எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதழோரமாய் சிறு புன்னகை - 01

admin

Administrator
Staff member

அத்தியாயம் 1​

அடுப்பில் வைத்திருந்த கடாய் சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் சீரகம், வரமிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கி கொண்டிருந்தாள் ராஜலட்சுமி. அக்கணம் வலது கை தோள் பட்டையை சுரண்டியது ஓர் ஆண் கரம்...​

அருகில் நிற்பது யாரென்று யூகிக்க நிமிடங்கள் தேவைப்படவில்லை ராஜிக்கு.சட்டென சூழ்ந்த கண்ணீரை வெளிக்காட்டிக் கொள்ளாமல்​

"என்னப்பா..." என்றார். இதுவே பழைய ராஜியாக இருந்திருந்தால்​

"அப்படியே லெஃப்ட் ஹேன்ட் ஷோல்டர்லயும் சுரண்டி விடு டா மை டியர் மகனே..." என்றிருப்பார்.​

தாயின் இந்த மாற்றத்தை வலியோடு பார்த்தான். அவரோ கடாயிலிருந்ததை தட்டில் மாற்றி வைத்தப்படி நின்றிருந்தார்.​

அவரின் முகத்தில் எப்போதும் குடிக் கொண்டிருக்கும் புன்னகை இப்பொழுது துடைத்து வைக்கப்பட்டிருந்தது. கண்களை இறுக மூடித் திறந்தவன் "அம்மா..." என்றழைத்தான்.​

"சொல்லுப்பா..." என்றார். இப்போதும் அவரது குரல் அமைதியாக தான் ஒலித்தது.​

' இன்னும் உங்களுக்கு என்மேல இருக்கிற கோபம் போகலயா மா..." வாய்வரை வந்த வார்த்தைகளை அப்படியே முழுங்கிவிட்டு தாயை பார்த்தது பார்த்தபடி நின்றான்.​

தற்போது வரை தன் முகத்தைக் கூட அவர் பார்க்காதது ஒருபுறம் வேதனையாக இருந்தது. 'முதல்ல நீ தயங்கி தயங்கி பேசாம நல்லா பேசு... அப்பறம் அம்மாவே நல்லா பேசும்...' மனம் சொல்லவும் வரவழைக்கப்பட்ட குதூகலத்துடன்​

"எம்மோவ்..." என சத்தமாக அழைத்தான். அவருக்கு தெரியாதா மகனின் குதூகல அழைப்பு இயல்பாக வந்ததா என்று... அவனின் அழைப்பை கண்டுகொள்ளாமல் ஏற்கனவே கடாயிலிருந்த எண்ணெயில் நறுக்கிய கத்திரிக்காயைப் போட்டார்.​

தன் அழைப்பிற்கு எவ்வித பிரதிபலிப்பும் இல்லாமல் நின்ற அன்னையை ஆழ்ந்து பார்த்தான்.​

எப்போதும் இப்படியான அழைப்புக்கு​

"ஷ் காதுல கத்ததா டா..." எனக் கூறிக் கொண்டே தோள் பட்டையில் காதைத் துடைத்துக் கொண்டு தன்னை கடுப்பேத்தவே மற்ற வேலைகளை செய்யும் தாய் நினைவுக்கு வந்தார்.​

நீண்ட நெடிய பெருமூச்சுடன் மீண்டும் "எம்மா நான் சொல்றதை கொஞ்சம் காது கொடுத்து கேளுமா, வாழ்க்கை பிரச்சனை மா..." எனக் கூறினான் அதே செயற்கையான குதூகலம் அவனது குரலில்.​

மகனின் 'வாழ்க்கை பிரச்சனை மா..' என்ற வார்த்தையில் சட்டென கண்களை சூழ்ந்து கொண்டது நீர். அதனை கண்களை சிமிட்டி வெளியில் விடாமல் பார்த்துக் கொண்டவர் மகன் புறம் திரும்பவில்லை.​

