்த்தான். சிறு வயது முதல் அவன் மனதில் கொண்ட ஆசை, காதல் அனைத்துமே நிலா தானே. அவன் எப்படி பிடிக்கவில்லை என்று சொல்வான். ஆனால் நிலாவிற்கு அவள் மனதில் என்ன ஓடுகிறது என்பது யாருக்கும் தெரியாதே.. வேறு எவரையும் அவள் விரும்பி இருக்கலாம் அல்லது தனக்கு வரப்போகும் ஆடவன் பளிங்கு வெள்ளை நிறத்தில் அழகான மாடல் போல இருக்கலாம் என்று நினைத்திருக்கலாம்.​

ஆனால் தானோ கரிய ஆடவன் ஆயிற்றே என்று அவன் தயங்க "சொல்லு இன்பா.. என் பொண்ண உனக்கு பிடிக்கலையா?" பிரகாஷ் கேட்க "அப்படியெல்லாம் எதுவும் இல்ல அங்கிள்.." என்று அடுத்த வார்த்தை அவன் பேச வரும் முன் "அப்புறம் வேற என்ன வேணும். என் பொண்ணுக்கு நீ தான் மாப்பிள" என்று கூறி சென்றார்.​

இன்பாவிற்கு தான்​

நிலையம்கை அருந்த நிலை. நிலாவின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அவனால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. அதே நேரம் நிலாவிடம் சென்று இன்பாவின் போட்டோவை காட்டி இவன்தான் உன் மணாளன் என்று கூற அதிர்ந்தாள் அவள்.​

"இப்போ தான் படிப்ப முடிச்சிட்டு வந்தேன். அதுக்குள்ள எனக்கு கல்யாணம் பண்ண என்ன அவசரம்?" இன்பாவின் போட்டோவை பார்க்காமலே கேட்டாள்.​

" அப்பா எது பண்ணாலும் உன் நல்லதுக்கு தான் டா.. சொன்னா கேளு.. இந்த மாசத்திலேயே நல்ல நாளா பார்த்து கல்யாணம் பிக்ஸ் பண்ணி இருக்கேன்" என்று கூற இன்னும் அதிகமாக அதிர்ந்தாள்.​

இப்பொழுது தான் கல்யாணம் என்று கூறுகிறார். அதற்குள் மாப்பிள்ளையும் முடிவு செய்து தேதியும் குறித்து விட்டாரே என்று அவள் குழம்ப "போட்டோவை பாரு" என்று விட்டு சென்றார்.​

தந்தை மீது கோபமாக இருந்தாலும் ஏதோ ஒரு இக்கட்டான நிலையில் தந்தை இருக்கிறார் என்று உணர்ந்தவள் போட்டோவை எடுத்து பார்க்க இன்பாவை பார்த்து இன்னும் அதிகமாக அதிர்ந்தாள். அவள் அவனை முதலில் பார்த்ததே கொடுமைக்கான கந்தவட்டிக்காரனாக தானே. அந்த நினைவுகள் எல்லாம் அவளை ஆக்கிரமிக்க. "இந்த கந்துவட்டி பொறுக்கிய நான் கல்யாணம் பண்ணிக்கனுமா?? முடியவே முடியாது.. என்னால் இவனை கல்யாணம் பண்ணிக்கவே முடியாது.." வானத்துக்கும் பூமிக்கும் தாண்டினாள் நிலா..​

மாதவி அமைதியாக இருக்க, அவளிடம் வந்த தந்தையிடம் 'இவன் கந்த வீட்டுக்காரன்.. " என்று ஆரம்பிக்கும் முன் "இவன்கிட்ட ஒன்னு இல்ல ரெண்டு இல்ல 80 லட்சம் நான் கடன் வாங்கி இருக்கேன். அதெல்லாம் என்னால எப்படி கொடுக்க முடியும் ஒரே பேமெண்ட்ல கொடுக்க முடியும்?" என்று பிரகாஷ் கேட்டார்.​

"80 லட்சம் காசு கொடுக்கறீங்களா உங்க பொண்ண கட்டி கொடுக்கறிங்கன்னு கேட்டான்.. நான் பொண்ண கட்டிக்கொடுக்கறேன்னு சொல்லிட்டேன்" என்று கூலாக சொன்னவரை அக்னி பார்வையில் எரித்தாள் நிலா.​

