எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாயனே 16 - கதை திரி

NNK-82

Moderator

மாயனே 16​

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த இன்பாவை குலுக்கி எழுப்பிக் கொண்டிருந்தாள் நிலா.​

"என்ன டி.." சலிப்பாக கேட்டான்.​

"எழுந்துரு இன்பா.." என்று அவனை அமர வைத்தவள், தன் கையில் இருந்த பொருளை காட்ட,​

உறக்க கலக்கத்தில் எழுந்த அமர்ந்தவன் கண்கள் இரண்டும் சுழற்றிக் கொண்டு வர அரை அளவு இமை திறந்து அவள் கையில் இருந்த பொருளை பார்த்தவன் "இத காட்ட தான் எழுப்பினியா??" என்று மீண்டும் தலையோடு போர்த்திக் கொண்டு படுத்தான்.​

கடுப்பான நிலா "எழுந்திரிங்க" என்று குழுக்க "நிலா.. இன்னைக்கு சண்டே டி. என்ன தூங்க விடு. ஏன் டி இப்படி காலங்காத்தால உயிரை வாங்குற" எரிச்சலில் அவன் கத்த "தூக்கம் முக்கியமா? நான் சொல்ற விஷயம் முக்கியமா? முதல்ல இத பாருங்க" என்று காட்ட "என்னது இது?" என்று நன்றாக கண் திறந்து பார்த்தான்.​

என்னவென்று தெரியாமல் அவன் பார்த்துக் கொண்டிருக்க அவளோ நாண சிவப்பில் செந்தாமரையாய் சிவந்திருந்தாள். நிமிர்ந்து அவளை பார்த்தவனிடம் "ரெண்டு கோடு வந்திருக்கு" என்றாள் மகிழ்ச்சியாக.​

அவன் உணர்வே காட்டாமல் இருக்க, "இது என்னன்னு உங்களுக்கு தெரியலையா?" என்று கேட்டாள்.​

"எனக்கு தெரியலையே! இது என்னது? என்று அவன் மறுபடியும் கேட்க முறைத்தாள் நிலா.​

" நான் தூங்கிட்டு இருந்தேன். தூங்கிட்டு இருந்த என்னை எழுப்பி உக்கார வச்சு இது என்ன? அது என்னன்னு? கேக்குறியே உனக்கே நல்லா இருக்கா டீ? ராத்திரில தான் தூங்க விட மாட்டேங்குற, காலையில தூங்கலாம்னு பாத்தா சீக்கிரமா எழுப்பி தொல்லை பண்ற டி" இரவு மனைவி செய்த லீலைகளில் உறக்கம் தொலைத்து மூழ்கி இருந்தவன் இப்பொழுது அவளை குறைப்பட்டு கொள்ள, இடுப்பில் கை வைத்து இமை சுருக்கி முறைத்தாள்.​

அவள் முறைப்பதை பார்த்து "நான் விளையாடல. நெஜமாவே இது என்னன்னு எனக்கு தெரியல டி" என்று இது அவள் கொடுத்த பிரக்னன்சி கிட்ட எடுத்து திருப்பி திருப்பி பார்த்தான். அவனுக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது என்று எடுத்துரைத்தது அவன் முகபாவம்.​

"இது என்னன்னு தெரியல. ஆனா ஒரு பிள்ளைக்கு தகப்பனாக போறே" என்று முறைக்க, "பிள்ளைக்கு தகப்பனாகரத்துக் இத பத்தி ஏன் தெரிஞ்சு வச்சிருக்கனும்?? போடி அங்கிட்டு" என்று மீண்டும் படுக்கையில் விழுந்தவனை முளைத்தவள் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டாள்.​

தெரியாத மாதிரி நடிக்கிறானோ என்ற யோசனையுடம் சுற்றி சுற்றி வந்தவள் தன் மணி வயிற்றை வருடினாள்.​

