எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அகத்திரை திறவாயோ - பாகம் 11

NNK-41

Moderator

அத்தியாயம் 11​

“கோபம் அறிவுக்கு சத்துரு” என்று அவள் சொன்னதும் மாறனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. என்ன செய்ய அவனும் தன் முன்கோபத்தை அடக்கி வைக்கதான் பார்க்கிறான். அது என்னமோ இனியாழின் விஷயத்தில் அடங்க மறுக்கிறது. வசந்தனைப்பற்றி அவன் நன்கு அறிவான்… ஆனால் இனியாழ் அவனிடம் உரிமையுடன் பேசுவது தனக்குள் பொறாமை தீயை கொழுந்துவிட்டு எரிய வைக்கிறதே. அவனும் என்னதான் செய்வான் தன்னிடம் காட்டும் ஒதுக்கமும் அவனிடம் காட்டும் நெருக்கமும் அவனை தகிக்க செய்கிறது.​

சற்றுமுன் கோபத்துடன் முன்னே நடந்தவன் இப்பொழுது அவளுக்கு சமமாக இணைந்து நடந்தான். வசந்தனை பார்வையால் முன்னே செல்ல சொல்ல… அவனும் இனியாழிடம் ஏதோ சொல்லி சமாளித்துவிட்டு ஓடிவிட்டான்.​

“பாரதியார் கவிதைகள் படித்திருக்கிறாயா இனியாழ்” என்று மாறன் கேட்க​

“ம்ம்… படிச்சிருக்கேன்” என்றாள் மென்மையாக​

“ரௌத்திரம் பழகு என்று அவரே சொல்லியிருக்கிறார். கோபப்படுவது தவறல்ல” என்றான்​

“அநீதிக்கு குரல் கொடுக்கத்தான் ரௌத்திரம் பழகு என்று சொன்னார். அதை நான் தவறு என்று சொல்லல ஆனா தொட்டதுக்கெல்லாம் கோபப்படுவது சில நேரத்தில மத்தவங்க மனசை காயப்படுத்தும். அதைதான் சொல்ல வந்தேன்” என்றாள் மென்மையாக.​

“தொட்டதுக்கு எல்லாமா? தொடவே இல்லை அதனால்தான் கோபம் வருது. தொட்டால்… நான் மெழுகாய் கரைஞ்சிடுவேன் இனியாழ்…” என்று அவன் உருக…​

என்ன!! இவன் என்ன சொல்ல வருகிறான்? இப்படி எல்லாம் பேசினால் எப்படி பதில் சொல்ல? தொடனுமாமே! யாரை?​

‘அருகில் இருப்பது நீதானடி’ என்று மனசாட்சி இடித்துரைக்க… சக்கரை பாகில் நனைந்தது இனியாழின் நெஞ்சம். கன்னம் சூடேர தலையை குனிந்துக்கொண்டாள்.​

“புல்தடுக்கி விழுந்திடுவனு உனக்கு அச்சமா?” காதோரமாய் அவன் குரல் கேட்க… ஒன்றும் புரியாமல் அவன் முகம் பார்த்தாள் இனியாழ். ஒரு அடி தூரத்தில் அவன் முகம். தொட இலகுவாக அவள் அருகில். மஞ்சள் தேகம் செங்காந்தளானது.​

“ஆங் இப்போ சரி. என் முகத்தை பாரு இனியாழ். புல்லிடம் பேச்சு வார்த்தை எதற்கு?” புருவம் உயர்த்தினான். வார்த்தைகளால் அவளை கொள்ளையிட முயன்றான். அவனின் பழுப்பு விழிகளை சந்திக்க முடியாமல் பார்வையை தாழ்த்திக்கொண்டாள். பழுப்பு விழிகள் அவளை பழுக்க வைத்தனவோ… செம்மையானது அவள் முகம். மனம் தில்லானா பாட… திருதிருத்தாள். இதுதான் திருதிரு தில்லானாவோ… அதற்கு மேல் அவன் அருகாமையில் நிற்க முடியாமல் விலகி நடந்தாள். நிழலாக அவன் தொடர்ந்தான்.​

