எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மெய் காதல் பொய்யாகுமோ!!(கதை திரி)

Status
Not open for further replies.

NNK-15

Moderator
மெய் காதல் பொய்யாகுமோ..

1

“என்ன இது ?”தனக்கு முன்னால் இருந்த கவரை பிரித்து பார்க்காமல் அருகே அமர்ந்திருந்தவளிடம் திரும்பி கேட்டான் சிவனேசன்.


“லெட்டர்.. தெரியலையா..”


“என்ன திடீர்னு..”


“என்ன திடீர்னு..இல்லையே.. ரொம்ப நாளா யோசிச்சது தான். இன்றைக்கு முடிவு பண்ணி எடுத்துட்டு வந்து இருக்கறேன். படிச்சிட்டு எனக்கு உடனே பதில் சொல்லு .”


“அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை உனக்கு தெரியும் திவ்யா .நான் உன்னை அந்த கண்ணோட்டத்தில் பார்க்கலை.”


“நீ என்னை மட்டும் இல்ல.. இந்த ஆபீஸ்ல யாரையுமே அந்த மாதிரி பார்க்க மாட்டேன்னு எனக்கு தெரியும் சரியா.‌


சும்மா சமாதானம் சொல்ல வேண்டாம். முதல்ல லெட்டரை பிரிச்சு படி.. அப்புறமா பதில் சொல்லு.”


“அத பிரிக்காமலே எனக்கு பதில் சொல்லத் தெரியும். திவ்யா.. நான் யாரையும் விரும்புற இடத்துல இல்ல.” என்று சொல்லவும் அருகே அமர்ந்திருந்த பிரவீனிடம் திரும்பினாள் திவ்யா.


“ டேய் பிரவீன் நீயாவது சொல்லுடா இவன் கிட்ட ..ஏன் இவன் இப்படி இருக்கிறான். சாமியார் மாதிரி..


கேர்ள் பிரண்டு கிடையாது. டேட்டிங் கிடையாது. குடி, சிகரெட்னு எதுவும் கிடையாது .டீச்சர் ரொம்ப நல்லா வளர்த்து இருக்காங்க.. இல்லன்னு சொல்ல மாட்டேன் .ஆனா ஏன் இவன் இப்படி இருக்கிறான். எனக்கு என்ன குறைச்சல் அழகா இல்லையா.. அறிவு இல்லையா.. ஏதாவது குறையா இருக்குதா ..


என்ன இவனுக்கு பிடிக்கலை அதை சொல்ல சொல்லு. நான் இப்பவே மாத்திக்கறேன்”.


“திவ்யா ப்ளீஸ் இந்த மாதிரி எல்லாம் பேசாத ..உனக்கு தெரியாதா இங்கே எல்லாருமே எனக்கு பிரண்டுங்க தான்.


அதை தாண்டி எப்பவும் யோசிக்கவே மாட்டேன்.”


“ என்கிட்ட அப்படி இருக்க வேண்டாம்னு தான் சொல்கிறேன் .உனக்கு நான் சொல்றது புரியலையா..”


“ பிரவீன் இவள கொஞ்சம் சும்மா இருக்க சொல்றியா.. இந்தா இத முதலில் எடுத்துட்டு கிளம்பு..” என்று நீட்டிய கவரை அவளிடமே தள்ளி வைக்க..


“எதுக்காக உனக்கு என்னை பிடிக்க மாட்டேங்குது. எனக்கு காரணத்தை சொல்றியா..


சிவா உன் கிட்ட இல்லாதது எதுவுமே கிடையாது அத்தனை பேருக்கும் ஹெல்ப் பண்ற.. அத்தனை பேர்கிட்டையுமே அவ்வளவு நல்லா பேசற..


குறிப்பா பொண்ணுங்களை நீ அந்த அளவுக்கு கனிவா நடந்தற.. இதுவே போதுமே உன் பின்னாடி ஆயிரம் பொண்ணுங்க சுத்துவாங்க.


ஆனா நீ என்னடான்னா ஒருத்தரையும் நிமிர்ந்து பார்க்கிறதே இல்லை .பேசினா கூட கண்ணோட கண்ணு தான் அதை தாண்டி உன் பார்வை யார்கிட்டயுமே தப்பா போனதில்லை.


இதை விட ஒரு பொண்ணுக்கு என்ன வேணும் ஒரு ஆணை காதலிக்க.. இதைவிட எந்த தகுதியும் தேவையே இல்லைன்னு சொல்லுவேன் .


அது தான் உன் மேல எனக்கு பைத்தியமா ஆக வைக்குது ஆனா இதெல்லாம் தெரிஞ்சும் கூட நீ வாயை திறக்காமல் ஒண்ணுமே தெரியாதவன்னாட்டம் இருக்கிறது தான் என்னால தாங்க முடியல .நீ ஏன் அப்படி இருக்கிற.. ஒருவேளை உனக்கு காதலே பிடிக்காதா”.


“ அப்படின்னு யார் சொன்னாங்க ..ஒரு ஆண் தனக்குள்ளேயே சுருண்டுக்கறான்னா அவன் காதலை பிடிக்காமல் இருக்கணும்னு அவசியம் கிடையாது.


காதல் தோல்வியா கூட இருக்கலாம்” சொல்லிவிட்டு நகர்ந்தவனை எழ விடாமல் மறுபடியும் இருக்கையில் அமர்த்தினாள்.


“ சும்மா கதை சொல்லாத ..யாரை வேணும்னாலும் சொல்லட்டும் .நான் நம்புவேன் ஆனா நீ சொன்னா நான் நம்ப மாட்டேன்.


உனக்கெல்லாம் என்னடா குறை..யாராவது வேண்டாம்னு சொல்லிடுவாங்களா.. அப்படி ஒருவேளை ஒரு பொண்ணு சொன்னான்னு வச்சுக்கோயேன் .


அவள விடவும் பைத்தியக்காரி வேற யாரும் இருக்க மாட்டாங்க .இதுதான் என்னோட கருத்து.”


“பிரவீன் இவளை கொஞ்சம் சும்மா இருக்க சொல்றியா.. பிரவீன் அடுத்த வாரம் உனக்கு கல்யாணம்ல.. என்ன பிளான் அதை சொல்லு கேட்கிறேன்”.


“ இதோ பாரு சிவா. நான் பேசிட்டு இருக்கிறேன் .நீ பேச்சை மாத்தாதே..”


“ நீ சும்மா திவ்யா ..சொல்லு பிரவீன் என்ன பிளான்..”


“ ஆபீஸ்ல மோஸ்ட்லி எல்லாரும் வர்றதா சொல்லி இருக்காங்க. நான் வேன் புக் பண்ணிடறேன். எல்லாரும் மொத்தமா வரணும் கல்யாணத்துக்கு முதல் நாளே வந்துட்டு அடுத்த நாள் சாயங்காலம் தான் போகணும் இது தான் என்னுடைய ஆசை.


.இதுல எந்த சொதப்பலும் வரக்கூடாது.. சிவா உன்னோட பொறுப்புல தான் விடப் போறேன் .மொத்த பேர்த்தையும் பத்திரமா அழைச்சிட்டு ரிட்டர்ன் கொண்டு வந்து சேர்க்கிறது உன்னோட வேலை.. திவ்யா நீயும் கிளம்பி வந்துடனும்.”


“ சிவா வரான்னா எங்கேன்னாலும் நானும் வருவேன். எனக்கு அத பத்தி கவலையே இல்லை. என்ன நல்லா பார்த்துக்க சிவா இருக்கிறான் .”


“லூசாட்டம் உளறிட்டு இருக்காத.. இதே மாதிரி இன்னொரு தடவை சொல்லிக்கிட்டு சுத்தாத ..இது உன்னோட லைஃப்க்கு தான் பிரச்சனையாகும்.


நீ என்ன இருந்தாலும் இன்னொருத்தனை கல்யாணம் பண்ணி போக போற பொண்ணு ..


நாளைக்கு உன் லைஃப்ல… லைஃப் பார்ட்னர் வரும் போது இது தேவையில்லாத பிரச்சனையா முன்னாடி நிக்கும்.”


“ நீ தான் சொல்லிக்கிட்டு இருக்கற..நான் கல்யாணம்னு ஒன்னு பண்ணினா உன்னை மட்டும்தான் பண்ணுவேன் .நான் தெளிவா இருக்கிறேன். நான் டீச்சரை பார்த்து பேச போறேன்.”


“ இத பாரு பல்லை உடைச்சுடுவேன் .என் அம்மா கிட்ட பேசுற வேலை எல்லாம் வச்சுக்காத..”


“ சும்மா இந்த கதை எல்லாம் ஆகாது சிவா .நான் ஆல்ரெடி முடிவே பண்ணிட்டேன். இந்த தடவை எப்படியாவது டீச்சர் அம்மா கிட்ட வந்து பேசுறேன்..


ஆசீர்வாதம் வாங்கறேன். அடுத்த மூணாவது மாசம் உன்னை கல்யாணம் பண்றேன். அடுத்த வருஷமே உன்னை மாதிரியே கியூட்டா ஒரு பையனை பெத்து கொடுக்கிறேன் .இது தான் இந்த வருஷம் என்னோட ஆம்பிஷன் ..”


“நீ இருக்கிறயே.. உன்கிட்ட பேச ஆரம்பிச்சா போதும் நான் தான் வெக்கப்பட்டுக்கிட்டு நகர்ந்து போகணும் .இந்த விளையாட்டெல்லாம் போதும் கொஞ்சம் சீரியஸா இரு. போய் வேலையை கவனி .


ஏண்டா இவளை கொண்டு வந்து என் பக்கத்து சீட்ல உட்கார வச்சீங்க.. சரியான இம்சை.. எப்ப பாரு எதையாவது சொல்லி என்னை கடுப்பேத்துறதே இவளுக்கு வேலையா போயிடுச்சு .”


“டேய் லூசாடா நீ ..சீரியஸா சொல்லிக்கிட்டு இருக்கேன் .நீ என்னடான்னா கிண்டல் பண்ணறேன்னு பேசிட்டு போற.. இதெல்லாம் நல்லா இல்ல பார்த்துக்கோ ‘என சொல்லும் போதே எழுந்தவன் பிரவீன் தோளில் கை போட்டு அழைத்துக் கொண்டு நகர்ந்தான் .


“சிவா..அவளும் நல்ல பொண்ணு தானே கொஞ்சம் யோசிச்சு பார்க்கலாம்ல ..”


“பி சீரியஸ் பிரவீன் எனக்கு கல்யாணத்து மேல பெருசா இன்ட்ரஸ்ட் இல்ல .இன்னும் சொல்லப்போனால் கல்யாணம் பண்ணிக்கற ஐடியாவே இல்ல. காலம் முடியற வரைக்கும் இப்படித்தான் இருக்கப் போறேன் .”


“என்னடா இது புதுசா சொல்ற எதுக்காக.. என்ன காரணம்..”


‘என்ன காரணம்னா.. எனக்கு கல்யாணம் பிடிக்கல அவ்வளவுதான்”.


“ டேய் விளையாடாதடா.. இங்க வேலைக்கு சேர்ந்து கிட்டத்தட்ட மூணு வருஷம் தாண்டிடுச்சு. மூணு வருஷமா சேர்ந்து தான் இருக்கிறோம் .


உன்னோடது எல்லாமே எனக்கு தெரியும். அப்படி எல்லாம் பொண்ணுங்களை பார்த்தாலே பயந்து ஒதுங்குற டைப் நீ கிடையாது .அவங்களை பிடிக்காத ஆளும் நீ கிடையாது. எல்லார்கிட்டயும் இயல்பா பேசுற ..நிறைய ஹெல்ப்பிங் மைண்ட் இருக்குது.


உன்னை தொடர்ந்து பார்த்ததால சொல்லறேன். உன்னோட முடிவு ரொம்ப சரின்னு சொல்லிட முடியாது.


எனக்கு தெரிஞ்சி இந்த மூணு வருஷத்துல நீ சரியா உங்க அம்மாவை போய் பார்த்தது கூட இல்லை.


ரெகுலரா போன் பேசுற.. அது எனக்கு நல்லா தெரியும் .ஆனா அத தாண்டி ஊருக்கு போக நீ முயற்சி பண்ணினதே இல்ல .


உங்க அம்மாவும் கூட கட்டாயமாக வரணும்னு சொல்லி உன்னை கூப்பிடற ஆளும் இல்லை.


அம்மா கிட்ட நல்லாவே பேசுற.. அவங்க ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை உன்னை பார்க்க வராங்க..அதை தாண்டி உனக்கு பெருசா பாசம் எதுவும் இல்லன்னு தான் சொல்லுவேன்.”


“ யார் சொன்னா எனக்கு அம்மான்னா உயிரு. அம்மாவுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்.


எனக்கு ஊருக்கு போக பிடிக்கல.. தோணல.. அதனால இங்கேயே செட்டில் ஆயிடலாம்ணு முடிவோட இருக்கிறேன் .நான் ரொம்ப நாளா அம்மாவை இங்கே அழைத்துக் கொண்டு இருக்கிறேன்.


அவர்கள் வரமாட்டேன்னு சொல்றாங்க.. அது தான் ரீசன் மத்தபடி எதுவும் இல்லை. ஒருவேளை அவங்களுக்கு உடம்பு சரியில்லையோ..


வேற மாதிரி பிரச்சனைன்னு கூப்பிட்டா அந்த செகண்ட் நான் இங்கிருந்து கிளம்பி போய்டுவேன் .”


“ஓகே ஓகே தெரியாம சொல்லிட்டேன் ..சரி உங்க அம்மாவுக்கு ஏன் இங்க வர பிடிக்கல .அதற்கான காரணத்தை சொல்லு கேட்டுக்கறேன் “.


“பெரிய காரணம் எல்லாம் எதுவும் இல்ல .அப்பா, அம்மா ரெண்டு பேருமே டீச்சர்ஸ் உனக்கு தான் தெரியும்ல.. அப்பா ஒரு விபத்துல இறந்துட்டாங்க.


அதுக்கப்புறம் அம்மா தான் என்னை வளர்த்தது .கிட்டத்தட்ட என்னோட பத்தாவது வயதில் இருந்து அம்மா தான் எனக்கு எல்லாமே ..அம்மா, அப்பா ரெண்டு பேருமே அவங்க மட்டும் தான் .


அப்பா இறந்த போது கொஞ்சம் பணம் வந்தது பத்தாததுக்கு அவங்களோட பிஎஃப் அது இதுன்னு கொஞ்சம் பணம் வரவுமே ..


அப்பாவோட சொந்த ஊர்ல வீட்டை கட்டிட்டு டிரான்ஸ்பர் வாங்கிட்டு அங்க போயிட்டோம் .இது நடக்கும் போது நான் பத்தாவது படிச்சுக்கிட்டு இருந்தேன் .


அதுக்கு பிறகு அம்மா கூட தான்.. அம்மாவுக்கு நிறைய பேருக்கு உதவி செய்யணும்னு ஆசை .அதனால் வீட்டில் நிறைய பேருக்கு டியூஷன் சொல்லி கொடுத்துட்டு இருக்கிறார்கள்.


இன்னைக்கும் டீச்சர் வேலைக்கு போயிட்டு தான் இருக்காங்க .அவங்க அந்த இடத்துல செட்டில் ஆயிட்டாங்க .அந்த ஊரை விட்டு..


அந்த கிராமத்தை விட்டு வர அவங்களுக்கு துளி கூட இஷ்டம் இல்லை .இங்கே வராததுக்கு அதுவும் ஒரு காரணம்.”


“அவங்க கணவர் வாழ்ந்த அந்த இடத்தில் ஒரு வீடு வாங்கிட்டு அங்கேயே செட்டில் ஆகிறதுனா அது இயல்பு தானே..


வயசாகும் போது எல்லாரும் அதைத்தான விரும்புவாங்க.. ஆனா நீ அங்க போக மாட்டேன்னு சொல்றதுக்கு தான் எனக்கு அர்த்தம் புரியல..”


அத விடு டா வேற பேசலாம்..


சிவா கொஞ்சம் ஓபன் அப் ஆகுடா.. உனக்குள்ளேயே எல்லாத்தையும் வச்சுக்கணும்னு கட்டாயம் கிடையாது.


உன்கிட்ட ஏதோ ஒரு பிரச்சனை இருக்குது. என்னன்னு தான் எனக்கு தெரியல .மனசுக்குள்ள எதையோ போட்டு அதையே நினைச்சு ஒரு மாதிரியா டிஸ்டப்டா தான் இருக்கற..


அப்பப்போ கவனிச்சிருக்கிறேன் ஆனா இதுவரைக்கும் நீ சொன்னது இல்ல .உனக்கு நான் நல்ல ஃப்ரெண்ட் ..என்னை நம்பினால் ப்ளீஸ் மனசுல இருக்குறத சொல்லு..”


“இப்போதைக்கு எதுவும் இல்லன்னு சொன்னா நீ கேட்க மாட்ட ..”


“ நான் நம்ப மாட்டேன் டா “.


“சரி டா இருக்குது மனசு முழுக்க ரணம் மாதிரி இருக்குது. அதிலிருந்து என்னால மீண்டு வர முடியலை.. போதுமா”.


“ அத தான் என் கிட்ட சொல்லுன்னு சொல்றேன்.”


“ இப்ப சொல்றதுக்கு நேரமில்லை .இன்னும் கொஞ்ச நேரத்துல மீட்டிங் இருக்கு. ஞாபகம் இருக்குதா . உள்ளே போலாமா .


நிச்சயமா உன் கிட்ட சொல்றேன் .ஒரு நாள் சொல்லாமல் போறது இல்ல. அவ கிட்ட சொல்லிடு தேவையில்லாம ரொம்ப பண்ண கூடாது .


இன்னொரு தடவை ஏதாவது லெட்டர் கொண்டு வந்து முன்னாடி வச்சான்னு வச்சுக்கோ.. என்ன செய்வேண்ணு எனக்கு தெரியாது.


கத்தி விட்டுடுவேன். அப்புறம் ஆபீஸ்ல அத்தனை பேரும் முன்னாடி அவ தான் அசிங்கப்பட்டு நிக்கணும்.அவ மெல கோபம் நிறைய இருக்குது “.


“சிவா அவளை இன்னைக்கு நேத்தா பார்க்கிறோம் .வந்த நாள்ல இருந்தே இப்படித்தான் இருக்கிறாள். அவ கிட்ட எந்த மாற்றமும் இல்லை .இனி மேலும் வரப்போறதும் இல்லை ..”


“ஆனா அவ நல்ல பொண்ணுடா”.


“ நான் என்ன இல்லைன்னா சொல்றேன் ‌அவ நல்ல பொண்ணு தான் ஆனா என்னோட மனநிலையை பத்தி யோசிக்கணும்ல. இத அவ கிட்ட கேட்டா அவளோட பதில் வேற மாதிரி இருக்கும் சிவா.


ரெண்டு வருஷமா வெயிட் பண்ணி பாக்குறேன் .அவன் யாரையுமே லவ் பண்ணலை..ஏன் என்னை லவ் பண்ண கூடாதுன்னு திருப்பி கேட்பா ..உனக்கு தான் தெரியுமே.. “


“ பிரவீன் என்னால என் கூட இருக்குறவங்க யாரோட பேரும் கேட்டுடக் கூடாது. விளையாட்டுக்கு கூட அவளையும் என்னையும் சம்பந்தப்படுத்தி யாரும் பேசிடக்கூடாது .


நான் எவ்வளவு தூரம் விலகி போறேன்னு நீ பார்க்குறல்ல.. அவ கிட்ட கொஞ்சம் சொல்லி வை .திரும்பத் திரும்ப டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ணு.”

மறுபடியும் வந்து இருக்கையில் அமர ..அமைதியாக வேலையை கவனித்துக் கொண்டிருந்தாள் திவ்யா.


இவனை திரும்பிக் கூட பார்க்கவில்லை .”என்ன இது ரொம்ப அமைதியாகிட்ட ஏதாவது பேசேன்.” பிரவீன் வம்பிழுக்க ஆரம்பிக்க.. அவனை திரும்பிப் பார்த்தவள்.


“ என்ன உன் ஃபிரண்டு உன்கிட்ட அட்வைஸ் பண்ணி அழைச்சிட்டு வந்தாச்சா.. இப்ப என்ன ?அடுத்ததா நீ என்கிட்ட பேச போறியா.. தேவையில்லாம பேசாத.. பார்க்காத அந்த மாதிரி..”


“ இத பாரு “என்று சொன்னவள் வேகமாக லெட்டரின் கவரை பிரித்து முகத்திற்கு நேராக கட்டினாள்.


“ உள்ளே ஒன்றுமே இல்லை.. சும்மா உன் கிட்ட கலாட்டா பண்றதுக்காக தான் எடுத்து அவன் முன்னாடி வச்சேன் .லெட்டர்ல மட்டும் தான் எதுவும் இல்லை .அதுக்காக என் மனசுல எதுவும் இல்லன்னு அர்த்தம் ஆகிடாது.


அவன்கிட்ட நேரடியாகவே கேட்டுட்டேன். கடைசி வரைக்கும் கேட்டுட்டு தான் இருப்பேன். அவனுக்கும் என்னை பிடிக்கும்.


வேணும்னா அவனை சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்க சொல்லு .நான் வேண்டாம்ணு சொல்ல மாட்டேன்.


ஆனால் அவனுக்கு கல்யாணம் முடிகிற வரைக்கும் நான் அவனை இப்படித்தான் தொந்தரவு பண்ணுவேன்.”


“ திவ்யா நீ என்ன பைத்தியமா.. ஏன் இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்குற..” சிவா அவளின் முகத்திற்கு நேராக கண்டிக்க ..


”சும்மா இந்த அதிகாரம் பண்ணற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம். சரியா ‌நான் பயப்பட மாட்டேன்.


பயப்படுவதற்கு வேற ஆளை பாரு .நான் எல்லாம் ஒன்னை மனசுல முடிவு பண்ணினால் அதுதான் கடைசி வரைக்கும்.. என் மனச மாத்திக்க மாட்டேன்.”


“ தேவையில்லாம உன் மனசுல ஆசையை வளர்த்துக்கற திவ்யா .நடக்கவே நடக்காத ஒரு விஷயத்துக்காக நேரத்தை வீண் பண்றது சரியே கிடையாது. நீ என்கிட்ட இதுபோல பேசுறது முதல்ல நிப்பாட்டிக்கோ..”


“ஏன் சிவா உனக்கு எத்தனை வயசு ஆச்சு ..இருந்தா ஒரு 27 வயசு இருக்குமா ..


ஏன் சாமியார் மாதிரி இப்படி அட்வைசா பேசிகிட்டு இருக்குற.. சத்தியமா என்னால முடியல.. எல்லா விதத்திலும் நீ ஓகே தான் .


ரொம்ப ரொம்ப நல்லவன் .உன் மேல எந்த தப்பும் சொல்ல முடியாது .சரி அதுக்காக இத்தனை அட்வைஸ் பண்ணனுமா.. எனக்கே சம் டைம்ஸ் கடுப்பா இருக்குது.”


“ அதனாலதான் சொல்றேன். உன்னோட வேலைய மட்டும் பாரு .தேவையில்லாம என்கிட்ட பேசாதன்னு..”


“ இந்த டீச்சர் அம்மா ரொம்ப ரொம்ப மோசம்.. இந்த தாரணி டீச்சரை முதல்ல பார்த்து என்னன்னு கேட்கணும்.”


“ இத பாரு அம்மா விஷயத்துல நான் ரொம்ப ஸ்ட்ரீட்.. அம்மா கிட்ட போகாத ..அம்மா பத்தி ஏதாவது பேசினா எனக்கு கோபம் வந்துடும்.”


“ அட அப்படியாவது கோபப்பட்டு என்கிட்ட சண்டையாவது போடேன் .அதையும் தானே நீ செய்ய மாட்டேங்குற..


சொல்லு சிவா அம்மா உன்னை பார்க்க எப்ப வருவாங்க..”


“ வந்தாலும் உன்கிட்ட சொல்ல மாட்டேன் .அதனால இத பத்தி எல்லாம் கேட்காத..”


“ சும்மா கதை விடாதே உங்க அம்மா வந்தா இங்க ஆபீஸ்ல எல்லாத்துக்குமே தெரிஞ்சிடும்.. எப்படியும் சும்மா வரப் போறது கிடையாது.. அவங்க கை பக்குவமே அலாதி தெரியுமா..


எப்படியும் முறுக்கு, மைசூர்பாக், லட்டுன்னு நிறைய ஐட்டம்ஸ் செஞ்சு கொண்டு வருவாங்க. அத வச்சு நான் கண்டுபிடிச்சுக்குவேன் .


இந்த முறை வந்தாங்கன்னா நிச்சயமா நான் உன் வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட பேச போறேன் .


ஆன்ட்டி எனக்கு இந்த பையணை ரொம்ப பிடிச்சிருக்கு .எனக்கே எனக்குன்னு இவனை கொடுத்துடுங்கன்னு கேட்க போறேன் “.


“திவ்யா ப்ளீஸ் இந்த பேச்சை நிப்பாட்டுன்னு சொன்னேன். நீ என்ன ஆசைப்பட்டாலும் நடக்காத ஒரு விஷயம் இது..


சும்மா காதல், கல்யாணம்னு கற்பனையில வாழாதே.. முதலில் இந்த வாரம் உன் வீட்டுக்கு வந்தேன்னா உன்னோட அம்மா, அப்பாவை பார்த்து நான் பேசணும் .


சீக்கிரமா இந்த திவ்யாவுக்கு கல்யாணம் பண்ணி வையிங்க.. இவ பேச்சே சரியில்லன்னு சொல்ல போறேன் “.


“அப்படியா.. என்னன்னு சொல்லுவ ..இந்த திவ்யா என்கிட்ட வந்து எப்ப பார்த்தாலும் லவ் யூ ன்னு சொல்லி உயிரை எடுக்கறான்னு சொல்லுவியா..


ப்ளீஸ்.. ப்ளீஸ்.. அதே மாதிரி சொல்லிடு .என்னோட அப்பா, அம்மா ரெண்டு பேருமே உடனே உன் வீட்டில உன் அம்மாகிட்ட பார்த்து பேசிடுவாங்க .


உன்கிட்ட கெஞ்சற நேரத்துக்கு உன் அம்மாவை கரெக்ட் பண்றது ரொம்ப ஈஸினு நினைக்கிறேன்.

நீ என்ன சொல்ற சிவா” மறுபடியும் அவனுக்கு அருகே திருப்பி அமரவும் வேகமாக சேரை திருப்பி அவளுடைய லேப்டாப்பை பார்க்க வைத்தான்.


“ஒழுங்கா லேப்டாப்பை பார்த்து வேலை செய் புரிஞ்சுதோ.. இன்னொரு தடவை ஏதாவது பேசிகிட்டு இந்த பக்கம் திரும்பின..


நான் இடம் மாறி போய்டுவேன் .என்னோட லேப்டாப்பை எடுத்துட்டு வெளியில போய் உட்கார்ந்திடுவேன்.”


“இங்க பாரு சிவா..வொர்க் ஸ்பேஸ் பெருசு தான் இல்லன்னு சொல்ல மாட்டேன்.இங்கே எந்த இடத்துல வேணும்னாலும் உட்கார்ந்து வேலை செய்யலாம். அதேமாதிரி ஸ்ட்ரெச்சர்ல தான் இந்த ஆபீஸ செட் பண்ணி இருக்காங்க ..


அதையும் இல்லன்னு சொல்ல மாட்டேன். அதுக்காக நீ லேப்டாப்பை எடுத்துட்டு வெளியே போனேன்னு வச்சுக்கோயேன். பின்னாடியே நானும் என்னோட லேப்டாப்பை தூக்கிட்டு வருவேன் .அதனால சீன் போடாம இங்கேயே உட்கார்ந்து வேலையை பாரு.


இனி உன்னை நான் தொந்தரவு பண்ணல ..இப்போ உனக்கு மீட்டிங் இருக்குதுல்ல. இப்ப கிளம்பிடுவதான.. கிளம்பு கிளம்பு எனக்கு காத்து வரட்டும்” என்று சிரித்தபடியே வேலையை தொடங்க ..


இவள் தன்னிடம் விளையாடுகிறாளா ,அல்லது சீரியஸாக பேசுகிறாளா ஒன்றுமே புரியாமல் தலையை முன்னும் பின்னும் அசைத்தபடி நகர்ந்தான் சிவா. 

NNK-15

Moderator
2


“விவேகா பீரோவில் என்ன தேடற.. அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கிற* கேட்டப்படியே தாயார் வர ..


“இங்க தான் ம்மா வச்சிருந்தேன்“.


“என்ன வச்சிருந்த.. எதை தேடற.. அதை முதல்ல சொல்லு. ஏன் பீரோவை தலைகீழா கலைச்சி வச்சிருக்கற.. மொத்த துணியையும் கலைச்சு போட்டு.. என்ன தான் வேணும் உனக்கு”..தாயார் மலர் மகளுக்கு அருகே வர, “இங்கதான் ..இங்கதான் வச்சிருந்தன் மா ..காணோம் அதான் தேடிட்டு இருக்குறேன் .”


“என்னடி வச்சிருந்த தெளிவா சொல்லு .”


“என்னோட ரெஸ்யூம் என்னோட சர்டிபிகேட் எல்லாம் “.


“கடவுளே ஏன் இப்படி இருக்கிற நீ சர்டிபிகேட் எல்லாம் அப்பாவோட பிரோவுல இருக்கட்டும்னு அங்க கொண்டு வந்து வச்ச.. ஞாபகம் இருக்குதா. ஏன் உனக்கு எல்லாமே மறந்திருச்சா. ஏன் டி இப்படி இருக்கிற.. பைத்தியம் பிடிச்ச மாதிரி நடந்துக்கற.. எனக்கு உன்னை பார்க்க பயமா இருக்குது டி “சொல்லி கண் கழங்க..


“ஆமா மறந்துட்டேன்..கடைசியில அப்பா வாங்கிட்டு போய் பீரோவ்ல வைக்கிறேன்னு சொன்னாங்கல்ல… ரொம்ப நாள் ஆச்சு இல்லம்மா ..அதுதான் எல்லாமே மறந்த மாதிரி இருக்குது .சரி நான் இதை எல்லாத்தையும் எடுத்து அடுக்கி வச்சுட்டு வரேன்..விவேகா சொல்ல.. புலம்பியப்படியே நகர்ந்தார்.


“ எந்த ஜென்மத்துல யாருக்கு பாவம் பண்ணினேனோ தெரியல.. என் பொண்ணுக்கா இப்படி எல்லாம் நடக்கணும். இவ யாருக்கு எந்த பாவமும் பண்ணலையே..


குழந்தை மாதிரி சிரிச்சிட்டு ஊரையே சுத்தி வந்தவ.. எவ்வளவு கலகலப்பா இருந்த பொண்ணு இன்னைக்கு பைத்தியக்காரி மாதிரி இருக்கறா..யார்கிட்டயும் பேசறது இல்ல. அவ என்ன செய்கிறான்னு தெரியவில்லை. இன்னும் நான் என்னென்ன எல்லாம் பார்க்க வேண்டியது இருக்குதோ” என புலம்பிய படியே நகர்ந்தார்.

பொறுமையாக அமர்ந்தவள் கலைத்து போட்டு இருந்த உடைகளை ஒவ்வொன்றாக மடிக்க ஆரம்பித்தாள்.


நினைவுகள் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது.


கோயம்புத்தூரின் மத்திய பகுதியில் வீடு.. காம்பவுண்ட் வீட்டில் தான் ஆரம்பத்தில் குடியிருந்தது .அந்த வாழ்க்கையே அழகு தான் .


அதன் பிறகு தான் இங்கு சற்று நகர்ந்து வீடு வாங்கிவிட்டு வந்தது.


சரவணம்பட்டி பகுதியில் வீடு வாங்கி விட்டு வந்தது.. இவளுடைய திருமணத்திற்கு முன்புதான்‌


கடைசியாக இவள் வேலை செய்தது அங்கிருந்த ஒரு ஐடி கம்பெனியில்.. வேலை எப்போதுமே அதிகம் தான் .


அந்த கம்பெனியில் கிட்டத்தட்ட வேலை செய்யும் ஊழியர்களை பிழிந்து எடுப்பார்களே.. அது போன்ற ஒரு நிலை தான் இவர்களுக்குமே..


காலையில் சென்றால் என்றால் மாலை 6 மணி வரையிலுமே வேலை..


சிறிது நேரம் கூட ஓய்வு என்பது இருக்காது .ஏதாவது ஒரு வேலை வரிசை கட்டி வரும். அதிலும் இவளுடைய பிரிவில் இவளைப் போலவே இன்னமும் பத்து பெண்களுக்கு மேல் இருந்தனர்.


டீம் லீடராக இருப்பவர் எப்போதுமே இவர்கள் அனைவரையுமே கத்தி ,மிரட்டி, விரட்டி கொண்டே இருப்பார்.

அருகே இருந்த தோழியிடம் இவள் அடிக்கடி சொல்லுவது..


“ ஒரு நாள்னா ஒரு நாள் பாரு என்னோட ராஜினாமா லெட்டரை தூக்கி அந்த சொட்ட தலையன் மண்டையில போட்டுட்டு அவன் மண்டையில நங்கு நங்குன்னு நாலு கொட்டு கொட்டி..


இந்த ஆபீஸோட ஹால்ல நின்னு ..எனக்கு விடுதலை ..இனி நான் இந்த ஆபிஸ்க்கு வரமாட்டேன்னு கத்தி சந்தோஷமா ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு ஒரு குத்தாட்டம் போடலை என் பேரு விவேகாவே கிடையாது.”


“கேட்க நல்லாதான் இருக்குது விவேகா .ஆனால் இதெல்லாம் நடக்குமா.. எனக்கு என்னவோ இதெல்லாம் நடக்கிற மாதிரியே தெரியல .”


“ஏன் நடக்காது கட்டாயமா நடக்கும். வேணும்னா எண்ணி வச்சுக்கோ.. இவனெல்லாம் என்ன மனசுல நினைச்சுகிட்டு இருக்கறான் .இவன் வீட்டுக்கு வேலைக்கு வந்த பொண்ணுங்கன்னா..


சம்டைம்ஸ் எப்படி பேசறான் தெரியுமா ..எதையாவது எடுத்து மூஞ்சில அடிச்சிடலாமான்னு தோணுது.”


“விடு விடு மாசமானா.. ஒரு அளவுக்கு நல்ல சம்பளம் வாங்குறோமே ..”


“எது நல்ல சம்பளம். இங்க இல்ல ..இதே சம்பளம் நிறைய பேர் தராங்க .அதிக பட்சம் 30,000 ரூபாய்..


அந்த 30,000 க்கு இந்த நாய் பொழப்பு பொழைக்கறோம்ணு . எனக்கு தெரியல.


நான் எல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளே கிடையாது தெரியுமா .நல்ல ஐடி கம்பெனியில் வேலையை தேடிக்கிட்டு பேசாம வெளியூரில் போய் செட்டில் ஆக போறேன்.”


“ இப்படித்தான் சொல்லுவ விவேகா ஆனா உன்னோட அம்மா, அப்பாவை விட்டு உன்னால எங்கேயுமே போக முடியாது .நீ சரியான அம்மா, அப்பா பைத்தியம்..”


“அதுவும் கரெக்டு தான் அம்மா அப்பாவை விட்டுட்டு தூரம் எல்லாம் போக முடியாது. பாவம் அவங்களுக்கு நான் ஒரே ஒரு பொண்ணு தான் .ஒரு வேளை எனக்கு கூட பொறந்த அண்ணாவோ இல்ல தம்பியோ இருந்தா நல்லா இருக்கும்னு எனக்கு அடிக்கடி தோணும்.


“ தெரியுமே..அப்படி இருந்தா நீ தான ராணி .உன் அண்ணா உன்னை அவ்வளவு நல்லா தாங்கி இருப்பான்ல “.


“ஆசைப்பட்டு என்ன செய்யறது. நம்மளோட மேக்கிங்கே அப்படி தான் ..என்ன செய்யறது..


எது கிடைக்கலையோ அதைத்தானே மனசு திரும்ப திரும்ப வேணும்னு கேட்கும். அது மாதிரி தான் சின்ன வயசுல இருந்து இப்படித்தான் யாராவது கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோணும் ஆனா நமக்கு அந்த கொடுப்பினை இல்லையே..


அம்மா, அப்பா ரெண்டு பேருமே என் மேல உயிரையே வைத்திருக்கறாங்க. அவங்களை என்னைக்குமே தலை குனிய விடமாட்டேன். அவங்களோட சந்தோஷத்துக்காக எதை வேணும்னாலும் இழக்கலாம்ணு சம் டைம்ஸ் தோணும்”.


“ விவேகா ஆனாலும் படபடன்னு பேசினாலும் உன்னோட தைரியம் வேற தான். எனக்கு நிறைய நேரம் தோணும் .உன்ன மாதிரி என்னால ஏன் இருக்க முடியல”.


“ ஏன்னா விவேகா சம்திங் ஸ்பெஷல்.. உனக்கு தெரியாதா”.


“ அது என்னவோ சரிதான். இந்த பேச்சு தான் பல நேரம் காப்பாத்தி விடுது .அந்த மேனேஜர் முறைச்சுட்டு வந்து நிற்கும் போது ஏதாவது பேசி அவரையே சம் டைம்ஸ் சிரிக்க வைத்து அனுப்புவ அதனாலேயே அவர் நகர்ந்து போயிடுவார் தெரியுமா .”


“சரி சரி விடு விடு பார்த்துக்கலாம்..”


“ உன் வீட்ல எப்படியும் உன்னை சீக்கிரமா கல்யாணம் பண்ணி கொடுத்துடுவாங்கன்னு தோணுது .


அன்றைக்கு ஒரு நாள் உன் வீட்டுக்கு வரும் போது அம்மா சொன்னாங்க.. உண்மையா”.


“என்னோட ஆசைக்காக ஒரு ரெண்டு வருஷம் வேலைக்கு போகலாம்.. அதுக்கு பிறகு கல்யாணம் பண்ணி வச்சுருவேன் இதுதான் அம்மாவோட ஆசை..


வேலைக்கு வந்து ஆறு மாசம் ஆச்சு ஆல்ரெடி அப்பாவும் அம்மாவும் கல்யாணத்தை பத்தி பேச ஆரம்பிச்சிட்டாங்க .


சொல்ல முடியாது நாளைக்கே மாப்பிள்ளை அமைஞ்சா அடுத்த மாசமே நான் இந்த வேலையை விட்டுட்டு ஓடிடுவேன் .


அந்த ஒரே ஒரு காரணத்துக்காக தான் இந்த சொட்டை தலையனை.. என்ன சொன்னாலும் கேட்டுகிட்டு சரி சரின்னு தலையாட்டிட்டு இருக்கிறேன் தெரியுமா..”


“ உனக்கு எல்லாம் விடுதலை கிடைச்சுடும். ஆனால் எனக்கு எல்லாம் இப்போதைக்கு இல்லையே .. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்குமே பாலைவனம் மட்டும் தான் தெரியுது “.


“ஏண்டி எப்படி சொல்ற..”


“ என்னோட அப்பா வாங்கி வச்சிருக்கிற கடனுக்கு.. அதையெல்லாம் அடைச்சிட்டு அதுக்கப்புறம் என்னோட லைஃப்பை பாக்கணும்னா குறைஞ்சது 30 வயசு வரைக்கும் நான் வேலை செய்யணும் “.


“பைத்தியம் மாதிரி உளராத.. அப்படியெல்லாம் கிடையாது. எல்லா பெத்தவங்களுக்கும் தன்னோட பொண்ணுங்க மேல அக்கறை இருக்கும் .


சரியான வயசுல சரியா எல்லாத்தையுமே செய்வாங்க”.


“ கேட்க நல்லா தான் இருக்குது அது மாதிரி நடந்தா நல்லாத்தான் இருக்கும். எனக்குமே இப்ப எல்லாம் இங்க வர பிடிக்கவே இல்லை தெரியுமா..


மிஷின் மாதிரி ஒரு வாழ்க்கை.. காலைல வரோம்.. இதோ இந்த லேப்டாப்பை கட்டி பிடிச்சுக்கிட்டே உட்கார்ந்து இருக்கிறோம். திரும்ப சாயங்காலமா வீட்டுக்கு போறோம். தூங்கறோம். மறுபடி எந்திரிக்கிறோம் . மறுபடியும் வரோம்.


நல்ல வேளை சனி ,ஞாயிறு மட்டும் லீவு.. இல்லைன்னா அவ்வளவுதான் நான் பைத்தியம் ஆகி இருப்பேன்.”


“ எனக்கும் அது தான் தோணும். நாம இன்னும் நல்லா இருக்கறோம்னா.. அந்த ரெண்டு நாள் வீட்டுல இருக்கறதுனால மட்டும் தான்னு நானும் நினைக்கிறேன்.


ஓகே வேலையை கவனிப்போம். இன்னும் கொஞ்ச நேரத்துல கொடுத்த வேலையை முடிக்கலையான்னு வந்து நிப்பாரு” என்று சொல்லிவிட்டு வேலையை தூங்கினாள்.


விளையாட்டு போல திருமண பேச்சு ஆரம்பித்ததாலோ என்னவோ அன்றைக்கு வீட்டிற்கு வரும் போது மலர், நாதன் இருவருமே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர் .


“என்னப்பா ஹேப்பியா இருக்கற மாதிரி இருக்கு .என்ன விசேஷம்.. ஊரிலிருந்து யாராவது சொந்தக்காரங்க வராங்களா.. இல்ல ஏதாவது கல்யாண பத்திரிக்கை வந்திடுச்சா ..


