எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தீராத காதல் அத்தியாயம்-14

NNK-70

Moderator
தீராத காதல் தேனாக மோத-NNK70

அத்தியாயம்-14

கண்களில் நீர் வழிய தன் கண்ணீர் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள் இனி. திண்டுக்கல்லை அடுத்த நல்லூர் என்ற கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் இனியின் தந்தை ரத்தினவேல், வீட்டின் இரண்டாவது மகன். தன் தந்தை வேலடியான், தாய் பேச்சியம்மாள் மற்றும் இரு சகோதர சகோதரிகளுடன் பெருங்குடும்பமாக வசித்து வந்தார்.படிப்பறிவில்லாத அக்குடும்பத்தில் ரத்தினைவேலு மட்டுமே கல்லூரிவரை சென்று படித்தார்.உறவுக்கார பெண்ணான செம்பருத்தியை தன் மகன் ரத்தினத்திற்க்கு மணம் முடிக்க எண்ணியிருந்தார், அவரின் தந்தை வேலடியான்.நிச்சியம் வரை சென்றபோது, கற்பகத்தை காதலித்து திருமணம் செய்து மாலையும் கழுத்துமாய் வந்த நின்றார் ரத்தினம். குடும்பமே கொதித்துப் போனது.மாற்று சமூகத்தைச் சேர்ந்த கற்பகத்தை திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் அவர் உறவினர்கள் தம்பதிகளைக் கொல்ல முயன்றனர். காவல்துறை உதவியுடன் அவ்வூரை விட்டு வெளியேறிச் சென்னையில் குடி பெயர்ந்தார் ரத்தினம்.

நண்பர்கள் உதவியுடன் வேலைக்குச் சென்றவர் மெல்ல மெல்ல முன்னேறித் தனித் தொழில் தொடங்கினார். அவரின் கடின உழைப்பால் தொழில் அசூர வளர்ச்சி அடைய, விரைவிலேயே பல தொழில்களில் கால்பதித்துப் பெரும் பணக்காரர்களில் ஒருவரானார்.

அவர்களின் இல்லற வாழ்க்கைக்கு இனிமை சேர்க்கும் விதமாகப் பரணி, நளினி இரு மலர்கள் உதித்தன.

வாழ்க்கை இன்பமாய் சென்றுக் கொண்டிருந்தது அவர்களுக்கு. கற்பகத்திற்கு படிப்பறிவு கம்மி, வெள்ளந்தியானவர், கணவன் பிள்ளைகள் மட்டுமே அவரின் உலகம்.மகன் இல்லையே என்ற ஒரு குறைதான் தம்பதிகளுக்கு. இளையவள் பரணி பிறந்து வெகுநாளைக்கு பிறகு மூன்றாவதாகக் கருவுற்றிருந்தார் கற்பகம். மகனாக இருக்க வேண்டுமென அனைவரும் எதிர்பார்க்க, மூன்றாவதாகவும் மகளையே ஈன்றெடுத்தார் கற்பகம்.

கடைக்குட்டிக்கு மிருணாளினியெனப் பெயரிட்டனர். வீட்டில் அனைவருக்கும் செல்லப் பிள்ளை அவள் தான். இந்நிலையில், தன் தாய் தந்தை மறைவையொட்டி பிறந்த ஊருக்குச் சென்றபோது சொந்தங்கள் மீண்டும் வந்து அவருடன் ஒட்டிக்கொண்டன, காரணம் பணம். தன் தங்கை மேகலா மீது ரத்தினத்திற்கு தனிப் பாசம் உண்டு, தங்கையின் திருமணத்தில் கலந்துக்கொள்ளாததற்கு வருந்தியவர், அதை ஈடு செய்யும் வகையில் பொன்னையும் பொருளையும் அவளின் கணவன் குடும்பத்திற்கு அள்ளித் தந்து மகிழ்ந்தார்.

ரத்தினத்தின் செல்வ செழிப்பை பார்த்த மேகலாவின் கணவன் நாகராஜிற்க்கு அதை மொத்தமாக அடையும் பேராசை எழுந்தது.

