எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மரம் தூவும் மழை -6

@38

Moderator
6


அப்படி லதா பேசி சென்றும் கூட சாந்திக்கு கோபம் வரவில்லை வருத்தம் தான் மேலோங்கியது தாயில்லா பிள்ளை என்னதான் நாம் அன்பை கொட்டி வளர்த்திருந்தாலும் தாயின் பாசத்திற்கு ஈடாகுமா அமுதாவை கதிரவனுக்கும் லதாவை கார்த்திக்கும் திருமணம் செய்து வைத்திருந்தால் ஒரே வீட்டில் இரு பெண்களின் வாழ்வையும் கண்முன் பார்த்து ரசித்திருக்கலாம் இந்த கார்த்தி செய்த தவறால் ஒருத்தி மதுரையில் இடி வாங்கிக் கொண்டிருக்கிறாள் மற்றொருத்தி சென்னையில் வாழ்வதாக பேயர் பண்ணிக் கொண்டிருக்கிறாள் என அந்த தாயின் மனம் வேதனை கொண்டது.


ஆனாலும் அவரின் பாசம் அத்தோடு விட்டுவிடவில்லை கதிருக்கு திருமணம் செய்து வைக்கலாம் என கணவரிடம் சென்று பேசினார்.


அவரும் சரி அவனுக்கு எந்த மாதிரியான பொண்ணு வேணும்னு கேட்டு சொல்லு அது போல பார்த்துடலாம் என்று சம்மதம் தெரிவித்தார் .


அண்ணன் மகனிடம் சென்று அவனின் திருமணத்தை பற்றி பேச ஏற்கனவே தங்கையின் வாழ்வு இவர்களால் தான் நாசமாகி விட்டது என்ற கோபத்தில் இருந்தவன் எனக்கு கல்யாணம் பண்ணனும்னா எந்த மாதிரி பொண்ணு பார்க்கணும்னு எனக்கும் தெரியும் அதனால நீங்க கவலை பட வேண்டாம் என்று முகத்தில் அடித்தது போல் கூறிவிட்டான்.


அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் லதாவின் கணவன் வீட்டு வழியில் இருந்த ஒரு பெண்ணை அவசர அவசரமாக திருமணமும் செய்து கொண்டான்.


பேருக்கு இவர்களிடத்தில் வந்து சொன்னது மட்டும் தான் மத்தபடி வேற எதிலுமே இவர்களை ஈடுபட விடவில்லை .


ஆனாலும் சாந்தி விடாமல் எல்லாவற்றிலுமே முன்னின்று கடமையை சரியாக செய்தார்.


இப்படி மூன்று பிள்ளைகளின் வாழ்க்கை ஒரு வழியாக செட்டில் ஆகிவிட தனித்து

இருந்தது கார்த்தி மட்டும் தான்.


அவன் இப்பொழுது அமுதாவின் கணவனின் உதவியால் தனியாக அவுட்சோர்ஸ் எடுத்து செய்து கொண்டிருந்தான்.


மாதம் ஒரு முறை ஊருக்கு சென்று விடுவான் தந்தையுடன் தினமும் பேசி விடுவான் தாயார் தான் அவனை சரியாக புரிந்து கொள்ளவில்லை ஆனால் தந்தை அவனை மிக நன்றாகவே புரிந்து வைத்திருந்தார்


ஒரு நண்பனை போல எல்லாவற்றிலுமே பகிர்ந்து கொள்வார் இவனும் அப்படித்தான் அன்றைய நாளில் யாரை சந்தித்தான் எப்படி சென்றது என எல்லாவற்றையும் மேலோட்டமாக கூறுவான்.எப்பொழுதும் தந்தைக்கு அழைப்பது இவன்தான் ஆனால் வழக்கத்திற்கு மாறாக அன்று தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது .


டேய் தம்பி நம்ம சிவராம் வீடு வரைக்கும் கொஞ்சம் போயிட்டு வர்றியா என்றார்.சிவராம் தந்தையின் சிறு வயது நண்பர் அவருக்கு மனைவி கிடையாது ஒரு மகள் மட்டும் இருப்பதாக கேள்வி ஊரில் நிலம்புலன்கள் நிறைய இருந்தாலும் கூட சென்னையில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஹார்டுவேர் கடை ஆட்டோ மொபைல் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்.அமுதாவின் திருமணத்தின்போது வந்திருக்கிறார் அதேபோல லதாவின் திருமணத்திற்கும் ஊருக்கு வந்திருக்கிறார் இருமுறை நேரில் பார்த்து பேசி இருக்கிறான் கார்த்தி.