"செல்ல குட்டி உங்க அப்பாவுக்கு நீ இருக்கிறது இன்னும் புரியலடி. நான் சொல்லியும் உங்க அப்பாவால புரிஞ்சிக்க முடியல. சின்னதா ஒரு கேம் விளையாடலாமா உங்க அப்பா கிட்ட? என்று கேட்டவள், "என்ன பண்ணலாம்னா நீங்க இருக்கீங்கன்னு அவனுக்கு உணர்த்த வேண்டும். அதுக்காக டிபனுக்கு எல்லாம் குழந்தைங்க சாப்பிட ஐட்டமா செஞ்சு கொடுப்பேன். என்ன சொல்றார்னு பார்க்கலாம்" என்று கிச்சனுக்குள் நுழைந்தவள் குட்டி குட்டி தோசைகள் ஊற்றினாள்.​

மினி இட்டலி செய்து வைத்தாள். ஒரு மணி நேரத்தில் அவன் எழுந்து குளித்து வர அவன் முன் சிரித்து கொண்டு நின்றவளை பார்த்து என்னாச்சு இவளுக்கு?? என்று நினைத்தவன் 'பசிக்குது நிலா" என்றிட "சாப்பாடு ரெடி. சாப்பிடலாம்" வாங்க என்று அழைத்தவள் "மினி இட்டலி, குட்டி தோசை எடுத்து வைக்க" வினோதமாய் பார்த்தான்.​

"என்ன டி இது.. குழந்தைக்கு மாதிரி.." என்று கேட்க "இனிமேல் அப்படிதான்" என்றாள் சூசகமாக. "அப்டினா??" அவன் இன்னும் புரியாமல் கேட்க "எப்படியும் குழந்தை வந்ததுக்கப்புறம் இப்படித்தான் செய்யப் போறேன். அதான் இப்ப இருந்தே பிராக்டிஸ் பண்ணிக்கிறேன்" என்று நானாத்தோடு கூற "அத குழந்தை வரும் போது பாத்துக்கலாம்" என்று உன்பதில் கவனமாக இருந்தான்.​

பக்கத்து வீட்டில் இருந்து ஏதோ புதினா வதக்கும் வாசம் வர, குமட்டி கொண்டு வந்தது நிலாவுக்கு. தட தடவென வேகமாக ஓடினாள். வயிற்றைப் புரட்டிக் கொண்டு வாந்தி எடுத்தாள். அவள் பின்னாலே ஓடிவந்த இன்பா அவள் நெற்றியை பற்றிக்கொள்ள "என்னாச்சு டி.. திடிர்னு வாந்தி எடுக்குற??" அவன் பதற்றமாக கேட்க,​

" தலை சுத்துது" என்றவள் அவன் மீது சரிய, அவளை இடை பற்றி தாங்கினான். அவள் பாதம் தரையில் படாமல் கையில் ஏந்தி கொண்டு ஹாலுக்கு வந்து சோபாவில் அமர வைத்தவன், அவளுக்கு கீழ் மண்டியிட்டு அமர்ந்தான்.​

" என்ன ஆச்சு நிலா? ரொம்ப டல்லா இருக்க.. ஏதாவது பண்ணுதா??" என்று கேட்க உங்களுக்கு, அவனை அழுத்தமாக பார்த்தவள் "நிஜமாகவே எதுவுமே புரியலையா?" உண்மையில் ஏக்கமாகவே கேட்டாள். "என்ன புரியலையா?" அவன் மீண்டும் கேட்க, உப்… என ஊதியவள், அவன் வலிய கரம் எடுத்து தன் மணி வயிற்றில் வைத்து "நான் பிரக்னண்டா இருக்கேன்" என்றாள் இமைகள் படபடக்க, விழிகள் பளபளக்க.​

அவள் கூறியதை அவன் செவி ஏற்று மூளை உணரவே சில நிமிடங்கள் ஆகிப்போனது. குழந்தையா?? என்று கேட்டவன் விழிகளில் அத்தனை அதிர்ச்சி. அவன் குழந்தை என்ற ஒன்றை எதிர்பார்க்கவே இல்லை. பெயருக்கு கிண்டல் பேச்சுக்கு எனக்கு பிள்ளைக்கு பெற்றுக் கொடு என்று கேட்டாலும் அவன் குழந்தையை எதிர்பார்த்து இருக்க வில்லை. அதனால் இந்த ஆனந்த அதிர்ச்சியில் சிலையாக சமைந்து போயிருக்க, அவனை நெற்றியில் முத்தமிட்டு உயிர் பெற வைத்தாள் நிலா.​

