எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கொலுசொலி ஆசைகள் 14

NNK 89

Moderator
கொலுசொலி ஆசைகள் 14

காலையில் எழுந்தது முதல் செந்தா வீட்டு வேலைகளில் மூழ்கி இருந்தாள். பாப்பு, கௌது இருவரும் இன்னும் எழுந்திரிக்கவில்லை.

செந்தா முக்கிய வேலைகளை முடித்துவிட்டு அறைக்குள் வந்து, சிதறிக் கிடந்த துணிகளை மடித்தப் படியே, "பாப்பு! எழுந்திரி ஸ்கூலுக்குப் போகனும்" எனக் குரல் கொடுத்தாள்.

கௌது காதில் விழவும், மெல்ல அசைந்து பிறகு நன்கு முழிப்பு வரவும் பாப்புவை எழுப்பி விட்டான்.

பள்ளிக் கூடத்திற்கு அணிந்துச் செல்ல ஒரு புடவையை எடுத்து வைத்துக் கொண்டு இருந்த செந்தாவின் காலடி ஓசையில் எழுந்தமர்ந்து நன்கு கண் முழித்தாள் பாப்பு.

"அம்மா!"

"என்ன?"

"இதான்மா நல்லா இருக்கு" என்ற மகளைத் திரும்பிப் பார்த்தான் கௌது.

"என்னதுடி?" எனச் செந்தாவும் திரும்பி மகளிடம் கேட்டாள்.

"உன் கொலுசுமா, டெய்லி போட்டுக்கோம்மா" என்றாள் சிறுமி.

அப்பொழுது தான் செந்தா குனிந்து அதையே கவனித்தாள். கடந்த இரவின் தாக்கம் காலையில் எழும் போதே மனதை ஆட்கொள்ள, அதே நிலையில் தான் எழுந்து வேலைகளையும் முடித்தாள். பாப்பு சொல்லும் வரை செந்தா காலில் கெடந்த கொலுசுகளை உணரவே இல்லை.

கால்களைக் குனிந்துப் பார்த்தவளிற்கு அதை கௌது தான் அணிவித்திருக்கிறான் எனப் புரிந்தது.

அதற்குள் கௌது"பாப்பு! நீ போய் பல்லு வெளக்கு, அப்பா வந்துக் குளிப்பாட்டி விடுறேன்" என்றான்.

பாப்பு இறங்கி வெளியில் ஓடினாள்.

செந்தா கொலுசுகளைக் கழட்ட குனிய, கௌது"பாப்பு ஆசைப்படுறாள போட்டுக்கோ செந்தா" என்றான்.

"நீங்க வேணானு சொன்னா கழட்டனும், வேணுமுனு சொன்னா போட்டுக்கனுமா?" எனக் காட்டமாக கேட்டாள்.

"செந்தா!" என்ற அழைப்புடன் அவளையே நோக்கினான்.

"சொல்லுங்க! இந்தக் கொலுசை நம்ம கல்யாணத்துக்கு பிறகு தான் போட்டேன், நீங்கப் போனதுக்கு அப்புறம் கழட்டி வச்சுட்டேன். ஏனா! நீங்கக் கூட இல்லாம இதை போட புடிக்கல, நீங்க வரப்போறீங்கனு தெரிஞ்சதும் மொத நாள் தான் எடுத்துக் காலில் போட்டேன்.

ஆனா என்ன செய்ய? உங்களுக்குப் புடிக்கல, இல்லல்ல உங்க ஆசைக்கு இடைஞ்சலா பாத்தீங்க, கழட்டிப் போட சொன்னீங்க. இப்ப என்னத்துக்கு காலுல மாட்டி விட்டீங்க?

எனக்கு இப்ப இது உறுத்துது, ரொம்ப புடிச்ச ஒரு விசயம் இப்படி புடிக்காம போகுமுனு ஒவ்வொன்னா உணர்ந்துட்டு வரேன். அதுல இந்தக் கொலுசும் ஒன்னு" எனக் கழட்ட குனிந்தவள் முன்னே எழுந்து சென்று, அவளின் கைகளைப் பிடித்தான்.

அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். "செந்தா! இதுக்கு மேல நான் எப்படி மன்னிப்புக் கேக்குறதுனு தெரியல, உண்மையிலே இப்ப எனக்குப் புரிஞ்சுட்டு, நம்ம வாழ்க்கையில நெறைய இழந்துட்டோம் உனக்காக நான் எதுமே மனசு சந்தோஷப்படுற மாதிரி செய்யலனு.

சந்தோஷமா வாழ பணம் சம்பாரிச்சா போதுமுனு நெனச்சுட்டேன். ஆனா உனக்குனு ஒரு மனசு அதுல இருக்க சின்ன சின்ன ஆசைகளைக் கூட நான் கண்டுக்காம போயிட்டேன்டி.

தயவுச் செய்து எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுடி, நான் உன் புருசனா உன்னோட ஆசைகளை இந்தக் கொலுசொலி போல கேட்டுட்டே இருக்க மாதிரி நிறைவேத்தி வைக்கிறேன்" எனக் கெஞ்சினான்.

செந்தா மனம் தடுமாறியது, ஆனாலும் ஏனோ அவன் கூறியதை ஏற்க முடியாதவள் கை, கொலுசின் திருகாணியைத் தொட்டது.

"அப்பா! வந்து குளிக்க வைங்க" என பாப்பு நுழையவும், செந்தா நிமிர்ந்தாள்.

கௌது, அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை, பாப்புவைத் தூக்கி கொண்டு வெளியேறினான்.

செந்தாவின் மனம் அலைப்பாய்ந்தது, அப்படியே கட்டிலில் அமர்ந்தாள்.
கால்களைத் திருப்பி பார்த்கவாறு, தரையில் லேசாக தட்டினாள், கொலுசலியானது "சலக்! சலக்!" என்றது.

ஆழ்ந்த மூச்சினை இழுத்து வெளியிட்டவள், தலையைக் குலுக்கிவிட்டு எழுந்து அடுப்படியை நோக்கி நடந்தாள்.

பாப்புவைக் குளிக்க வைத்துப் பள்ளிக்கு கௌதுவே தயார்படுத்தினான். செந்தா அதில் தலையிடவில்லை. அவளும் காலை வேலைகளை முடித்துப் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டு இருந்தாள்.

அவளின் கொலுசொலி இங்கும் அங்குமாக நடந்துப் போகும் போது கௌதுவின் காதில் ஏற்ற இறக்கங்களோடு கேட்டது, குளித்து முடித்து மெல்ல நடந்த வந்த போது, வேகமாக அடுப்படிற்குள் கேஸ் அடுப்பை அணைக்கச் சென்ற போது, மெல்ல சாமி படத்தின் சென்று வணங்கிவிட்டு குங்குமம் வைத்தப் போது, கைப்பையைத் தேடி அதில் தேவையானதை ஒவ்வொன்றகாக அடுக்கிய போது, பாட்டிக்கு உணவை வைத்த போது, செவாயி பின்பக்கம் நிற்பதைப் பார்த்துவிட்டு பாப்புவிடம் காலை உணவு தயார் எனச் சொல்ல போது, என அவளின் ஒவ்வொரு அசைவிலும் கொலுசொலியை வித்தியாசமாக உணர்ந்தான்.

மனைவியின் முகம் பார்க்காமலே அவளின் கொலுசொலியில் ஒவ்வொன்றையும் படிக்கத் தொடங்கியாருந்தான். அது கௌதுவிற்குப் புதுமையாக இருந்தது.

அவன் மனம்'இவ்வளவு நாள்கள் நீயும் எதையுமே அனுபவிக்காம இருந்துட்டீயேடா?' எனக் குறைக் கூறியது.

'என்ன செய்ய? நேரம் வரும் போது தான் உணர முடியுது, எனக்கு இருக்க உணர்வுகள் அவளுக்கும் சமமாக இருக்குனு இப்ப தான் புரியுது, அன்னைக்கு நீங்க தண்ணீ அடிச்சுட்டுப் படுக்குறீங்க, ஆனா அந்தக் கலாச்சாரம் இங்க இன்னும் பொம்பளைகளுக்கு வரலைனு சொன்னாளே! அப்ப புரியல, இப்ப செருப்பால அடிச்ச மாதிரி புரியுது' என வெறுமையாக சிரித்தான்.