அவரைத்தான் தந்தை போய் பார்க்கும்படி கூறுகிறார் .ஏதாவது முக்கியமான விஷயமா அப்பா என்று கேட்க இல்லடா என்கிட்ட பேசனும் போல இருக்குன்னு பேசிட்டு இருந்தான்.குரல் வேற சரியில்லை..எதையோ சொல்ல தயங்கினான் ,என்னனு துருவி கேட்க மனசில்லை அப்புறம் பாத்தா டப்புனு ஓரு சத்தம் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்னு வருது.ஏதோ சரியில்லனு மனசு சொல்லிகிட்டே இருக்கு எதுக்கும் நேர்ல போய் பாத்துட்டு வந்திடேன் என்றார்.கார்த்தி தங்கி இருக்கும் இடத்திலிருந்து சற்று தொலைவில் தான் அவரின் வீடு இருக்கிறது. அமுதாவை தந்தை பார்க்க வரும் பொழுது ஒருமுறை இவன் சென்று விட்டிருக்கிறான். தந்தையை வாசலிலே நின்று வரவேற்றவர் அதனால் அவரின் மீது கார்த்திகு மரியாதை அதிகம். வழி தெரியும் என்பதால் சீக்கிரமாகவே அவரின் வீடு சென்று விட்டார் வாசலில் செக்யூரிட்டி இருக்க அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு உள்ளே சென்றவன் வரவேற்பு அறையில் யாரும் இல்லாததை கவனித்து விட்டு எங்கு சென்று இருப்பார் என யோசித்தான்.வாசலில் செக்யூரிட்டி இப்பொழுது தானே சொன்னார் வேலையாட்கள் பணி முடித்து சென்று விட்டார்கள் அப்பாவும் மகளும் மட்டும் வீட்டில் இருக்கிறார்கள் என்று ஆனால் வீட்டில் ஆள் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லையே.


சிவராம் அங்கிள் என வரவேற்பு அறையை ஒட்டி இருந்த படுக்கை அறை ஒன்றை திறந்து பார்த்தவன் அங்கே இல்லை என்றும் பக்கத்து அறையை நோக்கி சென்றான்.


அந்த அறையில் இருந்து டிவி ஓடும்

சத்தம் வர ஓஓ அங்க இருக்கீங்களா‌ என்றவன் அங்கே செல்ல அப்படியே அதிர்ச்சியில் உறைந்து விட்டான்.


கையில் ரத்தம் உறைந்திருக்க படுக்கை முழுவதும் ரத்தத்தால் குளித்திருக்க இளம் பெண் ஒருத்தி மூர்ச்சையாகிக் கிடந்தாள்.


கடவுளே என ஃபோனை கையில் எடுத்தவனின் காலில் ஏதோ தட்டுப்பட குனிந்து பார்த்தால் சிவராம் நெஞ்சை பிடித்தபடி மயங்கி கிடந்தார் .


அவரின் போனின் உடைந்த பாகங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது.


சற்றும் தாமதிக்காமல் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தவன் செக்யூரிட்டியின் உதவியோடு அவர்களை மருத்துவமனையில் சேர்த்தான்.


மகள் கையை கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள்.


அதை கண்ணில் பார்த்தவருக்கு உடனடியாக மாரடைப்பு வந்திருக்கிறது.


ஆனால் எதற்காக மகள் தற்கொலைக்கும் முயன்றால் என்பது தெரியவில்லை அழகாக இருக்கிறாள் மெத்த படித்தும் இருக்கிறாள் பணத்திற்கு பணமும் இருக்கிறது பிறகென்ன இந்த பெண்ணுக்கு கவலை உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு என்று கோபம் தான் முதல் முதலாக கீர்த்தனாவை பார்த்த பொழுது கார்த்திகிற்கு தோன்றியது.


பிறகு தந்தையை அழைத்து விஷயத்தைக் கூற நான் வரும்வரை மருத்துவமனை விட்டு நீ எங்கேயும் செல்லக்கூடாது இருவருக்கும் துணையாக இருக்க வேண்டியது உனது கடமை என்று கூறிவிட்டார். வேறு வழியே இல்லாமல் இருவருக்கும் கார்த்தி துணை இருக்க ஆரம்பித்தான்.