ஒருமுறை, விருந்திற்காக ரத்தினத்தின் வீட்டிற்கு மேகலாவும் நாகராஜம் அழைக்கப்பட, மாற்று சமூகத்தைச் சார்ந்த கற்பகம் அங்குச் செல்வத்தில் திளைப்பதை பார்த்து நாகராஜுக்கு குரோதம் உண்டானது. தன் தமக்கை வாழ வேண்டிய வாழ்க்கையை கற்பகம் தட்டிப் பறித்ததாக எண்ணி ஆத்திரம் மூண்டது. ஆம்! ரத்தினத்திற்கு நிச்சயம் செய்ய இருந்த செம்பருத்தியின் தம்பி தான் இந்த நாகராஜ்.

ரத்தினத்தின் குடும்பத்தைச் சிதைக்க சமயம் பார்த்துக் காத்திருந்த நாகராஜுக்கு சில ஆண்டுகள் கழித்து அந்த வாய்ப்பு அமைந்தது.

மூத்த மகளான பரணிக்கு, அவள் பிறந்ததிலிருந்தே காலில் குறைப்பாடு இருந்தது. காலை இழுத்து இழுத்து தான் அவளால் நடக்க முடியும். என்னதான் செல்வ செழிப்பில் இருந்தாலும், அந்தக் குறைப்பாட்டால் பரணிக்கு திருமணம் தள்ளிக் கொண்டே போனது. மிகுந்த தேடுதலுக்கு பிறகு அவளுக்கான மணாளனை தேர்வு செய்தார் ரத்தினம். குறையோடு இருக்கும் தன் மகளை ஏற்றுக்கொண்டதால், அனைத்துச் செலவையும் அவரே ஏற்று ஆடம்பரமாகத் திருமணத்திற்கும் ஏற்பாடு செய்தார்.

திருமணத்திற்கு வந்த நாகராஜிற்கு, அந்த ஆடம்பரத்தைப் பார்த்து அவ்வளவு பொறாமையாக இருந்தது. என்ன செய்தாவது திருமணத்தை நிறுத்த வேண்டுமென எண்ணியவர், நேராக மணமகனை பார்க்கச் சென்றார்.

தன்னை யாரென்று காட்டிக் கொள்ளாமல் நயவஞ்சகமாகப் பேசினார். “ஏன் தம்பி ஆள பார்த்தா சினிமா ஹீரோ கணக்கா இருக்கீரு, ஊருல பொண்ணா கிடைக்கல அப்புறம் ஏன் இந்த மாதிரிக் கால் வராதவல கட்டிக்க போரீரு, இன்னைக்கு காசு பணம் முக்கியமா தெரியலாம், நாளைக்கு இவள கூட்டிட்டு வெளிய தெருவுக்குப் போன, உங்கள ஊரே கிண்டல் பண்ணும் பாத்துகிடுங்க” என்று இன்னும் பலதும் பேசியவரால் குழம்பிய மாப்பிள்ளை அந்தக் கல்யாணத்தை நிறுத்தினான்.

துடித்துப்போன ரத்தினவேலும் கற்பகமும் அவனிடன் கெஞ்சினர்.

“ என்ன மாப்பிள்ள, திடீர்ன்னு கல்யாணத்த நிறுத்தினா என்ன அர்த்தம்” என்றார் ஆற்றமையாக.

“ ஏதோ காசுப் பணத்த பார்த்துச் சலனப்பட்டுடேன், நல்ல யோசிச்சாத்தான் புரியுது, இவள கட்டிகிட்டா நாலு இடம் போய் வர முடியாது, என்னையும் சேர்த்துக் கிண்டல் பண்ணுவாங்க, என்னால இந்த மாதிரி பொண்ண சகிச்சிக்க முடியாது” என்றான் மாப்பிள்ளை பிடிவாதமாக.

திருமணம் நின்று போனது. அந்த வருத்தத்தைவிட தன் குறையைச் சுட்டிக் காட்டி அவமானபடுத்தியதை தாங்க முடியாத பரணி அன்றிரவே தற்கொலை செய்துக் கொண்டாள்.

