எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தீராத காதல் அத்தியாயம்-15

NNK-70

Moderator
தீராத காதல் தேனாக மோத-NNK70

அத்தியாயம்-15

கண்கள் மூடி இருக்கையில் சாய்ந்திருந்த இதயசந்திரனுக்கு மூச்சி விடவே சிரமமாக இருந்தது. ஏனென்றால் அவனின் ஒட்டுமொத்த சுவாசத்தையும் பெண்ணவள் ஏற்கனவே பறித்துப் போயிருந்தாள்.

“ நா… நான் உங்கள லவ் பண்ணவே இல்ல இதய், நீங்கச் சொன்ன டீல்காக லவ்வரா நடிச்சேன், எ டீல் இஸ் எ டீல் அவ்ளோதான், தயவு செய்து கட்டாயப்படுத்தி காதல வரவைக்க முயற்சி பண்ணாதிங்க” என்று அவள் கூறிய வார்த்தைகளில் ஆயிரம் சில்லாக உடைந்துப் போயிருந்தான் அவன். எப்படியாவது அவளின் காதலைப் பெற்றுவிட எண்ணியிருந்தவனின் எண்ணம் ஈடேறாமல் போக, மரண வலியை உணர்ந்தான்.

தன் அலைப்பேசி எழுப்பிய சத்ததில் சிந்தை கலைந்தவன், அழைப்பை ஏற்றான். எதிர்முனையில் கூறப்பட்ட செய்தியில் அதிர்ந்தவன் உடனே தன் வாகனத்தில் புறப்பட்டான்.

இதோ சென்னை மாநகரத்தின் மிக முக்கியமான மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதுவும் ஒன்று.

பல உயர்தரப்பட்ட மற்றும் மத்தியதர மக்கள் அதிகளவில் சிகிச்சைக்கு வந்துச் செல்லும் மருத்துவமனை அது. வெளியே அன்று அதிகளவில் பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையை சார்ந்த நபர்கள் குவிந்திருந்தனர்.

ஜீப்பிலிருந்து இறங்கியவன் அனைவரையும் விலக்கி விரைவாக எழாவது மாடியை அடைந்திருந்தான்.

அங்கு ஏற்கனவே பத்துக்கும் மேற்ப்பட்ட காவலர்கள் இருந்தனர்.

அனைவரும் அவனைப் பார்த்துச் சல்யூட் வைக்க, அதை ஏற்றவாறு பரபரப்பாக அங்கிருந்த அறை உள்ளே நுழைந்தான்.

“சார் உடனே எப் ஐ ஆர் போடனும், கஸ்டடில எடுத்து அவங்கள விசாரணைக்குக் கொண்டுப் போனாதான் மீடியா அமைதியாவாங்க, வேற வழி இல்ல சார், ஐம் சாரி” என்று அங்கிருந்த காவல் துறை உயர் அதிகாரிகள் பேசியது அட்சர சுத்தமாக இதய்யின் காதில் விழுந்தது. கேட்டவுடன் துடித்துப் போனான். அவர்களின் கூற்றில் இன்னும் பரிதவித்துப் போனார் ரத்தினம்.

“ எக்ஸ்கியூஸ் மீ ஜென்ட்டில்மென்” என்ற இதய்யின் கம்பிர குரலில் ஒரு நிமிடம் அனைவருமே அவனைத் திரும்பிப் பார்த்தனர்.

மருத்துவமனையின் ஏழாவது தளத்திலிருந்த அந்த ஹாலில் வட்ட மேஜையின் முன்பு காவல்துறை உயரதிகாரிகள் ஐந்து பேர் அமர்ந்திருக்க, அவர்களுக்கு எதிராகக் கலங்கிய விழிகளுடன் அமர்ந்திருந்தாள் மிருணாளினி.

அவர்களுக்குப் பின்னாலிருந்த இருக்கையில் இனியின் தந்தை ரத்தினவேலு படப்படப்புடன் அமர்ந்திருக்க, அவரின் அருகில் கமிஷனர் ரவிபிரசாத்தும் யோசனையில் அமர்ந்திருந்தார்.

“எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல ஒருத்தர் மேல எப்படி சார் எப்ஐஆர் பைல் பண்ணுவீங்க, திஸ் இஸ் அகேய்ன்ஸ்ட் தி லா”(this is against the law) என்றான் இதய் உரத்த குரலில்.