சிவராம் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார்.அவரின் மகள் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தாள் அவருக்கு நாற்பத்தி எட்டு மணி நேரம் கெடு கொடுத்தனர்.மகளுக்கு‌ பயபபடும்படி‌ எதுவும் இல்லை இரத்தம் அதிகளவில் வெளியேறி இருப்பால் அதற்கான சிகிச்சை மட்டும் போதும் இரண்டு நாட்கள் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கட்டும் அதன்‌ பிறகு நார்மல் வார்டிற்கு மாற்றிக்கொள்ளலாம் என்றார்.


தந்தை வரும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டான்.

அவ்வப்போது கீர்த்தனாவை சென்று பார்த்தன் துடைத்து வைத்தது போல மாசு மருவற்று முகம் ஆனால் முகம் முழுவதும் அப்படி ஒரு வலிதெரிந்தது.நெற்றியை சுளித்தபடி கண்மூடி கிடந்தாள் அப்படி என்ன பொல்லாத காதல் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு என மனதிற்குள் திட்டி தீர்த்தவன் கட்டுப்போட்ட கையை பார்த்தான்..காலத்திற்கும் அழியாத தழும்பை ஏற்படுத்திக்கொண்டாள்.மற்றொரு கையில் ரத்தம் ஏறிக் கொண்டிருக்க பெருமூச்சு விட்டபடி வெளியே வந்தான்.


மறுநாள் தந்தை வந்த பிறகும் கூட அவர்களை விட்டு செல்ல மனம் வரவில்லை. கீர்த்தனா தற்கொலைக்கு முயன்றதால் சட்டரீதியான சில பிரச்சனைகள் இருந்தது.


அதையெல்லாம் கார்த்திதான் உடன் இருந்து பார்த்தது.முடிந்த அளவு கீர்த்தனாவை தொல்லை செய்யாதவாறு பார்த்துக் கொண்டான்.


மறுநாள் காலையில் கண்விழித்த பிறகு தான் அவள் செய்த முட்டாள்தனம் உரைத்தது .


அவள் கண் விழிக்கவுமே கேட்டது தந்தையை தான். செவிலியர் எதுவுமே கூறாமல் கார்த்தியை அழைத்து விட்டார்.


யார் இது என்பது போல பார்த்தவள்..அப்பா ..அப்பா என கத்த துவங்கினாள்.


ஷ்ஷ் கத்தாத எதுக்கு கத்துற. நீ மட்டும் இந்த வார்டுல இல்ல மத்த பேஷண்டும் இருக்குறாங்க படிச்ச பொண்ணு மாதிரி பிகேவ் பண்ணு


யார் நீ …நீ எதுக்கு வர்ற...அப்பாவ கூப்பிடு .


உன் அப்பாக்கு உடம்பு சரியில்லை அவரால வர முடியாது அதான் நான் வந்து இருக்கேன் என்ன வேணும் உனக்கு.. முகத்தை கடுகடுவென வைத்தபடி கேட்டான்.


அப்பாக்கு என்ன ஆச்சு ..அப்பா.. என படுக்கையில் இருந்து எழுந்திருக்க அவளது கை அதற்கு ஒத்துழைக்க வில்லை.. சலைன் ஏறிக்கொண்டிருந்த கை வலிக்க ஆஆ என்ற படி மீண்டும் படுத்தாள்.


அவள் வலியில் துடிப்பதை பார்க்கும் பொழுது கஷ்டமாகத்தான் இருந்தது ஆனாலும் தற்கொலைக்கு முயன்றதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


காயம் ஆழமாக பதிந்திருந்தாலோ அல்லது அவளின் தந்தையின் உயிருக்கு ஏதாவது ஆகி இருந்தால் என்ன செய்திருப்பாள் பைத்தியக்காரி.. எனப்பற்களை கடித்தான்.


அவனைப் பிடிக்கவில்லை என்றாலும் கூட தந்தையை பற்றி விசாரிப்பதற்காக அப்பா எங்கே என குரல் உள்ளே போய் கேட்டாள்.


இப்போ வந்து என்கிட்ட கேளு இதை நீ கையை வெட்டிக்கறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சி இருக்கனும்.


என்னாச்சு.. அவள் முகத்தில் கலவரம் தெரிந்தது.


பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல ஜஸ்ட் அட்டாக் எமர்ஜென்சில வச்சிருக்காங்க.


என்னது அட்டாக்கா என அதிர்ச்சியடைந்தவள் அதற்கு மேலும் படுக்காமல் எழப்போனால்.


ஏ லூசு உனக்கு என்ன பைத்தியமா ஒரு கைய வெட்டி வச்சிருக்க ஒரு கையில் டிரிப் போய்ட்டு இருக்கு நீ பாட்டுக்கு எழற .. அப்புறம் எதுக்கு உன்னை தூக்கிட்டு வந்து இங்க போடனும் வீட்டிலேயே விட்டிருப்பேனே..என்று கடுமையை காட்டினான்‌. என்னதான் கட்டுப்படுத்திக் கொண்டாலும் அவள் மீது கனிவென்பதே வரவில்லை. தேவையில்லாமல் இவளுக்கு வந்து சேவகம் பார்த்துக் கொண்டிருக்கிறோமோ என்று எரிச்சல் ஒரு பக்கம் இருக்க தந்தை வேறு எல்லா விஷயத்திலும் இவனை‌ முன்னிறுத்துவது சுத்தமாக பிடிக்கவில்லை.


இவனின் கடுமை சற்று வேலை செய்தது சத்தம் இல்லாமல் அழுதவள். அப்பா எப்படி இருக்காங்கன்னு மட்டும் பாத்துட்டு வந்து சொல்றீங்களா என்றாள்.


இந்த அக்கறை உன் கைய வெட்டிக்கிறதுக்கு முன்னாடி இருந்திருக்கணும் இப்போ எல்லாம் தலைக்கு மேல போயிடுச்சு ஓவரா நடிக்காத என்று அதற்கும் சாடினான்.


தப்புதான் அப்பாக்கு இப்படி ஆகணும்னு நான் நெனச்சே பார்க்கல அப்பாக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.


ஏய் வாயில நல்லா வந்துரும் அப்புறம் எதுக்குடி நேரம் கெட்ட நேரத்துல உன்னையும் உன் அப்பனையும் கொண்டு வந்து இங்க போடனும்,மொத்தமா சுடுகாட்டுலேயே போட்டிருப்பேனே.. பேச்சை பாரு மறுபடியும் சாகபோறாளாம்ல என உச்ச ஸ்தானியில் கத்தினான்.சத்தம் கேட்டு செவிலியப்பெண் என்ன என கேட்டு வரவும் தன்னை‌ சாரி சிஸ்டர் என மன்னிப்பு கேட்டுக்கொண்டவன் தன்னை முற்றிலும் நிதானப்படுத்திக் கொண்டு அவளகே சென்று வாய தொறந்து ஒரு வார்த்தை பேசினாலும் நான் மனுஷனா இருக்க மாட்டேன் புரியுதா என்று அவளை எச்சரித்து விட்டு நகர்தான் .


ஒரு நிமிஷம் கீத்து பயந்தபடியே அவளை கூப்பிட என்ன என்பது போல முறைத்தான்.


நீங்கதான் எங்களை காப்பாத்தினதா உங்களுக்கு எப்படி தெரியும் நீங்க எப்படி அங்கு வந்தீங்க தயக்கமாக கேள்வி வந்தாலும் பதில் சொல் என்ற தோரணை அதிலிருந்தது.


ஆச்சரியமாக பார்த்தவன் மனதிற்குள் ரொம்ப தைரியம் தான்..பிறகு சத்தமாக.. நான் இல்ல என்னோட அப்பா.. அடுத்த கேள்வியை அவள் கேட்கும் முன் எதா இருந்தாலும் உடம்பு‌ சரியானதுக்கு அப்புறம் பொறுமையா கேளு நான் இதே சென்னையில் தான் இருக்கேன் எங்கேயும் ஓடி போயிட மாட்டேன் என்றபடி வெளியேறினான்.
 
Last edited:

@38

Moderator
இவள் யாரை காதலிச்சா??... ஏன் இப்படி ஒரு முடிவு!??..
ஜஸ்ட் ஒரு கேரக்டர் தான் பா அவனை பத்தி வராது கதை சின்னது தானே ரொம்ப எழுதினா வார்த்தை ஜாஸ்தி ஆகும்

ரொம்ப தேங்க்ஸ் டா
 
Top