எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மரம் தூவும் மழை-8

@38

Moderator
8


கீர்த்தனா நீ மேற்கொண்டு என்ன செய்யப் போறதா இருக்க என தந்தை கேட்கவும் ஜூஸ் பிழிந்து கொண்டிருந்தவள் நிறுத்திவிட்டு ஏன்ப்பா திடீர்னு கேக்குறீங்க


இல்ல மேற்கொண்டு படிக்கிற ஐடியா இருக்கா இல்ல அப்பா கூட சேர்ந்து பிசினஸ் பார்க்கிற ஐடியா இருக்கா.


இப்போதைக்கு எனக்கு எந்த ஒரு ஐடியாவும் இல்லப்பா நீங்க குணமாகி வீட்டுக்கு வரணும் அது மட்டும் தான்.. ப்ளீஸ் பா சர்ஜரி பண்ணிக்கோங்க ஏன் மாட்டேங்கறீங்க.


அதுக்கு காரணம் நீ தான் கீர்த்தனா அப்பாக்கு பண்ண போற ஆப்ரேஷன் பெருசுன்னு சொல்லி இருக்காங்க அதுல ஒருவேளை எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா உன்னை தனியா விட்டுட்டு போயிடுவேனோன்னு தான் பயம் எனக்கு.அப்பா அப்படி சொல்லாதீங்க உங்களுக்கு எதுவும் ஆகாது அப்படி என்னை விட்டுட்டு போற மாதிரி இருந்தா உங்களுக்கு முன்னாடியே நான் போயிடுவேன்பா .


என்ன பேச்சு பேசுற கீர்த்தனா என கோபமாக பேசியவர் அடுத்த நொடி நிதானமாக நீயும் நல்லா இருக்கனும் நானும் நல்லா இருக்கணும் அதுக்கு ஒரு வழி இருக்கு சொல்லட்டுமா..நீ கேட்பேன்னு சத்தியம் பண்ணி கொடு என வலக்கையை நீட்டினார்.எதுக்காக சத்தியம் பண்ணனும் அப்பா அது இல்லாமலே நீங்க என்ன பண்ண சொன்னாலும் நான் செய்வேன்ப்பா சொல்லுங்க உங்களுக்காக நான் என்ன செய்யணும் என குரல்‌ தழுதழுக்க கேட்டாள்.நீ கல்யாணம் பண்ணிக்கனும் என்றார்.


அப்பா அது மட்டும் முடியாது வேற ஏதாவது கேளுங்கப்பா..


அப்பாக்கு இது மட்டும் தான் வேணும்.


என்னைக்குமே நடக்காத ஒரு காரியத்தை பத்தி எதுக்காகப்பா என்கிட்ட கேட்கறீங்க என் உயிர் போனால் கூட என்னால கல்யாணம் மட்டும் பண்ண முடியாது.அப்பா உயிர் போறதா இருந்தா கூட வா கீர்த்தனா.


அப்பா என கதறியவள் ஏன்பா இப்படி எல்லாம் பேசுறீங்க எனக்கு உங்களை விட்டா யார் இருக்கா.. முதல்ல நீங்க குணமாகி வீட்டுக்கு வாங்க அப்புறமா இதை பற்றி பேசலாமென கண்ணீர் சிந்தினாள்.


எனக்கு அப்புறம் உன்னை பார்த்துக்க ஒருத்தர் வேணும் என்பதற்காக தான் இந்த கல்யாணம்..


நிதர்சனம் புரிந்து பேசுங்கப்பா யார் என்னை கல்யாணம் பண்ண ஒத்துப்பாங்க ஒருத்தரை காதலிச்சேன் அது எனக்கு மட்டும் தெரிஞ்சா பரவாயில்லை. தற்கொலை முயற்சி செஞ்சு ஊருக்கே விளம்பரப்படுத்திட்டேன் இப்போ மனநல சிகிச்சை வேற எடுத்துகிட்டு இருக்கேன் என்னை யார் கல்யாணம் பண்ணிக்க முன்வருவாங்க .அப்படி ஓருத்தர் வந்தா உனக்கு சம்மதம் தானே..


யார் அப்பா பைத்தியத்தோட கடைசி வரைக்கும் குடும்பம் நடத்துவாங்க.


உன் வாயால பைத்தியம்னு சொல்லாத..நம்ம போதாத காலம் ஏதேதோ நடந்து விட்டது எல்லாம் சீக்கிரமா சரியாகும்.என்றவர்.கார்த்தி பத்தி என்ன நினைக்கற.நம்ம ரெண்டு பேருக்காகவும் நிறைய உதவிகள் செய்கிறார்.. என்றவள் சந்தேகமாக தகப்பனை ஏறிட்டாள்.கூடவே உன்னை பற்றிய எல்லா விஷயங்களும் அவருக்கும் தெரியும் இல்லையா..?.


