எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பார்தவி -12 கதைத்திரி

NNK 67

Moderator
பார்தவி-12


“மிதிலாவை, ஒருவேளை தஷான்தான் ஏதாவது செய்திருப்பானோ..?” என்று, யோசித்துக்கொண்டிருந்த ராகவிடம் ஓடிவந்த நந்தனோ அவனது கையிலிருந்த ஒருபொருளைக்காட்ட, அதைக்கண்டு ஒருகணம் அதிர்ச்சியாகிநின்றான் ராகவ்.. ஆம்..! நந்தன் ராகவ்விடம் காட்டியது, இறுதியாக மிதிலாவை தான் பார்த்தபோது அவள் அணிந்திருந்த புடவையைத்தான்..! ராகவிற்கு மிகவும்பிடித்த வெளிர் நீலநிற எம்ப்ராய்டரி பூ வேலைப்பாடுகள் நிறைந்த காட்டன்புடவை அது..! திருமணமாகி முதன்முதலில் மிதிலாவுடன் வெளியே சென்றபோது, தனக்குபிடித்த அந்தபுடவையை மிதிலாவுக்கு பரிசளித்திருந்தான் ராகவ்..


அதனைக்கண்டவனோ, அதிர்ச்சி தெளிந்து வேகமாக நந்தனின் கைகளிலிருந்த புடவையை வாங்கி, அதனுடைய முந்தானைப்பகுதியை பார்க்க, அதில் தன்னவளின் கைவண்ணத்தால் ஏற்கனவே எம்ப்ராய்டரி செய்யப்பட்டு ‘ராகவ்’ என்றபெயர் எழுதியிருக்க, அதனைக்கண்டவனுக்கோ அப்போதுதான், மிதிலா காணாமல் போகவில்லை..! மிகவும் ஆபத்தில் இருக்கிறாள்..! என்ற விஷயமே புரிந்தது.. அதன்பிறகு நந்தனை பார்த்தவனோ, “டேய்..? இது மிதிலாவிற்கு, நான் ப்ரெசென்ட் பண்ண புடவைடா..! இதெப்படி உன்கிட்ட..?” என்று கேட்க நந்தனோ, “தெரியும்டா..! இதுதான் மிதிலாவுக்கு நீ, முதல்முதலாக வாங்கிதந்த புடவையென்று எனக்கும் தெரியும்டா..! நான் மிதிலாவை தேடுவதற்காக நமக்குத்தெரிந்த நம்பிக்கையான ஆட்களிடம், ரகசியமாக தேடசொல்லி அனுப்பியிருந்தேன்டா..! அவங்கதான், எதற்கும் உனக்கும் தஷானுக்கும் இருக்கும் பிரச்சனையைபற்றி யோசித்து, தஷானின் வீட்டை நோட்டமிட்டபோது, அவனது வீட்டருகிலிருந்த குப்பைதொட்டியில் இந்த புடவை கிடைத்ததென்று என்கிட்ட எடுத்துட்டுவந்து கொடுத்தாங்க..! டேய் மச்சி..? கண்டிப்பா இந்த விஷயத்துல தஷானுக்கு சம்பந்தம் இருக்குடா..!” என்று சொல்ல, அதனை ஆமோதித்த ராகவ்வோ, “ஆமாம்டா..! மிதிலா காணாமல்போனதுக்கு ரெண்டுநாளைக்கு முன்தான் தஷான், ஜெயிலிலிருந்து ஜாமினில் வெளியே வந்திருக்கான்..! இப்போதான், எனக்கு டிடெக்டிவ் கூப்பிட்டு சொன்னாங்க..! இவ்வளவுநேரம் அதைப்பற்றித்தான் நானும் யோசித்துக்கொண்டு இருந்தேன்..! இப்போ இந்த புடவையை பார்க்கும்போது, இதில் கண்டிப்பா அவனோட தலையீடு இருக்கணும்..!” என்று சொல்ல,


நந்தனோ, “அவன் ஏன்டா இந்தளவுக்கு இறங்கி மிதிலாவை கடத்தனும்..?” என்று கேட்க ராகவ்வோ, “ஏன்டா கடத்தி இருக்கக்கூடாது..! இவ்வளவுநாள் அவனுங்க அனுபவச்சிட்டுயிருந்த சொத்துமொத்தமும் மிதிலாவோடது..! திடீரென்று மிதிலா வந்து, அந்த சொத்துக்கு சொந்தம் கொண்டாடும்போது, அவங்க நடுத்தெருவுலதானே போகணும்..? அதற்கு பயந்துதான் தயானந்தம், அவனோட பையனுக்கு மிதிலாவை கல்யாணம் பண்ணிவைக்க ஏற்பாடு செஞ்சிருக்கான்..! அதை நாம், மத்தவங்க முன்னாடி போட்டு உடைச்சு அவங்க முகமூடியை கிழிச்சதும், சொத்தும் போய்.. மான மரியாதையும் போய்.. இப்போ ஜெயிலுக்கும் போயிட்டானுங்க..! தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை பழி தீத்துக்கறதுக்காகதான் மிதிலாவை, தஷாம் கடத்தியிருக்கான்..!” என்று சொல்ல, ராகவ் கூறியதைக்கேட்டு நடந்தவற்றை ஒப்பிட்டுப்பார்க்கையில், எல்லாம் திட்டமிட்டு நடந்த செயல் போலவே நந்தனுக்கும் தோன்ற, “ஆமாம்டா மச்சி..! நீ சொல்றதுதான் சரி..! இதை அந்த நாய்தான் பண்ணியிருக்கணும்..!” என்று சொல்ல,