“சந்திரன் இந்தக் கேஸ்ல நீங்க இன்வால்வ் ஆகாதீங்க, வெளியில பிரஸ், மீடியா எல்லாம் நம்மள போட்டுக் கிழிகிழின்னு கிழிக்கிறாங்க, கேஸ் பைல் பண்ணுறத தவிர வேற வழியில்ல” என்றார் அதிகாரி ஒருவர்.

“எந்த விசாரணையும் நடத்தாம, அடிப்படை உண்மை என்னன்ன தெரிஞ்சிக்காம என்னால எப் ஐ ஆர் போட அலோவ் (allow) பண்ண முடியாது சார்” என்றான் திட்டவட்டமாக.

அதில் அதிருப்தியடைந்த அந்தக் காவலர்கள், “நீங்க இந்த விஷயத்துல தலையிடாதீங்க சந்திரன், அப்படி நீங்க இந்தக் கேஸ் ஹேண்டல் பண்ணுற மாதிரி இருந்தா, நாங்க எல்லாரும் விலகிக்கிறோம், நீங்களே பிரஸ் அண்ட் பப்ளிக்க பேஸ் பண்ணிக்கோங்க” என்றனர் கோபமாக.

இதய் அவ்வளவு நேரமும் இனியையே பார்த்துக் கொண்டிருக்க, ஆனால் அவளோ நிமர்ந்துக் கூட அவனைப் பார்க்கவில்லை. அதில் அவனுக்கு மனம் வலித்தது.

“கமிஷனர் சார் வரச்சொல்லி தான் நான் இங்க வந்தேன், நானாக வேற எந்தக் காரணத்துக்காவும் வரல” என்றவனின் கூற்றில் நிமர்ந்து அவனைப் பார்த்தாள் இனி.

தன் முழு உயரத்துக்கு எழுந்து நின்றவன், “கமிஷனர் சாருக்கு ஓகே ன்னா இந்தக் கேஸ நானே ஹேண்டில் பண்ணுறேன், வித் இன் டுவன்டி போர் ஹார்ஸ்ல யாரு கல்ப்ரிட் (Culprit) ன்னு கண்டுப்பிடிக்கிறேன், பிரஸ், மீடியா& பப்ளிக்கன்னு யாரு வந்தாலும் நான் பேஸ் பண்ணிக்கிறேன், இன்கேஸ் நான் சொன்ன டைம்ல என்னால கேஸ முடிக்க முடியலனா, ஐ வில் ரிசைன்” என்றான் உறுதியான குரலில்.

அவனின் குரலில் இருந்த உறுதியும் அவன் கூற்றிலிருந்த தோரணையும் சொல்லாமல் சொன்னது அவன் எளிதில் இந்த விஷயத்தை விடமாட்டான் என்று.

அனைவரின் பார்வையும் கமிஷனரையே நோக்கியிருக்க அவரோ, “அதுக்காகத் தான் சந்திரன் உங்கள இங்க வரச் சொன்னேன். ஐ டிரஸ்ட் யூ, நீங்க இந்தக் கேஸ ஹேண்டில் பண்ண ஒரு நாள் டைம் தரேன், அதுக்கு மேல உங்களுக்கு என்னால் டைம் குடுக்க முடியாது. சோ கோ அஹெட் பாஸ்ட்” என்று தலையசத்துவிட்டு வெளியில் சென்றார். மற்ற காவலர்களும் ஒருவித அதிருப்தியுடனே வெளியில் சென்றனர்.

அனைவரும் வெளியேறி விட அந்த அறையில் ரத்தினவேலும் இனியும் மட்டுமே இருந்தனர். நேராக ரத்தினவேலுவிடம் சென்ற இதய், “அங்கிள், ரவி சார் எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொன்னாரு, நீங்க ஒன்னும் வொர்ரி பண்ணாதீங்க, நான் பாத்துக்கிறேன், இப்போ நான் அவங்ககிட்ட விசாரணை பண்ணனும் சோ ப்ளீஸ் கொஞ்சம் வெளியில இருங்க” என்றான் மிகப் பொறுமையாக.

சட்டென்று அவனின் கையைப்பிடித்த ரத்தினவேலுவோ, “ப்ளீஸ் தம்பி!, எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்துல இந்தக் கேஸ்ல இருந்து என் பொண்ண காப்பாத்துங்க, உங்கள பத்தி ரவி நிறைய சொன்னான், நீங்க நினைச்சா இந்தக் கேஸ் உடனே முடியும்னு, சோ ப்ளீஸ் ஹெல்ப் மீ” என்றார் கெஞ்சலாக.