இதுவே மற்ற நாட்களாக இருந்திருந்தால் அவனது "வாழ்க்கை பிரச்சனை மா..." என்ற வார்த்தையில் அவசரமாக, பதட்டமாக, தடுமாற்றமாக இப்படி எந்த மாகவும் இல்லாமல் அவனை சீண்டவதற்காகவே பொறுமையாக திரும்பி பார்த்திருப்பார் ராஜி.​

அவரது பொறுமையில் இவன் பொறுமை தான் காற்றில் பறக்கும் புசுபுசுவென மூச்சை விட்டபடி "என் வாழ்க்கை பிரச்சனைன்னு சொல்றேன். நீ என்னடான்னா அசால்ட்டா திரும்பிப் பார்க்குற..." என கோபமாகக் கேட்டு வைப்பான். அவரும் பதிலுக்கு உதட்டைப் பிதுக்கி​

"நான் வேணா முதல்ல இருந்து திரும்பி பார்க்கவா?..." என பாவமாக கேட்பார். அதற்கு இவனோ "எரிச்சல் வர மாதிரி காமெடி பண்ணாத மா..." எனக் கத்துவான். அப்போதைய நாட்கள் அனைத்தும் முன் ஜென்மத்தில் நடந்தது போலிருந்தது அவனுக்கு... தாயின் இந்த மாற்றம் கூட தன்னால் தான் என நினைத்தவனுக்கு தொண்டை அடைத்தது.​

கேசத்தை அழுத்தி கோதிக் கொண்டே தன்னை சமன் செய்தவன் "என் வாழ்க்கை பிரச்சினைன்னு சொல்றேன் அதை கண்டுக்காம உன்னோட வேலையை பார்த்திட்டு இருக்க. இதெல்லாம் ஒரு நல்ல தாயிக்கு அழகா..." எனக் கேட்டான்.​

அதற்கும் பதில் இல்லாமல் போகவும் சட்டென பின்னாலிருந்து தாயை அணைத்து கொண்டான் "சாரி மா, உன் பேச்சையும் கேட்காம டைவர்ஸ் வரைக்கும் போனது என்னோட தப்பு தான்..."என மன்னிப்புக் கேட்டவனின் குரல் கரகரத்தது.​

அதற்கு மேல் மகனைத் தவிக்க விட அந்த தாயிற்கு மனமில்லை போல, பின்னால் இருந்தபடியே மகனின் கேசத்தை கோதிக் கொடுத்தார். இத்தனை நாட்களாக மகனை ஒதுக்கி வைத்தது மட்டுமல்லாமல் அவனிடம் பேசாமல் இருந்ததின் வலி கண்ணீராய் வெளிவந்தது அவருக்கு.​

நிமிடங்கள் கரைய தாயை விட்டு பிரிந்தவன் அவரின் கண்ணீரை அழுத்தி துடைத்தான். "சாரி மா..." என்றான் மெல்லிய குரலில். மகனின் கேசத்தை கோதிக் கொண்டே "சாரி கேட்க வேண்டியது என்கிட்ட இல்லை..." என்றார். அவனுக்கு புரிந்தது போல் தலையாட்டினான்.​

"சாப்பிட்டியா..." எனக் கேட்டார்.​

"ம்..." என்று மட்டும் தலையாட்டினான். பின் மெல்ல "மா நிஜமாவே வாழ்க்கை பிரச்சனை, நீ என்னனு இன்னும் கேட்கலை..." என்றதும் ஏனோ ராஜிக்கு சிரிப்பு வந்தது.​

சிறு வயதிலிருந்தே இவனுக்கு ஏதாவது வேண்டுமென்றால் இப்படி தான் பேச்சை ஆரம்பித்து வைப்பான் என்பதால் மெல்லிய புன்னகை அவரிடத்தில். அதே புன்னகையோடு மகனை திரும்பி பார்த்தார்.​

