எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மரம் தூவும் மழை-7

@38

Moderator
7


அடுத்து வந்த நாட்களில் கீத்து உடலளவில் சற்று தேறினாள்.. மனதளவில் மிகவும் பலகீனமாக மாறினாள்.தந்தையின் உடல்நிலைக்கு தான் மட்டுமே காரணம் என்று குற்ற உணர்ச்சியில் குறுகினாள்.


ஏற்கனவே காதல் தோல்வி இப்போழுது தந்தையின் நிலமை.. எல்லாம் சேர்த்து மனநோய்க்கு ஆளானாள்.

அவளின் அமைதி யாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்த வில்லை.தூக்கம் தொலைத்தாள்.உணவுகள் சரிவர எடுத்துக்கொள்ளவில்லை.முக்கியமாக அவளை கவனிக்க ஆள் இல்லை.

எதற்கெடுத்தாலும் அழுகை..கார்த்தியும் பெருமாளும் சிவராம்மையே கவனித்துக்கொள்ள கீத்துவை மறந்துவிட்டனர்.அவள் தற்கொலைக்கு முயற்சித்தாள் இப்பொழுது தேறிவிட்டாள் இனி பயமில்லை‌ என்றுதான் நினைத்தனர்.ஆனால் அவள் மனதளவில் நலிந்திருந்ததை கவனிக்கவில்லை..தற்கொலை எண்ணமே மனச்சிதைவால் தான் வரும் என்பது புரியவில்லை.சிவராம் சற்று தேறினார் .. மருத்துவர்கள் கூடிய விரைவில் சர்ஜரி செய்யவேண்டும் என கூறி விட்டனர்.மகளை நினைத்து கவலை கொண்டார்.மகள் மீண்டும் தவறான முடிவை எடுத்துவிட்டால்..?

ஒருவேளை தனக்கே மீண்டும் மாரடைப்பு வந்து மீளாமல் போய்‌ விட்டால்..?இப்படி பல விதமாக கற்பனை செய்தார்.


கடைசியில் நண்பனின் உதவியை நாடினார்.


பெருமாள் என் பெண்ணை நினைத்து எனக்கு ரொம்ப பயமாயிருக்கு.அவ மறுபடியும் ஏதாவது பண்ணிப்பாளோன்னு.


டாக்டர் வேற என்கிட்ட அவளை பற்றி எதுவுமே பேச மாட்டேங்கிறாரு. நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன்னு நினைக்கிறேன் என் மனைவி தவறும் பொழுது என் குழந்தைக்கு வெறும் ஆறு மாசம் தான் எல்லாருமே என்னை மறு கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்தினாங்க என் வாழ்க்கைக்கு என் மகளே போதும்னு சொந்தபந்தம் எல்லாரையும் ஒதுக்கி வைத்துவிட்டு இத்தனை வருஷம் தனியாக வாழ்ந்துட்டேன் .


அதனாலதான் இன்னைக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சொந்த பந்தம் யாரும் இல்லாம தனித்து போயிட்டோம்.உன் மகன் மட்டும் சரியான நேரத்தில் வரலனா நாங்க இப்போ இல்லை.


நான் போறதை பற்றி எனக்கு கவலை இல்லை ஆனா என் மகள் என்ன பாவம் செய்தா.அவள் ஏன் உலகை விட்டு போகனும்..சிலதை யோசித்தாலே ரொம்ப பயமா இருக்கு.


என்ன சிவராம் உனக்கு நான் இருக்கும்போது யாருமே இல்லன்னு நீ சொல்லலாமா உன் குரல் சரியில்லை என்பதை வைத்தே எதோ சரி இல்லைன்னு என் மகனை அனுப்பி வச்சேன் .


இப்போ ஒரு இக்கட்டான நிலைமையில் நீ இருக்கிறாய்ன்னு தெரியும் போது உன்னை நான் கைவிடுவேனா உனக்கு நான் இருக்கேன்.