எத்தனை மெதுவாக நடந்தாலும் சேர வேண்டிய இடம் வந்துவிட உள்ளே நுழைய முற்பட்டனர் இருவரும். இன்னும் கொஞ்ச நேரம் அவளுடனான தனிமை தேவைப்பட்டது மாறனுக்கு. காதல் கொண்ட மனங்களுக்கு ஒரு நாள் கிடைத்தாலும் போதும் என்று சொல்ல வருமா என்ன? மாறனுக்கே மாறன் அம்பு விட்டதால் அவளை விட அவன் விரும்பவில்லை. அம்பு விட்ட இடம் அடம் பிடித்தது.​

செல்லாதே என்று அவன் சொல்ல நினைக்க… “வந்துட்டீங்களா டீச்சர் மேடம். உங்களுக்காகதான் காத்திருக்காங்க” என்று வசந்தன் நடுவில் நுழைய… மறுபடியும் கரடியாய் நுழைந்தவனை முறைத்தான் மாறன்.​

மாறன் வாசலில் தங்கிவிட அவனை பார்த்து தலையசைப்புடன் உள்ளே நுழைந்துவிட்டாள் மலர். உள்ளமைப்பு பள்ளிக்கூடம் போலில்லாமல் குடியிருக்கும் வீடுபோல் வடிவமைக்கப்பட்டிருந்தது.​

ஏனோ அந்த இடம் எப்பொழுதோ எங்கேயோ பார்த்ததுபோல் தோன்ற… எப்பொழுதும் குழப்பமுறும் மனம் இன்று ஆழ்கடல் அமைதியானது.​

“வெல்கம் டீச்சர்” என்ற குரல் கேட்டு திரும்பியவளின் கண்கள் பெரிதாக விரிந்தன.​

**********​

“கிளம்பலாமா ஸார்?” என்ற வசந்தனை முறைத்த மாறன்​

“ஏன்டா எப்போதும் என் வாழ்க்கையில கரடியாவே வந்து தொலைக்கிற!!” என்று வசந்தனை சாட… சுற்றும் முற்றும் பார்த்த வசந்தன்​

“இப்போ என்ன ஆச்சுனு ஸாரு இப்படி சலிச்சிக்கிறீங்க?”​

“ஏன்டா சொல்ல மாட்ட!! ஒவ்வொரு தடவையும் அவ என்னை நெருங்கி வரப்ப கரடி மாதிரி என்ட்ரி கொடுத்துட்டு பேச்ச பாரு!!” கடுப்பானான் மாறன்​

“நீங்க அவங்களை இங்கு கூட்டி வந்ததன் நோக்கம் என்னனு ஞாபகம் இருக்கா?”​

“அது… வந்து… ப்ச்! போடா!!” பதில் சொல்ல முடியாமல் அலுத்துக்கொண்டான் மாறன்​

“நீங்க போக சொன்னா போயிடுவேனா என்ன? முதல்ல இந்த முன்கோபத்தையும் அவசரப்படுறதையும் கொஞ்சம் குறைச்சிக்குங்க!”​

“டேய் உண்மையில நான் ரொம்ப மாறிட்டேன்டா!!”​

“முழுசா மாறல”​

“ப்ச்!! சட்டென என் இயல்ப மாத்திக்க முடியல நான் என்ன பண்ண?”​

“யார் சொன்னா உங்க இயல்பு இதுதான்னு. இது நீங்களா உங்களுக்கு போட்டுக்கிட்ட மாஸ்க். இது ஒன்னும் பிஸ்னஸ் இல்ல நான் இப்படித்தான் இருப்பேன்னு சாதிக்கிறதுக்கு. உங்க வாழ்க்கை… அதுவும் கைவிட்டுப்போன வாழ்க்கையை சரிபடுத்துக்கிறதுக்காக கடவுள் உங்களுக்கு இன்னொரு சான்ஸ் கொடுத்திருக்காரு. அதை சரியா அமைச்சிக்கிறது உங்க கையில…​

“டேய் ஏன்டா அட்வைஸ் பண்ணி கொல்லுற!” வசந்தன் சொல்வது தன் நலம் கருதியென புரிந்தாலும் காதல் கொண்ட மனது அவளது அருகாமையில் தடுமாறுகிறதே… தடுக்கமுடியாமல் அவனே அவதியில் இருக்க… இவன் சொல்லி காட்டவும் மாறனுக்கு மண்டை காய்ந்தது​

