எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பார்தவி -11 கதைத்திரி

NNK 67

Moderator
பார்தவியே-11


இங்கே சாலையில், மனம்முழுக்க வலியோடு நடந்து சென்றுகொண்டிருந்த மிதிலாவை திடீரென்று ஒருகரம், அவளது கைகளைப்பற்றி காருக்குள் இழுத்துப்போட அதில் ஒருகணம் கண்கள் இருட்டிக்கொண்டுவர அதிர்ச்சியானவளுக்கோ, என்ன நடக்கிறது..? என்றே புரியவில்லை..! பின்னர், மறுகணமே சுயம்பெற்றவளோ அங்கு இருப்பவர்களைக்காண, எதிரே முகமூடி அணிந்தபடி இருவர் அமர்ந்திருக்க, வண்டியின் ஓட்டுனரும்கூட முகமூடி அணிந்திருந்தான்..!


அதனை கண்டபின்புதான், தான் கடத்தப்பட்டிருப்பது புரிந்த மிதிலாவோ, மேலும் அதிர்ச்சியடைந்து கத்துவதற்காக வாயைதிறக்க, அதற்குமுன்பே அவளின் முகத்தில் மயக்கமருந்தை தெளித்திருந்தனர் அந்தக்கயவர்கள்.. பின், சிறிதுநேரம் கழித்து மயக்கம்தெளிந்து கண்விழித்த மிதிலாவோ சுற்றிமுற்றியும் தான் இருக்கும் இடத்தை பார்க்கையில், அது ஏதோவொரு இருட்டறைபோல் இருந்தது..! பின்னர் எழுந்தவளோ, ஏதோ வித்தியாசமாக உணரவே கீழ்நோக்கி தன்னை பார்க்கையில், ஒருகணம் ஆடித்தான் போனாள்..! ஆம்..! அவளது புடவை பறிக்கப்பட்டு வெறும் பாவாடை ஜாக்கெட்டோடு மட்டும்தான் இருந்தாள் மிதிலா.. அதைக்கண்டதும் பதறியவளோ தன் இருக்கைகளையும் தனக்கு காப்பாக நெஞ்சத்தின்மீதுவைத்து மானத்தை மறைத்துக்கொண்டு, “தான் ஏதோ பெரிய ஆபத்தில் இருக்கிறோம்..!” என்று, தன்னிலை உணர்ந்து அழ ஆரம்பித்தவளோ, “ ஐயோ கடவுளே..! யாராவது காப்பாத்துங்களேன்..! என்னை ஏன் இப்படி அடைச்சுவச்சிருக்கீங்க..? ப்ளீஸ்.. என்னை விடுங்க..! யாரு நீங்கெல்லாம்..? தயவுசெஞ்சு என்னை விட்டுடுங்க..!” என்று கதறியபடி, அந்த இருட்டரைக்குள்ளே எந்த திசையில் செல்வது..? என்று தெரியாமல், தவித்தவண்ணம் அங்குமிங்கும் அலைபாய, திடீரென்று அந்தஅறையின் ஒரு திசையிலிருந்து மட்டும் வெளிச்சம்பரவிட, சட்டென்று திரும்பி பார்த்தவளுக்கோ, யாரோ உள்ளேவருவது தெரியவே தன் மானத்தை மறைத்தபடி, “யாரு..? யாரு நீங்க..? கிட்ட வராதீங்க ப்ளீஸ்..! என்ன காப்பாத்துங்க..ப்ளீஸ்..!” என்று கெஞ்சிட, எதிரே வந்துகொண்டிருந்தவனோ, பலம்கொண்டு அறையதிர சிரித்தான்..! அடுத்தகணமே அந்தஅறையின் விளக்குகள் அனைத்தும் ஒளிர்ந்திடவே அறைமுழுக்க வெளிச்சம்பரவியதும், அப்போதுதான் அது ஒருவீட்டின் படுக்கையறை..! என்று புரிந்துகொண்டவளோ, எதிரே நின்றவனை பார்த்திட மேலும் ஒருகணம் ஆடித்தான் போனாள்..! ஆம்..! எதிரே நின்றிருப்பது வேறு யாருமில்லை..? தஷானேதான்..! அவனைக்கண்டதும் மேலும் பதட்டமானவளோ, “நீ..நீ.. நீங்களா..?” என்றுகேட்டிட, அரக்கத்தனமாக சிரித்த தஷானோ, “ஆமாம்..பேபி..! நான்தான்..! நானேதான்..! பரவாயில்லையே..? இன்னும் என்னை ஞாபகம் வச்சிருக்கியே..?” என்றுகேட்க அவனிடம், “எதற்காக என்னை கடத்துனீங்க..? தயவுசெஞ்சு என்னை விட்டுடுங்க..! ப்ளீஸ்..!” என்றுகெஞ்சிட தஷானோ, “என்ன பேபி நீ..? உன்னை விடறதுக்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டு கடத்தினேன்..? உன்னால் இன்னும் எவ்வளவு காரியமாக வேண்டியிருக்கு..?” என்றுசொல்லிட, அவனை பயத்துடன் பார்த்தவளோ, “ப்ளீஸ் தஷான்..! என்னை விட்டுடுங்க..! ப்ளீஸ்..! ஏற்கனவே வாழ்க்கையில், நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்..! என்னை, என்வீட்டில் தேடுவாங்க..? ப்ளீஸ்..! என்ன விட்டுடுங்க..!” என்றுசொல்ல,