என் குடும்பம் இருக்கு கவலை‌படாத.. சரி உன் மகள் ஏன் இப்படியொரு முடிவை எடுத்தா..? உனக்கு அவளுக்கும் என்ன பிரச்சனை.?.என்னன்னு இப்போ வரைககும் எனக்கு புரியல ஒரு பையனை காதலிக்கிறேன்னு என்கிட்ட சொன்னா சரி பையனை வந்து என்கிட்ட பேச சொல்லுன்னு சொன்னேன் ரொம்ப சந்தோஷமா போனா அங்க என்ன பேசிக்கிட்டாங்க என்ன நடந்தது எதுவுமே தெரியல வரும்போது அழுதுகிட்டே வந்தா ஒரு மாசமா சரியா சாப்பிடாம என்கிட்ட பேசுவதையே குறைச்சிகிட்டா..நான் தப்பு பண்ணிட்டேன் அப்பா ..நா தப்பு பண்ணிட்டேன்னு சொல்லிட்டு இருந்தா.


என் மக என்னைக்கும் தப்பு பண்ணமாட்டான்னு ஆறுதல் சொன்னேன்.


ரெண்டு நாளா ரூம் விட்டு வெளியே வரலை..மனசு சரியில்லனு உன்கிட்ட பேசிகிட்டே அவ ரூம் போனா கைய வெட்டிகிட்டு கிடக்கறா இன்னும் என்னாத அதை மறக்க முடியல..என் பொண்ணு ரத்தம் அந்த ரூம் ஃபுல்லா அவ வலில எப்படி துடிச்சிருப்பா ஒரு அப்பாவா இருந்தும் என்னால அதை தடுக்க முடியலையே.. நான் இருந்தும் கூட அவ அப்படியொரு முடிவு எடுக்கறான்னா நான் அவளுக்கு முக்கியம் இல்லை தானே என கண்கலங்கினார்.


விடு சிவராம் இனி இது பத்தி நாம பேச வேண்டாம். உன் மகள் பண்ணினதை மறக்க முயற்சி செய் இதை மறுபடியும் மறுபடியும் நாம பேசினா அவ உணர்வுகளை அசிங்க படுத்துவது போல ஆயிடும். நீ எப்போ சர்ஜரி பண்ணிக்க போற எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பண்ணனும்னு டாக்டர் சொல்லி இருக்காங்க.


நான் என் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை தேர்ந்தெடுத்ததுக்கு அப்புறம் தான் சர்ஜரி பண்ணிக்கறது.


இது என்ன முட்டாள்தனம் நீ நல்லா இருந்தா தானே உன் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி கொடுக்க முடியும்.


ஒரு வேளை இந்த சர்ஜரியில் எனக்கு ஏதாவது ஒன்னு ஆயிடுச்சுன்னா என் பொண்ணோட கதி.


இது தேவையில்லாத கற்பனை ஆனா.


தாயில்லாத அப்பனோட கவலை இது.


இப்போ முடிவா நீ என்னதான் சொல்ற.


என் பொண்ணுக்காக ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கற வரைக்கும் நான் சர்ஜரி பண்ணிக்க மாட்டேன்.


சொன்னா கேளு சிவராம் டாக்டர் உனக்கு எவ்வளவு சீக்கிரமா ஆப்ரேஷன் பண்ணறோமோ அந்தளவுக்கு பயம் இல்லைன்னு சொல்லி இருக்காரு புரிஞ்சுக்கோடா உன் நண்பனுக்காக கொஞ்சம் மனசு இறங்குடா.


நீயும் என்னை புரிஞ்சுக்கோ பெருமாள் என்ன கொஞ்ச நேரம் தனியா இருக்க விடு முடிஞ்சா என் பொண்ணு எப்படி இருக்கான்னு பாரு அவளால எழுந்து வர முடியும்னா என்னை வந்து பார்க்க சொல்லுடா..என்றவரிடம் மேற்கொண்டு என்ன பேச கவலையுடன் வெளியே வந்தார்.


ஒரு வாரம் ஆயிற்று மருத்துவமனை வந்து கீர்த்தனாவையும் சிவராமையும் டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள்.


கீர்த்தனாவிற்கு மட்டும்‌ கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என மருத்துவர் பரிந்துரைக்க அதற்காக கீர்த்தனா மருத்துவரை தேடி வந்தாள்.


அவளைப்பற்றிய விஷயங்களை சேகரிக்க மருத்துவர் எவ்வளவோ முயன்றார் கீர்த்தனா வாய் திறந்து எதுவுமே கூறவில்லை.எப்படி எல்லாமோ அவளிடம் இருந்து வார்த்தையை வாங்கி விடலாம் என முயற்சி செய்தார் கடைசியில் பலன் பூஜ்யம்.