" 80 லட்ச ரூபாய் காசுக்காக பெத்த பொண்ண அவனுக்கு கட்டிக் கொடுக்க நினைக்கிறீர்களாப்பா?? இது எந்த வகையில அப்பா நியாயம்? எனக்கு புடிக்கல… இவனை பிடிக்கவே இல்ல" என்று கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று அவள் தாண்ட "நீ அவனை கல்யாணம் பண்ணிக்கலைன்னா அவ என்ன கொன்னுடுவேன் பரவாயில்லையா??" என்று கேட்க இன்னும் அதிகமாக அதிர்ந்தாள்.​

அதிர்ச்சியாய் தந்தையைப் பார்க்க "நமக்கு வேற வழி இல்ல நிலா. நீ அவனை கல்யாணம் பண்ணிக்கோ. வசதியான வாழ்க்கை உனக்கு கிடைக்கும். நானும் நிம்மதியா இருப்பேன். நான் இந்த 80 லட்சம் கடன் கொடுக்கத் தேவையில்லை. நீ அவனையே கல்யாணம் பண்ணிக்கோ.." என்று கூற உடைந்து நொறுங்கிப் போனாள் நிலா.​

தன் தந்தையா இப்படி?? பணத்திற்காக தன்னை விரும்பாத ஒருவனை மணந்து கொள்ள வற்புறுத்துகிறாரே என்று நினைத்தவாறு "அப்பா வேண்டாம் பா.. எனக்கு இவனை புடிக்கலப்பா.. இவ நல்லவன் இல்லப்பா.. கொடுமக்காரன் பா… அவன் சேர்த்து வைத்திருக்க பணம் சொத்து எல்லாம் பாவப்பட்ட சொத்து பணம்.. எனக்கு இவன் வேண்டாம்" காலில் விழாத குறையாக கெஞ்சினாள்.​

மகள் கெஞ்சுவதை கண்டு இதயம் விம்மி வெடித்தது பிரகாசுக்கு. வேறு வழி இல்லையே மகளை பத்திரமாக உரியவன் கையில் சேர்க்க வேண்டுமே. எவனோ ஒருவனுக்கு மனம் செய்து கொடுத்து அவளுக்கு பின்னால் வரப்போகும் பிரச்சனையை சமாளிக்க இயலாமல் பாதியிலேயே விட்டு செல்பவனை விட, தன் உயிர் உள்ள கடைசி நொடி வரை தன் மகளுக்காக நின்று போராடும் இன்பாவே தன் மகளுக்கான சரியான துணை என்று அழுத்தமாய் நம்பிய பிரகாஷ் வேறு வழியின்றி வற்புறுத்தி கொலை பயம் காட்டி தன் மகளை திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத்தார்.​

நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஒரு வார்த்தை கூட அவள் சொல்லவில்லை அவள் அமைதியையே சம்மதமாக எடுத்துக் கொண்டு அடுத்த வேலைகள் பார்த்து இன்பாவிற்கே மணமுடித்து வைத்தார். அதற்கு பின் நடந்தவை அனைத்தும் நாம் அறிந்ததே!!​

இதையெல்லாம் இன்பா கூறி முடிக்க அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் நிலா. "என்ன சுத்தி இவ்வளவு நடந்து இருக்கு எனக்கே தெரியாம.."என்று கேட்க இதழ் வலைத்து சிரித்தான் இன்பா​

" உனக்கு மட்டும் தான் எதுவும் தெரியாது. உன் அம்மா அப்பத்தா.. எல்லாருக்குமே எல்லாமே தெரியும். தெரிஞ்சுதான் எனக்கு உன்னை கல்யாணம் பண்ணி வச்சாங்க" என்றான்.​

இவரிடமும் சில நொடிகள் அமைதி நீடிக்க, " துர்கேஷ் சாவான்னு நான் சத்தியமா நினைக்கல.. " என்றாள் வருத்தமாகவே.​