மீண்டும் பலமாக சிரித்தவனோ, “என்ன பேபி நீ..? குழந்தைபோல பேசுற..? நாங்க குடுத்த மயக்கமருந்தில், நீ மயங்கி மூணுநாள் ஆச்சு..! மூணுநாளா உன் புருஷன் உன்னை தேடிட்டுதான் இருக்கான்..! நானும் அதைப்பார்த்து ரசிச்சிட்டுதான் இருக்கேன்..!” என்று ஏளனமாக சொல்ல அதில் அதிர்ச்சியானவளோ, “என்னது மூணுநாளா..?” என்றுகேட்டிட, “ஆமாம் பேபி..! உன்னை, நாங்க கடத்தி மூணு நாளாச்சு..! நானும், எப்போதான் நீ கண்விழிப்ப என்று காத்துட்டேயிருந்தேன்..! பரவால்ல..! இன்னைக்கே கண்முழிச்சுட்ட..!” என்று நக்கலாக சொல்ல, தன் தலையில் அடித்தபடி அழுதவளோ, “ ஐயோ..!கடவுளே..! என்ன இது சோதனை..? என்னை காணோமென்று எல்லோரும் தேடி இருப்பார்களே..? ஏன், என்னை மட்டும் இப்படி சோதிக்கிறீங்க..?” என்று அழுதிட, அவளது அழுகையை நின்று ரசித்தபடி வேடிக்கைப்பார்த்தவனோ அவளிடம், “நல்லா அழு பேபி..! நீ, அழுவதை பார்ப்பதற்காகதான் கஷ்டப்பட்டு உன்னை கடத்தினேன்..!” என்று சொல்ல, தஷானைக்கண்டு கையெடுத்து கும்பிட்டவளோ, “ ப்ளீஸ்..! என்னை விட்டுடுங்க..! இது தப்புங்க..! நான் இன்னொருத்தரோட மனைவி..! என்னை நீங்க கடத்துனது மகாபாவம்..!” என்று சொல்ல, இவ்வளவுநேரம் சிரித்தபடி நின்றிருந்த தாஷானோ முகம்மாறி கோபமாக, “என்னடி சொன்ன..? நீ, இன்னொருத்தன் பொண்டாட்டியா..? அன்னைக்கு மட்டும் அந்த ராகவ் அங்கே வராமலிருந்திருந்தால், இந்நேரம் நீ என் பொண்டாட்டிடி..! உன்னை எப்படியெல்லாம் அனுபவிக்கனுமென்று எண்ணியிருந்தேன் தெரியுமா..? அதுல மொத்தமா மண்ணள்ளிப்போட்டு போயிட்டான் அவன்..! அவனை எப்படி நான் சும்மா விடமுடியும்..? அதுமட்டுமில்லாமல் நீயும், அவன் கூப்பிட்டவுடனே அவன் பின்னாடியே ஓடிப்போனவள்தானே..? அன்னைக்கு கல்யாணமண்டபத்துல அத்தனைபேர் முன்னாடியும், நான் அவமானப்பட்டு நின்றது, எனக்குதான்டி தெரியும்..!” என்று சொல்ல, மீண்டும் அவனை கையெடுத்துக்கும்பிட்டு மன்னிப்புகேட்ட மிதிலாவோ, “ஐயோ தஷான்..? நான் வேண்டுமென்றே அப்படிசெய்யலை..! கல்யாணத்துக்கு முன்னாடியே நானும் ராகவும் ஒருத்தரையொருத்தர் விரும்பினோம்..! சூழ்நிலை..! எங்களது திருமணம் அப்படி நடக்கவேண்டியதாயிடுச்சு..! எங்களால உங்களுக்கு மனகஷ்டம் ஏற்பட்டிருந்தால், தயவுசெய்து எங்களை மன்னிச்சிடுங்க..! ப்ளீஸ்..! என்னை விட்டுடுங்க..!” என்று மனமுருக மன்னிப்புக்கேட்டு கெஞ்சியவளைக்கண்ட தஷானோ வன்மசிரிப்புடன், “நோ..நோ..! நோவே பேபி..! நீ, என்னதான் கெஞ்சி மண்டியிட்டு அழுதாலும், உன்மை நான் இங்கிருந்து வெளியேவிட போறதில்லை..!” என்று சொல்லவே, கோபம்கொண்ட மிதிலாவோ, “தஷான்..? உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா என்ன..? இன்னொருத்தரோட மனைவியை கடத்திக்கொண்டு வந்திருக்கீங்களே..? நீங்கெல்லாம் என்ன மனுஷன்..?” என்றுகேட்க, ஏளனமாக அவளைக்கண்டவனோ, “நான், எப்போ பேபி மனுஷன்னு சொன்னேன்..? நான் ராட்சசன்தான்..! பெண்பித்து புடிச்ச ராட்சசன்தான்..! நான் இதுவரை ஆசைப்பட்ட பெண்களில் உன்னை தவிர யாரையும் அடையாமல்விட்டதே கிடையாது..! உன்னால எங்கப்பனுக்கும் ஏகப்பட்ட பிரச்சனை..! இத்தனை வருஷமா அனுபவிச்சிட்டிருந்த சொத்தை, இப்போ எல்லா உண்மையும் தெரிஞ்சு நீ வந்ததும், நீயும் உன் புருஷனும் பிடிங்கிகிட்டிங்க..! இவ்வளவுநாள் நாங்க வாழ்ந்த பணக்காரவாழ்க்கையை, ஒரேநிமிஷத்துல கெடுத்த உங்களை, எப்படி எங்களால் சும்மாவிட முடியும்..?” என்று வன்மமாக கூறிட மிதிலாவோ, “தஷான்..? உங்க அப்பா தப்புசெஞ்சாரு..! நம்பின வீட்டுக்கே துரோகம்செஞ்சு, எங்கம்மாவை கொலையும் செஞ்சிருக்காரு..! அதுக்கான தண்டனையைதான் அவர் அனுபவிச்சிட்டிருக்காரு..! இதுல எங்கமேல எங்கே தப்பிருக்கு..? தயவுசெஞ்சு புரிஞ்சுக்கோங்க..! நீங்க பண்றது பாவம்..!” என்று பேசிக்கொண்டிருக்கும்போதே,