முற்றிலுமாக உடைந்துப் போனார் ரத்தினம். தேற்ற ஆள் இல்லாமல் தவித்த அண்ணனுக்கும் அண்ணிக்கும் உதவுவதற்காக அங்கேயே தங்கினார் மேகலா.

நாகராஜின் திட்டம் சுலபமானது. மெல்ல அவருடன் தொழிலும் ஒட்டிக் கொண்டவன், தன் திட்டத்தைச் செயல்படுத்த துவங்கினான்.

மூத்த மகள் இழப்பால் வருந்தியவர்கள் அடுத்த மகளைக் கவனிக்க தவறினர்.

விளைவு காதல். நளினி தன்னுடன் படிக்கும் ஜெய் என்பவனை காதலிக்க தொடங்கினாள்.

சரியாக இரண்டு வருடத்திற்கு பிறகு நளினிக்கு திருமண ஏற்பாடு செய்தார் ரத்தினம்.இதையறிந்த நளினி தன் தந்தையிடம் தன் விருப்பத்தைச் சொல்லப் போக, அதை லாவகமாகத் தடுத்திருந்தான் நாகராஜ்.

“இங்க பாரு நளினிம்மா, உன் அப்பா காதல் கல்யாணத்துக்கு ஒரு போதுமே ஒத்துக்கமாட்டார், இப்போ நீ போய் உண்மைய சொன்னா, உடனே வேற ஒருத்தனுக்கு கல்யாணம் செஞ்சி வச்சிடுவார், அதனால நான் சொல்கிற மாதிரி செய்” என ஒன்றும் அறியாத அவளுக்குத் தன் சதிதிட்டதைக் ஆலோசனை என்ற போர்வையில் கூறினார்.

“மாமா இது தப்பில்லயா, அம்மா அப்பா பாவம், இது தெரிஞ்சா கஷ்டப்படுவாங்க” என்றவளை சமார்த்தியமாகப் பேசித் தன் வலையில் விழ வைத்தான் நாகராஜ்.

“நீ ஒன்னும் யாருக்கும் தெரியாம இத பண்ணல, உங்க அம்மாகிட்ட இத பத்தி சொல்லுறேன், அவங்களே ஒத்துக்குவாங்க பார்” என்றான்.

அதன்படி கற்பகத்திடம் சென்ற நாகராஜ் தன் சகுனி வேலையை ஆரம்பித்தார்.

“அக்கா, நளினிக்கு நல்லபடியா மாப்பிள்ளை அமைஞ்சா கோயில்ல சாமிக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறதா நான் வேண்டியிருந்தேன், அந்த வேண்டுதல் நடக்க எல்லாம் தயாரா இருக்கு, நளினியை இப்போ கோவிலுக்குப் போகச் சொன்னா, அவ அம்மா சொன்னாதான் போவேங்கிறா, வேற வேண்டுதலா இருந்தா பொறுமையா செஞ்சிக்கலாம், ஆனா இது சாமி கல்யாண விஷயம் அதனால கரெக்ட் டைம்க்கு நடக்கனும் இல்லனா சாமிக்குத்தமாயிடும், நான் சொல்லிக் கேட்கல்ல, நீங்களே கொஞ்சம் சொல்லுங்கக்கா” என்றான் நயவஞ்சகமாக.

ஒரு மகள் தான் போய்விட்டாள் இன்னொரு மகள் வாழ்வாவது நன்றாக அமைய வேண்டுமென எண்ணிய அந்த அப்பாவித்தாய் பாம்பின் விஷமறியாதுப் போனாள்.

“அம்மா… கல்யாணம் … பண்…” என்று நளினி ஆரம்பிக்கும்போதே

“நளினி, மாமா கல்யாண விஷயத்த பத்தி இப்பதான் சொன்னாங்க, அப்பாகிட்ட நான் பேசிக்கிறேன், கல்யாணம் டைம்க்கு நடக்கனும்மா நீ சீக்கிரம் கோயிலுக்குப் போ” என்றாள் கற்பகம் விபரம் ஏதும் தெரியாமல்.

தாயின் வார்த்தையை நம்ப முடியாமல் பார்த்தவளை, அவசர அவசரமாக வெளியேற்றிருந்தான் நாகராஜ்.