ராகவ்வோ தனது முகத்தை வில்லத்தனமாக வைத்துக்கொண்டு கண்களில் இரத்தசிவப்பேற, “இல்லடா..! நானும், பழையபடி எந்த வம்பும்,வழக்கும் வேண்டாம்..! பேசாமல் பிசினஸை மட்டும் கவனித்துக்கொண்டு, என் வேலையை பார்த்துட்டு இருக்கலாம்..! என்று நினைத்தால், இவனுங்க என்னை சும்மா இருக்க விடமாட்டானுங்க போல..? என் கையால், அவனுங்களை பலமாக கவனித்தால்தான் அடங்குவானுங்க போல..?” என்று சொல்லிவிட்டு, “எப்போ அவன், என் பொண்டாட்டி புடவையில் கைவைத்தானோ..? அப்போவே அவன் முடிவு என்னோட கையில்தான்டா..! என்னதான் அவனுக்கு, ஆத்திரமும் கோபமும் பழியும் பகையும் இருந்தாலும், அதைக்காட்ட வேண்டியது என்கிட்ட..! போயும்போயும் ஒரு பொண்ணுகிட்ட அவனோட வீரத்தை காட்டிருக்கான்..! கடந்த 7நாளாக என் நிம்மதியை கெடுத்த அவனுக்கு, இனி நான் யாருன்னு காட்டுறேன்..!” என்று சொல்ல,


அந்தநேரம் சரியாக அங்குவந்த பரத்தோ அவர்களைப் பார்க்க, ராகவ் வழக்கம்போல் தன் தலையை வேறுபுறம் திருப்பிக்கொள்ளவே, நந்தனோ வந்திருந்த பரத்தைக்கண்டு, “வா.. பரத்..! பார்த்தீங்களா..? இதெல்லாம் அந்த தஷானும், அவங்க அப்பாவும் பண்ண வேலைதான் போல..! இதோ..? அவங்க வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் குப்பைத்தொட்டியில் கிடைத்த மிதிலாவோட புடவை..! என்று சொல்ல, அதனைபார்த்த பரத்தோ, “நினைச்சேன் நந்தா..! இந்த வேலையை கண்டிப்பா அந்த நாய்தான் பண்ணியிருக்கனுமென்று, எனக்கும் ஏற்கனவே சந்தேகம் இருந்தது..! இருந்தும், ஜெயிலில் இருக்கானே..? அவனால் என்ன பண்ணமுடியும்..? என்று யோசித்து, அசால்டாக விட்டுட்டேன்..! ஆனால், அந்தநாய் ஜாமினில்வந்து, வெளியில் யாருக்கும் தெரியாமல், நம்மவீட்டு பொண்ணையே கடத்துற அளவுக்கு துணிஞ்சிருக்கான்..! அவனை சும்மா விடகூடாது நந்தா..! வாங்க..! நானும் உங்களோடு வரேன்..!” என்று சொல்ல அதனை அமோதித்தவர்களோ, அடுத்தநிமிடமே மிதிலாவை காப்பாற்றுதற்காக அங்கிருந்து கிளம்பினர்..


இங்கு மிதிலாவின் முன்நின்றிருந்த தஷானோ, “என்ன டார்லிங்..? நீ இங்குவந்து இன்னையோட ஏழு நாளாயிடுச்சு..! ஆனால், பாரு..? உன்னைபற்றி எந்த கவலையுமில்லாமல், இருக்காங்க..! யாரும் உன்னை தேடலையே..? இப்படியே போனால், கூடிய சீக்கிரம் உன்னை மறந்தே போயிடுவாங்க..! அதுக்கப்புறம் மிதிலா என்ற ஒருத்தி இருக்காளா..? என்று, யாரும் யோசிக்கக்கூட மாட்டாங்க..! பேசாமல் இனி என்னோடு ஒத்துழைச்சு, எனக்கு இசைந்துகொடு..! உனக்கு என்ன வேணுமோ..? அதை நான் பண்றேன்..!” என்று ஆசை வார்த்தைகள் பேசிட,


