அந்திரன்_ஆரி
Moderator
அத்தியாயம் 1
மெல்ல கீழ் இறங்கிக் கொண்டிருந்த நிலவும், ஈரத்தைத் தன்னுள் சுமந்து கொண்டிருந்த காற்றுமே கூறியது இது அதிகாலைப் பொழுதென்று...
அக்கணம் "என்ன முருகேசா? நேரமாகிட்டே இருக்குது. இன்னும் உன்னை காணோம்..."என கோபமாக கத்த ஆரம்பித்தவரின் பேச்சு எதிர்ப்புறம் கூறிய செய்தியில் தணிந்தது.
"நேத்து ராத்திரியே
கால் பண்ணலான்னு நினைச்சேனுங்கம்மா இருந்த அவசரத்துல எல்லாத்தையும் மறந்துட்டேனுங்க. புள்ளைக்கு வேற உடம்பு முடியலைங்க. நைட்டோட நைட்டா ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு வந்துட்டேனுங்கம்மா.இன்னும் ஆஸ்பத்திரியில தான் இருக்கேனுங்க, ஒரு அரைமணி நேரம் டையம் கொடுங்கம்மா வந்துடறனுங்க..." அவசரக் குரலில் கூறினார். அவரின் குரலில் கரகரப்பேக் கூறியது இரவு முழுவதும் அவர் உறங்கவில்லை என்று.
"அதெல்லாம் ஒன்னும் வரவேண்டாம் முருகேசா, நீ புள்ளையை பாரு..." என்றவர் அழைப்பைத் துண்டித்தார்.
ஹாலில் நின்றபடி மேல் அறையை பார்த்தார். இத்தனை கத்தலுக்கும் வெளியில் எட்டிக் கூட பார்க்காத மகன் மீது கடுப்பாக வந்தது.
அந்தியூர் வரை செல்ல வேண்டும் வாவென்றால் வருவானா என்ற குழப்பம் வேறு மனதில். பெருமூச்சுடன் மகனை அழைத்தார்.
முதல் ரிங்கிலையே எதிர்ப்புறம் அழைப்பு ஏற்கப்பட "தம்பி, நான் கிளம்பிட்டேன்..." என்றார் பொதுவாக.
மொட்டையாக கிளம்பறேன் என்றதும் அவனது புருவங்கள் உயர்ந்தது
"எங்க ம்மா கிளம்பறீங்க?..." கரகரத்த குரலில் கேட்டான். இரவு முழுவதும் உறக்கம் வராமல் அப்போது தான் உறங்க ஆரம்பித்து இருந்தான். தாய் அழைத்ததும் உடனே அழைப்பை ஏற்று விட்டான்.
"இன்னைக்கு நடேசன் அண்ணனோட பொண்ணுக்கு கல்யாணம் ப்பா, அந்தியூர் போகணும். அப்பாவை கூட்டிட்டு போகலாம் இருந்தேன். பெங்களூர்ல ஒரு மீட்டிங் இருக்குன்னு நேத்தேக் கிளம்பிட்டாரு. டிரைவரோட புள்ளைக்கு உடம்பு சரியில்லையாம். அதனால நானே வண்டியை எடுத்துட்டு கிளம்பலாம்னு இருக்கேன் ப்பா, போயிட்டு வந்துடறேன்..." எனக் கூறி முடிக்கவில்லை எதிர்புறம் கத்த ஆரம்பித்து விட்டான்.
"மா, உங்க உடம்பு இருக்கிற கன்டிசனுக்கு நீங்க தனியா போறதயே யோசிக்கணும் இதுல நீங்களே டிரைவ் பண்றேன்னு சொல்றீங்க. அதெல்லாம் வேண்டாம் நீங்க மட்டும் தான் போகணும்னா அந்த கல்யாணத்துக்கே போகாதீங்க..." என்றான் கோபமாக.