ஜெய்யை கல்யாணம் செய்துக் கொண்டு வந்து சபையில் நிச்சயத்தை நிறுத்துமாறு நாகராஜ் திட்டம் வகுத்துக் கொடுத்திருந்தான்.

ஜெய் உடனான திருமணத்திற்கு தன் தாய் சம்மதித்துவிட்டதாக எண்ணித்தான் நளினி வீட்டை விட்டு வெளியேறியிருந்தாள்.

உற்றாரும் உறவினரும் கூடியிந்த அந்தச் சபை, மணப்பெண் நளினி இல்லாததால் சலசலத்தது. ‘மகள் எங்கே’ என்று ரத்தினம் கற்பகத்தை கேட்க வாய் திறந்த நொடி, அனைவரும் அதிரும் வகையில் மாலையும் கழுத்துமாக வந்து நின்றாள் நளினி. அவளின் செயலில் அதிர்ந்து, கடுங்கோபம் கொண்ட ரத்தினம் இருவரையும் ஓங்கி அறைந்திருந்தார்.

“பாவி மகளே என்ன காரியம்டி பண்ணிட்டு வந்து நிக்குற, இத முன்னாடியே சொல்லித் தொலைச்சிருந்தா நிச்சயம் வரப் போயிருக்க மாட்டேன்ல, ஓடுகாலி நாயே, அப்பா அம்மா செத்தாடி போயிட்டாங்க, இப்படி சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்குற, நான் தான் உனக்கு நல்ல மாப்பிள்ளையா தேடி வச்சிருக்கேனே, அதுக்குள்ள என்ன அவசரம் வந்துச்சு”என்றார் அடங்காக் கோபத்துடன்.

அவர் கேட்டதுதான் தாமதம், “நீங்க ஒழுங்கா மாப்பிள்ள பார்த்திருந்தா அக்கா ஏன் ப்பா சாகப் போறா? உங்க கையாலாகாத்தனத்தால தான் அவ அநியாயமா செத்துப் போயிட்டா, அது மாதிரி என்னையும் சாகச் சொல்லுறீங்களா? எனக்கு உங்க மேல நம்பிக்கை இல்ல பா அதான் என் வாழ்க்கைய நானே முடிவு பண்ணிகிட்டேன்” என்றவளின் வார்த்தைகளில் மரித்துப் போனார் ரத்தினம்.

“இன்னொரு விஷயம் பா, நான் ஓடு காலினா அப்போ உங்களையும் அம்மாவையும் என்னன்னு சொல்லுறது, நீங்கத் தாத்தா பார்த்த பொண்ணையா கல்யாணம் பண்ணீங்க, நான் ஒன்னும் உங்கள மாதிரி கிடையாது. அம்மாகிட்ட சொல்லிட்டு தான் போனேன்” என்று நாகராஜ் சொல்லிக் கொடுத்ததை அப்படியே பேசினாள்.

மரியாதையா ரெண்டு பேரும் வெளியில போங்க என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளி அவர்களை வெளியேற்றியிருந்தார்.

இருந்தும் ரத்தினத்தின் இரத்தம் கொதித்தது, மகள் சொன்ன வார்த்தையைக் கேட்டு மனைவியைத் தீப்பார்வை பார்த்தார்.

கற்பகமோ, “எ… எனக்கு ஒன்னும் தெரியாதுங்க, கோ…வில், சா… மி, க…ல்ய….” என்று பயத்தில் உளரினார்.

“ அதானே உன் புத்தியை காட்டிட்டல, உன்ன மாதிரியே உன் பொண்ணையும் வளர்த்து வச்சிருக்க, என் மச்சான் மானத்தை வாங்கிட்டீங்க, நீயே பொண்ண அனுப்பி வச்சிட்டு இப்ப ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறியா, ச்சே… என்ன பொம்பள நீ” என்றான் நாகராஜ் குரூரமாக.

‘அக்கா, அக்கா’ என்று எப்போதும் வளைய வருபவனின் சூழ்ச்சியை அறிந்த கற்பகம் இன்னும் அதிர்ந்து போனார்.