அதில் ஒரு புன்னகை உதித்தவனோ, “நாளைக்கு கேஸ் முடிஞ்சிடும் நீங்கத் தைரியமா இருங்க அங்கிள்” என்றான்.

அவர் வெளியே செல்ல, இனியின் முன் அமர்ந்தான் இதய். அவளைப் பார்வையாலே வருடியவன், “சொல்லுங்க மிஸ் மிருணாளினி ரத்தினவேல், வாட் ஹேப்பண்ட்?” என்றவனின் அந்நிய விளிப்பில் அவள் உள்ளம் துடித்தது. இருந்தும் எதையும் வெளிக்காட்டாமல், “நே… நேத்து நான் லீவ்ல இருந்தேன், என்னோட ப்ரெண்ட்க்கு ஒரு மெர்ஜென்சி சோ அவளுக்காக நான் டியூட்டிக்கு வந்தேன், அப்போ தான் நாய் கடிச்சு குதறியதா ஒரு பத்து வயசு பையன அட்மிட் பண்ணிருந்தாங்க, யாரோ ஆளுங்கட்சில முக்கிய பொறுப்பில் இருக்கிறவரோட ‘பிட்புல்’ டாக்க(dog) வாக்கிங் கூட்டிட்டு போறப்ப அது அந்தப் பையன கடிச்சி குதறி வச்சிருக்கு, பையன் நார்மல் கண்டிஷன்ல தான் இருந்தான். மெடிக்கேஷன்ஸ கூடக் கரெக்டா தான் ஃபாலோ பண்ணினேன், பட்” என்றவள் அழ ஆரம்பித்தாள்.

“மிஸ். மிருணாளினி, அழுகாம என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க, அப்போ தான் என்னால கேஸ கரெக்டா கொண்டு போக முடியும்” என்றான் கண்டிப்பாக.

அதில் கண்ணீரைத் துடைத்தவள், “ஸ்டேபிளா இருந்த பையன் திடீர்ன்னு செத்துப் போயிட்டான், செக் பண்ணி பார்த்ததுல, அவன் ரத்தத்துல வைரஸ் தொற்று ரொம்ப கலந்து, அது அதிகப்படியான விஷமா மாறி உடம்பு முழுக்க பரவியிருந்தது தெரிஞ்சது, என்னோட கவன குறைவால அவன் இறந்ததா அவனோட அப்பா பிரச்சனை பண்ண ஆரம்பிச்சார். அந்தப் பையனோட அப்பா எதிர்கட்சி வக்கில், அதனால இதை அரசியலா மாத்திட்டாங்க சோ இந்த இஷ்யூ பெரிசாகி மீடியா வரைக்கும் போயிடுச்சு, மேனேஜ்மன்டல, இது என்னோட கவனக்குறைவால நடந்ததா ஒத்துக்க சொல்லி, எந்த ப்ராப்ளம் வந்தாலும் நானா தான் ஃபேஸ் பண்ணிகனும்னு சொல்லிடாங்க” என்றாள் தழுதழுத்த குரலில்.

“அடுத்தவங்க உங்க மேல தப்புன்னு சொல்லிட்டு போகட்டும், அதை விட்டுத்தள்ளுங்க. ஆனா நீங்க என்ன நினைக்கிறீங்க, என்ன நடந்திருக்கும் எனி கெஸ்?” என்றான்.

“என் வொர்க்ல என்னைக்குமே நான் கேர்லெஸ்ஸா இருந்தது கிடையாது, நான் கரெக்டா டைம் க்கு எல்லா டோஸேஜும் குடுத்திட்டேன், பட் இவ்ளோ விஷம் உடம்புல அதிகரிக்க வாய்ப்பே இல்ல, எனக்குத் தெரியாமா ஏதோ நடந்திருக்கு அது என்னன்னு என்னால கெஸ் பண்ண முடியல” என்றாள் யோசனையாக.

“ஹும்… நீங்க மட்டும் தான் அந்தப் பையனக்கு ட்ரீட்மென்ட் பார்த்தீங்களா, இல்ல வேற யாரும் கூட இருந்தாங்களா?” என்றான்.

“சீனியர் டாக்டர் ஒன் வீக்கா லீவ், என் ப்ரெண்டும் லீவ்ல போயிட்டா, சோ நான் மட்டும் தான் கேஸ் பார்த்தேன், மொபைல்ல கார்ட்டூன் பார்த்துகிட்டு அந்தப் பையன் ஆக்டிவா ஸ்டேபிளா இருந்தனால, வேற டாக்டர்ஸோட இன்வால்வ்மன்ட் தேவைப்படல, மெடிக்கேஷன்ஸ் எல்லாமே சீனியர் டாக்டர்கிட்ட அப்புரூவல் வாங்கிட்டுதான் கொடுத்தேன் ”என்றாள்.