“நிறுத்துடி..!” என்று கத்தியவாறு, கோபம்கொண்டு குறுக்கிட்ட தஷானோ, “என்னடி..? விட்டால் ரொம்பபெரிய இவளாட்டம் பேசிட்டேப்போற..? நான் நினைத்தால், இங்கேயே உன்னை சீரழிச்சிடமுடியும்..! ஆனால், நான் அதை பண்ணமாட்டேன்..! எனக்கு நீ வேணும்..! உன்னை, நான் என்ஆசை தீர அனுபவிக்கணும்..! அதற்கு நீயாவே என்கிட்ட வரணும்..! நீயா என்கிட்டவந்து, உன்னை எனக்கு தரணும்..! அப்போ நான், உன்னை ஆசைதீர அனுபவிச்சப்பின் வெளிய அனுப்புறேன்..! கல்யாணமேடைவரை வந்து, என்னை ஏமாத்தின உனக்கும், எங்க அப்பாவை உள்ளேதள்ளி, எங்களை நடுத்தெருவுல நிறுத்தின உன் புருஷனுக்கும், இதுதான் தண்டனை..! என்னால சீரழிக்கப்பட்ட உன் வாழ்க்கையை, நினைச்சுநினைச்சு நீ மனசு நொந்து சாகணும்..! தன்னோட பொண்டாட்டி, இன்னொருத்தனால கெட்டுப்போய் வந்திருக்கான்னு தெரிஞ்சதுமே, உன்புருஷன் மனசு விட்டுடுவான்..! அதுக்கப்புறம் அவன் உயிரோடு இருந்தாலும், நடைபிணம்தான்..! அவனோட திமிரு, ஆணவம், கர்வம் மொத்தத்தையும் உன்னைவைத்துதான் அடக்கப்போறேன்..!” என்று வீரவசனம் பேசிட, கோபம்கொண்ட மிதிலாவோ வீறுகொண்டு எழுந்து, “டேய்..? நிறுத்துடா..! இதுக்குமேல ஏதாவது பேசின..? நான் மனுஷியாவே இருக்கமாட்டேன்..! அவ்வளவுதான் உனக்கு மரியாதை..! என்னடா சொன்ன..? என்னை, நீ அனுபவிக்கபோறியா..? அதுவும், நானா உன்கிட்ட வரணுமா..? அதற்கு முதலில், நான் உயிரோடு இருக்கணுமேடா..? நான் உயிரோடு இருக்கிறவரைக்கும் கனவுலகூட அப்படி ஒருவிஷயம் நடக்காதுடா..! அப்படி ஒருவிஷயம் நடக்குமென்று தெரிந்தால், அந்தநொடியே என்கிட்ட தப்பா அணுகின உன்னை எரிச்சிட்டு, என்னயும் நான் அழிச்சுப்பேன்..! எக்காரணம்கொண்டும் உன்னால் இந்த மிதிலாவோட நிழலைக்கூட தொடமுடியாதுடா..!” என்று சொல்ல,