அவனை அருவருப்பாக பார்த்த மிதிலாவோ, “ச்ச்சீ.. நீயெல்லாம் ஒரு ஆம்பளையா..? போயும்போயும் ஒரு பொண்ணை கடத்திவந்து, மத்தவங்களை மிரட்டி பூச்சாண்டி காட்டுற..! நீ சரியான ஆம்பளையாக இருந்தால், என் புருஷன் முன்னாடி தைரியமாக, நான்தான் உன் பொண்டாட்டியை கடத்தி இருக்கேன்னு போய் சொல்லுடா..! அப்புறம் தெரியும் அவர் யாருன்னு..!” என்று சொல்ல கோபம்கொண்ட தஷானோ, “என்னடி..? பெரிய இவள்மாதிரி பேசுற..? உன் புருஷன் என்ன கடவுளா..? விஷயம் தெரிஞ்சு வந்து, என் உயிரை எடுத்துட்டுவானா..? அவன் சரியான ஆம்பளையாக இருந்தால், என்னை கண்டுபிடித்து இந்த இடத்துக்கு வரச்சொல்லு..! யார் ஆம்பளைன்னு அப்போ நீ பார்ப்ப..?” என்று சொல்ல,


கோபத்துடன் இளக்காரமான சிரிப்பொன்றை சிந்திய மிதிலாவோ, “டேய்..? நீ, ஒளிஞ்சு வாழ்ந்துட்டு இருக்குற நரி..! உன்னோட வீரவசனம் எல்லாம் இங்கே செல்லாது..! என் புருஷன் யாருக்கும் பயப்படாத சிங்கம்..! முடிஞ்சா அவர்கிட்டபோய் சரிக்கு சரி நில்லு..! இப்போ உனக்கு என்ன வேணும்..? நான்தானே..? நீ, என் புருசனுடன் சண்டைபோட்டு, அவரை தோற்கடிச்சுட்டு வா..! அதுக்கப்புறம், நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்..! இந்த உடம்புதானே உனக்கு வேணும்..? நானே அதை உனக்கு தரேன்..! எங்கே அவர்முன்னே போய், நீ நில் பார்க்கலாம்..? என்று ஏளனமாக பேச,


கணவனின் வீரத்தின்மீது அசையாது வைத்திருக்கும் அவளது நம்பிக்கையைக்கண்டவனுக்கு வெறியேறவே, அதனை கட்டுப்படுத்திக்கொண்டு மிதிலாவின் முன் நகைப்போடு நின்றவனோ, “கூல்..பேபி..! ஓவரா டென்ஷனாகாதே..! இப்போ என்ன..? உன் புருஷன்கிட்ட நான் தோத்துப்போயிட்டேன்னே வச்சுக்கோ..! அதனால் எனக்கு எந்த பெரிய லாசும் கிடையாது..! நீ இங்கிருந்து போனாலும், போகவில்லையென்றாலும் போகப்போறது, உங்க ரெண்டு பேரோட மானம்தான்..! என்கிட்ட சரியா ஏழுநாள் கிட்டத்தட்ட ஏழு ராத்திரி நீ இருந்திருக்க..! நான் உன்னை தொடவே இல்லைதான்..! ஆனாலும், இந்தஊர் உன்னை நான் அனுபவிச்சிட்டேன்னுதான் பேசும்..! ஆனானப்பட்ட சீதையைவே சந்தேகப்பட்ட உலகம் இது..! உன்னைமட்டும் விட்டுவிடுமா..? என்ன..? எப்படி நீயும் சீதையை மாதிரி அக்னிபிரவேசம் செஞ்சு, நீ உத்தமின்னு மத்தவங்களுக்கு நிரூபிக்கபோறியா சொல்லு..?” என்று நக்கலாக பேச, அவன் கூறியதைக்கேட்டு கோபம்வந்தாலும், அவன்கூறிய விஷயம் நிஜம்தானே..? இத்தனை நாட்களாக யார் கண்களுக்கும் தெரியாமல், இவனுடைய இடத்தில் என்னை மறைத்துவைத்திருந்தாலும், ஊரார் அதை ஏற்றுக் கொள்வார்களா..?” என்று நினைத்தபடி மிதிலா நின்றிருக்க, தஷானோ மேலும் மிதிலாவைக்கண்டு, “அதனால எப்படியும் உன்னோட மானம் போகப்போறது உறுதி..! எனக்கு நீ கிடைக்கலைன்னாலும், நீயும் உன் புருஷனும் இனி நிம்மதியா வெளியே தலைநிமிர்ந்து கௌரவமாக வாழமுடியாது..!” என்று ஏளனமாகக்கூறி சிரிக்கவே, அதனைக்கேட்டு மனமுடைந்து போனாள் மிதிலா..!


இப்படியிருக்க திடீரென்று தஷானுக்கு ஏதோவோரு கால் வந்தது..! அதனை அட்டென்ட்செய்து பேசிய தஷானோ, எதிர்முனையில் என்ன செய்தி சொல்லப்பட்டதோ..? திடீரென்று அவனது முகங்கள் கலவரமடைந்துபோல் மாறி வியர்க்கத்தொடங்கியது..! அதனையும் காணத்தவறாத மிதிலாவோ, தஷானின் முகத்தையே என்ன..? என்று கேள்வியாக பார்க்க, காலை கட்செய்து மிதிலாவைக்கண்ட தஷானோ, “பரவாயில்லையே..? உன் புருஷன் புத்திசாலிதான் போல..? கரெக்டா மோப்பம்முடிச்சு, நாய் மாதிரி என்பின்னாடி வந்துட்டானே..?” என்று சொல்ல மிதிலாவிற்கோ, “தன்னவன், தான் இருக்கும் இடத்தை கண்டுகொண்டான்..!” என்று நினைத்தவளுக்கு அப்போதுதான் சற்று நிம்மதியாக இருந்தது..!