மேலும் அவளிடம் சில விஷயங்களைக் கேட்டுவிட்டு மருத்துவமனையில் அவன் விசாரணையைத் துவக்கினான்.

பத்திரிக்கை, ஊடகங்களுக்கு லாவகமாகப் பதில் சொல்லி அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருந்தான்.

அங்குல அங்குலமாகக் கண்களால் அந்த அறையை அளந்தவனுக்கு ஏதோ ஒன்று தட்டுப்பட்டது போல் இருந்தது.

கண்காணிப்பு கேமிராவில் தன் ஆய்வைத் துவக்கினான். அவனின் சந்தேகம் உறுதியானது. இனி இல்லாத நேரத்தில் அந்த அறைக்கு யாரோ வந்து சென்றது தெரியவந்தது. ஆனால் முழு நீள வெள்ளை அங்கி அணிந்திருந்த அந்த உருவத்தைச் சரியாக அடையாளம் காண முடியவில்லை.

தீவிரமான யோசனையில் இருந்தவனுக்கு அவளின் ஞாபகம் வந்தது. அவளைக் காணச் சென்றான்.

அழுதழுது கண்கள் சிவந்து களையிழந்த முகத்தோடு இருந்தவளைக் காண மனமெல்லாம் வலித்தது. இருந்தும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்
அவளுக்கான இரவு உணவுடன் சென்றான்.

“இந்தாங்க, இதுல டிபன் இருக்கு, சாப்பிடுங்க டாக்டர்” என்றவனை பார்த்து வலி மிகுந்த பார்வை ஒன்றை வீசினாள்.

“இ… இல்ல சார், எதுவும் வேணாம்” என்றாள் இனி.

“மேடம் ப்ளீஸ்! நீங்க தைரியமா இருந்தா தான் இந்தப் பிரச்சனைய பேஸ் பண்ண முடியும், எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் என் மேல கொஞ்சம் நம்பிக்கை வைங்க, இப்போ சாப்பிடுங்க” என்று கூறிவிட்டு சென்றான்.

அவன் பேச்சைத் தட்டாது உணவு உண்டவளின் சிந்தனையை அவளவனே ஆக்கிரமித்திருந்தான்.

எவ்வளவு கட்டுப்படுத்தியும், ஊடகங்கள் யூகங்களின் அடிப்படையில் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன.

“இளம் பயிற்சி மருத்துவரின் தவறான சிகிச்சையால் சிறுவன் மரணம்”.“பணக்கார பெண் மருத்துவரின் அலட்சியத்தால் சிறுவன் மரணம்”என்று செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்திற்கும் காவல்துறையினருக்கும் அதிக நெருக்கடி உண்டானது.

இதயசந்திரனை உயர் அதிகாரிகள் ஒருவழியாக்கினர். தனக்காக இவ்வளவு நெருக்கடியையும் பிரச்சனைகளையும் தாங்கிப் பணி செய்பவனை பார்க்கையில் இனியிற்கு கண்கள் பனித்தது.

விடிய விடிய உறக்கம் இல்லாமல் விசாரணையை மேற்கொண்டவனுக்கு கைமேல் பலனும் கிடைத்தது. எல்லா ஆதரங்களையும் திரட்டியவன் உடனே கமிஷனருக்கு அழைத்தான்.

“ சார், அக்யூஸ்ட் யாருன்னு கண்டுப் பிடிச்சாச்சு, நீங்க வந்து செக் பண்ணிட்டா, பிரஸ் அண்ட் பப்ளிக் க்கு இன்பார்ம் பண்ணிடலாம்” என்றான் தன் கம்பிர குரலில்.

ரத்தினவேலுவும், மிருணாளினியும் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
 
Last edited:

santhinagaraj

Well-known member
அச்சோ என்னை இது இப்படி ஒரு பிரச்சனை யார் அந்த கொலையாளி??
 

Advi

Well-known member
யாரா இருக்கும் அது????

இப்ப ரத்தனம்க்கு அவன் மேல ஒரு நல்ல அபிப்பிராயம் வந்து இருக்கும்...
 

NNK-70

Moderator
யாரா இருக்கும் அது????

இப்ப ரத்தனம்க்கு அவன் மேல ஒரு நல்ல அபிப்பிராயம் வந்து இருக்கும்...
வந்து என்ன ப்ரோஜனம் சிஸ்
 
Top