பலமாக கைத்தட்டி நக்கலாக சிரித்த தஷானோ, “தெரியும் மிதிலா..! இப்படிதான் நீ பேசுவேன்னு எனக்கு நல்லாவே தெரியும்..! உண்மைதான்..! நீ உயிரோடு இருக்கும்வரை நிச்சயம் என்னை, உன்னருகில்கூட நெருங்கவிடமாட்ட என்று எனக்கு தெரியும்..! இருந்தும் உன்னை எதற்காக கடத்தினேன்..? என்று நினைக்கிறாயா..? இந்த உலகம் இருக்கே இதுவொரு சுயநலமிக்க உலகம்..! அடுத்தவன் சொல்கிற விஷயம் உண்மையா..? பொய்யா..? என்று அறிந்துகொள்வது முன்னே அந்த விஷயத்தை ஊர்ஜிதபடுத்திவிடும்..! அப்படிதான்..! இப்போ இந்த ஊரைப்பொருத்தவரையில் மிதிலா வீட்டில் யாருகிட்டயும் சொல்லாமல், எங்கேயோ போய்ட்டா..! என்று நினைத்துக்கொண்டு இருக்கிறது..! சொல்லப்போனால், இன்னும் ரெண்டுநாள் நீ இங்கிருந்து வெளியே போகவில்லையென்றால், நீ யாரோ ஒருவருடன் ஓடிபோய்விட்டாய்..!” என்று முடிவேசெய்துவிடும்..! ஏன்..? நானே அப்படிவொரு கதையைகட்டுவேன்..! அதன்பிறகு அந்தக்கதையை ஜோடனை செய்யும் வேலையை ஊர் பார்த்துக்கொள்ளும்..! அதன்பின்பு, என்னதான் நீ, இங்கிருந்து வெளியேபோய் மத்தவங்க காலில்விழுந்து, நான் உத்தமி..! சுத்தமானவள்..! என்று சொல்லி, கெஞ்சிக்கூத்தாடினாலும் எவனும் நம்பமாட்டான்..! ஆமாம்..! நம்ம ஊரில் இருக்கவங்களெல்லாம் முட்டாப்பீசுங்க..! ஒருபொண்ணை காணோம்..! என்று சொன்னவுடனே, அதுவும் அவள் கல்யாணமானவள் என்று தெரிந்தாலே, அவள் யாரோ ஒருவனுடன் ஓடிவிட்டாள்..!” என்று தானாகவே கட்டுக்கதை கட்டுபவர்கள்..! அப்படி விஷம்போல இந்த வதந்தி ஊர்முழுக்க பரவும்போது, தன் பொண்டாட்டி இன்னொருத்தனோடு ஓடிவிட்டாளா..? என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுகேட்டு, அவமானம் தாங்கமுடியாமல் உன்புருஷன் உக்கிஉக்கி சாகணும்..! எப்போவும், தானொரு வீரன்..! என்று திமிரோடு இருக்கும் உண்புருஷன், வெளியில தலைகாட்ட முடியாமல் அவமானத்திலேயே சாகணும்..! இதையெல்லாம் பார்த்துட்டு அதுவரைக்கும் நீ உயிரோட இருப்பியா என்ன..? என்னை பொருத்தவரையில், நீ எனக்கு கிடைக்கலேன்னாலும் கவலையில்லை..! என்னையும், என் அப்பாவையும் அவமானப்பட வைத்த நீங்களும், உங்க குடும்பமும் ஊரின்முன் அவமானப்பட்டு, தலைகுனிந்து, அசிங்கப்பட்டு சாகணும்..! ஆல்ரெடி உன்னை கடத்தி மூன்றுநாள் ஆயிடுச்சு..! கிட்டத்தட்ட நீ யார்கூடயோ ஓடிப்போயிட்டன்னு, இந்நேரம் பேச ஆரம்பிச்சிருப்பாங்க..!” என்று ஏளனமாக பேசியவனைக்கண்ட மிதிலாவோ, என்ன செய்வது..? என்று தெரியாது குழப்பத்தில் விழிபிதுங்கி நிற்க,