அப்பா நீங்க என்ன சொல்ல வரீங்க உதவி செஞ்சவருக்கு உபத்திரம் கொடுக்கணும்னு நினைக்கிறீங்களா இது சரிவராதுப்பா இந்த பேச்சே வேணாம் விட்டுடுங்க .இங்க பாரு கீர்த்தனா இந்த விஷயத்துல நான் உறுதியா இருக்கேன் நீ அந்த பையனை தான் கல்யாணம் பண்ணிக்கணும் ..பண்ணிக்கற..!.


முடியாதுன்னு சொன்னா என்னப்பா பண்ணுவீங்க .இதோ இப்படி நெஞ்சில் மாட்டியிருக்கறது .. கையில் மாட்டியிருக்கறது எல்லாத்தையும் புடிங்கி வீசிட்டு நான் பாட்டுக்கு போயிடுவேன் அப்புறம் இந்த அப்பா என்னைக்கு உன்கிட்ட பேசமாட்டேன் என எல்லாவற்றையும் கழட்டி விட ஆரம்பித்தார்.அப்பா ஸ்டாப் இட்..ஏன் பா என தடுத்தவளிடம்.


ஓஓஓ இதை கழட்ட கூடாது இல்லையா..ஆனா இப்படி செய்யலாம்ல

என்றவர் உள்ளங்கையை மடித்துக்கொண்டு அவரது நெஞ்சில் குத்த ஆரம்பித்தார்.


அப்பா என பதறியபடி அவரின் கையை பிடித்து தடுத்தவள் என்னப்பா குழந்தை மாதிரி பண்ணிட்டு இருக்கீங்க இப்போ என்ன நான் கல்யாணம் பண்ணிக்கணும் அவ்வளவுதானே.பண்ணிக்கறேன் உங்களுக்காக பண்ணிக்கறேன்..

எனறவள் அவரின் நெஞ்சில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.


அதே நேரத்தில் பெருமாள் கார்த்தியிடம் கீர்த்தனாவை பற்றிய அபிப்பிராயத்தை கேட்டுக் கொண்டிருந்தார்.


ஏன்பா திடீர்னு அந்த பொண்ணை பத்தி என்கிட்ட கேட்டுட்டு இருக்கீங்க என சந்தேகமாக கேட்டான்.


அப்பா ஒரு விஷயத்தை பத்தி பேசுறேன்னா காரணம் இல்லாம இருக்குமா என எதிர் கேள்வி கேட்டவர் உண்மையான பதிலை சொல்லு அந்த பொண்ணை பத்தின உன்னோட அபிப்பிராயம் என்ன..? என மீண்டும் கேட்டார்.


என்ன பெரிய அபிப்ராயம் சரியான பைத்தியக்கார பொண்ணு எவனோ ஒருத்தன் வேணான்னு விட்டுட்டு போய்ட்டாங்கறதுக்காக கையை வெட்டிக்கிட்டு சாகறதுக்கு துணிஞ்சவ..அந்த கோவம் நிறைய இருக்குப்பா.கோபப்பட எனக்கென்ன உரிமை இருக்கு. அதேசமயம் இன்னொரு விதமாகவும் நினைக்க தோணுது எவனோ ஓருத்தனுக்காக உயிரையே கொடுக்கிற அளவுக்கு துணிஞ்சிருக்கான்னா அவளோட அன்பு எவ்வளவு தூய்மையானது அதை தக்க வச்சிக்க தெரியாம அந்த பைத்தியக்காரன் ஓடி போயிட்டானேன்னு ..எது எப்படியோ அப்பா சிவராம் அங்கிள் ரொம்ப பாவம் இந்த பொண்ணால ரொம்பவே நலிந்து போயிட்டாரு இப்போ வேற சர்ஜரி பண்ணிக்க மாட்டேங்குறாரு.. தேவையே இல்லாம என்னோட லைஃப்குள்ள வந்து என் நிம்மதியை கெடுத்த மாதிரி இருக்கு அவங்க ரெண்டு பேரும் என வெளிப்படையாக அவனது கருத்தை கூறியவன் சரி மறுபடியும் கேட்கிறேன் எதுக்காக திடீர்னு இந்த பேச்சு.காரணமாத்தான் என சற்று தயங்கியவர் சிவராம் அவர் மகளுக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுகிறார் மாப்பிள்ளை நீயா இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்னு சொல்லறான் நான் என்ன பதில் சொல்லட்டும் என கேட்டார் .