கல்யாண வீட்டுக்கு போனா சொந்தக்காரர்களை எல்லாம் பார்க்கலாம் .எல்லார்கிட்டயும் பேசலாம்னு ஹேப்பி ஆயிடுவீங்களே..“


“நீ சும்மா கிண்டல் பண்ணாத விவேகா .இங்க பாரு உங்க அப்பா என்ன கொண்டு வந்துருக்காங்கன்னு..”


“ என்ன கொண்டு வந்திருக்கிறார்கள் “என கேட்டுப்படியே முகம் கழுக நகர்ந்தவள்.. சில நிமிட நேரங்களிலேயே முகம் கழுவி முகத்தை துடைத்தபடியே வந்து தாயாருக்கு அருகில் அமர்ந்தாள்.


. இத பாருமா இந்த ஜாதகம் உன்னோட ஜாதகத்துக்கு மேட்சிங்கா செட் ஆகுது. மாப்பிள்ளை ரொம்ப ரொம்ப அழகா இருக்கிறார்.


இந்த பையனுக்கு உன்னை பேசிடலாமான்னு தோணுது” என்று போட்டோவை நீட்ட.. வாங்கி பார்த்தவளுக்கு போட்டோவில் இருந்து கண்களை எடுக்க முடியவில்லை .மீண்டும் பார்த்தபடி..” என்னப்பா மாப்பிளை பையன் ரொம்ப அழகா இருக்கிறார் போல இருக்கே ..”என்று கேட்க..


“ அதே தான் ம்மா.. எனக்கு பையனோட போட்டோ பார்த்ததும் அத்தனை பிடிச்சு போச்சு .பாரு எவ்வளவு அழகா இருக்கிறார். உன் பக்கத்துல நிப்பாட்டினால் எவ்வளவு பொருத்தமா இருப்பார் தெரியுமா .”


“மாப்பிள்ளையோட பேர் என்னப்பா “.

சாதாரணமாக கேட்க.. “மாப்பிள்ளையோட பேரு மதன்.. காலேஜ்ல ப்ரொபசரா இருக்குறாரு .நல்ல சம்பளம் கிட்டத்தட்ட 70 ஆயிரம் ரூபாய் வாங்குறாரு . மாப்பிள்ளையோட அம்மா அப்பா தான் உன்னோட ஜாதகம் பொருத்தமா இருக்குது பாக்கலாமான்னு போன் பண்ணி கேட்டாங்க.. மாப்பிள்ளையோட போட்டோவை பார்க்கவுமே எனக்கு அந்த நிமிஷமே அவ்வளவு பிடிச்சு போச்சு..


உனக்கு ஓகேனா இந்த பையனை நம்ம பார்த்து பேசலாமா “என வேகமாக கேட்க..


“ அப்பா இப்ப தான் வேலைக்கு போய் ஆறு மாசம் ஆச்சு இப்பவே கல்யாணத்தை பத்தி பேசணுமா.. இன்னும் கொஞ்ச நாள் வேலைக்கு போறேனே”.


“ அப்படி இல்ல விவேகா என்னைக்குன்னாலும் உன்னை கல்யாணம் பண்ணி கொடுக்கணும் இல்ல. நல்ல இடமா வருது‌. நல்ல சம்பளம் மாப்பிள்ளையும் கண்ணுக்கு பார்க்க லட்சணமா இருக்குறாரு.


ரெண்டு பேரோட பொறுத்தம் ரொம்ப நல்லா இருக்கு.. அது மட்டும் இல்ல ரொம்ப செட்டில் ஆன ஃபேமிலி. மாப்பிள்ளைக்கு சொந்த வீடு இப்பவே தனியா இருக்குது.


அவர் அங்க தான் இருக்கிறார் நீ போயிட்டா மாமனார் மாமியார்னு எந்த பிக்கலும் பிடிங்கலும் இருக்காது. நீ சுதந்திரமா இருக்கலாம் .நீயும் மாப்பிள்ளையும் மட்டும் தான். மாப்பிள்ளைக்கு ஒரே ஒரு தங்கச்சி ..


அந்த தங்கச்சிக்கு கூட கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு .போன வருஷம் தான் கல்யாணம் முடிஞ்சுதாம். இப்ப மாப்பிள்ளை மட்டும் தனியா இருக்காரு .


அவருக்கு பொண்ணு பார்த்துகிட்டு இருக்காங்க .நம்ம புரோக்கர் தான் கொண்டு வந்து கொடுத்தாங்க .நான் ரெண்டு பேரோட ஜாதகமும் பார்த்தேன் ரொம்ப பொருத்தம் சரியா இருக்குது .

கிட்டத்தட்ட ஒன்பது பொருத்தம்‌. எனக்கே நம்ப முடியல.


பொதுவா இவ்வளவு பர்ஃபெக்ட்டா கிடைக்கிறது ரொம்ப ரொம்ப ரேர். இதையேதான் புரோக்கரும் சொன்னாரு ..


மாப்பிள்ளை வீட்ல அவங்க அம்மா ,அப்பா கிட்ட பேசியாச்சு. இப்போ உன்கிட்ட சொல்லிட்டு நான் அப்படியே இந்த வாரத்துல பார்க்க வர சொல்லலாம்ணு இருக்கிறேன் நீ என்ன சொல்ற” என்று சொன்னவர்..” போட்டோ வேணும்னா நிதானமா பாரு ஏதாவது சந்தேகம் இருந்தாலும் கேளு “என்று கொடுத்துவிட்டு நகர ,


போட்டோவை வாங்கியவளுக்கு மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது .


திரும்பவும் ஒரு முறை போட்டோவை பார்க்க புன்னகை முகமாக நின்று இருந்தாள்.


இவளை விடவும் இரண்டு மூன்று வயது பெரியவனாக இருக்கலாம் .


சாமுந்திரிகா லட்சணம் என்று சொல்வார்களே அது போல அவ்வளவு அம்சமாக இருந்தான்.


தலை கொள்ளாத கேசம்.. நல்ல சிவந்த நிறம் .கண்களில் மின்னல்கள் தெறிக்க ஒரு சிரிப்பு ..அடர்த்தியான மீசை.. எந்த குறையும் சொல்லிவிட முடியாது .கிட்டத்தட்ட ஆறு அடி இருப்பான் போன்ற தோற்றம்..


போட்டோவை பார்த்தவளுக்கு கண்களை எடுக்கவே முடியவில்லை.


வேகமாக தன்னுடைய அறைக்குச் சென்றவள் கண்ணாடியில் தன்னை பார்த்துக்கொண்டாள்.


“ நாம கொஞ்சம் சுமார் தான்..ரொம்ப அழகெல்லாம் இல்லை ..தலைமுடி மட்டும் நீளமா வெச்சி இருக்கிறோம். கண்ணெல்லாம் ஓகே தான். மீனாவோட கண்ணு மாதிரி நல்ல படபடன்னு இருக்குது. சிரிச்சா ரொம்ப அழகா இருக்கிறதா உன்னோட பிரண்டுங்க சொல்றாங்க .


அந்த மாப்பிள்ளை ஈகுவல்லா உயரமா இருப்போமா.. நம்ம ஒன்னும் குட்டி எல்லாம் இல்லையே ..கிட்டத்தட்ட ஐந்தே முக்கால் அடி.. ஒல்லியா அழகா தான் இருக்கிறோம் .ஒன்னும் குறை இல்ல.. பொருத்தமெல்லாம் சரியாதான் இருக்கும் .ஆனா இந்த மாப்பிள்ளைக்கு தான் என்னை பிடிக்குமான்னு தெரியலை.


ஏன்னா இந்த மாப்பிள்ளை இருக்கிற அழகுக்கு பக்கத்துல நான் நின்றாள் ரொம்ப சுமார் தான் .”ஏனோ மனம் சொல்ல மெல்ல மனது சுனங்க ஆரம்பித்தது .


“அப்படியெல்லாம் சொல்லக்கூடாது .இத பாரு என்னமோ தெரியல .பார்த்தவுடனே உன்னை எனக்கு பிடிச்சு போச்சு .அதே மாதிரி நீயும் என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லிடனும் .மாத்தி சொல்லக்கூடாது சரியா” என்று போட்டோவிடம் சொன்னவள் போட்டோவை அருகே இருந்த டேபிளுக்குள் வைத்து மூடினாள்.


“ உன்னை அப்புறமா வந்து பார்க்கிறேன் .உன்கிட்ட நிறைய பேசணும் “என்று சொல்லிவிட்டு வேகமாக தாயார் இருந்த இடத்தை நோக்கி சென்றாள்.


இவள் மனதுக்குள் என்ன நினைத்தாலோ அதைத்தான் தாய் தந்தை இருவருமே பேசிக் கொண்டிருந்தனர் .


“மாப்பிள்ளை பையன் ரொம்ப அழகா இருக்கிறார்ல.. ஒருவேளை நேரில் கொஞ்சம் சுமாரா இருப்பாரோ..”


“ அப்படி எல்லாம் இல்ல ரொம்ப ரொம்ப அழகாம்.. நம்ம ஜோசியக்காரரே சொன்னாரு. சினிமா ஆக்டர் மாதிரி அத்தனை அழகு அந்த பையன்.


யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ தெரியல. உங்க பொண்ணுக்கா இருந்தா சந்தோஷம்ணு சொல்லிக்கிட்டு இருந்தார். அங்கே கல்யாணம் பண்ணி போயிட்டான்னா நிம்மதியா இருப்பாள்.லைஃப்ல எந்த பிரச்சனையும் இருக்காது.


மாப்பிள்ளை காலேஜ்ல வேலை செய்றவர்.. ரெண்டு பேருக்குமே பொருத்தம் சரியா இருக்கும். அவரும் ரொம்ப கலகல டைப்பாம்.. அப்படித்தான் ப்ரோக்கர் சொன்னாரு.


நாளைக்கு முதல் வேலை என்ன தெரியுமா.. நேரா போய் மாப்பிள்ளையோட வீட்டுல பார்த்து பேச போறேன் .அவங்க இந்த வாரம் வருவாங்க .


இந்த கல்யாணம் எப்படியும் உடனே முடிவாகிடும். ஏன்னா எனக்கு பையனை ரொம்ப பிடிச்சிருக்கு. ரெண்டு பேருக்கும் பொருத்தம் அவ்வளவு அழகா இருக்கும் .


புரோக்கர் சொன்னாங்க..அவங்க சீக்கிரமா பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பேசிகிட்டு இருந்தாங்களாம் .என்னவோ ஏதோ தோசமாம்..

மூன்று மாதத்தில் கல்யாணம் பண்ணணுமாம்..அதற்கு பிறகு லேட் பண்ணினா நல்லா இருக்காதுன்னு ஜோசியக்காரர் சொன்னாங்களாம் அதனால இந்த மூணு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணிடணும் அதுக்குள்ள பொண்ணு அமைச்சிட்டா நல்லதுன்னு சொல்லி தான் ப்ரோக்கர் கிட்ட ஜாதகத்தை கொடுத்து இருக்காங்க .நம்மளுடையது எல்லாம் பொருத்தமும் இருக்குது .அப்புறமா நம்ம பொண்ணு ரொம்ப அழகு.. நம்ம பொண்ண யாரும் குறை சொல்ற மாதிரி எல்லாம் இல்ல அதனால நிச்சயமா இந்த கல்யாணம் நடக்கும். நாளைக்கு பேசிட்டு வந்து சொல்றேன்” என்று சொன்னவர் இவள் வருவதை பார்த்து..” காபி ஏதாவது கொடு சரியா..”என்று மனைவியை ஏவினார்.


“என்னப்பா பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கவும் கவனிப்பு எல்லாம் தடபுடலா இருக்குது”.


“ பின்ன இல்லையாடா சீக்கிரமா முடிவாகிடுச்சுன்னா மாப்பிள்ளை கையில உன்னை அனுப்பி வைக்கணுமே.. இந்த வீட்ல இருக்கிற வரை தானே உன்னை நல்ல விதமா பாத்துக்க முடியும்.”


“எங்க போனாலும் சரி நான் உங்க பொண்ணு பா, நான் தான் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கிறேனே.


மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு நினைச்சீங்கன்னா இதே கோயம்புத்தூர்ல குறைஞ்சபட்சம் ஒரு நான்கு ஐந்து கிலோ மீட்டர் இடைவெளிக்குள்ள தான் இருக்கணும்னு சொல்லி இருக்கிறேன் .அப்படி இருந்தா மட்டும்தான் நான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லுவேன் .தூரமா மாப்பிள்ளை பார்க்க கூடாதுன்னு சொல்லி இருக்கிறேன்ல ..”


“அதே தான்ம்மா.. அந்த ஒரே காரணத்துக்காக தான் இந்த பையனை எனக்கு ரொம்ப பிடிச்சது .பார்க்கவும் அழகா இருக்காரு.. அது மட்டும் இல்ல ரொம்ப பக்கம்தான் .நெனச்ச நேரம் உன்னை பார்த்துக்கலாமே” சொன்னவர்.


“ சரி நான் புரோக்கர் கிட்ட டீடைல் விசாரிக்கிறேன். நாளைக்கு போய் பார்த்து பேசுறேன் “என்று நகர்ந்தார்.. யோசனை எல்லாம் முன்பு நடந்ததில் இருக்க தன்னை அறியாமல் மடித்த துணியை ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டிருந்தாள்.


அதோடு முடிந்திருக்கவில்லை. அடுத்த நாள் காலையிலேயே தந்தை மாப்பிள்ளையின் வீட்டை பார்ப்பதற்காக சென்றிருந்தார் .


பார்த்து விட்டு வந்தவர் மாலையில் இவள் வேலையை விட்டு வந்த போது கூறிக் கொண்டிருந்தார்.


“ அவங்க அம்மா அப்பா கிட்ட பேசிட்டேன் .அவங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குது வந்து பார்க்கிறேன்னு சொல்லி இருக்காங்க .ஆனா மாப்பிள்ளையை தான் பார்க்க முடியல “.


“ஏன்பா ஏன் “.


“அது வந்து.. என்ன சொல்றதுன்னு தெரியல வேலை முடிஞ்சு வரலை அப்படின்னு சொன்னாங்க.


நான் போனது 7:00 மணிக்குமா.. அப்படி எவ்வளவு நேரம் தான் வேலை செய்வாங்கன்னு எனக்கு தெரியல. கேட்டா எக்ஸாம் டைம் வேலை நிறைய இருக்கும் அப்படி இப்படின்னு சொல்றாங்க .”


“சரி இருக்கலாம் பா. காலேஜ்ல இந்த நேரத்துல எக்ஸாம் முடிஞ்ச உடனே அடுத்த வருஷத்துக்கு புதுசா மாணவர்களை சேர்க்கணும் அதனால வேலை கொஞ்சம் அதிகமா இருந்திருக்கலாம்.”


“எனக்கும் அது தான்டா தோணுச்சு ஆனா ஒரு தடவை முகத்தை பார்த்து இருந்தால் சந்தோஷமா இருந்திருக்கும். என்னவோ சரி பரவால்லை.. எப்படியும் உன்னை பார்க்கறதுக்கு இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வர்றதா சொல்லி இருக்காங்க. இன்னமும் ரெண்டு நாள் தானே இருக்குது .ஞாயிற்றுக்கிழமை மாப்பிள்ளையை பார்த்துக்கலாம்னு நெனச்சிட்டு திரும்பி வந்து இருக்கிறேன்.”


“ ஹய்யோ என்னப்பா இவ்வளவு அவசரமா வேலை செய்றீங்க”.


“ கல்யாணம்ன்னா சும்மாவா.. சில கல்யாணம் எல்லாம் அப்படித்தான் டக்குனு பேசினா போல இருக்கும் .எல்லாமே முடிஞ்சிடும் .அதே மாதிரி தான் உன்னோடதும் போல இருக்குது விவேகா. எல்லாமே வேகமா நடக்குற மாதிரி இருக்குது .ஞாயிற்றுக்கிழமை வந்து பார்க்கட்டும். பிறகு பிடிச்சு இருக்கா இல்லையான்னு சொன்னாங்கன்னா.. அதுக்கேத்த மாதிரி நாம செஞ்சுக்கலாம் .ஏற்கனவே உன்னோட கல்யாணத்துக்காக நகை ,புடவை எல்லாமே ஆல்ரெடி வாங்கி வச்சிட்டோம். பாத்திரம் மட்டும் தான் வாங்கணும் .அப்புறமா வீட்டுக்கு தேவையான மத்த பொருட்கள் வாங்கணும் அதெல்லாமே வாங்கிடலாம். பணத்துக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல .அப்புறமா இந்த ஆறு மாசமா நீ வேலை செஞ்ச காசு கூட தனியா தான இருக்குது. செலவுக்கு பத்தலைன்னா அதுல இருந்து எடுத்துக்கலாம் .அதனால பிரச்சனை எல்லாம் வராது.”

சொன்னவர் நகர்ந்து இருக்க.. அதே நேரத்தில் “விவேகா” என்று குரல் கேட்கவுமே ..சட்டென நடப்பிற்கு வந்திருந்தாள்.


தாயார் மலர் தான் கையில் ஜூஸ் டம்ளரோடு வந்தார். “இதை முதல்ல குடி ..இதை எல்லாம் நானே எடுத்து பீரோக்குள்ள வைக்கிறேன் தலையை முதல்ல வாரு ..


சீப்பை எடுத்து மகளுக்கு பின்புறமாக வந்தவர்..” இதை நான் எடுத்து வச்சுக்கறேன்…கொஞ்ச நேரம் டிவி பாரு ..இல்ல வெளியில கொஞ்சம் தூரம் நடக்கிறதுனாலும் வாக்கிங் மாதிரி நடந்துட்டு வா”.


“ இல்ல மா எனக்கு எங்கேயும் போக பிடிக்கல.”


“ இப்படி எல்லாம் சொல்லக்கூடாது.. ஏண்டி இப்படி இருக்கிற. எனக்கு உன்னை பார்க்க பார்க்க பக்குன்னு இருக்கு .கொஞ்சம் பேசேன்..அம்மா கிட்ட முன்னாடி எல்லாம் எப்படி பேசுவ.. வழ வழன்னு எதையாவது பேசி சிரிக்க வைப்பியே.. இப்போ ஒரு வார்த்தை உன் வாயிலிருந்து வாங்கணும்னா கூட அவ்வளவு யோசிக்கற.. எனக்கு பயமா இருக்குது விவேகா .இயல்பா இருடி” புளம்பியபடியே தலையை வாரி பின்ன ஆரம்பித்தார். 

NNK-15

Moderator
3

“சிவா கல்யாணத்துக்கு நாலு நாளைக்கு முன்னாடி நான் போக வேண்டிய கட்டாயம் .

நீ கரெக்டா எல்லாத்தையும் அழைச்சிட்டு வந்துருவல்ல.. எல்லாமே அரேஞ்ச் பண்ணிட்டேன் .கரெக்டா வண்டி வந்துடும். எல்லாத்தையும் பிக் பண்ணிட்டு அங்க வந்துடனும் சரியா..

ஒரு நாளைக்கு முன்னாடி நைட்டு ரிசப்ஷனுக்கு வர்ற மாதிரி ஏற்பாடு பண்ணி இருக்கிறேன் .நீங்க எல்லாம் வந்து தங்கறதுக்கு அங்கே ஏற்பாடு பண்ணியாச்சு .

நேரா ஹோட்டல் வந்து தங்கிட்டு அப்படியே புறப்பட்டு ரிசப்ஷன் ஹாலுக்கு வந்துடனும் .இது எல்லாமே உன்னோட பொறுப்பு தான். யாரும் மிஸ் ஆகக்கூடாது எல்லாரும் வரணும் .

ஆல்ரெடி எம்டி கிட்ட சொல்லியாச்சு. அவரும் ஓகே என்று சொல்லி இருக்கிறார். கல்யாணம் சனி ஞாயிறு அதனால யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது என்று நினைக்கிறேன் .”

“டேய் எத்தனை தடவை இதை சொல்லுவ.. எனக்கு தெரிஞ்சு மூன்றாவது முறையா சொல்லிக்கிட்டு இருக்கற.. உனக்கு என் பெயரில் நம்பிக்கை இல்லையா “.

“அதெல்லாம் பொறுப்பா கரெக்ட்டா வேலை செய்வேன சரியா..”

“ அது எனக்கு தெரியும்டா ஆனாலும் எந்த ஒரு மிஸ்டேக்கும் ஆகிட கூடாது இல்லையா ‌.அதுக்காக தான் உன்கிட்ட மறுபடியும் சொல்றேன் .”

“என்ன கல்யாணம் மாப்பிள்ளை.. ஒரே பிஸி போல இருக்குது .வந்த நேரத்தில் இருந்து சிவா கிட்ட மட்டும் தான் பேசிகிட்டு இருக்குற ..

அவன் மட்டும் தான் உனக்கு கண்ணு தெரியறானா.. நான் பக்கத்துல இருக்குறேன் என்னை தெரியலையா”.

“ திவ்யா ஆள விடு.. காலையில உன் கிட்ட பேசி சிக்கிக்க நான் தயாராக இல்லை. கரெக்டா நீயும் புறப்பட்டு வந்துடு .உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லிட்ட தானே ..

வீட்டுக்கு அன்றைக்கு வந்து பத்திரிக்கை கொடுத்தேன் .அம்மா, அப்பா வந்தாலும் அழைச்சிட்டு வா..”

“ ஹலோ நான் கல்யாணத்துக்கு வர்றதே சிவா வரானேங்கறதுக்காகதான் வரேன் சரியா.. சிவாவை கவனிக்கறதுக்காக வரும் போது அம்மா ,அப்பா கூட இருந்தா நல்லாவா இருக்கும் “சொல்லிவிட்டு கண்ணடிக்க திரும்பி திவ்யாவை முறைத்தான் சிவா .

“சும்மா முறைக்காத சரியா .நான் என்னோட பேச்சையெல்லாம் மாத்திக்க மாட்டேன். இப்படித்தான் இருப்பேன்.சரி நீ என்ன பிளான் சொல்லு” என்று பிரவீன் புறமாக திரும்ப..

“நான் எல்லாத்தையும் சிவா கிட்ட தெளிவா சொல்லிட்டேன் . அவன் எல்லாத்தையும் கவனிக்கிறேன்னு சொல்லி இருக்கான் .உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் சிவா கிட்ட கேளு. எனக்கு அவசரமா வேலை இருக்குது” என்று நகர..

“ சரி சிவா நீ சொல்லு என்ன பிளான் ..எத்தனை மணிக்கு கிளம்பி வரணும். எத்தனை செட் டிரஸ் எடுத்துட்டு வரணும். எந்த மாதிரி டிரஸ் போட்டா நல்லா இருக்கும் .

சாரி கட்டிக்கலாமா இல்ல வேற மாதிரி டிரஸ் எடுத்துட்டு வரணுமா.. என்கிட்ட செமையான லெகன்கா ஒன்னு வச்சிருக்கேன் .அதை எடுத்துட்டு வரட்டுமா..”

“ இதெல்லாம் ஏன் என்கிட்ட கேட்டுக்கிட்டு இருக்குற ..உனக்கு என்ன தோணுதோ அது மாதிரிவா”.

“ ஹலோ போட்டுட்டு வந்தா பார்த்து ரசிக்க போறது நீதான்.. பின்ன உன்கிட்ட கேட்காம பக்கத்துல இருக்குறவங்க கிட்டயா கேட்க முடியும் .”

“திவ்யா உன்கிட்ட சொல்லிட்டேன் .திரும்பத் திரும்ப இதே மாதிரி பேசிக்கிட்டு இருக்காதுன்னு.. இன்னொரு முறை பேசினால் நெஜமாவே எந்திரிச்சு போயிடுவேன் .

உனக்கு ஒரு தடவை சொன்னா அறிவே வராதா ..எனக்கு ஒரு விஷயம் பிடிக்கலைன்னு சொல்லறேன். திரும்பத் திரும்ப அதைப்பற்றி பேசினால் என்ன அர்த்தம் .அப்படி எத்தனை பொண்ணுங்கள நான் ரசிச்சு வேடிக்கை பார்த்தேன் .”

“ எத்தனை பொண்ணுங்களை வேடிக்கை பார்த்தயா? நான் என்ன மட்டும் பாருன்னு தான் உன் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன் .எல்லாத்தையும் பார்க்க சொல்லல .அப்புறமா.. நீ பார்க்கற ஆள் எல்லாம் கிடையாது .அதுவும் எனக்கு நல்லா தெரியும்.”

“போதும் விளையாட்டு திவ்யா ஒழுங்கா வேலைய பாரு.. என்கிட்ட வாய் அடிக்கிறதா நினைச்சுக்கிட்டு தேவையில்லாம உன்னை நீயே தரம் தாழ்த்திக்காதே.. “

“நார்மலா தான் நான் பேசிகிட்டு இருக்குறேன் . இதுல தரம் தாழ்ந்து போக என்ன இருக்காப்” சொன்னவள் லேப்டாப்பில் கண்களை பதித்த படி வேலையில் கவனம் செலுத்த ஆரம்பிக்க.. ஒரு நிமிடம் அவளையே பார்த்தவன் தலையில் மெல்ல அடித்து விட்டு நகர்ந்தான்.

“என்ன? என்னை பார்த்தா பைத்தியம் மாதிரி தெரியுதா.. தலையில உனக்கு நீயே அடிச்சுக்கற..”

“ கவனிச்சுட்டியா”.

“ பின்ன வேலையில ஒரு கண்ணு இருந்தாலும் இன்னொரு கண்ணு எப்பவுமே உன் மேல தான இருக்கும். உனக்கு தான் புரிய மாட்டேங்குது.” பெருமூச்சோடு மறுபடியும் வேலையை தொடர.. பிரவின் சென்ற திசையை நோக்கி சிவா நகர்ந்தான் .

சொன்னது போலவே சனிக்கிழமை காலையில் புறப்பட தயாராகினர்.

மொத்த பொறுப்பையும் சிவா எடுத்து இருக்க ,கூடவே வேலை செய்யும் அனைவருமே வந்திருந்தனர்.

திவ்யா தன்னுடைய பேக்கோடு ஏறி வந்தவள்.. பஸ்ஸில் இருந்தவர்கள் மொத்த பேரையும் பார்த்துவிட்டு நேராக முன் இருக்கையில் அமர்ந்திருந்த சிவாவிற்கு அருகே வந்து அமர்ந்தாள்.

“பச்.. எதுக்காக இப்ப இங்க வந்து உட்கார்ற.. உனக்கு சீட் நாலாவது லைன்ல போட்டு இருக்கேன். பின்னாடி சீட் இருக்குது “.

“சாரி பின்னாடி உட்காருற ஐடியா இல்ல. முன்னாடி உக்காந்தா தான் என்னால ரிலாக்ஸ்ஸா வர முடியும் .அதை விடவும் இந்த ஜன்னல் ஓர சீட்டை கொடுத்தா இன்னும் சந்தோஷம்.. எனக்கு அந்த பக்கம் சீட் தர்றியா “என்று கேட்க..

“ ஏன் திவ்யா இப்படி பண்ணிக்கிட்டு இருக்குற.. உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா .இப்ப எதுக்காக முன்னாடி வந்து உட்காருவேன்னு அடம் பிடிச்சிட்டு இருக்கற.. பின்னாடி உன்னோட பிரண்டு கலா இருக்கிறா.. அவளுக்கு பக்கத்துல தான் உனக்கு சீட் போட்டு இருக்கிறேன் .அங்க போய் உட்காரு .”

“ஆனால் நான் இங்கே உட்கார்ந்து வந்தா உன்கிட்ட பேசிட்டு வருவேன் .”

“என்கிட்ட பேச எதுவுமே இல்லை சரியா.. அப்புறமா நான் இந்த இடத்துலேயே ரொம்ப நேரம் உட்கார மாட்டேன். இன்னும் கொஞ்ச நேரம் ஆச்சுதுன்னா டிரைவர் பக்கத்துல போய் உட்கார்ந்துக்குவேன் .அவர் கூட தான் பேசிட்டு வரப்போறேன்.”

“ அப்படின்னா இன்னும் வசதியாச்சே ..இந்த சீட்ல சாஞ்சு படுத்துக்குவேன்..” சொன்னவளை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க..” சரி சரி முறைக்காத..

நீ விசுவாமித்திரர் தான் ஆனால் ஒருநாள் என்கிட்ட மயங்கி தான் இருக்க போற.. பார்த்துக்கோ.. நான் இப்போ என்ன!!பின்னாடி போய் உட்காரணும்.

அவ்வளவு தானே.. உட்கார்ந்துக்கறேன். எனக்கு ஏதாவது வேணும்னா உன்கிட்ட தான் வந்து கேட்பேன். கரெக்டா நீ எல்லாத்தையும் தரணும் புரிஞ்சுதா “சொல்லிவிட்டு நகர..

“ஹப்பா சாமி இவளை வச்சுக்கிட்டு எப்படி தான் இருக்க போறேன்னு தெரியலை” என்று சொல்லும் போது இவனுக்கு அருகே இன்னொரு நண்பன் வந்து அமர்ந்தான்.

“ என்ன சிவா திவ்யா தான் பக்கத்துல வந்து உட்காரறேன்னு வந்தாலே.. விட வேண்டியது தானே. நீ எதுக்காக வேண்டாம்ணா விரட்டி விடற..”

“உனக்கு என்ன பிரச்சனை இப்போ..”

“ நானெல்லாம் உன் இடத்தில இருந்தேன்னு வச்சுக்கோயேன் யார் வந்தாலும் சரி சந்தோஷம்.. பக்கத்தில் உட்கார வச்சுக்குவேன். வாழ்க்கையை என்ஜாய் பண்ணனும் தெரியுமா ..அத விட்டுட்டு இப்படி ஒவ்வொருத்தரையும் விரட்டிக்கிட்டு இருந்தா..

அது என்ன ?உன்கிட்ட அப்படி என்ன ஸ்பெஷல் ..இந்த பொண்ணுங்க எதை பார்க்கிறாங்கன்னு தெரியல.. ஆபீஸ்ல இருக்குற மொத்த பேரும் எப்பவுமே உன் பின்னாடி தான் சுத்தறாங்க. உன் மேல தான் வந்து விழறாங்க.. இந்த திவ்யா மட்டும் இல்ல இன்னும் சிலர் இருக்கிறார்கள். நானும் எல்லாத்தையும் பாத்துக்கிட்டு தான் இருக்கிறேன் .”

“தேவை இல்லாம அசிங்கமா பேசாத புரிஞ்சுதா ..எல்லாருமே நம்ம கூட வேலை செய்றவங்க அவங்களோட பாதுகாப்புக்கு நாம தான் பொறுப்பு .அதை முதலில் புரிந்துகோ..

எப்பவும் தப்பா பேசி பழகாத ..இது மாதிரி இன்னொரு தடவை என்கிட்ட பேசினேன்ணு வச்சுக்கோயேன் யோசிக்கவே மாட்டேன் முகரையை பேத்திடுவேன். எனக்கு இது மாதிரி பேசினா பிடிக்காது”.

“ சாரிடா சாரி தெரியாம வந்து வாயை கொடுத்துட்டேன். நான் பின்னாடியே போய் உட்கார்ந்துகிறேன் .உனக்கு ஏத்த ஒரு சாமியார் அங்க இருக்கிறாள். அவள் அனுப்பி வைக்கிறான் அவனை அனுப்பறேன் “என்றவன் வேகமாக நகர செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அங்கே பிரவீன் எல்லா ஏற்பாடுகளையும் தெளிவாக செய்து வைத்திருந்தான்

இவர்களுடைய வண்டி நேராக சென்றது அவன் ஏற்கனவே புக் செய்திருந்த ஹோட்டலுக்கு..

பெண்களுக்கு ஒரு புறமாகவும் ஆண்களுக்கு ஒரு புறமாகவும் ரூம் புக் செய்து வைத்திருந்தான்.

சரியாக ஒரு மணி நேரத்தில் மண்டபத்திற்கு வருவதற்காக அவனுடைய உறவினர்கள் இருவரை அங்கேயே நிற்க வைத்திருந்தான்.

இவர்கள் புறப்பட்ட உடலக்ஷன் நேராக மண்டபத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தான்.

இவர்கள் செல்லும் போது 5 மணியை நெருங்கி இருந்தது. கூட வந்தவர்கள் அனைவரிடமும் கூறியிருந்தான்.

“ இன்னமும் ஒரு மணி நேரத்துல எல்லாரும் கிளம்பி கீழ வந்துடனும். நம்ம எல்லாரும் மொத்தமா மண்டபத்திற்கு போயிடலாம். டிலே பண்ண கூடாது .”என்று சொன்னவன் திவ்யாவை அழைத்து ..

“லேடீஸ் எல்லார்கிட்டயும் நீ சொல்லிடு அவங்க எல்லாம் கரெக்டா புறப்பட்டு வர்றது உன்னோட பொறுப்பு “என்று சொல்ல ..”சரி அவங்களை எல்லாம் கிளம்பிட்டு வர்றது என்னோட பொறுப்பு .நான் யாரோட பொறுப்பாம்” என்று திரும்ப இவனிடம் வம்பு இழுக்க ஆரம்பிக்க.. பெரிய கும்பிடாக முகத்திற்கு நேராக போட்டவன்..

“ அம்மா தாயே ப்ளீஸ் என்னால உனக்கு பதில் சொல்ல முடியல. நீ தயவு செஞ்சு எல்லாத்தையும் கிளப்பிட்டு ஒரு மணி நேரத்துல கீழே வந்து சேரு. லேட் ஆச்சுன்னா நான் உனக்கு தான் போன் பண்ணி கேட்பேன் “என்று சொல்லிவிட்டு நகர்ந்திருந்தான்.

“ போ போ சிவா எத்தனை நாள் இப்படி பண்றேன்னு நானும் பார்க்கிறேன் .ஆல்ரெடி நான் முடிவே பண்ணிட்டேன். இந்த முறை உன்னோட அம்மா வந்தாங்கன்னா அவங்க கிட்ட நான் கேட்க தான் போறேன். உங்களுக்கு நான் மருமகளா வர சம்மதமா இல்லையான்னு.. “சொன்னவள் உள்ளே சென்று புறப்பட நகர்ந்தாள்.

சரியாக ஏழு மணி எனும் போதும் மண்டபத்திற்கு மொத்த பேருமே சென்று இருக்க.. ஏற்கனவே சிவா ஆள் உயர கேக் ஒன்று ஆர்டர் செய்திருக்க.. அங்கே மண்டபத்தில் ஓலித்த பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடியபடி எடுத்துச் செல்ல, மொத்த நண்பர்கள் பட்டாளமுமே அவர்களுக்கு தெரிந்த ஸ்டெப்பை போட்டப்படி நடனமாடி சென்றனர்.

“திவ்யா கடல் நீல நிற வண்ணத்தில் கற்கள் பதித்த லெகங்கா ஒன்று அணிந்து இருந்தாள்.

அதற்கு ஏற்றார் போல அலங்காரம் செய்திருக்க, ஏதோ வானத்து தேவதை கீழே இறங்கி வந்திருந்த தோற்றத்தில் வந்திருந்தாள். சிவாவை விட்டு நகரவே இல்லை .சிவாவுக்கு அருகில் தான் அவளும் வந்தது .

“இந்த டிரஸ் நல்லா இருக்கா இல்லையான்னு ஒரு வார்த்தை சொன்னியா” இவனிடம் கேட்க, திரும்பி அவளை பார்த்து முறைத்தவன்..” இப்ப என்ன நல்லா இல்லைன்னு சொன்னா என்ன செய்வ.. போய் மாத்திட்டு வந்துருவியா ..இல்ல தானே பேசாம கூடவா .”

“சும்மா இதெல்லாம் பேச்சுக்காகாது.. கேக்குறதுக்கு பதில் சொல்.. உனக்கு பிடிக்கலைன்னா சொல்லு. இப்போ இந்த நிமிஷமே நான் மாத்திட்டு வந்துருவேன்”.

“ அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் .நல்லா தான் இருக்குது. “
“அப்புறம் என்ன முதல்ல கேட்கும் போதே சொல்ல வேண்டியது தானே .அப்ப என்ன பெரிய பந்தா வேண்டி கிடக்குது .”

“இத பாரு திவ்யா இது மாதிரி எல்லாம் பேசாத.. அதை தான் உன்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கிறேன்.”

“நீ என்ன சொன்னாலும் எனக்கு கேட்கவே மாட்டேங்குது நான் என்ன செய்யறது .எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு. நான் உன்கிட்ட கேட்கலாமா..”

“ இங்க இந்த இடத்துல தான் கேட்க்கணுமா.. இருக்கிற சத்தத்தில் உன்கிட்ட பேசுறதே பெருசுன்னு தோணுது”.

“சரி சரி சத்தம் கொஞ்சம் குறைஞ்ச இடத்துல வச்சு உன் கிட்ட பேசறேன் “.என்று நகர அங்கே மேடையில் இருந்தவர்களை கவனிக்க ஆரம்பித்தான் சிவா .

நேரம் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாண்டி விட்டது. பிரவீன் நேராக சிவாவிடம் வந்தவன்.” மச்சான் ப்ளீஸ் எல்லாத்தையும் அழைச்சிட்டு போய் கரெக்டா சாப்பிட வச்சுடு..

எந்த குறையும் யாருக்கும் இருக்க கூடாது. நம்ம பிரண்டுகளை நம்ம தான் கவனிக்கணும். இப்போதைக்கு மேடையில் இருந்து இறங்க முடியாது போல இருக்குது .நிறைய சொந்தக்காரங்க வந்துகிட்டே இருக்காங்க”.

“ ஆமாண்டா ஒரு ஊரே வந்திருக்கும் போலவே.. எனக்கு ஆச்சரியமா இருக்குது. பிரம்மாண்டமான கல்யாணம்னா உன்னது தான் ..

வேற வேற மனிதர்களை பார்க்கும் போது மனசுக்குள்ள ஒரு சந்தோஷம் ஊற்று எடுக்க தான் செய்யுது. என்ஜாய் பண்ணு மச்சான் .”என்று சொன்னவன் நகர்ந்து செல்ல, போனவனை பிடித்து நிறுத்தினான்.

“என்னடா..”

“ அப்புறமா வந்து “.

“என்னடா சொல்லு “.

“நைட்டு நம்ம பிரண்டுங்க எல்லாருமே பேச்லர் பார்ட்டி வேணும்னு கேட்டிருக்காங்க.. பக்கத்தில் இருக்கிற ரெஸ்டாரண்ட்ல ஏற்பாடு பண்ணி இருக்கிறேன் .யார் யார் வராங்களோ அவங்க எல்லாம் அங்க போய்க்கலாம்ணு சொல்லி இருக்கிறேன் “.

“சரிடா அத எதுக்கு என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கிற.. எப்படியும் நான் அந்த பக்கம் வரப் போறது இல்ல.”

“ அப்படி இல்ல.. ஏதாவதுன்னா உன்கிட்ட உதவி கேட்பேன் அதற்காகத்தான் .”

“சரி சரி நான் பாத்துக்கிறேன் டென்ஷன் ஆகாத.. நான் இங்கதான் மண்டபத்தில் இருப்பேன். யாருக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் கூப்பிடு. நான் வரேன் ..என்ன யாராவது குடிச்சிட்டு வாந்தி எடுத்துத்தோ.. ரகளை பண்ணுவாங்களோண்ணோ இல்ல அந்த இடத்திலேயே மட்டையாயிடுவாங்களோன்னு பயபடறையா என்ன?”.

“அதே தான் கரெக்டா பாயிண்ட் பிடிச்சுட்ட ..தேங்க்ஸ்” என்று நகர மொத்த பேருமே சாப்பிடும் இடத்திற்கு அழைத்து சென்றான் .

அதன் பிறகும் கூட நீண்ட நேரம் வரையிலுமே அங்கே கோலாகலமாக ஆட்டம் பாட்டம் என நேரம் நகர்ந்து கொண்டிருந்தது.

சற்று நேரம் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தவன் அப்படியே நகர்ந்து பால்கனிக்கு நேராக நின்று ரோட்டில் செல்லும் வாகனங்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

பழைய நினைவுகள் ஏனோ திரும்பத் திரும்ப மனதில் அலையாய் அலை மோதி கொண்டிருந்தது அவனுடைய மனதிற்குள்..

“பாப்பு.. ரோடு கிராஸ் பண்ணும் போது இப்படி எல்லாம் வேகமாக ஓடக்கூடாது” என்று கையை பிடித்து நிறுத்திய ஞாபகம் வர.. சட்டன பழைய நினைவுகளுக்குள் செல்லக்கூடாது என நினைப்பபடியே தலையை உதறிக் கொண்டு திரும்ப.. அங்கே திவ்யா வந்து நின்று இருந்தாள்.

“என்ன நான் உள்ளே உன்னை தேடினால் நீ என்ன இந்த பக்கம் வந்து நிற்கிற” என்று அவளுமே பால்கனியில் நின்று ரோட்டை பார்த்தபடி பேச ..”சும்மாதான் அங்க ரொம்ப இரைச்சலா சத்தமா இருக்கிற மாதிரி இருந்தது .அதுதான் இந்த பக்கம் வந்து கொஞ்சம் காத்தோட்டமா நிற்கலாம்ணு வந்தேன் “.

“சரி நான் உன்கிட்ட பேசறத பத்தி என்ன நினைக்கிற..”

“ நீ என்ன பேசுற அதை முதல்ல சொல்லு “.

“நான் உன் அம்மா கிட்ட இந்த முறை வந்தா உங்களுக்கு நான் மருமகளா வர சம்பந்தமான்னு கேட்கப் போறேன் .”