'அய்யோ,இதென்ன டா வம்பா போச்சு...' என நினைத்தவர்
"அவரு நமக்கு ரொம்ப வேண்டியவர் தம்பி, ஆரம்பக் காலத்துல அவர் தான் நமக்கு உதவியெல்லாம் செஞ்சாரு. அப்படியிருக்கும் போது போகாம இருந்தா நல்லா இருக்குமா சொல்லு? நான் வண்டியை எடுத்துட்டு போறதுல உனக்கு விருப்பம் இல்லைன்னா நீயே என்கூட வாவேன். எனக்கும் உன்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணி மாதிரி இருக்கும்..." என்றார். அவரின் குரலில் இருந்த ஏதோ ஒன்று இவனை சரியென்று ஒப்புக் கொள்ள வைத்தது.
பல்லைக் கடித்துக்கொண்டு "சரி வரேன்..." என்றான். அவன் கோபமெல்லாம் தனக்கு பொருட்டேயில்லை என்பதைப் போல நின்றார் அவனது தாய். உண்மையில் அவன் வருகிறேன் எனக் கூறியதே பெரிய விஷயமாக இருந்தது யசோதாவிற்கு. இனி அனைத்தும் அங்கு சென்று பார்த்துக் கொண்டால் போதும் என நினைத்தார்.
விதி(?) தனக்காக வைத்திருப்பதை அறியாமல் அலுவலக வேலைகள், மீட்டிங், தொழில் முறை பேச்சுகள் என்று அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டு தாயுடன் கிளம்பினான்.
யசோதா, சத்திய நாதனுக்கு பிறந்த மகவுகளில் மூத்தவன் சர்வேஷ் அந்திரன். முப்பது வயதின் முடிவில் இருப்பவன். கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்ததும் அவர்களின் சொந்த தொழிலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
தந்தையின் தொழிலை கையில் எடுத்தாலும் அதனை திறம்பட செய்துக் கொண்டிருக்கிறான். இந்தியாவிற்குள் மட்டுமே நடந்துக் கொண்டிருந்த இவர்களின் ஏற்றுமதி தொழில் தற்பொழுது வெளிநாடு வரையிலும் வளர்ந்திருக்கிறது என்றால் அது நம் நாயகனின் கடின உழைப்பாலும், புத்திக் கூர்மையாலும் மட்டுமே.
இரண்டாவது மகள் சஷ்டிகா, தற்போது அவளுக்கு திருமணம் முடிந்து வெளிநாட்டில் இருக்கிறாள். சஷ்டிகா, சத்தியன் தம்பதிக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தையும் இருக்கிறது.
********
ஈரோட்டிலிருந்து நாற்பத்தி ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அந்தியூரை நோக்கி சீரிப் பயந்துக்கொண்டிருந்தது அவனது வாகனம். ஒரு கை ஸ்டைரிங்கில் இருக்க, மற்றொரு கையோ கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டும் அதனை விடுவித்துக் கொண்டும் இருந்தது. ஆடவன் கேசத்தை அழுத்திப் பிடித்த விதமே கூறியது அவனின் கோபத்தின் அளவை.
சில மாதங்களாகவே அந்திரன் அதிகம் வெளியில் செல்வதில்லை. ஏனோ அவனுக்கு அது பிடிக்கவுமில்லை. ஆனால் இன்று தாயின் பேச்சைக் கேட்டு அந்தியூர் வரைக்கும் வர ஒப்புக் கொண்டது ஒரு புறம் எரிச்சலைக் கொடுத்தது. அந்த எரிச்சலை முகத்தில் காட்டியப்படி வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்தான். பாவம் அவனுக்கு தெரியவில்லை அவன் வரவில்லை என்றாலும் யசோதா அவனை வர வைத்திருப்பார் என்று.
அவனையும், சாலையையும் மாறி மாறி பார்த்தபடி வந்த யசோதா மெல்ல செருமி "ம்க்கும், ஆரா மஹால் டா தம்பி. தவுட்டுப்பாளையம், திருவள்ளுவர் நகருண்ணு அண்ணா சொன்னாரு..." மெல்லிய குரலில் கூறினார். தாயின் பேச்சு காதில் விழுந்தாலும் அவரைத் திரும்பியும் பார்க்காமல் தனது வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்தான்.