இத்தனை நாட்களாக தாயின் புன்னகை இல்லாமல் இந்த வீடு கூட வெறும் கட்டிடமாக மட்டுமே தோன்றியது. தாயின் சிறு புன்னகை வீட்டிற்கே உயிர்ப்பை கொடுப்பது போல் இருந்தது அதை அவரிடமும் கூறினான்.​

"நீ இப்படி சிரிச்சுட்டே இரு மா, அப்ப தான் வீடு,வீடு மாதிரி இருக்கும்..." என்றான் மெல்லிய புன்னகையுடன். பதிலுக்கு புன்னகை செய்தவர் மீண்டும் தன் வேலையில் கவனம் வைத்தார்.​

"அம்மா, நான்,நான் போயி அவளை கூட்டிட்டு வரவா..." மெல்ல தயங்கி தான் கேட்டான். அவன் இதைக் கேட்டது கூட அவருக்காக தான் என்று தோன்றியது.​

கண்களை இறுக மூடித் திறந்தவர்​

நிதானமாக திரும்பி மகனை பார்த்தார். அந்த பார்வை அவனை ஆயிரம் குற்றம் சுமத்தியது. அவரின் பார்வையை நேருக்கு நேர் பார்க்க முடியாது குனிந்து கொண்டான்.​

"என் மருமக இன்னும் அப்படியே தான் இருக்கா ப்பா... இன்னும் அவ டஸ்க்கி ஸ்கின்னா தான் இருக்கா. ஹைட் கூட ஐஞ்சடி தான். அதே நீளமான முடி தான். நீ சொன்னது போல காலையில எழுந்ததும் மங்களங்கரமா வெள்ளையான முகத்துல முழிக்கிற மாதிரி இருக்காது. குட்டி சாத்தான் மூஞ்சில முழிக்கற மாதிரி தான் இருக்கும்..சோ அவ உனக்கு வேண்டாம். ஒரு வருசம் போனதும் நீ ஆசைப்பட்டது போல அவளுக்கு டைவார்ஸ் குடுத்துட்டு உனக்கு பிடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்க. அப்பறம் இதுல உன்னோட தப்பு எதுவும் இல்லை, அந்த நேரத்துல என் புருசன் அவரோட நண்பனோட கடைசி ஆசையை நிறைவேத்த மட்டுமே பார்த்தாரே தவிர உன்னோட விருப்பத்தை கேட்காம விட்டுட்டார். அவளை உனக்கு கட்டிக் கொடுத்தது எங்க தப்பு தான்...​

அதே மாதிரி பொண்ணுன்னா கலரா, ஹைட்டா, ஒல்லியா, பார்க்க மாடர்ன்னா இருந்தா தான் அழகுண்ணு நீ சொல்ற பாரு அதைக் கூட உன்மேல தப்பு சொல்ல மாட்டேன். அதுவும் என்மேல தப்பு, நான் வளர்த்த விதம் தான் சரியில்ல..." என்றவர் அவனது பதிலைக் கூட கேட்காது அங்கிருந்து நகர்ந்தார். தாயின் பேச்சில் விக்கித்து நின்றான் இளையவன்.​

******​

சென்னிமலை கொங்கு திருமண மண்டபம். இன்னும் சிறிது நேரத்தில் ஆயிரமாயிரம் ஆட்களை தன்னுள் அடக்கி கொள்ள காத்திருந்தது.​

அக்கணம் ஈவெண்ட் ஆர்கனிசேசனின் தலைவன் தன் மொத்த அரக்கக் குணத்தையும் காட்டிக் கொண்டிருந்த நேரமது...​

"யோவ், இந்த பொண்ணை எதுக்கு இங்க நிறுத்தி வைச்சு இருக்கீங்க, பபேல நிக்க வைங்க,.."தன் முன் நின்ற பெண்ணை அருவருப்பாக மேலிருந்து கீழாக பார்த்தபடி கூறினான் அவன்.​

"இல்லை சார் நான் சொன்னேன். இந்த பொண்ணு தான் கேட்காம இங்கேயே நிக்குது..." எதிரில் நின்றவன் அத்தனைத் தயக்கத்தோடு கூறினான்.​