ஆம்..! ராகவ், தஷான் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு, அவனது இடத்திற்கே வந்துவிட்டான்..! “ராகவ்விற்கு மிதிலா இருக்குமிடம் தெரியக்கூடாது..!” என்று நினைத்த தஷானோ, மிதிலாவை கயிறுகளால் கட்டிலின் காலில் கட்டிவைத்துவிட்டு, எங்கும் அசையாதபடி அவளது வாயை துணியால் கட்டிவைத்துவிட்டு அங்கிருந்து வெளியே செல்ல, அந்தவீட்டின் ஹாலில் நுழைந்திருந்தனர் ராகவ் நந்தன் பரத் மூவரும்.. அவர்களைக்கண்ட தஷானோ கேஷுவலாக பேசுவதுபோல் பரத்தைக்கண்டு, “என்னடா பரத்..? உன் சகலயைக்கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு வந்திருக்க..?” என்று கேட்க பரத்தோ, “டேய்..? நடிக்காத..! மிதிலா எங்கடா..?” என்று கேட்க, “மிதிலாவா..? அது ராகவோட வைஃப்தானே..? அவளை அவன்கிட்டதான் கேட்கணும்..? என்னிடம் கேட்கிற..?” என்று தஷான் கேட்டதற்கு, “சும்மா நடிக்காதடா..! நீதான் மிதிலாவை என்னமோ பண்ணிவச்சிருக்க..! எங்களுக்கு நல்லாவே தெரியும்..! மிதிலா காணாமல்போன ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் நீ, ஜெயிலிலிருந்து வந்திருக்க..! வந்ததும், என்கிட்டகூட எதுவும் சொல்லலை..!” என்று பதிலுக்கு பரத் கேட்க, “இது என்னடா பெரிய கொடுமையா இருக்குது..? நான் ரிலீஸானதுக்கு பின்னாடி, அவள் காணாமல் போயிருந்தால் நான்தான் அவளை கடத்தியிருப்பேன்னு நினைக்கிறியா..?” என்று கேட்டதற்கு, கோபம்கொண்ட நந்தனோ, “டேய்..தஷான்..? ஓவர் ஆக்டிங் பண்ணாதே..! இதோபாரு..? மிதிலாவோட புடவை..! உன் வீட்டுக்கு வெளியேயிருக்கும் குப்பைதொட்டியில் இருந்துதான் இதை கண்டுபிடித்து எடுத்தோம்..! உண்மையை சொல்லு..! மிதிலா எங்கே..?” என்று கேட்க, அப்போதுதான் மிதிலாவின் புடவையைப்பார்த்து சற்று அதிர்ச்சியான தஷானோ மனதிற்குள், “இந்த வேலைக்கார நாய்ங்க.. அவளோட புடவையை எடுத்து எங்கையாவது மறைத்திருப்பாங்கன்னு பார்த்தால், வாசலிலிருக்கும் குப்பைத்தொட்டியில் போய் போட்டிருக்கானுங்களே..? இவனுங்கள..?” என்று நினைத்துவிட்டு நிதானமாக, “அவளோட புடவை என்வீட்டு குப்பைதொட்டியில் கிடந்தால், அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்..?” என்று ஏகத்தாளமாக பதில்கூறவே நந்தனோ, “டேய் தர்ஷன்..? உனக்கு அவ்வளவுதான் மரியாதை..! ராகவ் இவ்வளவுநேரம் அமைதியாக இருப்பதே பெரியவிஷயம்..! அவனோட பொறுமையை ரொம்ப சோதிக்காதே..! மிதிலாவை நாங்க, கிட்டத்தட்ட ஏழு நாளா காணாமல் எங்கையோ தேடி அலைஞ்சோம்..! எங்கேயும் அவள் கிடைக்கலை..! கடைசியாக நாங்க சந்தேகப்படுறது உன்னை மட்டும்தான்..! உன்மேல எந்த தப்பும் இல்லையென்றால், அதை நிரூபிச்சுட்டு போயிட்டே இரு..!” என்று சொல்ல,


கோபம்கொண்ட தஷான், “என்னடா..? சும்மாசும்மா.. இவனை பெரிய இவன்..? அவன்..? என்று சொல்லி மிரட்டுறீங்க..? அவள் என்னடானா, என் புருஷன்கூட நேருக்குநேர் மோதி அவனை தோற்கடிசிட்டு வா..! அப்போ உன்கூட நான் வரேன் அப்படின்னு சொல்றா..? நீ என்னடான்னா இவன், பெரிய இவனாட்டம் சீன் போட்டுட்டிருக்க..?” என்று கோபத்தில் உளறி, அவனது வாயாலேயே உண்மையை ஒப்புக்கொண்டான்.. அதன்பின், “நிச்சயம் மிதிலா இங்கேதான் இருக்கிறாள்..!” என்று புரிந்துகொண்டவர்களோ, தஷானை தாக்க, தசானும் அவனது அடியாட்களும் இவர்களை தாக்கத்தொடங்கினர்.. பரத்தும்,நந்தனும் தஷானின் அடியாட்களை ஒருகை பார்த்துவிடவே ராகவோ, தசானின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிடவே, கோபம்கொண்ட தஷானோ பதிலுக்கு ராகவ்வை தாக்கதொடங்கினான்..