ப்பா நான் கல்யாணம் பண்ற மனநிலையிலையா இருக்கேன் வேற எதாவது பேசுங்கப்பா என்ன தவிர்க்க பார்த்தான்.கல்யாணம் பண்ணாம என்ன பண்ண போற அமுதா லதா கதிர் என்று எல்லாரும் கல்யாணம் பண்ணி செட்டில் ஆயாச்சு தனிச்சி இருக்கிறது நீ மட்டும் தான் உன்னை பத்தி நானும் அம்மாவும் கவலைப்படாத நாளே கிடையாது இப்போ சிவராம் அவனோட மகளுக்கு கேட்கும்போது மறுக்க எந்த காரணமும் எனக்கு இல்ல.


அப்பா கொஞ்சம் யோசிச்சு பாருங்க அந்த பொண்ணு சூசைட் அட்டெர்ம் பண்ணி இருக்கா இப்போ சைக்காலஜி ட்ரீட்மென்ட் வேற.. எதுக்குப்பா இந்த பிரச்சனை கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் தான் நிம்மதி போகும்னு சொல்லுவாங்க எனக்கு அவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சாலே நிம்மதி போயிடும் போல இருக்கு என சற்று பயந்த படியே கூறினான்.


அதுதான் காரணமா இல்ல அந்த பொண்ணு ஏற்கனவே ஒருத்தனை காதலிச்சு இருக்கா.. அவனோட அப்படி இப்படினு அவர் நிறுத்தும் முன்னே கத்தி விட்டான்.


ப்பா.. ஸ்டாப் இட்.. என்றவன் அடுத்த நொடியே அவன் கத்தியதற்காக மன்னிப்பும் வேண்டிக் கொண்டான் பிறகு அவனை நிதானப்படுத்திக் கொண்டு தந்தையிடம் வந்தவன்.. அப்பா உங்க பையனை நீங்க அந்த அளவிற்கா மோசமாக கற்பனை பண்ணி வச்சிருக்கீங்க இல்லை உங்களோட வளர்ப்பு தான் அப்படின்னு சொல்ல வரீங்களா.?


அவளோட காதல் அந்த பொண்ணோட பர்சனல் அப்பா அது எனக்கு தேவையே கிடையாது அவ மனசார என்னை கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தா நான் கொடுத்து வச்சிருக்கனும்..ஆனா அவ இன்னும் மென்டலி பிரிப்பர் ஆகலைன்னு தோணுது.


அவ அப்பா மேல வெச்சிருக்கற அன்பை பார்க்கும் போதும் சரி ஓடிப்போனவன் மேல வச்சிருக்கற காதலை பார்க்கும்போதும் சரி ரெண்டு பேருமே ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கணும் அந்த மாதிரியான ஒரு அன்பை பெறுவதற்கு .


அது போல அன்பை பெற எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை நான் மறுக்க நினைப்பேனா..? ஆனா இதெல்லாம் விஷயம் கிடையாது அப்பா உண்மையான காரணம் நான் இன்னும் கல்யாணத்துக்கு தயார் ஆகல.அப்படி இருக்கும்போது அவளை எப்படி என்னால ஹேண்டில் பண்ண முடியும் இது ஒரு நாள் கூத்து இல்லையேப்பா.புரியுது கார்த்தி கீர்த்தனாவை உன்னை தவிர வேற யாரையும் கட்டுப்படுத்தவும் முடியாது காலம் பூரா கூட சேர்த்து பயணிக்கவும் முடியாது இது நானும் சிவராமும் நல்லா யோசிச்சு எடுத்த முடிவு தான்.


அப்பாவுக்கு கட்டுப்பட்டா நீ இந்த கல்யாணத்தை பண்ணிக்கோ ஆனா ஒன்னு மட்டும் உறுதி.. அவ அன்பு உனக்கும் கிடைச்சா உன்னை விட பாக்கியவான் இந்த உலகத்துல யாருமே கிடையாது.


நல்லா இருக்குற பொண்ணை கல்யாணம் பண்றது சாதனை கிடையாது.இக்கட்டான சூழ்நிலையில் இருக்கற பொண்ணோட உன் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது தான் பெரிய விஷயம்.

அவளோட கஷ்டம் நஷ்டம் எல்லாத்தையும் கூட இருத்து பாத்துக்கணும்.. அவ வாழ்க்கையில இனிமே தற்கொலை எண்ணமே வராத அளவிற்கு மாறனும், மாத்திரை போட்டு தூங்கற பொண்ணை மாத்திரை போடாம தூங்க வைக்கணும் இது எல்லாமே உன்னால முடியும் நான் நம்புறேன்.. நீ நல்ல பையன்னு பல முறை எனக்கு புரிய வச்சிருக்க நல்ல மனுஷன்னு மத்தவங்களுக்கும் புரிய வை.

கீர்த்தனாவை முதல்ல மன நோயிலிருந்து விடுதலை செய் அதுக்கப்புறம் உன் மனைவியா மாற்றி சந்தோஷமான வாழ்க்கையை வாழு அப்பாவோட ஆசீர்வாதமும் எப்பவும் இருக்கும்.


