எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீயென் காதாலயிரு

Advi

Well-known member
#நீயென்_காதலாயிரு

காதல் கதை தான் 🤩🤩🤩🤩

ப்ரெண்ட் சந்தோஷ் தங்கச்சி கல்யாணத்தில் கலந்துக்க வரான் ஜித், அங்க அவனோட அத்தை பெண் பிரியா மேல ஈர்ப்பு….

கல்யாணம் நல்லபடியா முடிய, நகையை காணாம போக, அந்த பழி பிரியா மேல விழுது…..

முதல் தடவை பார்க்கும் பெண்ணா கூட, அவ மேல சந்தேகம் வரல ஜித்க்கு….

ஆனா அவ சொந்தங்களோ……

இதனால மனசொடந்து வேற ஊருக்கே போய்யரா பிரியா வேலை தேடிட்டு….

இங்கே ஜித் & சந்தோஷ் தேடும் முயற்சியில்…..

திருடினது யார், ஏன் பழி பிரியா மேல, ஜித் ஓட காதல் என்னாச்சி????

ஜித், அவன் காதலில் நிலையா நின்னு, அவளை எங்கையும் விட்டு கொடுக்காம, அப்ப அப்ப அவளை சங்கட படுத்தி….சோ ஸ்வீட் டா நீ😍😍😍😍😍

பிரியா, அப்பா இல்லாம அம்மா அரவணைப்பில் வளரும் பெண்….அன்புக்கு அடிமை….

அதனால் தானோ, பழி சொன்னவங்களை மன்னிச்சிட்டா போல…..

காதல் வந்தாலும், அதை வெளிக்காட்டாம
ஜித்தை சுத்தலில் விட்டுட்டா😂😂😂😂

மோகன், இப்படி ஒரு அப்பா & மாமனார் கிடைக்க லக்கி ஜித் & பிரியா….

சித்ரா, செம்ம அம்மா & சூப்பர் மாமியார்…

சந்தோஷ், காதலி தான் தன் தோழிக்கு துரோகம் செய்துட்டாலோ அப்படினு தவிச்சி, ஒரு பக்கம் காதல், இன்னொரு பக்கம் தோழி….ரெண்டுக்கும் நடுவில் பயபுள்ள சிக்கி தவிக்கும் போது பாவமா தான் இருந்தது….

துரை & பானு, குழந்தையில் இருந்து, யாரையும் யார் கூடவும் ஒப்பிடாமல் இருந்து இருந்தாலே இங்க இவளோ பிராப்ளம் ஆகி இருக்காது…..

குட்டி கதைக்கு ஏத்த கதைகளம், நல்லாவே இருந்தது…..

போட்டியில் வெற்றி பெற
வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி💐💐💐💐💐💐
 
Top