ஏற்கனவே தன்னவளை காணவில்லை என்ற துயரத்தில் வெறிகொண்டு திரிந்த ராகவ்வோ, தன்னவளின் புடவையைக்கழட்டி அவளை மானபங்கப்படுத்தி உள்ளதை நினைத்து, தஷானை அடிபோட்டு புரட்டி எடுத்துவிட்டான்..! ஒருகட்டத்தில் ராகவ்வின் அடி தாங்கமுடியாமல் துவண்ட தஷான், ஆயுதங்களைக்கொண்டு ராகவை தாக்க அதிலிருந்து தப்பித்த ராகவ்வோ தஷானிடம், “இதோ பாருடா..? மரியாதையா என் பொண்டாட்டியை விட்டுடு..! இல்லைன்னா நான் மனுஷனாவே இருக்கமாட்டேன்..! அடுத்தவன் பொண்டாட்டிமேல கையை வைக்கிற நீயெல்லாம் ஒரு ஆம்பளையாடா..? பேடி பயலே..! நீ, சரியான ஆம்பளையாக இருந்தால், என்கூட மோதுடா..! என் பொண்டாட்டியை இப்போ வெளியே விடுறியா..? இல்லையா..?” என்றுகேட்க, அவளிருக்கும் இடத்தை சொல்லாமல் போக்குகாட்டியபடி ராகவ்வை தாக்கிட, பின் தஷானைக்கண்டவனோ, “இனி இவன் உண்மையை சொல்லமாட்டான்..!” என்று நினைத்து, தனது பின் பாக்கெட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்தவனோ, “தஷான்..? இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங்..! இப்போ நீ, சொல்லவில்லையென்றால் உன்னிடம் இவ்வளவுநேரம் பொறுமையா இருக்கிற எனக்கு, உன்னை போடுவதற்கும் நேரமாகாது..!” என்றிட தஷானோ ஏளனமாக, “ஐயோ..! பயந்துட்டேன்டா..!” என்று நடித்துக்காட்டி பின், “உன்னால என்னை கொல்லமுடியாதுடா..? ஏன்னா உன் பொண்டாட்டியோட உயிர் என்கிட்ட இருக்கு..! என்ன நீ கொன்னுட்டன்னா, உன் பொண்டாட்டி இருக்கிற இடம் உனக்கு தெரியாமேலே போயிடும்டா..!” என்று சொல்லி வில்லத்தனமாக சிரிக்க, ராகவ்வோ துப்பாக்கிமுனையில் தஷானை மிரட்டியபடி, “சொல்லுடா..? மிதிலாவை எங்க வச்சிருக்க சொல்லுடா..?” என்று கேட்க,


நந்தனோ, “மரியாதையாக சொல்லி தொலையேன்டா..! அவனைபத்தி உனக்கு தெரியாதுடா..! ஏற்கனவே மிதிலாவை காணோமென்று ஏழு நாளாக வெறிபிடிச்சு சுத்திட்டிருக்கிறான்..! கோவத்துல உன்னை சுட்டாலும் சுட்டுடுவான்..! சொல்லுடா..?” என்ற சொல்ல, ராகவின் கோபமறிந்த தஷானோ, “இனிமேலும் மிதிலாவை இங்கே மறைத்துவைக்க முடியாது..!” என்று நினைத்து, தன் உயிரை காப்பாற்றுவதற்காக பயத்தில் நடுங்கியபடி, “பேஸ்..பேஸ் மட்டத்துல இருக்கிற ரூமுக்குள்தான் மிதிலாவை மறைத்து வச்சிருக்கேன்..!” என்று சொல்ல, துப்பாக்கிமுனையில் அந்த அறையை காட்டுவதற்காக தஷானை அழைத்துச்சென்ற ராகவ்வோ மிதிலாவை அடைத்துவைத்திருக்கும் இடத்திற்கு சென்று பார்க்கையில், அங்கு கையிலும் வாயிலும் கட்டுக்கள் கட்டப்பட்டு, புடவையின்றி வெறும் பாவாடை ஜாக்கெட்டோடு மயங்கிய நிலையிலிருந்த மிதிலாவைக்கண்டவனுக்கு, கண்களில் கண்ணீர் ஆறாகப்பெருகியது..! “எப்படி இருக்க வேண்டியவள்..? இங்கு ஒரு அடிமைபோல் துன்புறுத்தப்பட்டு, பிணையக்கைதியாக கட்டிவைக்கப்பட்டுள்ளாளே..?” என்று நினைத்தவனோ, “என்னை மனதில், நினைத்ததற்காகத்தானே உனக்கு இப்படி ஒரு தண்டனை..? பாவம்..! பிறந்த இடத்தில்தான் நிம்மதி இல்லாமல், சிறுவயதிலேயே அனாதையாக்கப்பட்டவள்..! திருமணத்துக்கு பிறகும், நிம்மதி இல்லாமல் இவ்வாறு சித்திரவதைபடுகிறாளே..?” என்று நினைத்தவனின் மனதில் இடி விழுந்ததுபோல் வலி கண்டிட,