“தோ பாருங்க ண்ணா… அவங்க நினைவுகளை தூசி தட்டி எடுக்கனும் என்கிறது அவ்வளவு சுலபமான விஷயமில்ல… மெதுமெதுவாக செய்ய வேண்டியது. அவசரப்பட்டா நினைவுகள் மொத்தமா அழிஞ்சிடும். அதனால உங்க இயல்பு மண்ணாங்கட்டி எல்லாத்தையும் மூட்டைக்கட்டி தூர வீசிடுங்க!! இங்கே… இப்போ… நீங்க அவங்களுக்கு அன்னியன். புரியுதா?”​

“வாசு…”​

“ஆமா… உங்க தம்பி வாசுதான்… அதே கரடி வாசுதான் சொல்லுறேன். வாசு… வாசுனு என்னை சுத்தி வந்தவங்களை… ப்ச்!! மறக்க முடியல ண்ணா. அவங்க நினைவு திரும்பனும். அந்த நினைவு சுகமான நினைவுகளா வரதுக்கு அவகாசம் வேண்டும். அது எங்கே கிடைக்குமோ எப்படி கிடைக்குமோ எதனால் கிடக்குமோ அப்படி கொண்டு வரனும்” வசந்தன் என்ற வாசு உணர்ச்சிவசப்பட​

“அவ என் பக்கத்தில இருக்கும்போது எல்லாத்தையும் மறந்திடுறேன் டா. இந்த பங்களாவை பார்த்ததும் அவ கண்ணுல வந்த வெளிச்சம் இருக்கே… அதை பார்த்ததும் கொஞ்சம் சாதிச்சிட்டேன்னு மனசு துள்ளிடிச்சி… அதனாலதான்…” தயங்கினான் மாறன்​

“அதனால… ரொமான்ஸ் பண்ண பார்த்தீங்களாக்கும்?”​

“டேய் அப்படிலாம் இல்லடா!!” என்று மறுத்த மாறன், வசந்தன் பார்த்த பார்வையில் “அது வந்து… ஆமாடா… அவ என் பக்கத்துல வந்ததும் நான் என்னையே மறந்துடறேன்… நானும் அவளும்… கூடவே சொர்கம்போல இருக்கும் இந்த இயற்கையும் என்னை ஒரு மாய உலகுக்கு கூட்டிட்டு போயிடுச்சி” மாறன் ரசித்து சொல்ல​

“சரிதான்… இப்போ இந்தளவு உருகிற இந்த காதலெல்லாம் ஏண்ணே அப்போ உங்ககிட்ட வரல? ஏன் அப்படி நடந்துக்கிட்டீங்க?” இயலாமையில் கேட்டுவிட்டான் வாசு. அண்ணன் மனவலி உணர்ந்தவன். ஆனாலும் நடந்த குழப்பங்களுக்கு காரணகர்த்தா தன் அண்ணன்தான் என்பதால் அவ்வப்பொழுது வார்த்தைகளால் காயப்படுத்தி விடுகிறான்.​

பணக்கார குடும்பத்து மூத்த வாரிசு… தான் செய்ததுதான் சரி என்று நினைப்பவன். அவன் தொழிலிலும் அவன் சொன்னதுதான் சரியாக வந்தது. நுனுக்கமான அவனின் சிந்தனைகள் மூலம் தொழிலும் நல்ல முன்னேறமடைந்தது. அவன் வாழ்க்கையில் மனம் பெரும்பங்கு வகித்தது.​

ஆனால் ஆன்மாவில் இருந்து இந்த மனம் வேறுபட்டது. உடம்பில் இருந்து இந்த மனம் வேறுபட்டது. இந்த மனதை எவ்வளவுக்களவு நம் கைக்குள் வைத்துக்கொள்கிறோமோ அவ்வளவுக்களவு நமக்கு அடங்கி இருக்கும்.​