“அம்மா கிட்ட கேக்குறதுக்கு முன்னாடி அம்மா பெத்த பையன் கிட்ட கேக்கணும் திவ்யா .எனக்கு விருப்பம் கிடையாது. நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கற ஐடியாவில் இல்ல”.

“ இப்படி சொன்னா என்ன அர்த்தம்.. ஒருவேளை சிவா என்ன பார்த்தா உனக்கு ரொம்ப இளக்காரமா இருக்குதா..

ஒரு பொண்ணு நானே வந்து பிடிச்சிருக்கான்னு கேட்டா அந்த பொண்ண அப்படி தான் பார்ப்பீங்களா.. ரொம்ப இளக்காரமா, கேவலமா ஒருவேளை உனக்கும் என்னை பார்த்தா அப்படி தோணுதா..”

“ என்ன பைத்தியம் மாதிரி உளறிக்கிட்டு இருக்கிற திவ்யா..”

“இல்ல இப்பல்லாம் தோணுது நானேதான் எப்பவும் உன் கிட்ட வந்து பேசிகிட்டு இருக்கேன் .நீ ஓகேன்னு சொல்லலை.

எப்பவுமே பிடிக்கலைன்னு தான் ஒரே விஷயத்தை சொல்லிக்கிட்டு இருக்கற.. அதனால் தான் கேட்கிறேன். நான் தப்பான பொண்ணா..

என்னை பார்த்தா உனக்கு பிடிக்கலையா ..எரிச்சலா வருதா ..எனக்கே புரியல. திரும்ப திரும்ப மண்டைக்குள்ள ஒரே விஷயம் தான் ஓடிட்டு இருக்குது .நான் என்னோட மனசை எப்படி உன்னிடம் புரிய வைக்கிறது தெரியல..”

“நீ ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு திவ்யா. உன்கிட்ட எந்த குறையும் கிடையாது .நீ எல்லாம் வைரம் மாதிரி.. உனக்கானவன் வரும் போது அவனோட தலையில அலங்கரிக்க போற வைரம் மாதிரி நிச்சயமா நீ உயர்ந்தவ.. உனக்கானவன் நான் இல்லை.”

“அதுதான் ஏன்னு கேட்கறேன்.”

“ உனக்கு சொன்னாலும் புரியாது.. எனக்கு சொல்லவும் இஷ்டம் இல்ல. என்னோட பர்சனல் என்னோடவே போகட்டும் .நான் யார்கிட்டயும் ஷேர் பண்ணிக்க மாட்டேன்.

இந்த ஆறு மாசமா நீ இது போல தான் என்கிட்ட பேசிக்கிட்டு இருக்கிற.. ஒருவேளை எனக்குமே கேட்டு கேட்டு பழகிடுச்சு போல இருக்குது .அதை தாண்டி எனக்கு எதுவும் தோன்றவில்லை.”

“சிவா நான் நெஜமாவே உன்னை . “

“ப்ளீஸ் இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம் .ஆல் ரெடி எனக்கு பிரவீன் வேற ஒரு வேலை கொடுத்திருக்கறான் நான் அத போய் கவனிக்கறேன்” என்று வேகமாக நகந்தான்.

ஒவ்வொரு முறையுமே திவ்யா கேட்கும் போதெல்லாம் தட்டிக் கழிப்பது போல பேசினாலுமே அவள் விடுவதாக இல்லை.

கோபமாகவும் சொல்லி விட்டான் குணத்தோடும் சொல்லி விட்டான் ஆனால் அவளுடைய எண்ணத்திலிருந்து மாறுவது போல தெரியவில்லை .

அதுவே ஒரு மாதிரியாக தலைவலிப்பது போல தோன்ற.. நேராக அருகே இருந்த ரெஸ்டாரண்டிற்குள் நுழைந்தான்.
உள்ளே பேச்சிலர் பாட்டி நடக்கின்ற ஹாலை நோக்கி நகர ..

அங்கே வாசலிலேயே பிரவீன் நின்றிருந்தான். மணி 12 மணி தாண்டி இருந்தது .
“வாடா நீ இப்பதான் பார்ட்டி தொடங்கி இருக்குது .அநேகமா உன்னோட உதவி எல்லாம் தேவை இருக்காதுன்னு நினைக்கிறேன்*.

ம்..என்றபடியே உள்ளே நுழைய.. “டேய் நீ எங்க போற அங்க..”

“ஏன் நானெல்லாம் ட்ரிக்ஸ் பண்ண மாட்டேனா” என கேட்டபடி நகர..” டேய் என்னடா ஆச்சு ..இது என்ன திடீர்னு.. இல்ல இதெல்லாம் வேண்டாம் நீ முதல்ல வெளியே வா” என்று கூற..” பயப்படாத மடாக்குடியெல்லாம் கிடையாது ஜஸ்ட் பியர் தான் அடிக்க போறேன் .”

“ஏற்கனவே நீ குடிச்சிருக்கறையா? “

“ஒரே ஒரு முறை குடித்து இருக்கிறேன். ஆனால் குடிச்சதுக்கு அம்மா கிட்ட செமத்தியா அடி வாங்கி இருக்கிறேன். அதுக்கு பிறகு இப்ப வரைக்கும் குடித்தது கிடையாது .ஆனா இன்னைக்கு என்னவோ எதுவும் சரி இல்லை”.

“என்ன ஆச்சு ஏதாவது பிரச்சனையா “.

“இந்த திவ்யா ஏதாவது வந்து உன்கிட்ட பேசினாளா..”

“ அவ பிரச்சனை இல்லடா.. அவ என்னைக்கு தான் பேசாம இருந்திருக்கறா.. எனக்கு நான்தான் பிரச்சனை..ஏதேதோ பழைய ஞாபகம் .என்னை எங்கெங்கேயோ இழுத்துட்டு போகுது “.

“புரியலை நீ சொல்லறது”.என்று கேட்க …”இரு வரேன் “என்று சொன்னபடியே ஒரு பியர் டின்னை ஓப்பன் செய்தவன் கடகடவென வாயில் ஊத்த ஆரம்பிக்க திகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒன்றை முடிக்கவும் எடுத்து ஓரமாக வைத்தவன்.. இன்னொன்றை தொட போக வேகமாக கையை பற்றி கொண்டான் பிரவீன் .

“திவ்யாவுக்கு நீ இங்க வந்தது தெரிஞ்சா என்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவா.. பேசியே என்னை கொன்னுடுவா.. நாளைக்கு காலைல எனக்கு கல்யாணம்.. நல்லபடியா முடியணும் ஏதாவது பிரச்சனையாச்சுனா நான் திவ்யாவோட முகத்தை கூட என்னால பாக்க முடியாது..”

இவன் சொல்லிக் கொண்டிருந்த போது ஒரு புறமாக சாய்ந்தவன் வாந்தி எடுக்க ஆரம்பித்து இருந்தான்.

அடுத்த நொடி பிரவீனின் தோளிலேயே அப்படியே சாய்ந்து விழ ..அவனும் நண்பனை தாங்கிப் பிடித்துக் கொண்டான் ‌

“இவ்வளவுதான் உன்னோட கெப்பாசிட்டியா.. ஒரே ஒரு பியர்க்கே அவ்வளவு தானா முடிஞ்சு போச்சு . இப்ப தெரியுதுடா நீ ஏன் டிரிங்க்ஸ் பண்ணாம ட்ரிங்க்ஸ் பக்கம் போகாமல் இருக்கிறேன்னு” என்று சொன்னபடியே தோளில் தாங்கியபடி நடக்க.. அதே நேரத்தில் சரியாக அந்த இடத்திற்கு திவ்யாவும் வந்திருந்தாள்.

“ திவ்யா உன்னை யார் இங்க வர சொன்னது.. நீ முதல்ல மண்டபத்துக்கு போ..”

“ என்ன பிரவீன் ..நான் சிவா தான் தேடி வந்தேன் “என்று சொன்னபடியே சிவாவிற்கு அருகே வர.. அவன் இப்போதுமே தோளில் சாய்ந்து மயக்கத்தில் தான் இருந்தான்.

“ என்ன ஆச்சு இவனுக்கு “என கேட்டபடி அருகே வந்தவளிடம்..” ஒன்றும் இல்லை நான் பார்த்துக்கிறேன்னு சொல்றேன்ல.. உலக அதிசயமா ஒரு பியர் பாட்டில் எடுத்து ஓபன் பண்ணினான்..அவ்வளவுதான் வாந்தி எடுத்தாச்சு ..மயங்கியாச்சு.. “

“என்னது குடிச்சானா.. என்ன உளர்ற.. அவனுக்கு இதெல்லாம் பழக்கம் கிடையாது.. நீ தான் வேணும்னே ஊத்தி கொடுத்தியா”.

“ ஏய் என்ன விளையாடுறியா.. எனக்கு வேற வேலை இல்ல.. நாளைக்கு காலையில எனக்கு கல்யாணம்.. ஃபிரண்டுங்க எல்லாம் கேட்டாங்கன்னு சொல்லி அரேஞ்ச் பண்ணினேன் ..தவிர குடிக்கற ஐடியா எனக்கு கிடையாது புரிஞ்சுதா .சும்மா நீ பாட்டுக்கு ஏதாவது உளறாத.. “

“நீ முதல்ல நகரு ..அவனை நான் கூப்பிட்டுட்டு போறேன் .”

“இத பாரு அவன் இருக்கிற வெயிட்க்கு எல்லாம் உன்னால பிடிக்கவே முடியாது. வேணும்னா ஒன்னு செய் அந்த பக்கம் சரியாத மாதிரி அவைன பிடிச்சுக்கோ..

அதை வேணும்னா செய்யலாம். இவனை முதலில் நேரா கூப்பிட்டுட்டு போய் மண்டபத்தில்
இருக்கிற ஒரு ரூம்ல தூங்க போடலாம் “என்று சொன்னபடியே அழைத்துக் கொண்டு நகர ..அப்போது தெளிவாக உளறினான்.

“பாப்பு..பாப்பு என்னை புரிஞ்சுக்கவே இல்லல்ல.. நான் தான் தப்பு பண்ணிட்டேனா..”என்று சொல்ல திகைத்தபடி சிவாவின் முகத்தை பார்த்தாள் திவ்யா.

 

NNK-15

Moderator
4


தலை வார வாரவே “ஷ்ஷ்ஆ.. “என்று விவேகா சத்தம் தர வேகமாக சீப்பை நகர்த்தியவர் தலையை பிரித்துப் பார்த்தார். நெற்றி வகுடு எடுக்கும் சற்று நகர்ந்து இருந்த இடத்தில் கிட்டத்தட்ட மூன்று தையல் போட்டதற்கான அடையாளம் தெரிந்தது .


காயம் ஆறி இருந்தாலுமே சட்டெனப்படவும் வலியில் லேசாக சத்தம் போட்டு இருந்தாள். சட்டென பார்த்தவர் “இது என்னடி.. இது எப்ப ஆச்சுது? இன்னும் எத்தனை

தான் என்கிட்ட சொல்லாம மறைச்சிருக்கிற” என அழ ஆரம்பிக்க ..எதுவும் சொல்லாமல் சட்டென்று எழுந்து நகர்ந்தாள் விவேகா.


ஏனோ மறுபடியும் பழைய நினைவுக்குள் மனம் செல்ல ஆரம்பித்தது.


“இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வராங்களாம் “என்று சொன்னபடியே கை நிறைய பொருட்களோடு இவளது தந்தை வந்தார்.


“சரி இதெல்லாம் என்ன பா..”


“அவங்க வரும் போது இதெல்லாம் வேணும் தானே..”


“அதுக்கு எதுக்காக இத்தனை வாங்கிட்டு வந்தீங்க”.


“ என்ன பெருசா வாங்கி வந்திட்டேன்..பார்க்க வரும் போது பூ பழம் எல்லாம் நம்ம முன்னாடி வைக்கணும் தானே.. இது உனக்கு கட்டிக்கறதுக்காக புடவை ..அப்புறம் இது உனக்கு பிடிச்ச பூ “என்று மல்லிகை பூவை காட்டினார் .


இவளுக்கு பிடித்தது போல நெருக்கமாக கட்டியிருந்தது. பூவை பார்க்கவும் இவளுடைய முகம் புன்னகையில் மலர்ந்தது.


“ ஆன்ட்டி பூக்கட்டற மாதிரியே ரொம்ப அழகா கட்டி இருக்காங்க” என்று சொல்ல ..”தெரியுமே நீ இந்த வார்த்தையை சொல்வேண்ணு.. இதை பத்திரமா டைட்டா டிபன்ல போட்டு பிரிட்ஜில் வச்சிடு .நாளைக்கு வரும் போது எடுத்து வச்சுக்கோ ..இதெல்லாம் கூட உள்ளே கொண்டு போய் வச்சிடு.. அப்புறமா யூஸ் அண்ட் த்ரோ டம்ளர் பிளைட் எல்லாமே வாங்கி வந்திருக்கிறேன். வரவங்களுக்கு காபி, பஜ்ஜி, மிச்சர்ணு ஏதாவது தரணும்ல”என்று சொல்ல ..

சரி என தலையாட்டி விட்டு நகர்ந்தாள்.


சொன்னது போலவே அடுத்த நாள் காலை 10 மணி எனும் போது மதனின் வீட்டிலிருந்து அனைவருமே வந்திருந்தனர்.


மதன் கூட வந்திருந்தான். நடு நாயகமாக அமர்ந்திருந்தான். வந்தவர்கள் அனைவருக்குமே வணக்கம் சொல்லவும் மதனின் தாயார் இவளை அழைத்து தனக்கு அருகே அமர வைத்துக்கொண்டார்.


கையைப் பிடித்த படியே பேச்சு கொடுக்க கேட்டதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் விவேகா.


“ என்ன படிச்சிருக்கற”.


“ பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் “என்று சொல்ல ..”அப்படியா” என்றவர்.. “இப்ப என்ன செய்ற “.


“வேலைக்கு போய்கிட்டு இருக்கறேன் “என்று சொல்ல.. “கல்யாணத்துக்கு பிறகு எல்லாம் நீ வேலைக்கு போகணும்னு கட்டாயம் இல்ல வீட்ல இருந்து என் மகனை நல்லபடியா பார்த்துகிட்டா போதும் .


இப்பவே ஆஃபீஸ்ல சொல்லிடு சரியா” என்று சொன்னவர் ..மகனைப் பார்த்து பேசினார் .“பொண்ண நல்லா பார்த்துக்கோ ..உனக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு சொல்லு “என்று சொல்ல.. நிமிர்ந்து பார்த்தவன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. புன்னகை என்பது மருந்துக்கும் இல்லை.


மதனை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் தோன்றியது இதுதான் .’என்ன இது காலேஜ் பசங்க கூட பழகுறதா சொன்னாங்க. ஒரு சிரிப்பு கூட உதட்டில் வரல.. ரொம்ப ஸ்ட்ரிட்டான வாத்தியார் போல இருக்குது .’மனசுக்குள் கவுண்டர் கொடுத்து கொண்டு இருக்க ,இவளை கவனிக்கும் எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லை என்பது போல சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தான்.


சற்று நேரம் வரைக்கும் பேசியவர் .”சரி நாங்க புறப்படறோம் . எங்களுக்கு பொண்ணு ரொம்ப பிடிச்சிருக்குது ‌பையன் கிட்ட கேட்டுட்டு சீக்கிரமாவே மேற்கொண்டு பேசிக்கலாம் “என்று நகர்ந்தனர்.

சொன்னது போலவே அடுத்த ஒரு வாரத்தில் நிச்சயம் செய்து கொள்ளலாம் என்று சொல்ல.. இங்கே விவேகா மகிழ்ச்சியில் துள்ளினாலோ இல்லையோ அவளுடைய தந்தை வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பது போல அத்தனை மகிழ்ச்சியாக காணப்பட்டார்.


“ என் பொண்ணு அங்க போய் ராணி மாதிரி இருக்க போறா.. எனக்கு எத்தனை சந்தோஷமா இருக்குது தெரியுமா. ஊர் கண்ணெல்லாம் என் பொண்ணு மேல தான் இருக்க போகுது .இந்த மாதிரி சம்பந்தம் யாருக்கு கிடைக்கும்” என்று பெருமையாக பேசித்தள்ள அமைதியாக புன்னகையோடு கவனித்துக் கொண்டிருந்தாள் விவேகா.


அடுத்த வாரத்தில் அவர்களுடைய சொந்தம் மொத்த பேரையுமே அழைத்து வந்து சிறிய அளவில் நிச்சயம் செய்து விட்டு சென்றனர் .


அப்போதும் கூட அவளை பார்த்து மருந்துக்கும் சிறு புன்னகை கூட சிந்தவில்லை.


ஏன் இவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை தேவதை போல அலங்காரம் செய்து கொண்டு வந்து நிறுத்தி இருக்க..


பார்த்த அனைவருமே இருவரின் பொருத்தத்தை பற்றி பாராட்ட.. அருகில் நின்றவனுக்கு நிமிர்ந்து கூட இவளை பார்க்க முடியாமல் எங்கேயோ வெறித்து கொண்டு இருந்தான்.


திருமணம் கூட அடுத்த 15 வது நாளில் முடிவு செய்திருக்க.. இங்கே விவேகாவின் தந்தைக்கோ அத்தனை மகிழ்ச்சி .


உடனே சம்மதம் என கூறி இருந்தார் .அருகே இருந்த பெரிய மண்டபம் பார்ப்பது என்று அடுத்தடுத்து பிசியாக இருந்தார் .


இவளோ நிச்சயம் முடிந்த அடுத்த நாளே தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்திருந்தாள்.

ஏற்கனவே சொன்னது போலவே..” நான் இந்த ஆபீஸை விட்டு போக போறேன் .எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு “என அந்த பெரிய ஹாலில் குத்தாட்டம் போட்டு விட்டு தான் வந்தது.


அத்தோடு விவேகா நிறுத்தி இருக்கவில்லை ..கொண்டு வந்த லெட்டரை கூட காற்றில் நான்கு முறை வீசி வீசி பிடித்து பிறகு தான் கொண்டு போய் கொடுத்தது.


15 நாள் என்பது மிகவும் குறுகிய நேரம் தான்.. இவளுக்கும் மாப்பிள்ளையை பற்றி எந்த ஒரு விஷயமும் தெரிந்திருக்கவில்லை .


இடையில் ஒரு முறை கூட அவனும் இவளிடம் பேசியிருக்கவில்லை .


புடவை எடுக்க மற்ற விஷயங்களுக்கு என ஒவ்வொன்றுக்குமே இவள் தந்தையோடு சென்றிருந்தாலுமே வேறு எந்த ஒரு நிகழ்வுக்குமே மதன் வந்திருக்கவில்லை .கேட்டபோது “அவனுக்கு காலேஜ்ல நிறைய ஒர்க் இருக்கு . நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல.. இதோ நியூ அட்மிஷன் ஸ்டார்ட் ஆயிடுச்சு. அங்கே காலேஜ்ல ரொம்ப பிசி அதனால அவனை தொந்தரவு பண்ண வேண்டாமேண்ணு.. அதனால தான்.. நாங்களே வந்தோம் “என்று சொல்லி சமாதானம் செய்திருந்தனர்.


வெகு வேகமாக நாட்கள் நகர.. அடுத்த நாள் திருமணம் எனும் நிலையில் முந்தைய நாள் ரிசப்ஷனுக்காக இருவரையும் மேடையில் ஏற்றி நிறுத்தி இருந்தனர் .


முகம் முழுக்க புன்னகை முகமாக மகிழ்ச்சியோடு வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதையின் புன்னகையோடு விவேகா நின்று இருக்க..


இப்போதும் கூட அவனுடைய முகத்தில் புன்னகை என்பதே இல்லை. முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு எதையோ வெறித்தது போல தான் நின்றிருந்தது.


கழுத்தில் போட்டிருந்த மாலையோ,போட்டிருந்த உடையோ எதுவுமே அவனுக்கு மகிழ்ச்சியை தரவில்லை என்பது போன்ற தோற்றத்தில் தான் நின்று இருந்தான்.


இங்கே இவளோடு படித்தவர்கள் ஆபீஸில் வேலை செய்தவர்கள் இன்னமும் ஏற்கனவே முன்பு குடியிருந்த இடத்தில் இருந்தவர்கள் என நிறைய பேர் இவளிடம் வந்து பேசிவிட்டு சென்றனர்.


ஒவ்வொருவரிடமும் புன்னகை முகமாக பேசிக் கொண்டிருக்க அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தானே தவிர யாரிடமும் பேச்சு கொடுக்கவில்லை.


மதன் ஏனோ தானோ என அங்கே நின்றிருக்க இவளுடைய நண்பர்கள் பட்டாளம் வந்து வாழ்த்த..இவளுடைய நெருங்கிய தோழி இவளிடம் பேசிவிட்டு சென்றிருந்தாள்.


“ என்ன ஆச்சு மாப்பிள்ளைக்கு.. இந்த கல்யாணத்துல அவருக்கு சம்மதம் தானே.. முகமே சரியில்லையே.. ஏன் இப்படி இருக்கிறார் “.


“எனக்கும் தெரியலை டி பார்க்க வந்த நாளிலிருந்து இப்படித்தான் இருக்கிறார். ஒரு வேளை இது தான் அவரோட குணமோ என்னவோ தெரியல ஆனா அவரோட அம்மா, அப்பா எல்லாம் ரொம்ப நல்லவன் என் பையன்.. உழைப்பாளி இந்த வயசுல வீடு வாங்கிட்டான் அப்படி இப்படின்னு நிறைய சொல்றாங்க . எனக்கு ஒன்னும் புரியல”.


“ என்னவோ சரி இல்லன்னு தோணுது விவேகா ..கொஞ்சம் கவனமாக இரு.” முதல் முறையாக தோழிதான் இவளிடம் சொல்லிவிட்டு சென்றது .


அவள் சொன்ன பிறகு தான் மதனை கவனிக்க ஆரம்பித்தாள்.


சொன்னது உண்மையாக இருக்குமோ என்கின்ற பயம் மனதிற்குள் வந்தாலுமே வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. புன்னகை முகமாகவே இருந்தாள்


அடுத்த நாள் அழகாக விடிந்திருந்தது காலை 8 மணிக்கு முகூர்த்தம் என்று சொல்லி இருக்க.. ஆறு மணிக்கு எல்லாம் இவளை எழுப்பி மேக்கப் போட்டு விட ஆரம்பித்து இருந்தனர் .


சரியாக எட்டு மணி என்னும் போது மணமேடையில் இவளை கொண்டு சென்று அமர வைக்க ஏற்கனவே காத்திருந்த மதன் கெட்டி மேளம் சத்தத்தோடு உறவினர்களின் ஆசிர்வாதத்தோடு இவளுடைய கழுத்தில் தாலியை கட்டி இருந்தான்.


தாலி கட்டிய அந்த நொடி கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் சட்டென வழிந்தது விவேகாவிற்கு..


இனி இவனோடு தான் காலம் முழுவதும் வாழ வேண்டுமா? என்கின்ற ஒரு எண்ணம் மனதில் எழ கண்ணீர் முகத்தோடு இவனை திரும்பி பார்த்தாள்.


இப்போதும் கூட முகம் இறுக்கமாகத்தான் தெரிந்தது .


நான் இருக்கிறேன் என்கின்ற சிறு ஆறுதல் கூட அவனுடைய கண்களில் இல்லை .


மதனை பார்த்தபடியே அடுத்தடுத்த சம்பிரதாயங்களை செய்து முடிக்க ,சற்று நேரத்தில் எல்லாம் மணமக்களை வாழ்த்துவதற்காக மேடைக்கு உறவினர்கள் வர ஆரம்பித்தனர் .


ஒவ்வொருவருமே வாங்கி வந்த ஃகிப்ட்டை கொடுத்து விட்டு செல்ல.. சரியாக ஒரு பெண் மேடையில் ஏறி வந்தவள் மதனை லேசாக அணைத்து கண் கலங்கியபடியே “ஐ மிஸ் யூ “என்று சொல்லிவிட்டு நகர.. இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை .


இருவரையும் பார்த்தவள் அமைதியாகத்தான் நின்றிருந்தாள்.


அடுத்த சில நிமிடங்களிலேயே மதனின் தாயார் இவளுக்கு அருகே வந்தவர் ..”இதோ பார்மா உனக்கும் என் பையனுக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சு .


இனி அவனை பார்த்துக்கொள்ள வேண்டியது உன்னோட பொறுப்பு .


அவனை உன்னோட முந்தானையில முடிஞ்சு வச்சுக்கிறது உன்னோட சாமர்த்தியம் ..நீ இப்படி அப்படின்னு எந்த கம்ப்ளைன்ட்யும் என்கிட்ட எடுத்துட்டு வந்துட கூடாது.


அவன் வாங்கி இருக்கிற அந்த வீட்ல தான் உங்களை குடித்தனம் வைக்க போறோம். அவனை அனுசரிச்சு புரிந்து நடத்திக்கோ ..


உன் கைக்குள்ள வச்சுக்கோ . அவன் குழந்தை மாதிரி ..உன்னை நல்லா பார்த்துக்குவான்” என்று சொல்ல ..இப்போதும் கூட அவர் சொன்னதின் அர்த்தம் இவளுக்கு புரியவில்லை .திருதிரு என விழித்தாலே தவிர எந்த பதிலும் பேசவில்லை .


”என்ன நான் கேட்டுக்கிட்டு இருக்கிறேன். சொல்லிட்டு இருக்கறேன். சரிங்கற மாதிரியாவது தலையை ஆட்டேன். ஏன் இப்படி முழிக்கிற” என்று கேட்க..” சரி அத்தை” என்று கூறினாள்.

இனி வரப்போகும் பூகம்பம் தெரியாமல்.. 

NNK-15

Moderator
5


பிரவீனின் கல்யாணம் முடிந்து சரியாக ஒரு வாரம் தாண்டி இருந்தது .


இயல்பு வாழ்க்கைக்கு அனைவருமே திரும்புகின்றனர்.


பிரவீன் கூட இதோ இன்றிலிருந்து வேலைக்கு வந்து கொண்டிருக்கிறான்.


வழக்கம் போல நேரம் மெல்ல நகர்ந்து கொண்டு இருந்தது.


அன்றைய நாளுக்கு பிறகு சிவா அமைதியாக காணப்பட்டான் .திவ்யா கூட அவனிடம் எதுவும் கேட்டிருக்கவில்லை .


பிரவீன் வந்த கொஞ்சம் நேரம் கழியவுமே ஆரம்பித்து இருந்தாள்.


“அன்றைக்கு சிவா குடிக்கிறதுக்கு நீ தானே காரணம் ..நீ தானே அவனை அழைச்சிட்டு போன.. “என்று ஆரம்பிக்க..” அம்மா தாயே அன்னைக்கே நான் சொல்லிட்டேன்.


நான் எதுவும் செய்யலன்னு.. அவன் பண்ணினதுக்கு நீ என்னை போட்டு வாட்டக்கூடாது. எப்படா ஆபீஸ்க்கு வருவான்? சண்டை போடலாம்னு காத்திருக்கறயா?” என்று கேட்க.. அருகில் இருந்த சிவாவோ ..


“என்ன பிரவீன் முகத்திலேயே பெரிய ஒளிவட்டம் ஒன்று தெரியுது .. என்ன ஸ்பெஷலாம்” என்று கேட்க ..


“அதுவா நீயும் சீக்கிரமா கல்யாணம் பண்ணி பாரு. உன் முகத்திலேயும் பெருசா ஒளிவட்டம் தெரியும். எல்லாம் மனைவியோட மகிமை” என சொன்னபடியே லேப்டாப்பில் வேலையை கவனிக்க ..


“சரி நீ எனக்கு பதில் சொல்லு” என்று சிவாவிடம் திரும்பி அமர்ந்தாள் திவ்யா.


“ காலையில வேலையை பாரு ..நீ என்ன கேட்டாலும் என்கிட்ட இருந்து எந்த பதிலும் வராது.”


“ சும்மா இப்படியே சொல்லி சமாளிக்க முடியாது .எனக்கு உண்மை தெரிஞ்சாகணும். இத்தனை நாள் பொறுமையா இருந்தேன்னா அதுக்கு காரணம் என்ன தெரியுமா..


எனக்கு நானே சில கேள்விகளை கேட்டுக்கிட்டு இருந்தேன். இன்றைக்கு நீ எனக்கு ஒழுங்கா பதில் சொல்லு .”


“என்ன சொல்லணும் உனக்கு”.


“ யார் அந்த பாப்பு? நீ அன்னைக்கு குடிச்சிட்டு அந்த பெயரை தான் உளரின..”


“அப்படி எல்லாம் யாரும் இல்லை .அப்புறமா அன்னைக்கு நான் எதுவும் உளர எல்லாம் செய்யலை..


குடிச்சிட்டு கீழ விழுந்தேன். எனக்கு ஞாபகம் இருக்கு. அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாது “.


‘சும்மா கதை சொல்லாத.. இந்த குடிக்கிற பசங்க கிட்டயே பெரிய பிளஸ் இது தான் .எனக்கு எதுவும் தெரியாது ஞாபகம் இல்லன்னு கதை சொல்ல வேண்டியது.


எனக்கு எல்லாம் தெரியும் ..இந்த கதை எல்லாம் இங்கே ஆகாது .குடிக்கிறவனுக்கு சுத்தமா சுயநினைவு இல்லாத அளவுக்கு எல்லாம் போறது கிடையாது .அவனுக்கு தெரியும்.


அவன் என்ன செய்கிறான் என்ன பேசுறான் எல்லாமே தெரியும் .ஆனா ஏதாவது தப்பா போயிடுச்சுன்னா ஈஸியா இப்படி ஒரு பதிலை சொல்லிக்கிட்டு தப்பிக்க வேண்டியது .


எந்த குடிகாரன் கிட்டயாவது கேளு ..அவனோட அம்மாவுக்கும் அடுத்த பொண்ணுக்கும் வித்தியாசம் தெரியாம போயிடுதான்னு அதெல்லாம் தெளிவா தெரியும் ஆனா சொல்லும் போது இப்படித்தான் மாத்தி மாத்தி பேசுவானுங்க .


உண்மையை சொல்லு யார் அந்த பாப்பு ..அந்த பாப்புவுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்.. ஒருவேளை நீ இங்க என்னோட காதலை ஏற்றுக்காததுக்கு அந்த பாப்பு தான் காரணமா..


முக்கியமான கேள்வி கேட்க மறந்துட்டேன் . அந்த பாப்பு உன்மையிலேயே பொண்ணு தானே இல்ல பையனா..


சம்டைம்ஸ் எனக்கே உன் மேல சந்தேகம் வருது” என்று ஒரு மார்க்கமாக அவனை பார்க்க.. கையில் இருந்த பேனாவை எடுத்து அவளின் புறமாக வீசினான்.


“ஒழுங்கா வாய மூடிக்கிட்டு இரு.. தேவையில்லாதது பேசாத.. என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது “.


“முன்னாடி எல்லாம் வேற மாதிரி தான் தெரிஞ்சது .ஆனா இப்போ இன்னொரு மாதிரி தெரியுது. நான் என்ன செய்யறது. ஒழுங்கா உண்மையை சொல்லிடு இல்லனா.. மண்டைக்குள்ள இப்படி எல்லாம் தான் கற்பனை செய்ய தோணும்.”


“என்ன தெரியணும் “.


“பாப்பு யாருன்னு..”


“ அவ்வளவு தானே.. நீ சொன்னது கரெக்ட் தான். அவ தான் என்னோட காதலி .நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்ட பொண்ணு “.


“கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்ட பொண்ணு அப்படின்னா.. இப்போ அந்த பொண்ணு எங்க இருக்கறா”..


“இருக்கறா ரொம்ப நல்லாவே இருக்கறா ..அவனோட ஹஸ்பண்ட் வீட்டுல போதுமா..”


“ டேய் அப்படின்னா நீ அந்த பொண்ண ஒன் சைடா லவ் பண்ணுனியா.. லவ் பெயிலியரான ஆளா நீ..”


“என்ன உளறிக்கிட்டு இருக்கிற திவ்யா “.


“இல்லடா எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகணும்.. பிரவீன் நீ கொஞ்ச நேரம் சும்மா இரு .நான் அவன் கிட்ட கேட்கறேன்.”

என்று திரும்பி மறுபடியும் சிவாவை பார்த்து..” நீ சொன்னதெல்லாம் கரெக்ட்டு.. எதனால உன்னோட காதல் நிறைவேறலை..என்ன காரணம் அத மட்டும் சொல்லிடேன்.


நீ லவ் பண்றதை சொல்லியும் அந்த பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டாளா..


ஆனா நீ சொன்னா அந்த பொண்ணு வேண்டாம்னு சொல்ல வாய்ப்பு கம்மி..


உன்னை இத்தனை நாளா பார்த்துகிட்டு இருக்கேன்ல..”


“ நான் அவகிட்ட கடைசி வரைக்கும் சொல்லவே இல்ல. ஒன் சைடு லவ் ரொம்ப ரொம்ப பிடிச்சது .சொல்லணும்னு நினைக்கிறதுக்குள்ளயே அந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க.”


“ மை காட் “என்று சொன்னவள் சிரிக்க ஆரம்பிக்க ..”இப்ப எதுக்காக நீ சிரிக்கிற.. முதல்ல சிரிக்காத நிப்பாட்டு”.


“ டேய் என்னால சிரிப்பை அடக்கவே முடியல .நான் சிரிச்சு முடிச்சுக்கிறேன் .அப்புறமா வந்து பேசறேன்.”என்று சிரித்தப்படியே அருகில் இருந்த நீரை எடுத்து குடித்தவள்..


“ எப்படிடா ஒன் சைடு லவ்.. நீ இப்படி சுத்திக்கிட்டு இருக்குற.. ..அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடிச்சுன்னா பிறகும் அந்த பொண்ண நினைச்சுக்கிட்டு இருக்கேன்னா நீ என்ன பைத்தியமா..


நான் என்னவோ.. ஏதோன்னு பயந்துகிட்டே இருந்தேன் தெரியுமா? டேய் சிவா, நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா இன்னைக்கெல்லாம் காதல்னா என்ன தெரியுமா.


பொண்ணும் பையனும் சேர்ந்து சுத்திட்டு அவங்களுக்குள்ள கசமுசா பண்ணிட்டு ஈசியா பிரேக் அப் ன்னு சொல்லிட்டு போற ஆண்களையும் நான் பார்த்திருக்கறேன் .


தன்னோட தேவைக்கு அந்த ஆணை யூஸ் பண்ணிக்கிட்டு எவ்வளவு பணத்தை வாங்க முடியுமோ வாங்கிட்டு ஈஸியா கட் பண்ணி விட்டுட்டு போற பொண்ணுங்களையும் பார்த்து இருக்கிறேன்.


உன்னோடது வேற..

அது தான் என்னால சிரிப்பை அடக்க முடியலை.அது தான் முடிஞ்சு போச்சுல்ல.. அப்புறமா எதுக்காக இப்படி இருக்கற.. உன்னை பார்க்கும் போது இப்ப தான் எனக்கு எக்கச்சக்கமா லவ் வருது .நான் என்ன செய்யறது.


இத பாரு சிவா நடந்து முடிஞ்சதை பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்காத.. இனி நடக்க போறத பத்தி யோசி .என்ன பத்தியும் மோசிக்கலாம் .


நானும் நல்ல பொண்ணு தான் .

யாருகிட்டயும் தப்பா எல்லாம் இது வரைக்கும் நடந்துகிட்டது இல்ல .உன்னை தவிர வேற யார்கிட்டயும் இந்த மாதிரி பேசினது கூட இல்லை..


சரி இன்னும் ஒரே ஒரு கொஸ்டின் இருக்குது. கேட்கட்டுமா.. “


“அது தான் கேட்டுட்டல்ல.. இதையும் கேட்டுடு .அப்புறமா இத பத்தி இனி எப்பவுமே என்கிட்ட கேட்கக்கூடாது. நான் பதில் சொல்ல மாட்டேன். இப்ப சொல்றதுதான் லாஸ்ட்” என்று சொன்னபடியே லேப்டாப்பில் இருந்த பைலை ஓபன் செய்து பார்க்க ஆரம்பிக்க.. வேலை செய்வதை எட்டிப் பார்த்தவள்.


“ சரி சரி கேட்டுடறேன்..நீ மறுபடியும் அந்த பொண்ண பார்த்தியா.. அதை பொண்ணு கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்தியா .. கல்யாணத்துக்கு நீ போனியா .எனக்கு என்ன தோணுதுன்னா நீ எல்லாம் வேற லெவல்..


கல்யாணத்துக்கு போய் இருக்க வாய்ப்பு இருக்குது .அதனால கேட்கிறேன் “.


“இல்ல கல்யாணத்துக்கு போகலை.. அம்மா மட்டும் தான் போனாங்க .என்னால போக முடியல.அந்த நேரம் மனசு கஷ்டமாக இருந்தது .


பிரவீன்கிட்ட கூட சொன்னேனே ..அன்னைக்கு தான் முதல் டைம் குடிச்சேன். குடிச்சிட்டு வீட்டுக்கு வந்தா ஒரே வாந்தி. நிற்க கூட முடியல.


அம்மா பிரம்பால விலாசி தள்ளிட்டாங்க. எனக்கு நல்லா ஞாபகம் இருக்குது .இன்னொரு முறை இது மாதிரி செஞ்சனா நானே சாப்பாட்டில் விஷத்தை வைப்பேன்னு சொன்னாங்க.”


“ ஓ அம்மா அங்க இருக்கறதுனால அந்த தைரியம்.. கல்யாணத்துக்கு வந்து நீ குடிச்ச போல இருக்குது. ஏன்னா இங்க வரைக்கும் வந்து உனக்கு சாப்பாட்டில் விஷம் வைக்க மாட்டாங்க அப்படித்தானே .இரு இந்த முறை ஆன்ட்டி வரட்டும். நான் அப்படியே சொல்லிடறேன்”.


“ இங்க பாரு திவ்யா தயவு செய்து அம்மா கிட்ட எதுவும் சொல்லிடாத ..நானும் எதுவும் சொல்ல மாட்டேன். இனி இதுபோல ஒரு தப்பு எப்பவும் நடக்காது .ஐ ப்ராமிஸ் “.


“எப்படி ஏற்கனவே முன்னாடியும் அம்மாகிட்ட அதே மாதிரி தானே சத்தியம் பண்ணி இருப்ப..

இப்ப மறுபடியும் சொன்னா மட்டும்…


ஏன் இந்த ஆண்களோட குணமே அப்படித்தான் இல்லையா..


தப்பு செய்ய வேண்டியது பிறகு சத்தியம் பண்ண வேண்டியது. திரும்பவும் மறுபடியும் அதே தப்ப செய்வீங்க ..எத்தனை பேரை பார்த்திருக்கறேன்,..”


“உன்கிட்ட இயல்பாக பேசறேன்னா ஒரே ஒரு விஷயம்தான் திவ்யா .ரொம்ப இயல்பா எல்லா விஷயத்தையும் உன்கிட்ட ஷேர் பண்ண முடியும் .


பாரு ஈஸியா என்னவோ எங்க மனசெல்லாம் தெரிஞ்சுக்கிட்ட மாதிரி இயல்பா எல்லாத்தையும் புட்டு புட்டு வைப்ப ‌ அந்த ஒரு விஷயம் தான் நீ என்ன சொன்னாலும் அந்த நிமிஷமே மறந்துட்டு திரும்ப பேச வைக்குது.”


“சரி உன்னோட காதல் உன்னுடைய அம்மாவுக்கு தெரியுமா இல்லையா.. “


“அம்மாவுக்கு தெரியும் தெரிஞ்சதுக்கப்புறம் ரொம்பவே வேதனைப்பட்டாங்க..ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லி இருந்தா நான் கேட்டு இருப்பேன்ல அப்படின்னு ரொம்பவே கஷ்டப்பட்டாங்க.


அது மட்டும் இல்ல அம்மாவும் நானும் ரொம்ப ஃப்ரெண்ட் மாதிரி.. எப்பவுமே அம்மா என்கிட்ட எதையும் மறைச்சதில்லை .நானும் அதே மாதிரி தான் ..


மறைச்ச ஒரே விஷயம் இந்த காதல் மட்டும் தான

. அதை அவங்களால தாங்க முடியல .சோ ரொம்ப பீல் பண்ணினாங்க..


உன் கூட நான் பிரண்டா இருக்கிறேன் .உன்னோட விஷயம் எல்லாமே எனக்கு தெரியும்னு நினைச்சேன். ஆனா இவ்ளோ பெரிய விஷயம்..


அது என் கண்ணுக்கு படாமலே இருந்திருக்கு .நான் உன்னை இன்னும் புரிஞ்சுக்கலை. நீயும் நானும் ஃப்ரண்ட் மாதிரின்னு எப்பவுமே சொல்லுவையே சிவா அதெல்லாம் பொய்யா..


நீ ஏன் என்கிட்ட சொல்லலன்னு ரொம்ப சண்டை போட்டாங்க .அதுக்கு பிறகு தான் அங்க போறதையே கம்மி பண்ணிட்டேன்.”


“ஏன் போக மாட்டேங்குற ஒரு வேளை அந்த பொண்ணு அங்க தான் இருக்கிறாளா ..”


“இல்ல அந்த பொண்ணு அங்க இல்ல.. நாங்க தான் அப்பா இறந்த உடனே ஊர் மாறிட்டோமே..

அந்த பொண்ணு சைல்ட்வுட் ஃப்ரண்டு.. “.


“ஓ..அப்படியா..சின்ன வயசுல இருந்தே அவளை உனக்கு தெரியுமா..”


“இப்போ அது எதுக்கு விடு”.


