எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தீராத காதல் அத்தியாயம்-16

NNK-70

Moderator
தீராத காதல் தேனாக மோத-NNK70

அத்தியாயம் -16

அந்த அறையிலிருந்த வட்ட மேஜையின் முன்பு பத்துக்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் அமர்த்திருந்தனர். அனைவரின் பார்வையும் இதய்யை நோக்கியே இருந்தது.

“ சொல்லுங்க சந்திரன், எதன் அடிப்படையில இவங்க ரெண்டு பேரையும் குற்றவாளின்னு சொல்லுறீங்க, என்ன காரணத்துகாக இது நடந்தது?” என்றார் ஒரு அதிகாரி அவனைப் பார்த்து.
அதில் மென்னகை உதிர்த்தவனோ,
“ லெட் மீ எக்ஸ்பிளைன் சார்” என நடந்ததைக் கூற ஆரம்பித்தான்.

“இறந்த பையனோட கடைசி டெஸ்ட் ரிப்போர்ட்படி அவன் இறந்தப்போ, உடம்புல அளவுக்கதிகமா விஷம் ஏறியிருந்ததால இறப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது.

சிகிச்சை ஆரம்பித்தபோது எடுத்த ரெண்டு ப்ளட் டெஸ்ட் ரிப்போர்டஸ்க்கும் கடைசியா எடுத்த டெஸ்ட் ரிப்போர்ட்க்கும் ரொம்ப வேறுபாடுகள் இருந்தது.

அதை லேப்ல குடுத்து செக் பண்ணப்போ இது ரொம்ப அசாதாரணமா இருக்கிறதா சொன்னாங்க. இவ்வளவு ட்ரீட்மண்ட் பண்ணியிருக்கப்போ, விஷமானது இந்த அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பில்லைன்னு சில டாக்டர்ஸ் கூடச் சொன்னாங்கக. சோ வேற ஏதோ நடந்திருக்குன்னு உறுதியா நான் நம்பினேன். அதன்படி சிசிடிவி கேமரால ஆய்வு செஞ்சப்போ, அந்தப் பையன் இறக்க அரை மணி நேரம் முன்பா வெள்ளை கலர் லாங் ஜாக்கெட் போட்ட ஒரு ஆளு உள்ள போயிட்டு அவசரமா உடனே வெளியில் வருவது தெரிஞ்சிச்சு. ஆனா கேமரா கோணத்துல அது யாருன்னு சரியா கணிக்க முடியல. அந்தப் பையன் இருந்த அறைய சோதனை போட்டப்போ அந்த வெயிட் கலர் ஜாக்கெட்டோட ஒரு குட்டி பட்டன் மட்டும் கீழ கிடந்து கிடைச்சுது. அதை வச்சு தான் மிருணாளினி யோட சீனியர் டாக்டர் ஆகாஷூம், ஆகாஷ் கார் டிரைவர் மோகனும் தான் அந்தப் பையன எதோ பண்ணிருக்காங்கன்னு கண்டுப்பிடிச்சேன்” என்றான்.
“திஸ் இஸ் சில்லி!, வெறும் பட்டன வைச்சு ஒருத்தர குற்றவாளின்னு சொல்ல முடியாது, ஆதாரம் வேணும்” என்றார் ஒரு அதிகாரி.

அதில் சிரித்தவனோ, “வெயிட் பண்ணுங்க சார், நான் இன்னும் முடிக்கல, ஒரு பட்டன வச்சு யாரையும் அக்யூஸ் பண்ண முடியாது. சீனியர் டாக்டர் ஆகாஷ் ஒன் வீக் லீவ்ல இருந்திருக்காரு, அவரு நேரடியா ஹாஸ்பிட்டல் வரல பட் அவரோட டிரைவர் மோகன் தான் அந்தப் பையனுக்கு இந்த மருந்த இன்ஜெக்ட் பண்ணியிருக்காரு” என்று ஒரு காலி மருந்து குப்பியை காட்டினான் இதய்”. அனைவரும் அதிர்ந்து அவனையே நோக்கினர்.