“ இதே நம்ம சாதிசனத்துல பொண்ணு எடுத்திருந்தா பொம்பள பிள்ளைய இப்படி தரங்கெட்டு வளர்த்திருப்பாளா, எல்லாம் நீங்கப் பண்ண தப்பு மச்சான், கண்டவள கட்டிக்கிட்டிங்க, கட்டியவள கண்டிக்காம விட்டதுனாலதான் இன்னைக்கு உங்க புள்ள உங்கள சபைல வச்சு அசிங்கபடுதிருச்சு” என்று நாகராஜ் மேலும் தூபம் போட,
கேட்டுக் கொண்டிருந்த ரத்தினத்திற்கு நாடி நரம்பெல்லாம் சூடேறியது.

“ நீ எல்லாம் என்ன பொம்பள?, புள்ளைங்க வீட்டுல என்ன பண்ணுறாங்கன்னு பார்க்கமா என்னடி பண்ணிகிட்டிருந்த, அது சரி நீ பெத்தது உன்ன மாதிரி தான் இருக்கும். ச்சை… உன்னைக் கல்யாணம் பண்ணதே நான் செஞ்ச பாவம்டி, உண்மைய சொல்லு நீ பெத்த மூன்னும் எனக்குத் தான் பிறந்துச்சா, இல்ல …”
என்றவர் பேசி முடிக்கும் முன்னே தலையில் அடித்துக் கொண்டு அழுதார் கற்பகம்.

அந்நேரம் பார்த்துப் பள்ளி முடிந்து மிருணாளினி வரவே, ரத்தின வேலுவின் மொத்த கோபமும் அவள்மீது பாய்ந்தது.

“இதோ வந்துட்டா அடுத்த ஒடுகாலி, வாம்மா வா, நீ யார் கூட ஒடிப்போகப்போற சொல்லு, ஒன்னும் தெரியாத மாதிரி நீ இருந்துகிட்டு, பொண்ணு கேட்டு எவனயாவது இங்க வரச் சொல்லப் போறியா? இல்ல உன் அப்பன் கையாலாகாதவன்னு முடிவு பண்ணி நீயே ஒரு வாழ்க்கைய தேடிக்க போறியா?” என்று கோபத்தில் வார்த்தைகளை அள்ளிவீசினார். அந்த அபத்தமான பேச்சில் தவித்துப் போன இனி, என்ன நடந்ததெனத் தெரியாது திகைத்துத் தன் தாயை பார்க்க, அவரோ கதறி அழுதுக் கொண்டிருக்க, என்னவென்று புரியாமல் தவித்துப் போனாள்.

பெற்ற மகள் ஏற்படுத்திய அவமானம், நாகராஜின் வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கம், சபையில், உற்றார் உறவினரின் இழிவான பார்வைகள் இவையெல்லாம் சேர்த்து ரத்தினத்திற்கு அடங்கா ஆத்திரத்தை கொடுக்க, சட்டெனத் தன் பெல்ட்டை எடுத்தவர், வயதுக்கு வந்த பெண் என்றும் பாராமல் சரமாரியாக இனியை அடிக்கத் துவங்கினார். “சொல்லு யார நீ லவ் பண்ணுற எங்க இருக்கான் அவன், நீயும் ஓடிப்போகப் போறியா, என்ன அசிங்கப்படுத்த எவன வரச் சொல்லிருக்க, சொல்லு யார லவ் பண்ணுற என்றுக் கேட்டு ஆத்திரம் தீர ஓயாமல் அடித்தார்.

“அப்பா, ந… நா … எந்தத் தப்பும் பண்ணலப்பா, அடிக்காதீங்க ப்பா, வலி தாங்க முடியல, நா… தப்பு பண்ணலப்பா”என்று எந்தப் பாவமும் அறியாத அந்தச் சிறியவள் அழுதுப்புரண்டாள். தன் கணவனை மீறி நடப்பதை எதுவும் தடுக்க முடியாமல் நின்றிருந்தார் மேகலா.