அதனைக்கண்ட தஷானோ, “என்ன பேபி…? இங்கிருந்து எப்படி தப்பிக்கலாம்னு யோசிச்சிட்டிருக்கியா..? உன்னால இங்கிருந்து தப்பிக்கவே முடியாது..! அந்தளவுக்கு உன்னை பத்திரமாக வச்சிருக்கேன்..! அதையும்மீறி, நீ தப்பிச்சிடக்கூடாது..! என்றுதான் உன்னோட புடவையை மட்டும் கழட்டிவச்சிருக்கோம்..! உன்னை கடத்திய என்முன்னேகூட, உன் மானம் போககூடாதுன்னு பதற நீ..? இதே கோலத்தோட இங்கிருந்து, தப்பிச்சு வெளியேபோவியா என்ன..? உன்னைப்போல பெண்களுக்கு மானம்தானே உயிர்..!” என்று நக்கலாக சொல்ல, அவன் கூறியதைக்கேட்டு கோபம் கொந்தளித்தாலும், அதுதானே உண்மை..? இப்படி ஒருஇக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு, எவ்வாறு தான் இங்கிருந்து தப்பிக்கமுடியும்..? என்று நினைத்தவளோ, மீண்டும் ஒருமுறை தஷானைக்கண்டு கெஞ்சுதலாக, “ ப்ளீஸ் தஷான்..! உங்களுக்கு என்ன வேண்டும்..? என்னுடைய சொத்துதானே..? நானே தரேன்..! எங்க கையெழுத்து போடணும்னு சொல்லுங்க..? நான் போடுறேன்..! என்னை விட்டுடுங்க..! என்னை, என் புருஷன்கிட்ட விட்டுடுங்க ப்ளீஸ்..!” என்று கெஞ்ச,


தஷன்னோ, “சொத்துமட்டும் போதுமென்றால், உன்னை நாங்க கடத்திருக்க தேவையே இல்லை..! எனக்கு தேவை..? உன் புருஷன் அவமானப்படணும்..! நீயும், உன்புருஷனும் இனிமேல் வாழ்க்கைமுழுவதும் சந்தோசமாக வாழவேக்கூடாது..! என்னை மணமேடைவரை இழுத்துவந்து ஏமாற்றியதற்காக, தினம்தினம் நிம்மதியில்லாமல் அவமானப்பட்டு நீ சாகணும்..!” என்று சொல்லிக்கொண்டு, அவளை மேலும்கீழும் அவனது துயிலுரிக்கும் பார்வைபார்த்திட, அதில் கூசியவளோ, மேலும் தன்னை மறைத்துக்கொண்டு பின்வாங்கவே அதைக்கண்ட தஷானோ, “வேணுமென்றால் ஒருவழி சொல்லட்டா..? பேசாமல் என்னோடு ஒத்துழைத்து, இன்று ஒருநாள் மட்டும் நான், உன்னை அனுபவிக்க விடு..! அப்புறம் நீ இங்கிருந்து போயிடலாம்..!” என்று சொல்ல, அவனை அருவருப்புபார்வை பார்த்த மிதிலாவோ, “ச்சீ..! நீயெல்லாம் மனுசனா..? நீயும் ஒரு அம்மா வயித்துலதானே பிறந்திருப்ப..? இப்படி அடுத்தவன் மனைவியை, ஆசைப்படுறேயே..? உன்கிட்ட பேசுவதே பாவம்..!” என்று முகம்சுழித்து வேறுபுறம் திரும்பிட,


தஷானோ அதையெல்லாம் துடைத்துக்கொண்டு, “அப்போ வேற வழியில்ல..! இன்னும் சிலநாள் நீ இங்கேதான் இருக்கணும்..!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.. அவன் சென்றபின்புகூட, கதவை நாளாபுறமும் தட்டிதட்டி, “ஐயோ..! யாராவது இருந்தால் என்னை காப்பாற்றுங்களேன்..! ப்ளீஸ்..! என்னை காப்பாத்துங்க..! என்னை இங்கே கடத்தி வச்சிருக்காங்க..!” என்று கத்திகத்தி உதவிகேட்டவளோ, ஒரு கட்டத்தில் சோர்ந்துபோய் கீழே சரிந்துவிட்டாள்..! ஆமாம்..! அவள் உணவுஉண்டு மூணுநாள் ஆகிவிட்டதே..! அதன்பிறகு தஷானின் அடியாள் மூலமாக உணவுகொடுத்திட, வேறு வழியில்லாதவளோ கொடிய பசியின்காரணமாக அதனை வாங்கி உண்டாள்..


பின்பு, இங்கிருந்து தப்பிசெல்ல எந்த வழியும் இல்லை..! என்று புரிந்துகொண்டு, தன் நிலையை எண்ணி, அழுது கதறியவளோ மனதிற்குள்ளேயே, “ப்ளீஸ் ராகவ்..! என்னை எப்படியாவது இங்கிருந்து காப்பாத்துங்க..! எனக்கு பயமாயிருக்கு ராகவ்..! இந்த ராட்சசன், என்னை ஏதாவது பண்ணிட்டால் சத்தியமா நான் உயிரோடு இருக்கமாட்டேன் ராகவ்..!” என்று, மனதிற்குள்ளேயே மானசீகமாக தன்னவனுடன் பேசியபடியே மயங்கிசரிந்தாள் மங்கையவள்..!