“ அதுதான் பேச ஆரம்பிச்சாச்சுல்ல.. எல்லாத்தையும் சொல்லிடு.. சொல்லு அந்த பொண்ண எப்ப பார்த்த.. உங்களோட பழக்கம் பழக்க வழக்கங்கள் எல்லாம் எப்படி ?எல்லாத்தையுமே என்கிட்ட சொல்லு நான் கேட்கிறேன்.”


“வேண்டாம் திவ்யா விட்டுடு.. பழையபடி எதையும் யோசிக்க விரும்பல .நடந்தது நடந்து முடிஞ்சாச்சு .


அதை பொண்ணு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா ..

அவன் கூட நிம்மதியா சந்தோஷமா இருக்கணும்.”


“அதுதான் எனக்கு புரியல சிவா எப்படி இந்த மாதிரி ஒரு மைண்ட் செட் உனக்குள்ள இருக்குது. பொதுவா பொண்ண உயிருக்கு உயிரா நேசிக்கிற யாரா இருந்தாலும் சரி அந்த பொண்ணை அவ்வளவு சீக்கிரம் விட்டு தர மாட்டாங்க.


கடைசி வரைக்கும் தன்னோட காதல் ஜெயிக்க போராடுவாங்க. நீ அந்த மாதிரி எதுவுமே செய்யலையா..”


“ செய்யலன்னா.. ஏன் என்ன கேள்வி இது ..நான் தான் சொன்னேன்ல ஒன் சைடு லவ்.. கடைசி வரைக்குமே அவளுக்கு தெரியவே இல்லை.


ஒரு வேளை தெரிஞ்சிருந்தா வேற மாதிரி ஆகி இருக்கலாம். தெரியாதபோ திரும்ப போய் அதை சொல்லி எதுக்காக அந்த பொண்ண வேதனைப்படுத்தணும்னு நினைச்சேன் .


இரண்டாவது ..தனக்கு கிடைக்கலன்னு அந்த பொண்ணு இருக்க கூடாதுன்னு நினைச்சா அவன் சரியான சைக்கோ ..என்னோட அம்மா என்னை அப்படி வளர்க்கலை. என்னை மனுஷனா தான் வளர்த்தாங்க.


என்ன கிடைக்குதோ அதை வைத்து சந்தோஷப்படணும் அது மாதிரி தான் சொல்லி சொல்லி வளர்த்தாங்க .எனக்கு கொடுப்பினை இல்லைங்கறப்போ நானே ஆசைப்பட்டா கூட என்கிட்ட அது வராது .


என் காதலும் அது போல தான் போல இருக்கு .அதனால அதை பத்தி யோசிக்கல .ஆனா என்னால மறக்க முடியல .அது தான் உண்மை. இப்போ கொஞ்சம் பரவால்ல .கொஞ்சம் வெளியே வர ஆரம்பிச்சுட்டேன்.”


“ அது எனக்கும் தெரியுது அப்படியே என்னை நீ கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லிட்டேன்னு வையேன். மொத்தத்தையும் மறந்துடுவ..”


“ வேண்டாம் திவ்யா அது சரி வராது ஏற்கனவே சொன்னது தான் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை பேசாத.. இப்போதைக்கு எனக்கு காதலே பிடிக்கவில்லை..”


“ ஓகே ஓகே அந்த டாப்பிக்கை விட்டுடு‌.இத அப்புறமா பாத்துக்கலாம்.. சொல்லு அந்த பொண்ணை எப்ப பார்த்த ..


அந்த பொண்ணோட பெயர் என்ன ?எங்க இருந்து அந்த பொண்ணு உனக்கு அறிமுகம்ணு சொல்லு..” சற்று நேரம் கண்களை மூடி அமர்ந்திருந்தவன் ஏதோ ஒரு ஆழ்ந்த கற்பனை கடலுக்குள் சென்றது போல கண்களை மூடிய படியே கூறினான்.


பாப்புவை முதன் முதலில் நான் பார்த்தப்போ.. அவ கை குழந்தை..நாங்க அப்போ கோயம்புத்தூர்ல லைன் வீட்டுல குடி இருந்தோம் .


முன்னாடி மூணு வீடு.. அது போல ஆப்போசிட் லைன்ல மூணு வீடு .அந்த லைன்ல எதிர் வீட்ல தான் பாப்புவோட அம்மா அப்பா இருந்தது .


பாப்பு பிறக்கும் போது எனக்கு இரண்டு வயசு இருக்கும். குழந்தை பிறந்திருக்கு.. பாப்பா இருக்கிறான்னு சொல்லி அம்மா அழைச்சிட்டு போனாங்க. கிட்டத்தட்ட பிங்க் நிறத்தில செவ செவ செவன்னு சுருட்ட முடியோட ரொம்ப அழகா இருந்தா..


அங்கே தான் அவளை முதன் முதலில் பார்த்தேன் .முத முதல்ல நான் அவளை பார்த்து கூப்பிட்டது பாப்பான்னு..


கொஞ்சம் வளரவும் பாப்புவா மாறிட்டா.. அவளோட சின்ன சின்ன வளர்ச்சி எல்லாமே கூடவே இருந்து நான் பார்த்திருக்கறேன் .


ஸ்கூலுக்கு போகும் போது இருந்து எல்லா இடத்துக்குமே அவளை கைபிடித்து அழைச்சிட்டு போவேன்.. பத்தாவது படிக்கும் போது அப்பா இறக்கவுமே இடத்தை மாத்திட்டு கிளம்பிட்டோம்.


நாங்க மட்டும் இல்ல ..அந்த காம்பவுண்ட்டில் இருந்த எல்லாருமே ஓரளவுக்கு பணம் சேர்த்து ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்துக்கு சொந்தமா வீடு வாங்கி நகர ஆரம்பிச்சுட்டாங்க.


அதே மாதிரி பாப்புவோட வீட்லயுமே நகர்ந்து போயிட்டாங்க .பாப்பு பிளஸ் டூ முடிக்கிற வரைக்குமே என்னோட நோட்ஸ் புக் மட்டும்தான் அவ வாங்கி படிச்சது.


அந்த வகையில் ரெண்டு பேருக்கும் பார்த்துக்குறதுல பிரச்சனை இல்ல. ஸ்கூல் மாறவும் எல்லாமே மாறிடுச்சு .


அதுக்கு பிறகு நான் பார்த்தது என்னோட காலேஜ் செகண்ட் இயர் அப்போதான் .பிளஸ் டூ எக்ஸாம்க்கு நிறைய தெரியல நிறைய சந்தேகம் இருக்கு எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேட்டிருந்தா..


அப்போ ஒருமுறை அம்மா கூட அவ வீட்டுக்கு போயிருந்தேன். அப்பதான் தெரிஞ்சுது .என் மனசு அவளை சுத்திக்கிட்டு இருக்குதுன்னு.. சின்ன வயசுல இருந்தே கூட வளர்ந்ததால ஏதோ ஒரு விஷயம் அவளை எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பித்து இருக்கு..


கிட்டத்தட்ட ஒரு வாரம் வரைக்கும் உறவினர் வீட்டில் தங்கி இருந்தோம் .அந்த ஒரு வாரத்தில் அவளுக்கு நிறைய தெரியாததை எல்லாம் சொல்லிக் கொடுத்தேன் .

பிறகு நேரா இங்க வந்துட்டோம் .

படிப்பு முடிஞ்சது அப்படியே கேம்பஸ்ல வேலை கிடைச்சு இங்க வந்துட்டேன். ஒருவேளை எனக்கு அவளை பிடிச்சிருக்குன்னு ஒரு வார்த்தை அம்மா கிட்ட சொல்லி இருந்தா அந்த கல்யாணம் முடிந்திருக்கும் .


என் அம்மாவுக்கு அவளை ரொம்ப பிடிக்கும். கூடவே வளர்ந்தா இல்லையா ..அவளுக்கு பூ ரொம்ப இஷ்டம் அதுவும் நெருக்கமா கட்டின மல்லிகைபூன்னா அவ்வளவு பிரியம்.


அம்மா ரொம்ப அழகா கட்டுவாங்க .தினமும் வாங்கி அவளுக்கு ஜடையில வச்சு விடுவாங்க. அங்கு இருந்தவரைக்குமே இது வழக்கத்தில் தான் இருந்தது.


எப்பவுமே சொல்லுவாங்க அவளை மருமகளேன்னு தான் அழைப்பாங்க .ஒருவேளை என் மனசுக்குள்ள ஆசை தோண அது கூட ஒரு காரணமா இருக்கலாம். வரம்பு மீறி பேசினதில்லை .


எப்பவுமே ஒரு சின்ன டிஸ்டன்ஸ் வச்சு தான் பேசுவேன். அந்த காரணம் கூட இருக்கலாம் என்னை பத்தி தெரியாம போனதுக்கு ..


ஒரு வேளை அவ கூட நெருக்கமா பேசி இருந்தா அவளும் கூட என்னை புரிந்து இருக்க வாய்ப்பு இருக்குதோ என்னவோ..


அம்மாவோட வளர்ப்பு அந்த மாதிரி..அப்பா கூட ரொம்ப கண்டிப்பு .அதனால என்னோட ஆசையை வெளியே தெரியாமலே போயிடுச்சு.. படிப்பு முடிஞ்சு வேலைக்கு போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தா..


ஆனா அவசரமா நல்ல மாப்பிள்ளையா வரவும் அவசரமா அவளுக்கு கல்யாணம் பேசி முடிவு பண்ணிட்டாங்க .


பத்திரிக்கை வீட்டுக்கு வந்தப்பதான் அம்மா பார்த்துட்டு ரொம்ப பீல் பண்ணினாங்க. அம்மா கூட என்கிட்ட சொன்னாங்க.. பாப்பு நம்ம வீட்டுக்கு வர வேண்டிய பொண்ணுடா ..


இங்க வருவான்னு நினைச்சேன் ஆனா என்ன நமக்கு தான் கொடுப்பினை இல்ல போல இருக்கு ‌எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு சொன்னாங்க..


கல்யாணத்துக்கு பிடிக்காதமா என்னையும் வர சொல்லி இருந்தாங்க.. நானும் ஊருக்கு கூட போனேன். ஆனா என்னால அங்க பாப்புவை போய் பார்க்கிற தைரியம் துளி கூட இல்ல .நான் போகலை..


அப்புறமா அடுத்த நாள் கிளம்பி இங்க வந்துட்டேன். இன்றைக்கு வரைக்கும் அம்மா மட்டும் தான் வந்து பார்த்துட்டு போயிட்டு இருக்காங்க.


இவ்வளவு தான் பாப்புவோட ஸ்டோரி. ஆனா நினைவுகள் நிறைய இருக்குது அவளோட ஒவ்வொரு வளர்ச்சி.. அவகிட்ட பேசினது சிரிச்சது எல்லாமே ..


அவளோட முகம் மட்டும் அப்படியே மனசுல பதிஞ்சு இருக்குது .அதை தாண்டி என்னால வர முடியல. ஒவ்வொரு பொண்ணுகிட்டேயும் அவளோட முகத்தை தேடிக்கிட்டு இருக்க முடியாது இல்லையா .


சோ இப்படியே இருந்துட்டா நல்லா இருக்கும்னு எப்பவோ முடிவு பண்ணிட்டேன்..”


“புரியுது சிவா ஆனா அதை தாண்டி தானே வந்தாகணும்.. இப்படியே இருந்தா நல்லா இருக்காதுல்ல .”.அருகே இருந்த பிரவீன் அவனின் தோளை தட்டு பேச..


“ மாறிருவேன் டா இல்லன்னு யார் சொன்னாங்க. என்னை இப்படியே எல்லாம் அம்மா விட்டுட மாட்டாங்க .அவங்க கூப்பிடும் போது அங்க போய் தான் ஆகணும் .


அப்புறமா திவ்யா ..சொன்னது புரிஞ்சுதா.. முடிந்த மட்டும் என்னை டிஸ்டர்ப் பண்ணாத..”


“சரி கடைசியா ஒரே ஒரு கேள்வி இதுக்கு மட்டும் பதில் சொல்லிடு .உங்க அம்மாவுக்கு என்னை பிடிச்சிருந்ததுனா அப்போ உனக்கு ஓகேவா “.வேகமாக கேட்க..


“ நடக்காத ஒரு விஷயத்தை பத்தி பேசாத அப்புறமா நான் உன்னோட அம்மா, அப்பா கிட்ட பேசினேன் .அவங்க உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டதா சொன்னாங்க” என்று சொல்லவும் அதிர்ச்சியாக திரும்பி சிவாவை பார்த்தாள்.


“ என்ன சொல்ற.. என்கிட்ட அதை பத்தி எதுவுமே அவங்க சொல்லலையே .”


“ஆனா என்கிட்ட சொன்னாங்க நானும் கூட நல்ல பையனா பாருங்கன்னு சொன்னேன் ..

கலகலப்பா இருக்கிற மாப்பிளையா,


நல்ல வெல் செட்டில்லா இருக்கிற மாப்பிள்ளையா பாருங்க.. திவ்யாவோட குணத்துக்கு நல்லா இருப்பான்னு சொல்லிட்டு வந்தேன்.” இப்போது அதிர்ச்சியானது மட்டுமல்ல அமைதியாகவும் மாறி இருந்தாள் திவ்யா.
 

NNK-15

Moderator
6


மாலை வரையிலுமே அடுத்தடுத்த சம்பிரதாயங்கள் தொடர்ந்து கொண்டிருக்க.. மாலையில் விருந்து மதனின் வீட்டில் ஏற்பாடு செய்திருந்தனர். .


பெண்ணின் பக்கத்து உறவினர்கள் இன்னமும் நிறைய பேர் முறைப்படி பெண்ணை அழைத்து வந்து மதனின் தாயார் வீட்டில் விட்டு விட்டு இரவு புறப்பட ..


அத்தனை நேரம் அமைதியாக இருந்தவள்..முதல் முறையாக தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள் விவேகா.


தாய் தந்தையரை பிரிய முடியாதவள் போல இருக அணைத்தபடி அழுது கொண்டிருக்க.. யாராலுமே சமாதானம் செய்ய முடியவில்லை .


மதனும் கூட ஒரு ஓரத்தில் நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தான். அதை தாண்டி அவன் எதுவும் செய்யவில்லை.


மதனின் தாயார் வேகமாக அருகில் வந்து தனது தோளில் தாங்கிக் கொண்டார்.


“ என்ன இது.. சின்ன குழந்தை மாதிரி அழுதுகிட்டு.. நீ பெரிய பொண்ணு தானே ..இங்கே இருக்கிற அம்மா வீடு ..


ரொம்ப தூரம் கூட இல்லையே ஜஸ்ட் 4 கிலோமீட்டர் தான். நீ நினைச்சா எப்ப வேணும்னாலும் போய் பார்த்துக்கலாம் .


காலையில கிளம்பினால் அரை மணி நேரத்தில் அங்க போய் நிற்கப்போற.. அப்புறம் என்ன?


எதுக்காக இத்தனை அழுகை.. பயப்படாத மதன் ரொம்ப நல்லவன் .அழக்கூடாது “என்று சமாதானம் செய்ய மதனின் தங்கை கூட இவளுக்கு அருகே வந்து நின்று கொண்டாள் .


“அழாதீங்க அண்ணி.. ஒன்னும் இல்ல.. அண்ணா உங்களை ரொம்ப நன்றாக பார்த்துக்கொள்வார் “என்று சமாதானம் சொல்ல ..ஒருவாராக இவளை அங்கே விட்டுவிட்டு புறப்பட்டனர் .


அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்திருக்க.. மதன் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தான் .தாய் ,தந்தை என்ன சொல்லியுமே கேட்கவில்லை .


“என் கூட தானே வாழ வந்திருக்கிறா..இனி என்ன நடந்தாலும் நாந்தானே பொறுப்பு.. என்னோட வீட்டுக்கு நான் அவளை அழைச்சிட்டு போறேன் .”என்று பிடிவாதமாக சற்று நேரத்தில் தன்னுடைய காரில் ஏற்றி அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு புறப்பட்டு இருந்தான்.


இவளுக்கு ஒன்றுமே புரியாத நிலை..


தன்னை சுற்றி என்ன நடக்கிறது என புரியாமல் திருதரு என விழிக்க.. கடைசி நேரத்தில் மதனின் தாயார் இவளுக்கு அருகே வந்து.. “அவனோட மனசு கோணாம நடந்துக்கோ.. நாளைக்கு காலையில அங்கே வரோம்

என்று சொல்ல..” சரி” என்று தலையாட்டுவதற்கு முன்பாகவே வேகமாக வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டிருந்தான்.


வீடு வந்து சேரும் வரையிலும் கூட அவனிடம் மௌனமே நிலைத்தது .


இவளுக்கோ அந்த நிமிடம் பயம் மட்டுமே ஆட்க்கொண்டிருந்தது. மதனின் முகத்தை பார்க்க அதில் எந்த ஒரு உணர்வும் தெரியவில்லை .


அழகான முகம் தான் ..எந்த குறையும் சொல்லிவிட முடியாது. பெண்கள் யாராக இருந்தாலும் ஒரு நிமிடம் திரும்பி மறுபடியும் ஒரு முறை பார்க்கத் தோன்றுகின்ற தோற்றம்தான்.


ஆனால் ஏனோ இப்போதைக்கு இவளுக்கு பயத்தை மட்டுமே தந்தது.


நேராக வீட்டிற்கு முன்னால் வந்து வண்டியை நிறுத்தியவன் இவளை வா என்று கூட சொல்லாமல் விறு விறு என உள்ளே செல்ல.. இவள் என்ன செய்வது எனப் புரியாமல் பின்னோடு சென்றாள்.


வீட்டிற்குள் சென்ற உடனேயே ஹாலில் இருந்த விளக்குகளை எறிய விட்டவன்.. சட்டென இவளின் கரத்தைப் பற்றி இழுத்துக் கொண்டு நடந்தான்.

என்ன என்று புரியாமலேயே அவனுடைய இழுவைக்கு பின்னொடு சென்றாள்.


அங்கிருந்த சோபாவில் தொப்பென இவளை தள்ளி விட்டவன்.. அருகே அமர்ந்து இவளை முறைத்து பார்த்தான்.

ஒன்றும் புரியாமல் ..”என்ன ஆச்சு.. ஏன் இப்படி என்னை முறைக்கிறீங்க” .என்று கேட்க..


“ உனக்கு அறிவில்லையா.. நான் உன்னை பார்க்க வந்த அன்னைக்கே உன்னை பார்த்து என் முகத்தில் ஏதாவது சின்ன சிரிப்பாவது இருந்ததா.. எதுக்காக இந்த கல்யாணத்துக்கு சம்மதித்த..” என்று கேட்க.. இவளோ திருதிரு என விழித்தாள்.


“ இதென்ன கேள்வி உங்களுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்னு சொன்னதால தானே நான் எதுவும் சொல்லாம இருந்தேன்.

இப்ப இப்படி வந்து கேட்டா என்ன அர்த்தம் ..”


“இந்த கல்யாணத்தை பண்ணியே ஆகணும்னு சொல்லி பிடிவாதமா வீட்ல அத்தனை பேரும் கம்பெல் பண்ணி என்னை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சாங்க. நீ ஏன் என்னை பிடிக்கலைன்னு சொல்லலை”.


“ ஏன்னா என்னோட அப்பாவுக்கு உங்கள ரொம்ப பிடிச்சது.”


“ உன்னோட அப்பாவுக்கு பிடிச்சா போதுமா.. என்னை பத்தி உனக்கு என்ன தெரியும்.”


“ நிஜமா இந்த நிமிஷம் வரைக்கும் எதுவும் தெரியாது.. காலேஜ்ல வேலை செய்றீங்க அது மட்டும் தெரியும் .அத தாண்டி எதுவும் தெரியாது .”


“ ஒரு வார்த்தை உனக்கு என்கிட்ட கேட்க தோணுச்சுதா.. இந்த கல்யாணம் உனக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு “.


“நான் எப்படி கேட்க முடியும். சம்மதம்ணு உங்க வீட்ல சொன்னதால தானே மேற் கொண்டு பேச்சு வார்த்தையே ஆரம்பிச்சாங்க .இப்போ இப்படி வந்து கேட்டா என்ன அர்த்தம். உங்களுக்கு விருப்பம் இல்லனா நீங்க சொல்லி இருக்கணும்ல.”


“எனக்கு எதிர்த்து பேசினா பிடிக்காது. உனக்கு என்னை பத்தி என்ன தெரியும்.”


“ நெஜமாவே எதுவும் தெரியாது” என்று கைகளை பிசைந்தபடி அமர்ந்திருக்க .. மறுபடியும் இருவருக்கும் நடுவில் அமைதி நிலவியது.


அந்த இடமே அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை சுற்றிலும் கண்களை ஓட்டினாள்.


“கல்யாணத்துக்கு முதல் நாள் ஒரு கவர் உனக்கு வந்துச்சே.. அதை பிரிச்சு படிச்சியா இல்லையா..”


“ஆமா ஏதோ ஒரு சின்ன பொண்ணு கொண்டு வந்து கையில கொடுத்தா.. அப்ப இருந்த பிசியில நான் எதுவும் பார்க்கல ..யாராவது விஷ் பண்ணி இருப்பாங்கன்னு நினைச்சு பேக்ல வச்சேன்.” என்று வேகமாக ஃபேகை எடுத்து தேட ஆரம்பித்தாள்.


அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். சில நிமிட தேடலுக்குப் பிறகு அந்தக் கவரை எடுத்து இருந்தாள்.


“படிச்சு பாரு” என்று சொல்ல வேகமாக பிரித்தவள் படிக்க ஆரம்பித்தாள்.


படித்து முடிக்கவும் ..”நான் எழுதியிருக்கிறது புரிந்ததா.. எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை என்று எழுதி இருக்கிறேன் .தேவையில்லாம என் வாழ்க்கைக்குள்ள உன்னை கொண்டு வந்து திணிச்சிருக்காங்க. எனக்கு இந்த கல்யாணத்துல ஒரு பர்சன்டேஜ் கூட விருப்பம் கிடையாது.”


“ அப்படின்னா நீங்க உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லி இருக்கலாம்ல ..”


“சொல்லி இருக்கலாம் ஆனா அவங்க இந்த கல்யாணம் முடியாட்டி நாங்க உயிரோடவே இருக்க மாட்டோம்னு என் கண்ணு முன்னாடி ரெண்டு பேரும் சமயக்கட்டுக்குள்ள போய் கேஸ்ஸை திறந்து விட்டு பத்த வச்சிருவேன் மிரட்டுனாங்க .


அந்த ஒரு காரணத்துக்காக தான் நான் உன் கழுத்துல தாலி கட்டினேன் .இல்லனா கல்யாணத்து அன்றைக்கு நான் அங்கே மண்டபத்துக்கு வந்து இருக்க மாட்டேன் “என்று சொல்ல.. புரியாமல் அவனையே பார்த்தாள்.


“ எதுக்காக இந்த கல்யாணம் உங்களுக்கு பிடிக்கலன்னு தெரிஞ்சுக்கலாமா..”


“ஏன்னா எனக்கு வேற ஒரு பொண்ண பிடிச்சிருந்தது . அந்த பொண்ணை தான் கல்யாணம் பண்ணுவேண்ணு சொல்லிக்கிட்டு இருந்தேன்.


வீட்ல இருக்குற யாரும் கேட்கலை.. பிடிவாதமா உன்னை என் தலையில கட்டி வச்சுட்டாங்க. என்னால என் மனச மாத்திக்க முடியாது .என்னால் அவளை மறக்கவும் முடியாது.”


“அப்படின்னா நீங்க உங்க அப்பா அம்மா கிட்ட போராடி இருக்கணும் தானே.. எனக்கு அந்த பொண்ணை தான் பிடிச்சிருக்கு.


வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லி இருக்கணும் தானே..”


“உன்கிட்ட சொன்னது என்னோட நிலைமையை மட்டும் தான் .உன்னோட அட்வைஸ் கேட்க நான் தயாராக இல்லை..


இப்ப தான் எல்லாம் முடிஞ்சு போச்சு ..இனி உன்கிட்ட சொல்லி மட்டும் என்ன ஆகப்போகுது “என சொன்னவன் வேகமாக அவளின் கரம் பற்றி எழுப்ப.. ஒன்றும் புரியாமல் எழுந்து நின்றாள்.


“ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது எதுக்காக? இதுக்காக தானே” என்று சொன்னபடியே அருகே இருந்த பெட்ரூமிற்குள் இழுத்து சென்றவன் சட்டென அவளை கட்டிலில் தள்ளி விட்டு கதவை அடைக்க.. இவளுக்கு பயம் தொற்றிக் கொண்டது.


அடுத்து நடந்தது எல்லாமே வன்முறையின் உச்சம் தான் என்ன நடந்தது என்று புரிவதற்கு முன்பாகவே எல்லாமே நடந்து முடிந்திருந்தது.


பயத்தில் உடலெங்கும் நடுங்க கட்டிலின் ஓரத்தில் நடுங்கி கொண்டு இருந்தாள். புடவையை உடலோடு போர்த்தியபடி இருக்க.. இப்போதும் கூட அவனிடத்தில் தவறு செய்து விட்டோம் என்கின்ற எந்த உறுத்தலும் இல்லாமல் வேகமாக சட்டையை எடுத்து அணிந்து கொண்டிருந்தான்.


“இந்த ஒரு விஷயத்துக்காக தானே பிடிவாதமா கல்யாணம் பண்ணி வச்சாங்க ..இது நடந்துருச்சுன்னு சந்தோஷமா சொல்லு “என்று சொன்னபடியே வெளியேற.. புரியாமல் அமர்ந்திருந்தாள்.


திருமணம் என்றால் இப்படித்தான் நடக்குமா.. எதுவுமே புரியாத நிலை இவளுக்குள்..


எத்தனையோ கனவுகளோடும் ஆசைகளோடும் இருந்தவள் தான் .


சிறுசிறு செய்கைகளால் தன்னுடைய அன்பை நிரூபிப்பவன் என்று நினைத்திருக்க ..இங்கே நடந்தது அப்படியே தலைகீழ் தான்..


தூக்கம் என்பது எங்கோ ஓடி சென்றிருந்தது .விடியும் வரையிலுமே அதே பயத்தோடு துணியை இறுக பற்றிய படி அதே இடத்தில் தான் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.


அவனும் வெளியே சென்று இருக்கவில்லை .ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்திருக்கிறான் என்பது புரிந்தது. இவளுடைய பெட்ரூமில் இருந்து பார்க்கும் போது நிழல் படமாக அமர்ந்திருப்பது நன்றாகவே தெரிந்தது.


பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தவள் மறுபடியும் திரும்ப வந்து விடுவானோ என்கின்ற பதட்டம் நிறையவே இவளை தொற்றிக் கொண்டது. பயத்தோடு முகத்தை மூடியபடி அமர்ந்திருக்க.. காலை 5 மணி எனும் போது மறுபடியும் வந்தான்.


வேகமாக அவளை எழுப்பியவள் ..சட்டென பீரோவுக்குள் இருந்த உடையை எடுத்து அவள் முன்னால் தூக்கி வீசினான்.


“ குளிச்சிட்டு இதை போட்டுட்டு ரெடியா இரு.”


இவளுடைய சீரோடு இவளுடைய உடைகள் எல்லாமே முதல் நாளிலேயே இங்கே கொண்டு வந்து இறக்கி இருந்தனர் .


இவளது உடைகளை ஓரளவுக்கு பீரோவில் எடுத்தும் வைத்திருந்தனர். அதிலிருந்து ஒன்றைத்தான் இவள் முகத்தில் எடுத்து வீசியது.


“சீக்கிரமா கிளம்பி இரு.. நான் போன் பண்ணி அப்பா அம்மா கிட்ட சொல்லிடறேன். இப்போ உன்னை அழைச்சிட்டு நேரா அங்கே வர போறதா ..


உன்னோட வீட்டுல இருந்து எல்லாருமே வர்றாங்கலாம். ஏதோ கோவிலுக்கு போகணுமாம்..”என்று சொன்னபடியே நகர ..வேகமாக குளித்துவிட்டு வந்து நின்றிருந்தாள் .


இவனுமே குளித்து புறப்பட்டவன்.. “வந்து வண்டியில ஏறு ..இதை உனக்கு தனியா சொல்லணுமா என்ன?” கோபமாக கூறியபடி புறப்பட.. இவளுக்கோ ஏதோ ஒரு நரகத்திற்குள் மாட்டிக் கொண்டது போல இருந்தது.


ஒரே நாளில் மொத்த சந்தோசமும் காணாமல் போயிருக்க.. இப்போது அமைதியாக வந்து கொண்டிருந்தாள்.


“ இது பாரு.. இப்போ சொல்றதுதான்..

மறுபடியும் எப்பவும் சொல்ல மாட்டேன் .இந்த வாழ்க்குக்குள்ள நீதான் வந்து நுழைந்த.. என் கூட கடைசி வரைக்கும் இப்படித்தான் இருக்க போற..


நீ யார்கிட்ட வேணும்னாலும் அங்கே நடந்ததை தாராளமா சொல்லிக்கலாம். நான் எதுவும் சொல்ல மாட்டேன் .உன் அப்பா அம்மா கிட்ட கூட சொல்லிக்கலாம் .


அவசரப்பட்டு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டோமேன்னு வருத்தப்பட்டால் அதுக்கு நான் பொறுப்பு கிடையாது “என்று யாரிடமோ சொல்வது போல சொன்னவன்.. சரியாக தாயாரின் வீட்டின் முன் வந்து வண்டியை நிறுத்தினான்.


வண்டி வந்து நின்ற சத்தம் கேட்கவும் சற்று பதறியபடி தான் வந்தது .இருவரின் முகத்தை பார்த்தவர் .”உள்ளே வாங்க “என இருவரையும் அழைத்துச் செல்ல.. அமைதியாக சென்று ஹாலில் அமர்ந்து கொண்டான்.


இவளை வேகமாக சமையல் அறைக்குள் அழைத்து சென்றவர் ..”எல்லாமே நல்ல படியா முடிஞ்சுதா.. ஏதாவது பேசினீங்களா. நல்லவிதமா நடந்துக்கிட்டானா” என்று கேட்க..


என்ன பதில் சொல்வது என்று இவளுக்கு தெரியவில்லை.

கண்கள் கலங்க ஆரம்பித்தது. அதை வெளி காட்டாதவாறு “நல்லபடியா நடந்து கொண்டார் “என மட்டும் கூற..” அப்பாடா இனி உன்னோட சாமர்த்தியம் தான் . உன்னை விட்டு அவன் எங்கேயுமே நகர்ந்து போயிட கூடாது .


நீ அவனை பத்திரமா பாத்துக்கோ ..உன் கைக்குள் போட்டு வச்சுக்கோ. நீ என்ன சொன்னாலும் அதை கேட்கிற மாதிரி பண்ணி வச்சுக்கோ” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.


இப்போதுமே இவளுக்கு புரியவில்லை .சற்று நேரத்தில் எல்லாம் இவளுடைய தாய் தந்தை இன்னும் சிலர் வந்திருக்க ..


அன்றைக்கு இங்கே உணவை உண்டவர்கள் அருகில் இருந்த முருகன் கோவிலுக்கு இவர்களை அழைத்து சென்றனர்.


இவ்ளோ இறைவனிடம் மனம் உருகி வேண்டிக் கொண்டிருக்க.. அருகில் நின்ற மதனோ. இவளுக்கு கேட்கும்படி கூறினான்.


“ ரொம்ப பொருத்தமான கோயில்தான் .முருகரிற்கு ரெண்டு மனைவி.. கிட்டத்தட்ட என்னோட நிலையில்தான் அவரும் இருக்கிறார் “என சொல்லிவிட்டு நகர இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.


கோவிலுக்கு சென்று விட்டு மதிய உணவை அங்கேயே முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் போது மாலையாகி இருந்தது. தாய், தந்தை இருவருமே இவளிடம் பேசிக் கொண்டிருந்தனர் .


“மாப்பிள்ளை நல்லா பேசுகிறாரா.. உன்னை நல்லா வச்சிக்கிறாரா “என்று கேட்க இவளுக்கு தான் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை .


‘கொஞ்சம் அவசரப்பட்டுட்டீர்களேப்பா.. எனக்கு பயமா இருக்குதே. நான் எப்படி உங்க கிட்ட இத சொல்லுவேன் .


ஆசை ஆசையா கல்யாணம் பண்ணி வச்சீங்களே.. இதெல்லாமே வீணா போகப் போகுதுன்னு எப்படி நான் உங்ககிட்ட சொல்லுவேன். ‘மனதிற்குள் இவள் பேசிக் கொண்டிருக்க.. தாயாரோ..” என்ன அமைதியா இருக்கிற ..


நான் கேட்டதுக்கு பதில் சொல்லு .நல்லா வச்சிருக்கிறார் தானே.. மாப்பிள்ளையோட வீட்டுக்கு நைட் அழைச்சிட்டு போயிட்டாருன்னு சம்மந்தியம்மா சொன்னாங்க.


எனக்கு இதுல கொஞ்சம் வருத்தம் தான். என்ன இருந்தாலும் பெரியவங்க வாழ்ந்த இந்த வீட்ல உங்களோட சாந்தி முகூர்த்தம் நடந்திருந்தால் சந்தோஷப்பட்டு இருப்பேன்.


பரவாயில்லை இனி வாழப் போறது அந்த வீட்ல தானே.. அதனால எனக்கு சந்தோஷம்தான் .நல்லபடியா இருந்தா போதும் “என்று சொல்ல சரி என்பது போல தலையாட்டினாள்.


அன்றைக்கு மறுபடியும் அவனுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தான்.


நேற்றைய நாளை விடவும் இன்றைக்கு மிகவும் பயம் இவளை தொற்றிக் கொண்டது.. அந்த பயத்தோடு நேரத்தை நகர்த்திக் கொண்டிருந்தாள்.


இரவு 9 மணி நெருங்கும் போது நேராக அறைக்குள் வந்தவன்.. இவளுக்கு அருகே வந்து..” அது எப்படி? நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவளை மறந்துடுவேனா.. அம்மா போன் பண்ணி அட்வைஸ் பண்றாங்க.. நான் அவங்க சொல்றத எல்லாம் கேக்குற ஆளுன்னு நினைச்சாங்களா.. நீ என்ன பத்தி அவங்களுக்கு தெரியல..


உன்கிட்ட வரும் போது எல்லாம் எனக்கு அவளுடைய ஞாபகம் தான் வருது.” என சொன்னபடியே சட்டென இவளை எழுப்பி நிறுத்த.. இவளுக்கு கை கால்கள் மொத்தமாகவே நடுங்க ஆரம்பித்து இருந்தது.


அதே நேரத்தில் சரியாக ஃபோனில் இருந்து இவனுக்கு அழைப்பு வர ..சட்டென ஃபோன் நம்பரை பார்த்தவன்..” சொல்லு டார்லிங் ..நீ என்ன செய்ற “என்று கேட்டபடியே நகர.. திகைத்து அப்படியே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் விவேகா.

 

NNK-15

Moderator
7


“வாழ்க்கை ரணமாக நகர ஆரம்பித்தது .தாய் ,தந்தை இருவரிடமும் இவளால் சொல்ல முடியவில்லை .


யாரிடம் கேட்டால் தனக்கு நியாயம் கிடைக்கும் என்றும் புரியவில்லை .


முதல் நாள் இவளிடம் சற்று வன்முறையாக நடந்ததோடு சரி அதன் பின்பு பெரும்பாலும் இவள் பக்கமாக வருவது கூட இல்லை .


இவள் அங்கே இருக்கிறாள் என்பது கூட இல்லாதவன் போல நடந்து கொண்டான்.


அது இன்னமும் இவளுக்கு பயத்தை தான் தந்தது.


காலையில் சென்றான் என்றால் இரவு 9 மணிக்கு மேல் தான் வருவது ..வந்தவன் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.


வீட்டிற்கு வந்த பிறகு கூட இவள் முன்பு அமர்ந்தபடியே பேசிக் கொண்டிருப்பான் போனில்..


“டார்லிங் சாப்பிட்டியா.. ஐ மிஸ் யூ ..முன்ன மாதிரி இருந்தா என்னோட வீட்டுக்கு உன்னை அழைச்சிட்டு வந்து இருப்பேன்..


இப்போ அது முடியாது அதனால தான் நான் உனக்காக அந்த வீடு பார்த்து இருக்கிறேன்..


வாடகைக்கு தான் எடுத்து இருக்கிறேன். நீ இன்னமும் சில நாள்ல அந்த வீட்டுக்கு வந்துடு புரிஞ்சுதா “என பேசிக்கொண்டு இருக்க ..அவன் சொல்லுவதன் அர்த்தம் இவளுக்கு புரிந்தது.


கண்கள் கலங்கி இருக்க என்ன ஏது என்று எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.


அடுத்த நாள் காலையில் பக்கத்து வீட்டில் இருந்த பெண்மணி இவளை பார்க்கவும் அழைத்தாள்.


“ ஹலோ நீ தான.. புதுசா கல்யாணம் ஆகி வந்த பொண்ணு” என்று கேட்க “ஆமாக்கா” என்று பதில் கூறினாள்.


“உன்னோட பெயர் என்ன.. “


“என்னோட பேரு விவேகா…”


“மதன் நல்ல பையன் தான்” என்று ஆரம்பிக்க ..புரியாமல் அவரை பார்த்தாள்.


“என்ன சொல்ல போறீங்க சொல்லுங்க .”


“மதன் ரொம்ப நல்ல பையன் தான் .ஆனா அவனுக்கு இன்னொரு பொண்ணு கூட தொடர்பு இருக்குது .


அது முன்னாடி அடிக்கடி இங்க வரும் ..வந்ததுன்னா ஒரு நாள் இங்க தாங்கிட்டு தான் போகும்*.


“இந்த வீட்டிலேயா” சற்று அதிர்ச்சியாக கேட்க..


“ஆமா உனக்கு இதெல்லாம் தெரியாதா? இதெல்லாம் உங்க வீட்ல விசாரிக்கலையா .ஒரு வேளை கிராமத்து பக்கத்துல இருந்து கல்யாணம் பண்ணி அழைச்சிட்டு வந்துட்டாரா என்ன”.


“ அப்படி இல்ல நாங்களும் இங்க தான் இருக்கிறோம் ஆனால் விசாரிக்க எல்லாம் டைம் கிடைக்கல .டக்குனு பார்த்ததும் முடிச்சிட்டாங்க..”


“சரி என்னவோ ஆனா உன்னை பார்த்தா நல்ல பொண்ணு மாதிரி இருக்குது .நான் சொல்றத கொஞ்சம் நல்லா கேட்டுக்கோ ..


தப்பு பண்றவங்க எல்லாம் ஒரு நாள் திருந்த தான் செய்வாங்க. மதன திருந்திடுவான்..ரொம்ப ரொம்ப நல்ல பையன். மத்தவங்க கிட்ட அன்பா பேசுவான் .


மத்தவங்களுக்கு நல்லா உதவியும் செய்வான்.. அவனை எந்த விதத்திலும் குறை சொல்லிட முடியாது. ஆனா இந்த பொண்ணு விஷயத்துல தான் எப்படியோ சிக்கிட்டான் போல இருக்குது .


அவங்க வீட்ல பிடிக்கல சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சிடணும்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க .


போன் முறை அவங்க அம்மா இங்க வந்தப்போ கூட அவங்க கிட்ட பேசினேன். இது மாதிரி போயிட்டிருக்கு.. அந்த பொண்ண பிடிச்சதுனா அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணி வச்சிடுங்கன்னு கூட சொன்னேன் .


ஆனா அவசர அவசரமா உன்னை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க .கொஞ்சம் கவனமா இரு மறுபடியும் அந்த பொண்ணு பக்கம் சாயாம மதனை பார்த்துக்கோ…


இந்த ஆண்களை நம்பவே முடியாது. பொண்ணுங்க விஷயத்துல என்னைக்குமே வீக் தான்..


சின்னதா ஒரு அழுகை அழுதா போதும்.. எல்லாத்தையுமே விட்டுட்டு நீ தான் என்னோட உயிர்ணு கிளம்பி போயிடுவானுங்க .


நான் நிறைய பேரை பார்த்திருக்கிறேனே.. இது போல நிறைய கதைகளையும் கேட்டிருக்கிறேன். அதனால் தான் சொல்றேன் .


உன்னோட வாழ்க்கை உன் கையில தான் இருக்குது.மதனை நல்லா பத்திரமா பிடிச்சு வச்சுக்கோ” என்று சொல்ல..சரி என்பது போல தலையாட்டினாள்.


மதன் அன்றைக்கு வீட்டுக்கு வரும் போது இரவு ஆகி இருந்தது.

வந்த உடனேயே மதனிடம் பேச்சு கொடுத்தாள்..

‘உங்க லைப்ல முன்னாடி என்ன வேணும்னாலும் நடந்திருக்கட்டும் .


எனக்கு அது வேண்டாத விஷயம் .ஆனால் இனி நம்ம வாழ்க்கை பற்றி யோசிக்கலாம்ல..’ சற்று பயத்தோடு படபடப்பாக திக்கி திணறி தான் கேட்டது .

கேட்ட உடனேயே சட்டென்று நிமிர்ந்து இவளை முறைத்தது போல பார்க்க ..உள்ளுக்குள் பயம் ஊற்றெடுக்க ஆரம்பித்தது இவளுக்கு..


“என்ன சொல்ற உன் கூட தொடர்ந்து வாழணும்னு சொல்றியா ..”


“இல்ல அப்படி இல்ல ..என்ன முடிவு எடுக்கப் போறீங்கன்னு தெரிஞ்சுக்கறதுக்காக தான் கேட்கிறேன் “.


“ என்ன முடிவு ஏற்கனவே நான் சொல்லிட்டேன் .என்னால அவளை மறக்க முடியாது.