" எனக்கு புரியுது. ஆனா என்ன பண்றது? ஒரு முட்டாள் அவன். அவனுக்கான முடிவ அவனை தேடிக்கிட்டான். இதுல உன் தப்பு எதுவும் இல்ல நிலா. ஆனா அவனை பெத்தவனுக்கு அது புரியலையே! தன் மகனோட காதல ஏத்துக்காத அவ உயிரோட இருக்கக் கூடாது. என் புள்ள சாவுக்கு காரணமானவ உயிரோட இருக்க கூடாதுன்னு உன்ன தான் அவன் டார்கெட் பண்ணா அதனாலதான் நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி ஆயிடுச்சு" என்று நிறுத்தி அவளை பார்த்தவன்​

" உனக்கு நிறைய ஆசைகள் கனவு இருந்து இருக்கும்ல. நல்லா அழகான கலரான மாடல் மாதிரி உள்ள ஒரு பையனை கல்யாணம் பண்ணிக்கணும்னு. ஆனா உன் அப்பா என்ன உனக்கு போர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணி வச்சுட்டாருல.. உனக்கு நான் கொஞ்சம் கூட பொருத்தமே இல்லை நிலா" என்று தன் வெளிப்புற கறியை தோற்றத்தை வைத்து அவன் கூற, இமைக்காமல் அவனை வெறித்து பார்த்தாள்.​

" ஜெயில்ல போட்டு அடக்கி அடச்சாலும் அவன் தப்பிச்சு வருவான் அவன். அவன தூக்குல போடுற வரைக்கும் உன் கூட உனக்கு பாதுகாப்பா இருந்துட்டு அதுக்கப்புறம் உனக்கு டைவர்ஸ் கொடுத்துட்டு உனக்கு மனசுக்கு புடிச்ச மாதிரி ஒருத்தனை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சேன். ஆனா என்ன பண்றது? என் மனசு என் மனசு குள்ள உன் மேல இருந்த காதல் என்ன உன்கிட்ட அத்துமீற வச்சுருச்சு… நானும்…. " என்று அதற்கு மேல் பேச முடியாமல் தடுமாற அவனை நெருங்கினாள்.​

அவன் கண்ணம் பற்றி தன்னை பார்க்க வைத்தவள் "எனக்கு மாடல் மாதிரி அழகா இருக்க ஆம்பள வேணும் நான் என்னைக்குமே நினைச்சது இல்ல. அழகா இருக்க ஆண்களை விட பொண்டாட்டிய அழகா பாத்துக்குற ஆண்கள் தான் பெண்களுக்கு பிடிக்கும். எனக்கும்தான். எனக்கு உங்களை தெரியாத போதும் நிழல் மாதிரி இருந்து என்ன பத்திரமா பாத்துக்குட்டிங்க.. வேற என்ன வேணும் எனக்கு.. நீ போதும் இன்பா.." என்று தாவி அணைத்துக் கொண்டாள் அவனை. இதை அவன் எதிர்பார்க்கவில்லை.​

அவன் முகம் பார்த்தவள் "ஆமா.. நான் உங்களை முதல் முறையாக பார்த்தப்ப ஒரு கொடுமைக்காரன் தான் எனக்கு நீங்க தெரிஞ்சீங்க. நிஜமா கல்யாணம் பண்ணிக்கிற வரைக்கும் எனக்கு உங்க மேல எந்த பீலிங்ஸ் இல்ல. கோபம் மட்டும்தான் இருந்துச்சு. அந்த கோபத்தோட பரிசா உங்க மேல வந்த வெறுப்பு. ஆனால் ஏன் என்று தெரியவில்லை நீங்க என்கூட இருக்கும்போது நான் ரொம்ப ஹேப்பியா இருந்தேன். மனசு எல்லாம் ஒரு ஃபுல் ஃபீல் ஆன மாதிரி ஒரு பீல் சந்தோஷமா இருந்தேன் உங்க கூட.​

