எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

யுத்தம் செய்வோமா யுவராணி

santhinagaraj

Well-known member
யுத்தம் செய்வோம் யுவராணி

விமர்சனம்

குடும்பம், பாசம், வெறுப்பு சஸ்பென்ஸ் கலந்த விறுவிறுப்பான கதை.

யுவனி வெளிநாட்டில் தனியே தங்கி வேலை செய்யும் தைரியமான பெண். வேலையின் போது சோசியல் மீடியாவில் ஏற்படும் கருத்துப் பரிமாற்றத்தில் பழகும் வினோத்தின் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது அது காதலா என்று உணரும் முன்பே, தனது அக்காவின் இறப்பு செய்தி கேட்டு தாய்நாடு திரும்புகிறாள்.

அக்காவிற்கு என்ன ஆச்சு ஏன் இறந்தால் என்ற குழப்பத்தில் இருக்கும் போதே அக்காவின் காரியத்திற்காக அவளின் மாமியார் வீட்டிற்கு செல்லும் போது எவனின் சம்மதம் இன்றி அவளின் கழுத்தில் கட்டாயப்படுத்தி தாலி கட்டி விடுகிறான் ஆர்வி😔😔😔

யுவனி அந்த கல்யாணத்தை ஏற்க மறுத்து முரண்டு பிடிக்க அவளின் அக்காவோட குழந்தையை காரணம் காட்டி அவளை ரொம்ப கண்ட்ரோல் படுத்தி வைக்கிறான்.. குழந்தையையும் கண்ணில் காட்டாமல் யுவனியையும் ரொம்ப கண்ட்ரோல் பண்ணுகிறான் ஆர்வி.
ஒவ்வொரு விஷயத்திலும் யோனியை ரொம்ப கண்ட்ரோல் பண்ணி அவளை டார்ச்சர் பண்ணி அழ வைத்துக் கொண்டிருக்கும் ஆர்வி அவளுடைய போட்டோவை காதலுடன் பார்த்து வருடிக் கொண்டிருக்கிறான்.

கண்ணில் காட்டாத குழந்தை உயிருடன் இருக்கிறதா இல்லை குழந்தை என்ற பெயரை வைத்து ரொம்ப டார்ச்சர் பண்றானா என்ற குழப்பத்தோடு, அவ மேல அவ்வளவு காதலை வைத்துக் கொண்டு ஏன் அவளை இவ்வளவு டார்ச்சர் பண்றான்? வினோத்தின் மீதான உணர்வை எவ்வாறு உணர்கிறாள்?
யோனி அக்காவின் இறப்பிற்கு காரணம் என்ன?
இப்படி பல கேள்விகளோடு ரொம்ப சஸ்பென்சோட கதை நகர்த்திய விதம் ரொம்ப ரொம்ப அருமை 👏👏👏

ஆர்வி யுவனிக்கு அவ்வளவு கட்டுப்பாடு விதித்து காயப்படுத்தும் போதும் அவனை சரிக்கு சரி எதிர்த்து நிற்கும் யுவனியின் கெத்து செம்ம 👏👏👏

எவனையை சூரோடு சூராக நிறுத்தி கட்டாய தாலி கட்டும் போதும், அவளை கட்டுப்பாட்டத்தி காயப்படுத்தும் ஒவ்வொரு சீன்லையும் ஆர்வி மேல செம கோவம் வருது 😡😡😡

நிறைய கேரக்டர்களை வைத்து அவர்களை சரியான விதத்தில் நகர்த்திய விதம் சூப்பர் 👌👌👌

எல்லாரையும் கண்பார்வையிலேயே கட்டுப்படுத்தும் ஆர்வியையும் கலங்க வைத்து கண்ணில் தவிப்போடு மன்னிப்பு கேட்க வைத்த யுவனியின் கெத்து செம்ம 👏👏👏

தலைப்புக்கு ஏற்றபடி ஆர்வி யுவனியன் யுத்தம் நல்லா இருந்தது

ஆரம்பம் முதல் இறுதி வரை ரொம்ப விறுவிறுப்பாக கதையை நகர்த்திய விதம் சூப்பர் 👌👌👌


வாழ்த்துக்கள்💐💐💐
 
Top