வேணும்னா அவ கூட நீயும் ஒரு ஓரத்துல இப்படியே வாழ்ந்துக்கலாம்.


என்ன பெருசா என்னவோ வாழ்ந்து சாதிக்க போறேன்னு நினைச்சு தானே உன்னை பிடிச்சு பிடிவாதமா கல்யாணம் பண்ணி வச்சாங்க .


அவங்க திருப்திக்காகவாவது ஒரு ஓரமா இருந்துக்கோ..


நீ என்னை தொந்தரவு பண்ணாத வரைக்கும் பிரச்சனை இல்ல .நான் இப்படியே இருந்துக்குவேன்.


தேவையில்லாம என்கிட்ட வந்தேன்னா கஷ்டப்பட போறது நீயா தான் இருப்ப ..என்ன சொன்னது புரிஞ்சுதா “என்று அருகே வர.. பயத்தில் இரண்டு அடி பின்னால் நகர்ந்தாள்.


“ இந்த பயம் எப்பவுமே உன்கிட்ட இருக்கட்டும்.


நீ விருப்பப்பட்டால் ..ஆசைப்பட்டால் சேர்ந்து வாழலாம். அதுல எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல..


எனக்கு பெருசா எந்த நஷ்டமும் வரப்போவதில்லை” என்று சொல்லிவிட்டு மறுபடியும் அருகே வர ..”இல்ல” என்று கத்த ஆரம்பித்து இருந்தாள்..


“ஒரு வகையில் பார்க்க போனா நீயும் அழகா தான் இருக்கற.. உன்னையும் குறையெல்லாம் சொல்லிட முடியாது .


ஒரு வேளை நான் அவளை பார்க்காம இருந்திருந்தா ..இப்படி ஒரு கல்யாணம் முடியும் போது வாழ்க்கை சந்தோஷமா தான் போய் இருக்கும் .


ஆனா இப்ப அத பத்தி யோசிச்சி பிரயோஜனம் இல்லையே.. என்ன ஆனாலும் எனக்கு பிடிக்காத கல்யாணம்.. இப்படி விலகி இருக்கிற வரைக்கும் பிரச்சனை இல்ல .


நீ விருப்பப்பட்டா உன் வீட்டுக்கு வேணும்னாலும் போய் தங்கிட்டு வந்துக்கலாம் .

எனக்கு எந்த கவலையும் இல்லை .”


“ஏன் நான் இந்த வீட்டை விட்டு போனா அந்த பொண்ணை கூப்பிட்டுட்டு வந்து இங்க கூத்தடிக்க வசதியா இருக்கும் அப்படித்தானே “என்று சொல்ல பளார் எனறு முகத்தில் அரைந்திருந்தான்.


“ என்ன ஓவரா பேசிக்கிட்டு இருக்கிற ..யார் கொடுத்த தைரியம். இது என் வீடு இங்க நான் இப்படித்தான் இருப்பேன். நீ வெளியே போனா தான் அவளை கூப்பிட்டுட்டு வரணும்னு அவசியம் கிடையாது .


நீ இருக்கும் போது அவளை என்னால இந்த வீட்டுக்கு கூப்பிட்டு வர முடியும் .


அவ கூட சந்தோஷமா இருக்க முடியும் புரிஞ்சுதா .ஏதோ போனா போகட்டும்ணு விட்டா வந்து கேள்வி கேக்கற.. இந்த கேள்வி கேக்குற வேலை எல்லாம் வச்சுக்காத.”


அடித்த கன்னம் ஒருபுறம் எரிய ஆரம்பித்து இருக்க..கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது .கையால் கன்னத்தை மறைத்து பிடித்தபடியே பின்னால் நகர்ந்தவள்..


“நான் கேட்காம வேற யாருக்கு கேட்பாங்க. நான் உங்களோட மனைவி .உங்க தாலியை என் கழுத்துல வாங்கி இருக்கிறேன் .எனக்கு தப்புன்னு தோணுச்சுன்னா அதை கேட்பேன் “என்று சொல்ல.. அடுத்த கன்னத்தில் பளார் என அரை விழுந்திருந்தது .அப்படியே அடித்த வேகத்தில் கீழே விழுந்து இருந்தாள்.


“ இதோ பாரு இப்ப சொல்றது தான் ..ஏதோ பொறுமையா போறேங்கறதுக்காக இப்படி வந்து தினமும் அடி வாங்கிக்காத..


கொத்தாக தலை முடியை பிடித்து தூக்கியவள் ..அப்படியே முன்னாள் ஆட்டி சட்டென்று தள்ளி விட்டு விட்டு..


“உன்னோட எல்லை என்னவோ அதுல நீ நின்னுக்கோ.. அதை தாண்டி என்கிட்ட வர முயற்சி பண்ணாத” என்று சொல்ல.. இவளுக்கோ பயம் பதட்டம் கூடவே அடி வாங்கிய கன்னத்தில் வலி ஒரு புறம் உயிர் போக சரிந்து அமர்ந்து அழ ஆரம்பித்து இருந்தாள்.


சற்று நேரத்திற்கெல்லாம் உணர்வு மெல்ல மங்க அங்கேயே மயங்கி இருந்தாள் விவேகா.


இவளை அடித்து தள்ளியவன் அதன்பிறகு அங்கே நின்று இருக்க வில்லை. வேகமாக வெளியேறி இருந்தான்.


அன்றைக்கு திரும்ப வீட்டிற்கு வந்திருக்கவே இல்லை.


அன்றைய நாள் மட்டுமல்ல அடுத்த சில நாட்கள் கூட அவன் வீட்டிற்கு வரவே இல்லை.


தனிமையை துணையாய் கொண்டு அடுத்த என்ன செய்வது என்கின்ற நிலைமையும் புரியாமல் தனியே தவித்துக் கொண்டிருந்தாள்..


இரண்டு நாட்கள் தாண்டவுமே இதற்கு மேல் பொறுமையாக இருந்தால் சரி வராது என தோன்ற.. நேராக மாமியாருக்கு அழைப்பு விடுத்தாள். சுருக்கமாக விஷயத்தை சொல்ல ..அவர் உடனே புறப்பட்டு வந்திருந்தார். வந்தவர் இவளை தான் திட்டினாரே தவிர தன் மகனை எந்த குறையும் சொல்லவில்லை .


“நான் தான் உன்கிட்ட சொல்லி இருக்கேன்ல ..அவனை கைக்குள்ள வச்சுக்க பாருன்னு சொன்னேன்ல ..நீ என்ன செஞ்சு வச்சிருக்கிற.. நீயா கேட்டு அவனை வெளியே அனுப்பி வெச்சிட்டியா” என கேட்க இவளுக்கு அடக்க முடியாத கோபம்.., கோபமாக திரும்ப கேட்டிருந்தாள்.


“ உங்க பையனுக்கு தான் வேற பொண்ணு மேல இன்ட்ரஸ்ட் இருக்குன்னா அந்த பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்.. இல்ல வேற ஏதாவது செய்யணும் .


அதை விட்டுட்டு எதுக்காக இப்படி ஒரு கல்யாணத்தை பண்ணி என் உயிரை வாங்கறீங்க.. அந்த பொண்ணு கூட தான் இருப்பேன்.. அவ கூட தான் போவேன்னு சொல்லிட்டு கிளம்பி போறாரு .அது எப்படி இன்னொரு பொண்ணு கூட போயிட்டு வர்றவனை என்னால ஏத்துக்க முடியும்.”.


இவள் கேட்டும் கூட அவருக்கு இவளுடைய மனநிலை புரியவில்லை ..சாதாரணமாக கூறினார்.


“ எத்தனை படங்களில் பார்த்திருக்கிறேன். கல்யாணம் முடிஞ்சா அடுத்த நாளிலிருந்து புருஷன் பொண்டாட்டி பின்னாடியே வாலை புடிச்சுகிட்டு சுத்தறதை..


அது மாதிரி என் பையனை உனக்கு மயக்கி வச்சிக்க தெரியல. அத ஒத்துக்கோ.. அதை விட்டுட்டு என்னை கூப்பிட்டு நியாயம் கேட்டுகிட்டு இருக்குற.. இது உன்னோட குடும்ப விஷயம்.


நீ ஆச்சு அவன் ஆச்சு..நான் இதுல தலையிட மாட்டேன். நான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னதுதான் .எதா இருந்தாலும் நீ தான் பாத்துக்கணும் .


இன்னொரு முறை இது போல எனக்கு போன் பண்ணி தொந்தரவு பண்ணாத.. இப்போ வந்ததுக்கு அவன் கிட்ட போன் பண்ணி என்ன எதுன்னு கேட்டுட்டு கிளம்புறேன்.


அவன் வீட்டுக்கு வருவான் ..ஒழுங்கா வச்சு குடும்பம் நடத்துற வழிய பாரு..அவன் ஆம்பளை .. அவன் தப்பு பண்ணினால் கூட நீ தான் பொறுமையா பேசி சரி பண்ணற வழியை பாரு..


இதை விட மோசமா அடுத்த பொண்ணுங்களே கதின்னு இருந்தவனுங்க கூட பொண்டாட்டி கால்ல விழுந்து கிடக்கிறத எல்லாம் நான் பார்த்திருக்கிறேன் .


எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்குது உன் புருஷனை ஒழுங்கா உன் கைக்குள்ள வச்சிக்கிற வழிய பாரு .அத விட்டுட்டு என்னை கூப்பிட்டு கேட்டுகிட்டு இருக்காத “என்று சொல்லிவிட்டு வெளியேறி இருந்தார் .


அன்றைக்கு மாலையில் வழக்கம் போல மதன் வந்தான்.. வந்தவன் நேராக இவள் எதிரே வந்து..” என்ன அம்மா வரைக்கும் போன் பண்ணி கூப்பிட்டு அழுது முடிச்சாச்சா.. இப்போ இங்க வந்ததுக்கு என்ன காரணம் தெரியுமா..


கல்யாணம் பண்ணியாச்சு உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சின்னு ஊருக்கே தெரியும் .


ஏன் என் காலேஜ்ல கூட நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கு.. இந்த நேரத்துல உன்னை விட்டுட்டு வெளியே சுத்திக்கிட்டு இருந்தா அது அவ்வளவு நல்லா இருக்காது .


தேவையில்லாம என் பேரு தான் கெடும் ..அந்த ஒரே காரணத்துக்காக தான் திரும்ப வந்தேன்.


நீ வாய் பேசாம இருக்கற வரைக்கும் உனக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்ல.. ஆனா தேவையில்லம ஏதாவது கேட்டேன்னா என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது .


உன்னை உயிரோடவே விட மாட்டேன் .கொன்னு புதைத்து விடுவேன் புரிஞ்சுதா” மிரட்டி விட்டு நகர்ந்தான்.


நாட்கள் வேகமாக நகர்ந்தது இரண்டு முறை தனியாகவே தாய் தந்தையரை சென்று பார்த்து விட்டு வந்திருந்தாள்.


தாயார் கேட்டதற்கு ஏதாவது ஒரு சமாதானத்தை சொல்லி நகர்ந்து வந்திருந்தாள்.


பெரும்பாலும் இங்கே வீட்டிற்கு தாய் ,தந்தையை வர விடவில்லை .”பார்க்கணும் போல இருக்குது” என ஆரம்பிக்கும் போதே அடுத்த நிமிடமே இவள் புறப்பட்டு சென்று விடுவாள்.


நான்கு மாதங்கள் தாண்டி விட்டது. வாழ்க்கையில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை .


இப்போதும் அவன் அந்த பெண்ணின் தொடர்பில் இருக்கிறான் என்பது நல்லாவே தெரிந்தது.


அதுமட்டுமல்லாமல் வீட்டிற்கு வந்த உடனேயே அந்த பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்து விடும் .


நீண்ட நேரம் வரைக்குமே பேசிக் கொண்டிருப்பான் .


இதில் புரிந்து கொண்டது. இவன் காலேஜ் விட்ட உடனேயே நேரடியாக அங்கே சென்றான் என்றால் ஒன்பது மணிக்கு தான் திரும்ப வீட்டுக்கு வருகிறான் என்பது ..


அவ்வளவு நேரம் அவளோடு இருந்து விட்டு இங்கே வந்த பிறகும் கூட அழைத்தவள்” என்னை விட்டு விட்டு பிரிந்து சென்று விட்டாய்” என்பது போல அந்த பெண் புலம்ப ..இவனோ வேறு விதமாக காதல் சொட்ட சொட்ட பேசிக் கொண்டிருந்தான் .


கேட்கும் இவளுக்கு தான் பைத்தியம் பிடிக்கும் நிலையில் இருந்தாள்.


ஒரு கட்டத்திற்கு மேல் இவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.


இதற்கு மேல் இங்கே இருந்தால் பிரச்சனை இன்னமும் பெரியதாகும் என புரிந்து கொண்டவள் இறுதியாக பேச முடிவு செய்திருந்தாள்.


அதன்படி அன்றைக்கு வீட்டிற்கு வந்த உடனேயே பேச ஆரம்பிக்க..இவளின் முகத்தையே பார்த்தவன் வேகமாக மொபைலில் எடுத்து நோண்ட ஆரம்பித்தான்.


“ உன்னோட மொபைலுக்கு சில போட்டோஸ் அனுப்பி வச்சிருக்கேன் கொஞ்சம் எடுத்துப் பாரு “என்று சொல்ல..

ஒன்றும் புரியாமல் போட்டோவை எடுத்து பார்த்தாள்..


அதில் மதனும் அந்த பெண்ணும் இறுக்கமாக நெருக்கமாக இருக்கின்ற புகைப்படங்கள்.. உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பது போல இருக்கமாக அணைத்தபடி இருக்க..


“பார்த்திட்டியா நல்லா இருக்குதா ..இன்னொரு தடவை என் விஷயத்துல தேவையில்லாம கேட்டேன்னு வச்சுக்கோயேன். இந்த போட்டோ இல்ல அடுத்தது சேர்ந்து இருக்கிற மாதிரி வீடியோ கூட அனுப்பி வைப்பேன் .என் விஷயத்துல நீ தலையிடாதே.. “


அவன் சொல்லி முடிக்கவுமே உள்ளுக்குள் ஒரு ஒவ்வாமை தோற்ற.. குமட்டிக் கொண்டு வருவது போல இருந்தது இவளுக்கு..


“என்னால இப்படி ஒரு லைஃப் வாழ முடியாது. எனக்கு இங்க இருக்க பிடிக்கல. நான் போக போறேன் .இங்க இருந்து.. “


“உன் இஷ்டம் நான் உன்னை தடுக்க மாட்டேன். தாராளமா போய்க்கலாம்.. நீ போயிட்டா எனக்கு இன்னமும் வசதி தானே தவிர.. கவலை எல்லாம் பட மாட்டேன்” என்று சொல்ல …இவளுக்கு என்ன செய்வது எங்கே போவது ஒன்றும் புரியவில்லை திகைத்து நின்றிருந்தாள்.

 

NNK-15

Moderator
8


“உங்க பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு.. என்னென்னமோ செஞ்சுகிட்டு இருக்கறா.. முதல்ல உங்க பொண்ண வந்து அழைச்சிட்டு போங்க” மதனிடமிருந்து இப்படி ஒரு போன் கால் வர சற்று பதட்டத்தோடு தான் விவேகாவின் தாய் ,தந்தை இருவருமே புறப்பட்டு வந்தது .


இங்கே இவளது வீட்டிற்கு வந்து பார்க்க.. வீடு அலங்கோலமாக இருந்தது.


எல்லா பொருள்களும் சிதறி கிடக்க ..ஒரு இடத்தில் அமர்ந்து எதிரில் இருந்த சுவற்றை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.


“என்ன ஆச்சு விவேகா “என்று விவேகாவிற்கு அருகே தந்தை சென்று கேட்க..


“ நான் தான் போன்ல சொன்னேன்ல.. உங்க பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு .அவ என்ன செய்றான்னு அவளுக்கே தெரியல .கொஞ்சம் கூட சம்பந்தமில்லாமல் அத்தனை பொருளையும் இழுத்து போட்டு உடைத்து வைத்திருக்கிறா.. ஏன்னு கேட்டா நான் அப்படித்தான் செய்வேன்னு பதில் சொல்றா.. வாய்க்கு வந்த வார்த்தை எல்லாம் வச்சு என்னை திட்டறா” என்று சொல்ல ..எதற்குமே அவளிடத்தில் இருந்து ஒரு பதில் கூட இல்லை.


இப்போதும் அப்படியே அமர்ந்திருக்க..” என்னடா ஆச்சு என்ன? என்று அசைக்க.. இப்போதுதான் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழிப்பது போல சுற்றிலும் பார்த்தவள்.. தாயாரை பார்க்கவும்…


தாயாரை கட்டி அணைத்தபடி அழ ஆரம்பித்தாள்.


“என்னால இங்கே இருக்க முடியாதும்மா.. என்னை அழைச்சிட்டு போயிடுங்க.. என்னை இங்க விட்டு வச்சீங்கன்னா நான் செத்துருவேன்..இவன் கூட வாழவே முடியாது” என்று அழ..


“ என்னடா ஆச்சு ..என்ன ஆச்சு என்ன பிரச்சனை.. ரெண்டு பேருக்கும் நடுவுல.. நல்லா தானே இருந்தீங்க. என்ன மாப்பிளை என்ன தான் நடந்துகிட்டு இருக்குது. சொல்லுங்க.. நீங்க சொன்னாதானே என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியும்.” என்று சொல்ல இருவருமே அமைதி காத்தனர்.


கொஞ்சம் குழப்பத்தோடு விவேகாவின் தந்தை நேராக மதனின் தாயாருக்கு அழைப்பு விடுத்தார்.


“ இரண்டு பேருக்கும் நடுவுல என்ன பிரச்சனைன்னு தெரியல வீடு தலை கீழா இருக்குது.. மாப்பிள்ளை கூப்பிட்டார்ணு இங்க வந்தேன் ..கொஞ்சம் வீடு வரைக்கும் வாங்க” என்று அழைக்க ..அடுத்த அரை மணி நேரத்தில் அவரும் கூட வந்திருந்தார் .


வீட்டின் கோலத்தை பார்த்து திகைத்தபடியே குற்றம் சாட்டும் பார்வையை மதனின் மேல் பதிக்க.. மதனோ அதை எதையுமே கண்டுகொள்ளவில்லை.


“ என்ன? என்னை வந்து முகத்தை பார்த்தா என்ன அர்த்தம்.. என் மேல எந்த தப்பும் கிடையாது. அவ தான் இதெல்லாம் செஞ்சா “என்று அசால்ட்டாக சொல்லி விட்டு ஷோபாவில் சென்று அமர..


“என்ன நடந்திச்சுன்னு கேட்டா ரெண்டு பேரும் பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க .வீடு இப்படி இருக்குது. அவளும் வெறிச்சு பாத்துகிட்டு இருக்கறா “என்று சொல்ல ..இரண்டு மணி நேரம் முன்பு நடந்தது ஞாபகத்திற்கு வந்தது விவேகாவிற்கு…


“ மூன்று நாளா நீ வீட்டுக்கு வரலை மதன். நான் என்னன்னு எடுத்துக்கிறது .என்ன புது பொண்டாட்டி கூட ஜாலியா இருக்கிறயா..” என சத்தமாக போனில் கேட்க ..சட்டென ஏதோ வேலையாக இருந்தவள் திரும்பி மதனை முறைத்தாள்.


“ உன்கிட்ட எத்தனை தடவ தான் சொல்றது. நான் தான் உன் கிட்ட சொன்னேன்ல.. எனக்கு கொஞ்சம் வேலை நிறைய இருக்குது .


காலேஜில் ஆபீஸ் வொர்க் நிறைய தராங்க..அதுவே முடியறதுக்கு ஏழு மணி ஆகிடுது. அதுக்கு பிறகு தான் காலேஜ்ல இருந்து வந்துகிட்டு இருக்கேன் .என்னால இன்னுமும் சில நாட்களுக்கு வர முடியாது. சொன்னேன் தானே..”


“ சும்மா இந்த கதை எல்லாம் சொல்லாத.. உனக்கு நான் சலிச்சு போயிட்டேன் .அப்படி தானே.. அதனால தான நீ புது பொண்டாட்டி கிட்ட போக ஆரம்பிச்சுட்ட”..


“பைத்தியம் மாதிரி உளறாத.. நம்ம விஷயம் அவளுக்கு எல்லாமே தெரியும். அவ இந்த வீட்ல மூணாவது மனுஷி மாதிரி தான் இருக்கிறா.. சொன்னா நம்பு .”


“இதையெல்லாம் நான் நம்ப மாட்டேன் மதன். ஏன்னா நீ என்கிட்ட எப்படி நடந்துக்கிறேன்னு எனக்கு நல்லா தெரியும் .எதையுமே பார்க்காதவனாட்டம் அப்படி வந்து மேல விழுவ.. உனக்கு

செக்ஸ்னா ரொம்ப பிடிச்ச விஷயம்ல ..எப்பவுமே புதுசு புதுசா ஏதாவது செய்யணும் அதனாலதான் நீ அந்த பொண்ணு கிட்ட போயிட்ட போல இருக்கு .”பேசுவது தெளிவாகவே இவளது காதில் கேட்க .. சட்டென வாந்தி வரவுமே வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்.


பாத்ரூமிற்கு சென்று இவள் வாந்தி எடுக்க.. அந்த சத்தம் கூட போனில் எதிர் முனையில் இருந்தவளுக்கு கேட்டது .


“என்ன உன் பொண்டாட்டி தான் வாந்தி எடுக்கிறாளா.. அதுக்குள்ள நீ வாந்தி எடுக்க வச்சிட்டியா” என்று கேட்க..


“ பைத்தியம் மாதிரி உளறிக்கிட்டு இருக்காத.. இன்னொரு தடவை இது மாதிரி பேசினா எனக்கு பயங்கர கோவம் வந்துரும் புரிஞ்சுதா..


நான் உனக்கு மட்டும் தான் உண்மையாக இருக்கிறேன். அவளுக்கு இல்ல .அதை முதல்ல தெரிஞ்சுக்கோ ..”


“நான் எப்படி நம்புறது ..பேச பேசவே அங்க வாந்தி சத்தம் தெளிவா கேக்குது .அதனால தான் இங்க வராமல் சுத்திக்கிட்டு இருக்கியா.. இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வர்ற” என்று சொல்லி போனை வைக்க ..வாந்தி எடுத்துவிட்டு சோர்வாக வெளியே வந்தவளை சட்டென பிடித்து பளாரென கன்னத்தில் அறைந்து இருந்தான்.


“ஏற்கனவே பிரச்சினைமில இருக்கிறேன் .அதுக்கேத்த மாதிரி நீயும் வம்பு செஞ்சுகிட்டு இருக்கறயா.. இப்ப எதுக்குடி போய் வாந்தி எடுத்த” என்று சொல்ல ..


“சீ ..நீ எல்லாம் ஒரு மனுஷனா.. மனுஷன் மாதிரியா பேசிக்கிட்டு இருக்கிற ..போன்ல பேசுறதை கேட்டு வாந்தி வருது. அந்த அளவுக்கு கீழ்த்தரமானவன் நீ” என்று சொல்ல.. மறுபடியும் பளார் என்ன அடிக்க ..இப்போது விவேகாவிற்கு உச்சபட்சமாக கோபம் வந்திருந்தது.


அடுத்த முறை அடிக்க கை ஓங்க யோசிக்காமல் கையை பிடித்து நிறுத்தி இருந்தாள்.


“ இன்னொரு தடவை என் மேல கை பட்டதுனா.. நான் என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது. நீ என்ன நினைச்சுகிட்டு இருக்குற.. ஒவ்வொரு தடவையும் நீ அடிக்கும் போது நான் வாங்கி கொண்டு இருப்பேன்னு நினைக்கிறாயா” என்று சொல்ல..


“என்னை பார்த்து நீ கை ஓங்குவியா.. என்னோட கையவா நீ தடுக்க பார்க்கற” என்று மறுபடியும் கையை பிடிக்க.. அங்கே சிறு போர்க்களமே நடக்க ஆரம்பித்தது.


ஒரு கட்டத்திற்கு மேல் கோபத்தில் கிடைத்த அனைத்தையும் எடுத்து வீச ஆரம்பித்து இருந்தாள் விவேகா.. கூடவே கோபத்தில் கத்தியபடியே.. அவளுடைய கோபம் ஆவேசம் இவனுக்குமே ஒரு நிமிடம் பயத்தை தர.. இரண்டு அடி பின்னால் நகர்ந்து நின்றான்.


“ என்னடா என்ன நினைச்சுகிட்டு இருக்குற ..நீ பெரிய இவனா ..உலக அழகனா.. உன் பின்னாடி அத்தனை பேரும் வர்றதுக்கு..


இன்னொரு தடவை என்கிட்ட பேசுற வேலை வச்சுக்காத.. உனக்கு இது தான் மரியாதை” என்று சொன்னபடியே கைக்கு கிடைத்ததை எடுத்து இவனுக்கு நேராக வீச.. அந்த நேரத்தில் அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தான்.


திரும்ப ஒரு மணி நேரம் கழித்து உள்ளே வந்து பார்க்க.. இவளது ஆவேசம், கோபம் ,இயலாமை, ஆற்றாமை என மொத்தமும் சேர்ந்து வீட்டையே தலைகீழாக மாற்றி இருந்தாள். மொத்தத்தையும் களைத்து தூக்கி வீசி என அத்தனையும் செய்த பிறகும் கூட கோபம் குறையவில்லை ‌அப்படியே அமர்ந்து இருக்க.. அதன் பிறகு தான் இவன் போனில் அழைத்து இவர்களை வரச் சொன்னது.


“என்ன நடந்துச்சுனு கேக்கறேன்ல ..ரெண்டு பேர்ல யாராவது பதில் சொல்லலாம்ல” என்று சொல்ல ..


“உங்க பையன்கிட்டயே கேளுங்க .ஏன்னா உங்க பையன் தானே யோக்கியன்.

இது போல ஒரு பையனை தானே வளர்த்து வச்சி இருக்கீங்க. என்கிட்ட எதையும் கேட்காதீங்க .”குரல் மட்டும் இவளிடம் இருந்து வந்தது.


“என்னடா “என்று மகனைப் பார்க்க..


“ நான் தான் ஆரம்பத்திலே சொன்னேன்ல ..இந்த கல்யாணம் வேண்டாம். என்னை விட்டுடுங்கன்னு.. கேட்டீங்களா.. தேவை இல்லாம இழுத்து வச்சுக்கிட்டு ..இப்ப நான் தான் அனுபவிக்கிறேன்.


ஒரு பைத்தியக்காரியை கட்டி வச்சுட்டு எப்போ என்ன பண்ணுவான்னு தெரியாம பதறிக்கிட்டு இருக்கிறேன்.”


“ யார் பைத்தியம் ..நானா” என்று எழுந்து நிற்க.. வேகமாக விவேகாவின் தந்தை அவளை அமைதிப்படுத்தினார் .


“இப்படி எல்லாம் கத்தக் கூடாதும்மா.. அமைதியா இரு. நாங்க தான் வந்திருக்கிறோம்ல என்ன , ஏதுன்னு விசாரிக்கிறோம் .”


“போதும் பா.. நீங்க விசாரிச்சது வரைக்கும் போதும்..ஒரே ஒரு நிமிஷம் இருங்க..


ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுட்டு வந்துடறேன் . அதுக்கு பிறகு தயவு செய்து என்னை இங்கிருந்து அழைச்சிட்டு போயிடுங்க .


இனி இந்த வீட்டில் என்னால இருக்க முடியாது .இதுக்கு அப்புறம் நான் இங்கே இருந்தா ஒன்னு எனக்கு பைத்தியம் பிடிக்கும் .


இல்லனா இருக்கிற டிப்ரஷன்ல என்னால தாங்க முடியாம நானே தற்கொலை பண்ணிக்குவேன். இந்த ரெண்டுல ஏதாவது ஒன்னு தான் நடக்கும் .அது போல ஆனா உங்களுக்கு சந்தோஷமா” என்று கேட்க ..


“என்னம்மா ஏன்மா இப்படி எல்லாம் பேசுற..” என கண் கலங்கி அழவே ஆரம்பித்து இருந்தார் .வேகமாக மதனி தாயாரிடம் சென்றவள்.” எப்படி? பையனை உங்களால நல்லவனா வளர்க்க முடியாது.. கேடு கேட்டு வளர்த்து வைப்பீங்க. ஆனா உங்க பையலை திருத்துறதுக்கு நான் வரணுமா..


ஆம்பிளைங்கற தஇமஇர்ல ஊர் மேய்ச்சிட்டு வருவான்.. நான் பொறுப்பா பார்த்துக்கணுமா..


உங்கள் பையனை கண்டிக்க தெரியாது.ஆனால் கட்டிக்கிட்டு வந்தவளை நீங்க எல்லாம் குறை சொல்லுவீங்கல்ல ..


அவ வந்த நேரம் சரியில்ல.. அவ பார்த்துக்கிட்டது சரி இல்ல.. அவளுக்கு வளைச்சி போட தெரியல .இப்படியெல்லாம் பேசுவீங்க அப்படித்தானே..


அன்றைக்கு உங்க பையனுக்கு இன்னொரு பொண்ணு கூட தொடர்பு இருக்குனு சொன்னேன்.. அதுக்கு என்ன சொன்னீங்க.. அவன் அப்படித்தான் இருப்பான் .. அவன் ஆம்பள நீ தான் மாத்தணும் .உன் கைக்குள்ள வச்சுக்கணும். உங்க பையனை திருத்துவதற்கு நான் என்ன தியாகியா..


உங்க பையனை திருத்தி நல்ல வழிக்கு கொண்டு வருவதற்கு தான் என்னோட அம்மா அப்பா என்னை பெத்து வளர்த்து விட்டாங்களா ..எங்களுக்குன்னு சுயமாக ஆசை இருக்கக் கூடாதா..


எங்களுக்கும் ஆசைகள் இருக்கும் தானே ..எனக்கு வர்ற கணவன் இப்படி இருக்கணும்.. அப்படி இருக்கணும் .


நம்மளை இந்த மாதிரி எல்லாம் பார்த்துக்கணும்.. கையில வச்சு தாங்கணும் .இது போல ஆசை இருக்க தான செய்யும் .ஆனா உன் பையன் என்ன பண்ணினான்.


வந்த அன்னையிலிருந்து இன்றைக்கு வரைக்கும் நிம்மதி இல்லை ..அம்மா அப்பாவுக்காகனாலும் எவ்வளவு தூரம் அனுசரிச்சு போக முடியும். இந்த வீடு ஜெயில் மாதிரி ஆகிடிச்சு.


இதுல உன் பையன் ரொம்ப தெளிவா சொல்லிக்கிட்டு இருக்கறான். யார்கிட்டயாவது சொன்னா அந்த பொண்ணை கூப்பிட்டுட்டு வந்து என் முன்னாடி சேர்ந்திருப்பேனாம்.. எவ்வளவு கேவலம்..


எவ்வளவு சேடிஸ்டான ஒரு பேச்சு.. இந்த மாதிரி ஆட்கள் கூட எல்லாம் எப்படி இருக்க முடியும் “என்று சொல்ல.. விவேகாவின் தாய் ,தந்தை இருவருக்குமே ஒன்றுமே புரியவில்லை.


“ என்னம்மா என்ன “என்று கேட்க ..


“போதும்பா வாழ்ந்தது வரைக்கும் போதும். ரொம்ப சந்தோஷமா.. நிறைவா வாழ்ந்துட்டேன். இதுக்கு மேல இந்த வீட்ல என்னால இருக்க முடியாது .இதையும் தாண்டி நீங்க என்னை இங்க இருக்க வைக்கணும்னு நினைச்சீங்கன்னா.. அதுக்கப்புறம் நீங்க என்னை உயிரோடு பார்க்க முடியாது.


இது ஜெயில்ல இருந்து தயவு செய்து என்னை அழைச்சிட்டு போயிடுங்க. என்னை திரும்பவும் இங்கேயே விட்டுடாதீர்கள்” என்று கதறி அழ..


“அதுதான் உங்க பொண்ணே தெளிவா சொல்லிட்டால்ல.. கூப்பிட்டுட்டு கிளம்பிடுங்க. இங்க இருந்து நானும் பயந்து பயந்து பார்த்து கிட்டு இருக்க முடியாது .ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா அப்புறம் நான் தான் பதில் சொல்லணும். கவுரவமான வேலையில் இருக்கிறவன் நான்.. என்னை அசிங்கப்படுத்துவதற்காகவே உங்க பொண்ணு இப்படி எல்லாம் பழி போடுறா”என்று சொல்ல.. சட்டென்று கோபமானவள் மதன் சட்டையை கொத்தாக பற்றி இருந்தாள்.


“ இன்னொரு தடவை ஒரு வார்த்தை பேசினா என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது .நீ எல்லாம் மனுசனாடா.. நீ எல்லாம் மனுசனே கிடையாது. உன்னை போல ஒரு சைக்கோவை நான் பார்த்ததே இல்ல.” என்றவள்.. “தயவு செய்து வாங்கப்பா என்ன எதுன்னு கேட்காதீங்க..ஒரு நாள் உங்க கிட்ட சொல்றேன்.” என்றவள் அங்கிருந்து நகர்ந்தாள்..


“என்னவோ சொன்னீங்க ..உங்க பொண்ணு ரொம்ப அமைதி. எல்லாத்தையும் பொறுமையா ஹேண்டில் பண்ணுவா .பாசமா பார்த்துக்குவான்னு கதை சொன்னீங்க .ஏன்னா பேச்சு பேசுறா..


இவ கூட எல்லாம் மனுஷன் குடும்பம் நடத்துவானா.. என் பையன் பாவம் அநியாயத்துக்கு கஷ்டப்பட்டுட்டு இருக்கறான்” என்று சொல்ல.. சட்டென்று திரும்பி நின்று அவரை முறைத்தாள்.


“என்ன பத்தி விமர்சனம் வைக்க உங்களுக்கு என்ன அருகதை இருக்குது .


எப்படி? சொன்னது மறந்து போச்சா..இது உன்னோட குடும்ப வாழ்க்கை ..நீ காப்பாத்திக்கோன்னு பேசினவங்க தானே. எனக்கு இப்படி ஒரு வாழ்க்கையே வேண்டாம்ணு சொல்கிறேன். இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட பேசிறாதீங்க. உங்க பையன் உத்தமன் கிடையாது. அது உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும்” என்று சொல்லிவிட்டு வேகமாக தந்தையின் கையை பற்றிய படி வெளியேறினாள் விவேகா.


. 

NNK-15

Moderator
9


வீட்டுக்கு அழைத்து வந்து இரண்டு மாதம் தாண்டி இருந்தது .


எந்த முன்னேற்றமும் அவளிடத்தில் இல்லை ..எதையோ இழந்தது போலவே காணப்பட்டாள்.


தாயாரிடமும் பேசவில்லை தந்தையிடமும் சரியாக பதில் சொல்லவில்லை .


அவளை விடவும் பாதிக்கப்பட்டது தாய் தந்தை இருவரும் தான் .


தவறு செய்து விட்டோம் என்பது முழுவதுமாக தெரிய மகளை எப்படி அந்த சூழ்நிலையில் இருந்து மீட்டு வருவது என புரியவில்லை இருலருக்கும்…


இடையே ஒரு முறை அருகில் இருந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு சென்றிருக்க அங்கே மதனையும் அந்த பெண்ணையும் இணைந்து பார்த்தனர் .


பொது இடம் என்று கூட பார்க்காமல் அவளை தன்னுடைய கை வளையத்திற்குள் வைத்தபடி இடுப்பில் கை கொடுத்தபடி பேசி சிரித்துக்கொண்டிருப்பதை பார்க்க மொத்தமாகவே உடைந்து விட்டாள்.


இவளுடைய தாயாருக்குமே விவரம் புரியவும் மகளை வேகமாக அங்கிருந்து அழைத்துக் கொண்டு வந்திருந்தார்..


வீட்டுக்கு வந்த நேரத்தில் இருந்து புலம்ப ஆரம்பித்திருந்தாள் விவேகா.


“நான் தான் தப்பு பண்ணிட்டேன் மா ..என் மேல தான் தப்பா ..


நான் தான் சரி இல்லையா எனக்கு மத்தவங்க கிட்ட அனுசரிச்சு போற குணமே இல்லையா .


அதனால தான் இத்தனை பிரச்சனை வந்ததா.. நான் ஒருவேளை சரியா நடந்திருந்தா நீங்க அன்றைக்கு சந்தோஷமா இருந்து இருப்பீங்களா” என பலவாறாக கேள்வி கேட்க.. மகளை தேற்ற ஆரம்பித்தார்.


“நீ என்ன தப்பு செஞ்ச ..நீ எந்த தப்பும் செய்யல .தப்பு செஞ்சதெல்லாம் நாங்கதான் சரியா விசாரிக்காம இப்படி ஒருத்தனுக்கு கட்டிக் கொடுத்தது தப்புதான்.


அதற்கான தண்டனை எங்களுக்கு வேணும். உனக்கு இல்ல.. நீ இதுல இருந்து வெளியே வரணும் விவேகா..”


இவள் இங்கே வந்த ஒரு வாரத்திலேயே இவள் சம்பந்தமான மொத்த பொருள்களையுமே ஒரு டெம்போவில் ஏற்றி அனுப்பி இருந்தான் மதன்.


இவள் சம்பந்தப்பட்ட எந்த பொருளுமே இப்போது அந்த வீட்டில் இல்லை .


மொத்தமாகவே இங்கே அனுப்பி இருக்க.. எந்த மறுப்பும் சொல்லாமல் அனைத்தையுமே வாங்கிக் கொண்டாள் விவேகா.


அதைவிட மோசமான நிலை என்னவென்றால் அங்கே இருந்த காலங்களில் நடந்தது எல்லாமே இவளை ஒரு விதமான மன அழுத்தத்திற்கு தள்ளி இருந்தது .


அதன் பயனாக அடிக்கடி தன்னிலை மறந்து எதையாவது வெறித்தபடி அமர்ந்திருக்க ஆரம்பித்தாள்.


அது இன்னமும் இவளுடைய பெற்றோரை பயப்படுத்தியது.


அந்த மனநிலையில் இருந்து எப்படி மகளை மீட்டுக் கொண்டு வருவது என புரியாமல் இருவருமே தவித்துக் கொண்டிருந்தனர்.


நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தாண்டி விட்டது.


நடந்ததை மறக்க முடியாமல் அந்த குழப்பத்திலிருந்து மீளவும் முடியாமல் சுற்றிக் கொண்டிருந்தாள் விவேகா.. ஆனால் மதனின் நிலை வேறாக இருந்தது.


கொஞ்சமும் கூட யோசிக்காமல் அந்த பெண்ணை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான். கூடவே இருவரும் சேர்ந்து வாழவே ஆரம்பித்திருப்பதாக செய்தி வந்தது.


அது இன்னும் இவளின் பெற்றோரை பாதித்தது.” அது எப்படி முதல் மனைவி நீ உயிரோடு இருக்கிற போது இன்னொரு பொண்ணை அங்கே அழைச்சிட்டு வந்து வைக்க முடியும் .இதெல்லாம் சரி கிடையாது. நான் அவன் மேல கம்ப்ளைன்ட் பண்ண போறேன்” என்று விவேகாவின் தந்தை சொல்லும் போது இவள் தடுத்து விட்டாள்.


“ வேண்டாம் பா என்னவோ பண்ணிட்டு போகட்டும் .என்னால அவன் கூட மறுபடி சமாதானமாகி அங்க போய் வாழ்வேன்னு எதிர்பார்க்கிறீர்களா.. அது நிச்சயமா இந்த ஜென்மத்துல நடக்காது. அதனால இதை இப்படியே விட்டுடுங்க .நீங்க எனக்கு ஏதாவது உதவி செய்யணும்னு நினைச்சீங்கன்னா டைவர்ஸ் அப்ளை பண்ணுங்க “என்று சொல்ல.. அதற்கும்கூட அவன் விட்டு வைத்திருக்கவில்லை.


அவனே அவன் சார்பாக டைவர்ஸ் நோட்டீசை அனுப்பி வைத்திருந்தான்.


இவளுக்கு மனநிலை சரியில்லை இவளோடு வாழ முடியாது என்பது போல இருக்க இன்னமுமே இவர் துவண்டு விட்டார்.


கோபத்தோடு மதன் தாயாருக்கு அழைத்து பேச.. அவரும் வேறு விதமாக பேசினார் .


“சேர்ந்து வாழ்வான்னு நினைச்சி கல்யாணம் பண்ணி வச்சேன். என் பையனை ஒழுங்கா பாத்துக்க கூட உங்க பொண்ணால முடியல. அன்னைக்கு அங்க வீட்டுக்கு வந்திங்க தானே..


அந்த வீடு எப்படி இருந்தது .வீடு மாதிரியா இருந்தது .தலை கீழ போட்டு வச்சிருந்தா..


அந்த மாதிரி பொண்ணு கூட என் மகனை எப்படி சேர்ந்து வாழும்னு சொல்ல முடியும்.


நாளைக்கு இத்தனை பண்ணுன உங்க பொண்ணு என் மகனை ஏதாவது பண்ணிட்டா.. நான் என்ன செய்யறது அதனால தான் என்னவோ பண்ணிக்கட்டும்ணு விட்டுட்டேன் .


அவனுக்கு சட்டப்படி டைவர்ஸ் கிடைச்சுருச்சுன்னா யோசிக்காம அந்த பொண்ணுக்கே கல்யாணம் பண்ணி வச்சிடலாம்ணு நானே முடிவு பண்ணிட்டேன்.