என்று நாம் அதன் பின்னால் சென்று அதற்கு அடிமையாகிறோமோ அன்று அது நம்மை ஆட்கொண்டு நமது யோசிக்கும் தன்மையை அழித்துவிடும். அப்படிதான் ஆனது மாறனின் வாழ்க்கையும்.​

முதன் முதலாக மலரினியாழை தவறாக கணித்தான். அதன்பின் அவன் செய்த தவறுகளைதான் வாசுவால் ஏற்க முடியவில்லை. மூத்தவன் சொல் ஏற்று நடக்கும் பாரம்பரியம் கொண்ட குடும்பம். அவன் தவறுகளை கணிக்க தவறினர். விளைவு மாறன் வாழ்வில் பேரிழப்பு ஒன்றை சந்திக்க விளைந்தது.​

தவறுகள் செய்தவன் உண்மை உணர்ந்த தருணம்… அப்பப்பா!!! இதோ தன் அண்ணன் வாழ்வை செப்பனிட தம்பி தோள் கொடுக்க வந்துவிட்டான். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் போல மலரினியாழுடன் தன் வாழ்வை இணைக்க வந்துவிட்டான் மாறன். தம்பியின் துணையுடன்.​

வாசு கேட்ட கேள்வியில் உள்ள உண்மையின் ஆழத்தில் சுழன்றுக்கொண்டிருந்தான் மாறன். ஒவ்வொன்றாய் நினைக்க மனம் வலித்தது. வலிக்கட்டும் அன்று அவளுக்கும் அப்படித்தானே வலித்திருக்கும். வலியை ஏற்றுக்கொள்கிறேன். இத்தனை வலிகள் ஊடே… குற்ற உணர்வுகள் மீறி எப்படி என்னால் அவளிடம் காதல் புரிய முடிகிறது?​

என்னை ரசிக்கிறாள்… என் பார்வைக்கு பதில் பார்வை பார்க்கிறாள். அதுவே நான் யாரென்று அவளுக்கு தெரிந்தால் அவளால் இந்த பார்வை எல்லாம் பார்க்க முடியுமா? அவள் நினைவு தப்பியதை எனக்கு சாதகமாக எடுத்துக்கொள்கிறேனோ? உண்மைதானே நான் செய்தது அவளின் நினைவு பெட்டகத்தில் இருந்திருந்தால் அவளால் என் சரச பேச்சுக்கு இணையாக கன்னம் சிவக்க முடியுமா?​

ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவன் எப்படி காரில் ஏறினான்… எந்த நிமிடம் வீட்டுக்கு வந்து சேர்ந்தான் என்றெல்லாம் அவனுக்கு தெரியவில்லை. அவன் மனம் இப்பொழுது அவளை முதன் முதலாக சந்தித்த அன்று சென்றுவிட்டது.​

*******************​

இலக்கியா அறிமுகப்படுத்தியவளை ஆழப்பார்த்தேன். ஏனென்றால் இலக்கியா யாரையும் சட்டென வீட்டுக்கு அழைத்து வர மாட்டாள். இது என்ன புது பழக்கம் என்ற அதிருப்தியுடனும் அதிலும் இவளிடம் என்ன இருக்கிறது என்ற நோக்கத்துடன் அவளை பார்க்க… அவள் பேரழகியாய் இருந்தாள். அவளின் பெயரை கேட்டதும் இனித்தது. ஏதோ இனியாழாமே… அதான் இனித்ததோ? பாந்தமாக புடவையணிந்திருந்தாள். நாட் பேட் சிம்பிளா அழகா இருந்தாள். அழகு இருக்கும் இடத்தில் மமதை இருக்குமே. ஹ… நான் பார்க்காத பெண்களா என்று நினைத்து சிரித்துக்கொண்டேன்.​

என்னை அவளிடம் அறிமுகப்படுத்தி அவளை ஆராய்ந்தேன். என்ன இப்படி பார்க்கிறா? பார்வையால் விழுங்கிடுவா போலிருக்கே. கண்கள் என்னமோ அழகாதான் இருக்கு ஆனா அதை வச்சி மயக்க பார்க்குறது எல்லாம் ஓவர். இந்த சின்னப்பெண்ணுக்குள் எத்தனை கேவலமான எண்ணம்! ஹ இந்த மயக்குற டிராமா எல்லாம் என்னிடம் நடக்காது பெண்ணே!​