தன் பேச்சைத் துளியும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாகனத்தை இயக்கிக் கொண்டிருக்கும் மகனை பார்த்தார் யசோதா.
அழைத்து வந்ததற்கே இத்தனைக் கோபம் என்றால் தான் செய்து வைத்திருக்கும் காரியத்திற்கு ருத்ர தாண்டவம் ஆடாதக் குறையாக நிற்பான். அவனது கோபத்தைக் கூட சமாளித்து விடலாம். சட்டென அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டான் என்றால் அனைத்தும் பாழாகி போகும் என நினைத்தவருக்கு உள்ளூர சிறு பயம் எழுந்தது. தன் பயத்தை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். ஏதாவது பேசுவோம் என நினைத்தால் கூட அவனது கோப முகம் அவரைப் பேச விடாது தடுத்தது.
சில தூர பயணித்திற்கு பிறகு மீண்டும் பார்வையை மகனிடம் திருப்பினார்.நெடுநெடுவென உயரம், கோதுமை நிறம், கலையான முகம், அதை பாதி மறைத்திருந்த அடர்ந்த தாடி, கூர் நாசி, திருத்தமான இதழ்கள். கூர்வாளை விட கூர்மையான கண்கள்,தற்போது கோபத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது.
அவனின் கோபத்திற்கு காரணம் தான் தான் என்று நினைத்தவருக்கு தன்னாலேயே நீண்ட நெடிய பெருமூச்சு வெளிவந்தது.
எப்பொழுதும் தொழில் தொழில் என்று ஓடிக் கொண்டிருப்பவன் அல்லவே அவரது மகன். படிப்பை முடித்து விட்டு தொழிலை கையில் எடுத்தான். படிப்படியாக அனைத்தையும் கற்றுக் கொண்டான். தொழிலை கற்க கற்க வீட்டிலிருக்கும் நேரம் சற்றே குறைந்தது. எத்தனை தான் வேலை இருந்தாலும் காலை உணவும், இரவு உணவும் வீட்டில் தான் உண்பான். அதுவும் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்தது.
சொல்லபோனால் அவன் அவனாக இல்லை. என்றும் இதழ்களில் புன்னகையோடு வளம் வருபவன் இல்லையென்றாலும் கண்களில் உயிர்ப்பிருக்கும்.இப்பொழுதெல்லாம் அக்கண்களில் உயிர்பில்லை, கனிவைக் காட்டும் முகம் இப்போதெல்லாம் இறுகியே கிடந்தது.
இதற்கெல்லாம் காரணம் தொழில் தான் என்று நினைக்க அவரொன்றும் சாதாரண யசோதா இல்லையே அந்திரனின் அன்னை அல்லவா, மகனின் மாற்றத்திற்கான காரணத்தை ஆராய்ந்தார். அதில் அவருக்கு கிடைத்த தகவல் உவப்பாக இல்லை.
அத்தனைப் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தையே வழி நடத்திக் கொண்டிருப்பவன் ஒரு சாதாரண பெண்ணிடம் ஏமாந்து, தனக்குள்ளேயே இறுகி கொண்டிருக்கிறான் என்பதை எந்த தாயால் ஏற்றுக் கொள்ள முடியும்.
அதே கணம் இந்நிலைத் தொடர்ந்தால் நிச்சயமாக மகனை இழந்து விடுவோம் என்று பயந்தவர்
அவன் வாழ்வின் மிகப்பெரிய முடிவை அவரே எடுத்தார்.
அடுத்த சில நிமிடங்களில் அந்த மண்டபத்தில் நின்றது இவர்களது வாகனம். அந்தியூரே அவனுக்கு கிராமமாக தான் தெரிந்தது. இதில் அந்த மண்டபத்தை சொல்லவா வேண்டும். கார் பார்க்கிங், ஏசி வசதியோடுக் கூடிய ஒரு சின்ன மண்டபமென்று நினைத்து கொண்டான்.