"அவ சொன்னா உனக்கு எங்க அறிவு போச்சு, என் பிசினஸ மொத்தமா இழுத்து மூட வைக்கலாம் நினைக்கிறயா?..." எனக் கத்தியவன் பார்வை இன்னும் அப்பெண்ணின் மீது அருவருப்பாக தான் படிந்தது.​

அவனது அருவருப்பான பார்வை தன்னை துளியும் பாதிக்கவில்லை என்பதை போல அவனை நேருக்கு நேர் பார்த்து "ஏன் நான் இங்க நிக்கக் கூடாது, ரீசப்சனிஷ்ட்டா தானே கூட்டிட்டு வந்தீங்க. அப்பறம் எதுக்காக சர்வ் பண்ண அனுப்ப சொல்றீங்க..." கைக்கட்டிக் கேள்வியாக கேட்டவளைப் பொருட்டாக கூட நினைக்காது அவளுக்கு அருகில் நின்ற பெண்ணைப் பார்த்தான். அவனது இந்த செயலே உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்ற அலட்சியம் தெரிந்தது.​

அவனது அலட்சிய போக்கை கோணல் சிரிப்போடு பார்த்தவள், கைகளை பிசைந்தபடி நின்ற காண்ட்ராக்டரிடம் "சாரி சார், என்னால சர்வ் பண்ண முடியாது, நான் இங்க தான் நிக்க போறேன்..." முன்னால் நடந்து சென்றவனுக்கு கேட்கும்படி சத்தமாக அதே சமயம் அழுத்தமாகக் கூறினாள்.​

அவளது பேச்சில் உண்டான எரிச்சலைப் பல்லைக் கடித்துக்கொண்டு அடக்கியவன் அவளது முன் வந்து கைகட்டி நின்றான். அவனை நேர் பார்வை பார்த்தாள் பாவை. அவளது இந்த துணிச்சலையும் நேர் கொண்ட பார்வையையும் உடைக்க விரும்பினான் போல அவன்.​

"உன் மூஞ்சியைக் கண்ணாடியில் பார்த்து இருக்கியா? பார்த்திருந்தா இந்த இடத்தில நிக்கறேன் சொல்ல மாட்ட, அண்ட் எது எது எங்கெங்கே இருக்கணுமோ அது அது அங்கங்க இருக்கணும். குப்பைக்கும் கோபுரத்துக்கும் வித்தியாசம் தெரியாம இவன் தான் உன்னை இங்க நிக்க வைச்சு இருக்கிறான்னா நானும் அதையே பண்ண முடியுமா? பேமென்ட் வேணும்னா சர்வ் பண்ண போ இல்லையா கிளம்பிட்டே இரு, ஆக்டுவல்லி சர்வ் பண்ணக் கூட உன்னையெல்லாம் வேண்டாம் தான் நான் சொல்லுவேன்..." என்றவன் தாடையை நீவிக் கொண்டே​

"எஸ்,சர்வ் பண்ணக் கூட நீ போக கூடாது. நீ என்ன பண்ற பாத்ரூம் என்ட்ரன்ஸ் கிட்ட போ, கிளினா இல்லைன்னா அதை க்ளீன் பண்ணிட்டு பாத்ரூம்..." அவன் பேச பேச பெருவிரலைத் தரையில் அழுந்த ஊன்றிக் கொண்டவள் நிமிர்ந்து அவனை அலட்சிய பார்வை பார்த்தாள்.​

"நிறுத்துங்க மிஸ்டர் அகரன், என்னோட அப்பிரியன்ஸ் தான் என்னோட தகுதியை தீர்மானிக்குதுன்னா எனக்கு அப்படிப்பட்ட வேலை வேண்டாம்..." என்றவள் அவளுக்கு அருகில் மெழுகு சிலை போல நின்ற பெண்களின் கர்வச் சிரிப்பை அலட்சியமாகப் பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்தாள்.​

