எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அழகில் தொலைந்தேன் ஆருயிரே

zeenath

Member
#நறுமுகைநிலாக்காலம்-02
#NNK97
அழகில் தொலைந்தேன் ஆருயிரே
நறுமுகய் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
விஷ்வாமித்திரன்.. மேனகா..
ரைட்டர் ஈவினிங் ஆன்ட்டி ஹீரோ என குறிப்பிட்டு இருக்கிறார் ஆனால் அதற்கும் இவனுக்கும் சம்பந்தமே இல்லை.. தனக்கும் தன் பெற்றோருக்கும் கெடுதல் செய்தவர்களை தன் வழியில் பழி தீர்த்து இருக்கிறான் அவ்வளவே..
இவனின் கோபம் இரு பெரியவர்கள் மீதும் மனைவியாக்கிக் கொண்ட அவர்களின் மூத்தவர் மகளின் மீது மட்டுமே..
தன் ஆண் என்ற கருவம் யாருக்கும் அடிபணியாது என சுற்றிக் கொண்டிருக்கும் இவனையும் தன் காதலால் அடிப்பேன் அவனின் மனைவி மேனகா..
எலியும் பூனையுமாக இருவரின் சண்டைகளும் அபாரம் 😀 கோபக்கார விஷ்வாவிற்கு ஏற்ற கோபக்கார மேனகை. 😀
சொக்கநாதன் மற்றும் விஷ்வாவிற்கு இடையே நடக்கும் நக்கல் நையாண்டி பேச்சுக்கள் அருமை 👏👏
விஷ்வா மற்றும் கவின் நட்பு அழகு 🥰
சொக்கநாதன் மற்றும் சுந்தரேசனின் அண்ணன் தம்பி பாண்டிங் அழகு 🥰
விஷ்வா தன் பழிவாங்கும் படலத்தை பெரியோர்களுடன் நிறுத்திக் கொண்டதும் சிறியவர்களுடன் அவனின் அன்னியோன்யமும் நட்பும் இரு அத்தைமார்களுக்கு அவன் கொடுக்கும் மரியாதையும் மனைவியோடு மல்லுக்கட்டி அவளை இவன் ஜெயிப்பதும் அவளிடம் இவன் தோற்பதும் அருமையோ அருமை 🥰🥰 சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹
Good luck 🥰💐🌹
 
Top