ஒரு கட்டத்தில் மருத்துவருக்கு எரிச்சல் உண்டாயிற்று, ஒரு பெண் எந்தளவுக்கு வாழ்க்கையை வெறுத்திருந்தால் தற்கொலையை நாடி இருப்பாள்..அதிலிருந்து மீட்டு கொண்டு வரலாம் என பார்த்தால் அவள் ஒத்துழைக்கவில்லை என்ன செய்வது வேறு வழி என்று அவரது தந்தையிடம் தான் பேசினார்.


சிவராமிற்கு இதயத்தில் பிரச்சனை வந்ததில்லிருந்து பெருமாள் கார்த்தியிடம் கூறிவிட்டார்.


அவனை எங்கேயும் தனியாக அனுப்பக்கூடாது உனது வேலைகள் எல்லாம் சற்று தள்ளி வைத்துவிட்டு அவனுக்கு உறுதுணையாக இரு என்று .அதனால் அவர்கள் எங்காவது செல்வது போல இருந்தால் சிவராம் இவனுக்கு கூப்பிடுவார்.


கார்த்தி தான் இருவரையும் அழைத்துச் செல்வது அப்படித்தான் அன்றும் அழைத்துச் சென்றிருந்தான்.அவங்க மன அழுத்தத்தோட உச்சத்தில் இருக்காங்க அவங்களா அதிலிருந்து மீண்டால் மட்டும்தான் தீர்வு கிடைக்கும் நாங்க மருந்து மாத்திரை தான் கொடுக்க முடியும் ஆனா அதிலிருந்து போராடி வெளிய வர வேண்டியது உங்க பொண்ணோட கைல தான் இருக்கு.


அவங்க ஏதாவது பேசினா கூட என்னனு தீர்வு சொல்லலாம் அவங்க வாயே திறக்கல அவங்களோட மௌனம் தான் எங்களை ரொம்ப பயமுறுத்துகிறது.


இப்போதைக்கு மாத்திரை எழுதி தர்றேன் பதினைந்து நாள் கழித்து கூட்டிட்டு வாங்க அப்போ ஏதாவது பேசறாங்களான்னு முயற்சி செஞ்சு பார்ப்போம் அவங்க மனசுல இன்னும் தற்கொலை எண்ணம் இருக்கான்னு முதல்ல தெரிஞ்சுக்கணும் ஒருவேளை இரு ரந்தது என்றால் மறுபடியும் அவங்க தற்கொலைக்கு முயற்சி செய்யலாம் கூட இருக்கிற நீங்க தான் அவரை பத்திரமா பாத்துக்கணும் டேக் கேர் என அனுப்பி வைத்தார்.இதன் பிறகு சிவராமால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் கவலையில் மீண்டும் அவருக்கு நெஞ்சுவலி வந்தது


மீண்டும் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர் கார்த்தி தான் உடனிருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டது கீத்துவையும் மிகப் பொறுப்பாக பார்த்துக் கொண்டான்.


தகப்பனும் மகளும் மருத்துவமனையில் இருக்க.. அவளை அதட்டி சாப்பிட வைப்பது தூங்க வைப்பது, அவள் வீட்டுக்கு செல்லதென்றால் அழைத்துச் சென்று மீண்டும் கூட்டி வருவது இப்படி ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்தான்.இதை கவனத்த சிவராமின் மனதிற்குள் சிறு ஆசை ஓளிர்ந்தது .இது போல ஒரு பொறுப்பானவனின் கையில் பெண்ணை பிடித்துக் கொடுத்துவிட்டால் நிம்மதியாக நாம் கண் மூடலாமே ஆனால் மகளை திருமணம் செய்வானா ஏற்கனவே காதல் தோல்வி தற்கொலை எப்படி பல கரும்புள்ளிகள் அவள் மீது இருக்கிறதே.


பெருமாள் சிவராமை பார்க்க மருத்துவமனைக்கு வரும் பொழுது ஏதேதோ சுற்றி வளைத்து பேசிக் கொண்டிருந்தார்.


சிவராம் நீ‌ ஏதோ சொல்லணும்னு நினைக்கற.. ஆனா அதை பேச தயங்கி ஏதேதோ உளறிட்டு இருக்க எதுவா இருந்தாலும் வெளிப்படையா பேசே என்றார் .


அது ஒன்னும் இல்ல பெருமாள் போன முறையும் சரி இந்த முறை சரி உன் மகன் எங்களை ரொம்ப நல்லா கவனிச்சிக்கறான்.


என் மகள் கூட அவன் பேச்சை கேட்கறா.

கீர்த்தனா எனக்கு கூட பயப்படுவதில்லை ஆனால் உன் பையனுக்கு பயப்படுறா உன் பையன் முறைச்சா திருப்பி வாயாடறது இல்ல சாப்பிட சொல்லி அதட்டினா சாப்பிடறா. தூங்க சொன்னா தூங்கறா.

என்கிட்ட இல்லாத ஏதோ ஒரு ஆளுமை உன் மகன் கிட்ட இருக்கு.அதுக்கு என் மகள் பணிந்து போறா.இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு ஒரு யோசனை தோணியிருக்கு ஆனா அது எப்படி உன்கிட்ட கேட்கறதுன்னு தான் சிறு தயக்கம்.என முடித்தார்.உன் மகளுக்கு என் பையன மாப்பிள்ளை கேக்குறியா என்ன..? பெருமாள் பட்டென்று போட்டு உடைத்தார்.அவர் கேட்ட தோரணை ஏதோ கோபத்தில் கேட்பது போல் இருக்க.. என்னை மன்னிச்சிடு பெருமாள் இது ஒரு ஆசையில கேட்டது வித்தியாசமா நினைச்சு என் நட்பை மட்டும் முறிச்சுக்காத வாழ்க்கையில் என் மகளுக்கு அப்புறம் எனக்கு இருக்கற ஒரே பிடிப்பு நீ மட்டும் தான்.


டேய் இதை நீ உரிமையா கேட்கணுமேடா ..என் பொண்ணை உன் வீட்டுக்கு மருமகளாக கூட்டிட்டு போடான்னு எதுக்குடா இப்படி தயங்குற என்ன உரிமையாக கண்டித்தவர்.நானும் கவனிச்சுட்டு தான் இருக்கேன் என் பையனுக்கும் உன் பொண்ணு மேல ஏதோ ஒரு அன்பு இருக்கு அதனால தான் அவன் இந்த அளவுக்கு உங்களை கவனிச்சிக்கறான்.. அதேபோல உன் மகளுக்கும் ஏதோ ஒரு வகையில என் பையன் மீது ஒரு பிடிப்பு இருக்கு என்னால அதையும் புரிஞ்சிக்க முடியுது.

அவன் எனக்காக எல்லாம் இவ்ளோ அக்கறையா கூட இருந்து பார்த்துக்கற ஆள் கிடையாது .


எதுக்கும் என் பையன் கிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு உனக்கு முடிவை சொல்லறேன்.. நாம நினைத்தது மட்டும் நடந்துருச்சுன்னா அடுத்த முகூர்த்தத்தில் சிம்பிளா இதே சென்னையில வச்சு கல்யாணத்தை பண்ணிட்டு தான் நான் ஊருக்கு போறது என்று முடிவாக கூறிவிட்டார்.


பெரியவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல கார்த்திக்கு கீத்துவின் மீது அன்பும் கிடையாது அக்கறையும் கிடையாது சொல்லப்போனால் அவளைப் பார்த்தாலே அவனுக்கு எரிச்சலாக தான் இருக்கும்.


இவள் செய்த முட்டாள்தனத்தால் அவனும் அல்லவா சேர்ந்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறான்.அந்தக் கோபத்தில் தான் அவ்வப்போது அவளை அதட்டுவதும் மிரட்டுவதும் முறைத்து வைப்பதும்.அதேபோல்தான் கீத்துவுக்கும் அவன் மீது பயம் எல்லாம் ஒன்றும் கிடையாது தான் செய்த தவறால் தந்தை பாதிக்கப்பட்டு விட்டாரே ஒரு முறைக்கு இருமுறை மருத்துவமனையில் சேர்க்கும்படி ஆயிற்று நல்ல தேக ஆரோக்கியத்தோடு இருந்தவரை ஆபரேஷன் செய்யும் அளவிற்கு கொண்டு வந்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் மட்டுமே அவனிடம் அடங்கிப் போய்க் கொண்டிருக்கிறாள் இல்லை என்றால் அவனை எல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டாள்.


இவர்கள் இருவரையும் தான் வாழ்க்கையில் ஒன்று சேர்த்து வைப்பது பற்றி பெரியவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.
 
Top