"என்ன ஆச்சு உங்களுக்கு சந்தோஷம் இல்லையா??" வருத்தமாக நிலா கேட்க வார்த்தைகள் வரவில்லை அவனுக்கு பேசுவதற்கு. கண்கள் இரண்டும் கரித்துக் கொண்டு வர, கண்ணீருடன் அவளை அணைத்துக் கொண்டான். முதுகு தழுவி இறுக்கி அணைத்துக் கொண்டான். அவன் கண்கள் இருந்து வழிந்த கண்ணீர் அவள் தோளில் சொட்டு சொட்டாய் விழ "இன்பா.. அழறியா??' பதறினாள் அவள்.​

அவளை அசைய விடாமல் அணைத்து கொண்டவன் " கொஞ்ச நேரம் அப்படியே இரு" என்று எதுவும் பேசாமல் அவளை அணைத்துக் கொண்டே இருந்தான். உணர்ச்சி வசத்தில் இருக்கிறான் என்பதை உணர்ந்தவள் அவன் முதுகு தழுவி ஆசுவாசப்படுத்தினான். நிமிடங்கள் கரைய நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தவன் "தேங்க்யூ நிலா" என்றான் நெற்றியில் முத்தமிட்டு. அவளும் அவன் நெற்றியில் முத்தமிட்டு "தேங்க்யூ இன்பா.." என்ன அம்மா ஆக்குனதுக்கு.. " என்று குரும்பாக கண்ணடிக்க சிரித்து விட்டான் இன்பா.​

" ரொம்ப சந்தோஷமா இருக்கு டி. " என்றவன் கரம் அவள் மணி வயிற்றை தடவி கொடுக்க இதமாய் அவன் மார்பில் சாய்ந்தாள்.​

அடுத்து அவள் கர்ப்பமாக இருக்கும் செய்தி பானுமதிக்கும் பிரகாஷ் மாதவிக்கும் தெரியப்படுத்தினர். அவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. செய்தி கேள்விப்பட்ட உடனேயே முதல் வேலையாக அனைவரும் நிலாவை காண ஓடி வந்தனர்.​

நிலா அம்மா, அப்பா, பாட்டி இன்பா தம்பி, தங்கை, தாய் என அனைவரும் வீட்டில் கூடினர். "அம்மாடி, கண்ணு நிலா. செல்லக்குட்டி, பட்டுக்குட்டி, சந்தோஷ படுத்திட்டடா எங்கள.. எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? பிரமோஷன் கொடுத்திருக்கிங்க எல்லாருக்கும்" என்று அவள் கன்னம் வழித்து நெற்றி முட்டி கொஞ்சி தீர்க்க,​

இன்பா ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான். "கர்ப்பமா இருக்கிறதுக்கு அவ்வளவு தூரம் தூக்கி வைத்து அவள கொஞ்சுறவங்க, அதுக்கு காரணமான என்ன கண்டுக்கவே இல்லையே" என்ற ரீதியில் அமர்ந்திருந்தவனிடம் "அண்ணா.." என்று என்று அவள் அருகில் வந்து அமர்ந்தான் சஞ்சீவ்.​

"என்ன பாக்குற ண்ணா??" அவன் கேட்க "ஒன்னும் இல்லடா சும்மா பார்க்கிறேன்" என்று அவன் தோளில் கை போட்டு "என்னைய ஒருத்தனும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க. அத தான் டா பாத்துட்டு இருக்கேன்" என்று கூற "அண்ணி தான் கர்ப்பமா இருக்காங்க. நீயா கர்ப்பமாக இருக்க?" கேலியாக அவன் சொல்ல,​