இதுக்கு மேலயும் இதை இழுத்துட்டு போக வேண்டாம்” என்று…சற்றும் உணர்ச்சியே இல்லாமல் அசால்டாக பேச.. இன்னமுமே உடைந்து விட்டார்.


“அப்பா எப்போ கோர்ட்க்கு கூப்பிடறாங்களோ அப்போ போய் டிவோர்ஸ்கு சம்மதம்னு சொல்லிட்டு வந்துடலாம் பா .


இனி அவனை பத்தி பேசாதீங்க அந்த ஆள் எல்லாம் மனுசனே கிடையாது.”.


“நான் தான் தப்பு பண்ணிட்டேன் .மாப்பிள்ளை அழகா இருக்கிறார்ணு சொல்லி அவசர அவசரமா உனக்கு கல்யாணம் பண்ணி வச்சு ..


உன்னோட வாழ்க்கையை கேள்விக்குறியா ஆக்கிட்டேன்.”


“ அப்பா ப்ளீஸ் பா அழாதீங்க.. அழறதுக்கு எதுவுமே இல்ல. நம்ம விதி என்ன செய்யறது. என் தலையில இப்படித்தான்னு எழுதி வச்சிருக்கு.. நாம எதையாவது மாத்திட முடியுமா.”.

சொல்லிவிட்டு நகர்ந்து இருந்தாள்.


மறுபடியும் கூட ஒரு மாதம் தாண்டி இருக்க.. அன்றைக்கு மகளை பிடிவாதமாக துணி கடைக்கு அழைத்துச் சென்றிருந்தார்.


“விவேகா பிறந்தநாள் வருது உனக்காக ஒரு நல்ல சேலை எடுத்துட்டு வரலாம். இல்ல உனக்கு சுடிதார் வேணும்னாலும் பார்த்துக்கலாம். தயவு செய்து வாயேன் .”என இழுத்துக் கொண்டு வர.. வேண்டா வெறுப்பாகத்தான் அங்கே சென்றது.


துணிக்கடைக்கு அழைத்துச் சென்றவர் .ஒவ்வொரு துணையாக எடுத்துக்காட்ட.. எதன் மீதும் அவளுக்கு பற்றுதல் இல்லை. கிட்டத்தட்ட சாமியாரினி போன்ற ஒரு நிலையில் இருந்தாள் விவேகா.


எதிலும் ஆசை இல்லை .எதிலும் பற்றுதல் இல்லை. விரக்தி மனப்பான்மை மட்டுமே அவளை சுற்றிக் கொண்டிருந்தது.


அது மட்டுமில்லாமல் திருமணம் அதன் பின்னோடு நடந்த நிகழ்வுகள் என எல்லாமே ஒரு வித அழுத்தத்தை தந்திருக்க.. அதை தாண்டி வெளியே வர முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தாள்.


சரியாக தூங்குவது கிடையாது பாதி நாட்கள் சரியாக சாப்பிடுவது கிடையாது.


விடிய விடிய விட்டத்தை வெறித்த படி இருப்பது..சில நேரம் தாயாரிடம் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுவது.. என நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.


பயத்தில் இவளை ஒரு முறை மருத்துவரிடம் கூட அழைத்துச் சென்றிருந்தனர்.


இவளிடம் எல்லா கேள்விகளையும் கேட்டவர். “ஏதோ சின்னதா மன அழுத்தம் போல இருக்குது .மாத்திரை சாப்பிடற அளவுக்கு இல்ல.


அவளுக்கு என்ன பிடிக்குமோ அதை செய்ய அனுமதிங்க.. மறுபடியும் வேலைக்கு போனாலும் சரி. இல்ல மியூசிக் பிடிக்குமா.. பார்க்குல நடக்க பிடிக்குமா ..குழந்தைகளோட அரட்டை அடிக்க பிடிக்குமா? எது பிடிக்குமோ அதை செய்ய வையுங்கள். நிச்சயமாக சீக்கிரமாக இதிலிருந்து மீண்டு வந்துருவா” என்று சொல்லி அனுப்பினார் .


அது மட்டும் அல்ல.. இவளுக்குமே நிறைய அறிவுரைகளை கூறித்தான் அனுப்பி வைத்தது .


பழைய நிகழ்வுகள் எல்லாம் ஒன்றுமே இல்லை. இதை விட மோசமாக பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்கிறார்கள். உனக்கு அதுபோல எல்லாம் நேரவில்லை .என பல வாராக பேசி ஓரளவுக்கு சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


அதன் பிறகு சற்று அவளிடம் சில மாற்றங்கள் தென்பட்டது.


முன்பு போல இடிந்து உட்காருவது இல்லை. இரவில் ஓரளவுக்கு நன்றாகவே தூங்கினாள்.


சாப்பாடும் கூட ஓரளவிற்கு சாப்பிட ஆரம்பித்திருக்க.. சற்று நிம்மதி இவர்களிடத்தில் திரும்ப ஆரம்பித்தது.


இன்றைக்கு பிடிவாதமாக துணி கடைக்கு இழுத்து வந்திருக்க ..எப்போதும் போலவே பெரியதாக ஆர்வம் இல்லாமல் தான் கவனித்துக் கொண்டிருந்தது .


அப்போது தான் அந்த குரல் அவளுக்கு கேட்டது .


“பாப்பு ..பாப்பு தானே அது” என்று கேட்க சட்டென ஒரு நிமிடம் குரல் கேட்ட திசையில் மகிழ்ச்சியில் திரும்பி பார்த்தாள் விவேகா.


“தாரணி ஆண்டி” என்றபடி வேகமாக அவருக்கு அருகே செல்ல.. விவேகாவின் தாயார் மலர் கூட கண்டு கொண்டிருந்தார் .


“அட வா தாரணி.. எப்படி இருக்கற.. ரொம்ப நாள் ஆச்சு..” என்று நலம் விசாரிக்க ஆரம்பிக்க ..விவேகாவை அருகே அழைத்தவர் .”என்ன பாப்பு ..எப்படி இருக்கிற எவ்வளவு நாளாச்சு. கல்யாணத்தப்போ பார்த்தது. கிட்டத்தட்ட ஒரு வருஷம் முடியப்போகுதுல்ல.. எப்படி இருக்கிற “என்று கேட்க சட்டென இவளுடைய கண்கள் கலங்கி விட்டது.


ஒன்றும் புரியாமல் மலரை பார்த்தார்.” என்ன ஆச்சு.. ஏன் கண் கலங்கறா.. ஏதாவது பிரச்சனையா..

நம்ம விவேகாப் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணாச்சே.. எல்லாத்தையும் அனுசரிச்சு போறவ” என்று சொல்ல மலருக்குமே ஒரு மாதிரியாகிவிட்டது .


“நிறைய கதை இருக்குது தாரணி .இரு நான் உன்கிட்ட சொல்றேன் .அதுக்கு முன்னாடி இவளுக்கு பிறந்த நாளைக்காக டிரஸ் வாங்க வந்தேன் .

தாரணி நீ எப்படி இந்த பக்கம்..”


“நான் ஒரு கல்யாணத்துக்கு வந்தேன் .அப்படியே துணி எடுத்துட்டு போயிடலாம்ணு இந்த பக்கம் வந்தேன் .”


“சரி ஊயை விட்டுப் போன.. ஆனா எங்களை எல்லாம் ஞாபகம் இல்லல்ல. ஏன் நீ வீட்டுக்கு வரல” என உரிமையோடு சண்டையிட ஆரம்பிக்க ..”இவ்வளவு நேரம் வரைக்கும் என்னை விடலை.. சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்தேன் . இப்ப என்ன ஆயிடுச்சு .இப்பவே நான் உன் பின்னாடி வரேன்.. வீட்டுக்கு தான வரணும்..வந்துட்டா போச்சு”.. என்று கூற..அதன் பிறகு நேரம் கலகலப்பாகவே நகர்ந்தது .


விவேகாவுக்கு பிடித்த உடையை தாரணி பார்த்து வாங்கி கொடுத்தார்.


“ இந்த கலர் உனக்கு ரொம்ப பிடிக்கும் இல்ல .இது உனக்காக என்னோட கிப்ட் வாங்கிக்கோ.. மறுக்கக்கூடாது. என்ன பாப்பு இந்த கிப்ட் உனக்கு பிடிச்சிருக்கு தான” என்று கேட்க..


“ ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ஆன்ட்டி “என இருக அணைத்துக் கொண்டாள்.


“ பாப்பு உனக்கு நான் உதிரிப்பூ வாங்கிட்டு வந்து கட்டி தருவேனாம்.. அழகா தலையில வைப்பியாம் என்ன?” என்றவர் இவளுடைய தலை முடியை பார்த்து..” என்ன முன்ன விடவும் தலைமுடி கொஞ்சம் கொட்டினா போல தெரியுது. கல்யாணம் பண்ணி கொடுக்கவும் தலைமுடியை பற்றி யோசிக்கிறதே இல்லையா .அந்த அளவுக்கு பிசி ஆயிட்டியா என்ன?” . என்று கேட்க இப்போதும் அவளிடத்தில் அமைதி..


“நிறைய பேசணும் தாரணி வீட்டுக்கு வா “என அழைத்துக் கொண்டு சென்றார் .


அங்கே சென்ற பிறகு நடந்ததை ஒன்று விடாமல் சொல்ல‌‌ கேட்டவர் திகைத்தபடி அமர்ந்து விட்டார் .


“நம்ம விவேகாவுக்காக இதெல்லாம் நடந்தது .அவ எவ்வளவு நல்ல பொண்ணு. எப்படி இத்தனையையும் தாங்கினா!!” என்று கேட்டபடியே விவேகாவை பார்க்க.. அவளோ தாரணிக்கு காபியை கலக்கி எடுத்துக்கொண்டு வந்தாள்.


“ இந்தாங்க ஆன்ட்டி உங்களுக்கு என் கையால போடற காஃபி ரொம்ப பிடிக்கும்ல.. உங்களுக்காக ஸ்பெஷலா செஞ்சுட்டு வந்திருக்கிறேன் “என்று நீட்ட அருகே அமர வைத்தவர் இறுக அணைத்துக் கொண்டார்..


“இப்போ இவ என்ன செய்யறா “.என்று கேட்க ..”இப்போதைக்கு வீட்டில் தான் இருக்கிறேன். ஆனால் அப்பப்போ ரொம்ப அமைதியாகிடறா.. அவளை பார்க்கும் போது எனக்கு ரொம்ப பயமா இருக்குது “என்று சொல்ல ..


“நான் ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்டல்ல மலர் “.


“என்ன தாரணி சொல்லு..”


“ உனக்கு தான் என்ன பத்தி நல்லா தெரியுமே. என் பையன் மும்பையில் ஐடியில வேலை செய்றான். இங்க எல்லாம் வர்றதில்ல .நான் தான் அப்பப்போ போய் பார்த்துகிட்டு இருக்கிறேன்.


நான் இருக்கிற இடத்துக்கு இவளை அழைச்சுட்டு போட்டுமா. நான் பார்த்து வளர்ந்த பொண்ணு தானே பாப்பு .


அவளை நான் நல்லா பார்த்துக்குவேன். இடம் மாற்றமா இருக்கட்டுமே ..பத்து பதினைந்து நாளோ.. ஒரு மாசமோ என் கூட இருக்கட்டும் பிறகு உன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். என்ன சொல்ற” என்று கேட்க தயக்கத்தோடு தாரணியை பார்த்தார்.


“ என்ன அப்படி பார்க்கிற.. என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா .”


“அப்படி இல்ல நான் விவேகாவோட அப்பா கிட்ட கேக்கணும் இல்ல .”


“அண்ணா வரட்டும் .நானே கேட்கிறேன் .அதெல்லாம் ஓகே என்று தான் சொல்லுவாங்க..


இந்த பாப்புவை சின்ன வயசுல இருந்து தூக்கி வளர்த்திருக்கிறேன் .கொஞ்ச நாளைக்கு என் கூட இருக்கட்டுமே ..எனக்கும் யாரு இருக்குறா.. “


“சரி விவேகா அப்பா வரவுமே கேட்டுட்டு ஓகேன்னா அழைச்சிட்டு போ.. நான் என்ன வேண்டாம்னா சொல்ல போறேன் .அவளுக்கும் இடம் மாறி இருந்தா கொஞ்சம் நல்லா தான் இருக்கும்ணு தோணுது... இப்போ நீ என்ன பண்ற அங்கே” என்று கேட்க ..


“டியூஷன் எடுத்துக்கிட்டு இருக்கேன் .கிட்டத்தட்ட 50 பேர் கிட்ட வராங்க. எனக்கு நேரம் நல்லாவே போகுது .


எங்க ..இந்த பையன் தான் வந்து பார்க்க மாட்டேன்ணு வம்பு பண்ணிக்கிட்டு இருக்கறான்.”


“ஏன் ஆண்ட்டி ஊருக்கு வர்றது இல்ல .சிவாவும் நீங்களும் பெஸ்ட் ஃபிரன்ட்டுன்னு சொல்லுவீங்களே.. எப்படி உங்களை விட்டுட்டு அவ்வளவு தூரத்தில் போய் தனியா இருக்கறான். “


“அது நீயே வந்து கேட்டு தான் சொல்லேன்”என்றவர் மாலை வரையிலுமே அவர்களோடு தான் நேரத்தை செலவு செய்தார்.


மாலையில் விவேகாவின் தந்தை வரவுமே ..இவர் கேட்க அவர் சற்று யோசித்து விட்டு மகளை பார்த்தார். பிறகு..” சரி தாராளமா கூப்பிட்டு போங்க.. சின்ன வயசுல இருந்து தூக்கி வளர்த்தவங்க .உங்க கிட்ட விடமாட்டேன்னு என்னால சொல்ல முடியாது. அவளுக்கு இடம் மாறுதலா இருக்கும் .பத்து நாளோ.. இருபது நாளோ அவ ஆசைப்படி ..எவ்வளவு நாள் அங்கே தங்கணும்னு நினைக்கிறாளோ அது வரைக்கும் அங்க வச்சுக்கோங்க. இடம் மாறினால் இன்னமும் கொஞ்சம் அவகிட்ட மாற்றம் வரும்ணு நினைக்கிறேன்.


என் பொண்ணு நிறைய கஷ்டப்பட்டுட்டா இனி மேல அவ கஷ்டப்பட கூடாதுன்னு நினைக்கிறேன் “என்று சொல்ல..


“ இது பாருங்க இனி அவ என்னோட பொறுப்பு .இனி அவளை பத்தி நீங்க கவலைப்பட தேவையே இல்லை .


அவளோட நல்லது கெட்டது எல்லாத்தையுமே நான் பார்த்துக்கிறேன். நீங்க தைரியமா இருங்க “என்று சொல்லி விட்டு இவளை அழைத்துக் கொண்டு புறப்பட்டார் .


 

NNK-15

Moderator
10


“திவ்யா உன் வீட்டில் உன்னோட கல்யாண பேச்சு வார்த்தை எப்படி போய்கிட்டு இருக்குது” பிரவீன் அவளிடம் திரும்பி கேட்க ..அவனை முறைக்க ஆரம்பித்தாள்.


அருகில் சிவா அமர்ந்திருக்கவில்லை .ஏதோ வேலையாக வெளியே சென்று இருந்தான்.


“ ஏன் டா என்னோட கோபத்தை கிளர பார்க்கறியா.. உன்னோட வேலை என்னவோ அத மட்டும் பாரு .என்கிட்ட இது மாதிரி கேட்கிற வேலை வேண்டாம்”.


“ ஒரு விஷயம் சொல்லட்டுமா திவ்யா .அவன் ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக சொல்லிட்டு இருக்கிறான். திரும்பத் திரும்ப நீ அவனை டிஸ்டர்ப் பண்றதும் சரி கிடையாது .”


“எனக்கு புரியுது ஆனா நான் என்ன செய்யறது. அவனை தாண்டி என்னால யோசிக்க முடியல .”கண்கள் கலங்கியபடி கூற ..


“இத பாரு அவன் அவனோட முடிவிலிருந்து என்னைக்குமே மாறமாட்டான் . அவன் ஒரு வார்த்தை சொன்னால் சொன்னது தான் . இந்த விஷயம் உனக்கு தெரியும் தானே.. பிறகு ஏன் அவனை தொந்தரவு பண்ற.”


“இப்ப தான் அது மாதிரி எதுவுமே நான் அவன் கிட்ட பேசறது இல்ல தெரியுமா .


என் வீட்டுலேயும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.. எனக்கு இப்போ எப்படி இருக்குது தெரியுமா.


பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்குது .”


“இத பாரு இதெல்லாம் ஒண்ணுமே இல்ல திவ்யா. ஈஸியா நகர்ந்து போயிடலாம். பத்து நாள் அவனை பார்க்காமல் இருந்தால் எல்லாமே மறந்திடுல..


“எனக்கு என்னவோ அதெல்லாம் முடியும்னு தோணலை .பார்க்கலாம் என்ன தலையில எழுதி இருக்கோ அது தானே நடக்கும் .


கடைசியா ஒரே ஒரு தடவை நான் அவன்கிட்ட பேசணும்னு ஆசைப்படுறேன் .இது சம்மதமா பேசிட்டேன்னா அவ்வளவு தான் அதற்கு பிறகு நான் பேச மாட்டேன்”.


“ என்னை கேட்டால் நீ அவன் கிட்ட பேசுறதே வேஸ்ட் என்று தான் சொல்லுவேன் . எதுக்கும் உன்னோட ஆசைக்காக ஒரு தடவை கேட்டுப் பாரு. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்.. அதுக்கு பிறகு அவன் கிட்ட எப்பவுமே இது சம்பந்தமா பேசக்கூடாது புரிஞ்சுதா .”


“சரி பிரவீன் “.


“அப்படின்னா ஒன்னு செய். இன்னமும் கொஞ்ச நேரத்துல நம்ம மதியம் டின்னருக்காக வெளியே போகிறோம். தெரியும் தானே ..


அப்போ அவன் பக்கத்துல உக்காந்து நீ பேச ஆரம்பி.. அதுக்கு ஏத்த மாதிரி நான் இடம் செட் பண்ணி தரேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் பிரவீன்.


அதே நேரத்தில் சிவாவிற்கு அவனது தாயாரிடம் இருந்து அழைப்பு வந்தது .சற்று பதட்டமாக தான் ஃபோனை எடுத்தான்.


“என்னமா என்ன விஷயம்.. ரொம்ப நாளாச்சு வேலை நேரத்துல பெரும்பாலும் நீங்க என்னை கூப்பிட மாட்டீங்களே..”


“ ஆமாண்டா எப்பவுமே கூப்பிட மாட்டேன் .உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன் தான் ஆனால் இன்றைக்கு எனக்கு கொஞ்சம் மனசு சரியில்ல .


எனக்கு ஒரு உதவி தேவையா இருக்கு.. இந்த வாரத்துல வீட்டுக்கு வர்றியா?”


“ என்னம்மா என்ன ஆச்சு .. ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க..உங்களுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா. நீங்க ஏன் என்கிட்ட காலையில் சொல்லலை.. ஏற்கனவே சொல்லி இருந்தா நான் காலையிலேயே லீவ் கேட்டுட்டு வந்து இருப்பேன்ல ..இப்பவே புறப்படனுமா சொல்லுங்க நான் வேணும்னா உடனே கிளம்பி வரேன்.”


“டேய் டேய் பதறாதடா.. நான் நல்லா தான் இருக்கிறேன். எனக்கு எதுவும் இல்லை .நான் வழக்கம் போல தான் பசங்களுக்கு டியூஷன் எடுத்துட்டு இருக்கறேன் . எல்லாமே நல்லாவே போய்கிட்டு இருக்குது.”


“ அப்புறம் என்னம்மா.. சட்டுன்னு என்னை கூப்பிடறீங்க. நான் ஒரு நிமிஷம் பயந்துட்டேன் தெரியுமா .”


“வந்து பாப்புவை பார்த்தேன் டா..”


“பாப்பு”.


பாப்பு தான் …மறந்துட்டேன்னு என்கிட்ட சொல்லிடாத.. எனக்கு நல்லா தெரியும் .நீ எப்பவுமே அவளை மறக்க மாட்டேன்னு”.


“ அம்மா “.


“ஆமாண்டா பாப்புவை ஊருக்கு போயிருந்தப்போ பார்த்தேன். கல்யாணத்துக்கு போறதா சொல்லிட்டு போனேன்ல ..போன் வாரத்தில..நீ கூட கேட்டியே “.


“ஆமா சொல்லுங்க “.


“பாப்புவோட லைஃப்ல பெரிய பிரச்சனை டா .அவ நல்லா இல்ல.”


“ புரியல நீங்க சொல்றது”.


“ உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுல தெரியல .அவ லைஃப்ல ரொம்ப பெரிய பிரச்சனை .அவ பித்து பிடிச்ச மாதிரி இருக்கறா.. அவளை பார்க்கவும் அப்படியே விட்டுட்டு வர மனசு வரல .அவங்க அம்மா அப்பா கிட்ட சொல்லி நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திருக்கிறேன் .கொஞ்ச நாள் நார்மல் ஆகுற வரைக்கும் என் கூட இருக்கட்டும்னு.. நான் அவகிட்ட நிறைய தைரியம் சொல்றேன் ..தன்னம்பிக்கை தர்ற மாதிரி பேசுறேன் .

ஆனா எல்லாமே ஓரளவுக்கு தான்.. என்ன இருந்தாலும் கூடவே வளர்ந்த நீ வந்து பேசினா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்குன்னு தோணுது. ஏன்னா மோட்டிவேஷன் வர்ற மாதிரி பேசுறதில் எல்லாம் உன்னை அடிச்சுக்க ஆளே கிடையாது. எனக்கு நல்லா தெரியும். நான் நிறைய முறை உன்னை பார்த்திருக்கிறேன். சாகறதுக்கு துணிகிற ஆட்கள் கூட உன்கிட்ட ரெண்டு நிமிஷம் பேசினா போதும் எல்லாத்தையுமே தூக்கி போட்டுட்டு தைரியமா முன்னாடி வந்து நிப்பாங்க .அதனால தான் … நீ இந்த வாரம் வீட்டுக்கு வரணும். நீ வீட்டுக்கு வா.. மத்த விஷயத்தை நேரில் பேசுறேன். என்ன வருவதான சிவா..”


“ அம்மா நீங்க கூப்பிட்டு வர மாட்டேன்னு சொல்லிடுவேனா.. அவளுக்கு என்ன பிரச்சனையா வேணும்னாலும் இருக்கட்டும். மனசு உடைந்து இருக்கிறான்னு சொல்லும் போது அவளுக்கு பக்கபலமா ஆறுதலா இல்லாட்டி நான் எல்லாம் கூட வளர்ந்ததுக்கு அர்த்தமே கிடையாது .நிச்சயமா வரேன் “என்று சொல்லிவிட்டு யோசனையோடு தான் அவனுடைய இருக்கையில் வந்து அமர்ந்தது.


வந்தவுடனேயே பிரவீன் ஆரம்பித்து இருந்தான்.” என்னடா மீட்டிங்குன்னு சொல்லிதானே போன..


இப்ப என்ன முகம் இப்படி இருக்குது ‌இத்தனை குழப்பத்தோட வந்திருக்கற.. என்ன ஆச்சு ..திட்டிட்டாங்களா என்ன ?அதுக்கு வாய்ப்பில்லையே.. பெரும்பாலும் இந்த ஆபீஸ்ல உன்னால எந்த நஷ்டமும் வந்தது இல்ல .பெரும்பாலும் கரெக்டா வேலை செய்றவனாச்சே .. உன்னால பிராபிட் மட்டும் தானே பார்த்துகிட்டு இருக்காங்க. என்னடா *.


“அது இல்ல.. இது பிரச்சனை.. அம்மா போன் பண்ணி இருந்தாங்க .”


“என்னவா என்ன திடீர்னு.. அதுவும் இந்த நேரத்துல ..பெரும்பாலும் வேலை நேரத்தில் உன்னை அழைக்க மாட்டாங்களே*.


“ ஆமாண்டா கூப்பிட்டு இருந்தாங்க .பாப்புவுக்கு அங்கே ஏதோ பிரச்சனையாம்.. அம்மா அவளை கூடவே கூப்பிட்டுட்டு வந்திருக்காங்க .நீ வர முடியுமான்னு கேக்குறாங்க.”என்று சொல்லவும்.. ஒரே நேரத்தில் திவ்யா, பிரவீன் இருவருமே இவனின் முகத்தை பார்த்தனர்.


“என்ன பிரச்சனையாம்” என்று கேட்க ..”அதுதாண்டா எனக்கும் தெரியல. நீ வந்தா நல்லா இருக்கும்னு சொல்றாங்க. எனக்கு கொஞ்சம் பதட்டமா இருக்குது “என்று சொல்ல.. திவ்யா அமைதியாக இவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.


இத்தனை நாள் இல்லாமல் இப்போது தான் அவனை நன்றாக கவனித்தாள்.


பாப்புவை பற்றி சொல்லும் போது அவனது குரலில் இருந்த பதட்டம், நடுக்கம் அதுவே அவன் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறான் என்பது புரிந்தது .


நிச்சயமாக எத்தனை காலம் பேசினாலும் ..எத்தனை காலம் மனது மாறும் என காத்திருந்தாலும் அது நடக்காது என்பது இப்போது புரிந்தது .


அந்த ஒற்றை வரியில் அவன் வைத்திருக்கும் அன்பு அப்பட்டமாக தெரிய.. அமைதியாக எழுந்து நகர்ந்தாள்.


அவளுடைய சோகத் தோற்றம் பிரவீனுக்கு புரிய வேகமாக திவ்யாவை பின்தொடர்ந்தான்.


“திவ்யா” என்று பதட்டமாக கூப்பிட ..”எனக்கு தெளிவாக தெரிஞ்சிருச்சு பிரவீன். இதுக்கு பிறகு அவன் கிட்ட இது சம்பந்தமா பேச எனக்கு விருப்பம் இல்லை.


இதை இதோடவே முடிச்சுக்கலாம் .அம்மா அப்பா பார்க்கிற மாப்பிள்ளை யாரா இருந்தாலும் சரி கல்யாணம் பண்ணிட்டு போறதுன்னு முடிவு பண்ணிட்டேன் .”


“நீ அவசரப்படாத ஏதோ பிரச்சனைன்னு தான் சொல்லி இருக்கிறான். அதை தாண்டி எதுவும் இருக்காது”.


“ என்ன பிரச்சனை ..எதா இருந்தாலும் சரி. அந்த கண்ணுல தெரிஞ்ச அக்கறை பதட்டத்தை நீ பார்த்தியா..


அது நிச்சயமா என்னைக்குமே எனக்காக வராது .”


“அப்படி எல்லாம் கிடையாது நீ அவனோட பெஸ்ட் பிரண்டு..”


“ கரெக்ட் நான் பெஸ்ட் பிரண்ட் மட்டும் தான் .அத தாண்டி போக நினைக்கிறது தப்பு தான். எனக்கு என்னோட தப்பு புரிஞ்சிருச்சு. இனி நான் என்னை பாத்துக்குவேன் .


நீ அப்பவே சொன்னல்ல அது தான் கரெக்ட்.. கொஞ்ச நாள் அவனை பார்க்காம இருந்தாலோ இல்ல அவனை பத்தி யோசிக்காமல் இருந்தாலோ எல்லாத்தையுமே மறந்திடுவேன்.. ஈஸியா இந்த சிட்டுவேஷனுக்கு நான் அடாப்ட் ஆயிடுவேன். எனக்கு நம்பிக்கை இருக்குது.”


“ டென்ஷனாகாத.. கண்டதையும் யோசிக்காத புரியுதா”.


“ பிரவீன் நீ எந்த அளவுக்கு என் மேல அக்கறை வச்சிருக்கிறயோ.. அதே அளவுக்கு தான் சிவாவும் என் மேல வச்சிருக்கறான் .இது ஜஸ்ட் பிரண்ட்ஷிப் மட்டும் தான்.


அதை தாண்டி எதிர் பார்த்தது தப்பு தான் ..அடுத்த நிலைக்கு கொண்டு போக முயற்சி செஞ்சதும் என்னோட தப்பு தான். நிறைய தடவை பேசி இருக்கிறேன் .


அவனை டார்ச்சர் பண்ணி இருக்கிறேன் . ஒவ்வொரு தடவையும் அவனுக்கு எந்த அளவுக்கு இரிடேட்ங்கா இருக்குன்னு இப்ப யோசிச்சா.. எனக்கு என் மேல கோபமா வருது அசிங்கமா இருக்குது.


நான் எவ்வளவு கேவலமா நடந்து இருக்கறேன்ல “என்று சொன்னபடியே கண் கலங்க..


“ இத பாரு கேன்டீன்ல வந்து உட்கார்ந்து இப்படியெல்லாம் அழக்கூடாது. இரு ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரேன். கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் ஆகு” என்று வேகமாக அருகிலிருந்த ஜக்கில் இருந்து தண்ணீரை ஊற்றி அவளுக்கு எதிராக நகர்த்தினான் .


“முதல்ல தண்ணியை குடி.. எதுவும் ஆகல ..எதுவும் நடக்கல புரியுதா..”


“ம்.. “


“சரி” என்றவன்.. வேகமாக காபி இரண்டு டம்ளரில் கொண்டு வந்து இவள் புறமாக வைத்து விட்டு.. இவனும் அமர்ந்து குடிக்க ஆரம்பிக்க.. இவர்களை தேடி சிவாவும் வந்திருந்தான்.


“ என்ன ஆச்சு.. இது என்ன திடீர்னு ரெண்டு பேரும் இந்த பக்கம் வந்துட்டீங்க .


ஏன் திவ்யா மூஞ்சி ஒரு மாதிரி இருக்குது” என்று கேட்டபடியே வர ..*உனக்கு காபி ஏதாவது வேணுமா? எடுத்துட்டு வரணுமா” என்று பிரவீன் கேட்க..


“ என்ன டா ..எனக்கு கை இல்லையா. அதெல்லாம் வேணாம்..வேணும்னா நானே எடுத்துக்குவேன்..


நல்லா தானே இருந்தீங்க திடீர்னு ரெண்டு பேரும் நகர்ந்து வரவும்.. என்னவோன்னு நினைச்சுட்டு வந்தேன்” என்று இருவர் முகத்தையுமே மாறி மாறி பார்க்க..


“ என்னடா பார்க்குற..”


“ ஒன்னும் இல்ல”.


“ திவ்யா லைட்டா தலை வலிக்குதுன்னு சொல்லிட்டு இருந்தா.. சோ காபி குடிக்க போகணும்னு சொல்லிக்கிட்டு இருந்தா.. நீ வந்து பேசினதும் எழுந்து இங்க வந்துட்டா.. நானும் பின்னாடி வந்துட்டேன் ..வேற ஒன்னும் இல்ல “.


“அவ்ளோதானே ..வேற எதுவும் இல்லல்ல “என்ற படியே இவர்களுக்கு அருகே அமர.. திவ்யா சிவாவை பார்த்து..” எப்ப ஊருக்கு போகணும். நாளைக்கு கிளம்பிடுவியா “என்று கேட்டாள்.


“ என்ன நான் ஊருக்கு போறதில் நீ ரொம்ப ஆர்வமா இருக்குற போல இருக்குது.”


“ ஆமாம் நீ இத்தனை நாளா சொல்லிக்கிட்டு இருந்தல்ல.. பாப்பு பத்தி நிறைய சொல்லி இருக்கற.. பிரச்சனைங்கவும் உடனே முகமே மாறிடுச்சு. அதனாலதான் பாப்புவை பத்தி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கணும்னா நீ ஊருக்கு போயிட்டு வந்தா தானே தெரியும். அது தான் கேட்டேன்.”


“அதுதான் விஷயமா அப்படின்னா சரி .போயிட்டு வந்து என்ன நடந்ததுன்னு சொல்றேன் ..சரியா ..


பயப்படற மாதிரி எதுவும் இருக்காது .அம்மா எதோ குழப்பத்துல இருக்காங்க போல இருக்குது .அம்மா அப்படித்தான்..


பாப்புவுக்கு ஏதாவதுன்னா அவங்களால தாங்கவே முடியாது. என் மேல எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிறார்களோ அதே அளவுக்கு அவ மேலேயும் அவர்களுக்கு அன்பு உண்டு .


அதனால பதட்டத்துல போன் பேசிட்டாங்கன்னு நினைக்கிறேன். ஊருக்கு போனா தெரியும். பெரும்பாலும் எதுவுமே இருக்காதுன்னு நினைக்கிறேன்”.என்று சொல்லி விட்டு எழுந்து நகர.. சென்றவனேயே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

NNK-15

Moderator
11


நீண்ட நாட்களுக்குப் பிறகு பாப்புவை சந்திக்கப் போகிறான்.. அது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலுமே.. அவளை பார்க்க போகிறோம் என்கின்ற பதட்டம் அவனிடத்தில் நிறையவே இருந்தது.


சற்று பதட்டத்தோடு தான் அங்கே புறப்பட்டு சென்றது.


இரவு கிளம்பி இருக்க விடியற்காலை நேரத்தில் கதவைத் தட்டிக்கொண்டு நின்றிருந்தான் சிவா .


இவனது தாயார் தான் வந்து கதவை திறந்து விட்டது.


“ வாடா எங்கே வராம இருந்துருவேன்னு நினைச்சேன். நல்ல வேலை கரெக்ட்டா வந்துட்ட வா” என்று இவனை அழைத்துக் கொண்டு மாடி அறைக்கு அழைத்து சென்றார் .


“இப்போ படுத்து தூங்கு... காலையில பேசிக்கலாம்”.


“ பாப்பு *என்று சொல்ல ..”அவ இப்ப தூங்கிட்டு இருப்பா டா.. அவளை தொந்தரவு பண்ண வேண்டாம். நாளைக்கு நிதானமா காலையில பேசிக்கலாம்” என்று அழைத்துச் செல்ல.. சென்றவனுக்கு தூக்கம் கண்களுக்குள் வருவது போல் எல்லாம் இல்லை .


இங்குமங்குமாக புரண்டு படுத்தவன்.. ஒரு கட்டத்தில் தூங்கி இருந்தான் .


மறுபடியும் விழித்துப் பார்க்கும் போது காலை 11 மணியை தொட்டு இருந்தது.


“ இவ்வளவு நேரமா தூங்கிவிட்டோம்” என்று நினைத்தவன் ..வேகமாக எழுந்து குளித்து விட்டு பார்மல் உடையை அணிந்தபடி கீழே இறங்கி வந்தான்.


அதே நேரத்தில் கீழே வந்திருந்த மாணவிகளுக்கு டியூஷன் சொல்லிக் கொண்டிருந்தாள் விவேகா.


கிட்டத்தட்ட 30 சிறுவர், சிறுமியர்கள் சூழ்ந்து இருக்க.. நடு நாயகமாக ஃபுக்கை விரித்தபடி ஏதோ ஒன்றை சொல்லிக் கொண்டிருக்க.. அத்தனை குழந்தைகளுமே அவளை ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்.


அந்த ஒரு தோற்றம் இவனின் கண்களுக்குள் அப்படியே நிலை பெற்றது .


இரவு வந்த கொஞ்ச நேரத்திலேயே நடந்தது அனைத்தையுமே சுருக்கமாக கூறியிருந்தார். கேட்ட நேரத்திலிருந்து இவனது மனம் அந்த அளவிற்கு துடித்துக் கொண்டிருந்தது .எது போன்ற ஒரு சூழ்நிலையில் தெரியாமல் சிக்கி இருக்கிறாள் என்பதை நினைக்கும் போதே இவனுக்குள் பயம் ஊற்றெடுத்தது.


தினம் தினம் எத்தனையோ செய்திகளை கேட்டிருக்கிறானே.. ஏன் சமிபத்தில் கூட அருகில் நடந்ததாக சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறான் .


இவளுடைய உயிர்க்கு ஏதாவது ஒன்று ஆகியிருந்தால்… யோசிக்கும் போதே இவனையும் அறியாமல் பதட்டம், பயம் இவனுக்குள் வந்தது.


எல்லாவற்றையுமே புறம் தள்ளி விட்டு உதட்டில் சிறு புன்னகை தோன்ற ..படிக்கட்டில் இறங்க.. அசைவு தெரியவும் சட்டென நிமிர்ந்து பார்த்தாள் விவேகா .பார்த்த ஒரு நொடி அவளுடைய முகத்திலும் புன்னகை தொற்றிக் கொண்டது .சட்டென எழுந்து நிற்க.. அதே நேரத்தில் இவனுமே படிக்கட்டில் இருந்து இறங்கி வந்தவன்..” என்ன இது எழுந்திருக்கற.. வேண்டாம் உக்காரு ..என்ன சொல்லிக் கொடுத்துட்டு இருந்தியோ அதை சொல்லிக் கொடு.. என்னை பார்த்து வொரி பண்ணிக்க வேண்டாம் “என்று சொல்ல ..


“இல்ல சின்ன சின்ன டவுட் தான் கேட்டுக்கிட்டு இருந்தாங்க. ஆல்ரெடி சொல்லிட்டேன் .எப்ப வந்தீங்க” என கேட்டபடியே நகர்ந்து வர ..


“எனது புதுசா இருக்கிறது.. நீ மரியாதையா எல்லாம் பேசுவியா என்ன ? அதெல்லாம் வேண்டாம்..எப்பவும் போலவே பேசலாம்.”


“வந்து சிவா” என்று இழுத்தவளை பார்த்து..” சொன்னது புரியலையா எப்பவும் போல பேசு என்று சொன்னேன். திடீர்னு மரியாதை கொடுத்தால் யாரோ கிட்ட பேசுற மாதிரி தோணுது”.


“ சரி சரி கூப்பிடுறேன் .ஆமா நீ எப்ப வந்த ..ரொம்ப நாளா வீட்டு பக்கமே வரலையா ஆண்டி ரொம்பவே வருத்தப்பட்டு சொல்லிக்கிட்டு இருந்தாங்க.


ஆமா நீயும் அம்மாவும் தான் ரொம்ப க்ளோஸ்டாச்சே.. எப்பவுமே ஃப்ரெண்டுங்கன்னு சொல்லி பேசுவீங்க .

எப்படி வராமல் இருந்த..”


“ நான் வராட்டி என்ன ?அது தான் அம்மா வாரா வாரம் என்னை பார்க்க வருவாங்களே.. அப்புறம் என்ன?”


“ சும்மா இந்த கதையெல்லாம் சொல்லாதே.. தப்பு தானே நீ செஞ்சது..


வயசானவங்களை இங்கேயும் அங்கேயுமா அலைய விடுவ.. நீ வந்து பார்த்தா ஆகாதா ..நீ பண்ணது தப்பு தான் சிவா.. அதை ஒத்துக்கோ. சும்மா சமாதானம் எல்லாம் சொல்லக்கூடாது.”


“ உண்மைதான் நீ சொன்ன பிறகுதான் புரியுது உண்மையிலேயே என் அம்மாவுக்கு வயசு ஆயிடுச்சு தான் “என்று சொல்லும் போதே கரெக்டாக அங்கே வந்தவர்.. “யாருக்கு டா வயசு ஆச்சுது? எனக்கெல்லாம் ஒன்னும் வயசாகல.. இந்த மாதிரி எல்லாம் பேசுற வேலை வெச்சுகாதே.. வயசு ஆச்சுன்னு ஏதாவது சொன்ன.. எதையாவது எடுத்து அடிச்சிடுவேன்”.


“ பார்த்தியா வயசு ஆயிடுச்சுன்னு சொன்னா இப்படித்தான் கோவம் வரும். அதனால தான் வயசாகலைல்ல வந்து பாருங்கன்னு சொன்னேன்.. தப்பா..”


“ சும்மா சமாதானம் எல்லாம் சொல்லக்கூடாது சிவா .நீ பண்ணினது தப்பு தான் . என்ன சமாதானம் சொன்னாலும் நான் ஏத்துக்க மாட்டேன்.. அவங்க இங்க இருந்து அவ்வளவு தூரம் வரணும்ல ..வந்துட்டு போறது என்ன சும்மாவா..


சும்மா உக்காந்துட்டு போயிட்டு வந்தா கூட ..கை கால் வலி, உடம்பு வலி.. அத்தனை வரும் .பத்தாததுக்கு சரியா சாப்பிட மாட்டாங்க . ரெஸ்ட் ரூம் போக முடியாது .எத்தனை பிரச்சனை இருக்குது தெரியுமா . டிராவல்னா சும்மான்னு

நினைக்கிறியா.. “.


“ பாப்பு ஆளை விடு .இனி அவங்கள ஒரு தடவை கூட அங்க வர வைக்க மாட்டேன். வாரா வாரம் நானே வரேன் சரியா “என்று சொல்ல சட்டென சிரித்து விட்டாள்.


“ அது என்ன நான் சொல்லி நீ உடனே ஓகே சொல்ற.. ஆச்சர்யம் தான் போ..”


“சரி அது போகட்டும் நீ எப்படி இருக்கிற ..முன்ன விடவோ ரொம்ப ஒல்லிமான மாதிரி தெரியற..அந்த பப்ளிமாஸ் முகம் எதுவுமே உன் கிட்ட இல்லை .”


“இப்ப எல்லாம் இப்படி ஒல்லியா இருந்தாதான் ஆண்களுக்கு பெண்களை பிடிக்குது தெரியுமா .”


“யார் சொன்னாங்க எனக்கெல்லாம் அப்படி இல்லப்பா.. எனக்கு எப்பவுமே பபிலியா இருக்குற பொண்ணுங்கள தான் பிடிக்கும்”.


“ அப்படியா ..அப்படி எத்தனை பொண்ணுங்களை பப்பிலியா பிரண்ட்ஷிப் பிடித்து வைத்திருக்கிற.. சொன்னால் தெரிஞ்சுக்கறேன் .”


