எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மரம் தூவும் மழை -9

@38

Moderator
9


ஒருவழியாக திருமணத்திற்கு தயாராகாத இருவரையும் பெற்றோர்களின் முயற்சியில் சேர்த்து வைத்து விட்டனர்.


அன்றைய இரவுக்கான அறை அலங்காரத்தை மிக சிரத்தையாக அமுதா பார்த்துக்கொண்டிருக்க திக் திக் மனதோடு கீத்து அமர்ந்திருந்தாள்.


ஓரளவுக்கு அறை அலங்காரம் திருப்தியாகவும் அமுதா தாயாரை தேடி வந்தாள்.


சாந்தி சோகமாக அமர்ந்திருக்கவும் என்னம்மா வீட்ல எவ்வளவு பெரிய விசேஷம் நடந்திருக்கு நீ என்னன்னா மூஞ்சை தூக்கி வச்சுட்டு உட்கார்ந்து இருக்க என கேட்டபடி அமுதா எதிரில் வந்த அமரவும்.


போடி கல்யாணத்துக்கு கதிரவனும் லதாவும் வரலையே. எத்தனை தடவை நான் கூப்பிட்டேன் தெரியுமா வளர்த்த பாசம் கொஞ்சமாவது பிள்ளைங்களுக்கு இருக்க வேண்டாம் என சலித்தார்.


அம்மா அவங்களுக்கு என்ன சூழ்நிலையோ விடு.. இதையெல்லாம் பெருசு படுத்தாத..


இல்லடி இன்னும் அவங்க பழசு எதையும் மறக்கல அதனாலதான் வஞ்சம் வைத்து பலி வாங்கிட்டாங்க என குறைபட்டார்.


இருந்துட்டு போகட்டும்..நாம கவலை பட வேண்டியது அண்ணனை பற்றி தான்.. அண்ணன் கல்யாணம் பண்ணிக்காம இருந்திடுவாங்களோன்னு பயந்துட்டு இருந்தேன் ஒரு வழியா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இப்போ கல்யாணமும் பண்ணிட்டாங்க..அந்த ஓட்டை சந்தோஷம் போதும்.. அவங்க மறக்கலைன்னா பரவால்ல நீ மறக்க முயற்சி பண்ணும்மா. நான் அண்ணி கிட்ட போறேன் கண்டதை யோசிக்காம ஏதாவது வேலை இருந்தா செய் என்ற படி நகர்ந்து விட்டாள்.கீர்த்தனாவை தேடி வந்த அமுதா இரவு உடையில் அமர்ந்திருந்தவளை பார்த்துவிட்டு என்ன அண்ணி இன்னும் ரெடியாகாம இருக்கீங்க போங்க போய் குளிச்சிட்டு இந்த புடவையை கட்டிட்டு வாங்க என உரிமையாக அதட்டினாள் .


எதுக்கு இதெல்லாம் என எரிச்சலை மறைத்தபடி கேட்கவும்.


இன்னிக்கி உங்களோட கல்யாணமான முத நாள் ஃபர்ஸ்ட் நைட் தெரியும்ல உங்களுக்கு என சந்தேகமாக கேட்டவள்.

அஞ்சு நிமிஷம் தான் உங்களுக்கு டைம் ஜோசியக்காரர் நைட்டு பத்து மணி நல்ல நேரம் குறிச்சு கொடுத்திருக்கிறார்.. அதுக்குள்ள உங்களை ரூமுக்குள்ள அனுப்பனும்..


நான் போய் அண்ணா என்ன பண்ணறாங்ன்னு பாத்துட்டு வரேன் என கார்த்தியை தேடிச்சென்றாள்.


கார்த்தி அமுதாவின் கணவனோடு பேசிக்கொண்டிருந்தான்.


அண்ணா இன்னும் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க ரூம் போ அண்ணா..என்றவளை எதுக்குடி இப்படி கத்தற என கடிந்தவன் அவளது கணவனை பார்த்து எப்படி இவளை சமாளிக்கற என கேட்டு வைத்தான்.


எல்லாம் விதி மச்சான் என்றவன் அமுதாவை பார்த்து நீ உள்ள போ நான் பாத்துக்குறேன் என கண் ஜாடி செய்தான்.


அதை கவனித்த கார்த்தி புரிஞ்சு போச்சு என சிரித்தான்.


ஓகே மச்சான் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்றபடி நாசுக்காக ஈஸ்வர் நகர்ந்து விட்டான்.