“டாக்டர் ஆகாஷ் ஒரு ரிசர்ச் பெர்சன், எப்போதும் ஏதாவது புது மருந்துகளைக் கண்டுப்புடிக்கிற ஆராய்ச்சியில் ஈடுப்பட்டிருப்பார் என்பதும், அது சம்பந்தமா அடிக்கடி வெளிநாடு போவார் என்பதும் என்னோட விசாரணையில தெரிஞ்சது.அவரோட அறையை நான் ஆய்வு செஞ்சேன், அப்போ தான் அவரோட ரிசர்ச் ஆர்டிகல்ஸ் எல்லாத்தையும் பார்த்தேன். நிறைய மருந்துகள் அவரோட ரிசர்ச் ப்ராஸஸ்ல இருந்திருக்கு. அது சமந்தமா அடிக்கடி ஜெர்மனி போயிட்டு வந்திருக்காரு. அங்க வாங்குன ஜாக்கெட் தான் இது. இந்த லாங் ஜாக்கெட்டோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா, இது ப்யூர்ளி கஸ்டமைஸ்ட். அதாவது கலர் ஷேட்ல இருந்து, மெட்டிரியல்ல இருந்து, பட்டன்ஸ் வரைக்கும் கஸ்டமர் சொல்லுற ஸ்டைல்ல பண்ணித்தருவங்க. ‘நியூ ஜெர்மினோ’ என்கிற டைலர் மேட் ஷோரும்ல இந்த டிரிப் போனப்போ இத வாங்கியிருக்காரு. அதைப் போட்டுகிட்டு போட்டோ எடுத்தும் இன்ஸ்டால போஸ்ட் பண்ணியிருக்காரு. இந்தப் பட்டன நல்லா உத்துப் பாத்திங்கனா மேல்புறத்துல Aks ன்னு லோகோவோட மோல்டிங் இருக்கும், அடிப்பகுதிய நியூ ஜெர்மினோவ குறிக்கும் வகையில் NG ன்னு அவங்க லோகோ இருக்கும்.

இதே Aks லோகோவ தான், தன்னோட ரிசர்ஸ் லேப்க்கும் லோகோவா வைச்சிருக்காரு.Aks ன்னா ஆகாஷ், கல்பனா, ஷில்பா அதாவது தன் பெயரில் உள்ள முதல் எழுத்தையும், தன் மனைவி குழந்தையோட முதல் எழுத்துகளையும் ஒன்று சேர்த்து அந்த லோகோவ டிசைன் பண்ணிருக்காரு. புதுசா ஆரம்பிச்ச அந்த டைலர் மேட் ஷாப் ப்ரோமோஷனுக்காக மிஸ்டர் ஆகாஷ அவங்க கடை முன்னாடி நிக்க வச்சு போட்டோஸ் எடுத்து அதையும், அவரோட லாங் ஜாக்கெட் அப்புறம் அவருக்குச் செஞ்ச கஸ்டமைஸ்டு வொர்க்ஸ் பத்தி தனித்தனியா போட்டோஸோட விரிவாக்கம் குடுத்திருக்காங்க. இது எல்லாம் அவங்க கம்பெனி வெப்சைட்ல இருக்கு. அந்தப் பட்டன்ல இருக்க லோகோவும் ஆகாஷ் ரிசர்ச் லேப் ஓட லோகோவும் ஒத்துப்போகுது. சம்பவம் நடக்க ரெண்டு நாள் முன்னாடியே ஜெர்மனில இருந்து ரிட்டன் ஆன ஆகாஷ் வீட்ல இருந்திருக்காரு. அவரோட சமீபத்திய ரிசர்ச் வொர்க் ரேபிஸ்க்கான அட்வான்ஸ்டு மெடிசின் கண்டுப்பிடிக்கிறது தான். அதுக்காக அவர் ஒரு காம்பினேஷன கண்டுப்பிடிச்சி, அத டெஸ்ட் பண்ண காத்துகிட்டுருந்த சமயத்துல தான், பிட்புல் டாக் கடிச்சு ஒரு பையன் அட்மிட் ஆனா விஷயம் அவருக்கு தெரிஞ்சிருக்கு. தன்னோட ஜூனியர் டாக்டர் மிருணாளினிக்கு அவர் தான் மெடிசனும் ரெபர் (refer) பண்ணியிருக்காரு.