ஆனா நீங்க ஒரு கொடுமைக்காரன் நினைக்கும்போதெல்லாம் எனக்கு கோபம் வந்தது. அந்த கோபம் தான் வெறுப்பா மாறிடுச்சு. ஆனாலும் அன்னைக்கு நீங்க என்னை நெருங்கும் போது என்னால உங்களை தவிர்க்க முடியவில்லை. என்னையே அறியாம என் கோபம் வெறுப்பு எல்லாத்தையும் தாண்டி கடுகு மாதிரி உங்க மேல வந்த ஒரு விருப்பம் நாளடைவில் வளர்ந்து காதல மாறுச்சு. அது எனக்கு தெரியல. காரணம் நான் கண்ணால பார்த்தது உண்மை என்று நம்பி இருந்ததினால். முதல் முறை நீங்க என்கிட்ட நெருங்கும்போது கூட முழு மனசோட தான் நான் உங்களை ஏத்துக்கிட்டேன்..​

எல்லாம் முடிஞ்சு அதுக்கப்புறம் தான் என்ன பண்ணி இருக்கேன் எனக்கே புரிஞ்சது வயசு கோளாறு இல்ல வாலிபர் தேவைக்காக மட்டும் தான் நீங்க நெருங்கும்போது உங்களை நான் அனுமதிச்சேன்னு நினைச்சு என்னை நானே வெறுத்துகிட்டேன். உடல் சுகத்துக்காக பிடிக்காமல் வெறுக்கிற ஒருத்தன் கூட இழைஞ்சிட்டு இருக்கியேடின்னு என் மனசாட்சி என்னை திட்டுச்சு. ஆனா.." என்று நிறுத்தி அவனை பார்த்தவள் "அது உண்மையான அன்பு என்று எனக்கு சத்தியமா புரியல" என்றாள் விழிகளில் நீர் துளிர்க்க.​

இதழ் விரித்து அவள் கண்ணம் ஏந்தி தன்னை பார்க்க வைத்து அவள் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டான். "எனக்கு தெரியும் நிலா.. நல்லா தெரியும் உன்னை பத்தி.. அதனால தான் எந்த சூழ்நிலையிலும் உன்னை விடக்கூடாது தனியா விட கூடாதுன்னு நினைச்சு உன் கூடவே இருந்தேன். அன்னைக்கு நடந்த ஏதோ ஒரு சண்டையில தான் உன்னை கொண்டு போய் உங்க அப்பா வீட்டுல விட்டுட்டு வந்தேன். ஆனா அதுக்கப்புறம் நான் நானா இல்ல டி. அப்பதான் புரிஞ்சுகிட்டேன் நிலா இல்லாம இன்பா வெறும் கூடுதான்னு.​

அப்ப முடிவு பன்னேன் இனிமே உன்னை விட்டு போக கூடாதுன்னு. இனி எப்பவும் நான் உன்னை விட்டு போக மாட்டேன் டி.. நிலா இல்லன்னா இன்பா இல்லவே இல்லடி. இந்த கருப்பன இப்படியே ஏத்துக்கோ.. காதலிக்கலாம், கொஞ்சிக்கலாம், கச முசா பண்ணலாம்.. குழந்தை பெற்றுக்கொள்ளலாம் சந்தோஷமா சேர்ந்து வாழலாம்… என்ன ஓகேவா?? எனக்கு புள்ள பெத்து கொடுப்பியா??" என்று கேட்க நாண செந்தூரம் பூசிக் கொண்டது அவளை.​

தலையை மட்டும் ஆட்டியவள் "எனக்கு ஆண் குழந்தை தான் வேணும்" என்றாள் இதழ் கடித்து நாணத்தை அடக்கி. அவள் நாணம் கண்டு இதழ் விரித்தவன் எனக்கு "பொண்ணு வேணும்.." என்றான் "அதுவும் உன்ன மாதிரியே" என்று அழுத்தி கூற நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் "முதல்ல பையன். ரெண்டு வருஷம் கேப். அதுக்கடுத்து பொண்ணு ஓகேவா??" என்றாள் டீல் பேசி.​

கலகலவென சிரித்த இன்பா ஓகே டி என்று அவளை அணைத்துக் கொண்டு கட்டிலில் உருள அவர்கள் காதல் களி ஆட்டத்தில் கட்டிலும் அலறியது…​

தொடரும்…​

 
இவ்வளவு நடந்திருக்கு!!... இனி அவன் எப்ப வந்து என்ன பன்னுவானோ??.... எப்படியோ இவங்க ரெண்டு மனசு விட்டு பேசியாச்சு!!!
 
Top