ரொம்ப அமைதியானவளாமே! அம்மா பாராட்டுறாங்க. அடுத்து கொஞ்ச நேரத்தில் வாசு அவளை பார்த்து மென்மையானவனு சொல்லுறான். இத்தனை நேரம் அவன் சொன்ன ஜோக்குக்கு எல்லாம் சிரிக்காம திருதிருனு முழிச்சிக்கிட்டு இருந்துட்டு அவன் பாராட்டுனது என்னமா சமாளிக்கிறா… ஜகஜால கில்லாடியா இருப்பா போலிருக்கே. கூடாது இவ முகத்திரையை கிழிக்கனும். ஏன் இந்த அவசரம்? தெரியல ஆனா அவ என் தம்பியை மயக்ககூடாது அவ்வளவுதான்.​

வாசு அவள் பெயர்போல் மென்மையாக இருக்கிறாள் என்றதும் தாமதிக்காமல் உண்மையாகவா என்று கேள்வி கேட்டுவிட்டேன். அவள் அதிர்ந்து என்னை பார்த்ததுமே எனக்கு புரிந்து விட்டது. சரியாக மாட்டிக்கொண்டாள் என்று.. ஆனால் என் கேள்விக்கான பதிலை அவள் வாசுவை நோக்கி கைகாட்டியதும் அதிர்ந்து விட்டேன். எப்படி சாமர்த்தியமாக சமாளிக்கிறா!! இவள் சாமர்த்தியமாக எதோ செய்து இலக்கியாவின் நட்பை பெற்றிருக்கிறாள். கோபத்தில் என் கண்கள் சிவந்துவிட்டன.​

நேரடியாக நான் அவளை மடக்க நினைத்து கேள்வி கேட்டதும் ஏதோ காந்தம் எதிர்துருவங்கள் என்றெல்லாம் சொல்லி கைதட்டும் பெற்றுவிட்டாள். அம்மா வேறு வந்து அவளை அணைத்து பெருமை பீற்றிக்கொள்ள எனக்கு கோபம் வந்துவிட்டது. சட்டென அங்கிருந்து நகர்ந்துவிட்டேன். ஆனால் என் செவிபுலன்களை அங்கேயே விட்டுவிட்டு சென்றேன்.​

மயக்கிவிட்டாள் எல்லோரையும் மயக்கி விட்டாள் என்ற கோபம் எனக்குள் கனன்று கொண்டிருந்தது. பிறகு அவளை நான் பார்க்கவில்லை. ஃபாக்டரியிலிருந்து அவசர அழைப்பு வர… வீட்டிலிருப்பவர்களிடம் சொல்லிவிட்டு சென்று கொண்டிருக்கையில் அவளை மறுபடியும் பார்த்தேன்.​

யாருமற்ற சாலையில் கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தாள். அவளின் கண்ணீர் என்னை என்னவோ செய்தது. பாவம் சிறுப்பெண் அல்லவா… தவித்துவிட்டாள் போலும்.​

முகம் முழுதும் கண்ணீர் தடம். துடைத்ததில் ஆங்காங்கு மை அப்பியிருக்க கலைந்த ஓவியம் போலிருந்தாள். அந்த நிலையிலும் அவள் அழகு ஈர்த்த்து போலும். அலங்கார பூச்சிக்கு அவள் சொன்ன விளக்கம் சிரிப்பை வர வழைத்தது. பிறகுதான் நான் சிரித்தது தவறோ என்று நினைக்க வைத்துவிட்டாள்.​

இந்த கார் பயணம் அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். என் சிரிப்பு அழகாக இருக்கிறதாம்… அதை அவள் மிகவும் ரசிக்கிறாளாம். ச்சே!! என்ன பெண்ணிவள்? இடத்தை கொடுத்தாள் மடத்தை பிடிக்க வருகிறாளே!!​

ஓரு வசதியுள்ளவன் கொஞ்சம் சிரித்துவிட்டால் போதுமே… உடனே அவனை புகழ்ந்து மயக்க பார்ப்பது. இந்த சின்ன வயதில் இத்தனை வக்கிர புத்தியா இவளுக்கு!!​

என மனதில் உள்ளதை எல்லாம் அவளிடம் சொல்லி நன்றாக கொடுத்துவிட்டேன். முதலில் புரியாததுபோல் பாவ்லா காட்டிவிட்டு பின்பு தலை குனிந்துக்கொண்டாள். குற்ற உணர்ச்சி வந்துவிட்டது போலும். அனுபவிக்கட்டும். போகும் பொழுது ஒரு நன்றிகூட சொல்ல வில்லை. திமிர் பிடித்தவள்.​

இத்தோடு முடிந்துவிட்டது என்று நினைத்தால் மறுநாள் அவசர அவசரமாக ஹாஸ்டலுக்கு அம்மா கிளம்ப ஏதோ எனக்குள் ஒரு பொறி தட்டியது. நேற்று நான் சொன்னதை ஒன்றுக்கு இரண்டாக பத்தவைக்க நினைக்கிறாள் போலும்… கூடாது அவளின் சாகச நாடகத்தை உடனே உடைத்தெடுக்கும் வேகம் என்னுள். முக்கியமான மீட்டிங்கை தள்ளி வைத்துவிட்டு அம்மாவுடன் கிளம்பினேன்.​

அலுவலக அறையில் கடுப்புடன் அவளுக்காக காத்திருக்க… அவள் இலக்கியாவுடன் நடந்து வருவதை உணர்ந்ததும் அவளை ஆராய்ந்தேன். அவள் நிலைகண்டு சற்று தடுமாறிதான் போனேன். இரவு முழுதும் அழுதாளோ கண்கள் தங்கமீன் போல வீங்கியிருக்க… முகம் பொலிவில்லாமல் சிவந்திருந்தது. தவறு செய்துவிட்டேனோ இல்லை அவள் நாடகத்தில் இதுவும் ஒரு அங்கமா? மனம் குழம்பியது.​

அம்மா அவளை அழைக்க அவள் மறுத்ததும் சட்டென எழுந்து அவள் கரம் பிடித்து இழுத்தேன்… அதிர்ந்து போனேன். கையை பிடித்தேனா இல்லை தீக்கங்கை பிடித்தேனா என்ற அதிர்ச்சி. சட்டென நான் அவளை திரும்பி பார்க்க… அவள் மயங்கி சரிந்திருந்தாள்.​

அவளை அள்ளிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன். குற்ற உணர்வு என் மனதை சில்லு சில்லாக உடைத்து கொன்று கொண்டிருந்தது. சின்னபெண் என்றும் பாராமல் வார்த்தைகளை கொட்டிவிட்டேனோ? கண்ணாடி வழியே அவளை பார்த்தேன். பிய்த்துபோட்ட கொடிபோல் வாடிக்கிடந்தாள்.​

பின்பு ஏன் என்னை ரசித்தாள்? என்னுடன் பழகுவதை விரும்புவதாக சொன்னாளே? குழப்பத்துடன் வீடு திரும்பினேன். அதன்பிறகு அவள் பக்கம் நான் செல்லவில்லை. வேலை என்னை இழுத்துக்கொண்டது.​

மூன்று நாட்கள் கழித்து நேரத்தோடு வீடு திரும்பினேன். சுத்தம் படுத்திவிட்டு சாப்பிட அமர்ந்தேன். அம்மா தயக்கத்துடன் என்னை பார்த்தார். என்னவாக இருக்கும் என்ற சிந்தனையுடன் சாப்பிட ஆரம்பித்தேன்.​

சமையல்காரியையும் மற்ற வேலை செய்பவர்களையும் உள்ளே அனுப்பியவரை பார்த்தேன். ஏதாவது முக்கியமான விஷயங்கள் பேசும்பொழுது அம்மா இப்படி செய்வதுண்டு. இப்பொழுது என்ன என்ற பாவனையுடன் நான் அம்மாவை நோக்கினேன்.​

“அந்த மலரை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன் ஆதி.. ரொம்ப அனிமிக்கா இருக்கா…”​

“யாரு மலர்? வேலை செய்றவங்களோட பொண்ணா? அவங்களுக்கு நம்ம வீட்டுக்கு பின்னால் குவாட்டர்ஸ் போல வீடு கட்டி கொடுத்திருக்கோமே?” என்றேன். சத்தியமாக அம்மா யாரை சொல்கிறார் என்று எனக்கு புரியவில்லை.​

“ப்ச்!! என்ன ஆதி நீ? நம்ம இலக்கியாவோட ஃபிரண்ட் மலரை பத்திதான் சொல்லுறேன்” என்றதும் எனக்குள் சிறு அதிர்வு.​

“இனியாழா? வர சம்மதிச்சாளா என்ன?” இனியாழ் என்ற பெயர் மனதில் பதிந்துவிட்டதோ? சாப்பிட்டுக்கொண்டே நான் கேட்க​

“முதல்ல முரண்டு பிடிச்சா அப்புறம் வாசு என்னவோ சொன்னதும் அமைதியா வந்துட்டா”​

“ஓ.. வாசு பேச்சு மட்டும் கேட்பாளாமா?”​

“ஆமாம் ஆதி… அது என்னமோ ரெண்டு பேருக்கும் நல்லா ஒத்து போகுது. இப்போகூட அவனுடன் தான் பேசிக்கிட்டு இருக்கா. ரொம்ப நல்ல பொண்ணு பா” அம்மா சொல்லிக்கொண்டே செல்ல அதற்குமேல் என்னால் உண்ணமுடியவில்லை. ஏதோ ஒருவித எரிச்சல் உண்டானது.​

எரிச்சலின் உச்சம் அன்றிரவு அவளை சந்தித்தேன்.​

 

NNK-41

Moderator
என்ன இழப்பு???... என்ன செய்ய போறான்னு தெரிலையே!!...
என்ன சொல்ல:(இவன் சரியில்ல டியர். அந்த இழப்பு.... சீக்கிரம் தெரிய வந்திடும் டியர்
 

NNK-41

Moderator
இதுக்கு பேரு possesive டா பொச கெட்ட பயலே
இதை அவன் மண்டையில் ஆணி அடிச்சி சொல்ல யாரும் இல்லாம போய்ட்டாங்க டியர். இது அதை புரிஞ்சிக்காம சுத்திக்கிட்டு இருக்கு :sneaky:
:sneaky::sneaky:
 

kalai karthi

Well-known member
ஆதி பார்த்தவுடன் பிடித்து போனதால் வந்த வினை. வாசு அதனால் பதறுகிறானா?அண்ணா இல்லை என்று. வாசுவை பழகிய மனம் மறக்க வில்லை போல
 

kalai karthi

Well-known member
இதை அவன் மண்டையில் ஆணி அடிச்சி சொல்ல யாரும் இல்லாம போய்ட்டாங்க டியர். இது அதை புரிஞ்சிக்காம சுத்திக்கிட்டு இருக்கு :sneaky:
:sneaky::sneaky:
உங்கள் ஹீரோ தானே.
 

NNK-41

Moderator
ஆதி பார்த்தவுடன் பிடித்து போனதால் வந்த வினை. வாசு அதனால் பதறுகிறானா?அண்ணா இல்லை என்று. வாசுவை பழகிய மனம் மறக்க வில்லை போல
அவனுக்கு பிடிச்சாலும் ஒத்துக்க மாட்டான். ஆமாம்... சரியா சொன்னீங்க... வாசு ரொம்ப நல்லவன் அண்ணன் போல இல்ல:)
:)
 

Saranyakumar

Active member
வாசுதான் வசந்தனா அதுதான் அண்ணான்னு சொன்ன அலருறானா🤣🤣🤣ஆதி என்னதான் பண்ணி வச்சன்
 

NNK-41

Moderator
வாசுதான் வசந்தனா அதுதான் அண்ணான்னு சொன்ன அலருறானா🤣🤣🤣ஆதி என்னதான் பண்ணி வச்சன்
ஆமா கொழுந்தனை அண்ணானு கூப்பிட்டா அவனால புறுக்கமுடியுமா... அதான் அலறுறான் டியர் 🤣பெருசா பண்ணுவான்:cool:
 
Top