துக்கம் தாளாமல் அன்றிரவே கற்பகம் தற்கொலை முயற்சி செய்ய, உயிருக்குப் போராடிய அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போதுதான் கோபத்தில் தான் செய்த செயலையும் பேசிய வார்த்தைகளையும் எண்ணிப் பார்க்கத் துவங்கினார் ரத்தினம். ஆனால் அதற்குள் நிலைமை கைமீறிப் போயிருந்தது.

தன் கடைசி மூச்சுக்காகப் போராடிக் கொண்டிருந்த கற்பகம், தன் கணவனையும் மகளையும் அழைத்தார். உயிர் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த அன்னையை பார்க்கப் பார்க்கக் கண்களில் வற்றாத கண்ணீர் வந்தது இனிக்கு.

“ஏன் மா இப்படி பண்ணீங்க” என்று அழுத மகளை ஆசையாக வருடியவர், தன் கணவனைப் பார்த்தவாரே, “சில இடத்துல, பழியைச் சுமந்துகிட்டு குற்றவாளியா வாழ்றத விடச் சாவுறது எவ்வளளோ மேல் மா” என்று ஒரு வெறித்த பார்வை வீசினார்.

ரத்தினத்திற்கு குற்றவுணர்ச்சி அதிகமானது, இருந்தும் மனைவியிடம் அவர் எதுவும் பேசவில்லை.

“ இனி குட்டி, நீ… நீ… அ…அம்மாவுக்கு ஒரு சத்தியம் பண்ணி கொடுக்கனும், இந்த அம்மாவுக்காகக் கடைசியா உன்கிட்ட இத கேட்குறேன்” என்றார் தட்டுத்தடுமாறியபடி.

“ சொ… சொல்லுங்கம்மா, நீங்க என்ன சொன்னலும் நான் செய்யுறேன், எத்தனை சத்தியம் வேணும்னாலும் பண்ணுறேன் ஆனா நீங்க மட்டும் என்ன விட்டுப் போயிறாதீங்கம்மா” என்றாள் கதறியபடி.

“அ… அப்பா ரொம்ப நல்லவரு மா, நமக்கு எந்தக் குறையும் இதுவர வச்சதில்ல. அப்பா மேல நம்பிக்கை வைக்காமா உங்க அக்காதான் தடம் மாறிப் போயிட்டா, அதனால தேவையில்லாத அசம்பாவிதம் நடந்து போயிடுச்சு. நீயாவது அப்பா பேச்ச கேட்டு நட ம்மா, இந்தக் குடும்ப மானத்த நீயும் உன் கல்யாணமும் தான் தூக்கி நிறுத்தனும். அதனால எக்காரணம் கொண்டும் நீ யார் மேலையும் ஆசை வச்சிடக் கூடாது, வேற யாரும் உன்னை விரும்பி வந்தாலும் அதுக்கும் இடங்கொடுக்க கூடாது.

நல்லவனோ கெட்டவனோ உன் அப்பா யார கல்யாணம் பண்ணிக்க சொல்லுறாரோ அவனதான் நீ கல்யாணம் பண்ணிக்கனும் அதுக்கு எந்த மறுப்பும் தெரிவிக்க கூடாது. அப்போதான் உன் அம்மா வளர்ப்பு நல்ல வளர்ப்புன்னு உங்க அப்பாவுக்குப் புரியும். உங்க அப்பா சொல்லுறவங்கள கட்டிக்கிட்டாதான் நீ உங்க அப்பாக்கு பிறந்த பொண்ணுன்னு அவரு ஒத்துக்கிடுவாரு. அப்போதான் அவருக்கும் நிம்மதி கிடைக்கும் என் ஆன்மாவும் சாந்தியடையும், எனக்காக நீ இத செய் இனி, எப்பவும் தடம் மாறிப் போக மாட்டேன்னு சத்தியம் பண்ணு” என்றார் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு.

“சத்தியமா நான் அப்பா சொல்படி தான் மா நடப்பேன், எந்தத் தப்பும் பண்ண மாட்டேன், அப்பா கைநீட்டுறவர தவிர வேற யாரையும் ஏத்துக்க மாட்டேன் மா, உங்கமேல எந்தத் தப்பும் இல்லன்னு நான் நிரூபிக்கிறேன் மா, இது சத்தியம்” என்று அவள் கூறி முடிக்கும் போதே கற்பகம் உயிர் விட்டிருந்தார்.
இனி துடிதுடித்துப் போனாள்.