இங்கு ராகவ்வோ மிதிலா கடத்தப்பட்ட அன்று, வழக்கம்போல் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்தவனோ வீடுமுழுக்க தேடி, மிதிலா எங்கும் இல்லாததைக்கண்டு நந்தனுக்கு அழைத்து, “மிதிலா எங்கே..?” என்று கேட்க, நந்தனுக்கும் மிதிலா எங்கே சென்றிருக்கிறாள் என்று தெரியவில்லை..! அதன்பின்பு மிதிலாவின் வீட்டிற்கு கால்செய்து விசாரித்திட மிதிலா, பவித்ரா கர்ப்பமாக இருக்கும் விஷயம்கேட்டு கோவிலுக்கு சென்று, பவித்ராவை கண்டதுமுதல், வேதவள்ளி மிதிலாவிடம் கடுமையாக பேசியதுவரையும் கூறியவர்களோ, “அப்போதே மிதிலா வீட்டிற்குசென்றுவிட்டாள்..!” என்று சொல்லவே, ஏற்கனவே மனசஞ்சலத்தில் இருந்தவளிடம், வேதவள்ளி கடுமையாக பேசி, மேலும் அவளை மனம்நோகசெய்தபடி அனுப்பியிருந்த விஷயம் தெரிந்து கோபம்கொண்ட ராகவ்வோ, “இப்போது இதை பேசுவதற்கு நேரமில்லை..!” என்று நினைத்துக்கொண்டு சங்கரனிடம், “மாமா..? மிதிலாவை காணவில்லை..! மிதிலாவைப்பற்றி ஏதாவது தெரிந்தால், உடனே எனக்கு தகவல்கொடுங்கள்..!” என்று சொல்லிவிட்டு காலை கட்செய்தான்..!


மிதிலாவை காணவில்லை..! என்ற செய்தியைக்கேட்ட சங்கரனும் பதறியபடி வேதவள்ளியைப்பார்த்து முறைத்துக்கொண்டே, “அம்மா..? ஏம்மா நீ இப்படியிருக்க..? என் பொண்ணு உன்னை என்னமா பண்ணா..? பாவம்..! ஆசைஆசையாக அவள் தங்கச்சி கர்ப்பமாயிருக்குற விஷயம்கேட்டு, அவளைப்பார்க்க ஓடிவந்தவளை மனம்நோகும்படி வார்த்தைகளால் வதைத்திருக்கயே..? இப்போ என் பொண்ணை காணோம்மா..!” என்று பதட்டமாகசொல்ல, வசந்தியும்கூட பதறித்தான் போனாள்..! ஆனால், இதையெல்லாம் கேட்டு, காதில் விழாதவாறு அமர்ந்திருந்த வேதவள்ளியோ, “ என்னது காணோமே..? சனியன் ஒழிஞ்சிடுச்சா..! சந்தோசம்..! இனி அதோட சங்காத்தமே இல்லாமல் நிம்மதியாயிருக்கலாம் விட்டுடுடா சங்கரா..! என்று எகத்தாளமாகப்பேச,


சங்கரனோ வேதவள்ளியைக்கண்டு, “நீ திருந்தவேமாட்டமா..! உன்கிட்ட போய் கேட்டேன் பாரு..? என்னை சொல்லணும்..!” என்று சொல்லிவிட்டு, மிதிலாவை எப்படி தேடுவது..? என்று யோசித்துக்கொண்டிருந்தார்.. இங்கே ராகவ்வும் நந்தனும், மிதிலாவை தனக்குத்தெரிந்த இடங்களிலெல்லாம் சென்று தேட, எங்கேயும் மிதிலாவை காணவில்லை..! பிறகு, மிதிலா காணாமல்போன விஷயத்தை வெளியில்சொல்லாமல், தங்களின் நம்பகமான ஆட்களைவைத்து தேடியவர்களோ, மிதிலாவைப்பற்றி ஏதாவது துப்பு கிடைக்குமா..? என்று தேடிக்கொண்டிருந்தனர்.. பரத்தும்கூட அவனுக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் யோசித்து, மிதிலா எங்கு சென்றிருப்பார்..? என்று தேடிக்கொண்டிருந்தான்.. இவ்வாறு அனைவரும் ஒவ்வொருதிசையில் மிதிலாவை தேடிக்கொண்டிருக்க, பாவம்..! அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது..!