எல்லாம் கரெக்டா போயிட்டிருந்தப்போதான், திடீர்னு அவருக்கு ஒரு யோசனை, தன்னோட ரேபிஸ் மருந்த அந்தப் பையனுக்குப் போட்டு டெஸ்ட் பண்ண முடிவு பண்ணி தன்னோட விசுவாசியான மோகன் கிட்ட மருந்த கொடுத்து அதை ஊசியின் மூலம் அந்தப் பையனுக்குச் செலுத்த சொல்லி அனுப்பிருக்கார். விடியக் காலையில ஆட்கள் நடமாட்டம் கம்மியா இருந்தப்போ ஹாஸ்பிட்டல் வந்த மோகன், தன்னை யாரும் பார்த்திடக்கூடாதுன்னு கார்ல இருந்த ஆகாஷோட ஜாக்கெட்ட போட்டுட்டு போய் அந்த ஊசியைப் போட்டிருக்கார்.மருந்தோட வீரியம் தாங்காத அந்தப் பையன் இறந்துட்டான்” என்று இதயசந்திரன் விவரித்தபோது அனைவரும் அதிர்ந்து போயினர். மிருணாளினி உட்சபட்ச அதிர்ச்சியில் இருந்தாள்.

“ மீதி எல்லா விஷயத்தையும் மிஸ்டர் ஆகாஷ் உங்களுக்குச் சொல்லுவார்” என்று ஆகாஷை பார்த்துப் புருவம் உயர்த்தினான்.

அதைத் தொடர்ந்து ஆகாஷ் வாக்குமூலம் அளிக்கத் துவங்கினான்.

“ இந்த ஹாஸ்பிட்டல அஞ்சு வருஷமா வேலை பார்த்திட்டுருக்கேன், மார்கெட்ல இல்லாத புதுவகை காம்பினேஷன்ல புதுக புதுசா மெடிசின் கண்டுபிடிக்கிறத்துக்காக ஒரு ஜெர்மன் கம்பெனியோட கான்டிராக்ட் சைன் பண்ணியிருந்தேன். அந்தக் கம்பெனிக்காகச் சில மெடிசன்ஸ் கண்டுப்பிடிச்சி பேட்டண்ட்டும் (patent) வாங்கினேன்.

அப்போதான் அவங்க ரேபிஸ்ச இன்ஸ்டன்டா குணப்படுத்தக்கூடிய அட்வான்ஸ்டு மெடிசின் ஒன்ன கண்டுப் பிடிக்கனும்னு சொல்லி நிறைய பணம் கொடுத்தாங்க.

அதுக்கான ரிசர்ச் ரிப்போட்ட அவங்ககிட்ட நேர்ல காட்டி மேலும் பணம் வாங்க போனேன். அப்போதான் அந்த ஒயிட் ஜாக்கெட்ட கூட வாங்கினேன். ஆனா என்னோட ரிசர்ச்ல அவங்களுக்கு திருப்தி இல்ல, அதுக்கு மேல பணம் தர மாட்டேன்னு சொல்லிடாங்க, என்ன பண்ணுறதுன்னு தெரியாம நான் திரும்பி வந்தப்போ தான், நாய் கடிச்சு ஒரு பையன், நான் டியூட்டி பாக்குற வார்டுல அட்மிட் ஆனத தெரிஞ்சிக்கிட்டேன். நான் நேர்ல போனா மாட்டிக்க்குவேன்னு என்னோட டிரைவர் மோகன அனுப்ப முடிவு செய்தேன்.