மண்டபம் வந்ததும் காரை உள்ளே விடாமல் தாயை பார்த்தான். அவனின் பார்வையை உணர்ந்து அவரும் இவனை பார்த்தார்.
"நீங்க போயிட்டு வாங்க நான் இங்கேயே வெயிட் பண்றேன்..." என்றதும் "உள்ளேயே கார் பார்க் பண்ணிடலாம் ப்பா. இந்த ரோடு பாரு ரொம்ப சின்னதா இருக்கு. மத்த வெஹிகள் போறது, வரதுக்கெல்லாம் இடைஞ்சலா இருக்கும்..." என்றார்.
அந்த முப்பதடி தார் சாலையில் இவர்களின் வாகனமே கால் வாசி இடத்தை அடைத்திருந்தது. தாய் கூறுவதும் சரியென தான் தோன்றியது அந்திரனுக்கு.
அதே சமயம் மண்டபத்திற்குள்ளேயும் செல்ல மனம் ஒப்பவில்லை. பெருமூச்சுடன் வேறு எங்காவது வாகனத்தை நிறுத்த முடியுமாயென்று யோசித்தவன் சுற்றிலும் பார்வையை சுழல விட்டான்.
அந்த முப்பதடி சாலையை ஒட்டியே மண்டபத்தின் சுற்று சுவர் இருந்தது. அதன் அருகிலேயே சின்ன காலி கிரவுண்ட் இருந்தது. அதனைத் தொடர்ந்து பல இரண்டடுக்கு மாடி வீடுகள் இருந்ததை கண்டான். பெரிய ஊராக இருக்கக் கூடும் என நினைத்துக் கொண்டே இந்த பக்கம் பார்த்தான் ரோட்டிற்கு சிலடி தூரத்தில் பனை மரங்கள் வரிசைக்கட்டி நின்றிருந்தது.
அதனை ஓட்டியே ஒரு பெரிய தென்னந்தோப்பு இருந்தது. தென்னந்தோப்பின் முடிவில் சில மீட்டர் தூரத்தில் ஒரு ஓட்டு வீடும், அவ்வீட்டிற்கு செல்ல மண் பாதையும் இருந்தது. அப்பாதையின் இரு பக்கமும் தென்னை மரங்கள் வரிசையாக நின்றிருந்தன.
பார்க்கவே அத்தனை ரம்மியமாக இருந்தது. ஒருபக்கம் நாகரிக வளர்ச்சியில் ஜொலித்து கொண்டிருந்தது என்றால் இன்னொரு பக்கம் இயற்கையின் அழகில் ஜொலித்துக் கொண்டிருந்தது. இவையனைத்தும் நொடி நேரத்தில் கவனித்து இருந்தான்.
மௌனமாக சுற்றும் முற்றும் பார்த்தபடி அமர்ந்திருந்த மகனை பார்த்தவர் "என்னாச்சு தம்பி..." எனக் கேட்டார்.
அவரின் குரலில் தன்னிலைக்கு வந்தவன் அவரிடம் ஒன்றுமில்லை என தலையாட்டிவிட்டு அந்த மண் பாதையை பார்த்தான். கார் செல்லக் கூடிய அளவிற்கு தான் இருந்தது ஆனால் காரின் கதி? பெருமூச்சுடன் தனது வாகனத்தை மண்டபத்தின் கார் பார்க்கிங்கில் நிறுத்தியவன் "நீங்க போங்க மா, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..." என்றவன் பின்னாலிருந்த மடிக் கணினியை எக்கி எடுக்க முயற்சித்தான்.
"கார் பார்க்கிங் வரைக்கும் வந்துட்டு உள்ள வரமால் இருந்தா நல்லா இருக்காது தம்பி, இறங்கி வா..." என அழுத்தமாக கூறினார்.
