எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

யுத்தம் செய்வோமா யுவராணி

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK96
யுத்தம் செய்வோமா யுவராணி
யுவனி... பலதரப்பட்ட ஊர்களுக்கு பயணித்து அவற்றின் அழகையும் பெருமையையும் ஆர்ட்டிகளாக பத்திரிகையில் எழுதும் ஜர்னலிஸ்ட்..
அடக்கு முறையை எப்பொழுதும் விரும்பாதவள்.. மனைவியின் தங்கையிடம் தன்னை தத்துக் கொடுத்த தந்தையை எதிர்த்து நிற்பதிலேயே இவளின் குணம் புரிகிறது.. இவளின் ஒவ்வொரு கேள்விக்கும் யாராலும் பதில் சொல்ல முடியவில்லை ஆனாலும் சூழ்நிலை கைதியாக சிறைப்பட்டிருக்கிறாள் இவள்.. அதற்கு காரணம் ஒரே ஒருவன் அவன் ஆர் வி என்னும் ராஜ வினோதன்..
வீட்டிலும் அலுவலகத்திலும் அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கிறான்.. வீட்டில் உள்ள பெரியோர்களும் இவன் சொல்படியே நடக்கிறார்கள்.. தன்னை யார் என்று தெரியாத முன் பின் அறிமுகம் இல்லாத யுவனியை இக்கட்டில் நிறுத்தி சுவர் உடன் சாய்த்து இரு வீட்டு பெரியோர்கள் முன்பும் கட்டாய தாலி கட்டி மனைவியாக்கி கொள்கிறான்.. இவனின் அடாவடியில் சிலிர்த்து எழும் யுவனி நண்பன் நிவாஸ் துணையுடன் இவன் மீது வழக்கு தொடர்ந்தாலும் அவளைக் கொண்டே அதிலிருந்து பின்வாங்க வைக்கிறான் ஆர் வி.. இதற்கிடையில் விபத்தில் பலியாகி இருக்கும் தன் அக்காவின் வாழ்வில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமும் யுவணியை வாய் மூட வைத்திருக்கிறது.. தன் அக்கா கணவனான ஆர் வி யின் மூத்த சகோதரனான நித்ய வினோதனின் மீது சந்தேகம் இருந்தாலும் அவனின் அமைதியான குணம் இவளுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.. ஆர் வி தனக்கு முன்பே பழக்கமானவனோ என்ற சந்தேகம் அவள் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது.. அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைத்ததா கட்டாய திருமணம் முடித்த ராஜ வினோதனுடன் வாழ்வை அமைத்துக் கொண்டாளா யுவனி என்பது கதையில்..
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை 👏 நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹
Good luck 🥰💐🌹
 
Top