வேக நடையுடன் அந்த திருமண மண்டபத்திற்கு அருகிலிருந்த பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தாள். அதனை அடைந்ததும் இத்தனை நேரமிருந்த மொத்த தைரியமும் வடிய, பஸ் ஸ்டாப்பிலிருந்த கல் பெஞ்சில் பொத்தென அமர்ந்தாள். கண்கள் கரித்துக் கொண்டு வந்தது அக்கணம் "புகனு, குழந்தைம்மா, என்னடா எதுக்கு இப்படி உட்கார்ந்துட்டு இருக்க, இங்க பாரு, அப்பாவை பாரு, அப்பா சொல்லி இருக்கேன்ல ஒரு பொண்ணுக்கு அழகு அவளோட நிறமோ, அவளோட உயரமோ இல்லை டா... அவளோட நிமிர்வுலயும், தைரியத்துலையும் தான் இருக்கு. யார் என்ன சொன்னாலும் நான் இப்படி தான்னு நிமிர்ந்து நில்லுடா..." என்றவர்​

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,​

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,​

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்​

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;​

பாரதியின் வரிகளை கம்பீரத்துடன் பாடிக் காட்டிய தந்தையின் குரல் காதில் ஒலிக்க சட்டென நிமிர்ந்து அமர்ந்தாள். கன்னத்தில் வழியவா என்ற கண்ணீரை விழிகளுக்குள்ளையே அடக்கியப்படி தனக்கு முன் வந்த அரசுப் பேருந்தில் ஏறினாள்.​

****​

"ஏம்மா, இந்தம்மா, பஸ் ஸ்டாப் வந்துருச்சு ம்மா, ஒரிசேரியில தானே இறங்குவ நீ.." என்றக் குரலில் தன் கடந்த கால நினைவிலிருந்து வெளியில் வந்தவள் அவரின் கேள்விக்கு ஆமென்று தலையாட்டிவிட்டு பஸ்ஸிலிருந்து இறங்கினாள்.​

மலரட்டும் சிறு புன்னகை...​

***​

வணக்கம்..​

படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பர்களே​

 

Priyakutty

Active member
கலர் வச்சு இப்படி பேசுறது... 😤😤😤😤😤

How dare he... 😤

பாவம் அவங்க... 🫂🥺

ஹீரோ கலரான பொண்ணை கட்டிக்க ஆசைப்பட்டது அவர் தனிப்பட்ட விருப்பம். ஆனா அது ஒரு காரணம் டிவோர்ஸ் வரை போயிருக்காரா...🙄

அவர் அம்மா ஆதங்கம் சரிதான்
 
கலர் வச்சு இப்படி பேசுறது... 😤😤😤😤😤

How dare he... 😤

பாவம் அவங்க... 🫂🥺

ஹீரோ கலரான பொண்ணை கட்டிக்க ஆசைப்பட்டது அவர் தனிப்பட்ட விருப்பம். ஆனா அது ஒரு காரணம் டிவோர்ஸ் வரை போயிருக்காரா...🙄

அவர் அம்மா ஆதங்கம் சரிதான்
டிவேர்ஸ் வரைக்கும் பேசி இருப்பான்.. அவன் மனசுல இருந்தது சொல்றான் பாவம்😂
 
Yaraa ivan inda kalathulaium clr clrnu olaritu irukan
😂😂😂இந்த காலம் ன்னு இல்லை சிஸ்டர் எல்லா இடத்துலயும் இது நடக்குது.. actually இது உண்மை சம்பவம்.. வெல்கம் கேர்ள் நடக்கிற ஒரு சம்பவம் இது... கொஞ்சம் கலர் கம்மியா இருந்தாலும் பார்க்க நல்லா இல்லைன்னாலும் இவங்களை இப்படியான வேலைகளுக்கு அனுப்பிடுவங்க... நடந்ததை தான் எழுதினேன்..ம்
 
Top