"ஏன் சொல்ல மாட்ட??" மாட்டேன் என்று அவனைப் பார்த்தவன் மனைவியை பார்க்க, இன்று ஏனோ அவன் விழிகளுக்கு அவள் புதிதாக தெரிந்தாள். தாய்மையின் பூரிப்பும், புன்னகையும் முகத்தில் தவழ்ந்து நெளிந்து ஓட பேரழகியாக தெரிந்தாள் அவன் விழிகளுக்கு.​

இருவரின் மாமியார்களும் நிலாவுக்கு அறிவுரை மழையை பொழிந்து கொண்டிருக்க ஐயோ பாவம் என்பது போல முகத்தை வைத்துக் கொண்ட அமர்ந்திருந்தாள் நிலா. " யாராவது வாங்களேன் என்னை காப்பாத்துங்களேன்" என்று வாய்விட்டு கெஞ்சி கூத்தாடி கத்தாத குறை தான் அவளுக்கு.​

அவள் நிலை கண்ட இன்பா என் பொண்டாட்டிய காப்பாத்த நான் வருவேன் டா என்று அவளிடம் வந்தவன் "லஞ்சுக்கு டைம் ஆச்சு சாப்பாடு ரெடி பண்ணுங்க" என்று கூற இதோ ரெடி பண்றோம் என்று பெண்கள் இருவரும் சமையல் அறைக்குள் நுழைந்து கொள்ள பாட்டியுடன் பேசிக் கொண்டிருந்தாள் நிலா.​

அப்போது இன்பா அருகில் வந்த பிரகாஷ் "என் பொண்ணு சந்தோஷமா வாழனும்னு ஆசைப்பட்டேன். அது இன்னைக்கு நடந்திருச்சு. நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன் இன்பா. இதுக்கப்புறம் உனக்கு பொறுப்புகள் அதிகம். இதுக்கு முன்னாடி நீ விருப்பமில்லாத கணவன். ஆனா இப்போ அப்படி இல்ல. பொண்டாட்டிக்கு நல்ல புருஷனாவும் இருக்கணும், பிறக்க போற குழந்தைக்கு நல்ல அப்பாவாவும் இருக்கணும். அப்பா என்கிற கடமை ரொம்ப பெருசு. அதுக்கு உன்ன நீ தயார் பண்ணிக்கோ" என்று கூற மெல்லிதாய் புன்னகயித்து தலையசைத்தான்.​

இருவரும் பொதுப்படையாக பேசிக் கொண்டிருக்க இடையில் அனுராக் பத்தி இன்று இழுத்தான் இன்பா. "அவனை பற்றி நீ கவலையே படாதே. அனுராக் வெளியில வரவே முடியாது. அவன் வரவும் மாட்டான். அந்த அளவுக்கு அவன் மேல கேஸ் ஸ்ட்ராங்கா இருக்கு. ரெண்டு மூணு தடவ தப்பிச்சு போயிருக்கான். இனிமேல் அவன தப்பிக்க விடமாட்டாங்க. தனி பிரிசன் தான் போட்டு வச்சிருக்காங்க" என்று கூறினார் பிரகாஷ்.​

ஆனால் இன்பாவிற்கு அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஏதோ அவன் மனதில் உறுதி கொண்டே இருந்தது. அதனால நீ இப்போதைக்கு அவனால் எந்த பிரச்சினையும் இல்லை என்று அப்படியே விட்டுவிட்டார். சமைத்து முடித்து மதிய உணவு உண்டு முடித்தவர்கள் மீண்டும் அறிவுரை மழை பொழிய "போதுமா" என்றாள் சலிப்பாக.​

" என்ன போதும் வாயும் வயிறுமா.. இருக்க புள்ள, ரெண்டு உசுரா இருக்க பார்த்து பத்திரமா கவனமா இருக்க வேண்டாமா நிலா?? " என்று மாதவி உசுப்ப "அதெல்லாம் நான் பத்திரமா தான் இருப்பேன். நான் என்ன சின்ன குழந்தையா? டீன் ஏஜ்ல என்ன பிரக்னண்டா இருக்கேன்?" என்று அவள் கேட்க "நீ எவ்ளோ பெரிய புள்ளையானாலும் எனக்கு குழந்தை தான். என் பொண்ண நான் தானே பத்திரமா பாத்துக்கணும்" என்றார்.​

"அப்பா முடியல" என்று அவள் தலையை பிடித்து கொள்ள அனைவரும் சிரித்தனர். மாலை அனைவரும் அங்கிருந்து செல்ல மனைவியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றான் இன்பா. வழக்கமான பரிசோதனைகள் முடிய "பேபி அம்மா ரெண்டு பேரும் நார்மலா இருக்காங்க.. எந்த பிரச்சனையும் இல்ல.. பத்திரமா பாத்துக்கோங்க. கரெக்டான ஏஜ்ல பிரக்னசிங்கறதுனால பெருசா எந்த பிரச்சனை வராது. இருந்தாலும் நீங்களும் கேர்ஃபுல்லா இருங்க. ஒரு மூணு நாலு மாசத்துக்கு கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணுங்க" என்று பொதுப்படையான அறிவுரைகளை வழங்கி மருத்துவர் அனுப்ப வீட்டிற்கு வந்தனர் மதியம் சமைத்து மீதம் இருந்ததை இரவும் உண்டு விட்டு படுத்துக்கொண்டனர்.​

அவள் படுத்திருக்க, அவன் சாய்ந்து அமர்ந்து இருந்தான். அவன் இன்பா மார்பில் முகம் ஏற்ற "என்ன யோசனையை என் இன்பாவுக்கு?" என்றாள் அவன் நாடியில் வளர்ந்து இருந்த தாடி கோதி.​

"என்ன வா??" என்று நினைத்துக் கொண்டவன் "நான் அப்பா" என்றான் சிலாகித்து.​

"ஆமா எவ்வளவு தூரம் கொஞ்சுனீங்க.. அப்போ அப்பா தானே ஆவிங்க.. அப்பா ஆனதற்கு சந்தோஷம் படனும்.. சிரிங்க" என்று இரு விரலால் அவன் இதழை சிரிக்கும்படி விரித்து காட்டினாள்.​

"போடி அழுக அழுகையா வருது" என்று அவளோடு அணைந்து கொண்டவன் "கொஞ்சம் பயமாவும் இருக்கு நிலா" என்றான் கவலையாக. என்ன பயம் என்று கேட்க என்ன "மாதிரி என் புள்ள வந்துடக்கூடாது இல்ல" என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் "உன்னை மாதிரி உன் புள்ள வரக்கூடாது நீ நினைக்கிற அளவுக்கு நீ அவ்ளோ கெட்டவன் இல்ல நண்பா. தேவையில்லாத யோசிக்காத. இப்ப நமக்கு பாப்பா வரப்போகுது சோ ஹேப்பியா இரு" என்று அவனோடு அணைந்து கொள்ள அவனுக்கும் அதுவே சரியேன பட்டது.​

இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு உறங்கிப் போயினர்.​

நாட்கள் நான் எதற்கு காத்திருக்க வேண்டும்? என்ற ரீதியில் அது ஓட,நிலாவிற்கு இது ஐந்தாவது மாதம். வயிறு பூசி முழுகிய வாறு சற்று மேடிட்டு தெரிந்தது. ஆனாலும் அவள் இன்னும் கல்லூரி வேலைக்கு சென்று கொண்டு தான் இருக்கிறாள். "என்னால வீட்டுக்குள்ளே இருக்கவே முடியாது. பைத்தியம் பிடிக்கிற மாதிரி ஆகிரும் ஸ்ட்ரெஸ் ஆகும்.​

நான் டெலிவரி வரைக்கும் கண்டிப்பா வேலைக்கு போறேன் நிறமாசம் ஆனதுக்கு அப்புறம் நான் போல ஓகேவா?" என்றாள் நிலா. அவனுக்கும் அதுவே சரியான பட்டது. அவள் வீட்டில் இருந்தால் சும்மாவும் இருக்க மாட்டாள் என்று உணர்ந்தவன் சரி வேலைக்கு செல்லட்டும் என்று தானே அவளை கல்லூரியில் இறக்கிவிட்டு அழைத்து வந்தான்.​

ஐந்தாவது மாத ஸ்கேனில் குழந்தையின் கை கால் தலை முகம் என காட்ட சிலிர்த்து போனான் ஆடவன். தன் உயிரணுவில் இருக்கும் ஒரு சிறு துணுக்கு தன்னவள் வயிற்றில் விதையாய் விழுந்து விருட்சமாய் வளர்வதை கண்டு பேரானந்தம் அடைந்தான். தன் குழந்தையை சுமக்கும் தன்னவளை மார்பில் தாங்கினான். நிலாவிற்கு வழக்கமான மசக்கை வாந்தி மயக்கம் எதுவும் இல்லாததால் அவளும் ஆரோக்கியமாகவே இருந்தாள்.​

இது இப்படியே செல்ல ஏழாம் மாதம் வளைகாப்பு போட்டு தங்கள் மகளை அழைத்துச் செல்வதாக கூறினார் பிரகாஷ். அதிர்ந்து போனான் இன்பா. "என் பொண்டாட்டியை நான் எந்த காரணத்துக்காகவும் அனுப்ப மாட்டேன்" என்று மல்லுக்கு நின்றான்.​

' நீ யார் அனுப்புறதுக்கு என் பொண்ணுக்கு நான் செய்ய வேண்டிய கடமை. நான் கூட்டிட்டு போவேன்" பிரகாசும் அவனுக்கு இணையாக நிற்க "என்ன மீறி எப்படி கூட்டிட்டு போறீங்க நானும் பாக்குறேன்" என்றான் மீசையை முறுக்கி.​

" நான் தூக்கி வளர்த்த பையன் டா நீ. என்ன எதிர்ப்பியா? " அவர் கேட்க என் பொண்டாட்டிக்காக நான் என்ன வேணா பண்ணுவேன்" என்றான் ஒற்றைப்பருவம் உயர்த்தி. இருவரும் சண்டை இட்டுக்கொண்டதை பார்த்த நிலா தலையிலே அடித்துக் கொண்டாள். ரெண்டு பேரும் முதல்ல அமைதியா இருங்க என்றவள் "அப்பா ஒன்பதாவது மாசம் வளைகாப்பு வச்சுக்கலாம். ஒன்பதாவது மாசம் வீட்டுக்கு வரேன்" என்றாள்​

" நோ நிலா. முடியாது. நான் இப்பவே கூட்டி போவேன். எனக்குன்னு இருக்குறது நீ ஒரு பொண்ணு தான் உன்ன கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவதை விட எனக்கு வேற என்ன இருக்கு? கண்டிப்பா ஏழைம் மாசம் வளைகாப்பு பண்ணனும்.." என்றார் பிரகாஷ்.​

" எப்படி பண்றிங்கன்னு நானும் பாக்குறேன்.. " என்றான் பதிலுக்கு "பாப்ப நல்லா பாப்ப" என்றார்.​

சிறித்தாள் நிலா. " அப்பா நாங்க வந்துட்டா காலேஜ் போக கஷ்டமா இருக்கும் பா. அதனால நான் இங்கேயே இருக்கேன். எட்டாவது மாசம் முடிக்கட்டும். ஒன்பதாவது மாசம் ஸ்டார்டிங்ல வளைகாப்பு போட்டு கூட்டிட்டு போங்கப்பா" என்று அவள் கெஞ்சலாய் கேட்க வேறு வழியின்றி மகளுக்காக சரி என்றார்.​

நிலாவை இன்பா எப்படி தாங்கி தாங்கி பார்த்துக் கொள்வான் என்று அவருக்கு தெரியும். ஆனாலும் அவருக்கு மகள் ஆயிற்றே. மாற்றான் மனைவியாக ஆனாலும், மகள் என்பது மாறாது அல்லவா! நிலாவின் பாதம் பூமியில் படாத அளவுக்கு அவளை தாங்கினான் இன்பா. மூன்று நேரமும் தன் கையாலே சோறு ஊட்டினான். கல்லூரிக்கு செல்லும் நாட்களில் மட்டும் மதியம் உணவு வேலைக்கு போன் செய்து விடுவான். சாப்பிட்டு முடிச்சிட்டு உன் வேலையை பாரு என்று அன்பு கட்டளை இடுவான்.​

அவளும் அவன் கட்டளையை ஏற்றுக் கொண்டு முதலில் உண்டு முடித்துவிட்டு அதன் பிறகு தான் மற்ற வேலைகளை பார்ப்பாள்.​

பழம் சாப்பிடு, சிறுதானியம் சாப்பிடு என்று அவளை சாப்பிட வைத்தே இம்சை செய்தான். அவளும் சலிக்காமல் அவன் கொடுப்பதெல்லாம் உண்ணுவாள். "இந்த அக்கறை அன்பு பாசம் எல்லாம் உங்க பிள்ளைக்காக தானே! எனக்காக இல்லையே!" வழக்கமான மனைவியாக சலித்து கொள்ள "அவனும் ஆமா என் பிள்ளைக்காக தான். 10% என் பிள்ளைக்காக 90% என் பிள்ளையை சுமக்கிற என் பொண்டாட்டிக்காக" என்று கூறுபவனை ரசிக்காமல் இருக்கவும் முடியாது அவளால்.​

எட்டாவது மாத செக்கப்பிற்கு செல்லும் போது கருப்பை வாய் திறந்து இருக்கிறது இனி எப்பொழுது வேண்டுமானாலும் பிரசவம் நடக்கலாம் கவனமாக இருக்குமாறு கூறினார் மருத்துவர். அதன் பிறகு நிலாவை வேலைக்கு அனுப்பவில்லை. இந்த பிரசவகால விடுப்பில் வீட்டிலேயே இருந்தாள். ஒன்பதாவது மாதமும் வந்தது. ஊரே மெச்சும் படி தன் மகளுக்கு வளைகாப்பு செய்து அழைத்து சென்றார் பிரகாஷ்.​

இன்பா வீட்டிலிருந்து நிலாவை அழைத்து சென்று பிரகாஷ் தங்கள் வீடு அடையும் முன் அவர்களுக்கு முன் அங்கு வந்து நின்றான் இன்பா.. "அங்க அனுப்பிட்டு இங்க என்ன பண்றீங்க? " என்று நிலா கேட்க " நீ இல்லாம எனக்கு தூக்கம் வராது கண்ணம்மா.. குழந்தை பிறக்கிற வரைக்கும் நானும் இங்கேயே இருக்கேன்" என்று அவளை கையில் ஏந்தி கொண்டு வீட்டுக்குள் சென்றான்.​

மகள் மருமகனின் அன்னியோன்யத்தை பார்த்து மாதவி பிரகாஷ் இருவருமே மகிழ்ந்தனர். மகனின் வாழ்க்கை சிறக்கும் என்று நம்பிக்கையில் நிம்மதி அடைந்தார் பானுமதி. இரவு தரையில் கால்நீட்டி அமர்ந்திருந்த நிலாவின் பிஞ்சு விரல்களுக்கு நெட்டி எடுத்துக் கொண்டிருந்தான் இன்பா. அவனைப் பார்த்த நிலா "இப்பவாச்சும் உங்க அம்மா கிட்ட பேசலாம்ல்ல" என்று கேட்க "நான் அப்ப சொன்னா சொன்னது தான். என் அப்பா சாவுக்கு காரணமானவன என் கையால கொல்ற வரைக்கும் என் அம்மாகிட்ட நான் பேசமாட்டேன்" என்றான் உறுதியாக.​