பிறகு மிதிலாவைத்தேடி சோர்ந்துபோன ராகவைக்கண்ட நந்தனோ, “டேய் மச்சி..? பேசாம போலீஸில் கம்ப்ளைன்ட் பண்ணிடலாம்டா..!” என்றுசொல்ல, அதனைமறுத்த ராகவ்வோ, “வேண்டாம்..! அவங்ககிட்ட கம்ப்ளைன்ட் பண்ணால், தேவையில்லாமல் இந்தவிஷயம் வெளியேபரவிடும்..! அதுவும் லேடிஸ் விஷயமாயிருக்கு..! அதனால் வேறுமாதிரி கண்ணோட்டத்துல பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க..! அதனால மிதிலாவோட மனசுரொம்ப பாதித்திடும்டா..! இதை பார்த்துதான் நாம ஹாண்டில் பண்ணனும்..!” என்றுசொல்ல, நந்தனுக்கும் அதுவே சரியாகப்பட்டது..! அதன்பிறகு நந்தன், ராகவ், பரத் மூவரும் அவர்களுக்கு தெரிஞ்ச வகையிலெல்லாம் மிதிலாவை தேடிக்கொண்டிருந்தனர்.. அப்படி ஒருநாள் சங்கரனின் வீட்டில், மிதிலா சம்பந்தப்பட்டபொருட்களை ஆராய்ந்தால் ஏதாவது துப்புகிடைக்குமா..? என்று பார்க்க வந்த ராகவ்வும் நந்தனும் மிதிலாவின் அறையில்சென்று தேடிக்கொண்டிருக்க, அதனைக்கண்ட வேதவள்ளியோ சங்கரனிடம், “என்னடா சங்கரா..? இவங்களை எதுக்குடா நம்மவீட்டுக்குள்ள விட்ட..?” என்று சொன்னதற்கு சங்கரனோ, “அம்மா..? தயவுசெஞ்சு கொஞ்சம் வாயை மூடுறியா..? ப்ளீஸ்..! நாங்களே எங்க பொண்ணை காணோமென்று நொந்துபோய் இருக்கோம்..! நீ ஏதாவது, தேவையில்லாமல் பேசி எங்களை டென்ஷன் பண்ணாதே..!” என்றுசொன்னதற்கு, ஏளனமாக நகைத்த வேதவள்ளியோ, “டேய்.. சங்கரா..? உனக்கு புரியலடா..! நீங்கெல்லாம் அவளை தேடுறது சுத்தவேஸ்ட்..! போனவள் திரும்பிவர்ற மாதிரி போயிருந்தால், இந்நேரம் வந்திருப்பாளே..? அவள் இங்கே திரும்பிவரக்கூடாது என்று நினைத்துதானே போயிருக்கா..!” என்று சொல்ல சங்கரனோ, “என்னம்மா பேசுற நீ..?” என்றுகோவமாக கேட்டான்.. அதற்கு வேதவள்ளியோ, “ஆமாம்டா..! அவளுக்கு இவனோட வாழபிடிக்கலை போல..? அதனாலதான் யார்கிட்டயும் சொல்லாமல், எவனுடையோ போயிட்டாள்..” என்று மனசாட்சியின்றி பேச, கோபம்கொண்ட பரத்தோ, “பாட்டி ப்ளீஸ்..! இப்படி வாய்க்கு வந்தமாதிரி பேசாதீங்க..!” என்று திட்டவே, அதனை கண்டுகொள்ளாதவளோ, “மாப்பிள்ளை..? நீங்க சும்மாஇருங்க..! நல்லவளாக இருந்தால், தான் எங்கேபோகிறோம்..? என்று, மத்தவங்ககிட்ட சொல்லிட்டு போகவேண்டியதுதானே..? அவள் போய், இன்றோடு அஞ்சு நாளாச்சு..! இப்போவரை எங்கே போனாள்..? எப்படி இருக்காள்..? என்று எந்த தகவலுமே இல்ல..! இதிலிருந்து என்ன தெரியுது..? அவளுக்கு இவனோட வாழப்பிடிக்கலை..! என்ற விஷயம்தான் தெரியுது..! அதுமட்டுமில்லாமல், அந்த கழுத்தை ஒன்னும் ஒழுக்கமானவள் இல்ல..! தூக்கிவளர்த்த அப்பன் பேச்சைக்கூட கேட்காமல், கல்யாண மண்டபத்துல எவனோ ஒருத்தனைக்கைகாட்டி, அவனத்தான் காதலிக்கிறேன்..! என்றுசொல்லி, அவன்பின்னாடி போனவள்தானே..? அப்படிப்போனவள் இப்போ வேறஒருத்தர் பின்னாடி போயிருக்கமாட்டாளேன்று என்ன நிச்சயம்..? அதனால் அவளை தேடாமல், சனியன் ஒளிஞ்சதுன்னு போய், உங்க வேலையை பாருங்க..!” என்று சொல்ல,