காலை உணவை பாப்பு, கௌது அருந்திக் கொண்டு இருந்தனர்,
பாட்டி வெளியில் அமர்ந்துச் சாப்பிட்டார்.

பாப்புவை கௌதுவே பள்ளியில் கொண்டு விடுவதாக கூறியதால் பொறுமையாக கிளம்பினர்.

செந்தாவுக்கும் பஸ் நேரம் இன்னும் இருக்கிறது.

செவாயி சாப்பிடுவதற்காக வர, மகனிடம்"கௌது! அந்த சிதம்பரம் பெத்த பயலை உன் பொண்டாட்டி தான் ஆஸ்பத்திரியில் சேர்த்தாளாம், சந்திராவும் அவ புருசனும் பாக்கப் போறவங்க கிட்ட சொல்றாங்கனு கேள்விப் பட்டேன். அது மட்டுமில்ல நீ தான் அவளை பஸ் ஸ்டாப்பில் இருந்து பைக்கில் அழைச்சுட்டுப் போனீயாம்" எனக் கேட்டார்.

"ஆமாம்மா! மனிஷ் பள்ளிக் கூடத்துல தான் செந்தா வேலைக்குப் பொறா, அவன் அடிப்பட்டதும் கூடவே போயிட்டா, நானும் சந்திரா அண்ணி அழுதுப் புலம்பிட்டு வந்ததால அழைச்சுட்டுப் போனேன். இது எல்லாம் அவசர உதவி தானே, நீ வந்து உட்காந்து சாப்புடு" எனச் சாதரணமாக கூறினான்.

செந்தா மனமோ'இவங்க சும்மா விடப் போறதில்லை, இத வச்சு சண்டைப் போட போறாங்க, நம்ம கெளம்பிடுவோம்' என அடுப்படிற்குள்ளே அமர்ந்து வேகமாக சாப்பிடத் தொடங்கினாள்.

"ஏன் நீயும், உன் பொண்டாடியும் சோத்துல உப்புப் போட்டு தானே திங்கிறீங்க?" எனக் காட்டமாக செவாயி கேட்க, உள்ளுக்குள் இருந்த செந்தாவிற்குப் புரை ஏறியது.

இருமிக் கொண்டே தண்ணீரைக் குடித்தாள். அது கௌதுவிற்கும், பாட்டிக்குமே நன்றாக கேட்டது.

"ஏன்மா, என்ன ஆச்சு?" என்ற மகனிடம்,

"என்னைய அந்தப் பேச்சு பேசினான் சிதம்பரம், அவனோட பொண்டாட்டி ரொம்ப திமிருப் புடிச்சவ, அவ கூட கூட்டுச் சேந்துக்குறா உன் பொண்டாட்டி. ஏன் அந்தப் பள்ளிக் கூடத்துல வேற யாருமே இல்லையாக்கும், இவளே போய் இருக்கா? எனக்குப் புடிக்காத ஆளுங்கனு தெரிஞ்சும் கூட்டாளி சகவாசம் வச்சு இருக்கா. நீயும் பொண்டாட்டி சொல்றத கேட்டு ஆடுற, எல்லாம் எத்தன நாளைக்குனு பாக்கிறேன், ஏன் இந்த ஊருல யாருமே ஆம்பளை இல்லைனு உன் கூட வண்டியல ஏறி வந்தாளா?" எனச் சீறினார்.

"அம்மா! நீ பேசுறதை எல்லாமே கேட்டுப் பொறுமையா இருக்கவும் ஓரளவு இருக்கு. நான் வெளிநாட்டுல இருந்தப்ப எதுவுமே தெரியல, நீ ஃபோன்ல சொல்றத கேட்டு நம்பினேன். ஆனா எட்டு வருசம் கழிச்சு நேருல வரும் போது தான் புரியுது நீ ஊருல பாதிப்பேர் கூட சண்டைப் போட்டு வச்சிருக்கனு.