அறைக்குள் வந்தவன் அலங்காரத்தை பார்த்து நெற்றியில் கைவைத்து அச்சோ இது வேறயா ..அமுதா என்ன பண்ணி வச்சிருக்க என மனதிற்குள் மீண்டும் தங்கையை கடிந்து கொண்டான்.


சற்று நேரத்திற்கெல்லாம் கதவு திறக்கும் ஒலி கேட்டது..திரும்பி பார்த்தவன் உள்ள வா கீத்து என்றான்.


சொல்ல முடியாத உணர்வுகளுடன் கையில் பால் சொம்புடன் உள்ளே வந்தாள்..அவளின் பயந்த தோற்றமும் வெளிறிய முகத்தை பார்த்ததுமே கார்த்திக்கு சிரிப்பு வந்துவிட்டது.


அவனது சிரிப்பில் அவளுக்கு எரிச்சல் வந்தது போல.. எதுக்கு சிரிக்கிற எரிந்து விழுந்தாள்.


எல்லாம் உன்னோட அப்பீரியன்ஸ் பார்த்து தான் யாரோ சொன்னாங்க நான் கல்யாணத்துக்கு இன்னும் மெண்டலி பிசிக்கலி பிரிப்பர் ஆகலன்னு.. ஆனா பால் சொம்பை தூக்கிட்டு ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள வந்து இருக்காங்க என கேலி பேசினான்.என்கிட்ட கூட தான் நீங்களும் சொன்னிங்க..கல்யாணத்துக்கு நான் இன்னும் தயாராகவில்லைனு.. ஆனா எனக்கு முன்னாடி வந்து காத்துட்டு இருக்கீங்க என பேச்சை இலகுவாக்க முயன்றாள்.


குட்.. நல்லா பேசற மெச்சுதலாக பாராட்டினான்.எவ்ளோ நேரம் நிற்ப..வந்து உட்காரு என்றான்.


தயங்கியவள் நான் உங்ககிட்ட முக்கியமான விஷயம் ஒன்னு பேசணும்.அதைவிட முக்கியமான விஷயம் நான் உன்கிட்ட பேசணும் இப்படி வந்து உட்காரு..


யோசனையாக அமர்ந்திருந்தவளின் கையை எடுத்து உள்ளங்கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டவன் அதிர்ச்சியுடன் பார்த்தவளிடம் நீ என்னோட வொய்ஃப் இந்த உரிமை கூட இல்லனா நாம கணவன் மனைவியாக இருக்கிறது காண அர்த்தம் இல்லாமல் போய்விடும்.


ஏன் உன் கை இப்படி நடுக்குது ரிலாக்ஸ் என கையை தட்டிக்கொடுத்தவன் பொறுமையாக என் அம்மாவும் என் தங்கையும் என்ன சொல்லிவிட்டாங்கன்னு எனக்கு தெரியாது அதை நான் தெரிஞ்சுக்கவும் விரும்பல அதனால நீ அவங்க சொன்னதை மனசுக்குள்ள வச்சு குழப்பிக்காத .


நாம கல்யாணத்துக்கு முன்னாடியே பேசின மாதிரி தான் ரெண்டு பேருமே இன்னும் மெண்டலி ஃபிசிகலி கல்யாணத்துக்கு தயாரா இல்லை.


நீ உன் தோல்வியிலிருந்து மீளனும் நானுமே என் காதல் தோல்வியில் இருந்து மீளனும் என்று கூறவும்.


கண்களை விரித்தவள் உங்களுக்கும் லவ் பெயிலியர் இருக்கா என ஆச்சரியமாக கேட்டாள்.


ஏன் இருக்கக் கூடாதா என கேள்வி எழுப்பியவன் எனக்கும் லவ் பெயிலியர் இருக்கு.. உன் அளவுக்கு டீப் லவ்வானு தெரியல ஆனா அதிலிருந்து இப்போ வரை என்னால மீண்டு வர முடியல.. சோ நீயும் என்னோட எக்ஸ் லவ் பத்தி பேசாத நானும் உன்னோட எக்ஸ் லவ் பத்தி பேசமாட்டேன்..