தஷானை தள்ளிவிட்டு, மிதிலாவிடம் ஓடிய ராகவ்வோ, அவளது கைகளிலும் வாயிலும் இருந்த கட்டுகளை அவிழ்த்து, “ மித்தும்மா..? நான் வந்துட்டேன்டி..! எழுந்திருடி..!” என்று சொல்ல, அப்போதுதான் அரை மயக்கத்திலிருந்த மிதிலாவோ மயக்கம் தெளிந்து, எதிரே நின்றிருந்த தன்னவனைக்கண்டு, தன்னிலையை எண்ணி வருந்தி, வலிகொண்ட பார்வை பார்த்திட, ராகவிற்கோ அவளை இந்தநிலைக்கு ஆளாக்கிய தஷானின்மீது கட்டுக்கடங்காத கோபமும் வெறியும் வந்தது.. பின்னர் தன்னவளின் மானத்தைக்காத்திட, தன்மேல் சட்டையை கழட்டி அவளிடம் கொடுத்த ராகவ்வோ, அதை அவளை அணியும்படி சொல்லிவிட்டு தசானைக்கண்டு, “ரொம்ப பெரியதப்பு பண்ணிட்ட தஷான்..? ஒரு மனுஷன் வாழ்க்கையில எவ்வளவு பெரியதப்பு வேணாலும் பண்ணலாம்..! ஆனால், அவன் செய்யக்கூடாத தப்புகளில் கொடியது பிறர்மனை நோக்குவதும், பெண் மனதை நோகடிப்பதும்தான்..! நீ, யாராலும் மன்னிக்கமுடியாத இந்த தப்பை பண்ணிட்ட..!” என்று சொல்ல, “எங்கே ராகவ், தன்னை தண்டித்து விடுவானோ..?” என்ற பயத்தில் தஷானோ, அருகேயிருந்த பெரிய இரும்புராடை எடுத்து ராகவ்வைப் பார்த்து, “டேய் ராகவ்..? என்னை பொறுத்தவரைக்கும் நீயும், இவளும் சந்தோஷமாக இருக்கவே கூடாதுடா..! என்னோட ஆசைப்படி, உன் பொண்டாட்டிய விதவிதமா அனுபவிச்சிட்டேன்டா..! இனி அவள், என்னால் கசக்கி எறியப்பட்ட குப்பைடா..! அந்த குப்பையை பொறுக்கிக்கோ..! போ..!” என்று வேண்டுமென்றே பொய் சொல்லிவிட்டு, ராகவ்வை தாக்க ஓடிவர, தன்னவளைப்பற்றி இவ்வாறு இழிவாக பேசுபவனைக்கண்டு கோபம்கொண்ட ராகவ்வோ, “இவன் இவ்வளவு பட்டும் திருந்தவில்லை..! இனியும் திருந்த வாய்ப்பில்லை..!” என்று நினைத்து, “இதற்குமேல் இப்படிப்பட்ட கேடுகெட்ட ஒரு ஜென்மம், இந்த உலகத்தில் இருக்கவேகூடாது..!” என்று நினைத்து, அவனது தாக்குதலிலிருந்து தப்பித்து, பதிலுக்கு திரும்ப தஷானை சரமாரியாக தாக்கிட, அதில் சில கணங்களிலேயே சோர்ந்துபோன தஷானோ கீழேவிழப்போக, அவனைத்தாங்கி சட்டையை பிடித்து, அவனது காதருகே சென்ற ராகவ் எதையோ பேசிட, அதில் ஒருகணம் அதிர்ந்த தஷானோ, ராகவ்வை பயம்கலந்த அதிர்ச்சி பார்வைப்பார்க்க, அவனைக்கண்டு வில்லத்தனமாக சிரித்த ராகவ்வோ, “என் பொண்டாட்டியை கடத்தியதற்காக மட்டுமில்லாது, எத்தனையோ பெண்கள் வாழ்க்கையை சீரழிச்ச நீ, இதுக்குமேல உயிரோடு இருக்கக்கூடாது தஷான்..!” என்று சொல்லி தனது துப்பாக்கியால் சுட, அதிலிருந்து வெளிவந்த புல்லட் தஷானின் தலையை துளைத்துக்கொண்டு போனது..! அப்போது அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மிதிலாவோ பயத்தில் கத்த, மிதிலா கத்தும் சத்தம்கேட்டு அங்குவந்த நந்தனும் பரத்தும், ராகவ் தஷானை சுட்டதைக்கண்டு அதிர்ச்சியாகிட,


நந்தனோ ராகவ்விடம், “என்னடா மச்சி..? அவசரப்பட்டு சுட்டுட்ட..?” என்று சொன்னதற்கு, இல்லை..! என்று மறுப்பாக தலையசைத்த ராகவ்வோ, “இல்லடா..! நான் எந்த அவசரமும்படலை..! வேணுமென்றுதான் செய்தேன்..! எத்தனையோ பெண்கள் வாழ்க்கையை கெடுத்து சீரழித்த இந்தமாதிரி கேடுகெட்ட ஒரு பிறவிக்கு, இந்த பூமியில் வாழ்வதற்கே தகுதி இல்லை..! அதுதான் சுட்டேன்..!” என்று சொல்ல, “ராகவ் என்ன செய்தாலும், அதில் ஒரு நியாயமான காரணம் இருக்கும்..!” என்று புரிந்துகொண்ட நந்தனோ, “சரி விடுடா..! இதை நம்ம வாப்பாகிட்ட சொல்லி பார்த்துக்கலாம்..!” என்று சொல்லிவிட்டு, அவனது ஆட்களுக்கு அழைத்து போலீசுக்கு வேறுமாதிரி தகவல் கொடுக்கச்சொன்னான்..!

அதன்பின்னர், போலீஸ் அங்குவந்து ஊருக்கு எவ்வளவோ நன்மைகள் செய்திருக்கும் ராகவ்விற்கு சாதகமாக தஷானின் கொலையை தற்கொலையாகமாற்றி வழக்கு எழுதிவிட்டு செல்ல, அதன்பிறகு மிதிலாவை அழைத்துக்கொண்டு வெளியே வந்தவர்களோ வெளியே வந்து பார்க்கையில், அங்கே சங்கரனும் அவனது குடும்பத்தாரும் வந்திருப்பதைக்கண்டனர்..


ஆம்..! நந்தன்தான் சங்கரனின் குடும்பத்திற்கு தஷான் மிதிலாவை கடத்தியிருக்கும் விஷயத்தைக்கூறி அந்த இடத்திற்கு வரச்சொன்னது..! அதுவரை அதிர்ச்சியில் அழுதபடி நின்றிருந்த மிதிலாவோ, அங்குவந்த சங்கரனை கண்டவுடன் ஓடிச்சென்று தன் தந்தையின் நெஞ்சில் சாய்ந்த அழவே, சங்கரனும் தன்மகள் அந்தளவுக்கு கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறாள்..! என்று நினைத்து, அவளது தலையை தடவிக்கொண்டு ஆறுதல் கூற, மிதிலாவின் அழுகைமட்டும் குறையவில்லை..! ஆனால், இங்கு ராகவிற்க்குதான் ஏதோபோல் இருந்தது..! “கல்யாணமாகி இத்தனைநாட்களில் ஒருநாள் கூட தன்னை பிரியாதவள், தஷானால் கடத்தப்பட்டு 7 நாட்கள் பிரிந்திருக்க, இப்போது தன்னை கண்டவுடன் தன்னிடம் ஓடிவந்து நெஞ்சில்சாய்ந்து அழுவாள்..! என்று நினைத்தால், அவளது தந்தையைக் கட்டிக்கொண்டு அழுகிறாளே..?” என்று நினைத்தபடி நின்ன்றிருக்க,


சங்கரனோ ஒருவழியாக மிதிலாவை சமாதானப்படுத்தி, “அம்மாடி மிதிலா..? பயப்படாதம்மா..! அதுதான் ஒன்னும் ஆகலையே..? நீ பயப்படாதே..! உன்னை பிடித்த பிரச்சனையெல்லாம் போயிடுச்சு..! உன்னைதான், மாப்பிள்ளை நல்லபடியாக காப்பாத்திட்டாரே..?” என்று மகிழ்ச்சியாக சொல்ல, வேதவல்லி பாட்டிக்கு மட்டும் முகத்தில் மருந்திற்குகூட மகிழ்ச்சி இல்லை..! பின்னர் சங்கரனும் வசந்தியும் மிதிலாவிடம் ஆறுதல் கூறிவிட்டு, ராகவ்வோடு மிதிலாவை செல்லசொல்ல, அதனை திடீரென்று மறுத்த மிதிலாவோ தயக்கமாக, “அப்பா..? நான் உங்க பொண்ணா, இனிமேல் உங்க கூடவே இருந்திடுறேன் அப்பா..!” என்று ஒரு வார்த்தை சொல்ல, ராகவிற்கு தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது..! சங்கரனோ மிதிலாக்கூறிய வார்த்தையை கேட்டு அதிர்ச்சியாகி, “அம்மாடி மிதிலா..? என்னம்மா பேசுற நீ..? உனக்கு கல்யாணம் ஆயிடுச்சும்மா..! நீ இனிமேல் அங்கேதான் இருக்கணும்…! மாப்பிள்ளை எங்கே இருக்காரோ..? அதுதானேம்மா உன்வீடு..!” என்று சொல்ல, அதனை காதுகளில்கூட வாங்காது, இருபுறமும் தலையசைத்து மறுத்த மிதிலாவோ, “அப்பா..? ப்ளீஸ்பா..! என்னை புரிஞ்சுக்கோங்க..! எனக்கு அவரோட வாழவிருப்பம் இல்லை..! ஏற்கனவே ரவுடி என்று தெரிந்தும், எப்படியும் அவர் திருந்திருவாருன்னு நம்பிக்கையில்தான், அவருக்கு கழுத்தை நீட்டினேன்…! ஆனால், இப்போ கொலை செய்யும் அளவுக்கு துணிவார் என்று, எனக்கு தெரியலப்பா..! இப்படிப்பட்ட ஒரு கொலைகாரரோட குடும்பம் நடத்த, நான் விரும்பலை..! அதையும்மீறி நீங்க, என்னை உங்ககூட கூட்டிட்டு போகாமல், அவரோடு அனுப்பிவைத்தால், நான் எங்கேயாவதுபோய் தற்கொலை பண்ணிப்பேன்ப்பா..!” என்று சொல்ல, இதையெல்லாம் கேட்ட ராகவிற்கு அதிர்ச்சியில் இதயமே இரண்டாக பிளப்பதுபோல வலி எடுக்கத்தொடங்கியது..!