என்னோட எல்லா ரிசர்ச் வொர்க்கும் அவனுக்குத் தெரியும் அதானல நம்பி அவன அனுப்பி வைச்சேன். அவன் அங்க போன டைம்ல மிருணாளினிக்கு கால் பண்ணி டைவர்ட் பண்ணிட்டேன். மோகனும் ஊசி போட்டுட்டு வந்திட்டான் பட் என்னோட டெஸ்ட் ஃபெயில் ஆகிடுச்சு. என்னோட மெடிசின் படி ஒரு டோஸ் மருந்து போட்டா, பாடில திடீர்னு ம்யூடேஷன்(mutation) நடந்து, விஷம் அதிகமாகும் அப்போ மருந்துகுள்ள இருக்க சீரம் (Serum) ஆட்டோமேட்டிகா பாடில இருக்க நோய் எதிர்ப்பு சக்திய தூண்டிவிட்டு தானாவே அந்த விஷம் முறிஞ்சு போகுற மாதிரி ரெடி பண்ணினேன், பட் மருந்து வேலை செய்யாம போயிருச்சு.பையன் திடீர்னு செத்ததால அவனோட அப்பா மீடியா வரப் போயிட்டாரு, ஆனா டியூட்டில மிருணாளினி இருந்ததால எல்லா பழியும் அவங்க மேல விழுந்திருச்சு.

மிருணாளினியோட அப்பா பெரிய பணக்காரர் அதிகம் செல்வாக்கு உள்ளவர். அதனால அந்தப் பிரச்சனைய அவங்க பார்த்துப்பாங்கன்னு அசால்டா இருந்துட்டேன், பட் பையனோட அப்பா ப்ரெஷர் பண்ணி, போலீஸ் இதுல இந்த அளவுக்குத் தலையீடுவாங்கன்னு நினைக்கல” என்று நடந்ததை ஒப்புவித்தான்.

“ இந்தக் கேஸ்ல இவங்க ரெண்டு பேரும் தான் குற்றவாளின்னு நிரூபிக்க இந்தச் சிசிடிவி புட்டேஜ், அவரோட ஜாக்கெட்&பட்டன், மோகன் இங்க வந்ததுக்கான எவிடன்சா அவனோட செல்போன் சிக்னல், அந்த டைம்ல ஆகாஷ் ஹாஸ்பிட்டல்க்கு எதிர்ல இருந்த ஹோட்டல இருந்ததுக்கான செல்போன் சிக்னல், கால் ரெஜிஸ்டர் மத்த எல்லா தகவலும் இதுல இருக்கு, திஸ் கேஸ் இஸ் ஓவர் நவ், இப்போ நீங்கத் தாரலமா எப் ஐ ஆர் போடலாம்” என்றான் மிடுக்காக.

அவன் இவ்வளவு எளிதாக இந்த வழக்கை முடிப்பானென யாருமே எதிர்பார்க்கவில்லை. அனைவரின் பாரட்டையும் பெற்றவன், அங்கிருந்த இனியிடம் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை.

“ரொம்பநன்றி தம்பி. உங்களுக்கு நாங்க ரொம்ப ரொம்ப கடமைபட்டிருக்கோம்” என்றார் ரத்தினவேல் அவன் கையைப் பிடித்தவாரே.

அவ்வளவு பணம் செல்வாக்கு இருந்தும் அவரால் இந்த விஷயத்தில் ஒன்றுமே செய்ய முடியாமல் போனது, மீடியாவின் தலையிட்டால் அவருக்கு யாராலும் உதவ முடியாமல் போக, அசாதரண சூழ்நிலையால் எந்தச் சிபாரிசும் எடுப்படாமல் போனது. இப்படிபட்ட நேரத்தில் ஆபத்பாந்தவனாகத் தன் மகளைக் காப்பாற்றிய இதயசந்திரனை நினைத்து மனம் மகிழ்ந்தது.

“ என்ன அங்கிள் பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுறீங்க!, ரவி சாரோட ப்ரெண்ட் நீங்க, உங்களுக்காக இதுக்கூட நான் செய்ய மாட்டேனா?” என்று புன்னகைத்தான்.