ஏற்கனவே ஒருத்தரை காதலிச்சிருக்கேறேன்னு உன்னை நீயே கீழ இறக்கிக்க வேணாம் அதுக்காக தான் சொன்னது.உன்கிட்ட இருக்கிற அதே மைனஸ் என்கிட்டயும் இருக்கு சரிசம காதல் தோல்வி . அதனால நாம இனி குட் பிரண்ட்ஸ் ஓகே என்றவன்..ஒரே அறையில் இருந்தாலும் கூட நமக்கு விருப்பம் இல்லாததை நாம செய்ய வேணாம்.நம்மளோட

பந்தத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போகணும்னு எப்பவாவது தோணுதோ அப்போ பாத்துக்கலாம் அதுவரைக்கும் ஜாலியா இருக்கலாம். என்றவன் இத்துடன் பேச்சு வார்த்தை முடிந்தது என்பது போல கட்டினில் ஓரமாக படுத்துக் கொண்டவன்‌.பிறகு உனக்கு விருப்பம் இருந்தா இங்க படுக்கலாம் அப்படி இல்லன்னா இன்னைக்கு ஒரு நாள் சோபால படுத்து அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என் ஹைட்டுக்கு அது செட் ஆகாது. நாளைக்கு உனக்கு வேற ஒரு கட்டில் அரேஞ்ச் பண்ணி தறேன்.


அம்மா அப்பா போற வரைக்கும் வேற வழி இல்ல நீ என்னோடு தான் ஸ்டே பண்ணி ஆகணும் அவங்க போனதுக்கு அப்புறம் வேணும்னா தனி ரூம் எடுத்துக்கோ என்ற படி படுத்துவிட்டான்.


அடுத்த சில நிமிடங்களிலேயே உறங்கவும் ஆரம்பித்து விட்டான் அவனையே ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தவள் உன்னை நம்பி இந்த ரூம்ல மட்டும் இல்ல பெட்ல கூட தைரியமாக படுக்கலாம் என்றவள் மறுக்கோடியில் இவள் படுத்து உறங்க ஆரம்பித்தாள்.நெடு நாளைக்கு பிறகு நிம்மதியான உறக்கம் வாழ்க்கையின் எதிர்காலத்தை நினைத்து பயந்து கொண்டு இருந்தவளுக்கு இப்பொழுது அதை பற்றி துளி கூட கவலை இல்லை..இவன் இருக்கிறான் இனி இவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதி தந்த உறக்கம் அது.அமுதா இரண்டு நாட்களில் கிளம்பி விட பெருமாளும் ஊரை பார்க்க கிளம்பி விட்டார் மருமகளுக்கு சமையல் சொல்லி கொடுத்து விட்டு வருகிறேன் என தங்கி கொண்ட சாந்தி முதல் ஒரு வாரம் நன்றாக தான் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார் .அதன் பிறகு லதாவிடம் அலைபேசியில் பேசி விட்டு வந்தவர் முகம் எதையோ பிரதிபலித்தது.. கோபமா இயலாமையா எனத்தெரியவில்லை.


மகன் வரும் பொழுதும் அப்படியே இருக்க என்னவென்று விசாரித்தான்.


எல்லாம் உன்னால தான் அநியாயமா லதா வாழ்க்கையை சிரழிச்சிட்ட என கண்ணீர் சிந்தினார்.


ம்மா என அதட்டியவன் அவ இப்போ இன்னொருத்தனோட மனைவி மனசுல வச்சிக்கோங்க இனி அவளை பத்தி என்கிட்ட பேசக்கூடாது என கண்டிப்புடன் கூறிவிட்டான்.


அவரால் மகனின் பேச்சை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு சமையல் வேலை செய்து கொண்டிருந்தவரை வித்தியாசமாக பார்த்தவள் என்னாச்சு அத்தை எனக்கேட்டது தான் தாமதம்.


பொங்கி விட்டார் எல்லாம் என் தலையெழுத்து இல்லனா பெத்த மகன்கிட்ட இருந்து இப்படியெல்லாம் பேச்சு வாங்கணும்னு தலையெழுத்து இருக்குமா இவனால ஒன்னுக்கு ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.. அதைப்பற்றி

என்னைக்காவது வாய் திறந்து பேசி இருப்பேனா.. இன்னைக்கு ஏதோ மனசு கேட்காம ஒரு வார்த்தை சொல்லிட்டேன் எப்படி கத்திட்டு போறான் பாரு.என் பையன் இப்படி ஒருநாளும் பேசினதும் இல்ல கத்தினது கிடையாது நீ வந்த பிறகு தான் இப்படி எல்லாம் பேசிட்டு போறான் .நான் என்னத்த பண்ணினேன்.