நீங்க முடிவு பண்ணிட்டீங்கப்பா இதுக்கப்புறம் என்னால எதுவும் பேச முடியாது ஆனால் அதுக்கு முன்னாடி அந்த பொண்ணு கிட்ட நான் கொஞ்சம் பேசணும் அந்த பொண்ணு என்ன மாதிரியான மன நிலையில் இருக்கறான்னு தெரிஞ்சிக்கனும்.


அவ திருமண பந்தத்திற்கு தயாரான்னு அவ மருத்துவர் கிட்ட பேசிட்டு எனக்கு திருப்தி ஆனா மட்டும்தான் கல்யாணம் பண்ணுவேன் ஆனா ஒன்னு மட்டும் சொல்லிடறேன் பா.


அவ என் மனைவி ஆன பிறகு அவளே என்னை விட்டுட்டு போறேன்னா சொன்னா கூட நான் விட்டிட மாட்டேன் அந்த நம்பிக்கையை என்னால உறுதியா தரமுடியும்.


இது போதும் பா மீதி நாங்க பாத்துக்கறோம் என்றவர் அந்த வாரத்திலேயே கீர்த்தனாவுடன் பேச வைத்தார்.


எடுத்ததுமே அவனைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி நீ எதுக்காக என்னை கல்யாணம் பண்ணனும்னு முடிவு எடுத்த.?நான் எங்க முடிவெடுத்தேன் உன் அப்பாவும் என் அப்பாவும் தான் முடிவெடுத்தாங்க புரியுதா.. இந்த கல்யாணம் அவங்களுக்காக தான்.


அப்போ நீயும் என்னை மாதிரி தானா இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம் இல்லையா சற்று கவலையுடனே கேட்டாள்.


ம்ம்..அப்படி முழுசா சொல்லிட முடியாது ஏதோ ஒரு மூலையில் உன்னை கொஞ்சமா பிடிச்சிருக்கு அதனால கூட வச்சுக்கலாம்.


பிடிச்சிருக்கா வாய்க்குள் முணுமுணுத்தாள்.


ஆமா நீ உன் அப்பாக்காக அழுதது.. எவனோ ஒருத்தனுக்காக உயிரையே கொடுக்க நினைச்சது இதெல்லாம் கொஞ்சமாக உன்னை திரும்பி பாக்க வச்சிருக்கு.உனக்கு அது போல ஏதாவது..? எதிர்பார்ப்புடன் கேட்டான்.


எனக்கு சரியா சொல்ல தெரியல ஆனா எனக்காகவும் அப்பாவுக்காகவும் நீங்க படுற கஷ்டம் ரிஸ்க் எல்லாம் பார்க்கும்போது பிடிச்சிருக்கானு சொல்ல தெரியல ஆனா வெறுக்கிறதுக்கு எந்த காரணமும் இல்லை.


அப்போ கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட வேண்டியது தான் என்று கேலி போல சொன்னாலும் உறுதி இருந்தது அதில்.தயங்கியவள் நான் இப்போ சைக்காலஜி ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கேன்.


ம்ம் அதான் தெரியுமே நான் தான் கூட இருக்கேனே ..வாயே திறக்கறது இல்ல எதை கேட்டாலும் அழுகை டாக்டரே வேற ஒருத்தர் கிட்ட போய் வைத்தியம் பாக்கற அளவுக்கு கொண்டு போய் விட்ட ஒரே கேஸ்னு ஹாஸ்பிடல் பூரா உன்னோட அருமை பெருமைகள் பத்தி தான் பேசிகிட்டு இருக்காங்க என்று கிண்டல் செய்தவன் அடுத்த நொடிய சீரியஸாக உனக்கு ட்ரீட்மென்ட் எடுக்குற டாக்டர்கிட்ட தெளிவா பேசிட்டேன் அவர் சிலதெல்லாம் சொன்னாரு எனக்கு அக்செப்ட் தான் அதனால அது ஒரு பெரிய விஷயம் இல்லை.


அப்படின்னா அப்பா கிட்ட என்ன சொல்லட்டும்..?. கேட்டவளிடம்


நான் என் அப்பாகிட்ட என்ன சொல்லட்டும் என அவளின் முகத்தை பார்த்து கேட்டான்..?


பதில் கூறாமல் வெக்கப்பட்டு கொண்டு அங்கிருந்து ஓடினாள்.ரசனையாக அவளை ரசித்தவன் அடுத்த வாரத்திலேயே திருமண தேதியை குறித்தான்..குடும்பம் உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிமையாக கோவிலில் வைத்து திருமணம் நடந்தது.
 
Top