உதிர்த்த வார்த்தைகளின் வீரியத்தை ரத்தினம் அப்போது தான் உணர்ந்தார்.

“ செஞ்ச தப்பு வெளியில் தெரிஞ்தால உயிர விட்டுடாங்க, இதுக்கு நீங்க ஏன் கலங்குறீங்க விட்டுத்தள்ளுங்க” என்ற நாகராஜ், அத்தனையும் தாம் நினைத்ததார் போல் நடந்ததை எண்ணி மகிழ்ந்தான்.

தாயின் இறுதி சடங்கு முடிந்தவுடன் தந்தையிடம் வந்த இனி, “செய்யாத தப்புக்கு எனக்கும் எங்கம்மாவுக்கும் பெரிய தண்டனை கொடுத்திட்டீங்க மிஸ்டர் ரத்தினவேல். இனிமே உங்களுக்கும் எனக்கும் அப்பா மகள் என்கிற உறவு கிடையவே கிடையாது. என் அம்மா ஆசைப்பட்ட மாதிரி நீங்க யார சொல்லுறீங்களோ அவனையே கட்டிக்கிறேன் அது எப்போனாலும் சரி, யாரா இருந்தாலும் சரி. ஆனா அதுக்கு முன்னாடி நான் படிச்சு முடிக்கனும், அதுவரை என்ன தொந்தரவு செய்யாதீங்க ப்ளீஸ்” என்றவள் அதன் பிறகு தந்தையிடம் பேசுவதில்லை.

“இந்த ரத்தினவேல் கையாலாகாத அப்பன் இல்லன்னு நீ ஊரார்க்கு காட்டிட்டா அதுவே போதும் எனக்கு” என்றவர் அதன் பிறகு மகளை எதற்கும் வற்புறுத்தியதில்லை.

இதற்கிடையே நிறுவனத்தில் பணத்தை கையாடல் செய்ததற்காக நாகராஜை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர்களிடமிருந்து தப்பி ஓடியபோது விபத்து ஏற்பட்டு நாகராஜ் இறக்க, மேகலா தன் அண்ணனுடனே தங்கி விட்டார்.

நடந்த அனைத்தையும் கூறி முடித்தப் பின்னர் கதறி அழுதாள் இனி.

தன்னவளின் துயரத்தை எண்ணி இதய்யின் கண்களும் கலங்கிச் சிவந்திருந்தது.

“ நீ… நீங்க எனக்கு வேணாம் இதய், உங்கள கல்யாணம் பண்ணினா அது எங்க அம்மாவுக்குச் செய்யுற துரோகம் ஆகிடும்” என்றவளோ நிறுத்தி மீண்டும் தொடர்ந்தாள், “தயவு செஞ்சு என் அப்பாகிட்ட கல்யாணத்த பத்தி எதுவும் பேசிறாதீங்க, அவரு உடைஞ்சுப்போயிடுவாரு, தான் கையாலாகதவன்னு நினைச்சு நினைச்சு தினமும் செத்துக்கிட்டு இருக்காரு, அவர மேலும் நான் சாகடிக்க விரும்பல”

“எனக்கு நீங்க வேண்டவே வேண்டாம் இதய், ப்ளீஸ் என்னை விட்டுப் போயிடுங்க” என்றுக் கதறினாள்.

இதய்யின் இதயம் அந்த நிமிடம் தன் இயக்கத்தை மறந்து நிறுத்திப் பின்னர் துடித்தது.
 
Last edited:

santhinagaraj

Well-known member
இனிக்குள்ள இப்படி சோகமா???

ரத்னாவேல் என்ன லூசா அடுத்தவன் பேச்சை கேட்டு குடும்பத்தை இழந்து இருக்கார்

நாகராஜ் வில்லனுக்கு வேற பேர் கிடைக்கலயா 😡😡
 

NNK-70

Moderator
இனிக்குள்ள இப்படி சோகமா???