நீ என்ன பண்ணல எல்லாம் தான் பண்ணியிருக்க எப்படி உன்னால அவனை கல்யாணம் பண்ணிக்க முடிஞ்சுது எனக்கு எல்லாம் இந்த கல்யாணத்துல துளி கூட விருப்பம் இல்ல தெரியுமா ஊர் சைடு பெரிய தலைகட்டு இருக்கிற குடும்பத்திலிருந்து பெண் எடுக்கனும்னு ஆசைப்பட்டேன்.அப்படி என்னதான் சொக்குப்பொடி போட்ட என்புள்ளைக்கு உன்னை தான் கட்டிப்பேனு சொல்லற அளவுக்கு..அவன் மட்டும் சொன்னா கூட பரவால்ல சின்ன வயசு ஆனா என் புருஷன் அவரும்ல சொன்னாரு..

உன்னை தவிர வேற யாரும் என் வீட்டுக்கு மருமகளா வர முடியாதுன்னு..


தோல் கொஞ்சம் வெளுப்பா இருக்கிறதாலயா இல்ல ஒன்னும் தெரியாத மாதிரி மூஞ்சியை வச்சிட்டு இருக்கியே அதாலயா..எதை பாத்து ஏமாந்தாங்களோ‌ என வக்கிரமாக வாய்க்கு வந்தபடி பேச அவர் பேசியது எல்லாமே பின்னுக்கு சென்றது.. ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கைனு சொல்றாங்களே அது என்னவென்று தெரிந்து கொள்வதற்காக அவரிடம் மீண்டும் பேச்சு கொடுக்க திருமணத்தை நிறுத்திய விஷயம் தெரிந்தது.ஒரு வாரத்தில் கணவனை எப்படி எல்லாமோ கற்பனை செய்து வைத்துக் கொண்டிருந்தவள் திடீரென அவனை அதல பாதாளத்திற்குள் தள்ளி விட்டாள்.


அவளை விட்டுச் சென்ற காதலனுக்கும் கார்த்திக்கும் பெரியதாக வித்தியாசம் இல்லை என நினைத்தாள் அவனையும் இவனையும் ஒன்றுபடுத்தி தேவையில்லாமல் வெறுப்பை உமிழ்ந்தாள்.


அன்றைய இரவு நேரடியாக கணவனிடம் வந்தவள் நீ காதல் தோல்வின்னு மட்டும் தானே சொன்ன.. நாளைக்கு கல்யாணம் எனும் பொழுது முதல் நாள் அதை நிறுத்தி இருக்க அந்த பொண்ணோட வாழ்க்கை பத்தி கொஞ்சமாவது நினைச்சி பார்த்தியா..?


அந்த பொண்ணு என்னை போல பலகீனமானவளா இருந்திருந்தா இன்னேரம் உயிரை விட்டிடுப்பாள்ல கார்த்தி..உனக்கு ஏன் அது தோணலை..எவ்வளவோ பேசின ஏன் அதைப்பற்றி மட்டும் வாயே திறக்கல அப்போ உங்கிட்ட ஏதோ தப்பு இருக்கு தானே.உனக்கும் என்னை விட்டுப் போன அவனுக்கும் பெரியதாக வித்தியாசம் இல்லை.. ரெண்டு பேருமே சீட்டர் ஏமாற்றுக்காரங்க அவனை நம்பி காதலிச்சேன் உன்னை நம்பி கல்யாணம் பண்ணினேன் மொத்தத்துல என் வாழ்க்கை போயிருச்சு என திட்டி தீர்த்தாள் .அறைக்குள் இருந்தவற்றையெல்லாம் தூக்கி போட்டு உடைத்தாள் ஒரு கட்டத்திற்கு மேல் அவளை சமாளிக்க முடியாமல் மருத்துவரை வரவழைத்தான். அவங்களோட மனநிலை ரொம்ப சரியா மாறிட்டு இருக்குற சமயத்துல என்ன ஆச்சு திடீர்னு என மருத்துவர் இவனை திருப்பிக் கேட்க என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.. நான் உங்க பர்சனலுக்குள்ள வரல மிஸ்டர் கார்த்தி ஆனா கீர்த்தனாவோட நிலை என்ன என்கிறதை உங்களுக்கு திருமணத்திற்கு முன்னாடியே தெளிவா விளக்கி இருக்கேன் எல்லாம் ஓகே பண்ணி தான் திருமணம் செஞ்சீருக்கீங்க.ஆனா ஒரே வாரத்துல அவங்க இவ்ளோ மூர்க்கத்தனமாகவும் நோயோட உச்சத்துக்கும் போயிருக்காங்கன்னா எப்படி ரியாக்ட் பண்ணறதுன்னு எனக்கு தெரியல மறுபடியும் அவங்களோட கோர்ஸ்சை எக்ஸ்ட்ரீம் பண்ணியிருக்கேன் இப்போதைக்கு மெடிசன் எழுதி இருக்கேன் ரெகுலரா கொடுங்க பதினைந்து நாள் கழித்து கூட்டிட்டு வாங்க என அறுவுறுத்தி விட்டு சென்றார் .எங்கு தப்பு நடந்தது ..?ஒரு வாரம் வரை நன்றாக தானே இருந்தாள் எனக் குழம்பி தவித்தவன்.


கண்டிப்பாக அமுதாவோ,லதாவோ, தந்தையோ, திருமணம் நின்ற விஷயத்தை பற்றி கூற வாய்ப்பில்லை அப்படி என்றால் தாயின் வேலையாக இருக்குமோ என சந்தேகம் கொண்டான்.


முதல் நாள் அவள் சண்டையிடும் பொழுதும் சரி மருத்துவர் வீட்டுக்கு வரும் பொழுதும் சரி தாய் அறையை விட்டு வெளியே வரவே இல்லை அப்படி என்றால் என்ன அர்த்தம் உடனடியாகவே அதற்காக தீர்வை கண்டுபிடித்தான்.தாயாரை அமுதாவின் கணவர் உதவியுடன் ஊருக்கு அனுப்ப முடிவு செய்தான்.ஆனாலும் செல்லும்பொழுது சாந்தி சாதாரணமாகவெல்லாம் செல்லவில்லை ஏற்கனவே மன அழுத்தத்திலும் குழப்பத்திலும் இருந்தவளிடம் சென்று.இப்போ உனக்கு திருப்பதி தானே என் பையன் என்னை ஊருக்குப் போக சொல்லிட்டான் நான் இருந்தா அவனுக்கு தொல்லையா இருக்காம்..இனிமேல் நீயே சந்தோஷமா இந்த வீட்ல இரு.


மற்ற மனிதர்கள் யாரையும் பக்கத்தில் சேர்த்துக் கொள்ளாதே அப்படி சேர்த்துக்கிட்டா உன் சந்தோஷம் பறிபோயிடும் என விஷக்கொடுக்கால் கொட்டி விட்டு தான் சென்றார்.


அதிலிருந்தே சாந்தி என்றால் கீர்த்தனாவுக்கு பயம் அவரைப் பற்றி நினைத்தாலே அவர் இரு முறை அவளிடம் முகத்தில் அடித்தது போல் பேசியது மட்டுமே ஞாபகத்துக்கு வரும் முடிந்த அளவு அவரை தவிர்க்க நினைத்தவள் அதன் பின் ஊர் செல்லவே இல்லை.கார்த்தி முடிந்த அளவு கீத்துவை நல்ல மனநலையில் வைத்திருக்க முயற்சி செய்தான் ஆனால் அவளோ மனதில் மீண்டும் மீண்டும் கார்த்தியையும் அவளது காதலனையும் ஒன்றுபடுத்தி பார்த்து வேதனையை ஏற்படுத்திக் கொண்டாள் .மன அழுத்தத்தை மனச்சிதைவாக மாற்றிக்கொண்டாள்.. அவனுடன் இருக்க முடியாது என தினம் தினம் சண்டையிட்டாள்..தனக்கு விவாகரத்துக்கு தரும்படி கோரிக்கை வைத்தாள்.. அந்த சமயத்தில் இவனும் பதிலுக்கு சண்டையிடுவான் சில சமயங்களில் கோபத்தை கட்டிப்படுத்த முடியாமல் கைகூட ஓங்கி விடுவான்.


அவள் ஒஒ வென அழ ஆரம்பித்து விடுவாள்..அதன் பிறகு தன்னைத்தானே நொந்து கொண்டு அவளை சமாதானப்படுத்தும் முயற்சி செய்வான்.


இவனிடம் சாதாரணமாக விவாகரத்து கேட்பதால் தான் கொடுக்க மாட்டேன் என்கிறான் என்பதை உணர்ந்து கொண்டவள் அவனை வார்த்தைகளால் வதம் செய்தாள்.


என் சொத்து மேல உனக்கு ஆசை..கண்டுகொள்ளாமல் கடந்து விடுவான்.


என்னோட உடம்பு மேல ஆசை.

அதனாலதான் என்னை அனுப்ப மாட்டேங்குற..இந்த உடம்பை வேணும்னா எடுத்துக்கோ.. உன் ஆசைக்கு அனுபவித்து விட்டு என் அப்பா கிட்டயே அனுப்பி வைச்சிடு என ஆடைகளை களையப் போனவளை அறைய போய்விட்டு அது முடியாமல் அவனது கையை சுவற்றில் குத்தி காயம் ஏற்படுத்திக் கொண்டான்.ரத்தத்தை பார்த்து அவள் பதறவும் இன்னொரு முறை இந்த மாதிரி ஏதாவது பேசி வச்ச உன்னை எதுவும் செய்ய மாட்டேன்..உன் கண்ணு முன்னாடியே என்னை நானே காயப்படுத்துக் கொள்வேன் என மிரட்டி வைத்தான். அது சற்று வேலை செய்ய சிறிது நாட்கள் அமைதி காத்தாள்.


ஆனால் அவளின் கற்பனை திறனை அவனால் கட்டுப்படுத்தி வைக்க முடியவில்லை. இந்த உலகத்தில் யாரெல்லாம் மோசமானவர்கள் என அறியப்படுகிறார்களோ அவர்களோடு கார்த்தியை ஒப்பிட்டுப் பார்த்து அவளின் நிம்மதியை தொலைத்தாள்.


ஒரு நாள் வெத்து பத்திரத்தை எடுத்து வந்து இதில் நான் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன் என்னோட சொத்து எல்லாமே உனக்கு என்பது மாதிரி எழுதிக்கோ என்னை விட்டுட்டேன் ப்ளீஸ் என்றாள் வெறுத்துப் போய் விட்டான்.

ஆனால் கார்த்தி அதற்கு அசைந்து கொடுக்கவே இல்லை..அவளது கையில் இருந்த பத்திரங்களை பிடுங்கி சுக்குநூறாக கிழித்து அவள் மூஞ்சிலேயே வீசி அடித்தான்.


உனக்கு என்னதான்டா வேணும் ஏமாற்றுக்காரா இன்னும் எத்தனை பொண்ணுங்களோட வாழ்க்கையை அழிக்கணும்னு இப்படி மௌனமாய் இருந்து தொலைக்கற என்று கத்தியவளிடம்.நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ.. எப்படி வேணாலும் கத்திக்கோ உன்னையும் என்னை விட்டுப் போக விட மாட்டேன் நானும் உனக்கு விவாகரத்து கொடுக்க முடியாது வேணா உன் சொத்தை எல்லாம் ஏதாவது அனாதை ஆசிரமத்துக்கு எழுதி வைக்க சொல்லிடு எனக்கு ஒத்த பைசா வேண்டாம் என முகத்தில் அடித்தபடி கூறி விட்டான் .


இவனிடம் இனி எப்படி விடுதலை வாங்குவது என யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான்

தந்தைக்கு சர்ஜரி செய்யலாம் என அறிவுறுத்தி இருந்த மருத்துவர் அழைத்திருந்தார் .


தந்தையை வழக்கமாக பரிசோதிக்கும் மருத்துவர் அழைக்கவும் பதறியபடி கணவனை அழைத்துச் சென்றாள்.சிவராம் சர்ஜரி செய்வதற்காக நாள் கேட்டு வந்திருந்ததை கூறியவர் என்ன செய்யலாம் என பெண்ணான அவளிடம் கேட்டார்.இவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை கார்த்தியை தான் பார்த்தாள் .


என்ன டாக்டர் பிரச்சனை.. அவர் இவ்வளவு நாளும் ஆப்ரேஷனுக்கு ஒத்துக்காம இருந்தாரு இப்போ ஒத்துக்கும் போது என்ன தயக்கம் டாக்டர்.


ஒருவேளை என்னைக்கு டேட் ஃபிக்ஸ் செய்யலாம்னு ஒப்பினியன் கேட்கிறதுக்காக கூப்பிட்டீங்களா டாக்டர்..?


அதுக்காக கூப்பிடல அவருக்கு சில டெஸ்ட் எடுத்ததுல ஒரு விஷயம் தெளிவா புரியுது..மிஸ்டர் சிவராம்க்கு இப்போ மட்டும் இல்ல எப்பவுமே சர்ஜரி பண்ண முடியாது அதை சொல்றதுக்காக தான் உங்களை கூப்பிட்டோம்.


ஏன்..ஏன் டாக்டர் கொஞ்சம் புரியறது போல சொல்லுங்க என தவித்தாள் செல்ல மகள்.சர்ஜரியை தாங்கற அளவிற்கு அவரோட இதயம் பலமானதா இல்லை ரொம்ப பலகீனமா இருக்கு..


சர்ஜரியை தாங்கறது போலத்தானே டாக்டர் இருந்தது அதற்காக தானே நான் கல்யாணம் கூட பண்ணிக்கிட்டேன் என கண்ணீர் மல்க கேட்டாள்.


ஆமா நீங்க திருமணம் செஞ்சிககட்டீங்க.. மகள் திருமணம் ஆகி ரொம்ப சந்தோஷமா இருக்கிறா என்கிற நினைப்புதான் அவரோட இதயத்தை பலகீனமா மாத்திடுச்சி.டாக்டர் கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க என்றான் கார்த்தி.


ரொம்ப சிம்பிள் கார்த்தி மகளுக்கு கல்யாணம் ஆகல அவங்களுக்கு உடம்பு சரியில்லை என்கிற கவலையில் அவருடைய இதயம் பலகீனமாச்சு இப்போ மகளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு சந்தோஷமா இருக்காங்க என்கிற அதிகப்படியான பூரிப்பால் இப்போ பலவீனமாயிடுச்சு.


அப்படின்னா அவருக்கு சர்ஜரி பண்ண முடியாது என்கிறீர்களா அப்போ அவர் உயிருக்கு என சற்று கவலையுடன் கேட்டான்..


அவரோட ஆயுள் இப்போ உங்க கையில தான் இருக்கு.. என்றவர் புரியற மாதிரியே சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க.. இப்போ எப்படி அதிகமான சந்தோஷம் அவரோட இதயத்தை பலகீனமா மாத்திருக்கோ அதேபோல் ஏதாவது துக்ககரமான விஷயமோ,இல்லை அவரை கஷ்டப்படுத்துற மாதிரி, வேதனைப்படுத்துற மாதிரி விஷயம் ஏதாவதை கேள்விப்பட நேர்ந்தால் பலகீனமாய் இருக்கிற இதயம் சுத்தமா நின்னு போயிடும் என்று அதிர்ச்சி அளித்தார்.இனிமே அவர்கிட்ட ரொம்ப சந்தோஷத்தையும் சொல்ல வேண்டாம் அதேசமயம் ரொம்ப கஷ்டமான விஷயத்தையும் நீங்கள் சொல்ல வேண்டாம் முடிஞ்ச அளவு அவரை ஒரே மன நிலையில் வைத்துக் கொள்ள பாருங்கள் எனக் கூற என்ன செய்வது என்பது போல கணவனைப் பார்த்தாள்.அவன் மிகக் கூலாக கூறிவிட்டான்.. நீ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்னு இப்போ பலகீனமான இதயத்தை என்கிட்ட டிவோஸ் வாங்கிட்டேன்னு போய் சொல்லு..இழுத்துட்டு இருக்கற துடிப்பு ஒரேடியா நின்னுடும் என்று கூற அப்படி எல்லாம் சொல்லாத கார்த்திக் எனக்கு அப்பா தான் எல்லாமே உனக்கே தெரியும் இல்ல என்றாள்.அப்படின்னா அவர் காலம் முடிகிற வரைக்கும் ஒழுங்கா என்னோட குடும்பம் நடத்துற வழியை பாரு என அடக்கி வைத்தான் .அதன் பிறகு எப்பொழுதெல்லாம் அவள் கட்டுப்பாட்டை மீறி கத்துவாளோ அப்பொழுதெல்லாம் அவளின் தந்தை என்னும் ஆயுதத்தை எடுத்து அடக்கி வைத்தான் .இன்று வரை அப்படியே தான் போய்க் கொண்டிருக்கிறது இதோ இப்பொழுது அவனது கிராமத்து வீட்டில் அவனது படுக்கையில் சிறு விம்மலுடன் உறங்கிக் கொண்டிருக்கிறாள் இவனோ அவளை இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
 
Top