“ஏய்.. விட்டால் போதுமே ..அம்மா கிட்ட மாட்டி விட்டுடுவ போல இருக்குது.. அப்படியெல்லாம் யாரையும் எனக்கு தெரியாது. எனக்கு பப்லியா தெரிஞ்ச ஒரே பொண்ணு நீ தான் .அதுவும் நீ இப்போ அப்படியெல்லாம் இல்லை .இப்ப நல்லாவே ஒல்லி ஆயிட்ட.. அதனால நீ அந்த கேட்டகிரியில் கூட வரமாட்ட”. இயல்பாக பேச ஆரம்பிக்க.. அவளுமே பதிலுக்கு பதில் பேச ஆரம்பித்திருந்தாள்.


இருவரும் பேசுவதை பார்த்தவர் அமைதியாக நகர்ந்திருந்தார்.


“ சரிடா பேசிக்கிட்டே இருக்காம அப்படியே வந்தேன்னா காலை டிபன் சாப்பிடுவியாம். நேரம் என்ன ஆகுது பார்த்தியா ..11 மணி ஆச்சு .”.


“இன்னும் கொஞ்ச நேரம் தானே வெயிட் பண்றேன். மதியம் சேர்த்து சாப்பிட்டுகிறேன்.”


“ ஆமாண்டா இப்படித்தான் சொல்லுவேண்ணு எனக்கு தெரியும் .ஆனா நான் எல்லாம் விடமாட்டேன். இப்ப நீ சாப்பிடு மதிய சாப்பாட்டை வேணும்னா மூணு மணிக்கு சாப்பிட்டுக்கோ.. என்னமா நான் சொல்றது கரெக்ட் தானே.. “


“ஆமா சிவா சாப்பிட்டுட்டு வந்திடு ..அதுக்கு பிறகு பேசலாம். நான் இங்கதான் இருக்கிறேன் . ஆமாம் சிவா நீ மறுபடியும் எப்ப ஆபீஸ்க்கு போகணும் .”


“காலையில தான் வந்திருக்கிறேன். இன்னைக்கு சனிக்கிழமை நாளை நைட் கிளம்புவேன்..


ஆமா ரொம்ப அழகா டியூசன் சொல்லி தர்றதா அம்மா சொல்லிக்கிட்டு இருந்தாங்க .


நீ வந்ததுக்கப்புறம் அவங்களுக்கு வேலையே இல்லையாமாம் தெரியுமா.. “


“ஆன்ட்டி அப்படியா சொன்னீங்க..”


“ஐயோ நான் எதுவும் சொல்லல அவன் சும்மா கலாச்சிக்கிட்டு இருக்களான். நான் சொல்லுவேனா.. உனக்கு பசங்க கூட பேசறது ,சிரிக்கிறது பிடிக்குது . இப்படியே சிரிச்சிகிட்டு இருந்தா போதும்..


சரி இன்னைக்கு சாயங்காலம் பக்கத்துல இருக்கிற கோயிலுக்கு போலாம்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன்.

ரெண்டு பேரும் வரீங்க தானே..”


“அம்மா என்னை கூப்பிடாத.. நான் வரமாட்டேன் .”


‘சும்மா இதையே சொல்லாதடா நான் இன்னைக்கு கோயிலுக்கு போக போறேன் ரெண்டு பேருமே வரணும். என்ன பாப்பு நீ வருவ தானே..”


“ நான் வரேன் ஆன்ட்டி..”


“ அப்புறம் என்னடா நீயும் என் கூட வர்ற..”


“ அம்மா ப்ளீஸ்மா எனக்கு சாமி மேல எல்லாம் நம்பிக்கை இல்லை .”


“ஆமாண்டா நீ ரொம்ப வருஷமா இதை தான் சொல்லிக்கிட்டு இருக்கற.. ஆனா எனக்கு நிறையவே நம்பிக்கை இருக்குது .என் கூட கட்டாயமா வந்தாகணும்.


இப்ப முதல்ல வந்த சாப்பிடு” என்று சொல்லிவிட்டு நகர.. தாயார் பின்னால் சென்றான் .


“சரி நீ சாப்பிட்டுட்டு வா .நான் பசங்க கூட உட்கார்ந்து இருக்கிறேன் .”


“ நீ சாப்பிட்டியா இல்லையா..” என்று திரும்ப கேட்க.. *அதெல்லாம் காலையிலேயே கொட்டியாச்சு .ஆன்ட்டி எட்டரை மணிக்கு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் .அவங்க சாப்பிடும் போது என்னையும் சாப்பிட வச்சுட்டாங்க .இனி மத்தியானம் தான்..”


“ ஏன் இப்ப நீ சாப்பிட மாட்டியா”.


“ ஐயோ எனக்கு இருக்கிறது ஒரே ஒரு வயிறு.. அதுக்கு நிறையவே சாப்பிட்டாச்சு. பத்தாததுக்கு பத்து மணிக்கு காபி கொடுத்துட்டாங்க.. 11 மணிக்கு ஜூஸும் குடிச்சாச்சு. இதுக்கு மேல என் வயித்துல இடம் இல்ல .ஆளை விடு. நீ போய் சாப்பிடு.. அதுக்கு பிறகு பேசலாம்..”சொல்லிவிட்டு நகர்ந்து இருந்தாள் விவேகா.


சாப்பிட்டு முடித்து அரை மணி நேரம் கழித்து வரும் போது குழந்தைகள் அனைவருமே கிளம்பி இருந்தனர் ‌


இவள் மட்டும் தனியாக ஹாலில் அமர்ந்து இருந்தாள்.


“ அப்புறம் சொல்லு. பாப்போம்.. நீ எப்படி இருக்கிற.. எப்படி லைஃப் போய்க்கிட்டு இருக்குது.”


“ எப்படி போயிட்டு இருக்குது. அது ஒரு மாதிரி போகுது .ஏன் இப்ப அத பத்தி கேட்கிற”.


“இங்க வந்ததுமே அம்மா ஓரளவுக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லிட்டாங்க .அதனால நான் அதை பத்தி எல்லாம் கேட்கல சரியா..


இப்போ எங்க ஊரு உனக்கு புடிச்சிருக்குதா ..வந்து ஒரு வாரம் ஆகப்போகுதாம்.

அம்மா சொன்னாங்க இந்த ஒரு வாரத்துல எங்கெல்லாம் போன..”


“எங்க போறது எங்கேயுமே போகலை.. ஒரே ஒரு தடவை பக்கத்துல இருக்குற கோயிலுக்கு போனேன் .அப்புறமா இங்கதான் இருக்கிறேன். ஆனா பசங்க காலையில சாயங்காலம் ரெண்டு நேரமும் வராங்க .


அவங்கள பார்க்கும் போது ரொம்ப புத்துணர்ச்சியா இருக்குது .


தெரியாததெல்லாம் அம்மா மாதிரியே பக்கத்துல உக்காந்து ஒரு சிலருக்கு சொல்லித்தரேன்.

இது ரொம்ப புடிச்சிருக்கு..”


“ அப்படின்னா ஒன்னு செய்யேன்..நீ ஏன் தனியா டியூஷன் சென்டர் மாதிரி ஆரம்பிக்கக்கூடாது .”


“என்ன சிவா எனக்கு உதவி செய்றதா நினைச்சுட்டு அம்மாவோட வேலையில மண்ணை அள்ளி போட பார்க்கறியா.. இந்த வேலையெல்லாம் இங்க ஆகாது‌ எனக்கு அதெல்லாம் இஷ்டம் இல்ல .”


“அப்புறமா என்னதான் செய்யப் போறதா இருக்கற.. எங்கயாவது வேலைக்கு போகலாம்ணு பிளான் இருக்குதா..”


“ ஏன் வேலைக்கு போகலாம்னு சொன்னா எனக்கு வேலை வாங்கி தர போறியா.. “


“ஏன் நீ வேலைக்கு போறேன்னு சொல்லு ..உனக்கு ஏத்த ஒரு வேலையை நான் ரெடி பண்ணி தரேன் .இது ஒன்னும் பெரிய பிரச்சனை எல்லாம் இல்ல.”


“அடடா சொன்னாங்க வேலை இல்லனா சிவா கிட்ட சொன்னா உடனே வேலை வாங்கி தந்திருவான்னு.. நான் தான் இத்தனை நாள் மிஸ் பண்ணிட்டேன் போல இருக்கு.” என்று சொல்ல ..இருவருமே தங்களை மறந்து சிரிக்க ஆரம்பித்தனர் .


எதற்காகவோ வெளியே வந்தவருக்கு இருவரின் சிரித்த முகத்தை பார்க்கவும் அத்தனை நிறைவாக இருந்தது.


இரண்டு நாட்களுமே நேரம் ரெக்கை கட்டி பறந்தது..வலுக்கட்டாயமாக கோவிலுக்கு மூவருமாக புறப்பட்டு சென்றிருந்தனர் .


பெரிய கோவில் ஒவ்வொரு இடமாக சுற்றி விட்டு வர.. அமைதியாக விவேகா வந்து கொண்டிருந்தாள்.


“ என்ன பாப்பு ஏதாவது வேண்டுதல் இருந்தால் வேண்டிக்கோ ..இந்த கோயில் ரொம்ப சக்தி வாய்ந்த கோவிலாம்.. அம்மா அடிக்கடி சொல்வாங்க.”


“ ஏன் உனக்கெல்லாம் எந்த வேண்டுதலும் இல்லையா” என்று திருப்பி சிவாவை கேட்க..


“ எனக்கு சாமி மேல நம்பிக்கை இல்லைன்னு சொல்றேன். அப்புறம் நான் என்ன பெருசா வேண்டுதல் வைக்க போறேன்.


பாப்பு நீ வந்த பிறகு ஒரு விஷயத்தை கவனிச்சியா.. அம்மா ரொம்ப ஹேப்பியா இருக்கிறாங்க .


அம்மாவோட முகமே ரொம்ப க்ளோவான மாதிரி இருக்குது…என்ன சீக்ரெட்டா இருக்கும் .ஒருவேளை வயசு பொண்ணு கூட இருந்தா.. இந்த அம்மாமார்களும் தனக்கு வயசானதை மறந்து.. வயசு குறைஞ்சதா நெனச்சு பேச ஆரம்பிச்சிடுறாங்களோ.. அதனால வந்த க்ளோவா இருக்குமோ “என்று தாயாரிடம் வம்பு இழுக்க..


” இத பாருடா இந்த பேச்சு எல்லாம் இங்கே ஆகாது .என்னவோ பெரிய இவனாட்டம் அங்கே போய் உக்காந்துட்டு பார்க்க வர மாட்டேன்னு வாய் பேசினேன்ல.”


“அம்மா நான் எப்ப சொன்னேன் வரமாட்டேன்னு.. தோணும் போது வருவேன்.. ஆனா நீங்க தான் இங்க வர்றதுக்கு சந்தர்ப்பமே தராம ரெண்டு வாரத்துக்கு ஒருக்கா அட்டடன்ஸ் போட்டு என்னை வர விடாமல் பண்ணுவீங்க. இப்ப என்னடான்னா.. என் மேலயே பழியைப் போடறீங்க .


இப்ப நீங்க கூப்பிடவும் நான் ஓடி வரலையா..”


“ அப்படின்னா … ஆன்ட்டி உங்களை இங்க வரச் சொன்னாங்களா? “என கேட்க..


“ ஆமா இவங்க தான்.. பாப்பு வந்திருக்கிறா.. வந்து பாரு அப்படின்னு சொன்னாங்க. சரி நானும் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு .. இந்த பொண்ண பார்த்துட்டு போகலாமேண்ணு சொல்லி வந்தேன்.” இயல்பான பேச்சோடு அன்றைய நாள் முடிந்து இருந்தது.


அடுத்த நாளே புறப்பட்டு இருந்தான்.


இங்கே ஆபீஸ் வரவுமே இவனது முகம் பார்த்தே புரிந்து கொண்டாள் நந்தினி..


எதைப் பற்றியும் விசாரிக்கவில்லை.. ஆனால் புரிந்து கொண்டாள்.


பிரவீன், நந்தினி இருவருமே நண்பர்கள் எனும் நிலையில் எதையும் மறைக்காமல் சொல்ல விரக்தி புன்னகை மட்டுமே இவளுடைய முகத்தில் வந்தது.


அடுத்த வாரம் இவனுடைய வீட்டிற்கு செல்லவில்லை. அதற்கு அடுத்த வாரம் நேரடியாக தாயாரை பார்க்க சென்றிருந்தான்.


இப்போது நார்மல் நிலைக்கு மாறி இருந்தால் விவேகா.


தினமும் குழந்தைகளோடு பேசுவது ..இவனுடைய தாயாரிடம் கொஞ்சுவது என நாட்கள் அழகாக நகர்ந்தது.


இடையே ஒரு முறை விவேகாவின் தாய் ,தந்தை இருவருமே வந்து பார்த்துவிட்டு சென்றனர் .


“இன்னும் கொஞ்ச நாள் இருக்கட்டுமே.. கைக்குள்ள ஒரு பொண்ணு இருந்தா நல்லாத்தான் இருக்குது .


அவன் அங்கே வேலை செய்றயறான்.. நான் தனியா தானே இருக்கறேன்” என்று சொல்ல.. மறுக்க எல்லாம் தோணவில்லை .


மகள் நல்ல விதமாக மாறி வந்தால் போதும் எனும் நிலையில் இவரும் சரி என தலையாட்டி விட்டு சென்று இருந்தனர்.


இவன் சென்ற அடுத்த இரண்டு நாட்களுமே கொண்டாட்டமாகவே நகர்ந்தது.


ஏற்கனவே சிவாவும் விவேகாவும் சிறுவயதிலிருந்தே சேர்ந்து வளர்ந்தவர்கள் என்கின்ற காரணத்தினால்.. தடை எதுவும் இல்லை .


மடை திறந்த வெள்ளம் போல இயல்பாக நிறையவே பேசி சிரிக்க முடிந்தது.


இங்கே ஆபீஸில் நடக்கின்ற சின்ன சின்ன விஷயங்களை சிரிப்பு வருவது போல சொல்ல.. அவளும் கூட சிறு குழந்தைகள் சொல்லும், செய்யும் சில சேட்டைகளை சொல்லி சிரிக்க முடிந்தது .


இந்த சிரிப்பை கவனித்தவர் மனதில் ஒரு சிறு ஆசை தோன்றியது.


விவேகாவின் விவகாரத்திற்கு பிறகு தன்னுடைய மகனுக்காக மறுபடியும் விவேகாவை பெண் கேட்டால் என்ன என்று..


ஏற்கனவே ஆசை கொண்ட மனது.. முன்னமே சொல்லியும் இருக்கிறார். தன் வீட்டிற்கு மருமகளாக வர வேண்டிய பெண் என்று..


இப்போது இந்த சூழ்நிலையிலும் மனது என்னவோ மறுபடியும் அதையே ஆசைப்பட்டது.


நிச்சயமாக விவாகரத்துற்கு அப்ளை செய்திருப்பது தெரியும். நிச்சயமாக கிடைத்தும் விடும்.


அப்படி எனும் போது தன்னுடைய மகனுக்கு மறுபடியும் ஏன் விவேகாவை கேட்டால் என்ன ?என்று ஒரு மனது உள்ளிருந்து குரல் எழுப்ப..


அதே ஆசை தன்னுடைய மகனுக்கும் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவர் அமைதியாக மறுபடியும் நகர்ந்து இருந்தார்.


நாட்கள் வேகமாக நகர ஆரம்பித்தது.

 

NNK-15

Moderator
12

அடுத்த ஆறு மாதம் தாண்டி இருந்தது .

விவேகாவின் வாழ்க்கையில் நிறையவே மாறுதல் இப்போது வந்திருந்தது .

இன்னமுமே சிவாவின் தாயாரோடு தான் இருந்தது.

இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தான் சிவா .

ஆனால் இப்போது விவேகா.. சிவாவை சில நேரம் தேட ஆரம்பித்திருந்தாள்.

அவன் வந்தான் என்றால் வீடு கலகலப்பாக இருக்கும் .நேரம் வேகமாக நகரும் .அதற்காகவே அவான் வரும் நாளுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

சிவாவும் அவளை அப்படியே விட்டிருக்கவில்லை .

முதலில் டியூசன் சென்டர் ஆரம்பிக்கலாம் என்று ஆரம்பிக்க.. அதற்கு பிடிவாதமாக மறுத்து விட்டாள். விவேகா.

“ அது ஆன்ட்டியோட வேலை அவங்க இத்தனை வருஷமா இருந்த வேலையை தான் செய்றாங்க .

திரும்ப எனக்காகன்னு ஆரம்பிச்சு அவங்க ஸ்டூடண்ட் யாராவது என்கிட்ட வந்தா ..அது இன்னமும் சங்கடம் .

அது மாதிரியான ஒரு சூழ்நிலைக்கு எப்பவுமே நான் வரவிடமாட்டேன். எனக்கு அதுல இஷ்டம் இல்லை .

நான் வேணும்னா எனக்கு நேரம் கிடைக்கும் போது ஆன்ட்டி கிட்ட படிக்க வர்ற ஸ்டூடண்டுக்கு என்னால என்ன முடியுமோ அதை சொல்லித்தரேன்.

அது பிரச்சனை இல்ல ஆனா இதுக்கு சம்மதிக்க மாட்டேன்” என்று பிடிவாதமாக கூறி இருக்க..

அதே யோசனையோடு தான் அன்றைக்கு அவன் மும்பைக்கு ரயில் ஏறியது.

அடுத்த முறை வரும் போது ஒரு பேக் நிறைய துணிகளை அள்ளிக்கொண்டு வந்திருந்தான்.

அனைத்துமே புடவைகள்.. டிசைனர் புடவையிலிருந்து பட்டு சேலை வரைக்கும் வாங்கி வந்து வீட்டிற்குள் கடை பரப்ப ஆரம்பித்திருந்தான்.

அம்மாவையும் இவளையும் அழைக்க.. இருவருமே வந்து “என்னடா என்ன இது ..எதுக்காக இத்தனை துணியை வாங்கிட்டு வந்திருக்கிற..
கடை ஏதாவது போட போறியா “என்று கேட்க ..அவனும் சிரித்தபடி ..

“இன்றைக்கு எல்லாம் வீட்டில் இருந்து வேலை செய்யணும்னா.. நிறைய வாய்ப்புகள் இருக்கு .

அந்த வாய்ப்புகளை நம்ம தேடி போனோம்னா போதும் .நம்ம விளம்பரப்படுத்தக் ஆயிரம் வழி இருக்கு.

யூட்யூப் ,இன்ஸ்டாகிராம் ,எப்ஃபி..தனி பேஜ்ணு நிறையவே இருக்கு .

அதையும் தாண்டினா புதுசா வெப்சைட் வேணும்னா கூட நம்ம கிரியேட் பண்ணிக்கலாம்.”

“ சரிதான்.. எல்லாம் சரிடா.. இதையெல்லாம் ஏன் இங்க வந்து சொல்லிக்கிட்டு இருக்கற ..”

“அம்மா இருங்கம்மா சொல்றேன் “.என்றவன் திரும்பி விவேகாவை பார்த்து..” வீட்டில் இருந்தே சாரி பிசினஸ் பண்றியா.. ஆன்லைன்ல இதோட ரேட்டை சொல்லி இதோட ப்ராடக்ட் நேம் சொல்லி உனக்கு லாபமான ரேட்டுக்கு நீ விக்கணும் .

ஒவ்வொரு சாரீயோட ரேட் பிளஸ் ஷிப்பிங் இத சொல்லி கரெக்ட்டா விற்க உன்னால முடியுமா..

எதுவுமே டக்குனு ரீச் ஆகாது கொஞ்சம் டைம் எடுக்கும் .ஆனா ரீச் ஆகும் போது உனக்கு நல்ல ஒரு இன்கம்மிங் ரெகுலராவே கிடைக்கும் .

யாருக்கு தெரியும் பியூச்சர்ல நீ பெரிய கடை கூட ஓபன் பண்ண வாய்ப்பு இருக்கு..”

“யாரு நானா “சற்று பதட்டமாக கேட்க ..

“இதுல பதறுவதற்கு என்ன இருக்குது. நிறைய எல்லாம் எடுத்துட்டு வரல .ஜஸ்ட் 25 சாரி தான். முதன் முதலில் எடுத்துட்டு வந்து இருக்கிறேன்.

அப்புறமா முக்கியமான விஷயம் என்னன்னா.. சிலருக்கெல்லாம் அந்த விளம்பரம் படுத்தற அந்த பாணி ரொம்ப அழகா வரும்.

அது இயற்கையா உன் கிட்ட இருக்குது. அப்புறமா நீ நல்ல திறமையானவ.. ரொம்ப அழகா பேசுவ ..அதனால தான் .உனக்கு இந்த வேலை சூட் ஆகும்னு எனக்கு தோணுச்சு.

நிச்சயமா நல்லா ரீச் ஆகும் .என்ன சொல்ற “என்று கேட்க ..அவளோ இவனின் தாயாரை பார்த்தாள்.

“ என்ன அது தான் சொல்லிட்டான்ல ..உன்னால முடியும் பாப்பு.. தைரியமா நடத்து.. நாம ஒன்றும் குறைந்து போனவங்க கிடையாது .

உனக்கு நானும் தான் பக்கத்துல இருக்கறேன்ல.. ஒன்னும் கவலைப்படாதே” என்று தேறுதல் சொல்ல..” சரி” என்று தைரியமாகவே ஆரம்பித்து இருந்தாள் .

புதியதாக இன்ஸ்டா பேஜ் துவங்கி அதில் விற்பனைக்காக விலையை சொல்லி அழகாக மாடல் போல பேச ஆரம்பிக்க.. ஓரளவிற்கு முதல் மாதத்திலேயே 10 சேலைகளை விற்பனை செய்திருந்தாள்.

அது அவளுக்கு நிறைய நம்பிக்கையை தந்திருக்க.. அந்த பணத்தை அப்படியே சிவா வரவும் அவனிடம் நீட்டி இருந்தாள்.

“ நீ கொடுத்ததில் பத்து சேலை வித்திருக்கிறது .இன்னமும் 5 ஆர்டர் இன்னைக்கு கிடைச்சிருக்கு .ரொம்ப வேகமாக காலியாகும் போல இருக்குது.

எனக்கு மறுபடியும் சாரீஸ் வேணும் “என்று சொல்ல.. சிரித்தபடியே ..”நான்தான் சொன்னேன்ல ..உன்னால முடியும். நீ ரொம்ப திறமையானவ…நீ ஜெயிக்கப் பிறந்தவ.. தைரியமா மூவ் பண்ணு ..உன்னோட வீட்டுல அம்மா, அப்பா கிட்டையும் சொல்லு .அவங்களும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க” என்று நகர்ந்தான்.

விவாகரத்து அப்ளை செய்து கிட்டத்தட்ட 9 மாதம் தாண்டி இருந்தது .

இறுதியாக தீர்ப்புக்கு வர சொல்லி இருக்க ..இவளையும் அறியாமல் பயம், பதட்டம் இவளிடம் நிறையவே இருந்தது .
இத்தனை நாட்களாக சிவாவிடம் பெரியதாக உதவி என்று கேட்டது கிடையாது.

எல்லாமே அவனே பார்த்து பார்த்து செய்வது தான் .இங்கே வந்த பிறகு நிறையவே மாறி இருந்தாள்.

பழைய நிகழ்வுகளை முழுவதுமாக மறக்க பழகியிருந்தாள்.

தாய் ,தந்தை வந்தாலுமே அவர்களுடன் இயல்பாக பேசி சிரிக்க முடிந்தது .

இப்போது இடையே இரண்டு முறை இவளது வீட்டிற்கு சென்று அங்கேயும் சில நாட்கள் தங்கி விட்டு வந்திருந்தாள்.

நாட்கள் இவளை பொருத்த வரைக்கும் அழகாகவே நகர்ந்தது .ஆனால் அந்த பழைய நிகழ்விலிருந்து முழுவதுமாக வெளியே வந்து விட்டாளா என்று கேட்டால் அது சந்தேகம் என்று தான் சொல்ல வேண்டும் .

ஏனென்றால் திருமணம் அதை தொடர்ந்து நடந்தது. இது எல்லாவற்றையுமே மனதிற்குள் வந்தாலே இவளையும் அறியாமல் கை கால்கள் நடுக்கம் எடுக்க ஆரம்பித்திருந்தது .

தீர்ப்பு என்று சொல்லவும் சிவாவிற்கு தான் முதலில் அழைத்தது .

“சிவா வந்து.. எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா..”

“ உதவியா என்ன இது புதுசா எல்லாம் கேக்குற .ஏதாவது துணி வாங்கிட்டு வரணுமா என்ன ?”என்று கேட்க ..

“இல்லை அதெல்லாம் இல்லை அதுதான் நீங்க ஆன்லைன்லயே வீட்டுக்கு பார்சல் வர்ற மாதிரி ஏற்பாடு செஞ்சுட்டீங்களே ..

டிசைன் பார்த்து செலக்ட் பண்றது எங்க வேலை..அதெல்லாம் பிரச்சனை இல்லை .ஆன்ட்டியும் நானுமே பாத்துக்குறோம் .

அது நல்லா தான் போய்கிட்டு இருக்குது .பிசினஸ்ல கூட பெருசா எந்த பிரச்சனையும் இதுவரைக்கும் வந்ததில்லை”.

“ அப்புறம் என்ன !என்ன உதவி.. ஏன் என்கிட்ட தயங்குற “.

“இல்ல உங்களுக்கு ஒர்க் இருக்கும் இல்லையா.. இடையில் கூப்பிடுறது சரி கிடையாது தானே “.

“அவசியமா இருந்தா எப்ப வேணும்னாலும் லீவு எடுத்துக்கலாம் .அது பிரச்சனை இல்ல .என்னன்னு சொல்லு.”

“ ரெண்டு நாளில் தீர்ப்புன்ணு சொல்லி இருக்கிறார்கள். எனக்கு தனியா கோர்ட்டுக்கு போக பயமா இருக்குது .

அம்மா ,அப்பா எப்படியும் வருவாங்க.. நீயும் வந்தால் கொஞ்சம் தைரியமா இருக்கும்ணு தோணுது. அதனால வர முடியுமா” என்று கேட்க .. ‌

“இவ்வளவு தானா.. நானே என்னவோன்னு பயந்துட்டேன் .அதெல்லாம் தாராளமா வரலாம் .என்னைக்கு நாளைக்கு அடுத்த நாள் இல்லையா..

நாளைக்கு நான் உன் முன்னாடி இருப்பேன் போதுமா. ரெண்டு பேருமே போறோம்.. பயந்துக்காத…ஏன் இன்னும் பதட்டமாக இருக்கிற.. ரிலாக்ஸ் ஆகு.”

“நீ வருவதான அத மட்டும் சொல்லு “.

“கட்டாயமா நான் வரேன் சரியா” என்று சொன்னவன் அடுத்த நாளே புறப்பட்டு சென்றிருந்தான்.

அதற்கு அடுத்த நாள் நேரடியாக கோவை கோர்ட்டில் இவர்களது விவாகரத்துக்கான விசாரணை முடிந்து தீர்ப்பு என்று ஏற்கனவே வந்திருக்க.. இவன் அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

அதே நேரத்தில் விவேகாவின் தாய், தந்தை இருவரும் கூட நேரடியாக கோட்டிற்கு வந்திருந்தனர்.

இவர்களுடைய வக்கீலிடம் பேசிக் கொண்டிருக்க.. அப்போது தான் மதன் அவனுடைய காதலியோடு அங்கே வந்தது.

இருவருமே ஒருவரை ஒருவர் கைகள் கோர்த்து படி இன்னொரு கையால் அவளின் தோளில் போட்டபடி இருவருமே வர ..ஒரு நிமிடம் முகம் அஷ்ட கோணலாக மாறியது இவளுக்கு..

அவளுடைய முகத்தைப் பார்த்து மனநிலையை புரிந்து கொண்டவன் .”பாப்பு இதெல்லாம் ஒன்றுமே இல்லை. இதை விட மோசமா ரோட்டில் நடக்கிறவங்களை நான் பார்த்திருக்கிறேன்.

நீ கல்யாணம் ஆன அந்த நிகழ்வையே முழுக்க முழுக்க மறந்துடனும் .

இப்படி ஒருத்தன் லைப்ல வந்தான் என்பதை முழுசா மறந்துடனும் “என்று சொல்ல.. மதன் வந்த தோற்றத்தை பார்க்கவும் விவேகாவில் தந்தைக்கு அழுகையே வந்து விட்டது .

“என்னை மன்னிச்சிடு.. என்னால தான் இத்தனை பிரச்சனை. நான் கொஞ்சம் விசாரிச்சு இருக்கணும்.

நீ நல்லா இருப்பானுங்கறத மட்டும் தான் பார்த்தேனே தவிர அதை தாண்டி அவனை பத்தி விசாரிக்காமல் விட்டுட்டேன்.

இப்படி ஒரு அயோக்கியன் கிட்ட என் பொண்ண கொடுத்து வாழ்க்கையை கேள்விகுறி ஆக்கிட்டேன்.. என்னை மன்னிச்சிடு” என்று அழ..” அப்பா ப்ளீஸ் நான் எல்லாத்தையுமே மறக்க நினைக்கிறேன்.

இந்த விவாகரத்து முடிஞ்சதுன்னா இன்னையோட எல்லாமே முடிஞ்சதுன்னு நினைக்க போறேன் .

இனி அவனோட முகம் கூட என் ஞாபகத்துல வராது என்னைக்குமே.. “என்று கூறினாள்.

சொன்னது போலவே 2 மணி நேரம் கழித்து இவர்களை அழைக்க… பொதுவான விசாரணை முடிந்து.. விவாகரத்து என்று தீர்ப்பு சொல்ல ..அமைதியாக வெளியேறினாள் விவேகா.

அவளோடு கூடவே சிவாவும் வர.. கண் கலங்கியபடி தான் நகர்ந்தது .

“என்ன ஆச்சு பீல் பண்றியா என்ன ?”என்று கேட்க ..

“இல்ல இது சந்தோஷம் ..அதனால வர்ற கண்ணீர்”.

“ நீ எதையும் யோசிக்காத பாப்பு”.

“ எனக்கு ஒரே ஒரு ஆதங்கம் தான் சிவா” என்று கூற..

“ என்ன ஆதங்கம் சொல்லு”.

“ அவன் எவ்வளவு பண்ணினான்.. என்னை சித்திரவதை பண்ணினான்.

மனரீதியா பாதிக்க வச்சான். இந்த நிமிஷம் கூட அதிலிருந்து என்னால வெளில வர முடியல.. ஆனா இத்தனை செஞ்ச அவனை என்னால ஒண்ணுமே செய்ய முடியல.

கடைசி கடைசிக்கு விவாகரத்து வாங்கிட்டு பயந்து ஓடி வர்ற மாதிரி ஒரு நிலைமைதான் எனக்கு ஆயிடுச்சு.

அத நெனச்சா என்னால தாங்கவே முடியல சிவா .”

“என்ன பண்ணலாம் சொல்லு” என்று கேட்க..

“இல்ல யோசிக்கவே கூடாது..விடு சிவா”.

“ப்ச்ச.. என்ன சொல்லு.”

“ எனக்கு இப்ப என்ன தோணுதுனா ..அவனை பளார் பளார்னு அவன் கன்னத்துல செருப்பை கழட்டி அடிக்கணும் போல தோணுது .

ஒருவேளை அப்படி பண்ணினா என்னோட மனசுக்குள்ள இருக்குற அந்த கோபம், ஆதங்கம் முடிவுக்கு வருமோ என்னவோ தெரியல.

அவனுக்கான தண்டனை கொடுத்துட்டேன் அப்படிங்கற ஒரு சந்தோஷமாவது கிடைக்கும் .

விவாகரத்து கிடச்சும் கூட எனக்கு பெருசா எந்த சந்தோஷமும் இல்லை .அவனை அப்படியே விட்டுட்டு வரேனேன்னு தான் தோணுது.

எவ்வளவு ஒரு கேவலமான ஜந்து அவன்.. அது எப்படி இன்னொருத்தி கூட உறவுல இருக்கும் போதே ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி அவளோட லைஃப்பை கேள்விக்குறியாக்க முடியுது.

இவனை எப்படி அவனோட அம்மா, அப்பா வளர்த்தாங்க.. இவன் எல்லாம் ஆண்ணு சொல்லிக்கவே வெட்கப்படனும்.

இவங்க எல்லாம் சாபம் மாதிரி.. இவங்க எல்லாம் எப்படி ஆம்பளைன்னு சொல்லிக்கிறாங்க” என்று சொல்ல ..அவளுடைய ஆதங்கம் ,கோபம் புரிய கையை பற்றியவன்..” ரிலாக்ஸ் ஆகு.. இப்ப என்ன அவனை அடிச்சா உன்னோட கோபம் குறைஞ்சிடுமா..

குறைஞ்சிரும்ணா என் பின்னாடி வா .நீ ஆசைப்பட்டதை இப்பவே இந்த நிமிஷமே செஞ்சிடு .

என்ன ஆனாலும் பரவால்ல.. நான் உனக்கு பக்கபலமா இருப்பேன் “என்று சொல்ல..

“ நிஜமாக சொல்ற நிஜமா என்னை அவன் கிட்ட அழைச்சிட்டு போவியா..”

‘ கட்டாயமா அழைச்சிட்டு போறேன் வா” என்று அவளை அழைத்துக்கொண்டு மதன் நின்றிருந்த திசையை நோக்கி நகர்ந்தான்.

சற்று தூரம் நடக்கவுமே இவளுக்கு பயம் தோற்றிக்கொண்டது.

“ இல்ல வேண்டாம் சிவா அவன் போனா போயிட்டு போறான். அவன் சாக்கடையின்னு தெரிஞ்சும் எதுக்கு நாம போய் கால வைக்கணும்.. வேண்டாம் நம்ம திரும்பிடலாம்‌”.

“ இங்க பாரு அவனை அடிச்சா உனக்கு நிம்மதி கிடைக்கும்னா.. உனக்கு பழசை மறக்க முடியும்னா.. தாராளமா வந்து அடி. என்ன ஆனாலும் பரவால்ல. இப்ப என்ன ?எதுக்காக நீ பயந்துக்கிற.. நீ அவனை விட வீக்கான ஒரு பொண்ணு .அதனால அன்னைக்கு அவன் அவனுடைய திமிரை காட்டினான். எங்க அவனை என்கிட்ட வந்து காட்ட சொல்லு. அவனை உண்டு இல்லன்னு பண்ணிருவேன் “என்று சொன்னபடியே அழைத்துக்கொண்டு மதனின் முன்னால் நிறுத்த.. இவளை பார்த்ததுமே நெற்றியை சுருக்கியப்படியே முகத்தைப் பார்த்தான்.

“ என்ன அதுதான் நீ கேட்ட மாதிரி விவாகரத்து கிடைச்சாச்சு இல்ல .அப்புறம் எதுக்கு இங்க வந்திருக்கிற..” என்று கேட்க ..

“உனக்கு இன்னும் ஒன்னே ஒன்னு தரவேண்டியது இருக்குது .அதுக்காக தான் இங்க வந்திருக்கிறேன்” என்று சொல்ல ..

“என்ன தரப்போற..” என நக்கலாக சிரிக்க.. அந்த நிமிடம் இவளுக்குள் வந்தது என்னவோ கோபம் எரிமலையாக தான்..

அப்போதுதான் சிவாவை கவனித்தவன் .”ஆமா இவன் யாரு.. புதுசா இருக்கிறான் ஊருக்குள்ளேயே நீ இல்லையாமாம்.. கேள்விப்பட்டேன் .பயந்து ஓடிட்டேன்னு நினைச்சேன். பார்த்தா புதுசா ஒருத்தனை இழுத்துட்டு வந்திருக்கிற” என்று சொல்ல.. யோசிக்காமல் காலில் இருந்த செருப்பை கழட்டியவள்.. இவன் எதிர் பாராத நேரத்தில் பளார்.. பளார் என அடிக்க ஆரம்பித்தாள்.

“ இது நீ எனக்கு பண்ணின துரோகத்துக்கு.. பொண்ண நீ ஏமாத்துனதுக்கு.. எந்த தப்பும் செய்யாமல் என்னை யோசிக்காமல் ஒவ்வொரு தடவையும் அடிச்சேல்ல.. அதற்கான தண்டனை இது” என்று சொன்னபடியே அடிக்க தடுக்க கூட வழி கிடைக்காமல்.. மொத்த அடியும் அவனின் மேல் விழுந்தது.

அவளின் கையை பற்ற போக.. அதற்கு முன்பாக எளிதாகவே சிவா அவர்களுக்கு நடுவில் வந்திருந்தான்.மதனின் கை இவளின் மேல் கூட படவிடவில்லை.

செருப்பை காலில் போட்டவள் “இது தான் உனக்கான மரியாதை.. இத்தனை அடி வாங்கினதுக்கு அப்புறம் கூட அந்த பொண்ணு இதுக்கப்புறம் உன்கூட இருந்தா.. அது அவளுக்கான அசிங்கம் .

ஒரு பொண்ணு கிட்ட செருப்படி வாங்கினவன் கூடவா நான் சேர்ந்த வாழ்கிறேன்னு.. நீ பக்கத்துல போகும் போது எல்லாம் அவளுக்கு தோணணும்.உன்னோட பவர் அவ்வளவு தான் .

எப்படி டா நீ எல்லாம் ஒரு காலேஜ்ல பசங்களு
க்கு சொல்லித்தர்ற இடத்துல இருக்குன்னு எனக்கு தெரியல. அந்த காரணத்துக்காகவே இந்த அடி ..” என்றவள்..” இனி என்னைக்குமே உன்னோட முகத்துல நான் முழிக்க கூடாது.” என சொன்னபடி சிவாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
 

NNK-15

Moderator
13


நடந்த கலவரத்தை பார்த்து பயந்து ஓடிவந்தது என்னவோ விவேகாவின் தாய், தந்தை இருவரும் தான் .


பிடிவாதமாக இவர்களை விளக்கி அழைத்து வந்திருந்தனர்.


சிவா அடுத்த நாள் இங்கே ஆபீசுக்கு வந்தவன்.. அன்றைக்கு கோர்ட்டில் நடந்ததை இருவரிடமும் கூறிக் கொண்டிருந்தான் .


அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் திவ்யா .


சற்று நேரம் பொறுமையாக இருந்தவள் பிறகு” சிவா நான் ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்லணும் “என்று சொல்ல.. சிவா யோசனையோடு திவ்யாவை பார்க்க..


பிரவினோ..”என்ன பேச போற” என கேட்டான் .


“நான் இந்த வேலையை விட்டுடலாம்ணா இருக்கிறேன்”.


“என்ன.. என்ன திடீர்னு ..இந்த பணம் எல்லாமே உன்னோட சேவிங்கிற்கு போறதா தானே ஏற்கனவே சொல்லி இருந்த.. கல்யாணம் வரைக்கும் வரவேண்டியது தானே.”


“ ஆல்ரெடி பார்த்து பேசி பிக்ஸ் ஆயிடுச்சுன்னு சொன்னேல்ல” என்று வேகமாக சிவா கேட்க..


“ ஆமா சொன்னேன் ..ஆனா அம்மா இன்னும் கொஞ்ச நாள் தானே… என் கூட இருக்க மாட்டியான்னு கேட்டாங்க .அங்க கேட்கிறதும் நியாயம்ணு தோணுச்சு அதனாலதான்..”


“அதுவும் கரெக்டு தான்.”


“ சரி நான் ஒன்னு கேக்குறேன் .உன்னோட பாப்புவுக்கு தான் இப்போ விவாகரத்து ஆயிடுச்சே.. இனி நீ சீக்கிரமா அவளை கல்யாணம் பண்ணிக்குவல்ல” என்று கேட்க..


“ என்ன நீ திடீர்னு இப்படி எல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கிற ..அதெல்லாம் இப்போதைக்கு எதுவும் நடக்காது. அவ அந்த பாதிப்பில் இருந்து இன்னும் முழுசா வெளியே வரல.


இப்பவும் ஏதாவது யோசிச்சுட்டா அவளையும் அறியாமல் கை நடுங்குது . ஊருக்கு போகும் போது தான் பார்த்தேன்..”


“ ஆனா அன்னைக்கு கோர்ட்ல நடந்தது உண்மையிலேயே அல்டிமேட் ஆன விஷயம் .


ஒவ்வொரு பொண்ணுமே அந்த மாதிரி தான் தைரியமா இருக்கணும் .உன் பக்கத்துல இருந்தா யாருக்கு தான் தைரியம் வராது சிவா.”


“ டேய் என்னடா இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கறா..அப்படி எல்லாம் எதுவுமே கிடையாது.”


“நீ சொல்லும் போது நல்லா இருந்தது . சந்தோஷம்தான் .”


“என்ன திவ்யா.. ஏன் டல்லான மாதிரியே பேசிக்கிட்டு இருக்கிற..” சிவா கேட்க..


பிரவீனோ..” விடுடா கல்யாணம் பேசி இருக்காங்க. இந்த ஆபீஸ்.. இந்த ஊரை விட்டு போக போறாங்கற வருத்தமா கூட இருக்கலாம். அப்படித்தானே திவ்யா”.


“ இருக்கலாம் அதுவா கூட இருக்கலாம்” என்றவள் திரும்பி சிவாவை பார்த்து..” ஐ அம் சாரி டா “என்று சொல்ல..” புரியல எதுக்காக இப்ப நீ சாரி கேக்கற ..நீ எந்த தப்பும் செய்யலையே”.