"ப்ச், ம்மா,.."என்று நேரடியாகவே தாயை முறைத்தான். பதிலுக்கு அவரும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார். தாயின் கோபத்தை அறிந்தவன் என்பதால் "ப்ச்,..வாங்க..." என்றபடி காரை விட்டு இறங்கி நின்றான்.
அவன் கிழே இறங்கி நின்றதும் தான் யசோதாவிற்கு நிம்மதியே வந்தது. அதுக் கூட "மாப்பிள்ளை வந்தாச்சு..." சில் வாண்டின் ஆர்ப்பாட்டக் குரலில் அப்படியே நின்றும் போனது.
"மாப்பிள்ளையா? யாரு..." யோசிக்கும் அதே கணம் வெள்ளை வேஷ்டி, சட்டையில், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அவசரமாக வெளியில் வந்தார் ஒருவர். கிளீன் சேவ், முறுக்கிய மீசையென்று பார்ப்பதற்கே அத்தனை கம்பீரமாக தெரிந்தார் அந்த மனிதர்.
'வாங்க, வாங்க மாப்பிள்ளை. நீங்க வரக்குள்ள முகூர்த்த நேரம் முடிஞ்சுருமோன்னு பயந்துட்டே இருந்தேன் மா, சம்மந்தி பக்கத்துல இல்லைன்னா மனம் ப்பாடபட்டிருக்கும்..." ஆர்ப்பாட்டமாக அந்திரனை வரவேற்றவர் யசோதாவிடம் பேசியபடியே, அந்திரனின் கையை உரிமையாக பற்றி முன்னால் நடந்தார்.
என்ன நடக்கிறது என்பதை யூகிக்க நிமிடங்கள் தேவைப்படவில்லை அந்திரனுக்கு. மூளை மரத்து, உணர்வுகள் வடிந்து, மனம் தளர்ந்த நிலை அவனுக்கு. அதுவும் நொடி நேரம் மட்டுமே நீடித்தது. நொடியில் தன்னை மீட்டுக் கொண்டவன் கண்கள் சிவக்க, தாயைப் பார்த்தான். அவரோ இவனைத் துளியும் கண்டுகொள்ளாமல் முன்னால் நடக்க
மீசையின் கையை வெடுக்கென எடுத்து விட்டப்படி "நான் எங்கம்மாகிட்ட தனியா பேசணும்..." கர்ஜனைக் குரலில் கூறினான்.
அவனது குரலில் நிதானமாக நின்ற யசோதா "நீங்க முன்னாடி போங்க அண்ணா, நாங்க வரோம்..." என்றபடி மகனை அழுத்தமாக பார்த்தார்.
தாய் சிங்கமும், சேய் சிங்கமும் ஒன்றையொன்று முறைத்தப்படி நின்றது போல் இருந்தது இருவரும் நிற்கும் விதம். "என்ன நடக்குது இங்க,யாரைக் கேட்டு இதெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க..." மெல்லிய குரலில் சிங்கமென கர்ஜித்தான். தன்னிடம் கலந்து கொள்ளாமல் இப்படியொரு ஏற்பாட்டை எடுத்தது அவனுக்கு தாயின் மீது அத்தனை கோபத்தை கொடுத்தது. அதேகணம் அவனது குரலில் மண்டபம் முழுதும் சின்ன சலசலப்பு ஏற்பட்டது. அந்த சலசலப்பில் அவனது கண்கள் மண்டபத்திலிருந்த கூட்டத்தைப் பார்த்தது.
"யாரைக் கேட்கணும்..." புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டார். அவரது பாவனையில் முகம் இன்னும் இன்னும் கோபத்தில் சிவந்தது.
" என்னைக் கேட்கணும், இது என்னோட வாழ்க்கை ம்மா..." என்றவனை ஆழ்ந்து பார்த்தார்.
தாயின் பார்வை இன்னுமின்னும் எரிச்சலைக் கொடுத்தது. "எனக்கு இதுல துளியும் விருப்பமில்லை..." மெல்லிய குரலில் பிடிவாதமாக கூறினான்.