ரத்னாவேல் என்ன லூசா அடுத்தவன் பேச்சை கேட்டு குடும்பத்தை இழந்து இருக்கார்

நாகராஜ் வில்லனுக்கு வேற பேர் கிடைக்கலயா 😡😡
அச்சச்சோ சாரி சிஸ். எதார்ததமா வைச்ச பேரு, பாம்ப போல விஷத்தை கக்குறதால அந்த பேர வச்சிடேன், நீங்க கேட்கவும் தான் சிஸ் எனக்கு ஸ்ரைக் ஆச்சு. கோசுக்காதீங்க.. முடிஞ்சா பேர மாத்திடறேன். மன்னிச்கங்க
 

santhinagaraj

Well-known member
அச்சச்சோ சாரி சிஸ். எதார்ததமா வைச்ச பேரு, பாம்ப போல விஷத்தை கக்குறதால அந்த பேர வச்சிடேன், நீங்க கேட்கவும் தான் சிஸ் எனக்கு ஸ்ரைக் ஆச்சு. கோசுக்காதீங்க.. முடிஞ்சா பேர மாத்திடறேன். மன்னிச்கங்க
அச்சோ மன்னிப்பெல்லாம் எதுக்கு நான் சும்மா தான் கேட்டேன்
 

NNK-70

Moderator
அச்சோ மன்னிப்பெல்லாம் எதுக்கு நான் சும்மா தான் கேட்டேன்
இல்ல சிஸ். நீங்க சொன்னோ தான் நான் பேர பார்த்தேன். அந்த வில்லன் ரோலுக்கு செட் ஆகுமேன்னு தான் அந்த பேர் தேர்ந்தெடுதேன்.
உங்களுக்கு ஹர்ட் பண்ணுற மாதிரியோ இல்ல டிஸ்டிர்ப் பண்ணுற மாதிரி இருந்தா ஐம் சோ சோ சாரி சிஸ்.
தொடர்ந்து படித்து கருத்துக்கள் தெரிவிப்பதற்கு மிக்க நன்றி சிஸ்.
 

Advi

Well-known member
ஐயோ எல்லாரும் இப்படி தான் அப்படினு சுயநலமாக இருந்து இப்ப இனி ஓட வாழ்க்கை தான் பாவமா இருக்கு.....

இரத்தினம், அவர் செய்தப்ப எல்லாம் ஒன்னும் இல்ல....இதுவே பெண் செய்தா....அதையும் அவ அம்மா மேல தான் பழியா?????

இவங்க தான் உங்களை இழுத்து வந்து கல்யாணம் பண்ணினாங்களா ரத்து?????

அதுவும் யாரோ ஒருத்தர் பேச்சை கேட்டு....

இந்த மேகலா என்ன அட்மாஸ்பிராயர்ல மட்டும் தான் இருப்பாங்களா????

கணவன் என்ன செய்யரான் அப்படினு கூடவா தெரியாது??????

இவங்க மேலையும் எனக்கு டவுட் இருக்கு....

Aww இதய் இதை எப்படி டா சரி பண்ண போற....
 

NNK-70

Moderator
ஐயோ எல்லாரும் இப்படி தான் அப்படினு சுயநலமாக இருந்து இப்ப இனி ஓட வாழ்க்கை தான் பாவமா இருக்கு.....

இரத்தினம், அவர் செய்தப்ப எல்லாம் ஒன்னும் இல்ல....இதுவே பெண் செய்தா....அதையும் அவ அம்மா மேல தான் பழியா?????

இவங்க தான் உங்களை இழுத்து வந்து கல்யாணம் பண்ணினாங்களா ரத்து?????

அதுவும் யாரோ ஒருத்தர் பேச்சை கேட்டு....

இந்த மேகலா என்ன அட்மாஸ்பிராயர்ல மட்டும் தான் இருப்பாங்களா????

கணவன் என்ன செய்யரான் அப்படினு கூடவா தெரியாது??????

இவங்க மேலையும் எனக்கு டவுட் இருக்கு....

Aww இதய் இதை எப்படி டா சரி பண்ண போற....
எல்லாத்தையும் இதய் தான் சரி பண்ணனும்... பாவம் என்னப் பண்ண போறானோ?
 
Top