அவனைப் பார்த்து அச்சப்பட்ட நிலா "கொலை உணர்ச்சி வேண்டாம். இப்போ நீங்க தனியா இல்ல. என்ன பத்தி எனக்கு கவலை இல்லை. ஆனா நம்ம குழந்தை.." என்ற நிறுத்த தலையை நிமித்தாமல் விழியை மட்டும் நிமிர்த்தி அவளை பார்த்தவன் "என் பொண்டாட்டி புள்ளைய அப்படி எல்லாம் தனியா விடமாட்டேன் நீ அதை பத்தி கவலைப்படாத" என்றான அழுத்தமாக.​

அதற்கு மேல் அவனிடம் என்ன சொல்ல எதுவும் சொல்லாமல் தன் குழந்தைக்காக அவன் பழி உணர்ச்சி குறைய வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொண்டாள் நிலா. "ஏதாவது சாப்பிடறியா நிலா? உனக்கு ஏதாவது வேணுமா? அத்தை எடுத்து வர சொல்லட்டுமா?" அவன் அடுக்கி கொண்டே செல்ல "எனக்கு எதுவும் வேண்டாம். என்கூடவே இருங்க" என்று அவன் புஜம் அனைத்து தோளில் சாய்ந்து கொண்டாள்.​

அவள் கண்ணம் வருடி தோளோடு அணைத்தவன் "என்ன ஆச்சு ஒரு மாதிரியே இருக்க??" என்று கேட்க "எனக்கே தெரியல.. ஏதோ ஒரு மாதிரி இருக்கு.. இவ்வளவு நாள் ஒன்னும் தெரியல.. ஆனா பிரசவத்துக்கு நாள் நெருங்க நெருங்க பயமா இருக்கு இன்பா.." என்றாள் அச்சத்துடன்.​

" நான் இருக்கும் போது என் செல்ல குட்டிக்கு என்ன பயம்? " அவள் கண்ணம் இரண்டையும் ஏந்தி தன்னை பார்க்க வைத்தான். "பிரசவத்தில் நான் செத்துப் போயிடுவேனா??" என்று கேட்க அதிர்ந்தான் இன்பா..​

அவன் ஏதோ சொல்லு வர "எனக்கு பயமா இருக்கு. நான் செத்துப் போயிருவேன் எனக்கு தோணுது. ரொம்ப வலிக்கும்ல்ல.. நான் செத்துட்டா" என்று கேட்க "வாயிலேயே அடிப்பேன். என்ன பேச்சு இதெல்லாம். ஒன்னும் ஆகாது உனக்கு" என்றவன் அவளை சமாதானப்படுத்த முயல அவள் சமாதானம் ஆவதாக தெரியவில்லை. முகத்தை தொங்க போட்டுக் கொண்டே இருந்தாள்.​

" இங்க பாரு நிலா" என்று தன்னை பார்க்க வைத்தவன் "பொண்டாட்டி பிள்ளையை இழந்து ஜடமா வாழற அளவுக்கு நான் எந்த தப்பும் பண்ணல நிலா. எந்த பாவமும் யாருக்கும் பண்ணல.. நிச்சயமா உனக்கு நம்ம குழந்தைக்கும் எதுவும் ஆகாது.. நீ நான் நம்ம குட்டி இன்னும் ரெண்டு குட்டி பெத்துக்கலாம் நம்ம மூணு குட்டி நம்ம அஞ்சு பேரும் சந்தோஷமா வாழ்வோம்.. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.. நீயும் நம்பு தேவையில்லாம யோசிக்காத சரியா" என்று கேட்க, சரி என தலை அசைத்தாள்.​

"இன்னும் 20 நாள் இருக்கு அதுக்குள்ள உனக்கு என்ன பயம்? அதெல்லாம் ஒன்னும் ஆகாது" என்று அவன் கூறி முடித்த மறு நொடி நிலாவின் முகம் ஏதோ போல் மாறியது. இன்பா.. என்று தன் வயிற்றில் பிடித்தவள் எழுந்திருக்க முயல, பணி குடம் உடைந்து கால்களுக்கு நடுவில் இருந்து குருதி கலந்த பணி நீர் ஓட அதிர்ந்து போனான் இன்பா..​

தொடரும்…​

 
Top