"அதை பத்தி எனக்கு கவலையில்ல,..." அவனை விட பிடிவாதமாக கூறினார். தாயை ஆழ்ந்து பார்த்தான். அவர் தன் பிடியை தளர்த்தாது நின்றிருந்தார். தாயின் இந்த பிடிவாதத்தைக் கண்ட அந்திரனுக்கு திகைப்பதைத் தவிர வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை.
அதற்கு மேல் வேற்று மனிதர்களின் முன்னால் தாயை மேலும் கடிந்து கொள்ளவும்,எதிர்த்து பேசவும் விருப்பமில்லை. யாரோ ஒருவர் தன் கையையும், காலையும் இறுக்கிக் கட்டி விட்டது போன்ற உணர்வு அவனுக்கு.
இது தான் விதியின் செயலோ!தகுந்த நேரத்தில் மனிதனின் மொத்த உணர்வுகளையும், யோசிக்கும் திறனையும் இழக்க செய்து, தனக்கு தேவையானதை நிறைவேற்றி கொள்வது.
அதற்குள்ளாக உள்ளே சென்ற மீசை வெளியில் வந்து "நேரமாச்சு போலாமா மாப்பிள்ளை..." என்றழைக்க கண்களை இறுக மூடித் த்திறந்தவன் அவருடன் நடந்தான்.
அத்தனை சீக்கிரத்தில் தன் முடிவை ஏற்றுக் கொள்வான் என்று துளியும் எதிர்பார்க்காத யசோதாவின் கண்கள் ஆச்சரியத்தில் அகல விரிந்தது. அதே கணம் நிச்சியம் தான் செய்ததை ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை இருந்தது.
பாவம் அவருக்கு தெரியவில்லை அவர் மகன், அத்தனை சீக்கிரத்தல் அவர் செய்த காரியத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று.
அதேகணம் மணமேடையில் நின்ற சத்திய நாதனோ மனைவியை பார்த்தார். கணவனின் பார்வைக்கு பதில் சொல்லும் விதமாக கண்களை மூடி திறந்தார் யசோதா.
அடுத்தடுத்த நிமிடங்கள் மளமளவென்று சுப காரியங்கள் நடக்க, மணவறையில் மணமகளுடன் அமர்ந்திருந்தான் அந்திரன்.
"வஷா என்னோட வொர்க் ஸ்செடுல் தெரிஞ்சும் நீ இப்படி சொல்றது கொஞ்சம் கூட சரியில்லை, நம்மளோட லவ் கிட்டத்தட்ட எழு..." இத்தனை நேரம் நீண்ட நெடிய பெருமூச்சுடன் கேட்டுக் கொண்டிருந்தவள் அவனின் லவ் என்ற வார்த்தையில் சத்தமிட்டு சிரித்தாள்.
"வாட் லவ்வா?..." சிரிப்புடன் கேட்டவள் அவளே தொடர்ந்தாள்.
"உனக்கு இன்னுமா புரியல, இதுல எங்க லவ் வந்துச்சு? டெய்லி மிட் நைட்ல ஒரு மணி நேரம் பேசி இருப்போம்.பேசனது முழுக்க முழுக்க செக்* லைப் பத்தி மட்டுமே.இதுல எங்க லவ் வந்துச்சு..." இகழ்ச்சியாக கேட்டாள்.
"தம்பி, இப்படி பார்த்துட்டே இருந்தால் எப்படி? தாலியை பிடிங்கோ..." ஐயரின் குரலில் தன்னிலைக்கு வந்தவன் அவர் நீட்டிய கயிறை எவ்வித உணர்வுகளையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் அருகில் அமர்ந்திருந்தவளின் கழுத்தில் கட்டினான்.
****
ஹாய் அனைவருக்கும் வணக்கம்!
அத்தியாயம் 1 பதித்துவிட்டனான்.
படித்தவயல் உங்களுடைய கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி