எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மரம் தூவும் மழை -10

@38

Moderator
10

சற்று நேரத்தில் லதாவும் சாந்தியும் ஏதோ கதை பேசி சிரித்தபடியே வீட்டிற்குள் வந்தனர்.


எங்கம்மா போயிட்டு வர்றீங்க.?.


அதுவா தம்பி அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு இன்னும் விசேஷத்துக்கு அழைப்பு கொடுக்கல அதான் நானும் லதாவும் போய் சொல்லிட்டு வரோம்.


ம்ம்.. கீத்துவையும் கூட கூட்டிட்டு போயிருக்கலாம்ல்ல..


அவ பட்டணத்தில் வளர்ந்து பொண்ணு அவளுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்..?.அதைதான் நானும் சொல்லறேன் அவ பட்டணத்தில் வளர்ந்த பொண்ணு அவளுக்கு இதெல்லாம் தெரியாது நீங்க தானே சொல்லிக் கொடுக்கணும் என்று பற்களைகள் கடித்த படி பேசினான்.


அவன் பேசிய தோரணையே சொல்லியது.. பிரச்சனை செய்ய வேண்டும் என்பதற்காகவே பேசுகிறான் என்பதை.


என்ன கார்த்தி சின்ன விஷயத்தை பெருசு படுத்துற லதாக்கு‌ ஊர்ல இருக்கிற எல்லாரையும் தெரியும் போனா ரெண்டு நிமிஷம் நின்னு பேசிட்டு வர நல்லா இருக்கும் அதனாலதான் கீர்த்தனாவை விட்டுட்டு போனது என தாய் தன்மையாக சொன்னார்.


இனி தாயிடம் பேச முடியாது என்பதை உணர்த்தவன் எங்காவது போனா அவளையும் வெளியே கூட்டிட்டு போங்கம்மா. நீங்களே ஒதுக்கி வச்சா எங்க போவா சொல்லுங்க நீங்க இருக்கீங்க என்கிற தைரியத்துல தான் நான் அவளை கூட்டிட்டு வந்தது.. என்னவோமா அண்ணா பொண்ணு மேல இருக்கிற பாசத்தை கொஞ்சமாவது உங்க மருமகள் மேலயும் காட்டலாம் என குறைபட்டபடி அங்கிருந்து நகர்ந்தான்.


பாத்தியா லதா பொண்டாட்டிக்காக எப்படி வரிஞ்சு கட்டிட்டு சண்டைக்கு வர்றான்னு நான் கொஞ்சம் குரல் உயர்த்தி இருந்தேன்னு வைய்யேன் இன்னைக்கு பெரிய சண்டை பண்ணி விட்டுருப்பான் வீட்ல விசேஷத்தை வச்சுட்டு இவனோட சண்டை போட எனக்கு விருப்பம் இல்ல அதான் தனிஞ்சு போயிட்டேன் என்று சொல்லவும் முதல் முறையாக அவனை இழந்ததற்காக லதா வருத்தப்பட்டாள்.


அதன் பிறகு லதா கார்த்தியை தான் கவனிக்க ஆரம்பித்தாள்.அவன் மனைவியை தாங்குவதும் அவளுக்காக எல்லா வேலைகளையும் செய்து தருவது அவளை மரியாதையுடன் நடத்துவது மற்றவர்களிடம் விட்டுக் கொடுக்காமல் பேசுவது இப்படி ஒவ்வொன்றிலும் தனித்துவமாக தெரிந்தான்.

இவனையா நாம் வேண்டாம் என்று தவிர்த்தோம் .என கலங்கினாள்.அவளது கணவன் காரணமே இல்லாமல் கண்முன் வந்துநின்றான்.நிம்மதியான வாழ்வை நாம் தான் தட்டிவிட்டோம்..அத்தை எத்தனை முறை என்னிடம் கெஞ்சினார்..நான் தானே வீண் பிடிவாதத்தால் எனது வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கியது..அதற்கான பலனை இப்பொழுது அனுபவிக்கிறேன்..என அன்றைய நாளை கண்ணீருடன் நினைத்துப்பார்த்தாள்.


அன்று சினிமா தியேட்டரில் அமுதா மட்டும் மாட்டிக்கொள்ளவில்லை கூட லதாவும் சேர்ந்து தான் மாட்டினாள்.


அமுதாவின் கன்னத்தில் அறை போட்டு காரில் ஏறும்படி பணிந்தவர் அடுத்து லதாவை கையொங்கும் பொழுது என்னை அடிக்கிற உரிமை உங்களுக்கு யார் கொடுத்தது என அத்தனை பேர் மத்தியில் பெருமாளிடம் கேட்டு அவரை தலை குனியச் செய்தாள்.அப்படி இருந்தும் கூட இந்த இடத்தில் நீ நிற்க வேண்டாம். முதல்ல என்னோட கிளம்பி வா என்று கூப்பிட வர மாட்டேன் என் பிடிவாதமாக அங்கேயே நின்று விட்டாள் .அத்தோடு இல்லாமல் அவளின் ஆண் நண்பனின் தோழர்களும் வரிந்து கட்டிக் கொண்டு வர பொது இடத்தில் எதற்காக வீண் விவாதம் என மகளை மட்டும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.வீட்டிற்கு வந்து மகளை கண்டித்ததோடு இல்லாமல் மனைவியை அழைத்து லதாவை பற்றியும் புகார் செய்தார்.


உடனே சாந்திக்கு வந்ததே கோபம் எப்படி அவ உங்களை அப்படி கேட்கலாம் இருங்க இப்பவே போய் கதிரவன் கிட்ட சொல்லி அவளை என்னனு கேக்க சொல்றேன் .. படிக்கட்டுமேன்னு ஹாஸ்டல் சேர்த்து விட்டா கண்டவனோட செர்ந்து ஊர் சுத்திகிட்டு இருக்காளா இப்பவே பொட்டி படுக்கையை கட்டிட்டு ஊருக்கு வர சொல்றேன்.
என்று வீராவேசமாக கதிரவனிடம் சென்றார்.

அதற்கு முன்பாக அமுதாவை நன்றாக வெளுத்து விட்டார்.அவளது கதறல் வீட்டையே அதிர வைத்தது அப்படியும் அவருடைய கோபம் அடங்கவில்லை.

டேய் கதிரவா வயசு பிள்ளையை வெளியூர்ல தங்க வச்சோமே அவ என்ன பண்றா ஏது பண்றான்னு ஆம்பள பையன் நீ அடிக்கடி போய் பாத்துட்டு வர வேணாம் எனக்கேட்ட அப்படியே உள்ளே வந்தார்.


என்ன அதிசயமா உங்க வீட்டு பொண்ணு இப்போ என் தங்கையா மாறிட்டா என நக்கலாக கேட்ட படியே கதிரவனும் வெளியே வந்தான்.


அவ என்ன பண்ணி வச்சிருக்கான்னு தெரியுமா.. மாமாவை .. என்று ஆரம்பிக்கவும் மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்தவன்.


எல்லாம் சொல்லிட்டா உள்ள தான் இருக்கா என்றான்.


உள்ளேயா இருக்கா அந்த திமிரு புடிச்ச கழுதை, மனசுல அம்புட்டும் சூது அதான் அத்தையை பார்த்ததும் பயந்துட்டு உள்ள போய் ஒளிச்சுக்கிட்டா..வெளிய வாடி..


பண்ணின தப்பு அவ மனசையே குடையுது அதான் என்னைக்கும் இல்லாத திருநாளா இங்க வந்திருக்க ..நீ ரொம்ப நல்லவளா இருந்தா நேரா என்கிட்டல்ல வந்திருக்கணும் என்று திட்டியபடியே லதாவின் அறைக்குள் சென்றவரை தடுத்தவன்.அத்தை லதா மேல தப்பே இருந்தா கூட பொது இடத்தில் வயசு புள்ளை மேல கை ஓங்க மாமாக்கு என்ன உரிமை இருக்கு வயசான மட்டும் பத்தாது அதுக்கேத்த அறிவு கொஞ்சமாவது இருக்கணும் என்று சொல்லவும் சாந்தி வாயடைத்துப் போய்விட்டார்.என்னடா.. என்ன இப்படி பேசிகிட்டு இருக்க உனக்கு யார் இப்படி எல்லாம் பேச சொல்லி கொடுத்துட்டு இருக்கறது.

ஓஹோ வளந்துட்டீங்க ..தனியா தொழில் பண்றீங்க..பணம் தாராளமா இருக்கு.. அதான் தூக்கி வளர்த்த அத்தையும் சோறு போட்ட மாமனும் உனக்கு இப்போ அன்னியமாயிட்டோம் இல்லையா நல்லா இருக்குடா உன் நியாயம் நல்லா இருக்கு.. என்றவரிடம்.


அத்தை பொய் சொல்லி மறைக்கிறவகிட்ட நம்மளோட திமிரை காட்டலாம் அவளே அண்ணா நான் தப்பு பண்ணிட்டேன் என்ன மன்னிச்சிடு பொது இடத்துல என் சிநேகிதர்கள் முன்னாடி மாமா கை ஓங்கவும் என்ன பேசறதுன்னு தெரியாம வார்த்தை விட்டுட்டேன்னு அழறா அவகிட்ட போய் இனி என்ன கேக்கறது என்றவன்.


ரொம்ப அழுதிருக்கா.. பயந்திருக்கா நீங்களும் அவளை திட்டி மேலும் வேதனை படுத்தாதீங்க சின்ன பொண்ணு நீங்க தூக்கி வளர்ந்தவ.

பெருசு பண்ணாதீங்க விட்டுடுங்க என‌ கெஞ்சுவது போல் சொன்னான்.


அப்போ மாமா கை ஓங்குனதை மட்டும்தான் சொல்லியிருக்கா எதுக்காக ஓங்கினாங்க என்கிறதை சொல்லல.. என சந்தேகமாக கேட்டவரிடம்.சினேகித பிள்ளைகளோட சினிமாவுக்கு போயிருக்காங்க கூட நம்ம அமுதாவும் போயிருக்கா . மாமா தான் தப்பா புரிஞ்சுகிட்டு..என பேசியவனை


இடைவெட்டியவர்

ஓஹோ கதை இப்படி போகுதா.. அவளை வந்து என்கிட்ட சொல்ல சொல்லு பாக்கலாம் என்றவர்.

நீ கிளம்பு நான் கொஞ்சம் அவ கிட்ட பேசணும் பேசிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் என்றார்.


அத்தை என்று தயங்கியவனிடம் உன் தங்கச்சியை கடிச்சு ஒன்னும் சாப்பிட்டிட மாட்டேன் போடா.. என்றவர் லதாவைத் தேடிச் சென்றார்.


கதவின் பின்புறமாக நின்று இருவரும் பேசியதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவள் திடீரென அத்தை அறைக்குள் நுழையவும் என்ன செய்வது என திருதிருவென முழித்துக்கொண்டிருந்தாள்.


அவளை பார்த்ததுமே கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டார்.


அத்தை என அதிர்ச்சியில் கன்னத்தைப் பிடித்த படி பார்த்தாள் .உன் மாமாக்கு தான் உன்னை அடிக்கற உரிமை கிடையாது எனக்கு உன்னை கொலை பண்ண கூட உரிமை இருக்கு உன் அம்மா செத்துப் போகும்போது நீ பத்து மாச குழந்தை.. உன்னை உன் அப்பன் என்கிட்ட விட்டுட்டு போகும்போது உனக்கு மூணு வயசு.. அப்போ இருந்து என் பிள்ளைகளை விட ஒரு மடங்கு மேல தான் உன்ன வளத்திட்டு இருக்கேன் பாசம் காண்பிக்கிறதும் அப்படித்தான் அப்படி இருந்தும் கூட உனக்கு அத்தை மேல பாசம் இல்ல.இருந்திருந்தால் மாமாவை பொது இடத்துல அப்படி பேசியிருப்பியா இப்போ என்னை பார்த்ததும் வந்து வீட்டுக்குள்ள ஒளிஞ்சி தான் இருப்பியா.

உண்மையை சொல்லுடி எவன் அவன்..எத்தனை நாள் உனக்கு பழக்கம்

சொல்லுடி..என முதுகில் இரு கைகளாலும் மாறி மாறி அடித்தார்.


மாமனிடம் அப்படி பேசியவளால் அத்தையிடம் அப்படி பேச முடியவில்லை அவளுக்கும் வளர்ந்த பாசம் இருந்தது.


இன்னும் என்னெல்லாம் மறைச்சி வச்சிருக்க வாய தொறந்து பதில் சொல்லுடி திருட்டுத்தனம் பண்ணுன்னு சொல்லிகுடுத்தா வளர்த்தினேன்.. பசங்க ரெண்டும் தங்கமா வளர்ந்திருக்கும்போது பொம்பள பிள்ளைங்க ஏண்டி இப்படி தகரமா போனீங்க.

சொல்லுடி சொல்லு..வலிக்கிது அத்தை அடிக்காதீங்க என அழுதவள் விம்மலுடன் அமுதாவும் தானே சினிமாவுக்கு வந்தா என்னை மட்டும் கேக்கறீங்க என்றாள்.


அவளை கேக்கலன்னு உனக்கு யாருடி சொன்னது நாலு நாளைக்கு யாரையும் பார்க்க முடியாத அளவுக்கு மூஞ்சை வீங்க வச்சிருக்கேன் ..


இந்த காலு தானே பெத்தவங்களுக்கு தெரியாம கண்டவனோட சினிமாக்கு போக சொன்னதுன்னு கால்ல சூடு போட்டு வச்சிருக்கேன்.ஒரு வாரத்துக்கு அவளால எந்திரிச்சு நடக்கவும் முடியாது யாரையும் பார்க்கவும் முடியாது.


அவளுக்காவது கால்ல தான் சூடு போட்டேன் நீ பேசற வாய்க்கு வாயில சூடு போட போறேன் பாரு.


என் அம்மா இருந்திருந்தா இப்படிதான் அடிப்பாங்களா..இல்லை அடிக்க விட்டு தான் வேடிக்கை பார்ப்பாங்களா..என்ன இருந்தாலும் நான் தாயில்லா பிள்ளை தானே உங்க அண்ணன் மக தானே ‌.

என்று அழுகையுடன் சொல்லவும் அடிக்கும் கைகளை நிறுத்திவிட்டு அதிர்ச்சியுடன் பார்த்தார்.


கேவியபடியே அடிக்கடி சொல்லுவீங்களே அத்தை நான் உன் அம்மாவுக்கும் மேல உன்னை பார்த்துப்பேன்னு.. அப்படி இல்லைனு நிரூபிச்சிட்டீங்க.


ஏண்டி இப்படி எல்லாம் பேசுற உனக்கு என்ன ஆச்சு இப்படியெல்லாம் பேசுற புள்ள நீ இல்லையடி என்ன லதா நீ தப்பா போய்ட கூடாதுன்னு தானே அத்தை இவ்வளவு கண்டிப்பா நடத்துகிறேன் அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது இத்தனை நாள் உன்னை வளர்த்த எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க தெரியாதா அதுக்குள்ள உனக்கேன்டி இவ்ளோ அவசரம்.


அத்தை அவசரம்னு என் காதலை கொச்சைப்படுத்தாதீங்க..


ஓஓஓ.. எல்லாரும் சொல்லுவாங்களே தெய்வீக காதல் அப்படி சொல்லனுமா சரிடிம்மா சொல்லு உன்னுடைய தெய்வீக காதல் உனக்கு என்ன எல்லாம் கற்றுக் கொடுத்துச்சு அத்தையை நோகடிக்க சொல்லுச்சு, மாமாவை எதிர்த்து பேச சொல்லுச்சு, கூட பொறந்த அண்ணன் கிட்ட பொய் சொல்ல சொல்லுச்சு,இப்போ நீலிக்கண்ணீர் வடிக்க சொல்லுது அப்படித்தானே.


இல்ல உண்மையிலேயே என் காதல் உசந்தது தான். அவர் ரொம்ப நல்லவர் நீங்க ஒரு முறை கூப்பிட்டு பேசி பாருங்க உங்களுக்கே புரியும் இப்போ கூட படிப்பு முடிஞ்ச பிறகுதான் கல்யாணம்னு சொல்லி இருக்காரு.


நான் பிளஸ் டூ முடிச்சப்போ எனக்கு மேல படிக்கிறதுக்கு ஆசையே இல்ல அவருக்காக தான் நான் மேல படிக்கவே ஒத்துக்கிட்டேன் அவர்தான் என்னை மேல படிக்க சொன்னார் இல்லன்னா நான் காலேஜ் கூட போயிருக்க மாட்டேன் அவரு கெட்டவரா இருந்தா அப்பவே என்னை கூட்டிட்டு போயிருப்பாரு எதுக்கு என்னை படிக்க சொல்லணும்.


அவள் பேசியதில் எரிச்சல் அடைந்தவர் எவருடி அவரு என கன்னத்தில் ஒரு இடி வைத்தார்.


தாடையை பிடித்துக் கொண்டே அழுதபடி அவர் நமக்கு சொந்தம் தான் என் அம்மாவோட சொந்த அண்ணன் பையன்.


என்ன என அதிர்ச்சியில் பேச்சற்று நின்றவரிடம்.. நான் டென்த் லீவ் அப்போ அமுதாவோட வயக்காடு போகும் போது தான் அவரைப் பார்த்தேன்.


அவங்க அம்மா அப்பா எல்லாம் நீங்க சொல்ற மாதிரி கிடையாது ரொம்ப நல்லவங்க எனக்கு தினமும் ஏதாவது பலகாரம் கொண்டு வந்து கொடுப்பாங்க எவ்வளவு பாசமா பேசுவாங்க தெரியுமா.நான் ஸ்கூல் போய்ட்டு வரும்போது தினமும் வசந்த் வந்து என்னை பார்ப்பாரு ஒரு நாள் கூட என்னை பாக்காம இருக்க முடியலன்னு சொல்லுவாங்க நீங்க சொல்ற காலேஜ்ல சேர்ந்தா அவரால என்னை பார்க்க முடியாதுன்னு சொல்லித் தான் பாளையங்கோட்டையில இருக்கிற காலேஜ்ல சேர சொன்னார் நானும் அதனால் தான் அங்கு சேர்ந்தேன்.

என இடியை எடுத்து சாந்தியின் தலையில் இறக்கினாள்.


மோசம் போயிட்டேனே..அய்யோ நான் மோசம் போயிட்டேனே என நெஞ்சோடு நெஞ்சாக அடித்தபடி அங்கேயே கதற ஆரம்பித்து விட்டார் சாந்தி.அடியே கொலைகார குடும்பத்தோட சகவாசமே வேண்டாம்னு தானடி உன்னை பொத்தி பொத்தி வளர்த்தேன் எப்படிடி நீ அவனுக கண்ணுல போய் மாட்டின..


என் வளர்ப்புன்னு நம்பிக்கை வச்சேனே

அதனாலதான் மொத்தமா போட்டு உடைச்சிட்டியா..எவ்ளோ தைரியம் இருந்தா என்கிட்டயே வந்து அவனுகளை நல்லவன்னு சொல்லுவ..உங்க அம்மாவை கூட்டிட்டு போய் விஷம் வச்சி கொன்ன குடும்பம்டி அது..அந்த குடும்பத்துக்கு தெரிஞ்சே எப்படி உன்னை என்னால அனுப்ப முடியும் நான் விடமாட்டேன் நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் உன்னை அந்த வீட்டுக்கு அனுப்ப மாட்டேன். நல்லா கேட்டுக்கோ லதா இந்த அத்தையோட பாசத்தை மட்டும் தான் இத்தனை நாள் பாத்திருக்க …இனிமே என்னோட அகங்காரத்தை நீ பார்த்துறாத ஒழுங்கு மரியாதையா எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு நான் சொல்ற பேச்சை மட்டும் கேளு அதை விட்டுட்டு வேற ஏதாவது உளறிக்கிட்டு இருந்த என்றவர்..ஒற்றை விரலை ஆட்டி சொல்ல மாட்டேன் செஞ்சிடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து வெளியேறினார்.
 
Last edited:

@38

Moderator
இப்படியெல்லாம் பேசிட்டு எப்படி இப்ப இவ்வளவு நெருக்கமா இருக்காங்க???
இவ பேசினாலும் அத்தை பேச்சை கேட்டுகிட்டால்ல மகன் தானே கல்யாணத்தை நிறுத்தினது அதனால மன்னிச்சிருப்பாங்க
 
Top