“ உங்களுக்கு இனிய முன்னாடியே தெரியுமாமே” என்றார் ரத்தினவேல்.

“ஆமா சார்!, மேடத்த எனக்கு முன்னாடியே தெரியும். கொஞ்ச நாளா அவங்க கன்ட்ரோல்ல தான் இருந்தேன்” என்றான் ஒரு மாதிரியாக.

அதை கேட்டவுடன் அருகில் நின்றுக் கொண்டிருந்த இனிக்கு ‘பக்’ என்றானது.

“ஐ மீன், நான் அடிபட்டு அட்மிட் ஆகியிருந்தபோ, அவங்க தான் டியூட்டி பார்த்தாங்க, அப்போ தெரியும்” என்று சமாளித்தான்.

இனியிற்க்கு அப்போதுதான் நிம்மதியானது.

“மிஸ்டர் சந்திரன்! யூ ஹேவ் எ கில்லிங் ஸ்மைல், ஐ லைக் இட், கீப் இட் அப்” (You have a killing Smile, i like it, Keep it up) என்றார் ரத்தினவேல் புன்னகைத்தவாரே.

அதில் பெரியதாக இதழ் விரித்துச் சிரித்தவனோ, “அங்கிள் கொஞ்சம் பார்மாலிட்டிஸ் இருக்கு அதை முடிச்சிட்டு நீங்க உங்க பொண்ண கூடிட்டுப் போகலாம்” என்றவன் அடுத்தடுத்த வேலைகளில் இறங்கினான்.

மிருணாளியிடம் சில தகவல்களைப் பெற்றுக் கொண்டு அவளைக் கிளம்ப சொன்னான் இதய்.தன்னிடம் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் வேலையிலேயே கவனமாய் இருந்த சந்திரனை நினைத்துக் கவலைக் கொண்டாள். இருந்தும் தந்தை இருந்ததால் ஒன்றும் பேச முடியவில்லை.

அங்கு வேலைகள் முடிந்தவுடன் இதய் கிளம்ப, இனியும் அவனோடே சேர்ந்து நடந்து வந்தாள். ஒன்றாக வரும் இருவரையும் பார்த்த ரத்தினவேலுவிற்கு மனதில் ஏதோ ஒர் சொல்ல முடியாத உணர்வு ஏற்ப்பட்டது.

தந்தையுடன் கிளம்ப சென்றவள் பின் எதோ நினைத்தவளாக அவனிடம் திரும்ப வந்து “தேங்கஸ்” என்றாள்.

அவன் பதிலேதும் சொல்லாமல் அவளைக் கடந்துச் செல்ல, “எதாவது சொல்லிட்டு போங்க இதய்” என்றாள் மெல்லிய குரலில்.

அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்தவனோ, “இன்னையோட நம்ம டீல் போட்ட முப்பது நாள் முடியிது” என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.
 
Last edited:

santhinagaraj

Well-known member
ரத்தினம் எவ்வளவு பெரிய பிரச்சனைல இருந்து உங்க பொண்ண காப்பாத்தி இருக்கா, இதய்.
அதான் அவங்க ஜோடியா பாக்கும்போது உங்களுக்கு உள்ளுக்குள்ள எது தோணுதுல சீக்கிரம் ரெண்டு பேருக்கு கல்யாணம் பண்ணி வச்சிருங்க பிரச்சனை இல்லாம
 

NNK-70

Moderator
ரத்தினம் எவ்வளவு பெரிய பிரச்சனைல இருந்து உங்க பொண்ண காப்பாத்தி இருக்கா, இதய்.
அதான் அவங்க ஜோடியா பாக்கும்போது உங்களுக்கு உள்ளுக்குள்ள எது தோணுதுல சீக்கிரம் ரெண்டு பேருக்கு கல்யாணம் பண்ணி வச்சிருங்க பிரச்சனை இல்லாம
நமக்கு தெரியுது பட் அவருக்கு அது புரியனுமே சிஸ்
 
Top