எந்தப் பக்கம் போனாலும் பத்துல ஒருத்தர் உன்னால முகம் கொடுத்துப் பேசவே யோசிக்கிறாங்க, இப்படியே போனா நாளைக்கு ஊரே எதிரியா ஆகிடும். நான் வெளிநாட்டுல இருக்கவன் நாளைக்கே அப்புச்சிக்கோ, உனக்கோ ஏதாவது ஆனா இந்த ஊர்க்காரங்க அதும் நம்ம பங்காளிங்க தான் வந்து நிக்கனும்.

நானும் உன் பேச்சைக் கேட்டுட்டு பகைச்சுட்டுப் போனா, நாளைக்கு எனக்காக ஒருத்தனும் வர மாட்டான். நான் தனி ஆம்பளைப் புள்ளையா பொறந்தவன். பாப்புவுக்கு ஆதரவாக அங்காளி, பங்காளி வேணுமில" என வருத்தமாக கேட்டான்.

"அடேய்! அந்த சந்திரா ஆம்பளைப் புள்ள பெத்து வச்சு இருக்கானு பவுசுடா, அதான் நம்மளை மதிக்க மாட்டுறா, உனக்கும் ஒரு ஆம்பளப் புள்ள பொறந்துட்டா நீ ஏன்டா கண்டவனை எதிர்பார்க்கனும், உன் புள்ள போதுமுடா உனக்கு. இன்னேரம் இந்த வீட்டு வாரிசு வளர்ந்துட்டு இருந்திருக்கும். உன் பொண்டாட்டி மனசுல என்னத்த நெனச்சாளோ அது உருவாமலே போச்சு, அது ஆம்புள புள்ளையா தான் இருக்கும்" என செந்தா மீது பழியைப் போட்டார்.

"அம்மா! நீ மாறவே மாட்டீயா? ஒரு வேளை அது ஆம்புள புள்ளயா இருந்திருந்தா உன்னோட இந்தக் குணத்தால தான் அழிஞ்சுப் போயிருக்கும். உன் பேச்சுத் தாங்க முடியாம எத்தனப் பேரு வாசாப்பு விட்டாங்களோ, அது எங்கப் புள்ளய அழிச்சுட்டு, ஆனா நீ இன்னும் அடங்காம பேசுற, செந்தா மனச பத்தி பேசுறீயே மொதல உன் மனசு நல்லத யோசிக்கிதானு பாரு, நான் இருக்கப் போற இன்னும் கொஞ்சம் நாளுல இப்படி பேசிக்கிட்டு முன்னாடி வராத" என வேகமாக பாப்புவுடன் எழுந்து கை கழுவினான்.

"போடா போ! பொண்டாட்டிப் பித்து புடிச்சு ஆடுற, எத்தன நாளைக்குனு பாக்கிறேன். வந்துட்டான் எனக்கு அறிவுரைச் சொல்ல, என் அனுபவத்துல தான் இவனோட வயசே, ஊருப்பூரா நான் சண்டைப் போட்டு வரேனாம், இவ பெரிய காந்தி மகான், பொண்டாட்டி சோக்கு கண்ண மறைக்குது" எனத் திட்டிக் கொண்டே வாயில் சாப்பாட்டை வைத்து உள்ளே அனுப்பினார்.

"அவன் மாறிட்டான், இனி உன் பாச்சா பலிக்காது, இப்டியே புலம்பிட்டு கெட" எனப் பாட்டி மறுபக்கம் புலம்பினார்.

செந்தா கணவனின் பேச்சினைக் காதில் வாங்கினாலும் கண்டுக் கொள்ளாமல், கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.

ஏற்கனவே பாப்புவை பைக்கில் அமர வைத்துக் காத்திருந்த கௌதுவைக் கண்டுக்காமல் பாப்புவைக் கொஞ்சி முத்தம் கொடுத்துவிட்டு பத்திரமாக அமரும்படி கூறி விலகியவளிடம்"எங்கப் போற செந்தா?" எனக் கேட்டான்.