“ உண்மைதான் உன்னை பொருத்தவரைக்கும் நான் எந்த தப்பும் செய்யல .ஆனா நான் எந்த அளவு உன்னை டார்ச்சர் பண்ணி இருக்கிறேன். என்னை காதலி.. என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி.. இப்ப அதை எல்லாம் நினைச்சா எனக்கு அசிங்கமா இருக்குது.”


“சேச்சா அதையெல்லாம் நான் எப்பவுமே சீரியஸாக எடுத்ததில்ல.”


“ உண்மைதான் ஆனால் அது புரியவே எனக்கு இத்தனை நாள் ஆகி இருக்குது .”


“சரி நடந்தது நடந்து போச்சு .இனி நீ கொஞ்சம் ஃப்ரீயா இரு. டென்ஷனாகாத.. ரிலாக்ஸாக என்ஜாய் பண்ண பாரு..


ஒவ்வொரு மூவ்மெண்டையுமே ரொம்ப என்ஜாய் பண்ணு.. உங்களோடதுல நிறைய சாஸ்திர சம்பிரதாயம் உண்டுல்ல..


மெஹந்தி பங்க்ஷன் ,டான்ஸ் பார்ட்டின்னு செமையா கலைகட்டுமே.. அது எல்லாத்தையுமே ரொம்ப நல்லாவே என்ஜாய் பண்ணு” என்று சொல்ல..


“ ஆமா நானும் அதான் செய்ய போறேன் ஹேப்பியா எல்லாத்தையுமே என்ஜாய் பண்ண போறேன்” என்று கூறினாள்.


“உனக்கும் கூட தான் சிவா சீக்கிரமா அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ..


இந்த கதை இப்படித்தான் முடியணும் ..அந்த பொண்ணு நிறையவே கஷ்டப்பட்டுட்டா..


என்னைக்கு உன்கிட்ட வராலோ அதுக்கப்புறம் அவ ரொம்ப ரொம்ப சந்தோஷமா நிம்மதியா இருப்பா ..


எனக்கு உன்னை பத்தி நல்லா தெரியும் .உன்னை விட பொறுத்தமான பையன் யாருமே அவளுக்கு இருக்க மாட்டாங்க .


அவ கஷ்டத்துக்கு எல்லாம் இனி சந்தோஷத்தை மட்டும் தான் அனுபவிக்கணும். நான் மனசார சொல்றேன் “என்று சொல்ல..


“ என்ன பாட்டியம்மா மாதிரி வாழ்த்துக்கிட்டு இருக்கற.. “


“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. “


“நான் தான் சொன்னேன்ல ..இன்னமும் நாளாகும்.. . மனரீதியா அவளும் அப்செட் தான் .இந்த நிலைமையில் இருந்து முழுக்க முழுக்க மாறி வெளியே வரணும். அதுக்கு இன்னமும் நிறைய நாள் ஆகும். அதனால இத யோசிக்க வேண்டாம் . உன்னை மாதிரியே அவளும் இப்போதைக்கு எனக்கு நல்ல பிரண்ட் அவ்வளவுதான் .”


“ஆனால் அந்த நட்பு என்னைக்கு வேணும்னாலும் அடுத்த கட்டத்துக்கு போகும் .ஆனா என்னோட நட்பு அப்படி போகலை” என்று சற்று விரக்தியாக சொல்ல ..


“என்ன இது மறுபடியும் முதல்ல இருந்தா” என்று கேட்க ..


“இல்லடா ஜஸ்ட் சொன்னேன் அவ்வளவுதான் .. இனி இதை பத்தி எல்லாம் பேச மாட்டேன். நான் இன்னமும் இந்த மாதம் மட்டும்தான் வேலைக்கு வருவேன் பிறகு நின்னுடுவேன். அது தான் இன்றைக்கு சொல்லவேண்டும் என்று நினைத்தேன் .நல்ல வேளை நீயும் கூட குட் நியூஸ் சொல்லி இருக்கற.. உன்னோட பாப்புவுக்கு விவாகரத்து கிடைச்சிடுச்சு “என்று சொன்னவள் வேலையை கவனிக்க திரும்பி அமர்ந்தாள்.


அடுத்து இரண்டு வாரங்கள் இவன் வீட்டிற்கு செல்லவில்லை. ஆனால் அங்கே சிவாவின் தாயார் தன்னுடைய மனதின் உள்ள ஆசையை மெல்ல விவேகாவிடம் கூறினார் .


“பாப்பு நான் உன்னை ஒன்று கேட்பேன் ..நீ எனக்கு பதில் சொல்லுவியா “என்று ஆரம்பிக்க ..


“என்ன ஆன்ட்டி சொல்லுங்க” என கேட்டபடியே.. அன்றைக்கு அனுப்ப வேண்டிய உடைகளை பேக் செய்து கொண்டு இருந்தாள் .


“கோச்சுக்க கூடாது என்னடா சட்டுன்னு இப்படி கேக்குறாங்கன்னு நீ நினைக்க கூடாது” என்று சொல்ல ..


“என்ன பீடிகை எல்லாம் ரொம்ப பெருசா இருக்குது .என்னன்னு சொல்லுங்க .நீங்க சொன்னாதானே எனக்கு தெரியும் .”


“வந்து என் கூடவே உன்னால இருந்திட முடியுமா “என்று கேட்க.. இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.


“ என்ன சொல்றீங்க .இப்ப நான் உங்க கூட தானே இருக்கிறேன். என்ன திடீர்னு” என்று ஆரம்பிக்க ..”அப்படி இல்ல என் கூடவே எனக்கு மருமகளா.. இன்னொரு மகளா நீ வர முடியுமா “என்று சொல்ல.. அதிர்ச்சியாகி அவரின் முகத்தை பார்த்தாள் .


“பாப்பு நான் தப்பா எதுவும் கேக்கல.. உனக்கு இப்ப விவாகரத்து ஆயிடுச்சு . உன்னை எனக்கு நல்லாவே தெரியும்..


சிவாவுக்குமே உன்னை ரொம்ப பிடிக்கும் .நான் சொன்னா அவன் கட்டாயமாக கேட்பான். அவன் மறுக்க மாட்டான் “.


“ஆன்ட்டி என்ன பேசிட்டு இருக்கீங்க.. சிவா ரொம்ப நல்லவன் .அவனுக்கு ஏத்த பொண்ணு நிச்சயமா கிடைக்கும். ரொம்ப நல்ல பொண்ணாவே கிடைப்பா.. நிச்சயமா அந்த பொண்ணு நான் இல்ல


நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவ.. விவாகரத்து ஆனவ.. என்னை போல ஒரு பொண்ணு சிவாவுக்கு கட்டாயமா வேண்டாம்.


நீங்க இந்த பேச்சை எடுத்து இருக்கவே கூடாது. நான் சீக்கிரமா என்னோட வீட்டுக்கு கிளம்பி போயிடறேன் “.


“ஐயோ பாப்பு ..நான் அந்த அர்த்தத்துல சொல்லல .நீ என்னை புரிஞ்சுக்கோ. “


“நான் புரிஞ்சுகிட்டேன் ஆன்ட்டி நல்லாவே புரிஞ்சுகிட்டன் .உங்க மனசுல இப்படி ஒரு ஆசை இருக்குது என்கிறது இத்தனை நாள் எனக்கு தெரியாம போயிடுச்சு .


தெரிஞ்சிருந்தா நான் இங்க வந்து இருக்க மாட்டேன் .என்னால இன்னொரு கல்யாணத்தை பத்தி எல்லாம் யோசிக்க முடியாது ஆன்ட்டி .


நிறையவே பட்டுட்டேன் .இதுக்கு பிறகு இந்த வாழ்க்கையை இன்னொருத்தன் கையில நம்பிக்கையோட கொடுக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.


நான் நடந்த கல்யாணத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமா இப்ப தான் மீண்டு வந்து கிட்டு இருக்கறேன்..


மறுபடியும் அதிலேயே போய் சிக்கிக்க எனக்கு இஷ்டம் இல்ல. நீங்களும் ரொம்ப நல்லவங்க தான். சிவாவும் ரொம்ப நல்லவன்தான் .


அதுல நான் எந்த குறையும் சொல்ல மாட்டேன் .என்ன செய்யறது.. இனி எப்படி வாழ்றது என்று தெரியாமல் இருந்த நேரத்துல.. சரியான ஒரு வழிகாட்டியா என்னை இங்க அழைச்சிட்டு வந்தீங்க..

அதுவும் தன்னம்பிக்கையா..


மாசம் இப்போ 15 ஆயிரம் வரைக்குமே இந்த வேலையில நான் சம்பாதிக்கிறேன் .அதுக்கு ஊக்கம் கொடுத்தது நீங்க தான்.


இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டிருக்கீங்க.. நிச்சமா இதை மறக்கவே மாட்டேன். இரண்டு பேருக்குமே கடைசி வரைக்கும் மனதார நன்றி சொல்லிக்கிட்டு இருப்பேன் .ஆனா இன்னொரு உறவுக்குள்ள போற அந்த தைரியம் எனக்கு இல்ல.


இன்னொரு முறை இது போல யோசிக்கக்கூட செய்யாதீங்க.. நான் அம்மா அப்பா கிட்ட பேசறேன் ..பேசிட்டு இந்த வாரத்திலேயே கிளம்பி போயிடுவேன். ஏற்கனவே இருக்கிற ஆர்டர் எல்லாத்தையுமே கரெக்டா பேக் பண்ணி அனுப்பி வச்சிட்டு கிளம்பறேன்”என்று சொல்ல.. இவரும்..” பாப்பு.. பாப்பு நான் ஏதாவது தப்பா கேட்டு இருந்தா என்னை மன்னிச்சிடு .அதுக்காக இவ்ளோ பெரிய முடிவு எடுக்க வேண்டாம் .


நீ இல்லாட்டி இந்த வீடு வெரிச்சோன்னு போயிடும் .நான் மட்டும் பழையபடி தனிமையாய் இருக்கிற மாதிரி ஆகும் .”


“அப்படி எல்லாம் இல்ல ஆன்ட்டி நீங்க சீக்கிரமா சிவாவுக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க.


அப்போ உங்க மருமக உங்க கூடவே இருப்பா.. சிவாவை பத்தி எனக்கு நல்லா தெரியும்.


. நான் இங்கே இருக்கிறதுனால தான் இங்கே வர தயங்கி கிட்டு இருக்கிறான் .அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னா அப்புறம் மத்தவங்க மாதிரி பத்து நாள் அங்கேயும் 15 நாள் இங்கேயுமா அவனோட வேலை நாட்களை அழகா நகர்த்துவான்.


எனக்காக தான் அவனும் இங்க வராம இருக்குறான்னு எனக்கு நல்லா தெரியும்..”


“ அப்படி இல்ல பாப்பு.. நான் சொல்றத கொஞ்சம் கேளு”


“போதும் ஆண்ட்டி நான் நிறைய கேட்டுட்டேன் .நீங்க நல்லவங்க தான். நான் என்னைக்குமே உங்களை குறை சொல்ல மாட்டேன். ஆனா உங்களோட ஆசை என்னை பொருத்த வரைக்கும் ரொம்ப பெருசு. அதை நிறைவேத்தி கொடுக்குற இடத்துல நான் இல்ல.”


“எனக்கு சொல்ல தெரியலை பாப்பு.. உங்க ரெண்டு பேர்த்தை பார்க்கும் போதெல்லாம் ரெண்டு பேரும் சேர்ந்து நல்லபடியா வாழணும்னு தான் என் மனசுக்குள்ள தோனிக்கிட்டே இருக்குது.”


“ ஆன்ட்டி.இனி இத பத்தி பேச வேண்டாம் என்று நகர்ந்து இருந்தாள்.


அதே பதட்டத்தோடு தான் சிவாவை இவர் அழைத்தது..


“நான் ஒரு தப்பு பண்ணிட்டேன் சிவா. அவசரப்பட்டு அவகிட்ட உளறிட்டேன். அவ பிடிவாதமா வீட்டுக்கு போறேன்னு சொல்லிக்கிட்டு இருக்கறா..”


“அம்மா நீங்க டென்ஷனாக வேண்டாம்? இந்த வாரம் வருவேன்ல.. அவகிட்ட பேசறேன்.. நீங்க பயப்படாதீங்க அப்படியெல்லாம் சட்டுனு வீட்டை விட்டு வெளியே கிளம்பி போயிட மாட்டாள் .


இனி இந்த பேச்சை எடுக்க மாட்டேன்னு மட்டும் சொல்லுங்க நான் மத்ததை பார்த்துக்கறேன்” என்று சொன்னவன் அடுத்த இரண்டு நாட்களில் விடுமுறை கிடைக்கவுமே நேரடியாக வீட்டிற்கு வந்திருந்தான்.


இவளுக்கு நிறைய தயக்கம் அவனுடைய முகம் பார்த்து கூட பேசவில்லை .


எங்கேயோ பார்த்தபடி தான் பேசியது .


சற்று நேரம் அமைதியாக அவளை கவனித்தவன்..” இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி முகத்தை திருப்பிக்கிட்டு இருக்கிற பாப்பு.


சின்ன வயசுல இருந்து நீ என்னை பார்த்துகிட்டு தானே இருக்குற..


இன்றைக்கு என்ன புதுசாவா பார்க்கற.. எதுக்காக இத்தனை தயக்கம். நீ எந்த தப்பும் செய்யலை.. என் முகத்தை பார்த்தே பேசலாம் .அம்மா கேட்டது அவங்களோட ஆசையை மட்டும் தான் .நான் எந்த பதிலும் இதுவரைக்கும் சொல்லலையே ..எனக்கு நீ ஒரு நல்ல பெஸ்ட் ஃபிரன்ட் இப்போதைக்கு அவ்வளவுதான். அதை தாண்டி நான் யோசிக்கலை.. நான் சொல்றது உனக்கு புரியுதா.” என்று சொல்ல.. நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.


“ என்ன புரிஞ்சுதா நீ அந்த பழைய கசப்பான விஷயத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்துட்ட ..


எனக்கு நல்லா தெரியும் இன்னும் கூட ஆசைப்படற மாதிரி ஒரு லைஃபை உருவாக்கிக்கோ ..


உனக்குனு ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கோ அதுக்கு நான் பக்கபலமா இருப்பேன். அதுக்காக அம்மா ஏதோ சொல்லிட்டாங்க என்று கிளம்புவேன்னு சொல்லி மிரட்டுவியா ..


அம்மா பாவம் ஃபோன் பண்ணி ஒரே அழுகை தெரியுமா “என்று சொல்ல ..


“என்ன செய்யறது.. நான் சொன்னது ஒன்னும் தப்பு இல்ல. நீ ரொம்ப நல்லவன் உனக்கேத்த அழகான பொண்ணு ..


அமைதியா, பொறுப்பா உன் மேல உயிரா இருக்குற பொண்ணு வருவா ..அவளை கல்யாணம் பண்ணிக்கோ..” என்று சொல்ல.. அமைதியாக அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.


மனதிற்குள் ஒரு குரல் சத்தமாக கத்திக் கொண்டிருந்தது .’நான் உயிருக்கு உயிரா நேசித்த.. ஆசைப்பட்ட பொண்ணு நீ மட்டும் தான். இத எப்ப நீ புரிஞ்சுக்க போற’ என்று கத்தி கதறிக் கொண்டிருந்தது.


வெளியே சிரித்தபடியே ..”சரி நடந்ததெல்லாம் மறந்திடு. அம்மா ஏதோ விளையாட்டு போல கேட்டுட்டாங்கன்னு நினைச்சுக்கோ .


கூடவே இருந்து பார்க்கிறதால கூட இந்த மாதிரி ஆசை வந்திருக்கலாம் .அம்மா கிட்ட சொல்றேன்.


அவங்களை ரொம்ப டென்ஷன் பண்ணாத.. பாவம் வயசானவங்கல்ல..”


“அப்படி இல்ல சிவா வீட்ல அம்மா அப்பாவுமே கூப்பிட்டுட்டு இருந்தாங்க. எத்தனை நாளைக்கு அங்க இருக்க முடியும். இங்க வந்து இருன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க.”


“ அதுக்கு ஏத்த மாதிரி இவங்க கேட்கவும் நீ இப்படி முடிவெடுத்துட்டு போற இல்லையா..


ஏன்னா நம்ம கேட்டது தப்பு அதனால தான் அந்த பொண்ணு கோச்சிக்கிட்டு போயிட்டான்னு நினைச்சிட்டு அம்மா தன்னைத்தானே சமாதானப்படுத்தி கொள்வார்கள் அப்படித்தான.நினைக்கற அதுதானே” என்று கேட்க..


“ அப்படி இல்ல சிவா. சொன்னா புரிஞ்சுக்கோங்க .”


“பாப்பு.. உன்னை எனக்கு நல்லா தெரியும் .உனக்கும் தெரியும் அம்மா கூட நீ எந்த அளவுக்கு கிளோஸ் டா இருக்கிறேன்னு.. உனக்குமே அவங்கள விட்டு பிரிஞ்சு இருக்க முடியாது என்கிற மாதிரியான ஒரு சூழ்நிலைக்கு சமீபத்துல வந்துட்டேன்னு எனக்கு நல்லா தெரியும்.


நானுமே கவனிச்சுக்கிட்டு இருக்கிறேன். இப்போ இத சாக்கா வச்சு நகர்ந்து போக பார்க்கிற.. எனக்கு புரியுது. உனக்கு என்ன ஆசையோ அதை தாராளமா செஞ்சுக்கலாம் .ஆனா ஒன்னே ஒன்னு தான் சொல்லுவேன்.


நீ உன் வீட்டுக்கு போனா கூட அம்மாவை ஞாபகம் வச்சு அப்பப்போ வந்து பார்த்துக்கோ.. வாரத்தில் ரெண்டு நாள் அவங்க கூட இருந்தா கூட சமாதானம் ஆயிடுவாங்க.

புரியுதா இதுக்கு மேல உன்கிட்ட சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லை” என்று சொல்லிவிட்டு வந்திருந்தான்.
 

NNK-15

Moderator
14


திவ்யா சொன்னது போலவே அந்த மாதத்தில் விடுமுறை எடுத்திருந்தாள்.


15 நாட்கள் கழித்து ஒருமுறை ஆபீசுக்கு வந்தவள் அனைவருக்குமே பத்திரிக்கையை கொடுத்துவிட்டு சென்றிருந்தாள்.


பிரவீன் ,சிவா இருவருக்குமே பிரத்தியேகமாக அழைப்பு வைத்திருந்தாள்.


“ கல்யாணத்துக்கு முதல் நாளே வந்தாகணும் .எல்லா பங்க்ஷன்க்குமே முன்னாடி ரெண்டு பேரும்தான் நிக்கணும்.


என்னோட பெஸ்ட் பிரண்ட் நீங்க ஞாபகம் இருக்கட்டும்” என்று சொன்னவள் கூடவே மாப்பிள்ளையை கூட அழைத்து வந்திருந்தாள் .


இருவருக்குமே அவனை அறிமுகம் செய்து விட்டு நகர்ந்திருந்தாள்.


சரியாக கல்யாண நாள் அன்று சென்று மணமக்களை வாழ்த்தி விட்டு வந்திருந்தான். மிகவும் நிறைவாக இருந்தது.


அதே நேரத்தில் பாப்பு இவனுடைய வீட்டில் இருந்து அவளுடைய தாய், தந்தை வீட்டிற்கு சென்றிருந்தாள்.


மெல்ல மெல்ல இங்கே வருவதும் கூட குறைந்து இருந்தது .


நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்ததே தவிர பெரியதாக எந்த மாற்றமும் இல்லை.


இவனுமே அமைதி காத்துக்கொண்டிருந்தான்.


தாயார் இவனிடம் புலம்பி தீர்த்திருந்தார் .”நான் ரொம்ப ஆசைப்பட்டேன் ..இந்த பாப்பு நம்ம வீட்டிற்கு வருவான்னு…இப்படி ஆயிடுச்சு”.


“ அம்மா பாப்பு இங்க வரணும்னு இருந்ததுனா எவ்வளவு நாள் ஆனாலும் கட்டாயமா இங்க தான் வருவா..


நீங்க கவலையே படாதீங்க பார்ப்போம். இங்கே வர்றதுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க .


அவ அவளை புரிஞ்சிக்கணும்.. தன்னை தானே சுய பரிசோதனை செய்யணும் .அவ எந்த விதத்திலும் குறைஞ்சவ கிடையாது .


இப்ப அவ ரொம்ப தாழ்வு மனப்பான்மையில இருக்கறா ம்மா.. அதனாலதான் நீங்க சொல்லவும் அவளால ஏத்துக்க முடியல .


அவளுக்கு அவளோட இடம் என்னனு தெரியணும் .அவளால எல்லாமே முடியும் அப்படிங்கிறது அவளுக்கு புரியணும்.


புரியும் போது நிச்சயமா இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பா.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க எல்லாத்தையுமே நான் பார்த்துக்கறேன்” என்று சொன்னவன் .அத்தோடு நிறுத்தி இருக்கவில்லை அவளிடம் எப்போதும் போல பேசிக் கொண்டிருந்தேன்.


நேரில் பார்ப்பது தான் இல்லை. இப்போது பேச்சு நிறையவே இருவருக்கும் நடுவே இருந்தது.


காலையில ஆபீஸ் போனானெறால் அங்கே நடந்தது எல்லாவற்றையுமே சாயங்கால பொழுதில் ஒப்பிக்க ஆரம்பித்து விடுவான் .


அதே போல தான் அவளுமே அருகில் நடந்தது என பல விஷயங்களை பகிர்ந்து கொள்வாள் .


இங்கே மதனின் நிலை தான் தலை கீழாக மாறி இருந்தது .


அன்றைக்கு கோர்ட்டில் விவேகா கோபத்தில் செருப்பை கழட்டி அடித்தாலோ.. அதை யாரோ ஒருவன் வீடியோவாக எடுத்து வைரல் செய்து விட்டிருந்தான்.


அதன் பயனாக வேலை செய்யும் இடத்திலிருந்து இவனுடைய வேலை பறி போய் இருந்தது . பெண் விசயமும் அவன் வேலை செய்கிற இடத்திற்கு தெரிந்திருக்க..


“கீழ்த்தரமான நடவடிக்கை இருப்பவர்களுக்கு இங்கே காலேஜில் வேலை இல்லை‌” என மொத்தமாக சீட்டை கிழித்து அனுப்பி இருக்க..


அங்கே அன்றைக்கு நடந்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண் கூட கோபத்தில் அவனை விட்டு விட்டு சென்றிருந்தாள்.


இப்போது சரியான வேலையும் இல்லை. தன் கூடவே வருவாள் என நினைத்த அந்த பெண்ணும் இல்லை .


தாயாரின் வீட்டிற்கு சென்றிருந்தான். நிறைய நாட்கள் வேலை தேடி இறுதியாக மாதம் 20,000 சம்பளத்தில் வேலை கிடைத்திருக்க ..விருப்பமே இல்லாமல் அங்கே சென்று கொண்டிருந்தான்.


நாட்கள் வெகு வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது.


கிட்டத்தட்ட விவாகரத்து முடிந்து இரண்டு வருடம் தாண்டி விட்டது.


இருவருக்கிடையே நடக்கும் பேச்சு வார்த்தையில் எந்த மாற்றமும் இல்லாமல் ,வழக்கம் போல நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது .


சிவாவின் தாயார் சிவாவிடம் நச்சரிக்க ஆரம்பித்து இருந்தார்.


“ என்னடா பாப்புவை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கறேன்னு சொன்ன.. கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் முடியப்போகுது


எந்த ஒரு சத்தமும் இல்லை.. இப்படியே இருக்க போறியா.. நான் வேணும்னா வேற யாராவது ஒரு பொண்ண உனக்கு ஏத்த மாதிரி பார்க்கட்டுமா” என ஆரம்பித்திருக்க..


“ என்னம்மா நீ எல்லாம் தெரிந்திருந்தும் இப்படி கேட்டா என்ன அர்த்தம் !!


என்னைக்கு ஆனாலும் என் மனசுக்குள்ள இருக்கிறது அவதான் .ஏதோ சுழ்நிலை காரணமா என்னமோ நடந்துடுச்சு .


இப்போ இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது .அவ நல்ல படியா வாழணும் ம்மா..


இனி எந்த கவலையும் இல்லாம மனசுல சின்ன உறுத்தல் இல்லாமல் சந்தோஷம் மட்டுமே அவ கூட இருக்கணும் .”


“எல்லாம் சரிடா ஆனா இந்த நிமிஷம் வரைக்கும் அவ பிடி கொடுக்கலையே..”


“ நிச்சயமாக கொடுப்பா.. நான் அதுக்கான வேலையை செய்கிறேன்” என்று சொன்னவன் அன்றைக்கு பேசும் போது…” பாப்பு உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. ஆபீஸ்ல புதுசா ஒரு பொண்ணு வேலையில ஜாயின் பண்ணி இருக்கா.. செம அழகா இருக்கறா..


அதுவும் இல்லாம எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. என் கூட தேவையே இல்லாம வந்து அடிக்கடி பேச்சு கொடுக்கறா..


எனக்கு என்னமோ இது அடுத்த கட்டத்துக்கு போகும் போல இருக்கு” என்று சொல்ல முதல் முதலாக பாப்புவிடம் இருந்து பதில் வராமல் அமைதியாகி இருந்தாள்.


“ என்ன பாப்பு நான் பேசுறது கேக்குதா.. ஏதாவது பதில் சொல்லு “என்று சொல்ல ..சற்று நேரம் அமைதி காத்தவள்..

“ அப்படியா ரொம்ப சந்தோஷம் தானே.. உனக்கு பிடித்திருந்தால் ஓகே சொல்லிடு. யோசிக்க எல்லாம் செய்யாத .. உனக்கும் வயசு ஆகுதுல்ல “என்று பேச்சு கொடுக்க..


“ இந்த கதையெல்லாம் ஆகாது ஏன் நீ அமைதியான அதுக்கு காரணத்தை சொல்லு.”


“ இத பாரு ஏதோ யோசனை.. சட்டுன்னு அமைதியாகிட்டேன் .எனக்கு ரொம்ப ஹாப்பி தான்” என்று சொன்னவள் ஃபோனை வைத்திருந்தாள்.


அவளுடைய மனநிலை இவனுக்கு நன்றாகவே புரிந்தது.


“ பாப்பு மாட்டிகிட்டியா ..இப்போ என்ன செய்யப் போற.. இரு இந்த வாரம் நேரில் வந்து பேசறேன் “என்று சொன்னவன் அந்த வாரத்தில் நேரடியாக இவளை பார்க்க வந்திருந்தான்.


நேராக இவளுடைய தாய், தந்தை இருவரிடமும் நீண்ட நேரம் பேசியவன்.. இவளை அழைத்துக்கொண்டு வெளியேற..” அம்மா, அப்பா கிட்ட அப்படி என்ன பேசின? ரொம்ப நேரமா பேசின மாதிரி இருந்தது .ஆன்ட்டி எப்படி இருக்கிறாங்க “.


“நீதான் அங்க போக மாட்டேன்னு வீம்பு பண்ணிக்கிட்டு இருக்கறல்ல..


எத்தனை நாளாச்சு வாரத்துல ரெண்டு நாளாவது அவங்களை போய் பாருன்னேன்..


நீ கேக்கவே இல்ல. உனக்கு உன்னோட பிடிவாதம் தான் பெருசா போயிடுச்சு . இங்கேயே செட்டில் ஆயிட்ட ..”


“ப்ளீஸ் சொல்றத புரிஞ்சிக்கோ.. எனக்கு ஆண்டியோட முகத்தை பார்க்கிறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது .


அவங்க சொல்லும் போது பிடிவாதமா நான் பேசிட்டேன்.. நிறைய பேசிட்டேன் தெரியுமா .”


“நீ ஒன்னும் நிறைய பேசல.. சின்ன வயசுல இருந்து உன்னை பார்த்து கிட்டு இருக்காங்க ..அப்படி நீ நிறைய பேசி இருந்தா கூட அதெல்லாம் பிரச்சனையே கிடையாது.


அம்மாவை பொறுத்த வரைக்கும் நீயும் சரி நானும் சரி ஒன்னு தான் .வித்தியாசம் எல்லாம் பார்க்க மாட்டாங்க .”


“சரி சரி நான் இனி இந்த வாரம் கட்டாயமா போறேன் “என்று சொல்ல ..


“சரி அதுக்கு முன்னாடி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று அருகில் இருந்த ஹோட்டலுக்கு அழைத்து சென்று அமர்ந்தான் .


“இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்க போற பாப்பு “என்று கேட்க ..ஒரு நிமிடம் திகைத்தபடி அவனுடைய முகத்தைப் பார்த்தாள் .


“என்ன சொல்ற எனக்கு புரியல ..”


“இல்ல.. டைவர்ஸ் ஆகி ரெண்டு வருஷம் முடிஞ்சு போச்சு . இனிமேலும் எதிர் கால லைஃப்பை பத்தி எதுவுமே பேசாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம் .


உன்னோட அம்மா ,அப்பா இரண்டு பேருமே ரொம்ப வருத்தப்படறாங்க. உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்படறாங்க .

நீ என்ன நினைக்கிற”.


“ அவங்க ஆசைப்படலாம் சிவா ஆனா அதுக்கு நான் தயாராகனுமே..”


“ ஏன் தயாராகறதுல என்ன பிரச்சினை.. உன்னை புரிஞ்சிக்கிற ஒருத்தன் கிடைச்சா உனக்கு ஓகே தானே”.


“ என்னை புரிஞ்சிக்கணுமே.. அப்படி யாராவது வந்திடவா போறாங்க ..”


“ஏன் நான் இல்லையா” என்று கேட்க ..சட்டென அதிர்ச்சியாகி அவனைப் பார்த்தாள்.


“நீ ஏற்கனவே அம்மாகிட்ட சொன்னதெல்லாம் விட்ரு, .நான் இப்ப நேருக்கு நேரா உன் கிட்ட கேட்கிறேன் . என்னை உனக்கு பிடிச்சிருக்குதா .. என்னை நீ கல்யாணம் பண்ணிக்கறியா ..அதுக்கு பதில் சொல்” என்று சொல்ல.. இவளோ தயங்கியபடியே அமர்ந்திருந்தாள்.


“ ப்ளீஸ் பாப்பு ஏதாவது சொல்லு ..ஏன்னா எனக்குமே ஒரு மாதிரியா இருக்குது .எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு .


பழைய லைப்பை முழுக்க முழுக்க மறந்திடு .புதுசா நம்ம லைஃபை ஸ்டார்ட் பண்ணலாம் .

நான் உன்னை நல்லா பார்த்துக்குவேன் .சின்ன வயசுல இருந்து நீயும் என்னை பார்க்கறல்ல.. என்கிட்ட ஏதாவது தப்பு இருக்குதா..


நான் எதையாவது மாத்திக்கணுமா ..அப்படி என்றாலும் சொல்லு நான் மாத்திக்கறேன். “என்று சொல்ல..


“ இல்ல சிவா உன்கிட்ட மாத்திக்கறதுக்கு எதுவுமே இல்ல. நீ எதையுமே மாத்திக்க தேவையில்லை.. “


“சரி இந்த டாபிக் இப்போதைக்கு விட்டுடறேன். நீ நிறைய யோசிச்சிட்டு பதில் சொல்லு சரியா .அம்மாவுக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.


எனக்குமே உன்னை ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு.. விவாகரத்து ஆனவங்க எல்லாம் அப்படியே இருக்கணும்னு அவசியம் கிடையாது.


மறுபடியும் கல்யாணம் தாராளமா பண்ணிக்கலாம். ஏன் மதன் மாதிரி ஒருத்தன் எல்லாம் இந்த உலகத்துல வாழும் போது உன்னை மாதிரி நல்ல பொண்ணுங்க கல்யாணம் பண்ணிட்டு வாழ கூடாதா என்ன?..”


அன்றைக்கு நிறையவே அவளிடம் பேசிவிட்டு வந்திருந்தான் .


அதன் பிறகும் கூட அவள் பிடி கொடுக்கவில்லை .


நாட்கள் தான் நகர்ந்து கொண்டிருந்தது .கிட்டத்தட்ட ஆறு மாதம் தாண்டி இருக்க.. திடீரென ஒரு நாள் சிவா அவனுடைய தாயார் இன்னும் சில உறவினர்களை அழைத்துக் கொண்டு இவளுடைய வீட்டிற்கு வந்திருந்தான் .


நேரடியாக இவளின் தாய், தந்தையிடம் பேசியவன்.. நேராக பாப்புவின் அறைக்குச் சென்று..” பாப்பு நான் உனக்கு நிறைய டைம் கொடுத்திட்டேன்.


உன் மனசுக்குள்ளேயும் நான் இருக்கிறேன் .எனக்கு நல்லா தெரியும்.


என்னை உனக்கு பிடிக்குமுன்னு தெரியும் .அம்மாவோட ஆசை உன்னோட அம்மா ,அப்பாவோட ஆசை எல்லாம் நம்ம கல்யாணம் நடந்தா நல்லா இருக்குங்குறது தான் .


அவங்களும் பலவிதமா உன்கிட்ட பேசி பார்த்துட்டாங்க. என் அம்மா கூட ஒரு முறை சொல்லிட்டாங்க .


நானும் உன்கிட்ட கேட்டு கிட்டத்தட்ட ஆறு மாசம் முடிஞ்சு போச்சு .இந்த நிமிஷம் வரைக்கும் நீ பதில் சொல்லல.


இதுக்கப்புறம் எத்தனை நாள் காத்து இருக்கணும்னு எனக்கு தெரியல .


காத்திருக்க நான் தயார்.. ஆனா நம்மளை சுத்தி இருக்கிறவங்க விடுவாங்களான்னு எனக்கு தெரியல .அதனால தான் நேரடியா இன்றைக்கு எல்லாத்தையுமே அழைச்சிட்டு வந்துட்டேன்.


இப்போதைக்கு நம்ம கல்யாணம் முடியட்டும். உன்னோட மனசு சமாதானம் ஆகுற வரைக்கும் மறுபடியும் நான் காத்திருக்க தயாரா இருக்கிறேன் .


என் மேல நம்பிக்கை இருந்ததுனா ..உனக்கு என்னை பிடிச்சிருந்ததுனா.. சம்மதம்னு வந்து சொல்லு.


இல்லன்னா அதையும் என் கிட்ட சொல்லிரு ..இதுக்கு பிறகு என்னைக்குமே நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்.” என்று சொல்லிவிட்டு வெளியேற.. நீண்ட நேரம் தனக்குள்ளயே போராடிக் கொண்டிருந்தாள் .


ஒரு கட்டத்திற்கு மேல் பிடிவாதமாக அவனை பிடித்தாலும் வேண்டாம் என சொல்லிவிடலாம் என நினைத்து கதவை திறக்க போக அப்போது இவளின் தாயார் வந்தவர்.. இவளை கட்டி அணைத்தபடி அழவே ஆரம்பித்து இருந்தார்.


“இன்னொரு நல்ல வாழ்க்கை கிடைக்க உனக்கு சந்தர்பம் வந்திருக்கிறது விவேகா .அதை விட்டுடாத ..


எனக்கு சிவாவை பத்தி நல்லா தெரியும்.. தெரியாத ஆளா இருந்தா யோசிக்கலாம் .


அவங்க ரெண்டு பேரை பத்தியுமே உனக்கு நல்லா தெரியும் .நீயும் அவங்க கூட பழகி இருக்கிற ..

சம்மதம்ணு சொல்லு” என்று சொல்ல ..தாயாரின் கண்ணீரை பொறுக்க முடியாமல்.. “பிடித்திருக்கிறது* என்று சொல்ல ..அன்றைக்கு நிச்சயம் எளிமையான முறையில் முடிந்திருந்தது .


அடுத்த 15வது நாளில் கல்யாணம் என பேசி இருக்க.. விழாகோலம் மறுபடியும் இவளது வீட்டில் துவங்கி இருந்தது .


இன்றைக்கு நிறைய குழப்பம் இருந்தாலுமே.. மனதிற்குள் ஏதோ ஒரு ஓரத்தில் மகிழ்ச்சி இருக்க தான் செய்தது. குறிப்பிட்ட நன்னாளில் இருவருடைய திருமணமும் மிக சிம்பிளாக நடந்தது .


அடுத்த நாளே இவளை முப்பைக்கு அழைத்துச் சென்றிருந்தான்.


அங்கே ஆபீஸில் இருந்த அனைவருக்குமே இவன் விருந்து பெரிய ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தான்.

வந்தவர்கள் அனைவருமே இருவரின் ஜோடி பொருத்தத்தை பாராட்டி விட்டு சென்றிருந்தனர் .


பிரவீன் வந்து இருவரையுமே வாழ்த்தினான். நந்தினி கூட கணவனோடு வந்து மகிழ்ச்சியாக வாழ்த்திவிட்டு சென்று இருந்தாள்.. கூடவே ஆறு மாத குழந்தையை வயிற்றில் சுமந்தப்படி.. முகம் முழுக்க அத்தனை மகிழ்ச்சியோடு வந்தவள்..” இதே போல சீக்கிரமா உன் வீட்டிலும் பங்க்ஷன் நடக்கணும் அதுக்கு நான் ஆசீர்வாதம் பண்ணறேன். என இருவரையுமே வாழ்த்தி விட்டு சென்றிருந்தாள்.


ஆறு மாதங்களுக்கு பிறகு தேக்கடி நீர் தேக்கத்திற்கு அருகே இருந்த ரெசார்ட்டில் இருவரும் தங்கியிருக்க.. தொலைவில் தெரிந்த நீரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் பாப்பு..


பின்னால் வந்த சிவா அவரது கழுத்து வளையத்திற்குள் முத்தம் வைக்க.. சிலிர்த்து லேசாக கண் மூடினாள்.


“ என்ன பாப்பு இந்த இடம் உனக்கு பிடிச்சு இருக்குதா..” என்று கேட்க திரும்பியவள் “சிவா நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன்” என்று சொல்ல ..”நானும் தான் பாப்பு “என்று சொன்னபடியே அவளை பின்னோடு இருக அணைத்துக் கொண்டான்.


சரியாக 15 நாட்களுக்கு முன்னால் தான் ஒரு விஷயத்தை கண்டு கொண்டிருந்தாள் விவேகா.


அங்கே சிவாவின் தாயாரின் வீட்டிற்கு வந்தவள்.. இவனுடைய பழைய பிரோவை சுத்தம் செய்கிறேன் என்று ஒவ்வொன்றை சரி செய்து கொண்டிருந்த போது தான் இவள் பத்தாவது படித்த போது இவளுக்காக எழுதி இருந்த கடிதம் இவளுடைய கைகளுக்கு சிக்கியது .


முதலில் புரியாமல் படித்தவள் பிறகு உண்மை என்னவென்று புரிந்து கொள்ள.. அப்போதிருந்தே தன் மேல் அவன் நேசம் கொண்டிருக்கிறான் என்று புரியவும் ..அவன் மேல் இன்னமும் காதல் பெருக்கெடுக்க தான் செய்தது .


அன்றைக்கு வீட்டிற்கு வந்தவனை பிடித்து விசாரிக்க.. சற்று தலையை குனிந்தபடியே உண்மையை ஒத்துக் கொண்டிருந்தான்.


“அப்ப எனக்கு தைரியம் வரலை..வேலை கிடைக்கவும் சொல்ல நினைச்சேன். அதுக்குள்ள உனக்கு வேற பக்கம் கல்யாணம் ஆகிடுச்சு.


அதுக்கு பிறகு உன்னை பார்க்க கூடாதுன்னு தான் மும்பையில் செட்டில் ஆனது. ஆனால் என்னென்னவோ நடந்து போச்சு.


உன் மேல வச்சிருந்த அன்பு அது அப்படியே தான் இருந்தது.


எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தது அதனாலதான்..

நீ தப்பா நினைச்சுக்குவேண்ணு சொல்லித்தான் என்னால உன்கிட்ட சொல்ல முடியல.


அம்மா முந்திக்கிட்டாங்க.. அம்மா சொன்னதுக்கே நீ பிடிவாதமா வீட்டுக்கு போயிட்ட..உன்னை எப்படி சரி பண்றதுன்னு தெரியல .ஆனா என்கிட்ட வரவழைக்க ஆசைப்பட்டேன் .அதனால தான் தொடர்ந்து உன் கூட வழக்கம் போல எதுவும் நடக்காத மாதிரி பேசிக்கிட்டு இருந்தேன் .


காத்திருக்கிறதுக்கும் ஒரு நேரம் காலம் வேணும் இல்லையா ..உனக்கான ஸ்பேஸ் நிறையவே கொடுத்துட்டேன் .


இதுக்கு பிறகு என் கூட பக்கத்துல இருந்தா உன் மனசு மாறும்ணு தோணுச்சு.


அதனாலதான் பிடிவாதமா அப்படி ஒரு வேலையை செஞ்சேன் .அதுக்கு ஐடியா கொடுத்தது உன்னோட அம்மா, அப்பாவும் என்னோட அம்மாவும் தான் .ஆனால் அது கரெக்டா ஒர்க் அவுட் ஆயிடுச்சு .

நீ இப்ப என் பக்கத்துல வந்துட்ட” என்று சொன்னவனை வேகமாக ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.


அடுத்த 15 வது நாளில் தேக்கடிக்கு அழைத்து வந்திருந்தான்.


இப்போது பழைய கசப்பான அனுபவங்கள் அனைத்துமே மறந்து காதல் பறவைகளாக சிறகடித்து பறக்க ஆரம்பித்து இருந்தனர் இருவருமே..

நாமுமே இவர்களை வாழ்த்தி விடை பெறுவோம்.


முற்றும்.
 
Status
Not open for further replies.
Top