அதில் ஒருகணம் ஆடிப்போனவனோ, அப்படியே அங்கிருக்கும் இருக்கையில் சரிந்து அமர்ந்திட, மிதிலா கூறியதைக்கேட்டு கோபம்கொண்ட நந்தனோ, “ஏங்க..? என்னங்க பேசுறீங்க நீங்க..? கல்யாணத்திற்குமுன்பே அவன் யாரு என்னன்னு தெரிஞ்சுதானேங்க அவனை கல்யாணம் பண்ணிங்க..? இப்போ எங்கிருந்து வந்தது..? உங்களுக்கு புதுசா இந்தமாதிரி ஒரு பயம்..? உங்களுக்காகதானேங்க அவன் இப்படி பண்ணான்..? அவன் என்ன பண்ணினாலும் ஒரு முக்கியமான காரணம் இருக்கும்..! தெரியுமா..? அவன் உங்கமேல உயிரையே வச்சிருக்கான்ங்க..! இப்படி நீங்க, ஏதாவது பண்ணிட்டீங்கன்னா மனசு விட்டுடுவான்ங்க..! ப்ளீஸ்..!” என்று கெஞ்ச, நந்தனை குறுக்கிட்டு நிறுத்திய ராகவ்வோ, “டேய் நந்தா..? அவளை போகச்சொல்லு..!” என்று சொல்ல,


நந்தனோ ராகவ்வின் புறம்திரும்பி, “டேய் ராகவ்..? என்னடா பேசுற நீ..? அவங்கதான் ஏதோ புரியாமல் பேசுறாங்கன்னா, நீயும் அதேபோல பேசுறியேடா..? கொஞ்சம் பொறுமையா இருடா..! அவங்களுக்கு எப்படியும் புரியவச்சிடலாம்..!” என்று சொல்ல, “அதெல்லாம் அவங்களுக்கு எதுவும் புரியாதுடா..! இனி அதுக்கு எந்த அவசியமும் இல்லை..! இவ்வளவுநாள் நாமதான் மத்தவங்களை நம்பி, தப்பாக நினைச்சுட்டிருந்திருக்கோம்..! என்று சொல்ல, “டேய்..? கோவத்தில் ஏதும் பேசிடாதடா..!” என்ற நந்தனை தடுத்த ராகவ்வோ, “டேய்..? நான் சொன்னால் கேட்பியா..? இல்லையா..?” என்று சொல்லிட, ராகவ்வை மீறமுடியாத நந்தனோ மேலும் பேசமுடியாது வாயடைத்துப்போனான்..!


ஆனால் இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மிதிலாவோ, எதுவும் பதில்பேசாது சிலைபோல் நிற்க, வேதவள்ளிபாட்டியோ இதுதான் சாக்கென்று, “டேய் சங்கரா..? அதுதான் நம்ம பொண்ணு சொல்லிட்டால்ல..? அவன கூட வாழ விருப்பமில்லைன்னு..! இன்னும் ஏன்டா இங்கேயே நின்னுட்டு இருக்க..? வா..! நம்ம பொண்ணை அழைச்சிட்டுவா..!” என்று சொல்லிட அதன்பின்பு, மிதிலாவோ தனது தந்தையோடு அவளது வீட்டிற்குசென்றாள்.. அதையெல்லாம் விரக்தி புன்னகையுடன் வேடிக்கை பார்த்த ராகவ்வோ தனது வாழ்க்கையின் நிலையை நினைத்து தன்மீதே கழிவிரக்கம் கொண்டிட, அவனை அறியாமலே அவனது கண்களிலிருந்து கண்ணீர் சொரிய ஆரம்பித்தது..!


காதலின் வலி கண்ணீரில் தெரியுமோ…? பார்க்கலாம்…


தொடரும்…
 
Last edited:
Top