எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

யுத்தம் செய்வோமா யுவராணி விமர்சனம்

நறுமுகை தளத்தின் போட்டிக் கதை NNK96 யுத்தம் செய்வோமா யுவராணி எனது பார்வையில். யுவராணி அக்கா அவந்திகா திருமணம் நடந்து ஒரு வருடத்திற்குள் இறந்துவிடுவதால் அப்பா வரவேண்டாம் என்று சொல்லியும் வெளிநாட்டிலிருந்து இந்தியா வருகிறாள். யுவாவை வளர்ப்பு மகளாக அவள் அம்மாவின் தங்கை சாரதாவிற்கு கொடுத்துவிட்டதால் அப்பா மற்றும் குடும்பத்தின் மீது அதிகம் ஒட்டாத தன்மை இருந்தாலும் அவந்திகாவின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று தெரிந்துக் கொள்ள வந்திருக்கும் அவளை அக்கா கணவர் நித்ய வினோதனின் தம்பி ராஜவினோதன் ஒரு காரணத்திற்காக யுவாவின் மறுப்பை மீறி கட்டாயத் திருமணம் செய்து கொள்கிறான்.

கட்டாயத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவளின் வழக்கறிஞரான நண்பனின் உதவியுடன் வழக்கு போடுகிறாள். ஆனால் அந்த வழக்கை அவளே திரும்ப பெற வைக்கிறான் ஆர்.வி. அவள் அக்காவிற்கு ஏற்பட்ட விபத்தில் நித்ய வினோதனும் அடிபட்டு சிகிச்சையில் உள்ள அவனை சந்திக்கும் பொழுதெல்லாம் நித்யனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது. அவந்திகாவின் மரணத்திற்கு என்ன காரணம் அவளது கட்டாயத் திருமணத்திற்கான காரணம் என்ன என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். யுவாவை தைரியமான பெண்ணாக காட்டியிருப்பது நன்று. கட்டாயத் திருமணம் செய்யும் ஆர்.வி எதிர்மறை நாயகனாக இருக்கும் அவனை அவள் என்ன செய்தாள் சில திருப்பங்களுடன் கதையை நிறைவு செய்திருக்கிறார். வாழ்த்துகள் 💕.
 

admin

Administrator
Staff member
நல்ல சஸ்பென்ஸ் கதை அக்காவோட இழப்புக்காக சொந்த நாட்டுக்கு வர தங்கச்சிக்கு கட்டாயம தாலி கட்டறார் ஹீரோ அது ஏன் எதனால எனும் கேள்வி.. நான் சொல்லிட்டா அந்த சஸ்பென்ஸ் பிரேக் ஆயிடும் சோ அழகான எழுத்து நல்லபடியா எழுதி நல்லபடியா முடிச்சிட்டீங்க என்னுடைய வாழ்த்துக்கள்..
 
Top