அதுவரை பொறுமைகாத்திருந்த ராகவிற்கோ கோபம் கட்டுக்கடங்காமல் வரவே மிதிலாவின் அறையிலிருந்து வெளியேவந்து வேதவள்ளியைப் பார்த்தவனோ அவளை முறைத்துக்கொண்டு சங்கரனிடம், “இதோபாருங்க மாமா..? தேவையில்லாமல், என் பொண்டாட்டியை இங்கேயாரும் ஏலம்போட வேண்டாம்..! எனக்கு அவளைபற்றி தெரியும்..! என் மிதிலா ஏதோ பிரச்சனையில் மாட்டியிருக்காள்..! அதுமட்டும் எனக்கு புரியுது..! அவள் மட்டும் கிடைக்கட்டும்..! அவளைபற்றி பேசுறவங்க எல்லோருக்கும் அப்புறம் இருக்கு..!” என்று சொல்லிக்கொண்டு, வேகமாக அங்கிருந்து வெளியேசென்றான்.. இங்கு தஷானோ மிதிலாவை கடத்தி வந்த நாளிலிருந்து, ஒவ்வொருநாளும் அவளிடம்சென்று தகாத வார்த்தைகளைப்பேசியும், தன்னுடன் கூடுவதற்கு வற்புறுத்தியும், அவளை கொடுமைப்படுத்திட அதற்கெல்லாம் அஞ்சாதவளோ, அக்கொடியவனின் நிழல்கூட தன்மீதுபடாதவாறு, தன்னை காத்துக்கொள்வதற்காக ஒவ்வொருநாளும் போராடிவருகிறாள்..! தஷானும் மிதிலாவின் மனஉறுதி தெரிந்து, “எங்கே, தான் அவளிடம் நெருங்கினால் அவள் தன்னை அழித்துவிடுவாளோ..?” என்று பயத்தில் இரண்டடி தள்ளியேநிற்கிறான்..! இருந்தும், மனதளவில் அவளை பலகீனப்படுத்தி, தன்னம்பிக்கையற்றவளாக மாற்றி அவளின் துன்பத்தையும், கவலையையும், கண்ணீரையும் கண்குளிர ரசித்தவனோ, தினம்தினம் வகைவகையாக அவளிடம் தன்னுடைய சித்திரவதைகளை தொடர்ந்துகொண்டே இருந்தான்..


மிதிலா கடத்தப்பட்டு, இன்றோடு ஆறுநாட்கள் முடிவடைந்திருந்தது..! ராகவிற்கோ மனதில், “மிதிலா, எங்கு எவ்வாறு கஷ்டப்படுகிறாளோ..? அவளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது..! கூடியவிரைவில் அவளை நாம் கண்டுபிடித்திடவேண்டும்..!” என்ற எண்ணத்திலே, அவளதுநினைவில் உண்ணாது உறங்காது தவித்திருந்தான்.. அப்படி இருக்கையில்தான், மறுநாள்காலையில் எப்போதும்போல மிதிலாவை தேடுவதற்கான வேலையில் இறங்கி இருந்த ராகவிற்கு ஒருபோன்கால் வந்தது..! அதை அட்டென்ட்செய்து பேசிய ராகவோ எதிர்முனையில்பேசிய தனது ஒற்றனிடம், “சொல்லுங்க..? மிதிலாபற்றி ஏதாவது தகவல்தெரிந்ததா..?” என்று கேட்க, “மிதிலாவைபற்றி எந்த தகவலும் பெரிதாக தெரியவில்லை..! ஆனால், மிதிலா காணாமல்போன நாளுக்கு, இரண்டுநாட்களுக்கு முன்புதான் தஷான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியேவந்ததாக தகவல்வந்தது..!” என்று கூறியவனோ மேலும், “தயானந்தம் செய்தகுற்றம் வாக்குமூலமாக ஒப்புக்கொள்ளப்பட்டதால், அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை..!” என்று கூறி, “ஒருவேளை, இதில் தஷானின் தலையீடுகூட இருக்கலாம்..!” என்றுசொல்லிவிட்டு பின்பு காலைகட் செய்யவே, அப்போதுதான் அதனைபற்றி யோசித்த ராகவோ, “ இதை ஏன் தஷான் செய்திருக்கக்கூடாது..? சாதாரணமாக, கல்யாணம் நின்றதற்காகவெல்லாம் தஷான் இதைசெய்திருக்க தேவையில்லை..! என்றாலும், அவனும் அவன்தந்தையும் இதுவரைவாழ்ந்த சுகபோகமான வாழ்க்கையை பறித்துக்கொண்டதற்கு மிதிலாவும் நானும்தானே காரணம்..! அதற்காகதானே மிதிலாவை தனது மகனுக்கே கட்டிவைத்து, சொத்துமொத்தத்தையும் தனதாக்கிக்கொள்ள திட்டம்போட்டார்..! ஒருவேளை அதற்காககூட மிதிலாவை கடத்தியிருக்கலாமே..?” என்று அவனதுமூளை யோசிக்கதொடங்க, அப்போது அங்குவேகமாக ஓடிவந்த நந்தன் கூறியதைகேட்ட ராகவ்வோ ஒருகணம் பதறித்தான் போனான்..!தற்காலிக பிரிவையே தாங்கமுடியாதவன் தன்னவளின் ஒதுக்கத்தை தாங்கிடுவானா…? பார்க்கலாம்…?


தொடரும்…
 
Last edited:
Top