"பஸ் ஸ்டாபிற்கு"

"இன்னைக்கு பஸ் வர லேட் ஆகும். வா நான் கொண்டுப் போய் விடுறேன்"

"ஏன்?"

"ரோடு வேலை நடக்குது அதனால பஸ் ரூட் மாத்தி விட்டிருக்காங்க, இன்னும் காலை ட்ரிப்பே வரல..."

செந்தாவும் வேறு வழியில்லாமல் சென்று பைக்கில் ஏறினாள்.

சாலையில் மிதமான வேகத்தில் கௌது பைக்கை ஓட்டினான்.

"அப்பா! இப்டி போறது ஜாலியா இருக்கு, நீங்க இங்கயே எங்கக் கூட இருங்கப்பா" என்றாள் பாப்பு.

"ஏன்டா? அப்பாக்கு வேலை அந்த நாட்டில் தானே இருக்கு. நீ ஸ்கூலுக்குப் போகனும். வீட்டுக்குத் தேவையானது வாங்கனும், அப்ப! அப்பா வேலை முக்கியமுல"

"அதான் அம்மா வேலைக்குப் போகுதுல, காசு வந்துடும், நீங்க எங்கக் கூடவே இருங்கப்பா"

"அம்மா மட்டும் வேலைக்குப் போயிட்டு அப்பா சும்மா இருந்தா நல்லா இருக்காதுடா"

"ஏன்பா! நீங்க வேலைக்குப் போகும் போது அம்மா சும்மா தானே இருந்துச்சு"

'வெளியில் பார்ப்பது மட்டுமே வேலையாக அந்த சிறுசு கண்ணுக்குத் தெரிகிறதே' என்ற ஆதங்கத்தில் செந்தா முகம் வாடியது.

"அம்மா சும்மாவா இருந்தா பாப்பு, வீட்டு வேலை, உன்னைய பாத்துக்கிறது, அப்புச்சி, பாட்டி எல்லாரையும் கவனிக்கிறது எல்லாம் அம்மா தானேடா"

"ஆமால! அப்ப அம்மாவும் வேலைப் பாத்திருக்கு ஆனா காசு இல்லாம, அப்படி தானேபா"

கௌதுவிற்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

"பாப்பு! அது நம்ம வீட்டு வேலை, அதுக்கு காசு எப்டி கொடுப்பாங்க, யாருக் கொடுப்பாங்க? அம்மா யாருக்காக சமைக்கிறேன், உனக்கு, பாட்டி, உன் அப்புச்சிக்காக, அதுக்கு காசு வாங்கினா நான் வேலைக்காரி ஆகிட மாட்டேனா பாப்பு. புள்ளைக்கு அம்மா செய்ற வேலைக்கு எல்லாம் காசு வச்சுப் பார்க்க கூடாதுடா." என்றாள் செந்தா.

"ஆமாம்மா! இப்ப தான் புரியுது. அப்ப எப்டி தான் அப்பா நம்மக் கூட இருக்குறதும்மா, எனக்கு நீயும், அப்பாவும் ஒன்னா இருக்கனும். இப்டி ஜாலியா போகனும்" என சந்தோஷமாக முன்னே கைகளை நீட்டியவாறு கூறினாள்.

"இன்னைக்கு ஒரு நாள் தான் பைக், நாளையில் இருந்து ஸ்கூல் பஸ்ஸில் தான் போகனும் பாப்பு, தினமும் பைக்கில் போறது நல்லதில்ல" எனக் கண்டித்தாள் செந்தா.

"அப்பா! அம்மாவை பாருங்க, எனக்கு உங்கக் கூட தான் போகனும்" எனச் சிணுங்கினாள்.

"பாப்பு! அம்மா சொன்னா நல்லதுக்கு தான் அதைக் கேளு. லீவ் விடும் போது பைக்கில் கூட்டிட்டுப் போறேன்."

"ம்ம்ம்! ஆனா நீங்க வெளிநாடு போயிட்டா"

கௌது அமைதியாகிட, செந்தா"பாப்பு! அமைதியா வா" என்றாள்.

பாப்புவைப் பள்ளியில் விட்ட பின், கௌது, செந்தா மட்டுமே பயணித்தனர்.

"செந்தா!"

"ம்ம்ம்!"

"நான் பேசாம இங்கயே இருந்திடவா?" எனக் கேட்டான்.

"இங்க இருந்து....."

"ஏதாச்சும் வேலைத் தேடுறேன், இல்லனா ஏதாவது கடனோ, லோன் போட்டு சொந்தமா பிஸ்னெஸ் ஆரம்பிக்கிறேன்"

"பாப்பு சின்னப் புள்ள அவ சொல்றானு அவசரமா முடிவு எடுக்க வேண்டாம். அப்படி சொந்தமா பிஸ்னஸ் ஐடியா இருந்தா, போயிட்டு கொஞ்சம் பணத்தைச் சம்பாரிச்சுட்டு வந்து தொடங்குங்க, வீட்டுத் தேவையை வேணா நான் பாத்துகிறேன். நீங்க சேமிப்பதை பிஸ்னஸ்க்கு பயன்படுத்தகலாம்.

எந்த முன் ஏற்பாடும் இல்லாம இங்க கடன் பிஸ்னஸ் தொடங்கினா வட்டிக் கட்டியே வாழ்க்கைப் போயிடும். அது மட்டுமில்ல நமக்கு லோன் போடுறது எல்லாம் கஷ்டம்." என்றாள்.

கௌது அமைதியாகிட, செந்தா அவளை அறியாமலே இவ்வளவு பேசிவிட்டோம் என்பதை எண்ணி யோசனையில் ஆழ்ந்தாள்.

'நீ பாட்டுக்கும் பேசுற, அவரு ஏதாச்சும் பண்ணிட்டுப்போறாருனு விட வேண்டியது தானே' என மனம் கேட்டது.

'அது எப்டி அவரை யாரோனு விட முடியும்? நாளைக்கு பாப்புவும், நானும் தான் கஷ்டத்தில் மாட்டனும்.' என ஒரு பதிலைக் கூறி மனதை அடக்கினாள்.

பள்ளிக் கூடம் வரவும், கௌது பைக்கை நிறுத்தினான்.

செந்தா இறங்கி, கைப்பையை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு நகரப்போனாள்.

"செந்தா!" என்றழைத்தவனைத் திரும்பி பார்த்தாள்.

"நீ சொல்றது சரியா படுது, இந்தத் தடவைப்போயிட்டு அப்புறம் வந்து உங்கக் கூடவே தங்கிடுறேன். பாப்பு மாதிரியே தான் எனக்கும் தோணுது, இந்தப் பைக் பயணம் நமக்கு பொக்கிஷமா கிடைக்குதுல." என லேசாக சிரித்தான்.

செந்தாவிற்கு அவனின் சிரிப்பானது மனதில் ஒரு உணர்வைத் தட்டி எழுப்பியது போல் தோன்றியது. நொடிப்பொழுது அதை ரசித்தவள்,
"ம்ம்ம்! நான் கிளம்புறேன்" என்றாள்.

"சரி! சாயங்காலம் நான் இங்க வெயிட் பண்றேன் வா" எனக் கூறினான்.

"ம்ம்ம்!" எனத் திரும்பி பார்க்காமல் சென்றாள்.

கௌதுவிற்கு ஒரு மாதிரி மகிழ்ச்சியாக தோன்றிட, பைக்கை திருப்பிக் கொண்டு மிக்க மிகுந்த சந்தோஷத்தில் சென்றான்.

கொலுசொலி ஆசைகள்....
 
admin

Administrator
Staff member

Super gowthu pavam yethavathu parthu nallatha panunga
 
NNK 89

Moderator
டேய் இதெல்லாம் முன்னாடியே யோசிச்சுருக்கலாம் டா!!... ஆனாலும் இது அந்தர் பல்டியால்ல இருக்கு!!..
யோசிக்க தருணம் அமையனுமே! அமையும் போது தான் நடக்கும் 😄
 
Top